Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஒரு நாளில் இடக்கூடிய விருப்பப்புள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்துத்தர முடியாதா?

1 hour ago, ஏராளன் said:

நானும் கேட்க நினைத்தேன், பலருடைய பதிவுகளிற்கு எழுத முடியாத போது விருப்ப குறிகள் இடுவது நாம் வாசித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்தும் அல்லவா?

நானும் கேட்டுக் கேட்டு களைத்துவிட்டேன்.

  • Replies 2.1k
  • Views 220.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • ராசவன்னியன்
    ராசவன்னியன்

    எல்லோரும் நலமா?  அஞ்சு மாசங்கள் கழிச்சு வந்தால், ஒரு திரியிலும் எழுத முடியவில்லை..! ஒருவேளை எனக்கு வயசாகி போச்சுதா..? இல்லை, யாழுக்கு வயசு போச்சுதா..?   சொல்லுங்கள்...!  Admin ..

  • மோகன்
    மோகன்

    சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தளம் முன் போல இயங்கும்  என நம்புகின்றேன். மெருகேற்றலையும் தாண்டி வேறு பிரச்சனைகள் வழங்கியில் ஏற்பட்டிருந்தது. 

  • மோகன்
    மோகன்

    திண்ணைத்தடை உள்ளவர்கள் கடந்த காலத் தவறுகள் இனி ஏற்படாது என ஒரு உறுதிமொழியுடன் தனிமடலில் தொடர்பு கொள்ளும்பட்சத்தில் தடை நீக்கம் பற்றி பரீசிலனை செய்யப்படும்

Posted Images

1 hour ago, ஏராளன் said:

நானும் கேட்க நினைத்தேன், பலருடைய பதிவுகளிற்கு எழுத முடியாத போது விருப்ப குறிகள் இடுவது நாம் வாசித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்தும் அல்லவா?

வாசித்து விட்டோம் என்பதை பின்னூட்டம் இட்டும் காட்டலாம். இது யாழ் சமூக வலைத்தளம் அல்ல, கருத்துக்களம், உரையாடல்களுக்கான வெளி என்பதை உணர்த்தலாம்

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

வாசித்து விட்டோம் என்பதை பின்னூட்டம் இட்டும் காட்டலாம். இது யாழ் சமூக வலைத்தளம் அல்ல, கருத்துக்களம், உரையாடல்களுக்கான வெளி என்பதை உணர்த்தலாம்

பலருக்கு நேரப்பற்றாக்குறை, எழுத சோம்பல்!

3 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் கேட்டுக் கேட்டு களைத்துவிட்டேன்.

நன்றி, ஏற்கனவே பலரும் கேட்டுள்ளீர்கள் என்றால் இப்போதைக்கு எண்ணிக்கையை உயர்த்த மாட்டார்கள் போல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

நானும் கேட்டுக் கேட்டு களைத்துவிட்டேன்.

இரண்டு மூண்டு நாள் புள்ளியளை சேர்த்து வைச்சு குத்துறதுக்கு ஏதும் வசதிகள் இருக்கோ எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? நான் கேட்டால் ஒருமாதிரி முறைச்சு பாப்பினம்..😎

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

இரண்டு மூண்டு நாள் புள்ளியளை சேர்த்து வைச்சு குத்துறதுக்கு ஏதும் வசதிகள் இருக்கோ எண்டொருக்கால் கேட்டுப்பாருங்கோ? நான் கேட்டால் ஒருமாதிரி முறைச்சு பாப்பினம்..😎

உஸ்ஸ் இப்ப மட்டுறுத்தினராக ஆக்களை எடுக்கேக்கை ஆவாகுழுவிடம் றெயினிங்குக்கு அனுப்பி எடுக்கினமூம் எல்லோ?
அது தான் ஏன் சும்மா வாயக் குடுத்து வெட்டு வாங்குவான்.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு 3 புள்ளிகள்தான் கொடுத்தவர்கள்..... சகோதரி யாயினி போராடி ஆட்டிலறி, ஏவுகணை எல்லாம் போட்டுத் தாக்கித்தான் இந்த 5 புள்ளியை பெற்று எங்களுக்கு தந்தவர்.....!  😁

19 minutes ago, suvy said:

முன்பு 3 புள்ளிகள்தான் கொடுத்தவர்கள்..... சகோதரி யாயினி போராடி ஆட்டிலறி, ஏவுகணை எல்லாம் போட்டுத் தாக்கித்தான் இந்த 5 புள்ளியை பெற்று எங்களுக்கு தந்தவர்.....!  😁

ஆட்டிலறி, ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி போராடியே 2 புள்ளி தான் அதிகரிச்சிருக்கினமெண்டால் நாங்கள் அகிம்சை வழியில் கோரிக்கை வைத்தால் ஒரு பலனும் கிடைக்காது போல. 😂

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Lara said:

ஆட்டிலறி, ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி போராடியே 2 புள்ளி தான் அதிகரிச்சிருக்கினமெண்டால் நாங்கள் அகிம்சை வழியில் கோரிக்கை வைத்தால் ஒரு பலனும் கிடைக்காது போல. 😂

நீங்கள் கற்பூரம்......!   😁

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Ãhnliches Foto

நேற்று மாலையில் இருந்து, பல நேரங்களில்...  யாழ் களம். மிக மெதுவாக இயங்குகின்றது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

Ãhnliches Foto

நேற்று மாலையில் இருந்து, பல நேரங்களில்...  யாழ் களம். மிக மெதுவாக இயங்குகின்றது.

நீங்கள் ரொம்ப அதிர்ஷ்டசாலி..! ஏதோ வேலையாவது செய்யுதே, இங்கே அதுவும் இல்லை..!!
கடந்த ஆறு மாதங்களாக யாழின் வரம் கிடைக்குமா, தரிசணம் கிட்டுமா..? என தவமிருக்க வேண்டியுள்ளது.
 
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஒளிப்படங்களை அல்லது காணொளிகளை இங்கே இணைப்பது எப்படியென்று யாராவது கூறமுடியுமா?

நன்றி,

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

ஒளிப்படங்களை அல்லது காணொளிகளை இங்கே இணைப்பது எப்படியென்று யாராவது கூறமுடியுமா?

நன்றி,

இதில் வல்லவர் ராசவன்னியன் தான் திண்ணயில் கூட படம் போடுவார் .

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரஞ்சித் said:

ஒளிப்படங்களை அல்லது காணொளிகளை இங்கே இணைப்பது எப்படியென்று யாராவது கூறமுடியுமா?

நன்றி,

ஒளிப்படங்களை யாழில் நேரடியாக தரவேற்றம் செய்ய இயலாது..
 
பல நிமிடங்கள் ஓடும் ஒளிப்படங்களென்றால் யூடுயூப் (Youtube) தான் சிறந்தது. அதற்கு யூடுயூப் அல்லது ஜி மெயிலில் (Gmail) சொந்தமாக க|ணக்கு வைத்திருக்க வேண்டும்.(இலவசம் தான்)

காணொளிகளை தரவேற்றம் செய்துவிட்டு சில நிமிடங்களில் அதன் இணைய இணைப்பு கிட்டும். அந்த லிங்க் முகவரியை யாழில் இணைத்தால் ஒளிப்படம் தெரியும்.

நான் காணொளிகளுக்கு யூடுயூபும் (Youtube), சிறுசிறு ஒலி வடிவங்களுக்கு சவுண்ட் கிளவுட் (Sound Cloud) இணையத்தையும் பாவிக்கின்றேன்.

காணொளி, மற்றும் ஒளி வடிவங்களை உருவாக்க, திருந்த, உல்டா செய்ய கோரல் 'வீடியோ ஸ்டுடியோ' (Corel Video Studio Ultimate)அல்லது சோனியின் 'வேகாஸ் புரோ' (Sony Vegas Pro) ஆகிய மென்பொருட்களை பயன்படுத்துவேன்.

https://www.videostudiopro.com/en/products/videostudio/ultimate/

https://www.vegascreativesoftware.com/us/vegas-pro/

மேலே இணைத்துள்ள மென்பொருட்களை விலைக்கு வாங்க வேண்டும், கொஞ்சம் மினக்கெட்டால் இவற்றில் பயிற்சி எடுத்து வல்லுநர் ஆகலாம். எளிது தான், கொஞ்சம் கிரியேட்டிவாக யோசிக்க வேண்டும்.

**

ஆடியோ ஒலிகளை(Audio clips) இணைக்க வெட்ட திருத்தம் செய்ய கீழேயுள்ள இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.

https://www.wavosaur.com/

**

என்னுடைய தொகுப்புகளை இங்கே காணலாம்..!

https://www.youtube.com/user/GRajavannian

https://soundcloud.com/rasavannian

நீங்கள் கேட்டது காணொளியை இணைப்பது மட்டுமே நோக்கமென்றால் வழி இதோ..!

யூடுயூப் இணையதளத்தில் குறிப்பிட்ட காணொளிக்கு கீழே ஷேர் (SHARE) என ஒரு பொத்தான் இருக்கும். அதைனை சுட்டினால் ஒரு சிறிய பெட்டிக்குள் அந்த காணொளியின் இணைப்பு (Link code) கிட்டும்.

அதனை காப்பி(Copy) செய்து யாழின் பெட்டியில் நேரடியாக பேஸ்ட்(Paste) செய்தால் காணொளி இணைந்துவிடும்..

நன்றி!

(நான்தான் தேவை இல்லாமல் உளறிவிட்டேனா..?) :)

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்
 
11 minutes ago, ராசவன்னியன் said:

**ஆடியோ ஒலிகளை(Audio clips) இணைக்க வெட்ட திருத்தம் செய்ய கீழேயுள்ள இலவச மென்பொருளை பயன்படுத்தலாம்.

https://www.wavosaur.com/

**

வன்னியர்,

சுருக்கமாக, இது எப்படி பாவிக்க முடியும் என விளக்குவீர்களா?

நீங்கள் நேரடியாக எமது லேப்டாப் மைக் மூலம் பேசுவதை இத்தலத்தில் பதிவு செய்ய முடியுமா அல்லது, வேறு எங்காவது பதிவு செய்த ஆடியோ பைலை இங்கே உப்லோஅது செய்து தான் பாவிக்க முடியுமா?

மன்னிக்கவும், வேறு வேளையில் இருப்பதால், இத்தளத்தில் புகுந்து விபரம் எடுக்க முடியவில்லை, அதனாலே தான் கேட்க்கிறேன்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

திரு.நாதமுனி,

லேப்டாப்பிலிருந்து ஒலியை பதிவு செய்யலாம். உதாரணமாக நீங்கள் சாட்(Chat) செய்யும் போது இந்த மென்பொருளை பாவனையில்(Running in the background) இருக்க வேண்டும். 

மென்பொருள் மெனுவில் ரெக்கார்ட்(Record) என்ற பொத்தாஇ அழுத்தி ஸ்டார்ட்(Start) செய்தால் ஒலிகளை பதிவு செய்ய ஆரம்பிக்கும்.

இந்து இலவச மென்பொருள் என்பதால் ஒலிக்கோப்புகளை சேமிக்க உச்சபட்ச அளவு உள்ளது. தொடர்ந்து பேசி பெரிய ஒலிக்கோப்புகளாக(Large Audio files) சேமிக்க இயலாது. 

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியர் திண்ணையில் படம் இணைப்பதை பார்த்தனான் html கோட் என்று நினைத்து இரண்டு தடவை முயற்சித்தும் பலன் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

வன்னியர் திண்ணையில் படம் இணைப்பதை பார்த்தனான் html கோட் என்று நினைத்து இரண்டு தடவை முயற்சித்தும் பலன் இல்லை .

அப்படி அல்லவே திரு.பெருமள்..!

யாழ்க் கள மென்பொருள் (Invision Board Community Software) உள்ளார்ந்த பல அம்சங்களை உள்ளடக்கியது. அதில் நீங்கள் இதற்கென HTML Tag தனியாக கொடுக்கத் தேவை இல்லை.

நீங்கள் நேரடியாக எந்து வெளி இணைப்புகளை கொடுக்க இயலும். அதாவது எம்பெடிங்(Embedding) செய்வது போன்று.

சுருக்கமாக சொல்லப்போனல், எப்படி பிற இடங்களில் பார்க்கிறீர்களோ, அவற்றை அப்படியே இங்கே பிரதிபலிக்கும் வல்லமைWhat You See Is What You Get ) இந்த யாழ் மென்பொருளுக்கு உண்டு..!

போனில் இருந்து படங்களை இணைப்பதற்கு ஏதும் வழியிருக்கிறதா????

ராசவன்னியரே

  • கருத்துக்கள உறவுகள்

நானும் “ இரசித்த... புகைப்படங்கள்” பகுதியில் இரசித்த படங்களை phoneலிருந்து இணைப்பதற்கு முடியாதிருக்கிறது.. 

எப்படி இணைப்பது என கூறமுடியுமா???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

நானும் “ இரசித்த... புகைப்படங்கள்” பகுதியில் இரசித்த படங்களை phoneலிருந்து இணைப்பதற்கு முடியாதிருக்கிறது.. 

எப்படி இணைப்பது என கூறமுடியுமா???

பிரபா postimages.org    என்ற தளத்ததில் இலவசமாக தரவேற்றம் செய்து அதிலிருந்து அந்த இணைப்புகளை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போனில் இருந்து படங்களை இணைப்பதற்கு ஏதும் வழியிருக்கிறதா????

ராசவன்னியரே

ஊரிலை சாத்திரக்காரனிட்டை சனம் வரிசையாய் நிக்கிற மாதிரி கிடக்கு  😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

ஊரிலை சாத்திரக்காரனிட்டை சனம் வரிசையாய் நிக்கிற மாதிரி கிடக்கு  😂

வேலை இடத்தில் சும்மா இருக்கும் நேரம் போனில் எதையாவது இணைக்கலாம் என்றால் முடியுதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பிரபா postimages.org    என்ற தளத்ததில் இலவசமாக தரவேற்றம் செய்து அதிலிருந்து அந்த இணைப்புகளை காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்.

உங்களது தகவலிற்கு நன்றிகள்.. முயற்சி செய்து பார்க்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

போனில் இருந்து படங்களை இணைப்பதற்கு ஏதும் வழியிருக்கிறதா????

ராசவன்னியரே

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நானும் “ இரசித்த... புகைப்படங்கள்” பகுதியில் இரசித்த படங்களை phoneலிருந்து இணைப்பதற்கு முடியாதிருக்கிறது.. 

எப்படி இணைப்பது என கூறமுடியுமா??

வழி இருக்கிறதே..! 😎

நான் ஆன்ட்ராய்ட் 9.0 இயங்குதளம் கொண்ட போனை பாவிப்பதால் அந்த அனுபவைத்தில் சொல்கிறேன். (ஆப்பிள் போனிலும் இதே முறைதான் இருக்க வாய்ப்புண்டு..!)

இணைக்க வேண்டிய படத்தை தெரிவு செய்து, அந்த படத்தின் மேலேயே சிறிது நொடிகள் விரலால் தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருந்தீர்களென்றால் ஒரு சிறிய பெட்டி திறக்கும். அதிலுள்ள தெரிவுகளில் "Copy image location" ஐ தெரிவு செய்துவிட்டு, உடனே யாழின் பதிவுப் பெட்டியில் அதே போன்று விரலால் சிறிது நொடிகள் தொடர்ந்து தொட்டுக்கொண்டே இருந்தால் மறுபடியும் ஒரு சிறிய தெரிவு பெட்டி திறக்கும், அதில் "Paste" என்ற தெரிவை அழுத்தினால், குறிப்பிட்ட படத்தின் இணைப்பு யாழ்க் களத்தில் தோன்றிவிடும்.

5 hours ago, குமாரசாமி said:

ஊரிலை சாத்திரக்காரனிட்டை சனம் வரிசையாய் நிக்கிற மாதிரி கிடக்கு  😂

  இனி பக்கத்தில் ஒரு உண்டியல் வைத்துவிட வேண்டியதுதான்..! 🤣

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.