Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, கிருபன் said:

இந்தத் திரியில் வந்த செய்திகளையும், கருத்துக்களையும் பார்த்துக் குழம்பி எதுக்கும்  ChatGPT இடம் கேட்போம் என்று கேட்டேன். பதில் இப்படி இருந்தது!

large.2D82888A-B017-483D-8C73-E62D0706416D.jpeg.1b22b10ae2ce985a6d9d9eeaa1d1e106.jpeg

ChatGPT பற்றி யாழ் கருத்துக்களத்தின் நிலைப்பாடு என்ன?

CharGPT ஐ பயன்படுத்தி ஆக்கத்தை உருவாக்கிவிட்டு அதில் சிறிய மாற்றத்தை செய்து இங்கு இணைத்தால் கண்டிபிடிக்க முடியாது அல்லது கடினம். 

நாம் தொடர்பாடல் செய்யும் முறையில் பாரிய மாற்றங்கள் காத்து உள்ளன. 

  • Replies 2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

CharGPT ஐ பயன்படுத்தி ஆக்கத்தை உருவாக்கிவிட்டு அதில் சிறிய மாற்றத்தை செய்து இங்கு இணைத்தால் கண்டிபிடிக்க முடியாது அல்லது கடினம். 

ஆங்கிலத்தில் ChatGPT ஓரளவு பரவாயில்லாத ஆக்கங்களைத் தருகின்றது! ஆனால் தமிழில் அந்தத் தரத்திற்கு வர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்!

Posted
On 16/2/2023 at 02:12, நியாயத்தை கதைப்போம் said:

ChatGPT பற்றி யாழ் கருத்துக்களத்தின் நிலைப்பாடு என்ன?

CharGPT ஐ பயன்படுத்தி ஆக்கத்தை உருவாக்கிவிட்டு அதில் சிறிய மாற்றத்தை செய்து இங்கு இணைத்தால் கண்டிபிடிக்க முடியாது அல்லது கடினம். 

நாம் தொடர்பாடல் செய்யும் முறையில் பாரிய மாற்றங்கள் காத்து உள்ளன. 

கட்டுரை போன்ற ஆக்கங்களை உருவாக்குவதற்கு வேண்ட்டுமானால் CharGPT பாவிக்கலாம். இதற்காக தரவுகளை வெட்டி ஒட்டுவதற்குப் பல்வேறு இணையத் தளங்கள் உள்ளன.

கருத்தாடலில் ஒவ்வொருவரும் தம் பக்கக் கருத்துக்களையே எழுத விரும்புவார்கள். CharGPT ஒவ்வொருவரின் தனிப்பட்ட கொள்கை சார்பான உரையாடல்களைத் தரும் என்று நினைக்கவில்லை. அதன் தரவுகளும் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். பொய்ப் பரப்புரைகளுக்கும் சதிக் கோட்பாடுகளுக்கும் நிச்சயம் இடம் இருக்காது.

  • Confused 1
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நான் மோபைல் மூலம் யாழ் கருத்துக்களத்தினுள் உள் நுழையும்போது தன்னிச்சையாக சிறிதுநேரத்தில் வெளியேற்றப்படுகின்றேன். பிரைவேட் மோடில் உள்நுழைவது இதற்கு காரணமா? இப்படி உங்கள் வேறு யாருக்காவது ஏற்படுகின்றதா? எதையாவது எழுதும் போது சிறிதுநேரத்தில் நான் எனது கணக்கில் இருந்து  லொக் அவுட் ஆக்கப்படுவதால் கருத்துக்களை இடுவது சிரமமாக உள்ளது.  இப்படி கடந்த ஒரு ஆறு மாத காலமாக உள்ளது என நினைக்கின்றேன். 

Posted
1 hour ago, நியாயத்தை கதைப்போம் said:

எனக்கும் இந்த பிரச்சினை private modeவ்/ secret mide டில் கடந்த சில நாட்களாக இருந்தது. அதில் இருந்து வெளியேறிய பின் இன்று சரியாகியள்ளது.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 17/2/2023 at 19:39, இணையவன் said:

கட்டுரை போன்ற ஆக்கங்களை உருவாக்குவதற்கு வேண்ட்டுமானால் CharGPT பாவிக்கலாம். இதற்காக தரவுகளை வெட்டி ஒட்டுவதற்குப் பல்வேறு இணையத் தளங்கள் உள்ளன.

கருத்தாடலில் ஒவ்வொருவரும் தம் பக்கக் கருத்துக்களையே எழுத விரும்புவார்கள். CharGPT ஒவ்வொருவரின் தனிப்பட்ட கொள்கை சார்பான உரையாடல்களைத் தரும் என்று நினைக்கவில்லை. அதன் தரவுகளும் பெரும்பாலும் சரியானதாகவே இருக்கும். பொய்ப் பரப்புரைகளுக்கும் சதிக் கோட்பாடுகளுக்கும் நிச்சயம் இடம் இருக்காது.

தமது கருத்துக்களை நேர்மையுடன் ஆதாரபூர்வமாக நிறுவுவதற்கு இதனை உதவியாக கொள்ளலாம் என்று நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

நான் மோபைல் மூலம் யாழ் கருத்துக்களத்தினுள் உள் நுழையும்போது தன்னிச்சையாக சிறிதுநேரத்தில் வெளியேற்றப்படுகின்றேன். பிரைவேட் மோடில் உள்நுழைவது இதற்கு காரணமா? இப்படி உங்கள் வேறு யாருக்காவது ஏற்படுகின்றதா? எதையாவது எழுதும் போது சிறிதுநேரத்தில் நான் எனது கணக்கில் இருந்து  லொக் அவுட் ஆக்கப்படுவதால் கருத்துக்களை இடுவது சிரமமாக உள்ளது.  இப்படி கடந்த ஒரு ஆறு மாத காலமாக உள்ளது என நினைக்கின்றேன். 

நான் யாழை 2017க‌ளில் இருந்து கைபேசியில் இருந்து பார்க்கிறேன் என‌க்கு உப்ப‌டி பிர‌ச்ச‌னை ஒரு போதும் வ‌ந்த‌து இல்லை அண்ணா................
 
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
On 16/2/2023 at 07:03, கிருபன் said:

ஆங்கிலத்தில் ChatGPT ஓரளவு பரவாயில்லாத ஆக்கங்களைத் தருகின்றது! ஆனால் தமிழில் அந்தத் தரத்திற்கு வர இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்!

அதுக்குதான் கூகுள் translate இருக்குதே 💪

என்ன பிரச்சனை எண்டால்.சிலிக்கன் வளி பேங்க் பிரச்சனையால் இந்த நிறுவனத்துக்கு ஏதும் பிரச்சனை வராமல் இருக்கோணும். 

Edited by Nathamuni
  • Like 1
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள், கள உறவுகளின் பிறந்தநாளை உள்நுழைந்ததும்(login) தெரியும்படி செய்யலாமே? கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் பிறந்தநாளில் எல்லோரும் வாழ்த்த வாய்ப்பு உள்ளது அல்லவா?

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

1) நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்:- அயலகச் செய்திகளையும் முகப்பில் தெரிய வைக்கலாமே? நேற்று மணிப்பூர் பற்றி நான் அயலகச் செய்தியில் இணைத்த திரி 17 பார்வைகள் பெற்றுள்ளது. அது சம்பந்தமான செய்தி உலக நடப்பில் இணைக்கப்பட்டபோது 108 பார்வைகள் பெற்றுள்ளது.

indian-news.jpg

world-news.jpg

2) இன்னுமொரு வேண்டுகோள்:- யாழின் தேடும் பகுதியில் கீழுள்ள படத்தில் வருவது போல் தோன்றுகிறது. தேடலுக்கு இடையூறு, அமைப்பு ஒழுங்கையும் கெடுப்பதால் அடுத்த மேம்படுத்தலின் போது கவனியுங்கள்.

search-er.jpg

yarl-err.jpg

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

@இணையவன், @நிழலி, @நியானி @nunaviIan நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். தேடலை சொடுக்க கீழுள்ள படத்தில் இருப்பது போல் வருகிறது. இது முன்னரும் வருவது பின்பு சரி செய்யப்படுவது. இதனால் ஒரே செய்தி திரும்பத் திரும்ப பதியப்படுகிறது. நேற்றில் இருந்து இப்போது வரையான ஊர்ப்புதினச் செய்திகளைக் கவனியுங்கோ.

search-error.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 minutes ago, ஏராளன் said:

animiertes-computer-bild-0432.gif 

எனக்கும்... நேற்றில் இருந்து, இந்த Error காட்டிக் கொண்டுள்ளது. 

animiertes-computer-bild-0516.gifanimiertes-computer-bild-0440.gifபிறகு லப் ரொப்பை  தூக்கி, ஒரு குலுக்கு, குலுக்கி விட்டு பார்க்க சரி வருது. (பகிடிக்கு) 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, தமிழ் சிறி said:

animiertes-computer-bild-0432.gif 

எனக்கும்... நேற்றில் இருந்து, இந்த Error காட்டிக் கொண்டுள்ளது. 

animiertes-computer-bild-0516.gifanimiertes-computer-bild-0440.gifபிறகு லப் ரொப்பை  தூக்கி, ஒரு குலுக்கு, குலுக்கி விட்டு பார்க்க சரி வருது. (பகிடிக்கு) 😂

இந்த தகராறு பெரிய பிரச்சனை இல்லை அண்ணா! ஆனால் புதிய செய்திகளை இணைக்க முன் அது இணைக்கப்பட்டுள்ளதா என தேடிப் பார்த்துவிட்டு இணைக்க  @நிழலிஅண்ணை சொன்னவர். வீணாக யாழுக்கு பாரத்தை கொடுக்காமல் இருக்கத் தான் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ஏராளன் said:

இந்த தகராறு பெரிய பிரச்சனை இல்லை அண்ணா! ஆனால் புதிய செய்திகளை இணைக்க முன் அது இணைக்கப்பட்டுள்ளதா என தேடிப் பார்த்துவிட்டு இணைக்க  @நிழலிஅண்ணை சொன்னவர். வீணாக யாழுக்கு பாரத்தை கொடுக்காமல் இருக்கத் தான் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினேன்.

ஏராளன், நீங்கள் முன்பே தெரியப் படுத்தியது நல்ல விடயம்.  
எனக்கும் இதுவரை நான்கைந்து முறை குறுகிய நேரம் தடைப் பட்டு மீண்டும் சரி வந்தது.
சேர்வர் பிரச்சினை போலுள்ளது.  

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்+
Posted
On 7/5/2023 at 08:07, ஏராளன் said:

@இணையவன், @நிழலி, @நியானி @nunaviIan நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். தேடலை சொடுக்க கீழுள்ள படத்தில் இருப்பது போல் வருகிறது. இது முன்னரும் வருவது பின்பு சரி செய்யப்படுவது. இதனால் ஒரே செய்தி திரும்பத் திரும்ப பதியப்படுகிறது. நேற்றில் இருந்து இப்போது வரையான ஊர்ப்புதினச் செய்திகளைக் கவனியுங்கோ.

search-error.jpg

நான் கிளப்புக்குச் செல்ல இயலாமல் உள்ளது. செல்ல முறபடும் போதெல்லாம் இது வந்து விழுகிறது.

Posted
1 hour ago, நன்னிச் சோழன் said:

நான் கிளப்புக்குச் செல்ல இயலாமல் உள்ளது. செல்ல முறபடும் போதெல்லாம் இது வந்து விழுகிறது.

Databaseஇல் சிறு பிரச்சனை. விரைவில் சரி செய்யப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்+
Posted
2 minutes ago, இணையவன் said:

Databaseஇல் சிறு பிரச்சனை. விரைவில் சரி செய்யப்படும்.

சரி ஐயனே. அப்படியே ஆகட்டும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted
4 hours ago, இணையவன் said:

Databaseஇல் சிறு பிரச்சனை. விரைவில் சரி செய்யப்படும்.

நிர்வாகம் கவனிக்கலையோ என கவலைப்பட்டேன், நன்றி இணையவன் அண்ணை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 9/5/2023 at 05:47, இணையவன் said:

Databaseஇல் சிறு பிரச்சனை. விரைவில் சரி செய்யப்படும்.

சரி செய்யப்பட்டுவிட்டது என நினைக்கிறேன். தேடலின் பின் செய்திகளை இணைக்க முடிகிறது. நிர்வாகிகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் நிர்வாகம்!
எனக்கு கடந்த பல நாட்களாக விருப்புவாக்கு இட முடியாமல் இருக்கின்றது.ஒரு புள்ளி இரு புள்ளியுடன் சரி....எங்கேயாவது சிக்கல் இருந்தால் எடுத்து விடவும்.

Posted
7 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் நிர்வாகம்!
எனக்கு கடந்த பல நாட்களாக விருப்புவாக்கு இட முடியாமல் இருக்கின்றது.ஒரு புள்ளி இரு புள்ளியுடன் சரி....எங்கேயாவது சிக்கல் இருந்தால் எடுத்து விடவும்.

கடந்த 24 மணித்தியாலத்துக்குள் நீங்கள் 7 தடவை விருப்பப்புள்ளி பாவித்துள்ளதாக அட்மின் தரவு தெரிவிக்கிறது.

  • Haha 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கறுவல் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டதால், கறுவலுடன் சேர்ந்து கொலையில் தமிழ் இளைஞர் திரி பூட்டப்பட்டது. அதேவேளை, வெள்ளை, வெள்ளயம்மா என்று சொற்பதம் பாவித்த போது கண்டு கொள்ளாத நிர்வாகம் கறுவல் சொற்பதம் குறித்த விசனமுறும் நிலைப்பாட்டை அறியத் தர முடியுமா? நன்றி

🙏

பிரிட்டனில் தேசிய பத்திரிகைகள், பிபிசி போன்றவை கறுப்பு என்ற சொல்லை black என பாவிக்கும் நிலையில், நிர்வாகத்தில் உள்ள யாரோ ஒருவருக்கு சரியான புரிதல் இல்லை என்று கருதுவதால் இது குறித்த விளக்கம் தர வேண்டும். தகுந்த விளக்கம் தந்தால் இந்த சொல்லை தவிர்ப்போம்.

Edited by Nathamuni
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

துயர்பகிர்வில் குணபூரணி சதானந்தனின் மரண அறிவித்தல் போட்டிருக்கே.

யார் இவர் என்று யாருக்கேனும் தெரியுமா?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
59 minutes ago, ஈழப்பிரியன் said:

துயர்பகிர்வில் குணபூரணி சதானந்தனின் மரண அறிவித்தல் போட்டிருக்கே.

யார் இவர் என்று யாருக்கேனும் தெரியுமா?

தெரியலை அண்ணா மட்டுக்களுக்கு தெரிந்து இருக்கும் .

  • Thanks 1
Posted
1 hour ago, ஈழப்பிரியன் said:

துயர்பகிர்வில் குணபூரணி சதானந்தனின் மரண அறிவித்தல் போட்டிருக்கே.

யார் இவர் என்று யாருக்கேனும் தெரியுமா?

மோகனுக்கு தெரிந்தவர்கள்....

  • Like 1
  • Thanks 1

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இனி இந்தப் பூமிக்கு சிறிது ஒய்வு குடுத்துவிட்டு அணுகுண்டு சோதனைகளை செவ்வாயில் நடத்தி கெடுத்து விடலாம் . .........!  😁 நன்றி ஏராளன் ...........! 
    • ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் சதங்கள் குவிப்பு; பலமான நிலையில் அவுஸ்திரேலியா 15 DEC, 2024 | 04:51 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன், கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 3ஆவது போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலியா மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கிறது. ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் அபார சதங்கள் குவித்து அணியை பலமான நிலையில் இட்டனர். போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 405 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இரண்டாம் நாள் ஆட்டம் இன்று காலை தொடர்ந்தபோது முதல் 3 விக்கெட்கள் மதிய போசன இடைவேளைக்கு முன்னர் வீழ்த்தப்பட்டது. உஸ்மான் கவாஜா (21), நேதன் மெக்ஸ்வீனி (9), மானுஸ் லபுஷேன் (12) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்தனர். எனினும் இடைவேளையின் பின்னர் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 241 ஓட்டங்களைப் பகிர்ந்ததன் பலனான அவுஸ்திரேலியா பலமான நிலையை அடைந்தது. மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் சதம் குவித்த சூட்டுடன் 101 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டம் இழந்தார். தனது 112ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஸ்டீவன் குவித்த 33ஆவது சதம் இதுவாகும். அத்தடன் 18 மாதங்களின் பின்னர் அவர் குவித்த முதலாவது சதமாகும். அவரை விட மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட், இந்தத் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பூர்த்தி செய்து 152 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ட்ரவிஸ் ஹெட் சதம் குவித்து அவுஸ்திரேலியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியிருந்தார். மத்திய வரிசையில் அலெக்ஸ் கேரி 45 ஓட்டங்களையும் பெட் கமின்ஸ் 20 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 72 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தத் தொடரில் ஜஸ்ப்ரிட் பும்ரா பதிவுசெய்த இரண்டாவது 5 விக்கெட் குவியல் இது என்பதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவுசெய்த 12ஆவது 5 விக்கெட் குவியலாகும். https://www.virakesari.lk/article/201358
    • ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினருக்கு புதுடெல்லியில் சிறப்பான வரவேற்பு! 15 DEC, 2024 | 08:05 PM   உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு புதுடில்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.   ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர்  (Dr. S. Jayashankar), இந்திய பாதுகாப்பு  ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு  வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர்.  https://www.virakesari.lk/article/201370 ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (15) பிற்பகல் 5.30 மணியளவில் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தை சென்றடைந்தார். இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கலாநிதி எஸ்.முருகன் (Dr S.Murugan) , இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, (Santosh Jha), இந்து சமுத்திர வலயத்தின் மேலதிகச் செயலாளர் புனித் அகர்வால் (Puneet Agrawal), இந்திய உபசரணைப் பிரதானி அன்ஷுமன் கவூர் (Anshuman Gaur) உள்ளிட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் சிறப்பு வரவேற்பளித்தனர். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் விஜயம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் சிறப்பாக பிரசாரம் செய்திருந்ததுடன், புதுடில்லி நகரின் பிரதான சுற்றுவட்டாரத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் (Dr. S. Jayashankar), இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் (Shri Ajith Doval) உள்ளிட்டவர்களை இன்று (15) இரவு சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்டோரும் இந்த சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளனர். https://tamil.adaderana.lk/news.php?nid=197352
    • நிழல்போல் யாழில் நின்றுலவும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க ......!
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.