Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரியும் தானே ....

Featured Replies

குறிப்பு: முதல் இரண்டு பந்திகளையும் சற்றுப் பொறுமையா வாசியுங்கோ அங்கால எங்கட விசயத்துக்கு வாறன்.

மனிதனைப் போன்றே இன்றைய வீட்டு மரஞ்செடி கொடிகளும் காட்டில இருந்து வந்தவை என்பது அனைவரும் அறிஞ்சது. ஆனால், இன்றைய வீட்டு மரங்களுக்கும், அவையின் காட்டு மூதாதைகளிற்கும் இடையே வித்தியாசம் ஏராளம். கடையில கிடைக்கிற அப்பிள் பழத்தையோ எந்த பழவகையினையோ அவையின் காட்டு மூதாதையின் அளவுகளோட ஒப்பிட்டால் கடையில கிடைக்கிற பழங்கள் எப்பவும் மிகப் பெரிதாய் இருக்கும். இன்று ஒரு அடி வரை நீளமான சோளம் கடையில கிடைகிறது. இந்தச் சோளத்தின் காட்டு மூதாதை வெறும் அரை அங்குலம் மாத்திரமே. அதுபோல இன்று கடையில கிடைக்கினற பாதாம் பருப்பின் (ஆமன்ட்) காட்டு மூதாதை மிகப்பெரும்பான்மையாய் சயனைட் விசத்தைக் கொண்டிருந்ததோடு மிகக் கசப்பானதாய் இருந்தது. அப்ப அப்பிடி இருந்தவை எப்பிடி இப்பிடி வந்தவை?

விதைப்பரம்பல் என்று சுருக்கமாச் சொல்லலாம். அதாவது விதை முற்றமுன்னர் பரம்பல் தடுக்கப்படவேண்டும். நல்லா முற்றிய விதை முளைக்கத் தயாரான உடன கடுகதியாய்க் கடத்தப்படவேண்டும். மாறாக பிஞ்சு விதைகள் பரப்பப்பட்டால் அவை முளைக்காது இறந்துவிடும். விதை பிஞ்சாய் இருக்கேக்க காய் இனிப்பாயோ மென்மையாயோ இருந்தால் பறவைகளும் விலங்குகளும் இனிப்பான காயைப் பிஞ்சுவிதையுடன் உண்டு பிஞ்சுவிதையைத் தான் பரப்பும். மாறாக, விதை பிஞ்சாய் இருக்கேக்க காய் கடினமானதாயும் கசப்பானதாயோ புளிப்பானதாயோ இருந்து, விதை பருவமடைந்ததும் தான் கனி நிறத்துப் பெருத்து மென்மையாகி நறுமணம் வீசி விலங்குகளையும் பறவைகளையும் கவருமேயானால், அக்கனிகளின் விதைகள் பரம்பி வளர்வதில் வெற்றிபெறும். பெரிய கனிகள் சிறிய கனிகளைக் காட்டிலும் அதிகம் கவனம் பெறும். அந்தவகையில் ஆரம்பத்தில் காட்டில் இருந்த பழங்கள் குடியிருப்புக்களிற்குப் பறவைகளாலும் விலங்குகளாலும் (மனிதன் உள்ளடங்கலாக) கடத்தப்படுகையில் பெருத்த பழங்களிற்குள் இருந்த முத்திய விதைகள் தான் முளைத்தன. இது விவசாயத்திற்கு முந்திய காலம். பிறகு இது விவசாயமாய் மாறேக்க மனிதன் பெருத்த பழங்களின் விதைகளைத் தெரிவு செய்தது முதலான விடயங்களும் இன்னமும் இந்தச் சுருங்கிய பதிவிற்குள் அடக்கமுடியாத காரணிகளும் நடந்து இன்று மூதாதைகளை விட முற்றிலும் மாறிப்போன சந்ததிகள் மூதாதைகளின் பெயரில் அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது மாதிரி பண்படுத்தப்படாத கரடுமுரடான நிலத்தில முளைக்குஞ் சாத்தியம் சிறிய விதைகளிற்கு அதிகமாய் இருந்தது. ஆனால் பண்படுத்தப்பட்டு நீர் ஊற்றப்படும் நிலங்களில் பெரிய விதைகளின் முளைதிறன் அதிகமானது.

அதுக்கு இப்ப என்ன மச்சான். உது தெரியுந் தானே...

ஈழத்தமிழரின் புலப்பெயர்வு என்ற விடயம் எங்களிற்குள் அதிக அளவில் ஏறத்தாள இரு தசாப்த்தங்களிற்கு முன்னர் ஆரம்பித்தது (எங்கட நாட்டைக் காட்டோட ஒப்பிடுகிறேனா என்று கேக்காதேங்கோ. இங்கு குறிப்பிடப்படுவது பரம்பல் மட்டுமே). யார் புலம்பெயர்ந்தார்கள்?புலம்பெயர்ந்தவர்களிற்குள் ஏதாவது பொது குணாம்சங்கள் இருக்கின்றனவா? என்று பாத்தால் சிலவற்றைப் பட்டியலிடலாம். சொந்தமாகவோ அல்லது கடனாகவோ புலப்பெயர்விற்குத் தேவையான (அதாவது ஒரு குடும்பத்தில் புலம்பெயர்ந்த முதலாவது ஆள் புலம்பெயர்வதற்கு) கணிசமான பணத்தைத் திரட்ட முடிந்தவர்கள், தாமும் தம்மைச் சார்ந்தவர்களும் வாழ்ந்தே தீர வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாடுடையவர்கள், பொதுமையினைக் காட்டிலும் பிரத்தியேகத்தில் அதிகம் சிரத்தை உடையவர்கள், மாறுகின்ற காரணிகளிற்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளக் கூடியவர்கள், வாழ்வாதாரப் போராட்டத்தில் எப்போதும் சழைக்காதவர்கள், அதிகாரத்தின் நெளிவு சுழிவுகள் அறிந்து அனுசரிக்கத் தெரிந்தவர்கள், தமது நிகழ்காலத்தின் அம்சங்களைப் பெறுமதிகளாகக் கருதி அவற்றை இழப்பதை விரும்பாததோடு அத்தகைய இழப்பிற்கான சாத்தியங்களை நினைத்துப் பயப்பிடுபவர்கள், தேவைக்கேற்ப அடங்கியிருந்தாலும் உள்ளுக்குள் நிமிர்ந்து நிற்கும் விருப்பத்தைச் சுமந்து நின்றவர்கள் என்பன புலம்பெயர்ந்தவர்களிற்குப் பொதுவான சில குணாம்சங்களாகக் கருதக் கூடியன.

காட்டு விதைகளின் பரம்பல்களில் அவ்வப்போது பிஞ்சுவிதைகளைக் கொண்டிருந்த இனிய காய்களும் கடத்தப்பட்டபோதிலும் காலப்போக்கில் முற்றிய விதை சுமந்த பெருத்த கனிகள் தான் வீட்டுமரங்களாகின. புலம்பெயர்விலும் மேலே பட்டியலிடப்பட்ட குணாம்சங்களற்ற சிலரும் ஏதேனும் காரணிகள் சார்ந்து விபத்துக்களாக வெளிநாடுகளிற்கு வந்திருப்பினும், அவ்வாறு வந்தவர்களும் மேற்படி குணாம்சங்களைக் கற்றுக் கொள்ளவேண்டியது அவர்களிற்கும் அவசியமாகியது. அவ்வாறு மாறமுடியாதவர்கள் புலம்பெயர் சமூகத்தின் முகத்தினை வரையும் கோடுகளாக இருக்கமுடியாதவர்களாகவே ஆகிப்போயுள்ளனர் (உதாரணம் இங்கு வந்தபின் சிலர் நாட்டிற்குப் போராடப் போயிருந்தனர், ஆனால் அவ்வாறு சென்று அங்கு இறுதிவரை நிலைத்தவர்கள் மிகச் சொற்பம்).

நாம் ஒவ்வொருவரும் எங்களை எம் பெற்றோர்களில் இருந்து வித்தியாசமானவர்களாக தனித்துவங்களாக என்ன தான் காட்டிக்கொண்டாலும் ஒரு மனிதனில் அவனது குழந்தைப் பருவமும் வளர்ப்பு முறையும் செலுத்துகின்ற பாத்திரம் புறக்கணிக்க முடியாதது. எமது பெற்றோர்கள் எமக்குள் செலுத்துகின்ற பெறுமதிகள் சில சமயங்களில் நேரக்குடுவைகள் போன்று எமக்குள் உறங்கு நிலையில் இருப்பினும், அவை வெளிப்படுவது தவிர்க்க முடியாதது. யாரோ கூறிய 'நாம் நமது பெற்றோராக மாறிப்போகின்றோம' என்ற விரக்தியான வார்த்தைகள் உண்மையானவை. நாம் நமது பெற்றோர்கள் எம்மை வளர்த்த சூழ்நிலையில் இருந்து முற்றாக மாறுபட்ட சூழ்நிலையில் வாழவேண்டிய தேவை ஏற்படின் எமக்குள் எம் பெற்றோர்க்ள இட்ட பெறுமதிகள் ஒருவேளை அவை இவை தான் என்று அடையாளப்படுத்த முடியாத புதிய வடிவங்களில் வெளிப்படலாம். ஆனால் அடிப்படை ஒன்று தான். அதேநேரம், எமது பெற்றோர்கள் எம்மை வளர்த்த சூழ்நிலையிலேயே நாம் தொடர்ந்து வாழுவோமேயானால் எமது பெற்றோர்கள் எமக்குள் போட்ட பெறுமதிகளை அவர்கள் போட்ட அதே வடிவத்தில் எம்மால் எம்மில் காணமுடியும். புலம்பெயர்ந்த மேற்கு நாடுகளைப் பொறுத்தவரை இங்கு எமது அடுத்த சில சந்தததிகள் இந்தச் சூழலில் வாழ்வதற்கான சாத்தியங்களே அதிகம். அந்தவகையில், புலம்பெயர்ந்த நம்மவரின் சந்ததிகளில் மேலே பட்டியலிட்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் பொதுவான குணாம்சங்கள் அவதானிக்கப்படக்கூடியனவாய் இருக்கும்.

இருபது வருடங்களிற்கு முன்னர் தமது மழலைகள் பல்கலைக்கழகம் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்ட நமது பெற்றோர்கள் இப்போது தமது மழலைகள் ஹாவர்ட் எம்.ஐ.ரி போன்ற பல்கலைக்கழங்களிற்குச் செல்ல வேண்டும் என்று தமது விருப்பத்தைச் சற்றுக் குறிப்பாக வெளிப்படுத்துகிறார்கள். சொந்தப் பெயரில் இருப்பதற்குத் தொடர்மாடிக்கட்டிடம் வாடகைக்கு எடுப்பது பிரச்சினையாய் இருந்த நிலை மாறி, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற நிலை மாறி, கொட்டேச்சுக்கள் எந்தப் பிரதேசத்தில் வாங்கப்பட்டன யாருடைய கொட்டேச் உள்ள பகுதி மதிப்பானது என்ற ஒப்பீடுகள் இன்று சாதாரணமாகிப் போயுள்ளன. பல்கலைக்கழகத்தால் வெளிக்கிட்டு வேலை வேண்டும் என்ற நிலை மாறி, யார் சீ.ஈ.ஓ ஆர் எத்தனை பில்லியனை முகாமைத்துவம் செய்கிறார் போன்ற ஒப்பீடுகள் இன்று சாதாரணமாகிப் போயுள்ளன.

மேற்கின் சூழல்கள் வெள்ளையினத்தவரால் வடிவமைக்கப்பட்டு வெள்ளையினத்தவரிற்கானதாய் இருந்து வந்ததால், இருந்து வருவதால், இந்தச் சூழலில் வெற்றி பெறுவதற்கு இந்தச் சூழலைக் கற்பனை செய்து கட்டியவர்கள் போன்று சர்வசாதாரணமாய் புலம்பெயர்ந்த மிகப்பெரும்பான்மையினரால் தாமும் மருவ முடிகிறது. போரில் இறக்காது போராடி நோகாது புலம்பெயர்ந்து இருப்பதற்கு எந்தக் குணவியல்பு அடிப்படையாய் இருந்ததோ அவர்களில் அதே குணவியல்புகள் தொடர்ந்தும் அவர்களை வெற்றி பெற்றவர்களாகத் தக்க வைப்பதில் செயற்பட்டுக் கொண்டிருப்பது எந்த ஆச்சரியத்தையும் ஆரிற்கும் ஏற்படுத்தப்போவதில்லை.

மேலே பாதாம் பருப்புக் கசப்பானதாய் சயனைட் கொண்டதாய் இருந்து இன்று இன்றைய நிலைக்கு வந்தது என்று சொல்லி விட்டு எப்படி அது சாத்தியமானது என்று சொல்லாது விட்டிருந்தேன். தாவரங்களில் மரபணுக்களில் மருவல்கள் அதுவும் வெறும் ஒரு மரபணு மருவுவது என்பது சாதாரணமானது. ஆமன்ட் மரத்திலும் இவ்வாறான மருவல் கசப்பான கடினமான சயனைட் விதையை இன்றைய நிலையினதாய் மாற்றியது. ஆனால் இன்று விசமற்ற ஆமன்ட் மட்டும் எமது கண்ணில் படுவதற்கான காரணம் மனிதன் தனக்குத் தேவையான மருவிய ஆமன்டை மட்டும் தெரிவு செய்து நிலைக்கச் செய்தான். இது இயற்கையின் தெரிவு என்பதைக் காட்டிலும் இயற்கையின் ஒரு அங்கமான மனிதனின் தெரிவு என்று கூறக்கூடியது. இது போன்று மேற்கின் வெற்றி பெற்ற மனிதர்கள் தமக்குச் சாதகமான புதிய மனிதர்களை தெரிவு செய்வர். வெற்றி பெற்ற மேற்கின் மனிதர் போன்று மருவக் கூடியவர்கள் பதவி உயர்வுகள் பொருளாதார உயர்வுகளை அதிகம் அனுபவிப்பர். இது மேலும் பல புலம்பெயர்ந்தவரை இவ்வாறு மருவுவதற்குத் தூண்டும்.

ரோல்ஸ்ரோய் கூறினார் 'மகிழ்ச்சியான குடும்பங்கள் எல்லாம் ஒரே வகையினவாய் இருக்கின்றன. மகிழ்ச்சியற்ற குடும்பங்கள் தான் தத்தமது விதங்களில் மகிழ்ச்சியற்று இருக்கின்றன' என்று. அதைப் போல வெற்றி பெற்றவர்கள் எல்லாம் கிட்டதட்ட ஒரேமாதிரியானவர்களாகத் தான் இரருப்பர். தோற்றவர்கள் தான் ஒவ்வொரு விதத்தில் தோற்றுக்கொண்டிருப்பர்.

சரி மச்சான். இப்ப உன்ர பிரச்சினை தான் என்ன. உது தெரியுந் தானே...

அப்ப புலம் பெயர்ந்த எங்கடை ஆக்கள் மற்றும் அவை வளர்த்த வளர்க்கிற அவையின் சந்ததி சேர்ந்து ஈழ விடுதலைக்காக எடுக்கின்ற போராட்ட முன்னெடுப்புக்கள் கட்டமைப்புக்கள் என்பன எப்பிடியானவையாய் இருக்கும்? (புலம்பெயர்ந்த தமிழர்களிற்குள் புலி ஆதரவு, மாற்றுக்கருத்து மற்றும் இன்னும் என்னென்ன பிரிவுகள் இருக்கோ எல்லாத்தையும் உள்ளடக்கியதாய்த் தான் இக்கேள்வி முன்வைக்கப்படுகிறது)

உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

"அப்ப புலம் பெயர்ந்த எங்கடை ஆக்கள் மற்றும் அவை வளர்த்த வளர்க்கிற அவையின் சந்ததி சேர்ந்து ஈழ விடுதலைக்காக எடுக்கின்ற போராட்ட முன்னெடுப்புக்கள் கட்டமைப்புக்கள் என்பன எப்பிடியானவையாய் இருக்கும்"

இன்னுமெருவன் நன்றாக யோசித்து பல கேள்விகளை உள்ளடக்கி கேள்வியில் முடித்துள்ளீர்கள், ஏன் எங்கட ஆட்கள் என்று வைக்கின்றீர்கள், நீங்கள் என்ன செய்கின்றீர்கள், என்ன செய்யப் போகின்றீர், அதை கொஞ்சம் எழுதுங்கே, நான் என்ன செய்கின்றேன் என்ன செய்ய போகிறேன் என்பதை விபரமாக தருகிறேன், என் நாம் இன்னும் மற்றவன் என்ன செய்யப் போறான் என்ன செய்கிறான் என்று ஆராய்வன்

நீங்கள் இவ்வமைப்புக்களில் என்ன பங்களிப்பு செய்கின்றீர்கள், உள்ளுக்கு போங்கே, அங்கு உங்கள் கடமை செய்யுங்கள் பலனை எதிர்பாராமல், நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்

Edited by உடையார்

  • தொடங்கியவர்

உடையார்;, உங்கள் கருத்திற்கு நன்றி.

நீங்கள் மேற்கோள் காட்டிய கேள்வியை மட்டும் பிரித்தெடுத்து விவாதிப்பது இத்தலைப்பிற்குச் சாத்தியமற்றது. அது மட்டும் தான் கேள்வி என்றால் பேசாமல் அதை மட்டும் கேட்டிருக்கலாம். 'என்னிட்ட விட்டால் எல்லா அமைப்பையும் தூக்கி நிறுத்துவன், என்னைத் தலைமைப் பதிவியில போடாததால தான் அமைப்புக்கள் சுரண்டு கிடக்கு' என்ற புளித்துப்போன அலுப்பேற்றும் விவாதத்திற்காக இத்தலைப்பை எழுதவில்லை. இன்னமும் சொன்னால் எந்த அமைப்பைப் பற்றிக் கதைப்பதற்காகவும் இதை எழுதவில்லை. மேலும் நானும் புலத்தில தான் இருக்கிறன். அந்தவகையில மற்றவர்களை நோக்கி கல்லெறியும் யோக்கியதை உடைய புனிதனாக என்னை நிறுவுவதற்காகவும் இத்தலைப்பை எழுதவில்லை. அதுக்கு மேலயும் சொன்னால் அரசியல் கேள்வியோட முடிஞ்சாலும் இது அரசியல் பதிவாகவே எழுதப்படவில்லை.

காரணகாரியங்களோடு ஒரு சமூகவியல் கேள்வி தோன்றிய வகையில் கேட்கப்பட்டுள்ளது. இக்கேள்விக்கான காரணகாரியங்கள் தவறான சிந்தனை, இக்காரணகாரியங்கள் சரி போன்று தோன்றினும் இதில் ஒரு லொஜிக் இடிக்கிறது அந்த இடிப்புக் கவனிக்கப்படாமல் விட்டமையால் தான் இக்காரணகாரியங்கள் சரிபோன்று தோன்றுகின்றன என்பன போன்ற சுட்டிக்காட்டல்களுடனா பின்னூட்டங்கள்வேண்டியே இத்திரியினைத் தொடங்கினேன். இத்திரி கேள்வியில் முடிந்தமை எதேச்சையானது அல்ல, உண்மையில் எனக்குள் பிறந்த கேள்வி சார்ந்து நான் புரிந்து கொள்வதற்காகவே இப்பதினைத் தொடங்கியுள்ளேன்.

மேலோட்டமாக வாசிப்பதையும், கடைசிக்கேள்வியினை மட்டும் பிரித்தெடுத்து வழமையான அலுப்பேற்றும் விவாதங்களாய் மாற்றுவதையும் தவிர்க்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

தாயகத்தை விட்டு புலம்பெயர்ந்தவர்களில் அநேகமானோர் தமக்கு பொருளாதார ரீதியாக முன்னேற ஒரு வாய்ப்பு கிடைத்ததாகவே எண்ணினார்கள். இவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதில் 'முகவர்களுக்கு' பெரும் பங்குண்டு. அவ்வாறு வந்தவர்கள் பெரும்பான்மையினர் தம்மை பொருளாதார ரீதியில் வளர்த்துள்ளனர். அவர்களுக்கு வீடுகள் என அசையா சொத்துக்களை 'வீட்டு முகவர்கள்' வேண்டி கொடுத்ததன் மூலம் அவர்களில் பலரும் முதலீடுகள் செய்த வீடுகள் நல்ல பொருளாதார பலத்தை தந்துள்ளது.

ஆனால் இந்த முதலீடுகள் எந்த நேரமும் இழக்கப்படலாம், இதற்கு அமெரிக்கா நல்ல உதாரணம். எனவே என்றும் இழக்கப்படாமல் இருக்கக்கூடியது கல்வி அறிவே. இதிலும் எம்மவர்கள் தமது பிள்ளைகளை உற்சாகமூட்டி கல்விகற்க வைக்கின்றார்கள்.

இருந்தாலும் உலகப்பொருளாதாரம் சரிந்தே வருகின்றது. அதிலே எமது அடுத்த சந்ததி நிச்சயம் பாதிக்கப்படும். திறமை இருந்தாலும் அவர்கள் நிறம் காரணமாக ஒதுக்கப்படுவார்கள். அப்போது அவர்கள் தமது பெற்றோரை கேட்கலாம் 'ஏன் உங்கள் தாய் நாட்டை விட்டுவிட்டு வந்தீர்கள்?" என.

மொத்தத்தில் எமக்கு என ஒரு நாடு இருப்பதே புலம்பெயர்ந்த எமக்கும் எமது சந்ததிக்கும் பலம் தரும். அதை உணர்ந்து நாம் அரசியல் ரீதியாக, அந்தந்த நாட்டு அரசியல் + சர்வதேச தமிழ் அரசியல், ஈடுபடுவதே தூரநோக்காக அமையும். காலம் இன்னும் கடந்துவிடாத நிலையில் நாம் உணர்ந்து செயல்பட இன்னும் நேரம் உள்ளது.

நன்றி.

இன்னுமொரு விடயத்தை இங்கு கூறலாம். பல மேற்குலக நாடுகளில் உள்ள இரண்டாவது தலைமுறையினர் தமது மூல நாட்டுக்கு சென்று பலவழிகளிலும் உதவுகின்றனர்.

கனடாவில் அண்மையில் ஒரு இளம் வைத்தியர் புதுடெல்லிக்கு சென்று வேலை பார்க்கத்தொடங்கி விட்டார். அங்கே தனக்கு நல்ல சம்பளமும், மரியாதையும், திருப்தியும் கிடைப்பதாக கூறினார். அதைவிட வேறுபலர் வேலைகள் இல்லாத காரணத்தால் தமது 'பெற்றோர்' நாடுகளுக்கு சென்று அவற்றை கட்டியெழுப்பவும் தாம் பணம் சம்பாதிக்கவும் செல்கின்றனர் (reverse migration).

அதேவேளை விடுதலைப்போராட்டங்களிலும் கூட பங்குபற்ற செல்கின்றனர். இதுவரை இரு கனேடியர்கள் லிபிய விடுதலைக்காக தமது உயிர்களை தந்துள்ளனர்.

நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையை சொல்ல வேண்டுமானால் இன்னுமெருவன் எழுதினதிலேயே மிகவும் கஸ்ட‌ப்பட்டு விளங்கிக் கொண்ட‌ பதிவு இது தான்[விளங்கிக் கொண்டேன் எனத் தான் நினைக்கிறேன்]...நாம் என்ன தான் எங்கட‌ பிள்ளைகளுக்கு கலாச்சார‌ம்,பண்பாடு ஆகியவற்றை ஊட்டி வளர்த்தாலும் எமது 2ம் தலைமுறை அதனை கொஞ்ச‌ம் பின் பற்றும்.3ம் தலை முறையில் அருகி 4ம் தலை முறையில் இல்லாமல் போய் விடும்...எங்களை பெற்றோர் வளர்த்ததுக்கும்,நாங்கள் எங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கும் பாரிய வித்தியாச‌ம் அல்லவா?

புலம் பெயர்ந்து இருப்போரில் 70% போரில் நேர‌டியாக பாதிக்கப்படாதோர் அவர்களில் 40% ஆனோருக்கு தாயகத்தின் மீதும் தங்களுக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பார்கள் அதற்காக தங்கள் குழந்தைகளையும் பயிற்றுவிப்பார்கள் ஆனால் எங்கள் போராட்ட‌ம் அதற்கடுத்த தலைமுறை தொட‌ருமானால் அவர்களது பங்களிப்பு கேள்விக்குறியே?...அதில் இட‌ம் பெயர்ந்தோரில் ஏற்கனவே 30% ருக்கு நாட்டை பற்றிய எந்த வித கவலையும் இல்லை...அவர்கள் இடம் பெயர்ந்து இருக்கும் தங்கள் நாடு தான் சொந்த என நினைத்து அதையே தங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்ப்பார்கள்.இப்படியானவர்கள் ஹொலிடேக்கு கூட‌ ஊருக்குப் போவதிலை[உண்மையில் ஊரில் அவர்களுக்கு யாரும் இல்லை]அப்படிப் போனாலும் கொழும்புக்கு தான் போய் வருவார்கள்...இவர்களே இப்படி இருக்கும் அவர்களது 2ம்,3ம் தலை முறை எப்படி இருக்கும்?

இன்னும் 10,20 வருட‌ங்களுக்கு பிறகு எமது இளைய தலைமுறையினர் கல்வியின் மூலம் மிகப் பெரிய சாதனைகள்,கண்டு பிடிப்புகள் செய்யலாம்....உலகில் மிகப் பெரிய கோடிஸ்வரர் இவர் என்னும் தகுதி தமிழருக்கு கிடைக்கலாம். யாராவது கனடாவுக்கோ,அவுஸ்சுக்கோ,லண்ட‌னுக்குகோ பிர‌தமராக இருக்கலாம் ஆனால் எது எப்படி இருந்தாலும் நமக்கென ஒரு நாடு கிடைக்கா விட்டால் எல்லாம் வேஸ்ட்

[இன்னுமொருவன் என்னுடைய கருத்தை வாசித்து விட்டு மொக்கை என திட்ட வேண்டாம்]

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவன் நன்றாகவே ஆழ்ந்து யோசித்து எழுதி இருக்கிறீர்கள்.

புலம்பெயர்வின் நடப்பியலை இவ்வளவு கூர்மையாக எழுதி இருக்கிறீர்கள்... புலம் பெயர்ந்தவர்களின் புலிகள; ஆதரவும், மாற்றுக்கருத்துக்களும் நீண்ட காலத்திற்கு முரண்பட்டதாக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் பதில் குரோதமும் தளர்ச்சியும் வளர்ச்சி அடைகின்றன. நல்ல ஆமென்ட்டை அடையாளங்கண்டு கொண்டதுபோல புலம்பெயர்ந்த மனிதர்களில் சாத்தியப்படுமா?

  • தொடங்கியவர்

ரதி,

கருத்திற்கு நன்றி. உண்மையில் இப்பதிவை எழுத ஆரம்பிக்கையில் இயன்றவரை தெளிவாக எழுதவேண்டும் என்றும் என்று உங்களது கடந்தகால கருத்துக்களை ஞாபகத்தில் வைத்துத் தான் முயன்றேன். இன்னமும் நிறைய முயற்சி தேவைப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தொடர்ந்து முயற்சிச்கிறேன்.

நீங்கள் சொல்வது போன்று கலாச்சாரம் பண்பாடு என்பன கூட எந்தவகையில் உள்ளிடப்படுகின்றன என்பதும்கூட பெற்றோரின் இயலாமை என்பதைக் காட்டிலும் பெற்றோரின் தெரிவு என்றே நான் பார்க்கிறேன். உதாரணத்திற்குத் தமிழ்நாட்டைடை எடுத்துக் கொண்டால், எடுத்ததற்கெல்லாம அபச்சாரம் என்று கூறிக்கொள்ளும் அக்கிரகாரங்களும் மடிசார் மாமிகளும் மற்றைய சமூகங்களைக் காட்டிலும் அதிகமாக ஊடகங்களிலும் இதர அதிகார மையங்களிலும் தேவையான கவர்ச்சி ஆடைகளில் தமது பிள்ளைகளை வேலைக்குப் போட்டி போட்டு அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். எனது பார்வையில் இதற்கான காரணம் அப்பெற்றோர்களால் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தமது பிள்ளைகளில் போடமுடியாது போனது என்பதல்ல. மாறாக கலாச்சாரம் முதற்கொண்டு அனைத்தும் பொருளாதார மற்றும் அதிகார உயர்வு நோக்கியே மருவிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறே உள்ளிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எங்களை எங்கள் பெற்றோர்கள் வளர்த்தமைக்கும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை வளர்ப்பத்திற்கும் இடைய காணப்படும் வித்தியாசமாக நீங்கள் கூறுவதையும் இவ்வகையிலேயே பார்க்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகின்றது.

புலம்பெயர்ந்தவர்களில் 40வீதமானோர் நாடு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பர் என்று எழுதியுள்ளீர்கள். இந்த விகிதாசார இலக்கங்கள் சரி என்றே வைத்துக்கொள்வோம். அப்பிடியே இருப்பினும், இந்த உறுதி என்பது எவ்வகையினதாக இருக்கும் என்பது கேள்விக்குறியே. இத்திரியில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களோடு, புலம்பெயர்ந்த தமிழர்களின் பொதுவான குணாம்சங்களாகப் பட்டியலிடப்பட்ட குணாம்சங்களுடன் சேர்த்துப் பார்க்கையில், நம்மை வெற்றியாளர்களாக நிலைநாட்டிக்கொள்வதற்குத் தேவையான முயற்சிகளையும் மருவல்களையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் நாம் தமிழீழம் கிடைக்க வேண்டும் என்பதில் எத்தகைய உறுதியினை வெளிப்படுத்துவோம்? குறைந்த பட்சம் அத்தகைய ஒரு முயற்சியில் நாம் ஓரணியில் ஒன்றுபடுவது கூடச் சாத்தியமா? இங்கே முன்வைக்கப்பட்ட அனைத்துக் குணாம்சங்களையும் உள்வாங்கி, அதன் பின்னரும் நாம் அனைவரும் தமிழீழ விடுதலைக்காக ஒன்றிணைவோம் என்றால் தமிழீழம் என்பது இங்கு குறிப்பிடப்பட்ட குணாம்சங்களிற்கு ஏதுவானதாக ஆதாயமானதாக எமக்குப்படவேண்டும். தமிழீழம் என்பது ஒறுப்புக்களைக் கோருவதாக அல்லாது ஆதாயம் மிக்கதாகத் தெரியவேண்டும். அவ்வாறு உணர்வதற்கும் ஒரு அணியில் சேர்வதற்கும் இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு எத்தகைய தலைமைத்துவம் தேவைப்படும்? எத்தகைய தலைமைத்துவத்தின் பின்னால் இவர்கள் இயல்பாக அணிதிரள்வர்? இவை இன்னும் சில கேள்விகள் மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

மனித உணர்வுகளையும் விடுதலை தாகத்தையும்

மரம் செடியுடன் ஒப்பிடுவதை சகிக்க முடியவில்லை

:( :( :(

சுருக்கமாகச் சொன்னால், எம் அடுத்த சந்ததிக்கு தமிழ் ஈழத்தின் தேவை என்ன ?

அகூதா சொல்லிய இன ரீதியான பொருளாதார சூழலை அடுத்த சந்த‌தியும் முகம் கொடுக்கும். ஆகவே அவர்கள் எங்களுக்கு ஒரு நாடு வேண்டும் என்ற ஒரு கருத்திலிருந்து அதிக தூரம் விலகிப் போக முடியாது.

இன்னுமொருவன் சொல்கின்ற "மருவல்" சம்பந்தமான கருத்து எவ்வளவு தூரம் சரி என்று எனக்குத் தெரியேல்ல. ஏனென்றால் முழுத் தமிழ்ச்சமுதாயமும் இந்த "மருவல்" இற்கு முயற்சித்தாலும் அதில் வெற்றி பெறப் போவது ஒரு சிறு பகுதியே. மீதி பெரும்பகுதி பொருளாதார ரீதியாக சாதாரண நிலையில் தான் இருக்கப் போகிறது. "மருவல்" என்பது தேவையே இல்லாத வெள்ளைச் சமுதாயத்தில் கூட பொருளாதார ரீதியாக வெற்றி பெற்றவர்கள் சிறு பகுதி தான்.

புலம் பெயர்ந்தோர் மிஞ்சி மிஞ்சி (பொதுமக்கள் என்ற அளவில்) ஈழத்திற்காக செய்யக் கூடியது என்ன ?

சில அரசியல் மற்றும் வெகுசன ( Informative ) முன்னெடுப்புக்களைத் தவிர பெரிதாக ஒன்றும் இல்லை. சயனைட் கட்டத் தேவையில்லை. இப்படி சில அடிப்படையான விசயங்களைக் கூடச் செய்ய முடியாத அளவிற்கு எம்முடைய அடுத்த சந்ததிகள் விலகிப் போகும் என்று அஞ்சத் தேவையில்லை.

  • தொடங்கியவர்

அக்கூதா சொல்லுற 'நிற ஒடுக்குமுறையைக் கண்டதும் அடுத்தசந்ததி பெற்றோரைப் பாத்து ஏன் உங்கட தாய் நிலத்தை விட்டுட்டு வந்தனீங்கள் என்று கேக்கும்' என்ற உதாரணமும் ஒரு வைத்தியர் கனடாவில இருந்து புதுடில்லிக்கு வேலைக்குப் போயிருக்கிறார் என்பதைப் போல இனி உலக பொருளாதார சரிவைக் கண்ணடதும் அடுத்த சந்ததிகள் தங்கட பெற்றோரின் நாட்டைக கட்டியெழுப்பப போகப் போயினம் என்பதும் கொஞ்சம் இன்னசென்டா இருக்கு. அக்கூதா உண்மையில் இவ்வாறு தான் நீங்கள் சிந்திக்கிறீர்களா?

சஹாரா,

ஆமனட் தெரிவு செய்யப்பட்டதைப் போல புலம் பெயாந்த மனிதர்கள் தெரிவு செய்யப்படுவது சாத்தியமா என்ற கேள்விக்கான பதில் நிச்சயமாக ஆம் என்பதாகவே எனக்குள் இருக்கின்றது. இது எமது மக்களிற்கு மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் புலப்பெயர்வுகளில் வெற்றிப்பாதைகளில் நகரும் அனைவரிலும் காணக்கூடியது. உயர்வுகள் என்பது வெறும் திறமைகளால் மட்டும் சாத்தியப்பட்டுவிடுவதில்லை.

விசுகு,

மரஞ்செடிகொடிகள் கேவலமானவையாக எனக்குப் படாததால் ஒருவேளை உங்கள் ஆதங்கத்தை நான் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். உங்களை இந்த ஒப்பீடு புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். எனதுபார்வையில் புனிதங்கள், பெறுமதிகள் உணர்வுகள் எல்லாம் தேவை சார்ந்து எழுவது தான். விடுதலை உணர்வு என்பது கூட தேவையின் நிமித்தம் வாழ்வாதாரம் சார்ந்து எழுந்ததே அன்றி மனிதன் இதர உயிரினங்களைக் காட்டிலும் புனிதமானவன் என்ற அடிப்படையில் மனிதனிற்குள் பிறந்தவை அல்ல. புலப்பெயர்விற்கும் மரஞ்செடிகொடி பரம்பிலிற்கும் இடையேயான ஒப்பீடு எந்தவகைகளில் அபத்தமானவை என்று அறியத்தந்தால் அறிந்துகொள்கிறேன்.

ஈசன்,

மருவல் என்பது பில்கேட்ஸ் மட்டத்தை எட்டுவதற்குத் தான் அவசியம் என்பதல்ல. புதுச்சூழலில் அனைவரும் மருவிக்கொண்டு தான் இருக்கின்றோம் (பௌதீக ரீதியாக நோயெதிர்ப்பு ஒவ்வாமை முதலிய விடயங்கள் சில உதாரணம். உளவியல் மற்றும் பெறுமதிகள் ரீதியாக ஏராளம்). ஒருவேளை புலம்பெயர்ந்தவர்களில் காணப்படும் பொதுவான குணாம்சங்கள் என்று இடப்பட்ட பட்டியலில் உங்களிற்கு உடன்பாடு இல்லாது இருக்கலாம். அவ்வாறாயின் ஏன் என்று அறியத்தாருங்கள் அறிந்துகொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி,

கருத்திற்கு நன்றி. உண்மையில் இப்பதிவை எழுத ஆரம்பிக்கையில் இயன்றவரை தெளிவாக எழுதவேண்டும் என்றும் என்று உங்களது கடந்தகால கருத்துக்களை ஞாபகத்தில் வைத்துத் தான் முயன்றேன். இன்னமும் நிறைய முயற்சி தேவைப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தொடர்ந்து முயற்சிச்கிறேன்.

நீங்கள் சொல்வது போன்று கலாச்சாரம் பண்பாடு என்பன கூட எந்தவகையில் உள்ளிடப்படுகின்றன என்பதும்கூட பெற்றோரின் இயலாமை என்பதைக் காட்டிலும் பெற்றோரின் தெரிவு என்றே நான் பார்க்கிறேன். உதாரணத்திற்குத் தமிழ்நாட்டைடை எடுத்துக் கொண்டால், எடுத்ததற்கெல்லாம அபச்சாரம் என்று கூறிக்கொள்ளும் அக்கிரகாரங்களும் மடிசார் மாமிகளும் மற்றைய சமூகங்களைக் காட்டிலும் அதிகமாக ஊடகங்களிலும் இதர அதிகார மையங்களிலும் தேவையான கவர்ச்சி ஆடைகளில் தமது பிள்ளைகளை வேலைக்குப் போட்டி போட்டு அனுப்பிக்கொண்டிருக்கின்றார்கள். எனது பார்வையில் இதற்கான காரணம் அப்பெற்றோர்களால் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தமது பிள்ளைகளில் போடமுடியாது போனது என்பதல்ல. மாறாக கலாச்சாரம் முதற்கொண்டு அனைத்தும் பொருளாதார மற்றும் அதிகார உயர்வு நோக்கியே மருவிக்கொண்டிருக்கின்றன. அவ்வாறே உள்ளிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எங்களை எங்கள் பெற்றோர்கள் வளர்த்தமைக்கும் நாங்கள் எங்கள் பிள்ளைகளை வளர்ப்பத்திற்கும் இடைய காணப்படும் வித்தியாசமாக நீங்கள் கூறுவதையும் இவ்வகையிலேயே பார்க்கவேண்டும் என்றே எனக்குத் தோன்றுகின்றது.

புலம்பெயர்ந்தவர்களில் 40வீதமானோர் நாடு கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருப்பர் என்று எழுதியுள்ளீர்கள். இந்த விகிதாசார இலக்கங்கள் சரி என்றே வைத்துக்கொள்வோம். அப்பிடியே இருப்பினும், இந்த உறுதி என்பது எவ்வகையினதாக இருக்கும் என்பது கேள்விக்குறியே. இத்திரியில் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உதாரணங்களோடு, புலம்பெயர்ந்த தமிழர்களின் பொதுவான குணாம்சங்களாகப் பட்டியலிடப்பட்ட குணாம்சங்களுடன் சேர்த்துப் பார்க்கையில், நம்மை வெற்றியாளர்களாக நிலைநாட்டிக்கொள்வதற்குத் தேவையான முயற்சிகளையும் மருவல்களையும் முன்னெடுத்துக்கொண்டிருக்கும் நாம் தமிழீழம் கிடைக்க வேண்டும் என்பதில் எத்தகைய உறுதியினை வெளிப்படுத்துவோம்? குறைந்த பட்சம் அத்தகைய ஒரு முயற்சியில் நாம் ஓரணியில் ஒன்றுபடுவது கூடச் சாத்தியமா? இங்கே முன்வைக்கப்பட்ட அனைத்துக் குணாம்சங்களையும் உள்வாங்கி, அதன் பின்னரும் நாம் அனைவரும் தமிழீழ விடுதலைக்காக ஒன்றிணைவோம் என்றால் தமிழீழம் என்பது இங்கு குறிப்பிடப்பட்ட குணாம்சங்களிற்கு ஏதுவானதாக ஆதாயமானதாக எமக்குப்படவேண்டும். தமிழீழம் என்பது ஒறுப்புக்களைக் கோருவதாக அல்லாது ஆதாயம் மிக்கதாகத் தெரியவேண்டும். அவ்வாறு உணர்வதற்கும் ஒரு அணியில் சேர்வதற்கும் இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு எத்தகைய தலைமைத்துவம் தேவைப்படும்? எத்தகைய தலைமைத்துவத்தின் பின்னால் இவர்கள் இயல்பாக அணிதிரள்வர்? இவை இன்னும் சில கேள்விகள் மட்டுமே.

எமக்கு ஒரு நாடு கிடைக்க வேண்டும் என்ட உறுதி எமக்கும்,எமக்கு அடுத்த தலைமுறைக்கும் கொஞ்சம் இருக்கும் ஆனால் அவர்களுக்கு அடுத்த தலைமுறைக்கு இருக்கும் என்பது கேள்விக் குறியே?

இன்னும் பத்து,இருபது வருடத்திற்குள் ஒரு மாற்றம் வரா விட்டால் தமிழிழம் என்பது எட்டாக் கனவாய் போய் விடும் என்பது என் கருத்து...புலம் பெயர் மக்கள் அனைவரையும் ஒரணியில் திரட்டக் கூடிய சக்தி ஒருவருக்கும் இல்லை என்பது தான் கருத்து...தலைவரால் கூட முடியாததை இங்கு புலம் பெயர்ந்து இருக்கும் எம்மவர்களில் ஒருவரால் முடியுமா எனத் தெரியவில்லை...தலைமை தாங்க கூடியவர் புலம் பெயர் மக்களை மட்டுமல்ல ஈழத்தில் உள்ள மக்களையும் தலைமை தாங்கும் சக்தி கொண்டவராக இருக்க வேண்டும் அது எவ்வளவிற்கு சாத்தியம் எனத் தெரியவில்லை?

புலம் பெயர்ந்த ஒருவர் போராட்டத்திற்கு அழைப்பு விடுகையில் எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சக்தி அவருக்கு இருக்க வேண்டும்...அவர‌து குடும்பமும் அவரோடு சேர்ந்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்...இந்த போராட்ட‌ம் அர‌சியல் ரீதியான போராட்ட‌மாக இருந்தாலும் மக்கள் அனைவரையும் ஓர‌ணியில் திர‌ட்ட கூடிய சக்தி அவருக்கு இருக்க வேண்டும்...மக்களது நம்பிக்கையை வென்றிருக்க வேண்டும்...சிறந்த ஆளுகையும்,நிர்வாகத் திறமை கொண்ட‌வராகவும் இருக்க வேண்டும்...இப்படி எல்லாத் திறமையும் கொண்ட‌ ஒருவர் இருக்கிறார் என நான் நம்பவில்லை அப்படி ஒருவர் இருந்தாலும்?

தான்,தன்ட‌ குடும்பம் மட்டும் நல்லாய் இருக்க வேண்டும் என்கிற குறுகிய வட்டத்திற்குள் வாழும் புலம் பெயர் தமிழரால் எப்படி நமக்கு ஒரு நாடு வேண்டும் என யோசிக்க முடியும்...உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நேருக்கு நேர் முள்ளிவாய்க்காலில் மோதுகையில் இங்குள்ள மக்களுக்குள் வராத மாற்றம் இனி மேல் வருமா? அப்படியே யோசித்தாலும் என்ன செய்வார்கள் காசை கொடுத்துப் போட்டு இருப்பார்கள்... ஆனால் அதே நேர‌த்தில் பல இளம் தமிழர்கள் பொருளாதாரா ரீதியில்,கல்வியில் நம்பர் 1 இட‌த்தை அடைந்திருப்பார்கள் அந்த கல்வி,பொருளாதார‌ம்,அபிவிருத்தி அத்தோடு நான் ஏற்கனவே சொன்ன தலைமை இருந்தாலும் கூட‌ தனி ஈழம் கிடைப்பதற்கு எந்த வகையிலும் உதவாது என்பது என் கருத்து ஆனால் இலங்கைக்கு உதவலாம்[அங்கு போய் தொழிச்சாலைகள் கட்டலாம்,இலங்கையை அபிவிருத்தி அடைய வைக்கலாம்]

இனி மேல் எங்களுக்கு தனி நாடு என்பது உலக நாடுகளாக பார்த்து இர‌க்கப்பட்டு தந்தாலோ அல்லது இலங்கையை விரோதித்து கொண்டு தந்தாலோ அன்றி மூன்றாவது அங்குள்ள‌ மக்கள் அட‌க்கு முறைக்கு எதிராக கிளர்ந்தெழ போராட்ட‌மும்,தலைமையும் அங்கு தான் தோன்ற வேண்டும் அதுவும் என்னும் 10,20 வருட‌ங்களுக்குள் தோன்றினால் தான் புலம் பெயர் மக்கள் கொஞ்ச‌மாவது உதவுவார்கள்....காலங்கள் போகப்,போக எதிர் காலப் பர‌ம்பரை கறுப்பினத்தவர் மாதிரி புலம் பெயர் நாட்டைத் தவிர எமக்கு ஒரு நாடு இருக்குது என தெரிந்திருக்காது[3,4 வது பர‌ம்பரையாக இது தான் எங்கள் இட‌ம்,நாங்கள் இங்கு தான் பிறந்து வளர்ந்தோம் என சொல்வார்கள்]

இப்போது கூட‌ போர் குற்றங்களை மையப்படுத்தி தான் புலம் பெயர் அமைப்புகள் செயப்படுகின்றன...அதையே ஆதார‌மாக்கி மகிந்தாவையும்,சகோதர‌ர்களையும் தூக்கி உள்ளுக்குள் போட‌லாம் ஆனால் அதற்கு பிறகு எமக்கு நாடு?

சிலர் உண்மையாகவே ஈழ விடுதலைக்காக உழைக்கிறார்கள். அதிகமான புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை தங்களது சந்ததியை இன்னும் வீரியம் மிக்கதாக உருவாக்குவதே. சுய / குடும்ப நலத்தை நோக்கித்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சிறு கூட்டம் அங்கு போராட, வசதியானவர்கள் சந்ததியை வீரியமாக்க சந்தர்ப்பத்தைப் பாவித்து புலம் பெயர்ந்து விட்டார்கள். அவர்களின் சந்ததி எப்படி இருக்கும் என்று சொல்லத் தேவையில்லை. அடுத்த வீரியம் மிக்க இலக்கு நோக்கியே நகரும். இதை அன்றாடம் புலத்தில் காணலாம்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் திருநெல்வேலியில் கேட்ட கண்ணி வெடிச் சத்தத்திற்கு திருக்கோவிலில் இருந்தே புலம் பெயர்ந்தோம். போராடப் போன சிலரிற்குள்ளும் நடந்த சகோதர யுத்தத்தையும், ஏதோ 20 - 20 கிரிக்கெட் மேட்ச் பார்ப்பது போல ஊக்கப் படுத்தி மகிழ்ந்தோம்.

சின்னதோர் உதாரணம் - மே 19 இற்குப் பின் போராளிகளின் மறுவாழ்வுக்கான புலம்பெயர்ந்தவர்களின் ஈடுபாடு. அவர்கள் இறந்தால் மாத்திரம் மரியாதை. போராட்டத்திற்கென்று புலத்தில் அறவிட்ட பணத்தைக் கூட முன்னாள் போராளிகளுக்குச் சேராமல் அபேஸ். இதைப் பற்றி யாழில் விவாதிப்பதைக் கூட பலர் விரும்புவதில்லை. வெறும் படம் காட்டல். எங்களுக்குள் ஆயிரம் பிரிவுகள்.

கடவுள்தான் காப்பற்ற வேண்டும்.

  • தொடங்கியவர்

ரதி, தப்பிலி,

உங்கள் இருவரது கருத்துக்களோடும் உடன் பட முடிகிறது. இவ்வாறொரு வெறுமை வந்ததபோது இது தொடர்பில் இருந்து யோசித்த போது தான், இந்தத் திரி தொடங்கும் எண்ணம் ஏற்பட்டது. உங்கள் கருத்துக்களிற்

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொருவனின் சிந்தனையைத் தூண்டும் பதிவுக்கு நன்றி.

இயங்கியல் விதிகளுக்கு ஏற்ப மாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும். சூழலுக்கு ஏற்ப மாறமுடியாதவை அழிந்தே போகும் என்பதை ஏற்றுக்கொண்டால் உங்கள் பதிவை விளங்கச் சிரமம் இருக்காது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் "தனியன்"களினது சிந்தனைப்போக்கைக் கொண்டிருக்கின்றார்கள். நான், எனது குடும்பம், எனது செழுமையான வாழ்வு என்பவற்றிற்கு அப்பால்தான் சமூக சிந்தனை உள்ளது. இதனைத்தான் கடந்த இரு வருடங்களுக்கு மேலான புலம்பெயர் தமிழர்களின் தமிழீழம் சார்ந்த அரசியல் நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனவே எதிர்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தங்களது வேர்களை இறுக்கமாகப் பதிந்து ஒரு சிறுபான்மை/பல்லினக் கலாச்சாரத்திற்குள் அமிழ்ந்து புலம்பெயர் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மருவிய அடையாளத்தை ஏற்றுக்கொள்வதும் அல்லது தமிழர்கள் என்ற தனித்துவமான அடையாளத்தைத் துறப்பதும் (இதற்கு சாத்தியம் குறைவு) நடக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மிகவும் கடுமையாக உழைத்து, மத்தியதர, மேல்தர வகுப்பினராக மாற்றம் அடைய பணம் பெருக்குவதுதான் உள்ள ஒரே வழி என்ற முதலாளித்துவ சிந்தனையை நன்கு புரிந்துதான் உள்ளனர். அடிமட்டத்தில் தொடர்ந்தும் உழன்றுகொண்டிருக்கும் பிற இனத்தினரை (குறிப்பாகக் கறுப்பினரை) விடத் தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்ற சிந்தனைப் போக்கு இருப்பதனால்தான் வீடுகள் வாங்கும்போதுகூட, பொருளாதாரத்திற்கு ஏற்பில்லாமல் இருந்தாலும், வசதிபடைத்த வெள்ளையினத்தவர்கள் வாழும் பகுதிகளிலே தமிழர்கள் வீடுகள் வாங்குவார்கள்/வாங்க விரும்புவார்கள். இத்தகைய போக்குகள் தமிழர்கள் எப்பாடுபட்டாவது புலம்பெயர் நாடுகளில் தாமும் தமது சந்ததியினரும் நல்ல நிலையில் வாழவேண்டும் என்ற விருப்பினால்தான்.

சில தமிழர்கள் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் முதலீடுகள், வீடுகள் என்று செய்துள்ளனர்தான். எனவே குடியேறியோருக்கு ஆபத்தான சூழல் எதிர்காலத்தில் வந்தால் (வருவதற்கு சாத்தியங்கள் மிகமிகக் குறைவு), மீண்டும் ஒரு புலப்பெயர்வை இலங்கை நோக்கியோ அல்லது தமிழ்நாட்டை நோக்கியோ மேற்கொள்ளத் தயக்கம் காட்டமாட்டார்கள். தேவையான பணமும், கடின உழைப்பும் மூலதனமாக இருக்கும் தமிழர்களிற்கு இன்னுமோர் இடத்தில் காலூன்றுவது இலகுவாகத்தான் இருக்கும்!

எனவே புலம் பெயர்ந்த தமிழர்களும் அவர்களது சந்ததியினரும் சேர்ந்து ஈழ விடுதலைக்காக எடுக்கின்ற போராட்ட முன்னெடுப்புக்கள் கட்டமைப்புக்கள் என்பன தமிழீழத்தைப் பெற்றுத்தரும் என்ற கனவில் இருப்பதை விட்டுவிடலாம். இம்முயற்சிகள் மூலம் தாயகத்தில் உள்ள தமிழர்கள் அரசியல் ரீதியாக சிங்களவர்களுக்குச் சமமாக வாழும் உரிமைகளப் பெற்றுக்கொண்டாலே அது பெரும் வெற்றிதான்.

  • தொடங்கியவர்

இன்னுமொருவனின் சிந்தனையைத் தூண்டும் பதிவுக்கு நன்றி.

இயங்கியல் விதிகளுக்கு ஏற்ப மாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும். சூழலுக்கு ஏற்ப மாறமுடியாதவை அழிந்தே போகும் என்பதை ஏற்றுக்கொண்டால் உங்கள் பதிவை விளங்கச் சிரமம் இருக்காது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் "தனியன்"களினது சிந்தனைப்போக்கைக் கொண்டிருக்கின்றார்கள். நான், எனது குடும்பம், எனது செழுமையான வாழ்வு என்பவற்றிற்கு அப்பால்தான் சமூக சிந்தனை உள்ளது. இதனைத்தான் கடந்த இரு வருடங்களுக்கு மேலான புலம்பெயர் தமிழர்களின் தமிழீழம் சார்ந்த அரசியல் நடவடிக்கைகள் காட்டுகின்றன. எனவே எதிர்காலத்தில் புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் தங்களது வேர்களை இறுக்கமாகப் பதிந்து ஒரு சிறுபான்மை/பல்லினக் கலாச்சாரத்திற்குள் அமிழ்ந்து புலம்பெயர் நாடுகளுக்கு ஏற்ற மாதிரி மருவிய அடையாளத்தை ஏற்றுக்கொள்வதும் அல்லது தமிழர்கள் என்ற தனித்துவமான அடையாளத்தைத் துறப்பதும் (இதற்கு சாத்தியம் குறைவு) நடக்கலாம்.

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மிகவும் கடுமையாக உழைத்து, மத்தியதர, மேல்தர வகுப்பினராக மாற்றம் அடைய பணம் பெருக்குவதுதான் உள்ள ஒரே வழி என்ற முதலாளித்துவ சிந்தனையை நன்கு புரிந்துதான் உள்ளனர். அடிமட்டத்தில் தொடர்ந்தும் உழன்றுகொண்டிருக்கும் பிற இனத்தினரை (குறிப்பாகக் கறுப்பினரை) விடத் தமிழர்கள் உயர்ந்தவர்கள் என்ற சிந்தனைப் போக்கு இருப்பதனால்தான் வீடுகள் வாங்கும்போதுகூட, பொருளாதாரத்திற்கு ஏற்பில்லாமல் இருந்தாலும், வசதிபடைத்த வெள்ளையினத்தவர்கள் வாழும் பகுதிகளிலே தமிழர்கள் வீடுகள் வாங்குவார்கள்/வாங்க விரும்புவார்கள். இத்தகைய போக்குகள் தமிழர்கள் எப்பாடுபட்டாவது புலம்பெயர் நாடுகளில் தாமும் தமது சந்ததியினரும் நல்ல நிலையில் வாழவேண்டும் என்ற விருப்பினால்தான்.

சில தமிழர்கள் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் முதலீடுகள், வீடுகள் என்று செய்துள்ளனர்தான். எனவே குடியேறியோருக்கு ஆபத்தான சூழல் எதிர்காலத்தில் வந்தால் (வருவதற்கு சாத்தியங்கள் மிகமிகக் குறைவு), மீண்டும் ஒரு புலப்பெயர்வை இலங்கை நோக்கியோ அல்லது தமிழ்நாட்டை நோக்கியோ மேற்கொள்ளத் தயக்கம் காட்டமாட்டார்கள். தேவையான பணமும், கடின உழைப்பும் மூலதனமாக இருக்கும் தமிழர்களிற்கு இன்னுமோர் இடத்தில் காலூன்றுவது இலகுவாகத்தான் இருக்கும்!

எனவே புலம் பெயர்ந்த தமிழர்களும் அவர்களது சந்ததியினரும் சேர்ந்து ஈழ விடுதலைக்காக எடுக்கின்ற போராட்ட முன்னெடுப்புக்கள் கட்டமைப்புக்கள் என்பன தமிழீழத்தைப் பெற்றுத்தரும் என்ற கனவில் இருப்பதை விட்டுவிடலாம். இம்முயற்சிகள் மூலம் தாயகத்தில் உள்ள தமிழர்கள் அரசியல் ரீதியாக சிங்களவர்களுக்குச் சமமாக வாழும் உரிமைகளப் பெற்றுக்கொண்டாலே அது பெரும் வெற்றிதான்.

கிருபன் கூறுகின்ற வீடு வாங்குபோது இடம் தெரிவு செய்தல் என்பதும் ஒரு சிறப்பான உதாரணம். அதுபோன்றே ஒரு வேளை தமது புலம்பெயர்ந்நாட்டில் தொடர்ந்து இருக்கமுடியாத நிலை ஏற்படுமேயாயின் எந்தப் புதிய பகுதி தமது குணாம்சங்களிற்கு அனுகூலமானதோ அங்கு செல்வதற்கு நொடியும் தயங்க மாட்டார்கள்.

புலம்பெயர்ந்த நாடுகiளில் நெருக்கடிகள் ஏற்படின் தமிழ் சந்ததிகள் தம் பெற்றோரைப் பார்த்து உங்கள் தாயகங்களை விட்டு ஏன் வெளியேறினீர்கள் என்று வசனம் பேசுவார்கள் என்பதோ, அத்தகைய வசனங்களிற்குப் பயந்து தாய்தந்தையர் ஈழத்தை உருவாக்க இன்று உழைப்பார்கள் என்பதோ உலக பொருளாதாரச் சரிவைப் பார்த்ததும் படைபடையாக புலம்பெயர்ந்தவர்கள் றிவேர்ஸ் மைகிறேசன் செய்வார்கள் என்பதோ விசில்கள் நிறையும் பிரச்சார மேடைகளில் கூட கைதட்டுப் பெறக்கூடிய கூற்றுக்களா என்றால் இல்லை என்றே சொல்லத்தோன்றுகின்றது.

.

"மருவி" எல்லாம் பில் கேட்சாக வரமுடியாது இன்னுமொருவன்.

புலம் பெயர்ந்தோரின் ஈழ விடுதலைக்கான போராட்ட முன்னெடுப்புகள், தாயகத்திலிருக்கிறவர்களால் முன்னெடுக்கப்பட்ட முறைகளையோ / பாதையையோ பின்பற்றமுடியாது. அதனால் போராட்ட முன்னெடுப்பிற்கு தாயகத்தில் இருப்போரிடம் எதிர்பார்க்கப் பட்ட‌ குணாம்சங்களை புலம்பெயர்ந்தோரிடம் எதிர்பார்க்க வேண்டிய தேவையில்லை.

புலம் பெயர் போராட்ட முன்னெடுப்புகளிற்கு இருக்கக்கூடிய தெரிவுகள், தாயக போராட்டத்தை முன்னெடுத்தவர்களோடு ஒப்பிட்டால் குறைவு. ஏற்கனவே சொன்னது போல் அரசியல் அல்லது Informative / PR என்று சில தான். இப்படியான் நிலமையில் புலம் பெயர்ந்தோர் தம்முடைய பொருளாதார முன்னேற்ற வேலைகளைக் கைவிட்டு எந்தநேரமும் ஈழவிடுதலைச் சிந்தனையோட தெருவில இறங்கிறதால ஆகப்போறது ஒன்றுமேயில்லை. 2009 மே இல் புலம்பெயர்மக்கள் இவ்வளவு போராடியும், சிங்களவனின் நிகழ்ச்சி நிரலில் ஒரு அணுக்கூட அசையேல்ல.

முற்றும் முழுதாக தாயக மக்களின் அதே எண்ணங்கள் / சிந்தனைகளோட புலம்பெயர்ந்தோரும் அவர்களுடைய சந்ததிகளும் இருந்தால்தான் அவர்களின் ஈழப்போராட்ட முன்னெடுப்பு வெற்றி அடையலாம் என்பது போலவும் இந்த "மருவல்" காரணமாக இது பிசுபிசித்துப் போகப் போவது போலவும் உங்கள் பதிவுகள் சொல்வதாக படுகிறது.

இதில் உள்ள அடிப்படைத் தவறு புலம் பெயர் போராட்ட முன்னெடுப்பு மக்கள் போராட்டத்திலோ அல்லது அவர்களின் அதி தீவிர விடுதலை உணர்விலோ காரியத்தை சாதிக்கப் போவதில்லை. மேற்குலக அதிகார வர்க்கத்திற்கு ஒரு விசயத்தை எடுத்துச் செல்வதற்கு பல்வேறு "பாதைகள்" ( Channels ) உள்ளன. நிச்சியமாக மக்கள் போராட்டம் அவற்றுள் ஒன்றல்ல. ஏற்கனவே மே 2009 இதைப் பார்த்தாயிற்று. அப்படி என்றால் இந்த புலம் பெயர் போராட்ட முன்னெடுப்புகள் எப்படித்தான் போராட்டத்தைக் கொண்டுபோவது ?

உலகத்தின் பலம் மிக்க முடிவுகளை எடுக்கவல்ல அதிகார மையங்கள் மேற்குலகில் உண்டு. இந்த அதிகார மையங்களை அணுகி எம்முடைய கருத்துக்களைத் தெரிவிப்பதன் மூலம் எமக்குச் சாதகமான முடிவுகளை அவர்கள் எடுக்க வைப்பது தான் புலம் பெயர் போராட்ட அமைப்புகளின் உச்ச கட்ட வேலைத்திட்டமாக இருக்க முடியும்.

இதைச் செய்வதற்கு "மருவல்" ஒரு பாதகமான விசயமாக பார்க்கிறீர்கள். மாறாக "மருவல்" சாதகமான விசயமாகக் கூட இருக்கலாம். உதாரணமாக மருவல் காரணமாக ஏற்பட்ட எம்முடைய பொருளாதர பலம் புலம் பெயர் போராட்ட முன்னெடுப்பை உதாசீனப் படுத்த முடியாத நிலமையை உண்டாக்கலாம். எம் ஒருவன் மருவல் காரணமாக CEO/ CTO / CFO ஆக வந்தால் அவன் அதிகார மட்டத்தை அணுக இலகுவாக இருக்கும். அத விட்டுட்டு, இல்ல !! இல்ல அவன் பனங்கொட்டையாகவே இருந்து பச்சத்தண்ணியில பலகாரம் சுட்டால் தான் புலம் பெயர் போராட்டம் சாதிக்கும் என்று சொன்னால்.......

நான் விசிலடிக்க மாட்டன்..

வேறு யாரும் விசிலடிப்பார்களோ எனக்குத் தெரியாது ...

அகூதா சொல்வது போல் புலம்பெயர் நாடுகளின் பொருளாதரமும், உலகப் பொருளாதாரமும் ஈழப் போராட்டத்திலே செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணிகள். உதாரணமாக பொருளாதார காரணங்களிற்காக‌ EU குடியேற்றக் காரர்களிற்கெதிராக காரசாரமான் தீர்மனங்களை எடுக்கலாம். அப்போது எங்கள் புலம்பெயர் மக்களின் நிலை என்ன..

இப்படி போராட்டத்தின் முக்கிய ஆயுதமான பொருளாதாரத்தை கைவிட்டு விட்டு "மருவல்" காரணமாக எங்கள் சில குணாம்சங்களை இழக்க‌ப்போகிறோம் அதனால் போராட்டம் புஸ்வானமாகும் என்று சொல்வது.....

சொல்லில் இல்லை பொருளில்தான் குழப்பம்.புலம்பெயர்வு எதேச்சையாக நடந்தொரு விடயம்.இதில் மகாராஜா தொட்டு அன்றாடம் கூலிவரை வரை அடக்கம்.முன்றாம் உலகில் இருந்து இடம்பெயற்பவர்களுக்கு பொருளாதாரத்தை ஈட்டுவது மட்டும் தான் ஒரே நோக்கமாக இருக்கும்.இதில் வாழ்க்கை முழுக்க வெற்றியடையாமல் உழண்டுகொண்டிருப்பவர்களும் சில வருடங்களிலேயே வெற்றி அடைந்தவர்க்களுமுண்டு.கடினஉழைப்பு,விவேகம்,அதிஸ்டம் இவையாவும் இருந்தவர்கள் பலர் இன்று உச்சத்தை அடைந்திருக்கின்றார்கள்.

நல்ல வித்தை தெரிவுசெய்யவும்,உருவாக்கவும் மனிதனால் முடியும் ஆனால் மனிதனை அப்படி உருவாக்காவும்,உருமாற்றவும் முடியாது,

புலம்பெயர்தவர்களில் இருந்து போராடப்போனவர்கள் புலிகளை தவிர மற்றைய இயக்கதவர்களர் தான் பலர் திரும்பி வந்தார்கள்,புலிகளுக்கு போன 90% வர்கள் திரும்பி வெளிநாடு வரவில்லை அதைத்தீர்மானித்தது போராட்டத்தின் தன்மையையே ஒழிய போரடப்போனவர்களின் மனப்பாங்கில்லை.

மனித மனத்தையும்,இருப்பையும்,வெற்றியையும்,தோல்வியையும் அவர்தம் செய்கைகளையும் எந்த சூத்திரத்திற்குள்ளும் அடக்கமுடியாது.

கிரிமினல்களாக இருந்தபலரைத்தான் பிரிட்டிஸ்அரசு அமெரிக்கா,கனடா,அவுஸ்திரேலியா என்று நாடுகடத்தியது.அதைவிடஇரண்டாம் உலக யுத்தத்தின் போதுதான் ஜரோப்பாவில் இருந்து பலர் கனடா குடிபுகுந்தார்கள்.சொந்த நாட்டில் இருந்தததைவிட பலர் இங்கு வெற்றிகரமானவர்களாக மாறிவிட்டார்கள்.

எமது அரசியல் பற்றி எனது கருத்துத்தான் எல்லோருக்கும் தெரியுமே?(புலம்பெயர்ந்தவர்களால் ஒரு-------- பிடுங்கமுடியாது)

அக்கூதா சொல்லுற 'நிற ஒடுக்குமுறையைக் கண்டதும் அடுத்தசந்ததி பெற்றோரைப் பாத்து ஏன் உங்கட தாய் நிலத்தை விட்டுட்டு வந்தனீங்கள் என்று கேக்கும்' என்ற உதாரணமும் ஒரு வைத்தியர் கனடாவில இருந்து புதுடில்லிக்கு வேலைக்குப் போயிருக்கிறார் என்பதைப் போல இனி உலக பொருளாதார சரிவைக் கண்ணடதும் அடுத்த சந்ததிகள் தங்கட பெற்றோரின் நாட்டைக கட்டியெழுப்பப போகப் போயினம் என்பதும் கொஞ்சம் இன்னசென்டா இருக்கு. அக்கூதா உண்மையில் இவ்வாறு தான் நீங்கள் சிந்திக்கிறீர்களா?

நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கூகிளில் தேடிப்பாருங்கள் இதைப்பற்றி.

நன்றி.

  • தொடங்கியவர்

ஈசன்,

உங்களது பின்னூட்டத்தைப் பார்க்கiயில், ஒருவேளை இன்னுமொருமுறை பதிவினை நீங்கள் திருப்ப வாசித்தாலும் பதிவின் கொன்ரெஸ்ற் புரிந்துகொள்ளப்படுவதற்கான சாத்தியம் குறைவு என்றே படுகிறது. வாசிப்பதும் வாசிக்காததும் உங்கள் தெரிவு.

அர்யுன்,

புலம்பெயர்ந்தவர்களின் பொதுவான குணவியல்புகள் என்று பட்டியலிடவிழைவது தவறு அவ்வாறு ஏதும் இல்லை அனைவரும் எதேச்சையாகப் புலம்பெயர்ந்தார்கள் என்பது உங்கள் வாதமாகப் படுகிறது--தவறென்றால் திருத்தவும்.நீங்கள் குறிப்பிடுவது சரியெனின் இப்பதிவிற்கான அடிப்படை தவறு என்பதனை ஏற்றுக்கொள்கிறேன். ஒட்டுமொத்தமாய் அனைவரும் புலம்பெயர்ந்து விடவில்லை என்ன விதத்திலும் புலப்பெயர்வுகள் கட்டம்கட்டமாய் நிகழ்ந்தது என்பதாலும் அனைவரும் எதேச்சையாய்ப் புலம்பெயர்ந்தார்கள் என்பது சரி என்று எனக்குப்படவில்லை.

மனிதன் தனக்குத் தேவையான வித்தைத் தெரிவு செய்ததைப் போல சமூகங்கள் வெற்றிபெற்ற மனிதர்களால் செல்வாக்குச் செலுத்தப்படுவது சாத்தியமில்லை என்ற கூற்றில் எனக்கு உடன்பாடில்லை. இதற்கான உதாரணங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் முன்வைக்கப்பட்டுள்ளன இன்னமும் ஏராளம் உள்ளன.

மனித மனத்தை முற்றாக எந்தச்சூத்திரத்திற்குள்ளும் இன்னமும் எவரும் அடக்கிவிடவில்லை என்பது உண்மை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். எனினும் மனிதனின் இருப்பும் வெற்றிதோல்விகளும் ஆராயயப்படுவதில் கணிசமான வெற்றி அடையப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

நேரம் கிடைக்கும் பொழுது கொஞ்சம் கூகிளில் தேடிப்பாருங்கள் இதைப்பற்றி.

நன்றி.

அக்கூதா,

நீங்கள் என்னத்தைத் தேடுகிறீர்கள் என்பதும் தேடும் போது வரும் விடயங்களைக் கிரகிப்பதற்கும் கூகிளில் தேடிப்பாருங்கோ என்பது மீண்டும் பதிலாக முடியாது.

Edited by Innumoruvan

இன்னும் ஒருவன் மனதில் எடுக்காவிட்டால் , ஒரு விடையம் சொல்ல விரும்புகின்றேன் .

உங்கள் எழுத்து நடை மிகவும் கடினமாக உள்ளது . ஒரு பதிவு எல்லோரையும் போய்ச்

சேரவேண்டுமானால் , நல்ல சொல்லாட்சியுடன் இலகுதமிழில் இருக்கவேண்டும் என்பது

எனது அபிப்பிராயம் . உதாரணத்திற்கு , முன்பு கம்யூனீஸ் கட்சியின்

( இடதுதுசாரி ) புத்தகங்கள் சில படித்திருக்கின்றேன் .அவைகளின் உள்ளடக்கம் கடினமான ,

இலகுவில் விளங்கிக் கொள்ள முடியாதவாறு எழுதப்பட்டிருக்கும் . அதனால் யாருக்குமே

பயனில்லை . எனவே உங்கள் எழுத்து நடையை மாற்றினால் நல்லது . மேலும் ,

இப்போதுள்ள நிலையில் தாய்மொழிப் பயன்பாடு உள்ளகத் தொடர்பாடலுக்கே

இளையவர்களுக்கு திணிக்கப்படுகின்றது . அதுவும் 3ம் நான்காம் தலைமுறையுடன்

இல்லாது போய் , முதல் பெயரில் தமிழ் இருந்து மொழியால் வேறுபட்டு இருப்பார்கள் .

உதாரணம் , இந்தியத் தமிழர்களின் காலனித்துவக் குடியகல்வு பிஜி , மொறீசியஸ் ,

றெனியோன் , தென்ஆபிரிக்கா , உவாட்லூப் , மேற்கிந்தியத் தீவுகள் ,போன்றவை . எமக்கு

இன்னும் அந்த நிலமை வரவில்லை . ஆனால் நெடிய தூரத்தில் இல்லை . சிந்திப்போமா

இதற்கு என்ன வழி என்று ?? :) :)

Edited by komagan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.