Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் எப்பிடி ஆனவர்

Featured Replies

நான் இப்டியானவர்னு ..யாராலயுமே சொல்ல முடியாது!

நான் இப்டிதான் என்று உள்ள ஒருவரை

அவரை சுற்றி உள்ளவர்களும் & சூழ் நிலைகளும் அடிக்கடி மாற்றும்!

சூழ்நிலைகளுக்கும் சந்தர்ப்பங்களும் ஏற்றபடி தன்னை மாற்றிக்கொண்டு பீலா காட்டுறவன்தான் ...

மனிசன்னு ... என்னோட அப்புச்சி அடிக்கடி சொல்லும்!

மனுஷன போயி ..காப்பி -2.-50 + <_< பைசா

டீ- 1.50 + <_< அப்பிடீங்கிறமாதிரி பட்டியல் போட்டா சொல்லுவாய்ங்க?

நல்லா சொல்லுறாங்கப்பா.... டீடெய்லு! <_<

  • Replies 128
  • Views 14.3k
  • Created
  • Last Reply

********அறுந்தவாலு குறும்புக்காரி ஆனாலும் நான் ஏஞ்ஜெலு *********

ஆமா ஆரு இந்த அறுந்த வாலுக் குறும்புக்காரி?

எப்ப இருந்து வாலு அறுந்தது? அதை யாரு அறுத்தா?

சரி இந்த வீணாப்போன பிள்ளை ஒருத்தியைப்.... மன்னிக்கோணும் ஒருதிரியை போட்டு எழுதச்சொல்லுது... நாமளும்தான் கொஞ்சம் எகிறுவம் ச்சே எழுதுவம்.

கற்பனையில உருவம் வரையிறதா?...... ஆதிக்கு புள்ளியே போட்டுப்பாக்க வருதில்லை இதுக்க கற்பனேல உருவம்....

என்னை பற்றி முதல்ல நான் சொல்றன்

பிறந்தது யாழ்க்கருத்துக்களத்தில அட உங்கொப்பரான சத்தியமா அரிச்சுவடிலதான் பிறந்தன் நம்புங்கோ..

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

விரும்புற விசயம் எண்டால்.... பொறுங்கப்பா யோசிக்கிறன்

...

...

...

அட வந்திட்டுது

1.) யாழ்க்கள எல்லாள மகாராஜாவின் ஆடுகளம் ஹி...ஹி

2.) கங்காருக் குட்டிகள் மீதான சவாரி

3.) யாழ்க்கள காளமேகத்துடனான எசப்பாட்டு (இந்த எசப்பாட்டால அழுத வெண்ணிலாவை ஆதி லொலிப்பொப் குடுத்து சமாதானம் செய்திட்டன்)

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

1.) ரோயல் பமிலிக்கு எதிரான ஆட்கள் யாழில உலா வாறது

2.) யாழ்க்களக் காளையை அடக்கும் திரியில் கடைசியில இணையவன் ஆதியின் கதையை கிராபிக்ஸில கந்தல் ஆக்கினது

3.) காதல் எதிர்ப்புச் சங்கத்தில் ஆதியின் பாட்னராக இருந்த நெடுக்கு இப்ப கொஞ்சக்காலமா ஏதோ காதலில் அம்பிட்டு அடங்கிப்போனது

3 ) பயப்படும் விஷயம்

1 ) தசமத்தலைக்கு

2 ) கோணல்வில், யம்முப்பேய்

3 ) உண்மையிலேயே ஆதியை அலற வச்சவா விடுப்பு வி...மலமக்கா

4 )புரியாத விஷயம்

பொண்ணுங்க

பொண்ணுங்க

பொண்ணுங்க...

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

கேள்வியை மாத்தோணும் எனக்கு முன்னாடி உள்ள...

1.) பொன்னாடை என்ற பேரில் ஒரு பன்னாடை

2.)வேர் கட்டி ஆடும் விடலைகள்

3.)வாழைத்தார்

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1 . ஆதியின் அடர் அவைத் திலகங்கள்(ஆரெவர் என்றெல்லாம் சொல்ல மாட்டன் தேடிக்கண்டுபிடிக்கவும் .)

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

வம்பை விலை கொடுத்து வாங்கிறது

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

ஒரு பெண்ணையாவது அடக்குவது. :)

9 கேட்க விரும்பாதது (3 )

1.) கேள்வி

2.) அண்ணன் முறை சொல்லும் பெண்களின் குரல்

3.) அறிவாளிகளின் அலட்டல்

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1) ஆடை அணிதல்

2 )அட்டில் கலை

3 )திப்பிலி ஆட்டுதல்

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

பழங்கள்

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

மனைவி

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

ஐயோ எனக்கு ஒரு பொண்டாட்டிதான் நான் அஞ்சுக்கு எங்க போறது?

14 ) பிடிச்ச கதையாசிரியர்

நான் வாசிச்ச ஒரே ஒரு புத்தகம் என் பொண்டாட்டிதான் அதனால பிடிச்ச கதாசிரியர் எனிவே நோ சான்ஸ் ஒன்லி மை பாதர் இன் லோ.

15 ) பிடித்த படம் 3 -5

காட்டில காட்டுற படத்தை உங்களுக்குச் சொன்னால் விளங்காது.

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

எல்லாம் முடிஞ்சு போச்சு வீணா வேதனையைக் கிளறவேண்டாம்

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

ஏன் எனக்கு மட்டும் காதலி கிடைக்கேல்லை?

19)உங்களின் பொழுது போக்கு

மரங்களில இருந்து வேடிக்கை பாக்கிறது

குருவிகளின் கூட்டை பிரிச்சு தும்புதும்பாக்கிறது

பூனைகளுக்கு அப்பம் பிரிக்கிறது இப்படி கனக்க...

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

சாச்சா..... அதையெல்லாம் நான் செய்யக்கூடாது யாழ்க்கருத்துக்கள வானரங்கள் செய்வார்கள்.

அப்பாடா இவ்வளவு எழுதிட்டன்...... இதென்னெண்டு உவனுகள் பத்தி பத்தியா எழுதிறாங்கள்?????

தாங்க முடியல்ல.................

ஆதி அடிக்கடி தான் ஓர் பழைய உறுப்பினர் ... மதவங்க எல்லாம் புதுசாம்...

தன்னை கண்டுக்கலையாம் என்னு புலம்பி தள்ளுறாரு.........

ஏம்பா................ பழைய உறுப்பினர்களே....... வந்து தொலையுங்களேன்... இதுக்காவது!

கடி தாங்கல்ல! :(

ஏம்பா அறிவிலி

இப்ப இங்க திரியிற புதுப்பசங்களை ஆதிக்கு அவ்வளவாத் தெரியாது. தெரிச்சப்புறம் ஆதி இவாளைப்பற்றியெல்லாம் எழுதமாட்டேனா?.....

எவன்டா இவன்...இவள் ஆதிக்கு குறுக்கால விழுந்து ஆப்பு இழுக்கிறான்...ள்? :o

Edited by ஆதிவாசி

ஏம்பா அறிவிலி

இப்ப இங்க திரியிற புதுப்பசங்களை ஆதிக்கு அவ்வளவாத் தெரியாது. தெரிச்சப்புறம் ஆதி இவாளைப்பற்றியெல்லாம் எழுதமாட்டேனா?.....

எவன்டா இவன்...இவள் ஆதிக்கு குறுக்கால வழுந்து ஆப்பு இழுக்கிறான்...ள்? :o

சும்மா சும்மா............

இப்டி உங்கள கோவபடுத்தி ... நெறைய பேச வைக்கத்தான் இப்டி பண்ணுறேனாம்...

அதால... யாழ் இன்னும் கலகலப்பா ... ஆகுமா இல்லியா? <_<

சும்மா சும்மா............

இப்டி உங்கள கோவபடுத்தி ... நெறைய பேச வைக்கத்தான் இப்டி பண்ணுறேனாம்...

அதால... யாழ் இன்னும் கலகலப்பா ... ஆகுமா இல்லியா? <_<

சும்மாவா.... அட சும்மாவா...

ஆதிக்குக் கோவம் வந்து ஏற்கனவே குருவி மழையில தோஞ்சு கொண்டு நிற்குது காணேல்லையோ...

  • கருத்துக்கள உறவுகள்

எவன்டா இவன்...இவள் ஆதிக்கு குறுக்கால விழுந்து ஆப்பு இழுக்கிறான்...ள்? :o

ஆதிவாசி நான் காட்டுக்குள் கொஞ்ச நாள் இருந்திட்டுவாறன், bye..........

image002n.png

Uploaded with ImageShack.us

a1e45h.jpg

Uploaded with ImageShack.us

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்.

a) அறிவியல் சார்ந்த விடயங்கள் ரெம்பப் பிடிக்கும்.

b) இயற்கையை ரசித்தல் பிடிக்கும்.

c) வஞ்சகமற்ற அன்பானவர்களோடு மட்டும் பழகப் பிடிக்கும்.

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

a) வஞ்சகம்.

b)புகழ்ச்சி.

c) மனிதர்களை புறக்கணிப்பவர்கள்.

3 ) பயப்படும் விஷயம்

1 ) யுத்தம்.

2 ) பரீட்சை.

3 ) சாவு.

4 ) புரியாத விஷயம்

1 ) பெண்களில் நல்லவங்கள் கண்டுபிடிக்கிறது.

2 ) ஏன் காலத்துக்கு உதவாததுகளை பாடத்திட்டத்தில் சேர்த்து வைச்சு படிப்பிக்கிறாங்க என்பது.

3 ) இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பின் ரகசியம்.

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

1 லேப்டாப்

2 போன்

3 எழுதுகோல்

4.ரப்லட்

5.ஐபாட்

6.காசு

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1 . நகைச்சுவை தரும் பேச்சுக்கள்.

2 . யாழில் அரட்டை.

3 . பேஸ்புக்கில் நண்பர்களின் நண்பிகளின் அரட்டை.

4 . நண்பர்களுடன் அடிக்கும் லூட்டி.

5 . கடந்த கால லூட்டிகளின் பிளாஸ் பக்.

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

1 ) படிக்கிறது.. தொழில் செய்யுறது.. சாப்பிடுறது.. தூங்கிறது.. பகல் மற்றும் இரவு கனவு காண்பது.

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1 ) ஒரு உயிரியல் தொழில்நுட்பம் அல்லது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் CEO ஆக வருவது.

2 ) உலகத்தில் வறுமையை நோயை ஒழிக்க இயன்றதை சாகும் வரை செய்வது.

3 ) பெண்களை இயன்ற வரைக்கும் பிற மனிதர்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய நற் பிரஜைகளாக மாற்றுவது.

9) கேட்க விரும்பாதது (3 )

1 ) மரணச் செய்தி.

2 ) பொய்.

3 ) செயல்படுத்த உதவாத.. ஆனால் இடைவிடாது தரப்படும் புத்திமதிகள்.

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1 அறிவியலில் மிக உயர் கல்வி. (DSc.)

2 எனது குறைபாடுகளை.

3 தினமும் வகை வகையான மனிதர்களை.

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

1 ) எல்லா சைவ உணவுகளும்.

2) அசைவ உணவில் இறால்.. மீன்.. நண்டு.. கோழி மட்டும். குறிப்பாக KFC சிக்கன் பிடிக்கும்.

3) எல்லா வகையான இனிப்புச் சுவை சார்ந்த..மற்றும் சொக்கிலேட் உணவுகளும்.

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்.

Journals: New scientist,Nature, Biologist and Biomedical scientist. (மாதம் தோறும் படிப்பேன்.)

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

இயற்பியல் (Physics) சார்ந்த புத்தகங்கள்.

1.Geophysics.

2.Biophysics.

3.Medical physics.

(கவனிக்கவும்.. சிறுவயதில் அம்புலிமாமா.. கோகுலம்.. ஆனந்த விகடன்..குமுதம்.. துப்பறியும் ஆங்கில நாவல்கள்.. மற்றும் போராட்ட கால தாயகப் படைப்புக்கள்.. மற்றும் சில பிரபல்யமான ஆங்கில நாவல்களைப் படிச்சதை விட வேறு கதைப்புத்தகங்கள் படிப்பது வெகு குறைவு.)

14 ) பிடிச்ச கதையாசிரியர்

புதுவை இரத்தினதுரை. (அவரின் இயல்பான.. யதார்த்தமான.. உணர்வு பொங்க வைக்கும்.. தமிழில் அமைந்த கவிதைகளுக்காக பிடிக்கும்.)

15 ) பிடித்த படம் 3 -5

எல்லா ஆங்கில.. அறிவியல் சார்ந்த படங்களும் பார்ப்பேன்.

சமீபத்திய தமிழ் படங்களில் எந்திரன் பிடிக்கும்.

(சோகமான.. அழுகிற.. சாவு வீடு வருகிற.. ஒரே பாணியில் அமையும் தமிழ் படங்கள் பார்க்க பிடிப்பதில்லை.)

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

தமிழீழ தேசிய தலைவர்.. மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே.

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

அன்பான.. அழகான.. என்னை விட அறிவுமிக்க.. தப்புச் செய்தா.. திருத்திற.. தான் அறிய தப்புச் செய்யாத.. ஆனால் எப்போதுமே.. கோவிக்காத.. நல்ல தோழியா அமைவது பிடிக்கும். இப்படி அமையா விட்டால்.... சேர் ஐசாக் நியூட்டன் போல.. தனியே வாழ்வதில் எனக்கு சங்கடமில்லை. :)

18 ) காதல் பற்றிய உங்க கருத்து.

காதல் ரசிக்கக் கூடியது.. உங்களை.. நீங்கள் ரசிப்பதை.. உங்கள் இயல்புகளோடே ரசிக்கக் கூடிய உள்ளம் ஒன்று அமையின்..! காதல் வெறுக்கக் கூடியது.. காதல் என்ற பெயரில் காட்டேரிகள்.. சுயநலவாதிகள்.. சந்தர்ப்பவாதிகள்.. சூழ்நிலைக்கைதிகள்.. உறவு கொண்டாடுதலில்.

19)உங்களின் பொழுது போக்கு.

கல்வி அறிவூட்டுவது.

கணணி விளையாட்டு.

நடைப் பயிற்சி.

சமைப்பது.. சாப்பிடுவது.

ஜோக்ஸ் அடிப்பது. :icon_idea::lol:

20) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

நான் ஓர் கரடி. கரடி பலவீனமானவர்களோடு பலத்தைக் காட்டாது. பலமானவர்களோடு பலவீனத்தைக் காட்டாது. போராடி வாழ நினைக்குமாம்.

மேலே சொன்னவை எவையும் பில்டப் கிடையா. இயன்றவரை இயல்பாக மனதில் தோன்றியதை தந்துள்ளேன்.

இச்சந்தர்ப்பத்தை அளித்த வீணாவுக்கு நன்றி. :)

  • தொடங்கியவர்

1) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

அன்புக்குரியவர்கள்

இயற்கையை ரசிப்பது

மனட்சாட்சிக்குப் பயந்து நடப்பது

2) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

அனாவசியமாக பொய் சொல்வது.

முன்னுக்கொன்றும், பின்னுக்கு இன்னொன்றும் அவதூறுகள் சொல்லித் திரிபவர்களை கடவுள் சந்நிதானத்தில் காண்பது.

அனாவசியமான கொண்டாட்டங்கள்.

3) பயப்படும் விஷயம்

மனசாட்சி

தனிமையில் இருக்கும் போது இதயத் துடிப்பின் ஓசை

4) புரியாத விஷயம்

மனித வாழ்க்கையில் நிறைய இருக்கு...

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

அலுவலக மேசையில்:

என்னத்தை பெருசா இருக்கப் போகுது? 52 " HD தொலைக்காட்சி கவுண்டமணி, வடிவேலு, விவேக் சந்தானத்தின் காமடியா வைச்சு இருக்கப் போறைங்க?

ஒரு manager, director அல்லது ஒரு chef executive என்றால் குறிப்பிட்டு சொல்லலாம். நான் அப்படி சொல்லும் படியா ஒன்றும் இல்லை. ஒரு முன்னிலைத் (front line) தொழிலாளி மட்டுமே.. ஒரு கணணி, எப்பவும் ஓயாமல் இம்சை குடுக்கிற போன்.

வீட்டு மேசையில்: கணணி, வெள்ளைக் கடிதங்கள் (files)

6) சிரிக்க வைக்கும் விசயங்கள்

தந்தையின் பல நகைச்சுவைகள்

சினிமா கடிகள்/ நகைச்சுவைகள்

யாழ் களத்தில் பல இணைப்புகளைப் பார்த்து வாய்விட்டு சிரித்திருக்கிறேன். அதில் ஒன்று டன்னின் மணமக்கள் தேவை பதிவு... http://www.yarl.com/...ndpost&p=178012

7) இப்போது செய்து கொண்டிருப்பது

வேலை

8) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

குறைந்தது இரண்டு ஆதரவற்ற பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி அறிவைக் கொடுக்க வேண்டும்.

9) கேட்க விரும்பாதது (3 )

காது (காது இருந்தால் தானே கேட்க முடியும்)

10) கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

பொறுமை

முன்கோபத்தைக் கட்டுப் படுத்துவது

மறக்க முடியாததை மறக்க நினைப்பது

11) பிடிச்ச உணவு வகை (3 )

கொத்துரொட்டி

அகத்திச் சொதி

roast பாணும், பருப்புக் கறியும்

12) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

இப்போது புத்தகம் வாசிக்க நேரமும் இல்லை, பொறுமையும் இல்லை.

13) படிச்சதில் பிடிச்ச புத்தகங்கள் (3-5 )

சுதந்திர வேட்கை

The Motorcycle Diaries

பல கதைகள் பிடிச்சு இருந்தாலும், கதையின் பெயர்கள் ஞாபகத்தில் இல்லை.

14 ) பிடிச்ச கதையாசிரியர்

அப்படி என்று யாரும் இல்லிங்.. ஆனால் உண்மையான, வரலாறோடு சேர்ந்து எழுதுபவர்களின் கதைகள் நேரம் இருக்கும் போது வாசிபேனுங்.

15) பிடித்த படம் 3 -5

Che, The Motorcycle Diaries, தளபதி, Senna, Road to Perdition, மொழி, பார்த்தாலே பரவசம்

16) பிடித்த தலைவர்/ஹீரோ

எனது தந்தை, கேடில்ஸ் அண்ணா & தமிழர்களின் தலைவன்

17) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

புரிந்துணர்வு

18) காதல் பற்றிய உங்க கருத்து

என்னத்தைச் சொல்ல...? எவ்வளவு தான் மனத்தைக் கட்டுப்படுத்தி வைத்து இருந்தாலும் ஏதோ ஒரு நொடியில் எம்மை அறியாமல் எம்முள் உணரும் ஓர் உணர்வு. (அதை மத்தவங்க மிஸ்யூஸ் பண்ணுறது வேற விஷயம்)

19) உங்களின் பொழுது போக்கு

மகாராணியாருடன் தேநீர் அருந்துவது

டேவிட் கமரூனுடன் cricket பார்ப்பது...

இப்ப நான் கொஞ்சம் பிஸி அதால கேட் மிடில்ட்டனோட நேரம் மினக்கடுறது கொஞ்சம் கஷ்டம்

ஹிஹிஹி... இப்படி சொன்னப் போல நீங்க நம்பவா போறீங்க..?

பாடல்களை முணுமுணுப்பது (சுட்டுப் போட்டாலும் பாடவராது அது வேற...)

சதுரங்கம் விளையாடுவது

யாழ் இணையம், முகநூல், youtube-ல் சினிமா காமெடி பார்த்து இளிப்பது

பூக்கும், பூக்காத மரங்கள் வளர்ப்பது

20) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

எந்த வேலையாகினும் சீராகச் செய்து முடிக்க நினைக்கும் கடின உழைப்பாளி, யாராக இருந்தாலும் முதலில் பொறுத்துப் போவேன், முடியாவிட்டால் நேரே சொல்லிவிட்டு ஓரமாகப் போய்கொண்டே இருப்பேன். (இதனை மற்றவர்கள் முன்கோபக்காரத்தனம், பொறுமை இல்லதாதன்மை என்று சொல்லுவார்கள்.)

மன்னிப்புக் கேட்பேன், மன்னிப்பேன் ஆனால் சிலவற்றை மறக்க முயல்வதில்லை. (இதைத் தான் சொல்வது மொள்ளமாரித்தனம் என்று...)

ஸ்ஸபா.... இப்பவே கண்ணைக் கட்டுதே....

நன்றி அண்ணா பகிர்வுக்கு..:)

********அறுந்தவாலு குறும்புக்காரி ஆனாலும் நான் ஏஞ்ஜெலு *********

ஆமா ஆரு இந்த அறுந்த வாலுக் குறும்புக்காரி?

எப்ப இருந்து வாலு அறுந்தது? அதை யாரு அறுத்தா?

சரி இந்த வீணாப்போன பிள்ளை ஒருத்தியைப்.... மன்னிக்கோணும் ஒருதிரியை போட்டு எழுதச்சொல்லுது... நாமளும்தான் கொஞ்சம் எகிறுவம் ச்சே எழுதுவம்.

கற்பனையில உருவம் வரையிறதா?...... ஆதிக்கு புள்ளியே போட்டுப்பாக்க வருதில்லை இதுக்க கற்பனேல உருவம்....

என்னை பற்றி முதல்ல நான் சொல்றன்

பிறந்தது யாழ்க்கருத்துக்களத்தில அட உங்கொப்பரான சத்தியமா அரிச்சுவடிலதான் பிறந்தன் நம்புங்கோ..

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

விரும்புற விசயம் எண்டால்.... பொறுங்கப்பா யோசிக்கிறன்

...

...

...

அட வந்திட்டுது

1.) யாழ்க்கள எல்லாள மகாராஜாவின் ஆடுகளம் ஹி...ஹி

2.) கங்காருக் குட்டிகள் மீதான சவாரி

3.) யாழ்க்கள காளமேகத்துடனான எசப்பாட்டு (இந்த எசப்பாட்டால அழுத வெண்ணிலாவை ஆதி லொலிப்பொப் குடுத்து சமாதானம் செய்திட்டன்)

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

1.) ரோயல் பமிலிக்கு எதிரான ஆட்கள் யாழில உலா வாறது

2.) யாழ்க்களக் காளையை அடக்கும் திரியில் கடைசியில இணையவன் ஆதியின் கதையை கிராபிக்ஸில கந்தல் ஆக்கினது

3.) காதல் எதிர்ப்புச் சங்கத்தில் ஆதியின் பாட்னராக இருந்த நெடுக்கு இப்ப கொஞ்சக்காலமா ஏதோ காதலில் அம்பிட்டு அடங்கிப்போனது

3 ) பயப்படும் விஷயம்

1 ) தசமத்தலைக்கு

2 ) கோணல்வில், யம்முப்பேய்

3 ) உண்மையிலேயே ஆதியை அலற வச்சவா விடுப்பு வி...மலமக்கா

4 )புரியாத விஷயம்

பொண்ணுங்க

பொண்ணுங்க

பொண்ணுங்க...

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

கேள்வியை மாத்தோணும் எனக்கு முன்னாடி உள்ள...

1.) பொன்னாடை என்ற பேரில் ஒரு பன்னாடை

2.)வேர் கட்டி ஆடும் விடலைகள்

3.)வாழைத்தார்

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1 . ஆதியின் அடர் அவைத் திலகங்கள்(ஆரெவர் என்றெல்லாம் சொல்ல மாட்டன் தேடிக்கண்டுபிடிக்கவும் .)

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

வம்பை விலை கொடுத்து வாங்கிறது

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

ஒரு பெண்ணையாவது அடக்குவது. :)

9 கேட்க விரும்பாதது (3 )

1.) கேள்வி

2.) அண்ணன் முறை சொல்லும் பெண்களின் குரல்

3.) அறிவாளிகளின் அலட்டல்

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1) ஆடை அணிதல்

2 )அட்டில் கலை

3 )திப்பிலி ஆட்டுதல்

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

பழங்கள்

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

மனைவி

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

ஐயோ எனக்கு ஒரு பொண்டாட்டிதான் நான் அஞ்சுக்கு எங்க போறது?

14 ) பிடிச்ச கதையாசிரியர்

நான் வாசிச்ச ஒரே ஒரு புத்தகம் என் பொண்டாட்டிதான் அதனால பிடிச்ச கதாசிரியர் எனிவே நோ சான்ஸ் ஒன்லி மை பாதர் இன் லோ.

15 ) பிடித்த படம் 3 -5

காட்டில காட்டுற படத்தை உங்களுக்குச் சொன்னால் விளங்காது.

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

எல்லாம் முடிஞ்சு போச்சு வீணா வேதனையைக் கிளறவேண்டாம்

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

ஏன் எனக்கு மட்டும் காதலி கிடைக்கேல்லை?

19)உங்களின் பொழுது போக்கு

மரங்களில இருந்து வேடிக்கை பாக்கிறது

குருவிகளின் கூட்டை பிரிச்சு தும்புதும்பாக்கிறது

பூனைகளுக்கு அப்பம் பிரிக்கிறது இப்படி கனக்க...

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

சாச்சா..... அதையெல்லாம் நான் செய்யக்கூடாது யாழ்க்கருத்துக்கள வானரங்கள் செய்வார்கள்.

அப்பாடா இவ்வளவு எழுதிட்டன்...... இதென்னெண்டு உவனுகள் பத்தி பத்தியா எழுதிறாங்கள்?????

முடியல ஆதி...:D

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்.

a) அறிவியல் சார்ந்த விடயங்கள் ரெம்பப் பிடிக்கும்.

b) இயற்கையை ரசித்தல் பிடிக்கும்.

c) வஞ்சகமற்ற அன்பானவர்களோடு மட்டும் பழகப் பிடிக்கும்.

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

a) வஞ்சகம்.

b)புகழ்ச்சி.

c) மனிதர்களை புறக்கணிப்பவர்கள்.

3 ) பயப்படும் விஷயம்

1 ) யுத்தம்.

2 ) பரீட்சை.

3 ) சாவு.

4 ) புரியாத விஷயம்

1 ) பெண்களில் நல்லவங்கள் கண்டுபிடிக்கிறது.

2 ) ஏன் காலத்துக்கு உதவாததுகளை பாடத்திட்டத்தில் சேர்த்து வைச்சு படிப்பிக்கிறாங்க என்பது.

3 ) இந்தப் பிரபஞ்சத்தின் இருப்பின் ரகசியம்.

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

1 லேப்டாப்

2 போன்

3 எழுதுகோல்

4.ரப்லட்

5.ஐபாட்

6.காசு

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1 . நகைச்சுவை தரும் பேச்சுக்கள்.

2 . யாழில் அரட்டை.

3 . பேஸ்புக்கில் நண்பர்களின் நண்பிகளின் அரட்டை.

4 . நண்பர்களுடன் அடிக்கும் லூட்டி.

5 . கடந்த கால லூட்டிகளின் பிளாஸ் பக்.

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

1 ) படிக்கிறது.. தொழில் செய்யுறது.. சாப்பிடுறது.. தூங்கிறது.. பகல் மற்றும் இரவு கனவு காண்பது.

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1 ) ஒரு உயிரியல் தொழில்நுட்பம் அல்லது மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் CEO ஆக வருவது.

2 ) உலகத்தில் வறுமையை நோயை ஒழிக்க இயன்றதை சாகும் வரை செய்வது.

3 ) பெண்களை இயன்ற வரைக்கும் பிற மனிதர்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய நற் பிரஜைகளாக மாற்றுவது.

9) கேட்க விரும்பாதது (3 )

1 ) மரணச் செய்தி.

2 ) பொய்.

3 ) செயல்படுத்த உதவாத.. ஆனால் இடைவிடாது தரப்படும் புத்திமதிகள்.

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1 அறிவியலில் மிக உயர் கல்வி. (DSc.)

2 எனது குறைபாடுகளை.

3 தினமும் வகை வகையான மனிதர்களை.

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

1 ) எல்லா சைவ உணவுகளும்.

2) அசைவ உணவில் இறால்.. மீன்.. நண்டு.. கோழி மட்டும். குறிப்பாக KFC சிக்கன் பிடிக்கும்.

3) எல்லா வகையான இனிப்புச் சுவை சார்ந்த..மற்றும் சொக்கிலேட் உணவுகளும்.

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்.

Journals: New scientist,Nature, Biologist and Biomedical scientist. (மாதம் தோறும் படிப்பேன்.)

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

இயற்பியல் (Physics) சார்ந்த புத்தகங்கள்.

1.Geophysics.

2.Biophysics.

3.Medical physics.

(கவனிக்கவும்.. சிறுவயதில் அம்புலிமாமா.. கோகுலம்.. ஆனந்த விகடன்..குமுதம்.. துப்பறியும் ஆங்கில நாவல்கள்.. மற்றும் போராட்ட கால தாயகப் படைப்புக்கள்.. மற்றும் சில பிரபல்யமான ஆங்கில நாவல்களைப் படிச்சதை விட வேறு கதைப்புத்தகங்கள் படிப்பது வெகு குறைவு.)

14 ) பிடிச்ச கதையாசிரியர்

புதுவை இரத்தினதுரை. (அவரின் இயல்பான.. யதார்த்தமான.. உணர்வு பொங்க வைக்கும்.. தமிழில் அமைந்த கவிதைகளுக்காக பிடிக்கும்.)

15 ) பிடித்த படம் 3 -5

எல்லா ஆங்கில.. அறிவியல் சார்ந்த படங்களும் பார்ப்பேன்.

சமீபத்திய தமிழ் படங்களில் எந்திரன் பிடிக்கும்.

(சோகமான.. அழுகிற.. சாவு வீடு வருகிற.. ஒரே பாணியில் அமையும் தமிழ் படங்கள் பார்க்க பிடிப்பதில்லை.)

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

தமிழீழ தேசிய தலைவர்.. மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே.

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

அன்பான.. அழகான.. என்னை விட அறிவுமிக்க.. தப்புச் செய்தா.. திருத்திற.. தான் அறிய தப்புச் செய்யாத.. ஆனால் எப்போதுமே.. கோவிக்காத.. நல்ல தோழியா அமைவது பிடிக்கும். இப்படி அமையா விட்டால்.... சேர் ஐசாக் நியூட்டன் போல.. தனியே வாழ்வதில் எனக்கு சங்கடமில்லை. :)

18 ) காதல் பற்றிய உங்க கருத்து.

காதல் ரசிக்கக் கூடியது.. உங்களை.. நீங்கள் ரசிப்பதை.. உங்கள் இயல்புகளோடே ரசிக்கக் கூடிய உள்ளம் ஒன்று அமையின்..! காதல் வெறுக்கக் கூடியது.. காதல் என்ற பெயரில் காட்டேரிகள்.. சுயநலவாதிகள்.. சந்தர்ப்பவாதிகள்.. சூழ்நிலைக்கைதிகள்.. உறவு கொண்டாடுதலில்.

19)உங்களின் பொழுது போக்கு.

கல்வி அறிவூட்டுவது.

கணணி விளையாட்டு.

நடைப் பயிற்சி.

சமைப்பது.. சாப்பிடுவது.

ஜோக்ஸ் அடிப்பது. :icon_idea::lol:

20) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

நான் ஓர் கரடி. கரடி பலவீனமானவர்களோடு பலத்தைக் காட்டாது. பலமானவர்களோடு பலவீனத்தைக் காட்டாது. போராடி வாழ நினைக்குமாம்.

மேலே சொன்னவை எவையும் பில்டப் கிடையா. இயன்றவரை இயல்பாக மனதில் தோன்றியதை தந்துள்ளேன்.

இச்சந்தர்ப்பத்தை அளித்த வீணாவுக்கு நன்றி. :)

நான் நினைச்சன் கிருபன் அண்ணா சாத்திரி அண்ணா மாதிரி நீங்களும் எழுதாமல் escape ஆகிடுவீங்க என்று

நன்றி உங்களை பற்றிய பகிர்வுக்கு நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

********அறுந்தவாலு குறும்புக்காரி ஆனாலும் நான் ஏஞ்ஜெலு ???:)

  • கருத்துக்கள உறவுகள்

********அறுந்தவாலு குறும்புக்காரி ஆனாலும் நான் ஏஞ்ஜெலு ???

புள்ளியிட்ட இடங்களை நிரப்பவும், யாயினி.smilie_sonst_026.gif

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளியிட்ட இடங்களை நிரப்பவும், யாயினி.smilie_sonst_026.gif

புள்ளியிட்டது நான் இல்லை சிறி அண்ணா...வீணா விடம் தான் கேட்க வேண்டும் .:)

  • தொடங்கியவர்

புள்ளியிட்டது நான் இல்லை சிறி அண்ணா...வீணா விடம் தான் கேட்க வேண்டும் . :)

வீணா ஏஞ்ஜெல் ஆக்கும் <_<

அது சரி நீங்கள் ஏன் அக்கா உங்களை பற்றி எழுதேல்ல எழுதுங்க

  • கருத்துக்கள உறவுகள்

வீணா    ஏஞ்ஜெல்  ஆக்கும் <_<

அது சரி நீங்கள் ஏன் அக்கா உங்களை பற்றி எழுதேல்ல  எழுதுங்க

நியாயமான கேள்வி தான் ..கால கிரமத்தில் எழுத முயற்சிக்கிறேன் வீணா..

நல்ல தலைப்பு

Edited by Innumoruvan

  • கருத்துக்கள உறவுகள்

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம்

a) அம்மா,அப்பா,மனைவி, சகோதரர்கள், எனது - அவர்களது பிள்ளைகள்.....தாயகம்

b) இயற்கை

c) செய்யும் தொழில்

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம் (3) சொல்லணும் கூடவும் சொல்லலாம் ...

a ) புகை/குடிப்பழக்கம்

b)சத்தம் போட்டு பேசுவது

c )பணம் மட்டுமே வாழ்க்கை என இருப்பது

3 ) பயப்படும் விஷயம்

1 ) பிள்ளைகளின் காதல்

2 )மனசாட்சி

3 ) எம் உறவுகளின் இன்றையநிலை

4 )புரியாத விஷயம்

1 ) எமது உடல் அதன் இயக்கம்

2 ) நாம் ஏன் தோற்றோம்

3 ) என்று தணியும் இந்த சுதந்திர தாகம்

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

1 ஸ்கனர்

2 POHNE

3 வெள்ளைத்தாள்கள் எழுது கோல்.............................

6 ) சிரிக்க வைக்கும் விசயம்கள்

1 . எனது சிறியவளின் குறும்புகள்

2 . இன்றைய இளசுகளின் வம்புச்செயல்கள்

3. ஒரு கிளாஸ் குடித்ததும் பிறக்கும் தத்துவங்க்ள்

**7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

1 ) காசு எண்ணுவது...

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

1 ) வீட்டில் ஒரு பொறியியலாளரையும் வைத்தியரையும் பொருளியலாளரையும் உருவாக்குதல்

2 ) குறைந்தது ஒருவருக்காவது மேல் படிப்புக்கு உதவி செய்யனும் (தாயகத்தில)

3 மனைவியுடன் நிறைய இடம்கள் சுற்றி பார்க்கணும்

9 கேட்க விரும்பாதது (3 )

1 ) கடன்

2 )தலைவரின் இருப்பு

3 ) எமக்காக உழைத்தோர் மீதான வசைபாடல்

10 )கற்று கொள்ள விரும்பும் விஷயம் (3 )

1 பொறுமை

2 எல்லோருடனும் சமாதானம்

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

தற்போது சாப்பாடு என்றாலே பிடிக்குதில்லை

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

பல புத்தகங்களில் சிலவற்ரை எடுத்துச்சென்றேன் கனடா போகும்போது

ஆனால் ஒன்றுமே படிக்கநேரம் வரவில்லை

13 ) படிச்சதில் பிடிச்ச புத்தகம்கள் (3-5 )

பல

பெயர்கள் வருகுதில்லை

15 ) பிடித்த படம் 3 -5

நட்புக்கு - தளபதி

பாசததுக்கு - பாசமலர்கள்

ஜனரஞ்சகதுக்கு - காஞ்சனா

16 ) பிடித்த தலைவர்

எப்போதுமே தலைவர் தான்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

நினைத்தது

கிடைத்தது

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

கண் இல்லாதது

19)உங்களின் பொழுது போக்கு

இன்டெர் நெட்

பாட்டு கேட்டல்

20 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடும்கள்

மன்னிக்கவும்

அதை மற்றவர் சொல்லனும்

...

11 ) பிடிச்ச உணவு வகை (3 )

தற்போது சாப்பாடு என்றாலே பிடிக்குதில்லை

...

கனடாவில அப்பிடி என்னதை அண்ண சாப்பிட்டனீங்கள்?? :blink::o^_^

  • கருத்துக்கள உறவுகள்

9 கேட்க விரும்பாதது (3 )

1 ) கடன்

2 )தலைவரின் இருப்பு

3 ) எமக்காக உழைத்தோர் மீதான வசைபாடல்

அண்ணா தலைவரின் இழப்பு என வர வேண்டும் என நினைக்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில அப்பிடி என்னதை அண்ண சாப்பிட்டனீங்கள்?? :blink::o^_^

இடியப்பமாத்தான் இருக்கும்..! :unsure::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பமாத்தான் இருக்கும்..! :unsure::lol:

நிழலி கொடுத்த விருந்தின்பின்தான், அதுதான் நிழலி கதை எழுத போறர் "விசுகுடன் சில நிமிடம்"

  • தொடங்கியவர்

நன்றி விசுகு அண்ணா உங்களை பற்றிய பகிர்வுக்கு

நன்றி இன்னுமொருவன் அண்ணா உங்களை பற்றிய பகிர்வுக்கு?

இசை அண்ணா எப்ப உங்களை பற்றி எழுத போறீங்க நிறைய பேர் ஆவலுடன் எதிர்பார்கினம் சீக்கிரம் எழுதுங்க..

1 ) விரும்பும் விஷயம் கட்டாயம்

2012 ல உலகம் அழிஞ்சா, நான் மட்டுமே எஸ்கேப் ஆகணும்!

2 ) பிடிக்காத விஷயம் கட்டாயம்

யாராச்சும் நல்லாயிருந்தா!

3)பிடிச்ச விசயம்

புகை,குடிப்பழக்கம், ,வழிப்பறி,அடுத்தவன் பொருளை ஆட்டையபோடுதல்

4) பயப்படும் விஷயம்

வேற என்ன?போலீஸுதான்!

5 )புரியாத விஷயம்

கடன் வாங்குனா, எதுக்கு திருப்பி கொடுக்கணும்?

6) உங்கள் அலுவலக மேசையில் உள்ள பொருள்கள்:

அலுவலகமே இல்ல, இதில மேசைக்கும் , பொருளுக்கும் எங்கபோறதாம்?

7) சிரிக்க வைக்கும் விசயம்:

பணமே இல்லாத என்னோட மணிபர்ஸை, கறுவல் கத்தியை காட்டி பறித்துக்கொண்டு ,ஓடும்போது!

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்:

என்றைக்காவது ஓர்நாள் பல்லு விளக்கியே ஆகணும்கிற இலட்சியம்!

9 ) பிடிச்ச உணவு வகை

அவிச்ச அனகொண்டா. சாரைப்பாம்பு சூப்,கரப்பான்பூச்சி வறை(தொட்டுக்க தவளை ரத்தம்)

10) பிடிச்ச கதையாசிரியர்

முரளிதர ராஜபக்ச, டக்லஸ்தேவானந்த ராஜபக்ச!

11 ) காதல் பற்றிய உங்க கருத்து

மிகமோசமான சமுதாய சீர்கேடு! (வேற யாராச்சும் காதல் பண்ணினா)

12)உங்களின் பொழுது போக்கு:

ரோட்டில போறவனுக்கு கல்லால எறிஞ்ச்சுட்டு ஓடி ஒளிப்பது!

13 )உங்களை பற்றி நீங்களே மதிப்பிடு:

என்னையபோல் ஒருவன் பூமியில இல்ல, இனிமேலும் படைக்கும் ஐடியா அந்த சாமியிலயும் இல்ல! :)

ஆதிக்கு நல்ல கூட்டாளி ஒராள் கிடைச்சு இருக்கு.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில அப்பிடி என்னதை அண்ண சாப்பிட்டனீங்கள்?? :blink::o^_^

உண்மைதான் குட்டி

ஒவ்வொரு வீட்டிலும் ஆட்டுக்கறி, இறால், நண்டு, முட்டை.......

அத்துடன் பொரித்து வறுத்த பலவகை பண்டங்களுக்குள் கலக்கப்பட்ட புட்டு..........

அப்பம

கொழுக்கட்டை

மோதகம்................................ :wub: :wub: :wub:

தற்போது............................. :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா தலைவரின் இழப்பு என வர வேண்டும் என நினைக்கிறேன்

உண்மைதான் ரதி

வெளியில் போய்வந்ததால்.............

காலம் தாழ்த்தி விட்டேனோ என்ற அவசரத்திலும்

தமிழில் எழுதுவதிலிருந்த சிரமத்தாலும் பதிந்துவிட்டேன்

நன்றி

சுட்டிக்காட்டியமைக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.