Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்கள் எப்பிடி ஆனவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி கொடுத்த விருந்தின்பின்தான், அதுதான் நிழலி கதை எழுத போறர் "விசுகுடன் சில நிமிடம்"

நிழலி கொடுத்தது அன்பு விருந்து

அது குறித்து தனி திரியில்

  • Replies 128
  • Views 14.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இடியப்பமாத்தான் இருக்கும்..! :unsure::lol:

:lol: :lol: :lol: :lol:

நல்ல திரி.வீனா ஆனால் எழுதத்தான் பொறுமை இல்லை.வேனும் என்டால் கவிஞர் கண்ணதாசன் போல நான் என்று வைத்துக்கொள்ளுங்கள்.ஆனால் கவிதை எழுதமட்டும் தெரியாது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ரசனைகளை எழுதுங்கள்... அதில இருந்து நாங்க தெரின்சுகிறோம் நீங்க எப்பிடி ஆனவர் என்று

நீங்கள் எப்பிடியானவர் என்று கேட்டிருந்தால் ஓரளவிற்கு எழுதியிருக்கலாம்..ஆனால் எப்பிடி.. ஆனவர் என்றதுக்குத்தான் அறிய முயற்சிக்கிறன் என்று எழுதியிருந்தனான். நான் நினைக்கிறன் அப்பா அம்மாவாலைதான் ஆகியிருப்பன். :lol:

  • தொடங்கியவர்

வீணா க்கு இப்ப தான் 10 வயசு ஆக்கும் <_<

தமிழ் இலக்கணம் இலக்கியம் ஒண்டும் படிக்கேல்ல இன்னும் :icon_idea:

நீங்க பெரியமனசு பண்ணி உங்களை பற்றி நீங்க எப்பிடி(+ஆ)யானவர் என்று எழுதுங்க

இடியப்பமாத்தான் இருக்கும்..! :unsure::lol:

எப்பிடி சொல்லுகிறீர்கள்? நீங்கள் அவிச்ச இடியப்பமா? :lol:

உண்மைதான் குட்டி

ஒவ்வொரு வீட்டிலும் ஆட்டுக்கறி, இறால், நண்டு, முட்டை.......

அத்துடன் பொரித்து வறுத்த பலவகை பண்டங்களுக்குள் கலக்கப்பட்ட புட்டு..........

அப்பம

கொழுக்கட்டை

மோதகம்................................ :wub: :wub: :wub:

தற்போது............................. :( :( :(

காய்ஞ்ச மாடென்றே நினைச்சிட்டினம் போல... :lol: (சும்மா பகிடிக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

காய்ஞ்ச மாடென்றே நினைச்சிட்டினம் போல... :lol: (சும்மா பகிடிக்கு)

அதுதான் நம்ம மண்வாசம் ராசா

  • கருத்துக்கள உறவுகள்

எப்பிடி சொல்லுகிறீர்கள்? நீங்கள் அவிச்ச இடியப்பமா? :lol:

ஓ.. நீங்கள் இன்னும் கனடாவுக்கு வரேல்லப் போல குட்டி.. :rolleyes: வந்தால் இடியப்பத்தைக் குடுத்தே காலி பண்ணிப் போடுவாங்கள்..! :lol:

இசை அண்ணா எப்ப உங்களை பற்றி எழுத போறீங்க நிறைய பேர் ஆவலுடன் எதிர்பார்கினம் சீக்கிரம் எழுதுங்க..

எழுதினா உண்மையை எழுத வேணும்..! :( உண்மையை எழுதினா மாட்டுப் பட்டிடுவனே..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்த விடயங்கள்..... மாறிக்கொண்டேயிருக்கும்.

பிடிக்காத விடயங்கள்...மாறிக்கொண்டேயிருக்கும்.

பயப்படும் விடயம்........ மாறிக்கொண்டேயிருக்கும்.

புரியாத விடயம்....... பெண்கள்.

அலுவலக மேசையில் இருப்பது .....கணணி பணம் செலுத்தவேண்டிய பற்றுச்சீட்டுக்கள்.

சிரிக்க வைக்கும் விடயங்கள். இதனை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று உண்மையாக மனம் விட்டு சிரிப்பது குழந்தைகளின் குறும்பு.

மற்றையது மனதிற்குள் சிரிப்பது. யாழ்களத்தில் பலரின் கருத்துக்களை படித்து.

இப்போது செய்து கொண்டிருப்பது;..வழைமை போல எழுதிக்கிழிப்பது

வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைப்பது. இனி எதுவுமில்லை காரணம் எவ்வளவோ செய்யலாமென முயன்று முடிந்தாயிற்று

கற்றுக்கொள்ள விரும்பும் விடயம். பொத்திக்கொண்டு பேசாமல்இருப்பதற்கு

பிடித்த உணவு... எல்லாமே(பசிக்கும் போது)

படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்..எதுவுமில்லை.

படித்தபொழுது பிடித்த புத்தகங்கள். படித்தபொழுது பிடித்தது பல இப்பொழுது பிடிக்கவில்லை

பிடித்த கதாசிரியர். ...அனுபவங்கள்

பிடித்த படம்..என்னால் கிழிக்கப்பட்ட எனது முதல் காதலியின் புகைப்படம்.

பிடித்த தலைவர். .. என் தந்தை

என் வாழ்க்கைத் துணை பற்றி எனக்கு இருக்கும் எதிர்பார்ப்பு;. கடைசிவரை கூட இருந்தாலே போதும்.

காதலைப்பற்றி .. அததை அனுபவிக்க உணர முடியும் எழுத முடியாது..

என்னைப்பற்றி எனது மதிப்பீடு ..பிழைக்கத்தெரியாதவன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒவ்வொரு வீட்டிலும் ஆட்டுக்கறி, இறால், நண்டு, முட்டை.......

அத்துடன் பொரித்து வறுத்த பலவகை பண்டங்களுக்குள் கலக்கப்பட்ட புட்டு..........

அப்பம

கொழுக்கட்டை

மோதகம்................................ :wub: :wub: :wub:

தற்போது............................. :( :( :(

அதென்ன தற்போது? இப்ப காஞ்ச பாணெண்டு பப்பிளிக்காய் சொல்லுறதுதானே :lol: ..இதுக்கை செந்தமிழ் வேறை "தற்போது" (சும்மாய் பகிடிக்கப்பா வில்லங்கமாய் நினைக்காதேங்கோ)

  • தொடங்கியவர்

பிடித்த விடயங்கள்..... மாறிக்கொண்டேயிருக்கும்.

பிடிக்காத விடயங்கள்...மாறிக்கொண்டேயிருக்கும்.

பயப்படும் விடயம்........ மாறிக்கொண்டேயிருக்கும்.

புரியாத விடயம்....... பெண்கள்.

அலுவலக மேசையில் இருப்பது .....கணணி பணம் செலுத்தவேண்டிய பற்றுச்சீட்டுக்கள்.

சிரிக்க வைக்கும் விடயங்கள். இதனை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று உண்மையாக மனம் விட்டு சிரிப்பது குழந்தைகளின் குறும்பு.

மற்றையது மனதிற்குள் சிரிப்பது. யாழ்களத்தில் பலரின் கருத்துக்களை படித்து.

இப்போது செய்து கொண்டிருப்பது;..வழைமை போல எழுதிக்கிழிப்பது

வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைப்பது. இனி எதுவுமில்லை காரணம் எவ்வளவோ செய்யலாமென முயன்று முடிந்தாயிற்று

கற்றுக்கொள்ள விரும்பும் விடயம். பொத்திக்கொண்டு பேசாமல்இருப்பதற்கு

பிடித்த உணவு... எல்லாமே(பசிக்கும் போது)

படித்துக்கொண்டிருக்கும் புத்தகம்..எதுவுமில்லை.

படித்தபொழுது பிடித்த புத்தகங்கள். படித்தபொழுது பிடித்தது பல இப்பொழுது பிடிக்கவில்லை

பிடித்த கதாசிரியர். ...அனுபவங்கள்

பிடித்த படம்..என்னால் கிழிக்கப்பட்ட எனது முதல் காதலியின் புகைப்படம்.

பிடித்த தலைவர். .. என் தந்தை

என் வாழ்க்கைத் துணை பற்றி எனக்கு இருக்கும் எதிர்பார்ப்பு;. கடைசிவரை கூட இருந்தாலே போதும்.

காதலைப்பற்றி .. அததை அனுபவிக்க உணர முடியும் எழுத முடியாது..

என்னைப்பற்றி எனது மதிப்பீடு ..பிழைக்கத்தெரியாதவன்.

நன்றி சாத்திரி அண்ணா உங்களை பற்றிய பதிவிற்கு..:) கருத்துகள் இட்ட அனைவருக்கும் நன்றிகள்

1.விரும்பும் விடையங்கள் :

a. எனது பாட்டானார் உருவாக்கிய அகன்ற ஆலமரத்தின் அத்தனை விழுதுகளான உறவுகள்.

b.எனது இரண்டு அண்ணைகள் , இரண்டு அக்காக்கள் , கடைசித் தங்கைச்சி .

c.குளிர்காலம்.

d.அதிகாலையில் வேலைக்குப் போக முதல் , ரீயும் சிகரட்டுடன் , எனது வீட்டு நீண்ட பல்கனியில் அமைதியான சூழலில் மோனத்தவம் .

e.குளிர் காலத்தில் தரையை முட்டிய பனிப் புகாரில் நடப்பது.

f.புதிதாகக் கிடைத்த யாழ் உறவுகள்.

2.பிடிக்காத விடையங்கள் :

a.செய்யாத பிழைக்கு குற்ரம் சாட்டுவது.

b.தண்ணியடிப்பது. அத்துடன் , மனதில் உள்ளதை வெறி என்ற போர்வையில் கதைத்து விட்டு , வெறிவழத்தில் கதைத்து விட்டேன் என்று சமாதானம் சொல்லும் நண்பர்கள் .

c.நான் பதிவு போடும்பொழுது மொக்கைகள் பொட்டுக் கடுப்படிக்கும் யாழ் உறவுகள்.

d.மனிதத்தைத் தொலைத்தவர்கள் .

3.பயப்படும் விடையம் :

a. மனச்சாட்சி .

b.நான் கணித்து வைத்த விடையங்கள் நடக்கும் பொழுது .

c.மனைவியின் ஈவிரக்கமற்ர நடுநிலையான நேரடி விமர்சனங்கள் .

4.புரியாத விடையம் :

a.நான் யார் ?

b.பிரபஞ்சத்தின் ஆக்கம் . அதிலும் , பூமிப் பந்தில் மட்டும் உயிரிகள் வாழ்வு.

5.அலுவலக மேசை அல்லது வீட்டு மேசையில் இருக்கும் பொருட்க்கள் :

a. எனக்கு என்று அலுவலக மேசை இல்லை .

b.வீட்டு கணணி மேசை விசாலமானது . கீழே, கணணி மேசை மேலே குசாலப் படுக்கக் கட்டில், (இக்கியா IKIA தயாரிப்பு) , அகன்ற திரையுடன் கூடிய எனது ஏசர் மேசைக் கணணி , பிறின்ரர் , மூக்குத் துடைக்கும் ரிஸ்யூப் பேப்பர் பெட்டி , எமது கலியாண வீட்டுப் போட்டோ , மேசைக் கலண்டர் , தொலைபேசி ,பிறென்ஞ் ஆங்கில அகராதி , கைக்குப் போடுற கிறீம் .

6.சிரிக்க வைக்கும் விடையங்கள் :

a.சிந்திக்க வைக்கின்ற சகல நகைச்சுவை காட்சிகள்.

B.யாழில் குசா இசை சுண்டல் அறிவிலி போன்றோரின் நகைச்சுவை எழுத்து வடிவங்கள்.

7.இப்போ செய்து கொண்டிருப்பது :

4* நட்சத்திர விடுதி ஒன்றில் காலை நேர உணவுப் போறுப்பாளர் .

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் விடையங்கள் :

a.எனது காலத்தின் பின்பு எனது மனைவி யாரிடமும் கையேந்தாத வகையில் நிதிப்பாது காப்பைச் செய்தல்.

b.பரித்தித்துறையில் ஒர் மருந்தகம் திறத்தல். சி.கு மனைவி பார்மசிஸ்ற்குப் படித்து, சென்னை ஸ்ரான்லி மருத்தவமனையிலும், கே ஜி மருத்துவ மனையிலும், வேலை செய்தவா.

c.இங்கு யூறோ மில்லியனர் விழும் பட்சத்தில், ஓர் நடசத்திர விடுதியைக் குத்தகைக்கு எடுத்து உரிமையாளர் ஆவது.

9.கேட்க விரும்பாதது :

a.இலவச சட்ட ஆலோசனைகள்.

b.ஒருத்தர் தனிவாழ்வில் தேவையற்று மூக்கு நுளைத்தல்.

10.கற்ருக் கொள்ள விரும்பும் விடையம் :

நான் என்றுமே அரிவரி மாணவன் , கற்பதற்கு எனது வாழ்நாள் போதாது.

11. பிடித்த உணவு வகை :

இராசவள்ளிக் கிழங்குக் களி , தோசை ,அப்பம், பொன்னி அரிசிக் கிச்சடியும், வெங்காயப் பச்சடியும், புளி சாதம் (புளியோதரை) இது அம்மாவும், மனைவியும் செய்தால் மட்டும்.

12.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் :

யாழ் இணையம்.

13.படித்ததில் பிடித்த புத்தகங்கள் :

கலைஞரின் பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், கல்கியின் சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் கடல்புறா, செங்கையாழியானின் வாடைக்காற்ரு, கிடுகுவேலி, அகத்தியரின் பஞ்சமர், கே டானியலின் கோவிந்தன், அருளரின் லங்காராணி, சோபாசகத்தியின் லைலா, றாஜினி திஸ்மகராவின் முறிந்த பனைகள், சாத்திரியின் அனைத்துப் படைப்புகளும், கோவிந்தனின் புதியதோர் உலகம்.

13.பிடித்த படம் :

கௌரவம், வியட்நாம் வீடு, நீர்குமிழி, ராஜரஜசோழன், சர்வர்சுந்தரம், 22ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், அபியும் நானும், மூன்றாம்பிறை.

14.பிடித்த தலைவர் :

மனிதவாழ்வில் ஒருவகையில் எல்லோருமே தலைவர்கள் தான்.

15.உங்கள் வாழ்க்கைத் துணை பற்ரி :

கல்லாக இருந்த என்னைப் பட்டை தீட்டி, வைரமாக்கிய பொற்க்கொல்லி (பெண்பால்). :)

16.காதல் பற்ரிய உங்கள் கருத்து :

தங்கள் வாழ்க்கையை வீணடிக்க, இளையவர்களால் எடுக்ப்பட்ட கற்பனை ரசம் கலந்த ஏவுகணை.

17.உங்களின் பொழுது போக்கு :

தேடல் ,தத்துவ, விசாரணை , யாழ் திண்ணையில் வெத்தில போடுவது, மனைவியுடன் இருபக்க மலரும் நினைவுகளை மீட்டுவது.

18.உங்களைப் பற்ரி நீங்களே மதிப்பிடுங்கள் :

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். :) :) :)

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன தற்போது? இப்ப காஞ்ச பாணெண்டு பப்பிளிக்காய் சொல்லுறதுதானே :lol: ..இதுக்கை செந்தமிழ் வேறை "தற்போது" (சும்மாய் பகிடிக்கப்பா வில்லங்கமாய் நினைக்காதேங்கோ)

எப்படி ஐயா கோபிக்க முடியும்.

உண்மையை தூக்கி மூஞ்சியில போடுறீங்களே... :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

17.உங்களின் பொழுது போக்கு :

தேடல் ,தத்துவ, விசாரணை , யாழ் திண்ணையில் வெத்தில போடுவது, மனைவியுடன் இருபக்க மலரும் நினைவுகளை மீட்டுவது.

இதைப்பார்த்து பாட்டன் பூட்டனார் வயது என்று நினைத்துவிட போகிறார்கள்.

:lol: :lol: :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

c.நான் பதிவு போடும்பொழுது மொக்கைகள் பொட்டுக் கடுப்படிக்கும் யாழ் உறவுகள்.

இதில் நானும் ஒருத்தியாக்கும் கோமன் அண்ணாவை:)

  • தொடங்கியவர்

1.விரும்பும் விடையங்கள் :

a. எனது பாட்டானார் உருவாக்கிய அகன்ற ஆலமரத்தின் அத்தனை விழுதுகளான உறவுகள்.

b.எனது இரண்டு அண்ணைகள் , இரண்டு அக்காக்கள் , கடைசித் தங்கைச்சி .

c.குளிர்காலம்.

d.அதிகாலையில் வேலைக்குப் போக முதல் , ரீயும் சிகரட்டுடன் , எனது வீட்டு நீண்ட பல்கனியில் அமைதியான சூழலில் மோனத்தவம் .

e.குளிர் காலத்தில் தரையை முட்டிய பனிப் புகாரில் நடப்பது.

f.புதிதாகக் கிடைத்த யாழ் உறவுகள்.

2.பிடிக்காத விடையங்கள் :

a.செய்யாத பிழைக்கு குற்ரம் சாட்டுவது.

b.தண்ணியடிப்பது. அத்துடன் , மனதில் உள்ளதை வெறி என்ற போர்வையில் கதைத்து விட்டு , வெறிவழத்தில் கதைத்து விட்டேன் என்று சமாதானம் சொல்லும் நண்பர்கள் .

c.நான் பதிவு போடும்பொழுது மொக்கைகள் பொட்டுக் கடுப்படிக்கும் யாழ் உறவுகள்.

d.மனிதத்தைத் தொலைத்தவர்கள் .

3.பயப்படும் விடையம் :

a. மனச்சாட்சி .

b.நான் கணித்து வைத்த விடையங்கள் நடக்கும் பொழுது .

c.மனைவியின் ஈவிரக்கமற்ர நடுநிலையான நேரடி விமர்சனங்கள் .

4.புரியாத விடையம் :

a.நான் யார் ?

b.பிரபஞ்சத்தின் ஆக்கம் . அதிலும் , பூமிப் பந்தில் மட்டும் உயிரிகள் வாழ்வு.

5.அலுவலக மேசை அல்லது வீட்டு மேசையில் இருக்கும் பொருட்க்கள் :

a. எனக்கு என்று அலுவலக மேசை இல்லை .

b.வீட்டு கணணி மேசை விசாலமானது . கீழே, கணணி மேசை மேலே குசாலப் படுக்கக் கட்டில், (இக்கியா IKIA தயாரிப்பு) , அகன்ற திரையுடன் கூடிய எனது ஏசர் மேசைக் கணணி , பிறின்ரர் , மூக்குத் துடைக்கும் ரிஸ்யூப் பேப்பர் பெட்டி , எமது கலியாண வீட்டுப் போட்டோ , மேசைக் கலண்டர் , தொலைபேசி ,பிறென்ஞ் ஆங்கில அகராதி , கைக்குப் போடுற கிறீம் .

6.சிரிக்க வைக்கும் விடையங்கள் :

a.சிந்திக்க வைக்கின்ற சகல நகைச்சுவை காட்சிகள்.

B.யாழில் குசா இசை சுண்டல் அறிவிலி போன்றோரின் நகைச்சுவை எழுத்து வடிவங்கள்.

7.இப்போ செய்து கொண்டிருப்பது :

4* நட்சத்திர விடுதி ஒன்றில் காலை நேர உணவுப் போறுப்பாளர் .

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் விடையங்கள் :

a.எனது காலத்தின் பின்பு எனது மனைவி யாரிடமும் கையேந்தாத வகையில் நிதிப்பாது காப்பைச் செய்தல்.

b.பரித்தித்துறையில் ஒர் மருந்தகம் திறத்தல். சி.கு மனைவி பார்மசிஸ்ற்குப் படித்து, சென்னை ஸ்ரான்லி மருத்தவமனையிலும், கே ஜி மருத்துவ மனையிலும், வேலை செய்தவா.

c.இங்கு யூறோ மில்லியனர் விழும் பட்சத்தில், ஓர் நடசத்திர விடுதியைக் குத்தகைக்கு எடுத்து உரிமையாளர் ஆவது.

9.கேட்க விரும்பாதது :

a.இலவச சட்ட ஆலோசனைகள்.

b.ஒருத்தர் தனிவாழ்வில் தேவையற்று மூக்கு நுளைத்தல்.

10.கற்ருக் கொள்ள விரும்பும் விடையம் :

நான் என்றுமே அரிவரி மாணவன் , கற்பதற்கு எனது வாழ்நாள் போதாது.

11. பிடித்த உணவு வகை :

இராசவள்ளிக் கிழங்குக் களி , தோசை ,அப்பம், பொன்னி அரிசிக் கிச்சடியும், வெங்காயப் பச்சடியும், புளி சாதம் (புளியோதரை) இது அம்மாவும், மனைவியும் செய்தால் மட்டும்.

12.இப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகம் :

யாழ் இணையம்.

13.படித்ததில் பிடித்த புத்தகங்கள் :

கலைஞரின் பாயும் புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், கல்கியின் சிவகாமியின் சபதம், சாண்டில்யனின் கடல்புறா, செங்கையாழியானின் வாடைக்காற்ரு, கிடுகுவேலி, அகத்தியரின் பஞ்சமர், கே டானியலின் கோவிந்தன், அருளரின் லங்காராணி, சோபாசகத்தியின் லைலா, றாஜினி திஸ்மகராவின் முறிந்த பனைகள், சாத்திரியின் அனைத்துப் படைப்புகளும், கோவிந்தனின் புதியதோர் உலகம்.

13.பிடித்த படம் :

கௌரவம், வியட்நாம் வீடு, நீர்குமிழி, ராஜரஜசோழன், சர்வர்சுந்தரம், 22ம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன், அபியும் நானும், மூன்றாம்பிறை.

14.பிடித்த தலைவர் :

மனிதவாழ்வில் ஒருவகையில் எல்லோருமே தலைவர்கள் தான்.

15.உங்கள் வாழ்க்கைத் துணை பற்ரி :

கல்லாக இருந்த என்னைப் பட்டை தீட்டி, வைரமாக்கிய பொற்க்கொல்லி (பெண்பால்). :)

16.காதல் பற்ரிய உங்கள் கருத்து :

தங்கள் வாழ்க்கையை வீணடிக்க, இளையவர்களால் எடுக்ப்பட்ட கற்பனை ரசம் கலந்த ஏவுகணை.

17.உங்களின் பொழுது போக்கு :

தேடல் ,தத்துவ, விசாரணை , யாழ் திண்ணையில் வெத்தில போடுவது, மனைவியுடன் இருபக்க மலரும் நினைவுகளை மீட்டுவது.

18.உங்களைப் பற்ரி நீங்களே மதிப்பிடுங்கள் :

அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். :) :) :)

மனைவி அமைவதெல்லாம் ... நீங்க குடுத்து வைச்சவர் அண்ணா.. வாழ்த்துக்கள் உங்க கனவுகள் ஈடேற..

நன்றிகள் உங்களை பற்றிய பகிர்வுக்கு..

நீங்க சொன்னீங்க 2 நாளைக்கு பிறகு உங்களை பற்றி பதிவிடுகிறேன் என்று but பிறகு கொஞ்ச நாள் பதியவில்லை மறந்திடீன்களோ எண்டு நினைச்சன் :)

  • கருத்துக்கள உறவுகள்

1.பிடித்த விஷயம் கட்டாயம் (3)சொல்ல வேண்டும் கூடவும் சொல்லலாம்.

எனக்கு மிகவும் பிடித்தமானாவர்கள்

புதிது,புதிதாக கற்க வேண்டும்

எப்போதும் பச்சைப் பசேல் என்று இருக்க கூடிய இடத்தில் வாழ வேண்டும்

பூக்கள்.குருவிகள்

என் பெற்றோர் மற்றும் கூடப் பிறந்தவர்கள் அவர்களின் குட்டீஸ்.

படுக்கையில் விளாமல் இறக்க வேண்டும்

2.பிடிக்காத விஷயம் கட்டாயம்(3)சொல்ல வேண்டும் கூடவும் சொல்லலாம்....

வயது போனவர்களின் சில பழமைவாத போக்குகளை இப்பொழுதும் கடைப்பிடிப்பது....

பெண்பிள்ளைகள்  ஆண்களோடு கதைத்தால் தவறாக  எண்ணுவது

பெண்கள் தண்ணி பாவிப்பது அதைக் காரணம் காட்டி ஒழுங்காக இருப்பவர்களின் மனங்களையும்

காயப்படுத்துவது.

எடுத்த உடன் பொய்  சொல்லி தப்பிக் கொள்வது

மற்றவர்களின் உணர்வுகளை மதிக்காமல் நடப்பது

தற் சமயம் பரதக் கலை....(ஏன் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்பிறன்)

யாரிடமும் எதற்கும் கடமைப் படாமல் வாழ வேண்டும்

3. பயப்படும் விஷயம்....

நான் நானகவே இருந்து விட்டால் எதற்கும் பயப்படத் தேவை இல்லை என்று நினைக்கிறன்.

4.புரியாத விஷயம்.

அதைப் பற்றி சொல்லத் தெரிய இல்லை

5.உங்கள் அலுவலக மேசையில் அல்லது  வீட்டு மேசையில் இருக்கும் பொருட்கள்..

சொல்லப் போனால் என் மேசை இடமே ஒரு குட்டி அலுவகம் போன்று தான் வைச்சு இருப்பேன்

கணணி மற்றும்  பிறின்ரர்

சிறிய குபேரன் பொம்மை

போண்

வர்த்தக கை நூல்

பேனை,பேன்சில் கோல்டர்

கலண்டர்சின்ன நோட் பேப்பர் புக்

ஆங்கிலம்,பிரெஞ்சு,தமிழ் அகராதிகள்,திருக்குறள் புத்தகம்

இன்னும் நிறையவே சொல்லலாம் இம்மட்டும் காணும்......

6.சிரிக்க வைக்கும் விஷயம்

சின்னக் குழந்தைகளின் லூட்டி

7.இப்போது செய்து கொண்டிருப்பது..

கேள்விகளுக்கு பதில் அளிப்பது

8.வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

படிப்பைத் தொடர முடியாமல் இருக்கும் வறுமைக்குட்பட்ட மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்து  கல்வி என்ற கண்ணை தடைப்படால் திறந்து விட வேண்டும்...அந்தவகையில் அவ்வப்போது என்னால் முடிந்த பங்களிப்பு நடந்து கொண்டே இருக்கும்,இருக்கிறது. அதன் பலனாக அந்த மாணவர்களின் வாயில் இருந்து வரும் நன்றியோடு கூடிய நல்ல வார்த்களை கேட்டாலே போதும்.மருத்துவதுறையில் படிக்கும் மாணவனையோ இல்லை மாணவியையோ முழுவதுமாக என் பொறுப்பிலயயே படிப்பிச்சு விடவேண்டும் என்ற ஆதங்கமும் இருக்கிறது...

9. கேட்க விரும்பாதது

பழிச் சொல்

வாழ்க்கையில் யாரிடமும் எதுவும் கடன் வாங்கக்கூடாது

எனக்கு பிடிக்காத விடையத்தை மற்றவர்கள் செய்து விட்டு அதற்கு விளக்கம் சொல்ல வருவது

10.கற்றுக் கொள்ள விரும்பும் விஷயம்(3கோவப்படாது இருத்தல் வேண்டும்

எவ்வளவுக்கு மௌனம் சாதிக்க முடியுமோ அவ்வளவுக்கு மௌனமாக இருந்து வாழ வேண்டும்

எனக்கு பிடித்தமான ஒருவர் விட்ட தவறை மறக்க முயற்சித்து தோற்றுப் போவது(அது என் இறப்பில் தான் நடக்கும்  என்று  நம்பிறன்)

11.பிடித்த உணவு வகை(3)

பட்டர் பூசிய பணிஸ்

பாண்

வெறும் தேனீர்

12.இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்   அம்மா கடந்த மாதம் லண்டன் போய் விட்டு கொண்டு வந்து தந்த..(பூந்துணர்) என்னும்  பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் எழுத்தாளர் தொகுப்பு நூல்..இதில் ஈழத்து எழுத்தாளர்களுடைய தொகுப்புக்கள் பல அடங்கி உள்ளதுமற்றும் ஒரு  புத்தகம்..திருக்குறளில் கேள்வியால் ஒரு வேள்வி இவ் இரண்டு நூல்களும் கணணி தவிர்ந்த நேரத்தில் வாசிப்பேன்.

13.படிச்சதில் பிடிச்ச புத்தகங்கள் என் கைக்கு எது எல்லாம் கிடைக்கிறதோ அது எல்லாம் படிப்பேன்

14. பிடிச்ச கதையாசிரியர்

பிடிச்ச கதாசிரியர் என்று யாரையும் சொல்ல முடியாது படிக்கும்  போது  எது நன்றாக இருக்கிறதோ அதை ரசிப்பேன்.

15) பிடித்த படம்  எனக்கு  படங்கள் நாடகங்கள் எதுவும் பார்க்கும் பளக்கம் இல்லை.அதற்கு செலவளிக்கும் நேரத்திற்குள் எவ்வளவோ அறிவு பூர்வமான  விடையங்களை கற்றுக் கொள்ளலாம்..ஒரு வருடத்தில் ஒரு  படம் பார்ப்பேனோ சொல்லத் தெரிய இல்லை..கடந்த வருடம் திரையரங்கில் இராவணன் பார்த்தேன் அதுவும் மற்றவர்களின் தொந்தரவினால் பார்க்க நேர்ந்தது

16) பிடித்த தலைவர்

எனது குடும்ப வைத்தியர்(இவர் ஒரு  ஆங்கிலேயர்)ஆனாலும் என் மனதுக்கு ரொம்ப பிடித்தமானவர்.

17.உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்தஃ இருக்கும்) எதிர் பார்ப்பு

அப்படி ஒருவர் வந்தால் அதன் பின் எழுதிறன்

18.காதல் பற்றிய உங்க கருத்து

கடவுள் மனிதனாக பிறக்க வேண்டும் ...மனதை பாராது உடலைப் பார்த்து மணம் செய்வோர் தான் இந்தக் காலத்தில் அதிகம்...வேறை எங்கயோ பரிசளித்து  விட்டு இருப்பவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால் சரியான பதிலை தர ஏலாது..அப்படி போனவர்கள் உடல்.உள ஆரோக்கியத்தோடு  பதின் ஆறும் பெற்று  பெரு வாழ்வு வாழட்டும்.

19) உங்களின் பொழுது போக்கு

என் பொழுது போக்குகள் யாழில் உலாவுவேன்

முகநூலில் உலாவுவேன்

வயது வந்தவர்களின் கர்நாடக பாடல்களை ரசிப்பேன்

பாடுவதும், புல்லாங்குழல் வாசிப்பதும் இப்போ  பயிற்சியில் இல்லாமல் போய் விட்டது

அம்மாவுக்கு வீட்டுவேலையில் உதவுவேன்

அவ்வப்போது வெளியில் போய் வருவேன்

எழுதுவது சற்று குறைந்திருக்கிறது

தூங்கும் நேரத்தை தவிர மற்ற ஒரு நிமிடத்தையும் வீணாக்க விரும்புவதில்லை

20) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

நானே என்னைப் பற்றி சொன்னால் அது  தற் பெருமை பேசுதாக அமைந்து  விடும்..ஆகவே நானே என்னைப் பற்றி சொல்ல விரும்ப இல்லை..ஒரு காலத்தில் யாயினி என்றால் எப்படியானவள்,மற்றவர்களோடு எப்படி பளகினாள் என்பது போன்ற நிறைய விடையங்களை அறிந்து கொள்ளும்  நேரம் வரும் அப்போது தெரிந்து கொள்ளுங்களேன்...இவை அனைத்தும் எந்த விதமான மிகைப்படுத்தலும் இல்லாமல் தரப்பட்ட பதில்கள்.நன்றி.

Edited by யாயினி

  • தொடங்கியவர்

நன்றி அக்கா உங்களை பற்றிய பகிர்வுக்கு... :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி யாயினி

மிகவும் நிதானித்த ஆனால் ஒரு சராசரி பெண்ணின் எல்லைக்குள்ளிருந்து துள்ளிவரும் பதில்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எழுதப் போறன்.. :rolleyes:

சொல்வதெல்லாம் உண்மை.. இன்றைக்குள்ள நிலைமையில்..!! :D

1 ) விரும்பும் விஷயம்

  1. தாயக விடுதலை
  2. நாடு திரும்புதல்
  3. இங்கு வீட்டுக்கடனை அடைப்பது :wub:

2 ) பிடிக்காத விஷயம்

  1. நம்பிக்கை தளரவைக்கும் பேச்சுக்கள்/எழுத்துக்கள்
  2. சொந்தக்காரர்களின் இம்சைகள்
  3. அலுவலகத்தில் கிழடுகளின் தொல்லைகள் scared0005.gif

3 ) பயப்படும் விஷயம்

  1. மனச்சாட்சி
  2. ??
  3. ??

4 ) புரியாத விஷயம்

  1. வாசிப்பில் உள்ள சுவை
  2. ஒட்டுக்குழுவினரின் மனநிலை
  3. இளையராஜாவின் புலமை

5) உங்கள் அலுவலக மேசையில் OR வீட்டு மேசையில் உள்ள பொருள்கள்

  1. கணினி, கல்குலேற்றர், பென்சில், இறேசர், றூலர், கலர் பேனாக்கள்
  2. ஒரு கண்ணாடி டோல்ஃபின்
  3. மகளின் படம்

6 ) சிரிக்க வைக்கும் விசயங்கள்

  1. தரமான திரை நகைச்சுவைகள்
  2. ஒட்டுக்குழுக்களின் மாற்றுக்கருத்துக்கள் :wub:
  3. யாழின் நகைச்சுவைப் பதிவுகள்

7 ) இப்போது செய்து கொண்டிருப்பது

  1. கனிமவளத்துறையில் பொறியியலாளர் வேலை

8 ) வாழ் நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் காரியம்

  1. தாய்நாட்டில் நெடுஞ்சாலைகள்
  2. வாழ்வாதார முன்னேற்றம்
  3. முழுமையான சுதந்திரம்

9) கேட்க விரும்பாதது

  1. தற்காலத்து செயற்கை இசை
  2. அவநம்பிக்கை தரும் ஆலோசனைகள்
  3. மாற்றுக்கருத்தாளரின் தொ.கா பேட்டிகள் happy0035.gif

10 ) கற்று கொள்ள விரும்பும் விஷயம்

  1. நெடுஞ்சாலை வடிவமைப்பு
  2. உறவினர் விழாக்களில் பங்கேற்றல்
  3. சொந்தமாக வேட்டி கட்டுதல் confused0020.gif

11 ) பிடிச்ச உணவு வகை

  1. உருளைக்கிழங்கு போட்ட கொழி இறைச்சிக் கறி
  2. மீன் கட்லட்
  3. வெங்காயம் பொரித்துப் போட்ட மீன் பொரியல் :rolleyes:

12 ) இப்போது படித்து கொண்டிருக்கும் புத்தகம்

  1. அமெரிக்க கொன்கிறீற் வடிவமைப்பு
  2. கட்டுமானத்தில் தர நிர்ணயம்
  3. மாத்காட் (MathCad) உபயோக முறை

13 ) படித்ததில் பிடித்த புத்தகங்கள்

  1. பொறியியல் சம்பந்தமான புத்தகங்கள்
  2. ரின்ரின் புத்தகங்கள்
  3. அம்புலிமாமா, பாலமித்திரா :wub:

14 ) பிடிச்ச கதையாசிரியர்

  1. அப்படி யாரையும் சொல்லத் தெரியவில்லை. :unsure:

15 ) பிடித்த படம்

  1. புவனா ஒரு கேள்விக்குறி
  2. சதி லீலாவதி
  3. Saving Private Ryan

16 ) பிடித்த தலைவர்/ஹீரோ

  1. தலைவர்தான்

17 ) உங்களின் வாழ்க்கை துணை பற்றி உங்களுக்கு (இருந்த/ இருக்கும்) எதிர் பார்ப்பு

  1. :rolleyes:
  2. :unsure:
  3. :icon_mrgreen:

18 ) காதல் பற்றிய உங்க கருத்து

  1. நல்லது.

19)உங்களின் பொழுது போக்கு

  1. யாழ்களம்
  2. வேலையின் தொழில்நுட்ப சிந்தனை
  3. சுற்றுலா
  4. ஏகாந்தம்
  5. டிஸ்கவரி தொ.கா.
  6. மகளுடன் சீண்டல் winking0047.gif

20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

  1. தன்னம்பிக்கை அதிகம்.
  2. எனது தொழில் முன்னேற்றத்தில் குறுக்கீடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்.
  3. அலுவலகத்தில் நல்லா அரசியல் செய்வேன் happy0068.gif
  4. சொந்தக்காரர்களின் இழுவைக் கதைகளைக் கேட்க மாட்டேன்.
  5. மனச்சாட்சிக்குப் பயம்
  • கருத்துக்கள உறவுகள்

20 ) உங்களை பற்றி நீங்களே மதிப்பிடுங்கள்

  1. அலுவலகத்தில் நல்லா அரசியல் செய்வேன் happy0068.gif

பல கொலையாளிகளுடன் வேலை செய்கின்றீர்களா?

  • தொடங்கியவர்

நானும் எழுதப் போறன்.. :rolleyes:

சொல்வதெல்லாம் உண்மை.. இன்றைக்குள்ள நிலைமையில்..!! :D

  1. அலுவலகத்தில் கிழடுகளின் தொல்லைகள் scared0005.gif
  1. சொந்தமாக வேட்டி கட்டுதல் confused0020.gif

இப்ப ஆர் வேட்டி கட்டி விடுறது.. :huh:

உங்களுக்கும் கிழடுகள் தொல்லையா .. :lol:

நன்றி அண்ணா பகிர்வுக்கு ..:)

Edited by வீணா

10 ) கற்று கொள்ள விரும்பும் விஷயம்

  1. சொந்தமாக வேட்டி கட்டுதல் confused0020.gif

சிம்பிள்.

வேட்டியை இரண்டாக மடித்து. இடுப்பைச் சுற்றிக் கட்டி விட்டு அதன் மேல ஒரு பட்டையை (Belt) கட்டினால் கேம் ஓவர். எதற்கும் நல்ல பாதுகாப்பானதொரு உள்ளாடை அணிவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

பல கொலையாளிகளுடன் வேலை செய்கின்றீர்களா?

அப்பிடியில்லை.. காலகாலமாக இதுக்குள்ளை குப்பை கொட்டிற ஆக்களுக்கு கடிவாளம் போடுறதுதான் என்ர வேலை.. :lol:

இப்ப ஆர் வேட்டி கட்டி விடுறது.. :huh:

உங்களுக்கும் கிழடுகள் தொல்லையா .. :lol:

நன்றி அண்ணா பகிர்வுக்கு .. :)

போற இடங்களில எத்தினை தாய்க்குலங்கள் இருக்கினம் வேட்டி கட்டிவிட.. :lol:

சிம்பிள்.

வேட்டியை இரண்டாக மடித்து. இடுப்பைச் சுற்றிக் கட்டி விட்டு அதன் மேல ஒரு பட்டையை (Belt) கட்டினால் கேம் ஓவர். எதற்கும் நல்ல பாதுகாப்பானதொரு உள்ளாடை அணிவது நல்லது.

இதையும் சிலபேர் சொல்லுவினம்.. ஆனால் முறையாக் கட்டினால் நல்லமெண்டு நினைக்கிறது.. :huh:

  • கருத்துக்கள உறவுகள்

சிம்பிள்.

வேட்டியை இரண்டாக மடித்து. இடுப்பைச் சுற்றிக் கட்டி விட்டு அதன் மேல ஒரு பட்டையை (Belt) கட்டினால் கேம் ஓவர். எதற்கும் நல்ல பாதுகாப்பானதொரு உள்ளாடை அணிவது நல்லது.

நீங்க சொன்ன மாதிரிதான் ஒரு கிழடு கோதான் கட்டிறவர், அன்று மகன் அனுப்பிய புது UW கல்யாண வீட்டுக்கு போக என்று எடுத்துவைச்சிட்டு போட மறந்து போய்விட்டார், தான் போட்ட புதுசு எல்லாருக்கும் தெரியனும் என்று, வேட்டியை மடிச்சி கட்டி, குனிச்சி சாப்பாடு போட :rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இசைக்கு ஒரு பச்சை குத்த முடியாமல் போச்சு. நாளை ஒன்று குத்திவிடுகின்றேன். :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.