Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு கவிதை அழுகின்றது.... :(

Featured Replies

ஒரு உண்மையான காதலின் வலிகள் - வரிகளாய்........!!!

ஒரு "கவிதை"யின் கண்ணீரில் வரித்த வரிகள் இவை!

எழுத்தும் பகிர்தலும் ஆறுதல் அளிக்கும் என்ற நம்பிக்கையில்..............!

பெருந்தெருவில் விழுந்த பச்சைப் புழுவாக நான்!

காய்ந்து வரண்ட எனக்குள், என் பச்சை இதயம்...

படபடத்து பரிதவிக்கும் பரிதாபம்!

என்னை நான் ஒருமுறை நினைத்துப் பார்க்கின்றேன்...!

இன்னும் உயிரோடு இருப்பதே எனக்கு ஆச்சரியந்தான்!!!

நான் புரளும் மண்ணின் வெட்பம் என்

மெல்லிய மேனியைச் சுட்டு அவிக்கின்றது!

அவிந்து போகையிலும்... உன்

நினைவுகளில் பசுமையாய் ஈரமாகின்றேன்...!

உப்புக் கரிக்கும் கண் வழி நீரில்...!!!

கரைந்து போகும் உன் காதல் கரைகளில்...

பெருகிவரும் கடலாய் என் காதல் !

உன் கரை தொடுகின்ற ஒவ்வொரு அலையும்,

விலகிப்போகும்போது உணரும் பிரிவு வலிகள்....

மீண்டும் மீண்டும் தொட்டுத் தொடர்கின்றன!!!

பரந்து விரிந்த வானமாய் என் மனசும்,

திறந்தே கிடக்கின்றது வெறுமையாய்!

உன்னை மட்டுமே உட்கொள்ள

தயாரான என் மன வெளிகளில்...

கருமுகில்களாய் கருமை போர்க்கும் "சில"!!!!

சுட்டெரிக்கும் சுவாலைகள் குளிர்மைதான்!

உன் வார்த்தைகளை விட...!!

எரிந்து சாம்பலாகும் வரைக்கும்...

வலிக்கும் வலியைவிட கொடிது என,

உணர்கின்றேன்! அழிந்து.... அழுகின்றேன்!!!

பிராணவாயு தீர்ந்துபோன வளிமண்டலத்தில்,

திணறும்போது கூட.... உன் பெயரை உச்சரித்தபடியே,

இவன் செத்துப் போனான் என்ற செய்தி....

உன் காதில் விழுந்தால்தான்,

உன் மனம் மகிழுமென்றால்....

இந்தப் புழுவாய் இப்போதே செத்துப்போகின்றேன்....!!!

சுமைதாங்கி ஊர்திகளின் சுமைகளின் அடியில்,

என் உடல் சிதறி... பச்சை ரத்தம் பீறிட்ட பிறகு,

என் சின்ன இதயத்தில் இருந்த சுமைகளும்

சிதறிப் போகுமென்றால்............................. :(

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தில் வடிக்க முடியாத சோகத்தில் கவிதை அழுகிறது.

அழுகையில் சோகம் கரையுமானால் .....அதுவும் ஆறுதலே

தம்பி உந்த காதலை கொண்டு போய் குப்பையில போட்டுட்டு வாழ்க்கையையில் ஏதாவது சாதிக்க பார். உதெல்லாம் வயது கோளாறு. கொஞ்சம் வயது போக நானா இந்த கவிதைகளை எழுதினனான் என்று நியே சிரிப்பாய்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்போ கவிதைப் பகுதிக்குள் வருவது குறைவு ...இந்த தலைப்பு வரச் செய்து விட்டது...என் சிற்றறிவுக்கு எட்டியதை எழுதிறன்..அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஒன்றும் நன்றகாக இருக்காது.. :(

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை இதுவும் கடந்து போகும், ஏதுவும் நிலையற்றது, எரிந்து சாம்பல் ஆவதை மட்டும் இனிமேல் தொட வேண்டாம்

ஓமோம் இதுகளெல்லாம் வயதுக் கோளாறுகள் தான், இதற்குப் போய் இப்படி..............., ஒன்று போனால் இன்னொன்று........ அதுவும் போனால்...........வேறு ..... :icon_idea::lol:

  • தொடங்கியவர்

எழுத்தில் வடிக்க முடியாத சோகத்தில் கவிதை அழுகிறது.

அழுகையில் சோகம் கரையுமானால் .....அதுவும் ஆறுதலே

சில சமயங்களில் மனமுடைந்து அழுதிருக்கின்றேன்! ஆனால்... அழுது முடிக்கையில் தெளிவான முடிவுடன்தான் என் கண்ணீரைத் துடைத்திருக்கின்றேன்! இப்போது... வலிக்கின்றது... மீண்டும் தெளிவான முடிவுகளை எடுக்க ஒரு சந்தர்ப்பம் அமைந்து நிற்கிறது! நன்றி அக்கா! :)

  • தொடங்கியவர்

தம்பி உந்த காதலை கொண்டு போய் குப்பையில போட்டுட்டு வாழ்க்கையையில் ஏதாவது சாதிக்க பார். உதெல்லாம் வயது கோளாறு. கொஞ்சம் வயது போக நானா இந்த கவிதைகளை எழுதினனான் என்று நியே சிரிப்பாய்.

எதையாவது சாதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஆவலுடன் முயல்பவன் நான் அண்ணா! "காதல்" என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் மட்டும் உருவாகும் உறவு என்ற வரையறைக்குள் நான் பார்த்திருந்தால் என்றைக்கோ தூக்கி எறிந்திருப்பேன்! நான் வளர்க்கும் நாய்க்குட்டி மீதும் எனக்கு காதல் இருக்கு! அதை பிரியும் போதும் அழுகின்ற மனசு எனக்கு. அதைக் கொடுத்த கடவுளை எத்தனை நாள் திட்டித் தீர்த்திருப்பேன் என்று கடவுளுக்குத் தெரியும்!!!

யதார்த்தமான வரிகள்... தங்களின் வாழ்க்கை அனுபவங்களின் வழிவந்த அறிவுரைகள் அனைத்தையும் உணர்ந்தவனாய்... தலைவணங்கி ஏற்றுக்கொள்கின்றேன்!

தற்பொழுது தெளிந்த நீல வானமாய் என் மனமும் .... மனமார்ந்த நன்றிகள்! :)

நான் இப்போ கவிதைப் பகுதிக்குள் வருவது குறைவு ...இந்த தலைப்பு வரச் செய்து விட்டது...என் சிற்றறிவுக்கு எட்டியதை எழுதிறன்..அவசரத்தில் எடுக்கப்படும் முடிவுகள் ஒன்றும் நன்றகாக இருக்காது.. :(

பல தடவைகள் கண்ட தொடர் தோல்விகள் தந்த அனுபவங்களைத் தாண்டி வந்த பின்னும்... என்னை அவசர முடிவுக்குள் தள்ளும் சம்பவங்கள் என்னை ஆக்கிரமிக்காது என நம்புகின்றேன். தங்களின் அக்கறைக்கும் அன்புக்கும் மிக்க நன்றிகள் யாயினி! மறவேன்!!!!!!!!!!!!!! :)

Edited by கவிதை

  • தொடங்கியவர்

கவிதை இதுவும் கடந்து போகும், ஏதுவும் நிலையற்றது, எரிந்து சாம்பல் ஆவதை மட்டும் இனிமேல் தொட வேண்டாம்

உடையார்! "எதுவும் நிலையற்றது" என்பதே உண்மையெனினும் நிலையென நிற்பதே நிம்மதி... ! வெண்மதி கூட வளர்ந்து தேய்ந்து மீண்டும் வளர்ந்து தேய்ந்தென நிலையற்ற ஒன்றாய் கண்களுக்கு தெரிந்தாலும் ..... நிலையென்பது எம் மனந்தான் என்பதுவும் உண்மையிலும் உண்மை! ரொம்பக் குழப்புறனோ உங்களை...!? :D

எல்லாத்துக்குமே மனந்தான் காரணம்...! தெளிந்த மனதுடன் நான் இப்போது! நன்றி உடையார்! :)

  • தொடங்கியவர்

ஓமோம் இதுகளெல்லாம் வயதுக் கோளாறுகள் தான், இதற்குப் போய் இப்படி..............., ஒன்று போனால் இன்னொன்று........ அதுவும் போனால்...........வேறு ..... :icon_idea::lol:

ஒன்று போனால் இன்னொன்று என ஆறுதல் வார்த்தைகள் சொல்லும் தங்கள் அன்புக்கு நன்றிகள்!

அன்பு என்பது ........ எப்போதும் மாறாது! மாற்றீடு இல்லாத தனித்துவமான அன்புக்கு.... யதார்த்தங்கள் பொருந்தாது! 8 வருஷம்..................... நான் வாழ்ந்த நாட்களின் கால்வாசிக்கு மேல்............ கடைசிவரை இறுதி மூச்சுவரை...

தொடர்ந்து அடங்கட்டும்! :)

  • தொடங்கியவர்

பஞ்ச பூதங்களை அழைத்துவந்து கொட்டித்தீர்த்த க(வி)தை இது!

அன்பெனும் முன்னால் இவையனைத்தும் சாட்சிகளாய் எம்முன் வந்தே ஆக வேண்டும்! :)

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைக்கு பஞ்சமில்லாது,வஞ்சகமில்லாது நீர்,நிலம்,காற்று,தீ,வானம் என்று ஐம்பூதங்களையும் சாட்சியாக்கி எழுதியது நன்றாகத் தான் இருக்கிறது..ஆனாலும் படிக்கும் போது சற்று மனம் தடுமாற வைச்சுட்டு..நன்றி.

கடலில் மீன்களுக்கா பஞ்சம் கவிதை... ஒன்று போனால் இன்னும் ஒன்று ... தகுதி இல்லாதவர்களுக்காக ஏன் இப்படி அழவேண்டும்... எல்லோரும்போல் வாழப்பழகிக்கொள்ளுங்கள்... வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்... :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை நடந்து போனவற்றை நினைத்து வருந்தாமல் இனி மேல் வாழ்க்கையை புதிதாய் அமைத்துக் கொள்ளுங்கள்...அவவுக்கு உங்களோடு வாழ கொடுக்க வைக்கவில்லை அவ்வளவு தான்...வாழ்க்கை வாழ்வதற்கே :)

  • கருத்துக்கள உறவுகள்

என் பச்சை இதயம்...

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது எழுதுவதென்றால் பைத்தியக்காறத்தனம் என்றுதான் எழுதவரும்.

ஆனால் அந்த வயதை தாண்டிவந்ததால் சிந்திக்கச்செய்கிறது.

ஆனாலும் அன்பான வேண்டுகோள். வாழ்க்கையென்பது அது மட்டுமல்ல.

வாழ்க்கையே அவர்கள் மட்டுமல்ல.

அம்மா, அப்பா, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள்,.... என்று விரிந்த உலகம் எம்மை நோக்கி கையசைக்கும்போது நாம் மட்டும் அதையெல்லாம் வெறுத்து ஒருவருக்காக ..........???

காதலைக்கடந்து போனோர் கோடிகள் உலகில்

காதலுக்குள் மூழ்கிப்போனோர் லட்சம்

காதலுக்காக தன்னை அழித்தோர் நூறு

கோடியா? நூறா?

தற்கொலை செய்துகொண்ட ஒரு நண்பன் சாக முதல் என்னிடம் சொன்னது. ஒரு செக்கன் கண்ணை மறைத்துவிட்டது. இந்தப்பொழுது எல்லோருக்கும் வரும். அந்தக்கணத்தை வெல்லவேண்டும். நான் தோற்றுவிட்டேன் என்று.

அந்த நண்பனின் கடைசி சொற்கள் தங்களுக்கு எனது காணிக்கை கவிதை.

Edited by விசுகு

கவிதை.. இதுவும் உங்களை கடந்து போகும்....கவலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை...காதல் வலி பொல்லாதது...நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்..உங்கள் வயதில்தான் நான் இருக்கிறேன்...உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன்..அந்த இழப்பிலும் அருமையான கவிதை பிறந்திருக்குப்பாருங்கள்.....சோகமும் சுகமானது பின்னாற்களிள் இருந்து நினைத்துப்பார்க்கும்போது...வாழ்க்கை அதன் எல்லாக்கட்டங்களிலும் அழகானது...இப்பொழுது புரிவதில்லை..பின்னாற்களில் தனிமையில் நினைத்துப்பார்க்கும்போதுதான் புரியும்...

  • தொடங்கியவர்

கற்பனைக்கு பஞ்சமில்லாது,வஞ்சகமில்லாது நீர்,நிலம்,காற்று,தீ,வானம் என்று ஐம்பூதங்களையும் சாட்சியாக்கி எழுதியது நன்றாகத் தான் இருக்கிறது..ஆனாலும் படிக்கும் போது சற்று மனம் தடுமாற வைச்சுட்டு..நன்றி.

தடுமாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை... நிதானம் தவறாத வரைக்கும்!

நான் தான் நன்றி சொல்ல வேண்டும்! :)

பஞ்ச பூதங்களின் வல்லமையின் அடித்தளத்தில்தான் இந்தப் பூமியும் இயங்குகின்றது.

அவற்றின் சக்தி அபரிதமானது. மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது என்றாலும், சில சமயங்களில் "அன்பு" என்ற ஒன்றிற்கு அவை அடிபணியும்! "உண்மையான அன்புக்கு" உள்ள சக்தி... அதிகம் என்பதை இந்தச் சில நாட்களில் உணர்ந்தேன்!

நன்றி மா! :)

  • தொடங்கியவர்

கடலில் மீன்களுக்கா பஞ்சம் கவிதை... ஒன்று போனால் இன்னும் ஒன்று ... தகுதி இல்லாதவர்களுக்காக ஏன் இப்படி அழவேண்டும்... எல்லோரும்போல் வாழப்பழகிக்கொள்ளுங்கள்... வாழ்க்கை சந்தோசமாக இருக்கும்... :)

சுஜி! அது எவ்வளவு கஷ்டமானது என்று உங்களுக்கே தெரியும்!

ஒன்றுபோனால் இன்னொன்று வரினும் அதுவே அதுபோல் ஆகிடுமா???

இன்றைக்கு கடையொன்றில் பார்த்துவைத்த பொருளொன்று நாளை பணத்துடன் போகும்போது அது இல்லையென்று சொன்னாலே ....மனசுக்கு கஷ்டமா, இருக்கும்பொழுது...

இதுவேதான் வாழ்க்கையென்று....நினைத்துக் கடந்த பல வருடங்களில் எவ்வளவு எதிர்பார்ப்புக்கள் இருக்கும்!!!???

அத்தனையும்................ ??????????????????

Edited by கவிதை

  • தொடங்கியவர்

கவிதை நடந்து போனவற்றை நினைத்து வருந்தாமல் இனி மேல் வாழ்க்கையை புதிதாய் அமைத்துக் கொள்ளுங்கள்...அவவுக்கு உங்களோடு வாழ கொடுக்க வைக்கவில்லை அவ்வளவு தான்...வாழ்க்கை வாழ்வதற்கே :)

உண்மைதான் அக்கா! வாழ்க்கை வாழ்வதற்கே! வாழணும் என்று தோன்றும் போது அது விரும்பின வாழ்கையா இருக்கோணும் என்று ஆசைப்படுவது பேராசை இல்லைத்தானே!?

கடந்து போனவை சில காலம் கடந்த பின் இனிய அல்லது வலிய நினைவுகளாக இருந்து கொண்டே இருக்கும்! ஆனால்.... சில விட்டுக்கொடுப்புகள் பலவற்றினை சாதிக்கின்றன! அதனை உணர்கின்றேன்! தங்களின் அன்புக்கு இந்தத் தம்பியின் மனமார்ந்த நன்றிகள்! அதே வாழ்க்கை அதே காதலுடன் .... "புதிதாய்" !!! :)

நன்றி அக்கா! :)

  • தொடங்கியவர்

என் பச்சை இதயம்...

என் பிஞ்சு இதயம் குருத்துப் பச்சை நிறம்!

தங்களின் கருத்திடலின் அர்த்தம் உண்மையில் எனக்கு புரியவில்லை! (?)

ஒரு நல்ல கவிஞரின் எழுத்துக்கள் என் கவியின் பின்னூட்டலாக வந்ததில் மகிழ்ச்சியே! :)

  • தொடங்கியவர்

தற்போது எழுதுவதென்றால் பைத்தியக்காறத்தனம் என்றுதான் எழுதவரும்.

ஆனால் அந்த வயதை தாண்டிவந்ததால் சிந்திக்கச்செய்கிறது.

ஆனாலும் அன்பான வேண்டுகோள். வாழ்க்கையென்பது அது மட்டுமல்ல.

வாழ்க்கையே அவர்கள் மட்டுமல்ல.

அம்மா, அப்பா, சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள்,.... என்று விரிந்த உலகம் எம்மை நோக்கி கையசைக்கும்போது நாம் மட்டும் அதையெல்லாம் வெறுத்து ஒருவருக்காக ..........???

காதலைக்கடந்து போனோர் கோடிகள் உலகில்

காதலுக்குள் மூழ்கிப்போனோர் லட்சம்

காதலுக்காக தன்னை அழித்தோர் நூறு

கோடியா? நூறா?

தற்கொலை செய்துகொண்ட ஒரு நண்பன் சாக முதல் என்னிடம் சொன்னது. ஒரு செக்கன் கண்ணை மறைத்துவிட்டது. இந்தப்பொழுது எல்லோருக்கும் வரும். அந்தக்கணத்தை வெல்லவேண்டும். நான் தோற்றுவிட்டேன் என்று.

அந்த நண்பனின் கடைசி சொற்கள் தங்களுக்கு எனது காணிக்கை கவிதை.

"தற்கொலை" என்பது முட்டாள்கள் கூட தவறிச் செய்யும் தவறு என்பது என் எண்ணக் கருத்து!

தற்கொடைகளை பார்த்து வளர்ந்தபின் தற்கொலைகளின் வீண்விரயமும் தெரியும்! செத்தாலும் எதையாவது செய்துவிட்டு சாகோணும்!

அன்பென்பது... தாங்கள் சொன்ன மாதிரி, ஓரேயொரு இடத்தில் இருந்து மட்டுமே கிடைப்பதில்லை. என் அம்மா காட்டாத அன்பையும் பாசத்தினையும் யாரும் எனக்கு புதிதாய் காட்டிவிட முடியாது. தாய்க்கு முன் தாய்மண் என நினைத்து வாழ்ந்த மண்ணில் பிறந்து... வளர்ந்துவிட்டு இப்படி கேவலமாய் நடந்துகொள்ள மாட்டேன் அண்ணா!!! தங்களது அறிவுரைக்கும் அன்புக்கும் என்றும் அன்புடையவனாக இருப்பேன்!:)

எல்லாம் நல்லபடியே நடக்கும் என நம்புவோம்! :)

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை முதல் பச்சைப்புள்ளியைப்போட்டு விட்டு இன்னும் போடுவதற்கு இடமில்லாமல் நகர்ந்து விட்டேன்...... கவிதையின் கவிதையை மௌனமாய் ரசிக்கிறேன் என்பதை மட்டுந்தான் சொல்ல முடியும்...... வேறு வார்த்தைகளைக் கொட்டி என் ரசிப்பின் மானசீகத்தை கெடுக்க விரும்பவில்லை .... :):wub:

Edited by valvaizagara

  • தொடங்கியவர்

கவிதை.. இதுவும் உங்களை கடந்து போகும்....கவலை வேண்டாம்.

எல்லாமே .......கடந்து போய்க்கொண்டிருக்கு..... !!! தமிழ்+இனி-யும் வேண்டாம்! :)

நான் கடந்து போக வேண்டிய பாதை நிறையவே எனக்காக காத்திருக்கின்றது!!!

அதுவரை செல்வோம்!

அன்புக்கு மிக்க நன்றிமா!! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.