Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள்! கொள்கை மாற்றத்தில் அமெரிக்கா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TNA_281011_USAseithy_150.jpg

முன்னுதாரணம் இல்லாத வகையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மூன்றாவது நாளாகத் தொடரும் சந்திப்புக்கள் உலகின் பல தரப்பாலும் வியப்போடும் விழிப்போடும் நோக்கப்படுகிறது. பிரதான இராஜதந்திரிகள், நாட்டின் பிரதிநிதிகளையே ஓரிரு மணித்தியாலங்கள் சந்தித்துப் பேசுகிற பாங்கையுடைய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு தொடர்ச்சியாக மூன்று நாட்களாக சந்திப்பை மேற்கொண்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை ஆரம்பித்த இந் சந்திப்புக்கள் நேற்று வியாளக்கிழமையும் மாலை வரை தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமையும் தொடரவுள்ளது.

TNA_281011_USAseithy_310_001.jpg

இதுவரை நடந்த சந்திப்புக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவும், பயன்தருவனவாகவும் அமைந்தன என்பதை பூடகமாகத் தெரிவித்த பேச்சுக்குழுவினர் நாளை பேச்சுக்கள் முடிந்ததும் மக்களிற்கு அறிக்கை வாயிலாக தங்களின் பேச்சுக்களின் விபரங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அமெரிக்காவின் முடிவெடுக்கும் தலைமையகமான இராஜாங்கத் திணைக்களம் ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பான கற்கை, சமகால நிலவரப் பரிமாற்றம் என்பவற்றை மேற்கொண்டு இலங்கை தொடர்பான கொள்கை மாற்றமொன்றிற்குள் தன்னை கொண்டு செல்வதான ஐயப்பாடே நீண்டு செல்லும் பேச்சுக்களினால் நோக்கர்களிடையே எழுந்துள்ளது.

இதேவேளை ஐ.நா.வின் செயலர் பான் கீ மூனுடன் சந்திப்புக்கான சாத்தியம் நவம்பர் 1ம் திகதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் கனடாவிற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்து சேரும் தமிழ்த் தேசியக் குழுவினர் மீண்டும் அமெரிக்கா செல்லும் சாத்தியம் காணப்படுகிறது.

கனடியத் தலைநகர் ஒட்டாவாவில் வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சந்திப்புக்களில் ஒக்டோபர் 31ம் திகதி மேற்கொள்ளும் இக் குழுவினர் அதன் பிற்பாடு மீண்டும் அமெரிக்கா செல்லலாம் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தென்னாசிய மற்றும் மத்திய ஆசியப்பிரிவுப் துணைச் செயலாராக ரொபேட் பிளேக் அவர்கள் இருக்கும் காலமே தமிழர்களிற்கும் அமெரிக்காவும் புரிந்துணர்வு ஏற்பட்ட காலமாக மாறும் வாய்ப்புள்ளதையே தற்போதைய சந்திப்புக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

ரொபேட் பிளேக் அவர்கள் சென்னையிலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் பணியாற்றிய காலம் தொட்டுத் தமிழர்களின் வாழ்வியலை அறிந்தவராகவும் தமிழ்மொழியை ஓரளவு அறிந்தவராகவும் இருந்தவர் என்பதும் இலங்கையில் விடுதலைப் போர் உச்சத்திலிருந்த போது தூதுவராகப் பணிபுரிந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கிளாரி கிளிண்டனின் அண்மைய இந்திய விஜயத்தின் போது அவர் சென்னை சென்று ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கும் ரொபேட் பிளேக்கே காரணம் என்று கூறப்பட்டது.

http://www.seithy.com/breifNews.php?newsID=51383&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சந்தர்ப்பங்கள். தலைவர்கள் உணர்ந்து செயற்படவேண்டும். எந்தவகையிலும் வளைந்து கொடுத்தாவது தமிழருக்கான ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பத்தை முற்றிலுமாக பயன்படுத்தணும். அதேநேரம் புலம் பெயர்ந்தவர் போர்க்குகுற்றம் எனும் ஆயுதத்தை மேலும்மேலும் வலுவாக்ககி தூக்கி நிமிர்த்தணும். அதையே காரணம் காட்டி அதை வீழ்த்தும் ஆதைவிட வலிமையயான ஆயுதத்தை தீர்வாக அவர்கள் முன் வைக்கச்செய்யணும்.

Edited by விசுகு

அதுதான் எமது இராசதந்திரமாக இருக்கவேண்டும்.

புலம்பெயர் மக்கள் தொடர்ந்தும் போர்குற்ற ஆதாரங்களை மனித உரிமை அமைப்புக்கள், ஆர்வலர்கள் உதவியுடன் தமது நாட்டு அரசியல்வாதிகள் ஊடாக ஐ.நா. வரை மேலும் மேலும் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

ஒரு கையால் தீர்வுகளை எடுத்தபடி மறுகையால் மேலும் மேலும் அழுத்தம் பிரயோகிக்கப்படல் வேண்டும். இந்த ஒன்று தான் மகிந்த கூட்டத்தையும் அவருக்கு உதவிய போர்குற்றவாளிளையும் மீறி ஒரு தீர்வை பெறவாய்ப்பு தரும்.

எமது தேசியத்தலமையின் மௌனத்தின் பின் மீண்டும் ஒரு முறை இந்த உலகம் எம்மை திரும்பிப்பார்க்கிறது. த.தே கூ அமைப்பினர் யதார்த்தமான இந்த அருமையான சந்தர்ப்பத்தை சமாத்தியமாகப்பயன்படுத்த வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும்

கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பாவிப்பார்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என நம்புகின்றேன்.

அருமையான சந்தர்ப்பங்கள். தலைவர்கள் உணர்ந்து செயற்படவேண்டும். எந்தவகையிலும் வளைந்து கொடுத்தாவது தமிழருக்கான ஒரு தீர்வை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பத்தை முற்றிலுமாக பயன்படுத்தணும். அதேநேரம் புலம் பெயர்ந்தவர் போர்க்குகுற்றம் எனும் ஆயுதத்தை மேலும்மேலும் வலுவாக்ககி தூக்கி நிமிர்த்தணும். அதையே காரணம் காட்டி அதை வீழ்த்தும் ஆதைவிட வலிமையயான ஆயுதத்தை தீர்வாக அவர்கள் முன் வைக்கச்செய்யணும்.

விசுகர்:

உங்கள் கருத்தையேற்று நானும் ஒரு பச்சை குத்தியுள்ளேன். ஆனாலும் நமது தீர்வு போர்குற்ற விசாரணைக்கு பின் வருவதே நல்லது. அதற்கு முன் வரும் தீர்வெல்லாம் ஒரு வகையில் சோல்பரி தீர்வுகளே.

ஆனல் கூட்டமைப்பு தீர்வுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கும். ஆகவே புலம் பெயர் மக்கள் தீர்வுக்கு முன் போர்குற்ற விசாரணையை வரவைக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நீண்ட காலத்தின் பின்பு, வாழ்வதற்கு ஒரு விருப்பம் வருகின்றது!

எது நடக்குமோ, நடக்காதோ, போர்க்குற்றம் ஒரு பிரம்மாஸ்திரம்!

இது மட்டுமே, இந்தியாவைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது!

மல்லையின் கருத்துப் படி, இதன் மூலம் சர்வசன வாக்கெடுப்பில் வரும் தீர்வே, கொசோவோ, தீமோர் தீவுகள் போன்ற ஒரு உறுதியானதும், இறுதியானதுமான தீர்வை எமக்குப் பெற்றுத் தரும்!

மற்றவையெல்லாம், எமது இனத்தைச் சிறு பான்மையாக்கி, ஒரு தீர்வுக்கான தேவையை இல்லாமல் செயது விடும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விட்டகுறை தொட்டகுறை இல்லாமல் தமிழனின் குறைகள் நிறைவேற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் தலைமையில் போன கூட்டமைப்புக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை, தவறவிட்டால்....

அடுத்த முறை ஆனந்தசங்கரிக்குத்தான்... அமெரிக்கா போக சான்ஸ் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

TNA_281011_USAseithy_310_001.jpg

எமது அரசியல்வாதிகளின், வயிறு வீங்கியிருப்பதைப் பார்த்தால்...

ஈழத்தில், நல்லாய் சோறு கிடைக்குது, பட்டினி இல்லை.. எண்டு, ஆராவது நினைக்கப் போறாங்கள்.

கொஞ்சம் வண்டியை குறைக்கப் பாருங்கப்பா....

அமெரிக்கச் சந்திப்புக்களின் ஆரோக்கியம் பற்றியெல்லாம் இப்போது குறிப்பிட முடியாது. யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும் என்பதுதான் தமிழரின் நிலை. அமெரிக்கா தமிழர்தரப்பிடம் என்ன பேரம் பேசப்போகிறது என்பது முக்கியமான ஒன்று. அதைவிடவும் முக்கியமானது சிறிலங்காவின் எதிர்வினையாற்றல்தான்.

இதுவரை தமிழர்கள் அமெரிக்க விஜயம் மேற்கொண்டதை இலங்கை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் என்னால் புரிந்து கொள்ளக் கூடியது ஒன்றுதான், புலம்பெயர் தமிழர்களைப் பலவீனம் காணச் செய்யும் செயற்பாடாகவே இது அமையப் போகிறது.

முன்பு இங்கை அரசிடமும் புலிகளிடமும் பேசியதை நோர்வைக் காரன் சென்று இந்தியாவிடம் கூறினார்கள் ஆனால் இவர்கள் அமெரிக்காவில் இருந்து கொண்டெ போன் போட்டு சொல்லி இருப்பார்கள் கடசியில் இது போர்க் குற்றமும் இல்லை தீர்வும் இல்லை என்ற நிலைக்கு தான் வர போகிறார்கள்.

அமெரிக்கச் சந்திப்புக்களின் ஆரோக்கியம் பற்றியெல்லாம் இப்போது குறிப்பிட முடியாது. யார் குற்றினாலும் அரிசியாக வேண்டும் என்பதுதான் தமிழரின் நிலை. அமெரிக்கா தமிழர்தரப்பிடம் என்ன பேரம் பேசப்போகிறது என்பது முக்கியமான ஒன்று. அதைவிடவும் முக்கியமானது சிறிலங்காவின் எதிர்வினையாற்றல்தான்.

இதுவரை தமிழர்கள் அமெரிக்க விஜயம் மேற்கொண்டதை இலங்கை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் என்னால் புரிந்து கொள்ளக் கூடியது ஒன்றுதான், புலம்பெயர் தமிழர்களைப் பலவீனம் காணச் செய்யும் செயற்பாடாகவே இது அமையப் போகிறது.

புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகள் கூட்டமைப்பின் வரையறைக்குள் இதுவரை இருந்ததில்லை. புலம்பெயர் மக்களின் செயல்பாடுகள் போர்குற்றம், மனித உரிமைகள், அரசியல் தீர்வு என்ற கோட்டில் பயணிக்கின்றது. தாயகத்தில் கூட்டமைப்பு காணி, இராணுவக்கெடுபிடி, வாழ்வாதாரம், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற வட்டத்திற்குள் செயல்படுகின்றது.

இதை பலவீனம் என பார்த்தாலும் அதிகளவில் பலமான அணுகுமுறை என்றே தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் என்ற சொற்பிரயோகம் குறுகிய தீர்வுக்கு மட்டுமே வழிசமைக்கும் எங்களுக்கு வேண்டியது நிரந்தரமான தீர்வு.

போர்க்குற்றம் தனிய மகிந்த அரசை மட்டுமே தண்டிப்பதாக அமையும்.. அதற்கு மேல் சிங்கள இனம் தமிழினத்தை அழித்தது, அழித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மைகள் இந்தப் போர்க்குற்றத்தோடு மறைக்கப்பட்டுப்போகும். போர்க்குற்றத்தை கையிலெடுப்போம் ஆனால் இன அழிப்பை உறுதிப்படுத்துவோம். இன அழிப்பு என்ற சொற்பிரயோகம் இலகுவாக போர்க்குற்றம் என்ற குற்றச்செயலால் மேவப்பட்டு இருக்கிறது. தமிழர் கூட்டணி இதனை தெளிவாக வலியுறுத்தவேண்டும். எங்கள் மக்களுக்குத் தேவை ஒரு நிரந்தரத் தீர்வே... மீண்டும் மீண்டும் இணைந்து வாழ விரும்பாதவர்களை கட்டாயமாக சேர்ந்து வாழும்படி எந்த நீதியும் வற்புறுத்துவதில்லை... கோரப்பசி உள்ளவனுக்கு தேவை சத்தூட்டம் மிகுந்த உணவே அன்றி ஒப்பனை செய்யும் கிறீம்கள் அல்ல என்பதை தமிழர் கூட்டமைப்பு ஆணித்தரமாக வெளிப்படுத்தவேண்டும். அவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் மிகப்பாரியபொறுப்பு இருக்கிறது அதனை அவர்கள் உரிய முறையில் செய்து இனிவரும் காலங்களைத்தன்னும் வளமாக்கவேண்டும்.

Edited by valvaizagara

"போர்க்குற்றம் என்ற சொற்பிரயோகம் குறுகிய "

அது சொற்பிரயோகமல்ல. அது தமிழர் பிர்ச்சனையை சர்வதேசமயப்படுத்த ஒரு பொறிமுறை (தொழில் நுட்பம்). மேடை தயாரானவுடன், "அதெல்லாம் பழய கதை" என தமிழர் ஏமாந்த சரித்திரங்களை ஒதுக்கி வைக்கவிடாமல், முன் வைத்துவாதாட முடியும். இதனால் வரும் தீர்வு இன்னொரு ஏமாற்றத்திற்கு இடமில்லாமல் மூடி போடும். மற்றவையெல்லாம் தனி நாடொன்றின் (பெரும்பாலும், இந்தியா, அடுத்தது அமெரிக்கா.......) தயவுடன் ஒற்றை ஆட்சி இலங்கைக்குள் தான் அமையும்.

தற்போதை நிலை இப்படி. "பயங்கரவாதத்தை அடக்கி இன்னொருதடவை பயங்கரவாதம் தலை தூக்க விடாத அரசியல் அமைப்பு இலங்கைக்கு தேவை. இது காணி, நீதி பரிபாலனத்தை உள்ளடக்க முடியாது. தமிழர்கள் பயங்கர வாதிகள் ஏன் எனில் புலிகள் அவர்களால் ஏவப்பட்ட பயங்கரவாதிகள். புலிகள் தமிழர்களின் ஒரு பகுதியே. இவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல. எனவே புலிகள் கேட்ட தனிநாட்டை (அரசியல் தீர்வை ) தமிழர் ஆதரிக்கவில்லை. புலிகள் ஆயுதத்துடன் கேட்பதை கூட்டமைப்பு ஆயுதமின்றி கேட்கிறார்கள். எனவே கூட்டமைப்பும் தமிழர் பிரதிநிதிகள் அல்ல. எனவே கூட்டமைப்பு கேட்பதையும் கொடுக்க வேண்டியதில்லை" இவை இலங்கை அரசின் பிரசார சொற்பிரயோகங்கள். இதை கூட்டமைப்பு முழு தைரியத்துடன் எதிர்க்காது. இந்த கூக்குரல் பின்புலத்திலிருந்து வரும் போது எழுதப்படும் அரசியல் அமைப்பு தமிழர்களுக்கு பலன் தராது.

சர்வதேச மேடையொன்றில் புலிகள் தமிழர்கள். அவர்கள் போரிட்டது சுதந்திரத்திக்கு எனபது நிரூபிக்க படவேண்டும். இதனால் நாம் சுதந்திரம் அடைய வேண்டும். சில தமிழ்த்தலைவர்கள் இந்த காரணத்தினால்த்தான் புலிகள் செய்திருந்தாலும் போர்குற்றமென்பதை விசாரியுங்ககள் என்கிறாரகள். ஒல்லாந்து கோட்டின் தீர்ப்பு இவர்களின் தீர்க்க தரிசனத்தை பறை சாற்றுகிறது. அதாவது நடந்தது ஒரு (சுதந்திர) போர். எனவே புலிகளை பயங்கரவாதிகளாக முடியாது. போரின் போது செய்த குற்றங்கள் போர்குற்றத்தின் கீழ் விசாரிக்க பட வேண்டும். பயங்கரவாதத்தின் கீழ் அல்ல என்பது தீர்ப்பின் விளக்கம். இந்த வழக்கின் மீததை முன்னெடுத்து செல்ல வேண்டியது தமிழர்களின் பொறுப்பு.

Edited by மல்லையூரான்

மல்லையூரான்

போர்க்குற்றத்தை மட்டும் கையிலெடுத்தால்.... அமெரிக்கா போன்ற நாடுகள் பொலீஸ்காரர்களாக மாறி குற்றவாளியாக இப்போது கூண்டில் ஏற்றப்பட்டிருக்கும் மகிந்த அரசுக்கு ஏதாவது தண்டனையைக் கொடுக்க முயல்வார்கள்... அவர்கள் அத்தோடு உங்கள் குற்றச்சாட்டை விசாரித்து தண்டனை கொடுத்துவிட்டோம் இனிமேல் உள்நாட்டில் சிங்களப்பெரும்பான்மையுடன்இணைந்து வாழுங்கள் என்று சொன்னால் அதை நீங்கள் நீதியான தீர்வாக அல்லது தமிழர்களின் நிம்மதிக்கான ஒருதீர்வாக ஏற்றுக் கொள்வீர்களா?

போர்க்குற்றம் (War Crime) என்பது இன்று நிரூபிக்கப்படும் நிலையில் உள்ளது. அதன் முதல் இலக்கு மகிந்த அரச கூட்டம். அதை நிறைவேற்றும்பொழுது நாம் எதிர்பாராத விளைவுகள், அநேகமாக சாதகமாக நிகழலாம்.

அடுத்து, போர்குற்றத்தை சர்வதேசம் ஏற்கும் பொழுது, தமிழர் தரப்பு அதில் நிச்சயம் உடனடி தேவைகளுக்கான தீர்வை பெற வேண்டும். தம்மை தாயக மக்கள் பலப்படுத்த நாம் எல்லோரும் உதவவேண்டும்.

பின்னர், தமிழர்கள் தமது மீது ஒரு இனஅழிப்பு (Genocide) அரங்கேறியதாக சர்வதேசத்தின் ஆதரவுடன் ஐ.நா. வரை முன்னெடுக்கவேண்டும். அது ஒரு ஐ.நா. தீர்மானத்திற்கு கதவை திறந்து, சர்வசன வாக்கெடுப்பு மூலம், பிரிந்து போக வழிதேடுவோம்.

உங்களின் ஊகங்களில் பிரதானமானவை.

1. அமெரிக்கா போன்ற நாடுகள் பொலீஸ்காரர்களாக மாறி.

2.இனிமேல் உள்நாட்டில் சிங்களப்பெரும்பான்மையுடன்இணைந்து வாழுங்கள்.

அ. இந்த ஊகங்கள் நடக்குமா?

இந்த இரண்டும் வெறும் ஊகங்களாக இருந்தாலும் இவை போர்க்குற்ற விசாரணை மேடையிலிருந்த்து வர சந்தர்பம் இல்லை. பொலிஸ்காரன் ராச்சியம் நடப்பது நீதி விசாரணக்கு கோடு இல்லாத இலங்கை போன்ற இடங்களில் மட்டுமே. விசாரனையின் போது பல விடயங்கள் ஆதாரங்களோடு நிரூபிக்க படும். முடிவுகளை மதிக்காதோர் சங்கடங்களைச்சந்திக்க வேண்டி வரும்.

ஆ. இவை பொருத்தமான ஊகங்களா? இவற்றை வைத்து எடுக்க தக்க முடிவுகள் எப்படி பட்டவை?.

முக்கியமாக சரிவர தெரியாந்ததொன்று(குறந்த பட்சம் பொதுமக்களுக்கு) அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பது. இதை சரிவர தெரிந்து கொள்ள முதல் நாம் ஏன் எந்த முடிவையும் எடுக்க வேண்டும்?. எல்லாருடைய எதிபார்ப்பும் த.தே.கூ அமைப்பு இதை சரியாக புரிந்து கொண்டு தனது நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்பதுதான்.

எல்லோருடைய எதிபார்ப்பும் ஏதாவது ஒரு காரணத்திற்க்காக அமெரிக்கா சிங்களவர்களுடன் இணந்து வாழும் படி கூறினால் கூட்டமைப்பு அதை அப்படியே ஏற்க கூடாது என்பதும், கனதியான வாதங்களை முன் வைத்து அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டுமென்பதும்தான்.

அமெரிக்கா எழுந்தமானமாகவன்றி, விசாரணை மட்டும் போதுமா அல்லது தமிழர் சுதந்திரமடைய வேண்டுமா என்பதை தனது நலன்களை வைத்தே தீர்மானிக்கும். அமெரிக்கா சர்வதேச விசாரணையை முன்னேடுத்தால் மேலே வரும் ஊகத்திலிருப்பது போன்று தான் செய்வதாக காட்டி கொள்ளாது.

இப்போது பலநாடுகள் இலங்கை அரசின் அரசியல் கொள்கைகளில் இருத்த பிழைகளாத்தான் இலங்கையில் பயங்கரவாதம் தலை தூக்கியதாக இலங்கைக்கு சொல்லியிருக்கிறார்கள். என்வே அந்த அடிப்படை காரணத்தை நிவிர்த்தி செய்யாமல் , விசாரணை முடிந்தவுடன் மூளியாக இது போதும் என்று சொல்லிக்கொண்டு போவிடுவார்கள் என்று அநுமானிப்பது அவசியமல்லாதது.

இ.இந்த ஊகங்களுக்கு அளிக்கதக்க பதில்கள் யாவை?.

உங்களின் கேள்வி அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஊகித்து கொண்டு மேலே செல்ல பார்க்கிறது. அதற்கு எவருடைய பதிலும் வெறும் ஊகமாக மட்டுமே இருக்க முடியும். ஆனால் அதற்கான தேவை இப்பொழுத்து இருக்கின்றதா என்றால், அவசியமில்லை என்றுதான் பதிலளிக்க வேண்டும். இந்த தடவை த்.தே.கூ ராஜாங்காமைசு அழைத்ததின் காரணம் அவர்களின் நிலைப்பாட்டை அறியவென்று வைத்தாலும் , அடுத்த சந்திப்பிலாவது அவர்களிடம் தன் நிலைபாட்டை கூறிவிடும். அதை தன்னும் நமக்கு தெரிய வருமா இல்லையா என்பதை நாம் எதிர்வு கூற முடியாது. ஆனால் அதை எப்படி பயன் படுத்த வேண்டுமென்பது கூட்டமைபின் பொறுப்பு.

ஈ.ஊகங்களை விட செய்ய தக்கவை உண்டா?

அமெரிக்கா என்ன சொல்லியது என்பதை நமக்கு தெரிய வருமா இல்லையா என்பதை நாம் எதிர்வு கூற முடியாது. ஆனால் அதை எப்படி பயன் படுத்த வேண்டுமென்பது கூட்டமைபின் பொறுப்பு. எனவே நாம் எமது பிரதிநிதிகளாக கருதும் கூட்டமைப்பிடம் எமது விருப்பு வெறுப்புக்களை கூறி விட்டு நாம் செய்ய தக்கதொன்றான போர்குற்ற விசாரணை முன்னெடுப்புக்களைத்தொடர வேண்டியதுதான்

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் (War Crime) என்பது இன்று நிரூபிக்கப்படும் நிலையில் உள்ளது. அதன் முதல் இலக்கு மகிந்த அரச கூட்டம். அதை நிறைவேற்றும்பொழுது நாம் எதிர்பாராத விளைவுகள், அநேகமாக சாதகமாக நிகழலாம்.

அடுத்து, போர்குற்றத்தை சர்வதேசம் ஏற்கும் பொழுது, தமிழர் தரப்பு அதில் நிச்சயம் உடனடி தேவைகளுக்கான தீர்வை பெற வேண்டும். தம்மை தாயக மக்கள் பலப்படுத்த நாம் எல்லோரும் உதவவேண்டும்.

பின்னர், தமிழர்கள் தமது மீது ஒரு இனஅழிப்பு (Genocide) அரங்கேறியதாக சர்வதேசத்தின் ஆதரவுடன் ஐ.நா. வரை முன்னெடுக்கவேண்டும். அது ஒரு ஐ.நா. தீர்மானத்திற்கு கதவை திறந்து, சர்வசன வாக்கெடுப்பு மூலம், பிரிந்து போக வழிதேடுவோம்.

அகூதா எனக்கு சில விடயங்களை இலகுவாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு புரிந்து கொள்ள முடியாத பட்சத்தில் தவறான கேள்விகள் எதையாவது கேட்பின் அச்சங்கடத்தை மன்னிப்பீர்களாக....

போர் குற்றம் நிரூபிக்கப்படும் என்பதில் எனக்கு எந்தவித மறுப்போ அல்லது துளியளவு சந்தேகமோ இல்லை.. ஆனால் இப்போர்க்குற்றத்திற்கான நடவடிக்கை எடுக்கப்படும்போது தமிழினத்திற்கு சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புகளுண்டு. எனக்குள்ள சந்தேகம் என்ன என்றால் இன்றைக்குப் போர்க்குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மகிந்த அரசு மட்டுமே தண்டனைக்கு உள்ளாக்கப்படப்போகிறது... அத்தோடு போர்க்குற்றம் என்ற விடயம் முற்றுப்பெற்றதாகக் கருதப்பட்டு.. தள்ளிவைக்கப்பட்டுவிடும்... இன்றுவரைக்கும் பெரிய இனஅழிப்பு ஒன்று நடந்திருக்கிறது என்பதை அல்லது இனஅழிப்பு என்ற சொல்லை பாவிப்பதைத்.தவிர்க்கவே அதிகளவில் வெளிநாடுகளின் நிலைப்பாடுகள் உள்ளன என்பதை கடந்துவந்த காலங்கள் நிறையவே நிரூபித்துள்ளன.... அப்படி இருக்கும்போது இப்போதும் ஒரு சர்வாதிகாரியாகவே மகிந்த அரசை வெளிநாடுகள் பார்க்கும் நிலை இருக்கிறதே அன்றி தொடர்ச்சியாக இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்குப்பகுதிகளில் தமிழினத்தவர்களை அழிக்கும் ஒரு பெரும்பான்மை இனத்தின் ஆட்சியாளனாக கருதியதாக தெரியவில்லை.

அத்தோடு போர்க்குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு அதற்கான தண்டனை முற்றுப்பெற்றதன் பின்னால் நாங்கள் இன அழிப்பு நடந்தது என்று சொல்லப்போகும்போது அவர்களே திருப்பிக் கேட்கமாட்டார்களா "நீங்கள் முன்னர் போர்க்குற்றத்தைத்தானே முன்வைத்தீர்கள் இப்போது இன அழிப்பு என்கிறீர்களே" என்று அத்தோடு உங்களுக்கான பிரச்சனையாக இருந்தது மகிந்த அரசுதானே... அந்த அரசுதானே போர்க்குற்றத்தில் ஈடுபட்டது என்று நீங்கள் குற்றஞ்சாட்டியுள்ளீர்கள் மற்றையவர்கள் இத்தகைய போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லையே அப்படியான குற்றச்சாட்டை முன்வைக்கவில்லையே என்று கேள்விகளை அடுக்கினால் என்ன செய்வது?

எப்போதுமே எங்களுடைய வாக்குமூலம் ஆணித்தரமாக இருக்கவேண்டும். இப்போது போர்க்குற்றத்திற்கான தீர்வு கிடைக்கட்டும் அதற்குப்பிறகு போர்குற்றத்தின் மூலம் கிடைத்த தீர்வை எடுத்துக் கொண்டு இனஅழிப்பு என்று சொல்வோம் என்பது சிக்கலானது என்று தோன்றுகிறது. எங்களுடைய குற்றச்சாட்டு எப்போதுமே சிங்களப் பெரும்பான்மை இனம் தமிழினத்தை இனவழிப்புச் செய்து கொண்டிருக்கிறது என்பதாகவே இருக்கவேண்டும். இந்த இன அழிப்பிற்குக் கீழ்தான் இந்தப் போர் குற்றம் நிரூபிக்கப்படவேண்டும். வெறுமனே போர் குற்றம் நீரூபிக்கப்பட்ட பின்னால் இன அழிப்பை நிரூபிக்க முற்படுவது எவ்வளவு தூரம் சாத்தியமானது?

இன அழிப்பை நிரூபித்தால் பிரிந்து போய்விடலாமென்றோ அல்லது போர்க்குற்றவிசாரணை பிரிந்து போவதை தடுத்து நிறுத்தி விடும் என்பதும் இல்லை.

ஆனால் போர்குற்ற விசாரணை முடிவு அல்ல. ஆரம்பமே. எட்ட கூடிய சர்வதேச மேடை.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் என்ற சொற்பிரயோகம் குறுகிய தீர்வுக்கு மட்டுமே வழிசமைக்கும் எங்களுக்கு வேண்டியது நிரந்தரமான தீர்வு.

போர்க்குற்றம் தனிய மகிந்த அரசை மட்டுமே தண்டிப்பதாக அமையும்.. அதற்கு மேல் சிங்கள இனம் தமிழினத்தை அழித்தது, அழித்துக்கொண்டிருக்கிறது என்ற உண்மைகள் இந்தப் போர்க்குற்றத்தோடு மறைக்கப்பட்டுப்போகும். போர்க்குற்றத்தை கையிலெடுப்போம் ஆனால் இன அழிப்பை உறுதிப்படுத்துவோம். இன அழிப்பு என்ற சொற்பிரயோகம் இலகுவாக போர்க்குற்றம் என்ற குற்றச்செயலால் மேவப்பட்டு இருக்கிறது. தமிழர் கூட்டணி இதனை தெளிவாக வலியுறுத்தவேண்டும். எங்கள் மக்களுக்குத் தேவை ஒரு நிரந்தரத் தீர்வே... மீண்டும் மீண்டும் இணைந்து வாழ விரும்பாதவர்களை கட்டாயமாக சேர்ந்து வாழும்படி எந்த நீதியும் வற்புறுத்துவதில்லை... கோரப்பசி உள்ளவனுக்கு தேவை சத்தூட்டம் மிகுந்த உணவே அன்றி ஒப்பனை செய்யும் கிறீம்கள் அல்ல என்பதை தமிழர் கூட்டமைப்பு ஆணித்தரமாக வெளிப்படுத்தவேண்டும். அவர்களுக்கு இன்றைய காலகட்டத்தில் மிகப்பாரியபொறுப்பு இருக்கிறது அதனை அவர்கள் உரிய முறையில் செய்து இனிவரும் காலங்களைத்தன்னும் வளமாக்கவேண்டும்.

போர்குற்றம் நிருபிக்க படும் இடத்து பாரிய வெள்ளிச்சம் உருவாகும்.

காரணம் இதில் இடுபட்டவர்கள் யார் என்பதுதான். ஒரு நாட்டின் அரசு அதன் இராணுவம் என ஒட்டுமொத்த சிங்களமுமே தமிழர்களை அழித்தார்கள் என்பது எளிதாக நிருபிக்க படும் இடத்து கடந்த முப்பது வருடமாக நாம் அனுபவித்த துன்பத்தை வெளியுலகிற்கு ஆதரங்களுடன் கொண்டு வந்து நிருபிக்க முடியும். அதன் ஊடாகவே எமது வாழ்விற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு நிரந்தர தீர்வை வலியுறுத்தமுடியும். தவிர யாராவது ஒருவர் தமிழர்களுக்கு ஒரு தீர்வை கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் சிங்களத்தை அடிபணிய வைக்க இருக்கும் ஒரே மூலமும் இதுதான். சிங்களம் என்பது ஒரு சுதந்திர அரசு அதை எளிதாக புறம் தள்ளி தமிழருக்கு ஒரு தீர்வை ஒரு மூன்றாம் தரப்பால் முன்வைக்க முடியாது. அக போர்குற்ற விசாரணையே இதற்கு ஒரு வாசல் கதவாக இருக்க முடியும்.

ஆனல் துரதிர்ஷ்ட வசமாக இதில் ஒன்றுமே அவதட்கு இல்லை.

தற்போதைய பொருளாதார வீழ்ச்சி அதனூடு புறப்பட்டுள்ள சீன பூதம் இவைகளே தற்போதைய சினிமா காட்சிகளின் தயரிப்பளர்களகவும் டையரேக்டோர்களகவும் இருக்கின்றன என்பதே உண்மை. போர்குற்றம் என்று கோட்டுக்கு போய் சிங்களத்தை மட்டும் தண்டிக்க முடியாது இதை புரிந்து கொள்பவர்களாக உயர்மட்ட கீழ்மட்ட தமிழர்கள் இல்லை. ஒருவேளை மகிந்தவை சர்வதேச கோட்டில் நிறுத்தினால் இந்தியாவும் கூண்டில் ஏறவேண்டும் என்பதை சுலபமாக மறந்துவிடுவதே அதற்கான காரணம். இந்தியாவின் குற்றங்களையும் கொண்டுவந்தால் மஹிந்தவிட்கான தண்டனை குறைய வாய்ப்பிருக்கும்போது .............. அதை மறைத்து தான் மட்டும் தண்டனையை பெறக்கூடிய நல்லவனாக மஹிந்த இல்லை?

ஆக தற்போதைய சுழலில் இந்திய இதை விரும்புமா?

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது இருப்புக்கே அல்லாடும் நேரத்தில் தமிழருடைய விடிவு? இது சாத்தியமா? சம்மந்தன் போன்றவர்கள் தமது இருப்பை இழந்து தமிழருக்காக போராடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உங்களிடம் இருந்தால் உங்களை விட அதி சிறந்த ஏமாளி யாரும் இல்லை.

சம்மந்தன் போன்றவர்கள் கருணாநிதியிலும் கீழானவர்கள் (ஒரு வேளை மேலாக இருந்தாலும் அவர்களால் ஒன்றும் புடுங்க முடியாது என்பதும் உண்மை) எதாவது மேடை ஏறி நாடகம் போட்டு தமது இருப்பை உறுதிசெய்ய தெரிந்தவர்கள். நல்ல அரசியல் நடிகர்கள். அரசியல் தீர்வு மூலமே நாம் ஒரு விடுதலையை அடைய முடியும் என்பதை புலிகள் பலமுறை சொன்னார்கள் யாருக்கும் விளங்கவில்லை. திரும்ப திரும்ப அரசியல் தளங்களை அமைத்தார்கள் இந்தியாவிற்கு அது தெரிந்துதான் தொடர்ந்தும் எல்லாவற்றையும் அழித்தார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பை கூட ஒரு தொலைநோக்கு பர்வையீலேயே உருவாக்கினார்கள் ஆனல் தளம் வேறுவிதமாக அமைந்துவிட்டது இளையோரிடம் அதன் தலைமை சில நாட்களில் சென்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு புலிகளிடம் இருந்தது................. இனி சம்மந்தன் செத்தாலும் சாகவில்லை என்று அவரது உடலை வைத்தே இந்தியா அரசியல் செய்யும்.

சீனாவை புறம் தள்ள அமெரிக்க எல்லா இடமும் ஓடுகின்றது ........... அதன் ஒரு அங்கமே தற்போதைய ரி என் ஏ சந்திப்பு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இலவச லாப்டாப் கம்பியுட்டர்களை மாணவருக்கு கொடுப்பதாக அறிவித்தார் அதன் வேலை திட்டம் இப்போது தொடங்கி உள்ளது. அதில் இலவச ஒபரேடிங் சிஸ்டமான லீநேக்சை பதிப்பதாக இருந்தது. அதை மறித்து மைக்ரோசொப்ட்வரை (விண்டோஸ்) நிறுவுவதற்கான பேச்சுக்கு ஆகவே ஹிலரி ஜெயலலிதாவை சந்தித்தார். அது கைகூடி இப்போது அந்த கொம்பியுட்டர்கள் விண்டோசுடனேயே வெளிவர இருக்கின்றது. இந்திய கொடுத்த நிகழ்ச்சி நிரலின் பகுதியாகவே த தே கூ வை அமெரிக்கா அழைத்துள்ளது இதன் உள்நோக்கமே போர்குற்ற விசாரணையை கைவிடுமாறு நேரடியாக கேட்காது மறைமுகமாக வேறு நாடகம் ஒன்றில் ஈடுபடுத்தினால் அது மறக்க பட்டுவிடும் என்பதே அதன் நோக்கம்.

போர்குற்ற விசாரணை முன்னெடுக்க படுவது என்பது ஒவ்வரு தமிழனுடைய உழைப்பில் இருக்கிறது எங்களது அயராத பரப்புரை ஒன்றுதான் ஒரே வழி. அண்ணன் அகூதா போன்று நாம் ஒவருவரும் உழைத்தால் அது நிச்ச்ச்சயம் சாத்தியம்.

தவிர தா தே கூ அவர்கள் பாவபட்டவர்கள் அவர்களால் இப்படியான மேடை ஏற முடியுமே தவிர வேறு எதை செய்யமுடியும்? சும்மா எதிர்பார்புகளை அள்ளி கொட்டிவிட்டு அவர்களை திட்டி தீர்ப்பதில் என்ன இருக்க போகின்றது. அரசியல் ரீதியாக முன்னெடுப்புகளை செய்யும் நிலையில் தற்போதைய உலகு இல்லை .............. சிங்களவனின் அதிர்ஷ்டம் போற்குற்றத்தில் இந்த்யாவையும் கூட்டி வைத்துள்ளான். இந்தியாவில் ஒரு அரசியல் மாற்றம் வரும்வரையில் காத்திருப்பதை தவிர வேறு வழி இப்போது இலை. இருக்கும் ஒரே வழி பரப்புரை...............

ஒரு மூன்றாம் தரப்பால் முன்வைக்க முடியாது. அக போர்குற்ற விசாரணையே இதற்கு ஒரு வாசல் கதவாக இருக்க முடியும்.

மருதங்கேணி இது நிதர்சனமான ஒரு பந்தி.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றத்தை நிரூபித்துவிட்டால் மகிந்தர் கூட்டம் மட்டும் பாதிக்கப்படும். பிறகு சிங்களத்துடன் சேர்ந்து வாழச் சொல்லுவார்கள் என்பது வல்வை அக்காவின் சந்தேகமாக இருக்கிறது. :rolleyes:

போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதன் விளைவுகள் தனிமனிதர்கள் சார்ந்ததன்று. ஜனநாயக நெறிமுறையில் அமைந்த அரசு ஒன்றினால் இவ்வளவு துயரங்களைத் தனது எல்லைக்குட்பட்ட மக்களுக்கு இழைக்க முடியுமென்றால், இது மீண்டும் இன்னுமொருமுறை நிகழ்வதைத் தடுக்க முடியாது என்பதே இதன் உட்பொருளாகும். அதாவது இலங்கையின் சட்டவரைவினுள் தமிழர்களுக்குப் பாதுகாப்பில்லை என்பதே இதன்மூலம் உணர்த்தப்படும் செய்தியாகும். :rolleyes:

தற்போதைய நிலையில் மக்கள் ஆட்சியை விட சிறந்ததொரு நிர்வாக அலகு உலக நாடுகளிடம் இல்லை. அந்த அலகே தோற்றதாக நிறுவப்படும்போது விளைவுகள் சிங்களத்திற்குப் பாரதூரமானதாக அமையும். :rolleyes:

போர்குற்றத்துடன் ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளையும் இணைத்து இரண்டு பயங்கரவாதக் கும்பல்களையும் தப்பவைக்கலாம் என சிலரது நப்பாசை தெரிகிறது.

தற்போது தமிழர் முதன்மைக் குற்றவாளியான சிங்கள அரச பயன்கரவவாதிகளின் மீதே போர்க்குற்றத்தை சாட்டுவதில் முனைப்பாக உள்ளனர். இதை எப்போதும் கைவிடார்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டால் தமிழர்களின் தார்மீக உரிமைகளை சர்வதேசம் அங்கீகரித்ததாகிவிடும். எனவேதான் போர்க்குற்றத்தை விடுத்து சிங்களத்துடன் ஓர் உடன்பாட்டிற்கு வந்து தமிழர்களுக்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வல்லரசுகள் முனைகின்றன.

வல்லரசுகள் நினைப்பதுதான் நியாயம், தர்மம் என்ற இந்தக் காலத்தில் ஒரு வல்லரசு நாட்டின் ஆதரவோ, பின்பலமோ இல்லாதவரையில் தமிழர்களால் போர்க்குற்றத்தை நிரூபிக்கப்படும் நடவடிக்கைகள் பலன் தருமா என்பது சந்தேகமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.