Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இந்துவின் சங்கமம் பிரமாண்டமான இசைத்தொகுப்பு

Featured Replies

சிறு பிள்ளை வேளாண்மை வீடு வராது என்பார்கள். அந்த காலம் இன்று மலையேறி விட்டது. இங்கு சிறுவர்களின் படைப்பாற்றலின் வெளிப்பாடாக அவர்களின் அடையாளமாக வெளிவந்துள்ளது சங்கமம் இசைத்தொகுப்பு.

sangkamam1.jpg

சாதனையாளர்களை, திறமையாளர்களை சிறுவயதில் இருந்தே உருவாக்குவது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. இந்தக் கல்லூரியின் சிறுவர் செயற்பாட்டு கழகத்தின் வெளியீடான சங்கமம் இசைத்தொகுப்பு நேற்றைய தினம் கல்லூரியின் குமார சுவாமி மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

சங்கமம் என்ற பெயருக்கிணங்க கல்லூரியின் இந்தக் கால மாணவர்கள் மட்டுமன்றி பழைய மாணவர்கள், ஆசிரியர்களும் இந்தப் படைப்பில் ஒன்றாகச் சங்கமித்துள்ளனர். மொத்தமாகப் பத்துப் பாடல்களைக் கொண்டுள்ள இவ் இசைத்தொகுப்பு கல்லூரி வாழ்க்கை, சிறுவர்களின் திறமைகள், கல்வி, நட்பு,வீரம் எனப் பல்சுவை அம்சங்களைக் கருப்பொருளாகக் கொண்டு காத்திரமான படைப்பாக உருவாகியுள்ளது.

யாழ். மண்ணில் இருந்து வெளியாகும் இந்த இசைத்தொகுப்பின் அனைத்துப் பாடல்களுக்கும் இந்துவின் மைந்தன் சத்தியன் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

யாழ் .இந்துவின் கல்வித் தெய்வம், காவல் தெய்வம் ஞானவைரவ பெருமான். அவருடைய அருட்கடாட்சத்தால் இன்று சாதனை படைத்துள்ளோர் பலர். ஞானவைரவப் பெருமானின் அருளால் இந்துவின் மைந்தர்கள் எங்கு சென்றாலும் சாதிப்பார்கள் என்ற நம்பிக்கை இன்றும் பலரிடம் உண்டு. அதுவே உண்மையும் கூட. அந்த நம்பிக்கைக்கிணங்க மாணவர்களின் படைப்பான சங்கமமும் ஞானவைரவ பெரு மானை போற்றும் வகையில் பாடல் ஒன்றை முதல்பாடலாக வெளியிடுகின்றது. ஆசிரியர் நா.விமல நாதன் இயற்றிய பாடலைப் பழைய மாணவன் குகானந்தன் பாடியுள்ளார்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பற்றியும் அவர்களது குறும்புத்தனம், புத்திசாலித்தனம் என்பனவற்றை சிறப்பாக வெளிப்படுத்திய பாடலாக சிறுவர்கள் நாளைய எதிர்காலம்.. என்ற பாடல் அமைகின்றது. இந்தப் பாடலைத் தரம் 8 மாணவன் திவாகரன் எழுதியுள்ளார். தரம் 10 மாணவன் மயுரேசன் பாடியுள்ளார். விளையும் பயிர்களை முளையிலேயே கண்டுவிடலாம்.

நீங்காத நீண்ட புகழுடன் விளங்குவது இந்துக்கல்லூரி. கல்லூரியின் புகழை வெளிப்படுத்தும் பாடலாக அமைந்த எங்கள் படை இது இந்து படை.. பாடலைப் பழைய மாணவன் மதுசன் எழுதியுள்ளார். இதனை வீரம் தெறிக்கும் வண்ணம் ஜெயடினேஸ் மற்றும் சத்தியன் ஆகியோர் பாடியுள்ளனர்.

செம்மையான மொழியான நம் அடையாளமான தமிழ் மொழியைப் போற்றும் வண்ணம் மற்றுமொரு தமிழ்மொழி வாழ்த்துப்பாடலாக அமைந்துள்ள பாட லைப் பழைய மாணவன் பாலசண்முகன் எழுதியுள்ளார். இந்தப் பாடலைப் பாடியுள்ளார் கலாநிதி தர்ஸனன் அவர்கள். ஆசிரியர்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகள். அவ் ஆசிரியர்களின் பெருமையையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிக்கொணரும் பாடலான எனக்கொரு ஆசிரியர் வேண்டும்.. பாடலை நா.விமலநாதன் எழுத பாடலை பாடியிருப்போர் மாணவர்களான வத்சாங்கிர சர்மா, சுஜீவன், மற்றும் டினேசன் குழுவினராகும்.

பாரதி புதுமைகளினை விரும்ப, தற்போதைய மாணவர்களும் புதுமைகள் படைப்போரே. இவர்கள் இருவரும் ஒரே காலத்தில் இருந்தால் எப்படியிருக்கும் என்ற நோக்கில் மாணவன் மதீசன் அவர்களினால் எழுதப்பட்டு பாடலை ஜெகதீஸூடன் இணைந்து பாடியுள்ளார்.

இந்துக் கல்லூரியின் ஊக்கப்பாடலாக அமைந்துள்ள பாடல் பழைய மாணவன் ஒருவனின் எண்ணங்களில் உதித்த வார்த்தைக் கோர்வைகளினால் அழகேற்றப் பட்டுள்ளது. பழைய மாணவனும் ஆசிரியருமான நிஸாந்தன் அவர்களினால் எழுதப்பட்ட இந்தப் பாடலை விஸ்ணு பாடியுள்ளார்.

நட்பு வாழ்க்கையில் முக்கிய இடம் வகிப்பது, அதிலும் பாடசாலை கால நட்பு ரம்மியமானது. இந்த நட்பின் பெருமையை உணர்த்தும் நட்பெனும் சொந்தம் வந்ததடா.. என்ற பாடலைத் தமது நண்பர்களுக்காக அர்ப்பணித்துள்ளார் இந்த இசைத்தொகுப்பின் ஊடாக கவிஞராக அவதாரம் எடுக்கும் மாணவன் ஜனோதீபன்.

பாடலை அழகுற பாடி பெருமை சேர்த்துள்ளனர் மாணவர்களான பிரசாந்தன் மற்றும் தர்சனன். கல்லூரியின் துடுப்பாட்ட அணி சாதிப்பதற்கென படைக்கப்பட்ட மற்றொரு அவதாரம். இவர்களுக் கென உருவாக்கப்பட்ட பாடல் ஏற்கனவே வெளிவந்த போதிலும் மீள் வடிவத்துடன் போல் வந்தால் அடிடா.. பாடலை இளசுகள் இசை அணியினர் இயற்ற ஜெகதீஸ் மற்றும் சத்தியன் ஆகியோர் பாடியுள்ளனர்.

வாழ்க்கையின் ஆரம்ப பகுதியின் பெரும்பாகத்தை எடுத்துக்கொள்வது பள்ளிப்பருவம். இந்த பருவம் மீண்டும் வருமா? மீண்டும் வராதா? என ஏங்குவோர் பலர். அவர்களுக்கான ஆறுதல் பாடலாகவும் அவர்கள் அனைவரினதும் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிக்கும் மீண்டும் வருமா..? என்ற பாடலை மாணவன் மதீசன் எழுதிப் பாடியுள்ளார்.

இசைக்கும் படைப்பாற்றலுக்கும் வயது வரையறை இல்லை என்பதை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளனர் யாழ் இந்துவின் மைந்தர்கள். பள்ளிப் பருவத்திலேயே மிகவும் பிரமாண்டமான இசைத்தொகுப்பை வெளியிட்டுள்ள இவர்கள் எதிர்காலத்தில் இசைத்துறையில் சாதிக்கவும் யாழ் மண்ணின் பெருமையை வெளிப்படுத்தும் பல பாடல்களை வெளியிடவும் தமிழர்கள் சார்பில் வாழ்த்துகளைக் கூறி நிற்போம்.

இவர்களை வளர்த்தெடுக்கும் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சமூகத்துக்கு எமது நன்றிகளை நெஞ்சார தெரிவிக்கின்றோம். சுற்றும் உலகம் எமக்காக சுற்றும்.. சரித்திரம் நாளை நம் சாதனை பேசும்.

http://nilamuttram.com/?p=3398

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் படை இது இந்து படை

எங்கள் படை தமிழ் படை என்று எழுதியிருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும்.....மானிப்பாய் இந்துவின் பழைய மாணவனின் வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்

பழைய மாணவன் என்ற வகையில் பெருமையடைகிறேன்

தகவலுக்கு நன்றி கோமகன்.

நானும் இந்து பழைய மாணவன் தான் ஈழப்பிரியன் பொ னா சா னா வின்ர வளப்பு 83 ஏல் பிரிவு :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

இளம் பராயத்தில் எமக்குள் இருக்கும் பல எண்ணங்களுக்கு செயற்பாட்டு வடிவம் கொடுக்க முடியாத சூழலால்.. அவை உருப்பெறாமல்.. அழிந்து போவதே எமது சமூகத்தில் அதிகம். சிறுவர்கள் என்பதற்காக பெரியவர்களால்.. புறக்கணிக்கப்படும் கொடுமை எமது சமூகத்தில் இன்றும் உள்ளது. ஆனால்.. யாழ் இந்து சிறுவர் அமைப்பு அதை மாற்றியமைத்து.. ஒரு புதிய சரிதம் எழுதப் புறப்பட்டிருப்பது.. பாராட்டத்தக்க முயற்சி.

சிறுவயதில்.. யாழ் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வரும் அண்ணாமாரோடு.. சுற்றித்திருந்து அரட்டையோடு.. விவாதங்களில் எல்லாம் ஈடுபட்டிருக்கிறேன். ஒரு சின்னப் பொடியன் என்று பாராமல்.. என்னையும் எனது கருத்துக்களையும் அவர்கள் கேட்பதும்.. உற்சாகமூட்டுவதும்.. நிகழ்ந்திருக்கிறது. அப்படியான இளைஞர் படை இதனை இன்றும் ஊக்குவிக்கும்.. சிறுவர்களுக்குள்ளும் குழந்தைகளுக்குள்ளும் பல திறமைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றை சரியான வழிகாட்டலோடு.. வழிமுறைகளோடு வெளிக்கொணர்ந்து ஊக்குவித்தால் நாளை அவர்கள் இன்னும் சிறந்து பிரகாசிக்கவும்.. புதிய புதிய சிந்தனைகளை.. செயல்வடிவமாக்கவும்.. அதனால் சமூகம்.. பயனும் முன்னேற்றம் காணவும் வழி பிறக்கும்..!

இந்தப் பயன்மிக்க.. நல்ல முயற்சியில் இறங்கி இருக்கும்.. எங்கள் யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு அதே அன்னையின் மைந்தனாக எனது வாழ்த்துக்களும்.. உரித்தாகட்டும்.உங்கள் முயற்சி வெற்றி பெற்று அது தலைமுறைகள் பல தாண்டி தொடரவும் வேண்டுகிறேன். :icon_idea:

செய்திப் பகிர்விற்கு நன்றி கோமகன் அண்ணா. :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி கோமகன்

மானிப்பாய் இந்துவின் பழைய மாணவனின் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வானளாவிய இலுப்பைத் தருக்களின் கீழ் இருந்து

இன்னருளாசி நல்கும் ஞான வைரவரின்

அருட் கடாட்சத்திலும் ஆசியிலும் சிறந்தோங்கும்

யாழ் இந்துவின் பழைய மாணவனாகிய

அடியேனும் பெருமை கொள்கின்றேன்!

இணைப்புக்கு நன்றி கோமகன்!!

  • தொடங்கியவர்

அப்போ யாழை இந்துவின் மைந்தர்களா கட்டி ஆள்கின்றனர் :D :D :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவின் மாணவர்களுக்குப் பழைய மாணவன் எனது பாராட்டுகள்.

உங்கள் ஆக்கங்கள் இன்னும் பல வெளிவர வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் இந்து ..புத்தன் உடையார் நான் இருக்கிறம் கோமகன் கவனம். :icon_idea:

நன்றிகள் கோமகன்.யாழ் இந்து பேஸ் புக் பக்கம் தினமும் கிரிக்கெட்,பாஸ்கெட்பால்,அன்றாட நிகழ்வுகள் பற்றி அறிய தந்துகொண்டிருக்கின்றது .

மானிப்பாய் இந்து மதிலுடன் இருந்த எனது மனைவியின் மச்சாள்மாரை யாரும் எட்டி பார்த்த சிலமன்?

  • கருத்துக்கள உறவுகள்

<p>

மானிப்பாய் இந்து மதிலுடன் இருந்த எனது மனைவியின் மச்சாள்மாரை யாரும் எட்டி பார்த்த சிலமன்?

சும்மா பம்பலா பார்த்திருப்போம் . காதல் கத்தரிக்காய் என்ற நோக்கில் நான் நோக்கவில்லை//....கி..கி
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துவின் மாணவர்களுக்கு எனது பாராட்டுக்கள் .நானும் யாழ் இந்துதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழிய யாழ்நகர் இந்துக் கல்லூரி

வையகம் புகழ்ந்திட என்றும்!

  • கருத்துக்கள உறவுகள்

<p>சும்மா பம்பலா பார்த்திருப்போம் . காதல் கத்தரிக்காய் என்ற நோக்கில் நான் நோக்கவில்லை//....கி..கி

என்ன புத்தன் யாரும் மதிலுடன் இருக்கு வீடுகளை பார்த்திருப்பார்களா MLC ல் பல விதமான காய்கள் இருக்கும் போது, எத்தனை மாதங்கள் எடுத்தம் MLC & MHC இடையில் ஒரு நீள பங்கர் வெட்ட...

தகவலுக்கு நன்றி கோமகன். நானும் ஒரு மைந்தன் தான்! பலர் இங்கே இருக்கிறோம்.

  • 1 month later...

உதவி தேவை - யாரிடமாவது யாழ் இந்து மரியதாஸ் மாஸ்ரரின் புகைப்படம் உள்ளதா. எனது நண்பன் ஒரு கட்டுரை எழுதுகிறார், அதற்கு உதவியாக இருக்கும் என்று கேட்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உதவி தேவை - யாரிடமாவது யாழ் இந்து மரியதாஸ் மாஸ்ரரின் புகைப்படம் உள்ளதா. எனது நண்பன் ஒரு கட்டுரை எழுதுகிறார், அதற்கு உதவியாக இருக்கும் என்று கேட்கிறேன்.

மானிப்பாயை சேர்ந்த கணக்குப் பாடம் எடுத்தவரா ஈஸ்.

இவர் யாழ் இந்துவில் பொலிஸ் கடேற் பயிற்சி ஆசிரியராகவும் இருந்தவர்.

சிலவேளை அவ்வாண்டுகளில் எடுத்த யாழ் இந்துவின் குழுப் படங்களில் இருக்கலாம்.

இணையத்தில் இருந்தால்... தேடிப் பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி கோமகன்

பம்பலப்பிட்டிய இந்துவின் பழைய மாணவனின் வாழ்த்துக்கள்

மானிப்பாயை சேர்ந்த கணக்குப் பாடம் எடுத்தவரா ஈஸ்.

இவர் யாழ் இந்துவில் பொலிஸ் கடேற் பயிற்சி ஆசிரியராகவும் இருந்தவர்.

சிலவேளை அவ்வாண்டுகளில் எடுத்த யாழ் இந்துவின் குழுப் படங்களில் இருக்கலாம்.

இணையத்தில் இருந்தால்... தேடிப் பார்க்கின்றேன்.

அவரே தான். அவரால் தான் இன்று பலரும் வாழ்ந்து (வேலை வாய்ப்பு - அடிப்படை அறிவு) கொண்டிருக்கிறோம்.

கிடைத்தால் நல்லது. நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

mariadas.jpgUploaded with ImageShack.usஇவர் தான் மரியதாஸ் ஆசிரியர் என் நினைக்கின்றேன்

இறுதியாக 84 இல் நேரில் பார்த்தது

அருகில் இருப்பவர் ஆசிரியர் சந்தியாப்பிள்ளை

ஆசிரியர் மரியதாஸ் அவர்கள் பாடசாலைக்குப் பிந்தி வருபவர்களுக்கு

தண்டனை கொடுப்பதற்காக வாசலில் காத்திருப்பார்.

அவரிடம் அடி வாங்கியவர்களில் நானும் ஒருவன் :D</p>

Edited by வாத்தியார்

மரியதாசின் படம் எடுத்து இணைத்து விடுகின்றேன்.

மேலே படத்தில் உள்ளது சந்தியாப்பிள்ளை மாஸ்டரும் மரியதாஸும் , இவர்ஆசிரியரல்ல எங்கள் பட்சில் A/L இல் வந்து சேர்ந்தவர் .கலைப்பீடம் .இப்போ லண்டனில் இருக்கின்றார் .

சந்தியாப்பிள்ளை பிள்ளை மாஸ்டர் இங்குதான் இருக்கின்றார் .பாட்டி போடும் எமது கூட்டத்தில் அவரும் ஒருவர் .பல பழைய கதைகள் சொல்லுவார் ,இப்போதும் அதே இளமையுடன் இருக்கின்றார் .

மரியதாஸ் மாஸ்டர் என்பவர் லண்டனில் தமிழ் பாடசாலைகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார்.

  • கருத்துக்கள உறவுகள்

மரியதாசின் படம் எடுத்து இணைத்து விடுகின்றேன்.

மேலே படத்தில் உள்ளது சந்தியாப்பிள்ளை மாஸ்டரும் மரியதாஸும் , இவர்ஆசிரியரல்ல எங்கள் பட்சில் A/L இல் வந்து சேர்ந்தவர் .கலைப்பீடம் .இப்போ லண்டனில் இருக்கின்றார் .

சந்தியாப்பிள்ளை பிள்ளை மாஸ்டர் இங்குதான் இருக்கின்றார் .பாட்டி போடும் எமது கூட்டத்தில் அவரும் ஒருவர் .பல பழைய கதைகள் சொல்லுவார் ,இப்போதும் அதே இளமையுடன் இருக்கின்றார் .

இவர் சந்தியாபிள்ளை ஆசிரியரை விட உயரமாக இருக்கின்றார் என அப்போதே யோசித்தேன் அர்ஜுன் அண்ணா படம் இருந்தால்இணைத்து விடுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மரியதாசின் படம் எடுத்து இணைத்து விடுகின்றேன்.

மேலே படத்தில் உள்ளது சந்தியாப்பிள்ளை மாஸ்டரும் மரியதாஸும் , இவர்ஆசிரியரல்ல எங்கள் பட்சில் A/L இல் வந்து சேர்ந்தவர் .கலைப்பீடம் .இப்போ லண்டனில் இருக்கின்றார் .

சந்தியாப்பிள்ளை பிள்ளை மாஸ்டர் இங்குதான் இருக்கின்றார் .பாட்டி போடும் எமது கூட்டத்தில் அவரும் ஒருவர் .பல பழைய கதைகள் சொல்லுவார் ,இப்போதும் அதே இளமையுடன் இருக்கின்றார் .

அர்ஜூன் மரியதாஸ் மாஸ்ரரின் படம் இணைப்பதாக சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது.

அதே நேரம்... சந்தியாப்பிள்ளை மாஸ்ரரும் தனது படத்தை, இங்கு, இணைக்க அனுமதித்தால்... இணைத்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆசிரியர் மரியதாஸ் அவர்கள் பாடசாலைக்குப் பிந்தி வருபவர்களுக்கு

தண்டனை கொடுப்பதற்காக வாசலில் காத்திருப்பார்.

அவரிடம் அடி வாங்கியவர்களில் நானும் ஒருவன் :D

வாத்தியாருக்கே....வாத்தியார் அடித்துள்ள கொடுமையை இப்போ தான்.. பாக்கிறன். :D:lol:

மரியதாஸ் மாஸ்டர் என்பவர் லண்டனில் தமிழ் பாடசாலைகளில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வார்.

தப்பிலி, நீங்கள் சொல்பவர் வேறு ஆளாக இருக்கலாம் என்று நினைக்கின்றேன்.

இப்போது.... யாழ் இந்துவின் மரியதாஸ் மாஸ்ரருக்கு 75 வயது இருக்கும் என்பது எனது கணிப்பு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.