Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லூசியம் சிவன் கோயிலும் அக்கிரமங்களும்

Featured Replies

முக்கியமாக லண்டன் சிவன் கோவிலில் நடப்பவைகள்பற்றி எழுதவேண்டும் என்று ஜோசித்துக்கொண்டு இருந்தேன்.... நேரமும் இல்லை கொஞ்சம் பயமாகவும்தான் உள்ளது... எவனாவது இருட்டு அடி கொடுக்கிறானோ தெரியவில்லை ஆனாலும் பயந்தால் ஒன்றுமே பண்ண முடியாது... சிலதை சொல்லித்தான் ஆகவேண்டும்.....

கன காலமாக சிவன் கோவில் சின்ன இடத்தில் இருந்து பெரிய கோவிலாக கட்டி அமைத்தது எல்லோருக்கும் தெரிந்த விடயம் ... கோவில் கட்டும்போது அய்யர் தேவராம் பாடுகிறது மாதிரி ஓவ்வொரு நாளும் பாட மக்களால் உருவாக்கப்பட்டதுதான் சிவன் கோவில்... பணம் இருந்த ஒரு சிலர் கூடுதலாக காசு போட்டிருக்கலாம்... ஒரு சிலர் தனி தனியாக உள் வீதி எடுத்து ஓவ்வொரு பக்கமாக கட்டினார்கள்....

கோவில் கட்டி கும்பாவிசேகம் நடந்தது இந்த வருடம்... சின்னதாக இருந்த கோவிலில் ஒரு பிரச்சனைகளும் வரவில்லை... இப்போது புதிசாக கட்டிய கோவிலுக்கு தினமும் ஒரு பிரச்சனை.... நம்மவர்களும் சும்மா சொல்லக்கூடாது சத்தம்போடாமல் இருப்பவர்களில் வல்லவர்கள்... பக்கத்தில் இருந்து பேசினால் பக்கத்துக்கு வீட்டுக்காரனுக்கு கூட கேட்காது பாருங்கோ...இப்படித்தான் பலர் சொல்லிக்கொண்டு திரிவார்கள் ஆனால் உண்மை என்ன என்றால் கோவிலுக்கு வரும் பலர் சாமி கும்பிட வருவதில்லை.... தங்கள் சொந்தக்கதை அப்புறம் புடவை எங்கே எடுத்தாய் நகை எங்கே வாங்கினாய்... என்று பொம்பிளைகள் ஒரு பக்கத்தால் பேச ஆம்பிளைகள் ஒன்றும் அமைதியான பேர் வழிகள் இல்லை.... டேய் மச்சான் அங்கே பாருடா பெட்டை போறாள்( மனைவி பக்கத்தில் இருந்தாலும்) மற்ற பெட்டையளைப்பற்றி பேசவில்லையென்றால் எப்படி.... நம்மவர்கள் போட்ட சத்ததில் பக்கத்தில் இருப்பவன் சும்மா இருப்பானோ அவன் வெள்ளைக்காரன் கவுன்சிலிடம் போயிவிட்டான் இப்போது கோவில் மூடவேண்டும் 8மணிக்கு முதல்( ஒரு சில நாட்களை தவிர)

உண்மையிலே இந்த கோவிலை உருவாக்கியவர் வேறு ஒருவர்... அவர் கோவிலை பொது சொத்தாக்கவேண்டும் என்று கேட்க அவர் கோவிலை விட்டு துரத்தியடிக்கபட்டுவிட்டார்.... கும்பாவிசேகம் நடந்தபோதும் இந்த அய்யர்மார் எல்லாம் சேர்ந்து அவரை கூப்பிடவில்லை...(ஒரு சில அய்யர் ரொம்ப நல்லவர்கள் சிவன் கோவிலில்... முக்கியமாக ஒருவரை அங்கே எல்லோருக்கும் பிடிக்கும்... கோவிலுக்கு உள்ளே போகும்போதே வாம்மா என்றுதான் கூப்பிடுவார் பண்பான பேச்சு.. அவரைதான் லூசியத்தில் இருக்கும் சனம் எல்லோரும் அவர்கள் வீட்டு விசேங்களுக்கு கூப்பிடுவது...இதனாலே மற்ற அய்யர்மாருக்கு அவரை பிடிப்பதில்லை) அவரும் எப்போது துரத்தியடிக்கபடுகிறாரோ தெரியாது....(எல்லோரும் நினைப்பதில்லை அய்யர் எனக்கு வேண்டியவர் என்று சத்தியமாக எனக்கு யார் என்று தெரியாது)..... சரி கோவிலை உருவாக்கியவர் கோவில் கும்பாவிசேகத்துக்கு வந்தராம் வந்து ஒரு ஓரமாக நின்றுவிட்டு போயிருக்கிறார்... அவர் ஒரு தொடர் கதையாக சிவன் கோவிலைப்பற்றி புதினம் பேப்பரம் அதில் எழுதுகிறார் என்று கேள்விப்பட்டேன் நானும் படிக்கவில்லை ....அதை படித்தவர்கள் இந்த தலைப்பில் இணையுங்கள்...

கோவிலை பார்க்கும்போது ஊர் கோவில்மாதிரி இருக்கும்... சந்தோசமாகவும் இருக்கும்.... ஆனால் ஏனோ போகவே பிடிப்பதில்லை... நம்மவர்கள் நடந்து கொள்ளும் விதம்தான் இதுக்கு காரணம்....

கெளரி விரதம் அப்புறம் கந்த சஸ்டி காலங்களில் நம்மவர்கள் நடத்தும் பூஜைகளும் நம்மவர்கள் விழுந்து அடித்து மற்றவனை இடித்து தள்ளும் விதமும்தான்......

இந்த வருடம் கந்த சஸ்டி விரத காலத்தில் நடந்த விடயங்கள் கவலைகொள்ள வைத்தது... ஒவ்வொரு நாளும் ஒவ்வொருதர் பூஜை நடக்கும்...ஆனால் பூஜை பண்ணுபவர்கள் தங்கள் சுயதம்மட்டம் பண்ணுவதுக்காவே பண்ணுகிறார்கள் போல் உள்ளது(எல்லோருமில்லை ஒரு சிலர் விதி விலக்கு).... இந்த விரத காலத்தில் என்ன வேலை இருந்தாலும் நானும் ஓவ்வொரு நாளும் கோவிலுக்கு போனேன்.... அதுக்கு இரண்டு காரணம் இருந்தது( ஒன்று கந்த சஸ்டி கவசம் பாடுகிறவர் அவர் பாடும்போது மனதுக்கு கேட்பதற்க்கும் சந்தோசமாகவும் இருக்கும்) சரி என் கதையை விடுவோம் விசயத்துக்கு வருவோம்...

இந்த வருடம் பூஜை பண்ணியவர்கள் பலர் பூஜைதான் பண்ணினார்களா என்று தெரியவில்லை காரணம்.... கந்த சஸ்டி காலத்தில் பூஜை முடியும்போது பஞ்சாமிதம் குடுப்பார்கள்... பஞ்சாமிர்தம் மட்டும் இல்லை சாப்பாடும்தான்..வாசலில் இருந்த பஞ்சாமிர்தம் கொடுப்பவர் சொன்னார்(இவர் கோவிலில் முக்கிய உறுப்பினர்).... நான் பூஜை முடிந்து வாசலுக்கு வரும்போது அவர் சொன்னது என் காதில் விழுந்தது....ஒரு குடும்பத்துக்கு ஒன்றுதான் என்றார்.... எனக்கு ஒன்றும் புரியவில்லை...அப்போதுதான் எட்டி பார்த்தேன் அழுதுகொண்டு போனது என் நண்பி... பின்னாடி நான் வரும்போது என்னிடம் பஞ்சாமிர்தம் கொடுத்தார்.... நான் வாங்கிய நேரம் ஒரு சின்ன பிள்ளை கை நீட்டியது( குழந்தையும் தெய்வமும் ஒன்று என்று சொல்லுவார்கள்..எல்லாம் வாய் வீரம்) அவர் குழந்தையிடம் சொன்ன பதில் எனக்கு ஏன்டா கோவிலுக்கு வந்தன் என்றது மாதிரி சென்று விட்டது( அவர் சொன்ன பதில் குழந்தைக்கு புரிந்து இருக்குமா என்று தெரியவில்லை என் நண்பியிடம் என்ன சொன்னாரோ அதுதான் சொன்னார் உங்கள் அம்மாவை கூட்டி வா ஒரு குடும்பத்துக்கு ஒன்று என்றார்) குழந்தை ஆசையாக நீட்டிய கை தன்னால அடங்கிப்போவதையும் ஏமாற்றத்துடன் திரும்புவதையும் பார்த்த என் மனசு கேட்கவில்லை என் கையில் இருந்து பஞ்சாமிர்தம் அதைகொடுத்து விட்டு என் நண்பியை தேடி போனேன் என் நண்பி ஒரே அழுகை ( பெடியங்களுக்கு முன்னாலவும் இவ்வளவு ஆட்களுக்கு முன்னாடி அவமானப்படுத்திவிட்டார் என்று அழுதாள்...) நான் அவளிடம் சொன்னேன் ஒரு குழந்தையிடம் இப்படி நடந்து கொள்ளும்பவர் உன்னிடம் இப்படி நடந்து கொண்டதில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமே இல்லை என்றேன்....

சிவன் கோவிலில் ஒரு சிலருக்குத்தன் முக்கியம் கொடுப்பார்கள்... அதுவும் கோவிலில் ஒரு குடும்பம் வந்தால் எல்லோரும் தள்ளிப்போ எத்தினை வயது போனவர்களாக இருந்தாலும் பறுவாயில்லை... அவர்களுக்கு எல்லாப்பணிவிடையும் செய்யுதுதான் மற்றவர்களுக்கு பண்ணுவார்கள்..

இதுதான் கோவில் தெரியாதவர்களுக்கு....... ( பலர் இங்கே ஆங்கிலம்தான் கதைப்பார்கள்... தமிழ் வராது பலருக்கு..... முக்கியமாக தமிழ் வராது வயதானவர்களுக்கு )

தொடரும்.......

  • கருத்துக்கள உறவுகள்

அய் அது ...கொரி காப்பு கட்டுவதற்கு ஒருத்தரிற்கு 21 யுரோவாம் சுமார் இரண்டாயிரம் பேர் கொளரி காப்பு கட்டினாங்களாம். கூட்டிப்பாருங்கள். ஒரு பிள்ளையின் படிப்பிற்கு உதவுங்கள் என்று கட்டு கத்து கத்துறம். நான் மட்டும் பிரபாகரனாயிருந்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ் சனத்தையும் முள்ளிவாய்காலாக்கியிருப்பன். ஆயிரம் பிரபாகரன் வந்தாலும் திருத்த முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் புதிதல்லவே. நல்லூரிலும் இப்படிச் செய்யிறவை. நாலு பேர் பட்டுவேட்டி சால்வையோட.. வர அவைக்கு... முதன்மை அளித்து அவைக்கு ராஜமரியாதை அளிப்பினம். மிச்ச சனம்.. பாவங்கள்... கால்கடுக்க கியூவில கிடக்குங்கள். இப்படியான சமூகப் பாகுபாடு காட்டும் நிலை பல சமூகங்களில் இருந்தாலும்.. குறிப்பாக இந்திய உபகண்ட சமூகங்களில் மலிந்து கிடக்கிறது. எம்மவர் மத்தியில் அதற்கு குறைவே இல்லை. இதனால் தான்.. இன்றைய இளைஞர்களில் அநேகர் கோவிலுக்குப் போறதில்லை. ஆனால்.. புலம்பெயர் தேசங்களில் பிறந்த பிள்ளைகளைப் பெற்றோர் கட்டாயப்படுத்தி கோவிலுக்கு கொண்டு போறதை அவதானிச்சிருக்கிறன். அது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

சில பெற்றோர் கட்டாயப்படுத்திப் பிள்ளைகளுக்கு உணவை

ஊட்டுகின்ற்றார்கள்

சில பெற்றோர் கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள்.

சிலர் கட்டாயப்படுத்திக் கோவிலுக்கு அனுப்புகின்றார்கள்.

ஏன் பல நாடுகளில் கட்டாய ராணுவப் பயிற்சியே இருக்கின்றது.

திணிக்கப்படுவது எப்போதுமே முழுமையாகச் செரிப்பதில்லை.

புலம்பெயர்ந்த ஆலயங்கள் பலதும் வியாபாரத்தலங்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை நானிருக்கிற இடத்திலையும் கோயில்நடத்துறவையின்ரை கூத்தும்...ஐயர்மாற்றை கூத்துக்களும் சொல்லிவேலையில்லை......போனகிழமை கௌரிவிரதத்திலண்டு பூசையாக்கிக்கொண்டிருந்த ஐயர்.....பூசையை அரைகுறையிலை விட்டுட்டு ஓடிட்டாராம் :icon_mrgreen: :icon_mrgreen: .....என்னபிரச்சனையெண்டதை வெளியிலை இரண்டுபக்கமும் விடுதில்லை......நான் நினைக்கிறன் பிரச்சனை வேறையொண்டுமில்லை....அதாய்த்தானிருக்கும் :rolleyes: ....கோயில் நல்லதுக்கு பயன்படும் எண்டு பாத்தால்.......கோதாரிவிழுவார் இதையும் விட்டுவைக்கிறாங்களில்லையப்பா..... :(

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை நானிருக்கிற இடத்திலையும் கோயில்நடத்துறவையின்ரை கூத்தும்...ஐயர்மாற்றை கூத்துக்களும் சொல்லிவேலையில்லை......போனகிழமை கௌரிவிரதத்திலண்டு பூசையாக்கிக்கொண்டிருந்த ஐயர்.....பூசையை அரைகுறையிலை விட்டுட்டு ஓடிட்டாராம் :icon_mrgreen: :icon_mrgreen: .....என்னபிரச்சனையெண்டதை வெளியிலை இரண்டுபக்கமும் விடுதில்லை......நான் நினைக்கிறன் பிரச்சனை வேறையொண்டுமில்லை....அதாய்த்தானிருக்கும் :rolleyes: ....கோயில் நல்லதுக்கு பயன்படும் எண்டு பாத்தால்.......கோதாரிவிழுவார் இதையும் விட்டுவைக்கிறாங்களில்லையப்பா..... :(

:rolleyes: ...... :icon_mrgreen: .... :lol: ...... :icon_idea:

சில பெற்றோர் கட்டாயப்படுத்திப் பிள்ளைகளுக்கு உணவை

ஊட்டுகின்ற்றார்கள்

சில பெற்றோர் கட்டாயப்படுத்திப் பிள்ளைகளைப் பாடசாலைக்கு அனுப்புகின்றார்கள்.

சிலர் கட்டாயப்படுத்திக் கோவிலுக்கு அனுப்புகின்றார்கள்.

ஏன் பல நாடுகளில் கட்டாய ராணுவப் பயிற்சியே இருக்கின்றது.

திணிக்கப்படுவது எப்போதுமே முழுமையாகச் செரிப்பதில்லை.

புலம்பெயர்ந்த ஆலயங்கள் பலதும் வியாபாரத்தலங்களே

வாத்தியார் நீங்கள் சொல்வதை மறுப்பதற்கு இல்லை எல்லாமே காசு காசு ......தூ......தூ

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி, நீங்க சத்தியமா லண்டனிலை தானே இருக்கிறீங்கள்?

உங்கடை கதையைப் பார்க்க, எங்கடை சிட்னி முருகனுடைய கதை போல இருக்கு! அது தான் கேட்டனான்!

இந்த முறை சூரன் போரை நீங்கள் பாத்திருக்க வேண்டும்!

சாமி தூக்கியவர்களின் முகங்களில் இருந்த சிரிப்பும், அவர்கள் கழுத்துக்களில் ஆடிய சங்கிலிகளின் பரிமாணங்களும், அவர்கள் அந்தஸ்தைக் காட்டின!

பாவம் அவர்கள்!

தாங்கள் தான் சூரனின் வாரிசுகள், என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லைத் தான்!

  • தொடங்கியவர்

அய் அது ...கொரி காப்பு கட்டுவதற்கு ஒருத்தரிற்கு 21 யுரோவாம் சுமார் இரண்டாயிரம் பேர் கொளரி காப்பு கட்டினாங்களாம். கூட்டிப்பாருங்கள். ஒரு பிள்ளையின் படிப்பிற்கு உதவுங்கள் என்று கட்டு கத்து கத்துறம். நான் மட்டும் பிரபாகரனாயிருந்திருந்தால் ஒட்டுமொத்த தமிழ் சனத்தையும் முள்ளிவாய்காலாக்கியிருப்பன். ஆயிரம் பிரபாகரன் வந்தாலும் திருத்த முடியாது

அய் சாத்திரி அண்ணா உங்கள் ஊர் கோவிலில் மட்டுமில்லை லூசியம் சிவன் கோவிலிலும் 21 பவுண்தான்(கூடுதலாக லண்டன் எல்லாக்கோயிலிலும் 21 பவுண்தான் வாங்கினார்கள்).... அது மட்டுமில்லை கந்த சஸ்டிக்கு 10 பவுண்கள் விரதம் இருந்தவர்களில் தொகை 500பேருக்கு மேல் வரும் கூட்டி கழித்து பாருங்கள் எவ்வளவு வந்திருக்கும் என்று.....

  • தொடங்கியவர்

.. இன்றைய இளைஞர்களில் அநேகர் கோவிலுக்குப் போறதில்லை. ஆனால்.. புலம்பெயர் தேசங்களில் பிறந்த பிள்ளைகளைப் பெற்றோர் கட்டாயப்படுத்தி கோவிலுக்கு கொண்டு போறதை அவதானிச்சிருக்கிறன். அது தவறு.

நெடுக்காலபோவன் அண்ணா பெற்றோர்கள் பிள்ளைகளை கட்டாயப்படுத்தி கோவிலுக்கு கூட்டி வருவது ஒருவேளை நம்ம கலாச்சாரம் தெரியவேண்டும் என்பதுக்காக இருக்கலாம்( எனக்கு உடன்பாடு இல்லை பிள்ளைகளை விரும்பாதா ஒன்றை பண்ணச்செய்வது)

நான் தினமும் கோவிலுக்கு செல்வதால் அங்கே அக்காவும் தன் மூன்று வயது குழந்தையுடன் தினமும் கோவிலுக்கு வருவா ... இரண்டு மூன்று நாட்கள் போக மகள் என்னுடன் வந்து ஒட்டிகொள்ள அவங்கள் அம்மாவும் எனக்கு பிரண்டு ஆகி விட்டார்..... என்ன ஆச்சரியம் என்றால் கந்த சஸ்டி காலத்தில் பூஜை முடியும் தரணம் முருகன் ஊர்வலம் வருவார் அப்போது எல்லோரும் பாடுவார்கள் ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே என்று.....அந்த நேரம் சனம் இடிச்சு தள்ளிகொண்டு வந்தது நான் அஸ்வினியை துக்கி வைத்திருந்தேன்.. அவள் பாடினாள் முழு முருகன் பாடலும்... எனக்கு ஆச்சரியமாக இருந்தது.... நான் அவங்கள் அம்மாவிடம் காதுக்கை கேட்டன் அக்கா நீங்கள் எல்லாப்பாடலும் உங்கள் மகளுக்கு சொல்லிக்கொடுத்திட்டியள்போல என்றேன் அதுக்கு அந்த அக்கா சொன்ன பதில் தினமும் கோவிலுக்கு கூட்டி வருவேன் அவள் இங்கே இவர்கள் பாடுறதை கேட்டு பாடுகிறாள் என்றார்... அவள் சாமி கும்பிடும் அழகு சொல்லவே தேவையில்லை... இதுக்காகதான் பலர் பிள்ளைகளை கோவிலுக்கு கூட்டி வருவது என்று நினைக்கிறேன்...

40வயது மதிக்கத்தக்கவர் ஒரு அன்ரி தினமும் கோவிலுக்கு வருவார் அவர் என்னிடம் கேட்ட கேள்வி what is time now??...

3வயது குழந்தை தமிழ் பேசுது 40வயது பெண்மணிக்கு தமிழ் வரவில்லை... இதில் கலாச்சாரம் கோவில் பண்பாடு தூஊஊ கேவலம் கெட்டவர்கள்....

3வயது குழந்தை தமிழ் பேசுது 40வயது பெண்மணிக்கு தமிழ் வரவில்லை... இதில் கலாச்சாரம் கோவில் பண்பாடு தூஊஊ கேவலம் கெட்டவர்கள்....

இங்கிலாந்தில் தமிழர்கள் சந்திக்கும் பொழுது இங்கிலிஷில கதைப்பதுதான் பாஷன் என்று உங்களுக்குத் தெரியாதா?

22 வயதிலேயே தான் லண்டனுக்கு வந்துவிட்டதால் தமிழ் மறந்து விட்டதாக என்னிடம் ஒரு பெண்மணி கூறினார். ஓங்கி ஒரு அறை குடுப்பமா என்று பார்த்தன். 'அம்மா' என்று கத்திறாவா 'மம்மி' என்று கத்திறாவா என்று பார்க்க. பக்கத்தில ஆக்கள் இருந்தபடியால் முடியாமல் போய்விட்டது.

இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகள் தமிழ்க் கதைக்க முயற்சிக்கிறார்கள். நாட்டில இருந்து ஒடி வந்த அன்னக்காவடிகளின் அலப்பறைதான் தாங்க முடியவில்லை.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் நேரம் கேட்டவருக்கு சுத்தமான தமிழில் பதில் சொல்லிட்டால் போச்சு..:)

  • தொடங்கியவர்

சிவன் கோவிலுக்கு வரும் முக்கால் வாசி சனமும் பண வசதி கூடினவர்கள்தான்...பணமும் கல்வி அறிவும் இருந்தால் கூடவே திமிரும் வந்திடும்போல .... கோவில் என்றால் அமைதி என்றுதான் நாம் எல்லோரும் நினைக்கின்றது ஆனால் லூசியம் சிவன் கோவில் இருக்கே ஐயோஒ சொல்லவே தேவை இல்லை கூவிக்கூவி சந்தையில் மரக்கறி மீன் வைத்தது மாதிரிதான் கோவிலும் இப்போதும்... அய்யர்மார் மத்திரங்களை ஒழுங்காக படிக்கிறார்கள் என்று கேட்டால் அதுவும் இல்லை ... பூஜை பண்ணுவதுக்கு அய்யர்மார் இடையில் சண்டை...ஆனால் சனத்திடம் காசு வாங்கும்போது மட்டும் எப்படிதான் ஒற்றுமையாக இருக்கிறார்களோ தெரியவில்லை...

இந்த வருடம் கந்த சஸ்டி பூஜை 5மணிக்கு தொடங்கும் என்று அய்யர் முதல் நாள் இரவு பூஜையில் சொன்னார். பாறணை 8மணிக்கு முடிப்பம் என்றும் சொல்லியிருந்தார்கள்.....உண்மையில் நானும் ஒரு முட்டாள் என்றுதான் சொல்லவேண்டும் கோயிலுக்கு போகக்கூடாது என்று நினைத்தாலும் மனம் கேட்காது பழக்கதோசம் விட முடியவில்லை..... இரவு இரவாக சமைத்துவைத்து விட்டு பூஜை பார்ப்பம் என்று 5.30 காலையில் கோவிலுக்கு போகிறேன் அங்கே ஒரு சிலரை தவிர ஒருதருமே இல்லை ... தூக்கி வாரிப்போட்டுது என்ன கொடுமை இது என்று நினைத்துபோட்டு மறுகணம் என் மனம் சொல்லிச்சு அப்பாடா நிம்மதி ஒருதருமே இல்லை என்று நினைத்தேன்...

அப்புறம் கொஞ்ச நேரத்தில் சனங்கள் வந்திட்டுதுகள்... கிட்டதட்ட பூஜை முடியும்போது 10மணி இருக்கும் பாவம் கொஞ்சம் பெடியங்கள் வந்திருந்தார்கள் பாச்சிளர் அவர்களும் விரதம் ... ஒரு அண்ணா வாய் விட்டே கேட்டார் எப்போ அய்யா பூஜை முடிப்பீர்கள் எப்போது சாப்பாடு தருவீர்கள் வேலைக்கு போகவேண்டும் என்று....ஆனால் அய்யர்மார் அவர்களோட அலுவல்களைதான் பார்த்தார்கள்... அந்த அண்ணா கேட்ட கேள்வி காதில் விழுந்தா என்றும் தெரியவில்லை.... கோவில் தற்ப்போது யாரோட கையில் நிர்வாகத்தில் இருக்கின்றதுவோ அவருக்கு பணிவிடைகள் நடந்தது... அப்புறம் பூஜை பண்ணியவர்களுக்குத்தான்....

நிர்வாகத்தில் இருப்பவர்களைபற்றி சொல்லியே ஆகவேண்டும் முதலில் எல்லாம் கோவில் சின்னதாக இருக்கும்போது அவர்தான் நிர்வாகத்தில் இருந்தார் அப்போது எல்லாம் வாங்கம்மா என்று கூப்பிடுகிறவர் இப்போது வேண்டாதா விருந்தாளி வீட்டுக்கு வந்ததுமாதிரிதான் நடந்துகொள்வார்கள்... நிர்வாகத்தில் ஒருவர் மட்டுமில்லை பலர் இப்படித்தான் இவரைபோலதான் நடந்துக்கொள்ளுகிறார்கள்... அப்புறம் தாங்கள் நகை பண்ணி கொடுத்தம் அது இது என்று ஊருக்கே கேட்கிறது மாதிரியும் சொல்லுவார்கள்... கடவுள் கேட்டவரா எனக்கு நகை தாங்கோ என்று... உந்த கடவுளுக்கு நகை போடுறதுக்கு பதில் யாரவது கஸ்ரப்பட்ட குடும்பத்துக்கு உதவினால் அதுகளாவது 4வேளை சாப்பிட்டுவிட்டு போவார்கள்...

அப்புறம் திரு விழா காலத்தில் நடந்தது அது பெரிய கூத்து என்றுதான் சொல்லவேண்டும் அவனவன் அவங்களோடு ஊர் பெருமையையும் அவனவன் காசு திமிரை காட்ட திரு விழா பண்ணினார்கள்...

இது ஒரு ஊர்க்காரர் பண்ணிய சப்பர திருவிழாவாம்.....

மீதி தொடரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலத்தில் நேரம் கேட்டவருக்கு சுத்தமான தமிழில் பதில் சொல்லிட்டால் போச்சு.. :)

நான் இதில் மூன்று வகையான வழிமுறைகளைக் கையாள்கிறேன்.

போற வாற வழியில.. கண்டதும்..யார் என்ற முன் அறிதல் இன்றி.. தமிழில கேட்டா.. சொறி.. சொல்லிட்டு.. கேட்கிறதை.. ஆங்கிலத்தில சொல்ல வைச்சு.. ஆங்கிலத்தில் தான் பதில் சொல்லுவன். ஏன்னா.. ஆங்கிலத்தை பேசும் ஒரு நாட்டில இருந்து கொண்டு.. அந்த நாட்டின் தாய் மொழியை மதிக்கல்லைன்னா.. பிறகு எதற்கு நீங்க.. இங்க இருக்கீங்க என்ற கேள்வியை வெள்ளைகள் கேட்கப்படாது என்பதற்காக. அதுவும் அவங்க நாட்டு கடவுச்சீட்டு வேணும்.. ஆனா ஆங்கிலம் பேச மாட்டினமாம். எங்கட நாட்டு மேல தான் உணர்வில்ல.. பற்றில்ல.. குறைஞ்சது.. இது அவங்கட நாடு என்ற உணர்வையாவது வைச்சிருக்கனும்.

இரண்டாவது வழிமுறை.. நானும் தமிழன்.. கூடி இருக்கிற இடமும் தமிழர்கள் என்ற இடத்தில்.. நிச்சயம் தமிழில் பேசலாம்.. என்ற ஒரு நிலை இருந்தால்.. தமிழில் உரையாடுபவர்களோடு தமிழில் உரையாடுவேன். இடைக்கிடை ஆங்கிலக் கலந்து பேச ஆரம்பிச்சினம் என்றால்.. தனி ஆங்கிலத்தில் தான் கதைப்பன். பேசாம போயிடுவினம்.

தமிழ் விளக்கக் கூடியவர்களும்.. தமிழ் விளங்க முடியாதவர்களும் கூடி இருந்தால்.. இரண்டு மொழிகளிலும்.. அவரவற்கு ஏற்ப உரையாடுவேன்.

இதையே தான் சிங்கள தேசத்திலும் செய்ததால.. அது நல்ல பரீட்சயம்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

40வயது மதிக்கத்தக்கவர் ஒரு அன்ரி தினமும் கோவிலுக்கு வருவார் அவர் என்னிடம் கேட்ட கேள்வி what is time now??...

அவர் உங்களுடன் கதைக்கப் பிரியப்பட்டார் போலிருக்கே.. புன்சிரிப்பைக் கொடுத்தால் கூடப் போதும்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் கோவில்களை தொண்டு நிறுவனங்களாகத் தானே பதிவு செய்திருக்கினம். இந்தக் குறைபாடுகள் பற்றி.. அந்தந்த கவுன்சில்களின் கவனத்துக்கு கொண்டு வருதலே நன்று. எம்மவர்கள்.. ஊரில காட்டின கூத்துகளை எல்லாம் இஞ்ச காட்டிக் கொண்டும் திரியினம். ஏன்னா.. இவைட கூத்துக்களைப் பற்றி சரியான தகவல்கள்.. ஆதாரங்களோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எட்டுவதில்லை. அப்படி எட்டிவிட்டால்.. கோவில்களுக்கு மூடு விழாத்தான்..! வெள்ளையள்.. சட்ட ரீதியா முடிவெடுத்திட்டா... தெய்வம்.. அதுஇதெண்டெல்லாம் பார்க்க மாட்டினம்.

ஒவ்வொரு கோவில்களும் மக்களின் குறை நிறைகளை அறிய ஒரு விண்ணப்பமும்.. பெட்டியும் வைச்சிருக்கனும். அது இல்லைன்னா.. அதில எழுதிப் போட்டும் நடவடிக்கை எடுக்கல்லைன்னா.. நீங்கள் எழுதிப் போட்ட விண்ணப்பத்தின் போட்டோ பிரதியோடு.. சம்பவங்கள் பற்றிய விபரிப்போடு.. குறிப்பிட்ட கவுன்சிலை நோக்கி தீர்வு தேடிப் போகலாம். ஒவ்வொருவராக போனாலும் சரி.. பொது பெட்டிசனாக (petition) எழுதி கையெழுத்திட்டு அனுப்பினாலும்.. சரி. இதையும் செய்யுங்கோ... வெறுமனவே யாழில் மட்டும் எழுதிறதால உவை திருந்தாயினம்..! இவைக்கு.. பாடம் படிப்பிச்சாலே அன்றி.. உவை லேசில திருந்தக் கூடிய ஆக்கள் இல்லை..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அய் சாத்து அண்ணா..என்னை யாராச்சும் திட்டக் கூடாது.நீங்கள் ஆரம்பிச்சு வைச்சபடியால் இதை எழுதிறன் இல்லாட்டிக்கு என்ட பாட்டுக்கு இருந்துடுவன்..நேற்றைய தினம் யாழ் பல்கலையில் படிக்கும் மாணவி ஒருவரோடு கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது ..அந்த மாணவி ரொம்ப கவலைப்பட்டு சொல்லிக் கொண்ட ஒரு விசயம்..தற்போதைய கால கட்டத்தில் உதவி செய்யிற மனப்பாண்மை எங்கள் மக்களுக்கு நன்கு குறைந்து விட்டது என்பதே..உதவி என்று கேட்டால் அறிந்த,தெரிந்த உறவுகளை விட முகம் தெரியாத உறவுகள் தான் ஒரு சிலர் உதவுகிறார்கள் மற்றப்படிக்கு இன்னும் எத்தனையோ மாணவர்கள் பல்கலை என்ற ஒன்றுக்குள் புகுந்தும் மேற் கொண்டு அந்தக் கல்வியை தொடரக் கூடிய வசதிகள் இல்லாத நிலையாக இருக்கிறது என்றார்..நான் கதைத்த மாணவி பல்கலைகழக கல்வியை சிறிது கால இடைவெளியின் பின் இப்போ தொடருகிறா.ஆனால் இந்தப் பிள்ளையின் தங்கை படிக்க வைக்கிறதுக்கு உதவுவார் இன்றி பல்கலைக்கழகம் சென்றும் கல்வியை தொடர முடியாமல் இருக்கிறா...இதை எப்படி சொல்வது....???

எங்கள் நாட்டில் பல்கலைக்கழகம் போவது என்றால் எவ்வளவு சிரமங்களை எதிர் நோக்க வேணும் என்பது யாவரும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறன்...அப்போ நினைத்தேன் கடவுளே இந்த சனம் கோவிலில் போய் எவ்வளவு பணத்தை கொட்டுகிறார்கள்..அதில் ஒரு சிறு பங்கையாவது இப்படியான மாணவர்களுக்கு கொடுத்து உதவலாம் தானே..பணமாக,பாலாக,தயிராக ,தேனாக எல்லாம் கோயிலுக்கு கொண்டு போய் இறைக்கிறீர்கள்..அதையே எங்கள் தாயகப் பிள்ளைகள் மீதும் கருணை காட்டலாம் தானே..நான் அறிய இன்னும் சிலர் உதவி செய்யிறீர்கள் இல்லை என்று ஒட்டு மொத்தமாக மறுக்க இல்லை..ஆனால் படிக்க வேணும் முன்னேற வேண்டும் என்ற ஆவலில் இருக்கும் மாணவர்களில் ஒருவரை பொறுப்பு எடுத்து அவர்களின் கல்வி முன்னேற்றதிற்கு உதவுங்களேன்..நான் உட்பட ஒருக்கா வெளியில் போனால் எவ்வளவு பணத்தை விரயமாக்கிட்டு வீட்டுக்குள் வருகிறோம்...

உதவி என்று கேட்டு விட்டு காத்து கொண்டு இருக்கும் அத்தனை உறவுகளும் இளப்புக்களை சந்தித்தவர்கள் தான்..வசதியை வைச்சு கொண்டு மற்றவர்களிடம் கேட்க வேணும் என்பதற்காக நாங்கள் கேக்க இல்லை. உண்மையாக நாங்கள் பாதிக்க பட்டனாங்கள் அக்கா என்று சொல்லி மனம் தளரும் போது பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது..

வகுப்புக்கு போய் விட்டு வந்தால் களைச்சுப் போய்டுவன் அக்கா..ரொம்ப பசிக்கும் ஆனால் வயிறாற சாப்பிட முடியாதவர்கள் அக்கா என்னும் போதும் இரத்த கண்ணீர் வருமா வராதா சொல்லுங்கள்....?நாங்கள் எவ்வளவு சாப்பாட்டை சமைச்சு மிஞ்சி விட்டால் பழையது என்று குப்பைக்குள் கட்டி குப்பையோடு குப்பையாக அனுப்பி விட்டு நின்மதி பெரு மூச்சு விடுவோம்..ஆனால் அதே அளவு சாப்பாட்டு பார்சல் வாங்கி சாப்பிடுவது என்றால் 130 முதல் பல மாதிரியாகவும் உணவு பார்சல் இருக்கிறது. ஆனால் வசதியின்மையால் எவ்வளவு விலை குறைந்த பார்சல் எடுக்க முடியுமோ அவ்வளவு குறைந்த விலைக்கு தான் அக்கா சாப்பாடு எடுத்து சாப்பிடுவேன் என்று கேட்கும் போது மனம் நல்லவா இருக்கும்.தயவு செய்து உங்களால் முடியும் பட்சத்தில் என்னுடைய சகோதரன்,என்னுடைய சகோதரி என்று நினைச்சு அந்த உறவுகளுக்கு உதவிகரம் குடுங்கள் என்று மிகவும் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன்..நான் எனக்காக உதவி கேக்க இல்லை..கல்வி என்ற ஒன்றுக்காக ஏங்கிக் கொண்டு இருக்கும் உறவுகளுக்கு மாதம்,மாதம் உங்களால் முடிந்த உதவியை செய்து அவர்களை ஒரு முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

யாயினி தங்கச்சி.. இந்தக் குற்றச்சாட்டுகளின் பின்னால் உள்ள உண்மைத் தன்மை பற்றி என்னால் அறிய முடியாமல் இருக்கிறது. அண்மையிலும் இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிலர் கல்வியைத் தொடர முடியாது தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

நாங்கள் எல்லாம் படிக்க வந்த போது.. நான்.. எனது நண்பர்கள் 1000 - 1500 ரூபா அளவில் மகாப்பொல பெற்று அதில் தான் படித்தனாங்கள். பல்கலைக்கழக இளநிலைக் கல்வி சிறீலங்காவில் இலவசம். இப்போதும்.. மகாப்பொல கொடுக்கினம் தானே. நாங்கள் வீட்டு வாடகைக்கு (கொழும்பில்) தனியார் கல்விக் கூடங்களில் பாடம் சொல்லிக் கொடுத்து அதில் வந்த வருமானத்தில் தான் கொடுத்துப் படிச்சம். அப்பா அம்மா சகோதர்கள்.. உதவி செய்ய இருந்தாலும்.. அதைப் பெற்றுக் கொள்ள விரும்பவில்லை. அதுவும் பெரும் போர் நெருக்கடியான சூழல். வெளில புத்தகத்தோட நடந்து போனாலே அதுவும் தமிழன் என்றால் புத்தகத்துக்கு நடுவில குண்டு வைச்சிருப்பான் என்று சிங்களவர்கள் பயந்து ஓடிற காலம். எங்களோட சிங்கள மாணவர்களில் அதிகம் பேர் கதைப்பதே இல்லை. இப்படிப்பட்ட ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சூழலில்.. போர் பற்றிய.. கைது பற்றிய பயத்தில் தான் நாங்களும் படிச்சிருக்கிறம்.

இன்று யாழ்ப்பாணத்தில்.. அன்றைய சூழலுக்கு ஒப்ப நெருக்கடிகளை சிங்களம் கொடுக்கிறதா என்பது இருக்க.. புலம்பெயர் நாடுகளில் இருந்து அனுப்பும் பணத்தை வங்கியில் வைப்பில் இட்டால்.. குறிப்பாக ஹட்டன் நசனல்.. யூனியன் வங்கியில்.. நல்ல வட்டி வீதம் தருவார்கள். நான் அப்பா அம்மா தந்த காசை அப்படித்தான் சேர்த்து வைச்சிருந்து.. அந்த வட்டியில தான் உடுப்பு வாங்கிறது. என் நண்பர்களும் அப்படித் தான் செய்தனர். சினிமா அதுஇதென்று போனதே கிடையாது. உல்லாச கோட்டல்கள்.. நாங்க அண்ணாந்து பார்த்திட்டு போறது மட்டுமே. போய் சாப்பிட முடியாது என்றில்லை.. எங்களை நாங்களே ஒரு இடர் மிகு சூழலுக்குள் தள்ளி வாழ பழக்கிக் கொண்டோம். அதன் மூலம்.. சிக்கனமாக படிக்க முடிஞ்சதோடு.. பெரும் பொருண்மியச் செலவைக் குறைக்க முடிஞ்சுது.

நான் இதை ஏன் சொல்லுறேன்னா.. அவர்களுக்கு யாரும் உதவி செய்ய வேண்டாம் என்றல்ல. தாராளமாக உதவிகள் செய்யப்பட வேண்டும். ஆனால் அதை விரயமாக்காமல்.. தகுந்த வழியில் சேமித்தும்.. சுய முயற்சியில் இன்னும் வருவாயை அதிகரித்தும் படிக்க.. வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

நான் இங்கிலாந்து வந்த புதிதில்.. 1500 பவுன் வரை பணமாகவும் பயணச் செக்காவும் கொண்டு வந்தனான். அதில் அரைவாசிப் பணம் நான் படிக்கும் போது சேர்த்தது. மிகுதி பெற்றோர் தந்தது. இங்கிலாந்து வந்து வதிவிடத்துக்கு என்று அந்தக் காசை ஒரே அடியா யுனிக்காரன் புடுங்கிட்டான். உதவி செய்ய யாருமில்ல. வீட்ட கேட்டா அடிதான் விழும். அப்ப 150 ரூபா ஒரு பவுன். அப்பா அம்மா சிறுகச் சிறுக சேர்ப்பவற்றை எத்தனை பவுனாக மாற்ற முடியும். ஒரு.. 50 பவுன். ஒரு வாரத்துக்கு ஒரு பவுன் பாணை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்திருக்கிறன். அதுவும் முதுநிலைக் கல்வி. ஒவ்வொரு நாளும் ஆய்வு கூடம் போய் ஆய்வு செய்யனும். காலையில் புத்துணர்ச்சியா இருந்தாலும் மாலையில் களைப்பா இருக்கும்.

இப்படி சில வாரங்கள் ஓடி.. அப்புறம்.. ஒரு வேலை ஏஜெண்டில் பதிஞ்சு.. அவன் ஆயிரத்தெட்டு சோதனை வைச்சு.. வெட்டின மரங்களை தூக்கி அடுக்கிற..வேலைக்கு போட்டான். அதுவும்.. நவம்பர்.. டிசம்பர் மாதக் குளிருக்க. அது மாலை 7 மணிக்குத் தொடங்கினா இரவு 11 மணிக்கு முடியும். இரவு கொண்டு வந்து தூரத்தில இருக்கிற பஸ் ஸ்ரொப்பில விட்டிட்டு ஏஜென்சிக் காரன் போயிடுவான். பிறகு.. நாங்கள் வீட்ட வர பஸ்ஸிற்கு காத்துக் கிடப்பம். அப்ப அங்க வாற வெள்ளை குடிகாரக் குழப்படிக் கூட்டம்.. (f******) பாக்கி என்றிட்டு போங்கள். வீட்ட வர 12.. 1 மணி ஆகிடும். அதற்குப் பிறகும் பாண் தான்.. ரோஸ்ட் போட்டு.. சீனி பட்டர் பூசி சாப்பிட்டு.. படுத்து.. விடிய 6.30 க்கு எழும்பி.. மீண்டும் தயார் செய்து யுனிக்கு ஓடுவம்.. 8.30 க்கு அங்க நிக்கனும். இப்படி எல்லாம் கஸ்டப்பட்டிருக்கிறம். பலருக்கு இது தெரியாது. ஏன் என் பெற்றோருக்கே தெரியாது.

அவை நினைப்பினம்.. பிள்ளை கொலசிப்பில போய் படிக்குது எண்டு. இஞ்ச நாங்கள் படும் அவஸ்தைகள்.. சொல்லில் அடங்காது...! அகதியா வந்திருந்தாலாவது.. அகதிக் காசும்.. ஆகக் குறைஞ்சது.. ஒரு காட் கொடுத்து.. சும்மா வைச்சு சாப்பாடாவது போடுவான். அது கூட நமக்குக் கிடையா.

இதையெல்லாம் கஸ்டமென்று நினைச்சு வாழப் பிடிக்கல்லைன்னா.. தற்கொலை தான் நாங்களும் செய்திருக்கனும். பல்கலைக்கழக சூழலில் வாழ்பவர்களுக்கு சமூகத்தில் நல்ல மரியாதை இருக்கும். அதை தக்க வைச்சு எத்தனையோ வழிகளில் உதவி பெற்றுப் தொழில் செய்து.. படிக்கலாம். அதைவிட்டிட்டு நம்பிக்கை இழந்த வகையில் பேசுவது தவறு. அதற்காக இவர்களுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று சொல்லவில்லை. பெற்றுக் கொள்ளும் உதவியை தகுந்த வழியில் பாவிக்கவும் சொல்லிக் கொடுக்கனும். அப்பதான் மீண்டும் மீண்டும்.. உதவிகளை எதிர்பார்க்காமல் நாங்கள் நிமிர்ந்து நிற்கலாம்... படிக்கலாம். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குத்தான் சொல்லுறது எங்கட சனம் தள்ளித்தள்ளி இருக்க வேணும் எண்டு..! :rolleyes: பண்டிகை திருநாளுக்கு மட்டும் ஒன்றுகூடலாம்..! :unsure:

பணம் பதவியாலதான் பவிசு என்று எங்கடை ஆக்களுக்கிடையில சீன் காட்டுறது அப்பத்தான் நிக்கும்..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு ஒரு பச்சை.

உங்கள் அளவிற்கு கஷ்டம் வரவில்லை. நல்ல நண்பர்களும் தமிழர்களுக்கு உதவும் குணமுள்ள தமிழர்கள் சிலரையும் சந்தித்ததால் 30 பவுண்ஸுடன் வந்தும் வாழ்க்கையில் சமாளிக்க முடிந்தது. அத்துடன் எந்த வேலை என்றாலும் அதை ஒரு வேலையாகப் பார்க்காமல் என்முன்னால் உள்ள சவால் என்று நினைத்து சவாலை முறியடிப்பதிலேயே சந்தோஷம் காணும் மனப்பாங்கும் இருப்பதும் வாழ்க்கையை ரசிக்க வைத்தது/வைக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸிற்கு ஒரு பச்சை.

உங்கள் அளவிற்கு கஷ்டம் வரவில்லை. நல்ல நண்பர்களும் தமிழர்களுக்கு உதவும் குணமுள்ள தமிழர்கள் சிலரையும் சந்தித்ததால் 30 பவுண்ஸுடன் வந்தும் வாழ்க்கையில் சமாளிக்க முடிந்தது. அத்துடன் எந்த வேலை என்றாலும் அதை ஒரு வேலையாகப் பார்க்காமல் என் முன்னால் உள்ள சவால் என்று நினைத்து சவாலை முறியடிப்பதிலேயே சந்தோஷம் காணும் மனப்பாங்கும் இருப்பதும் வாழ்க்கையை ரசிக்க வைத்தது/வைக்கின்றது.

நான் வந்ததும்.. லண்டனில் இருந்து 200.. 250 மைல் தொலைவுக்கே போயிட்டேன். அங்கால தான் யுனியல் 50% என்றாலும் கல்விக்கான (வதிவிடம் மற்றும் செலவுகள்.. எல்லாம் கொலசிப்பில அடங்காது.) கொலசிப் கொடுப்பினம். லண்டன் பல்கலைக்கழகங்களில் போட்டி அதிகம். அதுவும் இன்றி.. உதவி என்று கேட்டு யாரிடமும் போகக் கூடாது என்ற நிலைப்பாட்டோடேயே வந்தன்.. இருந்தன். இன்றுவரை அதை காப்பாற்றி கொண்டிருக்கிறன். இடையில் ஒரு சிலர் தாங்களா வந்து உதவி செய்த போதும்.. அவற்றை மீளக் கொடுத்திட்டன்.. கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கிறன். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதில் ஒரு சுவாரசியமான விசயத்தைச் சொல்லனும்.. இப்படி இருக்கிற காலத்தில தான் நண்பர்கள் மூலம்.. யாழ் களம் அறிமுகமானது. யாழில் எழுத என்று வேலையால வந்ததும்.. நாங்கள் நண்பர்கள்.. 1 மணிக்கு எல்லாம்.. யுனில உள்ள 24 hours கம்பியீட்டர் நிலையம் சென்று எழுதுவம். அப்ப எங்களிடம் கணணி இருக்கேல்ல. அவை எல்லாம் இன்றும் பசுமையான நினைவுகளாக..! அந்த வகையில் யாழ் எங்கள் உற்ற நண்பன். :):icon_idea:

என்னிடம் ஒரு நல்ல பழக்கம் கோவில் பக்கமே போவதில்லை ,அப்பிடி ஏதாவது விசேசமென்று யாரும் கூப்பிட்டால் மட்டும் போவேன்.T.N.A கூட்டதிற்கு போனபோது பார்த்தேன் அந்த கோயிலில் தினசரி வருமானம் ஒரு பிளக்போட்டில் வகையாக பிரித்து எழுதப்பட்டிருந்தது.அது ஒரு நல்லவிடயமாக எனக்கு பட்டது.

அன்றைய வருமான தொகையை பார்த்தபோது தலை சுற்றிவிட்டது . $3700 சொச்சம் .

.. என்னடா இவன் இங்கும், என்று யோசிப்பீர்கள்? நானும் இங்கு 20 வருடங்களுக்கு முன் வந்து லான்ட் பண்ணியது லூசியத்தில்தான்! அங்குதான் பல வருடங்களையும் கழித்தது ..

லூசியம் சிவன் கோயில்

... 20 வருடங்கள் இருக்கும், லீ(Lee) பகுதியில், கவின்ஸில் வீடுகளுக்கு இடையில் இருக்கும் ஓர் சிறிய ஹோலில், ஞாயிற்றுக்கிழமை காலையில் ... ஓரிரு மணித்தியாலங்களுக்கு தான் ஹோல் வாடகைக்கு எடுக்கப்படும், மற்றைய நேரங்களில் தண்ணிப்பாட்டிகளோ, சிறிய குடும்பங்களின் நிகழ்வுகளோ அங்கு இடம் பெறும்... ஓரிரு சாமிப்படங்களுடன் கும்பிட சிலர் ஆரம்பித்தார்கள், கும்பிட்டு முடிய படங்களை சுற்றி மூடி எடுத்துக் கொண்டு சென்று, நண்பர் ஒருவரின் வீட்டு கராஜ்ஜினுள் வைப்பார்கள்! ஆரம்ப நாட்களில் சென்றவர்களில் நானும் ஒருவன்! பின் சிவன், அங்கிருந்து நகர்ந்து இன்னுமொரு ஹோலில் தற்கால அடைக்கலம் புகுந்து, இறுதியாக இப்போதுள்ள இடத்தில் குந்திக்கொண்டார்.

இந்த கோயில் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை அங்கு நிர்வாகத்தில் இருப்பவர்களிடையே ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் மல்யுத்தப்போட்டிகள் நடைபெறுவது சகயமாகி விட்டது. ... கட்டிப்பிடித்து உருளுவார்கள், கைகள் மோதும், கால்கள் உதையும், வேட்டிகள் உருவப்படும் ... இதை இப்போது ஒருவரும் பெரிது படுத்துவதில்லை!

கோயிலை தொடக்குவதில் இருந்த பலர் ஒதுங்கினார்கள்/ஒதுக்கப்பட்டார்கள்! அன்றிலிருந்து இன்றுவரை நேரடியாகவோ, பினாமிகளினூடாகவோ கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் சச்சி என்று அழைக்கப்படும் சச்சிதானந்தம் என்பவரே!

satchthnanthan_n.jpgஇவர் இங்கு ஆரம்பகால ஈ.பி.ஆர்.எல்.எவ் செயற்பாட்டாளர். பின்பு நிரந்தர புலி எதிர்ப்பாளர் என்று கூறுவதிலும் சிறிலங்கா அரசின் விசுவாசி. இக்கோயிலை நீண்டகாலமாக தமிழ்த்தேசிய எதிர்ப்பு செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி வந்தவர். 95ம் ஆண்டு, சிங்கள ஆமி யாழை முற்றிகை இட்டு கைப்பற்றிய நேரத்தில், இங்கு அத்தியடி குத்தி டக்லஸ் வந்திருந்தான், அவனை கூட்டி அழைத்து திரிந்தது இவரும் இவரது நண்பர்களுமே! அக்காலத்தில் ஒரு சமயம் இங்குள்ள சிறிலங்கா தூதரகத்த்தில் அம்பாஷிடராக இருந்தவரையும்கோயிலுக்கு பலரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அழைத்து, சிவனின் அருளை அவர்பால் தெளித்தவரும் இந்த சச்சியே! இப்போ இறுதியாக மறக்க முடியாத மகிந்தவின் லண்டன் விஜயத்தில், இறுதி நேரத்தில் தூதரகத்துக்கு சென்று சந்தித்த ... கொன்ஸன்ரைன், ஜெயபாலன், ராஜேஸ் பாலா போன்றோருடன் .. ஓரிரு லண்டன் தமிழ் தலைவர்கள் என தம்மை கூறுபவர்களில் ஒருவராம்??... சச்சியை இத்தோடு விடுவம்!

... கூறுகிறார்கள் ... நீண்டகால குத்தைகைக்கு எடுத்த நிலத்தில் ... அருகே/கீழே கழிவு நீர் செல்லும் கால்வாய், அதன் மேல்தான் கோயிலின் ஒருபகுதி கட்டப்பட்டிருக்க வேண்டும்! ஒருவேளை அதில்தான் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறதோ தெரியாது? ... லூசியத்தில் இருப்பவர்களை தொண்டைப்பிடி பிடித்து ஆயிரக்கணக்கில் அறவிட்டு, கோபுரத்துடன் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது! ... நாளை குத்தகைக்காலம் முடிய??? குத்தகைக்கு கொடுத்தவர்கள், அதனை புதிப்பிக்க முடியாது என்றால்??? ... சிவன் அம்போ!!!! ... ரூட்டிங் அம்மாளுக்கு நடந்ததுதான் ஞாபகம் வருகிறது!!!

... சில மாதங்களுக்கு முன் லூசியம் சென்றபோது, பல நண்பர்கள்/உறவினர்களின் மனைவிமார்/சகோதரிகள் பலர் கூறினார்கள் ... கோயிலுக்கு போகும்போது/கோயிலிக்கு முன்னுக்கு/கோயிலுக்கு பக்கத்திலை எங்கடை கழுத்துகளில் உள்ளதுகளை பறித்துப் போட்டாங்கள்!!!! சிலர் இன்னும் பெருமையாக சொன்னார்கள், எங்கடை கழுத்துகளில் இருந்ததுகளை இரண்டு தடவை அறுத்துப் போட்டாங்கள் என்று!!! ... என்ன? ... எம் பெண்கள் கோயிலுக்கு கழுத்தில் அடுக்கிக்கொண்டு சென்று ... வாங்கோ, வாங்கோ, அறுங்கோ, அறுங்கோ என்று அட்வடைஸ் செய்கிறார்கள்! ... காப்பிலிகள், போலிஸ்/ரொமானியர்களின் காட்டில் தங்கமழை ... லூசியம் சிவனருளால்!!!!!!!!!!!!!!!!

Edited by Nellaiyan

உந்தப் பிரச்சனை இந்துக் கோவில்களில் மட்டும் இல்லை, எல்லா சமைய கோவில்களிலும் நடக்கிற ஒன்று தானே? இப்போதெல்லாம் கோவில்களுக்கு உண்மையில் யார் கடவுளைத் தேடித் போகிறார்கள் என்று பார்த்தால் மிகச் சொற்ப ஆட்களே போகிறார்கள். மீதிப் பேர் வெட்டி பந்தா கட்டத்தானே போகிறார்கள்?

நான் போகும் கோவிலுக்கு இரண்டே இரண்டு சுவர் தள்ளி இருக்கும் ஒரு எம்மவர் குடும்பம் (இளம் குடும்பம்) 4x4ல் தான் வருவார்கள்... புதுசா வாங்கினதாம், அதனை வேறு எங்க கொண்டு போய் காட்ட ஏலும்? எங்கட நாலு சனம் வாற இடத்தில தானே சும்மா கலர் காட்ட ஏலும் என்று வேறு வாய் விட்டு சொல்லிச் சிரிப்பார்... :huh: அதை விட பொம்பிளையள்... :blink: வேண்டாம் நான் இதோட நிப்பாட்டுறேன்!

  • தொடங்கியவர்

..

... கூறுகிறார்கள் ... நீண்டகால குத்தைகைக்கு எடுத்த நிலத்தில் ... அருகே/கீழே கழிவு நீர் செல்லும் கால்வாய், அதன் மேல்தான் கோயிலின் ஒருபகுதி கட்டப்பட்டிருக்க வேண்டும்! ஒருவேளை அதில்தான் தீர்த்தோற்சவம் நடைபெறுகிறதோ தெரியாது? ... லூசியத்தில் இருப்பவர்களை தொண்டைப்பிடி பிடித்து ஆயிரக்கணக்கில் அறவிட்டு, கோபுரத்துடன் கோயில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது! ... நாளை குத்தகைக்காலம் முடிய??? குத்தகைக்கு கொடுத்தவர்கள், அதனை புதிப்பிக்க முடியாது என்றால்??? ... சிவன் அம்போ!!!! ... ரூட்டிங் அம்மாளுக்கு நடந்ததுதான் ஞாபகம் வருகிறது!!!

... சில மாதங்களுக்கு முன் லூசியம் சென்றபோது, பல நண்பர்கள்/உறவினர்களின் மனைவிமார்/சகோதரிகள் பலர் கூறினார்கள் ... கோயிலுக்கு போகும்போது/கோயிலிக்கு முன்னுக்கு/கோயிலுக்கு பக்கத்திலை எங்கடை கழுத்துகளில் உள்ளதுகளை பறித்துப் போட்டாங்கள்!!!! சிலர் இன்னும் பெருமையாக சொன்னார்கள், எங்கடை கழுத்துகளில் இருந்ததுகளை இரண்டு தடவை அறுத்துப் போட்டாங்கள் என்று!!! ... என்ன? ... எம் பெண்கள் கோயிலுக்கு கழுத்தில் அடுக்கிக்கொண்டு சென்று ... வாங்கோ, வாங்கோ, அறுங்கோ, அறுங்கோ என்று அட்வடைஸ் செய்கிறார்கள்! ... காப்பிலிகள், போலிஸ்/ரொமானியர்களின் காட்டில் தங்கமழை ... லூசியம் சிவனருளால்!!!!!!!!!!!!!!!!

ஆஆஆஅ அப்போ குத்தகை காலம் முடிய என்ன பண்ணப்போகிறார்கள்... நான் நிலத்தை வாங்கிவிட்டார்கள் என்றுதானே நினைத்தேன்... சொந்தம் இல்லாதா நிலத்துக்குத்தான் இவ்வளவு அடிபடுகிறார்களா? :o

உண்மைதான் காப்பிலிகளால் களவாடப்பட்டது 25தாலிக்குமேல் இருக்கும் என்று நினைக்கிறேன், ஆனால் பண்ணிவித்தவர்கள் தமிழர்கள் என்று எல்லோ கேள்விபட்டேன்... இந்த களவு சமந்தமாக ஒருவர் உள்ளே இருக்கிறார்தானே..... :rolleyes:

காப்பிலிகள் களவெடுப்பது உண்மைதான் ஆனால் பாதிக்குமேல் நம்மவர்களே களவெடுத்துவிட்டு காப்பிலிகள்மேல் பழியை போடுகிறார்கள்....

இந்த வருடம் நடந்த கும்பாவிசேகத்தில் கடசி நாள் தேர் இழுத்தார்கள்.. அதிலையும் களவு எடுத்துட்டார்கள் என்று குற்றச்சாட்டு.. இரண்டு பக்கமும் காவலுக்கு ஆட்களை என்று போட்டிருக்கும்போது அதுவும் பட்டப்பகலில் நடந்த தேர் இழுப்பில் காப்பிலிகள் வந்து களவெடுத்தார்கள்..இவங்களே களவெடுத்துவிட்டு மற்றவன்மேல் பழியை போடுகிறார்கள்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.