Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமனிதர் நடராஜா ரவிராஜ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் தென்மராட்சி சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட ரவிராஜ் யாழ்ப்பாணம் டிறிபேர்க் கல்லூரி மற்றும் யாழ் பரி யோவான் கல்லூரிகளில் கல்வி கற்றார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் 1987 ஆம் ஆண்டு இலங்கையின் உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக பதிவு செய்தார். ரவிராஜின் "ரவிராஜ் அசோசியேட்ஸ்" எனும் சட்ட நிறுவனமானது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குகள், அவசரகாலச் சட்டத்தின் கீழான வழக்குகளுக்காக வாதாடியது. கொழும்பில் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் பணியாற்றினார்.

அரசியலில் இணைவு

ரவிராஜ் சட்டத்தரணியாக இருந்து அரசியலில் நுழைந்தார். 1984 முதல் 1990 வரையிலும் 1993 முதல் 1997 வரையிலும் மனித உரிமைகள் இல்லத்தை நடத்தினார். 1987 இல் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியில் இணைந்தார். 1990 ஆம் ஆண்டு அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரானார்.

1997 ஆம் ஆண்டு யாழ். மாநகரசபை பிரதி முதல்வராகவும், 1998 இல் யாழ். மாநகரசபை முதல்வராகவும் தெரிவானார்.

2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு இருமுறையும் வெற்றி பெற்றார்.

மறைவு

நவம்பர் 10, 2006 வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் ரவிராஜ் கொழும்பு நாரகேன்பிட்டிய மனிங்ரவுனில் உள்ள அவரது வீட்டுக்கருகில் அவர் மீது இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிராஜ் சிகிச்சை பலனின்றி காலை 9.20 மணிக்கு உயிரிழந்தார்.

மாமனிதர் விருது

தமிழீழத்தின் அதியுயர் தேசிய விருதான  விருது வழங்கி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கௌரவித்துள்ளார்.</p>நன்றிeelamaravar.blogspot.com

Edited by வாத்தியார்

சிங்கள அரச பயங்கரவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர். இவர் ஒரு அரசியல்வாதி, சட்டத்தரணியாக இருந்துமே கொலைசெய்யப்பட்டார்.

அதேவேளை எல்லா கொலைகளையும் போல, கொலையாளிகள் சுதந்திரமாக உலாவி வருகின்றனர்.

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

ஸ்ரீலங்கா பயங்கரவாதிகளால் அநியாயமாக கொல்லப்பட்டார் இதுவரைக்கு கொலைக்கான நீதி கிடைக்கவில்லை

என் கல்யாணப் பதிவில் இருந்து எல்லாமே ரவிதான் செய்தான் .வீட்டுக்கு வந்தபோது உன்னை மண்டையில் போடுவார்கள் கவனம் என்றேன்."அதற்காகத்தான் போகின்றேன் பேசுவதற்கு" அதுதான்  ரவி என்னிடம் பேசிய கடைசி வார்த்தைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மும் மொழிகளிலும் புலமை வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரவிராஜ் அவர்களின் இழப்பு, எமக்கு பேரிழப்பு.

சிறந்த மனிதன்

இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மும் மொழிகளிலும் புலமை வாய்ந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ரவிராஜ் அவர்களின் இழப்பு, எமக்கு பேரிழப்பு.

ரவி ஈழத்தமிழர்களின் ஒலிபெருக்கியாக வந்திருப்பார் என நினைக்கின்றேன்......ஈழத்தமிழர்களின் குரல்வளைகளை அழிப்பதிலேயே சிங்களம் முதலில் கவனமெடுத்தது......ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரது ஆத்ம சாந்திக்காக, அந்த எல்லாம் வல்லவனை இறைஞ்சுகின்றேன்!

  • கருத்துக்கள உறவுகள்

12.11_raviraj_a.jpg

எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ். அருந்தவபாலன்

எமது இளந்தலைமுறையின் விடிவு தேடி களமிறங்கி வீறுநடைபோட்ட ஓர் இளம் அரசியல் தலைவனான மாமனிதர் நடராஜா ரவிராஜ் காவியமாகி இன்று டன் நான்கு ஆண்டுகள் நிறைவு பெறு கின்றன. இந்த 4 ஆண்டுகளில் எமது அரசியல் களம் வேகமான, மோசமான பல மாற்றங்களை அடைந்து, தற்போது இந்நாட்டில் தமிழினத்தின் இருப்பே ஒரு கேள்விக்குறியாக மாறியி ருக்கிறது. இப்போது ரவிராஜ் உயிரோடிருந்திருந் தால் எமக்கு நல்லதொரு அரசியல் தலை மையை வழங்கியிருப்பார் என்றே எண் ணத் தோன்றுகிறது. ஏனெனில் இறுக்க மான அரசியல் சூழ்நிலையிலும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக் கும் பாதையில் தனக்கேயுரித்தான ஆளு மையுடன் ஒரு ஜனநாயகப் போராளியா கத் தடம் பதித்து, போராடும் வல்ல மையை அவர் கொண்டிருந்தார்.

1962ஆம் ஆண்டு ஆடி மாதம் 25ஆம் திகதி ஆசிரியர்களான நடராஜா மங்களேஸ்வரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ரவிராஜ். சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியிலும், பின் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும் கல்வி கற்று, அதன்பின் சட்டக் கல்லூரியில் பயின்று 1989ஆம் ஆண்டு சட்டத்தரணியாகக் கொழும்பில் தனது பணியைத் தொடங் கினார். அக்காலத்தில் பாதுகாப்புத் தரப் பினரால் கைது செய்யப்பட்டு, சிறையி லடைக்கப்பட்டு சித்திரவதைக்குள் ளான அப்பாவித் தமிழ் இளைஞர்களை மீட்பதற்கு தனது சட்டப்புலமையைப் பயன்படுத்தினார். இதனை விட அவர் களுக்கு ஆதரவளித்து வழிகாட்டுவதி லும் கொழும்பில் முன்னின்று பாடு பட்டு வந்தார். இப்பணியில் அவர் பெற்ற கசப் பான அனுபவங்கள் யாவும் இயல் பாகவே இனப்பற்று மிகுந்திருந்த அவ ரது உள்ளத்தை மேலும் உரமாக்கின. தமிழரின் உரிமைகளை வென்றெடுக் கும் அரசியல் போராட்டக் களத்துக்கு உந்தித்தள்ளவும் இவை காரணிகளாக அமைந்தன. 2001ஆம் ஆண்டு யாழ்ப் பாண மாநகர முதல்வராகப் பதவியேற் றது முதல் தமிழர் அரசியலில் அவர் பிர காசிக்கத் தொடங்கினார். போர்ச் சூழலில் நலிவுற்றிருந்த மாநகர சபையின் பணி களை மீளக் கட்டியெழுப்புவதில் மும் முரமாக ஈடுபட்டார். அதே ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டார். பின் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டி யிட்டு வெற்றிபெற்றார்.

அமரர் ரவிராஜ் நாடாளுமன்ற உறுப் பினராகப் பதவி வகித்த காலம் வெறும் 5 ஆண்டுகள்தான். எனினும், அக்குறு கிய காலப்பகுதியில் எந்தவொரு நாடாளு மன்ற உறுப்பினரும் செய்யமுடியாத பணிகளை அவர் ஆற்றியிருந்தார். இதனை எல்லோரும் அறிவர். எத்தகைய வேலைப் பளு இருந்தாலும் மாதாந்தம் சாவகச் சேரியிலுள்ள அவரது இல்லமான ராஜ் அகத்தில் திரளும் மக்களைச் சந்திப்ப தற்கு அவர் ஒருபோதும் தவறியதில்லை.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதுடன், பிரதேசத்தி லுள்ள கல்விமான்களதும், முதியோர் களதும் ஆலோசனைகளைச் செவிமடுத்து அதன்வழியே, தனது பணிகளைச் செய்து வந்தார். இன்னொரு ஹிரோஷிமா என ரணில் விக்கிரமசிங்கவினால் வர்ணிக் கப்பட்ட அழிந்து போன சாவகச்சேரி நகரத்தை மீளக் கட்டியெழுப்புவதிலும், தென்மராட்சிப் பிரதேசத்தில் மக்களை மீள்குடியேற்றுவதிலும் முன்னின்று உழைத்தார். துன்பப்படுவோருக்குத் தானாகவே முன்வந்து உதவும் பண் பைக் கொண்டிருந்தார். இதனால் தான் அவர் குறுகிய காலத்திலேயே எல்லோ ராலும் விரும்பப்படும் ஒரு தலைவரா னார்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாகத் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத் தையும், அதற்கான நியாயங்களையும் மக்கள் அனுபவித்துவந்த சொல்லொ ணாத் துன்பங்களையும் சிங்கள மக்க ளுக்கும், சர்வதேசத்திற்கும் உரிய முறை யில் கொண்டு சென்றார்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் அவற்றினை மிக லாவகமாகக் கையாண்டு தனது கருத்துக்களைக் கேட் போர் மனதில் உறைக்கவும், உணரவும் வைத்தார். தமிழர் பிரச்சினைகளை வெளிக்கொணர்வதில் உள்நாட்டு, வெளி நாட்டு ஊடகங்களைச் செம்மையான முறையில் பயன்படுத்தினார். குறிப்பாகச் சிங்கள ஊடகங்களை மிகச் செம்மை யான முறையில் பயன்படுத்தி தமிழர் போராட்டத்தின் நியாயங்களை யும், தமி ழர் தாயகத்தின் உண்மை நிலைமை களையும் உடனுக்குடன் சிங்கள மக்க ளிடம் எடுத்துக் கூறினார். இவரது இந் தப் பணிதான் அவரது உயிரைப் பறிப்ப தற்குரிய முதன்மைக் காரணியாக இருந் தது எனப்பரவலாகக் கருதப்பட்டது.

தெற்கிலுள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் அவரை விடுதலைப் புலியாகவே கருதினர். தமிழர் உரிமைக்காகப் போராடுபவர்கள் சிங்கள மக்களின் விரோதிகள் என்ற சிங்கள கோட்பாட்டா ளரின் கூற்றைப் பொய்யென்று சிங்கள ஊடகங்களினூடாக எடுத்துக்கூறி, இனங் களுக்கிடையிலான நல்லுறவை ரவி ராஜ் வளர்த்து வந்தார்.

மனித உரிமைகள் மீது அதீ த நம் பிக்கை கொண்டிருந்த ரவிராஜ் மனித உரிமை அமைப்புகளில் இணைந்து இலங் கையிலுள்ள சகல மக்களதும் உரிமைக் காகக் குரல் கொடுத்து வந்தார். இலங்கை இனப்பிரச்சினைக்கு போர் மூலம் ஒரு போதும் தீர்வு காணமுடியாது என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அவர் ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறையின் கீழ் அதிகாரங்களைப் பகிர்வ தன் மூலமே யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென நம்பினார்.

தமிழர் பிரச்சினைக்கு யுத் தம் மூலம் தீர்வு காணமுடியாது என ராவிராஜ் தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துக் கூறி வந்ததால் தான் அவர் கொல்லப்பட்டார் எனக் கருதிய தென்னிலங்கை சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் அவரது புகழு டலை விகாரமாதேவி பூங்காவுக்குச் சுமந்து சென்று யுத்தம் பிரச்சினைக்குத் தீர்வாகாது எனக் கோஷமெழுப் பினர். கொழும்பில் நடந்த அவரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக் கான சிங்கள மக்களும் தலைவர் களும் கலந்து கொண்டனர். இது ரவிராஜ் இன உணர்வுள்ள ஒரு தமிழனாகவும், நாட் டுப்பற்றுள்ள ஒரு இலங்கையராகவும் திகழ்ந்தமையை எடுத்துக் காட்டியது.

என் அப்பாவை இழந்து துன்பத்தில் வீழ்ந்து விட்டோம் எல்லோரும் இப் போது வருகிறார்கள். அப்பாவின் உடல் புதைக்கப்பட்டு விடும். அத்தோடு எல் லோரும் மறந்து விடுவார்கள். இந்த அர்த்தமுள்ள வார்த்தைகள் ரவிராஜின் இறுதி நிகழ்வின்போது அவரது மகள் பிரவீனாவால் கூறப்பட்டவை. அவர் கூறியது போல ரவிராஜை மட்டுமல்ல தமிழ்மக்களின் விடிவுக்காக தமது உயிர் களைத் தியாகம் செய்த அனைத்து உடன் பிறப்புக்களையும் கூட நாம் மறந்து விட் டோம். இவ்வாறே இன் றைய நிலை மைகள் தமிழர்களின் விடியலை நேசிக் கும் ஒவ்வொருவரையும் எண்ண வும், ஏங்கவும் வைக்கின்றன.

சத்திய இலட்சியத்துக்காக வாழ்ந்த உயர்ந்த மனிதர்களை சாவு என்றும் அழித்து விடுவதில்லை. சரித்திரநாயகர் களாக எமது தேசத்தின் ஆன்மாவில் அவர்கள் என்றும் வாழ்வார்கள் என்று கூறப் பட்ட வார்த்தைகள். தமிழர் வாழ் விலும் வரலாற்றிலும் ரவிராஜ் என்றும் நிலைத்திருப்பார் என்பதையே உணர்த்தி நிற்கின்றன.

12.11_raviraj_b.jpg

http://www.munainews.com/news/index.php?option=com_content&view=article&id=2122:2010-11-12-20-42-39&catid=57:2009-12-31-06-15-47&Itemid=114

  • 11 months later...

[size=5]2006: யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.[/size]

[size=5]=================================================================[/size]

[size=4]மாமனிதருக்கு நினைவு நாள் வணக்கங்கள் ![/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இணைப்புக்கு நன்றி[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மாமனிதருக்கு நினைவு நாள் வணக்கங்கள் ![/size]

இணைப்பிற்கு நன்றி உடையார்

உண்மையில் இந்த திரியில் நான் ஏதாவது எழுதாவிடில் .................நான் மனிதன் அல்ல ........................பலகலைக்கழக அனுமதி கிடைத்தும் சூழ்நிலை காரணமாக வெளிநாடு செல்லவேண்டும் என்ற காரணத்திற்காய் கொழும்ம்புக்கு வந்து இரண்டு மணித்தியாலங்களில் சிறிலங்கா காவல் துறையால் கைது செய்யப்பட்டு d .o என்னும் சட்டத்தின் கீழ் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்பட்டேன் [விடுதலைப்புலி என்னும் பட்டத்துடன் ] என்னுடன் வந்த என் அன்புத்தந்தை எத்தனையோ சட்டத்தரணிகள் மூலம் முயன்றும் முடியாமல் பொய் விட்ட நேரத்தில் அவரது பழைய கூட்டணி நண்பர் மூலம் அவருக்கு அறிமுகமானவேரே .இந்த மதிப்புக்குரிய மாமனிதர் ரவி ராஜ் அவர்கள் ................அவரின் வாதத்திறமையால் நான் பிணையில் வெளியே வந்தேன் .......சிறைச்சாலையில் இருந்து ஒரு வாகனத்தில் எம் இருப்பிடம் நோக்கி அவருக்கருகில் இருந்து பயணம் செய்யும்போது அவர் என்னுடன் சில அரசியல் விடயங்களை உரையாடினார் .............ஆழுமையுடன் ,உண்மையாக உரையாடினார் வயதில் சிறியவனாய் இருந்தாலும் அவரது

விளக்கங்கள் என்னை கவர்ந்தன .ஆனாலும் அமிதலிங்கம் .யோகேஸ்வரனின் மேல் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ................அதன் பின் பல இலட்சங்களை கொடுத்து இங்கு வந்தபின் ...அவரது செயல்பாடுகளையும் ,ஒரு படித்த தமிழனுக்குரிய மாண்பையும் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்

இப்படி ஒரு மாமனிதரை என் வாழ்க்கையில் சந்தித்து அவர் பேச்சை கேட்டதை இன்றுவரை நான் என் நட்பு வட்டாரங்களுக்கு கூறிக்கொண்டே இருக்கிறேன் ....

இறுதியில் அவர் தமிழ் இனத்திற்காய் தன்னை அர்ப்பணித்து ,விடுதலை வீரனாய் வீரமரணமடைந்து ..........மாமனிதராய் தமிழீழ வரலாற்றில் அவரது பெயர் பொறிக்கப்பட்ட போது ..................போராட்டத்தின் உண்மையை உணர்ந்து கொண்டேன் ...............இவர்களை நாங்கள் மறந்தாலும் தமிழீழ வரலாறு மறக்காது என்ற உண்மையையும் உணர்ந்து கொண்டேன் ....................நன்றிகள்

கனடா வந்திருந்த போது அமிரின் கொலை பற்றி கேட்டேன் ,அதற்கான விலை ஒருநாள் அவர்களுக்கு கிடைக்கும் என்றார் .

மிக நேர்மையான ஒரு அரசியல்வாதி .

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதருக்கு நினைவு நாள், அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடா வந்திருந்த போது அமிரின் கொலை பற்றி கேட்டேன் ,அதற்கான விலை ஒருநாள் அவர்களுக்கு கிடைக்கும் என்றார் .

மிக நேர்மையான ஒரு அரசியல்வாதி .

ரவிராஜ்யிடம் உங்களை யாரென்று அறிமுகப்படுத்தினீர்கள்?

ரவிராஜ்யிடம் உங்களை யாரென்று அறிமுகப்படுத்தினீர்கள்?

அந்த தேவை இருக்கவில்லை .

நாட்டில் law college எல்லாம் சுத்தி அடிச்சுத்தான் வந்தோம் .

Edited by arjun

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த தேவை இருக்கவில்லை .

நாட்டில் law college எல்லாம் சுத்தி அடிச்சுத்தான் வந்தோம் .

தங்கள் பாதம் படாத இடம் பூமியில் உண்டா?

தங்கள் பாதம் படாத இடம் பூமியில் உண்டா?

1/3 Hill street.Dehiwala .கொழும்பில் லோயர் சிவபாலனின் (யாழ் மேயராக இருந்தவர் ) இடம் .எமது தங்கு மடம்.பல கதை சொல்லும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.