Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா புலிகளுக்கு எதிராக செயற்பட்டது – நோர்வே

Featured Replies

நோர்வேயில் இந்திய உளவுத்துறை மீது பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கபட்டுள்ளது. 2008ம் ஆண்டுவரை இலங்கை மீது அரசியல் தீர்வை முன்வைக்க விரும்பிய இந்திய உளவுத்துறை 2008க்கு பின்னர் இராணுவ தீர்வை நோக்கி நகர்ந்ததாக எரிக் சுட்டிக்காட்டியுள்ளார்.

அன்ரன் பாலசிங்கத்தை நான் வாஷிங்டன் கொண்டு செல்ல பென்ரக்கனில் அனைத்து அனுமதிகளும் பெற்றுவிட்டேன். அதற்கு பிறகு அது பகிரங்கமானதால் என்மீது பல பிரச்சாரங்கள் ஆரம்பமாகின என்று பொருள் பட அன்றில் இருந்து புலிகளை அழிக்கும் வேலைகள் ஆரம்பமானதாக இந்திய உளவுத்துறை மீது மறைமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் றிச்சட் ஆர்மிரேச்.

இந்தியாவில் இருந்து வந்த ஊடகவியலாளன் நாராயணசாமி இந்தியா இரண்டு பாதைகளில் பயணித்தது எனவும் பாலசிங்கம் மரணிக்க முதல் ஒரு இந்தியாவும் அதற்கு பின்னரான காலப் பகுதியில் வேறு ஒரு இந்தியாவும் இலங்கை விடயத்தில் பயணித்ததாக இந்திய உளவுத்துறைமீதும் கொள்கை வகுப்பாளர்கள் மீதும் இறுதி யுத்தம் மீதான பழிக் குற்றச்சாட்டுக்கள் பாய்ந்தன.

தமிழர்கள் சார்பாக கலந்துகொண்ட நடராஜா சுதா தமிழர் தரப்பு நியாயத்தை வெளிப்படுத்தினார். மிலிந்த மொறகொடவும் இந்திய உளவுத்துறை மீது இராஜதந்திர ரீதியில் குற்றச்சாட்டுக்களை அடுக்கிக் கொண்டே போனார்.

நோர்வே ஆய்வறிக்கையில் இறுதியாக நோர்வே எப்பவோ அதாவது ஆரம்பத்திலேயே இலங்கையில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும் என்று இறுதித் தீர்மானம் எடுத்தனர். இந்திய அரசாங்கத்தின் சார்பிலும் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் எவரும் கலந்துகொள்ளவில்லை.

http://www.tamilthai.com/?p=30219

  • Replies 87
  • Views 6.5k
  • Created
  • Last Reply

நான் சொல்லுவது 87 யூலையில் ஏற்படுத்தப்பட்ட இலங்கை -இந்திய ஒப்பந்தம் பற்றியது .

நடந்த அத்தனை பேச்சுவார்ததைகளுக்கு பின்னும் சம்பந்தபட்டவர்கள் விடும் அறிக்கைகளில் முரண்பாடுகள் இருந்தது .அதில் யார் நம்பகமானவர்கள் என அறிய கஷ்டமாகவே இருக்கின்றது .ஆனால் புலிகளால் சொல்லப்பட்ட கருத்துக்களைத்தான் முக்கால் தமிழர்களும் நம்பினார்கள் என்பது உண்மை .இப்போ சாத்திரி எழுதும் சில அரசியல் சம்பந்தமான விடயங்களில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை .முறிந்தபனை பனை பல விடயங்களை அனைத்து தரப்பிலும் குற்றம் வைத்து சொல்லியிருக்கு .

அன்ரன் மாஸ்டர் (சிவகுமார் )கனடாவில் இருந்த போது அவருடன் பலநாள் இந்த ஒப்பந்தம் பற்றி கதைத்தேன்.அவர்இன்றும் முழுப் புலி,பிரபாகரனின் விசுவாசி .புலிகள் தமிழிழத்தை விட குறைந்த தீர்விற்கு வரதயாராக இருக்கவில்லை என்பதே உண்மை .

இந்த ஒப்பந்தம் கையொப்பம் இட பண்ண இந்தியா கொடுத்த விலை மிக அதிகம் .எனக்கு தெரிந்ததை பின்னர் எழுதுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் எல்லாருக்கும் ஒன்று தெளிவாக விளங்கட்டும், நீங்கள் விரும்பினாலென்ன இலாவிட்டாலென்ன, இந்தியாதான் முள்ளிவாய்க்கால் நரபலியாட்டத்தின் சூத்திரதாரி, சிங்களம் நடத்தி முடித்தது இந்தியாவின் போரையே. போர்க்குற்றதிலிருந்து சிங்களமோ அல்லது நீங்கள் காப்பாற்றத் துடிக்கும் இந்தியாவோ தப்பிக்க முடியாது.

இந்தியாதான் முள்ளிவாய்க்கால் நரபலிகளுக்கு சூத்திரதாரி.. இலங்கை ஏவல் பேயாக இருந்து தற்போது தமிழர்களின் இருப்பைக் கபளீகரம் செய்கின்றது.

எனினும் போர்க்குற்றத்தில் இந்தியாவோ, இலங்கையோ மாட்டுப்படுவது பிற பலம் வாய்ந்த சர்வதேச நாடுகளின் நலன்களில்தான் தங்கியுள்ளது. அதையும் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் நடந்த ஒரு பேச்சுவார்த்தை மேசையில் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூறிய ஒரு சொல்லை வைத்துக்கொண்டே புலிகள் தமிழீழத்தை கைவிட்டுவிட்டார்கள். இதற்காகவா இத்தனை அழிவுகள் தியாகங்கள் போராட்டங்கள் ............. என பந்தி பந்தியாக கட்டுரை கட்டுரையாக எழுதி மக்களை கிலி கொள்ளச்செய்தவர்களும் இவர்கள்தான்.

புலிகளை கறுப்பு அல்லது வெள்ளை என்பதற்குள் இருந்து வெளியில் வராமல் அடைத்தவர்களும் இவர்கள் தான்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இது எமது போராட்டம். எம் கண் முன்னே நடந்தது. அதில் நாமும் பங்குதாரர்களாக இருந்தோம்.

இது ஒன்றும் முதலாம் அல்லது இரண்டாம் உலக யுத்தமல்ல. அறிந்ததை எழுதுவதற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

கோட்பாட்டாளர் நாரதர் அவர்களே,

விடயத்துக்கு வாருங்கள். விவாதம் நீங்கள் வைக்கும் மாறாநிலை வாய்பாட்டு அரசியல் பற்றியது.

நிக்காரக்குவா கோட்பாட்டாளர்கள் உங்களைப்போல தவறான மாறாநிலைக் கோட்பாட்டை வைக்கவில்லை. அமைப்பினரை பிழையாக வழி நடத்தவில்லை என்றேன்.

உங்கள் மாறாநிலை வாத அடிப்படையில் எங்கள் நிலம் பறிபோகிறவரை அதிதீவிர விவாதமே வளர்க்கலாம். அப்படி இருக்கிறதைத்தான் எதிரியும் சர்வ தேசத்திலும் பிரந்தியத்திலும் உள்ள எதிரியின் நண்பர்களும் விரும்புகிறார்கள்.

எனது நிலைபாட்டை *தோற்றுப் போனவர்களின் பாடலில்* உறுதியாக வைதிருக்கிறேன்

என் தமிழின் மீதும்

என் கவிதைகள் மீதும் ஆணையிட்டு

நான் அறம் பாடுகிறேன்.

நான் எனது சமரசங்களிலாத

சத்தியதின் பெயரால் சபிக்கிறேன்

எனது மக்களின் இரத்தத்தில் கைகளும் மனங்களும் தோய்ந்தவர்களே

உங்களுக்கு ஐயோ.

தர்மத்தின் சேனையே

என்னை களபலியாக எடுத்துக்கொள்.

தர்ம தேவதையே

எப்பவுமே எதிரிக்கும் போராளிக்கும்

பணியாத தலை பணிந்து

உன்னை பாடித் தொழுதிரந்தேன்.

இனக் கொலைகளுக்குத் தண்டனை கொடு.

கொன்றவர்கள்,

கத்தி கொடுத்தவர்கள்

தடுக்காதவர்கள்

தடுத்தவரைத் தடுத்தவர்கள் மீதெல்லாம்

தர்ம சங்காரம்

ஊழித் தீயாய் இறங்கட்டும்.

‘’’’’’

இனக்கொலையின் சாட்சியங்களை

உலக மன்றுக்கு

சிங்கள பத்திரிகையாளரே கடத்திச் செல்கயில்,

ஏன் ஏன் எங்கள் தாயாதிகள்

நாடு நாட்டாய் சென்று

இனக்கொலைக்கு வக்காலத்து வாங்கினர்?

இந்தக் கொடுமையை எங்குபோய் உரைப்பேன்..

இந்தக் கயமையை எங்கனம் செரிப்பேன்.

“அவர் அறியாத்தே செய்யுன்னதன. அவர்க்கு மாப்பு நல்குக(மலையாளம்).”

தயவ் செய்து கவிதையை முழுமையாக வாசியுங்கள்.

http://puthu.thinnai.com/?p=5723

என்னை அடிவருடி என்கிற உங்களை ஒரு கவிஞனால் என்ன செய்துவிட முடியும். நாரதர் எனக்கும் உங்கலுக்கும் வித்தியாசம் இதுதான். மீண்டும் மீண்டும் முள்ளிவாய்க்கால் வந்தாலும் இனம் அழிந்தாலும் உங்கள் அரைத்த மாவை அரைப்பதே உங்களுக்கு முக்கியம். எனக்கு மக்கள் விடுதலை மட்டுமே முக்கியம்.

எதிரியும் அதிதீவிர யாந்திரிக கோட்பாட்டாளர்களும் ஒரே திசையில் பயணிக்கிறார்கள். உங்கள் பதில் என்ன?

பிரச்சினை உமது இந்திய அடிவருடி அரசியல் பற்றியது.என்ற நாரதரின் வக்கிரமான கூற்று பற்றி யாழ் என்ன நினைக்கிறது?

Edited by poet

"அன்ரன் பாலசிங்கத்தை நான் வாஷிங்டன் கொண்டு செல்ல பென்ரக்கனில் அனைத்து அனுமதிகளும் பெற்றுவிட்டேன். அதற்கு பிறகு அது பகிரங்கமானதால் என்மீது பல பிரச்சாரங்கள் ஆரம்பமாகின என்று பொருள் பட அன்றில் இருந்து புலிகளை அழிக்கும் வேலைகள் ஆரம்பமானதாக இந்திய உளவுத்துறை மீது மறைமுக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் றிச்சட் ஆர்மிரேச்."

அமெரிக்காவுக்கு புலிகளின் பிரதிநிதிகள் போகாமல் பார்த்து கொண்டது பிளேக்கின் முயற்சிகள் என்பது எனது அனுமானம். இவராலேயே தேவையான விடைங்கள் இந்தியாவிற்கு கொடுக்க பட்டிருக்கலாம்.. இந்தியாவுடன் அதிககாலம் தொடர்புள்ள அதிகாரி என்ற முறையில் இந்திய ஊழல்களில் தொடர்பிருக்க கூடியவர். இவர் கில்லாரியின் இந்திய விஜயததையும் குறைத்து விளக்க கஸ்டபட்டவர் அமித்தாச் பதவியை விட்டு விலகியபின் தனக்கு கீழிருந்தோரையும், ராசாங்க அமைச்சின் அப்போதைய அமெரிக்காவின் சீனா பயக்கொள்கைகளையும் கடுமையாக சாடியிருந்தார்.

Edited by மல்லையூரான்

நிக்காரக்குவாவை விட நமது நடவடிக்கைளுடன் ஒத்துபோன பல போராட்டங்கள் யாழில் அலசப்பட்டிருகிறன. நாமக்கு பாதை நிகாரகுவாவில் மட்டும் தான் இருக்கென்பது விட்டுகொடுக்காத அரசியல் போக்கு.

நோர்வே இந்த அறிக்கை தயாரிக்கும் போது தமிழ்நாட்டு செய்தியாளர் ராயப்பாவை வாக்கு மூலத்திற்கு அழைத்திருந்தால் மபியாகாரரின் பழி வாங்கல்களை தெளிவாக கூறியிருப்பர்.

இந்த அறிக்கை இந்தியா தனக்கு மூக்கு போனாலும் எதிரிக்கு சகுனப்பிழையாக இருந்தால் போதும் என்று நடந்ததை காட்டிகொடுத்திருக்கு.

இந்தியா அழித்தது தமிழர்களில் ஒரு பகுதியை மட்டுமே. தமிழ்நாடு இன்னமும் இருக்கு. ஒருநாள் இன்னொரு அண்ணாத்துரை பிறந்து கிந்தியை விரட்டி ஒரு தனிநாடு தமிழர்களுக்கு அமைக்கலாம்.

இந்தியா உண்மையில் நிறையத்தான் இழந்திருக்கு. புலிகளின் தோல்வியால் இனி சரித்திரதிற்கு எட்ட கூடிய நாட்களில் இந்தியா இலங்கையில் காலடி எடுத்து வைக்க முடியாதபடி சீனாவும் இலங்கையும் பாதுகாத்து கொண்டுள்ளன.

மேற்குலகங்களுக்கும் பசப்பு காட்டி இலங்கையில் தான்தோன்றித்தனமாக நடந்து, மிகப்பெரிய இழப்பையும் சந்தித்தபின்னர், எந்த முகத்துடன் இந்த குள்ளநரிப்பேடி ஐ.நா.வில் நிரந்தர உறுப்பினர் பதவி கேட்கபோகிறது?

Edited by மல்லையூரான்

தமிழகத்தமிழன் இந்தியனாக இருக்கும் வரை இந்த அடிவருடித்தனம் தொடரத்தான் போகின்றது. நாம் தமிழகத்துடன் தவிர்க்கமுடியாமல் இணைந்தே இருக்கின்றோம். இது பண்டய வரலாறு முதல் இன்றய சினிமா சீரியல் வரை பிணைப்புடையது. ஈழத்தமிழர் சிறுபான்மை இனமாக இருக்கின்றோம் எமக்கு அடிவிழும் போது எமக்கு சம்மந்தமானவர்களிடமே முதலில் உதவிக்குப் போகின்றறோம். அந்தவகையில் சிங்களவர் அடிக்கின்ற போது நாம் தமிழகத்து உதவியை நாடினோம் , தமிழகம் இந்தியா என்னும் மாயச்சிறைக்குள் இருக்கின்றது.

இந்திய அதிகாரவர்க்கம் என்பது உலகின் மிகமோசமான ஜனநாயகவிரோத சக்தி. நாகரீக வேடமணிந்த காட்டுமிராண்டிச் சக்தி. வீணையி நரம்புகளை மேதுவாக மீட்டுவதுபோன்று மனித நரம்புகளை அறுத்து குருதியை தீர்த்தமாகக் குடிக்கும் ஆன்மீகப் போர்வைக்குள் ஒரு அரக்க சக்தி. மனித உயிர்வதையின் ஓலங்களை கீர்த்தனைகளாக பவ்வியமாக படிக்கொண்டிருக்கும் வேடதாரித்தனம்.முதலில் இந்திய அதிகாரவர்க்கத்தை இந்தியாவுக்குள் இருக்கும் பல மில்லியன் தீண்டத்தகாகத மக்களை வைத்து புரிந்துகொள்ள முற்படவேண்டும். நாள்தோறும் தற்கொலை செய்து செத்து மடியும் விவசாயிகளை வைத்து புரிந்து கொள்ள முற்பட வேண்டும். காஸ்மீரத்து மக்களை, பழங்குடி மக்களை அது எவ்வாறு கொன்றொழிக்கின்றது என்பதை வைத்து புரிந்துகொள்ளவேண்டும். இந்திய அதிகாரவர்க்கம் என்பது எவ்வாறு சாதி மதம் மனுதர்மம் என்று வரலாற்று தடத்தில் உருவாக்கம் பெற்றது என்பதை புரிந்துகொள்ளவேண்டும். சமூகங்களை இனங்களை பிரித்து சிதைத்து ஆழும் சாணக்கியம், முதுகில் குத்தும் மரபு, இவற்றுக்கு ஆன்மீகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தும் திறண் போன்ற பல விடயங்களை உள்ளடக்கிய மனிதகுல விரோதசக்தியாக இந்திய அதிகாரவர்க்கம் இருக்கின்றது.

இந்திய அதிகாரவர்க்கத்தின் ஈழம் மீதான தலையீடு என்பதில் மேலே நான் குறிப்பிட்ட அத்தனை குணங்களும் வெளிப்பட்டது. அதன் விழைவுகளை நாம் அனுபவித்தோம்.

இந்தியாவை நாம் அனுசரிப்பது என்பது தற்கொலைக்கு ஒப்பானது. இது இனிமேல் நடப்பது குறித்து அல்ல மாறாக இதுவரை நடந்தது.

முதலிலி இந்திய அதிகாரவர்க்கத்தின் குணங்கள் மரபுகள் பழக்கவழக்கங்கள் தமிழ்த்தேசியத்துள் கலந்திருப்பதில் இருந்து தமிழ்த்தேசியத்தை தூய்மைப்படுத்துதல் அவசியமானது.

இந்திய அதிகாரவர்க்கத்தின் பிடியில் இருந்த தமிழர்கள் விடுபடுதல் என்பது விடுதலைக்கான முதல்ப்படி. முள்ளை முள்ளால் எடுப்பது போன்று இது சாணக்கியத்தால் மட்டுமே சாத்தியமானது. தமிழகம் இந்திய அதிகாரவர்க்கத்திடம் இருந்து விடுபடுவதும் ஈழம் சிங்கள அதிகாரவர்கத்திடம் இருந்து விடுபடுவதும் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டிலேயே இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது மேற் குறிப்பிட்ட கருத்தைப் பார்த்த பின்.... எமக்கு உங்களது நீண்ட கட்டுரை தேள்வையில்லை.

மகாத்மாகாந்தி தொடக்கம் சோனியா காந்தி வரைக்கும் வந்து நிண்டு......

அடுத்து... ராகுல் காந்தியா?, பிரியங்கா காந்தியின் புருசனா? மகனா? மகளா?

ஆர் காந்திப் பெயர் வைத்திருந்தாலும்.... இந்தியாவை ஆளாலாம் என்னும் முட்டாள் கூட்டங்களை திருத்தவே.... முடியாது.

தமிழ் சிறி,

இந்தியாவை திருத்தும் அளவுக்கு நாம் பலமிக்கவர்களல்ல.

ஆனால் இந்தியாவின் இந்தவிதமான அரசியலை விளங்கிக்கொண்டு

அதற்கு தக்கவிதமாக நாம் செயற்பட்டிருந்தால் இந்த அழிவும் தோல்வியும்

தவிர்க்கபட்டிருக்க கூடும்.

தமிழர் தலைவர்களிலும் பார்க்க சிங்களவர்களின் தலைவர்கள் இந்திய

அரசியலை புரிந்துகொண்டு செயற்படுவதாக தெரிகிறது. அது அவர்களின்

வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாகவும் தெரிகிறது.

கவிஞரே, இன்னும் நான்..... ரோஒ அரசியலுக்கு முதிர்ச்சியடையவில்லை.

அந்த துப்புக்கெட்ட, அரசியலும் எனக்கு வேண்டாம்.

இந்திய புலனாய்வுத்துறை RAW வின் அரசியல் நமக்கு வேண்டாம் என்று நாம் ஒதுக்கிவிட்டாலும் RAW நம்மை விட்டு ஒதுங்கப்போவதில்லை.

ஆகவே நாம் RAWவின் அரசியலால் கடந்தகாலத்தில் போல எதிர்காலத்திலும் கடுமையாக

பாதிக்கப்படப்போகிறோம். இந்த RAWவின் அரசியலை நாம் புரிந்துகொண்டு அதற்கு

தக்கவாறு செயற்படாவிட்டால் நமது மக்களே தொடர்ந்து அழிந்து போவார்கள்.

ஆகவே நாம் இந்த RAWவின் அரசியலையும் இந்திய அரசியலையும் சரியாக புரிந்துகொண்டு

இனிமேலாவது செயற்பட வேண்டும்.

இந்தியா என்றால் அதன் அதிகார வர்க்கம்.அது தான் தமது கொள்கைகளை காலத்துக்குக் காலம் எடுக்கிறது. .... நாம் இந்திய அரச அதிகாரத்துடன் அல்லாமல் அதன் மக்களுடன் ,மக்கள் அமைப்புக்களுடன் எமது போராட்டத்தைக் கொண்டு சென்று இருக்க வேண்டும்.

உலகில் அதிகாரவர்க்கம் இல்லாத நாடு இல்லை. சீனா, அமெரிக்கா, ரஷியா, கியுபா என்று எந்த நாட்டை எடுத்தாலும் அதிகாரவர்க்கம் தான் கொள்கைகளை வகுக்கிறது, முடிவுகளை எடுக்கிறது. ஒரு அதிகாரவர்க்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு இன்னுமொரு அதிகாரவர்க்கத்தின் உதவி தேவையாக இருக்கிறது. இவ்வாறுதான் இஸ்ரேல் முதல் தென்சுடான் வரை வெற்றி பெற்றன.

அதிகாரமற்ற மக்கள் அமைப்புகளுடன் சேர்ந்து போராடுவது என்பது பலமானவர்களின் கூட்டுப்படைகளுக்கு எதிரான பலவீனமானவர்களின் போராட்டமாக அமையும். இறுதியில் பலவீனமானவர்களின் போராட்டம் இலகுவாக நசுக்கப்படும். முள்ளிவாய்க்காலில் நடந்தது இதுவே.

சர்வதேச அரசியலில் நலன்களே தாக்கம் செலுத்துகின்றன, தனி நபர்களோ ஒரு சில அதிகாரிகளோ அல்ல.இந்தியா என்றால் காங்கிரசோ அல்ல.இந்தியா என்றால் அதன் அதிகார வர்க்கம்.அது தான் தமது கொள்கைகளை காலத்துக்குக் காலம் எடுக்கிறது.அந்தக் கொள்கை என்றுமே தேசிய இனங்களின் சுய நிர்ணயப் போரடங்களுக்கும் இந்திய உபகண்ட்டத்தில் ஜன நாயகத்துக்கும் எதிரானாது. இதில் எமது போராட்டமும் விதிவிலக்கானது இல்லை.

பங்களாதேஷ் பாகிஸ்தானில் இருந்து சுயநிர்ணய அடிப்படையில் பிரிவதற்கு இந்திய உதவியது. தமது நலன்களுக்கு சாதகமாக இருந்திருந்தால் தமிழீழம் பிரியவும் இந்தியா உதவியிருக்கும். இந்தியா தமிழீழம் பிரிவது தனது அரசியல் நலன்களுக்கு சாதகமானது என கருதவில்லை.

உண்மையில் தமிழீழம் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமானது என சிறிலங்கா மீண்டும் மீண்டும் பல ஆய்வுகள், கலந்துரையாடல்கள் மூலம் நிருபித்து வந்துள்ளது. தமிழர் தரப்பிலான செயற்பாடுகள் பல சிறிலங்காவின் இந்த நிருபித்தல்களுக்கு ஆதாரங்களை அதிகரித்து வந்திருக்கின்றன. இனிமேலாவது தமிழீழம் இந்திய நலன்களுக்கு சாதமாகனது என்பதை நிருபிக்கும் ஆய்வுகளை நாம் செய்து வெளியிட வேண்டும். இந்திய வெளியுறவு கொள்கைவகுப்பாளர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் விதமாக கலந்துரையாடல்களில் ஈடுபட வேண்டும். நீண்டகாலமாக சிறிலங்கா அரசு நிருபித்ததையும், இந்திய புலனாய்வு துறையும் வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் நம்பிவந்ததையும் மாற்றுவது இலகுவானதல்ல. ஆனால் இந்தியவின் எதிர்ப்புக்கு மத்தியில் தமிழீழம் உருவாகும் சாத்தியம் குறைவு.

நோர்வையின் பின்னால் மேற்குலகம் இருக்கிறது.இன்று தமிழத் தேசிய கூட்ட்மைப்பை கூப்பிட்டு அமெரிக்காவில் மேற்குலகம் கதைப்பதற்க்கும் நோர்வேயின் இந்த அறிக்கைக்கும் சம்பந்தம் இருக்கிறது. மேற்குலகம் இந்திய ஆளும் வர்க்கத்தின் ` தமிழர் விரோதப் ` போக்கைப் புரிந்து கொண்டு , தனது நலங்களின் பாற்பட்டு தந்துவமான ஒரு அணுகுமுறையை எடுக்க இருப்பதயே இது காட்டுகிறது. அது போர்க்குற்றம் என்னும் கத்தியை இந்தியாவை நோக்கியும் திருப்ப முடியும், அதன் மூலம் சிறிலங்கா விடயத்தில் இந்தியா இனி மவுனமாக இருக்க வேண்டும் என்னும் செய்தியைச் சொல்கிறது.

கடந்த மாதத்தில் இருந்து கொடுங்கோல் ஆட்சிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் அமெரிக்க அதிபரினால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நலன்களுக்கு உரிய நடவடிக்கைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அன்றைய தினமே சிறிலங்காவுக்கு மேல் அனுமதியற்று 10 அமெரிக்க தாக்குதல் விமானங்கள் பறந்தன. அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது. இப்போது நோர்வேயின் அறிக்கை வந்துள்ளது.

இவையெல்லாம் அமெரிக்காவின் தேசியநலன்களுக்கான நடவடிக்கைகள். இந்தியாவின் சிறிலங்கா பற்றிய நிலைப்பாடு அமெரிக்காவின் தேசியநலன்களை பாதிக்கும் வகையில் இந்து சமுத்திரத்தில் அமெரிக்க டியாகோ கார்சியா தளத்துக்கு எதிராக முகாமிட சீனாவுக்கு இடமளித்துள்ளது. இனிமேல் இந்தியாவை மீறி அமெரிக்கா நேரடியாக நிலைமையை கையாளவுள்ளதையே இந்த செயற்பாடுகள் காட்டுகின்றன.

ஆனால் அதற்கு நாம் அமெரிக்கா தமிழீழத்தை ஆதரிக்கிறது என்று அர்த்தம் கொள்ள முடியாது. இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்கா தமிழீழம் உருவாக இடமளிக்கும் என்று நம்புவது கடினம். ஆனால் தேவை ஏற்படுமானால் அமெரிக்கா தமிழீழத்தை உருவாக்க தயங்காது என்பதும் உண்மையானது. அந்த தேவையை உருவாக்க இராஜபக்ஷவின் உதவி எமக்கு தேவை. குறிப்பாக கோத்தபாயவும் கே.பி.யும் இதில் நிறைய பங்களிக்க முடியும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் இந்திய அதிகாரவர்க்கத்திடம் இருந்து விடுபடுவதும் ஈழம் சிங்கள அதிகாரவர்கத்திடம் இருந்து விடுபடுவதும் கிட்டத்தட்ட ஒரே நேர்கோட்டிலேயே இருக்கின்றது.

விடுபடுவது முயற்கொம்பாக அல்லவா இருக்கின்றது!

விடுபடுவது முயற்கொம்பாக அல்லவா இருக்கின்றது!

கனவு யார் வேண்டுமானாலும் காணலாம்.நடக்கிற அலுவல்களாக சிந்தியுங்கள்.இப்ப ஜெயலலிதாவின் போக்கும் அப்பிடி இப்படியாக இருக்கு ,இனி ஜெயலலிதாவை திட்டிக்கொண்டு மூன்று,நாலு வருடங்கள் காலத்தை வேண்டுமானால் ஓட்டலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கனவு யார் வேண்டுமானாலும் காணலாம்.நடக்கிற அலுவல்களாக சிந்தியுங்கள்.இப்ப ஜெயலலிதாவின் போக்கும் அப்பிடி இப்படியாக இருக்கு ,இனி ஜெயலலிதாவை திட்டிக்கொண்டு மூன்று,நாலு வருடங்கள் காலத்தை வேண்டுமானால் ஓட்டலாம்.

நடக்க கூடிய அலுவல்கள் என்றால்???????????????

எப்படி நல்ல அடிமைகளாக சிங்களவனுக்கு இருப்பது .............

எஞ்சிய மிஞ்சிய தமிழ் அடையாளங்களை எப்படி உடைப்பது?

இவைதான் இப்போது நடக்க சாத்தியமான விடயங்கள்.

இதை ஏன் உட்கார்ந்து இருந்து யோசிக்கவேண்டும்?

சாதிக்க என்று பிறந்தால் முடியாது என்று எதுவும் இருக்க கூடாது. எங்களிடையே தகுந்த அறிவு இல்லை அது ஒருவரோடு ஒருவரை ஒற்றுமையாக வைக்க விடுவதில்லை.

நீங்களே அடிக்கடி சொலவ்துபோல் தமிழன்தான் தமிழனை அழிக்கிறான். இதை மாற்றவேண்டும் எப்படியாவது எதை செயட்படுத்தவேண்டும். இவைகளை எப்படி சாத்தியமாக்குவது? இவை பற்றிய சிந்தனைகளை முன்வையுங்கள் அதுதான் உங்களை சர்வதேச அரசியல் தெரிந்தவராக அடையளபடுதும். அது தவிர அது முடியாது இதுமுடியாது என்று எழுத எதற்கு அறிவு? அது இல்லாமல் இருந்தால்தான் இன்னும் சிறப்பாக எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை அழிப்பதல்லா​ல் இந்தியாவிடம் வேறு கொள்கை இருக்கவில்லை என்பது மட்டும் விவாதத்திற்கு அப்பால்பட்ட உண்மை.

அது கூட புலிகள் நல்லவர்கள் தவறான பாதைக்கு மாறாத குணம் புலிகளிடம் இருந்தது என்ற ஒரே காரணம்தான்.

இந்திய அதிகார வர்க்கம் மக்களை எய்த்து தான் பிழைப்பு நடத்துகின்றது இதில் தமிழருக்கு கொடுமை செய்தது என்று வியப்பதற்கு ஒன்றுமில்லை. சொந்த மக்களுக்கே இதுதான் நிலைமை. அமெரிக்க கம்பனிகளின் நஷ்ட இலாபங்கள்தான் இனி இந்திய அரசியலை நிர்ணயிட்க போகின்றது அமெரிக்காவில் இதுதான் கால காலமாக நடக்கின்றது. இது தொடர்ந்து ஒரு ௨௦ வருடங்கள் உயார்த்தும். ௨௦ வருடம் கழித்து இந்திய இமய மலையில் இருந்து விழும் என்பதை இலகுவாக மறுக்கமுடியாது. காரணம் இந்த பொருளாதாரம் என்பது கண்ணாடிகளின் பிரதிபலிப்பு அங்கே நிஜம் இல்லை .......... நிஜம் தேவையும் இல்லை. அனால் உண்மை நிலை வரும்போது கஜானாவில் ஏதும் இருக்காது வெறும் விம்பங்களே இருக்கும்.

"இந்தியா தமிழீழம் பிரிவது தனது அரசியல் நலன்களுக்கு சாதகமானது என கருதவில்லை."

1. இந்தியாவிடம் இப்பொது உண்மையான பாதுகாப்பு கொள்கைகள் இல்லை.

2. பிரிவினை இயங்கங்களை இந்தியா தானேதான் ஆக்கி வைத்தது.

3. நோர்வேயின் தற்போதைய அறிக்கை வரைக்கும் இந்தியா தமிழர்களுக்கு எதிர்போக்கு காட்டுகிறது என்பதுதான் அனுமானம். இதற்கும் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகளுக்கும் தொடர்பு இருக்காயின் இந்தியா தமிழர்களை அழித்துவிடத்தான் முயல்கிறது என்பது வெளிப்பாடு. இந்தியாவின் தமிழீழ தமிழர் எதிப்பு கொள்கைக்கும், மலையாள தமிழ்நாட்டுதமிழர் எதிர்ப்பு கொளகைக்கும் தொடர்பு உண்டென்பதும் உண்மை.,

4. அறிக்கையில் இந்தியா தமிழர்களுக்கு தனி நாடு பெற்று கொடுக்க வில்லை என்பதல்ல குறை பாடு. வேண்டுமென்றே தமிழர்களை அழிக்க துணை போனதாகத்தான் குற்றம் சுமத்த பட்டிருக்கிறது.

5. பாலா அண்ணை இயலுமான வரையில் தான் இறப்பதற்குள் இந்தியாவுடன் நட்புறவு ஏற்படுத்த முயற்சித்தார். மேலைநாடுகளில் வசித்தவர், இந்தியாவில் தனது நோயிற்கு மருத்துவம் தேட முயன்றது ஒரு பொருளோடுதான். அவர் இறந்தவுடன் அவரின் முதுகில் குத்தியது போன்று இந்தியா நடந்திருப்பதாகத்தான் அறிக்கை.

6. கனிமொழி இலங்கை அதிபருக்கு பரிசு கொடுத்ததை மட்டும் தான் நமக்கு தெரியும். ஆனால் முழு கேடியான,பல கொலைகளில் குற்றம் சாடப்பட்டவர், அழகிரி மத்திய அரசில் மந்திரியாபிருக்க கனிமொழி மட்டும் ஏன் கருணநிதி குடும்பத்தை பழிவாங்குவதற்க்காக சிறையிருக்க வேண்டி வந்தது என்பதில் ஒரு பொருளிருக்கு. கனிமொழியின் வழக்கில் சோனியாவரைக்கும் பணம் பெற்று இருக்கிறார்கள். உண்மையில் அவவின் அடுத்த அறையில் சோனியா இருந்திருக்க வேண்டும். கனிமொழி சிங்கள் அரசை எதிர்த்து கதைத்தற்க்காக மத்திய அரசிலிருந்து அவவை காப்பாற்றத்தான் கருணநிதி பரிசுடன் அனுப்பிவைத்த்தவர் என்பதை அறிய வேண்டும்.

7.சிங்கள அரசுக்கும் இந்திய அரசுக்கும் ஒருவகையான புரிந்து உணர்வுகளும் இல்லை. உண்மையில் அவர்கள் ஒருவரை ஒருவர் பயங்கர எதிரிகளாகத்தான் பார்க்கிறார்கள். தமக்குள் ஒரு வுலுசமநிலையைத்தான் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இப்படி ஒரு வலு சமநிலையை ஏற்படுத்த தமிழர்களுக்கும் கேந்திரமுக்கியத்துவமான நாடு வேண்டும். இந்தியாவை இலங்கை அனுசரித்து நடந்திருந்தால் சீனா வெளியில் நிற்பாட்ட பட்டிருக்கும். இலங்கையின் தந்திரம் எதிரிக்கு எதிரியை அழைத்து வருவது. இந்தியாவுக்கு சீனா நல்ல match. ஆனால் வியட்நாமை அழைத்து வந்திருக்கு அமெரிக்கவுக்கு. அது எப்படி என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

8.தற்போது மத்திய அரசில் மளையாளிகளின் பேயாட்டம் நடைபெறுகிறது. சோனியா இவர்களை தெரிவது இவர்களின் எச்சில் இலை சூப்பும் நக்கல் நாய் குணத்தால். இவர்கள் சோனியாவிடமும் பணம் பெற்று ராசபக்சாவிடமும் பணம் பெற்றுத்தான் அலுவல் செய்கிறார்கள். தமிழர்களில் யாராவது இப்படி ஒரு யாபாரத்தை திறமையாக செய்வார்களானால் நாம் போகவேண்டிய பாதையும் அதுதான். ஆனாலும் இவர்களின் கைங்கரியம் தான் இந்தியாவிற்கு நோர்வேயின் அறிக்கையில் இடம் தேடிக்கொடுத்திருக்கு.

9.சிங்களவன் பலத்துடன் இருக்கிறான் என்று அஞ்சி நாம் போராடடம் தொடக்கவில்லை. சம்பந்தர் வெளியே வந்ததைகூட எதிர்த்தார்கள். ஆனாலும் அவர் வெளியே வந்தார். அதேமாதிரி இந்தியவின் தமிழர் எதிர்புகளுக்காக நாம் சரணாகதி போராட்டங்கள் நடத்தமுடியாது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

1. இந்தியாவிடம் இப்பொது உண்மையான பாதுகாப்பு கொள்கைகள் இல்லை.

ஒரு அணுவாயுத பிராந்திய வல்லரசு தனக்கென உண்மையான பாதுகாப்பு கொள்கையொன்றை வகுத்துக்கொள்ளவில்லை என்றா சொல்கிறீர்கள்? இவ்வாறான சிந்தனையுடன் எமது மக்களின் போராட்டம் நடத்தப்பட்டிருந்தால் தோல்வியும் பேரழிவும் ஆச்சரியப்படத்தக்க விளைவுகள் அல்ல.

2. பிரிவினை இயங்கங்களை இந்தியா தானேதான் ஆக்கி வைத்தது.

அதே இந்தியா பிரிவினைக்கு ஆதரவல்ல, இயக்கங்களை உருவாக்கியது சிறிலங்கவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேயன்றி தமிழீழத்தை பிரித்து தருவதற்கல்ல என்பதை நாம் 80களில் இருந்து அறிகிறோம். ஒரு வேளை தமிழீழ விடுதலைப்புலிகள் அல்லாத வேறு அமைப்பு போராட்டத்தில் முன்னிலை வகித்திருந்தால் இந்தியா தமிழீழத்தை பிரித்து தந்திருக்கும் என்றா சொல்கிறீர்கள்?

3. நோர்வேயின் தற்போதைய அறிக்கை வரைக்கும் இந்தியா தமிழர்களுக்கு எதிர்போக்கு காட்டுகிறது என்பதுதான் அனுமானம். இதற்கும் இந்தியாவின் பாதுகாப்பு கொள்கைகளுக்கும் தொடர்பு இருக்காயின் இந்தியா தமிழர்களை அழித்துவிடத்தான் முயல்கிறது என்பது வெளிப்பாடு. இந்தியாவின் தமிழீழ தமிழர் எதிப்பு கொள்கைக்கும், மலையாள தமிழ்நாட்டுதமிழர் எதிர்ப்பு கொளகைக்கும் தொடர்பு உண்டென்பதும் உண்மை.,

தமிழ்நாடு இந்தியாவின் வருமானத்தில் கணிசமான பங்கை வழங்கும் ஒரு மாநிலம். தமிழர் இந்தியாவின் மக்கள் தொகையில் குறிப்பித்தக்களவிலான மக்கள். தமிழரை அழிப்பதோ அல்லது தமிழை அழிப்பதோ இந்தியாவின் கொள்கையாக இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? பஞ்சாப் போலவோ, அஸாம் போலவோ தமிழ்நாட்டிலில் பிரிவினைச்சக்திகளுக்கோ அல்லது பொதுவுடமை புரட்சிக்கோ கவனத்தில் எடுக்குமளவுக்கு கூட ஆதரவில்லை. ஆகவே மத்திய அரசு தமிழரை அழிப்பதை கொள்கையாக கொண்டுள்ளது என்று நாம் நம்பி நமது மக்களை வழிநடத்துவோமாக இருந்தால் நாம் மீண்டும் தவறான பாதையில் தோல்வியை நோக்கி போவாதாக அமையலாம்.

7.சிங்கள அரசுக்கும் இந்திய அரசுக்கும் ஒருவகையான புரிந்து உணர்வுகளும் இல்லை. உண்மை ஒருவரை ஒருவர் பயங்கர எதிரிகளாகத்தான் பார்க்கிறார்கள். தமக்குள் ஒரு வுலுசமநிலையைத்தான ் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த வலுச்சமநிலை தான் அந்த புரிந்துணர்வு.

இப்படி ஒரு வலு சமநிலையை ஏற்படுத்த தமிழர்களுக்கும் கேந்திரமுக்கியத்துவமான நாடு வேண்டும்.

அந்த நாடு உருவாக முதலில் தேவையானது இந்த புரிந்துணர்வு. புரிந்துணர்வு உருவாக வலுச்சமநிலைதான் அவசியமானது என்ற வாதம் வலுச்சமநிலையற்றவர்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட முடியாது என மறைமுகமாக தெரிவிக்கிறது. அது உண்மையானால் தோற்றுப்போன ஜப்பானுக்கும், வென்ற அமெரிக்காவுக்கும் இடையிலான புரிந்துணர்வையும் லிபியாவின், போராளிகளுக்கும் அமெரிக்க அரசுக்குமிடையிலான புரிந்துணர்வையும் சாத்தியமற்றதாக்கிறது. ஆகவே வலுச்சமநிலை புரிந்துணர்வுக்கு அவசியமானதல்ல. லிபியாவின் போராளிகள் போல இந்தியாவின் தேவைகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவகையில் தமிழ்மக்கள் தமது விடுதலைக்கான பாதையை வகுத்துக்கொள்வதே அந்த புரிந்துணர்வாக அமையும்.

இந்தியாவை இலங்கை அனுசரித்து நடந்திருந்தால் சீனா வெளியில் நிற்பாட பட்டிருக்கும். இலங்கையின் தந்திரம் எதிரிக்கு எதிரியை அழைத்து வருவது. இந்தியாவுக்கு சீனா நல்ல match. ஆனால் வியட்நாமை அழைத்து வந்திருக்கு அமெரிக்கவுக்கு. அது எப்படி என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அது நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சிங்கள தலைவர்களின் வெற்றிகரமான இராஜதந்திரம். நாம் எந்த எந்த நாடுகளை இந்தியாவை கையாளவும், சீனாவை கையாளவும் அமெரிக்காவை கையாளவும் அழைத்து வந்தோம்?

9.சிங்களவன் பலத்துடன் இருக்கிறான் என்று அஞ்சி நாம் போராடடம் தொடக்கவில்லை. சம்பந்தர் வெளியே வந்ததைகூட எதிர்த்தார்கள். ஆனாலும் அவர் வெளியே வந்தார். அதேமாதிரி இந்தியவின் தமிழர் எதிர்புகளுக்காக நாம் சரணாகதி போராட்டங்கள் நடத்தமுடியாது.

சரணாகதி போராட்டத்துக்கும் சாணக்கியமான போராட்டத்துக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. சாணக்கியமான போராட்டத்தை சரணாகதி போராட்டமாக தவறாக அடையாளம் காண்பதும் போராட்டங்கள் சாணக்கியம் இழந்து தோற்றுப்போக காரணமாகிறது. முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஈங்கே பலருக்கு பழியை யாரிடமாவது போட்டுவிட்டால் தமது கடமை முடிந்தது என்று நினைக்கிறார்கள். ஆகவே, இருக்கவே இருக்கிறார்கள் புலிகள், ஏன் என்று கேட்கக்கூட அட்களில்லை. ஆகவே பழியை எல்லாம் மூட்டையாகக் கட்டி அவர்களின் சமாதிமேல் போட்டுவிட்டால் அவர்களுடன் பழியும் போய்ச் சேரட்டும் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் இருப்பவர்களின் மேல் பழிபோடுவதை விட அழிந்தவர்கள்மேல் போடுவது மிகவும் சுலஅம்.

இன்னும் சிலருக்கு இந்தியாவைக் குறை சொல்லக் கூடாது. ஏனென்றால் கூத்தமைப்பை இந்தியா ஆட்டூவிப்பதால், இந்தியாவைக் குறைகூறினால் அது கூத்தமைப்பைக் குறை கூறியதாக ஆகிவிடும். ஆகவே இந்தியாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. சம்பந்தர் வடக்குக் கிழக்கு எமக்கு வேண்டாம் என்று கூறினாலென்ன, தனிநாடு தேவையென்று கூறினாலென்ன அதை தாமும் ஆதரிப்பதைத் தவிர வேறு வழி அவர்களுக்கிருப்பதாகத் தெரியவில்லை. இன்னும் ஒருபடி மேலே சென்று, புலிகளின் மேல்த்தான் தவறென்று சம்பந்தன் கூறினால், இவர்களும் அதையே சரியென்று வாதிடும் காலம் வெகு தூரத்திலில்லை.

இவர்கள் எல்லாருக்கும் ஒன்று தெளிவாக விளங்கட்டும், நீங்கள் விரும்பினாலென்ன இலாவிட்டாலென்ன, இந்தியாதான் முள்ளிவாய்க்கால் நரபலியாட்டத்தின் சூத்திரதாரி, சிங்களம் நடத்தி முடித்தது இந்தியாவின் போரையே. போர்க்குற்றதிலிருந்து சிங்களமோ அல்லது நீங்கள் காப்பாற்றத் துடிக்கும் இந்தியாவோ தப்பிக்க முடியாது.

இதைதானே ராஜபக்சவும் அவன் தம்பிகளும், எப்போவே தெளிவாக கூறிவிட்டார்களே.அதுவும் பாராளுமண்றத்திலேயே கோத்தாகூறினான்.

நடக்க கூடிய அலுவல்கள் என்றால்???????????????

எப்படி நல்ல அடிமைகளாக சிங்களவனுக்கு இருப்பது .............

எஞ்சிய மிஞ்சிய தமிழ் அடையாளங்களை எப்படி உடைப்பது?

இவைதான் இப்போது நடக்க சாத்தியமான விடயங்கள்.

இதை ஏன் உட்கார்ந்து இருந்து யோசிக்கவேண்டும்?

சாதிக்க என்று பிறந்தால் முடியாது என்று எதுவும் இருக்க கூடாது. எங்களிடையே தகுந்த அறிவு இல்லை அது ஒருவரோடு ஒருவரை ஒற்றுமையாக வைக்க விடுவதில்லை.

நீங்களே அடிக்கடி சொலவ்துபோல் தமிழன்தான் தமிழனை அழிக்கிறான். இதை மாற்றவேண்டும் எப்படியாவது எதை செயட்படுத்தவேண்டும். இவைகளை எப்படி சாத்தியமாக்குவது? இவை பற்றிய சிந்தனைகளை முன்வையுங்கள் அதுதான் உங்களை சர்வதேச அரசியல் தெரிந்தவராக அடையளபடுதும். அது தவிர அது முடியாது இதுமுடியாது என்று எழுத எதற்கு அறிவு? அது இல்லாமல் இருந்தால்தான் இன்னும் சிறப்பாக எழுதலாம்.

சிங்களம் அன்றிலிருந்து இன்றுவரை அரசியல் செய்கின்றது பார்த்து கொஞ்சமாவது படித்திருக்க வேண்டாமா? போட்டுத்தள்ளுகின்ற அரசியல் செய்த உங்களுக்கு இதெல்லாம் விளங்காது தமிழனை என்றுமில்லாத அளவிற்க்கு அடிமைகளாக்கியவர்கள் இன்று நியாயம் சொல்வது தான் வேடிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் அன்றிலிருந்து இன்றுவரை அரசியல் செய்கின்றது பார்த்து கொஞ்சமாவது படித்திருக்க வேண்டாமா? போட்டுத்தள்ளுகின்ற அரசியல் செய்த உங்களுக்கு இதெல்லாம் விளங்காது தமிழனை என்றுமில்லாத அளவிற்க்கு அடிமைகளாக்கியவர்கள் இன்று நியாயம் சொல்வது தான் வேடிக்கை

அதை தானே அண்ணே திரும்ப திரும்ப எழுதுறோம் .............

போட்டுதள்லுற அரசியல் இப்போ முடிவுக்கு வந்திட்டுது........... நாங்களும் ஒதிங்கிட்டம் ஆயுதம் எல்லாம் மௌனம் ஆகிட்டுது.

நீங்கள் உங்கட சர்வதேச அரசியலை நடத்துங்கோ என்றால்.

கடந்த முப்பது வருடம் புலி புலி என்று கிலி பிடிச்சு ஆடினீர்கள். இப்ப புலி செத்த பிறகாவது உங்களின் வண்டவாளத்தை காட்டுங்கள் என்றால். திரும்ப திரும்ப புலியின் வாலையே பிடித்து வைத்திருக்கின்றீர்கள்............. புலி செத்துபோட்டுது விட்டுட்டு வாங்கோ.

(ஒண்டும் இல்லை என்பது எங்களுக்கு எப்பவோ தெரியும்) அல்லது இந்த சர்வதேச அரசியல் பூச்சாண்டியை என்றாலும் விட்டு விடுங்கோ நாங்களும் இந்த உலகிலே இருந்தே இதை எழுதுகிறோம் என்ற உண்மையை கொஞ்சம் புரிஞ்சு கொள்ளுங்கோ.

கடந்த மாதத்தில் இருந்து கொடுங்கோல் ஆட்சிகளுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் அமெரிக்க அதிபரினால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நலன்களுக்கு உரிய நடவடிக்கைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அன்றைய தினமே சிறிலங்காவுக்கு மேல் அனுமதியற்று 10 அமெரிக்க தாக்குதல் விமானங்கள் பறந்தன. அடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்டது. இப்போது நோர்வேயின் அறிக்கை வந்துள்ளது.

இவையெல்லாம் அமெரிக்காவின் தேசியநலன்களுக்கான நடவடிக்கைகள். இந்தியாவின் சிறிலங்கா பற்றிய நிலைப்பாடு அமெரிக்காவின் தேசியநலன்களை பாதிக்கும் வகையில் இந்து சமுத்திரத்தில் அமெரிக்க டியாகோ கார்சியா தளத்துக்கு எதிராக முகாமிட சீனாவுக்கு இடமளித்துள்ளது. இனிமேல் இந்தியாவை மீறி அமெரிக்கா நேரடியாக நிலைமையை கையாளவுள்ளதையே இந்த செயற்பாடுகள் காட்டுகின்றன.

ஆனால் அதற்கு நாம் அமெரிக்கா தமிழீழத்தை ஆதரிக்கிறது என்று அர்த்தம் கொள்ள முடியாது. இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்கா தமிழீழம் உருவாக இடமளிக்கும் என்று நம்புவது கடினம். ஆனால் தேவை ஏற்படுமானால் அமெரிக்கா தமிழீழத்தை உருவாக்க தயங்காது என்பதும் உண்மையானது. அந்த தேவையை உருவாக்க இராஜபக்ஷவின் உதவி எமக்கு தேவை. குறிப்பாக கோத்தபாயவும் கே.பி.யும் இதில் நிறைய பங்களிக்க முடியும்.

அமெரிக்கா தனது பொருளாதார நலன்களை பேண விரும்புகிறது. சீனாவோ அமெரிக்காவின் வெறுப்பை சம்பாதிக்காமல் நெருங்கிவர பார்க்கின்றது. சீனா உலகெங்கும் அமெரிக்காவுடன் போட்டிபோட, அமெரிக்காவுடன் நட்புறவு இல்லாத நாடுகளை தனது வலையில் வீழ்த்தி வருகின்றது. ஆனால் அளவுக்கு மீறியவை செல்லும் பொழுது லிபியாவுக்கு நடந்தமை போன்று நடக்கலாம். அது சீனாவுக்கும் தெரியும்.

மகிந்த கூட்டம் நாட்டுக்கு உள்ளும் வெளியாலும் சில தவறுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. உள்ளுக்குள் சிங்கள மக்களும் வெளியால் மேற்குலகமும் நெருக்கடிகள் தரும் பொழுது மாற்றங்கள் எமக்கு சாதகமாக நிகழும்.

தமிழீழம் கிடைக்குமா என்பது சீனாவின் நகர்வுகளிலும் சிங்கள இராணுவ தளபதிகளிலும் தங்கி இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிந்திய ஆதரவாளர்கள் எல்லாம் இந்த பாட்டை 34 தரம் கேட்டு ரொம்ப தெளிவாகிடுங்கப்பா... :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஸ் உருவாக்கத்தினால் இந்தியா அடைந்த நலன் என்ன? அது எந்த வகையில் தமிழீழத்தின் உருவாக்க நலனுடன் வேறுபடுகிறது?

நான் நினைக்கிறேன் இது ஒரு சரியான உதாரணமாக இருக்காது,எனது கணிப்பின்படி இந்தியா தமிழர்களை கருவேப்பிலை போல பயன்படுத்திவிட்டு தூக்கி எறிவதே அதன் கொள்கை.ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு தெரியாமல் இதுவாகத்தானிருக்கும் என்று நாமாக ஏதாவது நினைத்துக்கொண்டு செய்து கொண்டே இருந்தால் பிள்ளையார் பிடிக்க குரங்க்காக மாறிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு உறவுகளின் அன்றாட நிகழ்வுகளில் (சுக துக்கங்கள்) பங்கெற்பதற்தன் ஊடாகவே கிந்தியாவின் லகானை புரிதல்கள் ஊடாக கட்டுபடுத்தலாம்.. இப்போ கொஞ்சம் இனம் கினம் என்ற மேடை பேச்சு அளவில் இருப்பதை ..சொந்தம்/பந்தம் என்ற ரீதியில் வளர்ந்து மேலும் உந்துதல் செய்யலாம்... (ஊருக்கு ஒரு படித்தவன் தெருவுக்கு வருகிறான் என்றால் சொந்தம் என்று ஆகிவிட்ட பிறகு ஊரெ கிளம்பும்)... அங்க இருந்து கிந்தியா கிந்தியா என கூவுவதால் இந்த பயனும் லேது..

கொல்டி.. அரைகொல்டி(கன்னடன்) ...அரை தமிழன்(மலையாளி) ஊடாக கிந்தியாவின் லாகன பிடிக்க இயலாது.... தேரை இழுத்து தெருவில் விட்ட கதைதான்... :icon_idea: :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஒரு அணுவாயுத பிராந்திய வல்லரசு தனக்கென உண்மையான பாதுகாப்பு கொள்கையொன்றை வகுத்துக்கொள்ளவில்லை என்றா சொல்கிறீர்கள்? இவ்வாறான சிந்தனையுடன் எமது மக்களின் போராட்டம் நடத்தப்பட்டிருந்தால் தோல்வியும் பேரழிவும் ஆச்சரியப்படத்தக்க விளைவுகள் அல்ல.

சோனியா-மலையாளிகளிடம் லஞ்சம் தவிர ஒரு பாதுகாப்பு கொள்கை இல்லை. இவர்களுக்கும் இந்திய அணுவாயுத தயாரிப்புக்கும் ஒரு தொடர்புமில்லை. இவர்களின் திருட்டுகளுக்கு லியாம் பொக்ஸ் மாதிரி இவர்களை பதவி துறக்க வைக்க முடியாது.

அதே இந்தியா பிரிவினைக்கு ஆதரவல்ல, இயக்கங்களை உருவாக்கியது சிறிலங்கவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவேயன்றி தமிழீழத்தை பிரித்து தருவதற்கல்ல என்பதை நாம் 80களில் இருந்து அறிகிறோம். ஒரு வேளை தமிழீழ விடுதலைப்புலிகள் அல்லாத வேறு அமைப்பு போராட்டத்தில் முன்னிலை வகித்திருந்தால் இந்தியா தமிழீழத்தை பிரித்து தந்திருக்கும் என்றா சொல்கிறீர்கள்?

M.G.R. காலங்களில் இந்த புதுக்கதை தோன்றியிருக்க வில்லை. "நாங்கள் கூறியதை கேட்டிருந்தால் இன்று பிரபாகரன் தமிழீழத்தின் முடிசூடா மன்னாக வீற்றிருந்திருப்பார்" - பி. சிதம்பரம்(2009) யார் அவரை முடிசூடாமன்னாக்கியிருப்பர்கள்? சிதம்பரம் கூட்டம்

தமிழ்நாடு இந்தியாவின் வருமானத்தில் கணிசமான பங்கை வழங்கும் ஒரு மாநிலம். தமிழர் இந்தியாவின் மக்கள் தொகையில் குறிப்பித்தக்களவிலான மக்கள். தமிழரை அழிப்பதோ அல்லது தமிழை அழிப்பதோ இந்தியாவின் கொள்கையாக இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? பஞ்சாப் போலவோ, அஸாம் போலவோ தமிழ்நாட்டிலில் பிரிவினைச்சக்திகளுக்கோ அல்லது பொதுவுடமை புரட்சிக்கோ கவனத்தில் எடுக்குமளவுக்கு கூட ஆதரவில்லை. ஆகவே மத்திய அரசு தமிழரை அழிப்பதை கொள்கையாக கொண்டுள்ளது என்று நாம் நம்பி நமது மக்களை வழிநடத்துவோமாக இருந்தால் நாம் மீண்டும் தவறான பாதையில் தோல்வியை நோக்கி போவாதாக அமையலாம்.

திரும்ப திரும்ப வைக்க பட்ட வாதம் ஈழம் பிரிந்தால் தமிழ்நாடும் அதை செய்யும் எனபதுதான். இதன்னல்த்தான் ஈழத்தை பிரித்து கொடுத்தால் இந்தியா முழுமையாக ஈழத்தில் காலூன்றமுடியும் என்ற வாதத்தை அவர்கள் ஏற்கவில்லை.(நான் கூறியிருந்தது ஈழதமிழர்களின் அழிப்பு பற்றி)

இந்த வலுச்சமநிலை தான் அந்த புரிந்துணர்வு.

தமிழைத்தெரிந்து கொள்ள வேண்டும்.வலுச்சமநிலை - ஒருவர் மற்றவருடன் போட்டியாக தன்னை மேம்படுத்தி கொள்வதால் வருவது. இது ஒருவருடன் ஒருவர் போருக்காக(எந்தவகையானாலும்) செய்துகொள்ளும் ஆயதத்தின் ஒரு படி. புரிந்துணர்வின் பலன் ஒருவரின் தாழ்நிலையை மற்றவர் விலக்க முயல்வது.

அந்த நாடு உருவாக முதலில் தேவையானது இந்த புரிந்துணர்வு.

இது விவாதத்தை கோழியா முட்டையா முதல் என்றாக்க பார்க்கிறது. இரண்டுகால் மனிதன் மருத்துவ முனேற்றத்தை பாவித்து தான் நலுகால் குதிரையாக மாற முயற்சிக்க கூடாது. பொறியியலை பாவித்து குதிரையை விட வேகமான கார் செய்ய பழகவேண்டும். அவர்களிடம் அம்பாந்தோட்டை இருந்தால் திருகோணமலையை நாம் அமெரிக்காவுக்கு கொடுத்து நமது வேலையை செய்யலாம்.

இந்தியா எதற்கு?

புரிந்துணர்வு உருவாக வலுச்சமநிலைதான் அவசியமானது என்ற வாதம்

இது புரிந்துணர்வுக்கும் வலுச்சநிலைக்கும் விதியாசம் தெரியாதோரின் அனுமானம்

வலுச்சமநிலையற்றவர்கள் மத்தியில் புரிந்துணர்வு ஏற்பட முடியாது என மறைமுகமாக தெரிவிக்கிறது.

இது திரும்ப திருமப வலுச்சமநிலையையும் புரிந்துணர்வயும் போட்டு குழப்புவதால் வருவது.

அது உண்மையானால் தோற்றுப்போன ஜப்பானுக்கும், வென்ற அமெரிக்காவுக்கும் இடையிலான புரிந்துணர்வையும் .

இது பலவிடையங்களை தெளிய மறுப்பதால் வருவது. அமெரிக்கா யப்பான் மீது போர் தொடுக்க வில்லை. போரில் வென்ற அமெரிக்கா, யப்பானிய அரசியல் அமைப்பை அழித்து தனதை இட்டுவிட்டு சென்றது. இங்கே புரிந்துணர்வு இல்லை. போர் வெற்றி மட்டுமே. நியாமான ஜனநாயகவாதியாக தன்னைக் காட்டிக்கொள்ளும் அமெரிக்காவுக்கு தோற்ற யப்பானை நியாமாக நடத்தவேண்டியிருந்தது. இங்கே புரிந்துணர்வு இருக்காததால் அமெரிக்கா கைமாறு எதிபார்க்கவில்லை. அமைதியாக தனது வெற்றியைக் கொண்டாடியது. ஆனால் இப்போது இருப்பது புரிந்துணர்வு. யப்பானுக்கு அமெரிக்காவிடம் வர்த்தக தேவைகளை விட வட கொறியா சீனாவை கவ்னிக்க அமெரிக்கா வேண்டும். அதனால் அமெரிக்காவின் அரசியல் ஆதயங்களுக்கு யப்பான் இணங்கி கொடுக்கும்.

லிபியாவின், போராளிகளுக்கும் அமெரிக்க அரசுக்குமிடையிலான புரிந்துணர்வையும்

அமெரிக்கா ஓயில் தேவையான நாடு, முஸ்லீம் அடிப்படை வாதிகளுக்கு ஆட்சி அதிகாரம் தேவை. இங்கே வலுச்சமர் ஏற்படவில்லை. எனவே புரிந்துணர்வு ஏற்பட்டது(முழுவதாக இல்லை). சந்தர்பம் கிடைத்தால் இவர்களும் தண்டிக்கப்படுவார்கள். அடிமைக்கும் எஜமானுக்கும் இடையில் புரிந்துணர்வு இல்லை. ஆட்சி அதிகாரம் இருக்கு. ( புரிந்துணர்வு- understanding; வலுச்சமநிலை-equilibrium; ஆட்சி அதிகாரம் coercion)

லிபியாவின் போராளிகள் போல இந்தியாவின் தேவைகளை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவகையில் தமிழ்மக்கள் தமது விடுதலைக்கான பாதையை வகுத்துக்கொள்வதே அந்த புரிந்துணர்வாக அமையும்.

இதை ஏன் இலங்கையுடன் இவ்வளவு நாளும் செய்ய வில்லை.. அப்படி செய்திருந்திருந்தால் இந்தியாவுடன் புரிந்துணர்வுக்கு போகவேண்டிய தேவையே வந்திருக்காதே. "வேண்டா பெண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம்" என்ற பழமொழியைக்கேட்டிருகிறிகளா?

அது நான் ஏற்கனவே குறிப்பிட்டபடி சிங்கள தலைவர்களின் வெற்றிகரமான இராஜதந்திரம். நாம் எந்த எந்த நாடுகளை இந்தியாவை கையாளவும், சீனாவை கையாளவும் அமெரிக்காவை கையாளவும் அழைத்து வந்தோம்?

நாம்தான் இலங்கையை கையாள இந்தியாவை கொண்டு வந்தோம். தயவுசெய்து கவனிக்கவும். திரும்ப திரும்ப பிழையாக விளங்கி கொள்ள வேண்டாம். நாம் இந்தியாவை நமது நண்பன் என்றுதான் நினைத்து அழைத்துவந்தோம். இந்தியா நமக்கு இரட்டை ஒற்றன் வேலை செய்திருக்கிறது. ஏமாற்றிய இந்தியாவுடன் இன்னொரு தொடர்பு வேண்டாமெங்கிறோம். இபோதுதான் விழிதெழுந்தவர்கள் நாம் இந்தியாவிடம் போகலாம் தானே என்கிறார்கள். இலங்கை அழைத்து வருவது எதிரிக்கு எதிரியை.

அமெரிக்காவிடம் உதவி வாங்கிவிட்டு ஏமாற்ற முயன்றோரின் கதைகள் திரும்ப திரும்ப யாழில் அடிபடிகிறது. இலங்கையின் கதையை பொறுதிருந்து பார்த்துவிடுவோமே. இதற்கு இரட்டை ஒற்றன் இந்தியா எதற்கு?

சரணாகதி போராட்டத்துக்கும் சாணக்கியமான போராட்டத்துக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. சாணக்கியமான போராட்டத்தை சரணாகதி போராட்டமாக தவறாக அடையாளம் காண்பதும் போராட்டங்கள் சாணக்கியம் இழந்து தோற்றுப்போக காரணமாகிறது. முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

விளங்காவிட்டால் : எதிரியிடம் போய் உதவி கேட்பது சரணாகதிப்போராட்டம். கருணா ராசபக்சாவிடம் சென்றதுக்கு சரி நாம் இந்தியாவிடம் செல்வது . அது சாணக்கியம் அல்ல. சரணாகதி. கருணா யாரையும் வெல்ல வில்லை. தலைவரை வெல்ல நினைத்து மீளமுடியாத அடிமைத்தனதிற்குள் விழுந்திருகிறான்

Edited by மல்லையூரான்

பொதுவாக சிறிலங்கா காப்பாற்றப்பட்டுள்ளது

இதில எங்கை ஜயா இலங்கை காப்பற்றபப்ட்டு இருக்கு? இலங்கை விரும்பியதை இந்தியா செய்தது......

இதுக்க்க சபேசன் எனபவர் வாஜ்பா கட்சிய விட காங்ரஸ் இருக்கிறது தான் நல்லது என்று கட்டுரை எழுதினவர் இப்ப ஆளைக் காணோம்.

பொதுவாக சிறிலங்கா காப்பாற்றப்பட்டுள்ளது

இதில எங்கை ஜயா இலங்கை காப்பற்றபப்ட்டு இருக்கு? இலங்கை விரும்பியதை இந்தியா செய்தது......

இதுக்க்க சபேசன் எனபவர் வாஜ்பா கட்சிய விட காங்ரஸ் இருக்கிறது தான் நல்லது என்று கட்டுரை எழுதினவர் இப்ப ஆளைக் காணோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.