Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாம்புகளையெல்லாம் காட்டி எங்களைப் பயமுறுத்த முடியாது என்பதையும் ப மே க வினருக்கு அறியத் தருகின்றோம். :lol:

யா ம ச வின் கொடி எது சின்னம் எது என்பது

இன்னும் இரண்டு உறுப்பினர்கள் சேர்ந்தால் தெரியும்

நிச்சயமாக சின்னம் கீரியாக இருக்காது :lol:

பாம்பென்றால்..... படையும் நடுங்கும் என்று, யா.ம.ச. கட்சியினருக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

உங்கள் கட்சி அலுவலகத்துள் பாம்பை விட்டால்.... தெரியும், உங்களது வீரம். :D

  • Replies 1.3k
  • Views 97.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கை வாழ்வதற்கே

எமது கட்சி உறுப்பினர்களை பிரத்தியோகமாக அழைத்து சென்று காட்டிய இடங்கள். இதைவிட அடுத்த கட்டம் சிறப்பா இருக்கு, விரைவில் இணையுங்கள்

ப.மே.க.வின் மத்திய குழு நேற்று அவசரமாக கூடி,

தனது கட்யின் கொடியை மாற்றியுள்ளதை அறியத்தருகின்றோம்.

அத்துடன் எமது கட்யின் சின்னம் பாம்பு .

249px-Purple_flag_waving.svg.png

99ae880d.gifsnake3.gifSnake_caraoke.gif

இரெண்டே நாட்களில் கட்சிக் கொடியை மாற்றியவர்கள் கட்சிக் கொள்கையையும் (அப்படி என்று ஒன்று இருந்தால்) மாற்றுவார்கள். குழப்பவாதிகள். மனிதர்களை மரணிக்கச் செய்யும் கொடிய அரவம் கட்சியின் சின்னமாம். நெஞ்சம் கலங்குதடா கண்மணி.

உறவுகளே சிந்தியுங்கள். செயற்படுங்கள். உங்கள் ஏக்கங்களை நனவாக்க, மடை திறந்த வெள்ளம் போல் திரண்டு வாரீர். 'புதிய சூரியன்' எழுகஞாயிறு வழிகாட்டலில் புதிய உலகம் காண்போம். கருணைமிக்க தாயுள்ளத்ததுடன் 'ஏமுக' உங்களை அரவணைக்கக் காத்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அன்பார்ந்த உறவுகளே.

அரவு எங்கள் சின்னம்

மதுவையும், மாதுவையும் மோகித்து

"வா. வா"வும்

"யா. கா. க"வும்

"யா.க.ம.ச" வும்

தங்கள் கட்சிக் கொள்கைகளை கவர்ச்சியாக வீசி தங்கள் வலையில் பலரை சிக்கவைத்து வருகிறார்கள்..

அவர்களின் பிரச்சார மாயையில் அதிகம் பேர் ஈர்க்கப்படுவது என்பது ஆச்சரியம் இல்லை ஏனென்றால் அங்கு அவர்களின் கழகங்களை அலங்கரிப்பவர்களின் அடிப்படைத்தகுதியே பாமரத்தனந்தான் அது எங்கள் கழகத்திற்கே உரிய விசேட அம்சமாகும்.. ஆதலால் இனி இக்களமாளுமன்றில் பதிவு செய்யக்கூடிய மகாசனங்களே உங்களின் அடிப்படைத்தகுதிக்கான இடம் எங்கிருக்கிறது என்று பார்த்து அவதானமாக பதிவு செய்யுங்கள்.

அரவு என்றால் என்ன? :icon_idea:

பாம்பைக் குறிப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும்

இன்னொன்று (◌ா) தமிழில் இருக்கும் கால் இதன் பயன்பாடு எத்தகையது என்பது எல்லோருக்கும். வாழ்க்கைக்கும் காதலுக்கும் அடிப்படை அரவு செத்தால் அர்த்தம் கெட்டுப்போய்விடும் ஏன் யாழ் என்ற பெயரில் இருந்து அரவை எழுத்துவிட்டால் அது கூட 'யழ்" என்று அழகு கெட்டுவிடும். வாழ் வழ் ஆவதும் காதல் கதல் என்று மலினப்படுவதும் இந்த அரவினால்தான் ஆகவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஆக்கம்பெற்ற எங்கள் சின்னமும் மிகுந்த அர்த்தங்கள் நிறைந்தது.

யாழ்களமாளுமன்றின் புதிய பாதைக்கு செம்மையான வழிகளை சமைக்கப்போகும் 'படிக்காத மேதைகள் கழகம்" இன்னும் உங்கள் வரவுகள் இணைவுகள் நாடி தோமழையுடன் காத்திருக்கிறது

நீங்கள்தவறவிடும் தருணங்கள் வாழ்க்கையில் ஏக்கஙகளாகி உயிரை அரித்து விரக்தி நிலைக்குத் தள்ளிவிடும்..ஆகவே தருணங்களைத் தவறவிடாதீர்கள்.

எங்கள் கழகத்தில்

படிக்காதவனும் மேதையாகலாம். :rolleyes:

படித்தவனுக்கு வாதையாகலாம். :icon_mrgreen:

தவறவிடாதீர்கள் வாருங்கள் தோழர்களே.

snake.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஜீவா அவர்களின் தலைமை ஏற்று காதலர் கட்சியில் இணைகிறேன். எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.(அப்பதான் பின்னர் ஆட்சியை பிடிக்கலாம்) நான் எங்கள் கட்சியின் கொள்கையை பரப்புவதற்காக எங்கள் கட்சியில் இணைபவர்களிற்கு தினமும் 10 முத்தங்கள் கொடுப்பதாக தீர்மானித்துள்ளேன் முதலாவதாக எங்கள் தலைவர் ஜீவாவிற்காக இதோ

images.jpg

எங்கள் கட்சியில் இணைந்த சுமங்களா அக்காவை இருகரம் கூப்பி பொன்னாடை போர்த்தி வரவேற்பதோடு :rolleyes: (முத்தம் குடுத்து வரவேற்க முடியாது என்பதை மிகுந்த மனவருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். :o:icon_mrgreen: )

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எமது கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் நியமிக்கிறோம். இந்த நிமிடத்தில் இருந்து உங்கள் கட்சிப்பணியை செவ்வனே செய்யுமாறும் வேண்டுகிறோம். சுமங்களா அக்காவின் வருகை மாற்றுக்கட்சிக்காரர்களின் வயிற்றில் புளிகரைக்கும் என்பதும் யாவரும் அறிந்ததே. :lol:

தமிழ்சிறி அண்ணா,நிழலி அண்ணா போன்ற லொள்ளு பாட்டிகள் எல்லாரும் கட்சியை கலைத்து விட்டு யா.கா.க வில் இணைந்து மோட்சம் பெறுமாறும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறோம். :icon_mrgreen::icon_idea:

[quote

பென்னெ உன் இதயம் கோயில் அல்லவா அதில் நான் பத்தன் அல்லவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மளை மன்னர்கள் சபா கட்சீல செர்த்துக்கப்பா

நீங்கள்தவறவிடும் தருணங்கள் வாழ்க்கையில் ஏக்கஙகளாகி உயிரை அரித்து விரக்தி நிலைக்குத் தள்ளிவிடும்..ஆகவே தருணங்களைத் தவறவிடாதீர்கள்.

எங்கள் கழகத்தில்

படிக்காதவனும் மேதையாகலாம். :rolleyes:

படித்தவனுக்கு வாதையாகலாம். :icon_mrgreen:

தவறவிடாதீர்கள் வாருங்கள் தோழர்களே.

snake.gif

தவறவிடாமல் போய் சேருங்க தோழர்களே ..சேர்ந்தா

படிக்காதவன் மேதையாகிறானோ இல்லியோ....

ஏற்கனவே சேர்ந்தவனுக்கு பக்கவாதம் வரும்!

அதனால் உங்கள் கட்சிப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில்

நீங்களும் மன்னர்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்

உங்கள் பிரச்சாரம் மன்னர்கள் சபைக்கு அவசியம் :D

வாருங்கள் குளவி வந்து கொட்டுங்கள் :lol:

மன்னர்களுக்கு எப்டி ஒரு சபை & ஒரு அரசு வரும்?

பைதவே.. மன்னர்கள் ஓட்டுபோடுவதன் மூலம் தேர்ந்து எடுக்கப்படுவாங்களா?

தேறிடும்!!

குளவி எல்லாம் வந்து , மன்னருக்கா பிரச்சாரம் செய்ய,,,

அவரு என்ன...கிழவி அவ்வையார் கிராண்ட்மா வா? <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தோழர் குளவி அவர்களே உங்கள் கொள்கைகளும் மன்னர்கள் சபையின்

கொள்கைகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. :)

அதனால் உங்கள் கட்சிப் பிரேரணை ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில்

நீங்களும் மன்னர்கள் சபையில் இணைந்து கொள்ளுங்கள்

உங்கள் பிரச்சாரம் மன்னர்கள் சபைக்கு அவசியம் :D

வாருங்கள் குளவி வந்து கொட்டுங்கள் :lol:

ப. மே. க. வின் சதி வலையில் வீழ்ந்து மூத்தகுடி தமிழர்களின் முதல் வீட்டு வராந்தாவில் கூடு கட்டிய எங்களை தூக்கி வீசிய யாழ்கள மன்றத்தலைவரின் விதிகளை

முறியடிக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு குளவிக்கும் ஏற்பட்டுள்ளது.

நாம் வேறொரு கட்சியுடன் கூட்டு வைக்கமாட்டோம் என்று விசயகாந்த் கொள்கை வைத்திருந்தாலும் ப. மே. காவின் ராட்சத வளர்ச்சியை கட்டுபடுத்தி தமிழர்களுக்கு கடி, குத்தை தளராமல் தொடர்ந்து கொடுக்க வேண்டும் எண்டு என்னை எந்த திரிக்கும் சென்றாலும் மக்கள் வற்புறுத்துகிறார்கள்.

நெடுக்காலபோறவர் தமிழர்களுக்குள் ஒற்றுமையை கொண்டுவரும் அபாயம் ஏற்படுவதால், எங்களது கட்சியின் குத்துக்கு ஈடு கொடுக்க கூடிய கடி மன்னர்கள் சபையுடன் சேர்ந்து மாபெரும் புது கட்சி ஒன்றை அறிமுகப்படுத்துகிறோம். (தலைவி குத்தம்மாவை கழட்டி விடுகிறோம் என்று அர்த்தம்)

தலைவர் வாத்தியார், ராஜ ராஜ சோழனுக்கே சோளப்பொரி கொடுத்தவர், முதுகில் குத்துவோரின் குகைக்குள் நரியை விட்டவர், ஆக்கபூர்வமான திரிகளுக்கு சுருக்கு போட்டவர்.... எங்கள் வாத்தியாரின் காலை முதுகாக நினைத்து வணங்குகிறேன். அப்படியே, போன முறை கூட்டாட்சி சேரும் போது பாவித்த கவரிங் பொன்னாடையை அண்ணனுக்கு அணிவிக்கிறேன்.

தலைவர் வாத்தியாரின் வசன பீரங்கியாக எனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன்.

தலைவர் வாத்தியாரின் வசன பீரங்கியாக எனக்கு கிடைத்த பாக்கியத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் வடிக்கிறேன்.

155tdo.jpg

155mm டயலாக் பீரங்கியா மாறிபோன ,,உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் பங்காளி! (நானு வெறும் பார்வையாளர்கட்சி..சோ எல்லாரையும் கலாய்ப்பேனாம்!) <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மளை மன்னர்கள் சபா கட்சீல செர்த்துக்கப்பா

தலீவா, நீங்களே கள்ளத்தொண்டர் பேர்ல வந்திருக்கிறது?

கட்சிக்காக நீங்கள் எவ்வளவு அர்பணிப்பு செய்கிறீர்கள்? இதை அறிவாரா அறிவிலி?

மற்றும், அறிவிலிக்கும் இந்திய ராவுக்கும் தொடர்பிருப்பதாக சுப்பிரமணிய சுவாமி என்னிடம் ஒரு சி.டி.யை தந்திருக்கிறார்.

நேரம் வரும்போது, மக்களுக்கு பொய் கலந்த உண்மையை தெரிவித்து யா. ம.ச. பிரச்சார அணையை கட்டவிழ்த்து விடும்.

(உண்மையிலேயே நீங்கள் ஒரு அப்பாவி தொண்டர் என்றால், உங்களுக்கு தலீவரிடம் பேசி ஊர்புதின மாவட்ட திரிகளின் செயலாளர் பதவி பெற்று தருவேன்)

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் கட்சியும் யாழ் களத்தைக் கட்டுப் படுத்தும் நிலைமை ஏற்படாது எனும் நெடுக்கரின் விளக்கத்தையும் எல்லாக் கட்சிகளினதும் கொள்கைகளையும் (?) பார்த்த பிறகு, இந்த "அனார்கிஸ்ட்" மனம் மாறி "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியில் சேர விரும்புகிறான். உண்மையில் பார்க்கப் போனால் மேதைமை, காதல், மன்னர் தனம், உயர் குழாம் எல்லாமே "வாழ்க்கை வாழ்வதற்கே" கட்சியின் பரந்து விரிந்த கொள்கைப் பரப்பினுள் அடங்குவதால் இந்த நான்கு கட்சிகளும் தங்கள் கட்சிகளைக் கலைத்து விட்டு வா.வா கட்சியில் தொண்டர்களாகச் சேர்ந்து கொள்ள வேண்டுமென்று அழைக்கிறான் இந்த வா.வா தொண்டன்! :D

வாருங்கள் ஜஸ்டின்.ஜஸ்டின் போல் பலருக்கும் எமது கட்சியின் கொள்கை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.வாருங்கள் சாரி சாரியாக வந்து எம்முடன் கை கோருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

155tdo.jpg

155mm டயலாக் பீரங்கியா மாறிபோன ,,உங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள் பங்காளி! (நானு வெறும் பார்வையாளர்கட்சி..சோ எல்லாரையும் கலாய்ப்பேனாம்!) <_<

இதென்ன சின்ன துவக்கை காட்டி பீரங்கி அது இது என்று எங்களது கட்சியை அவமதிக்கிறீர்கள்.

ராஜ ராஜ யாழ் வாத்தியாரை ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் வசனம் எழுத கேட்டும் மறுத்துவிட்டார்.

worlds-largest-silencer.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் எல்லோருக்கும்! வாத்தியாரிடம் பயிலும் மாணவனாக,யாழ் மன்னர்கள் அவையில் ஒரு சேவகனாக அடியேனையும் இணைத்துக் கொள்ள விரும்புகிறேன்! :D :D

தலீவா, நீங்களே கள்ளத்தொண்டர் பேர்ல வந்திருக்கிறது?

கட்சிக்காக நீங்கள் எவ்வளவு அர்பணிப்பு செய்கிறீர்கள்? இதை அறிவாரா அறிவிலி?

எனக்கு அது தெரியாம போக, என்ன இதயமே இல்லாதவனா நானு?

நல்லாவே தெரியுமே!

கட்சிக்காக அவர் செய்ஞ்ச அர்ப்பணிப்புக்கள் லேசானதா?

கட்சி வளர்ச்சி நிதிக்காக ....அறுணாகொடிய கூட அறுத்து வித்திருக்காரே!

தன்னோடத இல்ல... அசந்து தூங்குற நேரம் பார்த்து பக்கத்து வீட்டுகாரனோடத! :)

  • கருத்துக்கள உறவுகள்

நான் வல்லவை அக்காவின் கட்சியில் இணைந்து கட்சி பணிகளை பலமாக முன்னெடுக்க முடிவு செய்து உள்ளேன்!

Edited by புலிக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாருங்கள் ஜஸ்டின்.ஜஸ்டின் போல் பலருக்கும் எமது கட்சியின் கொள்கை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.வாருங்கள் சாரி சாரியாக வந்து எம்முடன் கை கோருங்கள்.

பாவம் ஜஸ்டின். வாழ்க்கை தத்துவம் பேசி கழுத்தறுக்கிற கட்சியில் சேர்ந்துவிட்டார்.

வாழ்க்கை வாழாமல் நாங்கள் என்ன வாழக்காய் பொரியலே செய்யிறம்?

ஜஸ்டின், யா. ம. ச. இப்போது எங்களது அந்தபுர கட்சிக்கு..... ச்சீ....மகளிர் அணிக்கு ஒரு செயலாளர் தேடுகிறோம் என்பதை அறியத்தருகிறோம்.

பிராட் பிட் இந்த பதவியை கேட்டார்.

பதவி கொடுத்தால் முதுகில் குத்த்தும் தமிழருக்கு தான் கொடுப்பேன் என்று அரசர் வேண்டுவதால் உங்களை அழைக்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களமாளமன்ற இயக்குனர்அவர்களுக்கு

படிக்காத மேதைகள் கழகத் தொண்டர்கள்

1.வல்வைசகாறா

2.தமிழ்சிறீ

3.நீலப்பறவை

4.மருதங்கேணி

5.நிலாமதி

6.புலிக்குரல்

தற்சமயம் தோழர் புலிக்குரலும் எம்முடன் இணைந்துள்ளார்.

தோழர் புலிக்குரலை கரங்கள் குலுக்கி எங்கள் கழகத்திடலுக்குள் வரவேற்கிறோம் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வாத்தியாரின் யாழ் கள மன்னர்கள் சபை

என்றகட்சியில் இணைகிறேன்.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பென்றால்..... படையும் நடுங்கும் என்று, யா.ம.ச. கட்சியினருக்கு தெரியாதது ஆச்சரியமாக உள்ளது.

உங்கள் கட்சி அலுவலகத்துள் பாம்பை விட்டால்.... தெரியும், உங்களது வீரம். :D

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அது தெரியாம போக, என்ன இதயமே இல்லாதவனா நானு?

நல்லாவே தெரியுமே!

கட்சிக்காக அவர் செய்ஞ்ச அர்ப்பணிப்புக்கள் லேசானதா?

கட்சி வளர்ச்சி நிதிக்காக ....அறுணாகொடிய கூட அறுத்து வித்திருக்காரே!

தன்னோடத இல்ல... அசந்து தூங்குற நேரம் பார்த்து பக்கத்து வீட்டுகாரனோடத! :)

அறிவிலி, எங்களது தலைவரை இப்படி தாறு மாறாக புகழ்ந்து எனது பதவிக்கு வேட்டு வைக்க முயலாதீர்கள்.

ஒரு அருநாக்கொடியை வைத்தே எங்களது கட்ச்சியை அண்ணன் வாத்தியார் வெறும் மூன்று தொண்டர்களுடன் உலகளவிற்கு வளர்த்திருக்கிறார்.

வார வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலில சுருட்டுற செருப்பு நிதி எல்லாம் சேர்ந்தால், எங்களது பிரச்சார மேடைக்கு மேகன் பாக்ஸ் வந்து அண்ணனுக்கு ஆதரவு தெரிவிப்பார்.

இதை வைத்து காதல் கத்தரிக்காய் கட்சிக்கும் முடிவு கட்டும் திட்டம் எங்களது கோகளுக்கெல்லாம் கொக்காக இருக்கும் வாத்தியாரிடம் இருக்கிறது.

எங்கட மகளிர் அணி தலைவி.

sample-3.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் வாத்தியாரின் யாழ் கள மன்னர்கள் சபை

என்றகட்சியில் இணைகிறேன்.

வாருங்கள் சித்தரே வாருங்கள்.

காதல் கத்தரிக்காய் கட்சி, மக்களை ஏமாத்தி படிக்க வைக்கும் கட்சியில் எல்லாம் சேராமால் சுத்தமான ஊதாரி கட்சியை தேர்ந்தெடுத்தற்கு பாராட்டுக்கள்.

தற்சமயம் தோழர் புலிக்குரலும் எம்முடன் இணைந்துள்ளார்.

தோழர் புலிக்குரலை கரங்கள் குலுக்கி எங்கள் கழகத்திடலுக்குள் வரவேற்கிறோம் :rolleyes:

தோழர் புலிகுரலு ,,உங்க கரங்கள அவங்க குலுக்கும்போது கவனமா இருங்க... மோதிரத்த உருவிடபோறாங்க! :)

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் புலிகுரலு ,,உங்க கரங்கள அவங்க குலுக்கும்போது கவனமா இருங்க... மோதிரத்த உருவிடபோறாங்க! :)

தோழர் அறிவிலி இப்படி வெளியே நின்று ஆள்காட்டிக்குருவிபோல நிற்காமல் எங்கள் கழகத்தில் இணைந்து கொள்ளுங்கள் உருவுறதில் 99 வீதம் உங்களுக்கு ஒதுக்குகிறோம் :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.