Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..!

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றிற்கான உறுப்பினர்கள் விபரம்: யாப்புத் திருத்தம் 02 அடிப்படையில்..!

yarlhouse.jpg

ப.மே.க = 16/32 *12 = 6 + போனஸ் 1 = 7

யா.ம. ச = 6/32 * 12 = 2

ஏ.மு.க = 4/32 * 12 = 2

யா.கா.க = 3/32 * 12 = 1

யா.உ.கு = 2/32* 12 = 1

வா.வா = 1/32 * 12 = 0

யாழ் களமாளுமன்ற திருத்திய யாப்பிற்கு இணங்க.. ப.மே.க ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டிருப்பதால் அதனை 01.01.2012 அன்று ஆட்சியமைக்க சுயாதீன தேர்தல் ஆணையகம் அழைக்கிறது.

நன்றி.

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம். :)

Edited by nedukkalapoovan

  • Replies 1.3k
  • Views 97.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கு மேலாக "யாழ்க்கருத்துக்கள களமாளுமன்றம்" என்ற தலைப்புடன் சிரிப்பு வெடிகளுடன் ஒரு சுயாதீனத் தேர்தலை நடாத்தி முடித்துள்ள தேர்தல் ஆணையாளர் "அஞ்சா நெஞ்சன்" நெடுக்கருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும். இந்த அஞ்சா நெஞ்சனையும் மதிப்பளித்து ப.மே.கழகம் அவருக்கு உகந்த உவப்பான சிறு பரிசை வழங்கி மதிப்பளிக்கிறது :lol:

purple_mens_tie_hanky.jpg

எதிர்காலத்தில் இப்பரிசுப்பொதி மாறவேண்டும் என்று அஞ்சா நெஞ்சனுக்காக படிக்காத மேதைகள் கழகம் பிரார்த்திக்கிறது. :lol: :lol: :icon_idea:

எனக்கு ஊதாப் பூ மேல நிஜமாவே ரெம்பப் பிரியம். இது தொடர்பாக நட்பு வட்ட வலைப்பூவில் பதியப்பட்ட பதிவை இங்கு தருகிறேன்.! நன்றி அக்கா. :)

http://kuruvikal.wordpress.com/page/3/

Edited by nedukkalapoovan

அழகு தமிழில் வல்வை சகாரா வழங்கிய பட்டங்களை யாஹூ வில் மொழிபெயர்த்த பொழுது அர்த்தங்கள் இப்படித்தான் வருகிறது. :lol:

இனி எங்களோடு கலகலப்பாய் இந்தத்திரியில் பயணித்த எதிர்க்கட்சிகளான

"எழுதாத இலக்கியம்"

ஏமுக - ஏக்கமுள்ளோர் கட்சிக்கும்

'கைநாட்டு'

"வம்பர்கள் சபை"

யாமச - யாழ்கள மன்னர்கள் சபைக்கும்

'வம்புக் கூட்டம்'

"திருந்தாத உலகம்"

யாஉகு - யாழ்கள உயர் குழாமுக்கும்

'தெனாவெட்டு'

"காதலர் தேசம்"

யாகாக - யாழ் கள காதலர் கட்சிக்கும்

'மைனர் குஞ்சுகள்'

"வாழ்வோம் இன்றே"

வாவா - வாழ்க்கை வாழ்வதற்கே கட்சிக்கும்

'ஓவர் சாப்பாடும் தண்ணியும்'

"அஞ்சா நெஞ்சன்"

'ட்ரில் மாஸ்டர்'

.................. வழங்கி உவகையோடு கைகள் குலுக்குகிறோம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற ப. மே. க. வுக்கு வாழ்த்துகள்!

மக்களின் முடிவை மகேசன் முடிவாக ஏற்றுக்கொண்டு , ஆளும் கட்சிக்கு எதிரிக் கட்சியாக இல்லாமல் சிறப்பாகச் செயலாற்றும் எதிர் கட்சியாக இருப்போம்!

உங்களின் நல்ல திட்டங்களின் ஆக்கங்களுக்கு ஊக்கம் கொடுப்போம்!

தேசத்தை ,மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு தாக்கம் கொடுப்போம்!

இனி ஏனைய மன்னர்களும் ,இளவரசியும் வந்து தமது கருத்தைத் தெரிவிப்பார்கள்! :D :D

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்றிற்கான உறுப்பினர்கள் விபரம்: யாப்புத் திருத்தம் 02 அடிப்படையில்..!

yarlhouse.jpg

ப.மே.க = 16/32 *12 = 6 + போனஸ் 1 = 7

யா.ம. ச = 6/32 * 12 = 2

ஏ.மு.க = 4/32 * 12 = 2

யா.கா.க = 3/32 * 12 = 1

யா.உ.கு = 2/32* 12 = 1

வா.வா = 1/32 * 12 = 0

யாழ் களமாளுமன்ற திருத்திய யாப்பிற்கு இணங்க.. ப.மே.க ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையைப் பெற்றுக் கொண்டிருப்பதால் அதனை 01.01.2012 அன்று ஆட்சியமைக்க சுயாதீன தேர்தல் ஆணையகம் அழைக்கிறது.

நன்றி.

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

யாழ் கள களமாளுமன்றம். :)

தேர்தல் ஆணையாளருக்கு

இது ஜன நாயகத்திற்கு அப்பாற்பட்டது .:lol:

ஐம்பது வீத மக்களின் ஆதரவை மட்டுமே பெற்ற கட்சிக்கு எப்படி

அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும்.:o

தேர்தல் ஆணையகம் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்

அதைவிட மோசமான முறையில் ஆசனங்களைப் பங்கீடு செய்து

யா ம ச வின் ஆசனங்கள வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.:rolleyes:

12 .5 % வாக்குக் களைப் பெற்ற ஏ மு க விற்கும் 18 . 5 % வாக்குக்களைப் பெற்ற

யா ம ச விற்கும் ஒரே எண்ணிக்கையிலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டது

எந்த வகையில் நியாயம் .:lol:

அதிக வாக்குக்களைப் பெற்றதால் கூடிய ஆசனம்

ஒன்று அளிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு முரணானது :o

இது யா ம ச விற்கு எதிராகச் செய்யப்படும் சதியோ எனத் தோன்றுகின்றது.:o

இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால்

ப மே க கூட்டணி ஆட்சியமைப்பதே உங்கள் ஜனநாயகப்படி

சிறப்பாக அமையும் .:lol:

யா ம ச

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையாளருக்கு

இது ஜன நாயகத்திற்கு அப்பாற்பட்டது . :lol:

ஐம்பது வீத மக்களின் ஆதரவை மட்டுமே பெற்ற கட்சிக்கு எப்படி

அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும். :o

தேர்தல் ஆணையகம் இதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்

அதைவிட மோசமான முறையில் ஆசனங்களைப் பங்கீடு செய்து

யா ம ச வின் ஆசனங்கள வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன. :rolleyes:

12 .5 % வாக்குக் களைப் பெற்ற ஏ மு க விற்கும் 18 . 5 % வாக்குக்களைப் பெற்ற

யா ம ச விற்கும் ஒரே எண்ணிக்கையிலான ஆசனங்கள் ஒதுக்கப்பட்டது

எந்த வகையில் நியாயம் . :lol:

அதிக வாக்குக்களைப் பெற்றதால் கூடிய ஆசனம்

ஒன்று அளிக்கப்படுவது ஜனநாயகத்திற்கு முரணானது :o

இது யா ம ச விற்கு எதிராகச் செய்யப்படும் சதியோ எனத் தோன்றுகின்றது. :o

இந்தத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால்

ப மே க கூட்டணி ஆட்சியமைப்பதே உங்கள் ஜனநாயகப்படி

சிறப்பாக அமையும் . :lol:

யா ம ச

யா.ம.ச வின் ஆதங்கத்தை சுயாதீன தேர்தல் ஆணையகம் முற்றாக விளங்கிக் கொள்ளும் அதேவேளை யா.ம.ச முன்னர் பிரேரித்து தற்போது நடைமுறையில் உள்ள ஆசன ஒதுக்கீட்டில் சில குறைபாடுகள் இருப்பதையும் விளங்கிக் கொள்கிறது.

இருந்தாலும்.. இந்தத் தேர்தலில் மேற்குறித்த நடைமுறைகளின் கீழ் ப.மே.க வுக்கு ஆட்சியமைக்க அதிக வாய்ப்பளித்து அதன் பின்னர் களமாளுமன்றில் கட்சிகள் பிரேரிக்கும் பொறிமுறைகளில் இருந்து தேர்தல் தொடர்பான கூடிய சனநாயகத் தன்மை கொண்ட புதிய பொறிமுறையை உருவாக்கலாம் என்று ஆணையகம் கருதுகிறது. இதற்கு கட்சிகளின் மக்கள் சபையின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்று நம்புகிறது.

நன்றி. :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான ஜனநாயகத்தை சொல்லி கொடுக்க வந்த நாங்கள் பிழையான ஜனநாயகத்தை காட்டகூடாது கஷ்டமோ நஸ்டமோ சரியானதை இந்த பாருக்கு எடுத்து இயம்புவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயகத்துக்கே வகுப்பெடுத்தவன். தமிழன் என்ற நிலையை கெணடு வரவேண்டும்:-)

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிஞ்சிடுச்சா?

இனி

உள்ள வரலாமா?

அப்பாடா

ஒரு மாதிரி எந்த இழப்பும் இல்லாம இந்த தேர்தலில் தப்பியாச்சு. :D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள களமாளுமன்ற பதவியேற்பு நிகழ்வு.

ப.மே.க 01-01-2012 இல் அதிகாரபூர்வமாக பதவி ஏற்று 2012 ம் ஆண்டிற்கான களமாளுமன்றத்தில் ஆளும் கட்சியாக இருந்து செயற்பட... ஏனையவை அதற்கு நல்ல வழிகாட்டிகளாக இருக்கும் பொறுப்பு வாய்ந்த விளிப்புணர்வுள்ள நல்ல எதிர்க்கட்சிகளாக இருக்க சுயாதீன தேர்தல் ஆணையகம் வேண்டிக் கொள்கிறது.

அன்றைய தினமே எதிர்க்கட்சிகளும் ஆளும் கட்சிக்கு நிகராக அவரவர் கட்சிகளின் கொள்கைகளை நிலைநாட்டுவதை உறுதி செய்யும் பதவிப்பிரமானங்களை எடுத்துக் கொள்ளுவார்கள். அத்தோடு எல்லா கட்சிகளும் (ஆளுங்கட்சி + எதிர்க்கட்சிகள்) தமது பொறுப்புணர்ந்து செயற்படுவது அவசியம்.

களமாளுமன்ற பதவி ஏற்பு நிகழ்வை பெரும்பான்மை பெற்ற கட்சியே ஏற்பாடு செய்ய வேண்டும். பிற கட்சிகளும் அதில் பூரணமாக பங்கேற்கலாம்.

பதவி ஏற்பு முடிந்ததும்.. ஆளுக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் களமாளுமன்றப் பதவி நிலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு அதற்குரிய பட்டியலை ஆளும் கட்சியான ப.மே.க வும் பிரதான எதிர்க்கட்சியான யா.ம.ச வும் வெளியிடுவதோடு பிற எதிர்க்கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து யா.ம.ச செயற்படுவது இதில் கட்டாயம் ஆகும். மற்றைய எதிர்க்கட்சிகளுக்கிடையேயும் எதிர்க்கட்சி பதவிநிலைகள் பகிரப்படுவதோடு.. அவை சுழற்றி முறைக்குரியதாக அமைய வேண்டும். சுழற்சி முறைக்குரிய காலத்தை கட்சிகள் தீர்மானிக்கலாம். ஆனால் அது 90 நாட்களுக்கு மேற்படாததாக இருந்தல் வேண்டும்.

ஆளும் கட்சி பதவி நிலைகள்:

பிரதமர் + இரண்டு அமைச்சுக்கள் (மட்டும்) + களமாளுமன்ற சபாநாயகர்+ ஊடகப் பேச்சாளர். (தேர்தலில் பெரும்பான்மை பெறும் கட்சி.. ஆட்சி அமைக்க அழைக்கப்படும். கட்சித் தலைமை பதவி நிலைகளை தீர்மானிக்கும். அதுவே பதவிகளையும் நிரல்படுத்தும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை. மக்கள் சபை.. பதவிக்குரியவர்களை பெரும்பான்மை கொண்டு நிராகரிப்பின்.. பதவி நிலைகள் மாற்றப்பட வேண்டும். ஒருவர் ஒரே தடவையில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது. போதிய உறுப்பினர்கள் இல்லையேல் பதவி வெற்றிடமாக விடப்பட வேண்டும். மக்கள் சபை அந்தப் பதவியை தமக்குள் எடுத்துக் கொண்டு பணி செய்யும்.)

ஆளும் கட்சியில் ஒருவரே ஒரு பதவியை ஒரு குறிப்பிட்ட காலத்தில் வகிக்கலாம்.

எதிர்க்கட்சி பதவி நிலைகள்:

நிழல் பிரதமர் + ஆளும் தரப்பு அமைக்கும் அமைச்சுக்களுக்கு ஒத்த.. இரண்டு நிழல் அமைச்சுக்கள் (மட்டும்) + நிழல் சபாநாயகர்+ நிழல் ஊடகப் பேச்சாளார்+ (எதிர்க்கட்சியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பதவி அளிக்கப்பட வேண்டும். தேர்தலில் பெறும் வாக்குகளின் அடிப்படையில் கட்சிகளுக்கான பதவிகள் நிரல்படுத்தப்படும். பதவிகள் அனைத்தும் சுழற்சி முறைக்குரியவை)

மேலும்.. பதவி ஏற்பின் பின் களமாளுமன்றின் உத்தியோக பூர்வ அமர்வைக் கூட்டி ப.மே.க.. எதிர்கால தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் தமது கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் சபையிடம் ஆலோசனை கேட்கலாம்.

எல்லா களமாளுமன்ற விடயங்களும் இத்தலைப்பின் கீழ் அமைவது அலசப்படுவது சிறப்பு.

தேர்தல் தொடர்பில்.. உருப்படியான எந்த ஆலோசனைகளும் வராவிடத்து தற்போதைய யாப்புத் திருத்தம் 02 இன் கீழ் நடைமுறையில் உள்ள களமாளுமன்ற உறுப்பினர்கள் தொகை தொடர்ந்து தக்க வைக்கப்படும். உருப்படியான ஆலோசனைகள் கிடைக்கப்பெறின்.. சுயாதீன தேர்தல் ஆணைகத்தின் முன் அது கொண்டு வரப்படின்.. அடுத்த தேர்தலின் போது யாப்புத் திருத்தத்தினூடு அது அமுலாக்கப்படும்.

இதனை அனைத்துக் கட்சிகளும் மக்கள் சபையும் ஏற்றுக் கொண்டு பதவியேற்பு நிகழ்வை சிரிக்க சிந்திக்க நடத்தி வரும் ஆண்டில் களமாளுமன்றையும் சிறப்பாக நடத்தி.. யாழுக்கு மேலும் மெருகும்.. நகைச்சுவையும் ஊட்ட.. சுயாதீன தேர்தல் ஆணையகம் பணிவோடு கேட்டுக் கொள்கிறது.

அனைவருக்கும் புத்தாண்டு (2012) நல்வாழ்த்துக்கள். :)

நன்றி.

ஆணையாளர்

சுயாதீன தேர்தல் ஆணையகம்.

சுற்றறிக்கை: 27-12-2011

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு அதிக நேரம் கிடைக்காமையால் இந்த திரியில் முழுமையாக பங்கு கொள்ளாவிட்டாலும்,இந்த திரியில் பங்கு கொன்ட அனைவரும் அருமையாக தமது பங்களிப்பை செய்துள்ளனர்.அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் :)

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிஞ்சிடுச்சா?

இனி

உள்ள வரலாமா?

அப்பாடா

ஒரு மாதிரி எந்த இழப்பும் இல்லாம இந்த தேர்தலில் தப்பியாச்சு. :D :D :D

மன்னா.. உங்களைத் தலைவராப் போட்டதுக்கு சிங்கிள் ஓட்டு கூட போடாமல் விட்டிட்டீங்களே..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதிக திருத்தங்களுக்கு உள்ளான தேர்தல் விதிமுறைகளின்படி வென்றவர்களாக அறிவிக்கக்பட்டவர்களை நினைக்க வந்த கனவில் இருந்து.... :icon_mrgreen:

FlyingPig.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மன்னா.. உங்களைத் தலைவராப் போட்டதுக்கு சிங்கிள் ஓட்டு கூட போடாமல் விட்டிட்டீங்களே..! :lol:

சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றாங்கள் ஆனால் சிங்கிள் ஒட்டும் போடாது என்று சொல்லாமல் விட்டுட்டாங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அதிக திருத்தங்களுக்கு உள்ளான தேர்தல் விதிமுறைகளின்படி வென்றவர்களாக அறிவிக்கக்பட்டவர்களை நினைக்க வந்த கனவில் இருந்து.... :icon_mrgreen:

FlyingPig.jpg

இப்படி எல்லாமா கனவு வருது.... ரொம்பத் தப்பாச்சே.... உங்கள் கனவில் இப்படி இறக்கை கட்டிப்பறப்பது கண்டிப்பாக உங்கள் இனமாகத்தான் இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா.. உங்களைத் தலைவராப் போட்டதுக்கு சிங்கிள் ஓட்டு கூட போடாமல் விட்டிட்டீங்களே..! :lol:

சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றாங்கள் ஆனால் சிங்கிள் ஒட்டும் போடாது என்று சொல்லாமல் விட்டுட்டாங்கள்

அதிகமாக நம்பி ஏமாந்த மன்னர் சபைக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எல்லாமா கனவு வருது.... ரொம்பத் தப்பாச்சே.... உங்கள் கனவில் இப்படி இறக்கை கட்டிப்பறப்பது கண்டிப்பாக உங்கள் இனமாகத்தான் இருக்கும்

பன்றிகளான நாங்கள் புத்தியை உபயோகிப்பவர்கள். எங்களிலேயே பண்ணையினது முழுப் பரிபாலனமும் ஒழுங்குபடுத்தலும் தங்கியுள்ளன. உங்களது உயர்வுக்காக இரவு பகலாக நாம் உழைக்கின்றோம். உங்கள் நிமித்தம் காரணமாகவே நாங்கள் அப்பிள் பழங்களையும் பசும் பாலையும் குடிக்கின்றோம். பன்றிகள் தமது கடமையிலிருந்து தவறும் பட்சத்தில் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

- விலங்குப் பண்ணை, George Orwell

  • கருத்துக்கள உறவுகள்

ஐயய்யோ.... நீங்கள் உங்கள் கடமையில் இருந்து விலகவேண்டாம் திருவாளர் கிருபன் அவர்களே.... :lol:

புத்தாண்டில் காலடியெடுத்து வைக்கும் ப மே க கட்சியின் சார்பில் ஆன்மாவுடன் பேசுதல் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடாகியுள்ளது.ஜனவரி02,2012 மாலை3.00 மணிமுதல் நடு நிசிவரை.பமேக தலைவி வஸா! அவர்கள் உடனுக்குடன் உங்கள் குறைகளை தீர்த்து வைப்பார்.எமது மீடியேட்டர் வடிவேலு ஐயா!அவர்கள் உடனிருந்து மொழிபெயர்புகளை செய்வார்.மன்னர் குழாத்தின் தோல்வி மற்றைய கட்சிகளின் தோல்விக்கான காரணங்களையும் விலாவாரியாக வழங்கவிருக்கிறார்.மற்றும் நெடுக்ஸ் அவர்களுக்கு ஏன் இப்படி ஒரு விபரீத எண்ணம் உருவாகியது என்றும் கண்டறியப்படும்.

address

ghost house lane, Chilwell

450px-MuiShueHangPark_GhostHouse.jpg

ghost-costume-01.jpg

Edited by BLUE BIRD

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதிக திருத்தங்களுக்கு உள்ளான தேர்தல் விதிமுறைகளின்படி வென்றவர்களாக அறிவிக்கக்பட்டவர்களை நினைக்க வந்த கனவில் இருந்து.... :icon_mrgreen:

FlyingPig.jpg

இதில பச்சை பாக்கோட பறக்கிறதே கிருபண்ணா தான். ஏன்னா அவருடைய யா.உ.கு வில அவர் மட்டும் தான் வெற்றி பெற்றுள்ளார். யா.உ.கு கிடைத்த இடம் 1. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா.. உங்களைத் தலைவராப் போட்டதுக்கு சிங்கிள் ஓட்டு கூட போடாமல் விட்டிட்டீங்களே..! :lol:

சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றாங்கள் ஆனால் சிங்கிள் ஒட்டும் போடாது என்று சொல்லாமல் விட்டுட்டாங்கள்

ப.மே.க. வின் இரகசிய வேண்டுகோளை ஏற்று, வாக்களிப்பு நிலையத்துக்கு வராமல் இருந்த...

யா.ம.ச. கட்சியின் தலைவர், மாமன்னர் விசுகு அவர்களுக்கு, நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். :D:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ப.மே.க. வின் இரகசிய வேண்டுகோளை ஏற்று, வாக்களிப்பு நிலையத்துக்கு வராமல் இருந்த...

ஹலோ சிறி, உங்கள் வேண்டுகோள்படியே முதுமையை சாட்டி புள்ளடி போட நான் வரவில்லை...

ஆனால் தங்கள் வாக்குறுதிபடி எந்த பொருளும் செல்வமும் எமக்கு இதுவரை வந்து சேரவில்லை என்பதை வருத்தத்துடன், வேதனையுடன், வலியுடன், துயருடன் நினைவூட்டுகிறேன்....

இனி மறுநினைவூட்டல் வெள்ளை வேனில் தான் வரும்..ம்ம்ம்ம்ம்ம்....ம்!

  • கருத்துக்கள உறவுகள்

ஹலோ சிறி, உங்கள் வேண்டுகோள்படியே முதுமையை சாட்டி புள்ளடி போட நான் வரவில்லை...

ஆனால் தங்கள் வாக்குறுதிபடி எந்த பொருளும் செல்வமும் எமக்கு இதுவரை வந்து சேரவில்லை என்பதை வருத்தத்துடன், வேதனையுடன், வலியுடன், துயருடன் நினைவூட்டுகிறேன்....

இனி மறுநினைவூட்டல் வெள்ளை வேனில் தான் வரும்..ம்ம்ம்ம்ம்ம்....ம்!

வாக்குப் போடாதவர்களுக்கு, நாம் அமைத்துள்ள அரசில்.... கூப்பன் அரிசி கூடக் கிடைக்காது :D .

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்துக்கே.... முதல் பெண் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா.

யாழ் களமாளுமன்றத்தின் முதல் பிரதமரையும் பெண்ணாக தேர்ந்தெடுத்தமைக்கு... யாழ் கள வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.

01.01.2012 ல் இருந்து யாழ் களமாளுமன்ற ஆட்சிப் பொறுப்பை ப.மே.க. உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளும்.

எமது பிரதமர் அவர்கள் 31.12.2011 அன்று, தனது உத்தியாக பூர்வவாசஸ்தலமான "நாவல் மாளிகைக்கு" குடி பெயர்கின்றார்.

இனிமேல்... "வெள்ளை மாளிகையிலிருந்தோ", "அலரி மாளிகையிலிருந்தோ," எமது பிரதமரை சந்திக்க வருபவர்களின் உத்தியோகபூர்வ சந்திப்பு "நாவல் மாளிகையிலேயே"... இடம் பெறும்.

3510838105_0d19893074_z.jpg?zz=1

எமது அமைச்சரவை...

பிரதமர் - மாண்புமிகு வல்வைசகாரா.

சபாநாயகர் - மாண்புமிகு நிலாமதி.

ஊடகப் பேச்சாளர் - மாண்புமிகு தமிழரசு.

பாதுகாப்பு அமைச்சர் - மாண்புமிகு நீலப்பறவை.

வெளிநாட்டமைச்சர் - மாண்புமிகு வடிவேலு.

அமைச்சர்களுக்கான உத்தியோக பூர்வ வாசஸ்தலம் விரைவில் அறிவிக்கப்படும்.

யாழ் களமாளுமன்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை, விமர்சையாக கொண்டாட ப.மே.க. தயாராகிக் கொண்டுள்ளது.

தமிழ்சிறி.

பிரதமரின் அந்தரங்கச் செயலாளார்.

பிரதமர் அலுவலகம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

எமது பிரதமரை சந்திக்க வருபவர்களின் உத்தியோகபூர்வ சந்திப்பு "நாவல் மாளிகையிலேயே" இடம் பெறும்.

Brown_lady.jpg

நாவல் 'மளிகை' சந்திப்பு இப்படி நடக்காமலிருந்தால் சரிதான்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.