Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கல்லுக்குள்ளே ஈரமுண்டு கசிவதும் உண்டு

Featured Replies

பேருந்துக்காக காத்திருந்த அழகான சிங்கள பெண்களின் வாசனைதிரவியம் அவனுக்கு கஸ்தூரியின் ஞாபகத்தை தான் கொடுத்தது.

ம்ம்ம். கஸ்தூரியின் வருகையை எப்பவுமே காட்டி கொடுப்பது அவளின் வாசனை தான்.

அவளுக்கென்றே ஒரு வாசனை.

அதை எங்கே நுகர்ந்தாலும் அவளின் ஞாபகம் தனக்குள்ளே வருவதை அவனால் தவிர்க்க முடிவதில்லை.

கஸ்தூரி என்றே பெயரே அவளின் வாசனைக்காக தான் வைத்தார்களோ அவளின் பெற்றோர்கள்.

அவனின் காற்சட்டைபையினுள் இருந்த பணவுறையை எடுத்து அவளின் புகைப்படத்தை ஒருமுறை பார்த்து கொண்டான்.

அன்று அவளின் பிறந்தநாளன்று, அவனிடம் அவளின் புகைப்பட தொகுப்பை கொடுத்து எந்த படம் வேணும் என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்ன போது..

அவளின் அழகான படங்கள் இருக்க, அவன் எடுத்து கொண்ட அவளின் பிறந்தமேனி புகைப்படம் அது.

தவழும் வயதில் கழுத்திலே ஒரு தங்கசங்கிலியுடன் ஒரு வட்ட மேசைக்கு மேலே இமைவெட்டாது பார்க்கும் அழகான அவளின் புகைப்படம்.

அடிக்கடி கடிகாரத்தை பார்த்துகொண்டு பரபரப்பாக இருந்தாலும் அவனுள் வரும் அவளின் நினைவுகளை அவனால் தவிர்க்க முடியவில்லை.

காத்திருப்பு ஒன்றும் அவனுக்கு புதியதில்லை.

கல்கிசை உதவி காவல்துறை ஆணையகத்துக்கு முன்னால் இருக்கும் அந்த பேருந்து தரிப்பிடத்தில் அவளுக்காக எவ்வளவோ நாட்கள் காத்திருந்திருக்கிறான்.

காவலுக்கு நிற்கும் காவல்துறை அதிகாரிகள் ஆரம்பத்தில் அவனை சந்தேகமாக பார்த்தாலும், அவளை கண்டதும் தெளிவாகிவிடுவார்கள்.

நாட்கள் செல்ல பரிச்சயாமான காதலர்களாகி விட்டார்கள். இரண்டொருமுறை விடுமுறையில் செல்லும் காவலர்கள் கூட அவனையும் அவன் காதலையும் வாழ்த்தியிருக்கிறார்கள்.

கஸ்தூரி பெற்றோருக்கு ஒரே பிள்ளை, வேறு ஒரு பிள்ளையை பெற கூட விரும்பவில்லை என்று கஸ்தூரிக்கே நேரடியாக சொல்லியும் இருக்கிறார்கள். அவ்வளவு பாசம் அவளில்.

அவனும் ஒரு நல்ல இடத்தில் தான் வேலைசெய்கிறான். இருவருக்கும் காதல் மலர்ந்தது கூட அந்த பேருந்து தரிப்பிடத்தில் தான்.

தெமட்டகொட போகும் 154 இலக்க பேருந்துக்காக அவனும், கொட்டேஹென போகும் 155 இலக்க பேருந்துக்காக அவளும் காத்திருக்கையில் தான் காதல் மலர்ந்தது.

காதல் சொல்லி கொண்டு வருவதும் இல்லை சொல்லி வைத்து போவதும் இல்லை.

அவனை விட அவளே அவனை நிரம்பவும் காதலித்தாள்.

அவள் வரும் நேரமாகிவிட்டது.

அவனுக்குள் அவசரம். அவள் வருவதற்குள் போய்விடவேண்டும்.

இப்போ கொஞ்ச நாட்களாக அவர்களுக்குள் ஊடல்.

அவளுக்கு அவன் மீது சந்தேகம் தான் பிரதான காரணம். கொஞ்ச நாட்களாகவே அவனின் நடத்தைகளில் மாற்றம் அவளுக்கு தெளிவாகவே தெரிந்தது.

காதலர்களுக்கு மாற்றங்கள் இலகுவாக தெரிந்துவிடும்.

அவளுடன் மனம் விட்டு பேசுவது குறைவு. சந்திக்கும் நேரங்களை தவிர்ப்பது.

அதையும் விட அவளின் அப்பா வெளிநாட்டிலிருந்து அவளுக்காக வந்து மருமகனை பார்க்க வெள்ளவத்தை கடற்கரை MERY BROWN இல் இரண்டு மணிநேரமாக காத்திருந்தும் அவன் வரவேயில்லை.

அது அவளுக்கு எரிச்சலை கொடுத்திருந்தது.

அவனை தெகிவளை வில்லியம் அரைக்கும் ஆலைக்கு பக்கத்தில் வேறு ஒரு பெண்ணுடனும் கண்டிருந்தாள்.

சிரித்து கதைத்தபடி அருகருகாக வெளிப்படையாக எதையும் கவலைபடாமல் காதலர்கள் போல ..சீ ..இப்போ நினைத்தாலும் அவளுக்கு என்னவோ செய்தது. அவனுமா அப்படி ..

இன்று ஒரு முடிவு காண்பது என்று தான் அவனை அந்த பேருந்து தரிப்பிடத்துக்கு வர சொல்லியிருந்தாள்.

அவனாலும் தவிர்க்க முடியவில்லை. இருந்தாலும் இப்பொது அவனுக்கு மனசு பரபரத்தது. அவள் வருவதற்குள் போய்விடவேண்டும்.

வழக்கமாகவே மெதுவாக நகரும் சொய்சாபுர 155 பேருந்து அன்றைக்கு அதைவிட மெதுவாக நகர்ந்தது கஸ்தூரிக்கு கடுப்பை தான் வரவழைத்திருந்தது.

இன்றைக்கு அவனிடம் நாக்கை புடுங்கிற மாதிரி நான்கு கேள்வி கேட்டே தீருவது என்ற வைராக்கியம், பேருந்தின் ஆமை நகர்வால் கோபமாக மாறியிருந்தது.

தேவைபட்டால் பலபேர் முன்னிலையில் காலணியை கழட்டி கூட அடிப்பது என்று கூட தீர்மானித்து இருந்தாள்.

அவனோ எதுவுமே நடக்காத மாதிரி சிரித்த முகத்துடன் அவள் வருவதற்குள் போய்விட வேண்டும் என்று கடிகாரத்தின் முட்களை பரபரப்புடன் பார்த்தபடி இருந்தான்.

அவளை ஒருமுறை அவளை பார்த்திட மனசு துடித்தாலும் அவளை எதிர்கொள்ளும் சக்தி அவனிடம் இல்லை.

நேரம் மூன்று மணியை நெருங்கி கொண்டிருந்தது.

முன்னால் இருந்த காவல் நிலையத்தில் பரபரப்பாக காவலர்கள் வெளியே வந்து காவல் நிற்க, அந்த காவல் நிலையத்துக்கு பொறுப்பான உதவி காவல்துறை ஆணையாளர் அவரது மெய்பாதுகாவலர்கள் சூழவந்து வண்டியில் ஏறிகொண்டிருந்தார்.

அவனது மனம் ஏனோ அதில் லயிக்கவில்லை. திரும்ப திரும்ப மனசுக்குள் முணுமுணுத்துக்கொண்டான் அவள் வருவதற்குள் போய்விட வேண்டும் .

அவனுக்குள் அருகில் நின்ற அந்த அழகிய சிங்கள பெண்கள் போய், வேறு சில அழகிகள் நின்றிருந்தார்கள்.

அவர்களும் அவர்களின் காதலர்களுக்காக தான் காத்திருக்கிறார்களோ..

அந்த அதிகாரியின் வண்டி, காலி வீதியின் போக்குவரத்து நெரிசலை தாண்டி அந்த பேருந்து நிலையத்தை நெருங்கியபோது..

அவன் அந்த வண்டியை நோக்கி ஓடினான்.

அவனுக்கும் அந்த வண்டிக்கும் இடையில் எதிர்பாராது நுழைந்த முச்சக்கரவண்டியில் இருந்த கர்ப்பிணி தாயைக்கண்டு நிலைகுலைந்தான்.

கணநேரத்தில் அந்த முடிவை எடுத்தான்.

அந்த தாயை காப்பாற்ற அருகில் இருந்த கழிவு நீரோடும் கால்வாய்க்குள் பாய்ந்து கொண்டான்.

பெரும் வெடியோசையும் புகைமண்டலமும் அந்த இடத்தை சூழ்ந்த போது...

கஸ்தூரியை சுமந்த பேரூந்து தெகிவளை சந்தியை தாண்டியிருந்தது.

Edited by அபிராம்

அபிராம் , காதலும் , வீரமும் போட்டி போட்டுக் கடந்து வந்தது எமது பாதை . கயவர்கள் பிடியில் அஸ்திவாரங்கள் தெரியாமலே போய்விட்டது . போகும்போது கூட மனிதத்தை தொட்ட மறவன் . வாழ்த்துக்கள் அபிராம் . தொடருங்கள் :):) :) 1 .

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் கொஞ்ச நாளாக உங்கள் போராட்டம் சம்மந்தமான கதைகளை யாழில் காணவில்லை...தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை யாழில் தாருங்கள்...நீங்கள் கதையோடு வந்த உடன் யாழில் உள்ள சில பேருக்கு வயிற்றை கலக்கிறது

அபிராம்! மனமார்ந்த நன்றிகள்!

நான் கதையெழுதோணும் என்று நினைத்தவுடன் என் மனதுக்கு தோன்றிய கதாநாயகர்களை (நிஜத்திலும் அவர்கள் நாயகர்கள்)வைத்தே எழுதத் தோன்றியது! உங்கள் கதையிலும் அதனை உணர்ந்தேன்! மிக்க நன்றி!

நல்ல கதை........... நல்ல நடை... அதைவிட எம் மாவீரர்களின் மனிதநேயத்தினை உரைத்தவிதம் மிக அருமை! நன்றி..! 3

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள், அபிராம்!

மனதின் சஞ்சலங்கள் மிக அழகாக வெளிப்படுத்தப் பட்டிருக்கின்றன!!!

  • தொடங்கியவர்

கோமகன், ரதி , கவிதை, புங்கையூரன் உங்களின் பதில்களுக்கு நன்றி.

கவிதை, வெளிப்படுத்தபடாத வீரங்களையும் தியாகங்களையும் நாங்கள் இல்லாமல் போனாலும் எம் மக்களின் மனசிலே விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என் கதைகளூடு தெரியபடுத்துவதுண்டு.

அந்த வகையில் உங்களின் மூன்றாவது கண் கதை தான் என்னை மீண்டும் எழுத தூண்டியது. உங்களுக்கு என் மனார்ந்த நன்றிகள்.

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து உங்களின் படைப்புக்களை யாழில் எழுதுங்கள் அபிராம்

Edited by கந்தப்பு

மன உணர்வை அழகாய் காட்சிப் படுத்தியுள்ளீர்கள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அபிராம் கொஞ்ச நாளாக உங்கள் போராட்டம் சம்மந்தமான கதைகளை யாழில் காணவில்லை...தொடர்ந்தும் உங்கள் ஆக்கங்களை யாழில் தாருங்கள்...நீங்கள் கதையோடு வந்த உடன் யாழில் உள்ள சில பேருக்கு வயிற்றை கலக்கிறது

அந்த சிலரில் நான் இல்லை தானே.....ரதி...அபிராம் நல்லதொரு படைப்பு தந்தமைக்கு நன்றிகள்

"வெளிப்படுத்தபடாத வீரங்களையும் தியாகங்களையும் நாங்கள் இல்லாமல் போனாலும் எம் மக்களின் மனசிலே விதைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் என் கதைகளூடு தெரியபடுத்துவதுண்டு."

நிச்சயமாக, நமக்காக தமை ஆகுதியாக்கிய தியாகிகளின் வரலாறுகள் எல்லோரிடத்தும் போய்ச் சேர வேண்டும் என்றால் அதற்கு இப்படியான உண்மைக்கதைகளும் உதவி செய்யும். நாம் அவர்களை என்றும் மறந்திட மாட்டோம் என்ற சேதியையும் அவர்களின் ஆன்மா உணர்ந்தாலே நமக்கு விடிவு நிச்சயம். தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி ........

  • தொடங்கியவர்

ஊக்கம் தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி. நேரம் கிடைக்கும் போது நான் எழுதாமல் விடுவதில்லை.

கல்கி! விடுதலை வேட்கையை யாராலும் அழித்து விட முடியாது என்று எங்களுக்கு காட்டி சென்ற அவர்களின் பாதையை/ உண்மையை நாம் அறிந்திடும் காலம் வெகு தொலைவில் இல்லை.

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் தான் பயிற்சி பாசறைகளில் துயில் எழுப்பும் பாடல்கள். இன்றும் அதிகாலையில் துயிலெழும் போது அந்த பாடல் மனசினுள் கேட்டு கொண்டுதான் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் அபிராமு ..3 வருடமுன்பிருந்து... நான் சமையலுக்கு கஸ்டபட்ட காலத்தில் பேருதவி செய்தவர்கள் தாங்கள் .. தாங்கள் எது இணைத்தாலும் அதற்கு என் சப்போர்ட் உண்டு.. ஏதாவது தனிப்பட்ட சிக்கல் என்றால் எனக்கு தனிமடல் அனுப்பவும் தோழர்

காதலைவிட எடுத்த கடமை பெரிது. என எண்ணியவனுக்கு ஒரு தாய்மை அடைந்த பெண்ணைப் பாதுகாப்பது அதைவிடப் பெரிதெனக் காட்டியமை பாராட்டுக்குரியது. இதனை மொழி பெயர்த்து சிங்கள இராணுவத்துக்கு அனுப்பி வைப்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.