Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம்ம சூப்பர் ஸ்டாரா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

rajinikanth20111113-150.jpg

ரஜினி மட்டும் கட்சி ஆரம்பித்தால் அவரே அடுத்த முதல்வர். அதற்கான நேரம் நெருங்கிவிட்டது. நிச்சயம் தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தை அவர் ஏற்படுத்துவார் என்று சினிமா பிரபலங்கள் தெரிவித்தனர்.ரஜினியின் 62வது பிறந்த நாள் விழா நேற்று வள்ளுவர் கோட்டத்தில் வெகு பிரமாண்டமாக நடந்தது. கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் குவிந்து விட்டது. அனுமதி சீட்டு உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுப்பியும் சுமார் 10000 ரசிகர்கள் வரை குவிந்தனர். வள்ளுவர் கோட்டத்தைச் சுற்றியிருந்த மொத்த பகுதியும் ரஜினி ரசிகர்கள் மயமாகக் காட்சி தந்தது.

வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள் பலவற்றிலுமிருந்து ஏராளமாக பணம் செலவழித்து ரசிகர்கல் வந்திருந்தனர்.விழாவில் பேசிய அத்தனை பிரபலங்களும் சொல்லி வைத்த மாதிரி பேசியது,"தமிழகத்தின் அடுத்த முதல்வர் தலைவர் ரஜினிதான்," என்பதே. மூத்த இயக்குநர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்பட அனைவரும் இதே கருத்தை வலியுறுத்திப் பேசினர். நிச்சயம் அவர் தனிக் கட்சி ஆரம்பிப்பார் என்று மன்ற நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இதனால் உற்சாகத்தின் விளிம்புக்கே போய்விட்ட ரசிகர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். ரசிகர்களின் மனநிலை புரிந்து போலீசாரும் அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டனர்.விழாவுக்கு ரஜினி வருவார் என்று ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தனர். ஆனால் அவர் கடைசிவரை வரவில்லை.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டின் பெயரை மாற்றுங்கள்

அல்லது ஒரு தமிழனை முதல்வராக்குங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த ஆண்டவனே வந்தாலும், தமிழனை எவனும் காப்பாற்ற முடியாது போலத் தான் நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கின்றன!!! :icon_mrgreen:

கருணாநிதியை விட மோசமா செய்ய இவரால் முடியுமா?

டமில் நாட்டில், யார் வேண்டுமானாலும் முதலமைச்சராகலாம் தமிழனைத்தவிர.

"நாங்கள் விரும்புவன மட்டும் உலகில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கப்போவதில்லை. நாங்கள் விரும்பும்படி உலகு அமையவேண்டும் எனின், எங்களிற்குப் பிடிக்காததை எவரும் உருவாக்கக் கூடாது என்பதைக் காட்டிலும் எஙகளிற்கு விரும்பியதை நாங்கள் உருவாக்குவதே வினைத்திறன் மிக்கது. உலகில், ஏதேதோ அதிகாரங்கள் தங்களிற்குப் பிடித்த உலகை சட்டங்களாலும் பலத்தாலும் உருவாக்க முயன்றும் அவர்களிற்கு அது சாத்தியப்படவில்லை. எங்களிற்குப் பிடித்தவற்றை எங்களிற்குப் பிடிக்காதனவை வென்று எம்மால் உருவாக்கமுடியவில்லை எனின், அங்கு தேவைப்படுவது சுயவிமரிசனம் என்பது எனது தாழ்மையான கருத்து."

இன்னுமொருவனின் இந்த கருத்து எங்கும் பொருந்தக்கூடியது என்பதால் இணைக்கின்றேன்

"

Edited by arjun

  • கருத்துக்கள உறவுகள்

யார் வந்தால் எங்களுக்கு என்ன?...அவர்களால் எங்களுக்கு 1 சதத்திற்கு கூட பிரயோசனம் இல்லை...எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!

எவர் என்ன சொன்னா என்ன?

எனக்கு ........... நம்ம தலீவரு மட்டும் , தமிழ் நாட்டுக்கு முதலமைச்சரா வந்தா,,

அடுத்த நாளே திருப்பதிக்கு போய் மொட்டை போட்டுக்குவேன்!

ஏன்னா...

அவர் எங்களுக்கு மொட்டை அடிக்குறதுக்கு , முன்னாடி,

எமக்கு நாமே ... போட்டுகிட்டா,,

கொஞ்சூண்டு கெளரவம்!! :)

"நாங்கள் விரும்புவன மட்டும் உலகில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கப்போவதில்லை. நாங்கள் விரும்பும்படி உலகு அமையவேண்டும் எனின், எங்களிற்குப் பிடிக்காததை எவரும் உருவாக்கக் கூடாது என்பதைக் காட்டிலும் எஙகளிற்கு விரும்பியதை நாங்கள் உருவாக்குவதே வினைத்திறன் மிக்கது. உலகில், ஏதேதோ அதிகாரங்கள் தங்களிற்குப் பிடித்த உலகை சட்டங்களாலும் பலத்தாலும் உருவாக்க முயன்றும் அவர்களிற்கு அது சாத்தியப்படவில்லை. எங்களிற்குப் பிடித்தவற்றை எங்களிற்குப் பிடிக்காதனவை வென்று எம்மால் உருவாக்கமுடியவில்லை எனின், அங்கு தேவைப்படுவது சுயவிமரிசனம் என்பது எனது தாழ்மையான கருத்து."

இன்னுமொருவனின் இந்த கருத்து எங்கும் பொருந்தக்கூடியது என்பதால் இணைக்கின்றேன்

"

நீங்க எதையுமே இணைக்காதீங்க, அர்ஜுன் அண்ணா,,,

உங்களுக்கு பிடித்ததையும், உங்களுக்கு பிடிக்காததையும்,, பேசகூட,,,

புலிகூடாரத்தை தவிர வேற வழியே இல்லையா உங்களுக்கு அர்ஜுன் அண்ணா?

தெரு தெருவாய் சுத்தி , ஆயிரம் மனிதர்களை சந்திச்சாலும்,,,

தெருவோரம் கிடக்குற சொறிநாய் ,,தன்னோட எஜமான பிச்சைகாரனுக்கு கொடுக்கும் மரியாதைகூட,,,

நீங்க வாழ்ந்த தேசத்தில், செத்துப்போன, எங்களுக்கு தர்றதே இல்லியே....

சோ ... மேற்குறிப்பிட்ட பிராணியோட...உங்களை சேர்க்கமாட்டேன்,,,..

ஏன்னா... அது ,உங்க எண்ணங்களைவிட உயர்வானது! :)

நீங்க எதையுமே இணைக்காதீங்க, அர்ஜுன் அண்ணா,,,

உங்களுக்கு பிடித்ததையும், உங்களுக்கு பிடிக்காததையும்,, பேசகூட,,,

புலிகூடாரத்தை தவிர வேற வழியே இல்லையா உங்களுக்கு அர்ஜுன் அண்ணா?

தெரு தெருவாய் சுத்தி , ஆயிரம் மனிதர்களை சந்திச்சாலும்,,,

தெருவோரம் கிடக்குற சொறிநாய் ,,தன்னோட எஜமான பிச்சைகாரனுக்கு கொடுக்கும் மரியாதைகூட,,,

நீங்க வாழ்ந்த தேசத்தில், செத்துப்போன, எங்களுக்கு தர்றதே இல்லியே....

சோ ... மேற்குறிப்பிட்ட பிராணியோட...உங்களை சேர்க்கமாட்டேன்,,,..

ஏன்னா... அது ,உங்க எண்ணங்களைவிட உயர்வானது! :)

அருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் தான்.

போராட போன அனவைருமே என் மதிப்பிற்குரியவர்களே .நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கும் இருந்தார்கள்.அதில் ஒரு சிலரை தியாகி ஆக்கி சிலரை துரோகியாக்கி சந்தியில் கூவி விற்க நான் வியாபாரி அல்ல .

அதற்கு தான் உலகங்கும் புலம் பெயர்ந்து பலர் அலைகின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை தமிழ் நாட்டில் பிறக்காத எவனும் ஆள முடியாது.. ஆனால் வந்து வாழ்ந்து விட்டுப் போகலாம் என்று ஆக்க வேண்டும்..!

மத்தியில் சோனியாவை பிரதமராக்க விரும்பமாட்டினமாம்.... ஆனால் தமிழ் நாட்டில்.. கன்னடத்தில் பிறந்து சினிமாவில் தொழில் செய்ய வந்த.. ரஜனியை.. தலைவான்னு.. தமிழ்நாட்டுக்கே தலைவன் ஆக்குவீனமாம்.

தமிழனை.. எவனாவது ஒருவன் போலியா புகழ்ந்திட்டாலே போதும்.. தமிழன் அவனைத் தூக்கி தலையில வைப்பான்.. தன் எதிர்க்காலத்தைக் குறித்துக் கூட கவலைப்படமாட்டான். இந்தத் தறிகெட்ட நிலையில் இருந்து தமிழர்கள் மீண்டால் அன்றி தமிழ் நாட்டை மட்டுமல்ல.. பண்டைய தமிழர் நிலங்களை தமிழர்கள் ஆள முடியாத நிலை நீடிக்கும்..! அது ஒட்டுமொத்த தமிழர்களின் உலக இருப்புக்கும் ஆபத்தாகவே முடியும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கையோ பிறந்து எங்கையோ வளர்ந்து எங்கையோ குடியேறி அங்கை பத்துவருசம் இருந்து சிற்ரிசன் எடுத்துப்போட்டு........எங்கடை ஆக்கள் அங்கினேக்கை இங்கினேக்கை எம் பியாய் வரேல்லை? எனக்கு ரஜனியின்ரை படம் பெரிசாய் பிடிக்காது எண்டாலும் நியாயம் எண்டு ஒண்டு இருக்கெல்லே?

  • கருத்துக்கள உறவுகள்

எம் பி யாக அந்தத் தொகுதி மக்களின் ஆதரவோடு யாரும் வரலாம்.. அதற்காக.. அந்தந்த நாடுகளை ஆளும் பிரதான தலைவர்களாக குடியேறிகளான தமிழர்கள் வர முடியுமா..???! :o:icon_idea:

அதேபோல் ரஜனி சட்ட மன்ற உறுப்பினராக மக்களால் தெரிவாகலாம். அது அவர் சார்ந்த தொகுதி மக்களின் தெரிவு. ஆனால் தமிழ் நாட்டை ஆளும் முதலமைச்சராக தமிழர்களே அமைய வேண்டும்..! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டுக்கு(பெயருக்கு மட்டும்) என்ன அதிகாரங்கள் இருக்கின்றன?மாநில அதிகாரங்களா?அல்லது நாட்டு அதிகாரங்களா?தமிழ்நாடு தமிழரசு என சொல்கிறார்கள்.அவர்கள் மத்திய அரசமீறி எதுவும்செய்யமுடியுமா?

நாட்டுத்தலைவர்களாக வேற்று சந்ததிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்.உதாரணத்திற்கு அமெரிக்க பிரான்ஸ்தலைவர்கள்!

சோனியாகாந்தியும் பிரதமராக வந்திருப்பார்.சுஷ்மா மொட்டைஅடிக்க வெளிக்கிடாவிட்டிருந்தால்..... :lol:

எங்கேயோ பிறந்து வளர்ந்து ஹொலிவூட்டில் பிரபலமாகி.....அமெரிக்காவின் ஒருசிறிய அரசை ஆண்ட ஒரு நடிகனை தெரியுமா? அதுதான் ........

தமிழ் நாட்டின் பெயரை மாற்றுங்கள்

அல்லது ஒரு தமிழனை முதல்வராக்குங்கள்

எப்டி மாத்தலாம்?

டீச்சருக்கு / ஐ மீன் ..வாத்தியாருக்கு ... ஓவர் டென்ஷன்...!!

வாத்தியார் பேச்சை கேட்டுகிட்டு ,,,

தமிழனை தயவு செய்ஞ்சு , தமிழ் நாட்டுக்கு முதல்வராக்கிடாதீங்க ...

லூசு மக்கா!

***

தமிழ் தமிழ்னு பொலம்புற கருணாநிதி எங்க குரல் வளைய அறுத்து,

அதுல.. ஸ்ரோ போட்டு ரத்தம் குடிச்சான்...!!... .....!!!

மலையாளி எம்ஜிஆர்,, க்கு ...

எங்க ஊர்ல சிலை இருக்கே... அது ஏனாம் வாத்தியாரு அண்ணா.. ?

தமிழை வளர்க்குற கருணாநிதிக்கு ஒண்ணுமே இல்ல..ஏனாம்??

சொல்லிகிட்டே போங்க... கேட்கணும் போல ஆசை இருக்குமா இல்லியா? :)

Edited by இணையவன்

தமிழ்நாட்டுக்கு(பெயருக்கு மட்டும்) என்ன அதிகாரங்கள் இருக்கின்றன?மாநில அதிகாரங்களா?அல்லது நாட்டு அதிகாரங்களா?தமிழ்நாடு தமிழரசு என சொல்கிறார்கள்.அவர்கள் மத்திய அரசமீறி எதுவும்செய்யமுடியுமா?

நாட்டுத்தலைவர்களாக வேற்று சந்ததிகள் வந்துகொண்டிருக்கிறார்கள்.உதாரணத்திற்கு அமெரிக்க பிரான்ஸ்தலைவர்கள்!

சோனியாகாந்தியும் பிரதமராக வந்திருப்பார்.சுஷ்மா மொட்டைஅடிக்க வெளிக்கிடாவிட்டிருந்தால்..... :lol:

இப்டியும் எழுதவருமா? ..என்னோட அண்ணாக்கு?

நானு கூட நெனைச்சேன் .... குமாரசுவாமியண்ணா ......... எப்பவுமே சீரியஸ் இல்லாம கடுப்பேத்துறாரேன்னு!! :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொலிவூட் நடிகர்.. ஒன்றும் அமெரிக்காவின் அரசுத் தலைவர் கிடையாது. ஒரு மாநிலத்தில் ஆளுநனராக இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அமெரிக்காவின் அரசியல் சுதந்திர நிலைப்பாடு வேறு. தமிழர்களின் இன்றைய உலக இருப்பு வேறு. தமிழர்கள் தங்கள் சொந்த நிலங்களில் உரிமை இழந்து தவிக்கும் போது.. தமிழர்கள் அல்லாதோர் தமிழர்களை ஆள்வது ஆபத்தானது.

அமெரிக்க மக்களின் உரிமைகளை பறிக்க வெளிக்கிட்டால்.. வெள்ளையர்கள் ஒபாமாவை தெரிவு செய்வார்களா..??! நிச்சயமாக இல்லை..! ஆனால் தமிழர்கள் செய்கிறார்களே...! தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறித்த கன்னடர்களும்.. மலையாளிகளும்.. தெலுங்கர்களும்.. சினிமாவில் பிரபல்யமாகி தமிழர்களை ஆண்டது.. தமிழர்களின் அறியாமையின் விளைவே அன்றி.. அறிவுபூர்வமானதல்ல. அது இன்னும் தொடரனும் என்பது மொத்த இனத்தையும் பிற இனங்கள் அடிமைப்படுத்தவே வழிசெய்யும்.

தமிழ்நாட்டை தமிழர்கள் அல்லாதோர் ஆண்டது போதும். தமிழ்நாட்டை தமிழர்கள் ஆளும் நிலை வர வேண்டும்.

இந்திய வரலாற்றில்.. தமிழர்கள் பிரதமர்களாக இருந்ததில்லை. கன்னடர்கள் இருந்துள்ளனர். இந்தியாவின் பிற மாநிலங்கள் எதிலும் தமிழர்கள் முதலமைச்சராக இருந்ததில்லை..! ஆனால் தமிழகத்தில் மட்டும் மற்றவர்கள் இருந்துள்ளனர். இருக்கின்றனர். இது தமிழர்களுக்கு உரிமை ரீதியில் நல்லதல்ல. ஒரு தமிழக தமிழ் மீனவன் செத்தால் வாக்குக்காக.. சாக்குப் போக்கிற்கு கடிதம் எழுதிவிட்டு தனது அரசியலை பார்க்கும் அந்நியர்கள் தமிழகத்தை ஆண்டதால் தான் தமிழகக் கடலில் 600 மீனவனையும்.. அடுத்த கரையில் பல ஆயிரம் தமிழர்களையும் எதிரிகளால் அழிக்க முடிந்தது..!

இதே நிலையில்.. கைக்கூலியாகாத ஒரு தமிழன் தமிழகத்தை ஆண்டிருந்தால்.. இன்று நிலைமை வேறு..! இத்தனை உயிர் இழப்புக்களும் தவிர்க்கப்பட்டிருக்க அதிக வாய்பிருந்திருக்கும். ..!

===============

எம் ஜி ஆரின் நிலை சற்று மாறுபட்டது. அவர் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் பிறந்து.. காலனித்துவ ஆட்சியாளர்களினால் அடிமைகளாக கொண்டு வரப்பட்டு.. ஈழத்தில் வாழ்ந்து.. அங்குள்ள மக்களினதும் துன்பங்களை நேரில் கண்டவர். அவர் பிறப்பால் ஒரு மலையாளியாக இருந்தாலும்.. தமிழர்களின் விடிவை உளமார நேசித்த தலைவர். கருணாநிதி போன்ற ஒரு தெலுங்கன்.. அரசியலுக்காக தமிழை உச்சரித்தது போல அல்ல எம் ஜி ஆர் தமிழ் நாட்டை ஆண்டது. அவர் உண்மையாகவே தமிழனாக தமிழர்களுக்காக உழைத்தார். இப்போ வை.கோ போன்று..!

எதுஎப்படி இருப்பினும்.. கைக்கூலிகள் ஆகாத அரசியல் நிர்வாகத் திறமையுள்ள.. தமிழர்கள் தமிழ்நாட்டை ஆள வேண்டும். அப்போதுதான் தமிழர்களுக்கு விமோசனம் பிறக்கும்..! சினிமாக்காரர்களுக்கு படத்தில் மட்டும் ஆதரவு என்ற நிலைக்கு தமிழர்களின் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். சினிமா நடிப்பை நம்பி.. ஆட்சியைக் கையளித்தால்.. விஜயகாந்த் மாதிரித்தான் இருக்கும். சினிமாவில் இருந்த போது பிரபாகரனை தனது புகழிற்காக அடிக்கடி உச்சரித்தவர்.. இன்று ஈழத்தமிழர்களுக்காக பேசவே யாருடன் அரசியல் கூட்டணி அமைப்பது பற்றி ஆற அமர ஆராய்ந்துவிட்டுத் தான் வாய் திறக்கிறார். இப்படி சினிமாக்காரர்களால் தமிழர்கள் ஏமாற்றப்பட்டதால் தான் தமிழன்.. சொந்தக் கடலில் தொழிலுக்கும்.. சொந்த மண்ணின் பாதுகாப்பில்.. தண்ணிக்கு... அடுத்தவன் வாயைப் பார்க்க வேண்டியுள்ளது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே முக்கியமாக கேட்கப்படவேண்டிய கேள்வி ரஜினியின் கர்நாடகாவில் / மகாராஷ்ட்ராவில் ஒரு தமிழன் முதல்வராக வரமுடியுமா என்பதே..! :rolleyes:

Reciprocity இல்லாவிட்டால் இருநாடுகளிடையே வர்த்தகமே சாத்தியமில்லை..! :rolleyes: முதல்வர்கள் மட்டும் எப்படி சாத்தியம்? :wub:

சாத்தியம்தான்.. தமிழ்நாடு தூங்கும்வரை..!! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் மட்டும்தான் எல்லா மாநிலங்களில் உள்ளவர்கள் வாழ்கின்றார்கள் அதிலும் குறிப்பாக மாறுவாடிகள், கன்னடர், தெலுங்கர்கள், மலையாளிகள் இப்படி பலரும் உள்ளார்கள் பெரும்பாலனவர்கள் பிழைப்புக்காக வந்தவர்கள் தொடர்ந்து இவர்கள் பல தலைமுறைகள் தமிழ் நாட்டில் வாழ்ந்துவருவதால் நன்றாக தமிழ் பேசும் இவர்கள் தாமும் தமிழர்களாக வாழ்ந்தாலும் உணர்வால் இவர்கள் தமிழர்களாக இல்லை இதனால் உணர்வான தமிழர்கள் வச்சிக்கப்படுகின்றனர் உதாரணத்துக்கு சென்னையில் உள்ள ஹோட்டலுக்கு போய்பாருங்கள் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் மற்றைய மாநிலத்தவர்கள் தமிழன் எங்கே என தேடிநீங்கள் என்றால் அவன் அங்கு துப்பரவு பணியில் இடுபடுபவனாக இருக்கும் துரதிஷ்டம் இப்படிக்கையில் தமிழனால் எப்படி ஆட்சி அமைக்க முடியும் ??????? என்பதே முக்கிய கேள்வியாகும் ?

ரஜனி மட்டுமன்றி சல்மான்கான் ஆட்சி அமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை ....!

விஜய் டி வியில் நீயா! நானா! நிகழ்சியில் ஒரு இணைய ஆய்வாளர் நாசுக்கான கருத்தை மிகவும் லாவகமாகச்சொன்னார்.அது யாருக்கும் அந்த இடத்தில் புரிந்திருக்காது.

படத்தில் நடிக்கும் போது நடிகன் டைரக்ஸனின் பொம்மை!

டைரக்ஸனை இயக்குபவர் தயாரிப்பாளர்!

இவர் ஒரு வியாபாரி என்பது மறுக்க முடியாது!

ஆகவே மக்களின் நாடித்துடிப்பறிந்து ரஜனி படங்களை இயக்குகிறார்கள்.இங்கு ரஜனி ஒரு கைப்பொம்மைதான்.அதேபோல குழந்தைகளுக்கான எலக்ரோனிக் பொம்மையில் சிரிப்பது,அழுவது,ஐ லவ் யூ சேமித்து வைத்திருப்பார்கள்.அதேபாலத்தான் ரஜனியின் வசனமும் அமைகிறது.ஆனால் அவர் சொந்த தனிப்பட்ட வாழ்க்கைபற்றி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை

இதில் எனக்கொரு ஆச்சரியமும் கிடையாது, ஒரு தமிழன் முதல்வராக வருவதே ஆச்சரியம்.

Edited by நவரத்தினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.