Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய திருக்குறள்

Featured Replies

Kural: 929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.

Is he who strives to sober drunken man with reasonings grave.

நல்ல முயற்சி அகூதா...தொடர்ந்து பதியுங்கள். முடிந்தால் தமிழிலும் சிறு விளக்கம் (பொழிப்பு) தாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Kural: 929

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ அற்று.

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.

Is he who strives to sober drunken man with reasonings grave.

"நீரில் மூழ்கியிருப்பவனைத் தீ விளக்கு கொண்டு தேடுகின்ற முயற்சியைப் போன்றதுதான், கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவர்களிடம் காரணங்களைச் சொல்லித் திருத்துகின்ற செயலுமாகும்." - குறளோவியம்

"நீரில் மூழ்கியிருப்பவனைத் தீ விளக்கு கொண்டு தேடுகின்ற முயற்சியைப் போன்றதுதான், கள்ளுண்டு மயங்கிக் கிடப்பவர்களிடம் காரணங்களைச் சொல்லித் திருத்துகின்ற செயலுமாகும்." - குறளோவியம்

அடடா... தண்ணி அடிக்கிறதை கூடாது என்றா சொல்லியிருக்கு....??

அகூதா... முதல் வெடியே என்னைப் போன்ற குடி மக்களுக்கா..... :lol:

  • தொடங்கியவர்

நன்றி கிருபன் உங்கள் பொழிப்புக்கு!

அடடா... தண்ணி அடிக்கிறதை கூடாது என்றா சொல்லியிருக்கு....??

அகூதா... முதல் வெடியே என்னைப் போன்ற குடி மக்களுக்கா..... :lol:

எல்லாம் அனுபத்தில் இருந்துதான் :D

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா வாழ்த்துக்கள் இவற்றை வாசித்தாவது யாராவது திருந்துகிறார்களா என்று பார்ப்போம்.. :lol: அடம் பிடிக்கிறான்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அடடா... தண்ணி அடிக்கிறதை கூடாது என்றா சொல்லியிருக்கு....??

அகூதா... முதல் வெடியே என்னைப் போன்ற குடி மக்களுக்கா..... :lol:

திருவள்ளுவரே குடிபோதையில் இருப்பவர்களோடு கதைத்துப் பிரயோசனமில்லை என்று தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். அதை விளங்காத சனங்கள் சந்தோஷமாகக் குடித்துக் களிப்பவர்களிடம் போய் தேவையில்லாத அறிவுரை சொல்லி மூக்குடைபடுகின்றார்கள்!

நிழலி விளக்கத்தைப் புரிந்த பின்னர் பச்சை குத்தியிருக்கலாம்!

நானும் தமிழிலி குறளை போட்டு அதை ஆங்கிலத்திலும் போட்டபடியால பிள்ளைகளுக்கு இலகுவாக சொல்லிக் கொடுக்கலாம் என்று பார்த்து பச்சை குத்தினால்...கடைசியில் அப்பனுக்கு ஆப்பு வைக்கின்றமாதிரி முதல் குறளே இருக்கு :D

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி அகோதாண்ணா...இடையில் இருந்து பதிந்ததால் நானும் சற்று குளம்பிட்டன்:)

தமிழ்கூறு நல்லுலகத்திற்கு மிகவும் பயனுள்ள விடையம் அகோதா . ஐயன் வள்ளுவனாரின் அதிகாரங்களையும் , அதிலுள்ள குறள்களுக்கு தமிழ் உரைநடையையும் , தினமும் எழுதினால் நல்லது :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

உலக பொருளாதார நிபுணர் தோழர் அகூதா அவர்கள் சொன்னால் சரியானதே...! :) :)

  • தொடங்கியவர்

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

(பொழிப்பு) 'என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

Do nought that soul repenting must deplore,

If thou hast sinned, 'tis well if thou dost sin no more.

  • தொடங்கியவர்

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலாற்

காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

(பொழிப்பு) ஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.

Since gain and loss in life on speech depend

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்ல முயற்சி .............மூன்றாவது பச்சை என்னுடையது ............ :lol:

யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு.

குறள் 151:

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை

தன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு திருக்குறள், பொழிப்புரையுடன் இணைப்பது நல்ல முயற்சி.

இடையிடையே... காமத்துப் பாலிலிருந்தும், சில குறள்களை எடுத்து விட்டால்...

வாசகர்கள் ஆர்வமாக வாசிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று.

(பொழிப்பு) 'என்ன தவறு செய்துவிட்டோம்' என நினைத்துக் கவலைப்படுவதற்குரிய காரியங்களைச் செய்யக்கூடாது. ஒருகால் அப்படிச் செய்து விட்டாலும் அச்செயலை மீண்டும் தொடராதிருப்பதே நன்று.

Do nought that soul repenting must deplore,

If thou hast sinned, 'tis well if thou dost sin no more.

வள்ளுவர் யாழ் களத்தை,' ஞானக் கண்', கொண்டு பார்த்திருப்பாரோ?

யாரையோ மனசில் வைத்துக் கொண்டு எழுதிய குறள் போலக் கிடக்கு! :wub:

வள்ளுவர் யாழ் களத்தை,' ஞானக் கண்', கொண்டு பார்த்திருப்பாரோ?

யாரையோ மனசில் வைத்துக் கொண்டு எழுதிய குறள் போலக் கிடக்கு! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தினமும் ஒரு திருக்குறள், பொழிப்புரையுடன் இணைப்பது நல்ல முயற்சி.

இடையிடையே... காமத்துப் பாலிலிருந்தும், சில குறள்களை எடுத்து விட்டால்...

வாசகர்கள் ஆர்வமாக வாசிப்பார்கள்.

scan%20071%20copy%20%2070b.gif

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்ச்சி தொடரட்டும் தங்கள் பணி!

  • தொடங்கியவர்

இந்த திரியில் மேற்கொண்டு என்னால் குறள் இணைக்கப்பட மாட்டாது. காரணம் உறவு கோமகன் அந்த பொறுப்பை இந்த திரியூடாக எடுத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=96394

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா ஆரம்பித்த திரியை கோமகன் திருடி விட்டார்

  • தொடங்கியவர்

அகூதா ஆரம்பித்த திரியை கோமகன் திருடி விட்டார்

இல்லை, கோமகன் என்னிடம் முறையாக சொல்லி / கேட்டுத்தான் தொடங்கினார். அவருக்கு எனது ஆதரவையும் தெரிவித்திருந்தேன்.

திறமையானவர்கள் செய்யும்பொழுது அதன்பயன் கூடுதலாக உறவுகளை சென்றடையும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.