Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

டோறன்ரோவில் ஒரே இரவில் 9 Tim Hortans உணவு நிலையங்களில் வங்கி மெஷின் கொள்ளை:விரைந்து செயற்பட்ட இரகசிய பொலீசாரால் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

90 களில் யாழ் இந்து ஆண்டுமலரில் இது பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன் .நாட்டில் நடக்கும் போராட்டத்தை முன் நிறுத்தி கனடாவில் பிழையான ஒரு அமைப்பை நாம் கட்டியெழுப்புவோமாயின் இங்கிருக்கும் எம் இளைஞ் ர்களின் எதிகாலமும் பாழாய்போய் விடும் என்று .அதுதான் நடந்தது நடக்கின்றது .

அர்ஜுன் உங்களின் தூரநோக்க சிந்தனை பாராட்டுக்குரியது, :icon_idea:

நடந்தை முன்பே கூறியிருந்தீர்கள் அடுத்த பத்து வருடத்தின் பின்னர் என்ன நடக்கும் என்று உங்களால் இப்போது கூறமுடியுமா ? :rolleyes:

உங்களைப்போன்ற தீர்க்கதரசியயை புலிகள் அணுகியிருந்தால் இப்படியொரு நிலை ஏற்பட்டிருக்காது :lol: :D :icon_mrgreen:

Posted

அகூதா ,முழு இளைஞ்ர்களுமென்று நான் சொல்லவில்லை .பல தமிழ் இளை யவர்கள் தாம் தமிழர்களேன்று அடையாளம் சொல்லாமல் போன காலங்களும் உண்டு ,இன்று கூட சீ.ரீ.ஆர் இல் மார்க்கம் கவுன்சில் அங்கத்துவர் லோகன் கணபதி சொல்லியிருந்தார் "எமது இளையவர்களை வன்முறைக்கு பெயர் போனவர்கள் என்று முத்திரை குற்றி அதை இன்றும் எடுக்கமுடியாத நிலையில் இருக்கின்றோம்" என்று.பல வருடங்களாக எமக்கென ஒரு ஒழுங்கான அமைப்பு இருக்கவில்லை என்பதுதான் உண்மை

கனடாவில் இருபது வயதுக்கு உட்பட்டோரை அவர்களின் திறமைக்கு ஏற்ப கௌரவிக்கும், ஊக்கப்படுத்தும் அமைப்புக்கள் பல உள்ளன. ஆனால் அவை எம்மவர்கள் மத்தியில் எடுத்துச்செல்லப்படுவது காணாது. உதாரணத்திற்கு இந்த அமைப்பை பாருங்கள்: http://www.top20under20.ca/engHome.htm

நாமும் ஒன்றில் இதை விளம்பரம் செய்து இல்லை இதுபோன்ற ஒன்றை ஆரம்பிக்கலாம்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்டாரியோ மாநில அரசு கல்லூரி/பல்கலைக்கழக கட்டணங்களை குறைத்து அதேவேளை பல்கலைக்கழக மானியங்களையும் குறைத்துள்ளது. இது எம்மைப்போன்ற இரண்டாம் தலைமுறை இனத்திற்கு நன்மை. இவை பற்றி கூடுதலாக இளையவர்கள் மத்தியில் எடுத்து செல்லலாம்.

எமது அடுத்த தலைமுறைக்காக வழிகளை காட்டுவதும் பாதைகளை போடுவதும் சாத்தியம், முடியும், புண்ணியம்.

Posted

எங்கட சிலதுகளுக்கு ஒரு பழக்கமுண்டு

நாய் காலைத்தூக்கிற மாதிரி

அது எங்கடையள்தான் என்பது .

அதுவும் புலிகள் தான் என்பதிலிருந்து வந்ததாக இருக்கலாம்?

அதிலும் ஒரு சந்தோசம் எனக்கு

அப்படிப்பார்த்தால் தமிழர் எல்லோரும் புலிகள் என்றாகிறதல்லவா.

தம்நிலை மறந்து சரடு விடுபவர்களைப் பற்றி மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள் விசு அண்ணா.

எல்லா இனங்களிலும் வழிதவறி நடப்பவர்கள் உண்டு. இல்லை என்றால் சிறைச்சாலைகள், போலீஸ் தேவையில்லை. திருட்டு, கொள்ளைகளை யார் செய்தாலும் கண்டிக்க வேண்டும்.

இனவிடுதலை என்று கிளம்பி மக்களிடம் காசு, சோறு பறித்து பெண்களுடன் உல்லாசமாக திரிந்த தலைமைகளைக் கொண்ட புளட் (சோற்றுப் பாசல்) இயக்கம், கடத்தல் கொலை கொள்ளைகளில் காலத்தைக் கழிக்கும் டக்லஸ் தேவா கும்பலின் ஈபிடிபி இயக்கம் என்று வழிதவறி இன்னமும் திருந்த மறுக்கும் இயக்கங்களை சேர்ந்தவர்களும் தமிழினத்தின் ஓர் அங்கம். அதுபோல் தமிழின விரோத சக்திகள், அயல்நாட்டு மற்றும் சிங்களப் பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக வாழும் சில குழுவினர், புலிகள் இயக்கத்தில் இருந்த மாத்தையா, கருணா, பத்மநாதன் போன்ற வழிதவறிய தனிநபர்களும் தமிழினத்தின் ஓர் அங்கம்.

எனவே தமிழினத்தில் கோளாறு சற்று அதிகமாக எங்கோ உள்ளது. அது அடையாளம் காணப்பட்டு களையப்பட வேண்டும். தவறான வழிகளில், குறுக்கு வழிகளில் பிழைக்க முயலும் மனப்பான்மை வன்மையாக கண்டிக்கப்பட்டு / தண்டிக்கப்பட்டு திருத்தப் படவேண்டும்.

Posted

இளைஞர்கள் செய்தது குற்றம்..! கனேடிய தண்டனைச் சட்டத்தின்படி அவர்கள் தண்டனை பெறுவார்கள்..! ஆனால் இது நடந்ததால் ஏதோ பூமியே பிளந்துவிட்டதுபோல் அளப்பதுதான் தாங்கலை..! :icon_mrgreen:

எங்களில் வருமான வரியை ஏய்க்காமல் இருப்பவர்கள் எத்தனை பேர்? :rolleyes: ஒரு டொலர் என்றாலும் சுத்தாமல் இருக்கிறீர்களா? இருக்கிறீர்கள் என்றால் எங்கை கையைத் தூக்குங்கோ பார்ப்பம்..! ^_^

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளையவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்காக CAN TYD என்று ஒரு நிறுவனமும் இயங்கிக் கொண்டு இருப்பதாக அறிந்திருக்கிறன்.இவை எல்லாவற்றையும் விட உண்மையாகவே வேலை செய்ய முடியதா....வேலை தேடிக் கொள்ள கஸ்ரமா... களவு,பொய் இவற்றை தவிர்த்து நேர்மையாக கையாளக்கூடிய எத்தனையோ வளி வகைகள் இருக்கிறது..

Posted

ஒரே சிந்தனை வட்டத்தில் உலாவும் உங்களுடன் மல்லு கட்ட வேண்டியதேவை எனக்கில்லை .எக்கேடு கேட்டாலும் எனக்கென்ன என்றுவிட்டு நானும் போய்விடலாம் அது ஒன்றும் பெரிய விடயமல்ல .

மல்லாந்து கிடந்தது துப்புவது,பல்லை குத்தி மணந்து பார்ப்பது இப்படியாக பலவகை பொன்மொழிகள் எம்மவர் வசம் இருக்கின்றது.

நாகரீகம் அடைந்த உலகில் நாம் வந்து கற்க வேண்டியது எவ்வளவோ உண்டு.(சரியானதை ) அதை விட்டு புலம் பெயர்ந்தும் அனைத்து மூட,பொய்யான வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு நாம் செய்வதுதான் சரி என்றால் ஒன்றும் செய்யமுடியாது.

கூர்ப்பு (evolution) தியரி மாதிரித்தான் நாகரீக (civilization) தியரியும் .நாலு காலில் நடக்கும் மிருகத்திற்கு இரண்டு கால் மனிதன் சொல்வது புரியாது .

புலம் பெயர்ந்ததின் பெரிய அனுகூலமே மனித நாகரீகத்தை அறிந்து கொள்வதாகும்.

மிகவெளிப்படையான வாழ்க்கை முறையை உள்ள மேற்கத்தைய உலகில் நாம் இன்னமும் போலியாக வாழவே முயற்சிக்கின்றோம்.உதாரணம் ஆயிரம் எழுதலாம்.மிச்ச சொச்சம் போக அடுத்த தலை முறை மிக ஆரோக்கியமாக கனடாவில் வளர்கின்றது.பழசுகளுக்கு சொல்லியும் கொடுக்கின்றது..

தமிழரசு புலிகள் அழிந்து போகும் என்பது எனக்கு மாத்திரமல்ல சுய சிந்தனையுள்ள எவனுக்குமே தெரிந்த விடயம்.எத்தனை எம்.ஜி ஆர்,ரஜனி தமிழ்படம்,தர்மேந்திரா அமிதாப்பச்சன் கிந்தி படம் பார்த்தோம் .ராஜீவ் கொலைக்கு பின் தலைவரை இந்தியா தூக்கும் என்று அன்றிலிருந்தே விடாமல் பல இடங்களில் நான் சொல்லியே வந்தேன் .அது நடக்காமல் விட்டிருந்தால் தான் அதிசயம் .

Posted

பல நல்ல கருத்துக்களை நீண்டகாலமாக எழுதி வரும் அர்ஜூன் அவர்களை, அவர் விடுதலைப்புலிகளுக்கு எதிரான அமைப்பில் இருந்த காரணத்துக்காகவும், விடுதலைப்புலிகள் அமைப்பின் தவறுகளை முன்கூட்டியே தெரிவித்து வந்த காரணத்துக்காகவும், நம்மவர் என்று ஏற்றுக்கொள்ளாத யாழ்கள உறுப்பினர்கள் பலர், உலகின் வசதிமிக்க நாடுகளில் ஒன்றான கனடாவில் வாழ்ந்து கொண்டு ஒரே இரவில் 48 கொள்ளைகளை நடத்திய இரண்டு கொள்ளையர்களை நம்மவர் என்று உரிமை கொண்டாடுவது மிகவும் கவலைக்குரிய விடயம்.

முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி கையை இழந்தவர்கள் கால்களை கொண்டு உழைத்தும், ஒரு கண்ணை இழந்தவர் மறு கண்ணை கொண்டு உழைத்தும், தாம் மட்டும் வாழாமல் மற்றவர்களையும் வாழவைக்கும் செயல்களை சாதாரண வாழ்க்கை அனுபவமாக செய்துவரும் மக்களே நம்மவர்கள் என்று நாம் பெருமைப்பட வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மைதான்

எங்காவது தப்பு நடந்தால் அது எங்கட ஆட்களாகத்தான் இருக்கும் என்பது தெளிந்த சிந்தனை.

(அதிலும் என்ர பிள்ளை அதுக்குள் இருக்காது. அதன் வளர்ப்பு வேற. மற்றவர்களின் வளர்ப்பு கேவலமானது என்பதும் சுத்தமான சிந்தனை.)

எங்கட ஆட்களே கேவலமானவர்கள் என்ற கொள்கையை வைத்துக்கொண்டு போராட புறப்பட்டவர்கள் வென்றிருக்கமுடியும் என்பது தீர்க்கதரிசனமான சிந்தனை.

இன்னொன்று

விடுதலைப்புலிகளுக்கு எதிரான அமைப்பிலிருப்பதற்கும்

விடுதலைப்புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும்

இருக்கும் உரிமை

அந்த அமைப்பிலிருந்து உயிர் நீத்த ஒருவருக்காவது அஞ்சலி செலுத்தும் மனதைக்கொடுத்திருந்தால் அவரும் நம்மவர்தான்.

குறிப்பு: நடந்த கொள்ளைச்சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் எவராயினும் தண்டிக்கப்படணும். திருந்தணும். அதற்கு இனம் மொழி உறவு என்ற பந்தம் தடையாக இருக்காது. இருக்கவும் கூடாது.

Posted

ஒரு சிலரால் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் அவமானம் இதில வேற சிலர் இதைச்செய்வதை கெட்டித்தனம் என்று நினைக்கினம் இவர்கள் இந்தவேலைகளுக்கு பயன்படுத்தும் மூளையை நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தினால் தமிழ் இனத்துக்கே பெருமை

Posted

ஒரு சிலரால் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் அவமானம் இதில வேற சிலர் இதைச்செய்வதை கெட்டித்தனம் என்று நினைக்கினம் இவர்கள் இந்தவேலைகளுக்கு பயன்படுத்தும் மூளையை நல்ல விடயங்களுக்கு பயன்படுத்தினால் தமிழ் இனத்துக்கே பெருமை

இந்தச் சில்லறைத் திருடர்களால் எம்மினத்துக்கு அவமானம் என நான் நினைக்கவில்லை..! மாறாக, அந்த இளைஞர்களுக்குத்தான் அவமானம்..! ஆங்கில ஊடகங்களில் தமிழ், தமிழ் என்று முழங்குவார்கள்..! இது ஒரு தந்திரம்..! இதில் விழுந்துவிடக்கூடாது..! :rolleyes:

ஐம்பது டொலர் கொள்ளைக்காக காசாளரைச் சுடுவதும், கொலை செய்து பார்ப்பதற்காக கொலைகள் செய்வதும், பெண்களுக்கு என்னென்னவோ அநியாயங்கள் எல்லாம் செய்வதும் எல்லாம் வெள்ளையர்களும், கறுப்பர்களும்தான்..! :huh: அவர்கள் செய்யும் போது மட்டும் ஜோன் இவர், டேவிட் அவர் செய்தார் என்று முடித்துவிடுவார்கள்..! தமிழர்கள் என்றால் மட்டும் தூக்கிப்பிடிப்பார்கள்..! இதை நாமும் முன்னிறுத்தத் தேவையில்லை என்பதே எனது தாழ்மையான கருத்து..! :icon_idea:

Posted

Two men in their 20s have been charged by Toronto Police following the theft of PIN pads at numerous east-end Tim Hortons locations Monday morning.

Police say between midnight and 1:30 a.m. two men pulled into the drive-through windows at five different Tim Hortons, distracted the clerks, cut the electronic PIN pad device’s wires and drove off.

One of the coffee shops informed police of the thefts. Officers were in the area and arrested the suspects near Kingston and Markham roads. All stolen property has been recovered.

Toronto Police Constable Tony Vella said these types of thefts are generally for the purpose of fraud.

“My understanding is that they would alter the PIN pads, put them in stores and then retrieve people’s banking information,” Const. Vella said. “It’s not a consistent problem, but occasionally it does happen.”

Brian Thangaraja, 20, of Brampton and Jayson Anthony, 20, of Toronto have both been charged with five counts of mischief under $5,000, five counts of theft under $5,000, nine counts of possession of property obtained by crime, four counts of mischief under $5,000 and one count of attempted theft under $5,000.

They were scheduled to appear in court Monday morning.

கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மாத்திரமே தமிழர்.

தமிழில் செய்தியை மொழி பெயர்த்தவர் தன் இனத்தின் மீது கொண்டுள்ள கீழ்த்தரமான எண்ணத்தில் கைது செய்த இருவரையும் தமிழராக்கி விட்டார்.

தன்ர குட்டு வெளிப்பட்டுவிடும் என்பதற்காக பெயர்களையும் தணிக்கை செய்து வெளியிட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமெரிக்காவில் அதிகமான கறுப்பினத்தவர்கள்

கொள்ளை,கொலை,பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டவர்கள்.

ஆனாலும் ஒபாமா தலை நிமிர்ந்து நாட்டின் அதிபராகியுள்ளார்.

பிரித்தானியாவில் லியாம் பொக்ஸ் ஊழல் செய்தவர்.

அதற்காக ஒட்டுமொத்த பிரித்தானியர்களும் ஊழலா?

திருட்டு கொலை கொள்ளை போன்ற செயல்கள் உலகமெங்கும்

பரவிக்கிடக்கின்றது.

தமிழர்கள் இதில் ஈடுபட்டால் மட்டும் தேசியத்திற்கே

அவமானம் என சிலரும் அவர்களைக் கடித்துக் குதறச் சிலரும் இருக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழரின் வளர்ச்சிகளைக்கண்டு பூரித்துப்போகும் நாம் இது போன்ற தவறுகளையும் அதற்குள் எடுத்து குழம்புவது தவிர்க்கமுடியாதது. ஆனால் பரம்பரைச்சொத்துக்கு உரித்துக்கோரும் நாம் அவர்களின் அவப்பெயர்களை ஏற்க மறுப்பதும் ஏனோ?

எல்லாம் சேர்ந்ததே இனம். நூறுவீத நல்ல சமூகத்தை உலகில் காணமுடியாது. அப்படியிருந்தால் இத்தனை நீதிமன்றங்களும் சட்டங்களும் சிறைகளும் எதற்கு???

அதைவிட சிரிப்பானது நாம் அன்று ஆரம்பித்திருந்தால் ஒருவரும் தப்பு விட்டிருக்கமாட்டார்கள் என்பது???

ஆனாலும் தமிழினம் சராசரி கணக்கீட்டு அடிப்படையில்

படிப்பிலும்

வணிகத்திலும்

பொருளாதாரத்திலும்

ஏன் சட்டத்திற்கு மதிப்பளிப்பதிலும் பெரும் அளவில்முன்னேறியுள்ளது. இது பதிவுகளுக்கும் வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேலை இல்லாததால் தான் எங்கட இளைஞர்கள் இப்படியான வேலைக்குப் போகிறார்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் ஊரில் இருந்து வந்தவர்கள் ஒரு,சிலரைத் தவிர மற்றவர்கள் கஸ்டப்பட்டு முன்னுக்கு வருகிறார்கள் ஆனால் இங்கே பிறந்து வளந்தவர்கள் அல்லது குழந்தையிலே வந்தவர்கள் தான் இலகுவாக,விரைவில் பணம் சேர்க்கும் நோக்கில் இப்படியான செயல்களை செய்கிறார்கள் அதற்காக ஒட்டு மொத்த தமிழினத்தை பிழை சொல்வதும் தப்பு...ஆனால் இதை இப்படியே விட்டு விடாமல்,இப்படியான குற்றச் செயல்களை இனி மேலும் ஏற்படாமல் தடுக்கும் வழி முறைகள் குறித்து ஆராய வேண்டும்

Posted

ஒவ்வொருவருக்கும் தாம் வாழ்கையில் என்ன செய்யவேண்டும் என்பதை தெரிவு செய்யும் உரிமை இருக்கிறது. ஆனால் அந்த தெரிவு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுதலாக இருந்தால் தட்டி கொடுக்க முடியாது.

கடனட்டை மோசடியில் இடுபடுவர்கள் பொதுவாக தனியாக ஈடுபடுவதில்லை. ஒரு குழுவக பல இனத்தவர்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என நினைக்கிறேன்.

நான் இருக்கும் இடத்தில் இதுவரை ரொரண்டோவில் இருந்து வந்த இரு குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளன. இரண்டு குழுவிலும் தலா இரண்டு தமிழர்கள் அகப்பட்டார்கள்.

இது கடந்த மாதம் நடந்தது.

A routine traffic stop in St. James turned into a sizeable fraud investigation with ties to the Toronto area.

The traffic stop of a rental vehicle with Ontario plates by a police dog and its handler Monday during the noonhour at Portage Avenue and Lyle Street led to further investigation, police said. Officers seized 38 counterfeit debit cards, about $10,000 in cash, gift cards and electronics associated to credit card fraud.

Police allege the trio that was in the vehicle were solely coming to Winnipeg to commit credit card fraud.

Sugenthan Sven Thirunavukarsu, 25, Niroshon Placidass, 23, and Nathalie Renee Graham-Hunt, 23, been charged with numerous fraud related offences. The were detained, police said.

http://www.winnipegsun.com/2011/12/13/to-trio-targeted-peg-for-credit-card-fraud

பழைய சம்பவம் சில வருடங்களுக்கு முன்னர் நடந்தது. அந்த செய்தியை யாழில் இணைத்த நினைவு. இணையத்தில் அதை தேடினேன் காணவில்லை.

இதைவிட ஒன்ராறியோவில் இருந்து வந்த வேறு இன குழுமத்தை சேர்ந்தவர்களும் கடந்த 2010 ஆம் ஆண்டு பிடிபட்டார்கள்.

Two charged with ATM fraud

Ontarians arrested after a passerby noticed 'suspicious activity'

A pair of alleged scam artists from Ontario were arrested in Winnipeg on Thursday and charged with trying to set up skimming equipment on an ATM.

Winnipeg police arrested 34-year-old Zahid Azmathullah of Toronto and 31-year-old Karla Renata McRae of Pickering, Ont., in relation to an incident that occurred at a bank machine located in a St. Boniface parking lot, where a passerby noticed "suspicious activity," including a woman walking back and forth between the ATM and a vehicle.

Police were called and they promptly pulled over the vehicle, allegedly discovering overlay equipment, tools, cameras, card readers, a computer and various debit cards inside.

Const. Jason Michalyshen, a spokesman for Winnipeg police, said cops allege the pair came to Winnipeg specifically to perpetrate a fraud using the equipment to gather banking data from the ATM's users, then suck money from their accounts.

Michalyshen said such frauds are a growing problem.

"The amount of money that's being stolen from personal accounts and the impact it's having nationwide is growing and growing," he said.

Thursday's arrest was not a first for Azmathullah, who was charged with a similar crime in January 2009 by Toronto police. Azmathullah was accused at the time of using bogus credit cards to buy stamps and jewelry, and was charged with fraud, uttering forged documents and using credit cards obtained by crime.

Winnipeg police have charged him in relation to Thursday's arrest with possessing credit card data, possessing forging instruments and breach of probation.

McRae was charged with fraud and possessing forging instruments.

இது ஒன்ராறியோவில் பிடிபட்ட குழு. அதிகமானவர்கள் தமிழர்கள்.

153 charges laid in organized crime fraud ring: Project Infraction

http://www.durhamnews24.com/durham-news/25-breaking-news/430-153-charges-laid-in-organized-crime-fraud-ring-project-infraction

Posted

உண்மைதான்

எங்காவது தப்பு நடந்தால் அது எங்கட ஆட்களாகத்தான் இருக்கும் என்பது தெளிந்த சிந்தனை.

(அதிலும் என்ர பிள்ளை அதுக்குள் இருக்காது. அதன் வளர்ப்பு வேற. மற்றவர்களின் வளர்ப்பு கேவலமானது என்பதும் சுத்தமான சிந்தனை.)

எங்கட ஆட்களே கேவலமானவர்கள் என்ற கொள்கையை வைத்துக்கொண்டு போராட புறப்பட்டவர்கள் வென்றிருக்கமுடியும் என்பது தீர்க்கதரிசனமான சிந்தனை.

இன்னொன்று

விடுதலைப்புலிகளுக்கு எதிரான அமைப்பிலிருப்பதற்கும்

விடுதலைப்புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்கும்

இருக்கும் உரிமை

அந்த அமைப்பிலிருந்து உயிர் நீத்த ஒருவருக்காவது அஞ்சலி செலுத்தும் மனதைக்கொடுத்திருந்தால் அவரும் நம்மவர்தான்.

குறிப்பு: நடந்த கொள்ளைச்சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் எவராயினும் தண்டிக்கப்படணும். திருந்தணும். அதற்கு இனம் மொழி உறவு என்ற பந்தம் தடையாக இருக்காது. இருக்கவும் கூடாது.

கொழும்பில தற்கொலை குண்டுவெடித்தால் அது புலியாக இருக்கவேண்டும் என ஊடகங்கள் சொல்வதில்லையா? அதுபோல் தான் இதுவும்.

சும்மா புத்திமதி எவனும் வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு சொல்லலாம் .இது சர்வதேச ரீதியில் ஒரு பிசினஸ் ஆக நடக்கின்றது .சும்மா எங்கடை பிள்ளைகள் என்று நடித்த்துக்கொண்டிருக்கதான் எம்மவருக்கு தெரியும் .

எல்லா சமூகத்திலேயும் நல்லதும் இருக்கு கேட்டதும் இருக்கு இதை ஒப்புகொள்வதில் தவறொன்றுமில்லை.நல்லது நடக்கும் போது எவ்வளவு பெருமைப்படுகின்றோமோ அது போல் தப்புகள் நடக்கும் போது வெட்கப்படத்தான் வேண்டும் .

பிரச்சனை என்றதும் நாட்டை விட்டு ஓடிவந்தவர்கர்கள்தான் இன்னமும் தேவாரம் பாடிக்கொண்டிருக்கின்றார்கள்.எப்படியாவது பிழைப்பு நடக்க வேண்டும்.இணையத்தில் வந்து தேவாரம் பாடி நாலு பேருக்கு படம் காட்டுவதுதான் பலர் நோக்கம்.போராளிகளை எங்கே எப்படி வைப்பதென்று அவரவர் விருப்பம்.

கோவிலில் நின்று தேவாரம் பாடும் காவிஉடுத்த கள்ளசாமி அல்ல நான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எல்லா சமூகத்திலேயும் நல்லதும் இருக்கு கேட்டதும் இருக்கு இதை ஒப்புகொள்வதில் தவறொன்றுமில்லை.நல்லது நடக்கும் போது எவ்வளவு பெருமைப்படுகின்றோமோ அது போல் தப்புகள் நடக்கும் போது வெட்கப்படத்தான் வேண்டும் .

இந்த கருத்துடன் எனக்கும் வேறுபாடு கிடையாது

மற்றைய இனங்களின் எப்படியிருக்கின்றார்கள் என்பது எமக்கும் தெரியாது அறியவும் முற்படுவதுமில்லை அப்படியுக்கையில் எப்படி தமிழர்கள் மட்டும்தான் எல்லாம் செய்வதாக கருதமுடியும் ?

Posted

புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார ரீதியில் வெற்றி பெறுவதை இந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் விரும்புவதில்லை. அதற்காக ஒவ்வொரு இனத்தின் மீதும் சேறு பூசுவது வழமை.

இதே கனடாவில் இன்று மதிக்கப்படும் யூத இனத்தவர்கள் ஒருகாலத்தில் வெறுக்கப்பட்டவர்கள். பூங்காக்களில் ' நாயும் இல்லை யூதனும் இல்லை' என எழுதி இருந்தார்களாம். பின்னர் இத்தாலிய சமூகம் ஒரு 'மாபியா' சமூகமாக பார்க்கப்பட்டது.

உண்மை என்னவெனில் எமது சமூகம், குறிப்பாக கனடாவில், ஒரு குறுகிய காலத்தில் வளர்ச்சி கொண்ட சமூகம். எனவே சேறுகள் வீசப்படும். அதையும் தாண்டி, தவறுகளை திருத்தி / தவறுகள் இழப்பதை குறைக்க உதவுவதன் மூலமும் / ஆளை ஆள் தொக்கி விடுவதன் மூலமும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார ரீதியில் வெற்றி பெறுவதை இந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மை இனத்தவர்கள் விரும்புவதில்லை. அதற்காக ஒவ்வொரு இனத்தின் மீதும் சேறு பூசுவது வழமை.

இதே கனடாவில் இன்று மதிக்கப்படும் யூத இனத்தவர்கள் ஒருகாலத்தில் வெறுக்கப்பட்டவர்கள். பூங்காக்களில் ' நாயும் இல்லை யூதனும் இல்லை' என எழுதி இருந்தார்களாம். பின்னர் இத்தாலிய சமூகம் ஒரு 'மாபியா' சமூகமாக பார்க்கப்பட்டது.

உண்மை என்னவெனில் எமது சமூகம், குறிப்பாக கனடாவில், ஒரு குறுகிய காலத்தில் வளர்ச்சி கொண்ட சமூகம். எனவே சேறுகள் வீசப்படும். அதையும் தாண்டி, தவறுகளை திருத்தி / தவறுகள் இழப்பதை குறைக்க உதவுவதன் மூலமும் / ஆளை ஆள் தொக்கி விடுவதன் மூலமும் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவோம்.

எமது இனம் பொருளாதாரத்திலும் அரசியலிலும் செல்வாக்கு செலுத்தும் போது நீங்கள் கூறிய விடயங்கள் கைகூடும்.

Posted

கல்வியை கருவாகக் கொண்டு பலகல்விமான்களை உருவாக்கி உலகம் முழுவது உலவிய தமிழன் பின்னர் அகதியாக சென்று கடின உழைப்பால் முன்னேற்றம் பல கண்டு உழைப்பால் புகளைடைந்த தமிழன் இன்று

கள்ளத் தோணியாகவும் திருடர்களாகவும் பார்க்கப்படுமலவுக்கு எமதினம் பல மற்றங்களைக் கண்டுள்ளது.

சிறியவனோ பெரியவனோ உழைக்காமல் சுரண்டி வாழ முடியாது, வயது திருட்டுக்கு மன்னிபாகாது.

அக்கூதா: இவர்களின் இதுட்டுகு சமுதாயம் பொறுப்புக்கூற முடியாது. சமுதாயத்தில் இருக்கும் எத்தனையோ நல்லதுகளை விட்டு இதை அவர்கள் தெரிந்தெடுத்தால் அதற்கான விலையையும் கொடுக்கவேண்டும்.

Do the crime, Do the time.

Posted

அக்கூதா: இவர்களின் இதுட்டுகு சமுதாயம் பொறுப்புக்கூற முடியாது. சமுதாயத்தில் இருக்கும் எத்தனையோ நல்லதுகளை விட்டு இதை அவர்கள் தெரிந்தெடுத்தால் அதற்கான விலையையும் கொடுக்கவேண்டும்.

Do the crime, Do the time.

அமெரிக்காவிலும் கனடாவிலும் அதிகூடிய வீதத்தில் கருப்பர்கள், இலத்தீன் சமூகத்தினர், பூர்வீக குடிமக்கள் குற்றம் புரிகிறனர். இந்த மூவின காலச்சாரத்திலும் சமூகம் சார்ந்த அமைப்புக்கள் குறைவாக உள்ளதை பொதுக்காரணியாக பார்க்கலாம். இவர்கள் மத்தியில் விவாகரத்துக்கள், இள வயதில் படிப்பை முறித்தல், மது/போதை பழக்கம் கூடுதலாகவும் உள்ளது.

இதை விட வேறு என்ன காரணம் இருக்கலாம் என எண்ணுகிறீர்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்கு வேப்பிலை அடிக்கத்தான் சுமந்திரன் அவசரப் படுகிறாரோ..
    • உடான்ஸ் லீக்ஸ் இணையதளம் அதிரடியாக அனுரவின் கொள்கை பிரகடனத்தை லீக் செய்துள்ளது, இதன் முக்கிய விபரங்கள்: 1. மாகாண சபைகளுக்கு காணி அதிகாரம் 2. மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் 3. தமது பிரதேசங்களில் மத ஸ்தலங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் அதிகாரம் மாகாணசபைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதில் தொல்பொருட்கள் உட்பட எந்த அரச திணைக்களமும் மாகாண சபையை மீறி செயல்பட முடியாது. 4. கடந்த 5 வருடத்தில் கட்டப்பட்ட அனுமதியில்லா மததலங்கள் இடிக்கப்படும். 5. போர் இல்லை, இப்போ மூவின மக்களும் ஒண்டுக்கு இருக்கிறார்கள், எனவே முப்பட்டைகள் 1/3 ஆல் குறைக்கப்படும். இந்த பணம் வைத்திய, கல்வி துறைக்கு நேரடியாக ஒதுக்கப்படும். முப்படை முகாம்கள் 1983 க்கு முந்திய நிலைக்கு போகும். 6.  1948 இல் இருந்து இலங்கை அரசுகள் கடைபிடித்த இன ஒதுக்கலுக்கு அரசு சார்பாக சிறுபான்மையினரிடம் மன்னிப்பு கேட்கிறோம். 7. இலங்கைக்கு உழைத்த, இங்கே பிறந்து இந்தியாவுக்கு அனுப்பபட்டவகளிடம் மன்னிப்பு கேட்கிறோம். 8. மாகாண சபைகளுக்கு வரி விதிக்கும், வெலிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கும் அதிகாரம் கொடுக்கப்படும். (யாவும் கற்பனை)
    • வினா இலக்கங்கள் 5, 24, 26 5 ) எல்லா போட்டியாளர்களும் சிறிதரன் அவர்கள் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள்.  24) 24 போட்டியாளர்கள் சாணக்கியன் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள்  26) குகதாசன் வெற்றி பெறுவார் என சரியாக சொன்னவர்கள் 22 போட்டியாளர்கள்.  1)பிரபா - 39 புள்ளிகள் 2)வீரப்பையன் - 34 புள்ளிகள் 3) வாதவூரான் - 34 புள்ளிகள் 4) வாலி - 34 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 33 புள்ளிகள் 6) கந்தையா 57 - 32 புள்ளிகள் 7) Alvayan - 32 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 32 புள்ளிகள் 9) நிழலி - 32 புள்ளிகள் 10) ரசோதரன் - 31 புள்ளிகள் 11) சுவைபிரியன் - 30புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 13)நூணாவிலான் - 30 புள்ளிகள் 14)வில்லவன் - 30 புள்ளிகள் 15) நிலாமதி - 30 புள்ளிகள் 16)கிருபன் - 29 புள்ளிகள் 17)goshan_che - 29 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 28 புள்ளிகள் 19) வாத்தியார் - 26 புள்ளிகள் 20) புலவர் - 26 புள்ளிகள் 21)புத்தன் - 26 புள்ளிகள் 22)சுவி - 23 புள்ளிகள் 23) அகத்தியன் - 21 புள்ளிகள் 24) குமாரசாமி - 21 புள்ளிகள்  25) தமிழன்பன் - 16 புள்ளிகள் 26) வசி - 16 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 5, 7, 8,10 - 13, 16 - 18, 22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 59)
    • இதுக்கே டென்சன் ஆனா எப்படி… அனுர ப்ரோ தரப்போவது இதுக்கும் மேலே இருக்கும்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.