Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காரணம் யார்? - அடுத்த கட்டம்

Featured Replies

இலங்கையின் பூர்வீக குடிமக்களான தமிழ்மக்களின் சுதந்திரம் உண்மையிலேயே பறிபோனது பிரிட்டிஷ் வல்லாதிக்கத்திடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பொழுதில்தான்.

இலங்கை மண்ணில் தார்மீக உரித்துடைய தமிழர்கள் வந்தேறு குடிகளான சிங்களவரினால் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். சிங்களவரின் பெரும்பான்மை என்கின்ற பலம் தமிழர்களின் அரசியற் பலத்தினை தோற்கடிக்க பெரும் சாதகமாக அமைந்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற ஒன்று உருவானது இலங்கை அரசின் சிங்கள மேலாதிக்கக் கொள்கையினால்தான். அகிம்சை வழியில் போராடி தளர்ந்துபோன இனத்துக்கு ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று மட்டுமே அந்த நேரத்தின் சரியான தீர்வாக அமைந்தது.

அதனை தமிழர் தரப்பில் இறுதிவரை இலட்சியம் தவறாமல் கொண்டுநடத்தியவர்கள் தேசியத்தலைவர். அதிமேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே.

ஆனால் இந்த விடுதலைப் போராட்டம் தன் எதிரியிடம் சந்தித்த எதிர்ப்புக்களைவிட உள்ளும் வெளியிலுமாக பல பக்கங்களில் இருந்து துரோகங்கள்,எதிர்ப்புக்கள், ராஜதந்திர அழுத்தங்கள், எதிர்த்தரப்புக்கான இராணுவ உதவிகள், புலனாய்வுத் தகவல்கள் என பல தரப்பிடமிருந்தும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெரும் சவால்களை எதிர்கொள்ளவேண்டி இருந்தது.

இறுதியாக நடந்த முள்ளிவாய்க்கால் துயரத்திலும், தமக்குள் உள்ள பகையினை மறந்து இந்த அனைத்து சக்திகளும் கூட்டுச்சேர்ந்து வந்துதான் ஈழப் போராட்டத்தினை முடக்கிப் போட்டிருக்கின்றது.

இதில் பல தரப்பு சம்மந்தப்பட்டிருந்தாலும்,

ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சியில் முக்கிய பங்கினை ஆற்றியிருந்தது இந்தியா என்ற தேசம்.

இந்தியா இன்று நேற்றல்ல, இந்திராகாந்தியில் ஆரம்பமாகிய இந்திய துரோகம் சோனியா காந்திவரை தொடர்ந்து துரத்துகின்றது.

ஆனால் அதற்குள்ளும் ஒரு சிறு ஆறுதல், தமிழ்நாட்டு மக்களின் எழுச்சிமிக்க ஆதரவு. ஆனால், அதையும் அரசியல் எனும் அகங்காரம் அமுக்கிவிடுகின்றது.

அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, மேற்குலக நாடுகள் , இந்தியா தவிர்ந்த ஆசிய நாடுகள்.

மூன்று தசாப்த காலத்துக்கும் மேலாக தொடரப்பட்ட ஒரு எழுச்சிமிக்க போராட்டம் திட்டமிட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றது.

இப்பொழுது கேள்வி என்னவென்றால்,

எமது "தனிநாட்டுக்கான போராட்டத்தினை" மேலும் தொடர்வதற்கு தற்போதைக்கு பெருந்தடையாக இருப்பது,

01) சிங்கள அரசா?

02) இந்தியாவா?

03) அமெரிக்கா, மேற்குலக நாடுகளா?

04) சீனா,ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளா?

அல்லது

05) ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம்தானா?

ஏனெனில் "அடுத்தகட்ட போராட்டம்" என்பதனை முன்னெடுப்பதற்கு,

சர்வதேச ரீதியில் ஆதரவு கிடைக்கும் பட்சத்திலேயே அது வெற்றியளிக்கும்.

எல்லாவற்றையும்விட எமக்குள்ளான ஒற்றுமை என்பதும் மிக அவசியப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு,

உங்களது கருத்துக்களை, விளக்கங்களை, விமர்சனங்களை முன்வைத்தால்,

நமக்குள்ளும் ஒரு தெளிவு பிறக்கும்.

அது எதிர்காலத்துக்கு வழி காட்டுவதாயும் அமையும்.

05) ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம்தானா?

ஆம் என்பதை விட, நாம் செய்யும் வேலைகள் காணாது என்பதே எனது வாதம்.

எமது பிரச்னைக்கு நாம் தான் தீர்வு தேட உழைக்க வேண்டும். எம்மிடம்/சிங்களத்திடம் உள்ள பலம் பலவீனங்களை வைத்து, எமது தலைமைகள் சரியான வழிகளில் பயணிக்கும் பொழுது தீர்வுகள், உரிமைகள் கிடைக்கும்.

பல அமைப்புக்கள் உள்ளமை பலவீனமா - இல்லை என்றே பார்க்கிறேன். அனைவருக்கும் இடம் நிறையவே உள்ளது வேலைகளை செய்ய, ஆனால் பலரும் ஒரு சில இடத்திற்குள் நின்றே போட்டியிடுவதால் பிரச்சனைகள் உருவாகின்றன.

சிங்களம் பலமாக உள்ளதா - பொருளாதார, சமூக அரசியல் நெருக்கடிக்குள் அது நிற்கிறது. சீன நெருக்கம் இந்திய, மேற்குலக நாடுகளுக்கு பிடிக்காத விடயமாக உள்ளது.

நாம் புலம்பெயர் நாடுகளில் இன்றும் பரப்புரைகளை முன்னெடுப்பது காணாது. ஆபிரிக்க, ஆசிய, இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் நாடுகடந்த அரசோ இல்லை உலகத்தமிழர் பேரவையோ மேலும் தொடர்புகளை வளர்க்கவேண்டும் (அதற்கு நாமும் பண உதவிகள் செய்யவேண்டும்) .

ஐ.நா. மனித உரிமைக்கூட்டத்தில் பல தடைகளையும் தாண்டி சிங்களம் மீது ஒரு ஐ.நா. விசாரணையை கொண்டுவருவதே இன்றைய தேவை.

Edited by akootha

மேற்கூறிய எல்லாம்.

ஒற்றுமையின்றிப் பிளவுபட்ட நாமே முழுக்காரணம். நாம் ஒற்றுமையாக இருந்தால் மற்றக் காரணிகளால் எதுவுமே செய்ய முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

01) சிங்கள அரசா?

02) இந்தியாவா?

03) அமெரிக்கா, மேற்குலக நாடுகளா?

04) சீனா,ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளா?

அல்லது

05) ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம்தானா?

நல்லதொரு கேள்வி

நம்மை நாம் கேட்டு ஆராய்ந்து அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கான திரி.

எனது பதில்

தோல்விக்கு காரணம் இது எல்லாமே என்பதுதான்.

ஆனாலும் இவற்றில் பல நாடுகள் தமது தப்பை உணர்ந்துவிட்டன. அவற்றை அரவணைத்துக்கொண்டு அடுத்தகட்டத்துக்கு செல்வதற்கு நாம் தோல்வியால் துவளாது ஒற்றுமையை சிதறடிக்காது இருக்கும் பலத்தை உடைக்காது அடுத்த சந்ததியையும் அரவணைத்துக்கொண்டு செல்ல வேண்டும். ஆனால் தோல்வியிலிருந்தும் அதனால் எழும் மன உளைச்சலிலிருந்தும் நாம் செய்வதறியாது திக்குத்தெரியாமல் தவிக்க எதிரியும் அவனோடு சேர்ந்தவர்களும் இதையும் தமக்கு சாதகமாக பாவித்தபடி பல படிகள் எம்மைவிட முன்னேறியுள்ள அதேவேளை எம்மையும் மேலும் மேலும் பலவீனமாக்கியுள்ளனர். இதை நாம் உணர்ந்து கொண்டு செயற்படாத ஒவ்வொரு நிமிடமும் தோல்வி எம்மை நோக்கிவருவதை தடுக்க எம்மைத்தவிர வேறு எவரும் வரப்போவதில்லை.

அதேநேரம் எமது புலம்பெயர் சக்தி என்பது எவருக்கும் கிடைக்காத பெரும் வலுவாகும். அதை ஒற்றுமையாய் பயன்படுத்தினால் எமது கனவை நிச்சயமாய் நாமே பெற்றுக்கொள்ளமுடியும்.

இதற்கு நீ என்ன செய்கின்றாய் அல்லது என்ன செய்தாய் என்ற கேள்விக்கு.

புலம்பெயர் தேசங்களில் நடக்கும் அநேகமாக அனைத்து கருத்தரங்குகள் ஊர்வலங்கள் பொதுக்கூட்டங்கள் ஒன்றுகூடல்களில் பங்கு பற்றி வருகின்றேன்.

நாடுகடந்த அரசை அது ஆரம்பித்ததிலிருந்து ஆதரித்து வருகின்றேன்.

தாயகத்தில் கூட்மைப்பை பலப்படுத்துதலை என்றும் ஆதரிக்கின்றேன்.

பிரிந்து நிற்கும் பகுதியினர் எல்லோரதும் உள் கட்டமைப்புக்களில் சந்தா கட்டி அங்கத்தவனாக இருக்கின்றேன். இதனால் உள்ளே சென்று எனது விமர்சனங்களை வைக்கின்றேன்.

இங்கு இளையோரால் நடாத்தப்படும் குறும்படப்போட்டிகள் விளையாட்டுவிழாக்கள் மற்றும் அவர்களது படிப்பு சம்பந்தமான எல்லாவிதமான நிகழ்வுகளுக்கும் பண மற்றும் உதவிகளைச்செய்துவருகின்றேன்.

எமது ஊரிலுள்ள வறிய மக்களுக்கும் வன்னி மக்களுக்கும் என்னுடைய வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கிவருகின்றேன். எனது உறவினர்களையும் நண்பர்களையும் இத்துடன் இணைத்துவருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

01) சிங்கள அரசா?

02) இந்தியாவா?

03) அமெரிக்கா, மேற்குலக நாடுகளா?

04) சீனா,ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளா?

அல்லது

05) ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம்தானா?

மேற்கூறிய ஐந்துமே முக்கிய காரணிகள்.

என்னைப் பொறுத்தவரையில்... இந்த வரிசைக்கிரமத்திலே... பிழை

உள்ளது. முதலாவதுக்கும்,இரண்டாவதுக்கும் கடுமையான போட்டி உள்ளதை மறுக்க முடியாது.

1) சிங்கள அரசு.

2) ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம். (ஒட்டுக் குழுக்கள்)

3) இந்தியா.

4) சீனா,ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகள்.

5) அமெரிக்கா, மேற்குலகம்.

Edited by தமிழ் சிறி

இராஜதந்திரம் அற்று, ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம்.

எனது சிற்றறிவுக்குத் தெரிந்த வகையில் எந்தவொரு விடுதலைப் போராட்டமும், வெளிநாடுகளின் உதவியின்றி புலிகள் (2001) எட்டிய பலமான நிலையை அடையவில்லை.

பல அமைப்புகள் இருக்கலாம், ஆனால் ஒருவருக்கொருவர் வெட்டுப்படாமல் உழைக்க வேண்டும். இதற்கு சிங்களவர்கள் நல்லதொரு உதாரணம்.

சந்தர்ப்பங்களைப் பயன்படுத்த, ஒவ்வொருவரும் தங்கள் திறமைக்கேற்ப முடியுமான மட்டும் பங்களிப்பை செய்ய வேண்டும். தற்போதுள்ள முக்கிய தெரிவு போர்க்குற்ற விசாரணை.

Edited by தப்பிலி

1. ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம்.

2. சிங்களம்

3. இந்தியா.(ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயிலாண்டி,உலகிற்கு இளைத்தவன் தமிழன்)

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

தற்பொழுது உள்ள சூழ்நிலையில், இன்றைய தேதியில் எம் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயங்களில் மேற்கூறிய விடயங்களை நாம் கட்டாயமாக ஆராயவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

நாம் எங்கு போராட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றதோ அங்கு அமைதியாக இருந்து விடுகின்றோம். ஆனால், தேவையில்லாத இடங்களில் வீம்புக்கு சண்டியர்கள் ஆகின்றோம்.

இதுதான் நாம் விடும் முதல் தவறு. மாபெரும் தவறும் அதுதான்.

தெளிவான சிந்தனையோடு செயற்பட முயல்வதே எமது விடுதலைக்கு வழியமைக்கும்.

இங்கு கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள் சேரட்டும்.

ஒரு விடயத்தினை எப்படி வேண்டுமானால் ஆரம்பிக்கலாம். ஆனால் அது ஆக்கபூர்வமானதாக இருக்குமா? இல்லையா? என யோசித்து ஆரம்பிக்க வேண்டும். அந்தவகையில், ஆக்கபூர்வமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திரியில் உங்கள் கருத்துக்களையும் தொடர்ந்தும் பதியுங்கள்.

ஏனெனில், எதிர்கால ஈழப் போராட்டத்தின் மூலம் என்பதே தமிழர்களாகிய உங்களின் எண்ணங்கள்தான் என்பதனை மறந்துவிட வேண்டாம்.

Edited by புலி

  • கருத்துக்கள உறவுகள்

5. ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம்

ஏன் ஒற்றுமை இல்லாமல் போனது?/

எமது போராட்டத்துக்கு தேவை இல்லாத எதிர்ப்பை சந்தித்துக் கொடுத்தது புலிகளின் அனுகுமுறைமட்டுமே..........

முக்கியமாக.......

1) கூட இருந்து குழிபறிப்பவன் போல் சின்ன சின்ன முரன்பாடுகளை வைத்து மாற்று குழுக்களை அழிக்க வெளிக்கிட்டது.

2) படித்தவனை தங்களோடு சேர்தது இல்லை வேறு குழுக்களில் சேர்ந்து செய்ற்படவும் விடவில்லை

3) ஜரோப்பாவும் சரொ அமெரிக்கா என்றாலும் சரி நாங்கள் இறங்கி வர மாட்டோம் நீங்கள் எங்களின் தடையை எடுத்து போராட்டத்தை அங்கிகரித்து இறங்கி வரெவேண்டும்..

4) மற்ற நாடுகளின் மறைமுக எச்சரிக்கைகளை விளையாட்டாக எடுத்து தானும் அழிந்து கூட இருந்தமக்களையும் அழித்து.

5)தமிழ்மக்களை ஒரு மாயக்குள்ளே வைத்து இருந்தது.

இப்படி பலதைச் சொல்லிக் கொண்டு போகலாம்.......

நீங்கள் எங்கை ஆரம்பிக்க போகிறீங்கள்?

புலிகள் செய்த அனைதும் சரி அதில் இருந்தா?

புலிகள் செய்தது அனைத்தும் பிழை அதில் இருந்தா?

புலிகளையும் பழைய போராட்டக் குழுக்களையும் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு புதிதாக தொடங்குவதா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப்பிரச்சனை ஒரு முக்கோணச்சிக்கல்... இதற்கு யாரும் காரணமில்லை......நாலுபேர் வாழோணுமெண்டால் ஒருத்தன் செத்தால் தப்பில்லை...இதுதான் இப்போதையான் கணக்கு.

சசியுடன் நான் முற்றுமுழுதாக உடன்படுகின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒற்றுமையும் இராஜதந்திரமும் பற்றிய பலத்தைத் தமிழர்கள் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை. இதற்கு நாங்கள் அகரம் போட்டால் எல்லாமே வெற்றி. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து படிக்க வேண்டும். தெருவில் இறங்கி போராடுவதை விடுத்து அரசியல்ஆளர்களுடன் நிகழ்வுகழள நிகழ்த்தவேண்டும். சகல நாடுகளிலும் எமது பிரச்சனை பற்றி அந்த அநத அரசாங்களுடன் சந்தித்து உரையாடி உண்மை நிலைகளைத் தெளிவுபடுத்தவேண்டும். எங்கள் பின்னடைவுக்குக் காரணம் தனித்த ஆயுதப்போராட்டமே.

  • கருத்துக்கள உறவுகள்

05) ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம்தானா?

ஆம் இது தான் முக்கிய காரணம்...எங்களில் குறைந்தது 75% மக்கள் ஒன்று பட்டாலே தனி நாடு கிடைப்பதற்கான அத்திவாரமாக இது அமையும்...அதன் பிறகு உலக நாடுகளை எமது கைக்குள் கொண்டு வரலாம்...உலக நாடுகளை கைக்குள் கொண்டு வந்த பின் இந்தியாவும்,இலங்கையும் எங்களுக்கு யூயுப்பி.

  • கருத்துக்கள உறவுகள்

05) ஒற்றுமையில்லாமல் பிளவுபட்டு நிற்கும் நாம்தானா?

ஆம் இது தான் முக்கிய காரணம்...எங்களில் குறைந்தது 75% மக்கள் ஒன்று பட்டாலே தனி நாடு கிடைப்பதற்கான அத்திவாரமாக இது அமையும்...அதன் பிறகு உலக நாடுகளை எமது கைக்குள் கொண்டு வரலாம்...உலக நாடுகளை கைக்குள் கொண்டு வந்த பின் இந்தியாவும்,இலங்கையும் எங்களுக்கு யூயுப்பி.

ஏன் ஒற்றுமை இல்லாமல் போனது?/

எமது போராட்டத்துக்கு தேவை இல்லாத எதிர்ப்பை சந்தித்துக் கொடுத்தது புலிகளின் அனுகுமுறைமட்டுமே..........

முக்கியமாக.......

1) கூட இருந்து குழிபறிப்பவன் போல் சின்ன சின்ன முரன்பாடுகளை வைத்து மாற்று குழுக்களை அழிக்க வெளிக்கிட்டது.

2) படித்தவனை தங்களோடு சேர்தது இல்லை வேறு குழுக்களில் சேர்ந்து செய்ற்படவும் விடவில்லை

3) ஜரோப்பாவும் சரொ அமெரிக்கா என்றாலும் சரி நாங்கள் இறங்கி வர மாட்டோம் நீங்கள் எங்களின் தடையை எடுத்து போராட்டத்தை அங்கிகரித்து இறங்கி வரெவேண்டும்..

4) மற்ற நாடுகளின் மறைமுக எச்சரிக்கைகளை விளையாட்டாக எடுத்து தானும் அழிந்து கூட இருந்தமக்களையும் அழித்து.

5)தமிழ்மக்களை ஒரு மாயக்குள்ளே வைத்து இருந்தது.

இப்படி பலதைச் சொல்லிக் கொண்டு போகலாம்.......

நீங்கள் எங்கை ஆரம்பிக்க போகிறீங்கள்?

புலிகள் செய்த அனைதும் சரி அதில் இருந்தா?

புலிகள் செய்தது அனைத்தும் பிழை அதில் இருந்தா?

புலிகளையும் பழைய போராட்டக் குழுக்களையும் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு புதிதாக தொடங்குவதா?

ஆரம்ப காலத்தில் புலிகள் பலம் குன்றி புளோட்டோ,ரெலோ பலமாக இருந்திருந்தாலும் எமது போராட்டம் இதிலும் கேவலமான நிலையை எப்போதே அடைந்திருக்கும்...இதில் புலிகளில் பிழை என்பதை விட தமிழ் மக்களாகிய எம்மில் தான் பிழை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ஒற்றுமை இல்லாமல் போனது?/

எமது போராட்டத்துக்கு தேவை இல்லாத எதிர்ப்பை சந்தித்துக் கொடுத்தது புலிகளின் அனுகுமுறைமட்டுமே..........

முக்கியமாக.......

1) கூட இருந்து குழிபறிப்பவன் போல் சின்ன சின்ன முரன்பாடுகளை வைத்து மாற்று குழுக்களை அழிக்க வெளிக்கிட்டது.

2) படித்தவனை தங்களோடு சேர்தது இல்லை வேறு குழுக்களில் சேர்ந்து செய்ற்படவும் விடவில்லை

3) ஜரோப்பாவும் சரொ அமெரிக்கா என்றாலும் சரி நாங்கள் இறங்கி வர மாட்டோம் நீங்கள் எங்களின் தடையை எடுத்து போராட்டத்தை அங்கிகரித்து இறங்கி வரெவேண்டும்..

4) மற்ற நாடுகளின் மறைமுக எச்சரிக்கைகளை விளையாட்டாக எடுத்து தானும் அழிந்து கூட இருந்தமக்களையும் அழித்து.

5)தமிழ்மக்களை ஒரு மாயக்குள்ளே வைத்து இருந்தது.

இப்படி பலதைச் சொல்லிக் கொண்டு போகலாம்.......

நீங்கள் எங்கை ஆரம்பிக்க போகிறீங்கள்?

புலிகள் செய்த அனைதும் சரி அதில் இருந்தா?

புலிகள் செய்தது அனைத்தும் பிழை அதில் இருந்தா?

புலிகளையும் பழைய போராட்டக் குழுக்களையும் ஒரு பக்கம் ஒதுக்கி விட்டு புதிதாக தொடங்குவதா?

சசியுடன் நான் முற்றுமுழுதாக உடன்படுகின்றேன் .

நானும் ஒத்துக்கொள்கின்றேன்.

உடன்படுகின்றேன்.

அடுத்தது என்ன?

தமிழர்களை ஒரு அணியில் கொண்டுவர உங்களின் திட்டங்கள் என்ன?

தாயகத்தமிழருக்கான வாழ்வியலுக்கு உத்தரவாதமளிக்கும் திட்டம் என்ன?

சொல்லுங்கள்

செய்யுங்கள்

சேர்ந்து பயணிக்க நான் தயார்.

உங்களிட்ட இருந்துதான்! :D

இந்த நியாய அநியாயங்களை சொல்லுற உங்கட மனசில உள்ள ஆதங்கங்கள் தெரிஞ்சாலும், கிட்டத்தட்ட 20 வருசமா பொத்திக்கொண்டு கிடந்த வாய்கள் இப்ப ஏன் திறக்குது? என்ற ஒரு விசயம் போதும், எல்லாம் விளங்கும். முதலில நான் எழுதினத வாசியுங்கள். பின்னர் சொல்லுங்கள் தெளிவாக..

அதை விடுத்து, சொல்லவந்த விடயத்தினை திசை திருப்பும் வேலைகள் இங்கு வேண்டாம்.

முடிந்தால் ஆக்க பூர்வமான கருத்துக்களை முன்வையுங்கள். இல்லாவிட்டால் 20 வருசம் இருந்தமாதிரி இருந்துகொள்ளுங்கள்.

பாதியில விட்டிட்டு போனதும், போறதும் புலியில்லை.

புலி என்பது தமிழரின் விடுதலை உணர்வுக்கான அடையாளம்.

அதையாவது அவர்கள் விட்டுவைத்துப் போனார்கள்.

உங்களின் பக்கம் என்ன இருக்கு?

இது வசிக்கும் அர்ஜுனுக்கும். :)

ஏழாம் அறிவு படம் பார்த்துகொண்டிருக்கும்................. ஐந்தாம்......! (சுற்றிவளைக்காமல்நேரிடையான் கருத்தே சரி என்பதால் இதை இப்படியே விட்டு விட்டு நேரிடையாக விடயத்திற்கு போகலாம்)

ஈழத்தில் பிறந்த எந்த தமிழனாலும் இந்த உண்மைகளை மறுக்கமுடியாது.

இந்த உண்மைகளை சாதாரணமானவர்களால் சிந்திக்கவும் முடியாது. இதற்கு சர்வதேச அளவிலான அரசியல் அறிவு தேவை அதை கொண்டவர்களால்தான் அதை எழுதமுடியும். எழுதியும் உள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

இப்படி சுற்றி வளைத்து பலத்தையும் பத்தையும் அடுக்காமல்.

"புலிகள் தமிழருக்கு போராட வெளிக்கிட்டதுதான் ஒரே பிழை." என்று ஒரு வரியில் எழுதுவதே சிறப்பு மற்றவைஎல்லாம் இதற்குள் அடங்கிவிடும்.

(இந்த கருத்து கொஞ்சம் நடுநிலைமை இல்லாது மாதிரி இருக்கே? பிறகேன் யோசிக்கிறீங்கள்? மட்டுறுத்தினர் கத்திய போடுங்கோ. உண்மைகளை எழுதும் எங்களின் குரல் வளையில் கத்தியை வைத்தால்தான் யாழில் ஜெனனாயகமும் நடுநிலைமையும் நீடூழி வாழும்)

இங்கை புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினது பிழை என்று யாரும் சொல்லவரவில்லை மாறாக போராடின விதம் பிழை அத்தோடு தாங்கள் மட்டும்தான் போராடவேண்டும் என்று நினைத்து பிழை. மற்ற இயக்கங்களை துரோகி ஆக்கி அழிப்பதுக்கு புலிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? ஒருவனை அழிக்க வேண்டும் என்பதுக்காகவே அவனை துரோகி ஆக்கினார்கள்......

வரம்பு வடிவாக கட்டி இருந்தால் பாசின நீர் நெல்லுக்கு வடிவாக போய் இருக்கும் ஆனால் புல்லும் முளைவிட்டு விட்டது அதுவும் தண்ணீரை இழுக்க தான் பார்க்கும். வரப்பு பிழையா வப்பில் பிழையா என்பது பிறப்பிலும் வளர்ப்பிலும் பேச்சிலும் தெரியும்.

உங்களிட்ட இருந்துதான்! :D

இந்த நியாய அநியாயங்களை சொல்லுற உங்கட மனசில உள்ள ஆதங்கங்கள் தெரிஞ்சாலும், கிட்டத்தட்ட 20 வருசமா பொத்திக்கொண்டு கிடந்த வாய்கள் இப்ப ஏன் திறக்குது? என்ற ஒரு விசயம் போதும், எல்லாம் விளங்கும். முதலில நான் எழுதினத வாசியுங்கள். பின்னர் சொல்லுங்கள் தெளிவாக..

அதை விடுத்து, சொல்லவந்த விடயத்தினை திசை திருப்பும் வேலைகள் இங்கு வேண்டாம்.

முடிந்தால் ஆக்க பூர்வமான கருத்துக்களை முன்வையுங்கள். இல்லாவிட்டால் 20 வருசம் இருந்தமாதிரி இருந்துகொள்ளுங்கள்.

பாதியில விட்டிட்டு போனதும், போறதும் புலியில்லை.

புலி என்பது தமிழரின் விடுதலை உணர்வுக்கான அடையாளம்.

அதையாவது அவர்கள் விட்டுவைத்துப் போனார்கள்.

உங்களின் பக்கம் என்ன இருக்கு?

இது வசிக்கும் அர்ஜுனுக்கும். :)

புலிகள் இருக்கும் போது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளும் வய்க்கவும் வாய்ப்பில்லை வைத்தாலும் கேப்பாரில்லை ஆனால் பினத்தின் மேல் இருந்து புதிய சிந்தனைகள் பிறக்கட்டும்.

நானும் ஒத்துக்கொள்கின்றேன்.

உடன்படுகின்றேன்.

அடுத்தது என்ன?

தமிழர்களை ஒரு அணியில் கொண்டுவர உங்களின் திட்டங்கள் என்ன?

தாயகத்தமிழருக்கான வாழ்வியலுக்கு உத்தரவாதமளிக்கும் திட்டம் என்ன?

சொல்லுங்கள்

செய்யுங்கள்

சேர்ந்து பயணிக்க நான் தயார்.

சுயமாக ஒருவழியும் உங்களுக்கு இல்லையா?

ஒன்றில் புலிகள் சொன்னார்கள் வழிகாட்டினார்கள் என்று அவர்கள் பின்னால் ஓடுவது அல்லது அவர்கள் மீது விமர்சனம் வைப்பவர்கள் மீது உங்கள் வழியில் வருகிறோம் என்று அவர்கலை ஏற்றுகொள்ள நினைப்பது.

இந்த இரன்ண்டையும் விட்டு விட்டு சுயமாக செல்லுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கை புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினது பிழை என்று யாரும் சொல்லவரவில்லை மாறாக போராடின விதம் பிழை அத்தோடு தாங்கள் மட்டும்தான் போராடவேண்டும் என்று நினைத்து பிழை. மற்ற இயக்கங்களை துரோகி ஆக்கி அழிப்பதுக்கு புலிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? ஒருவனை அழிக்க வேண்டும் என்பதுக்காகவே அவனை துரோகி ஆக்கினார்கள்......

ஒரே கொள்கைக்காக பலரும் போராட வெளிக்கிட்ட பாலஸ்தீனம் இன்று எவ்நிலையில் உள்ளது?

பிடல்காஸ்ரோவுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

மாவோ சேதுங்கிற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

வட அமெரிக்காவின் வரலாறுகளை ஒருகணம் புரட்டிப்பாருங்கள்!

நம்பிக்கைத்துரோகிகள் இருந்தால் ஒருவனை அல்ல.....ஒரு இனத்தையே அழிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினது பிழை என்று யாரும் சொல்லவரவில்லை மாறாக போராடின விதம் பிழை அத்தோடு தாங்கள் மட்டும்தான் போராடவேண்டும் என்று நினைத்து பிழை. மற்ற இயக்கங்களை துரோகி ஆக்கி அழிப்பதுக்கு புலிகளுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்? ஒருவனை அழிக்க வேண்டும் என்பதுக்காகவே அவனை துரோகி ஆக்கினார்கள்......

வரம்பு வடிவாக கட்டி இருந்தால் பாசின நீர் நெல்லுக்கு வடிவாக போய் இருக்கும் ஆனால் புல்லும் முளைவிட்டு விட்டது அதுவும் தண்ணீரை இழுக்க தான் பார்க்கும். வரப்பு பிழையா வப்பில் பிழையா என்பது பிறப்பிலும் வளர்ப்பிலும் பேச்சிலும் தெரியும்.

சர்வதேச அரசியல்...........

விவசாயம் படித்தவர்களுக்கு வரம்பு கட்டியது பிழை என்று புரியும்.

சாதாரண மக்கள் எங்களுக்கு நுணுக்கமாக ஆயத்தெரியவில்லை.

அதனால்தான் சொல்கிறோம் போராட வெளிக்கிட்டதுதான் பிழை என்று. மற்றதெல்லாம் அதனால் வந்ததுதானே?பேசாம பிழைப்ப பார்த்திருக்கலாம். நாங்களும் பனங்கிழங்கு அவிச்சு சாப்பிட்டுவிட்டு ஊரோடு இருந்திருப்போம்.

சிங்களவன் தமிழன் என்று எங்கையாவது எல்லையோரம் கொழும்புக்கு போர்வையே வெட்டி இருப்பன் ஊரில எமக்கு அந்த பிரச்சனை இருந்திராது. சிலவேளை சிங்களம் கட்டாய கல்வி அது இது என்று ஏதும் கத்தியிருப்பான். அதுக்கு நாங்கள் பள்ளிக்கூடம் போனால்தானே?

ஒரே கொள்கைக்காக பலரும் போராட வெளிக்கிட்ட பாலஸ்தீனம் இன்று எவ்நிலையில் உள்ளது?

பிடல்காஸ்ரோவுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

மாவோ சேதுங்கிற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

வட அமெரிக்காவின் வரலாறுகளை ஒருகணம் புரட்டிப்பாருங்கள்!

நம்பிக்கைத்துரோகிகள் இருந்தால் ஒருவனை அல்ல.....ஒரு இனத்தையே அழிக்கலாம்.

மா வோ பற்றி கதைத்தால் அவரைப்பற்றி கதையுங்கள்.

பாலஸ்தீனம் பற்றி பேசினால் பாலஸ்தீனம் பற்றி பேசுங்கள்.

நாங்கள் பேசுறது சர்வதேச அரசியல். அதற்குள் இவை அடங்காது..........

  • கருத்துக்கள உறவுகள்

தனிநாடு என்பது இன்றைய காலகட்டத்தில் தமிழனுக்கு தேவை என்றாலும் கிடைக்காது ....ஆனால் இந்தியாவுக்கோ அல்லது அமேரிக்காவுக்கோ சீனாவுக்கோ தேவை ஏற்படின் அவர்கள் நிச்சமாக உருவாக்குவார்கள் ..இதுதான் ஜதார்த்தம்...நாங்கள் ஒற்றுமையாக இருந்தால் என்ன இல்லாவிட்டாலும் அவர்களின் தேவைக்கு அவர்கள் உருவாக்குவார்கள்....உலகில் எந்த பகுதியிலும் தனிநாடு கோரி போராடுபவர்களின் நிலை இதுதான்...

  • தொடங்கியவர்

உங்களின் கருத்து உண்மையிலேயே யதார்த்தமானதாகவே இருக்கின்றது புத்தன்.

உங்கள் பார்வை எனக்கும் சரி என்றே படுகின்றது. :)

இப்போதைய "உலகநீதி" என்பது இப்படியான வல்லரசுத்தனங்களின் சுயநலத்தில்தான் தங்கியுள்ளது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அடிப்பார்கள்.மாறாக, தங்களுக்கு தேவையிருந்தால் அள்ளிக் கொடுப்பார்கள்.

தமிழீழ நிலப்பரப்பு என்பது அந்தக்காலத்திலிருந்து இன்றுவரைக்கும் எலோருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கேந்திர நிலையத்தில் அமைந்திருப்பது எமது பலம் என்பதனை புரிந்து அதற்கேற்ப எமது ராஜதந்திரமான நகர்வுகளை மேற்கொண்டால், ஈழம் என்பது மிக விரைவில் சாத்தியப்படும்.

ஆனால் அதற்கும் "நமக்குள் ஒற்றுமை என்பது மிக மிக அவசியமாய் இருக்கின்றது".

இந்த விடயத்தில், இனிமேல் எம் கவனத்தினை செலுத்துவது, நல்ல பலாபலன்களைக் கொடுக்கும் என்பது எனது கணிப்பு.

நீங்களும் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்.

ஒசாமா பின்லாடனுடைய கொள்கை என்றுமே ஒன்றுதான்.

அரபு தேசம் இஸ்லாமியர்களின் புனித பூமி அதற்குள் யார்வந்தாலும் இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி சகோதர யுத்தம் செய்து அவர்களை விரட்டி அடிப்பது.

சோவியெத் ஜுனியனை ஒசாமா பின்லாடன் அடித்த போது அமெரிக்கர்களுக்கு அவன் போராட்ட வீரனாக தெரிந்தான். அவனை வைத்து பல திரைப்படங்கள் தயாரித்து ரசித்தார்கள் (ரம்போ )

இன்று இவர் வலுகட்டாயமாக நுழைந்தபோதும். அவன் தனது அதே கொள்கைகளுடந்தான்.

அனால் இவர்களுக்கு இன்று தீவிரவாதி.

இந்த உண்மைகளை மறைத்துவிட்டுத்தான்.

சர்வதேச அரசியல் என்று எதோ சாத்துக்குடி சாப்பிட்டுவிட்டு சத்திஎடுத்துகொண்டு திரியுது ஒரு கூட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.