Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா அழிவதால் பூமிக்கு ஆபத்தில்லை - சுப்பி.மணிய சுவாமி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

catfish_fishing_swami.jpg

பாரத மாதா வின்

கவட்டுக்குள்

ஒரு சாக்கடை

அங்கோர் அழுக்கு தின்னிக்

கெழுத்தி..

அதன் பெயர்

ஜனநாயகம்..!

கெழுத்தியின்

உடலுலோடு ஓர் ஒட்டுண்ணி

அதன் பெயர்

சுப்பிரமணியம் சுவாமி.

அந்த ஆசாமிக்கு

ஒரு கட்சி

அது தேர்தலில்

நின்றதில்லை

ஆனால்

வெற்றி முழக்கத்திற்கு

குறைவில்லை..!

மக்களோ

அந்த ஐயனின்

குசும்பில்

தினமும் சொல்லாமல்

செல்கின்றார்

கீழ்ப்பாக்கம்..!

சுவாமிக்கு

அடிக்கடி

நெஞ்சில் ஓர் வலி

உள்ளூரில்

ஓய்வின்றிய புறணிக்கு

அப்படி வருவது விசேடம் அல்ல..!

இருந்தாலும்

ஓய்வுக்கு ஊளையிட..

அப்பப்ப எட்டிப் பார்ப்பது

அண்டை அயலில் ஈழத்தை..!

கூவிற கூச்சலுக்கு

றோ போடும்

பிச்சையில்

மருத்துவம்..!

புலி என்றால்

ஐயாவுக்கு கிலி..!

தமிழ்ஈழம் என்றால்

சுவாமிக்கு

சாத்தான்..!

48 மணி நேரத்தில்

40,000 தமிழ் உயிர்கள்

பாரத மாதாவிற்கும்

கெளதம புத்தருக்கும்

ஆசி வேண்டி..

முள்ளிவாய்க்காலில்

களப்பலி..!

இதுதான் சுவாமியின்

சாமி பரிகாரம்..!

இப்ப

சுவாமி கனவினில்

சாமி..

உருக் கொண்டு சொல்லுது

தமிழரின் பலி

தோல்வி அல்ல

வெற்றி..!!!

ஆம்..

றோவின் வெற்றி..!

இந்த நிலையில்....

எனக்கோர்

கனவு...

இந்தியா அழிகிறது

கூட

சுவாமி உடலும் பிளக்கிறது...!

சாமி ஆவியாகி

உயரப் பறக்கிறது

சாத்தான்

அதை விரட்டுகிறது..!

பூமி மிளிர்கிறது...!

சொர்க்கமே

என் காலடியில்..!

சாத்தான் அல்ல

தரித்திரம்

சுவாமி தான்..!

சரித்திரம்

மாறுகிறது..!

மறுபிறவியில்..

சுவாமி வந்து

ரீவி பெட்டியில்

சொல்கிறது..

தமிழ் ஈழமே

என் கனவு..!

கனவும்

கலைகிறது..!

தமிழ் ஈழமும்

நிஜத்தில்

மலர்கிறது..!

தமிழரின்

வெற்றிக் களிப்பில்

பூமி திழைக்கிறது...!

http://kundumani.blogspot.com/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பேய்கள் கூடியதில்,

பிரசவமான பேய்க்குஞ்சுகளில்,

பெரியது இது!

பேர் கூடச் 'சுப்பிரமணியன்'

சிறியதன் பேர்,

சோவன்னா ராமசாமி!

ஆரிய வம்சத்தின்,

சீரிய சிறப்புக் கூறும்,

காரியவாதிகள் இவர்கள்!

கெழுத்து மீனல்ல இது,

கொழுத்த மீன்!

களப்பலிகளின்,

கண்ணீரிலும், செந்நீரிலும்,

குளித்த மீன்!

தமிழனின் அழிவே,

தாரக மந்திரமாக்கி,

தமிழனாக வாழுகின்ற,

தறுதலை மீன்!

நல்லதோர் கவிதையைப் பகிர்ந்ததற்கு நன்றிகள், நெடுக்கர்!!!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

இது ரொம்ப ரசிக்ககூடிய புதுக்கவிதை தோழர் நெடுக்ஸ் மற்றும் புங்கையூரானுக்கு நன்றிகள்!...

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நெடுக்கர்!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலபோவானும் ,பூங்கையூரனும் கவிஞர்கள் என்று இவ்வளவு காலமும் தெரியாமல் போய்விட்டது. காரணம் நான் யாழில் கவிதைப் பகுதிக்கு பெரும்பாலும் செல்வதில்லை.

நல்ல கவிதைகள் படைத்தீர்க்ள. பாராட்டு(க்)கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதை அருமை வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லதொரு சிந்தனை வாழ்த்துக்கள். குறுக்கி இலகு தமிழில் சொல்லுதல்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், புங்கையூரானின் கவிதைகள் அழகு :) .

அதற்கு இட்ட... தலைப்பு, பேரழகு. :D

மிக மோசமான ஒரு கவிதை. தனி நபரின் பின்னாலுள்ள அரசியல் சிந்தாந்தத்தையும், அதை ஒட்டிய நடை முறை அரசியலையும் கேள்வி கேட்க துணிவின்றி தனி மனித அவதூறு செய்யும் ஒரு கவிதை

சு.சுவாமி ஒரு கருவி....

இதனை இயக்குவது இந்துத்துவமும் அதனை ஒட்டிய பார்ப்பன கொள்கைகளும், RSS எனும் மேல் சாதி பிராமணர்களின் கட்சியின் கொள்கைகளும்தான். எனக்குத் தெரிந்து நெடுக்ஸ் RSS இனதோ அல்லது இந்துத்துவ வெறித்தனத்தையோ கேள்வி கேட்காதது மட்டுமன்றி அதை விமர்சிப்பவர்களையே வெறுப்பவர்

நெடுக்ஸ் உண்மையில் சு.சு வை எதிர்த்தால், சு.சு வால் போற்றப்படும் பார்ப்பன அரசியலை முன்னெடுக்கும் இந்திய மானுட துரோக அரசியலின் அடிப்படையான இந்துத்துவத்தை எதிர்க்கட்டும். ஆனால் அவருக்கு இது முடியுமா?

இவ்வளவு நாளும் புங்கையூரனில் நல்ல மதிப்பு வைத்து இருந்தன். அவர் கூட 'உணர்ச்சி மேலிடும் கவிதைகளில்' தன்னை மறந்து கொள்வார் என நினைக்கவில்லை

Edited by நிழலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியர்களை எதிர்தது வசை பாடினால் ஏன் நிழலிக்குப்பிடிப்பதில்லை. பல இணைப்புகளில் நிழலியின் பார்வை வித்தியாசமாக இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவின் அரசியல் பிரபலங்களை எதிர்த்து எழுதும்போது நிழலியின் விமர்சனங்கள் இப்படிப்போகின்றன.

இந்தியர்களை எதிர்தது வசை பாடினால் ஏன் நிழலிக்குப்பிடிப்பதில்லை. பல இணைப்புகளில் நிழலியின் பார்வை வித்தியாசமாக இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவின் அரசியல் பிரபலங்களை எதிர்த்து எழுதும்போது நிழலியின் விமர்சனங்கள் இப்படிப்போகின்றன.

காரணம் simple ராஜ் லோகன்,

நீங்கள் சு.சுவாமி, கலாம், சோனியா போன்ற தனி நபர்களை எதிர்கின்றீர்கள்

நான் இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரம் பெற ஏதுவான பார்ப்பன அதிகார அரசியலை அடியோடு எதிர்க்கின்றேன். நாளையே இவர்கள் மரித்து இன்னொருவர் இவர்களின் இடத்தில் வந்தாலும் இதே நிலை தான். ஏனெனில் இவர்கள் எல்லாம் வெறும் கருவிகள். இவர்களை இயக்குவது இந்துத்துவம் எனும் பார்ப்பன வெறி கொண்ட அரசியல். இந்திய தேசிய வெறியை ஏற்படுத்த காந்தியாலும், காங்கிரசாலும் ஏற்படுத்தப்பட்ட வெறி இது

இந்த இந்துவ மேலாதிக்க சாதி வெறி இந்தியாவில் ஒழிக்கப்பட்டாலே இந்தியா ஒடுக்கப்படும் மக்களுக்கு தன் நேர்மையான ஆதரவை காட்டும். அதன் பிறகுதான் ஈழத்துக்கான ஆதரவும் நேர்மையாக தரப்படும்

இதை விட்டு

நாமும் சோனியாவையும், கலாமையும், சு,சுவாமியையும் எதிர்த்து அவர்கள் பார்க்காத யாழில் எழுதினால் ஒன்றும் ஆகப்போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் புங்கையூரனில் நல்ல மதிப்பு வைத்து இருந்தன். அவர் கூட 'உணர்ச்சி மேலிடும் கவிதைகளில்' தன்னை மறந்து கொள்வார் என நினைக்கவில்லை

நிழலி, உங்கள் பார்வையும் எனது பார்வையும் வேறு, வேறல்ல!

எனக்குத் தனிப்பட்ட முறையில், சுவாமி மீதும், சோ மீதும் வெறுப்பு உண்டு!

அதை நான் மறைக்கவும் இல்லை! என்னால் மறுக்கவும் முடியாது!

எமது அழிவுகள் அத்தனைக்கும் மூலகாரணம், அல்லது மூல காரணம் எனச் சொல்லப்படுவது, ராஜீவின் கொலை!!!

அதன் உண்மையான சூத்திரதாரி தான் இந்தச் சாமி!

இதில் விடை தெரியாத ஆயிரம் கேள்விகள் இன்னும் உண்டு!

மற்றும்படிக்குத் தனிப்பட எவரையும் தனிப்பட நான் தாக்குவதில்லை! அதற்கான தேவையும் இல்லை!

நீங்கள் கூறியபடி, எனது அடிமனத்தில் உள்ள காழ்ப்புணர்ச்சியே, எனது கருத்தில் வெளிப்பட்டுள்ளது!

எதிர் காலத்தில், கருத்திடும் போது, கவனத்தில் கொள்கின்றேன்!

நானும் ஒரு சாதாரண மனிதனே, நிழலி! மகாத்மாவல்ல! நன்றிகள் !!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிக மோசமான ஒரு கவிதை. தனி நபரின் பின்னாலுள்ள அரசியல் சிந்தாந்தத்தையும், அதை ஒட்டிய நடை முறை அரசியலையும் கேள்வி கேட்க துணிவின்றி தனி மனித அவதூறு செய்யும் ஒரு கவிதை

சு.சுவாமி ஒரு கருவி....

இதனை இயக்குவது இந்துத்துவமும் அதனை ஒட்டிய பார்ப்பன கொள்கைகளும், RSS எனும் மேல் சாதி பிராமணர்களின் கட்சியின் கொள்கைகளும்தான். எனக்குத் தெரிந்து நெடுக்ஸ் RSS இனதோ அல்லது இந்துத்துவ வெறித்தனத்தையோ கேள்வி கேட்காதது மட்டுமன்றி அதை விமர்சிப்பவர்களையே வெறுப்பவர்

நெடுக்ஸ் உண்மையில் சு.சு வை எதிர்த்தால், சு.சு வால் போற்றப்படும் பார்ப்பன அரசியலை முன்னெடுக்கும் இந்திய மானுட துரோக அரசியலின் அடிப்படையான இந்துத்துவத்தை எதிர்க்கட்டும். ஆனால் அவருக்கு இது முடியுமா?

இவ்வளவு நாளும் புங்கையூரனில் நல்ல மதிப்பு வைத்து இருந்தன். அவர் கூட 'உணர்ச்சி மேலிடும் கவிதைகளில்' தன்னை மறந்து கொள்வார் என நினைக்கவில்லை

இந்தப் படைப்பு சுப்பிரமணிய சுவாமியின் ஈழத்தமிழர் மீதான போலிக் கரிசணை தொடர்பாக எழுதப்பட்டுள்ளதே அன்றி அவரின் தனிப்பட்ட வாழ்வை மையமாகக் கொண்டல்ல. சுப்பிரமணிய சுவாமி உள்ளூர் அரசியலில் எதையாவது சொல்லிட்டு கிடக்கட்டும்.. அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து சிங்கள பெளத்த பேரினவாதத்தால் தமிழர்கள் அடைக்கி ஆளப்படுவதை ரசித்துக் கொண்டு..இந்த சுப்பிரமணிய சுவாமிகள் விடும் போலி அறிக்கைகள் அதுவும் ஈழத்தமிழர் எம்மை நோக்கி இவர்கள் காட்டும் போலிக் கரிசணைகளை நிராகரிக்கும் வகையில் தான் இந்தப் படைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சுவாமியை நாங்கள் எவருமே எங்களுக்கு ஆதரவு தா... எங்களைப் பற்றி சொல்லு என்று கேட்பதில்லை. அவரா.. தனது சரிந்து வரும் கள செல்வாக்கை நிலைநிறுத்த உடனே ஈழத்தமிழர் விவகாரங்களை கையில் எடுத்துவிடுகிறார்.

இந்திய களத்தில் சுவாமி அண்மைய நீதிமன்றத் தீர்ப்பால் கடுப்பாகி உள்ள நிலையில்.. இப்போ ஈழத்தமிழர்கள் பற்றி கதையளக்கிறார். எமது மக்கள் 64 ஆண்டுகளாக திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்படுவதை மறைத்து இந்த ஆசாமிகள்.. காந்தியாலையே கட்டிக்காக்க முடியாமல் போன.. ஹிந்திய தேசிய ஒருமைப்பாடு என்ற தங்கள் பலவீன சித்தாந்தத்தைக் காத்துக் கொள்ள எம்மைப் பலியிட்டு வருவதோடு.. அப்பப்ப எம்மில் அக்கறை உள்ளது போல நடித்து எம்மை கொலைக்கள பலியாடுகளாக்கி வருகின்றனர். அந்த வகையில் இவரின் ஈழத்தமிழர் மீதான கரிசணை ஈழத்தமிழர்களாலேயே வரவேற்கப்படாத நிலையில்.. இவர் பொத்திக்கிட்டு இருப்பது தான் சிறந்தது என்பதை சொல்வதே இந்தப் படைப்பின் நோக்கம்.

சுவாமி.. எமக்காக பரிந்தும் பேச வேண்டாம்.. கவலைப்படவும் வேண்டாம்.. உள்ளூரில் இருக்கும் குப்பைகளை அள்ளி தன் தலையில் கொட்டிக் கொண்டு கிடந்தாலே போதும்.. என்பதைச் சொல்வதே இந்த ஆக்கம். இவர் சொல்லி எமக்கு ஈழமோ.. விடிவே வரப்போறதில்லை... ஹிந்திய தேசியவாதிகளின் காதில் இவரின் குரலுக்கு மதிப்பும் இல்லை. இவர் அங்கு ஒரு அரசியல் கோமாளியாகவே சித்தரிக்கப்படுகிறார். ஆனால் இவர் றோ போன்ற மறைமுக கள நகர்வு செய்பவர்களுக்கே அதிகம் பயன்படுகிறார். அதனால் இவரின் ஈழத்தமிழர் மீதான கூற்றுக்கள் எமக்கு மேலதிக தொல்லைகளாக மட்டுமே இருக்க முடியும். எள்ளளவும் நன்மை பயக்காது..!

அந்த வகையில் அண்மையில் இவர் முள்ளிவாய்க்காலில் அழிந்தது அத்தனையும் புலி அதனால் தமிழர்களுக்கு தோல்வி இல்லை என்ற கணக்கில் விட்ட அறிக்கை.. மிகவும் மோசமான.. அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லாத ஹிந்திய தேசிய வெறியன் ஒருவனின் கருத்தாகவே அமைகிறது.

உலகமே ஒரு மனிதப் பேரழிவு நடந்துள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளும் நிலையில்.. சுவாமி போன்ற... மனித சிந்தனையற்ற ஜந்துகள் எம்மை நோக்கி அறிக்கை விட நாம் என்ன இவர்களை எமது அரசியல்... அல்லது இனப் பிரதிநிதிகளாக வரைந்து அங்கீகாரம் அளித்திருக்கிறோமா..??! இல்லையே. அப்படி இருக்கையில் இவருக்கேன் எமது விடயங்கள் தொடர்பில் அக்கறை. பொத்திக்கிட்டு இருந்து ஹிந்தியாவில் இருந்து கொண்டு ஹிந்தியாவை காப்பாற்ற முயற்சிக்கட்டும்..!

ஹிந்தியாவைச் சுற்றி பின்னப்படும் சர்வதேச பிராந்திய சதி வலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் படாத இந்த சுவாமி.. புலிகள்.. ஈழத்தமிழர்.. தமிழீழம் பற்றி கவலைப்பட என்ன அருகதையைக் கொண்டிருக்கிறார். இவரின் கரிசணையையோ.. கருத்தையோ ஈழத்தமிழர்கள் கோரவும் இல்லை.. கேட்கவும் இல்லை. அந்த வகையில்.. இவர் எனி மேல் ஈழத்தமிழர் விவகாரங்களில் தலையீடு செய்யாமல் ஒதுங்கி இருக்கக் கற்றுக் கொள்ளட்டும்..! அதுவே இவருக்கு சிறந்ததாக இருக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் simple ராஜ் லோகன்,

நீங்கள் சு.சுவாமி, கலாம், சோனியா போன்ற தனி நபர்களை எதிர்கின்றீர்கள்

நான் இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரம் பெற ஏதுவான  பார்ப்பன அதிகார அரசியலை அடியோடு எதிர்க்கின்றேன். நாளையே இவர்கள் மரித்து இன்னொருவர் இவர்களின் இடத்தில் வந்தாலும் இதே நிலை தான். ஏனெனில் இவர்கள் எல்லாம் வெறும் கருவிகள். இவர்களை இயக்குவது இந்துத்துவம் எனும் பார்ப்பன வெறி கொண்ட அரசியல். இந்திய தேசிய வெறியை ஏற்படுத்த காந்தியாலும், காங்கிரசாலும் ஏற்படுத்தப்பட்ட வெறி இது

இந்த இந்துவ மேலாதிக்க சாதி வெறி இந்தியாவில் ஒழிக்கப்பட்டாலே இந்தியா ஒடுக்கப்படும் மக்களுக்கு தன் நேர்மையான ஆதரவை காட்டும். அதன் பிறகுதான் ஈழத்துக்கான ஆதரவும் நேர்மையாக தரப்படும்

இதை விட்டு

நாமும் சோனியாவையும், கலாமையும், சு,சுவாமியையும் எதிர்த்து அவர்கள் பார்க்காத யாழில் எழுதினால் ஒன்றும் ஆகப்போவதில்லை

மிகச்சரியான பார்வை..காலங்காலமாக எம்மவர்களிடையே உள்ள ஒரு மிகத்தவறான அணுகுமுறை இது..ஒரு போதும் நோய்க்கு நிரந்தரத்தீர்வு தேடுவதாக எம்மவர்களின் அரசியல் நடவடிக்கைகள் அமைவதில்லை..ஆத்திரத்தில் தனி நபர்கள் மேல் மேற்கொள்ளும் வசைபாடல்களிலும் அவர்களைப் போடுத்தள்ளுவதிலுமே எங்களது போராட்ட காலங்களில் அமைந்த பெரும்பான்மையான நாட்கள் ஓடிப் பறந்து விட்டன...இது உலகத்தின் அதிர்ப்த்தியை எம்மேல் கட்டி வளர்க்க உதவியதே அன்றி எமது போராட்டத்திற்க்கு எந்த விதத்திலும் உதவவில்லை..ஒவ்வொரு தனிமனிதனையும் எச்சில் பொறுக்கி நாயாக திட்டும்போது அவன் இன்னுமின்னும் வேகமாக எதிரிக்கோ அல்லது தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு விசுவாசமாகவோ தனது துரோகப் பந்தை எம்மை நோக்கி எறிந்து கொண்டிருந்தான்..அதே போல் ஒவ்வொரு தனிமனித அரசியல்க் கொலைகளின் பின்பும் இன்னொருவன் அதே கொள்கைகளைக் காவிக்கொண்டு இன்னும் வேகமாக முன்னையவன் செய்தவற்றை செய்துகொண்டிருந்தான்...இந்தப் படுகொலைகள்,வசைபாடல்கள்,சீண்டல்கள்,துரோக முத்திரைகள் ஒரு சதவீதம் தன்னும் எமது போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த உதவவில்லை..மாறாக பல மடங்கு பின்னோக்கி விழவே உதவியது..சிங்கள அரசியல் வாதிகள் மேல் நிகழ்த்த்தப் பட்ட கொலைகள் கொல்லப்பட்டவனின் கொள்கைகளைக் காவி வந்த அரசியலில் செல்லாக் காசாயிருந்த பின்னையவனுக்கு சும்மாயிருந்த மக்களின் ஆதரவையும் பெருக வைத்து முன்னையவனின் இன அழிப்புக் கொளகைகளை போருக்கு ஆதரவான நிலைப் பாட்டை இன்னமும் தீவிரமாக மேற்கொள்ள ஊக்குவித்தது..இந்தியாவின் மேலும் இதே கொள்கையையே நாம் கொண்டிருந்தோம்..தனி நபர்கள் ஏறி நிற்கும் அரசியல் தளங்களைப் பற்றி நாம் விமர்சிப்பதில்லை..அரசியல் வாதியையும் அவன் பொண்டாட்டியையும் விமர்சித்து விசிலடிப்பதில் எங்கள் சக்தியை விரயமாக்குகிறோம்..வெறுமனே சுப்பிரமணிய சுவாமியும்,சோ வும்,சோனியாவும் அழிந்து போய்விடுவதால் இந்த அரசியல் தளம் ஆட்டம் கண்டுவிடப் போவதில்லை..ராஜீவ் காந்தி இறந்ததால் இன்னொரு சோனியாகாந்தி வந்து ராஜிவ் நினைத்ததை செய்து முடித்தாள்...அடிப்படை பார்ப்பனிய சாதி அரசியலை இந்தியாவில் இருந்து ஒளித்துக்கட்டுவதாகவே எமது எதிர்ப்புகள் அமையவேண்டும்...அவைதான்,அந்தக் கொள்கைகளைக் காவிவருபவர்கள்தான் எமது ஈழப் போராட்ட நலன்களுக்கும் எதிரானதாக இந்தியாவில் மிகப்பெரும் தடையாக தொடர்ந்து இருக்கின்றன/ர்..இந்துத்துவ பார்ப்பன மேலாதிக்க சாதி அரசியலை எதிர்த்து ஈழத்தமிழர்களோ ஈழத்தமிழ் ஊடகங்களோ வாயைத்துறந்ததே மிகமிகக் குறைவு அல்லது இல்லையென்றே கூறலாம்..ஆனால் இந்தியாவில் இந்த பார்ப்பன,சாதிய அரசியல் தளத்திற்க்கு எதிராகப் போராடுபவர்களே ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்..

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ்.. நாங்கள் இது விடயத்தில் இரட்டைப் பாதையில் பயணிக்க வேண்டும்..

1. எமது விடயங்களில் மூக்கை நுழைத்து ஹிந்திய நலனோடு.. தமது சாதிய நலனையும் காக்க முனையும் சுப்பிரமணியம் சுவாமி.. சோ போன்றவர்களை எதிர்கொள்வதும்.. அவர்களை யார் என்று மக்களுக்கு அடையாளம் காட்டுதலும். இது முக்கியமான ஒன்று. இவர்களை மக்கள் நம்பும் படி கைவிட்டு விடுவதே ஆபத்தானது.

2. நீங்கள் சொல்லும் பார்பர்னியம் என்பது எமக்கு எல்லா வகையிலும் ஆபத்தானதா என்பதையும் நாம் ஆராய வேண்டும். காரணம் பார்பர்னியம் என்பது பரந்த வீச்சில் பரவியுள்ள ஒன்று. பார்பர்னிய சித்தாந்தத்தைக் கையில் எடுத்துள்ளவர்களில் எமது நிலைப்பாடுகளோடு ஒருங்கே பயணிக்கக் கூடியவர்களும் உளர்.

நாம் ஒட்டுமொத்தமாக பார்பர்னியத்தை எதிர்ப்பது என்பதும் அவர்களை முற்றாக மாற்றுவது என்பதும் நடக்கக் கூடிய காரியமல்ல. ஆனால் நாம் பார்பர்னியத்திற்கு ஒரு தெளிவானச் செய்தியைச் சொல்லிவிட வேண்டும்.. நீங்கள் எமது நிலைப்பாடுகளை எதிர்ப்பீர்கள் என்றால் நாம் உங்கள் நிலைப்பாடுகளை எதிர்ப்போம் என்று..! அது நீங்கள் கட்டிக்காக்கும் ஹிந்திய தேசியத்திற்கும் பாதகமாக அமையலாம் என்பதை அவர்கள் உணரச் செய்ய வேண்டும். அதேவேளை எமக்கு ஆபத்தில்லாத வகையில் உள்ள பார்பர்னிய சித்தாந்தவாதிகளை நாம் எதிர்க்க வேண்டிய தேவை இப்போதைக்கு எமக்கு இல்லை..!

பார்பர்னியம் என்பது கருணா டக்கிளஸ் சித்தார்த்தன் நடத்தும் ஆயுத முனை ஜனநாயகம் பேசி காட்டிக் கொடுப்பு கட்சிகள் நடத்துவது போன்றதல்ல. பார்பர்னியம் என்பது ஒரு சித்தாந்தமாக பல தலைமுறைகளுக்குள்.. பல கோடி பேருக்குள் ஊறிக் கிடக்கும் ஒரு விடயம். அதை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதிர்ப்பது எம்மையே மேலும் மேலும் தனிமைப்படுத்தி எமக்கு எதிரான பார்பர்னிய செயற்பாட்டாளர்களுக்கு உயிர்ப்பும் ஊக்குவிப்பும் நல்கும். அதன் வழி பிறந்தவர்களே சுப்பிரமணியம் சுவாமி.. சோ.. ஜெயலலிதா போன்றவர்கள்.

பார்பர்னிய சிந்தனையற்றவர்கள் மட்டும் திறமா என்றால்.. அதுவும் இல்லை. ஹிந்திய தேசியத்தை வைத்து அரசியல் செய்ய பார்பனியம் பேசாதவர்களும் எமக்கெதிராக செயற்பட்டுள்ளனர். அதற்கு கருணாநிதி போன்ற சந்தர்ப்பவாத பார்பர்ன எதிர்ப்பாளர்கள் சாட்சி. ஆனால் அதேவேளை எமக்காக சில பார்பர்னர்கள் கருணாநிதியை விட பல மடங்கு ஆதரவாகவும் செயற்பட்டுள்ளனர். எனவே இதில்.. நாம் பலமான ஒன்றை சிலரின் நிலைப்பாட்டுக்காக எதிர்க்கப் போய் எம்மை தனிமைப்படுத்தி அந்த வேறு சிலரின் சந்தர்ப்பவாத நிலைப்பாட்டை பலப்படுத்திக் கொள்ளச் செய்வது சாணக்கியமாக இருக்க முடியாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்பனிய கொளகையை எதிர்த்து அதிவெற்றீகொண்டு, அதன் பின்னர் ஈழத்திற்கான அதரவை திரட்டுவது என்பது ,முட்டையில் மயிர் புடுங்குவதுக்கு சமனான காரியம் என்பது எனது பணிவான கருத்து,

பார்பனிய கொளகையை எதிர்த்து அதிவெற்றீகொண்டு, அதன் பின்னர் ஈழத்திற்கான அதரவை திரட்டுவது என்பது ,முட்டையில் மயிர் புடுங்குவதுக்கு சமனான காரியம் என்பது எனது பணிவான கருத்து,

நான் நினைக்கிறன் சித்தன் நீங்க இப்படி ஒரு பழமொழியத்தான் சொல்ல வந்திருப்பீங்கள் என்று...

மூஞ்சூறு தான் போகக் காணேல்ல.. உள்ளதிலேயே ஒரு பெரிய சைஸ் விளக்கு மாத்த இழுத்துக் கொண்டு போனீச்சாம்..

:D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றவர்கள் செய்யும் விடயங்களை பொது மக்களுக்கு தெரியப்படுத்தும்போது தான் மக்களும் அவர்கள் தொடர்பான விடயங்களில் அறிவைப்பெற்றிருப்பார்கள். அவர்கள் ஒரு அறிக்கைவிடும்போதோ சாட்டுக்கு வரும்போதோ தங்கள் முடிவுகளைச் சரியாக எடுப்பார்கள். எதையும் மக்களுக்கு தெரியப்படுத்தாமல் அவர்வரும்போது அவரை ஆதரியாதையுங்கள் என்ற சொல்லும்போது காலுக்குள் வெள்ளம் வந்தபின் அணைகட்ட வெளிக்கிடுவது கோன்ற நிலைதான். அந்த தனிமனிதனின் விய+பங்கள் தன இன்று எமமை இவ்வளவுக்குப்பாதித்தது என்பதை உங்களால் மறுக்கமுடியுமா?

மக்களுக்கு நல்லவன் யார் கெட்டவன் யார் என்று அறிவுபுகட்டி அவர்களாகவே முடிவை எடுக்கக்கூடிய நிலையில் வைத்திருத்தலே ஊடகங்களின் கடமை. இது தனி மனித அவதூறு என்று சொல்லவும் முடியாது. உங்களுக்குத் தெரிந்ததை மக்களுக்கும் புகட்டி உண்மைநிலை என்ன என்பதை உணரவைத்துத் அவர்களையும் தயார்நிலையில் வைத்திருக்கவேண்டும். நாம் அறிந்தததை நம்மனதுள் புதைத்துவிட்டோம் என்றால் பின்னர் நீங்கள் சொல்லவரும்போது மக்கள் மனதில் வேறுவிதமான அலைகள் ஓடும்போது உங்கள் கருத்துக்கள் எடுபடாது. வெள்ளம்வருமுன் அணைகட்டவேண்டும். அதாவது எமக்கு எதிரானவர்கள் தங்கள் ஏமாற்றக்கருத்தை மக்கள் மனதில் விதைக்கமுன் மக்களுக்கு எதரியின் உண்மைமுகத்தை அவர்கள் மனத்தில் பிரதிபலிக்கவேண்டும். இது தனிமனிதருக்கு எதிராhன மென்று சொல்லமுடியாது. ஜனநாயகவழியில் மக்களை அறிவுப+ர்வம் உள்ளவர்களாக மாற்றுதல் தான் ஜனநாயக வெற்றிக்கவழி. இதில் எழுத்துத்தான் ஆயுதம். தனிமனிதர்களின் தீர்மானமே முள்ளிவாய்க்கால் படுகொலையும். அவர்களும் பிரசசாரரீதியாகவே உலகைத்தங்கள் கைக்குள் அடக்கி முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தேறியது. அதிகாரத்திலுள்ள தனிமனதசிந்தனையை உலகிற்கும் மக்களுக்கும் புரிய வைத்தலே தார்மீகக்கடமை. அவருடைய சிந்தனை ப+தாகரமானபின் நீங்கள் உணர்த்த வெளிக்கிடும்போது வெய்யம் காலுக்குள் வந்தபின் அணைகட்டுவதாக முடியும். அதிகாரத்திலுள்ள ஒவ்வொரு தனிமனிதனுடைய எண்ணக்கரு பற்றியும் மக்கள் தெளிவான ஒரு பார்வை பெற்றிருக்கும்போது அவர்களால் இப்படியான கொலைகளைச் செய்யமுடியாது. மக்களே அறிவைப்பெற்று பார்ப்பனியத்தை எதிர்க்கும்நிலைவரும்போது பார்ப்பனியம் பனிபோல் கரைந்துவிடும். மக்களுக்கு பார்பனியம்பற்றிய தெளிவான கருத்தின்மையே உங்களால் அதை எதிர்கொள்ளமுடியாமல் இருக்கின்றது. பார்பனியர் தங்களுடைய அறிவுசார் பிரச்சாரத்தால் தங்களைத்தக்கவைத்துக்கொள்கின்றார்கள். நீங்கள் ஒரு கோடிக்குள்நின்று கதைப்பதால் பிரயோசனம் எதுவும் இல்லை கால்ம காலம்மாகக் கதைத்துக்கொண்டு இருக்கவேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

-----

ஹிந்தியாவைச் சுற்றி பின்னப்படும் சர்வதேச பிராந்திய சதி வலைகளைப் பற்றிய எந்தக் கவலையும் படாத இந்த சுவாமி.. புலிகள்.. ஈழத்தமிழர்.. தமிழீழம் பற்றி கவலைப்பட என்ன அருகதையைக் கொண்டிருக்கிறார். இவரின் கரிசணையையோ.. கருத்தையோ ஈழத்தமிழர்கள் கோரவும் இல்லை.. கேட்கவும் இல்லை. அந்த வகையில்.. இவர் எனி மேல் ஈழத்தமிழர் விவகாரங்களில் தலையீடு செய்யாமல் ஒதுங்கி இருக்கக் கற்றுக் கொள்ளட்டும்..! அதுவே இவருக்கு சிறந்ததாக இருக்கும்..! :icon_idea:

பார்பனிய கொளகையை எதிர்த்து அதிவெற்றீகொண்டு, அதன் பின்னர் ஈழத்திற்கான அதரவை திரட்டுவது என்பது ,முட்டையில் மயிர் புடுங்குவதுக்கு சமனான காரியம் என்பது எனது பணிவான கருத்து,

அருமையான கருத்துக்கள்... நெடுக்ஸ் & சித்தன்.

தமது சுயநலத்துக்காக... ஈழத்தமிழரை, ஊறுகாய் போல பாவிப்பது சுப்பிரமணியசாமி உட்பட பெரும்பாலான இந்திய அரசியல் வாதிகளுக்கு, ஒரு வியாதி. இவர்களின் வாய்ச் சவடால் எல்லாம்... ஈழத்தமிழனோடை தான். சீனாக்காரன், பாகிஸ்தான் காரனோடை... வாலைச் சுருட்டிக் கொண்டு இருப்பினம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிழலி இன்றய இந்தியாவின் கொள்கை இந்துத்துவத்திலோ அல்லது வேறு ஏதும் சிந்தாந்ததிலோ தங்கியிருக்கவில்லை. சொல்லப் போனால் அதற்கு என்று ஒரு கொள்கையே இல்லை. அங்கு நடப்பது வெறும் பணநாயகம் தான். பணம் சார்ந்த ஒரு நுண்ணிய வலையிலேயே இந்திய அரசியலும் மக்களின் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு அமைப்பானது எதை விருமென்றால் மக்கள் தங்கள் உரிமைகள் விழுமியங்கள் எல்லாவற்றையும் மறந்து அடிமையாக வாழ்வதே. அதற்கு இந்துத்துவத்தின் சாதியம், மூட நம்பிக்கைகள் போன்றன சும்மா சொல்லி வைத்தது போல் உதவுகின்றன. அதே போல் தான் இந்திய தேசியவாதம், காந்தீயம் போன்றனவும். ஆகவே இவை எல்லாமே வெறும் கருவிகள் தானே ஒழிய கருத்தா அல்ல.

அண்மையில் ஒரு நீயா நானா நிகழ்ச்சி பார்த்தேன். தலைப்பு தமிழரின் மரபுகளை கடைபிடிக்க வேண்டுமா இல்லையா என்பதே. அதில் மரபுகள் தேவையில்லை என்ற அணியிடம் உங்கள் வாழ்க்கை எந்த இனத்தை ரோல் மொடலாக கொண்டது என்ற கேளவிக்கு, ஒரு விரிவுரையாளராகப் பணியாற்றும் பெண் சொன்னார். வட இந்தியர் என்று. ஏனென்றால் அவர்கள் வியாபாரத்தில் சிறந்து விளங்குகிறார்கள் என்று. தான் மூக்குத்தி கூட வட இந்தியர்கள் அணிவது போல் மறு வளத்தில் அணிந்திருப்பதாகவும் சொன்னார். இது ஒரு தனிப்பட்டவரின் கருத்தாக இருந்தாலும் எதை காட்டுகிறது என்றால் தமிழ் நாட்டவரின் தாழ்வு மனப்பான்மையைத் தான். இந்நிலையில் அதிகார வர்க்கம் அவர்களுக்கு தமிழனின் பெருமை வீரம் உரிமை பற்றிய விழிப்புணர்வு போன்ற எதையாவது எள்ளளவேனும் ஏற்படுத்த விரும்புமா? கிடையாது. எமது போராட்டம் வெற்றி பெற்றால் இந்தியாவில் ஒடுக்கப் பட்டவனுக்கும் உரிமைகள் பற்றிய உணர்வு எழும். தட்டிக் கேட்பான். அது அந்தக் கொள்ளையடிக்கும் பண நாயகத்துக்கு கொஞ்சமும் ஏற்புடையதல்ல. ஆதலால் எமது போராட்டத்தையும் ஒழித்தார்கள் இன்னும் என்னென்ன (உண்மையான) போராட்டம் அந்தப் பிரந்தியதில் எழுந்தாலும் ஒழிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோர் கவிதை நன்றி நெடுக்ஸ்,புங்கையூரானின் கவிதையும் மிக அருமை.இங்கு கவிதையில் கையாளப்பட்ட வார்த்தைகளே சிலருக்கு கோபமூட்டி இருக்கிறது.கவிதை என்பது அதுதான் உணர்ச்சிகளைக் கிளற வேண்டும் .(காதல், கோபம்,சோகம்,போன்ற எல்லாவகை உணர்ச்சிகளையும்) புதுக்கவிதையில் ஒன்றிரண்டு சொற்களிலேயே இவற்றைக் கொண்டு வர முடியும்.பொருட்சுவையே(கவிதையின் கரு) இதில் முக்கியம் பெறுகிறது.மரபுக் கவிதையெனின் சொற்சுவை,பொருட்சுவை போன்றவை கலந்த கூட்டாகும். அந்த வகையில் மேலுள்ள இரு கவிதைகளும் எழுதப்பட்ட நோக்கத்தைப் பூர்த்தி செய்திருக்கின்றன.நிழலியின் கோபமே அதற்குச் சாட்சி.தனிப்பட்ட நபர்களைத் தாக்காமல் நெடுக்சை அவரின் கடவுள் நம்பிக்கையைக் கைவிடச் சொல்லிக் கேட்பது.சைக்கிள் கேப்பில் கடா வெட்டுவதைப் போன்றது.சு.சாமி தமிழர்களின் எதிரி.அவரைத் தாக்குவதை நாம் வரவேற்கிறோம்.மக்கள் செல்வாக்கே இல்லாத தனிப்பட்டசு.சாமி,சோ போன்றவர்களால் ஈழத்தமிழருக்கு எதிராக பல நடவடிக்கைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுகின்றன.திராவிடக் கட்சிகள் மாறி மாறி ஆட்சியேறினாலும் அவர்களின் பின்னால் இந்தக் அரூபக்கரங்களே இருக்கின்றன.இன்று ஜெயலலிதாவின் பின்னால் இவர்கள் இருக்கிறார்கள்.சீமான் பொன்றவர்களின் நடவடிக்கைகளே இவர்கள் சதிகளை அடக்கி வாசிக்க வைத்திருக்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.