Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையைக் காப்பாற்ற இந்தியா அமெரிக்காவுடன் பேச்சு! விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டது வொஷிங்டன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கோரியும் இலங்கை அரசுக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை தொடர்பில் தளர்வுப் போக்கைக் கடைப்பிடிக்குமாறு அமெரிக்காவிடம் இந்தியா இராஜதந்திர அடிப்படையிலான வேண்டுகோளை விடுத்துள்ளது என மிகவும் நம்பகரமாகத் தெரியவருகின்றது.

இதற்கமைய ஜெனிவாவில் நிலைகொண்டுள்ள டில்லி அரசின் இராஜதந்திரிகள் குழாம், அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் தொடர்பில் முக்கியமான பேச்சுகளை நடத்தியுள்ளது என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜெனிவா மாநாட்டில் இலங்கையை ஆதரிக்கப் போவதாக சீனா உத்தியோகபூர்வமாக அறிவித்ததை அடுத்தே, இந்தியா தனது மௌனத்தைக் கலைத்துள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையைத் தாம் பகைத்துக்கொண்டால், சீனாவின் பிரசன்னம் இலங்கையில் மேலோங்கிக் காணப்படும் என்றும், கொழும்புக்கும் டில்லிக்கும் இடையிலான பொருளாதார ரீதியிலான உறவில் விரிசல் என்றும் இந்திய அரசு கருதியதாலேயே இவ்வாறானதொரு முடிவை அந்நாடு எடுத்துள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேற்குலக நாடுகளுக்கும், இலங்கைக்கும் இராஜதந்திர போர் உக்கிரமடைந்துள்ள தற்போதைய பரபரப்பான சூழ்நிலையில், இலங்கை விவகாரம் தொடர்பில் வொஷிங்டனுடன் பேச்சுகளை முன்னெடுத்துள்ள இந்தியா, கொழும்புக்கு எதிரான பிரேரணையைத் தடுத்துநிறுத்தும் வகையில் காய்நகர்த்தலில் ஈடுபட ஆரம்பித்துள்ளது என்றும் கூறப்படுகின்றது.அத்துடன், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு கால அவகாசம் வழங்குமாறும் இந்தியா அந்நாட்டிடம் கோரியுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி நடவடிக்கை, மீள்கட்டுமான செயற்பாடுகள், புனர்வாழ்வு உட்பட கொழும்புக்குச் சாதகமான வகையிலான காரணிகளையும் இந்தியா மேற்குலகத்திடம் எடுத்துரைத்துள்ளது என்றும் அறியமுடிகின்றது.அதேவேளை, இந்தியாவின் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் அமெரிக்காவின் பதில் அமைந்துள்ளது என இராஜதந்திர மட்டத்திலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசு, சர்வதேசம் வழங்கிய சந்தர்ப்பத்தை உரிய முறையில் பயன்படுத்தத் தவறிவிட்டது. எனவே, இனிமேலும் கால அவகாசத்தை வழங்க தாம் தயாரில்லை எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள அமெரிக்கா, பிரேரணை சபைக்கு வந்தேதீரும் என ஆணித்தரமாக இடித்துரைத்துள்ளது என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்கா தனது கோரிக்கையை நிராகரித்ததால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்புநாடுகளுடன் பேச்சுகளை நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என அறியமுடிதுள்ள போதும், அது குறித்து உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

எது எப்படியிருப்பினும், இலங்கை தொடர்பிலான பிரேரணை, வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதனை 25இற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிப்பதற்கான சாத்தியப்பாடுகளே ஜெனிவாவில் மேலோங்கிக் காணப்படுகின்றன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் 10ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் உறுப்புநாடொன்று பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவேண்டுமாயின், மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னரே அது குறித்து அறிவிக்கவேண்டும். அந்த அடிப்படையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 19ஆம் திகதி சமர்ப்பிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

http://www.saritham.com/?p=52908

19, 22 ஆம் திகதிகள் வரலாறு படைக்கும் நாட்களாக அமையட்டும்.

எது எப்படியிருப்பினும், இலங்கை தொடர்பிலான பிரேரணை, வாக்கெடுப்புக்கு விடப்படும்போது அதனை 25இற்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவளிப்பதற்கான சாத்தியப்பாடுகளே ஜெனிவாவில் மேலோங்கிக் காணப்படுகின்றன என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையுடன் 10ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் உறுப்புநாடொன்று பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவேண்டுமாயின், மாநாடு நிறைவடைவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னரே அது குறித்து அறிவிக்கவேண்டும். அந்த அடிப்படையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை 19ஆம் திகதி சமர்ப்பிக்கப்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

2009 இல் கனடா கொண்டுவந்த தீர்மானத்தை தோற்கடித்ததும் அல்லாமல் இலங்கையைப் பாராட்டும் பிரேரணையை வெற்றிபெறச் செய்ததும் இந்தியாதான்..! :unsure: அப்போதைய வெற்றிக்களிப்பில் ரஜிவ விஜேசிங்க ஆற்றிய உரை கீழே..! :rolleyes:

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

திருடன் விஜேசிங்க இந்தக் காணொளியின் இறுதியில் கேபியைப் பற்றி யாரோ ஐநா அமர்வில் கதைத்துவிட்டார்கள் எண்டு (ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டமாதிரி) சொல்லுறான்..! :unsure: இப்ப கேபியை வச்சு தீனி போடுறதே இவங்கள்தான்..! :o யாராவது ஐநாவில் இந்த உரையின் உத்தியோகபூர்வ பதிப்பைப் போட்டுக்காட்டினால் நல்லது..! :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை மீதான குற்றங்களை இந்தியா ஆதரிக்கும் நிலை 50 வீதத்தற்குக் குறைவாக உள்ளது. ஏனெனில் இந்தியா தன்னாட்டில் தன் மக்களுக்குச் செய்த மனிதகுரத்திற்கு எதிரான வெளிவராத குற்றங்கள் எத்தனையோ உள்ளன.

ராஜீவ் ஹரிசனைங்களைக்கொன்றது. சந்தனவீரப்பன் தொடர்பாக மலையடிவாரக் காட்டோர மக்களை சித்திரவதை செய்தததும் முள்ளிவாய்க்கால் போன்றது. இதைவிட பொற்கோயிலில்உள்ளிட்டு அவர்களைச் சுட்டுக்கொன்றது மாத்திரமல்லாமல் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பின்னணியில் முற்றுமுழுதாக போரிட்டதும் இந்தியாதான் காட்டுவாசிகளுக்கு (ப+ர்வீக )இடம் கொடுக்காமல்அவர்களை சூட்டு அழித்து நிலங்களை அபகரித்தல் போன்ற எல்லாவிதமான காட்டுமிராண்டிச்செயல்களும் இந்தியாவில் இருக்கின்றது. இவை வெளியே வரவும் வீடுவதில்லை. அவர்களுக்கு ஆதரவாகவும் எவரும் இல்லை. இது ஓரளவிற்கு எமக்குத்தெரிந்த கசிவுச் செய்தி. இதைவிட எத்தனயோ கொடுமைகள் இந்தியாவில்இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இந்தியா இந்தவிடயத்தில் நழுவல் நிலையில் தான் இருக்கும்.

இலங்கைமீதான திடமான முடிவை எடுத்தால் சீனாவுடன் பகிரங்கமாக மோதவேண்டிவரும். இதை ஒரு நாளும் இந்தியா விரும்பாது. இலங்கையுடன் வளைந்து நெளிந்து சென்று குழைதலையே இந்தியா செய்து கொண்டிருந்து சந்தர்ப்பம் வரும்போது மேவப்பார்க்கும்

இந்திய அரசியல் வாதிகளின் வேட்டிக்குள் கோமணம் இல்லைத்தான் போலிருக்கு.

அந்த உண்மையை சரியாக தெரிந்து கொண்டது சிறிலங்கா தான் போல இருக்கு.

இதுக்காக சிங்களவனோட கிடந்தது சீரளியிரதிலும் பார்க்க வேட்டியை உறிஞ்சு உண்மையை ஒத்துக்கொண்டு மானத்தை காப்பாத்தலாம்.

செய்யுமா இந்தியா?

வல்லரசுக் கனவுவேற..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை மீதான குற்றங்களை இந்தியா ஆதரிக்கும் நிலை 50 வீதத்தற்குக் குறைவாக உள்ளது. ஏனெனில் இந்தியா தன்னாட்டில் தன் மக்களுக்குச் செய்த மனிதகுரத்திற்கு எதிரான வெளிவராத குற்றங்கள் எத்தனையோ உள்ளன.

ராஜீவ் ஹரிசனைங்களைக்கொன்றது. சந்தனவீரப்பன் தொடர்பாக மலையடிவாரக் காட்டோர மக்களை சித்திரவதை செய்தததும் முள்ளிவாய்க்கால் போன்றது. இதைவிட பொற்கோயிலில்உள்ளிட்டு அவர்களைச் சுட்டுக்கொன்றது மாத்திரமல்லாமல் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பின்னணியில் முற்றுமுழுதாக போரிட்டதும் இந்தியாதான் காட்டுவாசிகளுக்கு (ப+ர்வீக )இடம் கொடுக்காமல்அவர்களை சூட்டு அழித்து நிலங்களை அபகரித்தல் போன்ற எல்லாவிதமான காட்டுமிராண்டிச்செயல்களும் இந்தியாவில் இருக்கின்றது. இவை வெளியே வரவும் வீடுவதில்லை. அவர்களுக்கு ஆதரவாகவும் எவரும் இல்லை. இது ஓரளவிற்கு எமக்குத்தெரிந்த கசிவுச் செய்தி. இதைவிட எத்தனயோ கொடுமைகள் இந்தியாவில்இராணுவத்தால் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே இந்தியா இந்தவிடயத்தில் நழுவல் நிலையில் தான் இருக்கும்.

இலங்கைமீதான திடமான முடிவை எடுத்தால் சீனாவுடன் பகிரங்கமாக மோதவேண்டிவரும். இதை ஒரு நாளும் இந்தியா விரும்பாது. இலங்கையுடன் வளைந்து நெளிந்து சென்று குழைதலையே இந்தியா செய்து கொண்டிருந்து சந்தர்ப்பம் வரும்போது மேவப்பார்க்கும்

காந்தீய நாடு. 

ஈரானிய குடும்ப ஆட்சியின் கீழ் அறுநூறு வருடங்களாக அடிமையாக இருந்து சுதந்திரம் பேசும் ஆட்டு மந்தைகள். 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா தனது கோரிக்கையை நிராகரித்ததால், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய உறுப்புநாடுகளுடன் பேச்சுகளை நடத்துவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது என அறியமுடிதுள்ள போதும், அது குறித்து உத்தியோகபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.

எதனையும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பது மட்டும் உறுதி.

  • கருத்துக்கள உறவுகள்

பன்னி குட்டி போட்டது போல ஒரு கிரவுடு.. பினாயிலை... ஆட்டு மூத்திரத்தினை.... எவளாவது வடகிந்திய வெள்ள தோல்காரி அவுத்து போட்டு ஜிங்கு ஜிங்கு என்று ஆடி அது கோக்கு மாக்கு என்றாலும் அதை தேவாமிர்தம் போல வீட்டில் குடிக்க கூழ் இல்லையென்றால் குடிக்க ஒரு கூட்டம்...

சோ .. கிந்தியன் இந்த பன்னி கூட்டத்தை வைத்து ஏதும் தடை செய்வோம் தட்டுபாடு என அமெரிக்க காரனை ஏதும் பிளாக் மெயில் செய்யவில்லையா..? பிசினஸ் ஓடுவதே இந்த பன்னிகளால் தானப்பா..!!!

மலையாளதார்கள் செஞ்சோற்றுக்ககடன் தீர்க்க இலங்கைக்கெதிரான தீர்மானத்தை இந்தியாவிற்கு எதிரான தீர்மானமாக மாற்றித்தந்துள்ளார்கள்.

மகிந்தா கிரிகெட் அடிக்கிறார். வருத்தம் மாற்றப்போன முசோலினி அம்மா ஓடி வந்து அவசர மந்திர ஆலோசனை போடுகிறா.

இதுவும் இலங்கையின் ராஜதந்திரம் தான்.

தமிழர் எதையாவது செய்து தங்களைத் தாங்கள் இறுதியில் காப்பாற்றி விடுவார்கள். சிங்களவர்களிடம் மாட்டிய கிந்தி மோடயகளுக்கு மீட்சி இல்லை. இனிக்கிடந்து உழந்த வேண்டியதுதான்.

Edited by மல்லையூரான்

சிங்களப் பயங்கரவாதி மகிந்தவின் பின்னால் நாயாய் அலைந்த இந்தியக் காட்டுமிராண்டி நிருபமா ராவ் இப்ப அமெரிக்காவில் எதையாவது காட்டி யாரையாவது மடக்கப் பார்க்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு குழி பறிக்கிறதுக்கு... இந்தியா படும் பாட்டை நினைக்க, காறித் துப்ப வேணும் போலை கிடக்குது.badly2.gif

இலங்கைக்கு எதிரான பிரேரணை என்பது நிறைவேற்றப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் ஓங்கிக் காணப்படுவதால்தான் இந்தியா அமெரிக்காவுடன் பேசியிருக்கிறது. அந்த முடிவு உறுதியாகிவிட்டதால் இந்தியா பிரேரணைக்கு எதிராக வாக்களிக்காது என்பது ஓரளவிற்கு உறுதியாகிவிட்டது.

இவ்வாறான அழுத்தங்கள் இந்தியாவிற்கு ஏற்பட்டால்தான் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வுண்டு. சீனர்களின் இலங்கை தொடர்பான நகர்வை இந்தியாவினால் கிஞ்சித்தும் தடுக்க முடியாது. மேற்கு நாடுகள் இதை உணர்ந்துள்ளன. தன்னைக் காத்துக் கொள்வதற்கு தற்போதய நிலையில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது. நடுநிலை என்ற பெயரில் ஒதுங்கிக் கொண்டாலும் நல்லதே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு குழி பறிக்கிறதுக்கு... இந்தியா படும் பாட்டை நினைக்கஇ காறித் துப்ப வேணும் போலை கிடக்குது.

இந்த இந்தியாவை விட்டால் தமிழனுக்கு வேறு கதியில்லை. என்று சொன்ன எல்லா ஆய்வாளர்களும் இப்ப என்ன சொல்லப் போகினம்.நாம அமெரிக்காவை நம்புவம்.அமெரிக்கா முன்வச்ச காலை பின் வைக்காது.இந்தியா தன்னைச்சுற்றி பகை நாடுகளை வச்சிருக்கு.இதுக்குள்ள வல்லரசுக் கனவு வேற.இருந்த ஒரே ஓரு நட்பு நாட்டையும்(தமிழீழம்)பகைச்சுப் போட்டினம் .இனி இந்தியனுக்கு சவக்குழிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

http://a3.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash4/s320x320/429557_113531648770942_100003423234928_9747_90196897_n.jpg

இதுக்குத்தான் லாயக்கு!!!

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியா வருங்கால கு.மணி வல்லரசு என்றீயள்...புலவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
mohsin8619802382353.jpg

அமெரிக்காவும் இப்படியான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கிறது. பார்க்கப்போனால் அமெரிக்காதான் தமிழரை ஏமாற்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.