தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
மட்டக்களப்புச் சொல்லாட்சி ஈழத்தில் மட்டக்களப்புக்கென்று தனித்துவமான சில சொற்களுண்டு. சில வேளைகளில் அவற்றில் சில சொற்களை ஈழத்தின் பிற பகுதியினரால் கூடப் புரிந்து கொள்ள முடியாது, ஆனாலும் அவை ஆழமான பொருள் பொதிந்த பழந் தமிழ் மரபின் தொடர்ச்சியாகக் காணப்படும். காட்டாக: `பரத்தை` என்ற சொல்லின் `விலைமகள்` என்ற பொருள் எல்லோரும் அறிந்தது; மட்டக்களப்பில் இச் சொல்லுக்கு வேறொரு பொருளுமுண்டு. வீடுவேய்தல், வேலியடைத்தல் போன்ற வேலைகளினை உறவினர், அயலவர் எல்லோரும் சேர்ந்து செய்வார்கள். அதன் முடிவில் வேலை செய்து தந்த உறவினருக்கு வழங்கப்படும் உணவும் `பரத்தை` எனப்படும். பரந்த அளவிற் சமைக்கப்படுதல் என்ற பொருளில் `பரத்தை` என அழைக்கப்படுகின்றது. எனவே அங்கு `பரத்தைக்கு வாங்க` எனக் கேட்டால் …
-
- 13 replies
- 2.9k views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே தமிழில் ஒரு பிறந்தநாள் வாழ்த்துப்பாடலை உருவாக்கினோம் என்பது நீங்கள் அறிந்ததே .அந்த வகையில் அந்தப்பாடலை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் ...............மேலும் இந்தப்பாடல் இன்னும் வேறு வகையில் வீடியோ காட்சி செய்யப்பட்டுகொண்டிக்கிறது ..............பல தொலைக்காட்சிகள் ,வானொலிகள் இவற்றை ஒலிபரப்ப காத்திருக்கிறது ...............அந்த வகையில் யாழ்கள முகப்பிலும் இந்தப்பாடல் வெகு விரைவில் வர காத்திருக்கின்றது .. பாடலை நீங்களும் ஒரு தடவை கேளுங்கள் .நன்றி
-
- 12 replies
- 6.6k views
-
-
ஈழத் தமிழரோடு பழகி பாருங்கள், அழகிய தமிழ் கேட்கலாம். -சுகி சிவம்.-
-
- 12 replies
- 2.6k views
-
-
எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி பாரதிதாசன் மட்டுமே கடைச் காலத்தில் அம்மாவுடன் இருக்கிற பாக்கியத்தைப் பெற்றான். அவன் 2001ல் அம்மா அப்பாவை (வ.ஐ.சண்முகம்பிள்ளை) பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவென்று ஜெர்மனியில் இருந்து சென்றிருந்தான். அன்றிருந்து இறுதிவரை அவர்களுடனேயே இருந்தான். அது ஒன்றுதான் கடந்த ஐந்துவருடங்களாக எமக்கிருந்த ஒரே ஆறுதல். சொந்த மகளைப்போல எங்கள் அம்மாவை நெடுங்காலமாக பராமரித்த மச்சாள் மகள் சசியின் அரவணைப்பில் எனது அம்மாவின் கண் மலர்கள் இறுதியாகக் குவிந்தன. இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு அஞ்சி பாதுகாப்புக் காரணங்களால் அம்மாவ…
-
- 12 replies
- 3.1k views
-
-
தொடரும் தவிப்பு. (உண்மைக்கதையின் வதைசொல்லும் பார்வையிது) - சாந்தி ரமேஷ் வவுனியன் - 'தொடரும் தவிப்பு" தூக்குமர நிழலில் நிற்கும் ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை. இல்லை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலையாகாமல் தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்படாமல் சிறையிருக்கும் பேரறிவாளனின் கதை இந்த தொடரும் தவிப்பு. உண்மையை உள்ளபடி ஆவணப்பதிவாக்கியவர் ப.ழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி. 2004யூன் மாதம் வெளிவந்த இந்நூல் பற்றி எழுத வேண்டும் என எண்ணிய கணங்கள் ஒவ்வொன்றும் எதை எழுத என்று குழம்பிவிட்ட தருணங்கள் பல... நூலைக் கையிலெடுத்து வாசித்து முடியும் வரையும் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை தவிர்க்க முடியாதபடி…
-
- 12 replies
- 3.4k views
-
-
மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும். (truecopythink.media தளத்தில் வெளியான மலையாள கட்டுரையின் தமிழாக்கம்) சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு (மலையாள எழுத்தாளர்) தமிழாக்கம் களியக்காவிளை ஷினு (Shinu R S) மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக நாம் கல்விநிலையங்களில் பிரதான துணைமொழியாக கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான் என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால், தமிழ்தான் நமது பாரம்பரியத்தின் மொழி. கேரளாவின் நீண்ட கலாச்சாரத்தின் சரித்திர உள்ளுணர்ச்சியாக இருப்பது தமிழ். நமது மொழியின் உயிர் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் குடி கொள்கிறது. வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கத்திற்கு எதிராக வியக்கத்தக்க வி…
-
- 12 replies
- 2.3k views
- 1 follower
-
-
தமிழர்கள் எதையும் காரண காரியத்தோடு செய்தவர்கள். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அப்படியானால் அவர்களின் புத்தாண்டில் ஏன் குழப்பம்? “தை” யா “சித்திரையா” – தெளிவாக நாம் அறிய வேண்டியது அவசியமாகிறது. தமிழக அரசும், கட்சிகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தமிழ் அறிஞர்கள் எவரும் இதுவரை எது தமிழ் புத்தாண்டு என்பதை துல்லியமாக அறிவிக்க அஞ்சுகிறார்களா? அல்லது அவர்களுக்கும் தெரியாதா? ஆண்டிற்கு 12 முழுநிலவும் (பவுர்ணமி) 12 நிலவில்லா (அமாவாசை) நாட்களும் உண்டு. குறைந்தாலும் கூடினாலும் தவறுதான். தினமும் சூரியன் கிழக்கே தோன்றி மேற்கே மறைகிறான். அத்தோடு சூரியன் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கும் தெற்கும் சென்று வருகிறான். வடக்கே சென்று வடக்கிலிருந்து தெற்கே திரும்புவது – வடசெலவு எ…
-
- 12 replies
- 5.1k views
-
-
இடக்கரடக்கல் என்பது பேச்சு வழக்கில் நாம் அன்றாடம் பயன்படுத்திவரும் ஒரு தகுதி வழக்கு. இடர்பாடாகத் தோன்றும் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் குறிப்பிடும்போது அதற்குரிய இயல்பான சொற்களைக் கொண்டு நேரடியாகக் கூறாமல், நாகரிகம் கருதி மாற்றுச் சொல் கொண்டு குறிப்பிடுவது இடக்கரடக்கல் என்பதாகும். இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது. இடக்கர்+அடக்கல் => இடக்கர் என்பது “சொல்லத்தகாத”, இடக்கு அடக்கல் என்பது “அடக்கி” அவையில் அல்லது பிறருக்கு மத்தியில் சொல்லத்தகாத சொல்லைக் கூறாமல் அதை அடக்கி, அதற்குரிய மாற்றுச் சொல்லைப் பயன்படுத்துதல். அதாவது ‘நாசுக்காக’ …
-
- 11 replies
- 9k views
- 1 follower
-
-
பின்வரும் குறுந்தொகைப் பாடலை நம்மில் பலரும் வாசித்திருப்போம். பாடலின் பொருளை எளிமையாக்கும் நோக்கில், நான் அறிந்த தமிழில் விளக்கங்களுடன் இங்கு படைத்துள்ளேன். இணைய நண்பர்கள் அனைவரும் இப்பாடலை வாசித்துச் சுவைத்து, தங்களின் கருத்துரையை இணைக்க வேண்டுகிறேன். பாடலுக்குச் செல்லும் முன் பாடல் அமைக்கப்பட்ட விதத்தைப் பற்றி ஆராய்வோம். இப்பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது. குறிஞ்சித் திணை என்பது ``மலையும் மலை சார்ந்த இடமும்’’, அதாவது இயற்கை எழில், வளம் கொண்ட நிலப்பரப்பாகும். அந்நிலப்பரப்பில் நிகழும் வாழ்வியல் பற்றிக் கூறுவது குறிஞ்சித் திணையாகும். பொதுவாக குறிஞ்சித் திணையாவது - தனித்திருக்கும் தலைவனும் தலைவியும் அல்லது வேட்டைக்குச் செல்லும் ஒரு இளைஞனும…
-
- 11 replies
- 11.8k views
- 1 follower
-
-
கண்ணதாசன் காப்பியடித்தானா? அப்துல் கையூம் அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில் “Kannadasan is a Copy-cat” என்ற அவதூறை எடுத்துப் போட்டுச் சென்றார். அவருடைய ‘மேதாவித்தனம்’ எனக்கு எரிச்சலை ஊட்டியது. யாரோ புரிந்த வாதத்தை அரைகுறையாகக் கேட்டுவிட்டு இப்படி ஒரு தப்பான ஒரு முடிவுக்கு அவர் வந்திருக்கலாம். ஒன்று, இவர் கண்ணதாசனை முற்றிலும் அறியாதவராக இருக்க வேண்டும் அல்லது ‘காப்பி’ என்பதன் பொருள் என்னவென்று தெரியாதவராக இருக்க வேண்டும். சொல்ல வந்த கருத்தை தமிழில் கூட சொல்லத் தெரியாத ஒருத்தரிடம் போய் நான் என்ன தர்க்கம் செய்ய முடியும்? அந்த இடத்த…
-
- 11 replies
- 9.1k views
-
-
பூனைக்கு விளையாட்டு எலிக்கு வேதனை - இது அந்தக் காலம் எலிக்கு விளையாட்டு பூனைக்கு கால் வலி. - இது இந்தக் காலம் துள்ளுற மாடு பொதி சுமக்கும் - இது அந்தக் காலம். துள்ளுற மாடு முட்டி மோதும் - இது இந்தக் காலம் கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை - இது அந்தக் காலம். கழுதைக்கு தெரியும் புல் வாசனை மனிதருக்கு..??! - இது இந்தக் காலம்.
-
- 11 replies
- 3.7k views
-
-
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும். மலர்மிசை ஏகினாள் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ்வார். கொல்லாள் புலாலை மறுத்தாளை கைகூப்பி எல்லா உயிரும் தொழும். +++ நீங்களும் மிச்சம் சொல்லுங்கோ.
-
- 11 replies
- 1.4k views
-
-
"கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும் கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேன்டும் வாடை தருமூதலிலே நடுங்கும் போதும் வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும் பாடையிலெ படுத்தூரை சுற்றும் போதும் பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும் ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும் ஒண் தமிழெ சலசலத்து ஓடவேண்டும்" இது யாரால் இயற்றப்பட்டது என்பதையறிந்தால் தெரிவிக்கவும். ஈழத்தில் கல்வி கற்ற காலத்தில் இதை உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் என்று சிலர் சொன்னதாக நினைவு.வரதரின் அறிவுக் களஞ்சியம் இதழில் இது வேறு ஒருவரால் இயற்றப்பட்டதாவகவும் சொல்லப்பட்டது
-
- 11 replies
- 7.8k views
-
-
வள்ளுவர் வரைந்த காதற் கவிதைகள்! -மேகலா இராமமூர்த்தி தமிழ்மறையென்றும், உலகப் பொதுமறை என்றும் அனைவராலும் கொண்டாடப்படுவது திருக்குறள் ஆகும். இத்தகைய உயரிய வாழ்க்கை வழிகாட்டி நூலைப் பெற்ற தமிழர்களாகிய நாம் பேறுபெற்றோர் என்பதில் ஐயமில்லை. இந்நூல் பொய்யாமொழி, முப்பானூல், தெய்வநூல் என வேறுபல் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் அல்லது காமத்துப்பால் என்ற முப்பகுப்புக்களை உடைய இந்நூலின் முதலிரண்டு பகுப்புக்கள் அறியப்பட்ட அளவில் மூன்றாம் பகுப்பாகிய காமத்துப்பால் பாடல்கள் அறியப்படவில்லை என்றே தோன்றுகின்றது. அறத்துப்பாலிலும், பொருட்பாலிலும் சொல்லப்பட்டது போலவே அருமையான, இனிய, காதல் மற்றும் இல்லற வாழ்விற்குச் சுவைதரும் பல செய்திகள் க…
-
- 10 replies
- 10.9k views
-
-
கறுப்பு-கருப்பு எது சரி? | பிழையுடன் பயன்படுத்தும் சொற்கள்
-
-
- 10 replies
- 2.7k views
- 1 follower
-
-
நயமான ஊடல். பரத்தையரிடமிருந்து மீண்டும் தலைவியிடம் வந்த தலைவன் தம் புதல்வனைத் தூக்கி விளையாடினான்.. தலைவனுக்குத் தம் புதல்வனை நீங்கிச் செல்ல மனமும் இல்லை.. பரத்தையர் நினைவையும் அவனால் கைவிடமுடியவில்லை..பரத்தையரோ தலைவன் வேறு யாருடனும் கூடக் கூடாது என்பதற்காகப் பல அணிகளையும் அடையாளமாக அணிவித்து அனுப்பிவைக்கிறாள். இதைப் பார்த்து ஊடல் (கோபம்) கொண்ட தலைவி தலைவனை நீ இங்கு இருக்கவேண்டாம் பரத்தையரிடமே செல்க என்று கோபமாகச் சொன்னாலும் நயமாக அவன் தவறை அவனுக்குப் புரியவைப்பது போலச் சொல்கிறாள்.. அழகான உவமை. பறவைகள் ஒலிக்கின்ற அகன்ற வயல்! அங்கு, ஒலிக்கின்ற செந்நெல் இடையிலே தாமரை மலர்ந்திருக்கிறது! அந்தத் தாமரை மீது முதிர்ந்த கதிர்கள் சாய்ந்திருக்கின்றன! இக்க…
-
- 10 replies
- 1.5k views
-
-
மய்யம் என்றால் என்ன? மையம் என்றால் எங்களுக்கு என்ன? தமிழல்லாத சொற்களுக்காக ஏன் இந்த சொற்போர்?.. நடுவம் என்பது தான் தமிழ் .. எழுத்துச் சீர்திருத்தம் என்ற போர்வையில் பெரியார் செய்த வேலையே ஐ உருபுச் சொற்களை அய் ஆக்கும் முறைமை. ஆனாலும் முதலில் தமிழ்ச் சொல்லில் கலந்திருக்கும் சமசுக்கிருதத்தை அறிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன். தமிழர் தாயகப் பகுதிகளில் வன்னியிலும் யாழ்ப்பாணத்திலுமே இந்து மதத்தின் தாக்கத்தினால் மொழிக்கலப்பு மிக அதிகமாகவிருக்கிறது. தொன்மையான வழிபாட்டு முறைகளைப் பேணும் தென் தமிழீழத்தில் மொழிக்கலப்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே நிகழ்ந்திருக்கிறது. தமிழகத்தில் ஆங்கிலம் கலந்த வழக்கு இருப்பதால் ஆங்கிலம் கலக்காத யாழ்ப்பாணத் தமிழ், அதற்கென ஒரு உயர்வைப் பெற்றுக்கொண்டது…
-
- 10 replies
- 7.7k views
-
-
நன்றி முகனூல் apple : அரத்திப்பழம் , குமளிப்பழம் . orange : கமலாப்பழம் , நாரத்தை, நாரந்தம் , கிச்சிலி , நாரந்தம்பழம் , தோடம்பழம் . strawberry : செம்புற்றுப்பழம் . durian : முள்நாரிப்பழம் . blueberry : அவுரிநெல்லி . watermelon : குமட்டிப்பழம் , தர்பூசணி , முலாம்பழம் . cranberry : குருதிநெல்லி . blackberry : நாகப்பழம் , நாவல் பழம் . peach : குழிப்பேரி . cherry : சேலாப்பழம் . kiwi : பசலிப்பழம்
-
- 9 replies
- 16.4k views
-
-
Proud To Be Tamil இது போன்ற ஒரு பாடலை நான் பார்த்ததும் இல்லை, கேட்டதும் இல்லை.!! தயவு செய்து இதைப் படித்து விட்டுக் கடைக்கோடித் தமிழன் வரை பகிரவும்.!!! வில்லிப்புத்தூரார் என்னும் புலவர் ஒருவர் இருந்தார். நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர். ... அவர் வருவோர் போவோர் எல்லாரையும் வாதத்திற்கு அழைப்பார். அதில் தோற்பவர் பாடு திண்டாட்டம் தான். தோற்றுவிட்டால் தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் துரட்டியால் ஒட்ட அறுத்து விடுவார். இதனால் காது இல்லாதவரைக் கண்டால் இவர் வில்லிப்பூத்தூராரிடம் வாதில் தோற்றவர் என தெரிந்து கொள்ளலாம். இதனால் புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல அஞ்சியிருந்தனர். எந்த வில்லனுக்கும் அதி வில்லன் ஒ…
-
- 9 replies
- 2k views
-
-
http://www.huffingtonpost.in/2015/02/17/tamil-hashtag--_n_6699550.html
-
- 9 replies
- 1.3k views
-
-
சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்ணை நம்பக்கூடாது ஏன்? சீறும் பாம்பை நம்பினாலும் சிரிக்கும் பெண்னை நம்பக் கூடாது என்று பன்னெடுங்காலமாகவே கூறிவருகிறோம். அதற்கு காரணங்களும் பலவாகவே கூறப்பட்டு வருகின்றன.. பாம்பை விட கொடிய விசத்தன்மை கொண்டவளா பெண்? உயிரைக் கொல்லும் தன்மையுடையவளா பெண்? பெண் இல்லாத உலகை நினைத்துக் கூடப் பார்க முடியாது. தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக என ஒவ்வொருவர் வாழ்விலும் பெண் தவிர்கமுடியாதவளாகவே இருக்கிறாள் ஆயினும்… ஏன் சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்ற கூறினர்..? சங்க இலக்கியத்தில் குறுந்தொகையிலிருந்து ஓர் சான்று, இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கும் தலைமகன் பாங்கர்க்கு உரைத்தது. (தலைவியை இயல்பாக ஓரிடத்…
-
- 9 replies
- 6.9k views
-
-
முதலில் தோன்றியது நீரா? நிலமா? பூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய அறிவியலாளர்கள், பூமிக்கு அடியே ஆழத்தில் ஹீலியம் தூண்களை மோதவிட்டு உயிரினங்களின் தோற்றத்தையும், படிநிலை வளர்ச்சியையும் காணமுற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். “பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இருளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக்கோளமானது, பல மில்லியன் நெருப்புக்குமிழ்களை உமிழ்ந்துகொண்டிருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல்லை மீறியபோது வெடித்துச்சிதறியது. நெருப்புக்கோளத்…
-
- 9 replies
- 1.6k views
-
-
கையறுநிலை (Helplessness) - சுப. சோமசுந்தரம் ஏதோ ஒரு சூழ்நிலையில் செய்வதறியாது திகைக்கும் கையறுநிலை நாம் அனைவரும் அவ்வப்போது எதிர்கொள்வதே. சூழ்நிலைகளைப் பொறுத்து கையறுநிலையைப் பல்வேறு வகைப்படுத்தலாம். சிலவற்றிற்குத் தீர்வும் பலவற்றிற்குத் தீர்வு இல்லாமலும் போகலாம். இன்றைக்கு இந்திய சமூகத்தில் அரங்கேறும் மதவாதம், தனியார்மயம், பொருளாதாரச் சீர்குலைவு ஆகிய தீமைகளைப் பார்த்து நம்முள் ஏற்படும் அதிர்வு சமூக அவலம் சார்ந்த கையறுநிலை. கையறுநிலையின் வெளிப்பாடு…
-
- 9 replies
- 3.4k views
- 1 follower
-
-
இந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம்? நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் இயற்கைக்கூறுகள் இந்த உலகம் இயங்க அடிப்படையானவையாகும் என்று பாடம் படித்தோம். இருந்தாலும், மக்காத குப்பைகளாலும் வேதியியல் உரங்களாலும் மண்ணை மலடாக்கினோம், காடுகளை அழித்தோம், விவசாய நிலங்களைப் பட்டாப்போட்டு விற்றோம், தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்நிலைகளை விசமாக்கினோம், நச்சுப் புகையால் காற்றை மாசாக்கினோம் இப்படிப் பல வழிகளில் இயற்கையை அழித்தோம் அதனால், ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் இல்லை! மழையில்லை, வெயில் வாட்டி வதைக்கிறது! எப்போது மழைவரும்? எப்போது புயல்வரும்? எப்போது கடல்சீற்றம் வரும்? என்பது யாருக்கும் தெரியாது வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இருந்தாலும் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக…
-
- 9 replies
- 1.3k views
-
-
தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் யாவை ? ஏன் நாம் தமிழைக் கொண்டாட வேண்டும் ? மகுடேசுவரன் 1. மொழி, அது தோன்றி வாழும் நிலத்தோடு தாவரங்களைப்போன்ற வேர்த்தன்மையுடையது. பூமத்தியரேகையை ஒட்டிய வெப்ப மண்டல நிலப்பகுதியின் மொழியாகிய தமிழும் அதிலிருந்து தோன்றிய திராவிட மொழிகளும் தாடையை நன்றாகத் திறந்து உச்சரிக்க வேண்டிய வை. மேற்கத்திய மொழிகளைத் தாடையைப் பிரிக்காமல் பல்வரிசை ஒட்டியபடி பேசவேண்டும். அவர்கள் வாய்திறந்து பேசினால் குளிர்காற்று உள்புகுந்துவிடும். அந்தக் குளிரைச் சமன்செய்ய உடல் வெப்பம்திரட்ட வேண்டும். ஆனால், தமிழ் அப்படியில்லை. தமிழைப் பேசினால் உடல் வெப்பம் தணிந்து சீராகும். 2. வெப்ப மண்டல நாடுகள் மலைமடுக்கள் குறைந்த நீண்ட நெடிய சமவெளிப் பரப்புகளால் ஆனவை…
-
- 9 replies
- 5.5k views
-