சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
ஆள் கடத்தல்களுக்கு பின் உள்ள... ஈ.பி.டி.பி. யின், கரங்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களில் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோருக்கு நீதியை பெற்று கொடுப்பதாக ஜனாதிபதி திரு ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து இருக்கின்றார் சாட்சி 1 திருமதி முத்துலிங்கம் கொலஸரிக்கா என்பவர் அளித்த வாக்குமூலத்தில் "எனது மகன் முத்துலிங்கம் மலரவன் அவர்களை 2007ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி இரவு 10.30 மணி அளவில் ஈச்சமோட்டை பகுதியில் உள்ள எனது வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த சிவில் உடை தரித்த ஏழு பேர் வலுக்காட்டாயமாக அச்சுறுத்தி இழுத்துச்சென்றனர். அவர்களில் மூன்று பேரை அடுத்த நாள் காலை ஈ.பி.டி.பி அலுவலகத்தில் கண்டேன்" என சொல்லியிருந்தார் சாட்சி 2 …
-
- 1 reply
- 958 views
-
-
திமுகவில் முக்கிய பிரமுகராக விளங்கிய முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கும் அதன் பின்னணி அரசியலையும் விளக்கும் காணொளி மறப்பது மனிதர்களின் இயல்பு அதை ஞாபகப் படுத்த வேண்டியது நமது கடமை கருப்பு பக்கங்கள் -மறக்கப்பட்ட மறக்கடிக்கப்பட்ட வரலாற்று செய்திகளின் தொகுப்பு
-
- 1 reply
- 821 views
-
-
ஓர் அகதியின் மரணம்...! ஜேர்மனியில் Hemsbach என்னும் கிராமம்; அந்த கிராமத்தில் மிகச் சொற்பமான தமிழர்களே வாழ்கின்றார்கள்..! ஏன் எண்ணிக்கையில் 15 நபர்கள் என்று சொல்லலாம்..! அதில் அண்மையில் அகதியாக வந்த இளைஞனின் பரிதாப மரணம் என்னையும் எமது வீட்டாரையும் மிகவும் பாதித்திருந்தது...! அவர் வாழும் பொழுது தனக்கு எந்த உறவுகளும் ஜேர்மனியில் இல்லையென்பதை ஒரு முறை எனது மனைவியுடன் உரையாடும் பொழுது தெரிவித்தாராம்..! தனக்கு என்ன வேலையென்றாலும் எடுத்து தரச்சொன்னாராம்..! அதுதான் முதலும் கடைசியுமாக என் மனைவி அவரை வீதியில் கண்டது. அதன் பின்னர் துணைவியார் என்னிடம் இது தொடர்பாக கதைத்திருந்தார்; முடிந்தால் அவருக்காக வேலையொன்று பெற்றுக் கொடுக்குமாறு கேட்டிருந்தேன்..! அந்த இளை…
-
- 1 reply
- 1.3k views
-
-
காதல் திருவிழா சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம் எண்டு பேசத் தொடங்கின உடனயே பேசிறதை குறைச்ச தம்பி , நான் எப்ப அம்மாவைக் கேட்டனான் எண்டு யோசிக்க , “ அதுக்கென்ன வெள்ளிக்கிழமை நல்லூரில காலமை பூசையில பாப்பம் ‘ எண்டு முடிவாகிச்சுது. ரெண்டு பெண்டாண்டிக் காரரா இருந்தாலும் நல்லூரான் நல்லது செய்வான் எண்டு பெண்பார்க்கும் படலம் பொதுவா இங்க தான் நடக்கும் . அப்ப கொழும்பில Majestic City மாதிரி யாழ்ப்பாணத்தில எல்லாப் பெடியளுக்கும் லேசியா பெட்டைகளை பாக்கிறதெண்டால் நல்லூர் தான். கொடியேத்தத்தில பாத்து மஞ்சத்தோட கேட்டு திருக்கலியாணத்தில ஒப்பேத்தின கதைகள் சில…
-
- 1 reply
- 672 views
-
-
மகிந்த ராஜபக்சவின் மகன், றோகித்த ராஜபக்சவின் திருமணம் பெளத்த முறைப்படியும், இந்து முறைப்படியும், கத்தோலிக்க முறைப்படியும் என... மூன்று தடவை இடம்பெற்றது. :- சுப்ரமணிய பிரபா ஏன்.. இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்யவில்லை என்று சிலர் கேட்கிறார்கள்.
-
- 1 reply
- 1.5k views
-
-
இராசராசன் ஒரு சாதி வெறியன் இராசராசன் ஒரு சாதி வெறியன் போல இங்கு இருக்கிற திராவிட அமைப்புகளும் அதன் முட்டுகளும் கூறிகிட்டு இருக்காங்கள்ள இந்த கோவிலின் வட புற மண்டபத்தை மத்திய தொல்லியல் துறையினர் அடித்தளத்தை பிரித்து மிண்டும் புணரமைத்தர் அப்போது அடித்தளத்தை 8 அடி தோண்டி அதன் கீழே உள்ள முண்டு (முண்டு கற்கள் என்றால் என்ன) கற்களை வெளியில் எடுத்தனர். ஒவ்வொரு கல்லிலும் ஒவ்வொரு தனி நபரின் பெயர்கள் கள்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட வரலாறு போற்றும் ஒரு பெரும் திருவிடத்தை நாம் கட்டப்போகிறோம் அது நம் பெயரில் மட்டும் இருந்துவிடக்கூடாது என்று எண்ணி மக்கள் தங்களால் இந்த திருபணிக்கு என்ன இயலுமோ அதை கொடுக்க கோரிக்கை வைத்தார் போலும் எளிய மக்கள் தங்களால் இயன்றதை கொ…
-
- 1 reply
- 1.7k views
-
-
Tholar Balan 12 hrs •ஏழரைக் கோடித் தமிழரில் உணர்வுள்ள தமிழன் ஒருவன்கூடாவா இல்லை? ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கிடையாது என இந்திய வெளியுறவுதுறை இணை அமைச்சர் நித்தியானந் ராய் கூறியுள்ளார். அதேவேளை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து வந்த இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் ஈழத் தமிழ் அகதிகள் இந்துவாக இருந்தாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது. ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவிற்குள் சட்ட …
-
- 1 reply
- 947 views
-
-
Last line Visu Viswa 2009-ம் ஆண்டு #ரோமில்_போப்பாண்டவர்... "#கட…
-
- 1 reply
- 851 views
-
-
எனது வயதில் உள்ள இசை ரசிகர்கள் நான் சொல்லும் திரைப்பட பாடல் வேறுபாட்டை புரிந்து கொள்ள முடியும் 1....இளையராஜா வருவதற்கு முன் ஒரு பாடல் ஓடக்கூடிய நேரம் இரண்டரை நிமிடங்களாக இருந்தது. வெகு அபூர்வமான பாடல்கள் ஐந்து நிமிடம் ஓடும். இசைத்தட்டு இருந்த காலங்களில் பாதி பாடல் ஒரு பக்கத்தில் ஒலி பரப்பாகி பிறகு இரண்டாவது பக்கத்தை திருப்பி மீதி பாதியை கேட்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. காலப்போக்கில் ஒரே பக்கத்தில் ஆறு பாடல்கள் பத்து பாடல்கள் என பதிவாகி வந்தன ஆக" இளையராஜா வருவதற்கு முன்பு வரை ஒரு பாடலின் சராசரி நீளம் 2 1/2 நிமிடங்கள் அல்லது மூன்று நிமிடங்கள். இளையராஜா வந்த பிறகு தான் ஒரு பாடலை நாலு நிமிடங்கள் நாலரை நிமிடங்கள் என்று மாற்றினார் மாற்றினார். இது ராஜா செய்த மிக முக்கியமான மா…
-
- 1 reply
- 543 views
-
-
உது(தை)க்குத்தானே ஆசைப்பட்டாய்…. “அண்ணை முடிய நேரமாகுமே போகோணும்”எண்டு சொல்ல இந்தப் போத்திலுக்க ஆறு பிளேன்ரீயும் கடிக்கிறதுக்கு ஏதாவதும் வாங்கித்தாரும் எண்டு கேட்டார் தம்பிஅண்ணை. தம்பிப்பிள்ளை தம்பியாகி வயது முதிர்ச்சிக்கு அண்ணன் சேர வந்த பேர் தம்பியண்ணை. கடைசீல கணக்கில கழிக்கலாம் எண்டு காசைக் கேக்காம வேலை முடிஞ்சாச் சரி எண்டு ஓடிப்போய் கேட்டதுகளை வாங்கிக்கொண்டு வந்தன். பிளேன்டீயை குடுச்சிக்கொண்டு வாயும் மோட்டச்சைக்கிளும் போட்டி போட்டுக்கொண்டு புகை கக்க நட்டுக்களை திருப்பி tune பண்ணீட்டு , “இப்ப ஓடும் , பிறகு ஒருக்கா ஆனந்தன்டைக் கொண்டு போய் carburetor ஐ செய்வம் “ எண்டு சொல்லி மோட்டச்சைக்கிளைத் தந்தார். மூண்டு நாளா அலைஞ்சதுக்கு ஒரு மாதிரி முக்கித்தக்கி ஓடிற நில…
-
- 1 reply
- 643 views
-
-
"அம்மா பீச் மரங்களின் நிழலில் நிரந்தரமாகச் சாம்பல் நிறக் கல்லறை ஒன்றில் உறங்கிப் போனது பெரும் துயரமென்றால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கல்லறையை உடைத்து அம்மாவின் நினைவுகள் தளும்பிக் கண்ணீராகப் பெருக்கெடுக்க அங்கே நின்றிருப்பது இன்னும் எத்தனை துயரமென்று யோசித்துப் பாருங்கள்..... எங்கள் கிராமத்தைக் கடந்து போகிற புதிய ரயில்பாதை அம்மாவின் கல்லறை வழியாகப் போகிறதென்று அரச சேவகர்கள் எங்களுக்குத் தகவல் சொன்னார்கள். ஆனாலும், வேறு வழியில்லை. அம்மாவின் உறக்கத்தை மீண்டும் ஒருமுறை கலைக்க வேண்டும். குழந்தைகளுக்காக உறக்கமின்றிக் கிடப்பதொன்றும் உலகில் அம்மாக்களுக்குப் புதிதில்லை. இப்போதும் துளி நினைவு கிடைத்து விட்டால் கூடத் தன் …
-
- 1 reply
- 536 views
-
-
இலத்திரனியல் வாக்களிக்கும் இயந்திரத்தை வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் சி.கபிலாஸ் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார். அகில இலங்கை ரீதியில் இடம்பெறும் ரொபோட்டிக் தொடர்பான புத்தாக்கப் போட்டியினை முன்னிட்டு வவுனியா விபுலானந்தா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய சி.கபிலாஸ் என்ற மாணவன் இலத்திரனியல் முறையில் வாக்களிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டு பிடித்துள்ளார். குறித்த இயந்திரத்தில் வாக்காளர்கள் தமது கடவுச் சொல்லை (வாக்கு சீட்டு இலக்கம்) செலுத்தி தமது கைவிரல் அடையாளத்தை பதிவு செய்து விரும்பிய கட்சிக்கு வாக்களிக்க கூடியதாக அது வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், மொத்த வாக்குளை அறியும் வசதியும் காணப்படுகின்றது. போலியான முறையில் மீண்டும் ஒருவர் வா…
-
-
- 1 reply
- 439 views
- 1 follower
-
-
போராடி நலிவுற்ற தமிழ்ச் சமூகம் நாதியற்ற நிலையில் என எண்ணியிருந்த எனக்கு இல்லை எமது இளைய தலைமுறையினர் இன்னும் விழிப்புடனும் விரியத்துடன் இருக்கின்றர்கள் என்பதை எடுத்து காட்டுகின்றது இந்த நிகழ்வு..
-
- 1 reply
- 1.3k views
-
-
வர்ஜினியா நிக்கலோய் நின்கி ! இந்த ஹொலண்ட் நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி, இளையராஜாவின் இசைக்குழுவில் எண்பதுகளில் இசை இயற்கையாய் இருந்த காலத்தில் இதயம் வரை இறங்கி இசை தந்த இளையராஜாவின் ரெக்கொர்டிங்கில் கிட்டதட்ட மிகப் பிரபலமான இருபது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர். வெஸ்டர்ன் கிளாசிகல் முறையில் புல்லாங்குழல், வெஸ்டர்ன் கிளாசிகல் சிம்பொனி இசை, வெஸ்டர்ன் கிளாசிகல் பியானோ படித்த மேதையான நிங்கி ,இந்திய இசையில் மயங்கி இந்தியா வந்தவர். தமிழ் நாட்டை சுற்றிப் பார்த்து இளையராஜாவின் புல்லாங்குழல் தமிழ் சினிமா பாடல்களில் அதிசயிக்க வைத்தது கண்டு அவரிடம் போய் அவரின் இசை அமைப்பில் வாசிக்க வேண்டும் என்…
-
- 1 reply
- 1.3k views
-
-
Jaffna thevai · இரண்டாம் உலக மகாயுத்தத்தில் பணியாற்றியவரும் பிரித்தானியா விமானப் படையில் பணியாற்றிய வருமான ஒரே தமிழரான தமிழ் ஈழம் - உடுவிலை பிறப்பிடமாகக் கொண்ட கப்டன் செல்லையா இரத்தின சபாபதி அவர்கள் தனது நூறாவது பிறந்த தினத்தை திருகோணமலையில் உள்ள அவரது தங்கு விடுதியில் கொண்டாடினார். ஆனந்தாக் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி களில் கல்வி பயின்ற போதும் அவரது விளையாட்டுப் போக்கினால் பெற்றோருக்கும் இவருக்கும் ஒத்து வராத காரணமாக வீட்டை விட்டுப் புறப்பட்டு பதினெட்டுப் பேர்களில் ஒருவராக பிரித்தானியா விமானப் படைக்கு…
-
- 1 reply
- 969 views
-
-
பீட்சா... ஏன், வட்ட வடிவில் இருக்கிறது? பீட்சாவின் வடிவம் குறித்து பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். பீட்சா வட்ட வடிவில் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன: 1) காற்றில் சுழற்றுதல்: பீட்சா மாவு காற்றில் சுழற்றப்பட்டு தட்டையாக விரிக்கப்படும். இதற்கு வட்ட வடிவம் மிகவும் ஏற்றது. 2) சமச்சீர் சூடு: வட்ட வடிவத்தில் பீட்சா முழுவதும் சமமாக சூடாகும். 3) வெட்டுதல்: வட்ட வடிவத்தை சம பாகங்களாக வெட்டுவது எளிது. 4) ஏன் சதுர பெட்டியில் வைத்துத் தருகின்றனர்? உற்பத்தி எளிமை சதுர பெட்டிகளை உற்பத்தி செய்வது வட்ட பெட்டிகளை விட எளிது மற்றும் மலிவு. 5) சேமிப்பு: சதுர பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக சேமித்து வைக்க எளிது. 6) பேக்கேஜிங்: சதுர பெட்டி…
-
-
- 1 reply
- 437 views
-
-
இந்த மினி தம்பதி மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள மண்டூர் என்ற சிறிய கிராமத்தில் வசிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் பிரபலமான இந்த ஜோடி, தங்கள் உயரத்திற்கு ஏற்ற வீட்டைக் கட்டியுள்ளனர். பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகப் பிரச்னைகள் குறித்தும் வித்தியாசமான வீடியோக்களை உருவாக்க விரும்புகிறார்கள். #Couple #MiniCouple இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
-
- 1 reply
- 316 views
- 1 follower
-
-
"பாட்டும் நானே,பாவமும் நானே என்று சிவ பெருமான் பாடியதாக வரும் பாடலை எழுதியவர் ஒரு இஸ்லாமியர். கவிஞர் கா மு ஷெரிப். கலைஞரை திருவாரூரிலிருந்து அழைத்து வந்து சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வேலைக்கு சேர்த்து விட்டவரும் இவர்தான்.தமிழ் திரையுலகில் குறைந்த பாடல்களே எழுதினாலும் சிறப்பான பாடல்கள் எழுதியவர். கீழே அவர் பற்றி இரண்டு செய்திகள். எப்பேர்பட்ட மாமனிதர்கள் வாழ்ந்திருக்கின்றனர் நம் தாய் தமிழ் நாட்டில்! ---+++++------- கா.மு.ஷெரீப் ... இந்தக் கவிஞரின் பெயரை , நம்மில் ஒரு சிலர் மட்டுமே கேள்விப்பட்டிருப்போம் ..! ஆனால் , அவர் எழுதிய ஒரு திரைப் படப் பாடலை, நம்மில் பலரும் கேட்டு மகிழ்ந்திருப்போம் ..! அந்தப் பாடல் : “ஏரிக்கரையின் மேலே போறவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இந்த உலகம் நல்லவர்களால் இயங்குகிறது.. நீண்ட காலத்திற்கு பிறகு நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் Mumbaiல் settle ஆனவர். Fast Food கடை மும்பை outerல். கோவை அருகில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர். வயதாகிவிட்டது. எனவே கிராமத்திற்கு வந்து விட்டேன். கடையையும் கொடுத்து விட்டேன் என்று கூறினார். பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. மும்பை அவர் கடையில் 6 பேர்கள். மூன்று பேர் Sandwich makers. ஒருவர் Bearer.ஒருவர் Table Cleaner. கூட இவர் order எடுக்க, Cash வாங்க கல்லாவில். Simple Hub.. மாலை 5 மணி முதல் 9 மணி வரை நல்ல கூட்டம் இருக்கும். அந்த சமயத்தில் இவரே Customers இடமிருந்து order வாங்கி உள்ளே சொல…
-
- 1 reply
- 758 views
- 1 follower
-
-
“பள்ளிச் சிநேகிதம் எல்லாம் படலைவரைதான்” என்று ஊரில் அப்போது சொல்வார்கள். அதையும் தாண்டி இது புதுமையானது. இந்தக் காதல் கதை இதுவரை அறியாததொன்று. தோமாஸ் மக்மெக்கினும்(78) நன்ஸி ஹாம்பெல்லும் (78) அமெரிக்கக் கல்லூரி ஒன்றில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலம் முடிந்த பின்னர் இருவரும் அவரவர் பார்வையில் இருந்து காணாமல் போய் தங்கள் தங்களுக்கான குடும்பங்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு பாதையில் போய் விட்டார்கள். என்னதான் இருவரும் விலகி வெகு தூரம் பயணித்தாலும், காலங்கள் நீண்டுதான் போனாலும் கல்லூரி நினைவுகள் மட்டும் அவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தன. “அவள் ஒரு உற்சாகமான பெண். நிறைந்த அழகி. அவளைக் காணும் போதெல்லாம் நான் நொறுங்கிப் போவேன். அவளுடன் இருப்பதற்கு எப்போதாவ…
-
- 1 reply
- 1k views
-
-
ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கேடி ஜோன்ஸ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீப ஆண்டுகளில் மது அல்லாத பானங்கள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. வைன், ஸ்பிரிட்ஸ், பியர் மற்றும் சிடர் எனப் பல வகையான பானங்கள் சந்தையில் உள்ளன. யூகவ் நடத்திய ஆய்வில் பிரிட்டனில் மது அருந்துபவர்களில் 38% பேர் குறைவான மது அளவு அல்லது மது இல்லாத பானங்களை விரும்புவதாக தெரியவந்துள்ளது. 2022-இல் இது 29% ஆக இருந்தது. மது அல்லாத பானங்கள் பிரபலமடைவது பலருக்கும் அதன் சுவை மீதான ஆர்வத்தினால் தானே தவிர மது அருந்த வேண்டும் என்கிற ஆசையால் அல்ல. அதில் பலரும் மது பானங்களை விட மது அல்லாத பானங்கள் ஆரோக்கியமானது எனக் கருதுவதாலும் வாங்குகின்றனர். மின்…
-
- 1 reply
- 350 views
- 1 follower
-
-
CMR இல் இருந்து விடைபெற்றேன் சொந்தங்களே... CMR வானொலி கருக்கொண்ட நாள் முதல், என் இதயத்தில் உறைந்துபோன பெயர். கடந்த சுமார் 18 ஆண்டுகளாக, CMR உம் நானும் சேர்ந்தே வளர்ந்தோம். அது தவழ்ந்தபோது நானும் தவழ்ந்தேன், அது நடந்தபோது நானும் நடந்தேன், அது ஓடியபோது நானும் ஓடினேன். ஆனால், தனிப்பட்ட காரணங்களால், என்னோடு வளர்ந்த பிள்ளை, CMR ஐ விட்டு கனத்த மனதுடன் ஓடிவந்துவிட்டேன். இம்முடிவு, என் சாவுக்குச் சமானமானது என்ற போதிலும், காலம் அவ்வாறான ஒரு முடிவுக்கு என்னை இட்டுச்சென்றுள்ளது. இதற்காக, என்னை நேசித்த அத்தனை உள்ளங்களிடமும், என்னை வளர்த்த CMR நிர்வாகத்திடமும் மன்னிப்புக்கோருகிறேன். எனினும், எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புக்களை முடிந்தவரை, பயன்ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
யுவனும் Fanம் இரண்டாயிரத்து ஏழாம் வருடம். நான் உயர்தரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். நான்காம் கட்ட ஈழப்போர் விடுதலைப் புலிகளின் கையிலிருந்த குடும்பி மலையின் வீழ்ச்சியோடு உக்கிரமாக ஆரம்பிக்கிறது. வழமையான புலிகள் - இராணுவ சண்டையப் போல அல்லாது இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கப்போகிறது என்பது லேசான பயத்தைக் கொண்டுவருகிறது. கிழக்கில் சண்டை தொடங்கிய கையோடு வடக்கிலும் கடும் இராணுவக் கெடுபிடியாய் இருந்தது. . மன்னார் நகரின் மூலை முடுக்கெல்லாம் ராணுவம் நிலை கொள்கிறது. எங்கள் வீட்டிலிருந்து நானூறு மீட்டர் தொலைவில் இருக்கும் மன்னார் பொது விளையாட்டரங்கம் இராணுவத் தளமாகிறது. மூலைக்கு மூலை சோதனைச் சாவடிகள். அடிக்கடி சுற்றிவளைப்புகள் கைதுகள். நாங்…
-
- 1 reply
- 1k views
-
-
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தினை முழுசா சுத்தி பாப்பம், கிட்டத்தட்ட 100 வகையான மரங்களுக்கு கிட்ட இருக்கு. எல்லாமே இங்க வச்சு ஒரு 3-5 வருசங்களுக்குள்ள வளர்ந்த மரங்கள் தான், பாருங்கோ பாத்து எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ. அதே மாதிரி இன்னும் என்ன மரங்கள் வச்சா நல்லா இருக்கும் எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 681 views
-
-
செருப்பரசியல்! தமிழர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்டவர்கள். தொன்மையான பண்பட்ட நாகரிகம் கொண்டவர்கள். இப்படியெல்லாம் “புகழ் பூத்த” வரலாறு கொண்ட தமிழினம் செய்யும் சில வேலைகளுக்கான விளக்கத்தை யாரவது சொன்னால் நன்றாக இருக்கும். மற்றவரை அவமானப்படுத்த வேண்டுமென்றால் அவரது முகத்தில் காறி உமிழ்தல், அவரை செருப்பால் அடித்தல் போன்ற தண்டனை முறைகளை எங்குதான் கற்றுக் கொண்டார்கள், பரம்பரை பரம்பரையாக அந்த உயரிய பண்பாட்டுமுறைகளை எவ்வாறு பின்பற்றி வருகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. செருப்புக்கு தெற்காசிய நாட்டில் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. மன்னர் காலத்தில் இருந்தே நீண்ட காலமாக மேட்டுக் குடிக்கு மட்டுமே உரிமமாக இருந்த ஒன்றுதான் செருப்பு அணியும் தகுதி. இலங்கை…
-
- 1 reply
- 1.1k views
-