கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
கைத்தொலைபேசி காற்சட்டை பொக்கெற்றிலிருந்து சினுங்கியது.நம்பரை பார்த்தேன் மனவியின் தொலைபேசி, நிச்சயம் எடுக்க வேண்டிய அழைப்பு "ஹலோ" "இஞ்சயப்பா வீட்டை போகும் பொழுது முப்பது இடியப்பம் வாங்கி கொண்டு போங்கோ" "சரி"சொல்லி அலைபேசியை பொக்கற்றினுள் வைத்து விட்டு கையை வெளியே எடுக்க மீண்டும் அதே நம்பர் ""எந்த கடையில் இடியப்பம் வாங்கப்போறீயள்" "எந்த கடைக்கு முன்னாலா கார் பார்கிங் கிடைக்குதோ அங்க வாங்கிறேன்" "சு.த.இன்ட கடையில தான் நல்ல இடியப்பம் இருக்கு,கத்தரிக்காய் கறியும் வேணும் ஆனால அதை அங்க வாங்க வேண்டாம் ஒரே எண்ணையாக இருக்கும் அதை ப.தா இன்ட கடையில வாங்குங்கோ,ஆட்டாமா புட்டும் வேணும் அது உந்த இரண்டு கடையிலயும் சரியில்லை புட்டை மூக்கரினட கடையில வாங்குங்க…
-
- 21 replies
- 4.2k views
-
-
Thursday, August 17, 2017 என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். _____________________________________________________ 2007ம் ஆண்டு சித்திரை மாதம் இனிமேல் சேர்ந்து வாழ்வதில் அர்த்தமில்லையென்ற முடிவை எடுத்த போது விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாமென்ற எண்ணம் வந்தது. என் கண்முன்னே வேறு பெண்கள் வந்து போவதை வாழ்வதை ஏற்றுக் கொண்டு சமாளிக்க கடினமாக இருந்தது. என்னையும் எனது ஏற்றத்தையும் உழக்கி வீழ்த்தக் காத்திருந்தவர்கள் முன் தலைகுனியும் தைரியம் இல்லாது போ…
-
- 28 replies
- 7.2k views
-
-
இது ஒன்றும் பயண அனுபவமோ அல்லது பயணக் கட்டுரையோ அல்ல, இப்படி ஒரு இடம் இருக்கிறது இங்கு போய் வந்தேன் என உங்களுக்குச் சொல்வது தான் நோக்கம் . இம்முறை வசந்த கால விடுமுறைக்கு இத்தாலியின் கடற்கரை நகரங்களில் ஒன்றான ஜேசலோவிற்கு ஒர் ஐந்து நாள் பயணம் போய் வந்தோம். பயணத்திற்கான நோக்கம் பெரிதாக ஒன்றுமில்லை வீடு , வேலை, மன அழுத்தங்கள் எல்லாவற்றையும் மறந்து சில நாட் கள் ஒய்வெடுப்பது தான் நோக்கம்.எனது வேலை இடத்து நண்பன் ஒருவர் ஐந்தாறு தடவைகள் ஜேசலோவிற்கு சென்று வந்தது ஜேசலோவினை தெரிவு செய்தமைக்கான காரணமாக இருந்தது அத்துடன் எனது வீட்டிலிருந்து 600 km தூரத்திலிருந்ததும் ஒரு காரணம் எமது வீட்டிலிருந்து காரில் பயணம் 600km தூரம் ஏறத்தாள 7 மணித்தியாலப் பயண நேரம். …
-
- 37 replies
- 7.7k views
- 1 follower
-
-
அவுஸ்ரேலியாவில் நவம்பர் மாதம் வரும் முதல் செவ்வாய்கிழமை எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் வந்தேறு குடிகளை(ஐம்பது வருடத்திற்கு முன்பு வந்தவர்கள்) தவிர,முக்கியமா விக்டோரியா மாநிலத்தில் அரச விடுமுறையும் விடுவார்கள்.வேலைத்தலங்களில் எந்த குதிரை வெற்றி பெறும் என்று பந்தயம் போடுவார்கள்.ஒவ்வோரு வருடமும் நானும் பந்தயம் கட்டுவேன் இதுவரை வெற்றி பெற்றதில்லை. சாப்பாடு, தண்ணி என்று அமர்க்களப்படும் சில வேலைத்தளங்கள். எல்லோரும் குதிரை பைத்தியமா இருப்பார்கள் .எனக்கு கிருஸ்ன்ரின்ட தேரில் பூட்டிய ஐந்து குதிரையையும் ,கிருஸ்னரைப்பற்றியும் தான் கொஞ்சம் தெரியும் ....ஆனால் சக தொழிலாளிகள் ஒவ்வோரு குதிரையைப்பற்றியும் அதில் சவாரி செய்பவரைப்பற்றியும் பேசிகொண்டிருப்பார்கள்.நான் எனக்கு கிடைத்த பந்…
-
- 7 replies
- 2.7k views
-
-
மண்டபம் முட்டை வடிவில் இருந்தது. வயதான மண்டபமாகவிருந்தது. ஒரு வழிபாட்டு நிலையம் போன்ற அடையாளத்தை அது கொண்டிருந்தது. அதற்கென நிரந்தர இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கவில்லை. நிகழ்விற்கேற்றபடி வெளியே இருந்து ஆசனங்களை எடுத்துவந்து போட்டுக்கொள்கிறார்கள் என்பது தெரிந்தது. இருநூறு பேர்வரையான மக்கள் போடப்பட்ட இருக்கைகளில் இருந்தார்கள். ஏறத்தாள அனைவரும் பெண்கள். பதின்மம் தொட்டு பழுத்த வயதுவரை அவர்கள் பரந்திருந்தார்கள். ஆண்கள் மண்டபத்தின் வாயிலை அண்மித்து நெருக்கமாய் நின்றிருந்தார்கள். இருபத்தைந்து பேர்வரை தான் ஆண்கள் இருந்தார்கள். பல்வேறுவகையான ஒலிகள் அங்கு கேட்டுக்கொண்டிருந்தபோதும் மண்டபத்துள் ஒரு மயான அமைதி நிலவியது. அந்த அமைதி, காதுகளைத் தாண்டியதாக, உள்ளுர உணரப்பட்டதாக, நிசப்த்…
-
- 0 replies
- 1.9k views
-
-
பாடசாலையில் எனது பிள்ளைகளின் பட்டமளிப்பு விழா பரிசளிப்புவிழா போன்றவற்றுக்கு அடியேன் போவது வழக்கம்.நிகழ்ச்சி தொகுப்பாளராக பாடசாலை மாணவத் தலைவரும் உபதலைவரும் கடமையை செய்வது வழக்கம். சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிகளை தொடங்குவதில் உந்த வெள்ளைகள் கெட்டிக்காரங்கள் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேணும்.அவங்களோட சேர்ந்த எங்கன்ட வாரிசுகளும் நேரவிடயத்தில் ஒழுங்காக கடைப்பிடிக்கினம் என்பதில் ஒரு சின்ன சந்தோசம். நானும் போயிருக்க, மாணவத்தலைவன் ''we would like to acknowledge the traditional custodians of this land, of elders past and present.'' நானும் அவுஸ்ரெலியாவுக்கு வந்து கொஞ்ச காலம் ஒடிவிட்டது ,உந்த பூர்வீக குடிகளை கணடதை விட வந்தேறுகுடிகளை கண்டதுதான் அதிகம்.ஒன்றுக்கு பத்தா…
-
- 10 replies
- 3.3k views
-
-
பள்ளியில் விஞ்ஞான கண்காட்சி நடக்கவிருக்கிறது. தயார்ப்படுத்தல்கள் களேபரப்படுகின்றன. அனைத்து மாணவர்களிற்கும் ஏதேனும் ஒரு விஞ்ஞான விளக்கம் தரும் காட்ச்சிப்பொருளினை எடுத்துவரச் சொல்லப்படுகிறது. ஓவ்வொரு வகுப்பிலிருந்தும் எப்பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமென்பதை விஞ்ஞான ஆசிரியர் தெரிவுசெய்கிறார். இரண்டு லீற்றர் கொக்கோகோலாப் போத்தலின் விஞ்ஞான அவசியம் தாயாரிற்கு எடுத்தியம்பப்பட்டு அவன் வீட்டில் அது வாங்கப்படுகிறது. தங்கைகளிற்கும் தாயாரிற்கும் பகிர்ந்து பானம் அருந்தப்பட்டு முடிந்ததும், வேலை ஆரம்பிக்கிறது. போத்தலின் கீழ்ப்பகுதி சீராக அரிந்து நீக்கப்படுகிறது. ஒரு குமிழ்முனைப் பேனாவின் உடலும் இரண்டு றீபிள்களும் எடுக்கப்படுகின்றன. குளாயாக்கப்பட்ட முமிழ்முனைப் பேனாவின் உடலில் இரண்ட…
-
- 1 reply
- 2k views
-
-
முதல் பயணம் பற்றி எழுத முன்பாக ஒரு சத்தியம்: இந்த சிறு பதிவையாவது முழுமையாக எழுதுவேன் என புங்கையூரன் மேல் சத்தியம் செய்து விட்டு ஆரம்பிக்கின்றேன் (என் அம்மா மேல கனக்க தரம் பொய் சத்தியம் செய்து இருக்கின்றேன். இப்ப அம்மாவுக்கு 73 வயதாகின்றது) முதல் பயணம். 2007 ஏப்ரலில் இலங்கையை விட்டு டுபாயிற்கு நான் புறப்படும் போது என் பாஸ்போர்ட்டில் கனடாவுக்கான தற்காலிக வதிவிட வீசாவும் குத்தப்பட்டு இருந்தது. அப்படி புறப்படும் காலத்தில் தான் இலங்கையில் கொழும்பிலும் நாடு எங்கிலும் தமிழர்கள் வீதி வீதியாக சுட்டுக் கொல்லப்பட்டும், காணாமல் போக்கடிக்கப்பட்டும் கொண்டு இருந்தார்கள். ஊடகவியலாளார்களும் முஸ்லிம் வியாபாரிகளும் கடத்தப்பட்டுக் கொண்டு இருந்தார்கள். மகிந்தவுக்கும் கோத்தாவுக…
-
- 139 replies
- 20.2k views
- 1 follower
-
-
நீல நிற விழிகளை அசைத்து அந்த மனிதன் உணர்த்திய கணத்தில் ஆரம்பிக்கத் தொடங்கியது அவனது எஞ்சிய நாட்கள். நாக்கு உலர்ந்து வார்த்தைகள் வறண்டுவிட்ட அந்தக் காலத்தை மெல்லியதாகக் கிழித்து வெளியேற முயன்றான். அன்றையின் பின், எப்போதும் அந்த நீலக் கண்கள் பிடரிப் பக்கத்தில் படர்ந்திருப்பதைப் போல ஒரு கனம் அவனது மனதினில் இறுகத்தொடங்கியது. அவனால், எஞ்சியிருப்பது எவ்வகையான வாழ்வென்றே தஅனுமானிக்க முடியாதிருந்தது. பிடரியில் ஒட்டியிருப்பதான நீலநிற விழிகள் இரவுகளில், மரங்களில், சுவர்களில் அசைந்து கொண்டிருப்பது போலவும் பாம்பின் நாக்குப் போல அவ்வப்போது இடைவெட்டிக் கொள்வதாகவும் கண்டுகொண்டான். காற்பெருவிரல் நகத்திற்கும் தசைக்கும் இடையினாலான, இடைவெளியினூடாக ஊடுருவும் மெல்லிய குளிர் போ…
-
- 1 reply
- 1.6k views
-
-
சம்மருக்கு பீச்சுக்கு போகவேணும் என்பது எங்கன்ட சனத்தின்ட அட்டவணையில் ஒன்று அதற்கு அவனும் விதிவிலக்கல்ல. "அப்பா வீக்கென்ட சரியான நெருப்பு வெய்யிலாம்" "ஏசி யை போட்டு வீட்டுக்குள்ள இருக்கவேண்டியதுதான்,ஒரு இடமும் போகதேவையில்லை" "அது எங்களுக்கு தெரியும் அப்பா, வி வோன்ட் டு கொ டு பீச்" " அங்க சரியான சனமாயிருக்கும் அதுக்குள்ள போய் கார் பார்க் பன்ணுறதெல்லாம் கஸ்ரம்" "கொஞ்சம் எர்லியாக போனால் கார்பார்க் கிடைக்கும்" "உந்த கொழுத்திறவெய்யிலுக்குள்ள போய் கறுத்து போவியளடி" "அதற்கு சன்கீறிம் பூசிக்கொண்டுபோகலாம் ,அப்பா உங்களுக்கு சுவிம் பண்ணதெரியாதபடியால் சும்மா லெம் எஸ்கியுஸ்களை சொல்லாதையுங்கோ" "எனக்கு சுவிம் பண்ணதெரியாதோ! நிலாவரையில் டைவ் அடிச்சனெ…
-
- 15 replies
- 3.9k views
-
-
சட்டி (நிமிடக்கதை(யல்ல)) பூனகரியை அண்மித்த யுத்தம் கோரத்தாண்டவமாடியபோது அவளது ஊரும் இடம்பெயரலானது. கணவன் கடந்த ஆண்டு போர்முனையில் வித்தாகிவிட இருபிள்ளைகளோடு இடர்களைத்தாங்கித் தனது பிள்ளைகளுக்காக வாழ்ந்தவள் வினோதா. அமைதியிழந்த சூழலில் உணவோ நித்திரையோ இல்லாது மக்களோடு மக்களாக நகர்வதும் ஒதுங்குவதும் பின் இன்னொரு இடம் நோக்கி நகர்வதுமாய் இன்று புதுக்குடியிருப்பிலே. எங்கும் மரணமும் பட்டினியும். பணமிருந்தாலும் பசியாற வழியில்லை. சற்று ஓய்வாக இருக்க எண்ணினாலும் முடியாது. பிள்ளைகள் பசியால் துடிக்க என்ன …
-
- 4 replies
- 2.5k views
-
-
பசியும் பார்வையும் திரும்பத் திரும்ப அவளைப் பார்க்கத் தோன்றியது. உருவம் இன்னும் திடகாத்திரமாக முகத்தில் ஆண்களுக்கே உரித்தான ஒரு வித தடிப்புடன் தாடைகள் அமைந்திருக்க என்னுடைய ஞாபகக்குழிக்குள் அவள் முகம் தெரிந்ததுபோலும் தெரியாதது போலும் தளம்பல்பட்டுக் கொண்டிருக்க நான் அந்த முகத்தை யாரென்று ஊகிக்க மிக ஆழமாக உற்று நோக்கினேன். அவள் அருகில் இன்னும் ஒரு பெண் நளினத்தோடு முறுவலித்தபடி வெட்கச்சாயம் பூசியிருந்தாள் . முறுவலிட்டபடி இருந்தவளை இரசிப்பதா இல்லை மற்றவளை இனம் காண்பதா என்ற இரண்டு நிலையில் நான் அந்த ஸ்காபுரொ மோல் பக்கம் விடுமுறை காலங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்வது வழக்கம் இன்றும் அப்படித்தான் அவ்விடத்தில் நான் பிடித்தமான உணவுகளை வாங்க பிள்ளைகள்…
-
- 4 replies
- 2.2k views
-
-
கண்ணாடிக் கட்டிடத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருக்கையில் எதேச்சையாய்க் கண்ணாடி வழி வெளியே பார்க்கிறேன். காக்கி நிறத்தில் பாவாடை, நீல நிறத்தில் மேலங்கி. கரிய கேசம் சிற்றருவியாய் வழிய, லூயி விற்ரான் பை கையில் தொங்க அந்தத் தமிழ் அழகி வெளியே நடந்துகொண்டிருக்கிறாள். நான் தற்போது காதலில் கட்டுண்டு கிடக்கவில்லையேல் அவசியம் வெளியே சென்று அவளுடன் பேசி இருப்பேன். தவிர்க்க முடியாத அழகி. முறுவலோடு என் நடை கண்ணாடிக் கட்டிடத்திற்குள் தொடர்கிறது. நகரத்தின் கட்டிடங்களைத் தொடுக்கும் நடைபாதையாதலால் என்னை ஒத்தவர்கள் அதிகம்பேர் நடந்துகொண்டிருந்தார்கள். அனைவரது கைகளிலும் அலுவலக அலைபேசி. மின்காந்த அலைகள் எங்கும் நிறைந்திருந்தும் கண்ணில் படவில்லை. மனிதர்கள் தாம் தொழில்நுட்பத்தால் மட்டுமே இணைக…
-
- 6 replies
- 2.2k views
-
-
கோயிலில் தோரணம் கட்டுதல் ,அன்னதானம் வழங்குதல்,சாமி காவுதல் போன்றவற்றிக்கு நானும் என்னுடைய நண்பர்களும் முன்னுக்கு நிற்போம்.இவற்றை செய்யும் பொழுது சில சுயநலங்களை எதிர்பார்த்துதான் செய்வோம் ஆனால் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு பொது நலம் போல இருக்கும்,இது தான் அன்றைய காலகட்டத்தில் பொதுசேவை என்று கூட சொல்லலாம்..அம்மாவின் அல்லது சகோதரிமாரின் தங்க செயினை வாங்கி போட்டு கொண்டு மேலாடையின்றி சாமி காவுவோம் அதிலும் முன்னுக்கு நின்று காவ வேணும் என்ற போட்டியும் எங்களுக்கிடையே நடக்கும்.சாமியை இருப்பிடத்தில் வைத்த பின்பு பிரசாதத்தை பெற்று கோவில் வெளிமண்டபத்திலிருந்து அன்றைய தரிசனங்களை இரைமீட்பது எங்களது வழமை. சின்ன பெடியள் அடிபட்டால் அவங்களை விளத்தி சமாதானப்படுத்தி அனுப்புதல்,பக…
-
- 7 replies
- 2.7k views
-
-
23.04.2017 தமிழினி அவர்களின் 45வது பிறந்தநாள்.தமிழினி அவர்கள் பற்றி பல்லாயிரம் கேள்விகள். தமிழினி அவர்களுக்கும் எனக்குமான உறவு பற்றியும் அவளது திருமணம் , ஒரு கூர்வாழின் நிழல் நூல் பற்றிய சர்ச்சைகள் என பெரிய பட்டியல் நீளம். எனது மௌனம் கலைத்து தமிழினி பற்றிய உலகம் அறியாத பலவியடங்களை பகிர்ந்திருக்கிறேன். இது பெரிய பகிர்வு. நேரமெடுத்து வாசியுங்கள். ------------------------------------ Saturday, April 22, 2017 தமிழினி.ஒருமுனை உரையாடல். முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது.…
-
- 3 replies
- 3.7k views
-
-
Thursday, April 20, 2017 மனவெளி அலைவு (சாந்தி நேசக்கரம்) அவனுக்கும் அவளுக்குமான உறவு உரையாடல்கள் மூலம் உருவாகி வளர்ந்து விருட்சமாகி நிற்கிறது. எந்த விடயங்களைப் பற்றி அவர்கள் பேசிக்கொள்ளவில்லை ? அவர்களுக்கிடையே பேசாப்பொருள் என்று எதுவுமே இருந்ததில்லை. உரையாடலில் ஒருநாள்....., நாங்கள் முற்பிறப்பில ஒண்டாப் பிறந்திருக்கிறம் போல....அதுதான் இந்தப் பிறப்பிலயும் தொடருது. என்றான் அவன். முற்பிறப்பெல்லாம் நம்பிறியேடா ? இது அவள். தெரியேல்ல..., ஆனால் உங்களுக்கும் எனக்குமான உறவு நுற்றாண்டுகளுக்கு மேல இருந்திருக்கு. நீங்கள் அப்…
-
- 4 replies
- 1.8k views
-
-
பெறுபேறு /பெரும்பேறு. ஈன்றபொழுதிலும்....பின்னர் அவர்களே இன்பமென்று இருந்த பொழுதுகளிலும்... என்னை தாங்கும் வேரென நிறைந்த பொழுதிலும்..பெரிதாய் இருக்கிறது இன்று. அமுதாய் இனிக்கிறது. என் பிள்ளைகளின் எதிர்காலம் எனக்கு ஒரு கனவு..அக்கறை..கடமை என்பதும் என்னை பழியுரைத்தோர்..எனது வீழ்ச்சி விரும்புவோர் முன்னே ஒரு சவால். வைராக்கியம். என்னை இந்த உலகிற்கு கொண்டுவந்த அம்மாவும்..என் பிள்ளைகள் உலகிற்கு வர காரணமானவனும் கூட ' எங்க உன்ர பிள்ளைகள் படிக்கிற கெட்டிதனத்தை பார்ப்பம்...என்றதுவும். தனியே நீ என்ன சாதிப்பாய். ...அடங்கி போ..என்று மிரட்டியவர்களிற்கும் முன்னே செயல் மூலமான பதிலாக ...எனது இத்தனை நாள் தவத்திற்கு வரம் கிடைத்தது. இன்றைய எனது நாட்குறி…
-
- 19 replies
- 3.4k views
-
-
http://www.shobasakthi.com/shobasakthi/?p=1354 இந்தக் கதையினை வாசித்துமுடித்தபோது, எனது மனதில் எழுந்த முதலாவது கேழ்வி 'மாயோள்' என்ற தலைப்பினை ஏன் சோபாசக்த்தி கதையின் தலைப்பாக இடவில்லை என்பதாவே இருந்தது. அத்தனை அருமையான பெயர் அது. சோபாவின் வாசகர்களிற்கு நன்கு பரிட்சயமான ஒரு சொல்லில் ஒரு எழுத்தினை வேண்டுமென்றே மாற்றி, அது ஒரு விசித்திரமான பெயர், வெளியிடத்தில் இருந்து வந்திருந்தவளின் பெயரென்று ஒரு பெரும் நாவலையே அந்தச் சொல்லிற்குள்ளால் நடத்தி முடித்திருக்கிறார். இந்தக்கதையின் அடி ஆழம் அனைத்தும் அந்தச் சொல்லிற்குள் பொதிந்து கிடக்கிறது. இருந்தும் அதனைத் தலைப்பாக இடாது குழந்தை காயாவின் பெயரினை வைத்திருக்கிறார். யோசிக்கும் போது அதன் தேவை புரிகிறது. இப்பதிவின் கடைசிப் பந்திய…
-
- 20 replies
- 3.8k views
-
-
கரிய முகில்களுக்கிடையில் தீச்சுவாலை பரப்பியபடி, எரியுண்ட கோளமாய் சூரியன் கிடந்த காட்சி, அவனை எரித்துவிட்டுத் திரும்பும் போது எழுந்த கரும்புகையையும், புகையின் அடியில் ஒரு புள்ளியாய் குமுறி எழுந்த தீயையும் நினைவுகளின் அடுக்குகளிலிருந்து இழுத்து எடுத்துவிட்டிருந்தது. இன்றைக்கு மூன்று நாள்களுக்கு முன் நிகழ்ந்துகொண்டிருந்த அந்த சூரிய அஸ்தமனம், நினைவினில் மீண்டும் மீண்டும் உருவாகி அலைக்கழிக்கலாயிற்று. கடந்துபோன அன்றையை, அந்த நாள் மீண்டும் மனதில் கிளர்ந்திற்று. ஒவ்வொருவரும் தயங்கித் தயங்கி அவ்விடத்திலிருந்து விலகிப்போன அந்த வேளையை கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பூதாகரமாக உருவாக்கிற்று. பின்னர் வந்த இந்த நாட்களில் சூனியவெளியில் அலைவுறும் எழுதப்பட்ட பழுப்பு…
-
- 3 replies
- 1.9k views
-
-
கொஞ்ச நாட்களாக நான் நின்மதியாக இருக்கிறேன். முன்பென்றால் எந்த நாள் என்றாலும் என் மனம் பதைபதைக்கத் தொடங்கிவிடும். கதைக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாது தொடர்ந்து இரண்டு மூன்று மணி நேரம் என்னை அப்படியே விட்டுவிடுவாள். எப்போதடா இவள் கதைப்பதை நிறுத்துவாள் என ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்தபடி நான் வேறொன்றும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆரம்பத்தில் எல்லாம் அவள் பேசுவது எனக்கு சந்தோசமாகத்தான் இருந்தது. போகப் போக எனக்கே சலித்துப்போய் விட்டது. யார் தான் தொலைபேசியை அதுவும் கைத் தொலைபேசியைக் கண்டு பிடித்தானோ என்று அவன் மேல் எரிச்சல் எரிச்சலாக வரும். அவன் கண்டு பிடித்தது நல்ல நோக்கத்துக்குத்தான். ஆனால் இவளைப் போன்ற பலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் துர்ப்பிரயோகம் செய்…
-
- 16 replies
- 1.8k views
-
-
அப்பா இறந்த நாள் முதல் வீடு முழுவதும் நண்பர்கள் உறவினர் என்று இரவு பன்னிரண்டு ஒன்று என்று இருந்து கதைத்துவிட்டுப் போவதாய் முதல் மூன்று நாட்கள் கழிய, நான்காம் நாளிலிருந்து உறவினர்கள் படிப்படியாகக் குறைய எஞ்சியது நாங்கள் ஒரு இருபது பேர் தான். ஆனாலும் அப்பப்ப அயலில் உள்ளவர்களும் தெரிந்தவர் போனவர் என்று நாள்முழுதும் வீட்டில் பேச்சுச் சத்தம் கேட்டபடி இருந்தது. தம்பியின் ஐந்து நண்பர்களும் மனைவி பிள்ளைகளும் கூட இரவு பதினோருமணி வரை எம்முடன் இருந்து கதைத்து தாமே எல்லா வேலைகளையும் செய்து, அதன் பின் வீட்டுக்குப் போவார்கள். அம்மாவின் ஒன்றுவிட்ட தங்கை அம்மாவின் நெருங்கிய நண்பி. அவரே அம்மாவின் அருகில் தூங்கி எழுவது கடந்த மூன்று நாட்களும். அம்மா தன் பக்கம் படுக்க சின்னம்மா த…
-
- 46 replies
- 8.1k views
-
-
மறக்க முடியாத நினைவுகள்... ஒரு காலத்தில் நாங்கள் கிரிக்கெட் விளையாடி முடிய பல மணிநேரம் இருந்து பல விடயங்களையும் கதைத்த இடம். இந்த மதில் ஓரத்தில் ஒரு சீமெந்திலான கட்டு இருந்தது (அது இப்ப அந்த இடத்தில இல்லை. அதையும் யாரோ தூக்கி கொண்டு போய் விட்டார்கள்) அதில்தான் நாங்கள் இருந்து கதைப்பது. இந்த மதிலுக்கு முன்பாக ஒரு 8 பரப்பு காணி. அதுக்குள் 2 புளியமரம், ஒரு வேம்பு, ஒரு மாமரம், ஒரு செரிபழ மரம்.. இதுக்கு நடுவில்தான் கிரிக்கெட். கண்னுக்கு பந்து தெரியும்வரை விளையாட்டுத்தான். யாழ் நகரில் உள்ள முன்னனி பாடசாலை மாணவர்கள் எல்லாம் பிற்பகலில் கூடும் இடம். கலகலப்புக்கும் நகைச்சுவை கதைகளுக்கும் பஞ்சம் இருக்காது. சிலவேளைகளில் ஒரு அணியில் 15 பேர் கூட இருப்பார்கள்.. …
-
- 23 replies
- 5.2k views
- 1 follower
-
-
வா…… என்னை வருடு! குளிர் பூச்சியத்திற்கு கீழே 15 ஆக இருந்தது. காற்று தாறுமாறாக வீசிக்கொண்டிருந்தது. அக்காற்றில் அலைக்கழியும் பனிப்பூக்கள் பூமியைத் தொட நிமிடங்களைக் கரைத்தன. அறையின் யன்னல் ஓரமாக எவ்வளவு நேரத்திற்குத்தான் இவற்றை இரசிப்பது? எனக்கு அலுத்து விட்டது. வீட்டில் எல்லோரும் படுக்கைக்குச் சென்று விட்டார்கள் அவள் மட்டும் இன்னும் சமையல் கட்டில் பாத்திரங்களைக் கழுவி அடுக்கும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. அவள் கரங்களின் தொடுகைக்காக மனதிற்குள் ஏக்கங்கள் குமைந்து கொண்டிருந்தன. அவளின் பாராமுகமும் அலட்சியமும் என்னைத் தினம் தினம் அவமானப்படுத்துகிறது. அடி போடீ என்று வெறுக்கும் சக்தியை இன்னும் உயிர்மை கொடுக்கவில்லை. அந்தக்கரங்களுக்குள் கட்டுண்டு கிடக்கும் கதகதப்பிற்காக ஒவ…
-
- 81 replies
- 9.2k views
-
-
ஆகாயத்தாமரை மீனா சலனங்கள் அற்ற பார்வையுடன் என்னை நோக்கினாள். அவளின் பார்வை எனக்குள் பலத்த அதிர்வை ஏற்படுத்தி என் எண்ணங்களை புரட்டிப்போட்டது. அவளுடைய பார்வையை மீறி பேசும் நிலையை அடைய முடியாத தவிப்பு என்னை ஆக்கிரமித்தது….. ஐரோப்பாவிலிருந்து உறவினர்களின் திருமண விழாவில் கலந்து கொள்ள கனடா வந்த எனக்கு மன ஆழத்தில் புதைந்திருந்த ஆவல் தலைதூக்கியதில் வியப்பில்லை பதின்ம வயதில் மறுக்கப்பட்ட காதலின் தாக்கம் ஐம்பதைத் தாண்டியும் மனதில் துயரமாக யாரும் அறியாமல் அழவைத்திருந்தது. நம்பியவளை ஏமாற்றிவிட்டோமோ என்று சிறுகச் சிறுக என்னைச் சாகடித்து எனக்குள் தன்னை மட்டும் உயிர்ப்பாக வைத்திருக்கும் உணர்வு காதலுக்கு மட்டுந்தான் இருக்கமுடியும். அவளைப் பார்த்தே ஆகவேண்டும் இன்னும் இருநாட்கள…
-
- 26 replies
- 4.4k views
-
-
அன்பு வாசகர்களுக்கு, கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் அதிகம் எழுதவில்லை. காணாமல் போயிருந்தேன் என்றே சொல்லலாம். அவ்வப்போது முகநூலில் மட்டுமே உலவியிருந்தேன். பழையபடி நான் வேகம்பூட்டி ஓடத் தொடங்கியிருக்கிறேன். 2017 புத்தாண்டு என்னை புதுப்பித்திருக்கிறது. பலருக்கு என்பற்றிய பல கேள்விகள் சநதேகங்கள் ஆச்சரியங்கள் இப்ப நிறைய...., ஏன் காணாமல் போனேன் ? எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன். புத்தாண்டு எனக்கு புதிதாக ஒளியாக பிறந்திருக்கிறது. இனி நேசக்கரம் பணிகளும் விரைவடையப்போகிறது. கடந்து வந்த தடைகள் துயர்கள் கண்ணீர் புன்னகை யாவையும் இனி எழுதுவேன். கண்ணீரை நம்பிக்கையாக்கியவனுக்கு..., …
-
- 7 replies
- 2.9k views
-