Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. இன்றுடன் அவள் இங்கு வந்து இரண்டு மாதங்கள் முடிந்துவிட்டன. எட்டு மாதப் பிள்ளை அங்கு என்ன செய்கின்றதோ என்பதே எந்நாளும் இவள் கவலையாக இருக்கிறது. எத்தனை கெஞ்சியும் பிள்ளையைக் கண்ணில்க் காட்டுகிறார்களே இல்லை. அதுவும் முதல் பிள்ளை. எனக்குத் தெரியாமல் அவனுக்குப் பிள்ளையைக் காட்டுவார்களோ என்று எண்ணும்போதோ மனம் பதட்டப்படத் தொடங்கிவிட்டது தாரணிக்கு. “நீ தேவையில்லாமல் எல்லாத்துக்கும் டென்ஷன் ஆகாதை. இன்னும் கொஞ்ச நாள்த்தான். பொறுமையாய் இரு.” “நீ எண்டாலும் தருணை ஒருக்காய் போய்ப் பாரனடா. இரவிலை என்னால நித்திரையே கொள்ள ஏலாமல் இருக்கடா” “நான் இண்டைக்கே போய்க் கதைக்கிறன். நீ நின்மதியாய் இரு அக்கா” விடைபெற்றுச் செல்லும் தம்பியைக்கூட அவளால் முற்றிலுமாக நம்பமுடியாவிட…

  2. Started by putthan,

    அவனை நான் முதலில் சந்திக்கும் பொழுது எட்டு வயது இருக்கும்.பெடியன் நல்ல கொளு கொளு என்று இருப்பான்.பார்த்தவுடனே கன்னத்தில் கிள்ள வேண்டும் போல இருக்கும்.அவனது அப்பா குகன் எனது நெருங்கிய நண்பன்,வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருந்தான். குடும்ப சகிதமாக சென்றிருந்தேன்.போகும் பொழுது சும்மா போகக்கூடாது எதாவது கொண்டு போகவேணும் என மனிசி நச்சரிக்க மலிவுவிலையில் வாங்கிய சொக்லட் பெட்டியை ரப்பிங்க் பெப்பரில் சுற்றி எடுத்து சென்று, குகனின் மகனிடம் கொடுத்தேன்.thank you uncle.. என்று கூறிய படியே நான் கொடுத்த பார்சலை பிரித்து பார்த்தான்.vow can I eat it now ammaa என்று கூறியபடியே என தாயிடம் அனுமதி கேட்டான்.not now darling latter...மறுப்பு தெரிவிக்க முகத்தை தொங்க போட்டபடியே உள்ளே சென்றுவிட்…

    • 21 replies
    • 2.9k views
  3. ஜீவா எண்ணியும் பார்த்ததில்லை தமக்கும் இப்படி ஒரு நிலை வரும் என்று. வழமையாக அதிகாலையில் நித்திரையால் எழுவதுதான். பாடசாலைக்குச் செல்லும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் காலை உணவு செய்து பாடசாலைக்கும் கட்டி ஒழுங்கு செய்ய எப்பிடியும் ஒன்றை மணி நேரம் கடந்துவிடும். அதன்பின் எல்லோரையும் எழுப்பி பால் காச்சித் தேத்தண்ணியும் போட்டு எல்லாருக்கும் சேவகம் செய்யவே நாரிப்பூட்டு விண்டுவிடும். இப்ப மேலதிகமாக டாங்கிகளில் வரும் தண்ணீரைப் பிடிப்பதற்கு அரை மணி முன்னதாக எழுந்து வேலைகளை முடித்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பிந்தினாலும் பிறகு அரைவாசி தண்ணீர்தான் கிடைக்கும். எதோ தான் மட்டுமே தண்ணீர் பாவிப்பதுபோல கணவன் ஒருநாள் கூட உதவி செய்வதில்லை. சரி அவர் படிப்பிக்கப் போகவேணும்தான். அத…

  4. தந்தையுமானவன்.....! அன்று நல்ல முகூர்த்தநாளாக இருக்க வேண்டும். சந்நதி முருகன் ஆலயத்தில் வள்ளி அம்மன் ஆலய முன்றலில் அன்று இருபது திருமணங்கள் வரை நடந்தன.எதிர்பாராமல் அவசரம் அவசரமாக இருபத்தியொராவது திருமணமாக கதிர்வேலுக்கும் வசந்திக்கும் திருமணம் நடக்கின்றது. விதி மிகவும் விசித்திரமானது. அன்று காலை சுன்னாகத்தில் ஒரு பனங்கூடலுக்குள் மென்பந்தில் நண்பர்களுடன் கிரிக்கட் விளையாடும் போதோ அல்லது மத்தியானம் அம்மா திட்டிக் கொண்டு சாப்பாடு போடும்போதோ ( இது அம்மாவின் டெக்னிக்,தான் திட்டாது விட்டால்,அப்பா ஆரம்பித்து அவன் சாப்பிடாமல் வெளியே போய்விடுவான்). அதனால் அம்மா முந்திக் கொண்டு அவனைப் பேசிக்கொண்டு தாராளமாய் சாப்பாடு போடுவாள். அவர்களுக்கு தெரியாது அன்று அங்கு கதிர்வேலுக்கு …

  5. Started by ரசோதரன்,

    தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்ப…

      • Thanks
      • Like
    • 15 replies
    • 676 views
  6. 23.04.2017 தமிழினி அவர்களின் 45வது பிறந்தநாள்.தமிழினி அவர்கள் பற்றி பல்லாயிரம் கேள்விகள். தமிழினி அவர்களுக்கும் எனக்குமான உறவு பற்றியும் அவளது திருமணம் , ஒரு கூர்வாழின் நிழல் நூல் பற்றிய சர்ச்சைகள் என பெரிய பட்டியல் நீளம். எனது மௌனம் கலைத்து தமிழினி பற்றிய உலகம் அறியாத பலவியடங்களை பகிர்ந்திருக்கிறேன். இது பெரிய பகிர்வு. நேரமெடுத்து வாசியுங்கள். ------------------------------------ Saturday, April 22, 2017 தமிழினி.ஒருமுனை உரையாடல். முன்னரெல்லாம் தூக்கம் தொலையும் இரவுகளில் நீயும் நானும் விடியும்வரை பேசிக்கொண்டிருப்போம். இப்போதும் உன் பற்றிய கனவுகளாலும் உன் தொடர்பாகக் கிழம்பும் புரளிகளாலும் என் தூக்கம் தொலைகிறது.…

  7. தமிழ்க்கிழவன் புறுபுறுப்பு-4 ----------------------------------- சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கொழும்பில நடக்காமல் போன பிரச்சினை பெரிய பிரச்சினையா கிடக்கு.யானைப்போருக்குள்ள பூனைப்போராக்கிடக்கு உந்தப்பிரச்சினை. இந்த மாதம் ஜெனிவா மாநாட்டில இலங்கைக்கு எதிரான "போர்க்குற்ற பிரேரணை" வாற நேரம் உது தேவையோ எண்டது நியாயமான கேள்விதான். ஏனெண்டா தமிழனுக்கு ஏதோ கொஞ்ச நஞ்ச நீதி கிடைக்கும் நேரத்தில ... அங்க சனமெல்லாம் வலு சந்தோசமா சோக்கா இருக்குது எண்டு காட்ட உப்பிடியான களியாட்ட நிகழ்வுகள் உதவும் எண்டுகினம் கனபேர். இன்னோரு பக்கத்தால "வெளிநாட்டில உள்ளவை மட்டும் கூத்தடிச்சு கும்மாளம் அடிக்கலாம்,இங்க நாங்கள் கொஞ்ச சந்தோசமா இருக்குறது உங்களுக்கு பிடிக்க இல்லையோ" எண்டுகினம் ஒரு சிலர். இத…

  8. அன்புள்ள கடவுளுக்கு தம்மா துண்டு தமிழ்நாட்டை ஆளுகின்ற தலைவர்களே நிக்க நேரமில்லை, உட்கார பொழுதில்லை என்று லொங்கு லொங்குயென வேலையிருக்கோ இல்லையோ ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். நீ ரொம்ப பாவம் இவ்வளவு பெரிய உலக்கத்தை ஒத்த ஆளா ஆட்சி நடத்தற, உனக்கு எம்புட்டு வேலையிருக்கும். கண்ணுக்கே தெரியாம நிறைய உசுரு இருக்காமே. அதுங்க தொடங்கி வயிறு பெருத்த மனுஷன் வரைக்கும் தினசரி நீ சோறு போட்டாகனும். கோடம்பாக்கத்துல மழை வந்துதா? கோவில்பட்டியில வெயில் அடிக்கிறதா? என்பதையும் பார்த்தாகனும். செத்தது எத்தனை பேரு, புதுசா பொறந்தது எத்தனை பேரு, அவனுக்கு என்ன கதை, என்ன பாத்திரம் என்று பிரிச்சு கொடுத்தாகனும். ரெண்டு செகண்டு கண் மூடி உன் வேலையை பற்றி யோசிச்சா தலையே கிறுகிற…

  9. அவளை இன்று பெண் பார்க்க வந்திருந்தார்கள். அவள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்பவள். அழகானவள். தாய் தந்தை சொல்லை தட்டாதவள். நவநாகரீக உடைகள் அணிவது அவளுக்கு பிடிக்காது. தமிழ் கலாச்சாரப்படி வாழ்பவள் என்று அவளைப் பற்றி மற்றவர்கள் பேசுவார்கள். இதில் அவளுக்கு பெருமையும் கூட. அவளுக்கு ஒரு நண்பி இருக்கிறாள். இல்லை, இருந்தாள். அந்த நண்பி 16 வயதில் இருந்தே வேற்று இனத்தவன் ஒருவனைக் காதலித்தாள். அவனுடன் நகரம் முழுவதும் சுற்றினாள். 18 வயது ஆனவுடன் அவனுடன் ஒன்றாக வாழவும் சென்று விட்டாள். கடந்த 5 வருடமாக திருமணம் செய்யாமல் அவனுடனேயே வாழ்ந்த வருகிறாள். அந்த நண்பியைப் பற்றி அந்த நகரத்தில் உள்ளவர்கள் பலவாறு பேசுவார்கள். அந்த நண்பி அணிகின்ற உடைகள் பற்றியும், துணைவனுடன் டிஸ்கோ செல்வது பற்றி…

  10. இன்றைய சூழலில் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை முறையில் குறிப்பாக கோடை காலக் களியாட்டங்களில் செய்யக் கூடிய (செய்ய வேண்டிய மாற்றங்கள்) மாற்றங்கள் தாயக மக்களின் அவல வாழ்க்கைக்கு ஆற்ற வேண்டிய பணிகள் என்பவை குறித்த என் மன ஆதங்கங்களை ஏதோ ஒரு படைப்பு மூலம் வெளிக் கொணர வேண்டும் என நினைத்தேன். அந்த எழுத்து வடிவம் குறித்து ஒரு குழப்பகரமான சூழலில் ஒரு நாடக வடிவில் இதனை வெளிக்கொணர முயற்சிக்கிறேன். நாடகப் பிரதிகளை எழுதுவது குறித்த எந்தவிதமான அனுபமும் எனக்கு இல்லை என்பதால் இது குறித்த உங்கள் விமர்சனங்களை தவறாது முன்வையுங்கள். குறிப்பாக நாடகப் பிரதிகளை எழுதுவதில் அனுபவமுள்ள பலரும் இங்கிருக்கிறீர்கள். எனவே உங்கள் விமர்சனங்கள் என்னைப் புடம் போட்டுக் கொள்ள பெரிதும் உதவும்.. அத்துடன் சர…

  11. கனடாவில் வாழும் கணபதியும் கந்தையாவும் அயல் வீட்டுக் காரர்கள் . க ந்தையர் அந்த வதிவிடத்தில் பத்து வருடங்களுக்கு மேல் வசிக்கிறார் . கணபதியார் இங்கு இடம் மாறி மூன்று வருடங்கள் இருக்கும். க ந்தையரும் மனைவியும் பென்சனியார். இரு மகன்மார் திருமணமாகி குழந்தைகளுடன் வேறு பகுதியில் வாழ்கின்றனர் . இடைக்கிடை கந்தையர் வீட்டில் அவர்கள் வந்து தங்குவர். சில சமயங்களில் பாட்டியுடன் சிறார்களை தங்க வைத்து பலசரக்கு கடை உடுப்புடவைக் கடை என சுற்றி விட்டு குழந்தைகளை அழைத்து செல்வர். கணபதி வீடு மாறி வந்த புதிதில் அச்சுற்றடலைப்பற்றி கந்தையர் தாமாகவே முன்வந்து பேசுவார். இருவரும் காணும் பொது ஹை பை சொல்லிக் கொள்வர் . கணபதி புல் வெட்டும் போது க ந்தையர் கார் தரிக்கும் இடத…

  12. நினைவழியாத்தடங்கள் - 09 காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். பால்ராஜ் அண்ணை அப்பொழுது தான் வெளியில் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தார். உடனே லக்ஸ்மன் அண்ணையைத் தனது அறைக்கு வருமாறு அழைத்தார். சிறிது நேரத்தின் பின் அவசர அவசரமாக வெளியில் வந்தவர், உடனடியாக அங்கு இருந்தவர்களை புறப்படுமாறு கூறினார். இரண்டு வாகனங்களில் புறப்பட்டோம். லக்ஸ்மன் அண்ணையின் வாகனத்தில் ஏறிய பால்ராஜ் அண்ணை மற்றவர்களைப் ”பின்னால் வாங்கோ” எனக் கூறிவிட்டுப் புறப்பட்டார். வாகனம் பண்டத்தரிப்புப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. எங்களுக்கு அவசரத்தின் காரணம் புரியவில்லை. இராண…

  13. இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது. தவிக்கும் தன்னறிவு நாடகம் தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025 சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக…

  14. புத்தக வெளியீடு என்ற விளம்பரத்தை இணையத்தில பார்த்தவுடன் அதில் கலந்துகொள்வது எனமுடிவெடுத்தேன். மெல்பேர்னிலிருந்து எழுத்தாளர்கள் வேறு பங்குபற்றுகிறார்கள் என எழுதியிருந்தார்கள் எனவே நிச்சயம் போகவேணும் என தீர்மானித்தேன். அந்த நாளும் வந்தது. கதிரவன் இளைபாறும் நேரம். மனிதர்களுக்கு அடுத்த நாள் ஒய்வு. வாயில் சுவிங்கத்தை போட்டு மென்றுகொண்டு பின்வரிசையில் போய் உட்கார்ந்தேன். முற்போக்கு பிற்போக்கு, நடுபோக்கு எழுத்தாளர்கள் எல்லாம் மேடையில் இருந்தார்கள். புத்தக வெளியீட்டு வைபவம் தொடங்கியது. வரவேற்புரை, மெளனஞ்சலி என சம்பிராதய சடங்குகள் முடிவடைந்த பின்பு, இப்பொழுது மெல்பேர்னிலிருந்து வந்த முற்போக்கு எழுத்தாளர் ,கவிஞர், நாடக நடிகர் ,பேச்சாளர் .சு.கா.....பேசுவார் என் அறிவிப்பாளர்…

  15. திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ) பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை ....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு... இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்திற்காக வாசுகி மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வ…

      • Haha
      • Thanks
      • Like
    • 9 replies
    • 907 views
  16. ஒவ்வொருவருடைய வாழ்விலும் சில சந்தர்ப்பங்கள், வாழ்வின் திருப்பு முனையாக அமைவது உண்டு . அந்த வகையில் சாதனா வாழ்க்கையிலும் ஒரு சம்பவம். பள்ளிப் படிப்பின் பத்தாம் ஆண்டு , முதற் தடவை ஓல் பரீட்ச்சை யில் எட்டுக்கு ஐந்து படங்கள் சித்தி எய்திய நிலையில் கணிதம் அவளுக்கு தோல்வியை தந்தது . பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் நன்றாக வாங்கி கட்டிக்க கொண்டாள் . " பராக்கு க்கு கூடிபோச்சு" "படிச்சு முன்னேறும் வழியை பாரு " " தோழிகள் சகவாசம் கூடிப்போச்சு" "தலை யலங்காரம் செய்யும் வேளை படித்தால் என்ன ? என சில நாகரிகமற்ற வசவுகள் . அவளை மேலும் கவலை யும் கண்டனங்களும் ஈட்டியாய் குத்தின.. அடுத்த கல்வி ஆண்டு ( ஏ எல்) வேறு பாடசாலை க்கு சக மாணவிகள் பாடசாலை மாற தயார…

  17. திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அறைகட்டி சேமிக்கும் தேனி. அலகால் தும்பெடுத்து அந்தரத்தில் கூடமைத்து உள்ளே குஞ்சு பொரித்து உயி வாழும் தூக்கணாம் குருவி. சுறு சுறுப்பாக எழுந்து வரிசைகட்டி வாழ்வதற்காக உணவெடுத்த…

  18. Started by லியோ,

    ஊரெழு யாழ் நகரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள செழிப்புமிக்க கிராமம் .இக்கிராமத்தை பலாலி வீதி ஊடறுத்து கிழக்கு,மேற்கு என பிரிக்கிறது.இக்கிராமத்தில் 27/11/1963 அன்று திரு,திருமதி இராசையா தம்பதியினருக்கு இளைய மகனாக பாத்தீபன் பிறந்தான். அவனது தந்தை ஒரு பாடசாலை ஆசிரியர்.அவனது தாயார் அவன் குழந்தையாய் இருக்கும் போதே இறந்து போனார்.இவனது தந்தை தாயாகவும் தந்தையாகவும் இவனையும் இவனது மூன்று மூத்த சகோதரர்களையும் வளர்த்தார். இவன் சிறுவயதிலிருந்தே இரக்ககுணம் நிறைந்தவனாகவும் எல்லோருடனும் பாசமாய் பழகுபவனுமாய் இருந்தான். கல்வியில் சிறந்து விளங்கியதால் யாழ் இந்துக்கல்லூரியில் கற்கும் வரம் பெற்றான்.யாழ் இந்துக்கல்லூரி பல கல்விமான்களையும் விடுதலைப்போராளிகளையும் தந்த …

  19. அப்பா எங்களை எல்லாம் விட்டுப் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. இன்னும் இரண்டு நாளில் அப்பாவின் முப்பத்தோராம் நாட்கடன். எல்லாப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளால் வீடு நிரம்பியிருக்க அம்மா கூட சிறிது கவலையற்று இருந்தது போல் தோன்றியது. ஆளாளுக்கு அப்பாவுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்து தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு இருந்தனர். அப்பா பெரிதாகக் கோவிலுக்குப் போவதே இல்லை. ஆரம்பகாலங்களில் பக்கத்து ஊரில் இருந்த கோவிலுக்குத் தனியாகச் செல்ல விருப்பமின்றி அம்மா என்னை அல்லது அப்பாவை அழைப்பார். ஆரம்பத்தில் இரண்டொருநாள் போனபின் எனக்குச் சலித்துவிட்டது. அதன்பின் மாட்டியவர் தான் அப்பா. அப்பாவும் சில நாட்கள் சென்றதன் பின் போவதற்குத் தயங்க அம்மா வேறு யாரும் கோவிலுக்குப் போபவர்களுடன் போகவேண்டி…

  20. விடுதலைப்புலிகளின் இராணுவ வல்லமையை இயலாமைக்குட்படுத்தும் நோக்குடன் சிங்களப்படையால் முன்னெடுக்கப்பட்டது தீச்சுவாலை படைநடவடிக்கை. இத்தீச்சுவாலைக்கு எதிரான படைநடவடிக்கையை தலைவர் எவ்வாறு கையாண்டார் என்று எழுதிய போது அவரின் கருத்துக்கமைவாக போராளிகள் சண்டையில் எத்தகைய அர்ப்பணிப்புக்களைச் செய்து, செயற்பட்டு அவரின் எண்ணத்தை நிறைவேற்றினார்கள் என்பதை எடுத்தியம்பும் சில சம்பவங்களைப் பதிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தீச்சுவாலை முறியடிப்புத் திட்டத்திற்கமைவாக முன்னணியில் ஒரு காவலரண் வரிசை பின்னுக்கு இரண்டாவது காவலரண் வரிசை என இரண்டு தடுப்பு காவலரண் வரிசைகள் அமைக்கப்பட்டன. முன்னணி தொடர் நிலைக்கு முன்னுக்கு கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டதுடன் தொடர் காவலரண்களை இணைத்து மண் அணையும் ம…

  21. Started by theeya,

    இந்தக் கொரோனா காலத்தில எல்லாரையும் போலவே வேலைக்குப் போட்டு வாறது அவளுக்கும் ஒரு பெரிய சுமையாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. காரைக் கராச்சில் பார்க் பண்ணி விட்டு மாஸ்க் மற்றும் கையுறைகளை குப்பையில் போட்டு விட்டுக் கைகளுக்கு சாணரைசேர் போட்டு இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று உரசினாள். ஐசோபிரோப்பில் போட்டு கார் ஸ்ராரிங் வீலையும் தான் கை பிடித்த எல்லா இடங்களையும் வடிவாய்த் துடைத்த பிறகு கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தவள் கைகளைச் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு நேராகக் குளியலைறைக்குச் சென்று களைப்புத் தீரும்வரை முழுகிய பின் கிரீமை எடுத்துப் பூசியவள் தலை முடியை அள்ளி உச்சசியில் முடிந்தபடி கண்ணாடியைப் பார்த்தாள். நாற்பது வயதிலும் இளமையும் துடிப்பும் மாறாத …

    • 25 replies
    • 4.8k views
  22. நடந்து முடிந்த ஆறாம் வகுப்புக் கணிதப்பரிட்சையில் வெறும் எண்பது புள்ளிகள் மட்டும் எடுத்திருந்தமை சிறுவனின் வீட்டில் கலம்பகமாகியிருந்தது. ஆர்ப்பாட்டங்கள், திட்டல்களின் பின்னர், கணக்கில் நூறு எடுக்கவேண்டியதன் அவசியம் எடுத்தியம்பப்பட்டு அன்றைய இரவு ஓய்ந்திருந்தது. விக்கிக்கொண்டு சிறுவன் தூங்க முயன்றுகொண்டிருந்தான். உலகை நோக்கி ஒரு ஆவேசம் அவனுள் உணரப்பட்டது. "நெற்றிக்கண் பெறுவதற்கு வழியிருப்பின்…" பெருமூச்சு விட்டபடி, நெற்றியினைச் சுருக்கி, அறையின் ஜன்னல் மீது தனது கற்பனைக் கண்ணைப் பிரயோகித்தான். வீடே அதிர்ந்தது. குறிப்பாக ஜன்னல் கண்ணாடி நொருங்கி விழுவது திண்ணம் என்பது போல் அந்த அதிர்வு இருந்தது. வீட்டை உடைத்துவிட்டோமோ என்ற பதைபதைபதைப்பில், மேலும் அடிவாங்காது தப்பிக்கொள்வதற்கா…

    • 19 replies
    • 2.8k views
  23. யார் யாருக்கு சீட்டு தெரியும் என்று கேட்டால், பெரியவர்களே கைகளை உயர்த்துவார்கள். இதில் உழைப்பாளிகளே தங்களது பணத்தினை ஈடுபடுத்துகிறார்கள். வாகனம், வீடு, கடை என அவர்களின் பெரிய செலவுக்கு பயன்படுகிறது, அத்தோடு அரசாங்க கணக்கில் வராத கறுப்பு பணம். சீட்டு பலவிதப்படும். கழிவுச் சீட்டு, குலுக்கல் சீட்டு என்று இருக்கிறது. கழிவுச்சீட்டின் பொருள். ஒரு தொகை மக்கள் இணைந்து மாதம் மாதம் பணம் போடுவார்கள். முதல் சீட்டு தாய் சீட்டு, அது நடத்துபவருக்கு, ஏனையவை எடுப்பவருக்கு கழிவுகளுடன். 12 பேர் இணைந்து 12‘000 ரூபாய் சீட்டு போட்டால் தலா 1000 ரூபாய் கட்டவேண்டும். அவசரமாக கேட்பவருக்கு கழித்து கொடுக்கப்படும். கழித்த பணத்தின் மீதியை 12ஆக பிரித்து கட்ட வேண்டும். கடைசி சீட்டை எடுப்பவர்களுக்கு…

    • 4 replies
    • 1.9k views
  24. முதல் மாசம் சம்பளம் வந்ததும் 10ம் திகதிக்கு முதல் காசை எடுத்து அண்ணாச்சி கடையில எல்லாரும் குடுத்திச்சினம். தாய் சீட்டு அவருக்கு, அதாவது முதல் சீட்டு அவருக்கு. அதால 20 பேருக்கும் தலா 4‘000. தன்ர கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி போட்டார். வியாபாரம் ஓரளவு ஓடிச்சு. வேற மலிகைசாமான் கடைகளும் பக்கத்தில இருக்கிறதால அவருக்கு கஷ்டம் தான். அண்ணாச்சி ஒரு பிழை விட்டிட்டார், அதின்ர விழைவு இன்னும் தெரியேல்ல. சில பேருக்கு வீட்டில இறுகீற்று. 4‘000.- பெரிய காசு. வாங்கிற சாமான்கள விலைய பார்த்து வாங்குற நிலை. சீட்டெண்டா சும்மாவா, அதுவும் 80‘000 பிராங் சீட்டு. வாயை கட்டி வைத்தை கட்டி வாழ வேண்டும். சரி பெரிசா வரும் எண்ட எண்ணம் மனசுக்க இருந்தது. வீடு வாங்கலாம் அது இது வாங்கலாம் என்கிற கற்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.