Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதைக் களம்

கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. Started by putthan,

    தம்பி ந‌ல்லாய் படிச்சு , உவன் கன‌கனின்ட மகனை போல நீயும் வெளிநாட்டுக்கு போய்மேற்படிப்பு ப‌டிச்சு டாக்டராக வந்திட வேணும் என்று கரனின் அப்பா சொல்லிகொண்டே இருப்பார்.கரன் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது கன‌கரின் மூத்தமகன் குகன் மருத்துவதுறையில் இறுதியாண்டு படித்திகொண்டிருந்தான்.கன‌கர் அரச உத்தியோகத்த‌ர் .இரு மகன்கள் இரு மக‌ள்கள்.மூத்தவ‌ன் குகன் அடுத்த இருவரும் பெண்கள் கடைசி கணேஸ். கர‌ணும் கணேஸும் ஒரே வகுப்பு ஒரே பாடசாலை இருவருக்குமிடையே ஒரு போட்டி மனபான்மை இருந்தது. குகன் இறுதியாண்டு படிக்கும் பொழுதே ,கனகர் நல்ல சீதனத்துடன் கலியாணத்தை ஒழுங்கு படித்துவிட்டார்.பெண் சுகி மருத்துவத்துறையில் இர‌ண்டாம் ஆண்டு பயின்றுகொண்டிருந்தாள…

    • 17 replies
    • 2.2k views
  2. அப்பா எங்களை எல்லாம் விட்டுப் போய் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிறது. இன்னும் இரண்டு நாளில் அப்பாவின் முப்பத்தோராம் நாட்கடன். எல்லாப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகளால் வீடு நிரம்பியிருக்க அம்மா கூட சிறிது கவலையற்று இருந்தது போல் தோன்றியது. ஆளாளுக்கு அப்பாவுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்து தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டு இருந்தனர். அப்பா பெரிதாகக் கோவிலுக்குப் போவதே இல்லை. ஆரம்பகாலங்களில் பக்கத்து ஊரில் இருந்த கோவிலுக்குத் தனியாகச் செல்ல விருப்பமின்றி அம்மா என்னை அல்லது அப்பாவை அழைப்பார். ஆரம்பத்தில் இரண்டொருநாள் போனபின் எனக்குச் சலித்துவிட்டது. அதன்பின் மாட்டியவர் தான் அப்பா. அப்பாவும் சில நாட்கள் சென்றதன் பின் போவதற்குத் தயங்க அம்மா வேறு யாரும் கோவிலுக்குப் போபவர்களுடன் போகவேண்டி…

  3. Ribeiro என்னுடைய நண்பன். போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். ஒரு சிறிய பயண நிறுவனத்தை நடத்தி வந்தான். தொண்ணூறுகளில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த போதெல்லாம் என்னுடைய விமானச் சீட்டுகளை அவன்தான் ஒழுங்குபடுத்தித் தந்தவன். முதல் முறை எனக்கான விமானச்சீட்டை ஏற்பாடு செய்யும் போது, என் நீண்ட பெயரைப் பதிவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதற்குச் சிரமம்? என்று நினைத்து, என் பாஸ்போர்ட்டை அவனிடம் நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவுடன் அவன் சொன்னான், “நீ பிறந்த இடம் Point-Pedro அல்லவா? அந்தப் பகுதியில் 'பேட்ரோ' என்னும் போர்த்துக்கல் ஆளுநர் ஒருவர் இருந்துள்ளார்” என்றான். நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு…

  4. சிங்களம் தெரியுமா? யாழ்ப்பாணத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கிய மினிபஸ்ஸில் முதல் பஸ்சை சன நெரிசல் காரணமாக விட்டுவிட்டு அடுத்ததில் ஏறி முன் சீற்றில் ஜாலியா குந்தி இருந்த போது பள்ளி சீருடைகளுடன் ஒரு மாணவர் குழாம். ஒருவரை தவிர அனைவரும் மாணவிகள். அந்த மாணவனும் என்ன நினைத்தானோ அருகில் வந்து அங்கிள் இதில இருக்கலாமா என்று நான் ஏதோ மினிபஸ் உரிமையாளர் போல கேட்டான். நானும் பக்கத்தில் இருந்த குட்டி சீட்டை மடித்து அவனின் வருகைக்கு உதவினேன். வந்த குட்டியன் கேட்ட முதல் கேள்வியே தூக்கி வாரிப்போட்டது. சிங்களம் தெரியுமா? விசரனின் ஒஸ்லோ முருகா கத்தல்தான் மண்டைக்குள்ள முதலில் வந்தது. சிங்களத்தில் எண்ணவே தெரியாத என்னை இவன் எதுக்கு தமிழில சிங்களம் தெரியுமா என்கின்…

    • 28 replies
    • 9.4k views
  5. எனது வேலைக்கான பயணத்தில் நாள்தோறும் பேருந்தில் போய்வருவது வழமை தினம் தினம் பஸ்கட்டணம் அதிகரிப்பதால் போக்குவரத்து செலவு அதிகமாக வரவே கையில் தலைக்கவசத்தை வைத்து பயணம் செய்வது வாடிக்கையானது. சில நேரம் சிலர் ஏற்றிச்செல்வார்கள் சில நேரம் கையசைத்தும் ஏற்றிசசெல்ல மாட்டார்கள் ஆரம்பத்தில் நானும் மோட்டார் சைக்கிளில் பயணித்தேன் காலப்போக்கில் பொருளாதார சுமை காரணமாக பஸ்ஸில் பயணிக்க ஆரம்பமானேன் . பஸ் சீசன் ரிக்கட் எடுத்தாலும் சீசனைக்கண்டால் பஸ்ஸை தூர நிறுத்தும் நம்மூர் சாரதிகளும் நான் தற்போது தலைக்கவசத்துடன் பாதையில் நிற்கும் இந்த நிலைக்கு காரணம் . வேலையிடத்தில் எனது உயரதிகாரியை சந்தித்து எனக்கு பயணம், சாப்பாட்டு செலவு அதிகமாகிறது என்னால் வேலைக்கு ஒழுங்காகவும்,குடும்ப சூழ்நிலை க…

  6. வாடா மல்லிகை கார்த்திகை திங்கள் 2013 ஒரு நாள் மதிய வேளையில் அலுத்துக் களைத்து வீடு திரும்பும் பொழுது எனது மனம் வழமைக்கு மாறாக ஊரைச் சுற்றியே ஊசலாடிக் கொண்டிருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை .கடந்த மூன்று வருடங்களாக அரிதார முகங்களையும் , அவற்றால் வரும் ஓட்டில்லாத சிரிப்புகளையும் பார்த்துச் சலித்த எனக்கு ஒரு மாற்றம் வேண்டும் என்ற ஓர் எண்ணம் சடுதியாக என் மனதில் சடுகுடு விளையாடியதில் வியப்பு ஏதும் இல்லை . மனதில் எழுந்த எண்ணத்தை செயலாக்கும் முடிவில் வீடு வந்த நான் ,என் எண்ணத்தை பள்ளியறையில் மஞ்சத்தில் ஆற அமர இருக்கும்பொழுது எனது மனைவியிடம் பகிர்ந்தேன் . அவளும் எனது மன ஓட்டத்தில் இருந்தாளோ என்னவோ எனது எண்ணத்துக்கு பச்சைக்கொடி காட்டினாள் . இருவரும் ஒன்றிணைந்து …

    • 42 replies
    • 5k views
  7. Started by pri,

    தொண்ணூறுகளின் மத்தியில் பேராதனை படிப்பு முடிந்து போனது. வேலை தேட வசதியாக கொழும்புக்கு நகர வேண்டியிருந்தது. வெள்ளவத்தையிலோ பம்பலப்பிட்டியிலோ தங்குவதற்கு வெளிநாட்டு காசோ அல்லது கொழுத்த சம்பளம் தருகிற தொழிலோ வாய்க்கவில்லை. கொஞ்சம் தள்ளி கல்கிசையில் மலிவாக அறையொன்று வாடகைக்கு கிடைத்தது. பெரிய வசதிகள் இல்லையென்றாலும் விரும்பிய நேரத்தில் 100 அல்லது 101 பஸ்சில் தொற்றி புறக்கோட்டை வரை பயனிக்கலாம் என்பதால் அதுவே சிலகாலம் இருப்பிடமானது. ஓடியன் தியேட்டருக்கு எதிராக காலி வீதியில் இருந்த அறையின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளரும் அதற்கு கீழே பழக்கடை ஒன்றும் இருந்தது. மாத்தறையை சேர்ந்த சிங்கள இளைஞர் ஒருவர் பழக்கடையை நடத்தினார். அதற்கு பக்கத்தில் இரண்டு தமிழ்க்கடைகள் இருந்தது. ஒன்…

  8. Started by sathiri,

    ஓடிப் போனவள் .. -சிறுகதை-சாத்திரி வேலை முடிந்து வெளியே வந்ததும் கைத்தொலைபேசியை எடுதுப்பர்தேன். நாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா.’ என்கிற மகிழ்ச்சி மனதில் துள்ளியது. கோடை விடுமுறை மனைவியும் மகளும் ஊருக்கு போய் விட்டார்கள். எனக்கு புதிய வேலைஎன்பதால் லீவு எடுக்க முடியவில்லை. இல்லையில்லை, லீவு எடுக்க விரும்பவில்லை என்றும் சொல்லலாம். அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டுக் கொஞ்சம் தனிமையாக இருக்க மனது விரும்பியது. இன்று பிரான்சின் குடியரசு தினம். பொதுவிடுமுறை நாள். ஆனால் எனக்கு மட்டும் சரியான வேலை. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே விடுமுறையானாலும் உணவு விடுதிகளி…

    • 19 replies
    • 6.4k views
  9. சாரதாஸ் இலவசம் ---------------------------- அவரை அங்கே பார்த்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. அவருக்கு அப்பொழுது 75 அல்லது 80 வயதுகள் இருக்கும். ஆனாலும் அவரில் என்றுமே வயது தெரிவதில்லை. நல்ல உயரமும், அவரின் திடகாத்திரமான நிமிர்ந்த உருவமும் என்றும் அப்படியே இருக்கின்றது. நான் மிகச் சிறுவனாக இருந்து போது அவர் கால்ப்பந்து விளையாடியதை பார்த்திருக்கின்றேன். பின்னர் நான் வளர்ந்து, ஓரிரு வருடங்கள் அவருக்கு எதிராக விளையாடியிருக்கின்றேன். அங்கிருந்த பல கழகங்களில் அவர் ஒரு கழகம், நான் வேறு ஒரு கழகம். என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். தனக்கு ஞாபகமில்லை என்று மிகவும் தயக்கத்துடன் சொன்னார். என் தந்தையை அவருக்கு ஞாபகம் இருந்தது. என்னைப் போல ஆயிரம் பேரை பார்த்திருப்பீர்கள் என…

  10. "திருந்தாத மனிதர்கள்" அது ஒரு காடை ஒட்டிய குக்கிராமம். அந்தக் குக்கிராமத்தில், வயல் வெளிகளுக்கு இடையில் அங்கு ஒன்று இங்கு ஒன்றாக நாற்பதோ, ஐம்பதோ வீடுகள் தான் இருந்தன. அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு சிறு கடையும், ஒரு சிறுவர் பாடசாலையும் ஒரு சிறு ஆலயமும் இருந்தன. உயர் வகுப்புக்கு கொஞ்சம் தள்ளித் தான் போகவேண்டும். அந்த ஆலயத்திற்கு பக்கத்திலும், வயலுக்கு, குளத்தில் இருந்து போகும் வாய்க்காலை ஒட்டியும், அந்த கிராமத்தில் கொஞ்சம் வசதியான ஒரு கல் வீடு இருந்தது. அங்கு மூன்று மகனுடனும், மூன்று மகளுடனும், ஒரு தலைமை குமாஸ்தா வாழ்ந்து வந்தார். அவருக்கு, அந்த கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்கு, ஓரளவு படித்தவரும், ஓரளவு செல்வந்தவரும் ஆவார். அவரின் குடும்பத்தில் முதல…

  11. Started by Innumoruvan,

    இவள் இப்போது சில மாதங்களாய் என் இருக்கைக்கு முன்னதாய் உள்ள இருக்கையில் புகையிரதத்தில் ஒவ்வொருநாளும் அமர்கிறாள். தமிழ் தான் சந்தேகமில்லை. ஏனோ இவளை எனக்குத் தெரிந்தது போன்று ஒரு உள்ளுணர்வு. எங்கே பாத்திருக்கிறேன்? ஞாபகமில்லை. எத்தனை தரம் எப்படி இருந்து யோசித்தும் ஞாபகமில்லை. தமிழ் பெண்ணென்றால் தெரியாத ஆம்பிளையளைப் பாத்தாச் சிரிக்கக்கூடாது என்று அம்மா சொல்லி வழர்த்திருப்பா போல. மாதக்கணக்காய் முன்னிருக்கையில் இருந்தும் ஒரு முறுவல் தன்னும் இன்னும் இல்லை. அதற்காக, நிழல் நிஜமாகிறது படத்தில வந்த சுமித்திரா அவளும் இல்லை, கமல் நானுமில்லை இது 1978ம் ஆண்டுமில்லை. பிள்ளைக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம். அவ்வளவு தான். இந்த மனிதன் என்ற விசயம் இருக்கே, இதில புரிந்ததைக் காட்டிலும் புரியா…

    • 29 replies
    • 2.3k views
  12. வேலை முடிந்து வழமையாக வீடு செல்லும் பாதையால் பராக்கு பாாத்த படி சென்று கொன்டிருந்த வாசனை வணக்கம் என்ற ஒரு பெண் குரல் இடை மறித்தது.நிமிர்ந்து பார்த்தவன் தானும் ஒரு வணக்கத்தை உதிர்த்து விட்டு நடையை தொடர்ந்தவனை உங்களோடை கொஞ்சம் கதைக்க வேணும் என்ற வாாத்தை தடுத்தது. நின்றவன் ஒரு கணம் தாறுமாறாய் குழம்பி தெளிந்தான் .அது வேறுயாரும் இல்லை அவனது நன்பன் கரனின் மனைவி தான்.குழப்பத்துக்கு காரணம் வழமையாக வணக்கத்துடன் போறவா இன்று கதைக்க வேணும் என்று சொன்னது தான்.தான் அவாகளிடம் கடணாக வாங்கிய பணம் ஞாபகம் வர தெளிந்தான். ஓம் சொல்லுங்கோ அக்கா என்றவன் தவனைசொல்வதற்க்குஅவசரமாக வசதியான திகதியை தேடிக்கொன்டிருந்தான்.வாசன் நீங்கள் அந்தக்காசை கரனிடம் கொடுக்க வேண்டாம் என்னிடம் தாங்கோ அதைய…

  13. "காதல் பரிசு" இலங்கையின் பரபரப்பான நகரமான கொழும்பில், நெடுங்குழலி என்ற தமிழ் பெண்ணும் அஜந்தா என்ற சிங்கள வாலிபனும் பக்கத்து பக்கத்து வீட்டில் மட்டக்குழி என்ற இடத்தில் வாழ்ந்து வந்தனர். நெடுங்குழலி உயர் வகுப்பில் தமிழ் மொழியிலும், அஜந்தா சிங்கள மொழியிலும் கல்வி கற்றுக்கொண்டு இருந்தாலும், இருவரும் தாராளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர்களாகவும் இருந்ததால், அவர்களுக்கிடையில் ஒரு நட்பு இலகுவாக எற்பட்டது. தங்கள் பாடங்களைப்பற்றி ஒருவருக்கொருவர் அலசுவதுடன் நாட்டு நடப்புகள் பற்றியும் விவாதிக்க தவறுவதில்லை. அவர்களுக் கிடையில் மலர்ந்த புரிந்துணர்வுகள் அவர்களின் சமூகம் வெவ்வேறாக இருந்தாலும், அவ்வற்றைத் தாண்டி, நாம் இலங்கையர் என்ற ஒரு குடையின் கீழ் பின்னிப்பிணைந்த…

  14. அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு “கவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார். “கத்தரிக்காயை நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு ‘கலகல’ எண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டு, ஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் …

  15. அமுதா.. எணேய் பிள்ளை எழும்பணை ராசாத்தி பள்ளிக்குடத்துக்குப் போகவேணுமெல்லே இன்னும் என்ன படுக்கை வேண்டிக்கிடக்கு, கெதியா எழும்பணை. ம்ம்ம்ஹ்ஹ்ம்ம்ம்.. காலங்காத்தாலையே புலம்ப ஆரம்பிச்சிட்டியேம்மா, போங்கோ போய் அப்பாவை வரச் சொல்லுங்கோ எப்ப உங்கண்டை முகத்திலை முழிச்சனான் இண்டைக்கு புதுசா எழும்ப .. அப்பாவை வரச்சொல்லணை. எத்தனை நாளைக்குத்தான் இப்படி அப்பா முகத்திலை முழிக்கப் போறியோ, குமரா விட்டாய் கலியாணம் கட்டி போற இடத்திலை என்ன பாடுபடப்போறியோ... என்னங்க, உங்கண்டை ஆசை மகள் கூப்பிடுறாள் போங்கோ நான் ஏதும் சாப்பாடு தேடவேணும், பாவம் அவள் பசி இருக்க மாட்டாள், அப்படியே உவன் மதனையும் எழுப்பி விடுங்கோ பள்ளிக்குடம் போற பஞ்சியிலை படுத்திருக்கிறான். கணபதிப்பிள்ளை,சரஸ்வதியின் மூத்த மகள் அ…

  16. உலகம் சுற்றும்.. குருவிகளுக்கு ஒரு திமிர் இருந்தது.. தமிழில "டிஸ்ரிங்சன் - (Distinction) எடுத்தது என்று. அந்தத் திமிரோட.. புலம்பெயர்நாடுகளில் ஆண்டு தோறும் நடக்கும் தமிழ் மொழி பொதுப்பரீட்சைக்கான ஆயத்தம் நடந்து கொண்டிருக்கிறது... அதில்.. ஆண்டு 7 பயிற்சி வினாக் கொத்து ஒன்று குருவிகளின் கண்ணில் பட அதைக் குருவிகள் கொத்தி பார்க்கத்துடிச்சுதுங்க.. சும்மா இல்ல..show off க்குத்தான்.. தமிழில.. படம் காட்ட. முதல் கேள்வியே.. ஈழத்தில் வன்னிப் பகுதி எத்தனை "பற்று"களாகப் பிரிக்கப்பட்டிருந்தது..??! போச்சே வடை போச்சே. டிஸ்ரிங்சன் கிழிஞ்சு போச்சு. சிங்களவன் டிசைன் பண்ணின தமிழைப் படிச்சிட்டு.. தமிழிலை டிஸ்ரிங்சனை எடுத்திட்டு... சோ காட்ட வெளிக்கிட்டா..தமிழன் டிசைன் பண்ணின பேப்பரில கவுண்…

  17. கொஞ்சம் மங்களான பொழுது சூரியன் அப்பொழுதுதான் குளக்கரையின் முடிவில் மீனுடன் பேசிக்கொண்டு இருந்தான் தலையில் கொஞ்ச விறகு கட்டைகளை சுமந்தபடி மணியக்கா வேகமா குளக்கட்டின் விளிம்பில் நடந்தபடி இருந்தார் .... மேச்சலுக்கு போன லட்சுமி வீடு வரமுன் போகவேணும் என்னும் வேகம் மட்டும் மணியக்கா கண்களில் குடிகொண்டுள்ளது தான் போக கொஞ்சம் சுணங்கினாலும் களனி தண்ணியை தட்டி ஊற்றி முற்றம் எல்லாம் சேறா ஆக்கி போடுவாள் என்று சேலை தலைப்பை இழுத்து செருகிக்கொண்டு நடந்தாள் மணி ... அந்த அந்திசாயும் பொழுதுதான் கண்ணனுக்கு பிடிச்ச பொழுது குளக்கரை ஆலமரம் எப்பொழுதும் தனியா வந்து இருத்து ரசிப்பது அவனுக்கு ரொம்ப பிடிக்கும் தனிமையில் இருக்கும் பொழுதுகளில் அவனின் சிந்தனை எல்லாம் எதிர்காலம் எப்படி அமையும் என்பதே .…

  18. காலை நாலரைக்கு அடிக்கும் முதல் விசில் கேட்பதுக்கு சந்தர்ப்பம் இல்லை நித்திரை அமுக்கி வைத்து இருக்கும் அதுக்கு பிறகு இரண்டாவது விசில் இரண்டுதரம் பறக்கும் திடுக்கிட்டு முழிச்சா அவன் அவன் இது என்ட இது உண்ட என்று இழுபாடு நடக்கும் பொழுது வெளிக்கும் வெளிச்சத்தில் இதால நாங்க எப்பவும் கலட்டி மடிச்சு தலைமாட்டுக்கு கீழவே வைத்து படுக்கிறது ..எழும்பின வேகத்தில் நித்திரை வெறியில் மாறி மாறி எடுத்துக்கொண்டு ஓடினா வரிசை கட்டி நின்று நம்பர் சொல்லிட்டு அவர் அவர் தங்கள் குழுக்களுடன் தங்களுக்கு கொடுத்த கிணத்தடிக்கு போனா வாளி சண்டை நடக்கும் சரி ஒருத்தன் குளிக்க பக்கத்தில நின்று குளிப்பம் என்றால் மற்றவன் காலுக இருப்பன் அங்கால போடா என்று வாளிய விட்டா அது கீழ உள்ளவன் தலையில விழும் ஐயோ என்று அவன்…

  19. காணாமல் போனவன் - சிறுகதை - தியா கதை சொல்லவா? (11)/ காணாமல் போனவன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்

    • 0 replies
    • 633 views
  20. இந்தக் கதை எனது ‘நெஞ்சில் நின்றவை’ பதிவுகளில் வெளிவந்ததுதான். கோபிசங்கர் எழுதியிருக்கும் ‘தண்டனையே குற்றம்’ https://yarl.com/forum3/topic/301723-தண்டனையே-குற்றம்-t-gobyshanger/ இந்த நினைவை எனக்கு மீண்டும் நினைவூட்டியிருக்கிறது 1968, ஒன்பதாவது வகுப்பு. இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு. அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள். இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்…

      • Haha
      • Thanks
      • Like
    • 6 replies
    • 482 views
  21. மீன்கொத்திப் பறவை மீன் கொத்தும் லாவகம் அவள் தேனீர் தயாரிப்பதில் இருக்கும். சிப்பந்தி வேலையென அவள் தன் வேலையினைக் கருதியதாய்த் தோன்றவில்லை. வீடு தேடி வந்தவரை உபசரிக்கும் பாங்கில் அந்தத் தேனீர்ச்சாலையில் அவள் நடந்துகொண்டாள். நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த காலத்தில் ஒரு நாள் எங்கள் காணிகளை நானே சென்று பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு நாட்டாமைக் குணம் எனக்குள் விளித்துக் கொள்ள வீட்டில் சொன்னேன். கொடுப்பிற்குள் பெருமை சிரிப்பாக அம்மா ஒரு தொழிலாளியுடன் என்னை அனுப்பி வைத்தாள். தென்னங்காணிக்குள் ஒளிந்திருந்த ஒரு துரவோரம் நின்ற காட்டுமரம் என்னைக் கட்டிப்போட்டது. அது என்ன மரமென்று தொழிலாளியிடம் கேட்க அவர் 'ஓம் தம்பி அது வெட்டோணும், நெடுக நினைக்கிறது நேரம் கிடைக்கிறதில…

    • 3 replies
    • 1.3k views
  22. சபீதா-சிறுகதை-சாத்திரி இம்மாத நடு இணைய சஞ்சிகையில் . இப்போதெல்லாம் வரும் தமிழ்ப்படங்களையோ செய்தி சனல்களையோ பார்ப்பதை விட நசினல் ஜியோ கிராபி சனலை பார்க்கலாம். அதை பதிவுசெய்யும் கமராமேன்களுக்குத்தான் உண்மையில் அவார்டு கொடுக்கவேண்டும். காலை எழுந்ததுமே தேநீரோடு கொஞ்சநேரம் ஜெயோ கிராபி சனலை பார்க்கத் தொடங்கி விடுவேன். அதுவும் சிறுத்தை ஒரு மிருகத்தை வேட்டையாட பதுங்கியபடி நடக்கும்போதே ஒரு அழகியின் நடையை பின்னிருந்து இரசிப்பது போல அதன் அசைவுகளை அங்கம் அங்கமாக இரசிக்கத் தொடக்கி விடுவேன். குறி தவறாமல் அது தன் இலக்கின் கழுத்தை பாய்ந்து கவ்வும்போதே நானும் பாய்ந்து டிவியை கவ்வாதகுறையே தவிர அந்த சிறுத்தையாகவே மாறி விட்டிருப்பேன். பொதுவாகவே …

    • 26 replies
    • 4.6k views
  23. "வேலைக்காரியின் திறமை" வேலைக்காரி என்ற சொல்லுக்கு நாம் பணிப்பெண், ஏவற்பெண் அல்லது தொழுத்தை இப்படி பலவிதமாக கூறினாலும் சிலவேளை அவள் ஒரு அடிமை போல நடத்தப்படுவதும் உண்டு. இது மலருக்கு நன்றாகத் தெரியும். அவள் சாதாரண வகுப்பில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது, தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில் இழந்துவிட்டாள். அவளுக்கு இரண்டு தம்பியும் இரண்டு தங்கையும் உண்டு. ஒரு சிறு குடிசையில், அப்பா, அம்மாவின் கூலி உழைப்பில் ஒருவாறு சமாளித்து குடும்பம் இன்றுவரை போய்க்கொண்டு இருந்தது. இந்த திடீர் சம்பவம், அவளுக்கு முழுப்பொறுப்பையும் சுமத்திவிட்டது. அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கூலி வேலைக்கு போகும் பக்குவம் அனுபவம் அவளுக்கு இன்னும் இல்லை என்றாலும், சமையல், த…

  24. அது பகலா அல்லது இரவா என்று வாணருக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும், யாழ்தேவியில் இருந்து பிள்ளைகள் வந்திருந்த படியால், அது பின்னேரம் என்று நினைத்துக்கொண்டார். அவர் ‘அடங்கிப்' போனார் என்று பரியாரியார் எல்லாருக்கும் சொல்லிக்கொண்டிருந்தது,வாணருக்குத் தெளிவாகக் கேட்டது. இந்த ‘அடக்கம்' வருவது அவருக்கு மூன்றாவது முறையாகும். அவருக்கு ஒரே ஒரு ஆம்பிளைப் பிள்ளையும், இரண்டு பொம்பிளைப்பிள்ளைகளும் உண்டு. எல்லாரும் கலியாணம் கட்டிப் பிள்ளை குட்டிகளோட கொழும்பில் தான சீவியம். .கண்கள் மூடிய நிலையில் இருந்தாலும், தனது உடல், பூவரசம் மரத்தால் செய்யப்பட்ட , தலைமாடும், கால்மாடும் இல்லாத ஒரு கட்டிலில் வளர்த்தப் பட்டிருப்பது அவருக்குத் தெரிந்தது. அத்துடன், அவரால் வெளியில் நடக்கும் சம்பவங்…

    • 27 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.