கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
662 topics in this forum
-
வயசு போகப்போக பக்தி முத்தி பரவச நிலையை அடைய துடிப்பது மனித இயல்பு .அது அடியேனை ஆட்டி படைக்க தொடங்கி சில அறிகுறிகள் தென்படவே என்னை அறியாமலே சில செயல்களை செய்ய தொடங்கினேன் .காலையில் எழுந்தவுடன் "முருகா நீயே முதல்வன் நீ இன்றி எதுவும் அசையாது" என கொஞ்சம் சத்தமாக சொல்ல பக்கத்தில படுத்திருந்த பெட்டர்காவ் "என்னப்பா ஆர் யூ ஆல்ரைட்" என கேட்க நானும் "ஓம் நமச்சிவாய எல்லாம் சிவமயம் "என கண்ணை மூடி கட்டிலில் அமேர்ந்தேன் திடுக்கிட்டு எழுந்து அருகில் வந்து " டொக்டரிட்ட போவமே ,குளிச்சு வெளிக்கிடுங்கோ நான் லீவு போட்டுவிட்டு கூட்டிகொண்டு போகிறேன்" "இப்ப ஏன் டொக்டரிட்ட உமக்கு விசரே" "எனக்கோ உங்களுக்கோ...." என ஆச்சரியதுடனும் பரிதாபமாகவும் பார்த்து கேட்டாள். " எம் பெருமா…
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
மாலை நேரச் சூரியன் மறையும் காட்சி அத்தனை அழகாய் இருந்தும் மதுவால் அதை இரசிக்க முடியவில்லை. பெரிய தோட்டத்துடனான வீடு. சமதரையாக இல்லாது மேடும் பள்ளமுமாக இருந்ததில் அதற்கேற்ற நிபுணர்களைக் கொண்டு காசைப் பார்க்காமல் வடிவமைத்ததில் எத்தனைத்தரம் பார்த்தாலும் சலிக்காத அழகுடன் அந்த வீட்டின் பின்பகுதியும் தோட்டமும் அழகாய் இருக்கும். வரும் நண்பர்கள் அதைப் பார்த்துப் பொறாமை கொண்டாலும்கூட வாய்விட்டு அதன் அழகைப் புழுகாமலும் போனதில்லை. நிபுணர்கள் ஒருதடவைதான் வந்து வடிவமைத்தார்கள். அதன்பின் அவளே சிலதை புதிதாக நட்டும் மாற்றியும் அமைத்திருக்கிறாள். ரோசாக் கன்றுகள் மட்டும் விவதவிதமாகப் பூத்துக் குலுங்குவதை எத்தனை தடவை பார்த்தாலும் யாருக்கும் சலிக்காது. மாதம் ஒரு தடவை ஒருவர் வந்து கத்த…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
முகத்தார் வீடு நாடகம் வாசித்ததில் இருந்து நானும் ஒன்று எழுத வேண்டும் என்று எண்ணினேன். அதுதான்........... சாத்தர் : முனியம்மா, முனியம்மா முனியம்மா : என்ன இழவுக்கு இப்பிடிக் கத்திறியள். எத்தின தரம் சொல்லிப் போட்டன் முனியம்மா எண்டு கூப்பிட வேண்டாம் எண்டு. நான் மினி எண்டு என்ர பேரை மாத்தி எவ்வளவு நாளாச்சு. சாத்தர் : நீ என்ன தான் மாத்தினாலும் எனக்கு நீ முனிதான். இன்னும் நீ வெளிக்கிடேல்லையே ? முனியம்மா : பொறுங்கோ வாறன் கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுக் கொண்டு வரவேண்டாமே. சாத்தர் : அதுசரி. என்ன கலியாணத்துக்கே போறம். கார் வாங்கப் போறமப்பா. முனியம்மா : கொஞ்சம் வடிவா வெளிக்கிட்டுப் போனால் என்னைப் பாத்திட்டாவது காசைக் கொஞ்சம் குறைச்சுசொல்லுவான். சாத்தர்: நீ அடிச்சிருக்…
-
-
- 44 replies
- 5.9k views
-
-
மாமா! மாமா! ஆரும் இல்லையோ வீட்டில...... ஓம் ஓம் நிற்கிறம் என்ன தம்பி? மாமா இல்லையா மாமி? இல்ல அவரு தோட்டத்துப்பக்கம் போயிருக்காரு ஓ அப்படியா வந்தால் சொல்லுங்க மகளுக்கு சாமத்திய கல்யாணம் வச்சிருக்கன் எல்லோரும் குடும்பத்தோட கட்டாயணம் வரணூம் வரச்சொல்லி சொல்லுங்க சரி அவரு வந்தால் சொல்லுறன் ம் உள்ள வாங்க வந்து தேத்தண்ணி குடிச்சிட்டு போங்க இல்ல மாமி ஆயிரம் வேலை கிடக்கு நான் வந்து போனத சொல்லுங்க மாமாகிட்ட சரி சொல்லுறன் தம்பி இஞ்சாருங்கோ உங்க மருமகன் இப்பதான் வந்து போகிறார் யாரு ? மதிமோகனா? ஓமோம் அவர்தான் என்னவாம் இஞ்சால பக்கம் காத்து அடிச்சிரிக்கி அவங்க எல்லோரும் நாட்டுக்கு வந்திருக்காங்களாம் பிள்ளைக்கு சாமத்திய வீடு செய்ய ஓ!!! அதுவா செய்தி ம் என்ன மாதிரி உங்க வீட்டுப்பக்கத…
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
2009 யுத்தம் முடிவுக்கு வருகிறது. அப்போது தமிழ் பிரதேசங்களில் கடமையாற்ற பொலிசில் சேருமாறு தமிழ் இளைஞர்,, யுவதிகளுக்கு இலங்கை முழுவதும் அழைப்பு விடுகிறது அரசாங்கம். தரம் 11 சாதாரண தரம் படித்தால் மட்டும் போதுமென அறிவித்தல் கொடுக்கிறது அரசு. யுத்தகாலத்தில் சுடுவதற்கு மட்டும் வெறும் 3 மாத காலம் பயிற்ச்சி கொடுத்தார்கள் அதில் அநேகமானவர்கள் ஊர்காவல்படையில் இருந்த முஸ்லீம்களும் , சிங்களவர்களுமே அதிகமாக இணைந்தார்கள் காரணம் சிலருக்கு சம்பளம் சிலருக்கு கட்டாயம் என பொலிசாராக இணைந்தார்கள். பொலிஸ் சேவையில் மிகுந்த ஆர்வமுள்ள எனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது ஆனால் வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை நான் பொலிசில் இணைய யாரும் விரும்பவில்லை. காரணம் இந்த அரசாங்கம் படைவீரர்களைக் கொண்டு தமிழ்…
-
- 27 replies
- 3.3k views
- 1 follower
-
-
அம்மாளாச்சி என்றவுடனை யாரோ என்ரை குஞ்சியம்மா இல்லாட்டி பாட்டி, பூட்டி என்று நினைச்சிட்டால் அதுக்கு நான் பொறுப்பில்லை. அகிலமெல்லாம் ஆழும் அகிலாண்டேஸ்வரி சிறீ முத்துமாரி அம்மன் தாங்கோ அவா. எனக்கு நினைவு தெரிந்த நாளிலை இருந்து ஆத்தா காலடிச் சந்நிதானம் படாத நாளே இருக்காது, அந்தளவுக்கு லிங் எமக்குள்ளை. கோயிலுக்குக் கிட்டத்தான் வீடு என்பதால் கோயில் மணிதான் எங்களுக்கு நேரம் காட்டும் கடிகாரம், ஏன் அலாரமும் கூட. எந்த மணி எத்தனை மணிக்கு அடிக்கும், எப்ப பூஜை தொடங்கும்,எப்ப முடியும், எப்ப பிரசாதம் குடுப்பங்கள் என்ற வரைக்கும் அத்துப்படி. நான் படிச்ச ஆரம்ப பாடசாலை,வீடு,கடை என்று எல்லாமே கோவிலை அண்டி இருந்ததால் மற்றவர்களை விட எமக்கு நெருக்கம் அதிகம். பத்து வயசிலையே அந்த …
-
-
- 39 replies
- 5.3k views
- 1 follower
-
-
சாயங்காலம் சாயும் நேரம் மின் விளக்குகளின் மிதமான வெளிச்சத்தில் குளித்தபடி மௌனமாய் தவமிருக்கும் தவசிபோல அமைதியும் அழகும் மிகுந்த தூய்மையுடன் தூங்கிக்கொண்டிருந்தது அந்த முதியோர் இல்லம். ஆடி ஓடி ஓய்ந்து தம் இறுதிக்காலத்தை அமைதியுடனும் ஆரோக்கியத்துடனும் கழிக்கும் அம் முதியவர்களின் முகங்களில் மிளிரும் புன்னகையையும் தாண்டி அவர்கள் மனங்களில ;;புதைந்து கிடக்கும் ஏக்கம் ஏமாற்றம், தனிமை, கழிந்த காலங்களின் நினைவுத் தடங்கள், என பல்வேறுபட்ட பரிமாணங்களையும் தாங்கி அங்கு பல இன, மத, மொழி, சார்ந்த பல குண இயல்புகள், கலாச்சாரங்கள், உணவுப் பழக்கங்கள், உடை வேறுபாடுகள், என்று பலதரப்பட்ட முதியவர்களும் அங்கு தங்கி இருந்தனர். அடிவானம் வெளுக்கும் அந்த விடிகாலைப் பொழுதில் வாகனத் தரிப்பிடத்தில் …
-
-
- 14 replies
- 2.3k views
-
-
அவளின் போண் மெதுவாக உறுமிக்கொண்டிருந்தது மகள் போண் அடிக்கிறது.... அவளுக்கு விளங்கவில்லை பாத்றூமில் இருந்தாள் போணூக்கு பதிலை வழங்க நான் எடுத்தேன் எதிரே உள்ளவர் பணத்தை உடனடியாக கட்டுங்கள் என்று கடும் தொனியில் எச்சரித்து போண் பண்ணுனா எடுக்க மாட்டீங்களோ? என அதட்டினார் . அதற்கிடையில் மகள் வந்து ஏன் அப்பா நீங்கள் போண் எடுத்த நீங்கள்? சும்மா இருக்க மாட்டீங்களா உங்கட போணா இல்லையே என்ற போண்தானே ஏன் நீங்க எடுத்த நீங்கள் என என்னை கோபமாக கேட்டாள். என்ன பிரச்சினையென நான் கேட்க மகள் ஒன்றுமில்லை என அவள்மழுப்புகிறாள் . ஒரு வயதுக்கு பிறகு முதுமை ஒன்றை விரும்பும் ஆனால் அந்த முதுமை விரும்புவதை நாம் வாழ முடியாமல் தங்கி வாழ்வது என்பது மிக கொடுமையாக இருக்கும் எதாவது செய்வதென்றால் கூட கூட…
-
- 28 replies
- 2.5k views
- 1 follower
-
-
பெரிய தொழில் நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருந்ததுதான் புரொசேகுயர் என்ற நிறுவனம் . யேர்மனியில் ஸ்ருட்கார்ட் நகரில் அமைந்திருந்த அந்த நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் நிலையங்களுக்கு சென்று அவர்களின் பணங்களைத் திரட்டி பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் தேவைக்கு ஏற்ப மீண்டும் வழங்கிக் கொண்டிருந்தது. அந்த நிறுவனத்தில்தான் மியர்னேசா வேலை செய்து கொண்டிருந்தாள். 42 வயதான மியர்னேசா தன்னை எப்பொழுதும் அழகாகக் காட்டிக் கொண்டாள்.. வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது அவள் விருப்பம். ஆனாலும் துணையின்றித் தனியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். 28 வயதான ரோபேர்ட் அவளைத் தேடி வந்த போது, அமைதியான நதியாக இருந்த அவளது வாழ்க்கையில் ஆனந்த அலைகள் எழ ஆரம்பித்தன. ஒரு மாலை நேரம…
-
- 2 replies
- 763 views
-
-
காணாமல் போனவன் - சிறுகதை - தியா கதை சொல்லவா? (11)/ காணாமல் போனவன்/ திரு தியா காண்டீபன் - எழுத்தாளர்
-
- 0 replies
- 650 views
-
-
அவர் என்னைக் கடந்து போகும் போது, அவரை எங்கேயோ பார்த்த ஞாபகம் வந்தது. நன்றாகத் தெரிந்த முகம் ஆனால் சட்டென்று அவர் யார், அவர் பெயர் என்ன என்பதை மூளை அறிவிக்க மறுத்து விட்டது. ஒருவேளை மூளைக்குத் தேவையான ஒட்சிசன் கிடைக்கவில்லை என்று அது கோவித்துக் கொண்டதா? தெரியவில்லை. தெரிந்த ஒருவரின் மாமியாரின் அடக்க நிகழ்வு. அங்கிருந்தவர்களில் பலரை எனக்குத் தெரியவில்லை. நாங்கள்தானே பார் எல்லாம் பரந்து வாழ்கிறோம். எந்த நாட்டில் எந்த ஊரில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று எப்படித் தெரியும். ஆனால் குறிப்பாக அவரை மட்டும் எனக்குத் தெரிந்திருக்கிறது. என்னைக் கடந்து போகும் போது அவர் என்னைப் பார்த்த பார்வையில் அவருக்கு என்னைத் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது. அவரிடம் போய், “நீங்கள் யார்…
-
- 13 replies
- 1.4k views
-
-
ஏமாற்றாதே ஏமாறாதே ? ரிங் ...டிங் டிங் .......ஹலோ....தம்பி மணியோ பேசுறது ...ஓம் அக்கா ...அங்க எத்தனை மணி ? ....விடியபுரம் 3.00 சொல்லக்கா என்ன விஷயம். அக்கா : நித்திரையை குழப்புகிறேன் என்று குறை நினைக்கதை . இவள் கடைக்குட்டி நிலாக்கு இரண்டு பிள்ளைகளாச்சு ரெண்டும் பெடடக் குட்டிகள். மருமோனுக்கும் முன்தினமாதிரி ..கமத்தில் வருமானம் இல்லை மழையும் பொய்த்து போயிற்று ...அது தான் மருமகனை ஒருக்கா கனடாவுக்கு எடுத்து விடுறியே ? மணி ..: அக்கா இப்ப முந் தினமாதிரி இல்லையக்கா சரியான காசு செலவு .எழுபது எண்பது கேட்க்கிறாங்கள். அதுவும் வந்து சேர்ந்தால் தான் சரி இல்லையேல் உல்ளதும்போச்சு. கப்பலில் தாண்ட கதை தெரியும் தானே. .அக்கா : எட…
-
- 4 replies
- 509 views
- 1 follower
-
-
சிங்கள அரசின் இனவழிப்பின் போது காணாமல் போனவர்களை மீள் கொணர்தல் என்று உறவுகள் நடாத்தும் போராட்டம் தீர்வுகள் கிடைக்காமல் நீண்டு கொண்டே போகிறது. சிறீலங்கா அரசாங்கம் நீதியைப் புறம் தள்ளி தனது அதிகாரத்தை முன்னெடுத்துத் தொடர்ந்தும் போக்குக் காட்டிக் கொண்டே இருக்கிறது. பிள்ளைகளுக்காகப் போராட்டம் நடத்தும் பெற்றோர்களில் பலர் இறந்தும் விட்டார்கள். சமீபத்தில் நான் வாசித்த யேர்மன் நாட்டுச் செய்தி ஒரு தந்தை நடத்திய போராடத்தைப் பற்றியதாக இருந்தது. யேர்மனியச் சட்டம் இப்படி இருக்கிறதா என என்னை ஆச்சரியப்பட வைத்தது. இறுதியாக ஒரு நல்ல முடிவு வரும் என்று நம்பிக்கையுடன் நாற்பது வருடங்களாக மோல்மன் காத்துக் கொண்டிருந்தார். 79 வயதான மோல்மனின் மகள் பிரடெரிக் அவளது 17வது …
-
- 1 reply
- 700 views
-
-
அந்த குதிரை கடை கடையாக போய் நிற்கின்றது உணவுக்கடை உரிமையாளர்கள் தங்களிடம் உள்ள மிஞ்சிய உணவுகளை கொடுக்கின்றனர் ...குதிரைக்கு பிரியமான உணவு கொள்ளு என்பது சின்ன வயசில எங்களுக்கு சொல்லி தந்தவையள் .ஆனால் இந்த குதிரை பசி காரணமாக எதையும் திண்ணும் .புலம் பெயர்ந்த டமிழனை போல..எங்களை தான் சொல்லுறன் ,புட்டு இடியப்பம் என்று காலை மாலை ஊரில் சாப்பிட்டு ஏப்பம் விட்டு கொண்டு திரிந்த நாங்கள் இப்ப பேர்கர்,நூடிள்ஸ்,ஸ்பகட்டி.பாஸ்டா என்று சாப்பிட்டு ஏப்பம் விடுற மாதிரி அந்த குதிரையும் கொள்ளு சாப்பிட்டுறதை மறந்து யாழ்ப்பாணத்தானின்ட பேக்கரியில் இருக்கும் பணீஸ்,கொத்து ரொட்டி,தோசை ,இட்லி எல்லாம் சாப்பிட்டு கொழுத்து சுப்பர் சரக்கு போல ஊரை சுற்றி கொண்டு தனக்கு ஏற்ற ஜோடியை தேடிக்கொண்டு இருந்தது.…
-
- 6 replies
- 1k views
- 1 follower
-
-
கோழியும் ஆமையும் - நிமிடக்கதை பங்குனி வெயில் உச்சியில் அறைந்தது. கடற்கரையை அண்டிய குடிலில் தொங்கிய கடகத்திலிருந்து பாய்ந்த கோழி கொக்கரித்தபடி நின்றது. தரையேறி முட்டைகளைப் பத்திரப்படுத்திவிட்டு அவ்வழியே நடந்து கொண்டிருந்த ஆமை நின்று கோழியைப் பார்த்தது. கோழி '' என்ன பார்க்கிறாய்,, என்று கேட்டது. ஆமையோ ''ஏனிந்தக் கலவரம்! என்றது. கோழி தான் முட்டை போட்ட சோம்பல் முறிக்க என்றது. ஆமையோ சிரித்துவிட்டு விரைந்து கடலோடு கலந்தது. நன்றி
-
- 6 replies
- 2k views
-
-
ஒவ்வொருவருடைய வாழ்விலும் சில சந்தர்ப்பங்கள், வாழ்வின் திருப்பு முனையாக அமைவது உண்டு . அந்த வகையில் சாதனா வாழ்க்கையிலும் ஒரு சம்பவம். பள்ளிப் படிப்பின் பத்தாம் ஆண்டு , முதற் தடவை ஓல் பரீட்ச்சை யில் எட்டுக்கு ஐந்து படங்கள் சித்தி எய்திய நிலையில் கணிதம் அவளுக்கு தோல்வியை தந்தது . பெற்றோரிடமும் ஆசிரியரிடமும் நன்றாக வாங்கி கட்டிக்க கொண்டாள் . " பராக்கு க்கு கூடிபோச்சு" "படிச்சு முன்னேறும் வழியை பாரு " " தோழிகள் சகவாசம் கூடிப்போச்சு" "தலை யலங்காரம் செய்யும் வேளை படித்தால் என்ன ? என சில நாகரிகமற்ற வசவுகள் . அவளை மேலும் கவலை யும் கண்டனங்களும் ஈட்டியாய் குத்தின.. அடுத்த கல்வி ஆண்டு ( ஏ எல்) வேறு பாடசாலை க்கு சக மாணவிகள் பாடசாலை மாற தயார…
-
- 5 replies
- 2k views
- 1 follower
-
-
அக்கினிக்குஞ்சு இணையத்தில் இம்மாதம் வெளியாகியிருந்தது . அந்த மேளச் சத்தத்தின் அதிர்வில் கண்விழிக்கிறார் தேவர். டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் டகு டகு டகு டகு டகு டகு டகு டகு டண் டண் டண் டண் டாடாண்டு டண் டண் டாடாண்டு டண் டண் பறை மேளத்துக்குச் சொல்லியிருக்கு எண்டல்லோ சொன்னவை. இதென்ன கர்ண கடூரமான ஒரு அடி. சத்தத்தைக் கேட்டால் பறை மேளச் சத்தம் போல இல்லையே. மெதுவாக யார் அடிக்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தார் தேவர். அதில் ஒன்றே ஒன்றுதான் பறை மேளம். மற்ற இரண்டும் வேறு வடிவத்தில் இந்தியாவில் கிந்திக் காரங்கள் அடிக்கிற மேளத்தின்ர வடிவில இருக்க, எல்லாமே இப்ப மாறிக்கொண்டேதான் வருகுது என்னைத் தவி…
-
- 17 replies
- 2.6k views
-
-
மரங்கள்.! (குறுங்கதை) பலாமரம் ஒன்று வேலிக்கு அப்பால் நின்ற புளியமரத்தை ஏளனமாகப் பார்த்து என்னைபோல் இனிமையான பழம் உன்னால் தரமுடியுமா என்றது. இதைக்கேட்ட புளிய மரம் இயற்கையோடு நாம் வாழ்ந்த காலத்தில் இப்படி எந்தமரமும் கேட்டதில்லையே என மனதுக்குள் யோசித்தது. பின் சிரித்துவிட்டு சொன்னது என்னைப் போல புளிக்கின்ற பழமும் உன்னாலும் கொடுக்க முடியாது.ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்குதென்று ஏற்றுக்கொள். பழங்களில் நீதான் பெரியவன் இனிப்பானவன் என்று எண்ணிக்கொண்டு பெருமை பேசாதே என்றது. மனிதர்கள் போல் உயர்வு தாழ்வு போட்டி பொறாமை இருக்கக் கூடாதென்று எட்டத்தில் நின்ற வேப்பமரம் பிசின் வடிய கத்தியது. எங்கள் காலம் என்ன ஆகுமோ என ஏங்கி அசைந்தன சுற்றிநின்ற சிறுமரக்கூட்டம்.மரபணு மாற…
-
- 0 replies
- 2.1k views
-
-
வழிப்போக்கன்..! ****************** வறுமையின் காரணமாக உலக சந்தையில் நாட்டை துண்டு துண்டாக்கி விற்றுக்கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.வந்த வழிப்போக்கன் கேட்டான் உள்ளுரில் ஒரு துண்டைக்கேட்டவர்களுக்கு கொடுத்திருந்தால் உங்களுக்கே உணவு தந்திருப்பார்களே! இந்தநிலை வந்திருக்காதே! என்றான்.மீசையில் மண் ஒட்டவில்லையென எழுந்த பெரியவர் அவர்களை வைத்துத்தான் ஆட்டமே நடக்குது என்றார். அரசமரத்தடியில் இருந்த புத்தபெருமான் இது எத்தனைநாளுக்கென்று சிரித்தார். உணவின்றி,உடையின்றி,எரிபொருளின்றி,நோய்க்கு மருந்தின்றி குழந்தைகளுக்கு மாப்பாலின்றி எத்தனை எத்தனை கொடுமைகளைப் புரிந்தும் வெண்றவர்கள் அவர்கள். அதுபற்றி உனதுமக்களும் புரிந்துகொள்ள இதுவொரு அரிய சந்தர்ப்பம்.கொடுத்திருக்கிறீர்களென வழி…
-
- 4 replies
- 1.7k views
-
-
ஸ்வேதா தன் இரண்டு வயதாகப் போகும் குழந்தை இழுத்த இழுப்புக்கு மறுப்பேதுமின்றி முன்னே இருந்த வரபேற்பறைக்கு நகர்ந்தாள். அங்கு மிக நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தன் விளையாட்டுப் பொருட்களைக் குழந்தை ஆழமாக ஊடுருவிப் பார்த்தது. அவற்றைப் பரபரவென விதம் விதமாக மாற்றியடுக்கி தன்னுடைய குழந்தை உலகை இன்னும் அழகாக்கி மகிழ்வடைந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு . பரசவத்தில் கைகளைக் கொட்டிச் சிரித்தது. ஸ்வேதா தன் மழலையின் உலகோடு தன்னை சேர்த்துக் கொள்ள முயன்று, தோற்றுப் போனவளாய் குழந்தைக்குப் பக்கத்தில் இருந்த கதிரையில் தன்னைச் சாய்த்துக் கொண்டாள். அன்று மதியம் தன் கணவனோடு நடந்த சம்பாசனையோடு அவள் மனசு தானாக ஒட்டிக்கொண்டது. "என்ர கார் திறப்பைக் கண்டன…
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
சைக்கிளும் நானும்.... அப்பா அரச உத்தியோகம், அவரிடம் ஒர் றலி சைக்கிள் இருந்தது அதில் தான் அவர் வேலைக்கு சென்று வருவார் .அந்த சைக்கிளில் தான் நான் சைக்கிள் ஒட கற்றுக்கொண்டது.அப்பா வேலையால் வந்தவுடன் வீட்டு சுவரின் சாத்திவிட்டு செல்வார் சைக்கிளுக்கு ஸ்டாண்டு வாங்கி பூட்டுவது வீண் செலவு என நினைத்திருக்கலாம் ...அவர் வைத்து விட்டு சென்றவுடன் வீட்டு முற்றத்தில உருட்டிக்கொண்டு திரிவேன் ,பிறகு பெடலில் காலை ஊண்டி ஒரு பக்கமாக ஒடி திரிந்தேன் ஒரு படி முன்னேறி பாருக்கு கீழே காலை போட்டு மற்ற பக்க பெடலை மிதிச்சு பலன்ஸ் பண்ணி அடுத்த காலையும் பெடலில் வைத்து ஓடதொடங்கி விட்டேன்.அந்த காலத்தில் ஆண்களின் சைக்கிள் தான் அதிகம் விற்பனையில் இருந்தது ,பெண்கள் சைக்கிள் யாழ் மாவட…
-
- 17 replies
- 2.3k views
-
-
வழமைபோலவே காலைக் கதிரவன் குதூகலத்துடன் தன் கதிர்பரப்பிப் பூமியின் வெப்பத்தை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டான். இரண்டு நாட்கள் பெய்த கடும் மழையில் நிலமும் மரங்கள் செடிகளும் மகிழ்வுடன் காலை வெய்யிலை வரவேற்றுக் குதூகலிக்க ஜீவாவின் மனம் மட்டும் மகிழ்விழந்து போர்களமாகி எதிரும் புதிருமான நிகழ்வுகளை அசைபோட்டு சலிப்படைந்திருந்தது. இனியும் நான் இப்படியே இருக்கமுடியாது. எனக்கும் ஒரு வாழ்வு இருக்கிறது. கானல் நீரை நம்பி எத்தனை நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் காத்திருப்பது?? பண்பாடு கலாச்சாரம் எல்லாம் முக்கியம் தான். ஆனால் அவற்றுக்காக என் வாழ்க்கையை நான் வாழாது ஏன் சமூகத்துக்குப் பயந்து காலத்தை வீணடிக்கவேண்டும். இப்பவே வயது முப்பதாகிவிட்டது அரைவாசி இளமையைத் தொலைத்தாகிவிட்டது. இனியும் அம்மா, அ…
-
- 22 replies
- 3k views
-
-
வணக்கம் உறவுகளே! என் பல வருடக் கனவு இது. இன அழிப்புப் போரில் நாங்கள் பட்ட இன்னல்களை எங்கள் இளந்தலைமுறைக்குச் சொல்ல ஏதாவது வழி உண்டா என்று தேடிய போது எனக்குத் தெரிந்த "கதைகூறல்" மொழியில் "எறிகணை" நாவலைப் படைத்துள்ளேன். இந்த இணைப்பில் சென்று நீங்கள் புத்தகத்தை எளிதாக வாங்க முடியும்! ஈழத்தில் உள்ள நண்பர்கள் பலர் கேட்டவாறு உள்ளார்கள். பொது முடக்கம் முடிந்ததும் விரைவில் அனுப்பி வைப்பதற்கான சூழ்நிலைகளைப் எதிர்பார்த்தவாறு உள்ளோம். வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் வகை: நாவல் ஆசிரியர் : தியா விலை.ரூ.180 "கொண்டாட்டமும் பண்பாடும் என வாழ்ந்த ஓர் ஈழக் குடும்பத்தைத் துரத்துகிறது ‘எறிகணை’! வழிநெடுகிலும் சிந்தப்படுகிற குருதியும், தொ…
-
- 33 replies
- 4.8k views
- 1 follower
-
-
கனடாவில் வாழும் கணபதியும் கந்தையாவும் அயல் வீட்டுக் காரர்கள் . க ந்தையர் அந்த வதிவிடத்தில் பத்து வருடங்களுக்கு மேல் வசிக்கிறார் . கணபதியார் இங்கு இடம் மாறி மூன்று வருடங்கள் இருக்கும். க ந்தையரும் மனைவியும் பென்சனியார். இரு மகன்மார் திருமணமாகி குழந்தைகளுடன் வேறு பகுதியில் வாழ்கின்றனர் . இடைக்கிடை கந்தையர் வீட்டில் அவர்கள் வந்து தங்குவர். சில சமயங்களில் பாட்டியுடன் சிறார்களை தங்க வைத்து பலசரக்கு கடை உடுப்புடவைக் கடை என சுற்றி விட்டு குழந்தைகளை அழைத்து செல்வர். கணபதி வீடு மாறி வந்த புதிதில் அச்சுற்றடலைப்பற்றி கந்தையர் தாமாகவே முன்வந்து பேசுவார். இருவரும் காணும் பொது ஹை பை சொல்லிக் கொள்வர் . கணபதி புல் வெட்டும் போது க ந்தையர் கார் தரிக்கும் இடத…
-
- 2 replies
- 1.2k views
-
-
திறமைகள்..! ********** ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு திறமையுண்டு-மனிதா உன் திறமை எங்கே? கசக்கினால் இறக்கும் கறையான்கூட அதன் உமிழ்நீரில் மண்குழைத்து அடுக்குமாடி கட்டி அதற்குள் வாழுது புற்றெனும் வீட்டில். ஓரிடத்தில் இருந்தே வலை பரப்பி வீடு கட்டி வந்து விழும் உணவை உண்டு உயிர்வாழும் சிலந்தி. உயரத்தில் இருந்தும் ஒழுகாமல் தேனை அறைகட்டி சேமிக்கும் தேனி. அலகால் தும்பெடுத்து அந்தரத்தில் கூடமைத்து உள்ளே குஞ்சு பொரித்து உயி வாழும் தூக்கணாம் குருவி. சுறு சுறுப்பாக எழுந்து வரிசைகட்டி வாழ்வதற்காக உணவெடுத்த…
-
- 1 reply
- 2k views
-