நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
உமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’ (நூல் நயப்பு - கானா பிரபா) pro Created: 04 October 2018 போர் உச்சம் பெற்ற எண்பத்து மூன்றாம் ஆண்டுக்குப் பின்னதான கால கட்டம் என்பதை எழுதப் போனால் ஈழத்துச் சனங்களின் இரத்த வாடையைத் தொடாது கடக்க முடியாது. எனக்கும் இந்த மாதிரியான அனுபவங்கள் வாய்த்திருந்தாலும் 95 ஆம் ஆண்டுக்குப் பின்னான நேரடிக் கள அனுபவம் இல்லை. என்னைப் போலவே இந்தப் போர்க்கால வாழ்வியல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் ஒரு குறித்த கால எல்லையோடு நின்று தான் எழுதிப் போந்திருக்கிறார்கள். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில், இந்திய இராணுவம் ஈழத்தில் நிலை கொண்டிருந்த காலத்தில் இருந்து 2009 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றாதாகக் கருதும் இறுதி யுத்தம் வரையான போர்க் கா…
-
- 1 reply
- 1.4k views
-
-
உயிரணை மனதைத்தொட்ட ஒருநாவல். (வாசகர் சூரியன் எழுதிய உயிரணை பற்றிய கருத்து) ------------------------------------------------------------- உயிரணை நாவல் என் கைகளுக்கு கிடைத்தது. வாசிக்க ஆரம்பித்ததில் இருந்து இடைநிறுத்த மனமில்லாது முழுமையாக படித்துவிட்டே புத்தகத்தை கீழே வைக்க முடிந்தது. இந்தப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன்பிருந்த எனது போராளிகள் பற்றிய , போராட்டம் பற்றிய எண்ணவோட்டம் வாசித்து முடிந்ததும் முற்றிலுமாய் மாறியிருந்தது. ஏதோ இனம்புரியாத ஓர் உணர்வுச் சுழலுக்குள் நான் சிக்குண்டு தவிப்பது போல உணர்கிறேன். ஓரு போராளியின் கதை. அவன் போராளியாய் களமுனைகளில் தனது பணிகளை ஆரம்பிப்பது , அவனது வளர்ச்சி எவ்விதமாய் நாட்டிற்கு உழைத்தான் , இறுதியில் என்னவானான் என நகர…
-
- 7 replies
- 1.8k views
-
-
நூல் வெளியீடு அரங்கம் ஒன்று நிகழ்வு மூன்று நட்புள்ள யாழ் களஉறவுகளுக்கு, இளைஞனின் அன்பான அழைப்பு இது. வரும் ஓகஸ்ட் மாதம் 27ம் திகதி சனிக்கிழமை அன்று இலண்டன் மாநகரில் எனது முதலாவது கவிதைத் தொகுப்பான "உராய்வு" வெளியிடப்பட இருக்கிறது. யாழ் களஉறவுகள் அனைவரையும் அந்நிகழ்விற்கு வருகைதந்து சிறப்பிக்குமாறு அழைக்கிறேன். நூல் வெளியீடு முதன்மை நிகழ்வாக இருந்தபோதிலும், ஆவணக்கண்காட்சியும், குறும்படக் காட்சியும் நடைபெற உள்ளது. ஆவணக்கண்காட்சியில் உலகநாடுகளின் முத்திரைகள், நாணயங்கள், பணத்தாள்கள் என பலதும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அதேபோல் குறும்பட நிகழ்வில் புதியதாக வெளியான ஒரு குறும்படமும் காண்பிக்கப்படவுள்ளது. "உராய்வு" கவிதைத் தொகுப்பிற்கென விசேடமாக அமைக்கப்ப…
-
- 318 replies
- 42.8k views
-
-
திரு. பழ. நெடுமாறன் அவர்களின் "உருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்" - இளங்கோ (இலண்டன்) அமரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பொருளாதார சுரண்டல்கள் தேசிய இனமக்களின் வாழ்வியல் நலன்களை அச்சுறுத்தி வரும் காலச் சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர் கொள்ளும் மற்றுமொரு பேரபாயம் இந்தியத் தேசியம் என்ற போர்வைக்குள் உருவாகிய இந்து பாசிசம். ஈழத்தில் சிங்கள பேரினவாதத்தால் தமிழர்களுக்குக் கொடுக்கப்பட்டது சாட்டையடி, அதன் வலியை தமிழர்கள் நேரடியாகவே நன்றாக உணர்ந்து கொண்டதால் தமிழீழ விடுதலைப்போர் தொடங்கியது. ஆனால் இந்துத்துவம் என்ற பெயரில் பார்ப்பனியம் செலுத்திய மயக்க ஊசி தமிழ் இனத்தின் பண்பாட்டு விழுமியங்களை வேரறுத்து தமிழர்களை நிரந்தர அடிமைகளாக்க முற…
-
- 49 replies
- 11.7k views
-
-
உரை அறிமுகவுரை -சுப. சோமசுந்தரம் எனது நண்பரும் ஆசானுமான ஆங்கிலப் பேராசிரியர் ச.தில்லைநாயகம் அவர்கள் திருக்குறளுக்குத் தமிழிலும் ஆங்கிலத்திலும் இயற்றிய உரையை என்.சி.பி.எச் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) அந்நூலுக்கான அறிமுக விழாவைத் தனது நெல்லை வி.மு.சத்திரம் கிளையில் நிகழ்த்தியது. அறிமுக உரையாற்ற எனக்கு அவர்கள் அளித்த வாய்ப்பு நான் ஈட்டியது என்றே சொல்ல வேண்டும். அவ்வுரையை எழுதும்போது பேரா.தில்லைநாயகம் அவர்கள் பத்துப் பத்து அதிகாரங்களாக எனக்கு அனுப்பி எனது கருத்தினை அளிக்க உரிமையோடு பணித்திருந்தார். நான் அளித்த கருத்துகளை சி…
-
- 0 replies
- 715 views
- 1 follower
-
-
-க. அகரன் இறுதி யுத்த காலத்தில், குடும்பத்தினருடன் இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்கள் சிலரது விவரங்கள் அடங்கிய நூல் ஒன்று, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், இன்று (01) வௌயிடப்பட்டது. சிறுவர் தினத்தை முன்னிட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரி, வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களால், வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (01) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, இந்த நூல் வெளியிடப்பட்டது. http://www.tamilmirror.lk/வன்னி/உறவுகளால்-நூல்-வெளியீடு/72-239430
-
- 0 replies
- 352 views
-
-
[size=4][/size] [size=4]ஜனனமும் மரணமும் நம் வாழ்வின் தொடர் நிகழ்வுகள். மரணம் பல சமயங்களில் நமக்கு ஒரு செய்தியாக மட்டும் நின்று விடுகிறது. ஆறு வயது குழந்தை இறந்த செய்திக்கு, அதன் பெற்றோரை நினைத்து வருந்துகிறோம். நாற்பது வயதில் ஒருவர் காலமான செய்தியைக் கேட்கும்போது, “கடங்காரன், அற்ப ஆயுளில் போய் விட்டானே!” என அவன் குடும்பத்தை நினைத்து ஒரு பெருமூச்சு. நன்றாக வாழ்ந்து 70 அல்லது 80 வயதில் இறந்த செய்திக்கு, கல்யாணச் சாவு என டிகிரி காபி சாப்பிட்டு நம் ஆற்றாமையைப் போக்கிக் கொள்கிறோம். [/size] [size=4]ஆனால் நமக்கு மிகவும் வேண்டப்பட்ட உறவினரோ அல்லது நெருங்கிய நண்பரோ மரணமடையும்போது அது செய்தியாக இருப்பதில்லை – நம் மனதைத் துயரம் புகையாய் சூழ்கிறது. அவர்களின் நினைவுகள்…
-
- 0 replies
- 679 views
-
-
உலக அரசியலை புரட்டிப் போடுமா ஒபாமா எழுதிய புறொமிஸ் லான்ட் நூல் 3 மில்லியன் பிரதிகள் விற்பனைக்கு -அ.நிக்ஸன்- அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) புறொமிஸ் லான்ட் (A.Promised Land) (வாக்குறுதியளிக்கப்பட்ட பூமி) என்ற அமெரிக்க ஆட்சி பற்றிய நூல் ஒன்றை எழுத்தியுள்ளர். இந்நூல் எதிர்வரும் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வோஷிங்கடன் டிசி நகரில் வெளியிடப்படவுள்ளது. 17ஆம் திகதி ஒபாமாவின் 58ஆவது பிறந்த நாளாகும். பிறந்த நாள் அன்று மூன்று மில்லியன் நூல்கள் விற்பனை செய்யப்படுமென நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு தொகுதிகளாக வெளியிடப்படவுள்ள இந்த நூலில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட அரசியல், பொ…
-
- 2 replies
- 725 views
-
-
உலகம் - நூல் அறிமுகம் தமிழ்ச் சமூகத்தின் மீதான உலகமயத்தின் தாக்குதல்கள், தமிழ்ப் பண்பாட்டின் மீதான நுகர்வியப் பண்பாட்டின் தாக்கங்கள், உலகப் பொருளாதாரம், உணவுப் பஞ்சம், தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வெளியீடு: பன்மைவெளி, | தஞ்சை | | பக்கங்கள்: 112 | விலை: ரூ.60 | கிடைக்குமிடம்: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 44-1, பசனை கோயில் தெரு,முத்துரங்கம் சாலை, தியாகராயர் நகர், சென்னை-17. http://www.arunabharathi.blogspot.com/
-
- 0 replies
- 799 views
-
-
இந்த நூற்றாண்டில் மேற்கொண்ட மிகப் பெரிய வாதை என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் உள்ளத்தில் உள்ள தேசப் பற்றை அழிக்கும் நோக்கில் மேற்கொண்ட வாதையே என்று கவிஞர் தீபச்செல்வன் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி வெற்றிச்செல்வியின் பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ் உரை வருமாறு, ஒடுக்கப்பட்ட ஈழ நிலத்தினுடைய, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, 18 ஆண்டுகள் ஓய்வின்றிப் போராடிய, தன் வாழ்வின் பெரும் பகுதியை போராட்டத்துடன் கழித்த முக்கியமான போராளிகளில் ஒருவராக வெற்றிச்செல்வி அக்காவினுடைய ஆறிப்போன காயங்களின் வலி என்ற நூல் வெளியீட்டு …
-
- 0 replies
- 601 views
-
-
ஊடகக் கறையான்கள் ஜெயமோகன் தமிழில் ஆனந்தவிகடன் வழியாகவே கேளிக்கை இதழ் x இலக்கிய இதழ் என்னும்வேறுபாடு உருவானது. அதைப் பழித்தும் இழித்தும் உரைப்பது சென்றகாலத்தில்சிற்றிதழ்களில் ஒரு மரபாக இருந்தது. ஆனால் நான் ஒரு சமூகப்பரிணாமநோக்கில் அவை இன்றியமையாத நிகழ்வுகள் என்றே அணுகிவந்தேன், அதையேஎழுதியிருக்கிறேன். சென்றநூற்றாண்டின் தொடக்கத்தில் கல்வி மிகச்சிறுபான்மைக்குரியதாகஇருந்தது. ஆகவே இலக்கியமும், கருத்துச்செயல்பாடும் அவ்வண்ணமே நீடித்தன. அக்காலகட்டத்தில் உருவான செய்தி இதழ்களும் இலக்கிய இதழ்களும்அறிவுப்பரிமாற்றத்தை மட்டுமே இலக்காகக் கொண்டவை, ஆகவே சிறியவட்டத்திற்குள் புழங்கியவை. அவை வாசக அளவால் சிற்றிதழ்கள். அன்றையஅச்சுமுறையும், வினியோக அமைப்புகள் விரிவாக இ…
-
- 0 replies
- 852 views
-
-
ஊடகவியலாளர் நடேசனின்... நினைவேந்தலும் , நூல் வெளியீடும்! யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் நாட்டுப்பற்றாளர் ஜயாத்துரை நடேசன் 18வது நினைவேந்தலும் நூல் வெளியீடும் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. நாவலர் கலாச்சார மண்டபம்,பிப3.30 மணிக்கு யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன்,தலைமையில் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. அந்நிகழ்வில் நடேசன் தொடர்பில் அவருடன் ஊடகப்பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள்,செயற்பாட்டாளர்களென பலரது நினைவுகூரலுடன் வெளிவந்துள்ள நூல் அறிமுகமும் வெளியீடும் நடைபெறவுள்ளது. அதேவேளை “நடேசனின் ஊடகத்துறை பயணம்” தொடர்பிலான நினைவுரைகளுடன் ஞாபகார்த்த நினைவுப்பேரூரையினை யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கோசலை மதன்…
-
- 0 replies
- 416 views
-
-
ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் -நூல் அறிமுக விழா : February 10, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஊடகவியலாளர் பி.மாணிக்கவாசகம் எழுதிய கால அதிர்வுகள் நூல் நேற்று சனிக்கிழமை 9 ஆம் திகதி காலை மன்னாரில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் நகர மண்டபத்தில் அந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் எஸ்.ஜே.நிக்சன் குரூஸ் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் சர்வமத தலைவர்கள் கலந்து கொண்டதோடு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலனும்; விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் …
-
- 0 replies
- 603 views
-
-
ஊதாநிறச் செம்பருத்தி (Purple Hibiscus) - நாவல் அறிமுகம் ஒரு மெல்லிய நீரோடை போல துவங்கும் இந்த நாவல் அதனுள் இத்தனை அழுத்தமான ஆணாதிக்கத்தை அம்பலப்படுத்தும் கருத்தினை வைத்திருக்கும் என படிக்க துவங்கும்போது யாரும் உணர்ந்திட மாட்டார்கள். நைஜீரிய எழுத்தாளர் 'சிமாமந்தா எங்கோசி அடிச்சி' எழுதியுள்ள 'ஊதாநிறச் செம்பருத்தி' அது வெளியாகிய 2003-ம் காலப்பகுதியிலேயே பெரும் கவனம் பெற்றது. அரசியல் ஸ்திரதன்மையற்ற நைஜிரியாவில் நிகழ்கிறது கதை. தாய்,தந்தை, நாயகி, அவளுக்கொரு அண்ணன் என சின்னஞ்சிறு பணக்கார கத்தோலிக்க குடும்பம். தீவிர மதப்பற்றுள்ள அப்பா. அவர் மீது பயமும் மரியாதையும் கொண்டு பார்க்கும் போதெல்லாம் நடுங்குகிறது அந்த குடும்பம். ஆனால் அப்பாவிற்கோ கடவுளின் மீத…
-
- 0 replies
- 634 views
-
-
ஊழல், உளவு, அரசியல் சங்கர் எழுதிய ‘ஊழல் – உளவு – அரசியல்’ நூலை வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற சுவாரசியத்துடன் ஏறத்தாழ ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது புனைவு அல்ல. மூர்க்கமான அரசு இயந்திரத்துடன் மோதி ஜெயித்த ஒரு சாமானியன் எதிர்கொண்ட திகிலும் பயங்கரமும் கொண்ட அனுபவங்களின் தொகுப்பு. அரசு இயந்திரத்தின் ஒரு உதிரியே அந்த இயந்திரத்தின் மோசடியை வெளிப்படுத்தத் துணிந்த துணிச்சலும் நேர்மையும் இந்த நூலின் பக்கங்களில் பதிவாகியுள்ளன. தந்தையின் மறைவு காரணமாக 16 வயதிலேயே அரசுப் பணியில் இணையும் சங்கர், ஒரு விடலை இளைஞனின் அப்பாவித்தனமான பார்வையில் வ…
-
- 2 replies
- 927 views
- 1 follower
-
-
-
- 55 replies
- 10.3k views
-
-
எங்கிட்ட ஒரு காசிருக்கு அபிலாஷ் சந்திரன் சின்ன வயதில் என் அப்பா அடிக்கடி ஒரு நாட்டுப்புற கதை சொல்வார். ஒரு குருவிக் கதை. அதை அண்ணாத்துரை ஒரு மேடையில் சொன்னதாக கூறுவார். ரொம்ப நகைச்சுவையான அட்டகாசமான கதை. கதை இப்படி போகிறது. ஒரு ராஜாவும் அவர் மந்திரியும் வேட்டைக்கு வனத்துக்கு போகிறார்கள். வேட்டை முடித்து இருவருமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு குருவி இவ்வாறு பாடுவது கேட்கிறது: “என் கிட்ட ஒரு காசிருக்கு யாருக்கு வேணும் யாருக்கேனும் தேவையிருந்தா வாங்கிட்டு போங்கோ” முதலில் ராஜா இந்த பாடலை ஆர்வமாய் கேட்கிறார். பாவம் குருவி ஒரு காசை வைத்துக் கொண்டு என்ன பாடு பட்டு பாடுகிறது என யோசிக்கிறார். ஆனால் குருவி ரிப்பீட்டில் பாடிக் கொண்…
-
- 3 replies
- 1k views
-
-
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று 'ச்சூ' கொட்டுகிறோம். அந்த குடும்பம் எப்படி, ஏன் வாழ்ந்தது? எங்கே சறுக்கி கெட்டது? என்று யாராவது யோசித்திருக்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தான் உண்மை புரியும். கிடைத்த வாய்ப்பை எண்ணி சிலாகித்து அந்த குடும்பத்தின் அப்போதைய உறுப்பினர்கள் திருப்திபட்டு இருப்பார்கள். அடுத்த வாய்ப்புக்கான தேடல் குறித்து சிந்தனை ஏதும் அவர்களுக்கு இருந்திருக்காது. புதிய மாற்றங்களுக்கான இடைவிடா தேடுதல் தான் அடுத்தக்கட்ட நகர்வுக்கு வழிவகுக்கும். மாற்றம், தேடுதல் குறித்து நகைச்சுவையாக, எளியமொழியில் அலசுகிறது ‘எங்கே போனது என் அல்வா துண்டு' என்ற புத்தகம். ஒரு இனிப்புக்கடையில் நான்கு ஜீவராசிகள் வாழுகிறது, வாசு - அரி என்ற இரண்டு எலிகளும், அச்சுபிச்சு - விவேக் என்ற இரண…
-
- 0 replies
- 1.6k views
-
-
மீனா’ தெலுங்குப் படத்துக்கும் தமிழ் நாவல் உலகில் எண்டமூரி விரேந்திரநாத் பெயரில் நடந்த மோசடிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்டமூரி விரேந்திரநாத்? ஆம். 70 - 80 - 90ஸ் கிட்ஸின் ஹாட் கேக். 1980களில் தமிழ் வெகுஜன தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். ‘துளசி தளம்’, ‘மீண்டும் துளசி’ ஆகிய எண்டமூரி விரேந்திரநாத்தின் நாவல்கள் சுசீலா கனகதுர்க்காவின் மொழிபெயர்ப்பில் தமிழகத்தில் வெளியாகி பெரும் அதிர்வை ஏற்படுத்தின. இவ்விரு நாவல்களின் வெற்றியை தொடர்ந்து எண்டமூரி வீரேந்திரநாத் எழுதிய பல நாவல்கள் தமிழ் வார இதழ்களில் தொடர்கதைகளாகவும் நேரடி நாவல்களாகவும் வெளிவந்தன. லெண்டிங் லைப்ரரியில் தவறாமல் இடம்பெற்று வாசகர்களின் ஆதரவை பெற்றன. அப்படி வெள…
-
- 12 replies
- 7.3k views
-
-
எதிர்வினை - காயப்படுத்தும் கத்திகள் கருணாகரன் “நஞ்சுண்டகாடு“ நாவலைப்பற்றி எழுதும் இரவி அருணாசலம் அந்த நாவலுக்கு அப்பால், அதனுடைய விமர்சனத்துக்கு அப்பால், அந்த நாவலை எழுதிய குணா கவியழகனைப் பற்றிய தவறான புரிதல்களையும் எழுதியிருக்கிறார். முகநூலிலும் இணையத்திலும் பிற ஊடகங்களிலும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இழைத்து வருகின்ற வழமையான தவறு இது. போதாக்குறைக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றை முன்வைக்கும்முறை போன்றன மிகவும் தரந்தாழ்ந்தவையாகவும் அமைந்து விடுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், படைப்பைப் பார்ப்பதையும் விட, படைப்பாளியையும் படைப்பாளியின் அரசியலையும் அவருடைய பின்புலங்களையுமே இவர்கள் அதிகமும் நோக்குகிறார்கள். படைப்பையும் விட படைப்பாளியின் பின்புல…
-
- 0 replies
- 695 views
-
-
யாழை கொஞ்சம் சூடு பிடிக்க வைப்பம் என்று தான் இந்த தலைப்பு. (ஏதோ யாழுக்கு என்னாலான உதவி). வாசக பெருமக்களே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் இனிமேலே இவருடைய எழுத்துக்களை படிப்பதில்லை. அல்லது இவரது எழுத்துக்கள் எனக்கு பிடிப்பதில்லை என்று நினைத்தால் அந்த எழுத்தாளரையும் உங்கள் விளக்கத்துக்கான காரணத்தையும் குறிப்பிட்டால் ஒரு சூடான விவாதம் ரெடி. முக்கியமா யாழ் கள உறுப்பினர் பெயர்களை குறிப்பிடாதீங்கள். (தனி மனித தாக்குதல் இந்த திரியில் தடை செய்யபட்டுள்ளது) சரி நானே தொடக்கி வைக்கிறேன். எனக்கு ரமணிச்சந்திரனின் எழுத்துக்கள் பிடிப்பதில்லை. ஆரம்பத்தில் விரும்பி படித்தாலும். போக போக ஒரே மாதிரி எழுதி சலிப்படைய வைத்துவிட்டார். என்ன சண்டையில் ஆரம்பிக்கும் எதிரும் எதிர…
-
- 10 replies
- 1.1k views
-
-
வணக்கம் அனைவருக்கும் யாழில் எழுதும் அதிகமானோர் கதை,அரசியல்,ஆன்மிகப் புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு உடையவராக இருப்பீர்கள்...உங்களுக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் யார்...எதனாலே உங்களுக்கு அந்த எழுத்தாளாரைப் பிடிக்கும்...அந்த எழுத்தாளர் எழுதிய எந்த நாவல் உங்களை அதிகம் கவர்ந்தது என எழுதுங்கள்...நான் அநேகமாக எல்லோருடைய நாவல்களையும் விரும்பி வாசிப்பேன்...நான் எங்கு சென்றாலும் என்னுடைய முதல் தெரிவு புத்தகம் வாங்குவதாகத் தான் இருக்கும்... நான் விரும்பும் நாவல்களில் நாவலோட்டம் விரைவாக செல்லக் கூடியதாக இருக்க வேண்டும்...வித்தியாசமாக கதைகளை அதாவது குடும்பக்கதை,க்ரைம்,சமூக,விஞ்ஞானம் எல்லாவற்றையும் எழுத தெரிந்தவர்கள் தான் எனது முதல் தேர்வு...அந்த வகையில் எனக்குப் பிடித்த முதலாவது எழு…
-
- 152 replies
- 25.7k views
-
-
எனக்குப் பிடித்த சில புத்தகங்கள் - 2020 இளங்கோ-டிசே (1) அற்றவைகளால் நிரம்பியவள் - பிரியா விஜயராகவன் (நாவல்) பிரியா இதை 2008/2009 காலங்களில் எழுதத் தொடங்கியபோது, யார் இவர் இவ்வளவு சுவாரசியமாக எழுதுகின்றாரே என ஒவ்வொரு அத்தியாயங்களையும் 'காட்சி' வலைப்பதிவில் வாசித்திருக்கின்றேன். அங்கே இந்த நாவல் இடைநடுவில் நின்றுபோனாலும், யார் இந்த யமுனா என்று (அப்போது யமுனா ராகவன் என்று புனைபெயரில் எழுதியிருந்தார்; அது அவரின் அம்மாவினதும் அப்பாவினதும் பெயர்களை இணைத்து வந்த புனைபெயர்) தேடியிருக்கின்றேன். அப்படி அவர் யாரெனத்தேடி அக்காலத்தில் அவர் இங்கிலாந்தில் இருக்கின்றார் என்பதையும் நானாகவே தேடிக் கண்டுபிடித்தேன். அது ஒரு வாசகர் தனக்குப் பிடித்த எழுத்தாளரைத் தே…
-
- 0 replies
- 587 views
-
-
நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும். வெளியிலிருந்து ஊடகவியலாளர்கள் வன்னிக்குள் வருவதை இல…
-
- 2 replies
- 2.1k views
-
-
அனைத்து யாழ் உறவுகளையும் அன்புடன் அழைக்கிறேன்
-
- 24 replies
- 2.9k views
- 1 follower
-