மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சங்கரநயினார் கோவில் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை
-
- 45 replies
- 7.1k views
-
-
கீர்த்தனைகளை இயற்றிய தியாகையரின் சமகாலத்தவரான கோபால கிருஷ்ண பாரதியார் பற்றி மகா மகோபாத்தியாய உ. வே. சாமிநாத அய்யரவர்கள் ஒரு நூல் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சில பகுதிகளை அப்படியே தருகிறேன்: 'சிதம்பரத்தில் இருக்குங்கால் கோபால கிருஷ்ண பாரதியார் நடராஜர் ஆலயம் சென்று, பொன்னம்பலத்துக்குத் தெற்கேயுள்ளதும், கிழக்கு நோக்கி ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி எழுந்தருளியிருப்பதுமாகிய நிருத்த சபையின் வெளி மண்டபத்தில் ஜபம் செய்வார். சில சமயங்களில் அதன் தெற்குச் சுவர் ஓரமாக உள்ள நந்தனார் உருவத்துக்கு அருகில் இருந்து பாடிக்கொண்டிருப்பார். நடராஜ மூர்த்திக்கு நேரே அம்மூர்த்தியைத் தரிசித்த வண்ணமாக அத்திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வுருவத்தின் கையில் கடப்பாரையும், தோ…
-
- 43 replies
- 8.6k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களின் திருத்தொண்டர் புராணம் யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் கத்தியரூபமாக செய்தது முதலாவது தில்லைவாழந்தணர் சருக்கம் தில்லைவாழந்தணர் புராணம் ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவு மாகிச் சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப் பேதியா வேக மாகிப் பெண்ணுமா யாணுமாகிப் போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி கற்பனை கடந்த சோதி கருணையே யுருவமாகி யற்புதத் கோலநீடி யருமறைச் சிரத்தின் மேலாஞ் சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்து ணின்று பொற்புட னடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி போற்றிநீ டில்லை வாழந் தணர்திறம் புகல லுற்றே னீற்றினா னிறைந்த …
-
- 42 replies
- 9.7k views
-
-
மகாசயர் என்னும் மேற்கு வங்காள பள்ளி ஆசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணருடனான தனது சந்திப்புக்களை நாட்குறிப்பில் எழுதி வந்தார். அதன் தொகுப்பே ஸ்ரீ இராமகிருஷ்ணரின் அமுத மொழிகளாகும். இத்தொகுப்பு 19ம் நூற்றாண்டுக்கு உங்களை அழைத்துச் செல்லும். இப்பயணத்தில் தூய்மை, அமைதி , நம்பிக்கை, இறை அனுபவம் என்பவற்றை ஆத்மார்த்தமாக அனுபவித்துக் கொண்டு செல்லலாம். ----------------------------------------------------------------------------------------------------------------------------------------- குருவும் சீடரும் மாசி 1882 "ம" முதல் முறையாக குருவை சந்தித்தல் அது ஒரு இளவேனிற்கால ஞாயிற்றுக் கிழமை, ஸ்ரீ இராமகிரு…
-
- 42 replies
- 13.6k views
-
-
Stephen Hawking | Brief Answers to the Big Questions
-
- 40 replies
- 5.4k views
-
-
ச.சச்சிதானந்தம் “உலகமும் உயிரினமும் மனிதனும் கடவுளின் படைப்பு” என்பது கடவுள் கோட்பாட்டு மதங்கள் எல்லாவற்றினதும் கருத்து. ஆனால் பலகோடி ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உயிரினங்கள் தோன்றின என்பது அறிவியல் முடிவு. “ ஏன்” என்ற கேள்விக்கு சிந்தனை பகுத்தறிவு, ஆராய்ச்சி போன்ற வழிகள் மூலம் பெற்ற விடை அறிவியல் முடிவுக்கும், “ அப்படித்தான்” என்று அறியாமையின் விளைவான நம்பிக்கையில் உண்டான மதக் கருத்துக்கும் அடிப்படைகள் ஆகின்றன. மனிதக் குரங்கிலிருந்து வந்த காட்டு மனிதன் வேட்டையாடுவதும், உணவைத் தேடுவதுமாக வாழ்ந்து கொண்டிருந்தான். திறமையும், திட்டமிடுதலும் வேட்டையாடுவதற்கு வேண்டுவனவாக இருந்தன. அவன் தனது அனுபவத்தில் பெற்ற அறிவினால் ஆயுதங்களையும், சிறு கருவிகளையும் கண்டறிந்தான…
-
- 40 replies
- 8.3k views
-
-
2020; இந்த ஆண்டைப் பலர் சாபமான ஓர் ஆண்டாகவே நினைக்கிறோம். உலகளாவிய ரீதியில் சிறந்த ஆண்டாக இது அமையாவிட்டாலும், பலருக்கு இவ்வாண்டு ஓர் restart / reset / pause buttonகளாகவே அமைந்திருக்கிறது எனக் கூறலாம்; எதற்காக ஓடிக்கொண்டு இருக்கிறோம் எனத் தெரியாமல் ஓடியவர்களை நின்று நிதானமாகச் சிந்திக்கவும், ஓடும் நோக்கத்தை, பாதைகளை தமக்குகந்தவாறு மாற்றியமைக்கவும் உகந்த ஆண்டாக இந்த 2020அமைந்திருக்கிறது. இன்னும் பலருக்கு மறந்துபோன நம் கலை, கலாசார விழுமியங்களை, வாழ்க்கை முறைகளைத் தூசி தட்டி மீண்டும் அதிசய உணர்வோடும், ஆர்வத்தோடும் அனுபவித்தும், செயற்படுத்தியும் பார்க்கும் ஆண்டாக இது அமைந்திருக்கிறது; தாய்மண்ணை விட்டுப் பிரிந்த ஒருவர் மீண்டும் வந்து தாய்மண்ணின் வாசனையை குதூகலத்துடன் நு…
-
- 40 replies
- 3.9k views
-
-
தத்துவக் கதைகள் நகைச்சுவையாக மட்டுமல்ல, ஒரு வித கருத்தினையும் எம்மிடம் விட்டுச் செல்வன. அதை விடப் புத்திசாலித்தனமான சமாளிப்புக்கள் குறித்தும் நகைப்புக்குரியன. புராணக் கதைகள் என்பவையும், விளக்கத்துக்காக கொடுக்கப்பட்ட கதைகளாக இருக்க கூடும் என்பதே என் நம்பிக்கை! தெரிந்த தத்துவம் சார்ந்த கதைகளை இங்கே படையுங்கள்! ---------------------------------- ஒரு பெண், பரமகிஸ்ணரிடம் வந்து, "சுவாமியே, அன்று, இரணியனின் அட்டூழியங்களுக்காக, இறைவன் நரசிம்மா அவதாரம் எடுத்து வந்தாரே! ஏன் இன்று நிறைய இரணியன்கள் இருக்கின்றார்கள்! கடவுள் ஏன் வரவில்லை" என்று கேட்டார். அதற்கு பரம்மகிஸ்ணர் சொன்னார். " அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதனும் இல்லையே" என்று
-
- 40 replies
- 7.8k views
-
-
2006 இல் வெளிவந்த மிகவும் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்றாக The God Delusion இருக்கிறது. இதை எழுதியவர் பிரித்தானிய உயிரியிலாளரும் Oxford பல்கலைக்கழக பேராசிரியர் Richard Dawkins. மக்களிற்கு விஞ்ஞானத்தை விளங்கப்படுத்த வைக்கும் முயற்சிப் பிரிவின் தலைவராகவும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இருக்கிறார் (holder of the Charles Simonyi Chair for the Public Understanding of Science at the University of Oxford. Charles Simonyi என்பவர் மைக்குரோசொப்ற் நிறுவனத்தின் MS Office Application பிரிவை ஆரம்பித்து வெற்றிகரமாக அபிவிருத்தி செய்தவர்). கடவுள் என்னும் மாயை என்ற புத்தகத்தில் சொல்லப்படும் முக்கிய விடையங்களாக... Supernatural creator (எல்லாத்திற்கும் அப்பாற்பட்ட பரம்பொருள்?) என்…
-
- 39 replies
- 6.5k views
-
-
திருக்கைலாய யாத்திரை நான் இணையத்தில் வாசித்த நல்ல ஆன்மிகப் பயணக்கட்டுரை. இரண்டு பகுதிகளை இங்கே இனைத்துள்ளேன். பிடித்திருந்தால் சொல்லுங்கள் தொடர்ந்து இணைக்கின்றேன். நன்றி. நன்றி: நிகழ்காலத்தில் சிவா - http://www.arivhedeivam.com/
-
- 39 replies
- 19.5k views
-
-
வான்கலந்த மாணிக்கவாசகம் 01 பேராசிரியர் ந. கிருஷ்ணன் ‘மெய்யாகவே இறைவனிடம் அன்பு செலுத்துவதும் அவனை அடைவதும் எப்படி?’ என்று மனித உடலில் வாழும்போதே இறையனுபவம் பெற்ற மாணிக்கவாசகரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணம் தோன்றியது. மாணிக்கவாசகர் இறைவனுக்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தால் விடை கிடைக்கும் என்று தோன்றியது. நல்லவேளை, அத்தகைய கடிதங்களைத் தொகுத்துத் ‘திருவாசகம்’ என்றும், ‘திருக்கோவையார்’ என்றும் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு கடிதமாக வாசிக்கத் தொடங்கினேன். ஒரே புலம்பலாகத் தோன்றியது. பக்கங்கள் ஓடின. சரிப்பட்டுவராது என்று மனதில்பட்டது; மூடிவைத்துவிட்டேன். சரி, குத்துமதிப்பாக ஒரு பக்கத்தைத் திறப்போ…
-
- 39 replies
- 24.8k views
-
-
நான் படித்ததில் எனக்கு பிடித்ததை தந்துள்ளோன் உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கின்றேன் பிடித்தால் நன்றிகள் சுவாரசியமான துணுக்கு ஒன்று கையில் கிடைத்தது. அதை அப்படியே தருகின்றேன். சுவாமி விவோகனந்தரும் அவருடைய தோழியும் ஒரு நீச்சல்குளத்தின் படிக்கட்டில் அமர்ந்திருந்தனர்.அந்தபெண்மன
-
- 39 replies
- 12.6k views
-
-
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் உதயமானவர்களக்கு... சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் அக்கிரகம் போலவே உலகின் இயக்கத்தை தீர்மானிக்க வல்லவர்கள். வருங்கால தலைவர்கள் நீங்கள். உங்களது ஊக்கம் நிறைந்த செயற்பாடுகள் உங்களை மென்மேலும் வலுப்படுத்தவல்லது. சிறந்த ஆழுமை கொண்ட நீங்கள் எடுத்த கரியத்தில் தீவிரமான போக்கு உடையவர்களாக தென்படுவீர்கள். பணத்தை நீங்கள் தேடிச்செல்ல மாட்டீர்கள் பணம் உங்களைத் தேடி வரவேண்டுமென்றே நினைப்பீர்கள.; சிறுபிள்ளைகள் அழகியகாட்சிகள் உங்களை எளிதில் கவர்ந்துவிடவல்லன. சூரியனின் ஆதிக்கம் அதிகமாகவே இருப்பதால் உடலில் உஷ்ணம் சற்று அதிகமாகவே காணப்படும். இதனால் விரைவிலேயே கண்ணுக்கு கண்ணாடி அணியவேண்டிய தேவை ஏற்படலாம். தலைமுடி உதிர்வதற்கான வய்ப்பக்களும் நிறையவே உண்…
-
- 39 replies
- 10.3k views
-
-
நயினை நாகபூஷணி அம்மன் ஆலயக் கொடியேற்றம் வரலாற்று சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் 06ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணிக்கு, கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பதினாறு தினங்கள் தொடர்ந்து உற்சவங்கள் இடம்பெறவுள்ள நிலையில், 14ஆம் திகதி 108 சங்குகளால் அம்பாளுக்கு பாலாபிஷேகமும், 15ஆம் திகதி பகல் சிவபூiஐயுடன் இரவு திருமஞ்சத் திருவிழாவும், 16ஆம் திகதி பகல் விசேட கருட பூஜையும் இடம்பெறவுள்ளது. 18ஆம் திகதி இரவு சப்பறத் திருவிழாவும் மறுதினமான 19ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் 20ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் 21ஆம் திகதி மாலை தெப்போற்சவத்துடன் ஆலயத்தின…
-
- 38 replies
- 2.3k views
-
-
நீ பிறக்கும் போது அழுது கொண்டு பிறக்கிறாய். ஆனால் உலகம் உண்மை பார்த்து சந்தோசமடைகிறது. நீ இறக்கும்போது நீ சந்தோசமடைய வேண்டும். உலகம் உனக்காக அழவேண்டும். அப்படியான வாழ்க்கைதான் உண்மையான வாழ்க்கை. - ஒரு இந்தியன் A என்பது வாழ்க்கையின் வெற்றி என கருதினால் A = X + Y + Z X = உழைப்பு Y = பொழுதுபோக்கு Z = தேவைக்கு ஏற்ப கதைத்தல் - ஐன்ஸ் ரீன் இன்னொருவருக்காக நீ வாாழ்ந்தாலொழிய வாழ்க்கை என்பது பிரயோசனமானதல்ல. - ஐன்ஸ் ரீன் ஊடகங்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கு பல சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் ஊடகங்களிடமிருந்து மக்களை பாதுகாப்பதற்கு பயனுள்ள சட்டங்கள் எவையும் இல்லை. - மார்க் ருவெய்ன் 30 வயதுக்குட்பட்ட எவரும் லிபறல்களாக( புதியவற்றை விரும்புவார…
-
- 37 replies
- 7.8k views
-
-
அண்மையில் வெளியான...பெரியார்.. படம்.. பெரியார் போலவே...முரண்பாடுகளுடன்.... 1. ராமசாமியாகி நாயக்கர் ஆகிய பெரியாரின் பூர்வீகம் மறைக்கப்பட்டு ஈரோட்டுக்கே சொந்தமாக்கிக் காட்டி உள்ளார்கள். 2. நாயக்கர் என்ற சாதியக் கூறை தூக்கி எறிவதாகச் சொல்லும் பெரியார்.. ராமர் + சாமி என்பதை தூக்கி எறியாமலே கட்டிக்காத்திட்டத்தை சுயமரியாதைக்க அடக்கிட்டாங்க. 3. நாகம்மையின் தாலியைக் கழற்றியவர்.. தான் மட்டும் புலிப்பல்லுப் போட்ட சங்கிலி சகிதம்..நாகம்மைக்கு இடஞ்சல் இல்லாம இருக்க விரும்பாம.. சுயநலத்தோட இருக்கிறார். 4.பெண்களை சுயசிந்தனையின் வழி அறிவுபூர்வமா வழிநடத்தாம.. அவங்களை ஏமாளியாக் காட்டி ஏமாற்றுக் கதை சொல்லி.. ஏமாற்றி அவர்களில் மாற்றங்களை காட்டிறது பெண்களை ராமசாமி எந்தளவுக…
-
- 36 replies
- 7.4k views
-
-
அரோகரா கோஷத்துடன் நல்லூரானுக்கு கொடியேற்றம். வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ பெருவிழா இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்ற கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து 25 தினங்கள் நடைபெறும் திருவிழாவில் பத்தாம் நாள் (17.08.2016) மஞ்சந்திருவிழாவும் பதினெட்டாம் நாள் (24.08.2016) கார்த்திகை உற்சவமும் இருபதாம் நாள் (27.08.2016) காலை சந்தானகோபாலர் உற்சவம், மாலை கைலாசவாகனம் இருபத்தோராம் நாள் (28.08.2016) காலை கஜவல்லிமகாவல்லி உற்சவமும் மாலை வேல்விமானத் திருவிழாவும் இருபத்திரண்டாம் நாள் (29.08.2016) காலையில் தண்டாயுதபாணி உற்சவமும் …
-
- 36 replies
- 2.3k views
-
-
உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க நான் சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை -------------------------------------------------------------------------------- இ·தொரு பரந்த வுலகம். இதன் விசித்திரம் அளவிடற் கரியது. வெறுங் கண்ணுக்கே இ·த்ப்படியிருக்கிறது. அறிவுக்கண்கொண்டும் இதனை நோக்க்குக். இதனை விட்டுச் செல்ல மனமே வராது. அதனை அவ்விசித்திரம் அத்துணைக் கவரக் கூடியதா யிருக்கிறது. அவ்வியல்பினதாகிய இவ்வுலகம் ஒரு 1 காரியப் பொருளா? அல்லது ஒரு 2 முலப்பொருளேயா? (காரியப்பொருள் - செய்யப்பட்ட பொருள்.) மனிதன் அதனை யாராய்ந்தான். இவ்வுலகுக்குப் பல மூலப் பொருள்களுள, அவற்றிலிருந்து உண்டான…
-
- 35 replies
- 8k views
-
-
உ சிவமயம் திருச்சிற்றம்பலம் கடவுள் உண்டா, இல்லையா? ("சைவம்" 1917 டிசம்பர் மாத இதழில் இடம் பெற்ற கட்டுரை) உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யெ…
-
- 35 replies
- 5.4k views
-
-
இலங்கை பெளத்த நாடு என்பதே ஆட்சியாளர்களின் உச்சாடணம் என்பதால் பெளத்த மதத்துக்கு எந்தக் கஷ்டமும் ஏற்படமாட்டாது. மாறாக கத்தோலிக்க மதத்தைப் பொறுத்த வரை கத்தோலிக்க சிங்களவர்களும் இருப்பதன் காரணமாகவும் வல்லாதிக்க நாடுகள் கத்தோலிக்க மதம் சார்ந்தவை என்பதாலும் இலங்கையில் கத்தோலிக்க நிந்தை என்ற பேச்சுக்கே இடமில்லை. இதற்கு மேலாக இஸ்லாமியத்தில் கைவைத்தால், கழுத்து வெட்டும் நாடுகள் பெற்றோலை வெட்டி விடும் என்ற பயம். எனவே இஸ்லாமியத்துக்கும் எந்த ஆபத்தும் இல்லை. மாறாக சைவ சமயம் இந்த நாட்டின் ஆதிச் சமயம். இலங்கை வேந்தன் இராவணன் சிறந்த சிவபக்தன். இலங்கையை சிவபூமி என்று திருமூலர் நாயனார் புகழ்ந்துரைத்துள்ளார். இப்படியயல்லாம் இருந்தும் சைவ சமயத்தை என்ன செய்தாலும் யாரும் கேட்க…
-
- 35 replies
- 4k views
-
-
விதி என்பதும் சதி என்பதும் ஒன்றே !!! விதி இறைவனால் மனிதனுக்கு கொடுக்கபடுவது சதி மனிதனால் மனிதனுக்கு கொடுக்கப்படுவது நீ .......இரண்டையும் எதிர் கொள்.......! விதி என்று எதையும் விட்டு வைக்காதே...!
-
- 34 replies
- 3.1k views
-
-
யாழ் உறவுகள், வாசகர்களுக்கு அன்பு வணக்கம். எமது நாளாந்த வாழ்வில் நாம் பல விடயங்களை கேட்கின்றோம், பார்க்கின்றோம், உணர்கின்றோம். அதில் பல விடயங்கள் பல வேளைகளில் எமக்கு நகைப்பானதாய் உள்ளன. ஆயினும், அவற்றில் ஒருசில எம்முடன், எமது வாழ்வில் ஒரேயடியாக ஒட்டிப்பிடித்தும் விடுகின்றன. ஏன் அவ்வாறு ஏற்படுகின்றது என்பதற்கு, எல்லாவற்றுக்குமே விஞ்ஞான விளக்கம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், அப்படி அமைவது, அவை ஏதோ சரி என்பது போல் உணர்கின்றோம். இந்த உணர்வு பயத்தின்பாற்பட்டதாகவும் அமையலாம், பக்தியின்பாற்பட்டதாகவும் அமையலாம். இங்கு நான் எதைப்பற்றி கூறுகின்றேன்? 'அந்த இறுதி நொடிக்குரிய அழகிய சொற்றொடர்' எனுங்கருப்பொருளில் நான் இங்கு அலசிப்பார்க்க விளைவது ஒருவகையில் மந்திரம்; அதை வேண்டும…
-
- 34 replies
- 3.1k views
-
-
நல்லூர் பெருந்திருவிழாவுக்கான – கொடிச்சீலை ஒப்படைப்பு!! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை சம்பிரதாயப் பூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும். அதன் படி யாழ் சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை சிறப்புப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கிருந்து கொடிச்சீலை சிறிய ரதத்தின் மூலம் பருத்தித்துறை வீதி ஊடக …
-
- 33 replies
- 6.2k views
-
-
கிறிஸ்துவின் தானியங்கள் 1: இறை வார்த்தை என்னும் விதை இயேசு ஒரு போதகராகப் புகழ்பெற்றிருந்த நாட்கள் அவை. வீட்டைவிட்டு வெளியே போய்க் கடலோரமாக அமர்ந்திருந்தார். அவரைக் கண்ட மக்கள், கூட்டமாக அங்கே திரண்டுவந்து நெருக்கியடித்தனர். உடனடியாக அவர் ஒரு படகில் ஏறி அமர்ந்தார். மக்கள் அனைவரும் கடற்கரையில் நின்று, அவர் பேசப்போகும் வார்த்தைகளைக் கேட்பதற்காக, காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டார்கள். அலைகள் சலசலப்பைக் குறைத்தன. கடற்காகங்கள் கரைவதை மறந்தன. அப்போது இயேசு விதைப்பவரின் கதையைக் கூறினார். விவசாயி தூவிய விதைகள் “ஒரு விவசாயி விதைக்கச் சென்றார். அவர் தூவிய சில விதைகள் பாதையோர…
-
- 32 replies
- 10.1k views
-
-
ஓம் சக்தி தனம்தரும், கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா மனம் தரும் "அபிராம வல்லியை" வணங்கும் நவராத்திரி விரதம் ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக் காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும் சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே. நவராத்திரி விரதம் இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 05.10.2013 ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது. புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை முதல் நவமியீறாகவரும் ஒன்பது தினங்கள் நவராத்திரி விரத காலமாகும். 10 வது தினம் விஜயதசமி தினமாகும். அதில் முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாள்களும் பூஜிக்கும்போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான ஸ்ரீதுர்கா பரமேஸ்…
-
- 32 replies
- 18.6k views
-