உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் .. சத்தியநாராயணா அறிவிப்பு December 15th, 2007 சூப்பர்ஸ்டார் ரஜினியின் 57ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனர்களில் அவர் எதிர்கால முதல்வராக வரவேண்டும் என்ற ஆவல் பிரதிபலித்திருந்தது. ஆனால் ரஜினிகாந்த் ரசிகர்மன்றத் தலைவர் சத்யநாராயணா அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணமோ விருப்பமோ இல்லை, அரசியலுக்கு வரமாட்டார், எனவே இரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாற்றமடைய வேண்டாம் எனக் கூறினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திடம் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை. ரசிகர் மன்றத்தின் வளர்ச்சியிலும், ரஜினியின் வளர்ச்சியிலும் அக்கறை கொண்டு தீவிரமாக செயல்பட்டு வரும் ரசிகர்களின் உணர்வுகளை ரஜின…
-
- 6 replies
- 1.8k views
-
-
விநாயகரை வழிபட்ட நடிகர் சல்மான் கான் மீது மத நடவடிக்கை லக்னெü, செப். 21: மும்பையில் விநாயகரை வழிபட்ட நடிகர் சல்மான் கான் மீது நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பு முடிவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகரை கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டபோது சல்மான் கானும் அவரது குடும்பத்தினரும் விநாயகரை வழிபட்டு, நடனமாடியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இதுகுறித்து பரேலியில் உள்ள இஃப்தா-மன்சார்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. "எந்த ஒரு முஸ்லிமும்ம் சிலைகளை வழிபடக்கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும். அவ்வாறு சிலைகளை வழிபடுவர்கள் மீது இஸ்லாமிய நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும். அதன்படி "கல்மா'வை அவர் பட…
-
- 3 replies
- 1.8k views
-
-
இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,” என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார். இந்தோ-சீனா நட்புறவுக்கழக கருத்தரங்கம் மதுரையில் நேற்று நடந்தது. பேராசிரியர் சாலமன் செல்வம் வரவேற்றார். சங்க செயலாளர் சுரேந்திரன் துவங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர் சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசியதாவது இந்தியா பகுதிகளை ஆக்கிரமித்தது உட்பட சீனா மீது 4 புகார்கள் கூறப்படுகின்றன. இந்தியா – சீனா இடையே எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை. அதேசமயம், எல்லைகள் பாதுகாப்பாக, பலமாக உள்ளன. இந்திய கம்ப்யூட்டர்களில் சீனா ஊடுருவுதாக புகார் கூறுகின்றனர். உலகில் தரமான தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்…
-
- 9 replies
- 1.8k views
-
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது அசர்பைஜானின் பாகுவில் இருந்து 72 பயணிகளுடன் ட்ரோஸ்னி நோக்கி பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அடர்ந்த மூடுபனி காரணமாக திருப்பி விடப்பட்ட இந்த விமானம் கஜகஸ்தானின் அக்டாவ் பகுதியில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றுள்ளது. அப்போது விமானம் திடீரென கீழே விழுந்தது. இதில் விமானம் வெடித்து சிதறி தீப்பற்றி எரியும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதில் பலர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்பு விமான நிலையம் அருகே பலமுறை வானில் வட்டமடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தீயணைப…
-
-
- 28 replies
- 1.8k views
- 1 follower
-
-
*சும்மா கிடைத்ததை ஓசியில் கிடைத்ததாகச் சொல்வது வழக்கம். இது எப்படி வந்தது தெரியுமா? கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் நம் நாடு இருந்த போது அவர்கள் அனுப்பும் தபால்களில் o.c.s என்ற முத்திரைக் குத்தப்பட்டிருக்கும். இதன் அர்த்தம் on company service என்பதாகும். o.c.s முத்திரை குத்திய தபால்கள் ஸ்டாம்பு ஒட்டாமலே எங்கும் சென்றதால் ஓசியில் போகிறது என்று அதனைச் சொல்வார்கள். நாளடைவில் சும்மா கிடைக்கும் எல்லாமே ஓசியாகிவிட்டது. ம.ஞானபிரகாஷ்,
-
- 9 replies
- 1.8k views
-
-
நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன்! தனித்தமிழ்நாடு என்ற ஒன்று தற்சமயம் அமைவதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. அந்தக் கொள்கையை, அந்த திட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்று, அதை புரியவைத்து, அதற்கான அத்தியாவசிய தேவையை உணர்த்தி பொதுமக்கள் ஆதரவுடன் அதற்கான போராட்டத்தில் இறங்குவதற்கான தலைமையோ, இயக்கமோ தற்சமயம் தமிழகத்தில் ஒன்றுகூட கிடையாது. ஒரு விஷயத்தை நாம் உறுதியாக நம்பலாம். ஓட்டரசியலில் இருக்கும் கட்சிகள் தமிழ்தேசியக்கொள்கையை சூடுபறக்கும் உரைகளுக்காக பயன்படுத்திக் கொள்வார்களேயொழிய அதற்கான செயல்களில் இறங்கமாட்டார்கள். ஏனெனில் இறங்கினால் எக்கச்சக்கமாக இழக்கத் தயாராக இருக்கவேண்டும். தமிழ்நாட்டிலேயே ஒரு வரலாற்று உதாரணம் உண்டு. அதன் பெயர் திமுக! திமுக என்ற கட்சி ஒரே இரவில் அம்பாரி ஏற…
-
- 4 replies
- 1.8k views
-
-
செய்திகள் - தமிழகம் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் Monday, 04 May 2009 20:52 சென்னை: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதுகுறித்து ஜெயலலிதாவின் உதவியாளர் கார்த்திகேயன் சென்னை - தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்தப் புகார் மனுவோடு கொலை மிரட்டல் கடிதத்தின் நகலும் இணைக்கப்பட்டிருந்தது. கொலை மிரட்டல் கடிதத்தில் இடம் பெற்றுள்ளதாவது: நீங்கள் ரவுடி வக்கீல்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, அரசுக்கும், போலீசுக்கும் பிளவை உண்டாக்கும் கருவியாக இருக்கிறீர்கள். இலங்கை தமிழர் பிரச்னையில் இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் பிளவை உண்டாக்கும் வகையில் உங்கள் செயல்பாடு உள்ளது. …
-
- 6 replies
- 1.8k views
-
-
சீனாவில் உள்ள குவாங்டோங் பல்கலைக்கழகத்தில் செக்ரெட்டரியல் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வங்கியில் கொள்ளையடிப்பது எப்படி என்பது பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான அசைன்மெண்ட............................. தொடர்ந்து வாசிக்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_3721.html
-
- 8 replies
- 1.8k views
-
-
உலகை ராணுவ பலத்தால் மிரட்டும் ’டாப் 5’ நாடுகளிடம் என்ன இருக்கிறது? இந்த உலகம் சுக்கு நூறாக உடைந்து போவதாக கனவில் நினைத்துப் பார்க்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. ஆனால், அதுவே உண்மையானால்...? அணு ஆயுத சக்தியில் ஐந்தாவது இடத்திலிருக்கும் இந்தியாவின் அணு ஆயுதங்களைக் கொண்டு, இந்த உலகை ஒரு முறை அழித்துவிடலாம். அமெரிக்காவிடமுள்ள அணு ஆயுதங்களைக் கொண்டு இந்த உலகத்தை 27 முறை லட்ச லட்சத் துண்டுகளாக வெடிக்கச் செய்து விளையாடலாம். உலக நாடுகளிலுள்ள மொத்த அணுஆயுதங்களையும் சரியாகப் பொருத்தி விசையைச் சொடுக்கினால், இந்தச் சூரிய மண்டலமே எப்படி இருந்தது என்ற வரலாறே தெரியாதவண்ணம் அழிந்து போய்விடும். இதுவரை வந்த ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமல்ல, நம் கனவில் கூட நி…
-
- 1 reply
- 1.8k views
-
-
ஜனாதிபதி வெப்சைட்டில் இருந்த அப்துல்கலாம் கட்டுரைகள் மாயம் [Friday July 27 2007 11:13:08 AM GMT] [Naffel] அப்துல்கலாம் ஜனாதி பதி பதவியில் இருந்த போது www.presidentofinelia.nic.in என்ற வெப்சைட்டில் ஏராளமான கட்டுரைகள், கவிதைககள் வெளியிட்டிருந்தார். இது தவிர மாணவ- மாணவியர்கள், பொதுமக்களிடம் இருந்து வரும் இ- மெயில்களை படித்து அவர்களுக்கு பதில் அனுப்பி வந்தார். இதில் குழந்தைகளுக்கான பகுதியையும் உருவாக்கி அவர்களை கவர்ந்தார். இதனால் அந்த வெப்சைட்டை தினந்தோறும் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்த்து படித்து வந்தனர். சில சமயம் ஒரே நாளில் மட்டும் 5 லட்சம் பேர் வரை இதை பார்த்து பயனடைந்து வந்தனர். இந்த மாதம் மட்டும் ஒரு கோடி பேர் இந்த வெப்சைட்டை பார்த்தனர். …
-
- 4 replies
- 1.8k views
-
-
இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ? தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது. பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை வரை நுழைந்தது ? வரலாறுகளைப் பார்க்க வேண்டும், முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாரம்) இல்லை. முகலாயர்கள் ஆட்சியில், அவர்கள் பேசிய இரானிய பிரிவைச் சேர்ந்த உருதே, வடமொழிகளான சமஸ்கிரதம் மற்றும் பாலி ஆகியவற்று…
-
- 1 reply
- 1.8k views
-
-
இந்தியாவுக்கு நேரம் பார்த்து ஆப்பு வைத்த அமெரிக்கா... அதிபர் டிரம்ப் அதிரடி..! இந்தியா, சீனா இனி வளரும் நாடுகள் இல்லை, உலக வர்த்தக அமைப்பின் சலுகைகள் இனி அவற்றுக்கு கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக தெரிவித்துள்ளார். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கானது என்ற கொள்கை கோட்பாடுகளில் அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மீது இந்தியா அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டி வந்தார். இதனால், இந்தியாவை `வரிகளின் அரசன்’ என்று கூட விமர்சித்தார். அதே போன்று, சீனாவும் அமெரிக்கப் பொருட்கள் மீது அதிகளவு வரி விதிப்பதாக அவர் கூறினார். அதனால், சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை அதிகரித்தார். இதற்கு பதிலடியாக சீ…
-
- 0 replies
- 1.8k views
-
-
http://thamilislam.blogspot.com/2009/04/blog-post_01.html
-
- 2 replies
- 1.8k views
-
-
சென்னை : அரசியலைப் பற்றி முழுமையாகத் தெரிந்த பிறகே அதில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் தனது ரசிகர் மன்ற உறுப்பினர்களை இன்று சந்தித்த ரஜினிகாந்த், அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் விரிவாகப் பதிலளித்தார். தற்போது, எந்திரன், சுல்தான் போன்ற திரைப்படங்களில் நடித்து வருவதாகவும், இந்த படங்கள் வெளிவந்த பிறகு மீண்டும் தனது ரசிகர்களைச் சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார். அரசியல் பற்றி தனக்கு இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்றும், எனவே, தற்போது அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். எனினும், ஆண்டவன் ஆணையிட்டால், அரசியலில் ஈடுபடப் போவதாகவும் அவர் கூறினார். சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்…
-
- 1 reply
- 1.8k views
-
-
நடுவானில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுதும் இலவச விமான பயணச் சலுகை வழங்குவதாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்தவர் லியூ சியா யா. வயது 31. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், வடக்குப் பகுதி தீவான பினாங்கில் இருந்து போர்னியா நகருக்கு கடந்த புதன்கிழமை ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்தார். நடுவானில் லியூவுக்கு பிரசவ வலி வந்தது. விமானத்தை பாதி வழியில் கோலாலம்பூருக்கு திருப்பினார் பைலட். விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் 2,000 மீட்டர் உயரத்தில் விமானம் பறந்தபோது, லியூவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. விமானத்தில் இருந்த டாக்டர் பிரசவம் பார்க்க, பணிப்பெண்கள் உதவி செய்தனர். விமானம் தரையிறங்கியதும் தாயும், சேயும் மருத்துவமனையில…
-
- 0 replies
- 1.8k views
-
-
உலகெங்கும் சட்டவிரோதமான வகையில் மீன்பிடித் தொழிலை எதிர்த்து போராடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கும் ஒரு பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் இன்று முன்னெடுத்துள்ளது. இலங்கை மீன்களுக்கு ஐரோப்பாவில் தடை வருகிறது சட்டவிரோதமான வகையில் இடம்பெறும் மீன்பிடி நடவடிக்கைகளை இலங்கை நிறுத்த வேண்டுமென்று நான்கு ஆண்டுகளாக தீவிரமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும், அதை தடுத்து நிறுத்த இலங்கை காத்திரமான முன்னெடுப்புகளைச் செய்யவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. சர்வதேச நெறிமுறைகளுக்கு அமைய மீன்பிடித் தொழிலில் ஈடுபடாத நாடுகளில் இருந்து மீன்களை இறக்குமதி செய்வதில்லை எனும் கொள்கையில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியுடன்…
-
- 24 replies
- 1.8k views
-
-
கொரோனா வைரஸ்: வெளவால், எறும்புத்தின்னி, புனுகுப்பூனை - எந்த விலங்கிடமிருந்து பரவியது? துப்பறியும் கதை போல நீளும் ஆய்வு ஹெலன் பிரிக்ஸ் பிபிசி நியூஸ் Getty Images உலகை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி விலங்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியது என்பதைத் தெரிந்து கொள்ள ஹெலன் பிரிக்ஸ் விஞ்ஞானிகளிடம் சென்றார். சீனாவில் ஓர் இடத்தில், வானில் பறந்து கொண்டிருந்த நோய் தொற்று கொண்டிருந்த வௌவால் மேலிருந்து கீழே மலத்தைக் கழித்தது. அது ஒரு காட்டில் விழுந்தது. அங்கேயே இருக்கும் ஒரு விலங்கு, (ஒரு எறும்புத்தின்னி) இரையைத் தேடும்போது அந்த மலத்திலிருந்த வைரஸ் தொற்று அதற்குப் பரவியது. அது காட்டிலிருக்கும் பிற விலங்குகளுக்கும் பரவியது . அந்த விலங்கு ஒரு மனித…
-
- 13 replies
- 1.8k views
-
-
திருமணமான முதல் வாரத்திலேயே பணத்துக்காக கணவனால் விரட்டியடிக்கப்படும் பெண்கள். தினமும் குடித்துவிட்டு வருகிற கணவனிடம் அடிவாங்கும் அபலைகள். கணவனின் ஒட்டுமொத்த குடும்பத்தால் திட்டம்போட்டு தீர்த்துக் கட்டப்படும் மனைவிகள். இவர்களைப் போன்ற துரதிர்ஷ்டக்காரப் பெண்களுக்கு நிவாரணம் அளிப்பதற்கு உருவாக்கப்பட்டவைதான் குடும்ப வன்முறைச் சட்டமும் வரதட்சணை தடுப்புச் சட்டமும். இந்தச் சட்டங்களால் பல பெண்களின் வாழ்க்கைப் பிரச்னை தீர்ந்திருக்கின்றது. ஆனால் இன்று வரும் தகவல்கள் நமக்கு அதிர்ச்சி கொடுக்கின்றன. பல பெண்கள் தங்கள் அப்பாவிக் கணவர்களைப் பழிவாங்குவதற்குத்தான் இந்தச் சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். உதாரணத்துக்கு ஒரு சின்ன தகவல். 2005-ம் ஆண்டு மட்டும் இந்த …
-
- 1 reply
- 1.8k views
-
-
வியாட்னாம் யுத்தத்தின்போது அமெரிக்கர்கள் மனம் மாறியதற்கு 2 சம்பவங்கள் தான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. குறித்த மனிதன் ஒருவனின் படுகொலை. மற்றயது ஒரு சிறுமி ஒருத்தியின் உடல் எரிபட்ட நிலையில் அவள் ஓடியது. வியட்நாம் போரில் போராளிகளின் இழப்பே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியில் உறுதி தளராது போரில் வெற்றி பெற்றவர்கள் வடக்கு வியட்நாமியப் போராளிகளே. http://www.bbc.co.uk/news/in-pictures-32483307
-
- 0 replies
- 1.8k views
-
-
கழிப்பறையில் பாரதி படம்: கர்நாடகத்தில் 'தேசிய கவி'க்கு அவமரியாதை ஜூன் 04, 2007 திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர். சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன. அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர…
-
- 4 replies
- 1.8k views
-
-
கொரோனா வைரஸ்: தனிமைப்படுத்திக் கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ, மூடப்பட்ட எல்லைகள் - கனடாவின் நிலை Getty Images குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியுரிமை பெற்றவர்களைத் தவிர மற்ற வெளிநாட்டு மக்கள் கனடாவுக்குள் நுழைய முடியாது என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ஆனால் அமெரிக்கக் குடிமக்கள் இதில் விதிவிலக்காகக் கருதப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் விமான நிறுவனங்கள், கொரோனா அறிகுறிகள் உள்ள பயணிகளைக் கனடாவுக்குச் செல்லும் விமானங்களுக்குள் அனுமதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கனடாவின் நிலை மாண்ட்ரியல், டொரோண்டோ, கல்கரி மற்றும் வான்கூவர் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்களில் வரும் புதன்கிழமை நாளை முதல்…
-
- 11 replies
- 1.8k views
-
-
சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று காலை 7.15 மணி முதல் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியிருக்கிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது பணியை துவக்கினர். இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என ச…
-
- 22 replies
- 1.8k views
-
-
தமிழக அரசியலில் ஒரு பெரும் வெற்றிடம் உண்டாகியுள்ளது. ஆளுமையோ, தலைமைத்துவ கம்பீரமோ இல்லாத, கூழைக் கும்பிடு போட்டவாறே ஊழலில் திளைத்த பன்னீர் நீண்டகாலம் தாக்குப் பிடிக்கப் போவதில்லை. ஏற்கனவே முதல் கல், செங்கோட்டையனால் வீசப்பட்டு விட்டது. விரைவிலேயே, சசிகலா, செங்கோட்டையன், பன்னீர் என்று மக்கள் மத்தியில் ஜனரஞ்சக புகழ் இல்லாதோரின் உள்வீட்டூ சண்டைகள் ஒருபுறமும் மறுபுறம் பதவி ஆசை காட்டி, ஆட்சியை பிடிக்கும் நோக்கில், திமுகவின் பழுத்த நரி கருணாநிதியும் குடும்பம் நடாத்தப் போகும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் ஒருபுறமும், மோடியின் பாஜக, இலட்டு மாதிரி 39 பாராளுமன்ற அப்படியே அமத்த என்று இன்னுமொரு பக்கமாக காய் நகர்த்த, அதிமுக என்ற பேரியக்கத்தின் தொண்டர்கள் அமைதியாக ந…
-
- 18 replies
- 1.8k views
- 1 follower
-
-
உலகத்தின் நம்பர் வண் யார்… முதலிடத்தைக் கைப்பற்ற வான்வெளியில் வெடித்திருக்கிறது அமெரிக்கா – சீனா இரண்டு நாடுகளுடைய சைபர் யுத்தம்.. 21ம் நூற்றாண்டின் மிகப் பெரிய பயங்கரவாதம் என்று வார்ணிக்கப்படும் சைபர்கிரைம் மோதல் ஆரம்பித்துவிட்டதை தமிழ் மக்கள் அவசரமாகவும் அவசியமாகவும் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் பேள்காபர் துறைமுகத்தை ஜப்பானியர் தாக்கியதைப் போல இப்போது சீனா அமெரிக்கா மீது நடாத்தியிருப்பது சைபர் பேள்காபர் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இதுவரை சைபர்கிரைம் நடக்கிறது என்று பேசி வந்த அமெரிக்க அதிபர் முதல் தடவையாக சீனாவை நோக்கி கோபமாக கையை நீட்டியுள்ளார். சைபர் கிரைம் என்றால் என்ன..? இது சற்லைற் போர்.. சற்லைற்றை பயன்படுத்தி இணையம் மூலமாக நடைபெறும் போர…
-
- 1 reply
- 1.8k views
-
-
-
- 22 replies
- 1.8k views
-