கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
கலோ கலோ... ஒன்றும் சரியாக் கேக்கல்ல.. பெலத்தாக் கதை பிள்ள... அம்மா.. நான் சுசி. லண்டனில இருந்து கதைக்கிறன்... சுசியே.. சொல்லு பிள்ள.. எப்படி அம்மா இருக்கிறீங்கள். எப்பவாம் விசாத் தருவாங்கள். எப்ப ரிக்கட் போடப் போறீங்கள்.. இண்டைக்குப் பின்னேரம் தான் பதில் சொல்லுவாங்கள் பிள்ள. விசா கிடைச்ச உடன ரிக்கட் போடுவன். நீ ஒன்றுக்கும் யோசியாத. பிள்ளப் பிறப்புக்கிடையில அங்க நிப்பன். இப்ப தான் உங்க கதிரேசன் கோயிலுக்கு போய் உன்ர பெயரில.. கனடா பவாட பெயரில.. அவுஸி.. தீபாட பெயரில.. நியூசி சங்கர் பெயரில.. பிரான்ஸ் கோபி பெயரில.. நோர்வே துசி பெயரில அர்ச்சனை செய்திட்டு வந்திருக்கிறன். அப்படியே அம்மா. நல்லது. இந்த முறை நீங்க வந்தால்.. இங்கையே லண்டனில நிரந்தரமா நிற்பாட்…
-
- 5 replies
- 1.5k views
-
-
அன்று அமாவாசையின் மூன்றாம் நாள், தஞ்சைக் கோட்டையைச் சுற்றி எங்கும் காரிருள் சூழ்ந்திருந்தது. நடுசாமம் ஆனதால் காவலர்களின் ஓசை மெல்ல மெல்லக் குறைந்து, அனைத்து ஜீவராசிகளும் நித்திரா தேவியின் நிழலில் உறங்கிக் கொண்டிருந்தன அந்த நான்கு கண்களைத் தவிர. இன்று நிகழப் போகும் கொடூரத்தைக் காண விரும்பாத நிலவும் வெறுப்பினூடே மறைந்து நின்றது. அப்போது கோட்டைக்கு மிக அருகில் மரங்களடர்ந்தப் பகுதியிலிருந்து ஆந்தையின் ஓசை கேட்டது. மரப்புதர்களில் ஒளிந்து கொண்டிருந்த ரவிதாஸனின் காதில் அதில் இன்பகானமாக ஒலித்தது. அனைத்தும் ஒன்று கூடி வருவதாக எண்ணிக்கொண்டான். இந்தச் சுரங்கப் பாதையைக் கண்டறிந்த தன் நுண்ணறிவை நினைத்துச் சிலாகித்துக் கொண்டான். இதுவரை மன்னர் மற்றும் முதன்மந…
-
- 5 replies
- 895 views
-
-
பாஸ்”போர்ட்”- கோமகன் யாழ்ப்பாணம் வடக்கில் இருந்து வெளியேறும் எல்லோர்க்கும் பாஸ் எடுக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்த பட்ட காலமான ஒரு அதிகாலைப் பொழுதில் சாவகச்சேரி பகுதியில் இருந்த அந்த வீடு சனங்களால் திமிறியது.இந்த இடம் தான் அப்போதைய நிழல் பாஸ் அலுவலகம். சனங்களுக்கு ஆயிரம் சோலிகளுடனும் அதனால் வந்த கவலைகள் முகத்தில் நிரம்ப வீட்டின் முன்னால் இருக்கக்கூடிய அவ்வளவு இடங்களிலும் பொட்டலங்களாக சிதறியிருந்தனர். பாஸ் கொடுக்கும் அலுவலகர்கள் ( பெடியங்கள் ) இன்னும் வராத படியால், அங்கு இருந்த உதவியாளர்கள் வந்த சனங்களை மேய்த்துகொண்டிருந்தனர். இந்த மேய்ச்சலினால் பலரும் கடுப்பாகவே இருந்தனர். ஆனாலும் எப்பொழுதுமே “சமரசங்கள்” என்ற பரம்பரையலகு அவர்களுடைய ரத்தத்தில் சிறிது தூக்கலாகவே இ…
-
- 5 replies
- 1.4k views
-
-
மன்னருக்கு மீன் கொண்டு வந்தான் ஒரு மீனவன். 'அரிதான இந்த மீனை தாங்கள் வாங்குவது தான் பொருத்தமாக இருக்கும்' என்றான். மன்னரும் மகிழ்ந்து அவனுக்கு ஐந்தாயிரம் பொற்காசுகள் கொடுத்தார். மகாராணி கொதித்து விட்டார். 'ஒரு அற்ப மீனுக்கு இவ்வளவு பணமா?' அதை திரும்ப வாங்குங்கள் என்றாள். 'முடிந்த வியாபாரத்தை மாற்றுவது அழகல்ல' என்று மன்னர் மறுத்தார். 'சரி அவனை கூப்பிட்டு இந்த மீன் ஆனா பெண்ணா என்று கேளுங்கள். ஆண் மீன் என்று அவன் சொன்னால் பெண் மீன்தான் வேண்டும் என்றும் பெண் மீன் என்று சொன்னால் ஆண் மீன் தான் வேண்டும் என்றும் கேளுங்கள். எப்படியும் அவனிடமிருந்து பொற்காசுகளை பிடுங்கி ஆக வேண்டும்' என்றாள் மகாராணி. மீனவன் திருப்பி அழைக்கபட்டான். கேள்விக் கணையை மகாராணி தொடுத்தா…
-
-
- 5 replies
- 676 views
- 1 follower
-
-
“கந்தசாமி சொல்லுரத கேட்கிறது ஹரித? இந்த வீடு ஆர்மிக்கு தான் .. வீடு உண்ட பேர்ல இல்ல” கந்தசாமி தனியனாக ப்ளேன் டீ ஊத்திக்கொண்டிருக்கும்போது தான் செல்வராணியை நினைத்துப்பார்த்தார். இந்த நாச்சார் வீடு அவளின் சீதன உரித்தம் தான். இங்கே தான் 1982 இல் கந்தாசாமிக்கும் செல்வராணிக்கும் கலியாணம் நடந்தது. அப்போது எல்லாம் இரவில் தான் திருமணம்; முடிந்து மாப்பிள்ளை, பொம்பிளை முதலிரவு அறைக்குள் போனபின்பும் வெளியே நாற்சார் திண்ணையில் “தாள்” ஆட்டம் தண்ணியுடன் அனல் பறக்கும். பக்கத்தில் உட்கார்ந்திருந்தால் யாழ்ப்பாணத்து தூஷணங்கள் பற்றி பிஎச்டி செய்ய அமெரிக்கா போகலாம். கந்தசாமிக்கு இன்னமும் ஞாபகம் இருக்கிறது. அன்றைக்கும் அவர் தண்ணியை சாதுவாக போட்டுவிட்டு ஒரு “கை” விளையாடிவிட்டு தான் அறைக்குள…
-
- 5 replies
- 1.5k views
-
-
சகுனி கதையும் ..ஈழத்தோழர்கள் எடுக்கவேண்டிய நிலையும்... துரியோதனனின் தாய் காந்தாரி. அவள் காந்தார நாட்டு மன்னன் மகள். அவள் சகோத ரன் சகுனி. சகு னியை அறியாத வர் யாரும் இலர். பாண்டவர் களை சூதால் வென்று காட்டுக்கு அனுப்பிய அவனை அறியாதவர் யார்? துரியோதன னின் உடன்பிறந் தோர் மொத்தம் நூறு பேர். ஆதலால் அவர்கள் ஈரைம்பதியர் என்றும் நூற்றுவர் என்றும் பெயர் பெற்றனர். இதைப்போலவே சகுனியின் உடன்பிறந்த வரும் நூற்றுவரே. துரியோதனனுக்குத் தாய்மாமன்களாகிய நூற்றுவரும் ஏதோ ஒரு காரணத்தினால் அஸ்தினாபுரத்திலேயே தங்கியிருந்தனர். அரண்மனையில் எந்நேரமும் சகுனி சகோதரர்கள் இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பர். தாய்மாமன் முதலிய பெரியோர் யாராயிருப்பினும் மரியாதை செய்ய…
-
- 5 replies
- 1.9k views
-
-
அமைதிக்குப் பெயர்தான் சாந்தி.... 'சாந்தி எழும்பு பிள்ளை' றோட்டில ஒரே சனநடமாட்டமாக் கிடக்கு. என்ன பிரச்சினையோ தெரியாது.' என்றபடி படலையைத் திறந்து தெருவை நோட்டமிட்டாள் மலர். 'என்னக்கா என்ன பிரச்சினை?' என்று பக்கத்து வீட்டு மனோகரியை கேட்டாள். 'என்னவோ தெரியாது. எல்லோரும் வெளிக்கிட்டுப் போகினம். ஆமி இறங்கீற்றுதெண்டு கதைக்கினம். உண்மையோ தெரியாது' என்றபடி மனோகரியும் தன் வீட்டு படலையை பூட்டினாள். வீதியில் செல்பவர்கள் பதட்டத்துடனும் அவசரத்துடனும் ஓடிச்செல்வதனைக் காணக்கூடியதாய் இருந்தது. மலரின் மனதுக்குள் நிறையக் குழப்பங்கள். கணவன் மாணிக்கத்தை நினைக்க என்ன செய்வதென்று தெரியால் திகைத்தாள். இப்படி ஒவ்வொரு முறையும் ஒடிப்போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்த சந்தர்ப்பங…
-
- 5 replies
- 1.6k views
-
-
சித்திரப்பேழைகதைகள் ‘தமிழீழத்தை ஆதரிக்கும் மாவோயிஸ்டுக்கு மணமகள் தேவை’ என்று அமரேசன் செய்திருந்த விளம்பரத்தைப் பார்த்துத்தான், முப்பது வருடங்களுக்கு முன்னால் அவரை யசோதா பதிவுத் திருமணம் செய்துகொண்டார். அப்போது அமரேசனுக்கு முப்பத்து நான்கு வயது. யசோதாவுக்கு இருபத்தெட்டு வயது. சென்ற வருடத்தின் கொடுங்குளிர் காலத்தில், அமரேசன் புற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரது தொண்டையில் துளையிட்டுப் புகுத்தப்பட்டிருந்த மெல்லிய குழாய் காரணமாக அவரால் பேச முடியவில்லை. அவர் பேசுவதற்கு முயற்சிக்கவே கூடாது என்றுதான் மருத்துவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தார்கள். அந்த நிலையிலும் அமரேசனின் முகம் வேதனையால் நெளிந்து விரிய, அவர் சில வார்த்தைகளைத் த…
-
-
- 5 replies
- 1.3k views
-
-
வட் இஸ் திஸ் .! வெரி நைஸ் ..! :- யோகு அருணகிரி June 28, 2013 11:09 am பதிந்தவர் Supes By யோகு அருணகிரி நாட்டில இருத்து படாத துன்பம் எல்லாம் பட்டு பிறந்ததில் தொடங்கி இடம் பெயர்ந்து மாறி மாறி குடிசை போட்டு கறையான் புற்றிலும் பாம்பு புற்றிலும் கரப்பான் பூச்சியுடனும் வாழ்க்கை நடத்திய எமக்கு வெளிக்கிட்டு வெளிநாடு வந்து ஒரு ஐந்துவருடம் போயிட்டா நாங்க காட்டுற அலப்பாரை இருக்கே தாங்கமுடியாது பாருங்கோ … மார்க்கிலதான் உடுப்பு போடுவம் சப்பாத்து போடுவம் விலை உயர்ந்த போன்தான் பாவிப்பம் …. பொரும்பாலும் தமிழை தவிர்ப்பம் …. தெரியுதோ தெரியாதோ இங்கிலுசுதான் கதைப்பம் நோ ..யெஸ் ..யா..சோ .வெள்ளையைவிட நாங்கதான் அதிகமா பாவிப்பம் பாருங்கோ . இப்படி ஒரு குடும்பம் நமக்கு பக்கத்தில் இருக்குற…
-
- 5 replies
- 1.4k views
-
-
சரோஜா அம்மா அன்று விடிந்ததிலிருந்து பரபரத்துக்கொண்டிருந்தார். அவரிடம் ஒரு உற்சாகம் ஒட்டிக் கொண்டிருந்தது. இவரின் பரபரப்பை பார்த்த அவர் கணவர் சரோஜா அம்மாவை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் விதமாக „இங்க பாரு இப்படி ஓடி ஓடி எல்லாவற்றையும் தயார் படுத்திக்கொண்டு உம்முடைய உடம்பை கெடுக்க வேண்டாம் . நீ இப்படி எல்லாம் ஆர்ப்பரிக்கிறதுக்கு உன்னுடைய மருமகன் இன்று வருவானோ, என்னவோ தெரியாது . அவனுக்கு தானே எங்களை அவ்வளவாக பிடிப்பது இல்லை. ஆகவே இந்த ஆர்பாட்டங்களை விட்டு விட்டு எனக்கும் உனக்கும் கோப்பி போட்டுகொண்டு வந்து இந்த கதிரையில கொஞ்சம் அமரும்“ . சிறு கண்டிப்புடனும், கரிசனையுடனும் குமரேசன் கூறினார் . அதற்கு „என்னங்க சொல்றீங்க ? இன்றைக்கு உங்களுக்கு 80வது வயது பிறந்த நாள் . மகள் ரதி கட்…
-
- 5 replies
- 1.8k views
-
-
அபிதா பெயருக்கு ஏற்ற போல அவளும் அழகிய பெண்..அபிதாவுக்கு ஒரே அண்ணன் வெளி நாட்டில் வேலையில் இருந்தான்.. அபிதா அம்மா அப்பாவோட ஊரில் இருந்தாள்.. அம்மா நான் பாடசலைக்கு போகுறேன்.. என்று சொல்லிய படி தன் தோழி வீடு நோக்கி நடக்க தொடங்கினாள் அபிதா... சுசிதா அபிதாவின் நண்பி இருவரும் ஒரே தெருவில் இருந்தார்கள்.. சிறு வயது முதல் இருவரும் நண்பிகள்.. அதை விட இருவரும் ஒரே பாடசாலையில் படித்தார்கள்... அபி நம்ம பாடசாலை பெடியன்கள் வாறாங்கள்.. அங்க பாரு... அபி அங்க பாரு செந்தில் வாறன்.. உன்னுடன் இப்ப பேசுறது இல்லையா? அப்படி இல்லை சுசி போன் பண்ணி பேசுவான்.. செந்தில் வேறு யாரும் இல்லை அவர்கள் வகுப்பில் படிக்கும் மாணவன்..சுசிதா யாருடனும் அதிகம் பேச மட்டாள்.. அபிதா …
-
- 5 replies
- 3.7k views
-
-
இனிய நினைவுகளின் வாசம். நன்றி - தமிழமுதம் - http://tamilamutham.net/amutham/index.php?...id=245&Itemid=1
-
- 5 replies
- 2k views
-
-
ஒரு கூதிர்கால செம்மஞ்சள் நிற மாலைப் பொழுதில், வளர்பிறை நிலவு தன்னை அலங்கரித்து பவனி வரக் காத்திருக்கும் இளவரசி போல் முகில் சூழ ஒய்யாரமாக அமர்ந்திருக்க, வேந்தனைக் கண்டு விழிமிரளும் வேலையாட்போல் கதிரவன் நிலவைக் கண்டு தன ஒளிக்கற்றைகளை சுருட்டிக் கொள்ள, மலைமுகடுகளிருந்து வெளிவரும் ஊதக் காற்று செடி கொடிகளை தழுவிக் கொண்டிருந்தது. தழுவியதால் உண்டான இன்பத்தில் இலைகளும் தளிர்களும் சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்தன. விடுமுறை நாளின் மதிய உறக்கத்திற்குப் பின் சோம்பலுடன் எழுந்து புல்தரையில் வெண்முத்துக்களை பரப்பியது போல் இருந்த சிமென்ட் தரையில் நடந்து கொண்டிருந்தேன். கனாக்களில் எஞ்சியதை நெஞ்சம் அசை போடா, விஞ்ஞானம் பெற்றெடுத்த அலைபேசியில் சேமிக்கப்பட்ட இன்னிசை காதில் தவழ்ந்து கொண்…
-
- 5 replies
- 939 views
-
-
சாரு, நீங்க ஒரு காமெடி பீஸ் என்ன மாயமோ மந்திரமோ தெரியலை, தினமும் காலை சாருவின் பதிவை அல்லது facebook statusயை டாய்லட்டில் படித்தால் தான் எனக்கு ஆய் போகிறது. உலகில் இது போல் வேறு எந்த எழுத்தாளர்களுக்கு இந்த மாதிரி பவர் உள்ளது என்று தெரியவில்லை. சரி அத விடுங்க, இரண்டு வாரம் முன்பு, என் புருசனும் கச்சேரிக்கு போறான்னு சொல்ற மாதிரி இவரும் ஜெய்பூர் இலக்கிய விழாவிற்கு போனார். இலக்கிய விழாவிற்கு இவர் ஏன் போனார் நீங்கள் யோசிக்கிறது புரியுது, விடுங்க அன்னா ஹாசரேவை விஜய் பார்க்க போன மாதிரின்னு வச்சுக்கோங்க. இவர் போன நேரம் பார்த்து அங்க நிஜமான எழுத்தாளர்களோட கலந்துரையாடல் ஒன்று நடைபெற இருந்திருக்கிறது, இவர் போட்டிருக்கிற இரண்டாயிரம் ருபா ஜட்டியை பார்த்து கூப்பிடாங்களோ…
-
- 5 replies
- 2.7k views
-
-
புத்துணர்ச்சி பத்திரிகையின் பக்கங்களைப் புரட்டியபடியே சோபாவிலே சாய்ந்திருந்த ரம்யாவின் கண்களிலே அந்த மரண அறிவித்தல் பட்டது. அதிலே அவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றன. இது நிச்சயமாக அவள்தான். கடவுளே.. .. அப்படி இருக்கக்கூடாது கண்களை அகலத் திறந்தபடி பெயர் ஊரைக் கவனமாக உற்று நிதானமாக வாசித்தாள். ஆமாம் அவள் என் மாணவி தான். அமைதி, அடக்கம், பொறுமையின் சிகரமான அவளுக்கா இக்கதி? நெஞ்சிற்குள் ஏதோ செய்வது போலிருந்தது. இவளால் எப்படி போராட்டத்தில் இணைய முடிந்தது? எப்படி அவள் இறந்திருப்பாள்? தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தவள் கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் அவள் கன்னங்களில் வடிந்தோடின. ரீட்டா ஒரு ஏழை. அவள் தந்தையார் அன்றாடம் தோட்ட வேலை செய்பவர். ஆறு …
-
- 5 replies
- 1.9k views
-
-
என்னவளே .....அடி என்னவளே .............. அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ......சற்று கண் அயரலாம் என்று படுக்கையில் சரிந்தவளுக்கு .......தொலை பேசியின் கிணு கிணுப்பு ...விழித்து எழ வைத்தது ,,,,,,சுதா ,,எடுத்து கலோ ..........என்றவள் .மறு முனையில் சற்று பழக்கமிலாத குரல் ஆனாலும் எங்கோ கேட்டது போன்று ஒரு உணர்வு ..........கலோ ..நீங்க யார் என்று தெரியவில்லையே .......பெயரை சொன்னான் . பின் நீண்ட மெளனம். அவன் .சுந்தர மூர்த்தி எனும் சுந்தர் ............சுதா என்னை மறந்து விடாயா ? .நீண்ட மெளனம் ...அவளை தாயக நினைவுக்கு இட்டு சென்றது . பாடசாலைக்காலத்தில் ....அதே கலூரியில் படித்தவன். அவள் பினால் சுற்றி திரிந்தவன் .........நீண்ட காலத்தி…
-
- 5 replies
- 3.1k views
-
-
மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவின் வீட்டிற்கு நானும் ஜெயனும் பலமுறை சென்றிருக்கிறோம். அவர் ஜெயனுக்கு குருவும் தந்தையுமானவர். கேரளத்தில் திருச்சூரில் இருந்தார். எங்களுக்கு திருமணமாகி நான்கைந்து வருடங்கள் கழித்து ஒருமுறை அங்கு சென்றபோது, அவர் வீட்டு முற்றத்தில், மாமரத்தடியில் அமர்ந்து அவருடன் தனியே பேசும் சந்தர்ப்பம் ஒன்று வாய்த்தது. அப்போது ஆற்றூர் என்னிடம் ஜெயன் பற்றி ஏதோ கேட்டார். நான் என் வழக்கப்படி உணர்ச்சி பரவசத்துடன் பதில் கூறினேன். அப்போது அவர் “மலையாளத்தில் ’பிரகாசம் பரத்துந்ந பெண்குட்டி’ என்றொரு சொற்பிரயோகம் உண்டு. நீயும் ஜெயமோகனும் உங்கள் திருமணம் நடந்த மறுநாள் இங்கு வந்து பத்து நாட்கள் போல தங்கினீர்கள். .அப்போது உனக்கு சிறிதும் மலையாளம் தெரியாது. எனக்குத் த…
-
- 5 replies
- 2k views
- 1 follower
-
-
சுதந்திரா என்ற பெயரை எங்கேயும் வாசிச்ச ஞாபகம் உங்களுக்கு வரலாம். அந்த சுதந்திரா என்ற பெயரில் எழுத்தில் நான்தான் உலாவியிருக்கிறேன். இப்போது சுதந்திரா என்ற பெயரில் எழுவதும் இல்லை. 2001 ஒரு முகமறியா வீரனின் ஞாபகமாக எழுதிய இக்கதை ஒரு பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த நிகழ்வை நினைவு கொள்ளு முகமாக இணைக்கிறேன். சுதந்திரா என்ற பெயரை முதலில் தாயகத்தில் வெளியாகிய ஈழநாதம் பத்திரிகையில் எழுதிய காலங்களில் பாவித்த புனைபெயர். 2002 தாயகப்பயண அனுபவப்பதிவினை எழுதிய லெப்.கேணல் அருணாண்ணைக்கு அனுப்பியிருந்தேன். அருணாண்ணா வாசிக்க அனுப்பிய கட்டுரை ஆனால் பத்திரிகையில் வெளிவரப்போவதாக ஈழநாதத்தில் விளம்பரம் வந்த போது கிடைத்த மகிழ்ச்சி இன்றைக்கும் மறக்க முடியாத ஞாபகம். அப்போது …
-
- 5 replies
- 1k views
-
-
கோட்லஸ் மாமி சந்தைக்குபோட்டு வீடடை வரேக்கை நேரம்போனதால மொபைல் மாமி வீட்டுவழியால போகவேண்டியதாப்போயிற்று. மாமி வெயில் எறிச்சபடியா வீட்டுமுத்தத்தில இருக்கிற சினன பூந்தோட்டத்தில நின்றா. நான் வந்தது வேறை கார் என்றாலும் யாரிது எஙகடை ஆள் என்று கட்டாயம் பாத்து இருப்பா. அவை வீட்டு வாசல்ல ஒரு ஸபீட் பிறேக் இருக்கு. அதால சிலோ பண்ணவேண்டியதாப்போச்சு. இப்பவே லோக்கல்ல இருக்கிற சொந்தங்களுக்கு ஏன் தெரிந்தவர்களுக்கும் என்னைக்கண்ட செய்தி போயிருக்கும். மாமி எப்பவும் கோட்லஸ் போனோடை தான் இருப்பா. ஒன்று மாறி ஒன்று என்று இங்கை இருக்கிற ஆக்களுக்கு போன் பண்ணி கதைத்துக்கொண்டு இருப்பா. அதோடை வெளிநாட்டுக்கும் காட்ல போன்பண்ணி கதைச்சு இங்கத்தையான் செய்திகளை அங்க தொகுத்து…
-
- 5 replies
- 3.2k views
-
-
ஐ.நாவில் மங்காத்தா..! மங்காத்தாவா… மகிந்தாத்தாவா மன்மோகன் சிங் குழப்பம்.. போர்க்குற்ற விசாரணை கண்டிப்பாக நடாத்தப்பட வேண்டுமென பான் கி மூன் பிடிவாதமாகச் சொன்னதால் மகிந்த உறக்கமின்றி துடித்துக் கொண்டிருந்தார். இவ்வளவு காலமும் மகிந்தாஜி மகிந்தாஜி என்ற மன்மோகன் சிங் கொஞ்சநாளாக மங்காத்தாஜி, மங்காத்தாஜி என்றபடி தன்னைப் பார்த்து தலைப்பாகையை தடவுவதை நினைத்தால் சினமாக இருந்தது.. இதற்குள் யாரோ ஒரு கேடுகெட்ட புத்தபிக்கு வந்து 600 தமிழ் பெண்களின் முலைகளை விராண்டி இரத்தம் எடுத்துவிட்டு ஐ.நா போனால் போர்க்குற்றம் விலகுமென்று சொல்ல, கிறீஸ் மனிதனை அனுப்பி முலைகளை விராண்டியதுதான் மிச்சம்.. பிரச்சனை தீர்ந்தபாடில்லை.. அப்போதுதான் கெகலிய ரம்புக்கல ஒரு பெ…
-
- 5 replies
- 1.7k views
-
-
“உ.பி மாநிலத்தின் லக்னோவைச் சேர்ந்தவர். மத்திய பீகார் கிராம வங்கியில் பணிபுரிபவர். பெயர் வினோத் ஸ்ரீவத்சவா. இராமேஸ்வரத்துக்கு டூர் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. அவரது மனைவி அங்கேயே இறந்துவிட்டார். இரண்டு மகள்களும், ஒரு மகனும் அவரும் இப்போது மதுரை ஏர்போர்ட்டில் இருக்கிறார்கள். உடனடியாகச் சென்று அவர்களுக்கு உதவி செய்யுங்கள்” இதுதான் 31.8.2011 காலை 8 மணிவாக்கில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்விந்த் சின்ஹா எங்களிடம் சொன்ன தகவல். அவர், எங்கள் All India regional Rural Bank Employees Association (AIRRBEA பீகார் மாநிலக்குழுவின் முக்கிய தோழர். திருச்சியில் நடந்த எங்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்திற்கு நாங்கள் சென்று கொண்டு இருந்த வேளை அது. மதுரையில் வசிக்கும் எங்கள…
-
- 5 replies
- 987 views
-
-
இப்போது சயந்தன் எழுதியிருக்கும் ஆறாவடு நாவலும் மிக முக்கியமான ஆவணங்கள் இந்த மூன்றுமே ஈழ சினிமாவுக்கான கதைக் களத்தைக் கொண்டிருக்கின்றன. அதிலும் தோழர் கோவிந்தனின் நாவலும், சயந்தனின் நாவலும் மிக மிக முக்கியமான பதிவைச் செய்திருக்கின்றன. இதை திரைப்படமாக்குவது தொடர்பாக நான் ஆறாவடு நாவலை எழுதிய சயந்தனிடம் பேசினேன். மேலும் சில நண்பர்களுடன் பேசினேன். தமிழ் சினிமா இயக்குநர்களால் ஈழ மக்களுக்கான சினிமாவை எடுக்க முடியாது.-அருள் எழிலன் http://www.globaltam...IN/article.aspx
-
- 5 replies
- 1.3k views
-
-
உளவாளி இளங்கோ அவன் கனடாவிற்கு வந்ததன்பிறகு இப்போதுதான் முதன் முதலாக இலங்கைக்குப் போகின்றான். குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப்பூக்களைப் காண்பதை போன்ற உணர்வுடன் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கட்டுநாயக்காவை விமானத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். குடிவரவிற்கான அதிகாரி, 'உனது நாடு எது?' எனக் கேட்டதற்கு இலங்கையைக் கூறுவதா அல்லது கனடாவைக் கூறுவதா என்ற குழப்பம் ஏற்பட்டது. இப்படியான அரசியல் சிக்கல்கள் தனக்கு நேரக்கூடாதென்றுதான் ஒரு ஆலோசகரை இவன் எப்போதும் தன் அருகிலேயே வைத்திருப்பான். அவளின் பெயர் குகதர்மினி. அழகான முழுப்பெயரை தர்மினி என வெளிநாகரீகத்திற்கு ஏற்ப மாற்றிவைத்திருந்தாள். …
-
- 5 replies
- 1.3k views
-
-
குஞ்சுகள் இருட்டுப் போர்வை பூமியை மூட ஆரம்பித்த மாலை வேளை. வானத்தில் நிலவும், நட்சத்திரங்களும் மட்டுமே மீதியாக இருந்தன. ஆனால் காற்றோ இப்பவும் சூடாகவே வீசிக்கொண்டிருந்தது. "எணை அப்பு...! என்ரை செல்லத்தைக் காணேல்லை. நீ கண்டனியோணை?" அரக்கப்பரக்க ஓடிவந்து கேள்வி கேட்ட என் பேரனிற்கு பதிலளிப்பதற்காய் வாய்க்குள் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலைச் சாற்றினைத் துர உமிழ்ந்தேன். "இல்லை ராசா. நான் காணேல்லை. கொஞ்சம் முன்னந்தானே நீ மடியிலை வைச்சுக் கொஞ்சிக் கொண்டிருந்தனீ..." அவனது தலையை ஆதரவாகத் தடவி கொடுத்தவாறே கேட்டேன். "ஓமணை அப்பு. பவுடர் பூசி, ஒட்டுப் பொட்டும் வைச்சுப்போடு விட்டனான். அதுக்குன்னம் காணைல்லை" என்று விம்மத் தொடங்கிய எனது பேரனுக்கு வாற ஆவணி மாசம் …
-
- 5 replies
- 864 views
- 1 follower
-
-
வியாபாரி ஒருவர், தன் ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை, தன் மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, பக்கத்து ஊரில் விற்பது வழக்கம். ஒருநாள் அந்த வண்டில் மாடு, வியாபாரியிடம் வந்து கேட்டது “எஜமான் இரண்டு ஆண்டுகளாக நான் உங்களுக்கு வேலை செய்கிறேன், நான் செய்யும் வேலைக்கு, நீங்கள் எனக்குக் கொடுக்கும் புல்லின் அளவோ மிகக் குறைவு.., தயவுசெய்து என் புல்லின் அளவைக் கூட்டுங்கோ” என்றது. அதைக் கவனமாகக் கேட்ட வியாபாரி “மாடே, நீ கடினமாக உளைப்பது உண்மையே, ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு, ஒரு நாளைக்கு 25 மூட்டைகளை வண்டியில் சுமக்கிறது, நீயோ 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய், நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால், நானும் புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன் என்றார். பக்க…
-
- 5 replies
- 1.3k views
-