Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெற்றி தோல்விக்கு அப்பால்

Featured Replies

போராட்டத்திற்கான நியாயங்கள் பேசப்படுதல் குறித்ததோல்வியே தற்போது நடந்து வருகின்றது. இதுவே சிங்களத்தின் வெற்றி. இது பயங்கரவாதமாகவும் அதை எதிர்த்த இராணுவ வெற்றியாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இது உலகத்துக்கு தெரிந்தும் அதன் ஆசீர்வாதம் தொடர்ந்து கிடைக்கின்றது. இந்த நியாயங்கள் பேசுதல் தொடர்பான தோல்வி என்பது தமிழர் தரப்பின் விடுதலை நோக்கிய முன்னெடுப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய அபாயம் உள்ளது.

சிங்களம் புலிகளை தோற்கடிப்பதாகவே தனது வெளித்தோற்றத்தை காட்டிக்கொள்கின்றது. அது பயங்கரவாதத்தை முறியடிப்பதாகவே காட்டிக்கொள்கின்றது. இங்கே தோற்கடிக்கப்படுவது தமிழ்மக்கள் என்பதையோ, தமிழ் மக்களது அனைத்து அடிப்படை உரிமைகள் என்பதையோ, அவலங்களின் உச்ச நிலையில் அரசு மேற்கொள்வதே பெரும் பயங்கரவாதம் என்பதையோ தெளிவுபடுத்துவதில் தமிழர்தரப்புக்கு ஏற்பட்ட குழப்பங்களும் பின்னடைவுகளுமே தோல்வி என்ற வரையறைக்குள் இட்டுச் செல்கின்றது. சிங்களத்திற்கு வெற்றி என்றாகின்றது.

சிங்களத்தின் வெற்றிகளில் அதன் நீண்டகால இலக்கும் திட்டமிடல்களும் எப்போதும் தோற்றதில்லை. இதை தமிழர்கள் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியமானது. சிங்களம் ஒரு தோல்வியை சந்திக்கும் போது அது சிறிது காலத்தில் மீள தன்னை தயார் படுத்திக்கொள்ளும். தமிழ்மக்களும் அவ்வாறு செய்தனர் என்பது வரலாறு. ஆனால் இந்த வெற்றி தோல்விகள் மீள தயார்படுத்தல்கள் என்பதற்கு ஒரு எல்லை இருக்கின்றது. அந்த எல்லையே சிங்களத்தின் நீண்டகால இலக்கு என்றாகின்றது. இந்த எல்லையை தமிழர்கள் விரைவாக எட்டிவிடுவார்கள் என்பது தான் சிங்களம் போடும் கணக்கு.

இந்த கணக்கு சரிவருமா? பிழைக்கும் என்பதற்குரிய காரணிகள் சாதகமாக இல்லை. இதுவே யதார்த்தம். மீள தயார்படுத்தல் என்பதற்கு ஆளணி எண்ணிக்கை என்பது பிரதானமானது. சிங்களம் தமிழ்மக்களை பிரித்து இந்த தயார்படுத்தலுக்கு உள்ளாகாத வாறு வைத்துள்ளது.(படையினர் கட்டுப்பாட்டில் வாழும் மக்கள்) தமிழ் மக்களது பலவீனங்களும் சிங்களத்துக்கு சாதகமாக தயார்படுத்தலில் இருந்து விலகி ஏராளமான மக்களை தள்ளி வைத்தது. (நாட்டை விட்டு வெளியேறிய மக்கள்) இதே நேரம் சிங்களம் தனது அடிமட்ட மக்கள் வரை சிங்கள தேசியத்தை விரிவாக்கம் செய்துள்ளது. படை நடவடிக்கையால் பொருளாதார சிதைவு தொடர்ந்து வறுமை வறுமையில் இருந்து விலக வீட்டுக்கொருவர் படையில் சேருதல் என்ற வலைப்பின்னலை தனது எண்ணங்களுக்கேற்ப செயற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் சிங்களம் வெலியோயா திட்டத்தின் மூலம் தமிழர் தாயகத்தை துண்டாடியதில் தொடங்கிய இந்த நீண்டகால திட்டம் பின்னர் எல்லா இடங்களுக்கும் பரவியது. தமிழ் முஸ்லீம் மக்கள் பிரிக்கப்பட்டனர். கணிசமான மக்கள் அகதிகளாக அயல் நாட்டுக்கும் படையினர் பிரதேசங்களுக்கும் நகர்ந்தனர். வசதிவாய்ப்பின் அடிப்படையில் வளர்ந்த நாடுகளுக்கு சென்றனர். தற்போதும் சிங்களம் தனது நீண்ட கால திட்ட அடிப்படையில் முதலில் வன்னி யாழுக்கான தொடர்பை துண்டித்தது. கிழக்கல் உளவியல் ரீதியாக பிரதேசவாதத்தை (கருணாவை மையமாக வைத்து) தூண்டியதில் இருந்து இராணுவ நடவடிக்கை மூலம் கிழக்கை துண்டாடியது. பின்னர் போரை அது விரைவுபடுத்தியது. அதன் இறுதி இலக்கு வன்னியில் எஞ்சியுள்ள மக்களை தனது வசமாக்குவது. அதன் நகர்வுப்போக்கில் மீளத் தயார்படுத்தல் என்ற எல்லையை தமிழர்தரப்பு விரைவில் எட்டிவிடுவர் என்ற கணக்கு அதற்கு சாதகமாகவே உள்ளது.

இந்த இரண்டு தரப்பின் நிகழ்வுப்போக்கில் மீள தயார்படுத்தல் என்றதன் எல்லையை தமிழர் தரப்பு விரைவில் தொட்டுவிடும் என்பது வெளிப்படையான உண்மை. அது என்னும் சில வெற்றிகள் தோல்விகளுக்கு பிற்பாடு கூட நடக்கலாம் ஆனால் தமிழர் தரப்பு விரைவில் தொட்டுவிடும் என்ற சிங்களத்தின் நீண்டகால திட்டம் அதற்கு சாதகமாக இருப்பது மறுக்க முடியாத உண்மையே.

நியாயத்தின் அடிப்படையில் தமிழர் தரப்புக்கு சாதகமான விடயம் என்னவெனில் அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். சிங்களத்துக்கு பாதகமான விடயம் அவர்கள் ஒடுக்குமுறையை செய்கின்றனர். தமிழர் தரப்புக்கு பலமான விடயம் உலகமெங்கும் பரந்து வாழ்கின்றனர், சிங்களத்திற்கு அப்படி இல்லை. ஆனால் நியாயங்கள் பேசுதலில் தமிழர் தரப்பு களமுனையை விட படுதோல்வியை சந்தித்து வருகின்றது. சிங்களம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதாக உலகின் வாயை மூடியுள்ளது.

ஆயிரம், இரண்டாயிரம் புலிகளை தோற்கடிக்கப் போகின்றறோம் என்று நாலு லட்சம் மக்களை ஒரு வருடமாக ஓட ஓட விரட்டும் சிங்களம் இன்று உலகின் தலைசிறந்த தந்திரி.(வெள்ளைவான், கடத்தல், காணமல் போதல், ஊடகங்கள் மீதான வன்முறை என்ற சங்கதிகள் வேறு)வன்னியின் அங்குலமங்குலமாக மக்களை விரட்டி அவர்கள் வாழ்வாதரங்களை பறித்து பல்லாயிரம் மாணவர்களின் கல்வியை மக்களின் சுகாதரத்தை எல்லாவற்றையும் பூண்டோடு துடைத்தெறியும் சிங்களம் சாதராணமாக புலிகள் முகாமை கைப்பற்றி விட்டதாக உலகத்திற்கு படம் காட்டுகின்றது. நாலாயிரம் முவாயிரம் இரண்டாயிரம் ஆயிரம் என்ற நிலையில் புலிகளை அது கணக்கு காட்டுகின்றது.

சிங்களம் தனது பாதுகாப்புத் தளத்தில் காட்டும் இராணுவ நடவடிக்கை குறித்த வரைபடங்கள் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு நகர்வுக்குமான அம்புக்குறி அசைவுகளில் ஆயிரமாயிரம் மக்கள் அவலப்படுகின்றனர். மக்களது அடிப்படை உரிமைகள் அடியோடு மீறப்படுகின்றது. சர்வதேச போர் விதிகளின் எல்லைகளை தாண்டிய அக்கிரமம் அரங்கேறுகின்றது. ஆனால் இதை நேர்த்தியாக சொல்ல தமிழர் தரப்புக்கு வக்கில்லையே. ஆகக் குறைந்தது அவன் காட்டும் படங்களை அவன் பாணியிலேயே விமர்சிக்க உண்மையை எடுத்துக் கூற முடியவில்லையே. ஓட ஓட மக்களை விரட்டும் சிங்களம் இன்று மக்களை புலிகள் பிடித்து வைத்துள்ளதாக சாதராணமாக சொல்கின்றது. இங்கே மோட்டு சிங்களவன் என்ற மமதைக் கோவணம் அக்குவேறு ஆணிவேறாக கிழிந்து தொங்குகின்றது.

துப்பாகி முனைகளால் இந்தப் போர் தனது இறுதி இலக்கை அடிய முடியாது. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதற்கு பல சந்தர்ப்பங்கள் இனி வழங்கப்பட வாய்புகள் இல்லை. இது மீள தயார்படுத்தல் என்ற உண்மையின் ஊடாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை களமுனையில் திருப்பங்கள் ஏற்படலாம் அது நேற்றய ஓயாத அலைகள் போல் வெற்றியாக இருக்கலாம். ஆனால் அது வெற்றிச் செய்தி மட்டுமே தவிர வெற்றியாக முடியாது. நேற்றய ஓயாத அலையும் ஆனையிறவு பூநகரி வெற்றிகளும் இன்று எப்படி அர்த்தமற்றனவோ அவ்வாறே அதற்கும் நாளை மறுநாள் நிகழலாம். எனவே ஒரு வெற்றி என்பதை இறுதியாக பெறுவது குறித்து சிந்திப்போம்.

இந்தப் போரின் வெற்றியும் தோல்வியும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் கைகளிலேயே உள்ளது தவிர துப்பாக்கி முனைகளில் இல்லை. அவற்றை நீண்ட காலலத்திற்கு தூக்கிப்பிடிக்க முடியாது. தூக்கிப் பிடிக்க ஆட்கள் இல்லை என்ற அடிப்படையை புரிந்து கொள்வோமாக. எமது நியாங்களை உலக முற்றத்தில் முழங்குவோம். சிங்களத்தின் அக்கிரமங்களை எடுத்துரைப்போம். இதற்கொரு தீர்ப்பை சர்வதேசம் சொல்லும் வரை தொடர்வோம் அது ஒன்றே தமிழனுக்குள்ள கடைசி சந்தர்ப்பம். கடைசி ஆயுதம். இதை வைத்து போராடி எமக்கொரு தாயகம் அமைப்போம். தற்காலிக வெற்றி தோல்விகளில் மக்களின் நம்பிக்கையை சிறைவைக்க யாரும் முயல வேண்டாம். நிரந்தரமானதொரு விடிவிற்கு முடிந்ததை செய்வோம்.

வித்தியாசமான கோணத்தில் ஆராயப் பட்டிருக்கிறது. இது உங்கள் கருத்தாயின் பாராட்டுகள், இல்லையெனில் செய்தியின் மூலத்தை இணைத்து விடுங்கள் சுகன்.

Edited by Alternative

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுகன் உங்கள் ஆய்வுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சுகன்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்திற்கான நியாயங்கள் பேசப்படுதல் குறித்ததோல்வியே தற்போது நடந்து வருகின்றது. இதுவே சிங்களத்தின் வெற்றி.

தமிழ்மக்கள் என்பதையோ, தமிழ் மக்களது அனைத்து அடிப்படை உரிமைகள் என்பதையோ, அவலங்களின் உச்ச நிலையில் அரசு மேற்கொள்வதே பெரும் பயங்கரவாதம் என்பதையோ தெளிவுபடுத்துவதில் தமிழர்தரப்புக்கு ஏற்பட்ட குழப்பங்களும் பின்னடைவுகளுமே தோல்வி என்ற வரையறைக்குள் இட்டுச் செல்கின்றது. சிங்களத்திற்கு வெற்றி என்றாகின்றது.

சிங்களத்தின் வெற்றிகளில் அதன் நீண்டகால இலக்கும் திட்டமிடல்களும் எப்போதும் தோற்றதில்லை. இதை தமிழர்கள் சரிவர புரிந்து கொள்ளுதல் அவசியமானது. சிங்களம் ஒரு தோல்வியை சந்திக்கும் போது அது சிறிது காலத்தில் மீள தன்னை தயார் படுத்திக்கொள்ளும்.

இந்த கணக்கு சரிவருமா?

அதன் இறுதி இலக்கு வன்னியில் எஞ்சியுள்ள மக்களை தனது வசமாக்குவது. அதன் நகர்வுப்போக்கில் மீளத் தயார்படுத்தல் என்ற எல்லையை தமிழர்தரப்பு விரைவில் எட்டிவிடுவர் என்ற கணக்கு அதற்கு சாதகமாகவே உள்ளது.

இந்த இரண்டு தரப்பின் நிகழ்வுப்போக்கில் மீள தயார்படுத்தல் என்றதன் எல்லையை தமிழர் தரப்பு விரைவில் தொட்டுவிடும் என்பது வெளிப்படையான உண்மை. அது என்னும் சில வெற்றிகள் தோல்விகளுக்கு பிற்பாடு கூட நடக்கலாம் ஆனால் தமிழர் தரப்பு விரைவில் தொட்டுவிடும் என்ற சிங்களத்தின் நீண்டகால திட்டம் அதற்கு சாதகமாக இருப்பது மறுக்க முடியாத உண்மையே.

நியாயத்தின் அடிப்படையில் தமிழர் தரப்புக்கு சாதகமான விடயம் என்னவெனில் அவர்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர். சிங்களத்துக்கு பாதகமான விடயம் அவர்கள் ஒடுக்குமுறையை செய்கின்றனர். தமிழர் தரப்புக்கு பலமான விடயம் உலகமெங்கும் பரந்து வாழ்கின்றனர், சிங்களத்திற்கு அப்படி இல்லை. ஆனால் நியாயங்கள் பேசுதலில் தமிழர் தரப்பு களமுனையை விட படுதோல்வியை சந்தித்து வருகின்றது. சிங்களம் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதாக உலகின் வாயை மூடியுள்ளது.

சிங்களம் தனது பாதுகாப்புத் தளத்தில் காட்டும் இராணுவ நடவடிக்கை குறித்த வரைபடங்கள் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு நகர்வுக்குமான அம்புக்குறி அசைவுகளில் ஆயிரமாயிரம் மக்கள் அவலப்படுகின்றனர். மக்களது அடிப்படை உரிமைகள் அடியோடு மீறப்படுகின்றது. சர்வதேச போர் விதிகளின் எல்லைகளை தாண்டிய அக்கிரமம் அரங்கேறுகின்றது. ஆனால் இதை நேர்த்தியாக சொல்ல தமிழர் தரப்புக்கு வக்கில்லையே. ஆகக் குறைந்தது அவன் காட்டும் படங்களை அவன் பாணியிலேயே விமர்சிக்க உண்மையை எடுத்துக் கூற முடியவில்லையே. ஓட ஓட மக்களை விரட்டும் சிங்களம் இன்று மக்களை புலிகள் பிடித்து வைத்துள்ளதாக சாதராணமாக சொல்கின்றது. இங்கே மோட்டு சிங்களவன் என்ற மமதைக் கோவணம் அக்குவேறு ஆணிவேறாக கிழிந்து தொங்குகின்றது.[/size]

துப்பாகி முனைகளால் இந்தப் போர் தனது இறுதி இலக்கை அடிய முடியாது. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதற்கு பல சந்தர்ப்பங்கள் இனி வழங்கப்பட வாய்புகள் இல்லை. இது மீள தயார்படுத்தல் என்ற உண்மையின் ஊடாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை களமுனையில் திருப்பங்கள் ஏற்படலாம் அது நேற்றய ஓயாத அலைகள் போல் வெற்றியாக இருக்கலாம். ஆனால் அது வெற்றிச் செய்தி மட்டுமே தவிர வெற்றியாக முடியாது. நேற்றய ஓயாத அலையும் ஆனையிறவு பூநகரி வெற்றிகளும் இன்று எப்படி அர்த்தமற்றனவோ அவ்வாறே அதற்கும் நாளை மறுநாள் நிகழலாம். எனவே ஒரு வெற்றி என்பதை இறுதியாக பெறுவது குறித்து சிந்திப்போம்.

இந்தப் போரின் வெற்றியும் தோல்வியும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் கைகளிலேயே உள்ளது தவிர துப்பாக்கி முனைகளில் இல்லை. அவற்றை நீண்ட காலலத்திற்கு தூக்கிப்பிடிக்க முடியாது. தூக்கிப் பிடிக்க ஆட்கள் இல்லை என்ற அடிப்படையை புரிந்து கொள்வோமாக. எமது நியாங்களை உலக முற்றத்தில் முழங்குவோம். சிங்களத்தின் அக்கிரமங்களை எடுத்துரைப்போம். இதற்கொரு தீர்ப்பை சர்வதேசம் சொல்லும் வரை தொடர்வோம் அது ஒன்றே தமிழனுக்குள்ள கடைசி சந்தர்ப்பம். கடைசி ஆயுதம். இதை வைத்து போராடி எமக்கொரு தாயகம் அமைப்போம். தற்காலிக வெற்றி தோல்விகளில் மக்களின் நம்பிக்கையை சிறைவைக்க யாரும் முயல வேண்டாம். நிரந்தரமானதொரு விடிவிற்கு முடிந்ததை செய்வோம்.

இது போன்ற கருத்தியல் ரீதியான சிந்தனைகள் வலுப்பெற வேண்டும். புலம்பெயர் தமிழரின் வளங்கள் தமிழிழினத்தின் தேசிய இருப்புக்கானதாக மாற்றம் பெற வேண்டும்.

நல்லதொரு வியடத்தை வடித்தமைக்குப் பாராட்டுகள்

நல்ல ஆய்வு

கேள்விகள்

1. ஆயுத அரசியல் சரிவராது என்று புரிய மறுத்தா புலிகள் யுத்ததிற்குரிய தலைவரை தேர்வு செய்ய தீர்மானித்தார்கள்?

2. நான் இருக்கும் வாடகை வீட்டின் ownrers சின் உறவு குடும்பம் ஒன்று மட்டக்களப்பில் இருந்து migrate ஆகி Canada வந்துள்ளது (இவர்கள் முன்பும் வந்து சரியான வேலை கிடைக்காமையால் மட் போனவர்கள்). ஏன் மீண்டும் வந்தார்கள் என்று கேட்க அவர்களால் சொல்லப் பட்ட பதில் "என் பிள்ளைகள் இயக்கத்திற்கு போகும் சந்தர்ப்பம் அதிகமாயிட்டு".... சிங்கள பேரினவாதால் ஒரு போதும் தமிழ் மக்களை வென்றெடுக்க முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உ+ம்

நிழலி,

நீங்கள் சொன்ன உதாரணத்தையே பாருங்கள்.அதில் சிங்களம் வென்று தானே இருக்கிறது.

தமிழர்களை இலங்கைத் தீவில் இருந்து அது அகற்றி வருகிறது.

தமிழர்கள் தமது தேசத்தை இழந்து உலகெங்கும் அலைகின்றனர்.தமது அடையாளங்களையும் மொழியையும் மெல்ல மெல்ல இழந்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தமிழர்களின் ஊடகங்களோ வெறும் இராணுவ மயக்கத்தில் மக்களை திரட்டலாம் என்று எண்ணுகிண்றன.இதன் வெளிப்பாடு தான் சனிக்கிழமை நிகழந்த வனதிகள்.சனிக்கிழமை நிகழ்ந்தது அருஸ்,வன்னியன் என்னும் புல ஆய்வாளர்களின் கட்டுரைகளின் பலன்.

நிதர்சனத்தை மக்களிடம் தெளிவாக்கமால் அவர்களை அரசியல் ரீதியாக வளர்க்காமால் ,போராட்டத்தின் உண்மையான நிலையை,பலவீனக்களை அதன் தேவைகளைச் சொல்லாமால் வளர்ததன் விழைவுகள் அறுவடை செய்யப்படுகின்றன.

இன்று புலத்தில் உண்மையில் பலர் தம்மை போராட்டதுடன் இணைக்க வில்லை, ஒரு குறிப்பிட்ட சிலரே எல்லாவற்றியும் செய்யும் நிலையே இருக்கிறது.புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரையும் திரட்ட முடியாத நிலையிலையே புலம் பெயர் ஊடகங்கள் அமைப்புக்கள் இருக்கின்றன.புலம் பெயர்ந்தவர்களின் நாளைய தேவைகளுடன் போராட்டம் இணைக்கப்படவில்லை.அதற்கான காரணக்களும் அவள்களுக்குக் கூறப்படவில்லை.

புலத்தில் தமிழர்கள் படம் பார்க்கவும்,கோவில் கட்டி திருவிழாச் செய்யவுமே தகுதியானவர்களாக இருப்பதே இன்றைய நிலை.தமிழர்கள் என்று இந்த மயக்க நிலைகளில் இருந்து விடுபடுகிறார்களோ அன்று தான் அவர்களால் ஒரு தேசிய இனமாகச் செயற்பட முடியும்.அதுவரை தமிழர்கள் தோல்விகளையே காணுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனத்தை மக்களிடம் தெளிவாக்கமால் அவர்களை அரசியல் ரீதியாக வளர்க்காமால் ,போராட்டத்தின் உண்மையான நிலையை,பலவீனக்களை அதன் தேவைகளைச் சொல்லாமால் வளர்ததன் விழைவுகள் அறுவடை செய்யப்படுகின்றன.

:wub::wub:

புலத்தில் தமிழர்கள் படம் பார்க்கவும்,கோவில் கட்டி திருவிழாச் செய்யவுமே தகுதியானவர்களாக இருப்பதே இன்றைய நிலை.தமிழர்கள் என்று இந்த மயக்க நிலைகளில் இருந்து விடுபடுகிறார்களோ அன்று தான் அவர்களால் ஒரு தேசிய இனமாகச் செயற்பட முடியும்.அதுவரை தமிழர்கள் தோல்விகளையே கள்

அது நடக்கக் கூடிய காரியமா?படமும், கோயிலும் (சர்ச்சும்) எம்மவர்களின் இரு கண்கள்.குருடிஷ்,பஞ்சாப்,கஷ்ம

Edited by Jil

...புலம் பெயர்ந்த தமிழர்களின் ஊடகங்களோ வெறும் இராணுவ மயக்கத்தில் மக்களை திரட்டலாம் என்று எண்ணுகிண்றன.இதன் வெளிப்பாடு தான் சனிக்கிழமை நிகழந்த வனதிகள்.சனிக்கிழமை நிகழ்ந்தது அருஸ்,வன்னியன் என்னும் புல ஆய்வாளர்களின் கட்டுரைகளின் பலன்.

நிதர்சனத்தை மக்களிடம் தெளிவாக்கமால் அவர்களை அரசியல் ரீதியாக வளர்க்காமால் ,போராட்டத்தின் உண்மையான நிலையை,பலவீனக்களை அதன் தேவைகளைச் சொல்லாமால் வளர்ததன் விழைவுகள் அறுவடை செய்யப்படுகின்றன...

வரைபடத்தை பார்க்க என்ன தெரிஞ்சது உங்களுக்கு? இதுக்குள்ளை அருஸ் வன்னியன் பற்றிய விமர்சனம் வேறை

...இராணுவம் முன் நேறிய வரை படைத்தைப் பார்க்கும் எவருக்கும் , என்ன நடக்கப்போகிறது என்பது ஓரளவு தெளிவாகத் தெரியும் போது, வீணாகக் குழம்பிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை...

போராட்டத்திற்கான நியாயங்கள் பேசப்படுதல் குறித்ததோல்வியே தற்போது நடந்து வருகின்றது. இதுவே சிங்களத்தின் வெற்றி. இது பயங்கரவாதமாகவும் அதை எதிர்த்த ஆயிரம், இரண்டாயிரம் புலிகளை தோற்கடிக்கப் போகின்றறோம் என்று நாலு லட்சம் மக்களை ஒரு வருடமாக ஓட ஓட விரட்டும் சிங்களம் இன்று உலகின் தலைசிறந்த தந்திரி.(வெள்ளைவான், கடத்தல், காணமல் போதல், ஊடகங்கள் மீதான வன்முறை என்ற சங்கதிகள் வேறு)வன்னியின் அங்குலமங்குலமாக மக்களை விரட்டி அவர்கள் வாழ்வாதரங்களை பறித்து பல்லாயிரம் மாணவர்களின் கல்வியை மக்களின் சுகாதரத்தை எல்லாவற்றையும் பூண்டோடு துடைத்தெறியும் சிங்களம் சாதராணமாக புலிகள் முகாமை கைப்பற்றி விட்டதாக உலகத்திற்கு படம் காட்டுகின்றது. நாலாயிரம் முவாயிரம் இரண்டாயிரம் ஆயிரம் என்ற நிலையில் புலிகளை அது கணக்கு காட்டுகின்றது.

சிங்களம் தனது பாதுகாப்புத் தளத்தில் காட்டும் இராணுவ நடவடிக்கை குறித்த வரைபடங்கள் கவனிக்கத் தக்கது. ஒவ்வொரு நகர்வுக்குமான அம்புக்குறி அசைவுகளில் ஆயிரமாயிரம் மக்கள் அவலப்படுகின்றனர். மக்களது அடிப்படை உரிமைகள் அடியோடு மீறப்படுகின்றது. சர்வதேச போர் விதிகளின் எல்லைகளை தாண்டிய அக்கிரமம் அரங்கேறுகின்றது.

ஆனால் இதை நேர்த்தியாக சொல்ல தமிழர் தரப்புக்கு வக்கில்லையே. ஆகக் குறைந்தது அவன் காட்டும் படங்களை அவன் பாணியிலேயே விமர்சிக்க உண்மையை எடுத்துக் கூற முடியவில்லையே. ஓட ஓட மக்களை விரட்டும் சிங்களம் இன்று மக்களை புலிகள் பிடித்து வைத்துள்ளதாக சாதராணமாக சொல்கின்றது.

இங்கே மோட்டு சிங்களவன் என்ற மமதைக் கோவணம் அக்குவேறு ஆணிவேறாக கிழிந்து தொங்குகின்றது.

துப்பாகி முனைகளால் இந்தப் போர் தனது இறுதி இலக்கை அடிய முடியாது. அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. அதற்கு பல சந்தர்ப்பங்கள் இனி வழங்கப்பட வாய்புகள் இல்லை. இது மீள தயார்படுத்தல் என்ற உண்மையின் ஊடாக புரிந்து கொள்ளப்பட வேண்டும். ஒருவேளை களமுனையில் திருப்பங்கள் ஏற்படலாம் அது நேற்றய ஓயாத அலைகள் போல் வெற்றியாக இருக்கலாம். ஆனால் அது வெற்றிச் செய்தி மட்டுமே தவிர வெற்றியாக முடியாது. நேற்றய ஓயாத அலையும் ஆனையிறவு பூநகரி வெற்றிகளும் இன்று எப்படி அர்த்தமற்றனவோ அவ்வாறே அதற்கும் நாளை மறுநாள் நிகழலாம். எனவே ஒரு வெற்றி என்பதை இறுதியாக பெறுவது குறித்து சிந்திப்போம்.

இந்தப் போரின் வெற்றியும் தோல்வியும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் கைகளிலேயே உள்ளது தவிர துப்பாக்கி முனைகளில் இல்லை.

அவற்றை நீண்ட காலத்திற்கு தூக்கிப்பிடிக்க முடியாது. தூக்கிப் பிடிக்க ஆட்கள் இல்லை என்ற அடிப்படையை புரிந்து கொள்வோமாக.

எமது நியாங்களை உலக முற்றத்தில் முழங்குவோம். சிங்களத்தின் அக்கிரமங்களை எடுத்துரைப்போம்.

இதற்கொரு தீர்ப்பை சர்வதேசம் சொல்லும் வரை தொடர்வோம்

அது ஒன்றே தமிழனுக்குள்ள கடைசி சந்தர்ப்பம். கடைசி ஆயுதம்.

இதை வைத்து போராடி எமக்கொரு தாயகம் அமைப்போம்.

தற்காலிக வெற்றி தோல்விகளில் மக்களின் நம்பிக்கையை சிறைவைக்க யாரும் முயல வேண்டாம்.

நிரந்தரமானதொரு விடிவிற்கு முடிந்ததை செய்வோம்.

அருமை! :lol:

உலகத்தமிழர்கள் காலம் கடத்தாது புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

நன்றி!!!

Edited by vettri-vel

வரைபடத்தை பார்க்க என்ன தெரிஞ்சது உங்களுக்கு? இதுக்குள்ளை அருஸ் வன்னியன் பற்றிய விமர்சனம் வேறை

இதனை பார்த்ததும் நீங்கள் கோபம் கொள்ளக் கூடிய காரணங்கள் என நான் நினைப்பது

1. புலம் பெயர் மக்களை மேலும் மேலும் மந்தைகளாகவே வைத்திருக்க விரும்புவது

2. Self Censored: சுய தணிக்கை

Censoredஇவை இல்லையெனில் உங்களின் மேன்மை பொருந்திய கோபத்தின் காரணம் யாதோ?

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

சுகன் உங்கள் முன்னைய கருத்துக்களையும் பார்த்திருக்கிறேன்.யாவும் யாதார்த்தத்தை பிரதிபலிப்பவை.அதே போல இந்த ஆய்வும் அருமை.

சுகனின் கருத்துக்கள் தெளிவாக இலகுவாக இருக்கின்றன.. தொடரட்டும்..

Edited by KUGGOO

நல்ல ஆய்வு சுகன்.

ஆனால் ஆய்வின் அடிப்படை விடயத்தில் எனக்கு முரண்பாடு.

ஆய்வின் அடிப்படையாக சொல்லப்படுகின்ற இரண்டு விடயங்கள்:

1. இராணுவப் போராட்டம் வெற்றியாக முடியாது.

2. புலம் பெயர்ந்தவர்கள் நீதி கேட்டு நடாத்தும் போராட்டம் வெற்றியைத்தரும்.

போராட்டத்திற்கு நான்கு முனைகள் உண்டு. சமூக, பொருளாதார, இராணுவ, அரசியல் முனைகள். இவை சமாந்தரமாக நகர்த்தப்பட்டிருக்க வேண்டும். எம்முடைய விடயத்தில் அப்படி நடக்கவில்லை.

ஆளனிப்பலமின்மையை இராணுவப் போராட்டம் வெற்றியாக முடியாது என்பதற்கான காரணமாகச் சொல்கின்றீர்கள். 130 கோடி சனத்தொகை கொண்ட சீனாவால் 7 கோடி சனத்தொகை கொண்ட பிரித்தானியாவை வெல்ல முடியாது. ஆட்பலம் ஒரு முக்கியமான காரணியாக இருந்த போதும், ஆட்பலம் குறைந்த பகுதிக்கு தோல்வி நிச்சயம் என்னும் விதி இல்லை.

புலம்பெயர்ந்தவர் போராட்டப் பலத்தை நாம் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே தோன்றுகின்றது. புலம்பெயர்ந்தவர் போராட்டத்தால் சாதிக்கக் கூடியது எது, முடியாதது எது என்று எமக்குத் தெளிவு வேண்டும். புலம்பெயர்ந்தவர் அதிகமாக வாழும் கனடாவில் புலிகளுக்கு உள்ள தடையை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். புலம்பெயர்ந்தவர் போராட்டத்தால் சிங்கள அரசின் ஒடுக்குமுறையை உலகத்தின் பார்வைக்கு கொண்டுவர முடியும். ஆனால் இறுதி வெற்றியைத் தரமுடியாது.

போராட்ட‌த்தின் நான்கு முனைக‌ளும் ஒன்றை ஒன்று குறை நிர‌ப்பும் வ‌கையில் ந‌க‌ர்த்த‌ப் ப‌டாமையே போராட்டத்தின் இன்றைய பலவீனமான தோற்றப்பாட்டிற்குக் காரணம்.

இதனை பார்த்ததும் நீங்கள் கோபம் கொள்ளக் கூடிய காரணங்கள் என நான் நினைப்பது

1. புலம் பெயர் மக்களை மேலும் மேலும் மந்தைகளாகவே வைத்திருக்க விரும்புவது

2. Self Censored: சுய தணிக்கை

Censoredஇவை இல்லையெனில் உங்களின் மேன்மை பொருந்திய கோபத்தின் காரணம் யாதோ?

தமிழனின் ஒவ்வொரு பகுதியாக பறி போய் கொண்டிருந்த போது 'உள்ளுக்கை விட்டு அடிக்கப் போறாங்கள்' என்று போதை ஊட்டி விட்டு தங்களை பற்றிய எந்த சுய விமர்சனமும் செய்யாமல், தன்னைப் போல் போதையூட்டிய இன்னொருவரை விமர்சிக்கும் பண்பையே சுட்டிக் காட்டினேன்.

இப்போது ஏற்பட்டுள்ள மனித அவலத்தின் தோற்றுவாய் காலத்தில் இன்றுள்ள விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தால் எமது முயற்சிகள் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதில் கூடிய முன்னேற்றம் கண்டிருக்கும் தானே.

  • 4 months later...
  • தொடங்கியவர்

வெற்றி தோல்விக்கு அப்பால்-2

இலங்கை தொடர்பான ஐ நா விவாதம் இலங்கைக்கு சார்பாக முடிந்துள்ளது. மனிதாபிமானமற்ற இரக்கமற்ற போர் வெற்றியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு பின்னால் பல்லாயிரம் மக்களின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் மக்கள் நடைபிணங்களாக உள்ளனர். பல்லாயிரம் இளைஞர் யுவதிகள் வதைக்கப்படுகின்றனர். இருந்தும் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.

மீளவும் இங்கே எமது பரப்புரையின் தோல்வி நிறுவப்படுகின்றது. புலம் பெயர் தமிழர்களின் இத்தனை போராட்டங்களும் வவுனியா அகதி முகாம்களுக்கு தொண்டு நிறுவனங்களை அனுப்புமளவுக்கு கூட வெற்றியளிக்கவில்லை. வதைபடும் பல்லாயிரம் இளைஞர் யுவதிகளின் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கான மூன்றாம் தரப்பு கண்காணிப்பு ஏற்படுத்த முடியவில்லை.

போர் என்பதில் தோல்வி ஒரு சாதராண விடயமே. இது இலங்கை படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் கிடையாது. இந்திய சீன பாகிஸ்தான் ரசிய இஸ்ரேலிய மற்றும் பல நாடுகளின் பலத்துக்கும் தமிழழர்களுக்குமான போர். இதில் இலங்கை வெல்வது ஒன்றும் ஆச்சரியமான விடயம் கிடையாது. புலிகள் பின்னடைந்ததும் ஆச்சரியம் கிடையாது. ஆனால் எமது நியாயங்கள் அடியோடு உலகால் நிராகரிக்கப்பட்டது எமக்கான படுதோல்வி. இதுவே தோல்வி.

எமது இனக் கட்டமைப்பும் சமூக ஒற்றுமையும் நிச்சயம் இவ்வாறான படுதோல்வியை சந்திக்க தகுதி உடையதே என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உலகின் எட்டுக்கோடிக்கும் மேற்படட்ட தமிழர்கள் இருந்தும் ஒரு மூலையில் தனது இனத்துக்கு நடந்த பேரளிவை தடுக்க முடியவில்லை என்பது இந்தளவு பரந்து விரிந்த தமிழினம் எத்தகைய பலத்துடன் ஆழுமையுடன் இருக்கின்றது என்பதற்கு தகுந்த சான்று. வன்னி பேரவலம் உலக வாழ் தமிழினத்தின் கையாலாக நிலையை அறிவிக்கின்றது.

அடிமைக்குணம் நிரம்பிய தமிழினத்தில் அடிமைக்குணங்களால் கட்டமைக்கப்பட்ட தமிழினத்தில் போராடி மடிந்த மாவீரர்களும் மூன்று சகாப்தத்துக்கும் மேலான விடுதலைப்போரும் இனத்தின் வரலாற்றில் மாபெரும் விடயம். சமூகச் சீர்கேடுகளாலும் அடிமைக்குணங்களாலும் சிதைந்து ஊனமாகிப்போன தமிழினம் ஊன்றிநடக்கக் கூடிய ஊன்றுகோலாக இந்த மாவீரர்களும் போராட்டமும் வரலாற்றில் அமைந்து விடுகின்றது.

ஈழம் என்பது ஒரு மாபெரும் விருப்பம். எமது ஆன்மாவில் என்றும் கசிந்து கொண்டிருக்கும் தீராத அவா. எமக்கான எமது சுதந்திர பூமி. இதுவே உலகம் முழுவதும் நாடின்றி அலைந்துகொண்டிருக்கும் தொன்மையான மொழியை பேசும் தமிழினத்துக்கான ஒரு சிறிய அழகான நாடு. உலகெங்கும் அடிமைத்தனத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கோடிக்காணக்கான தமிழினத்துக்கும் தமக்கென்று ஒரு நாடு இருக்கின்றது என்ற நம்பிக்கை. நாதியற்று அலைந்து கொண்டிருக்கும் தமிழ்த்தாய்கு சொந்தமாக ஆகக் குறைந்தது ஒரு குடிசை. இதற்காகத்தான் திலீபன் முதல் மில்லர் வரை அரும்பாடு பட்டார்கள்.

உலகெங்கும் தமிழன் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் சிங்களத்தால் அடக்குமுறைக்கு உட்பட்டு அதிகமாக நசிபட்ட ஈழத்தில் சுதந்திர நாட்டுக்கான போர் நடந்தது. இன்று சிங்களம் வெற்றிபெற்றுள்ளது. இதற்கு ஒரு பிரதான காரணம் அடிமைக் குணத்தையே கௌரவமாக ஏற்றுக்கொள்ளும் நிலையில் தமிழன் இன்னும் இருக்கின்றான் என்பதுவே அதுவாகும்.

ஈழப்போரில் அகதியானவர்கள் பல லட்சம்மக்கள். கொல்லப்பட்டவர்கள் லட்சத்துக்கும் மேலானவர்கள். போராட்டத்தில் இருந்து நழுவியவர்கள் பெரும்பான்மையானவர்கள். போராட்டத்தையே விமர்சித்து சிங்களத்துக்கு வக்காலத்து வாங்கி அடயாளம் தேடியவர்கள் பல்லாயிரம் பேர். போராடி மடிந்தது சில ஆயிரம் பேர்.

நாம் புலம்பெயர்ந்த நிலையில் எமக்கு ஈழம் விருப்பமாக உள்ளது ஆனால் அதற்காக நேரில் சென்று போராட தயாராக இல்லை. யாழிலும் தென்னிலங்கையிலும் உள்ள மக்கள் ராணுவத்தின் பிடிக்குள் அன்றாடம் நசிபடுகின்றவர்கள் அவர்களுக்கும் ஈழம் விருப்பமான ஒன்று அவர்களும் புலிகளுடன் இணைய தயாராக இல்லை. பெரும்பான்மை மக்களைப் பார்த்த வன்னி மக்களும் எப்படியாவது பெரும்பான்மை மக்கள் பேல் போராட்டத்தில் இருந்து நழுவி உயிர்வாழ்தலையே விரும்ப நிர்பந்திக்கப்பட்டனர் இருந்தும் முடிந்தவரை தமது சக்தியை அடியொட்ட கொடுத்தனர்.

தனது இனத்துக்காக ஒரு நாள் ஏனும் ஒன்றுபட முடியாத பல அரசியல் கட்சிகளின் கீழ் தமிழக அரசியல் தலைமகளும் மக்களும். உணர்வுள்ள தமிழன் பத்துப்பேர் அங்கே அவர்கள் உணர்வுகளை தின்று ஏப்பம் விடும் நூறுபேரும் அங்கே தான். தமிழகத்தால் எதுவும் செய்ய முடியாது. தாய்த் தமிழகம் என்று வர்ணிக்கப்படுவது இருந்தும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் அது தாயாக இருக்கும் தகுதி அற்றது. அவள் இந்திய ஆரிய அதிகாரவர்க்க அரக்கனுக்கு தேவடியாள். இதை ஆத்திரத்துடன் எழுதவில்லை யதார்த்தம் இதுவே தான்.

தமிழ்த்தேசியவாதம் என்பதை ஒரு வலுவான சக்தியாக கட்டியமைக்க முடியாத அடிப்படைச் சூழல் சமூகத்தில் புரையோடிப்போயுள்ள முரண்பாடுகள் ஊடாக இனம்காணப்படுதல் அவசியமாகின்றது. புலம்பெயர்ந்த தமிழர்களின் நிலைப்பாடு என்பது இங்கே மிகவும் கவனிக்க வேண்டியது.

தேசியவாத அலகுகளில் குறிப்பாக தொடர்ச்சியாக வாழும் பிரதேசம் மொழி கலாச்சாரம் பண்பாடு போன்ற கூறுகளில் எமக்கான மொழியும் பிரதேசமும் முக்கியமானது. கலாச்சாரம் பண்பாடு என்பது குறித்த தனித்துவம் எதுவும் கிடையாது.

இவ்வாறு பிற அலகுகளை விடுத்து மொழியும் தொடர்ச்சியாக வாழும் பிரதேசத்தையும் நாம் தேசியவாதத்தின் அடிப்படைக் காரணிகளாக வலியுறுத்தியுள்ளோம். இதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மொழியை தம்முடன் காவிக்கொண்டு பிரதேசத்தை விட்டு விலகியவர்கள். இந்த விலகல் என்பது தனியே சாதராண விடயம் இல்லை. சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் இந்த விலகல் உயர்வை காட்டுகின்றது. எனவே பெருளாதராத்தில் மேம்பட துடிக்கும் சமூகம் இந்த விலகலை தனது மேம்பாட்டுக்கான அடிப்படையாக கருதுகின்றது. எனவே இந்த விலகல் ஒரு வழிகாட்டி.

இந்த விலகலுக்கு விடுதலைக்கான போர் சாதகமாக அமைகின்றது. வளர்ந்த நாடுகளில் தங்கும் உரிமை பெறுவதற்கு இது உதவியாக அமைகின்றது. ஆரம்பத்தில் வெளியேறியவர்களுக்கு கல்வி உத்தியோகம் போன்றவை உதவியாக அமைந்தது. அதன் பி;னர் இந்த விடுதலைப்போரை பயன்படுத்தி ஏனையவர்கள் வெளியேறினர்.

இந்த நிலை தேசிய அலகுகளில் பிரதானமான பிரதேசத்தில் வேருன்றுதலை ஆட்டம் காணவைக்கின்றது. ஒரு பிரதேசம் என்பது எல்லாத்துக்கும் மேலான ஒன்று. தொழில் செய்து சீவிப்பதற்கும் ஏனைய மொழி காலாச்சார பண்பாடு போன்றவை நிலைபெறுவதற்கும் இது அவசியமானது. இவ்வாறான ஒரு கோணத்தில் தேசியவாதத்தின் ஆணிவேரை இந்த புலப்பெயர்வு அறுக்கின்றது.

தொடர்ச்சியான சிங்களத்தின் போர் பொருளாதாரம் கல்வி போன்ற அனைத்தையும் சிதைத்தே வந்துள்ளது. இது புலப்பெயர்வு சிந்தனைக்கு செய்வடிவத்தை விரைவுபடுத்தியது.

இந்த முரண்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் சமூகத்தில் மிகப் பழமையாக புரையோடியிருந்தது. தேசிய அலகுகளுக்குள் சம்மந்தப்படாத சாதி மதம் வர்க்கம் போன்றவையே காலாகாலம் கோலோச்சி வந்துள்ளது. தமிழ்த்தேசியவாதத்தின் பிறப்பு என்பதே இந்த தேசியவாதத்தில் சம்மந்தப்படாத காரணிகளின் ஆதிக்கப் போட்டியில் இருந்தே தனது பிறப்பை எடுக்கின்றது. இருந்தும் இந்த பிறப்பு அதாவது ஆரம்பம் என்பது இறுதியில் படிப்படியாக எங்கே வந்து முடியவேண்டுமோ அங்கே வந்து முடிந்துள்ளது. வன்னி மக்கள் உயிர்வாழ அவர்கள் பிரதேசம் அவசியம். அவர்கள் தமது வீடுகள் காணிகளுக்கு சென்று தொழில் செய்து இயல்பாக வாழ வேண்டும். பிரதேசத்தின் முக்கியத்துவம் இப்போது முக்கியத்துவம் பெறுகின்றது. தமது நிலங்களை நோக்கி போராட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. உரிமை பெறாத பல நாடுகளின் அகதிகள் அவர்கள் பிரதேசங்களுக்கு திரும்பவேண்டியுள்ளது. இந்த பிரதேசத்தில் மீளக் காலூன்றலுக்கு குரல்கொடுப்பதே முதற்கட்டமாக அமைகின்றது.

இப்போதைய காலம் என்பது எமது பிரதேசங்களில் நாம் வேருன்றுவதற்கு உரிய போராட்ட காலம். எமது பிரதேசம் ஒன்றே மிகப்பிரதானமானது. இதுவே விடுதலை நேக்கிய பின்னாளைய பயணத்துக்க அடிப்படை தவிர இப்போது தனிநாட்டுக்கான புலம்பெயர் நாடுகளின் முயற்ச்சி என்பது எந்தக் காலத்திலும் விடுதலை பெற முடியாத சூழ்நிலையை தோற்றுவிக்கும். எமக்கான பிரதேசத்தில் வாழ்வதின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அங்கே மக்கள் மீள இயல்பாக வாழ போராடி எமது பிரதேசங்களுக்கு மீள திரும்புதல் குறித்த சிந்தனையை கொஞ்சம் கொஞ்சமாக எமக்குள் வளர்க்க முயற்சிக்க வேண்டும். தவிர ஏவி விடுதல் தூண்டிவிடுதல் தனியரசு புறநிலை அரசு போன்ற அவசரங்கள் பசீல் ராஜபக்ச காசா முகாம்களை பார்வையிட்டதன் நோக்கத்தை செயல்வடிவமாக்கும். காலத்துக்கும் தமிழன் முட்கம்பி வேலி முகாமுக்குள் முடங்கி செத்துப்போக வழிவகுக்கும். ஒவ்வொரு படியாக நாம் ஏற முயற்சிக்க வேண்டும். படிகளையும் நாமே கட்ட வேண்டும். தவிர அவசரப்படும் காலத்தில் நாம் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.