Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ட்விட்டரில் ஆபாசமாக சித்தரிப்பதாக பாடகி சின்மயி போலீசில் புகார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்விட்டரில் ஆபாசமாக சித்தரிப்பதாக பாடகி சின்மயி போலீசில் புகார்!

Posted Date : 14:09 (18/10/2012)Last updated : 14:13 (18/10/2012)

chinmayi.jpgசென்னை:ட்விட்டர் உள்ளிட்ட இணைய தளங்களில் ஒரு கும்பல் தம்மை ஆபாசமாக சித்தரிப்பதாக பிரபல பின்னணி பாடகி சின்மயி காவல் துறையில் பரபரப்பான புகார் அளித்துள்ளார்.

சினிமாவில் பின்னணி பாடிவரும் சின்மயி அழகைப் பார்த்து திரைப்பட இயக்குனர்கள் பலர் அவரை நடிக்க அழைத்தபோது 'நோ’ சொல்லி விட்டார். முழுக்க முழுக்க இசைப் பணியில் மட்டுமே தன்னுடைய தாயாருடன் இணைந்து ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த சின்மயி இரண்டு வெவ்வேறு புகார்களை அளித்தார்.

முதல் புகாரில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சங்கீத மகா யுத்தம்’ நிகழ்ச்சியை கஜேந்திரசிங் தயாரித்து நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பணியாற்ற எனக்கு குறிப்பிட்ட பணம் தருவதாக ஒப்புக்கொண்டார்.

நிகழ்ச்சி முடிந்து மாதம் பல சென்ற பிறகும் எனக்கு தரவேண்டிய ரூபாய் 12 லட்சம் தொகையை இதுவரை தராமல் ஏமாற்றி விட்டார்.எத்தனையோ முறை போராடியும் என்னை உதாசீனப்படுத்தினார்.கஜேந்திரசிங் எனக்கு தரவேண்டிய தொகையை காவல்துறை மீட்டுத்தர வேண்டி இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு புகார் மனுவில்,"ட்விட்டர் இணையதளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன. 6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி,"சமீப காலமாக ட்விட்டர் இணையதளத்தில் அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

[size="2"] [/size]

இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும் என்னை பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம் மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்”என்றார்.

நன்றி: விகடன் செய்திகள்:

http://news.vikatan.com/?nid=10857#cmt241

  • கருத்துக்கள உறவுகள்

6 பேர் கொண்ட கும்பல் என்னை இணையதளத்தில்

அசிங்கப்படுத்துகிறது : பாடகி சின்மயி பரபரப்பு புகார்

sinmayi.jpg

[size=4]’சர சர சார காத்து’ பாடல் இன்னனும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வாகைச்சூடவா படத்தில் வரும் இந்தப்பாடலை பாடியவர் பாடகி சின்மயி. 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் வரும் 'ஒரு தெய்வம் தந்த பூவே' பாடல் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. தொடர்ந்து 7 மொழிகளில் 600-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடி முன்னணி பாடகியாக இருக்கிறார்.

டெலிவிஷன்களில் இசை சம்பந்தமான நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் இன்று காலை தனது தாயார் பத்மாசினியுடன் போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். அங்கு 2 புகார் மனுக்கள் கொடுத்தார்.

ஒரு புகார் மனுவில், ‘’வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தும் கஜேந்திரகுமார் என்பவர் எனக்கு ரூ.12 லட்சம் பணம் தரவேண்டும். பலமுறை கேட்டும் அவர் பணம் தராமல் காலம் கடத்திக்கொண்டு வருகிறார். எனவே ரூ.12 லட்சம் பணத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு புகார் மனுவில், ‘’டுவிட்டர் இணைய தளத்தில் என்னை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங் களும், அருவருக்கத்தக்க வாசகங்களும் இடம் பெற்றுள்ளன.

6 பேர் சேர்ந்து இந்த அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டுள்ளனர். உதவி பேராசிரியர் ஒருவருக்கும் இதில் தொடர்பு உள்ளது. அவர்கள் மீது போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து சின்மயி செய்தியாளர்களிடம், ‘’சமீப காலமாக டுவிட்டர் இணையதளத்தில் அரசியல் பிரபலங்களையும், என்னைப்போல் சினிமா உலகில் இருப்பவர்களையும் மிகவும் கேவலமாக சித்தரிக்கும் நிலை ஏற்பட்டுளளது. பிரதமர் உள்பட அனைவரையும் தவறாக இணைய தளத்தில் சிலர் சித்தரித்து வருகிறார்கள்.

இதனால் என்னைப் போன்று பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று கேட்டுக் கொண்ட பிறகும் அவர்கள் இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் கருத்துக்களையும் படங்களையும் வெளியிடுவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

குறிப்பாக பெண்களை குறிவைத்து அவர்களின் மனம் நோகும்படி 6 பேர் கொண்ட கும்பல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது. அதிலும் என்னை? பற்றி நான் ஒவ்வொருமுறையும் புகழின் உச்சியில் இருக்கும் போதெல்லாம் மிகவும் கேவலமாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களையும், 6 பேர் பெயர்களையும் குறிப்பிட்டு கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளேன்.

எனக்கு ஏற்பட்டுள்ள நிலையை எனது பேஸ்புக்கிலும் நான் வெளியிட்டுள்ளேன். எனவே இதுபோன்று வக்கிரமான செயல்களில் ஈடுபடுவோரை போலீசார் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்’’என்று கூறினார்.

http://www.nakkheera...ws.aspx?N=84486[/size]

[size=4]editing for font size[/size]

Edited by nunavilan

தமிழர்கள், மீனவர்கள், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் முகத்தில் காறித்துப்பும் சின்மயி !

--------------------------------------------------------------------------------------------------------------------------

``மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?"

இப்படி ஒரு அரிய கருத்துகளை சொல்லியிருப்பவர் வேறு யாருமல்ல..

``என்னை டுவிட்டரில் அவதூறு செய்கிறார்கள்’’ என்று கமிஷனர் ஆபிசில் புகார் செய்த பாடகி சின்மயி தான் அந்த அறிவாளி.

சின்மயி போலீசில் புகார் கொடுக்கப்போகிறார் என்ற செய்தி வந்ததும், எவனோ ஆபாசப்பட டார்ச்சர் கொடுத்துட்டான் போலனு தான் நினைச்சேன். ஆனால் விசாரணைல இறங்க ஆரம்பிச்சப்பிறகு தான் தெரிஞ்சது மேட்டரே வேற..

பஞ்சாயத்துக்கு காரணம் அம்மணியோடு சாதித் திமிர்.

சமூகத்தில் அடித்தளத்திலிருக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் மேலே முன்னேறி வர பயன் படும் இடஒதுக்கீட்டை இழிவுப்படுத்தி அம்மணி டுவிட்டரில் எழுதுகிறார்.

அதோடு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழகத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கையில் மீனவர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி எழுதுகிறார். இதற்கு டுவிட்டரில் இயங்கும் ராஜன் உள்ளிட்ட தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இது தான் முக்கியமான பஞ்சாயத்துக்கு காரணம்.

உங்களுக்கு பிழைப்பு நடத்த தமிழகமும் தமிழர்களும் தேவை. வளர்ந்தவுடன் தமிழர்கள் முகத்தில் காறி துப்புவீர்கள். ஈழத்தமிழர்களும், தமிழக மீனவர்களும் கொல்லப்படுவதை கண்டிக்க தமிழனாக இருக்க வேண்டியதில்லை. மனிதனாக இருந்தாலே போதுமானது.

ஆனால் சைவப்பட்சினி என்றும் ஆச்சாரமானவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் உங்களைப்போன்றவர்கள் தமிழர்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்தி நக்கல் அடிக்கிறீர்கள்.

இப்படி உங்கள் புத்தி இருப்பதற்கு காரணம் ``உலகத்துல இருக்கிற அத்தனை ஸ்ரீலங்கன்ஸ் எங்களுக்கு ஆதரவு ” என்று உங்கள் அம்மா பேசியதற்கும் இதற்கும் நிச்சயம் தொடர்பு இருக்கத்தானே செய்கிறது.

நியாயப்படி,

இடஒதுக்கீட்டையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் இழிவுப்படுத்தி எழுதியதற்கு சின்மயி மேல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தோழர்கள் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். வழக்கு தொடருங்கள்..

அம்மணி நீங்கள் பிரபலமாக இருப்பதை பயன்படுத்தி புகார் கொடுத்து விட்டால் நீங்கள் செய்தது எல்லாம் நியாயம் என்றாகிவிடாது. நீங்கள் உங்கள் மொழிவெறியுடனும் சாதி வெறியுடனும் எழுதுவீர்கள்.. தமிழர்கள் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா..

(அதே சமயம் விவாதத்தில் சின்மயியை தனிப்பட்ட வகையில் ஆபாசமாக யாரும் எழுதியிருந்தால் அதுவும் கண்டனத்திற்குரியதே.)

தொடர்புடைய இடுகை..

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. இப்பிடி போகுதா கதை? :rolleyes:

420481_356034157822155_1031765528_n-100x75.jpg

மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது? -சின்மயி ட்விட்டரில்..

பார்பன வெறி அடுத்த தலைமுறைக்கும் தாரை வார்க்க பட்டு விட்டதே, ராஜாஜி தொடங்கி சின்ன அம்மை வரை. என் இந்த கொலை வெறியோ...

நீங்கள் தமிழனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்த பட்சம் மனித நேய உணர்வு கூடவா இல்லை. எம் மண்ணில் இருந்து கொண்டே எம் மக்களுக்கு எதிராக எப்படி உங்களால் கருத்து சொல்ல முடிகிறது. சாதியால் மதத்தால் பிரிந்து கிடக்கிற தமிழன் ஒன்று சேர மாட்டான் என்கிற தைரியமா?

அம்பிகளே பார்த்தேளா ? எங்கள் ஒற்றுமையை இதை மாற்ற தமிழன் தமிழனாக உருப்பெற வேண்டும் …

[size=3][size=3]http://www.eelamboys.net/archives/535[/size][/size]

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பாடகி சின்மயிக்கு எதிராக கொந்தளிக்கும் தமிழர்கள்[/size]

[size=4]பிரபல பின்னணி பாடகி சின்மயி, வக்கிரப்புத்தி கொண்ட ஆண்கள் தனக்கு எதிராக டிவிட்டர் இணையதளத்தில் அவதூறாக செய்தி பரப்பி வருவதாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார்.[/size]

[size=4]இந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது. சின்மயிக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சின்மயி குறித்து சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.[/size]

[size=4]’’மீன்களை மீனவர்கள் கொல்கிறார்கள், மீனவர்களை இலங்கை கடற்படை கொல்கிறது, இரண்டும் ஒன்றுதான், இதில் இலங்கையை கண்டிப்பதற்கு என்ன இருக்கிறது?’’ - என்று சின்மயி ட்விட்டரில் கூறியதாகவும்,[/size]

[size=4]’’ இது பார்ப்பன வெறி. ஏன் இந்த கொலை வெறி’’ என்று சின்மயிக்கு எதிராக தமிழர்கள் கொந்தளித் துள்ளனர்.[/size]

நக்கீரன்.கொம் (http://www.nakkheera...ws.aspx?N=84721)

-----------------------------

இவா சுப்பிரமணிய சுவாமியின் பேத்தியா இருப்பாவோ..??! :(:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களை விமர்சித்து டிவிட் செய்தாரா சின்மயி?

22-chinmayi22-600.jpg

சென்னை: மறவர் சீமையில் தமிழ் வளர்ச்சி குடும்பத்தைச் சேர்ந்தவள் நான். தமிழக மீனவர்களை விமர்சித்து நான் டிவிட் செய்யவில்லை என்று பாடகி சின்மயி விளக்கம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் அளித்துள்ள நீண்ட விளக்கம்....

ஒட்டு மொத்த தமிழர்களுக்கு எதிரானவள், ஒரு குறிப்பிட்ட சாதித் திமிர், மீனவர்கள் குறித்து தரக்குறைவாகப் பேசினேன் என்று பலரும் தங்களுக்குத் தோன்றிய வகையில் மனம் போன போக்கில் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினார்கள்.

நான் ஒரு தமிழச்சி. பல தமிழர்களின் வீட்டின் செல்லப் பிள்ளை. தமிழர்களின் ஆதரவினாலும், கடவுள் கிருபையினாலும், என் தாயாருடன் ஆசிர்வாததினாலும் வளர்ந்து வரும் இளம் திரைக் கலைஞர்களில் நானும் ஒருவள்.

ஐயங்கார் குடும்பம்

சிறு வயது முதலே என்னை சீராட்டி, பாராட்டி வளர்த்து வருவது இந்தத் தமிழ்ச் சமூகம் தான். பாரம்பரியமாகவே தமிழ் வளர்க்கும் பரம்பரையில் வந்தவள் நான். வித்வான் ரா.ராகவ ஐயங்கார் , முனா ராகவ ஐயங்கார் அவர்களின் பேத்தி என் தாயார். மறவர் சீமையில் தமிழ் வளர்த்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவள் தான் நான்!

உள்ளூர்த் தமிழர்களானாலும் சரி, வெளிநாடுகளில் வசிக்கும் புலம் பெயர் தமிழர்களானாலும் சரி என்னை அவர்களின் சொந்த சகோதரியாகவே பார்த்து வருகிறார்கள். நானும் அவர்களிடத்தில் எனக்குள்ள மதிப்பை கட்டிக் காத்து வருகிறேன். அதிலும் சிறப்பாக இலங்கைத் தமிழர்களைப் பொறுத்த வரையில், எங்கள் மறவன் சீமையின் ஒரு Extension ஆகத்தான் நாங்கள் கருதுகிறோம். அவர்களுடைய கஷ்டத்தை இன்னும் அதிகமாக உணர்ந்திருக்கிறோம். நான் இலங்கை தமிழர்களுக்காக நடத்தி வந்த கச்சேரிகளில் பங்கு பெற்று மருத்துவம் மற்றும் படிப்பிற்கு சம்பந்தப்பட்ட Charitieகளுக்கு நிதியுதவி திரட்டியிருக்கிறோம்.

இந்தச் சமுதாயத்தால் வளர்ச்சி பெற்று வரும் ஒவ்வொரு தனி மனிதனும் தன்னால் இயன்ற அளவு சமுதாயம் வளரவும் பங்களிப்பு தரவேண்டும் என்ற நம்பிக்கை உடையவள் நான்.

வரவேற்றார்கள், பேசினார்கள், விவாதித்தார்கள்

என்னுடைய கடுமையான பணிகளுக்கு இடையே சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாக என்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்வதோடு இல்லாமல் அடுத்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள் என்று தெரிந்து கொண்டால் எனக்கு மிகுந்த பயனாக இருக்கும் என்று நம்பினேன். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன் சமூக வலை தளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் இணைந்து கொண்டேன். உலகெங்கிலும் வாழ்ந்து வரும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வரவேற்றார்கள். பேசினார்கள். விவாதித்தார்கள்.

திடீரென ஒரு நாள் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் தாக்குதலைக் கண்டிக்கக்கோரி ட்விட்டரில் ஒரு சிலரால் ட்விட்டுகள் வெளியாகின. #TNFisherman என்ற hashடேக் (தொடர் கீச்சு) மூலம் அனைவரும் இலங்கை அரசை கண்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார்கள். என்னையும் கேட்டார்கள். நல்லதொரு காரியத்தில் நானும் இணைந்து செயல்படுவதில் என்றுமே தயங்கியதில்லை. ஆனால் மேற்படி #TNFishermanதொடர்பில் வெளியான பல்வேறு ட்வீட்டுகளில் நம் நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் உள்பட பலரை கேவலமாகவும், அவதூறாகவும் திட்டி ட்விட்டினார்கள். எனவே எனக்கு இந்த ஒரு குழுவுடன் இணைந்து (இந்த எண்ணம் நல்லதாக இருந்தாலும்) குறிப்பிட்ட hashtag ஐ ஆதரிக்க மாட்டேன் என்று கூறினேன்.

தொடர் கீச்சில் இணைய மறுத்தேன்

இந்த hashtag இல் மேற்கண்ட காரணங்களுக்காக நான் வெகுவாக புறக்கணிக்கும் ஒரு குழுவினரால் வற்புறுத்தப் பட்டதால் இந்தத் தொடர் கீச்சில் இணைய மறுத்தேன். இதற்கும் மீனவர்கள் மேல் எனக்குள்ள அனுதாபத்திற்கும் எந்த வித தொடர்பும் கிடையாது. என் அனுதாபத்தை என்னுடைய முறையில், hashtag போடாமல் நானே தனியாக ஒரு ட்விட் போட்டேன். இவர்களுடன் இணைய மறுத்தேன். இது தவறா? இதில் மீனவர்களுடைய பிரச்னையை பேசுகிறார்கள, அல்லது தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைய புகுத்துகிறார்களா?

சாப்பிடுவதும் இல்லை, தொட்டியில் வளர்ப்பதும் இல்லை

அடுத்து "நீங்கள் மீன் சாப்பிடுவது இல்லையா?" என்ற கேள்விக்கு "இல்லை. நான் சைவம்" என்று பதில் கூறினேன். "மீன் தொட்டி வாஸ்துக்காக இருக்கிறதே" என்று அதே ட்விட்டில் பதில் கேலி செய்த பொது, "நான் மீன் சாப்பிடுவது இல்லை, தொட்டியில் வைத்து துன்புறுத்துவதும் இல்லை. PETA supporter" என்று ஒரு ":)" போட்டேன். இந்த பதில் கூட மேலே சொன்ன#TNFisherman Hash டேக் பிரச்னை நடப்பதற்கு முதல் நாள் வேறொரு கருத்துப் பரிமாற்றத்தின் போது தான்! ஆனால் நான் மீனவர்களைக் கொல்பவர்களைக் கண்டிக்க மாட்டேன்.

மீனவர்கள் மீன்களை கொல்கிறார்கள் என்றெல்லாம் கூறியதாக தகவல் திரித்துக் கூறப்பட்டு இணையம் முழுவதும் பரவியது. இந்த கற்பனை கீச்சுக்குச் சொந்தக்காரர் திருவாளர் @rajanleaks. இதெல்லாம் உண்மை தானா என்று உங்களில் பலர் என் தரப்பு என்று ஒன்று இருக்கவேண்டும் என்று கூட நினைக்கத் தவறியது எனக்கு மிகவும் வருத்தமே. மற்றும் என்னுடைய சாதி, மதம், இனம் என்று சகல வகைகளிலும் ஏசப்பட்டேன் .

அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு

பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு' தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC' என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி' என்று பிரச்னை கிளப்பப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை பல சமயங்களில் பல இடங்களில் என்னை நேரடியாகவும், மறைமுகமாகவும் படு கேவலமான வசைச் சொற்களைக் கொண்டு ட்விட்டரில் விமரிசித்து வருகிறார்கள் ஒரு சிலர் கொண்ட கும்பல் ஒன்று.

என் தாய் வருந்தினார்

என்னைப் பெற்று வளர்த்தெடுத்த என் தாய்..என்னுடைய வளர்ச்சிக்காவே தன் நேரம் முழுவதையும் செலவழித்து வரும் என் தாய்.. இந்த மாதிரியான வசைச் சொற்களைக் கண்டு மனம் வருந்தினார். இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று முடிவு செய்து, இந்த மாதிரி தொடர்ந்து வசைபாடுபவர்களின் பட்டியலைத் தயாரித்து போலீஸ் துறையிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்தோம்.

பொது வெளியில் இப்படி அநாகரீகமாக நடந்த பலரின் பின்னணியை என் தாயார் கண்டறிந்து இவர்களில் பெரும்பாலானவர்கள் இள வயதும், திருமணம், சிறு குழந்தைகள் என்ற நிலையில் இருப்பதை உணர்ந்து அவசரத்தில் சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவேண்டாம், பொறுமையாக பேசி உணர்த்த முயற்சிக்கலாம் என்று பலரிடம் அலைபேசியிலும், அவர்களின் நண்பர்கள் மூலமாகவும், ஒரு முடிவு காண, என் தாயார் முயற்சித்தார். அதன் விளைவு தான் திரு sharankay அவர்களின் மிக கீழ்த்தரமான கீசுகளின் வெளிபாடு.

இதற்கு பிறகும் நாங்கள் சட்டபூர்வமான நடவடிக்கையை எடுக்காவிட்டால் எங்களுக்கே மிகவும் தீதாத முடியும் என்ற காரணத்தினால் இந்த முடிவிற்கு தள்ளப்பட்டோம். நாங்கள் பரிதாபப்பட்டதை பயந்து விட்டதாக நினைத்து அதன் பிறகு தான் அநாகரிகத்தின் உச்சத்தையும் கடந்துவிட்டனர். மற்றபடி யாரையும் பழிவாங்குவதிலோ, தண்டனை வாங்கி கொடுப்பதிலோ எங்களுக்கு எந்த விதமான மகிழ்ச்சியும் கிடையாது.

என் அம்மாவையும் திட்டினார்கள்

இவற்றைத் தொடர வேண்டாம் என்று ஃபோன் மூலம் என் அம்மா சம்பந்தப்பட்டவர்களிடம் தொடர்பு கொண்டு பேச முயற்சித்த போதும் அதனை மிரட்டல் விடுவதாகக் கூறி திசை திருப்ப முயன்றார்கள். என் அம்மாவையும் மிகத் தரக்குறைவாக கிண்டல், கேலி செய்து ட்விட்டினார்கள்.

அதன்பிறகு சட்டத்தின் துணியை நாடுவதை தவிர வேறு வழில்லாத நிலைக்கு தள்ளப்பட்டோம்.

இதற்குப் பிறகும் ஒரு பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் மூலம் நாங்கள் பேசாத வார்த்தைகளை நாங்கள் பேசியதாகச் சொல்லி பொய்ச் செய்தி பரப்பி உலகம் முழுதும் உள்ள தமிழர்களின் கொந்தளிப்பான உணர்சிகளை தூண்டும் வகையாக விஷயத்தை திசை திருப்பப்பட்டது.

இந்நிலையிலும் ஏராளமான தமிழ்ச் சகோதர, சகோதரிகள் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் எங்களுக்குச் செய்தார்கள். வழி நடத்தினார்கள். ஆறுதல் சொன்னார்கள்.

இந்தவொரு சிரமமான சூழலில் எனக்கு முழு ஆதரவளித்த ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயத்துக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

http://tamil.oneindia.in/movies/news/2012/10/singer-chinmayi-refutes-charges-against-her-163560.html

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

ஒரு சின்ன டவுட்டு..

பெரும்பாலன பாடகர்கள் இங்கிட்டு அவாவே இருப்பதற்கு காரணம் என்ன..? நேக்கு எல்லாம் சங்கீதம் ராதா..? நான் ரூம் போட்டு யோசித்தும் எனக்கு ஏதும் பிடிபடல்... தோழர் இசை மேதை இசைகலைஞ்சன் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்..ரெல் ரெல் மீ..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
:lol:
  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

ஒரு சின்ன டவுட்டு..

பெரும்பாலன பாடகர்கள் இங்கிட்டு அவாவே இருப்பதற்கு காரணம் என்ன..? நேக்கு எல்லாம் சங்கீதம் ராதா..? நான் ரூம் போட்டு யோசித்தும் எனக்கு ஏதும் பிடிபடல்... தோழர் இசை மேதை இசைகலைஞ்சன் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்..ரெல் ரெல் மீ..

புரட்சி..

அவாள்லாம் சின்ன வயசில இருந்தே சங்கீதம் கத்துக்கிறா.. :rolleyes: குரூப்பா கத்துக்கிறா.. அவாள்க்குள்ள பேசிக்கிறா.. பிராக்டிஸ் பண்ணிக்கிறா.. :unsure:

நீங்க கத்துண்டாலும், மேம்போக்கா கத்துக்கிறேள்.. :wub: அத்தி பூத்தாப்பில யாராச்சும் உங்க குரூப்பில வரா.. அதுவும் கடவுள் பிராப்தம்னா.. :blink: மத்தபடி மியூசிக் உங்க கல்ச்சர்ல இல்லன்னா.. சொல்லா புரிஞ்சுக்குங்கோ..! :D

  • கருத்துக்கள உறவுகள்
:lol: :lol:
  • கருத்துக்கள உறவுகள்

ஓக்கே சுண்டல் காரு... இசைகலைஞ்சன் காரு நாக்கு .. அர்த்தமாயிந்தி...

  • கருத்துக்கள உறவுகள்

டிஸ்கி:

ஒரு சின்ன டவுட்டு..

பெரும்பாலன பாடகர்கள் இங்கிட்டு அவாவே இருப்பதற்கு காரணம் என்ன..? நேக்கு எல்லாம் சங்கீதம் ராதா..? நான் ரூம் போட்டு யோசித்தும் எனக்கு ஏதும் பிடிபடல்... தோழர் இசை மேதை இசைகலைஞ்சன் அவர்கள் பதில் அளிக்க வேண்டும்..ரெல் ரெல் மீ..

[size=1]

[size=4]நல்ல மூக்கு முட்ட தயிர் சாதம் அள்ளி சாப்பிட்டிலா [/size][/size][size=1]

[size=4]குரல் நல்ல குளிரா இருக்கும்.[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி..

அவாள்லாம் சின்ன வயசில இருந்தே சங்கீதம் கத்துக்கிறா.. :rolleyes: குரூப்பா கத்துக்கிறா.. அவாள்க்குள்ள பேசிக்கிறா.. பிராக்டிஸ் பண்ணிக்கிறா.. :unsure:

நீங்க கத்துண்டாலும், மேம்போக்கா கத்துக்கிறேள்.. :wub: அத்தி பூத்தாப்பில யாராச்சும் உங்க குரூப்பில வரா.. அதுவும் கடவுள் பிராப்தம்னா.. :blink: மத்தபடி மியூசிக் உங்க கல்ச்சர்ல இல்லன்னா.. சொல்லா புரிஞ்சுக்குங்கோ..! :D

:lol::D முடியல இசை

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சி..

அவாள்லாம் சின்ன வயசில இருந்தே சங்கீதம் கத்துக்கிறா.. :rolleyes: குரூப்பா கத்துக்கிறா.. அவாள்க்குள்ள பேசிக்கிறா.. பிராக்டிஸ் பண்ணிக்கிறா.. :unsure:

நீங்க கத்துண்டாலும், மேம்போக்கா கத்துக்கிறேள்.. :wub: அத்தி பூத்தாப்பில யாராச்சும் உங்க குரூப்பில வரா.. அதுவும் கடவுள் பிராப்தம்னா.. :blink: மத்தபடி மியூசிக் உங்க கல்ச்சர்ல இல்லன்னா.. சொல்லா புரிஞ்சுக்குங்கோ..! :D

இன்னொன்னு... அவாளுக்கு பெரியவாவ கண்டம்.. சா.. கணம் பண்ணத் தெரியுமாக்கும். சுப்பிரமணிய சுவாமி போல.. கொலைகாரன்.. ராஜபக்ச காலில விழுந்து கூட.. அவா கணம் பண்ணிக்குவா. ஆனா சூத்திரர் காலில வெழா..! *** :lol::icon_idea:

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

பேசுகின்ற மொழி தமிழ். பாடுகின்ற மொழி தமிழ். ஆனால், தமிழனுக்கும் அவன் சாந்த விடயங்களுக்கும் எதிராக உள்ள சின்மயி, புலம்பெயர் நாடுகளில் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை வந்தால் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுங்கள்.

புலம்பெயர் தமிழர்கள் இதனைக் கூடச் செய்யாது விட்டால் தமிழ் கூறும் நல் உலகம் உங்களை மன்னிக்காது.

இளையராஜா எமக்கு எதிராகவோ அல்லது ஆதரவாகவோ எதுவுமே செய்யவில்லை. ஆனாலும் அவரை எதிர்க்க வேண்டும் என்று புலத்து புலத்து கண்மணிகளாகிய நீங்கள்

தீவிரமாக செயற்பட்டு வருகின்றீர்கள்.

ஆனால், சின்மயி அடிப்படையில் எமக்கு எதிராகவே கருத்துக்களை தெரிவிக்கின்றவர்- தெரிவித்து வருகின்றவர். ஆகவே, இவரை சும்மா விடாதீர்கள்.

நான் அறிந்த வரை சின்மயிதான் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டு- பின்னர் தனக்குப் பாதகமாக போகின்றது என்பதனை அறிந்து காவல்துறையிடம் முறைப்பாடு செய்து இருக்கின்றார்.

இரு அப்பாவிகளை சிறைக்குள் தள்ளிவிட்டு தெனாவெட்டாக வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றார்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

பேசுகின்ற மொழி தமிழ். பாடுகின்ற மொழி தமிழ். ஆனால், தமிழனுக்கும் அவன் சாந்த விடயங்களுக்கும் எதிராக உள்ள சின்மயி, புலம்பெயர் நாடுகளில் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வருகை வந்தால் அவருக்கு எதிராக கிளர்ந்து எழுங்கள்.

ஆனால், சின்மயி அடிப்படையில் எமக்கு எதிராகவே கருத்துக்களை தெரிவிக்கின்றவர்- தெரிவித்து வருகின்றவர். ஆகவே, இவரை சும்மா விடாதீர்கள்.

நான் அறிந்த வரை சின்மயிதான் பிரச்சினைகளை உருவாக்கிவிட்டு- பின்னர் தனக்குப் பாதகமாக போகின்றது என்பதனை அறிந்து காவல்துறையிடம் முறைப்பாடு செய்து இருக்கின்றார்.

இரு அப்பாவிகளை சிறைக்குள் தள்ளிவிட்டு தெனாவெட்டாக வேறு கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றார்.

நிர்மலன், இது அவாளுக்கே உரிய திமிர்!

ஒரு முறை, கிறிஸ்துவ மதத்தைப் பரப்புபவர்கள் அக்கிரகாரத்துனுள் நுழைந்து விட்டார்கள்!

ஊஞ்சலில் தோசை சாப்பிட்டுக் கொண்டு, ஆடிக்கொண்டிருந்தார் வீட்டுக் காரர்.

இயேசு உங்களைக் காப்பாற்றுவார். - மதம் பரப்புபவர்கள்!

அடே, தன்னையே காப்பாற்ற முடியாமல், சிலுவையில் தொன்கினவர் அவர்! அவரா என்னைக் காப்பாற்றப் போகிறார்?- வீட்டுக்காரர். :o

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சின்மயி விவகாரம்........ அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன்

.by Marx Anthonisamy on Wednesday, 24 October 2012 at 03:40 ·.

வளர்ந்து வரும் தமிழ்த் திரைப் பாடகி சின்மயி கொடுத்த புகார், காவல்துறை அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து ஒரு பேராசிரியர் உட்படச் சிலர் கைதானது, இன்னும் சிலர் தேடப்படுவது முதலியன குறித்து முகநூல் பக்கங்களில் நடை பெறும் விவாதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. கருத்துச் சுதந்திரம், அதன் எல்லை ஆகியன குறித்துக் காலங்காலமாக நடந்து வருகிற ஒரு விவாதத்தின் தொடர்ச்சியே இது. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் கற்பனை செய்து கூடப் பார்த்திராத அளவிற்குத் தொழில் நுட்ப வளர்ச்சியும் அதன் விளைவான கருத்து வெளிப்பாட்டு முறையும் பெரிய அளவு வளர்ந்துள்ள சூழலில் இன்றைய விவாதம் இன்னும் சற்று விரிந்த தளத்தில் மேற்கொள்ளப்பட வேண்டியதாக மாறியுள்ளது.

அச்சு மற்றும் இதழிய வளர்ச்சி என்பது மிகப்பெரிய ஜனநாயக மாற்றங்களில் ஒன்று என்பது யாரும் மறுக்க இயலாத ஒன்று. அதே நேரத்தில் இந்த ‘ஜனநாயக’ ஊடகங்கள் பெரு முதலாளிகளின் பிடியில் இருந்ததன் விளைவாக, இப்படி உருவான கருத்துச் சுதந்திரம் அதன் வெளிப்பாட்டிற்கு முன்னதாகவே ஒரு தணிக்கையை எதிர் கொள்ள வேண்டியதாக இருந்தது. அரசுகளின் கருத்திற்கும் பெரு முதலாளிகளின் கருத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இருந்ததில்லை என்பதால் இந்தத் தணிக்கை மிகவும் சக்தி வாய்ந்ததாக செயல்பட்டு வந்தது. சமயத்தில் இத்துடன் கூடுதலாக அரசின் முன், பின் தணிக்கைகளும் சேர்ந்து கொண்டன.

இருபத்தோராம் நூற்றாண்டின் அடையாளமாக முளைத்துள்ள சமூக வலைத் தளங்கள் இந்த முன் தணிக்கையை இன்று சாத்தியமில்லாமல் செய்துள்ளன. இந்த வலைத் தளங்களும் கூட உலகின் மிகப் பெரிய கார்பொரேட் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுபவைதான் என்ற போதிலும் இந்தப் புதிய தொழில் நுட்பம் முன்தணிக்கையைச் சாத்தியமில்லாமல் செய்துள்ளது. இது மிகப் பெரிய கருத்துச் சுதந்திர விகசிப்பிற்கு இன்று காரணமாகியுள்ளது. இதுகாறும் எழுதுவதற்குக் களம் கிடைக்காமற் போயிருந்த பலரும் தங்கள் எழுத்து முயற்சிகளை, அரசியல் வெளிப்பாடுகளை எல்லையற்ற சுதந்திரத்துடன் மேற்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய தர வர்க்கத்தின் வளர்ச்சி, இத் தொழில் நுட்பம் நாளுக்கு நாள் மலிவாகிப் பரவலாதல் என்பதெல்லாம் இந்தக் கருத்து விசாலிப்பில் மிகப் பெரிய பாய்ச்சலை ஏற்படுத்தியுள்ளன. இரண்டாண்டுகட்கு முன் அரபுலகில் ஏற்பட்ட புரட்சிகளில் இந்தப் புதிய ஊடகங்கள் வகித்த பங்கைக் கண்டபின்பு அரசுகள் விழித்துக் கொண்டன. இந்த ஊடகங்களைத் தங்கள் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளிலும் இவற்றைக் கடும் கண்காணிப்பிற்குள் கொண்டு வரும் முயற்சியிலும் இறங்கின. சமூக வலைத் தளங்களைச் செயல்படுத்துகிற கார்பொரேட்டுகள் என்ன இருந்தாலும் கார்பொரேட்கள் தானே. அவை ஒரு குறிப்பிட்ட அளவு எதிர்ப்புக் காட்டியபோதும் ஒரு கட்டத்திற்குப் பின் அரசு கெடுபிடிகளுக்கு வளைந்து கொடுக்க ஆரம்பித்தன.

கூடங்குளம் போராட்டத்தை ஒட்டி இன்று இந்தச் சமூக வலைத் தளங்கள் தமிழகத்தில் கடுமையாகக் கண்காணிக்கப் படுகின்றன. புதிய நபர்கள் யாரேனும் அணு உலைகளுக்கு எதிராக ஒரு பதிவை இட்டால், உடன் அவர்கள் வீட்டிற்கு உளவுத் துறையினர் படை எடுக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

சின்மயி விவகாரத்திற்குத் திரும்புவோம். இது தொடர்பான ஷோபாசக்தியின் முக நூல் பதிவு, அதில் தரப்பட்டுள்ள இணைப்புகள், ‘சவுக்கு’ இணையத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள கட்டுரை, சின்மயி வெளியிட்டுள்ள அறிக்கை, தொடர்புடைய சில ட்வீட்டர் பதிவுகள், சில தொலைக் காட்சி விவாதங்கள் ஆகியவற்றைக் காண நேரிட்டது. ஓரளவு பொறுப்புடனும் நடு நிலையுடனும் தத்தம் விவாதங்களை எல்லோரும் முன்வைத்துள்ளனர்.

சென்ற தலைமுறையைச் சேர்ந்த திரை உலக ‘செலிப்ரிட்டிகள்’ போல் பிரச்சினைக்குரிய விஷயங்களில் தலையிடுவதைக் கவனமாகத் தவிர்த்து ஒதுங்கியிராமல், இவர் வளர்ந்து வரும்போதே பல பிரச்சினைகளில் தலையிட்டுக் கருத்துச் சொல்லும் ஆர்வமிக்கவராகத் தெரிகிறது. இதுவும் கூட இந்தத் தலைமுறை உருவாகிவரும் சூழலின் விளை பொருளாக இருக்கலாம். எனினும் இவர் முன்வைக்கும் கருத்துக்கள் பெரும்பாலும் அவரது உயர் சாதி, உயர் மத்திய தர வர்க்கப் பின்னணியின் எல்லைகுட்பட்டதாகவே இருந்துள்ளது. மதவாதம், இட ஒதுக்கீடு முதலிய பிரச்சினைகளில் அவரது கருத்துக்கள் அடித்தள மற்றும் இடது சாரி மனநிலை உடையோரால் ஏற்க முடியாதவையாகவே இருந்துள்ளன. அந்த வகையில் மீனவர் பிரச்சினையில் அவர் நிலைபாடு என்னவாக இருந்திருக்கும் என்பதையும் நம்மால் ஊகிக்க முடிகிறது.

சவுக்கு இணையத் தளம் சரியாகவே சுட்டிக் காட்டியிருப்பதுபோல சின்மயியை ‘வென்றெடுக்கக்’ களம் இறங்கியவர்களின் நோக்கம் அரசியலாக வெளியில் தோற்றமளித்தாலும், ஒரு செலிப்ரிடி, அதுவும் பெண் செலிப்ரிடியுடனான நெருக்கம் என்பதே அவர்களின் முக்கிய லட்சியமாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் சின்மயி தன் கருத்துக்களில் பிடிவாதமாக இருந்தபோது அவர்கள், வழக்கமாக ஒரு பெண் இப்படியான சந்தர்ப்பங்களில் எப்படி எதிர் கொள்ளப் படுவாளோ, அப்படியே எதிர் கொண்டுள்ளனர். அவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்ட ட்வீட்கள் நமக்குக் காணக் கிடைக்கின்றன. சின்மயி சொன்னதாகச் சொல்லப்படும் விவாதத்திற்கு உரிய கருத்துக்களுக்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் இல்லை. சில இட்டுக் கட்டப்பட்டவையாக உள்ளன.

தன் தரப்புக் கருத்தை சின்மயி வெளிப்படுத்திய பின்பாவது அவர்கள் விட்டிருக்கலாம். அல்லது அவரும் அவரது தாயாரும் தொலை பேசி மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் வேண்டிக் கொண்ட போதிலாவது நிறுத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் தமது சீண்டல்களைத் தொடர்ந்துள்ளனர். ஆக, சின்மயி தரப்பினர் காவல்துறையை நாடுவதற்கு எதிர்த் தரப்பினர் ஒரு நியாயத்தை வழங்கியுள்ளனர்.

காவல்துறை படு தீவிரமாகக் களம் இறங்கியதற்குப் பல காரணங்களை ஊகிக்க முடிகிறது. சின்மயியைக் குற்றம் சாட்டுபவர்கள் சொல்வதுபோல அவர் தரப்பில் செய்யப்பட்ட ‘லாபி’, அவரது செலிப்ரிடி அந்தஸ்து, சின்மயியுடன் சேர்த்து முதலமைச்சர் ஜெயலலிதாவையும் ட்வீட்டியவர்கள் அசிங்கமாக எழுதியது…….

பொது வெளிக்கு வரக்கூடிய பெண்கள் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் சமூக வலைத் தளங்களில் பங்கேற்கும் பெண்களும் சந்தித்துக் கொண்டிருப்பதை இவற்றைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்போர் உணர முடியும். பாதிக்கப்படும் சிலர் இதை வெளிப்படையாகச் சொல்லி விடுகின்றனர். பலர் இதைச் சொல்வதில்லை. வெளிப்படையான பாலியல் வக்கிரங்களோடு துன்புறுத்துவோர், தமது அரசியல் கறார்த் தன்மை அல்லது ‘புரட்சி’த் தன்மையில் ஒளிந்து கொண்டு துன்புறுத்துவோர் என இவர்களில் குறைந்தபட்சம் இரு ரகங்கள் உண்டு. இன்றைய பிரச்சினையில் சின்மயிக்கு எதிராகக் களம் இறங்கியுள்ளவர்கள் பெண்களுக்கு எதிரான இந்தச் சூழலைக் கவனத்தில் இருத்தத் தவறக்கூடாது.

சின்மயிக்கு எதிராக இன்று முன்வைக்கப்படும் வாதங்களில் ஒன்று, அவர் ஆபாச நடனக் காட்சிகளுக்குப் பாட்டிசைக்கவில்லையா? அவர் ஆபாசப் பாடல் வரிகளைப் பாடவில்லையா என்பது. இது மிகவும் மோசமான ஒரு விவாதம். தாம் வன்புணர்ச்சி செய்யப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் வெளிப்படையாகக் குற்றம் சாட்டும்போது நமது ஆணாதிக்கக் கலாச்சாரம் வழக்கமாகச் சொல்லும், ”அவள் என்ன யோக்கியம்? அவள் நடத்தை தவறியவள் தானே?” என்கிற எதிர்க் குற்றச் சாட்டுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? அவள் மீனவர் பிரச்சினையில் தவறாகப் பேசினாள், விளம்பரத்திற்காகப் புகார் கொடுத்தாள் என்றெல்லாம் சொல்வதும் இத்தகையதே. அவரது தவறான கருத்துக்களை எதிர்த்து நாம் கருத்துப் போராட்டம்தான் செய்திருக்க வேண்டுமே ஒழிய அதற்காக மிரட்டுவது, அசிங்கமாக எழுதுவது என்பதெல்லாம் எப்படிச் சரியாகும்?

முன்தணிக்கை சாத்தியமில்லாத இந்த ஊடகத்தில் பங்கு பெறும் நமக்கு அதிகப் பொறுப்புணர்ச்சி வேண்டும். என்ன வேண்டுமானலும் அவதூறுகளை அள்ளி வீசுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கக்குவது, பெண்களாயின் அவர்களின் ஒழுக்கத்தைப் பொது வெளியில் கேள்விக்குள்ளாக்குவது, இவற்றை எப்படி நியாயப்படுத்த இயலும்?

புகார் கொடுப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரதிற்கு ஆப்பு வைக்க்கப் படுகிறது என்பது சின்மயா எதிர்ப்பாளர்களின் இன்னொரு விவாதம். ஒரு பெண்ணை இப்படித் தாக்கி அவளை வாய்மூட வைப்பதும். சமூக வலைத் தளத்திலிருந்து ஓடவைப்பதும் மட்டும் கருத்துச் சுதந்திரப் பறிப்பு இல்லையா? சுப்பிரமணிய சாமி ட்வீட்டரில் சோனியாகாந்தியை ‘விஷக் கன்னி’ எனச் சொல்வதை சோனியா தாங்கிக் கொள்ளவில்லையா, பொது வெளிக்கு வந்த நீயும் ஏன் சும்மா இருக்கக் கூடாது? என்பது இன்னொரு விவாதம். ஒரு முழு நேர அரசியல்வாதியைப் பார்த்து ‘விஷக் கன்னி’ அல்லது ‘அமெரிக்க அடிவருட்டி’ எனச் சொல்வதற்கும் வலைத் தளத்தில் எழுதத் தொடங்கியுள்ள ஒரு பெண்ணைப்பார்த்து, “நீ வேசி” எனச் சொல்வதற்கும் வேறுபாடுகள் உண்டு. ஒருவரது நேர்மை குறித்துப் பொய்க் குற்றச் சாட்டுகள் வைப்பது, அவரது அனுமதியின்றி அவரது படங்களை இழிவு செய்யும் நோக்குடன் வெளியிடுவது எல்லாமும் இத்தகையதே. இணையத் தளத்தில் எழுத வந்தவர்களுக்கு அற உணர்வு சார்ந்த சுய தணிக்கை தேவை. அரசியல் கறார்த் தன்மை, கொள்கை உறுதிப்பாடு முதலான எதன் பெயராலும் இந்த அற உணர்வை இழக்கலாகாது.

எள்ளளவும் இது குறித்துக் கவலைப்படாமல் எதை வேண்டுமானலும் எழுதுவது, பின் இதுபோலப் பிரச்சினையை எதிர் கொள்ள நேர்ந்தால் பம்மிப் பின் வாங்குவது என்பது இப்படிச் சீண்டுபவர்களின் வழக்கமாகிவிட்டது.

சின்மயிக்கு ஒரு வார்த்தை. பொதுக் களத்திற்கு வரும்போது பல மாதிரியானாவர்களையும் சந்திக்க நேரும். இன்று இந்தப் பிரச்சினை பெரிய அளவில் பேசப்பட்டுவிட்டது. உங்களைத் துன்புறுத்தியவர்களுக்கு இதுவே போதிய தண்டனை. உங்கள் புகாரை இந்தக் கணத்தில் நீங்கள் திரும்பப் பெறுவது ஒரு நல்ல முடிவாக இருக்கும்.

இந்தப் பிரச்சினையில் அவ்வளவாகத் தொடர்பில்லத சிலரை சின்மயி கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் தொல்லை செய்வதாக நேற்று காலை ஒரு நண்பர் கூறினார். அது உண்மையாயின் மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று இது. ஏற்கனவே பெண்கள் கொடுத்துள்ள இதுபோன்ற 19 புகார்களில் ஒன்றும் நடவடிக்கை இல்லாதபோது, இதில் மட்டும் ஏன் இந்தத் தீவிரம் என்கிற கேள்விக்கே பதிலளிக்க இயலாத காவல்துறை இத்தகைய அத்துமீறல்களை, அவை உண்மையாயின் கைவிட வேண்டும்.

பார்க்க:

1.http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.rajanleaks.com%2F2012%2F03%2Fblog-post.html%3Fm%3D1&h=bAQEsjttL

2.http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.bbc.co.uk%2Ftamil%2Fmultimedia%2F2012%2F10%2F121022_chinmayee.shtml&h=bAQEsjttL

3.https://www.facebook.com/shoba.sakthi.1?ref=ts&fref=ts%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE

4.http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fhollywoodraj.blogspot.fr%2F2012%2F10%2Fblog-post.html&h=bAQEsjttL

5.http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fsavukku.net%2Fhome1%2F1680-2012-10-23-05-56-48.html&h=bAQEsjttL

6.http://amarx.org/?p=559

https://www.facebook.com/notes/marx-anthonisamy/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/398338903572173

Singer_Chinmayi_Celebrity_Photos-300x336.jpg

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம் பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி சின்மயி. சின்மயிக்கு ட்விட்டர் இணையதளத்தில் செக்ஸ் தொல்லைகள் வந்தன. அவரது படங்களையும் ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு இருந்தனர். சின்மயியின் வயதான தாயை பற்றியும் ஆபாச கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் சின்மயி புகார் செய்தார்.

எப்போது சர்ச்சையில் சிக்கும் சினிமா பிரபலங்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குபவர் குஷ்பு. தற்போது சின்மயிக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சின்மயிக்கு தொந்தரவு கொடுத்ததாக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் ராஜன் மற்றும் சரவணக்குமார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். தன்னைப் போல் பாதிக்கப்படும் பெண்கள் துணிச்சலாக போலீசில் புகார் செய்ய முன் வர வேண்டும் என்று சின்மயி கூறியுள்ளார். இந்நிலையில் சின்மயிக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்த நினைக்கும் தரம் கெட்ட மனிதர்கள் அப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்களாகத்தான் இருக்க முடியும். சின்மயி எடுத்த நடவடிக்கைகள் சரியானவை என்று குஷ்பு. மேலும் தற்போது சின்மயிக்கு எதிராக தாழ்த்தபட்டவர்கள் திரும்பியுள்ளனர்.

http://pirapalam.com/index.php/12624.html

  • கருத்துக்கள உறவுகள்

14616992322-chinmayi.jpg

பாடகி சின்மயி மீது வன்கொடுமை புகார்

October 28, 2012 09:19 am

lg-share-en.gif

பாடகி சின்மயி தலித்துகள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது துவேஷத்துடன் பல விடயங்கள் எழுதியதாகவும். அதனால் அவரை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யும்படியும் சென்னை மாநகர கமிஷன‌ரிடம் புகார் தரப்பட்டுள்ளது. இந்தப் புகாரை புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறையின் தலைவர் நீலமேகம் தந்துள்ளார்.

சின்மயி தனது பிளாக்கிலும், ட்விட்ட‌ரிலும் பலவேறு சர்ச்சைக்கு‌ரிய கருத்துகளை தெ‌ரிவித்ததாக புகார் கிளம்பியுள்ளது. குறிப்பாக மீனவர்களையும், மீன் உண்பவர்களையும் அவர்களின் உணவுப்பழக்கத்தை முன்னிட்டு சின்மயி விமர்சித்ததாக கூறுகிறார்கள் (கூறுகிறார்கள், சொல்லப்படுகிறது என்பதற்கு மேல் எழுதினால் சின்மயி நம்மீது பாய்வதற்கு வாய்ப்புள்ளது. அவர் சொல்லுக்கு அதிகார தரப்பில் எக்ஸ்ட்ரா பவர் இருப்பதை சமீபமாக பார்த்து வருகிறோம். நமக்கெதுக்கு வம்பு?).

சாதி ‌ரிதியில் சின்மயி எழுதிவருவதாக நீலமேகம் புகார் தந்திருக்கிறார். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள், சாதிக்கு எதிராக அணி திரள்கிறவர்கள் என்று ஒரு வட்டம் சின்மயியின் கருத்துக்கு எதிராக தீவிரமாக களமிறங்கியிருக்கிறது. கைது செய்யப்படாவிடுலும் தனது அத்துமீறிய கருத்துகளை சின்மயி இனியாவது நிறுத்துவார் என்று நம்பலாம்.

விஷயம் எது, என்ன என்பது தெ‌ரியாமல் அவசரக்குடுக்கையாக சின்மயிக்கு ஆதரவு தெ‌ரிவித்த குஷ்பு, செல்வராகவனுக்கு நமது கண்டனங்கள்.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=30571

[size=3]

[size=5]நண்பர்களே! இக்கட்டுரையை எழுதும் இத்தருணத்தில் என் மடியில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைக்கு ஒன்றரை வயது. என் எதிர் வீட்டு அர்ச்சகரின் குழந்தை. நாங்கள் இந்த வீட்டிற்கு வந்த பிறகு அவர்கள் திருமணமாகி எதிர்வீட்டிற்கு வந்தார்கள்.[/size][/size][size=3]

[size=5]பின்னர் அவர்களுக்கு இந்தக் குழந்தை பிறந்தான். அவன் ஓரளவு நடந்து பழகியவுடன் முதன் முதலாக வந்தது எங்கள் வீட்டிற்குத்தான். இப்போது பேசப் பழகுகிறான். எல்லோரையும் பார்த்து 'கா.. கா..' என்று மட்டுமே அழைக்கத் தெரிந்த எங்களின் செல்லக் குரல் அவன்.[/size][/size][size=3]

[size=5]எங்கள் வீட்டில் அசைவம் சமைத்தபோதிலும், அவனுக்காக சில நேரம் தயிர்சாதம், சாம்பார் சாதம் சமைத்து நீலா ஊட்டி விடுவார். அவனுக்கு என் மீதுதான் அதிக ப்ரியம். ஒரு நாள் தவறாமல் மாலை நேரம் இங்கு வந்து விடுகிறான்.[/size][/size][size=3]

[size=5]chinmayi_350.jpgஎங்கள் அடுக்கத்தின் கீழ்த் தளத்தில் இரண்டு குடும்பம் மட்டும் தான் பார்ப்பனரல்லாதவர்கள். ஏனைய மூன்று குடும்பங்களுமே பார்ப்பனர்கள். ஆனால் அர்ச்சகர் வீட்டுக்காரர்கள் எங்கள் வீட்டிற்குத்தான் அந்தக் குழந்தையை அனுப்புவார்கள். ஏனைய பார்ப்பனர்கள் வீட்டிற்குக் கூட அவனை அனுப்பி நான் பார்த்ததில்லை.[/size][/size][size=3]

[size=5]இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால் என்னுடன் பழகும், புழங்கும் சக மனிதர்களுக்கு என்னால் இயன்ற அளவு அன்பைக் கொட்டிக் கொடுப்பேன். அவர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், உணவுமுறைகளை நான் மதிப்பேன். அவர்களில் எவரேனும் என் கலாச்சாரப் பழக்கவழக்கங்களையோ, உணவுமுறையோ தவறு என்றால் அதை கடுமையாக எதிர்ப்பேன்.[/size][/size][size=3]

[size=5]உனக்கும் எனக்கும் எல்லோருக்கும்தான் பூமியில் வாழும் உரிமை உள்ளது. அந்த சம உரிமை எங்கே பாதிக்கப்படுகிறதோ, எங்கே அது தட்டிப் பறிக்கப்படுகிறதோ அங்கேதான் மனிதன் கூட்டம் கூடி தனக்காகப் பேசி தன் உரிமைக்காக இயக்கம் கட்டுகிறான். தலித் இயக்கங்களும், திராவிட இயக்கமும், தமிழ்த் தேசியமும் இங்கிருந்துதான் உருவாகின்றன. தன்னைக் காத்துக் கொள்ளும் கோட்பாடுகளை உருவாக்குகிறான் வாய்ப்பிழந்தவன்.[/size][/size][size=3]

[size=5]நீண்ட காலப் போராட்டத்தின் பின்னரே சமூகத்தில் சமவாய்ப்பற்று பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு என்னும் உரிமை கிடைத்தது; அதுவும் முழுமையாக அல்ல. இட ஒதுக்கீடு என்னும் உரிமை சென்று சேராத வர்க்கங்களும் உண்டு. பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு என்பதைக் காட்டிலும் சமூக அந்தஸ்துக்கு என்பது பொருத்தமாக இருக்கும். ஏழையாகவே இருந்தாலும் பார்ப்பனர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களே. பணமே இருந்தாலும் சூத்திரனுக்கோ, தலித்துக்கோ பார்ப்பனர்களுக்குரிய அந்தஸ்து கிடைத்து விடுவதில்லை. இந்த இடத்திலிருந்துதான் சின்மயி விவகாரத்தை நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும்.[/size][/size][size=3]

[size=5]சின்மயி மிகச் சிறந்த பாடகர். அவரது பாடல்களுக்கு நானும் ஒரு ரசிகன். எனக்கும் அவருக்குமான தொடர்பு அவ்வளவுதான். பாலியல் ரீதியான துன்புறுத்தல் என்னும் புகாரின் பேரில் டிவிட்டர்களான ராஜன்லீக்ஸ், சரவணகுமார் கைதான பின்னர்தான் தெரிந்தது மீனவர்கள், முஸ்லீம்கள், தலித்துக்கள் தொடர்பாக சமூக விரோதக் கருத்துக்களை சின்மயி எழுதி வெளியிட, ராஜன் லீக்ஸ் போன்றவர்கள் கடுஞ்சொற்களில் அவரிடம் உரையாட, அவரோ திட்டமிட்டு இவர்கள் வசவியதை எல்லாம் பிரதி எடுத்து விட்டு தான் எழுதியதை எல்லாம் அழித்து விட்டார். அவர் போலீசில் புகார் கொடுத்தபோது கூட 'முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி எப்படி எல்லாம் கிண்டல் செய்திருக்காங்க பாருங்கோ' என்றுதான் பலம் கூட்டியிருக்கிறார்.[/size][/size][size=3]

[size=5]மக்கள் பிரச்சினைகளில் அதிகார வர்க்கத்திற்கு எதிரான குரலை ஒலிப்பதில் சமூக வலைத்தளங்கள் ஆற்றி வரும் பங்கைக் கண்டு பொருமிக் கொண்டிருந்த ஆளும் வர்க்கத்திற்கு, சின்மயி விவகாரம் ஒரு நல்வாய்ப்பாக அமைந்தது. உடனடியாக ராஜன்லீக்ஸ், சரவணகுமார் கைது செய்யப்பட்டதில் சமூக வலைத்தளங்களில் இயங்குபவர்களுக்கு ஓர் எச்சரிக்கை இருக்கிறது. 'இணையதளக் குற்றங்களில் ஈடுபடுவோர் பிணையில் வெளிவர முடியாத வழக்குகளில் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்' என்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ் கூறியிருப்பது இணையதளங்களில் நிலவும் கட்டற்ற கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட எச்சரிக்கையாகவே கருத வேண்டும். இதில் வினோதம் என்னவென்றால், இடதுசாரிகளை ஆபாசமாக சித்தரித்து கவிதை எழுதி, அதை 'கருத்துச் சுதந்திரம்' என்று கூட்டம் நடத்தியவர்கள் எல்லாம் இன்று ராஜன்லீக்ஸ், சரவணகுமார் கைதை வரவேற்றிருப்பதுதான்.[/size][/size][size=3]

[size=5]ராஜனின் எழுத்துக்கள் ரசிக்கத்தக்கவை அல்ல. சின்மயியிடம் இவர் ஓர் அரசியல் வாதத்தை நடத்தியிருந்தால் – வேண்டாம், அது வெட்டி வேலைதான் – ‘சின்மயியிடம் விவாதிக்கிறேன் பேர்வழி’ என்று அவர் விரித்த வலையில் போய் சிக்கியிருக்க வேண்டிய அவசியம் நேர்ந்திருக்காது. இங்கே ராஜனின் குரலை அடித்தட்டு சமூகங்கள் தங்களுக்கிடையில் வசவிக் கொள்ளும் மொழியாகத்தான் நான் பார்க்கிறேன். ஆனால் இத்தகைய வார்த்தைகளை நேரடியாக ராஜன் போன்றோர் பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை. ஆனால் வெவ்வேறு விஷயங்களில் ஆபாசம் கலந்த எள்ளல் தொனி அவரது மொழியில் இருக்கி்றது.[/size][/size][size=3]

[size=5]சின்மயின் மொழி ராஜனின் மொழியை விட ஆபத்தானது மட்டுமல்ல, ஆபாசமானதும் கூட. பார்ப்பனரல்லாதோரின் தலைமுறை மீது வைணவம் குதத்தில் சொறுகிய வாளைப் போல அது இறங்கியிருப்பதற்கான எல்லா சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது. மீனவர் படுகொலை தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு இவர்கள் அவரைக் கேட்டிருக்கிறார்கள். அப்படிக் கேட்கலமா? என்ற கேள்வியில் ஒரு நியாயம் உள்ளது. நிச்சயமாக நான் நடிகர் மாதவனிடம் போய் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்க மாட்டேன். ஆனால் மாதவன் பொதுப் பிரச்சனையில் கருத்துச் சொல்லி அது முரண்பாடாக இருந்தால் மாதவனிடம் ஈழம் தொடர்பாக கருத்துச் சொல்லும் படிக் கேட்பேன். அந்த வகையில் மின்சாரத் திருட்டு தொடர்பாக ஓர் இணைப்பைக் கொடுத்து. தன் வீட்டின் அருகிலும் அப்படியான திருட்டுகள் நடப்பதாக எழுதியதாகவும், கிட்டத்தட்ட குடிசைப்பகுதி மக்களை அவர் திருடர்களாகச் சொன்னதாகவும் உடனே இவர்கள் கேள்வி எழுப்ப, தொடர்ந்து சின்மயி இது மாதிரி அரிய பல கருத்துக்களைக் கொட்ட, இவர்களும் விட்டேனா பார் என்று அவரைத் திட்டியிருக்கிறார்கள்.[/size][/size][size=3]

[size=5]இதெல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்திருக்கிறது. சின்மயின் அம்மா ராஜனை என்ன செய்கிறேன் பார் என்று சவால் விட்ட ஆடியோ ஒன்றையும் கேட்டேன். ஆக மொத்தம் அவர்கள் திட்டமிட்டு இவர்களை போலீசில் சிக்க வைக்க வேண்டுமென்றே டிவிட்டியிருக்கிறார்கள்.[/size][/size][size=3]

[size=5]அப்படி எழுதியதுதான் // மீனவா மீனைக் கொல்றா மீனவனை இலங்கை இராணுவம் கொல்றா// என்று மீனவர் படுகொலையை நியாயப்படுத்தியிருக்கிறார். வினவு குழுமத்தின் நாடகப் பிரதியொன்றின் வசனம் என்கிறார்கள் சிலர். அது வினவு பிரதியாக இருந்தால் என்ன, கனவுப் பிரதியாக இருந்தால் என்ன ? அங்கே சின்மயி அதை அவருடைய பதிலாகத்தான் பயன்படுத்துகிறார். ஆக மொத்தம் அவருடைய கருத்துதான் அது. இன்னொரு இழையில் தான் அப்படிச் சொன்னதை உறுதியும் படுத்துகிறார்.[/size][/size][size=3]

[size=5]அது போல ‘சோ கால்ட்’ தலித் தலைவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்கள் என்பவர்களை வைத்து பிரச்சனை செய்கிறார்கள் என்பது போன்று எழுதுகிறார். ஆக மொத்தம் சின்மயி எழுதிய எல்லாமே சமூக விரோதக் கருத்துக்களாக உள்ளன. சின்மயின் கோபம் என்பது பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட, தலித், முஸ்லிம் மக்களுக்கு எதிரான பார்ப்பனக் கருத்தியலாக உள்ளது.[/size][/size][size=3]

[size=5]காலம் காலமாக அறிவுத்தளத்தில் இப்படியான கருத்துக்களையே பார்ப்பனர்கள் கொண்டிருந்தாலும் பெரும் ஊடகங்களில் அவர்களுடன் பார்ப்பனரல்லாதார் மோத வாய்ப்பில்லாமல் இருந்து வந்தது. இன்றும் கூட அதே நிலைதான் தொடர்கிறது. பார்ப்பனீயத்தைப் பாதுகாத்துக் கொண்டே தலித்துக்களை ஒடுக்கும் சூத்திரப் பார்ப்பனீயம், பார்ப்பனீயத்திற்கு இணையாக இல்லை என்றாலும் அதுவும் அச்சு ஊடகங்களில் செல்வாக்குச் செலுத்தும் நிலைதான் உள்ளது.[/size][/size][size=3]

[size=5]இணைய தளத்தில் 2005-க்குப் முன்னர் வரை பார்ப்பனர்கள் மட்டுமே அதுவும் அமெரிக்கப் பார்ப்பனர்கள் மட்டுமே செல்வாக்குச் செலுத்தினார்கள். பின்னர் இணைய வசதிகள் கிராமங்கள் வரை பரவியதன் விளைவாகவும், சமூக வலைத் தளங்கள் உருவானதன் விளைவாகவும் எழுத வாய்ப்பில்லாதவர்கள், நினைப்பதை கட்டற்ற சுதந்திரத்தோடு எழுதுகிறார்கள். இப்போது வெகுசன ஊடகங்கள் சமூக வலைத் தளங்களில் கட்டற்ற சுதந்திரம் தேவையா என்று விவாதிக்கிறார்கள். உண்மையில் கட்டுப்பாடே இல்லாத சுதந்திரத்தோடுதான் பார்ப்பனர்கள் தங்களின் கருத்துக்களை அச்சு, காட்சி ஊடகங்களில் பரப்பி வந்தார்கள்.[/size][/size][size=3]

[size=5]இங்கே கட்டுப்படுத்த முடியாத தொழில் நுட்பத்தைக் கட்டற்ற சுதந்திரம் என்று தட்டையாகப் புரிந்து கொண்டு, ஏதோ இவர்கள் எல்லாம் கட்டுப்பாட்டோடு கட்டுரைகள் எழுதுவது போலவும், இணைய பாவனையாளர்கள் கட்டுப்பாடற்று கருத்து எழுதுவது போலவும் சித்தரிக்க முயல்கிறார்கள். உண்மையில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த இணைய ஊடகம்தான் தமிழகத்தின் சமகாலப் பிரச்சனைகள் சகலத்திலும் எழுச்சி ஏற்பட பங்காற்றியிருக்கிறது. ஈழம், தூக்குத்தண்டனை எதிர்ப்பு, அணு உலை எதிர்ப்பு என சகலத்திலும் அதன் பங்களிப்பு அளப்பரியது என்னும் நிலையில்தான் சின்மயியோடு இவர்கள் மோதியதைக் காண வேண்டும்.[/size][/size][size=3]

[size=5]பொது வெளியில் கருத்துச் சொல்லும்போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கிற பார்ப்பனர்களை நான் பார்க்கிறேன். அதே நேரம் எத்தனையோ பார்ப்பன நண்பர்கள் நம் சமகாலப் போராட்டங்களில் பங்கேற்பவர்களாக இருக்கிறார்கள். பொது வெளியில் அவர்கள் கருத்துச் சொல்லும்போது அவர்கள் மீது எவரும் இப்படிப் பாய்வதில்லை.[/size][/size][size=3]

[size=5]சின்மயி தன்னை அய்யங்கார் என வெளிப்படையாக எழுதுகிறார். அதுவும் iyengar என்று எழுத வேண்டிய வார்த்தைகளை HIGH engar என்று திமிரோடு எழுதுகிறார். நாங்கள் உயர்ந்தவர்கள் என்பதை இத்தனை பார்ப்பனத் திமிரோடு எழுதும் சின்மயி போன்றவர்கள், இம்மாதிரியான வசவுகளில் சிக்குவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?[/size][/size][size=3]

[size=5]இப்போது சின்மயியை ஷோபா சக்தி, லீனா மணிமேகலை, சாரு நிவேதிதா போன்றோர் ஆதரிக்கிறார்கள். ராஜனையும், சரவணகுமாரையும் டிவிட்டர் பொறுக்கி என்கிறார் 'இலங்கை ரைட்டர்' ஷோபாசக்தி. 'இணையப் பொறுக்கி, செக்ஸிஸ்ட்' என்கிறார் லீனா மணிமேகலை. பொதுவாகவே இவர்கள் எல்லா நிலைகளிலும் தமிழர் எதிர்ப்பு நிலை எடுப்பவர்கள் என்னும் நிலையில் இதிலும் ஒன்றிணைகிறார்கள். அதில் ஆச்சரியம் ஏதும் இல்லை என்றாலும், செக்ஸியிஸ்ட் என்றும் இணையப் பொறுக்கிகள் என்றும் சொல்லும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்? தமிழச்சியை இணையத்தில் அவமதித்ததோடு, ‘அல்லா அல்லா அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா என்று நாங்கள் பள்ளி செல்லும்போது பாடுவார்கள்' என்று தலித் வேடம் கட்டி, ஆடி அம்பலப்பட்ட பின்னர் வெளியிட்ட மொக்கைக் கட்டுரையில் திருத்தம் கொண்டு வந்த இந்த யோக்கிய சிகாமணி, அரசியல் ரீதியாக நம் சமகாலப் பிரச்சனைகளில் நிற்கும் ராஜனை இணையப் பொறுக்கி என்கிறார்.[/size][/size][size=3]

[size=5]உள்ளூர் பூர்வகுடிப் பழங்குடிகளைக் கொன்ற டாடாவிடமே பணம் வாங்கி, கொல்லப்பட்ட பெண்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்று படம் எடுக்கும் லீனா மணிமேகலையும் இவர்களை இணையப் பொறுக்கிகள் என்கிறார். மார்க்ஸ் உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளை ஆண் குறியோடு ஒப்பிட்டு பரபரப்புக் கவிதை எழுதிய அதே லீனா, ராஜனை செக்ஸியிஸ்ட் என்கிறார். ‘மதுரை பொண்ணு’ புகழ் சாருவும், ஜெயமோகனும், தினமலரும், பார்ப்பன ஊடகங்களும் இவர்களோடு இணைகிறார்கள்.[/size][/size][size=3]

[size=5]இதில் நுட்பமான இன்னொரு விஷயம் என்னவென்றால் லீனாவோ, ஷோபா சக்தியோ மக்களின் பிரச்சனைகள் குறித்து எப்போதும் பேசியதில்லை. மக்கள் பிரச்சனைகளை வைத்து நிதி வாங்கி ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள். ஷோபாசக்தி என்னும் அந்தோணி தன் வாழ்நாளில் மொத்த எழுத்தையும் இலங்கை அரசுக்காக மட்டுமே செலவிட்டவர். அதற்காக தன்னை தலித்தாகக் காட்டி விற்றவர். இவர்கள் பெண் ஒடுக்குமுறை விவாகரம் ஒன்றை கையில் எடுக்கிறார்கள் என்றாலே அது தமிழர்கள் தொடர்பான ஏதோ அரசியலை காலி பண்ணத்தான். ஏனென்றால் இவர்கள் தலித் முரண்பாட்டை வைத்து ஈழப் போராட்டத்தை காயடிக்க முயன்ற வரலாற்றை நாம் பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறோம். அந்த வகையில்தான் இவர்கள் இப்போது சின்மயி HIGH யங்காருக்காக களமிறங்கியிருக்கிறார்கள். ‘பார்ப்பனப் பெண்ணே என்றாலும்’ என்றுதான் விவாதத்தைத் துவங்குகிறார்கள். பார்ப்பனப் பெண்ணே என்றாலும் வயலில் இறங்கி களை பிடுங்குவதில்லை; தலையில் கீரைக்கட்டை சுமப்பதில்லை; கருவாட்டுக் கூடையை சுமப்பதில்லை. சமூக அந்தஸ்தில் இவர்களும் அவாளும் எப்போதும் ஒன்றும் அல்ல. அப்படியிருக்க அதென்ன ... ‘பார்ப்பனப் பெண்ணே யென்றாலும்....'[/size][/size][size=3]

[size=5]சின்மயிக்கு ஆபாசத் தொல்லை கொடுத்ததாகச் சொன்ன ராஜனும், சரவணகுமாரும் இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுவெளியில் பெண்கள் குறித்து அநாகரிகமாக உரையாடியதற்கான தண்டனையை அவர்கள் சிறையில் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சின்மயி மீது தொடுத்த ஆபாசத் தாக்குதலுக்கான துல்லியமான ஆதாரம் இதுதான் என்பதை லீனா மணிமேகலையோ, ஷோபாசக்தியோ கொடுத்தால் நன்றாக இருக்கும். அவர்களால் கொடுக்க முடியாது. அவர்களால் மட்டுமல்ல சின்மயியால் கூட கொடுக்க முடியாது. இது போன்ற பல மொக்கை வழக்குகளை கொஞ்சம் நேர்த்தியோடு எதிர்கொண்டால் ஒரு வருடம் கூட தாங்காது.[/size][/size][size=3]

[size=5]மீனவனைக் கொல்வது சரியென்றும், இடஒதுக்கீட்டிற்கு எதிராகவும், தலித்துக்கள், முஸ்லீம்களுக்கு எதிராகவும் கருத்து சொன்ன சின்மயிக்கு என்ன தண்டனை? குறைந்த பட்சம் அவர் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோருவாரா? சின்மயி கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த காவல் துறை, ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சின்மயி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரி அம்பேத்கர் பாசறை சார்பில் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கொடுத்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்குமா? இல்லை, சூத்திரர்களுக்கு ஒரு நீதி, பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி என்பதுதான் இங்கேயும் நிலைநிறுத்தப்படுமா?[/size][/size][size=3]

- டி.அருள் எழிலன் ( arulezhiland@gmail.com)[/size][size=3]

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=21793%3A-high-engar-&catid=1%3Aarticles&Itemid=264[/size]

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

chinmayi_cute_stills_1992.jpg

http://youtu.be/8PK0morVLYU

‘சின்மயி- ருவிற்றர்’ விவகாரம் தொடர்பிலான ராஜ் ரீவியின் ‘கோப்பியம்’ நிகழ்ச்சி ஒருபக்க நியாயங்களையே அதிகம் பேசியது. அத்தோடு சந்தேக நபர்களின் குடும்பங்களையே மெல்ல மெல்ல பொதுவெளிக்கு கொண்டுவந்து சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கிற தோரணையிலான செய்தி தயாரிப்பை செய்திருக்கிறது. இப்படிப்பட்ட முறையற்ற ஊடக கையாளுகையை நான் அண்மைய நாட்களில் கண்டதேயில்லை.

அதுபோக, ‘பெண்ணுரிமை மற்றும் சின்மயி மீதான தொல்லைகள்’ குறித்து செய்தித் தயாரிப்பில் பேசிய வழக்கறிஞர் சல்மா ஒட்டுமொத்த ஆண்களையும் நோக்கி திரும்பத் திரும்ப ‘ஆணாதிக்கவாதிகள்’ என்கிறார். ஒரு மாற்றுக்கருத்தைக் கூட பதிவு செய்ய தயங்குகின்ற அப்பட்டமான ஒருபக்க நியாயங்களை பேசுகின்ற விளம்பரம் போன்றிருக்கிறது குறித்த செய்தி தயாரிப்பு.

30 நிமிடங்கள் நிகழ்ச்சி நேரம் கொண்ட கோப்பியம் செய்தித் தயாரிப்பில் 10 நிமிடங்கள் முன்னோட்டம், விளம்பரங்களுக்கு ஒதுக்கிவிட்டு மீதியிருக்கிற 20 நிமிடங்களை எப்படியாவது, யார் பேசுவதையாவது போட்டு நிரப்பி விடலாம் என்கிற நிலைப்பாட்டில் சின்மயி விவகாரத்தை கையாண்டிருக்கிறார்கள்.

குறிப்பிட்ட ஒரு முக்கிய விடயத்தை பேசுகின்ற ‘கோப்பியம்’ வகையறா செய்தி தயாரிப்புக்கள் அனைத்து பக்க வாதங்களையும்- விடயங்களையும் முதலில் பேச வேண்டும். மெல்ல மெல்ல குறித்த நிகழ்வின்- சம்பவத்தின் தன்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதை விடுத்து, ஆரம்பத்திலேயே ‘ஆபாசத்தொல்லை/குற்றவாளிகள் கைது(?)’ என்கிற முறையில் செய்தியை எப்படி தயாரிக்க முடியும்…? சின்மயி சம்பந்தப்பட்டவர்களே குறித்த விவகாரத்தை ‘ஆபாசத்தொல்லை இல்லை’ என்று குறிப்பிட்டு விட்டார்களே, அது தொடர்பில் ஏன் சுட்டிக்காட்டப்படவில்லை.

ராஜன்- சரவணகுமார் உள்ளிட்டோர் ஒரு குழுபோல இயங்கியது மாதிரியான தோற்றப்பாட்டை எப்படி மக்களிடம் வழங்கலாம்….? கோப்பியம் செய்தித்தொகுப்பை பார்த்து முடிக்கின்ற சாதாரண மக்களுக்கு சின்மயி என்கிற பிரபலம் குற்றமே செய்யாதவர்/ அவதார புருஷர் என்கிற தோரணையை வழங்கிவிட்டு செல்வதன் நோக்கம் என்ன?

அதுபோக, இணையப் பெருவெளியில் சினிமயி ருவிற்றர் விவகாரம் எவ்வளவு பரந்து பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. அது தொடர்பில் ஏன் கிஞ்சித்தேனும் செய்தி ஆசிரியரால் கண்டுகொள்ளப்படவில்லை..? இப்படியாக பல கேள்விகளுக்குப் பின் என்னுடைய மனதில் தொக்கி நிற்பது என்னவென்றால் சின்மயியை ஒட்டுமொத்தமாக தாங்கிப்பிடிப்பதற்கானது தான் இந்த கோப்பியமா?

திரும்பவும் சொல்லிக்கொள்ள என்னிடம் இருக்கிறது இதுதான், நான் அண்மைய நாட்களில் இவ்வளவு மோசமான செய்தித் தயாரிப்பை கண்டதேயில்லை. ராஜ் ரீவியின் இவ்வாறான பொறுப்பற்ற ஊடக தன்மையை வன்மையாக கண்டிக்கிறேன்!!

http://maruthamuraan.blogspot.ca/

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.