Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்சிலிர்க்க மறுத்த என் உணர்வுகள்... :(

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்

என்னினிய உறவுகளே சுமார் ஜந்து வருடங்களுக்கு பின் நான் வன்னிபெருநிலப்பரப்பின் மையமாக விளங்கிய புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்க்கு பயணித்தபோது என் மனதில் அழியாது சுழன்று கொண்டு இருக்கும் சிங்களஅரசின்வலிந்த போரின் கொடுரங்களை யாழ் உறவுகளுக்கு பகிரலாம் என்று நினைக்கின்றேன்................

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது எழுதுங்கள் tigertel, ஏன் கொஞ்சம் எழுதி இருந்தால் வாசிச்சிருப்பமே

  • கருத்துக்கள உறவுகள்

இயலுமானவரை படங்களுடன் இணைத்தால்.... நல்லது ரைகர்.

எழுதுங்கள் ரைகர் :)

  • கருத்துக்கள உறவுகள்

ரைகர் ...........உங்கள் எண்ண ங் களை செயலாக்குங்கள். காத்திருக்கிறோம்.

விட்டுக்கொடுப்புகள் இல்லாது , உள்ளதை உள்ளபடியே விரியவிடுங்கள் புலிக்குரல் :) :) :) .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Udaiyar, தமிழ் சிறி, அலைமகள், நிலாமதி, komagan நன்றிகள்................... பயணத்தின் ஒட்டங்களை வரிசையாக கோர்த்து கொண்டிருக்கின்றேன்...விரைவில்..

Udaiyar, தமிழ் சிறி, அலைமகள், நிலாமதி, komagan நன்றிகள் உங்களின் ஆதரவுக்கு................... பயணத்தின் ஒட்டங்களை வரிசையாக கோர்த்து கொண்டிருக்கின்றேன்...விரைவில்..

படங்கள் எடுக்ககூடிய சுழ்நிலை அங்கு இல்லை அதனால் படங்களை எதிர்பார்க்காதீர்கள்.

கோமகன் அண்ணா நான் ஆடவிட்டாலும் என் உணர்வுகள் மறுக்கும் இருந்தும் நான் கண்ட காட்சிகள் உண்மைகள் விரியும்...!

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குர‌ல் எழுதுங்கள்... அந்த மக்களது உணர்வுகளையும் எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

புதுக்குடியிருப்பு பயண அனுபவங்களை அறிய ஆவலாய் இருக்கிறோம்.

தொடருங்கள் புலிக்குரல்.

  • கருத்துக்கள உறவுகள்

விரைவாகத் தாருங்கள் புலிக்குரல் உங்கள் பதிவை...தூரமாகிப்போய்விட்ட எங்கள் மண்ணிண் வாசனையை நுகரக்காத்திருக்கிறோம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

18.09.2011...காலையில் மனம் அங்கும் இங்குமாக ஒரு நிலையில்லாமல் கடலலையில் விழுந்த துரும்புபோல அல்லோலகல்லோலப்பட்டு கொண்டிருந்தது... காலையிலேயே என் மனது அன்றைய நாளை சுழல விட்டது...2006ம் ஆண்டு நடுப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் கிழக்கில் இருந்து வடக்கினை ஊடறுத்து வவுனியா ஊடாக ஒமந்தை ஆக்கிரமிப்பு படைகளின் பதிவுகளை முடித்து வெளிக்கிட்டு சுனியப்பிரதேசத்தை தாண்டி எம்மவர் பகுதிக்குள் பிரவேசிக்கும்போது என் உணர்வுகள் ஒருமுறை உலுப்பி போட்டு மெய்சிலிர்கக்க வைத்தது!! ஒரு சுதந்திரமான பாதுகாப்பான பகுதிக்குள் உள்நுழைந்துவிட்ட உரு ஆத்மதிருப்தி. சமாதான காலத்தில் நான் மேற்கொள்ளும் வன்னிப்பயணம், என் உள்ளம் உணரும் சுதந்திரம் என்னை இப்படி பல முறை மெய்சிலிர்க்க வைக்கும். புலி.............................. என் இரண்டாவது மகளின் ஆக்ரோஷ சத்தத்தை கேட்டு திடுக்கிட்டே விட்டேன், என் இரண்டாவது மகள் நான்கு வயதுதான் கோபம் வந்தால் அவளை விட ஒரு வயது முத்தவளுக்கு அடிக்கும் போது பாவிக்கும் வார்த்தை!! இருவருக்கும் என்ன பிரச்சனை என்று கேட்டுக்கொண்டே வந்தாள் என் மனைவி, காதல் திருமணம்தான். என் அம்மாவின் அதே குணங்கள்! அமைதி சாந்தம் இனிமையானவள்! மனைவி அமைவதேல்லாம் இறைவன் வரம் என்னவோ என் வாழ்க்கை துணைவி இதற்க்குள் அர்த்தப்படுகின்றாள். என்னப்பா இம்முறை வன்னிப்பயணம் பற்றி ஏன் கடுமையாக யோசிக்கிறிங்கள் என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.., அவளுக்கு இதுவே முதல் பயணம் மனதுக்குள் சுழரும் ரணங்கள் பற்றி என்னால் இப்ப கதைக்கமுடியாது... ஏனோ இம்முறை என் மனது சஞ்சலப்பட்டுக் கொண்டு இருந்தது... இறுதிகட்ட யுத்தம் நடந்து கொண்டிருந்த போது இணையசெய்திகளை பார்த்து விட்டு ஏன் இயக்கம் ஒன்றும் செய்யாமல் இருக்கின்றது என்னை குடைந்தே விட்டாள் என்ன பதில் சொல்ல முடியும் பிரிக்கேடியர் தமிழ்செல்வன் மீதான தாக்குதலில் இருந்தே எண் ஆழ்மனம் ஒரு எச்சரிக்கை கலந்த சஞ்சலத்தினுடே பயணித்தது...!!

தொடருங்கள் புலிக்குரல் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

18.09.2011...காலையில் மனம் அங்கும் இங்குமாக ?????????

இதை ஒருக்கா சரி பாருங்கே, நல்ல இருக்கு தொடருங்கள் புலிக்குரல்

தொடருங்கள் புலிக்குரல் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கருத்திட்டவர்கள் அனைவருக்கும் உடையர் அண்ணை அந்த திகதி சரியானதே...

............................இம் முறை எனது பயணமானது சற்று வித்தயாசமானதும் புதிய பாதையினையும் கொண்டிருந்தது அதனால் என் எண்ண ஒட்டங்களும் எதிர்பார்ப்புகளும் இதயத்துடிப்பும் பயணத்திற்கு முதலே சற்றே அதிகமாய் இருந்தது என் நடவடிக்கைகளை கண்டு மனைவி கொஞ்சம் லொள்ளுவிட்டுக் கொண்டிருந்தாள்.. இம்முறை என் பயணப்பாதை வேறு அதவிட குடும்பம் சகிதமாக செல்வாதால் எதுவித சிக்கல்கலும் வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன் இதற்க்காக சில (....)- வலுவான செல்வாக்குகளையும் செலுத்தி இருந்தேன் ஏன் என்றால் இழப்புகளை எம்போதுமே ஈடுசெய்ய முடியாது என்பதில் நான் கொண்டிருந்த வலுவான கருத்துதான். பயணநாள் நெருங்க நெருங்க என் இதயத்துடிப்பும் அதிகரித்தே கொண்டு சென்றது.. அதிகாலை 4.00 மணி நடைபேசியில் குறித்துவைத்த மணிக்கு அலறியது வெளிக்கிட்டு தயாராகி இரவு சொல்லிவைத்த ஆட்டோக்கும் நடைபேசியிணை இயக்கி அழைப்பு கொடுத்துவிட்டு காத்திருந்தோம் மனைவி இரு மகள்களுடன் என் முத்தமகள் எங்கப்பா போறம் பெரியம்மா வீட்டுக்கா என்று கேட்டு குடைந்து கொண்டிருந்தாள் மழலை மொழியில். இல்லம்மா நாங்கள் புதுக்குடியிருப்பு போறம் நிங்களும் தங்கைச்சியும் இப்ப அச்சாவா படிச்சு பெரியாளா படிக்கும்போது நாங்கள் புதுக்குடியிருப்பிலதான் படிக்கிற அதுக்குதான் இப்ப போறம்.....ம்..ம்.. என் இரண்டு பெண்பிள்ளைகளையும் என் கலைகலச்சாரத்துடனேயே வளர்க்கனும் என்று திட்டமிட்டுள்ளேன் பெண்பிள்ளைகள் என்பதால் எதிர்காலம் குறித்தநடவடிக்கைகளை இப்போதே தீர்மானித்து வைத்திருந்தேன்... ஆட்டோ வந்தது எம்நால்வரையும் சுமந்து பேரூந்து நிலையம் சென்றடைந்தது.... எமக்குரிய பேருந்தினை கண்டுபிடித்து எறி அமர்ந்தோம்...... இம் முறை கிழக்குவழியாக எனது பாரம்பரிய கிராமங்களை கடந்து செல்லவுள்ளதால் என் எதிர்பார்ப்புகளும் சுழன்றுகொண்டே இருந்தது. கிழக்கில் எமது கிராமங்களை ஊடறுக்கும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் பற்றி இணையங்களில் கேள்விப்பட்டதை நேரே தரிசிக்கும் நிலைபற்றி என்னவென்று சொல்வது ஆமாம் திரியாய், புல்மோட்டை , பதவியா, கொக்கிளாய் ,நாயாறு, முல்லைத்தீவு ஊடாக வற்றாப்பளை புதுக்குடியிருப்பு இதுதான் பயணப்பாதை இதில் திரியாய், புல்மோட்டை , பதவியா, கொக்கிளாய் ,நாயாறு புதிதாக நான் மேற்கொள்ளும் பாதை. நான் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றியதால் திரியாய் , அதனோடு இணைந்த குடியேற்ற கிராமாமான கல்லறாவ போன்ற பகுதிகளில் கள வேலைகளில் நீண்டகாலமாக ஈடுபட்டிருந்ததனால் நன்கு பாீட்சமான இடங்கள் இதவிட புல்மோட்டை பகுதிக்கு பாஸ் நடைமுறைகள் இருந்ததினால் நான் அங்கு செல்வதற்க்கு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை சில சமயங்களில் அரச உத்தியோகத்தர்களின் அனுமதிகள் ஊடாக சந்தர்ப்பம் கிடைத்தும் வேலைப்பளுவின் காரணமாக செல்வதற்க்கு கிடைக்கவில்லை.....

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புலிக்குரல், நீண்ட பயணப் பாதை, தொடருங்கள் பயண அனுபவத்தை, தொடர்ந்து எழுத ஒரு பச்சை

என்னுடைய மச்சான் அனுரதபுர ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறார், அவர் பிறைவேட்ட கிளினிக் வைச்சிருக்கிறார் புல்மோட்டையில், சனி & ஞாயிறு அங்கு போறவர் மற்ற நாட்களில் அங்குள்ளவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளார், அங்கு முஸ்லிம் இனத்தவர் அதிகம், எப்ப இருந்து இந்த பாஸ் முறை, அங்கிருந்து ஓவ்வரு விதமான் கனிய மண் வகைகள் கொண்டுவந்தவர் நாங்கள் கேட்டு, ஆனா போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உடையார் அண்ணை........

சமாதானப்பேச்சு வார்த்தைக்கு பின்பு நிலவிய இறுக்கமான காலத்திலிருந்து நடைமுறையில் இருந்தது தமிழ் என்றால் போவது கடினம் இதவிட தொண்டு நிறுவனம் என்றால் சொல்லவே தேவையில்ல.... ஆனாலும் சிலநேரங்களில் இறுக்காமான நடைமுறை இருப்பதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குரல் யாழின் பாஸ்வேட் மறந்து போச்ச, புல்மோட்டை மாதிரி இங்கு உள் நுளைவது கடினமல்ல, ஆனால் நுழைச்சா பிறகு தெரியும் தானே என்ன நடக்கும் என்று. பயப்படமால் இணையுங்கே உங்கட அடுத்த பதிவை, நாங்கள் இருக்கிறம் உடை வாளுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

பண்டாரவன்னியன் காலத்தில் இருந்தே தமிழனின் தலைவிதியை வன்னி மண் தான் தீர்மானித்து வந்துள்ளது!

உங்கள் கதையின் முடிவு தமிழனின் தலைவிதியை ஓரளவுக்காவது கோடிட்டுக் காட்டும்!

தொடருங்கள், புலிக்குரல்!!!

18 - 09 - 2011 - தேதி எப்படி சரியாகும்? விளக்குவீர்களா?

தொடருங்கள் புலியாரே :)

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Eas நான் தமிழீழத்தில் இருப்பதால் அந்த திகதி நான் பயனித்த திகதி ஆதலால் அது சரியாகவே இருக்கும்.....!

புலிக்குரல்

நீங்கள் டிவி சீரியல் இயக்கினால் நல்ல எதிர்காலம் உண்டு. எங்கேயோ போயிருவீங்கள். :D

புலிக்குரல்

நீங்கள் டிவி சீரியல் இயக்கினால் நல்ல எதிர்காலம் உண்டு. எங்கேயோ போயிருவீங்கள். :D

எப்பிடித் தப்பிலி கண்டுபிடிச்சியள் :lol: :lol: :D :D ?

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.