Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    37
    Points
    88006
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    33600
    Posts
  3. satan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    10112
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    10
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/01/22 in Posts

  1. கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம். நேற்று... நள்ளிரவு, ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா... அதன் நட்பு நாடான... இலங்கையை, பாதுகாக்கும் நோக்கில்.... டெல்லி.. இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும்... பஞ்சாப் ரெஜிமெண்டில் இருந்து.. 215 இராணுவ வீரர்களுடன் ஒரு விமானமும், தமிழ்நாடு, தாம்பரம் இந்திய இராணுவத் தளத்திலிருந்து.... மட்றாஸ் ரெஜிமென்ட் படையை சேர்ந்த.... 200 இராணுவ வீரர்களும், முதல் கட்டமாக... கொழும்பு கட்டுநாயக்கா... விமான நிலையம் வந்து இறங்கி உள்ளார்கள். இன்று இரவும்... மீண்டும் வன்முறை பெரிய அளவில், தலை தூக்கும் என கருதப் படுவதால்... இலங்கையின் வேண்டு கோளுக்கு இணங்க... இவ் அவசர உதவி செய்யப் பட்டதாக டெல்லியில் இருந்து தெரிவிக்கப் படுகின்றது. அத்துடன்... இன்று மாலை, இந்திய போர் கப்பலான... "விக்ரமாதித்யா", 4500 இராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு... கொழும்பு துறை முகத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக, இந்திய தூதரகத்தை சேர்ந்த, அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஒரே நாளில்.... ஆறாயிரம் இந்திய இராணுவம், இலங்கைக்கு வந்துள்ளதை... இலங்கையின்.. இறையாண்மைக்கு ஏற்பட்ட இழுக்கு என்று, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகள்... மிகுந்த கண்டனத்தை அரசுக்கு தெரிவித்ததுடன், கோத்தபாயாவை.... உடனடியாக பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டார்கள். விரைவில்.. மேலதிக செய்திகளுக்கு... எம்முடன் இணைந்திருங்கள்... https:// Suya Aakkam .COM
  2. ஒரே போஸ்டில் தமிழ் சிறி ஒபாமா ஆகிவிட்டார்
  3. தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!
  4. என்னுடைய பதிவையும்... திருடுகின்றார்கள் என்று சந்தோசப் படுவோம். 😁
  5. இப்ப வருகிற இந்திக்கார இந்திய ராணுவத்துக்கு சிங்களவன் யார், தமிழன்யார் என்று தெரியாமல் குழம்பி பழக்க தோஷத்தில அவங்களை தெருவில கிடத்திப்போட்டு டாங்கியை ஏத்திக்கொண்டு போகப்போறாங்கள்.......வேலியால போன ஓணானை வேட்டிக்குள்ள புடிச்சு விட்டாச்சு..... மக்களே கவனம்......! 🤔
  6. அதை அப்படியே கொண்டினியூ பண்ணிய விதம் இருக்கே… இராஜதந்திரத்தில் ஹென்றி கீசிஞ்சர் பிச்சை வாங்கணும் நம்ம சாத்ஸ் கிட்ட🤣. ஊடக பேரிடி என்பது பொருத்தம் கூட அல்லவா? தம்பி 1ம் திகதி மதியம் பன்னிரெண்டு மணியோட விசயத்தை விட்டுடோணும். இதென்ன 2ம் திகதி தாண்டி இழுக்கிறியள்🤣
  7. பிந்திக்கிடைத்த செய்தி— மூண்டு விமானத்தில ஒண்டு அம்பாந்தோட்டையில் இருந்து சீனக்காரன் அடிச்ச ஏவுகணையில தரை இறங்க முன்னமே விழுந்து நொருங்கிப்போச்சு..
  8. இந்தியா... ஓடி, ஓடி.... கடன் கொடுக்கும் போதே... சோழியன் குடும்பி, சும்மா ஆடாது என்று நினைத்தனான். இந்தியா... குடுத்த 4 பில்லியன் அமெரிக்க டொலருக்கும்... மொத்தமாக ஸ்ரீலங்காவை, எடுக்கப் போகிறார்கள் போலுள்ளது. சீனாக்காரன்... அம்பாந்தோட்டை துறை முகத்திலும், கொழும்பு கிழக்கு முனைய துறைமுகத்திலும்... மீன் பிடித்து விற்று... குடுத்த கடனை, கழிக்க வேண்டியதுதான்.
  9. புட்டினும் புதுமாத்தளனும் II காலம்: புத்தாண்டு தினம் 2027 இடம்: பதுங்கு குழியாக மாறிய பாரிசின் சிறுநீர் நாற்றம் எடுக்கும் ஒரு நிலக்கீழ் இரயில் நிலையம். மச்சான் அமுதன், உன் கடிதமும் நீ அனுப்பிய 50000 இலங்கை ரூபாயும் கிடைத்தது. அதை இங்கே மாற்றி 4999 யூரோவாகஎடுத்து கொண்டேன். உனது காலம் கருதிய உதவிக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேனோ? எப்போசெய்ய முடியுமோ? தெரியவில்லை மச்சான். எங்கட வெசாயில்ஸ் பக்கம் எல்லாம் சண்டைல அழிஞ்சு போச்சு மச்சான். இப்ப இஞ்ச பரிசுக்கு, எங்கடஆக்கள் இருக்கிற லாச்சப்பலுக்கு வந்திருக்கிறன். இஞ்ச ஒவ்வொரு ரோட்டிலும் 90% போல தமிழ் ஆக்கள்கடையள்தான். இப்ப பாதி எரிஞ்சும், ஏரியாமலும் இருக்கிறத பாக்க வயிறு எரியுது மச்சான். மச்சான் உண்ட கடிதத்தோட எங்கட பழைய பள்ளிக்கூட முன் வாங்கு நண்பன் படான்ஸ் எழுதினகடிதத்தையும் ஒரு போட்டோ கொப்பி எடுத்து வச்சிருந்தாய் மச்சான். இந்த மரண அவஸ்தையிலும் அதைவாசிச்சு வாய் விட்டு சிரிச்சன் மச்சான். அதுவும் “படான்ஸ் இன்னும் மாறவே இல்லை” எண்ட உன்ர கொமெண்டை வாசித்து விழுந்து விழுந்து சிரிச்சன் மச்சான். அவன்ர கதையள் எப்பவும் படான் கதையள் தானே மச்சான். அதானே ஆளுக்கு படான்ஸ் எண்டு பெயர்வச்சனாங்கள். ஆனால் அவன் நல்லவன்ரா. சும்மாவே படுத்திருந்து விட்டத்தை பார்த்து விதம் விதமா வாழ்க்கை தத்துவம்பேசுவான், இப்ப ஆரோ ஒரு பின் லாடன் அவனை பிடிச்சு நல்லா உரு ஏத்தி இருப்பான் போல கிடக்கு. வாயதிறந்தா டெத் டு அமெரிக்கா எண்டு கொண்டு திரியிறான். பாவம். கெதில காரை கொண்டுபோய் வெள்ளையள்மேல ஏத்துற அளவுக்கு மாறிடுவானோ எண்டும் பயமாகிடக்கு. சரி படான்ஸ் சொன்ன விசயங்கள் பற்றி பிறகு விளக்கிறன், அதுக்கு முதல் நீ உக்ரேன் பற்றி அரைகுறைவிளக்கத்தோட சிலதை கேட்டிருந்தாய் அதை ஒருக்காய் பாப்பம். மச்சான் - உக்ரேனில் பெண் படையணி இருக்கெண்டு கேட்டிருந்தாய். உண்மைதான். நான் இல்லை எண்டுசொன்னானே? ஆனால் ஆண்களை போல பெருவாரியாக பெண்கள் சண்டைக்கு போகேல்ல மச்சான். கணிசமான பெண்கள் சண்டைக்கு போக பெரும்பாலன பெண்கள், குழந்தைகள் தப்பித்தான் வந்ததுகள். கனஇடங்கள்ள உக்ரேனிய ஆம்பிளையள் சண்டை எண்டதும் போடர் வரை வந்து பிள்ளை குட்டியை விட்டுட்டுதிரும்பிபோனது உண்மை மச்சான். அதே போலதான் உக்ரேன் டிரைவர் மார் உட்பட பல உக்ரேன் புலம்பெயர்ந்தவர்கள் சண்டை பிடிக்க ஊருக்கு போனதும். பிறகு அங்க எல்லா ஆண்களுக்கும் கட்டாய சேவை அதுதான் வர முடியாது எண்டும் சொல்லி இருந்தாய். ஓம்இதையும் நான் இல்லை எண்டு சொல்லேல்ல மச்சான். ஆனால் தலைவரும்தான் கட்டாயம் ஒராளாவது வீட்டுக்கு வர வேண்டும் எண்டு எங்களிட்ட கேட்டவர்தானே? நாங்கள் நிண்டனாங்களே? நாளைக்கு சாகப்போற கிழடுகளை பாஸ்-பிணை வச்சிட்டு உச்சி எல்லேஓடியந்தனாங்கள். அப்படி உக்ரேன் ஆம்பிளையள் அதிகம் ஓடி வந்திருந்தால் ரஸ்யாவை தடுத்து அடிச்சிருக்க முடியாதுதானேமச்சான். அததான் சொல்லுறண்டா. இனியாவது மேலோட்டமா வாசியாமல் கொஞ்சம் ஊண்டி படி சரியே. நான் உக்ரேனியனிட்ட எதையோ வாங்கி குடிக்க சொன்னதும் உனக்கு ரோசம் வந்திட்டு போல. ஆனால் நான்சொன்னதுதான் உண்மை மச்சான். உந்த ரோசம் எல்லாம் நாங்கள் ஊரில நிண்டு சிறிலங்காவிட்ட காட்டிஇருக்க வேண்டும். சரி இனி படான்ஸ் சொன்னதுக்கு வாறன். மச்சான் எமக்கு அடிச்சது எல்லாரும் சேர்ந்துதான் மச்சான். நேட்டோவிண்ட சட்டிலைட் படத்த பார்த்து, ரஸ்யன் விமானத்தில, உக்ரேன் விமானிகள், இந்தியா சீனாகொடுத்த குண்டை போட்டவங்கள். ஆக எமக்கு அடிக்காதவன், அடிச்சவன் எண்டு இதில் நாம் யார் பக்கமும் எடுக்க முடியாது மச்சான். ஆனால் 2ம் உலக யுத்தத்தில் தன்னை அழித்த அமெரிக்காவையே ஆசியாவில் தனது 1ம் நண்பன் என நம்பும்நிலைக்கு கொண்டு வந்த ஜப்பான் மாரி நாங்கள் இவங்களோட டீல் பண்ணி இருக்க வேண்டும் மச்சான். இப்படி உலக வெடிப்புகள் வரும் போது அதை சாதுரியமாக தமக்கு சார்பா திருப்பிற இனம்தான் வெல்லும்மச்சான். நாங்கள் ஊரில இருந்து ஓடி வந்து கூட்டம் கூட்டமா ரஸ்யாவிலும் பெலரோசிலும் வாழவில்லைதானே மச்சான்? கிழக்கு ஜேர்மனி போன ஆக்கள் கூட மேற்கு ஜேர்மனிக்கு ஓடி வந்ததை அவை மறக்கலாம், நான் மறக்கேல்லமச்சான். ஆகவே ரஸ்யா போல ஊரில் எமது இனத்தின் அழிப்பில் மேற்க்குக்கும் பங்கு இருக்கிறது எண்டாலும், ரஸ்யாவை போல அன்றி புலம் பெயர் தேசம் எங்கும் எமது இனம் தழைக்க, நாம் வாழ்க்கையை கட்டி எழுப்ப, எமது பலத்தை ஒருங்கிணைக்க, உதவியது இந்த நாடுகளும் அவற்றின் ஜனநாயக, பல்லின, சகிப்புத்தன்மைபண்பும்தான் மச்சான். இதற்க்கான பிரதியுபகாரம்தான் மச்சான் நான் சொன்ன விசுவாசம். ஆனால் இது நிபந்தனை அற்ற விசுவாசமாக இருக்க தேவையில்லை மச்சான். எம் இன நலன் சார்ந்து இருக்க வேண்டும். இரெண்டு தரப்பும் எமக்கு கெடுதல் செய்தாலும் ஒரு தரப்பு கெடுதல் மட்டுமே செய்ய மறுதரப்புஇரெண்டையும் கலந்து செய்துள்ளது மச்சான். தவிரவும் உனக்கு ஒண்டு வடிவா விளங்க வேணும் மச்சான். இந்த உலகில் தார்மீகமான வெளியுறவு கொள்கை(ethical foreign policy) எண்டு ஒண்டு இல்லை மச்சான். மேற்கோ, ரஸ்யாவோ, சீனாவோ, இந்தியாவோ, ஈரானோ, ஏன் சின்னம் சிறு கிரிபாட்டி தீவோ, எல்லா நாடும்தன்னலமான வெளிநாட்டு கொள்கையைதான் (self interest based foreign policy) கைக்கொள்ளுது மச்சான். இதில் நல்லவன் கெட்டவன் யாருமில்லை மச்சான். மேற்க்கு மீது வைக்கும் எல்லா குற்றத்தையும், ரஸ்யா மீதும்வைக்கலாம். ரஸ்யா மீதுவைக்க்கும் எல்லா குற்றத்தையும் மேற்க்கு மீதும் வைக்கலாம். ஆகவே சும்மா விழலுக்கு நியாயம் பிளக்காமல் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கும், ஒட்டு மொத்த உலக தமிழ்இனத்திற்கும் நீண்ட, மத்திய, குறுகிய கால அடிப்படையில் யார் பக்கம் நிற்பதால் இலாபம் என மட்டும்தான்மச்சான் நாங்கள் பார்க்க வேண்டும், பார்க்க முடியும். இலங்கை புலம் பெயர் அழுத்தத்துக்கு பயப்படுகிறது எண்டால் அது ரஸ்யாவில இருக்கிற தமிழ் ஆக்களாலயோமச்சான்? இல்லைத்தானே? இப்ப இந்த உலக யுத்தத்தில ரஸ்யா வெண்டால் - நாங்கள் இனி மொஸ்கோ, விளாடிவொஸ்டொக், சென்பீட்டர்ஸ்பேக் எண்டு போய் (போகவிட்டால்) பழையபடி முதல்ல இருந்து ஆரம்பிச்சு, அங்க பரவி, பெற்றோல்செட் வாங்கி, அங்க லோக்கல் எம்பிமார் எங்கட குரலுக்கு மதிப்பு கொடுக்கும் அளவுக்கு வளந்து வர எத்தனைபத்தாண்டுகள் பிடிக்கும் மச்சான்? அதுகுள்ள இலங்கையில பிக்குமார் எங்களுக்கு சுண்ணாம்பு தடவிமுடிச்செல்லே இருப்பாங்கள். 2009 க்கு பிறகு புலம் பெயர் தமிழர் இந்த இனத்தின் பெரிய பலம் எண்டால் - அந்த பலம் தங்கி இருப்பதுஉலகில் நேட்டோ/ மேற்கு மேலாண்மை செய்யும் வரைக்கும்தான் மச்சான். இதை விளங்கி கொண்டால் நாம் எந்த பக்கம் நிண்டிருக்க வேண்டும் என்பதை கண்ணை மூடி கொண்டுசொல்லி இருக்கலாம். அடுத்து மனிதாபிமானம் பற்றி. மச்சான் உண்மையை சொல்லுறன். ஒரு ஏதிலி தமிழனா நான் செய்ய கூடியதுஇன்னொரு ஏதிலிக்கு அனுதாபப்படுவது மட்டும்தான் மச்சான். அது உக்ரேனிய ஏதிலியா இருந்தாலும், டொன்பாசில் இருக்கு ரஸ்ய வம்சாவழி ஏதிலியா இருந்தாலும், ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட இந்திய, கறுப்பின ஏதிலியா இருந்தாலும் அத்தனை பேருக்கும்இரக்கப்படுவதில், தப்பு ஒண்டும் இல்லைத்தானே மச்சான். ஏதோ எங்களில ரஸ்ய, உக்ரேனிய ரத்தம் ஓடுமாப்போல சில தமிழ் ஆக்கள் ஏன் குத்தி முறியினமோ தெரியாதுமச்சான். அரசியலுக்கு சம்பந்தமில்லாத மனிதர்கள் எங்கே துன்பப்பட்டாலும் அதை வெளிகொணரும், அனுதாபப்படும்குறைந்த பட்ச மனிததன்மை கூட எம்மில் சிலருக்கு இல்லை மச்சான். அதை விசிலடிச்சு ஸ்கோர் கேட்டுகொண்டாடியது எல்லாம் வேற லெவல் மச்சான். வடிவா கவனிச்சு பார் மச்சான், இப்படி கொண்டாடிய தமிழர்கள் பலர் அநேகம் இலங்கை ஆமி கொக்கு சுடுறதுவக்கோட திரிஞ்ச 85 காலத்துக்கு முதல் ஊரை விட்டு கிளம்பின ஆக்கள்தான். அவையள பொறுத்த மட்டில் இது Sony PS 5 இல் அவையளின் பேரப்பிள்ளையள் விளையாடும் Mortal Kombat போல இன்னொரு கேம். பதுங்கு குழிக்குள் படுத்திருந்த, மிக் வீசிய குண்டில் உயிரோடு மணலுக்குள் புதைந்து போன நண்பனைவெறும் கையால் கிளறி எடுக்க முனைந்த, நவாலி தேவாலய, செஞ்சோலை சதைகளை கைகளால் கூட்டிஅள்ளிய எந்த தமிழனுக்கும் அதே கொடுமை இன்னொருவனுக்கு நடக்கும் போது ரசித்து விசிலடிக்க மனம்வராது மச்சான். அது ரஸ்யனோ, உக்ரேனியனோ. கடசியா இவன் படான்ஸ் சொன்ன வெள்ளைகாரனுக்கு சூ (சப்பாத்து) துடைக்கிற விசயம் பற்றி. மச்சான் ஊரில சொந்த துவக்கை துடைச்சு ஆம்பிளையா, வீரமா, கெத்தா வாழ விருப்பம் இல்லாமல்வெள்ளைகாரன்ர சூ துடைச்சாவது உயிரோட வாழ்ந்தால் போதும் எண்டு ஓடி வந்த ஆள்கள்தானே உடான்சும், படான்சும்? இப்ப திடீரெண்டு அது கசக்குதோ? நாங்கள் படிக்க, உழைக்க, கார் வாங்க, வீடு வாங்க, பிள்ளை பெற, நோய் வாய்பட்டால் மருந்து தர, இலவசமாக உலகில் முதலாவாதாக வக்சீன் தர, வாங்கிய வீட்டை வாடகைக்கு விட்டுட்டு ஊரில் போய் கும்மிஅடிக்க - இதெல்லாம் செய்யயுறதுக்காக வெள்ளைகாரனின் சூ துடைக்கும் போது எமக்கு உறைக்கவேஇல்லை மச்சான். ஆனால் சண்டை எண்டோனதான் மச்சான் நாங்கள் இதுவரை துடைத்து கொண்டிருந்தது வெள்ளைகாரன் சூஎன்று நியாபகம் வருகுது எங்களுக்கு. அப்ப கூட இன்னொரு வெள்ளைகாரனுக்கு சூ துடைப்பதில்தான் எமக்கு ஆர்வம் மச்சான். இதுதான் மச்சான் எங்கட புலம் பெயர் தமிழ் இனம். தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவைக்கு ஒரு நியாயம். வாய்க்கு வசதியா புரட்டி புரட்டி கதமட்டும் நல்லா வரும். இப்ப சொல்லு உக்ரேனியனியனிடம் இளனி வாங்கி குடியுங்கோ எண்டு நான் சொன்னது சரிதானே மச்சான். சரி மச்சான். நாளை மறுநாள் பிரான்ஸ் அகதியளை ஏத்தி கொண்டு ஒரு கப்பல் மார்சேயில் இருந்துசோமாலியா போகுதாம். பாப்பம் இடம் கிடைத்தால் சோமாலியாவில் இருந்து கடிதம் போடுறன். நட்புடன், அன்பு நண்பன் உடான்ஸ்
  10. கொரோனா வந்து உயிரை வாங்குது.. ஒருக்கால் ஊர் போய் உறவுகளைப் பார்த்திட்டு வருவம்.. என்று வெளிக்கிட்டால்.. ரிக்கெட் போட.. ஒரு மாதம்.. ஒவ்வொரு நாளும்.. kayak க்கோடு கட்டிக்கிடந்தாலும்.. விலை ஏறுவதும் இறங்குவதும்.. கோவிட் கேஸுக்கு ஏற்றமாதிரி இருக்க.. வந்த கடுப்பில்.. இண்டைக்கு புக் பண்ணியே தீருவது என்று முடிவுகட்டி.. 575 பவுனுக்கு ரிக்கெட் போட்டாலும்.. காசு கட்டும் போது விசா கிரடிட் காட்டால பணம் செலுத்தினால் பாதுகாப்புன்னு சொல்லக் கேட்டு அதை பயன்படுத்தினால்.. அவனோ.. விசா டெபிட் காட்டுக்குரிய 25 பவுன் கழிவை கட் பண்ணிட்டு..25 பவுனைக் கூட்டி எடுத்திட்டான். முதற்கோணல் முற்றிலும் கோணல்.. என்ற எங்கட ஆக்களின் பழமொழி ஞாபகத்திற்கு வந்து தொலைச்சாலும்.. அதெல்லாம்.. தாழ்புச் சிக்கலின் வெளிப்பாடுன்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு... அடுத்து என்ன.. இலங்கை விசாவுக்கு அப்பிளை பண்ணப் போனால்.. அங்கு ஒரு ஆறுதல்.. இப்பவும் அப்ப போலவே 32 பவுன் தான் (ஆனால் டொலரிலதான் செலுத்தனும்..) ஒரு மாத கால விசாவுக்கு வாங்கிறாங்கள் என்று. சரி விசாவுக்கு அப்பிளை பண்ணி அது ஒரு இரண்டு மணித்தியாலத்துக்குள்ள வந்து சேர.. கோவிட் கோதாரி என்னென்ன கென்டிசன் போட்டிருக்கு என்று பாப்பமுன்னு.. கூகிளாரைக் கேட்க.. அவர் இங்க கூட்டிணைத்துவிட்டார்.. https://www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/entry-requirements இங்க போய் வாசிச்சு தலைசுத்தி ஏதோ ஒருமாதிரி ஒரு லிங் கிடைக்க http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=151&Itemid=196&lang=en அதைத் தட்டி அங்க போனால்.. அவன் கோதாரிப்படுவான்.. கொவிட் இன்ஸ்சூரனும் எடுக்கனும் என்று போட்டிட்டான். சரின்னு அதுக்கும் ஒரு 1500 ரூபாவுக்கு ஏற்ற அளவில பவுன்ஸை கொட்டி அதையும் ஆன்லைனில எடுத்திட்டு.. கொவிட் வக்சீன் சேர்டிபிக்கட்டும் இருக்குத்தானே எனிக் கிளம்புறது தான் பாக்கின்னு நினைக்க.. அங்கால தட்டினால்.. அங்கால எயார்லைன்ஸ் காரன் ஒரு ஈமெயில் போட்டிருக்கான். அதில இன்னொரு லிஸ்ட். அதில இருந்த லிங்கை தட்டினால்.. கொவிட் சேர்டிபிக்கட் மட்டும் போதாது.. பயணத்துக்கு முன்.. 72 தொடக்கம் 48 மணித்தியாலத்துக்குள் எடுத்த கொவிட் பி சி ஆர் நெகட்டிவ் சேட்டிபிக்கட் தேவைன்னு போட்டுருந்தான். இதென்னடா கோதாரின்னிட்டு.. சரி.. வேலை செய்யுற ஆஸ்பத்திரில ஒரு ரெஸ்டை செய்து அதோட போவம் என்றால்.. நோ நோ.. பி சி ஆர் ரெஸ்ட்.. குறிப்பிட்ட தனியார் கம்பனில தான் செய்யனுன்னும் அதுக்கும் ஒரு லிஸ்ட்.. அதுக்கும் லிங்குகள். எப்படி எல்லாம் பணம் பண்ணுறாங்கள்.. ரிக்கெட்டை வேற போட்டுத் தொலைச்சாச்சு.. அதுவும் சீப்பான ரிக்கெட் என்று றிபன்ட் எடுக்க முடியாத சீப்புக்கு போட்டதால.. வேற வழியின்றி.. சீப்பான பி சி ஆருக்கு தேடினால்.. கோம் கோவிட் கிட் மட்டும் தான் சீப்பென்னு வந்திச்சு. சரின்னு அதை புக் பண்ணினால்.. கோவிட் கிட் வீட்டுக்கு வராது போய் எடுக்கனுன்னு வந்திச்சு. அட கோதாரிப் படுவாரே இதை முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேன்னு திட்டிட்டு.. சொன்ன இடத்த எடுக்கப் போனால்.. அவன் கடையைச் சாத்திட்டான். பிறகு அடுத்த நாள் வேலைக்குப் போற நேரமா அவசர அவசரமாக் கிளம்பி அங்க போனால்.. கடைக்காரன் ஈயோட்டிக்கிட்டு நிக்கிறான். சரி அது அவன் பிழைப்புன்னு நினைச்சுக் கிட்டு.. நம்ம கொவிட் கிட் பெட்டியை.. பொறுக்கிக்கிட்டு.. போயிட்டன். அடுத்த நாள் அந்த ரெஸ்டை வீட்டில வைச்சு எடுத்திட்டு.. இதை இப்ப எங்க கொண்டு போய் எப்ப போடுறதுன்னா.. தேடினா.. அதுக்கு இன்னொரு இடத்தைச் சொன்னாங்கள். இதென்னடா வடிவேல் காமடி மாதிரி.. இந்தச் சந்தில் இருந்து அந்தச் சந்துக்கு வரச் சொல்லுறான்டான்னு.. நினைச்சுக்கிட்டு அங்க போய் அதை தொபட்டீர் என்று பெட்டியில் போட்டதில்.. சரி சாம்பில் விழுந்த விழுகைக்கு சுக்கு நூறாகி இருக்கும்.. கொடுத்த பவுன்சும் தூள் துளாயிட்டென்னு.. நினைச்சிட்டு நேரம் போக.. கடைசியில ஒரு மெயில் வந்திச்சு.. சாம்பிள் கிடைச்சிட்டுது.. லாப்புக்கு அனுப்பியாச்சுன்னு. அப்ப தான் சுக்குநூறான சிக்கலில் இருந்து வெளிப்பட்டு மனசு.. இன்னொரு சிக்கலுக்க மாட்டிவிட்டுது. எல்லாம் சரி.. தம்பி.. இப்ப உனக்கு றிசல்ட் பொசிட்டுவ் வுன்ன.. வந்துன்னு வைச்சுக்க.. இவ்வளவு காசும் அம்போ. அது தெரியுமோன்னு சொல்லிச்சு. அப்ப தான் மறுபுத்திக்கு உறைக்க வெளிக்கிட்டிச்சு. சரி.. எதுவா கிடந்தாலும் போறது போகத்தானே செய்யுமென்னு.. அப்படிப் போனாலும்.. ஓவர் டைம் செய்து விட்டதைப் பிடிக்கலாமென்னு.. இன்னொரு மனசு.. அந்த சலன மனசை வலிஞ்சு சமாதானப்படுத்த.. நள்ளிரவுக்கு முன்.. மீண்டும்... போன் மணி.. டிங் கன்னு ஒலிக்க.. ஈமெயிலை சொடிக்கினால்.. பி சி ஆர் றிசல்ட் பிடிஎவ்வில வந்திருந்திச்சு. அது நெகட்டிவ் தான். அது எனக்கு எப்பவோ தெரியுமுன்னு.. இப்ப அந்த சலன மனசு.. தனக்கு தானே மார்தட்டிக் கொண்டிச்சு. சரி எனிக் கிளம்புறது தானே பாக்கின்னுட்டு.. ஊருக்கு சும்மா போகேலுமோ.. அங்க பருப்புத் தொடங்கி மஞ்சள்.. வரைக்கும்.. தட்டுப்பாடு. கரண்ட் வேற கட் பண்ணுறாங்கள் என்று யாழில ஒட்டிற செய்திகளை விடாமல் வாசிச்ச அறிவு எச்சரிக்க... எனி ஊரில போய் சொந்தங்களை அதுவேணும்... இதுவேணுன்னா.. கேட்டா.. அதுங்க இருக்கிற கடுப்புக்கு.. செருப்பால அடிக்குங்கள்.. என்றிட்டு.. பல சரக்குகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு.. வெயிட்டைப் பார்த்தால்.. 5 கிலோ எல்லை தாண்டிட்டு. சரி இதில எதை எடுத்து வெளில போடுறது.. ஒன்னையும் போடேலாது.. கொண்டு போ.. எயார் போட்டில பார்க்கலாம் என்று ஏதோ ஒரு மனசு தைரியம் கொடுக்க பெட்டியைக் கட்டி ரெடி பண்ணிட்டு இருக்க.. இன்னொரு டிங் மணி கேட்டிச்சு. ஈமெயிலை துறந்து பார்த்தால்.. செக் லிஸ்ட் எல்லாம் சரியோன்னு பாருன்னு எயார்லைன்ஸ் காரன் லிஸ்ட் அனுப்பி இருந்தான். எல்லாம் இருக்கு.. ஆனால் லொக்கேட்டர் போம் இல்லை.. சரின்னு அதை நிரப்புவம் என்று இலங்கை குடிவரவு குடியகழ்வு இணையத்துக்கு போனால்.. அவங்கள் இன்னொரு சந்துக்கு போன்னு இணைப்பைக் கொடுத்தாங்கள். அங்க போனால்... அது பாஸ்போட்டை படம் எடு.. உன் மூஞ்சியை படமெடுன்னு ஆயிரத்தெட்டு ஆலாபரணம். சரின்னு அதெல்லாம் செய்திட்டு.. சில்லெடுப்பில இருந்து வெளில வருவமென்றால்.. கியு ஆர் கேட் வரமாட்டேன்னு நின்னுட்டுது. ஏதோ பிழைச்சுப் போச்சு... அல்லது நம்மட பெயரும் தடை லிஸ்டில இருக்கோன்னு.. கோதாரி உந்த யாழில எழுதப் போய்.. நம்மளையும் தடை பண்ணிட்டாய்களோன்னு.. திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க.. கியுஆர் கோட்டுக்கு இந்த இந்த புரவுசரில் போனால் தான் அது சரிவருன்னு சொல்லி இருக்க.. அதைக் கண்ட பின் தான்.. யாழை திட்டினதை வாபஸ் வாங்கினது. சரின்னு லாப்டாப்பை விட்டிட்டு.. போனுக்கால போய் மீண்டும் முயற்சி செய்ய கியூஆர் கோட் வந்திச்சு. இப்ப பார்த்தால்.. நமக்கு தலை சுத்திச்சுது. எத்தினை டாக்கிமென்ட் மொத்தமா வேணும். ஒன்றை கூட்டினால்.. மற்றது விடுபடுகுது. சரின்னு எல்லாத்தையும் போனில ஒரு போல்டருக்குள்ள போட்டு அமுக்கிட்டு.. கிளம்ப.. மனசு சொல்லிச்சு.. போன் சார்ச் இறங்கினால்.. மவனே என்ன செய்வாய்..??! வாய் தான் பார்க்க முடியுமுன்னு நினைச்சிட்டு.. உடன எல்லாத்தையும் பிரின்ட் பண்ணி வைச்சும் கொண்டன். இப்படியா... சில்லெடுப்புக்கள் பலதோடு நாள் கழிய.. போற நாளும் வந்திச்சு. வழமையா எயார் போட்டில ராப் பண்ணி தெரிஞ்ச ஒருத்தரை எயார் போட்டில ராப் பண்ணி விடக் கேட்டால்.. அந்தாள் சொல்லிச்சு.. தம்பி உந்த பழைய விலைக்கு எல்லாம் எனி வர முடியாது. இப்ப கொவிட்டோட.. தரிப்பிடக் காசு மட்டுமல்ல.. ஒரு ரோட்டுக்க நுழையவும் காசு வாங்கிறாங்கள்.. புது விலைக்கு ஓமுன்னா வாறனுன்னு. ஏதோ வந்து தொலையப்பான்னு சொல்லி புக் பண்ண.. அந்தாளும் வர.. கட்டின பெட்டிகளையும் ஏத்திக் கிட்டு எயார்போட்டில போய் இறங்கினால்.. அங்க சனம் குறைவில்லாமல் திரியுது. அதில சிலது மாஸ்கை மூக்குக்கு கீழ விட்டிட்டு திரியுது. சிலது மாஸ்கே இல்லாமலும் திரியுது. பார்த்தால் எயார்போட் செக்குரிட்டியே அப்படித்தான் திரியுறான். சரி நாம மனசுக்க வெந்து.. ஊர் திருந்தவா போகுது.. நாம நம்மளைப் பாதுகாத்துக்கிட்டு போவம்.. என்றிட்டு.. எயார்லைன் செக்கப்புக்கு போனால்.. அவன் சொன்னான்.. எல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது. வெளிக்கிட்டு வந்த கோலமெல்லாம் அலங்கோலமாகி.. வியர்வை வழிஞ்சு கலைஞ்சோட.. மீண்டும் போய் அவனிட்ட நின்றால்.. இப்பவும்.. 5 கிலோ கூட. எப்படி வசதி.. காசு கட்டுறியா.. இல்லை குப்பையில போடுறியான்னு கேட்டான் பாவி. குப்பையில போடவா.. இவ்வளவு கஸ்டப்பட்டு தூக்கிட்டு வாறன்.. எவ்வளவோ போட்டு எடுத்துக் கோ.. ஓவர் டைம் செய்து சேத்துக்கிறன் என்று நானே எனக்கு தெம்பூட்டிக் கொண்டு.. காட்டை நீட்டினால்.. அவன் பாவி.. 200 பவுனுக்கு கிட்ட உருவிட்டான். ஊருக்கு சும்மா போய் வாறது இப்ப ஒரு சரித்திரமாப் போச்சு.. மிச்சம்.. தொடரும்..
  11. எங்கே போகிறது எம்திருநாடு! ************************* அழகிய இலங்கை ஆக்கிரமிப்புகள் இருந்தாலும்-மக்கள் ஒருகாலமும் உணவுக்கு கையேந்தியதாய் வரலாறு இருந்ததில்லை. இடையில்.. உண்னமுடியாத வாழைக்கிழங்கையும் உணவாய்யுண்டு தேங்காயோடு தேனீர் குடித்தோம். பாணுகாக கியூவில் பட்டினி கிடந்தோம்-என சிறிமாவின் காலமும் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிப் போச்சு. ஆனால் இன்றோ அதைவிடவும் கொடுமை பார்க்குமிடமெல்லாம் கியூ பாணுக்கும், பல்பொருளுக்கும் பால்குடிகளின் பால்மாவுக்கும் சமையல்எரி வாயுவுக்கும் சாம்பாறு மரக்கறிகட்கும் மண்ணெண்ணை பெற்றோள் மாவு அரிசி யாவுக்குமே! மக்கள் படும் பாடு சொல்லிலடங்காது. விடிவை நினைக்கவே பயமாக இருகிறது எழுந்தவுடன் அம்மா பசிக்குது என அழும் குழந்தைகளுடன் நாமும் சேர்ந்து அழத்தான் முடிகிறது-என அன்றாடம் உழைக்கின்ற தாய் தந்தைகள். விலைவாசி என்னும் மலையை மக்கள் தலையில் வைத்து தூக்கி நடவென சொல்லுகிறது அரசு. பட்டினியாலும்- மின் வெட்டாலும் சமநிலை படுத்தப்படிருக்கும் ஒரேநாடு ஒரேகொள்கை கோனுயர குடியுயரும்-என வாக்களித்த.. யுத்தம் தெரியாத சகோதர இன மக்களும் கோனையுயர்த்திவிட்டு அவர்கள்போடும் பொருளாதார-பசி பட்டினிகுண்டுகளுக்கு பலியாகும் நிலையில் இன்றோ வீதியில். எனியாவது அரசு போர்வெற்றியை விடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புமா? அல்லது கைமாறிக் கொடுக்குமா? காலம் தான் பதில் சொல்லவேண்டும். -பசுவூர்க்கோபி.
  12. முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும் ------------------------- முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும் பாடுகள் ஒன்றானபோதும் கோடுகள் வெவ்வேறானது! முள்ளிவாய்க்காலிலே கொள்ளியிட அனைத்துலகும் ஒன்றாய் நின்றது நன்றாய் அள்ளியும் கொடுத்தது! உக்கிரேனென்றதும் உலகம் மூன்றாய் நான்காய் முகம் காட்டி நடக்கிறது! எல்லா உயிர்களும் ஒன்றெனச் சொல்கிறோம் பதின்மூன்று ஆண்டுகள் முன் இவர்கள் எங்கே போயினர் பனியாய் உறைந்து போயா கிடந்தனர்! மேற்கின் தெருவெங்கும் கெஞ்சியும் அழுதும் யுத்தத்தை நிறுத்தக் கேட்டோம் நாங்கள் அப்பாவி மக்களின் அழிவைத் தடுக்க அனைத்துலகின் படிகளில் நின்றோம் ஆனாலும் நடந்தது என்ன வார்த்தைகளாலே கூறிட முடியுமா(?) கொலைக்கருவிகள் கொடுத்தனர் பலர் கொலைக்கான அறிவும் கொடுத்தனர் கொலைக்கான வேவும் சொன்னார்கள் கிட்டநின்று திட்டங்கள் தீட்டீயே கொத்துக் கொத்தாக் கொன்றிடவென்றே மேற்கின் கூலிகள் வழி காட்டின எல்லாம் எம்மினக் கொலைக்காகவே! பாதுகாப்புச் சபையும் ஐநா மன்றும் ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோ கூட்டணியும் ஜீ ஏழு நாடுகள் குழுவும் உக்கிரேனென்றதும் உடனே கூடுது ருஸ்யாவைப் பார்த்துக் கடுமையாய் சாடியே கண்டனம் செய்தே தடைகளை போட்டன! மனித உயிர்கள் ஒன்றெனும் அதனை மதித்து நடத்தல் அரசுகளின் கடனென்றும் அடிக்கடி கூறிடும் ஐநாவே பதின்மூன்றாண்டின் முன் எங்கேபோனது உன் சமன்பாடு! முள்ளிவாய்க்காலில் உன் முகம் இழந்து போனாயே! உக்கிரேன் மக்களின் இழப்புச் சரியன்று எல்லாவுயிர்களும் எமக்குப் பெரிதே என்ற உணர்விலே வாழும் தமிழனோ பல்லுயிரோம்பிடும் பண்பினைக் கொண்டவன் பல்லாண்டுகாலமாய் அழிவினைக் கண்டவன் இன்றேனும் எங்களின் நிலைதனைப் பாரீர் காலம் கடந்து கண்ணீரும் காய்ந்தே போனது இனியேனும் உங்கள் சமன்பாடு சரியானால் எங்கள் இனத்தின் அழிவும் ஓயலாம் எங்கே ஒருமுறை சிந்திப்பீரா எம்மின அவலத்தை ஏற்றிடுவீரா? அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  13. நன்றி சார் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். ஐயா! யான் தவறொன்றும் இழைத்திலேன், சொன்னவர் மேல் அதீத நம்பிக்கை கொண்டவன் நான். அதிலும் இன்றைய நாட்டின் நிலை கருதியும் அதனால் இந்த முட்டாள்கள் தினம் நினைவுக்கு வரவில்லை, எதிர்காலத்தில் இந்நாளை சிறியர் நினைவாக வைத்திருப்பேன். சிரிப்பேன், பகிர்வேன். மகன் பிரித்தானிய பிரஜையை செய்துள்ளாராம், இவரோ அமெரிக்க பிரஜை! இவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு நாட்டுப்பற்று பற்றி இப்போ புலம்பி என்ன பலன்? அரசியல் வங்குரோத்து ஆகிவிடும் என்பதால் இரகசியமாக செய்கிறார்கள் போலுள்ளது.
  14. கிருபன் ஜீ... அந்த செய்தித் தளம், இந்தச் செய்தியை... தனது பிரதான செய்தியில் போட்டுள்ளதை நினைக்க, சிரிப்பாக உள்ளது. பாவம்... அதன் வாசகர்கள்.
  15. ஈழத்திருநாடே என் அருமைத் தாயகமே, உன் நிலைகண்டு வருந்துகிறேன் கொடிய நோய் கொடுத்த துயர் மறையும் முன்னே கொடும் பசி வாட்டுகிறதே பொருட்களின் விலையேற்றத்தால் மக்கள் துயர் கூடுகிறதே. கோல் உயர்ந்தால் குடி உயரும் கோலேந்திய ராஜ பக்சேக்களின் சுயநலமும் சொத்து சேர்ப்பும் தமிழ் ஈழத்தின் மீதான கொடும் போரும் உலகை துணைக்கழைத்து சாம்பல் மேடாக்கிய ஈழ விளைநிலமும் மக்களின் சாபமும் கண்ணீரும் அளவுக்கு மீறிய கடனும் கடனுக்கு வட்டி கட்டிட மேலும் கடனும் சீனனுக்கு கொடுத்த தாரை வார்ப்பும் என் நில மக்களை வாட்டி வதைக்கிறதே தலைநகரில், கடையில் வாங்கி உலையில் போடும் மக்கள் பேப்பர் கட்டுக்களாய் பணத்தை வாரி வீசினாலும் அரைவயிறு நனைகிறதா ? பதுக்கி வைத்த சொத்துக்களையெல்லாம் உனது கூட்டுக குழுவுடன் சற்று தானம் செய்தல் ஓரளவு உயர்வாய். மனசு வருமா ? நாட்டை நடத்த தெரியாமல் வீண் வீம்பும் , ராணுவத்துக்கு செலவிடட பணமும் அளவுக்கு மிஞ்சிய ராணுவ படையும் பலமும் (?) .. உன் சொந்த மக்களை இந்நிலைக்கு கொண்டு சென்றது உன்னை தேர்வு செய்த சிங்க( ள)இனமே உன்னை வெறுக்கையில் உன் ஆடசியின் நீட்ச்சி தேவையா ? வரலாற்றில் இல்லாத வறுமையும் துயரமும் ஏன்? உன் அடக்குமுறை போரில் அடிமைபட்டுக் கிடந்த என் ஈழத்தமிழினம் எப்படியாவது வாழ்க் கற்று விட்ட்து . மண்ணை கிண்டி வலையை வீசி விறகடுப்பில் வெந்து வாழ்க்கையை ஓட்டும் ஆனால் தற்பெருமைத் தலைநகரில் கட்டிடக் கூடுகளில் சஞ்சரிக்கும் புறாக்களாக வாழும் கொலோம்போ மக்கள் தான் பாவம். கிராமத்தான் ஓரளவு வாழ்ந்து விடுவான் ஏனையவ்ர் நீண்ட கியூ வரிசையில் விரக்தியின் விளிம்பில் ஒவ்வொரு பொருட்களுக்கும் வரிசையில் நிற்கும் மனிதனின் மனதில் உதிக்கும் ஒரு வெறுப்பு அது ராஜபக்சேக்களின்கொடுங்கோல் சுயநல ஆடசியை மன்னிக்காது. வரலாறாய் வரிப்படுத்தப்படும். நான் புலம்பெயர்ந்து ஆண்டுகள் முப்பது ஆனாலும் என் நாட்டு மக்களை எண்ணும்போது ஏற்படட துக்கம் என்னை மேலுள்ளவாறு கிறுக்க வைத்துவிட்ட்து. .
  16. தமிழ் சிறி ஐயா, இந்தச் செய்தி வாட்ஸப் குழுமங்களிலும் உலாவுது. https://tamonews.com/news/103424/
  17. பேசாமல் ஏப்ரல் முதலாம் திகதியை இனி யாழ் கள கருத்தாளர்கள் தினமாக கொண்டாடலாம் 🤣.
  18. கொழும்பிம் புறந‌கர் பகுதியான ராகமையில் மிகவும் அமைதியான மனதிற்கு ரம்மியாமான சூழலில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இது ஒரு பிரபலமான பஸிலிக்கா (பேராலயம்). ஆழகிய சிற்ப வேலைப்பாடுகளை கொண்டது, வீட்டுக்கு அருகாமையில் என்பதால் அடிக்கடி அந்த தேவாலயத்திற்கு வருவேன். தனிமையில் சில மணித்தியாலங்கள் செலவிடுவேன். பல ஏக்கர் ரப்பர் தோட்டங்களுக்கு மத்தியில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. இன்றுமப்படியே ஒரு அழகிய மாலை பொழுது லெந்து காலப்குதியின் 4வது ஞாயிற்றுக்கிழமை. தேவாலயத்தில் பாடல்கள் முடிந்து 1ம், 2ம் வாசகங்கள் வாசிக்கப்பட்ட பின் பாதர் தனது பிரசங்கத்ததை துவங்கினார். ஒருவருக்கு இரண்டு குமார்கள் இருந்தார்கள். இதில் இளையவன் தனக்குறிய ஆஸ்தியின் பாகத்தை பிரித்து எடுத்து கொண்டு தூரதேசம் சென்று பரஸ்திரியின் சகவாசத்தால் எல்லாவற்றையும் இழந்து போனான். அபொழுது அந்நாட்டில் கடும் பஞ்சம் உண்டாகியது அவன் அந்நாட்டில் உள்ள ஒரு பிரசையிடம் பன்றி மேய்க்கும் வேலை கிடைத்து அதை செய்துகொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவனால் பசி தாங்க முடியவில்லை. பசியில், பன்றிகள் திங்கும் தவிட்டால் தன் பசியை தீர்க்க் முயன்றான். முடியவில்லை. மனம் திருந்தி, நான் என் தகப்பனிடம் செல்வேன் அவரிடம் ஒரு வேலைக்காரனாகவாவது இருப்பேன் என நினத்துகொண்டு உடனடியாக தகப்பனிம் திரும்பி செல்கின்றான். தூரத்தில் இவன் வரும்போது தகப்பன் இவனை கண்டு ஓடோடி வந்து கட்டித்தழுவி என் மகனே வருமையா என அழைத்து சென்று குளிக்க வைத்து நல்ல உடை உடுத்த்தி ஆடொன்றை அடித்து விருந்து வைத்த்து புசித்து களிப்புடன் கொண்டாடி மகிழ்கின்ரார்கள். அப்பொழுது வெயிலில் வேலை செய்து நாள் பூராகஷ்டப்பட்டு களைத்துபோய் வரும் மூத்த மகன் தூரத்தில் தன் வீட்டில் நடக்கும் களியாட்ட சத்தத்தினை கேட்கின்றான். யாரது, என்ன நடக்கின்றது என ஒரு வேலையாளிடம் வினவுகின்றான். அவன் இதோ உம் தம்பி நீண்ட நாட்களுக்கு பிறகு திரும்பி வந்துள்ளார் அவருக்காக உன் தகப்பன் இந்த விருந்தை ஏற்பாடு செய்துள்ளார் என்றார். கோபமுற்ற மூத்த மகன் வெளியில் இருந்து தந்தையை கூப்பிடுகின்றான். என்ன காரியம் செய்தீர், விலைமகளிருடன் சொத்தை அழித்தொழித்த இந்த உம்முடைய இளைய மகனுக்காவா இந்த ஆட்டம் ஆடுகின்ரீர். இவ்வளவு காலம் உமக்கு கீழ் அடிமைபோல் வேலை செய்த எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியை நண்பர்களுடன் சந்தோசமா அடித்து சமைத்து சாப்பிட தந்துள்ளீர்களா? நான் இன்றிலிருந்து இந்த வீட்டிட்குள் வரமாட்டேன் என்கின்றான். கதை கேட்ட எனக்கும் ஆத்திராமக வந்தது. சீ என்ன தகப்பன் இவன் இவ்வளவு அனியாயமாக தன் மூத்த மகனை நடத்துகின்றாரே. இது சரியால்ல. தொடர்ந்து கேட்க மனமில்லை படியில் இருந்து எழுந்து வீட்டிட்கு நடக்க தொடங்கினேன். ******************************************************************************************************* தெற்கு லண்டன். 2009 பெப்ரவரி மாத்த்தில் ஒரு நாள். வேலை முடிந்து வரும்போது இரவு 7 மணி இருக்கும் குளிரில் வந்தபடியால் களைப்பில் கட்டிலில் சிறிது நேரம் சாய்ந்திருந்தேன். கதவு தட்டப்பட்டது. கதவை திறந்தேன் பக்கத்து அறை நண்பன் சிவாவுடன் ஒருவர் இருந்தார். ஒரு 40 வயது மதிக்கலாம் கட்டை தடித்த உருவம், மானிறம் குளித்து பல நாட்கள் ஆன ஒரு தோற்றம். பற்கள் காவி பிடித்து இருந்தது. கண்கள் சிவந்து இருந்தது. வலிமைமிக்க உடலமைபு ஒர் குளப்படிகாரர் போலவே தெரிந்தார். சிவா அவரை என்னிடம் அறிமுகப்படடுத்தினார். இலங்கையில் கிழக்கு மாகாணம் என்றார். என்னிடம் நன்றாக கதைத்தார். கொழும்பில் தனக்கு பல சிங்கள நண்பர்கள் இருப்பதாக கூறினார். அன்றிலிருந்து அவர் எங்கள் நண்பரானார். நன்றாக கதைப்பார். அதிகம் குடிப்பார் நன்கு ருசியாக‌ சமைப்பார். ஓய்வு நேரங்களில் தமிழ்படங்கள் பார்ப்போம். 5 நாள் வேலைக்கு போனான் அஅடுத்துவரும் 7 நாட்களுக்கு வேலைக்கு போக மாட்டார். குடித்து விட்டு வீட்டில் இருப்பார். இந்தியாவில் இருக்கும் தனது மனைவியுடன் அடிக்கடி போனில் கதைப்பார். அவருக்கு ஒரு நிரந்தரமான தொழில், வீடு இல்லாதபடியால் அவரால் மனைவியை தன்னிடம் அழைத்துக்கொள்ள முடியவில்லை. பல சந்தர்ப்பங்களில் தனிமையில் கதைத்த்து கொண்டிருப்பார். ஏதோ ஒன்றை குறித்து கவலைப்படுபவர் போல இருந்தார். ஒருநாள் அவரின் அறை கதவு மூடியிருந்தது. யாரோ விசும்பி அழும் சத்தம் கேட்டது. பின்னர் யாருடனோ விவாதிப்பது போல் சத்தம் கேட்டது. ஒன்றும் புரியவில்லை. அவரது அறையக் கடந்து என்னுடய அறைக்கு சென்றேன். பின்பொரு நாள் கழிவறைக்கு நான் சென்றபோதும் அது உள்ளாள் மூடப்பட்டிருந்தது. யாரொ விசும்பியழும் சத்தம் கேட்டது. நான் "இதை ஏன் செய்தேனோ தெரியவில்லை ...... தெரியவில்லை" என்னை மன்னியுங்கள்" என யாரோ கூறுவது தெளிவாக கேட்டது. ஒருநாள் நாட்டு அரசியலை பற்றி பேச்சு திரும்பியது. திடீரென அவருக்கு கோபம் வந்தது. இந்த.....மக்களால் தானே நான் இதை செய்யவேண்டி வந்தது. இப்பொழுது நாட்டுக்கும் போக முடியாதுள்ளது என்றார். மேசையில் ஓங்கி குத்தினார். அப்பொழுது நான் அறிந்து கொண்டேன் இவர் பலசாலியான மூர்க்கதனம் மிக்க‌ ஒரு மனிதன் என. காலப்போக்கில் ஒவ்வொருவரும் பிரிந்து போய் விட்டோம். 2018 மார்ச் மாதம் கொழும்பு. அது ஒரு பெரிய வியாழக்கிழமை நாள். கணனி முன் உட்கர்ந்து இணையத்தை தட்டினேன். பிரபலமான அந்த தமிழ் இணயத்தளத்தை பார்வையிட்டவாறு இருந்த என் கண்ணில் அந்த மரண அறிவித்தல் கண்ணில்பட்டது. எங்கேயோ கண்ட முகம் சிறிது மாறி இருந்தது. ஆம் அதே முகம் அவரேதன் எனக்கு அடுத்த அறையில் இருந்தவர்தான். எனக்கு கொஞ்சம் சோகமாகவும் கவலையாகவும் இருந்தது. என்னுடன் அன்பாக‌ ஒன்றாக இருந்து சமைத்து சாப்பிட்டவர் அல்லவா இவர். கடைசியில் இத்தனை காலத்திற்கு பின்னர் இப்படி மரண அறிவித்தலில் இவரை காண்பேன் என நினைக்கவில்லை. என்னவேன்று இறந்தார் என தெரியவில்லை. சரி இவரது பெயரை கூகுல் செய்து பார்ப்போம் என கொபி பெஸ்ட் செய்து தேடினேர். அது அனேமேதய தமிழ் தளம் திடிரேன பொப்அப் செய்து ஸ்க்ரீனில் வந்தது. வீட்டினுள் அன்று நான் மட்டு தனியே இருந்தேன். ஒரே நிசப்தம் ஒரு மெல்லிய காற்று என்னை ஸ்பரித்து சென்றது. தலையங்கத்தை வாசித்தேன் லண்டனின் வாழ்ந்து வந்த ஒரு கொடூரன் மரணம். அதில் இவருடைய படம் போடப்பட்டு இருந்தது. இவர் செய்த பல குற்றச்செயல்கள் பட்டியல் இடப்பட்டிருந்தது. அதில் ஒன்று இவர் ஒரு கர்ப்பிணி பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது. எனக்கு உடலெல்லாம் ஆடத்தொட‌ங்கிவிட்டது அட இவருடனா இறைச்சிகறி வைத்து சாப்பிட்டோம் / ஒன்றாக படம் பார்த்தோமே / இரத்தக்கறை படிந்த கைகளல்லவா.. உடலெல்லாம் பற்றி எறிவது போல் இருந்தது. இப்படியும் குரூரர்கள் இருக்கின்ரார்களா என மனம் பதைபதைத்தது. வீட்டை உடனடியாக மூடி விட்டு தேவாலயத்தை நோக்கி ஓடினேன். ஆலயத்தில் நிறைய கூட்டம் இருந்தது. பாதர் அன்று நீண்டதொரு பந்தியை வாசித்த்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் யூதாசை பற்றி பின்வறுமாறு வாசித்தார்: அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியத்திடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். பூசை முடிந்து எல்லோரும் சென்றபின் அதே மெல்லிய காற்று என்னை ஸ்பரித்தது. பாதர் வெளியே வந்து நின்றார். பாதரிடம் கேட்டேன் யூதாஸ் நல்லவானா? கெட்டவனா? நிச்சயமாக அவன் கெட்டவன். காட்டிகொடுத்த‌வன் அல்லவாவா? ஆம் அவன் தன் பாவங்களுக்காக மனஸ்தாபபட்டனும் கூட‌ என்றேன். நிச்சயமாக அவன் பாவி நரகத்தில் இருப்பான் என்றார். அவர் சொல்லி முடிக்க‌வும் அந்த பேரலயத்தின் கடிகாராம் டாங்.. டாங் என ஆறு முறை மணியடித்தது பாதர் என்னை கடந்து சென்று விட்டார். மழைதூர ஆரம்பிக்கின்றது. மெதுவாக வீட்டை நோக்கி நடக்கின்றேன். இப்பொழுது அந்த மெல்லிய ஸ்பரிசம் இல்லை. காற்று வேகமாக அடித்தது. ம‌ரங்கள் விர்ர்...விர்ர்.. என வேகமாக அசைந்தன‌ அதன் மத்தியில் யாரோ விசிந்து..விசிந்து அழும் அழுகை சத்தம் என் காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. கொழும்பான் அனுபவம் - 2
  19. நல்ல பாடத்தைத் தரும் சிறப்பான கதை......பாராட்டுக்கள் கொழும்பான்......! 👍 இந்தக் கதைக்குமுன் இருக்கும் இரண்டு கதைகளையும் கொஞ்சம் பார்க்கவேணும்.......! சிறிது முன்ன பின்ன இருக்கலாம் விடயம்தான் முக்கியம்.....! 1 - ஒரு மூதாட்டியின் பணப் பையில் இருந்து ஒரு காசு தவறி விழுந்து காணாமல் போய் விடுகின்றது.....அவள் எல்லா இடத்திலும் தரையைப் பெருக்கித் தேடுகிறாள், கிடைக்கவில்லை. பின் விளக்கைக் கொண்டு கட்டில், அலுமாரிக்கு கீழ் தேடி அதை கண்டு எடுத்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்து விடுகிறாள்......! 2 - ஒரு இடையனின் மந்தையில் இருந்து ஒரு ஆடு மேயும்போது வழிதவறி காட்டுக்குள் போய் விட்டது. அந்த இடையனும் மற்ற ஆடுகளை விட்டு விட்டு இந்த ஒரு ஆட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் போகிறான்.நெடுந்தூரம் சென்றும் காணவில்லை. உடனே அவன் குரல் கொடுத்துக் கொண்டே அதைத் தேடுகின்றான். சிறிது நேரத்தில் தன் எஜமானனின் குரல் அந்த வழிதவறிய ஆட்டுக்குக் கேட்க அதுவும் குரல் வந்த திசைநோக்கி குரல் கொடுக்கின்றது. இப்படியே குரலின்மூலம் ஆடும் அவனும் ஒன்று சேர்ந்து சந்தோசமாக வீடு திரும்புகின்றனர்......! 3 - அடுத்ததாக நீங்கள் சொன்ன கதை......! கவனிக்கப்பட வேண்டியவை : காசு குரல் கொடுக்காது, தானாக திரும்பியும் வராது....அப்படியானவர்களை இறைவன் தானே சென்று தேடிபி பிடித்து அருளுகின்றான்......! வழித்தவறும் ஆடுகள் பட்டிக்கு திரும்புவது சிரமம். அப்படியானவர்களை இறைவனும் அழைக்கிறான், அவர்களும் தங்கள் முயற்சியின் மூலமாகவும் இறைவனை வந்தடைகிறார்கள்.....! மனிதனுக்கு இது அவசியமில்லை..... தப்பான வழியில் சென்றவன் தானாகத்தான் திருந்தி வரவேண்டும். அப்படி வருபவனை இறைவன் மனமுவந்து இரு கரம் நீட்டி ஏற்றுக் கொள்கின்றான்.......! யூதாஸைப் பொறுத்தவரை முதல் இரவு விருந்தின் போது நீ என்னைக் காட்டிக் கொடுப்பாய் என்று அவனிடம் ஏசுநாதர் சொல்கிறார், அப்படியே மற்றுமொரு சிஷ்யரிடம் "கோழி கூவும் முன் மும்முறை என்னை மறுதலிப்பாய்" என்றும் சொல்லியிருக்கிறார்..... அவர் விரும்பியிருந்தால் அங்கிருந்து தப்பியிருக்கலாம். அதுமட்டுமன்றி தனக்கு கிடைக்கப்போகும் தண்டனையின் கொடூரமும் அவருக்கு தெரிந்திருக்கின்றது.....அதனால்தான் அவர் தேவனிடமும் எனக்கு இது தேவைதானா என்னை நான் இந்த தண்டனைக்கு ஒப்பு குடுக்க வேண்டுமா என்றும் கேட்டு பிரார்த்தனை செய்கின்றார்.....அப்பவும் அவர் தப்பி சென்றிருக்க முடியும்.....ஆனால் விதியின் வசம் தன்னை ஒப்புக்கொடுத்து தண்டனையை தானே ஏற்றுக்கொள்கின்றார்.........அதனால் யூதாஸ் கெட்டவரல்ல, ஏனைய அப்போஸ்தலர்களை விட யுதாசின் மரணம்தான் மிகவும் பரிதாபகரமானது.......! 💐 நன்றி கொழும்பான்.இது நிறைய நினைவுகளை மீட்டி விட்டது.......! 😁
  20. மிகவும் மோசமான நிலைக்கு இலங்கை செல்கிறது, ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கை திவாலாகும் என நிதி நிறுவனங்கள் எதிர்பார்ப்பதாக ஆண்டின் ஆரம்பத்திலேயே யாழில் குறிப்பிடப்பட்டது, ஆனாலும் இலங்கையை வெளிநாடுகள் கைவிடாது என ஒரு கருத்து நிலவுவதனால் புலம்பெயர் தமிழர் அதிக கவனம் செலுத்தாத நிலை காணப்படுகிறது, இது ஒரு ஆபத்தானது இலங்கை திவாலாவதுதான் வெளிநாட்டிற்கு அனுகூலம் அதனால்தான் தற்காலிக கடன் என்ற பெயரில் உலகை ஏமாற்றுகிறார்கள். உண்மையான அக்கறை இருந்தால் இலங்கைக்கு கடனல்லாமல் மானியமாக காசு வழங்கவேண்டும். இது பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல சிறுபான்மை மக்களும் பாதிப்படையும் பிரச்சினை, அத்தியாவசிய உணவுப்பொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு வரப்போகிறது. கடந்த 6 மாதத்தில் பணவீக்கம் இரட்டிப்பாகியுள்ளது அதுவும் அரசின் புள்ளிவிபரமே அதை குறிப்பிடுகிறது. இலங்கை மீட்டெடுக்கும் நிலைமையைக்கடந்து விட்டது, இலங்கையின் இறையாண்மை என்பதே இனிமேல் இருக்காது. பல அரசியல் தலைவர்கள் இலங்கையை விட்டு இரவோடிர்வாக தலை மறைவாகும் நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு நடுப்பகுதியளவில் இலங்கையில் இவ்வாறு ஒரு பிரச்சினை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பது புரியாமல் இருந்தபோதே யாழில் இலங்கை பொருளாதாரப்பிரச்சினை பேசப்பட்ட போது, இலங்கையிலிருந்த கள உறவுகள் கூட எதிர்வாதம் செய்த நிலை காணப்பட்டது. இலங்கை இன்று உள்ள நிலை வரும் என யாரும் எதிர்பார்க்கவில்லை, இலங்கை தனது நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிற்து என்பது ஏனோ பலருக்கு புரியவில்லை, இதனால் ஏற்படும் மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ள புலம்பெயர் தமிழர் இன்னும் தாயாராகவில்லை, இது ஆபத்தான விளைவை உருவாக்கப்போகிறது.
  21. போர்க்குற்ற விசாரணையை மேற்பார்வை செய்ய, அல்லது நல்லெண்ண செயற்படுகளை கண்காணிக்க ஓரிருவர் வந்தாலே நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முக்கினவை, அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் விட்டவை, இந்தியா தமிழருக்கு ஈழம் பெற்றுக்கொடுத்துவிடும் என்று அப்பாவி சிங்களவர் பயப்படுகிறார்கள் என்று இங்க கூட சிலர் மூக்காலை அழுதவை. இப்ப என்னடாவென்றால் ஒரு இரவில் ஆறாயிரம் இராணுவம், இன்னும் போர்க்கப்பல்கள் விரைந்து வந்துகொண்டிருக்காம். நாட்டில் என்ன நடக்கிறது? தங்கள் பிழைகளை மறைக்க உடனே போரை ஆரம்பிக்கிறது. சிங்கள மக்கள் உணரும் காலமிது. இந்த நன்னாளுக்காவே நான் காத்திருந்தேன், இவ்வளவு விரைவாக வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை. இனவாதம் பேசி வாக்கு கேட்ப்பவர்களை செருப்பாலடித்து வீட்டுக்கனுப்பவேண்டும்! தங்கள் சுகபோகத்துக்காக மக்களை ஏமாற்றி, உசுப்பேற்றி வாக்கு வாங்கி, கதிரை ஏறிய பின் அந்த மக்களை நடுவீதியில் அலையவிட்டு, அதை அடக்குவதற்கு அயல்நாட்டு இராணுவம் வருவிப்பு. இந்த முட்டாளுகள் கூப்பிட்ட உடனே அவையும் தாரை தம்பட்டையோடே வருகினமாம், எல்லாம் பழக்கதோஷம். அந்த முட்டாளுக்கு அறிவு வேண்டாம்? சர்வதேசமே விடுதலைப்புலிகளை உங்களால் அழிக்க முடியாது என்று சொன்னபோதும் எமது இராணுவம் அவர்களை இலகுவாக வெற்றிகண்டார்கள் என்று வருடாவருடம் விழா எடுத்து கொண்டாட, சொந்த இன மக்களை அடக்க ஏன் எங்களை அழைக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்? தன் இராணுவத்தையும், தன்னையும் பாதுகாத்து இந்தியாவை சிங்கள இனவாதப்போரில் மாட்டிவிட்டு தான் தப்பும் நோக்கமாக இருக்கலாம், இந்தியா தானாக வராமல் இதே சாட்டோடு இங்கு வந்து குந்துற நோக்கமாக இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனால் சேர்ந்து அழித்தவர்கள் சேர்ந்தே அனுபவிக்கவும் வேண்டும் என்று விதி நினைத்ததோ யார் கண்டா? முள்ளிவாய்க்கால் போரில் என்ன நடந்திருக்கும் என்று சிங்கள மக்களும் உணரவேண்டும், தமது அரசின், இராணுவத்தின் யோக்கியதை தெரிய வேண்டும். வாக்கு போட்ட எங்களை அடக்க அயல் நாட்டு இராணுவத்தை அழைக்கும் இவர்கள், பாதைகளை அடைத்து எங்களை எப்படி சித்திரவதை செய்துஇருக்கும் என்பதை யோசித்து பார்க்கட்டும். சணல் நான்கின் படம் இருந்தால் சிங்களவரின் முகநூலில் இணைத்து விடுங்கள் பார்த்து உணரட்டும்.
  22. விசுகு அண்ணா உங்களுக்குத்கு தான் இந்த கேள்வி....தகுந்த விளக்கம் தருவீர்கள் என நினைக்கிறேன் .முடிந்தால் தனி திரி திறந்து பதில் எழுதுங்கள் ...ஓரு நாட்டுக்குள் இருக்கும் இரு வேறு மொழி இனங்கள் அதில் பெரும்பான்மையான அரசும் , மக்களும் சிறுபான்மையினரை அடக்கி ஆள நினைப்பதும், அவர்கள் தங்கட நாட்டுக்குள்ளேயே உரிமை ,தனி நாடு கேட்டு போராடுயதும் , தேவையில்லாமல் அயல் நாட்டுடன் பிரச்சனைக்கு போய் , அதை பேசி தீர்க்க முயலாமல் யுத்தத்தை வலிந்து தேடிக் கொண்டவர்கர்களையும் எப்படி நீங்கள் ஒப்பிடுவீர்கள்? ரஸ்யா ,உக்ரேன் யார் சரி ,பிழைக்கு அப்பால் எங்கட பிரச்சனைக்கும் ,இதுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா? நாளைக்கே இவங்கட பிரச்சனை தீர்ந்து ஒன்றுக்கு ஒன்றாகி விடுவார்கள் ...எங்கட பிரச்சனையை தீர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை .சர்வதேசத்திற்கும் இல்லை...இருந்திருந்தால் எப்போதே தீர்த்து இருப்பார்கள் ஏற்கனவே சிலர் எழுதியது தான் ...நானும் எழுதி இருக்கேன் ....உங்களுக்கு தீர்வு தர வேண்டியது இலங்கை அரசு தான் ....அரசுக்கு அழுத்தங்கள் கொடுக்க உக்ரேன் பிரச்சனையை சாதகமாக்க வேண்டிய தேவை இல்லை ...அதை விட எத்தனையோ வழிகள் இருக்கு ...மேலே நீங்கள் எழுதியது போல் உங்களை போல சிலர் எழுதுவதே ஒரு ஜோக் தான் .
  23. மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால் சரியாகப் 12 வருடங்கள், 10 மாதங்கள், 9 நாட்களுக்கு முன்னர் ஈழத்தமிழினம் தனது சரித்திரத்தில் மிகப்பெரும் மனித அழிவைச் சந்தித்தது. தீவிர பெளத்த இனவாத அரசின் தலைமையில் மொத்த சிங்களத் தேசமும் அதன் ராணுவமும் உருவேற்றப்பட்டு 2006 ஆம் ஆண்டு, ஆடி 26 ஆம் திகதி தமிழர் மீதான இனக்கொலை யுத்தம் தொடங்கப்பட்டது. கிழக்கில் சிங்கள விவசாயிகளுக்கான நீர் வழங்கலை புலிகள் தடுக்கிறார்கள் என்கிற காரணத்தை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட தமிழினம் மீதான இனக்கொலை யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதி கொடூரமான இரத்தக் குளியலுடன் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. இனக்கொலை யுத்தத்தினைத் தொடங்கும் நடவடிக்கைகளில் முதலாவதாக தனது திட்டம் வெளியுலகிற்குத் தெரியாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கிய சிங்களம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணியாற்றிவந்த சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களுக்கு "உங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் தரமுடியாது" எனும் மிரட்டலினை விடுத்து ஒரே நாளில் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியது. பின்னர், சர்வதேசச் செய்தியாளர்கள் எவரும் யுத்தம் நடைபெறும் பகுதிக்குச் செல்லமுடியாதெனும் கட்டளையினை விடுத்து விரியவிருக்கும் கொலைக்களத்திலிருந்து உண்மைச் செய்திகள் வெளியே கசிவதை அது தடுத்துக்கொண்டது. சர்வதேசத்தையும், உள்நாட்டுச் சிங்களவர்களையும் ஏமாற்றும் நோக்கில் தமிழினம் மீது தான் நடத்தத் திட்டமிட்டிருந்த இனவழிப்பிற்கு " மனிதாபிமான மீட்பு நடவடிக்கை" என்று பேர்சூட்டிக்கொண்டது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் மாவட்ட அரச அதிபர்களின் கணிப்பீட்டின்படி உள்ளே தஞ்சம் அடைந்திருந்த மக்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்து இருபதினாயிரம் என்றிருக்க, அவ்வெண்ணிக்கையினை வேண்டுமென்றேகுறைத்து மதிப்பிட்டு வெறும் எழுபதினாயிரம் மட்டுமே என்று சர்வதேசத்தை ஏமாற்றி வந்தது. ஆனால், தான் வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்ட எண்ணிக்கையான 70,000 மக்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களை அனுப்பிவைப்பதற்குப் பதிலாக வெறும் ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான உணவுப் பொருட்களை அனுப்பிவைத்து சர்வதேசத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றிவந்தது. உணவையும், மருத்துவப் பொருட்களையும் யுத்தத்தில் ஒரு ஆயுதமாகப் பாவித்தல் கூடாது எனும் சர்வதேசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு முரணாக உணவையும் மருந்தினையும் உள்ளே தஞ்சமடைந்த மக்களுக்கு வழங்கமறுத்து அவர்களை பட்டினிச் சாவினுள் தள்ளுவதன் மூலம் மக்கள் கொல்லப்படுவதை உறுதிப்படுத்தியதுடன், போரிடும் மனோவலிமையினையும் அடித்து நொறுக்கியது. வேண்டுமென்றே குரைத்து மதிப்பிடப்பட்ட மக்கள் எண்ணிக்கை, அக்குறை மதிப்பீட்டிற்கும் கூட போதாத உணவுப் பொருட்கள் என்ற சதிகளின் மேல், உணவுப்பொருட்களைக் காவிச் சென்ற பாரவூர்திகளையும் தனது வான்படையைக் கொண்டு அழித்துக் கொண்டது.
  24. இப்பிடியாவது எங்கடத் தாகயத்தைப் பிடிச்ச சனி குறையட்டும்!
  25. முகக் கவசம் 😷 அணியாமல்... கைக்கு கவசம் 🤜🤛 இல்லாமல்... ஆர்வ மிகுதியிலும், சந்தோசத்திலும்... கை குலுக்கி வரவேற்கிறார்கள். கொரோனா... தொற்றினால் தெரியும், எல்லாரும்... கூண்டோடை, கயிலாயாம்தான். 😮
  26. நீங்கள் பம்பலுக்கு எழுதினது வேசுபுக் எல்லாம் போய் சிலர் போன் எடுத்துக்கூட விசாரிக்கின்றனர், மெய்யா என்டு!🤣🤣 இலங்கையில இருந்து குடும்ப நண்பர் போன் எடுத்து விசாரிக்கிறார்.🤣🤣
  27. வணக்கம் குமாரசாமி அண்ணா! வரலாற்று செய்திகளை திரும்ப போய் படிப்பதைவிட அந்த கடந்தகால அனுபவங்களிலிருந்து எதனை நாம் கற்றுக்கொண்டோம், அவற்றில் இருந்து எங்களது இலக்கை நாங்கள் எப்படி அடையலாம், அதற்கு யாருடன் சேர்ந்து நடந்தால் குறைந்தபட்ச நலன்களையாவது அடையலாம், தற்போதைய உலக நடைமுறை என்ன என்பது பற்றித்தான் சிந்திக்கவேண்டும் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரையில் எங்களிற்கு ரஷ்யாவால் உதவியில்லை என்பதால் உக்ரோன் அழியவேண்டும், மேற்கு இப்படி செய்தது அப்படி செய்து என்பதைவிட எங்களிற்கு குறைந்தபட்ச நன்மைகளையாவது தரும் நாடுகளுடன்தான் சேர்ந்து செயலாற்றவேண்டும்/அழுத்த கொடுக்கவேண்டும்.. ஏற்கனவே 13 வருடங்கள் போய்விட்டது இனியாவது சிந்தித்து நடக்கவேண்டாமா?
  28. ராஜீவ் காந்திக்கு, பிடரியில் அடி விழுந்ததை அடிக்கடி, ஹிந்தியனுக்கு நினைவு படுத்த வேண்டும். அவங்களுக்கு.. மறதிக் குணம் அதிகம்.
  29. காட்டில் இருந்து நாட்டு நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும் புலி.......! 😂
  30. பிந்திக் கிடைத்த தகவல்களின் படி பாரதப் பிரதமர் மோடியும் அதி உயர்ரக போர் விமானம் ஒன்றை தானே செலுத்தியபடி இலங்கை விரைகின்றார். இலங்கைக்கு உடனடியாக உதவுவதில் தன்னுடன் இணையுமாறு ராகுலை அவர் கேட்டதாகவும், அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இலங்கையில் திராவிட மாடலை அமுல்படுத்தினால் எல்லாப் பிரச்சனைகளும் தீரும் என்று தமிழ் நாட்டு முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
  31. ஏப்பிரல் 1 என்பதற்காக இப்படிப் பீதியைக்கிளப்பி விடுகிறீங்களே ஐயா!
  32. இப்போ... வந்து இறங்கிய, இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவில் நிரந்தரமாக தங்கினால்... என்ன செய்வது? ஈழப் போராட்டத்தின் போது.. முன்பு அமைதிப் படை என்று வந்த.. இந்திய இராணுவத்தை.. அடித்து, திரத்த.... புலிகள் இருந்தார்கள். ஆனால் இப்போ... அவர்களை, திருப்பி அனுப்ப... ஸ்ரீலங்கா இராணுவத்துக்கு அவ்வளவு கெட்டித்தனம் இல்லை. சீன... இராணுவத்தை கூப்பிடவும், ஸ்ரீலங்கா தயங்காது என்று நினைக்கின்றேன். ஆனால்... இந்தியாவிடம் கெஞ்சி கூத்தாடி... கைநீட்டி வாங்கின கடனுக்காக, மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்.... ஸ்ரீலங்கா மனதிற்குள்.. புழுங்கிக் கொண்டு இருக்கப் போகுதா... என்பதை, வருகின்ற காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதுமட்டும்... சிங்கள கடும் போக்காளர்களும், பிக்குகளும்.. இந்தியாவின் பிரசன்னத்தை... எவ்வளவு நாள் சகித்துக் கொண்டு இருப்பார்கள் என்று தெரியவில்லை.
  33. இது சுய ஆக்கம் எனும் பெயரில் வேறொரு திரியில் உள்ள வன்மத்தை தீர்க்க ஆரம்பிக்கப்பட்ட குளோனிங் திரிதான் இது.
  34. யார் மேற்கின் எதிரி? ரஷ்யாவா நிச்சயமாக இல்லை? கிழக்கு மேற்கு ஜேர்மனி இணைவிற்கு பின் பனிப்போர் முடிவிற்கு வந்து விட்டது என கிழக்குலகு கொண்டாடியது. அதை நயவஞ்சமாக துர்பிரயோகம் செய்தது மேற்குலகு குறிப்பாக அமெரிக்கவும் பெரிய பிரித்தானியாவும்...... ரஷ்யாவை நம்ப வைத்து கெட்ட வேலைகளை செய்தது இந்த மேற்குலகு. இன்று கூட ஜேர்மனிய பழம்பெரும் அரசியல்வாதிகள் ரஷ்யாவின் பக்கம். அதனால் அவர்களின் செய்திகள் வெளியில் வருவருவதில்லை(மேற்குலக ஊடக சுதந்திரம்) ரஷ்ய அதிபர் புட்டின் மேற்குலக ஐரோப்பிய தலைவர்களுடன் மிக மிக நட்பாக இருந்தவர். பனிப்போர் முடிந்து விட்டது என ஜேர்மனிய பாராளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவித்தவர்.எல்லா மக்களுக்கும் சுதந்திரம் உண்டு என அறிவித்தவர். இது அமெரிக்காவுக்கு பொறுக்கவில்லை. காரணம் இவர்கள் ஒன்று பட்டால் தன் பிழைப்பு கெட்டுப்போய் விடும் என அமெரிக்கா பயந்தது. வரலாறுகள் செய்திகள் தெரியாவிட்டால் திரும்ப படியுங்கள்.
  35. வணக்கம் விசுகர்! இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். முள்ளிவாய்க்கால் அவலத்தை மரியோபுல் நிகழ்வுடன் ஒப்பிடுவதன் மூலம் எனக்கிருக்கும் சந்தேகங்களை உங்களை கேட்கின்றேன். மரியோபுல்லுக்கு கிடைக்கும் ஆதரவை எப்படி எமக்கு சாதகமாக பயன்படுத்த முடுடியும்? அந்த மரியோபுல் சம்பவத்திற்கு யார் தீர்ப்பு கொடுப்பார்கள்? உக்ரேன் சம்பவத்தை எப்படி எமது ஈழ போராட்டத்துடன் ஒப்பிட முடியும்? ஈழத்தமிழர் பிரச்சனையில் இந்தியாவை மீறி எதுவுமே நடக்காது என்பது தற்போது அல்ல அப்போதே தெட்டத்தெளிவாக தெரிந்து விட்டது. சிங்களம் விரும்பினால் கூட இந்தியா ஏதோ ஒரு வகையில் முட்டுக்கட்டை போடும். அண்மைக்கால பார்வைகளின் படி சீனா கூட இந்தியாவை மீறி தமிழர் பிரதேசங்களில் அதிகமாக எதுவுமே செய்யப்போவதில்லை.சில வேளை இந்தியா சினம் கொண்டால் ஒட்டு மொத்த சிறிலங்காவையும் சீனா விட்டு போக வாய்ப்புள்ளது.அது அப்போதைய சிறிலாங்கா அரசாட்சியை பொறுத்தது.ஒப்பந்தங்கள் பல சீனாவுக்கு இருந்தாலும் இலங்கையை பொறுத்தவரை மொழி கலாச்சாரம் சமயம் இனம் என்று பார்க்கையில் இந்தியாவின் இன்னொரு மாநிலம் இலங்கை. மேற்குலகும் இந்தியாவை மீறி ஈழத்தமிழர் உரிமைப்பிரச்சனையில் எதுவும் செய்து விடப்போவதில்லை. அப்படி செய்தாலும் இந்தியா பச்சைக்கொடி காட்டிய பின்னர்தான் ஏதும்.....அதுவும் இந்திய நலன் சார்ந்தே இருக்கும். நமது பாசையில் சொல்லப்போனால் இந்தியா சகல நாடுகளுக்கும் "இலங்கை என்ரை ஏரியா" என விளித்து சொல்லியிருக்கும் என்பது என் ஊகம். இதை விட ரஷ்ய-உக்ரேன் யுத்தத்தில் இந்தியா யார் பக்கம் என்று பார்த்தால் அதுவும் தலை சுத்துது. இந்தியா கூடுதலாக ரஷ்யா சார்பான நாடு. அதிலும் மோடி ரம்பின் கூட்டாளி.ரம்ப் யாரின் கூட்டாளி? யுத்தமும் அழிவுகளும் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் ஒரு இடத்தில் மக்கள் அழியும் போது கண்டும் காணாமல் இருந்து விட்டு இன்னொரு இடத்தில் அதே போல் வரும் அழிவுகளை கண்டு கொதித்தெழும் மேற்குலகை கண்டிக்கின்றேன். அது மட்டுமல்லாமல் இந்த ரஷ்ய-உக்ரேன் யுத்தமும் ஈழத்தமிழர் விடுதலைப்போராட்டமும் ஒன்றல்ல. இவை இரண்டும் வெவ்வேறு கோணங்கள். அமைதியாக வாசித்தமைக்கு நன்றி விசுகர். உங்கள் பதில் கருத்து எனக்கு மிக முக்கியம்.
  36. சம்பவம் 1 யேசு ஏன் பூமியில் அவதரித்தார் ? மக்களை மீட்க ! எப்படி மீட்க ? சிலுவையில் அறையப்பட்டு. எப்படி சிலுவையில் அறைந்தார்கள் ? யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு. காட்சி 1 யூதாஸ் கெட்டவன். ஏன் ? அவன் தூய இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தவன். காட்சி 2 யூதாஸ் காட்டிக் கொடுத்திராவிட்டால்........ ? யேசுவின் நிலை....... ? யேசு அவதரித்த நோக்கம் நிறைவேறியிருக்குமா ? கேள்வி இப்போது, யூதஸ் நல்லவனா கெட்டவனா ? 😉
  37. எங்கிருந்தோ ஆசைகள்.....! 💞
  38. இரவுச் சாப்பாட்டுக்கு இப்படியும் செய்து சாப்பிடலாம்.......! 👍
  39. பிரபா, எங்கள் நிலையைக் எவருக்கு ஒப்பிட்டு காட்டி நியாயம் கேட்க போகின்றீர்கள்? மேற்குலகிடமா? எம் போராட்டத்தினை நசுக்க பேச்சுவார்த்தை என்ற பொறியை விதைத்து போரிடும் ஆற்றலின் முதுகெலும்பை முற்றாக உடைத்த மேற்கிடமா? மேற்கின் எதிரி / மேற்கின் நண்பன் என்ற அளவு கோல்களை வைத்து ஒருவர் தான் எதனை எவரை ஆதரிக்க வேண்டும் என்று முடிவெடுப்பது கூட அறமற்றது என்பேன்.
  40. முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது குறித்து இங்கே வாதங்களை முன் வைப்பவர்கள் பற்றி என்னாலும் உணர முடிகிறது அதே ஆதங்கம் எனக்கும் இருப்பதால். அதேவேளை மரியுபோலுக்கு கிடைக்கும் ஆதரவை அல்லது தீர்ப்பை எமக்கும் சாதகமாக பயன்படுத்தி அடுத்த கட்டங்களுக்கு நாமும் நகர முடியும் என்றால் யார் குற்றி அரிசியானால் சரி என்பதற்கமைய ......? தொடருங்கள் ரகு...
  41. .இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் யாயினி ...என்றும் நோய் நொடியின்றி மகிழ்வோடு வாழ்க .
  42. மென்மையான கிண்டலும் நகைச்சுவௌயும் கலந்து எழுதும் புத்தனின் ஆக்கம் அருமை. வாழ்த்துகள்.
  43. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யாயினி. தனிக்காட்டு ராஜாவுக்கும் பிந்திய பிறந்தநாள் வாழ்த்துகள்
  44. யாயினி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
  45. தனிக்காட்டு ராஜாவுக்கும்... கொழும்பானுக்கும், பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂 இன்று பிறந்தநாளை கொண்டாடும்... யாயினிக்கு, உளம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🧁
  46. ஓணாண்டியார்... உங்களோடு எனக்கென்னய்யா வன்மம்... 🙏 "வெள்ளைத்தோல் அடிமை மோகம்" என்ற தடித்த எழுத்துக்கள் வரும் பொழுது இப்படியான பதில்கள் வாஸ்தவம் தானே. உங்களுக்கு மேற்குலக (அமெரிக்க) வெளிவிகார கொள்கையில் சரி பிழை நியாயங்கள் கதைக்க வேண்டும் என்றால் தனி திறந்து அலசினால் உங்களோடு சேர்ந்து நாங்களும் கும்மி அடிக்கலாம். பொதுவாக இந்த யுத்தம், இதனால் ஏற்படும் மக்கள், உடைமைகள், உளவியல் அழிவுகள் பற்றி கரிசனை படும் ஒரு சராசரி மனிதனின் கருத்து. இந்த கரிசனை ஈராக்கிலும், லிபியாவிலும், இதர நாடுகளிலும் நடக்கும் போதும் எமக்கு இருந்தது. அப்போதும் நாங்கள் ஒருவரும் அமெரிக்கனுக்கு வாழ் பிடிக்க வில்லையே. இதை ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்.
  47. சூரியனே முடிந்தால் சுட்டுப் பார். என்றென்றும் எனக்கு நிழலாக இருக்கும் மனைவியின் பிறந்தநாள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.