Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. suvy

    கருத்துக்கள உறவுகள்
    27
    Points
    33600
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3057
    Posts
  3. Justin

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    7051
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    14676
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/11/24 in all areas

  1. இது கனியுப்புக்களின் அசம நிலை (electrolyte imbalance), முக்கியமாக சோடியம், பொட்டாசியம் அசம நிலை காரணமாக நிகழ்ந்த மரணமாக இருக்குமென ஊகிக்கிறேன். இலங்கையில் அதிக வெப்ப நிலை கொண்ட வானிலை நிலவுகிறது என்கிறார்கள். மரதன் ஓடி, சோடியத்தை வியர்வை மூலம் நிறைய இழந்த பின்னர், சாதாரண தண்ணீரைக் குடித்தால் மூளை வீக்கம், இதய தொழில்பாட்டில் பாதிப்பு என்பன எந்த வயதினருக்கும் ஏற்படலாம். இதற்கு உடனடி சிகிச்சையாக சுவாச உதவியோடு, குறைந்தது சாதாரண சேலைனாவது ஏற்றியிருக்க வேண்டும். 3 மணி நேரம் இவையெதுவும் செய்யாமல் சும்மா வைத்திருந்தார்கள் என்பது உண்மையானால், அது தீவிரமான அலட்சியம். மரதன் ஓடுவோர், வியர்வை சிந்தி உழைப்போர் எப்படி சோடிய இழப்பை மரணம் வரை கொண்டு போகாமல் காக்க வேண்டுமென அறிந்திருக்க வேண்டும். Gatorade போன்ற கனிய உப்புக்கள் கொண்ட பானங்களை அருந்துவது மிக எளிமையான ஒரு வழி.
  2. தோற்கும் விளையாட்டு ------------------------------------ விளையாட்டு வீரர்கள் என்றாலே ஆஸ்திரேலியர்கள் தான் அதன் வரைவிலக்கணம். ஒரு சாதாரண ஆஸ்திரேலியரே எந்த விளையாட்டையும் நன்றாக விளையாடுவார், அப்படியே அதிகமாக கோபப்பட்டு போட்டி போடுவார். இவர்கள் ஒரு பொழுதுபோக்கிற்காக விளையாடுவது கூட வெளியில் நின்று பார்க்கும் ஒருவருக்கு ஏதோ ஒரு தனிப்பட்ட பிரச்சனைக்கு இரண்டு பக்கங்கள் மல்லுக்கட்டி நிற்பது போலவே தெரியும். சில வருடங்களின் முன் சிட்னி நகர் பகுதியில் தனியாகவோ அல்லது பலவீனமாகவோ அகப்படும் இந்தியர்களை சில ஆஸ்திரேலியர்கள் தாக்கினார்கள். இது சில காலம் தொடர்ந்து அங்கு நடந்தது. இந்திய நண்பன் ஒருவனின் மனைவியின் தம்பிக்கு சிட்னியில் ஒரேயொரு குத்து ஓங்கி விழுந்தது. தம்பி மதுரை மருத்துவமனையில் பல நாட்கள் படுத்திருந்து, பின்னர் எழும்பி நடமாடினார். குத்துச் சண்டையும் இவர்கள் எல்லோருக்கும் தெரியுமா என்று வியக்க வைத்தது. சிட்னியுடன் எனக்கு சில தொடர்புகள் இருப்பது தெரிந்திருந்த அதே நண்பன் ஆஸ்திரேலியாவிற்கு போகும் மற்றும் அங்கு குடியேறும் வழிவகைகளை என்னிடம் விசாரித்தான். மதுரைக்கார நண்பன் அங்கு போய் பழிக்கு பழி வாங்கப் போகிறார் போல என்ற அனுமானத்தில் இருந்த எனக்கு, 'இல்லை, மாமாவை (நண்பனின் அக்காவின் கணவர்) அங்கு அனுப்பலாம் என்று இருக்கின்றேன்' என்று பதில் வந்தது. ஆஸ்திரேலியர்கள் விளையாட்டுகளில் ஏன் இவ்வளவு ஆக்ரோஷத்துடனும், ஆவேசத்துடனும் இருக்கின்றார்கள் என்பது முதலில் புரியவில்லை. ஒரு விடயம் புரியாவிட்டால், அந்த விடயத்திற்கான காரணம் மரபணு அல்லது தலைவிதி அல்லது நெற்றியில் எப்பவோ எழுதப்பட்டு விட்டது என்ற வசனம் போன்றவை ஏற்றுக்கொள்ளத்தக்க விளக்கங்கள். இவை மூன்றும் தக்காளிச்சாறு போல, எங்கும் ஊற்றலாம், எதனுடனும் தொடலாம். ஆஸ்திரேலியர்களின் மரபிலேயே கடும் போட்டி இருக்கின்றது என்றார்கள். விளையாட்டுகளில் பணம் கட்டுவது, பந்தயம் பிடிப்பது இன்று மிக வேகமாக எல்லா நாடுகளிலும் பரவி வருகின்றது. இது இன்று அமெரிக்காவில் மட்டும் பல பில்லியன் டாலர்கள் அளவிலான ஒரு வியாபாரம். கனடாவிற்கு என்று தனி வழி இல்லை, அமெரிக்காவின் வழியே அதன் வழியும் கூட. இந்தியாவில் கிரிக்கெட் மீதான சூதாட்டம் வெட்ட வெட்ட முளைக்கும் அசுரனின் தலை போல அழிக்கப்பட முடியாமல் இன்னும் இன்னும் வளர்கின்றது. குதிரைப் பந்தயம் ஆரம்பமான நாட்களிலிருந்து, 1810 ம் ஆண்டு, இன்று வரை உலகிலேயே விளையாட்டுகளின் மேல் தலைக்கு அதிக பணம் பந்தயம் வைப்பவர்கள் யார் தெரியுமா? ஆஸ்திரேலியர்களே. சீன இன மக்களின் சூதாட்டத்தின் மீதான நாட்டம் வேறு வகையானது, பாரதத்தில் தர்மர் உருட்டிய தாயக்கட்டை வகை அது. ஒரு விளையாட்டின் மேல் இருக்கும் விருப்பத்தில் அல்லது ஒரு அணியினது அல்லது ஒரு வீரரின் ரசிகராக இதுவரை நாளும் விளையாட்டுகளை பார்த்து வந்த பார்வை இன்று இந்தப் பந்தயங்களால் வெகுவாக மாறிவிட்டது. எண்களே இன்று முக்கியம். களத்தில் ஆடும் அணியை விட, என்னுடைய கணக்கு, என்னுடைய பந்தயம் வெல்கிறதா என்பதிலேயே பலரினதும் கவனம் இருக்கின்றது. பந்தயங்களின் உலக தலைநகரான லாஸ் வேகாஸ் பற்றிச் சொல்லும் போது, லாஸ் வேகாஸ் என்றும் தோற்பதில்லை என்பார்கள். பந்தயம் கட்டுபவர்களே என்றும் இறுதியில் தோற்று நிற்பார்கள் என்கின்றனர். ஒரு தனிமனிதன் தோற்றுப் போனால், அம்மனிதனுக்கு அடுத்த அடுத்த தடவைகள் ஆவேசம் கொஞ்சம் அதிகமாக வருவது இயற்கைதானே. ஆஸ்திரேலியர்களுக்கும் அதுவே.
  3. மயிலிறகு............ 11. மூவரும் வீட்டிற்குள் வருகிறார்கள். மயிலம்மா கேட்கிறாள் நீங்கள் ஆடுகள் கோழிகள் விக்கிறனீங்களோ என்று. ஓம் அக்கா ஏன் என்று கேட்க சிலநேரம் வீட்டு விசேசங்களுக்கு தேவைப்படும் அதுதான் விசாரிச்சானான். அங்கு ஒரு மூலையில் பெட்டியில் விசேஷ சாராயங்கள் இருக்குது.வாமன் அவற்றைப் பார்ப்பதைக் கண்ட அஞ்சலா வேணுமென்றால் ரெண்டு போத்தல் எடுத்துக் கொண்டு போ என்கிறாள். அவன் தயங்குவதைப் பார்த்து தானே எழுந்து சென்று ரெண்டு போத்தல் எடுத்து வந்து அவனிடம் தருகிறாள். பின் அவர்கள் அங்கிருந்த ஆச்சியிடம் சொல்லிவிட்டு அவளிடம் விடை பெற்றுக்கொண்டு செல்கிறார்கள். போகும்போது ரொம்ப நன்றி பிள்ளை ஏதாவது உதவிகள் தேவையென்றால் யாரிடமாவது சொல்லியனுப்பு நாங்கள் வந்து செய்து தருகிறோம். வெளியே மாலைச் சூரியனின் பொன்னிற வெய்யில் இதமான சூடாக இருக்கின்றது. இருவரும் தங்கள் வந்த வேலை முடிந்த மகிழ்ச்சியில் கதைத்துக் கொண்டு பழையபடி சைக்கிளில் வருகின்றார்கள். என்னடா உன்ர உடுப்புகள் அவியவிட்ட நெல்லுமாதிரி நாறுது.அது மயிலம்மா அந்தப் பம்மில் இருந்து திடீரென்று தண்ணி பாய்ந்து வந்ததா அந்தப் பெட்டை பயந்து என்னையும் தள்ளிக்கொண்டு சாக்குகளுக்கு மேல விழுந்திட்டுது.அதால சாக்கெல்லாம் ஈரமாகி நாங்களும் நனைஞ்சிட்டம். அதுதான் இப்ப காத்துக்கு காய காய மணக்குது. கெதியா வீட்டுக்கு போய் குளத்திலே முழுக வேண்டும் என்று சொல்லிக்கொன்டு வருகிறான். அப்போது எதிரில் வந்த டிப்பர் லொறிக்கு வழி விட்டு ஒதுங்க அது வீதிப் பள்ளத்தில் இருந்த வெள்ளத்தால் இவர்களைக் குளிப்பாட்டிவிட்டு போகின்றது. சடுதியாக அவள் லொறிக் காரனைத் வாயில் வந்தபடி திட்ட வாமன் வாய்விட்டு சிரித்துக் கொண்டே என்ன மயிலம்மா இப்ப எப்படி இருக்கு என்று சொல்ல ....சீ .....சும்மா போடா, சிரிச்சி எண்டால் கொன்னுடுவன் என்கிறாள் செல்லக்கோபத்துடன். வரும் வழியில் ஒரு ஆற்றுப்பாலம் குறுக்கிட எட அந்த ஆற்றங்கரைக்கு விடு கொஞ்சம் கை கால்களை சுத்தமாக்கிக் கொண்டு போவம் என்கிறாள்.அவனும் வீதியில் இருந்து சரிவில் சைக்கிளை இறக்கி ஆற்றங்கரையில் நிப்பாட்டி இருவரும் இறங்குகின்றார்கள். ஆற்றில் தண்ணி குடித்துக் கொண்டிருந்த மாடுகள் இரண்டு இவர்களைத் திரும்பிப் பார்த்து விட்டு மீண்டும் நீரருந்துகின்றன. வாமன் சாறத்தையும் சேர்ட்டையும் கழட்டி கரையில் போட்டுவிட்டு ஆற்றுக்குள் பாய்ந்து குதித்து நீந்துகிறான்.மயிலம்மாவிம் அங்கு நின்ற பனைமர மறைவில் அடைகளைக் களைந்து பாவாடையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு கீழே கிடந்த ஆடைகளை எடுத்துக் கொண்டு கரையில் கிடந்த அவனது உடுப்புகளையும் பொறுக்கிக் கொண்டு வந்து நீருக்குள் இறங்கி நின்று கரையில் இருக்கும் கல்லில் அவற்றைப் போட்டு கும்மி நன்றாகப் பிழிந்து அங்கிருந்த பற்றைகளின் மேல் விரித்து காய விடுகிறாள்.பின் மயிலம்மா பாவாடை கிழிசல்களை ஒரு பக்கம் ஒதுக்கிக் கொண்டு வந்து ஆற்று நீருக்குள் தன்னை மறைத்துக் கொள்கிறாள். அவளும் நன்றாக நீந்தக் கூடியவளாகையால் நீருக்குள் முங்கி முங்கி நீந்தி மேலே வருகிறாள்.இருவரும் அந்த ஆழமான இடத்தில் மார்பளவு நீரில் இடைநீச்சலில் நின்று கொண்டு கதைத்தபடி உடம்பை கைகளால் உரஞ்சி முதுகு தேய்த்து விட்டு முங்கிக் குளிக்கிறார்கள். ஆற்றுமீன்கள் அவர்களுக்கு இடையில் புகுந்து கொத்திக் கொத்தி கிச்சு கிச்சு மூட்டி செல்கின்றன. ஒரு கட்டத்தில் இருவரும் ஏதேதோ கதைக்கிறார்கள் தவிர அவர்களுக்கு போதை தலைக்கேறி இருக்கு. மெல்ல மெல்ல பாறைக்குள் ஊடுருவிப் போகும் வேர் ஆங்காங்கு விரிசல்களை ஏற்படுத்தி நின்று நின்று போவதுபோல் விரல்கள் நகர்ந்து நகர்ந்து பழத்துக்குள் தங்கிய வண்டுபோல் சிறைப்படுகின்றன. அன்று நடந்த சம்பவம் உடலை சூடேற்ற அவனுக்கு அவள் அஞ்சலாவாகவே தெரிகிறாள். அவளுக்கு ஓர் ஆணின் அருகாமையும் அவனின் ஸ்பரிசமும் நெடிய தோள்களும் அகன்ற மார்புகளும் அவளை அலைக்கழிக்க அவள் அவள்வசம் இல்லை.இருவரும் ஒருவரிடம் ஒருவர் மிகவும் நெருக்கமாகி இருந்தனர்.எப்போது கரையேறினார்கள், எப்படி அங்கு தரைக்கு வந்தார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. ஆற்றுமீன்கள் உலவிய உடலெங்கும் விழிமீன்கள் மேய்கின்றன. கலவியில் கசிந்த வியர்வை ஊர்ந்து உருண்டு புற்களின் வேரில் விழுந்து கலந்து கலைந்து காய்ந்து போகின்றது. "பசுவின் மடிக்குள் இருக்கும் பால் எப்போதும் சூடாகவே இருக்கும், ஒருபோதும் பழுதாகுவதில்லை" அதுபோல் பயன்படுத்தாத காமமும் நினைவுகளின் வெப்பத்தில் உடலுக்குள் கனன்று கொண்டே இருக்கும். மயிலம்மாவிடம் மின்னல் போல் தோன்றிய மின்சாரம் காலங்களை மறக்கடிக்க அதன் வெப்பம் காலாக்கினியாகி அக் காலாக்கினி இருவரின் உடலையும் சேர்த்து எரிக்கின்றது.அஞ்சலா அவனுள் போட்ட விதை விருட்சமாய் விரிகின்றது. மேகம் கறுத்துவர மோகம் பெருகுது. உயிர்கள் ஊசலாட மனங்களும் மானங்களும் துகள்களாகி பறந்து மறைகின்றன.இடைகள் இணைந்து இழைந்து உடைகள் நெகிழ்ந்து தரையில். அந்திக் கருக்கலில் அந்த நான்கு கண்களும் அந்தகன் களாக அங்கும் இங்கும் அலையும் நகக்கண்களின் விழி திறக்கின்றது.அங்கங்கள் தம் ரகசியங்களை இழக்கின்றன.மரம், கிளை, இலை, கிளி எல்லாம் அவனுக்குத் தெரிகின்றது. அவளுக்கு கிளியும் தெரியவில்லை அதன் ஆரம் மட்டுமே தெரிகின்றது.அர்ச்சுனனாய் அவன்மேல் நின்று மலரம்புகளால் தாக்கிக் கொண்டே இருக்கிறாள்.வண்டிடம் தேன் இழந்த மலர் ஒருபோதும் களைப்பதில்லை மாறாக சிலிர்த்து எழுந்து நிக்கின்றது. ஆணும் பெண்ணுமாய் இணைந்து சொண்டை சொண்டால் கொத்தும் குருவிகளாய் மாறி உடலுடன் உடல் முறுக்கி ஊரும் அரவங்களாய் புணர்ந்து ஆயகலைகளில் சில கலைகளைப் பயின்றதால் நரம்புகள் புடைத்து தேகம் களைத்து சிதறிக் கிடக்கின்றனர் இருவரும். சற்று முன் அவள் துகிலுடன் இருக்கக் கண்டு விலகிச் சென்ற தென்றல் இக்கனம் அத் துகில்கள் விலகியது கண்டு அங்கமெங்கும் உரசிச் செல்கின்றது. பழக்கமில்லாதவன் பனை உச்சியில் இருந்து இறங்கினால் அவன் மார்பிலும் முகத்திலும் நிறைய கீறல்களும் சிராய்ப்புகளும் இருக்கும் அவன் உடலும் அப்படி இருக்கின்றது. தன் மார்பைத் தழுவிக்கிடக்கும் அவள் கையைத் தூக்கிப் பார்க்கிறான். அதில் சில நகங்கள் உடைந்துபோய் இருக்கின்றன. பெண்மான் பெற்ற மயில் அம் மானாய் குழல் தோகை விரித்துக் கிடக்கிறாள்.எதிரே வானளாவி நிக்கின்றது மயில் தோகைபோல் ஓலைகளை விரித்தபடி பனைமரம்.அதில் தெரிகிறாள் , "பனையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பணிமலர்ப் பூம் கனையும் கருப்புச் சிலையும் மென் பாசாங்குசமும் கையில் அணையும் திரிபுர சுந்தரி" அவளை அந்தரங்கமாய் தரிசித்த ஆனந்தத்தில் குரல் ஓலமிட தூரத்தில் இருந்து பள்ளியறைப் பூசைக்கு கோவில் மணி ஒலிக்கின்றது ...........! 🦚 மயில் ஆடும்........! 11.
  4. உ மயிலம்மா. நினைத்தால் இனிக்கும் மோகனம் .....! மயிலிறகு ....... 01. அந்தக் இரும்பாலான வெளிக்கதவின் கொழுக்கியைத் தூக்கிவிட்டு வீதியில் இருந்து உள்ளே வருகின்றாள் கனகம். அவளுடன் சேர்ந்து வீட்டுக்குள் வர முன்டிய பசுமாட்டை மீண்டும் வீதியில் துரத்தி விட்டிட்டு படலையைக் கொழுவிக் கொண்டு வீட்டுக்குள் வருகிறாள். வரும்போதே மயிலம்மா மயிலம்மா என்று கூப்பிட்டுக் கொண்டு வீட்டின் பக்கவாட்டால் நடந்து குசினிக்கு வருகிறாள். அது ஒரு பழமையான பெரிய வீடு. ஆனால் வீட்டுக்குள் குசினி கிடையாது. அது மட்டும் தனியாக வீட்டின் பின் விறாந்தையில் இருந்து சிறிது தள்ளி இருக்கு. மண்சுவரும் பனைஓலைக் கூரையுமாக சுவருக்கும் கூரைக்கும் இடையில் வரிச்சுப்பிடித்த பனை மட்டைகளுடன் தனியாக இருக்கின்றது. குசினிக்கு முன்னால் ஒரு பெரிய மா மரமும் அதிலிருந்து சிறிது தூரத்தில் பெரிய குளம் ஒன்று முன்னால் உள்ள வீதியில் இருந்து வீட்டையும் கடந்து இருக்கின்றது. மழைக்காலத்தில் ஏராளமான பறவைகள் அங்கு வந்து தங்கிச் செல்வதைக் காணலாம். குசினியின் மறுபக்கத்தில் ஒரு எலுமிச்சை மரமும் அதன் கீழே மீன் இறைச்சி போன்றவை அறுத்துக் கழுவுவதற்குத் தோதாக அரிவாள் ஒன்றும் கிணறும் இருக்கின்றது. அதைத் தாண்டி சிறு பற்றைக் காடுகளும், பாம்புப் புற்றும் அடுத்து ஒரு பத்து ஏக்கர் நிலத்தில் நெல் வயல் இன்னும் சில மாதங்களில் அறுவடைக்குத் தயாராகி வருகின்றது. பனிக்காலத்தில் சமைக்கும் போது அடுப்பில் இருந்து மேல் எழும் புகை கூரைக்கு மேலால் பரந்து பனியை ஊடறுத்து செல்வதை தாய் வீட்டின் விறாந்தையில் இருந்து அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம் அப்படி ஒரு அழகு. உலை வைப்பதற்காக அடுப்பில் பானையை வைத்து தேவையான அளவு தண்ணீரை விட்டு காற்சட்டியால் மூடிவிட்டு, அடுப்புக்குள் ஈர விறகும் அதன்மேல் காய்ந்த சுள்ளிகளும் இடையிடையே பன்னாடைகளையும் செருகி தீக்குச்சியால் நெருப்பு மூட்டி ஊது குழலால் மயிலம்மா கண் எரிய ஊதிக்கொண்டிருக்கும்போது கனகத்தின் குரல் கேட்டதும் கனகம் நான் இஞ்ச இருக்கிறன் உள்ளே வா என்று குரல் குடுக்க கனகமும் உள்ளே வருகிறாள். அவளிடம் தேத்தண்ணி குடிக்கிறியே என்று கேட்டு அவள் பதிலை எதிர்பாராமல் கிளை அடுப்பில் கேத்திலையும் வைக்கிறாள். என்ன விஷயம் ஏதாவது அலுவலோ என்று மயிலம்மா கேட்க அதொன்றுமில்லை மயூரி ஆம் அவள் உண்மையான பெயர் "மயூரி"தான் கனகமும் அவளும் சிறுபிராயத்தில் இருந்தே தோழிகள் என்பதால் கனகம் அவளை மயூரி என்றுதான் அழைப்பது வழக்கம். ஆனால் மயிலம்மாவின் திமிரான நடையும் அதிகாரத் தொனியிலான பேச்சும் எடுப்பான அழகும், பின்னழகைத் தொடும் நீண்ட தோகை போன்ற அடர்த்தியான கூந்தலும் ஆண்கள் வட்டத்தில் மயிலு மயிலம்மா என்றே அழைத்துப் பிரபலமாகி விட்டிருந்தது. நான் சும்மா வந்தனான் என்று கனகம் சொல்ல, தண்ணி கொதித்ததும் மயிலம்மா உலையில் அரிசியை அரிக்கன் சட்டியில் இருந்து களைந்து போடுகிறாள். அப்போது கனகம் எங்கட வேலர் அப்பாவுக்கு சேடம் இழுக்குதாம் அநேகமாக இண்டைக்கு ஆள் முடிஞ்சிடும் என்று கதைக்கினம். அப்படியே மனதுக்குள் கணக்குப் போட்டுப் பார்த்து இன்று ஏகாதசி அப்படி நடந்தால் நல்லதுதான் அவரும் எவ்வளவு காலமாய் பாயும் நோயும் என்று துன்பப் படுகிறார் என்று சொல்லும் போது மேலே கூரையில் இருந்து ஓலை சரசரக்கும் சத்தம் கேட்டு இருவரும் மேலே பார்க்கின்றனர். மயில் ஆடும் .........🦚
  5. வெறுப்பு! *********** அரசமரக் கன்றுகளை அழித்துக்கொண்டிருந்தான் அந்தத்தேசத்து மனிதனொருவன் எத்தனையாண்டுகள் வாழும் மரத்தை ஏன்.. அழிக்கிறாய்யென்றான் வழிப்போக்கன். எனக்கும் கவலைதான் என்னசெய்வது வருங்காலப் பிள்ளைகளும் வாழவேண்டுமே என்று பெரு மூச்சுவிட்டான் அந்த மனிதன். அன்புடன் -பசுவூர்க்கோபி.
  6. சுமா.....சும்மாபோய் கூட்டத்தை எட்டிப்பார்த்திருப்பாரோ?😁
  7. மயிலிறகு .......10. வாமன் கிணற்றின் அருகில் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அஞ்சலை அவனை கொஞ்சம் சீண்ட நினைத்து என்ன பார்க்கிறாய்....... யார் நானா ......பின்ன இங்கு வேறுயார் இருக்கிறார்கள். உன்னைத்தான் கேட்கிறேன். நீ பார்க்கிறதை பார்த்தால் மோட்டரை லவட்டிக் கொண்டு போற பிளான்போல கிடக்கு. அவளுக்கு அவனது முதலாவது அறிமுகமே மாங்காய்க்கு கல்லெறிந்து ஏச்சு வாங்கிக் சென்ற துடிப்பான வாலிபன் மற்றும் அவளும் இப்பொழுது பலரை வைத்து வேலை வாங்கும் ஒரு முதலாளியாக இருக்கிறாள்.அதனால் அந்த கம்பீரம் அவள் குரலிலும் தொனிக்கிறது. அவனை நீ நான் போடா வாடா என்றே அழைக்கிறாள். அப்படி வேலைகள் செய்கிறதாய் இருந்தால் நாங்கள் ஏன் இப்ப பணத்துக்கு உங்களிடம் வாறம். கிணற்றில் தண்ணி நல்ல தெளிவாக இருக்கு குடிப்பம் என்றால் குழாயில் தண்ணி வரவில்லை. ஓ......அதுவா அடிக்கடி தோட்டத்துக்கு நீர் இறைப்பதால் தண்ணி தெளிவாய் இருக்கு. இது நல்ல ஊற்றுக் கிணறு.இப்ப சில நாளாய் மோட்டர் வேலை செய்யவில்லை. எல்லாம் அவர்தான் பார்க்கிறவர்.இந்த வேலையெல்லாம் அவருக்குத்தான் தெரியும். நான் மின்சார வேலை தெரிந்த ஒரு ஆளுக்கு சொல்லியிருக்கிறன். அவருக்கும் நேரமில்லை நாலுநாள் பொறுங்கோ வாறன் என்று சொல்லி இருக்கிறார். அதுதான் பயிர் எல்லாம் நீரின்றி சோர்ந்து போய் கிடக்கு. அது கிடக்கட்டும் உன்னைப் பற்றி சொல்லு, நீ என்ன செய்கிறாய். என்னைப்பற்றி சொல்ல என்ன இருக்கு. என் பெயர் வாமதேவன். நானும் சுந்தரேசனும் பாலர் வகுப்பில் இருந்து ஒன்றாகத்தான் படித்து வந்திருக்கிறோம்.அவன் நல்லா படிப்பான். நான் சுமாராய் படிப்பன். இப்ப அவன் கம்பசுக்கு தெரிவாயிட்டான். ஆனாலும் நான் படித்துக் கொண்டே எங்கட விதானையாரிடம் பகுதிநேர வேலை செய்கிறேன். அதில் கொஞ்சம் பணம் கிடைக்கும். அதைவிட அவருடன் நாலு இடத்துக்கும் போகும்போது ஒரு கெத்தாய் இருக்கும்..... அவள் உதட்டை பிதுக்கி புருவத்தைத் தூக்கி ....ம் .....பெரிய வேலைதான் (அவருக்கு தான் அடியாள் போல என்பது கூடத் இவனுக்குத் தெரியவில்லை) சரி மேல சொல்லு..... போற இடங்களில் தண்ணிக்கும் விருந்து சாப்பாட்டுக்கும் குறைவில்லை. அதை விட அதிகாரிகளோ போலீசாரே யார் பார்த்தாலும் மரியாதையுடன் பழகுவார்கள். யார் எங்கட அரசு விதானையுடனோ வேலை செய்கிறாய் ....... ஓம்.....உங்களுக்கு அவரைத் தெரிந்திருக்கும்.அவருடன்தான்.....அவர் சொல்லி நானும் கிராமசேவகர் வேலைக்கு விண்ணப்பித்து இருக்கிறேன்.அநேகமாய் ஒரு மாதமளவில் கிடைக்கலாம் என்று விதானையார் சொன்னவர். அது சரி நான் இந்த மோட்டர் அறையைப் பார்க்கலாமா .......அதுக்கென்ன பார் என்று சொல்லி கதவைத் தள்ளி திறந்து விடுகிறாள்.வாமன் உள்ளே செல்ல அவளும் பின்னால் போகிறாள். அவன் மோட்டரை கையால் சுற்றிப்பார்த்து இது சரியாய் இருக்கு என்று சொல்லி பியூஸ் போர்ட்டைத் தேட அது எதிர் சுவரில் இருக்கு.அவன் சேர்ட்டைக் கழட்டி கதவில் கொழுவிவிட்டு சாரத்தை மடிச்சு சண்டிக்கட்டு கட்டிக்கொண்டு அங்கு போகிறான். அந்த இளம் வாலிபனின் மார்பிலும் கால்களிலும் சுருள் சுருளான உரோமங்கள். அவளுக்கு தலைமுடியில் சுருள்கள் கிடையாது, ஆனால் நீளமான நீண்ட முடிகள். தன்னிச்சையாய் தன் கூந்தலை எடுத்து முன்னால் போட்டுக் கொள்கிறாள். அங்கு குவிந்திருக்கும் சாக்குகளை விலத்தி மெயின் சுவிட்சை நிறுத்தி விட்டு பியூஸ் கட்டையை புடுங்கிப் பார்க்கிறான்.அது எரிந்து போய் கிடக்கு. அங்கேயே தேடி வேறு ஒரு பியூஸை எடுத்து அதில் சொருகி அதை சரியான இடத்தில் பொருத்தி விடுகிறான். அங்கே அந்தப் பெட்டிக்கு மேல் ஒரு சாராயப்போத்தல் இருக்க அவன் அதை எடுக்கிறான்....அவன் கேட்காமலே அவளும் அது அவர்தான் வைத்திருக்கிறார். அவர் உங்க போறவாற இடமெல்லாம் தான் குட்டிப்பதற்கு வைக்கிறது வழக்கம். விரும்பினால் நீ எடுக்கலாம் என்கிறாள். அவனும் அதைத் திறந்து மறுபக்கம் திரும்பி நின்று குடிக்கிறான். பின் அவன் மெயின் சுவிட்சைப் போட பைப்பில் முதல் காற்று வந்தது. அவன் அதை பொத்திப் பிடிக்க சற்று நேரத்தில் அவன் கையைத் தள்ளிக்கொண்டு அழுக்குத் தண்ணீர் சீறிப் பாய்ந்தது. அது புஷ்வாணமாய் அறை முழுதும் பாய்கிறது. அவன் பின்னால் நின்ற அஞ்சலா அஞ்சி என்ர அம்மா என்று கத்தியபடி அவனையும் இழுத்துக் கொண்டு தடுமாறிக் கீழே விழுகிறாள். இருவரும் தெப்பலாய் நனைந்து கொண்டு இருக்கிறார்கள். அவளது நீல நைலான் சேலை நன்றாக நனைந்து உடலை சிக் என்று இறுக்கிப் பிடித்திருக்கு. வாமன் தடுமாறி எழ முயற்சிக்க அவள் இடையில் அவன் முகம் பொருந்தி இருக்கிறது. கைகள் அவளை இறுகப் பற்றியிருக்கின்றன.அந்தப் பிடியில் இருந்து விலக அவளும் பிரயத்தனப் படவில்லை.அப்படியே கொஞ்சம் நிதானித்துக் கீழிறங்க அவன்மேல் பருவச்சுமை அழுந்துகிறது. காத்து வாக்கில் பூத்த வாசம் நாசியை நிறைக்கின்றது.கல்லுபோன்ற மாதுளைகள் அவன் கன்னங்களை உரசிக்கொண்டு அவன் வெற்று மார்பில் தஞ்சமடைய இளமையில் இள மயில் உறவு தேடித் தவிக்குது.நிலமையைப் புரிந்து அவனது பிடிகள் தளர்கின்றன. அவள் தன் கைகளால் அவன் தலைமுடியைக் கோதி தன் முகத்துடன் சேர்த்துக் கொண்டு மெல்ல காதுக்குள் கம்மும் குரலில் கிசுகிசுக்கிறாள், உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கொள். இதுவரை இதுபோன்ற அனுபவம் அவனுக்கு ஏற்பட்டதில்லை. காலத்தை மறந்து ஓரிரு நிமிடங்கள் அப்படியே இருக்கிறார்கள்.அந்தச் சிறு நேரத்துக்குள் அவன் இந்தமாதிரி அனுபவமில்லாதவன் என்று புரிந்து கொண்டு அவன் தொடைகள் நடுங்குவதை தன் கால்களால் உணர்ந்து கொள்கிறாள். புல்லாங்குழல் வாசிப்பதற்குத் துவாரங்களைக் கையாலத் தெரிய வேண்டும். அவனுக்கோ கையும் ஓடவில்லை காலும் நடுங்குகிறது. குழாயால் அறை முழுதும் சீறிப் பாய்ந்த தண்ணீர் குழாய்க்குள் அடங்கி தொட்டிக்குள் சீராக விழுகின்றது. மெதுவாக அவன் கன்னத்தில் அழுத்தி ஈர முத்தமொன்றைத் தந்துவிட்டு எழுந்து தனது ஆடைகளைச் சரிசெய்து கொள்கிறாள். அவனும் எழுந்து கொள்கிறான். அவள் முகத்தைப் பார்க்க அவனுக்கு கூச்சமாக இருக்கின்றது. நிராயுதபாணியாய் இராவணன் சென்றது போல் எழுந்து சென்று அறைக்குள் எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி மிச்ச சாராயத்தையும் ஒரு மிடறில் குடித்து விட்டு மோட்டரையும் நிப்பாட்டிவிட்டு நனையாத சேர்ட்டையும் எடுத்துக்கொண்டு இருவரும் ஈரம் சொட்ட சொட்ட வெளியே வருகிறார்கள். அவன் உம் என்று வருவதை பார்த்த அஞ்சலா அவனைக் கலகலப்பாக்க நினைத்து, அவனைப் பார்த்து கண் சிமிட்டிகொண்டே நான் மீண்டும் ஒருமுறை குளிக்க வேண்டி வந்திருக்கும் நல்லகாலம் தப்பீட்டன் என்று சொல்ல அவனுக்கு கொடுப்புக்குள் சிரிப்பு வருகிறது. அவன் சொல்கிறான் இப்ப மட்டும் என்ன அந்த ஈரச்சாக்கு ஊறலுக்குள் உருண்டு பிரண்டு எங்கட உடுப்புகளும் நாறுது, போய் குளிக்கத்தான் வேணும். அப்போது அங்கு மயிலம்மாவும் வருகிறாள். என்னக்கா எல்லாம் சரியா இருக்கா..... ஓம் பிள்ளை.....என்ன இரண்டு பேரும் நனைந்து போய் வருகிறீர்கள் என்று வினவ ..... அதொன்றுமில்லை அக்கா, சில நாட்களாக மோட்டர் வேலை செய்யவில்லை.அதுதான் இவன் அதைத் திருத்தினவன்.அப்போது எதிர்பாராமல் குழாயில் இருந்து தண்ணீர் சீறி அடித்து எங்களை நனைத்துப் போட்டுது..... மயிலம்மாவும் வாமன் வலு கெட்டிக்காரன் ......எல்லா வேலைகளும் தெரியும்....உடனே பிழைகளைக் கண்டு பிடித்து செய்து போடுவான் என்று சொல்லிக்கொண்டு முன்னே செல்கிறாள். அப்போது அஞ்சலா மெதுவாக இவனிடம் ...ம்....எனக்குத்தான் தெரியும் இது இன்னும் "எலி பிடிக்கப் பழகாத பூனை" என்று மெதுவாய் அவன் காதைத் திருகிவிட்டு சொல்கிறாள். உடனே வாமன் உஸ் என்று ஜாடையால் மயிலம்மாவைக் காட்டி கேட்டிருக்கும் என்கிறான்......! 🦚 மயில் ஆடும்.......! 10.
  8. · புங்கையண்ணா.🖐️ என்ன உங்கள் பிறந்த நாளுக்கு ஒரு சனத்தையும் காணம்...😀இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.✍️
  9. மயிலம்மாவுக்கு அடிக்கடி பாவடையை காலாலே கழட்டுறதும், கட்டுறதும் பெரும் வேலையாய் போச்சு. ‘மாதவிப் பெண்ணாள் தோகை விரித்தாள்’ அந்தமாதிரி
  10. அடுத்த றோயல், தோமியன் கிரிக்கட் மட்ச் அம்பாந்தோட்டையில் ....நடை பெறுவதை யாரும் தடுக்க முடியாது .....அந்த ம‌ட்ச் அம்பாந்தொட்டையில் நடக்கும் என்றால் அதை எதிர்த்து சம் வழக்கு போடுவார் ...அதற்காக வாதடவும் தயங்க மாட்டார்.. சில சமயம் யாழ் முஸ்லீம்கள் யாழ்ப்பாணத்தவர்களுடன் சேர்ந்து நல்லிணக்கமாக வாழ்ந்தால் அது சிறிலங்காவின் தேசிய நல்லிணக்கத்திற்கு பாதகமாக மாறிவிடும் ஆகவே வெளிமாவட்ட முஸ்லீம்களை தெரிவு செய்துள்ளனர் ..
  11. ஜெயமோகன் குறிப்பிடும் 'குழு மனப்பான்மை (mass mentality)' பற்றிய கருத்தை எந்த ஒரு குழுவின் மீதும் வைக்க, விமர்சிக்க யாருக்கும் உரிமையுண்டு. ஏனெனில் 'குழு மனப்பான்மை' என்பது சமூகத்தில் விரும்பத்தகாத எதார்த்தம். பெரும்பாலான மனிதர்களின் நடத்தையை அவர்கள் சார்ந்த குழுவே தீர்மானிக்கும் (It's termed peer culture) - ஒரு போராட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய ஆயுதத்தை நம் எதிரி தீர்மானிப்பது போல. ஆனால் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' திரைப்படத்தைப் பேசுகையில் இத்தலைப்பை ஜெயமோகன் கையிலெடுத்திருக்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அதில் வரும் இளைஞர்கள் எந்தவொரு சமூகத்து இளைஞர்களையும் போல் அந்த வயதிற்குரிய சிறுபிள்ளைத்தனத்தனத்துடன் கதையை ஆரம்பிக்கிறார்கள். அவ்வளவே. பெரிய அழிவு நடவடிக்கைகளில் (destructive behaviour) அவர்கள் ஈடுபடுவதாகக் காட்டப்படவில்லை. பொதுவாக மலையாளத்து இளைஞர்களின் அழிவு நடவடிக்கைகள் பற்றி ஜெயமோகன் கருத்து கொண்டிருந்தால், அதனைப் பேச வேறு தளங்கள் உண்டு. அச்சமூகத்தை சுய பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் அவர் ஒரு தனிக் கட்டுரையாகவே எழுதலாம். அப்போதும் ஒரு சில குறிப்பிட்ட குழுவைச் சார்ந்தோரால் அவர் வசைபாடப் படலாம். ஒரு எழுத்தாளர் அதனை அறிவுப்பூர்வமாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போதோ பெரும்பாலும் அறிவுசார் சமூகத்தினரின் தூற்றுதலுக்கு உள்ளாகிறாரே ! இந்த எனது பார்வையோடு ஜெயமோகனின் 'மஞ்ஞுமல் பாய்ஸ்' பற்றிய கருத்தைப் புறந்தள்ள எண்ணுகிறேன். இனி அப்படம் தொடர்பாக எனது சிந்தனையோட்டம் : 'மஞ்ஞுமல் பாய்ஸ்' படத்தை நான் ரசிக்கிறேன்; கொண்டாடுகிறேன். குணா படத்தின் அந்தப் பாடலைச் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது என் கருத்து. மற்றபடி 'குணா' படம் வந்த போதே அந்தப் பாடல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று; படம் அப்படியல்ல என்பதே என் கருத்தாக இருந்தது; இன்றும் இருக்கிறது. தமிழ்ச் சமூகம் அப்படத்தையும் அதே பாணியில் தனுஷ் நடித்து வெளிவந்த 'காதல் கொண்டேன்' படத்தையும் பெரிதாகக் கொண்டாடவில்லை என்பது என் போன்றோருக்கான ஆறுதல். ஒரு மனநிலை பிறழ்ந்த மனிதனின் காதலையும் (!!!), அவனால் கடத்தப்பட்ட நாயகியின் Stockholm syndrome ஐயும் எப்படிக் கொண்டாட முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சில சமயங்களில் இயக்குநர், நடிகர்கள் திறமையால் மக்களின் கண்ணைக் கட்டி சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத கதைகளை ஏற்க வைத்து விடுவார்கள் - திருமணத்திற்குப் பின் பழைய காதலை (அவன் சட்டையை முதற்கொண்டு) நுகர்ந்து பார்க்கும் நெறி தவறிய உணர்வைப் புனிதப்படுத்தும் '96' போல.
  12. இவர்களும் தமிழர்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சாட்சி வேண்டும்???
  13. பாலஸ்தீனத்தின் தன்னாட்சியை பலநாடுகள் ஏற்றுகொண்டன இன்றுவரை அமெரிக்காகூட அதை ஏற்றுக்கொள்கிறது. புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின்போது சுயாட்சியுடன் கூடிய தமிழர் தாயகபகுதி என்பதையாவது எவராவது ஏற்றுக்கொண்டார்களா? அமெரிக்கா உட்பட்ட மேற்குலகமும் சிங்கள அரசும் அழுத்தம் முதலில் கொடுத்தது புலிகள் ஆயுதங்களை கீழே போட வேண்டுமென்பது. ஆயுதங்களை கீழே போட்டிருந்தால் பேச்சுவார்த்தை என்ற ஒரு மேடைக்கே புலிகளை அழைத்திருப்பார்களா? கண்டிப்பாக தமிழர்கள் என்ற பெயரில் டக்ளசையும், கூட்டணிகாரர்களையும்தான் கொண்டுபோய் உலகின் முன் தமிழர் தரப்பு என்று நிறுத்தியிருக்கும் சிங்களம். புலிகள் ஆயுதங்களை கைவிட்டால் தீர்வு என்று அடிக்கடி சிங்கள தேசம் சர்வதேசத்துக்கு சொல்லிக்கொண்டிருந்தது, இன்று புலிகளே இல்லை என்ன தீர்வு இதுவரை தமிழருக்கு வந்து சேர்ந்திருக்கிறது? சமகால நிலமைகளை கண்கூடே பார்த்துவிட்டு புலிகளையும் பாலஸ்தீனத்தையும் எந்த வகையில் ஒப்பிடலாம்?
  14. எங்கே போகும் இந்த வாழ்க்கை யாரோ யார் அறிவாரோ .........! 😂
  15. வடமாகாணத்தில் இரண்டும் நடை பெறுகிறது ஒரு பக்கம் நல்லிணக்க செய்ல்பாடு ....வெடுக்குநாறிமலையில் ஆக்கிரமிப்பு ...தாயகத்திலும் இந்த புறு புறுப்பு உண்டு ....இங்கு வயது போனவர்கள்...அங்கு இளைஞர்கள்
  16. உண்ணும் உணவே மருந்து என்ற காலம் போய்... உண்ணும் உணவே நோய் நொடிகளை தரும் எனும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
  17. இலங்கையின் சிறந்த கல்வி அமைச்சராக திரு ரிச்சட் பதிரணவுக்குப் பின் சுசில் பிரேமஜெயந்தை காண்கின்றேன். சென்னை IIT ஐ கண்டியில் ஸ்தாபிப்பது, இப்போது கல்வி அமைச்சு கொண்டு வரும் மாற்றங்களை அவதானிக்கையில் அது தெரிகிறது. எனினும் Out of box யோசிக்கும் தன்மை, critical thinking எமது கல்வி அமைப்பில் இல்லை என்பது துரதிஷ்டமானது. Out of box யோசிக்கும் தகமையை எங்கள் கல்வி ஊக்குவிக்க வில்லை. சீனா சிங்கப்பூர் இந்தியா போன்ற நாடுகளிலும் அதுவே நிலைமை. ஆனால் இங்கே கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள கல்வியை நல்ல கல்வி இல்லை என்று சொல்லும் பல இந்தியர்களையும் எங்கள் தமிழர்களையும் காண்கின்றேன். சீனா, சிங்கப்பூர் இந்திய மாணவர்களின் கணித பாட, விஞ்ஞான பாட அறிவு மட்டமானது அதே வயதுடைய கனேடிய மாணவனை விட அதிகம் என்பது மேற்படி வாதத்தை வைக்கும் நம்மவர் நோக்கு ஆனால் நோபல் பரிசில் வெற்றி பெற்றோரில் அமெரிக்கரோ அல்லது சீனரோ அதிகம் என்று பார்த்தால் அதில் அமெரிக்கரே அதிகம் நீங்கள் உங்கள் பிள்ளையை பத்தில் ஒரு மருத்துவராகவோ, பத்தில் ஒரு பொறியியல் ஆளராகவோ உருவாக்க விரும்பினால் சில வேளைகளில் நாம் கற்ற கல்வி முறை உதவலாம். சில வேளை என்று சொல்லக் காரணம் இன்று இது போன்ற வேலைகளுக்கு critical Thinking தேவைப்படுகின்றது. அதை critical thinking ஐ எப்படி வளர்ப்பது என்று புத்தகம் படித்து தேற முடியாது. ஆனால் உங்கள் பிள்ளை தான் தேர்ந்து எடுத்த துறையில் அதி உச்ச நிலைக்கு வர வேண்டும் எனில் தற்போதைய வெறுமனே மனனம் செய்யும் கல்வி முறை உதவாது. தவிர இனி வரும் காலங்களில் University education என்பது வேலைவாய்ப்புக்கு உதாரவாதமாக இல்லை. விரும்பிய பாடத்தில் university degree பெற்றுக்கொள்ளலாம் ஆனால் வேலை எடுக்க Skill இருக்க வேண்டும். Anthropology யில் degree வைத்துக்கொண்டு electrician ஆக வேலை செய்யும் ஒருவரை எனக்குத் தெரியும் இங்கே 25-35 வயதுக்குள் புலம் பெயர்ந்த ஆப்பிரிக்கா, சீனா,அரேபிய, இந்தியா இலங்கை நாடுகளில் பட்டம் பெற்று வந்த பலரில் நான் கண்டது இது தான்
  18. அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லி காசு பார்த்தார் ரஜனி எந்தக்காலமும் அரசியலுக்கு வரமாட்டேன் , ஒருவேளை துப்பாக்கி எடுத்து எல்லோரையும் சுட்டு தள்ளணும்னு ஒரு நினைப்பு வந்தால் அரசியலுக்கு வருவேன் என்றார் கமல். பின்னாளில் வருவேன் என்றவர் வரவில்லை வரவேமாட்டேன் என்றவர் வந்தார். கமல் கட்சி ஆரம்பிச்சு அரசியலுக்கு வந்தது ஒன்றும் முதல்வராகவோ அல்லது தமிழகத்தை காப்பாத்தவோ அல்ல , தனிப்பட்ட கோவத்துக்காகவே வந்தார். பிரதமர் கனவிலிருந்த ஜெயலலிதாவை வெறுப்பேத்த வேட்டிகட்டிய தமிழன் ஒருவர் பிரதமராவதையே வரவேறிகிறேன் என்று கமல் ஒருபோது அறிக்கைவிட்டார், அதனால்கோபத்தின் உச்சிக்கே போனார் ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக தனது பணம் முழுவதையும் கொட்டி எடுத்த விஸ்வரூபம் படத்தை வெளிவரவிடாமல் பண்ணி அவரை பொருளாதார ரீதியாகவும் மனநிலை ரீதியாகவும் சினிமாவைவிட்டே ஓடவிட பார்த்தார் ஜெயலலிதா, இயல்பாகவே கர்வமும் கோப குணமும் அதிகமான தன்மான உணர்வும் கொண்ட கமல் தன் இயலாமையால் கண்கலங்கி அழுது தமிழகத்தை விட்டே வெளியேறுவேன் என்றது விஸ்வரூப விவகாரத்தில்தான். அதனால்தான் ஜெயலலிதா மறைவின்போது இரங்கல்கூட தெரிவிக்கவில்லை கமல், பின்னர் பலரின் விமர்சனங்களால்’;சார்ந்தோர்க்கு அனுதாபங்கள்’’ என்று மட்டும் டிவிட்டரில் ஒருவரி போட்டார். அதன் உள்ளார்ந்த அர்த்தம்கூட ஒருவகையில் நக்கல்தான் அதாவது ஜெயலலிதாவின் அல்லகைகளுக்கு அனுதாபங்கள் என்பதே அது. அதற்கு பின்னர்தான் அரசியலில் முழுமூச்சாய் இறங்கினார், அவர் அரசியலில் இறங்கியது அதிமுக ஓட்டுக்களை பிரிக்க ஏதாவது ஒருவகையில் தானும் ஒரு காரணியாக அமையத்தான். சினிமா, பிக்பாஸ் என்ற வியாபாரங்களை கவனித்தபடி அரசியலை சும்மா தொட்டுக்கொள்கிறார், மற்றும்படி தமிழக அரசியலில் ஏதும் புதுமைகளை நிகழ்த்துவது என்பதும் ஆட்சியை கைப்பற்றுவது என்பதும் நடைமுறை சாத்தியமில்லை என்பது இயல்பாகவே அறிவுஜீவியாக இருக்கும் கமலுக்கு எப்போதோ தெரிந்திருக்கும்.
  19. சுமந்திரனின் இறுதி இலக்கு அமைச்சர் பதவி. அதற்காக அவர் படிப்படியா உழைச்சுக் கிட்டு தான் இருக்கார். புலி நீக்கவாதி தமிழ் தேசிய நீக்கவாதி மாவீரர் நீக்கவாதி மிதவாதி சிங்கள பெளத்த பேரின புகழ்வாதி சொறீலங்கா.. எக்க ராஜ்ஜய வாதி ஜனாதிபதி சட்டவாதி தமிழசுக் கட்சி சுவீகரிப்புவாதி புலி இனச்சுத்திகரிப்பு வாதி இப்படி பல வாதங்களோடு ஏன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.. எப்பவும் ரணிலுக்கு பின்னால் பக்கத்தில் தான் நிற்பார். அதிசயமோ ஆச்சரியமோ அல்ல. டக்கி இலக்கம் 2 தயாராகி கொண்டிருக்குது.
  20. மஞ்ஞும்மல் பாய்ஸ்- குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம் ஜெயமோகன் March 9, 2024 சமகால சினிமாவை நான் விமர்சனம் செய்வதில்லை, கருத்தே சொல்வதில்லை. ஏனென்றால் நானும் இதில் இருக்கிறேன். இது கலை ஒன்றும் அல்ல, பிரச்சாரம்கூட அல்ல. வெறும் வணிகம். நூறு விழுக்காடு வணிகம். ஆகவே ஒரு வணிகர் இன்னொருவரின் வணிகத்தை அழிக்கலாகாது. அது ஒரு உள்நெறி ஆனால் யானை டாக்டர் எழுதியவன் என்னும் முறையில் இதை எழுதவேண்டியிருக்கிறது. புகழ்மொழிகள், புல்லரிப்புகள், வாழ்த்துக்கள் வழியாக நேற்று மஞ்ஞும்மல் பாய்ஸ் என்னும் மலையாளப் படத்தைப் பார்க்க நேர்ந்தது. முதல் விஷயம், மலையாள சினிமாவுக்கு நம்மவர் அளிக்கும் புல்லரிப்பு. குறிப்பாக தமிழ் ஹிந்து நாளிதழ் மலையாள சினிமா சார்ந்து 24 மணிநேர புல்லரிப்பு நிலையிலேயே இருக்கிறது. எல்லா படமும் அதன் பார்வையில் கிளாஸிக்தான். அவற்றில் பல படங்கள் பெற்ற அன்னை உட்கார்ந்து பார்க்கமுடியாத சலிப்பூட்டும் போலிப்படைப்புகள். மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் தமிழில் வந்திருந்தால் இங்குள்ள எளிய விமர்சகர்கூட ஒரு கேள்வியைக் கேட்டிருப்பார்கள். அதெப்படி தமிழ் நாளிதழ்களில் செய்திவெளிவந்த அவ்வளவு பெரிய இடர், ஒரு வீர சாதனை கேரளத்தில் அந்த ஊர்க்காரர்களுக்கு மட்டும் தெரியாமலேயே இருந்தது. மஞ்ஞும்மல் பையன்கள் அதை ஊரில் சொல்லவே இல்லையா? அது ஒருவன் இன்னொருவனுக்காக உயிர்கொடுக்கத் துணிந்த தருணம், அதை அப்படியே மூழ்கடித்து வைத்தார்களா என்ன? நாட்கணக்கில்கூட செய்தி கசியவில்லையா? கிளைமாக்ஸ் நெகிழ்ச்சிக்காக சமையல் செய்து உருவாக்கப்பட்ட காட்சி அது. ஆனால் மல்லுபடம் என்றால் அது ரியலிசம் என்பார்கள் நம்மூர் அரைவேக்காடுகள். அது எப்படியோ போகட்டும், எல்லா படங்களுமே விதவிதமான ஜோடனைகள்தான். வெறும் பொழுதுபோக்குகள். எளிய அறிவுத்துறை அறிமுகம்கூட இல்லாமல் சினிமாவில் மட்டுமே உழன்று, அதையே விவாதித்து, ஏதோ அறிவுச்செயல்பாட்டில் இருப்பதாகப் பாவனைசெய்து வாழும் பாமரப்பெருங்கூட்டம் இங்குள்ளது. அவர்களும் வெந்ததைத் தின்று விதிவரும் வரை இங்கே வாழவேண்டும். அவர்களின் பைக்காசுதான் நம் வங்கியை நிரப்புகிறது என்பதனால் அவர்கள்மேல் ஓரளவு கரிசனமும் எனக்குண்டு. புல் வளர்கிறதே என மாடு மகிழ்ச்சிதான் அடையவேண்டும். மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலாமையங்கள் மட்டுமல்ல அடர்காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது. குறைந்தது பத்து தடவையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் பகுதிகளில் இந்த மலையாளக் குடிகாரப் பொறுக்கிகள் சாலையில் அடிதடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்களின் வண்டிகளின் இருபுறமும் வாந்தி வழிந்துகொண்டிருக்கும் – இந்தப் படத்தில் காட்டப்படுவதுபோல. குடித்து முடித்த புட்டிகளை தூக்கி வீசி உடைத்துக்கொண்டே இருப்பார்கள். ஐயமிருந்தால் செங்கோட்டை – குற்றாலம் சாலையிலோ, கூடல்லூர்- ஊட்டி சாலையிலோ சென்று பாருங்கள் வழிநெடுக உடைந்த, உடையாத புட்டிகளாகவே கிடக்கும். அதையும் இப்படத்தில் பெருமையாகக் காட்டுகிறார்கள். பலமுறை இவர்களுடன் சண்டைக்குச் சென்றிருக்கிறோம். ஒரு முறை வாகமண் புல்வெளியில் எங்களுடன் வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரான செந்தில்குமார் இவர்கள் தூக்கி வீசிய புட்டிகளை அவரே அள்ளி பொறுக்கி சேர்த்து அகற்றினார். ஆண்டுக்கு இருபது யானைகளாவது இந்த புட்டிகளால் கால் அழுகி இறக்கின்றன. கொதித்துப்போய் நான் அதைக் கண்டித்து எழுதிய யானை டாக்டர் மலையாளத்திலும் பல லட்சம் பிரதி விற்றிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் அதை வாசித்திருக்க வாய்ப்பே இல்லை. இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு ஒரு வார்த்தை இன்னொரு மொழி தெரியாது. எல்லா கேள்விக்கும் மலையாளத்திலேயே பதில்சொல்வார்கள். ஆனால் அவர்கள் மொழி பிறருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்னும் தெனாவெட்டு தெரியும். இந்த படத்தில் தமிழகப்போலீஸ் அவர்களை நடத்தும் விதமும் உண்மையானது. அடி தவிர எதுவுமே இவர்களுக்குப் புரிவதில்லை. கேரளத்தில் திருமண நிகழ்வுகளுக்குச் செல்வதே பெருந்துன்பமாக ஆகிவிட்டிருக்கிறது. மலையாளிகளே இருவகை. அயல்நாட்டில் ரத்தம் சுண்ட உழைப்பவர்கள். அவர்களைச் சுரண்டி உள்நாட்டில் குடிப்பவர்கள். இந்தக் குடிகாரக் கும்பல் எந்தக் கல்யாணத்திலும் வந்து வெறியாட்டம் இடுகிறார்கள். மணப்பந்தலிலேயே வாந்தி எடுப்பவர்கள் ஏராளமானவர்கள். மணப்பந்தலில் மணமகனே வாந்தி எடுப்பதை கண்டிருக்கிறேன். குடியில் தமிழகம் கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லியாகவேண்டும். கேரளத்திலுள்ள வேறுபாடு என்னவென்றால் கேரளம் போதைவெறியை, அதன் எல்லாக் கீழ்மைகளையும் இயல்பானதாக ஆக்கிக்கொண்டே இருக்கிறது. சட்டத்தை மதிக்கும் சாமானியனை மடையனாகவும், உதவாக்கரையாகவும் அது சித்தரிக்கிறது. கேரளக்கடற்கரைகளில் மாலை ஏழு மணிக்குமேல் பெண்கள் மட்டுமல்ல சாமானியர்களான ஆண்கள் கூட செல்லமுடியாது- அதை போலீஸே அறிவுறுத்துகிறது. கேரள சினிமா தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக இருப்பதென்றாலே குடித்துச் சண்டைபோட்டு, வம்பிழுத்து, வாந்தி எடுத்து, சாமானியர்களை நிலைகுலையச் செய்து கும்மாளமிடுவது என்றே காட்டி வருகிறது. குடிக்காமல் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கும் நாலுபேரை மலையாளப்படங்களில் எப்போதாவது பார்த்ததுண்டா ? இந்தப் படமும் அந்தப் பொறுக்கிகளை ‘ஜாலியானவர்கள்’ என்று சொல்கிறது. அதற்கான சமூகஏற்பை சினிமா வழியாக மெல்ல மெல்ல உருவாக்குகிறார்கள். அதாவது ஒரு தமிழ் கதைநாயகன் எந்தப் பொறுக்கிகளிடமிருந்து சாமானியர்களைக் காப்பாற்றுவாரோ அந்தப் பொறுக்கிதான் இன்றைய மலையாள சினிமாவின் கதைநாயகன். காரணம், எர்ணாகுளம் மையமிட்ட ஒரு சிறு போதையடிமைக் கும்பல் இன்றைய மலையாள சினிமாவின் மையத்தில் உள்ளது. அங்கே மது வெறி இரவும் பகலும். அதைவிட மோசமான போதைகள். போதைப்பார்ட்டிகள் கேரளத்தில், குறிப்பாக எர்ணாகுளத்தில், உள்ள அளவு இந்தியாவில் எங்குமே இல்லை. மலையாளக் கதாநாயக நடிகர்கள்கூட போதை மருந்து வழக்குகளில் சிக்கிக்கொள்வது அடிக்கடி செய்திகளில் வருகிறது. அவர்கள்தான் மலையாளச் சமூகத்தையே போதைவெறியை இயல்பாக எடுத்துக்கொள்ளப் பழக்கப்படுத்துகிறார்கள். பத்தாண்டுகளுக்கு முன்பு ‘கிளி போயி’ ‘ஒழிவுநேரத்தே களி’ ‘வெடிவழிபாடு’ ’ஜல்லிக்கட்டு’ போன்று போதையையும் விபச்சாரத்தையும் normalaize செய்யும் சிறிய படங்கள் கேரளத்தில் வெளிவந்தன. உள்ளீடற்ற அசட்டுப் போலிப்படங்கள் அவை. அவை அறிவுஜீவிகளால் ’இயல்பான கலைப்படைப்புகள்’ என கொண்டாடப்பட்டன. இங்கும் முதிரா அறிவுஜீவிகள் அவற்றைக் கொண்டாடினார்கள். இன்று அந்தப்போக்கு மையச் சினிமாவாக ஆகியிருக்கிறது. கேரளத்தின் நலம்நாடும் ஓர் அரசு இருந்தால் இந்த சினிமாக்காரர்கள்மேல் நேரடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன். வணிகசினிமா என்பது கலையொன்றும் அல்ல. அது எந்தவகையான அறிவுப்பயிற்சியும் கலையறிமுகமும் இல்லாத மாபெரும் மக்கள் திரளை நோக்கி நேரடியாகப் பேசுகிறது. அதற்கு கலைக்குரிய சுதந்திரம் அளிக்கப்படவே கூடாது. அறிவார்ந்த எதிர்ப்பை அளிக்கமுடியாத எளிய மக்கள் திரளை அந்த கட்டின்மை சீரழித்துவிடும். இந்தக் கும்பல் சுற்றுலாத் தலங்களைச் சீரழிப்பது ஒரு பக்கம். ஆனால் அடர்காடுகளுக்குள் அத்து மீறுகிறார்கள். அதற்காக ஊடுவழிகளை எல்லாம் தேர்வு செய்கிறார்கள். எந்த சட்டத்தையும் பொருட்படுத்துவதில்லை. எந்த எச்சரிக்கைகளையும் பேணுவதில்லை. கொய்யாப்பழங்களுக்குள் மிளகாய்ப்பொடி நிறைத்து குரங்குகளுக்கு கொடுக்கிறார்கள். யானைகளை நோக்கி புட்டிகளை வீசுகிறார்கள். அடர்காடுகளுக்குள் உச்சத்தில் பாட்டுபோட்டு கூத்தாட்டம் போடுகிறார்கள். மே மாதம் மிக ஆபத்தானது. பீடி சிகரெட்டை காய்ந்த தமிழகக் காடுகளுக்குள் வீசிவிட்டுச் செல்வார்கள். பொதுவாகக் கேரளக் காடுகள் காய்வதில்லை. இங்கே அப்படி அல்ல. பல ஏக்கர்கள் எரிந்து அழியும். பல்லாயிரம் உயிர்கள் சாகும். இவர்கள் கவலையே படுவதில்லை. கேரளத்தில் உள்ள ரிசார்ட்டுகளுக்குச் செல்வதென்பது மிக ஆபத்து. பல வெளியே சொல்லமுடியாத அனுபவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நண்பர் ஒருவரின் மகளையும் மருமகனையும் தேனிலவுக்காக நானே அனுப்பினேன். அன்று இப்படி ஒரு கும்பல் வந்து செய்த அட்டூழியத்தில் இருந்து அவர்கள் தப்பி ஓடவேண்டியிருந்தது. நான் ஒரு சினிமாவுக்காகத் தங்கியிருந்த மானந்தவாடி ரிசார்ட்டில் ஒரு வட இந்திய இணையரை இக்கும்பல் தாக்கி பாலியல்பலாத்காரமே செய்ய முயன்றது. நான் அதில் தலையிட்டு எனக்குத் தெரிந்தவர்களை எல்லாம் அழைத்து காப்பாற்ற நேர்ந்தது (அங்கே மானேஜர் கூட இல்லை. இரண்டு மலையாளம்கூட தெரியாத வங்காளிப் பையன்கள் மட்டுமே) இந்தப் பொறுக்கிகளை எளியவர்களின் கொண்டாட்டம் என்று காட்டி நியாயப்படுத்துவது மட்டுமல்ல, அவர்களை உன்னதமாக்குகிறது மஞ்ஞும்மல் பாய்ஸ். அவர்களை தியாகிகள், நட்பின் இலக்கணங்கள் என்று சொல்ல முயல்கிறது. எந்த பொறுக்கிக் கும்பலுக்கும் அவர்களுக்குள் ஓர் ஒற்றுமை இருக்கும். குற்றவாளிக் கூட்டங்களுக்குள்ளேயே தியாகவுணர்வு இருக்கும். அதெல்லாம் உயர்ந்த உணர்வுகள் அல்ல. உண்மையிலேயே இப்படி நடந்து, அதில் ஒருவனுக்குத் தேசிய விருது அளிக்கப்பட்டிருப்பதாக படத்தின் இறுதியில் செய்தி காட்டப்படுகிறது. சட்டப்படிச் சிறையில் தள்ளப்பட வேண்டியவன் அவன். இந்தக் கும்பல்களைப் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்திலும் கர்நாடகத்திலும் இந்தச் சினிமா உருவாக்குமென்றால் நல்லது. இவர்களை போலீஸ் நேரடியாகவே குற்றவாளிகளாக மட்டுமே நடத்தவேண்டும். ஒருபோதும் ஒருவகையிலும் ஆதரிக்கக் கூடாது. அவ்வப்போது இவர்கள் எங்காவது சிக்கிச் சாவதுகூட நல்லதுதான். நம் காடுகள் காப்பாற்றப்படும். அது இவர்களுக்கு இயற்கை அளிக்கும் இயல்பான தண்டனை. https://www.jeyamohan.in/197808/
  21. மயிலிறகு......... 04. அப்போது கனகம் என்ன மயூரி பூவனத்தின் கல்யாண விடயங்கள் எப்படிப் போகுது என்று கேட்கிறாள். அதுதான் கனகம் நானும் யோசிக்கிறன். ஒரு வழியும் காணேல்ல. மாப்பிள்ளை பொடியன் நல்ல பிள்ளை. அவை சீர்செனத்தி என்று எதுவும் கேட்கேல்ல, அதுக்காக நாங்கள் பிள்ளையை வெறுங்கழுத்தோட அனுப்ப ஏலுமே. ஏதோ அவளுக்கு செய்யவேண்டியதை செய்துதானே அனுப்பவேணும். ஓம் அதுவும் சரிதான் மயூரி, நீ தினமும் கும்பிடுகிற அம்பாள்தான் உனக்கு ஒரு வழி காட்டுவாள். கனக்க யோசிக்காத என்று சொல்கிறாள். பின் இருவரும் நீராடி ஈரஉடுப்புகளையும் எடுத்துக் கொண்டு வருகிறார்கள். அப்ப நான் போட்டு பிறகு வாறன் மயூரி என்று சொல்லி கனகம் செல்ல அவள் பின்னால் கோமளமும் தாயுடன் போகிறாள். மயிலம்மாவும் ஒயிலாக நடந்து படியேறி வீட்டுக்குள் வர முன் அறையில் இருந்து வாமனும் சுந்துவும் போனமாதம் நடந்த ஒரு சம்பவம் பற்றிக் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுந்து வாமனிடம், எட வாமு, நாங்கள் அந்த மதகில் இருந்து கதைத்துக் கொண்டிருந்தால் அவருக்கென்ன வந்தது அவற்ர வீட்டுக்குள்ளேயே போனனாங்கள். அது இல்லடா சுந்து நாங்கள் அந்த மாங்காய்க்கு கல் எறிந்ததுதான் பிரச்சினை. திண்ணையில் ஆச்சி இருக்கிறா, இங்கால அவற்ர வைப்பு நிக்குது அதுதான். ஓ....அப்ப அவற்ர வைப்பாட்டிக்கு கெத்து காட்ட எங்களை பேசிபோட்டுப் போறார் என்கிறாய். ஓமடா .....எண்டாலும் நீ ஒண்டைக் கவனிச்சனியே அந்தப் பெண் இஞ்சாலுப் பக்கமாய் வந்து ரெண்டு மாங்காயை மதிலுக்கு மேலால் போட்டுட்டு மற்றதுகளைப் பொறுக்கிக் கொண்டு போனதை. ஓமடா....நானும் பார்த்தனான்.....எண்டாலும் நீ தடுத்திருக்கா விட்டால் அடுத்த கல்லால அவற்ர மண்டையை உடைத்திருப்பன். போடா ....உனக்கு விஷயம் தெரியாது சுந்து....நான் பகுதி நேரமாய் வேலை செய்கிற அரசு விதானையார் இருக்கிறார் எல்லோ அவரிட்ட இவர் ஒருநாள் ஒரு ஆலோசனை கேட்க வந்தவர்.அவரும் இவரோட கதைத்து அனுப்பினாப்பிறகு என்னிடம் சொன்னவர், இப்ப வந்தவர் யார் தெரியுமோ, இவர்தான் வைத்திலிங்கம். ஆனால் எல்லோருக்கும் காசை வட்டிக்கு விட்டு தொழில் செய்கிறவர்.அதால இவருக்கு "வட்டி வைத்தி"என்றுதான் சொல்லுறவை.உவங்களோட வலு கவனமாய் புழங்க வேண்டும்.கொழுவுபட்டால் "பிலாக்காய் பிசின்மாதிரி" லேசில பிரச்சினை தீராது.உவர் கொஞ்ச காலத்துக்கு முந்தித்தான் ஒரு பிள்ளையை அவளின் பெற்றோரிடம் இருந்து உங்கட வட்டிக்கும் முதலுக்குமாய் இவள் என்னோட இருக்கட்டும் என்று சொல்லி கொண்டு வந்திட்டார். அதால அவற்ர மூத்த சம்சாரமும் பிள்ளைகளும் பேச்சுப்பட்டு அடிபாடுகளுடன் இருக்க நான் போய்த்தான் அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைத்தனான். பிறகு அவளுக்கு தனியாக வீடு வளவும் குடுத்து வைத்திருக்கிறார். அது இதுவாகத்தான் இருக்கும். அவையளுக்கும் நிறைய சொத்து பத்தெல்லாம் இருந்தது எல்லாம் இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி வட்டி குடுத்து எல்லாம் பறிபோட்டுது.பத்தாதற்கு பெட்டையையும் கூட்டிக்கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்று சுந்துவுக்கு வாமு சொல்கிறான். இவர்கள் கதைப்பது தன்பாட்டுக்கு காதில் விழ பக்கத்து அறையில் மயிலம்மா ஈரப்பாவாடையை கால்வழியே கழட்டி விட்டுட்டு வேறு ஆடைகளை எடுத்து அணிந்து கொள்கிறாள்.ஒரு கனம் அங்கிருந்த நிலைக்கண்ணாடியில் தன் பிம்பம் தெரிய தன்னை மறந்து ரசித்தவள்..... ம்.....என்று ஒரு பெருமூச்சு அவளிடம் இருந்து வெளிப்படுகிறது. பொடியங்கள் கதைக்கும் "வட்டி வைத்தி" பற்றி அவளுக்கும் தெரியும்.அவரின் மனைவியுடன் மயிலம்மா நல்ல பழக்கம். அவர்களின் வயல் அறுவடைக்காலங்களில் மயிலம்மாவும் கனகமும் அங்கு சென்று வேலை செய்துவிட்டு கூலி வாங்கிக் கொண்டு வருவது வழக்கம். அவர் வைத்திருக்கும் பொடிச்சியைப் பற்றியும் அவர் மனைவி மயிலம்மாவிடம் மனம்விட்டு கதைக்கும் நேரங்களில் சொல்லி இருக்கிறா. அதுவும் வைத்தி வயல் பக்கம் வந்துட்டு விசுக்கென்று மோட்டார் சைக்கிளை திருப்பி சீறிக்கொண்டு போகும்போது ....ம் ...."சொந்தக் காணிக்குள் உழமுடியாத மாடு வெளியூருக்கு போச்சுதாம் பவிசு காட்ட " என்று ரெண்டு கையையும் விரிச்சு நெளிச்சுக் காட்டுவாள்..... என்னக்கா இப்படிச் சொல்லுறியள் என்று கேட்டால் பின்ன என்னடி, அந்தப் பொடிச்சிதான் பாவம். இது அங்க போய் மூக்கு முட்ட குடிச்சுட்டு சோத்தையும் விரலால அலைஞ்சு போட்டு அப்படியே வேட்டி போனஇடம் தெரியாமல் குப்புறப் படுத்திட்டு சாமத்தில எழும்பி வரும். இதெல்லாம் சும்மா ஊருக்கு பவிசு காட்ட வேறு ஒன்றுமில்லை என்று சொல்லுவாள். அங்கால பூவனம் இருவருக்கும் தேநீர் கொண்டுவந்து தருகிறாள். சுந்து அவளிடம் இப்ப எங்களுக்கு வேண்டாம் எடுத்துக்கொண்டு போ என்று சொல்ல அவளும் எனக்குத் தெரியும் நீங்கள் என்ன குடிக்கிறீங்கள் என்று சொல்லி நெளித்துக் கொண்டு போகிறாள். அப்போது வாமு சுந்துவிடம் டேய் , உன்ர தங்கச்சி பூவனத்தின்ர சம்பந்தம் எந்தளவில இருக்குது என்று கேட்கிறான்.... அதெடா நல்ல சம்பந்தம்தான் ஆனால் நடக்கிறது சந்தேகமாய்தான் இருக்கு......ஏனடா ......வேறை என்ன பணம்தான் பிரச்சினை. உனக்குத்தான் தெரியுமே அப்பா நல்லா சம்பாதித்தவர்தான், அம்மாவையும் வேலை செய்ய விட்டதில்லை.எங்களையும் நல்லா பார்த்துக் கொண்டவர். ஆனால் சொத்தென்று பெரிதாய் எதுவும் சேர்த்து வைக்க வில்லை.அவர் எதிர்பாராமல் இறந்து போனபடியால் எங்களிடம் மிஞ்சியது இந்த வீடும் வளவும் பின்னால் இருக்கும் வயலும்தான். இந்த நிலைமையில் அம்மா எங்களை ஆளாக்கி படிப்பிக்கிறதே பெரிய காரியம். நானும் இனி பல்கலைக்கழகத்துக்கு போகவேணும். அந்தக் கடிதத்தைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறன். அது வந்தாலும் அங்கே போறதுக்கு கூட என்ன வழியென்று தெரியவில்லை. அப்படி கடிதம் வந்தாலும் நீ யோசிக்காத சுந்து. நான் மோட்டார் சைக்கிள் வாங்கவென்று சேர்த்து வைத்திருக்கிற காசை உனக்குத் தருவன். அதுக்கில்லையடா வாமு, சிலரிடம் பணம் தானாய்ப் போய்க் குவியுது, நாங்கள் முயற்சி இருந்தும் கால்காசுக்கு கல்லில நார் உரிக்க வேண்டிக் கிடக்கு. வாழ்க்கை என்றால் அப்படித்தான் சுந்து. நாளைக்கு நீயும் பெரிய ஆளாய் வருவாய்.வறுமையும் இப்படியே நீடிக்காது.........! மயில் ஆடும்.........! 🦚
  22. மயிலிறகு........ 03. அப்போது மயிலம்மாவின் மகன் சுந்தரேசன் என்னும் சுந்துவும் அவன் நண்பன் வாமதேவனும் சைக்கிளில் வந்து இறங்குகின்றனர்.அம்மா வேலர் அப்பா இறந்துட்டாராம்.....உங்களிடம் சொல்லச் சொன்னவை என்று சுந்து சொல்கிறான். எப்படியும் இன்று பின்னேரம் எடுத்து விடுவார்கள். சரியில்லை, எதுக்கும் நாங்கள் நேரத்துக்கு போவம் என்னடி கனகம். ஓம் மயூரி, நான் போய் சீலை மாற்றிக்கொண்டு வருகிறன்.பக்கத்தில் இருக்கும் தன் வீட்டுக்கு போக கிளம்பியவளை நில்லடி நானும் உன் கூடவாறன் என்று சொல்லி விட்டு இரண்டு பொடியலையும் பார்த்து பிள்ளைகள் நான் சமைச்சு வைத்திருக்கிறன், வடிவாய் போட்டு சாப்பிடுங்கோ என்று சொல்லும் போது மயிலம்மாவின் மகள் பூவனமும் கனகத்தின் மகள் கோமளமும் தனித்தனி சைக்கிளில் வந்து இறங்குகின்றனர். அம்மா வேலர் அப்பா செத்துட்டாராம் இண்டைக்கே எடுக்கினமாம் என்று சொல்ல ....ஓம் இப்பதான் அண்ணன்மார் சொன்னவங்கள். சரி, நீங்களும் அண்ணன்மாரோட கொழுத்தாடு பிடிக்காமல் இருக்கிறதை போட்டுச் சாப்பிடுங்கோ. நாங்கள் அங்க போயிட்டு வாறம் என்று வீட்டினுள் போகிறாள். அறைக்குள்ளே கொடியில் கிடந்த பாவாடையை எடுத்து அதில் இருந்த கிழிசலை ஒருபக்கம் மறைவாக விட்டு கட்டிக்கொண்டு இருப்பதிலேயே நல்லதொரு வெள்ளைப் புடவையை எடுத்துக் கட்டிக் கொள்கிறாள். மயிலம்மா மகள் பூவனம் பெரியவளான நாள் தொட்டு தனக்கென ஒரு சீலையோ நகையோ வாங்கியதில்லை.கிடைக்கும் பணத்தில் மிச்சம் பிடித்து அவளுக்கென ஆடைகளும், நகைகளும் வாங்கி விடுவாள். மேலும் சுந்தரேசனின் படிப்புக்கும் காசு தேவையாய் இருக்கும். ஆனாலும் அவை போதாது என்று அவளுக்கும் தெரியும். அவள் வெளிக்கிட்டு வெளியே வரும்போது மயிலம்மாவிடம் ஒரு கம்பீரமும் சேர்ந்து வருகின்றது. இனி அந்த அயலைப் பொறுத்தவரை எங்கும் அவள் பேச்சு செல்லும். அனைவரும் அவளுக்கு மரியாதை குடுத்து நடந்து கொள்வார்கள். கணவன் இருக்கும்வரை அந்த ஊரில் நடக்கும் எல்லா நல்லது கெட்டதுக்கும் அவர்கள் முதன்மையானவர்களாக இருந்திருக்கிறார்கள். ஒருநாள் அவள் கணவன் லொறியால் மோதுண்டு இறந்தபின் அவள் தானாகவே சிலபல நல்ல காரியங்களில் முன்னுக்கு நிற்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்டாள். மயிலும் கனகமும் தாழ்வாரத்தில் கிடந்த "பாட்டா"வைப் போட்டுக் கொண்டுவந்து படலையைத் திறக்க வெளியே அவர்களின் பசுமாடு கன்றுடன் நிக்கிறது அவற்றை உள்ளே விட்டு சத்தமாய் பிள்ளை லெச்சுமி வருகுது கட்டையில் கட்டிப் போட்டு குண்டானுக்குள் இருக்கும் கழனிய எடுத்து வை என்று சொல்லி படலையை சாத்தி கொழுவிவிட்டு வெளியில் இறங்கி நடக்கிறார்கள்.பக்கத்தில் அம்மன் கோயில் குறுக்கிட அங்கு டேப்பில் சன்னமாய் தேவாரப்பாடல் ஒலிக்கின்றது.அங்கு வந்த மயிலம்மா ஐயரிடம் ஐயா வேலர் மோசம் போயிட்டாராம் என்று சொல்லிவிட்டு, இனி ஐயா பிணம் சுடுகாட்டில் தகனமாகும் வரை நடை திறக்க மாட்டார் என்று கனகத்திடம் சொல்லிக்கொண்டு சுவாமியைப் பார்த்து கன்னத்தில் போட்டுகொண்டு செத்த வீட்டுக்குப் போகிறார்கள். அங்கு சின்ன சின்ன சண்டை சச்சரவுகளுடன் கிருத்தியம் முடிந்து பாடை வேலியைப் பிய்த்துக் கொண்டு போக இவர்கள் இருவரும் கிளம்பி வீட்டுக்கு வருகிறார்கள்.செத்தவீட்டால் வர நாலு மணிக்கு மேலாகி விட்டது. வீட்டில் நாலு பொடியலும் வெகு மும்மரமாய் தாயம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே சத்தமும் கும்மாளமுமாய் இருக்குது.அதைப் பார்த்த கனகம் ஓமனை உந்த மும்மரத்தை படிப்பிலே காட்டினால் எங்கேயோ போயிடுவீங்கள்,இதுக்கு ஒன்றும் குறைச்சலில்லை என்று சொல்ல, விடு கனகம் அதுகளும்தான் என்ன செய்யிறது.சும்மா விளையாடட்டும் நீ வா நாங்கள் குளத்துல தோய்ஞ்சு போட்டு வருவம் என்று கனகத்தையும் கூட்டிக்கொண்டு போகிறாள். போகும்போது எட்டி அடியெடுத்து நடக்க மயிலம்மாவின் பாட்டா செருப்பு அறுந்து விடுகிறது.உடனே அவள் தடுமாறி விழ இருந்து சமாளித்துக் கொள்கிறாள்.பிள்ளைகள் சிரிக்க வாமன் எழுந்து வந்து அந்த அறுந்த செருப்பை எடுத்து யாரிடமாவது ஒரு ஊசி இருந்தால் தாங்கோ என்று கேட்க மயிலம்மாவே தனது சட்டையில் குத்தியிருந்த ஊசியை கழட்டி அவனிடம் தருகிறாள். வாமனும் அதைக்கொண்டு செருப்பை சரிசெய்து அவளிடம் தர அவளும் போட்டுகொண்டு கனகத்தின் பின்னால் போகிறாள். குளத்தில் இருவரும் ஆடைகளைக் களைந்து அலம்பிக் கரையில் வைத்து விட்டு நன்றாக முங்கி நீந்தித் தோய்கிறார்கள்........! மயில் ஆடும்....... 🦚
  23. மயிலிறகு.........02. இந்தப் பக்கம் அடுப்பின் மேல் புகட்டில் குளத்தில் பிடித்த பெரிய பெரிய யப்பான் மீன்கள் கீறி உப்பில் போட்டுப் பிரட்டி எடுத்து பனைநாரில் கோர்த்து தொங்குது. அங்கால வாழைத்தார் ஒன்றும் கயிற்றில் தொங்குது. அதி ஒரு எலி இடைப்பழம் ஒன்றை கொறித்து சுவைத்துக்கொண்டிருக்கு. அப்போது எவ்வித அசுமாத்தமும் இன்று ஒரு சாரைப் பாம்பு அந்த எலியைப் பார்த்துக் கொண்டு மெதுவாக நகருது. அதைக் கண்ட கனகம் அம்மாடி பாம்பு என்று கத்திக் கொண்டு மயிலம்மா அருகில் எட்டி அடியெடுத்து வருகிறாள். அந்த சலசலப்பு கேட்டு எலியும் திரும்பி பாம்பைப் பார்த்து வாழைத்தாரில் இருந்து எதிர் வளைக்குத் தாவ சடாரென பாம்பும் இரண்டு முழ நீளத்துக்கு தனது உடலை வீசி அந்தரத்தில் வைத்தே லபக்கென்று எலியைக் கவ்விப் பிடித்து சரசரவென பனைமட்டையில் சறுக்கி சுவரில் ஊர்ந்து குசினி மூளைக்குள் சுருண்டு கொள்கிறது. இவ்வளவும் ஒரு கனப் பொழுதுக்குள் நடந்து முடிகின்றது. காணக்கிடைக்காத காலமெல்லாம் மறக்க முடியாத ஒரு காட்சி அதுபாட்டுக்கு இயல்பாக நடந்து முடிந்தது. கனகம் ஒரு எட்டில் கதவால் பாய்ந்து முத்தத்துக்கு வர மயிலம்மா கேத்திலுக்குள் கொஞ்சம் தேயிலையும் போட்டு பனங்கருப்பட்டியையும் எடுத்துக் கொண்டு பதட்டமில்லாமல் வெளியே வருகிறாள். என்ன மயூரி மெதுவாக வருகிறாய், பாம்பு பாய்ந்து புடுங்கினால் அப்ப தெரியும் உனக்கு. பதறாத கனகம். அது குட்டியாய் இருந்து இங்கினதான் தெரியுது. முன்பு ஒருநாள் அதை உடும்போ பிராந்தோ கடித்து குற்றுயிரும் குலையுயிருமாய் இந்தத் தாழ்வாரத்தில் வந்து கிடந்தது நாய் குரைக்குது, பூனை சீறுது அப்போது நானும் வாமனும் ஓடிவந்து பார்த்தால் இது சுருண்டு கிடக்குது. எனக்கு அதை அடித்துக் கொல்ல மனம்வரவில்லை. வாமன் அதுக்கு ஒரு சிரட்டையில் பால் ஊத்தி வைக்க குடிச்சுது. பிறகு அதை ஒரு பெட்டியில் போட்டு நான் கொஞ்சம் சாம்பலும் மஞ்சலும் கலந்து கொட்டி விட்டன். சில நாட்களாக அதுக்கு வாமனும் நானும் தினம் ஒரு மீனும் ஒரு முட்டையும் குடுத்து வர அதுவும் தேறி வந்திட்டுது.என்ர மகன் சுந்து அதுக்கு கிட்டவும் வரமாட்டான் அவ்வளவு பயம்.பூவனம் அதைத் தொடமாட்டாள் ஆனால் பயமும் இல்லை.அது அவள் அருகாகப் போய் வரும்.எங்கட நாயும் பூனையும் கூட அதோடு சேட்டைகள் செய்வதில்லை. வாமு கண்டான் என்றால் அதோடு தூக்கி விளையாடாமல் போகமாட்டான். இந்தக் கூத்து எப்ப நடந்தது.எனக்குத் தெரியாதே. அது நீ கலியாணம் கட்டி புகுந்தவீடு போன நாட்களில் நடந்தது.. இப்ப நீ இங்கு வந்து ஒரு வருசம் இருக்குமா .....ம்.....இருக்கும். காலம் போற போக்கு....என்று சொன்ன கனகம் உனக்கு இரவில பயமில்லையா .....இல்லை. அது இரவில் வீடுகளில் தங்காது. மேலும் அதுக்கு இங்கு புழங்கும் ஆட்களையும் மிருகங்களையும் நன்றாதத தெரியும். நீ இந்த தேத்தண்ணியைக் குடி என்று குடுக்கிறாள். இவர்கள் கதைத்துக் கொண்டு தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் போது பாம்பும் குசினிக்குள் இருந்து வெளியேறி பின்னால் காட்டுக்குள் உள்ள புற்றுக்குப் போகிறது.........! மயில் ஆடும்........! 🦚
  24. Play video, "மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது?", கால அளவு 4,28 04:28 காணொளிக் குறிப்பு, மஞ்சும்மல் பாய்ஸ்: கொடைக்கானல் குணா குகை சம்பவத்தை தழுவிய படம் எப்படி உள்ளது? 28 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 29 பிப்ரவரி 2024 மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. பிரமயுகம், பிரேமலு வரிசையில் பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற இந்த திரைப்படம் குறித்து ஊடகங்கள் என்ன சொல்கின்றன? கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சும்மல் எனும் சிறிய ஊரில் இருந்து 11 நண்பர்கள் தமிழ்நாட்டிலுள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். குணா படத்தின் மூலம் பிரபலமான குணா குகையை சுற்றிப்பார்க்க சென்றபோது 11 பேரில் ஒருவர் அந்தக்குகையில் இருந்த பள்ளத்தாக்கு ஒன்றில் விழுந்துவிட அவருக்கு என்ன ஆனது? நண்பர்களால் காப்பாற்றப்பட்டாரா? என்பதுதான் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தின் கதை. 2006-ம் ஆண்டு கொடைக்கானலில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM இந்தியா டுடே விமர்சனம் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் நட்பு, உயிர் வாழ்வதற்கான வேட்கை, வாழ்க்கையின் மீதான நம்பிக்கை போன்ற பல்வேறு விஷயங்களை குறித்து பேசுவதாக இந்தியா டுடே தனது திரை விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. மலையாள இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாஸி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கமல்ஹாசனின் குணா படத்தில் இளையராஜா இசையில் வரும் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலில் 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக்காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது' எனும் வரியோடு தொடங்குகிறது. க்ளைமேக்சில் மீண்டும் ஒருமுறை வரும் இந்த பாடல் வரி இது வரை காதல் குறித்து பாடுவதாகவே பார்க்கப்பட்டது. ஆனால், மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் இந்த வரி பயன்படுத்தப்பட்ட விதம் படத்தில் வரும் 11 நண்பர்களுக்கு இடையேயுள்ள நட்பை கூறும் விதமாக இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. இந்த ஒட்டுமொத்த கதையும் மனித உணர்வுகளை பற்றி ஆழமாக பேசுவதாக இந்தியா டுடே கூறுகிறது. பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM படத்தின் ஆரம்பத்திலேய ஸ்ரீநாத் பாஸி பள்ளத்தில் விழும் காட்சி காட்டப்பட்டு அதற்கு அவரது நண்பர்கள் கொடுக்கும் ரியாக்ஷனோடு படத்தின் தலைப்பு போடப்படுவதில் இருந்தே, பார்வையாளர்களை படத்திற்குள் இயக்குநர் இழுத்து வந்துவிடுவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் திரைபடத்தின் கதை 2006ல் நடப்பதாக இருப்பதால், அந்த காலகட்டத்தை இயக்குனர் உறுத்தல் இல்லாமல் இயல்பாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தி இருப்பதாக கூறும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம், படம் வேகம் எடுக்கும் இடமே 11 நண்பர்களும் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்ல்லும்போதுதான். அப்போது கலகலப்பாக இருக்கும் திரைப்படம், நண்பர்கள் குணா குகைக்கு சென்றவுடன் த்ரில்லிங்காக மாறுவதாக குறிப்பிட்டுள்ளது நண்பர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன சண்டைகள் முதல் ஒரு உயிரை காப்பாற்ற போராடுவது வரை படம் முழுவதும் மனித உணர்வுகளின் இரண்டு எல்லைகளையும் இயக்குனர் சிதம்பரம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருப்பதாக இந்தியா டுடே புகழாரம் சூட்டியுள்ளது. மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனைவராலும் பொதுவாக பாராட்டப்படும் ஒரு அம்சம் நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு. தனது நண்பர் ஒருவர் பெரும் பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டதும் அவரை உயிருடன் மீட்க வேண்டும் எனும் சூழலில் அனைத்து நடிகர்களிடமும் வெளிப்படும் நடிப்பு அபாரமாக இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,INSTA/CHIDAMBARAM 'கூஸ்பம்ப்ஸ்' தரும் இளையராஜா நடிப்பை தாண்டி படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது படத்தின் இயக்குனர் சிதம்பரத்தின் திரைக்கதை, சுஷின் ஷ்யாமின் இசை மற்றும் ஷைஜு காலித்தின் ஒளிப்பதிவு என இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது. படத்தில் ஒரெயொரு குறை இருப்பதாக சுட்டிகாட்டும் டைம்ஸ் ஆஃப் இந்தியா, பள்ளத்தில் விழுந்த ஸ்ரீநாத் பாஸியை காப்பாற்ற முயலும் காட்சி குறைந்த நேரமே வருவதால் அது படத்தோடு ஒட்டவில்லை என விமர்சித்துள்ளது மலையாளத்தில் இந்த வருடம் தொடங்கி இரண்டு மாதத்திற்குள் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களான பிரம்மயுகம், பிரேமலு ஆகிய படங்களின் வரிசையில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படமும் தனக்கான இடத்தை பிடித்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது. பார்வையாளர்களால் கணிக்க கூடிய வகையில் படத்தின் முடிவு இருந்தாலும், எங்கேயும் விறுவிறுப்பு குறையாமல் பார்வையாளர்களை படத்திற்குள் கட்டிப்போட்டதுதான் படத்தின் வெற்றி என தி இந்து ஆங்கில நாளிதழ் பாராட்டியுள்ளது. தமிழில் சந்தானபாரதி இயக்கத்தில் கமல் நடித்த குணா திரைப்படக் குழுவினருக்கு நன்றி என்ற கார்டு உடன் தான் இந்தப்படமே தொடங்குகிறது என இந்து தமிழ் திசை தமது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது. கண்மணி அன்போடு காதலன் பாடல்தான் டைட்டில் கார்டில் வருகிறது. படத்தின் முக்கியமான ஒரு இடத்தில் இந்தப் பாட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதி வரும், அது படம் பார்க்கும் அனைவருக்கும் கூஸ்பம்ப்ஸைத் தருகிறது என இந்து தமிழ் திசை கூறியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cd1wezzrd5jo
  25. ரசோதரன் சொல்வதும், வியாழேந்திரன் கூறுவதும் வேறு வேறான விடயங்கள் என நினைக்கிறேன். பரீட்சைப் பெறு பேறுகள் இலங்கையில் தவிர்க்க முடியாத கல்வி அளவீட்டுக் கருவிகள், எனவே அவை இலங்கையில் கல்வி பற்றிப் பேசப்படும் இடங்களில் பேசப்படுவது முக்கியம். ஆனால், கல்வியை (அது முறை சார் கல்வியோ, முறைசாரா கல்வியோ) நோக்கிய மனப்பாங்கு (attitude) என்பது இன்னொரு விடயம். இந்த மனப்பாங்கு, கலாச்சாரத்தின் பால் பட்ட ஒன்று. உதாரணமாக, முறைசார் கல்விக்கு அமெரிக்காவில் தென்னாசியர்களும், கிழக்காசியர்களும் கொடுக்கும் முக்கியத்துவத்தை, கறுப்பின மக்கள், ஸ்பானியர்கள் கொடுப்பது குறைவு என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெள்ளையின மக்கள், பெரும்பாலும் பண வருவாய் நோக்கியவாறு கல்வியைப் பார்க்கின்றனர் - இதுவும் "learning for the sake of learning" என்ற ஆசிய மனப்பாங்கில் இருந்து வித்தியாசமானது. தற்போது, எங்கள் தென்னாசிய குடியேறிகள் மத்தியிலும் "பணம் சம்பாதிக்க மட்டும் கல்வி" என்ற போக்கு வளர்வதைக் காண்கிறேன், இது நல்லதா கூடாதா என்று முடிவு செய்ய இயலாமல் இருக்கிறேன் இது வரை. இலங்கையைப் பொறுத்த வரையில், தமிழர்களின் முறை சார் கல்வி நோக்கிய மனப்பாங்கு சிங்களவர்களை விட வித்தியாசம் தான். எப்படியாவது மேலே வந்து விட வேண்டும் என்று யோசிக்கும், ஏற்கனவே அடக்கப் பட்ட ஒரு இனம் என்ற வகையில், முறை சார் கல்வி ஈழத்தமிழர்களுக்கு தடைகள் குறைந்த ஒரு பாதை என நினைக்கிறேன். அதைப் பயன்படுத்தி முன்னேற வேண்டுமென வியாழேந்திரன் சொல்வது முற்றிலும் சரியான ஒரு கருத்து!
  26. வடகிழக்கு கடல் ஆழம் குறைந்த பகுதி ஆக இருப்பதால் சூரிய ஒளிவெப்பம் இலகுவில் ஊடுருவி மீன்கள் பாரிய அளவில் இனம் பெருக வழிவகுக்கின்றது . இந்த இயற்கை தந்த பாரிய கொடையை அத்து மீறலாக வந்து அள்ளிசெல்வதை என்ன பெயர் கொண்டு அழைப்பது? முடிந்தால் அதிரம் பட்டணம் பக்கம் போய் இந்த இலுவைபடகின் மூலம் மீன் பிடிக்கட்டும் பார்கலாம் நல்ல செத்தல் மிளகாய் அரைத்து பூசி அனுப்பி விடுவார்கள் கேரளா பக்கம் இவர்கள் படகை கண்டாலே காணும் நேரே சிறைதான் ஏன் அதே இலுவைபடகுகளை தமிழ்நாட்டு கடலுக்குள் ஒட்டி மீன்பிடிக்கட்டும் பார்கலாம் சிறு வலை மீன்பிடி ஆட்கள் பட்டா கத்தி கம்பு பொல்லுடன் கலவரமே நடக்கும் . இங்கு ஐரோப்பிய நாடுகளில் சிறிய குஞ்சு மீன்கள் உடன் மீன்பிடி படகுகள் கரை திரும்பினால் தண்டனை பணம் அறவிடும் நடைமுறை உண்டு . கிழே உள்ள கானொளியில் தமிழருக்கு உரித்தான வடகிழக்கு மீன் வளத்தை இழுவை படகு மீனவர்களால் எப்படி சிதைகிறார்கள் என்று பாருங்கள் போரில் கூட சிறுவர்களை விட்டு விடுவார்கள் இந்த இழுவை படகின் வலையின் மூலம் கடலின் கருவறையையே அழித்து தள்ளுகிறார்கள் . இந்த யுடுப்பர் வியாதியால் தங்களுக்கு தாங்களே போட்டி போட்டு வடகிழக்கு கடல் மீன்வள கொள்ளையை ஒப்புதல் வாக்கு மூலம் கொடுகிறார்கள் நேரமுள்ளவர்கள் இன்னும் தேடி பார்க்கலாம் .
  27. நன்றிகள் பல. . தொடர்ந்தும் எழுதுங்கள் வாசிக்கின்றேன் 🙏
  28. பல்கலைக்கழக முதல் வருடத்தில் இப்படித் தான் நான் நினைத்திருந்தேன். முதல் வருடமும் அப்படியே அமைந்தது. தமிழ் மாணவர்கள், முக்கியமாக யாழ் மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள், பரீட்சைகளில் கோலோச்சினர். பின்னர், மற்றவர்களும் பாடங்களை விளங்கி, ஒழுங்காக படிக்க ஆரம்பித்தனர். நாங்கள் பழகவும் ஆரம்பித்தோம். எவரும் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று அடுத்தடுத்த வருடங்களில் தெரிய வந்தது. வெவ்வேறு சமூகத்திலிருந்து வந்தவர்களும் மிக நன்றாக செய்தனர். நுவரெலியாவில் இருந்து அடிப்படைப் புள்ளிகளுடன் வந்த ஒரு பெரும்பான்மை இன மாணவன் முதலாவதாக வந்த நிகழ்வும் நடந்தது. எங்களுக்கு கல்வி சிறப்பாக வரும், மற்றவர்களுக்கு வராது என்று சொல்வது மிகப் பழைய ஒரு காலம்.
  29. உண்மையில் இந்திய ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தம் நாட்டின் கடற்கொள்ளையர்களுக்கு புனர்வாழ்வு அளித்து கொள்ளையை விடுத்து வேறு தொழில்வாய்ப்புக்களை வழங்கவேண்டும்!
  30. நீண்ட நாட்களின் முன்னர் ஒரு மரதன் வீரர் தாங்கள் ஒரு போதும் முழுத் தூரத்தையும் பயிற்சியில் ஓடுவதில்லை என்று சொல்லியிருந்ததாக ஒரு ஞாபகம். நான் இங்கு இருக்கும் இடம் வருடத்தில் பல மாதங்கள் வெக்கையானது. பல வருடங்கள் சிறிவர்களுக்கு கால்பந்தாட்ட பயிற்சியாளராக இருந்துள்ளேன். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு தடவை பிள்ளைகளுக்கு சிறிய இடைவேளைகள் விட்டு, அவர்கள் ஏதாவது நீராகாரம் எடுக்கின்றார்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு அறிவுறுத்தல்கள் கொடுத்திருந்தனர். வெப்பநிலை ஒரு அளவிற்கு மேல் போனால், அந்த அளவு மறந்து விட்டது, பயிற்சியை அத்துடன் முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லியிருந்தனர்.
  31. இதற்கிடையில் ....யாழில் விமானப்படை கண்காட்சியைஉம் நடத்துகின்றார்கள்..
  32. வணக்கம் வாத்தியார்.........! ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வலது கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பல்லி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே......! --- கூண்டுக்குள்ள என்ன வெச்சு ---
  33. அண்ணை, அந்த கொடுப்பினையும் எல்லாருக்கும் வாய்க்காது
  34. முதலாவது நேர்காணல் இந்தியாவின் முன்னணிச் சஞ்சிகையான ச‌ண்டே, தனது பங்குனி 11 முதல் 17 வரையான இதழில் பிரபாகரனின் முதலாவது பேட்டியை வெளியிட்டதன் மூலம் இலங்கையிலும், இந்தியாவிலும் பலரது கவனத்தையும் ஈர்ந்தது. அதன் முன் அட்டையில் அகன்ற விழிகளுடன், சற்று பருமனான முகம் கொண்ட பிரபாகரன் இராணுவச் சீருடையில், அருகே துப்பாக்கியும் ஒலிநாடாக் கருவியும் இருக்க, மேசையொன்றின் பின்னால் அமர்ந்திருக்கும் வர்ணப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அட்டைப்படத்தில், நேர்காணலின் போது பிரபாகரன் கூறிய வசனமான , "ஜெயவர்த்தன ஒரு உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் தூக்கவேண்டிய தேவை வந்திருக்காது" என்றும் எழுதப்பட்டிருந்தது. பிரபாகரன், அநிதா பிரதாப்புடனான நேர்காணலின் போது ‍ 1984 இந்த நேர்காண‌லின்போது இந்தியாவின் கொள்கைகள், இக்கொள்கைகளை முன்னெடுப்பதில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஆற்றும் பங்கு, தனிநாடான ஈழத்திற்காக புலிகள் கொண்டிருக்கும் பற்றுறுதி ஆகியன பற்றி பிரபாகரன் வெளியிட்ட கருத்துக்கள் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. இது மட்டுமல்லாமல், இந்த நேர்காணல் இலங்கையிலும் கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை இராணுவமும், பொலீஸாரும் பிரபாகரனின் தற்போதைய உருவ அமைப்பினை புகைப்படமாகக் கண்டது இந்த அட்டைப்படத்தில்த்தான். அதுவரை காலமும் அவர்கள் பிரபாகரனின் சிறுவயதுப் படம் ஒன்றை வைத்துக்கொண்டே இலங்கையில் மிகவும் வேண்டப்பட்டவரான அவரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இப்புகைப்படம் வெளிவந்தவுடன், அதனைப் பல பிரதிகள் எடுத்து நாடெங்கிலும் உள்ள பொலீஸ் நிலையங்களுக்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள். கல்கத்தாவைத் தளமாகக் கொண்டு வெளிவரும் சண்டே மற்றும் டெலிகிராப் ஆகிய பத்திரிக்கைகளின் நிருபராக, கேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த மலையாளியான 25 வயது நிரம்பிய அனீட்டா பிரதாப்பே இந்த நேர்காணலினை செய்தவர். கல்கத்தாவில் தனது பள்ளிப்படிப்பினை நிறைவுசெய்து, தில்லியில் பட்டப்படிப்பினை முடித்து பின்னர் தமிழ்நாடு வந்து அங்கிருந்து இலங்கை தொடர்பான விடயங்களையும், இனப்பிரச்சினை தொடர்பான தகவல்களையும் அவர் வழங்கிவந்தார். 1981 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து அதீத அக்கறை காண்பித்து வந்த அனீட்டா, சென்னையில் அமைந்திருந்த பல தமிழ்ப் போராளி அமைப்புக்களினதும் அலுவலகங்களுக்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். பிரபாகரனைத் தவிர ஏனைய தமிழப் போராளி அமைப்புக்களினதும் தலைவர்களை அவர் ஏற்கனவே பேட்டி கண்டிருந்தார். புலிகளின் தலைவரைப் பேட்டி காண்பதற்கு தான் பலமுறை முயன்றபோதும்கூட, இவ்வாறான பேட்டிகளில் தலைவருக்கு நம்பிக்கையில்லை என்பதனால் அவர் இதற்கு உடன்படப்போவதில்லை என்று புலிகளின் அரசியல்த்துறை தன்னிடம் கூறிவந்ததையும் அவர் ஒத்துக்கொள்கிறார். "பேட்டிகள் கொடுப்பதைக் காட்டிலும், செயலில் ஈடுபடுவதன்மூலமே மக்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்று அவர் நம்புகிறார்" என்று அனீட்டாவிடம் புலிகள் கூறியிருக்கிறார்கள். தனது போராளிகளுடன் பேசும்போது, "எமக்குப் பிரச்சாரம் தேவையில்லை, எமது தாக்குதல்களே எமக்கான பிரச்சாரத்தைச் செய்கின்றன" என்று பிரபாகரன் அடிக்கடி கூறியிருக்கிறார். செவ்விகாண்பதில் சிறந்தவரான அனீட்டா, பிரபாகரனைப் பேட்டி காண வேண்டும் என்று பாலசிங்கத்தையும், புலிகளின் அரசியல்த்துறையைச் சேர்ந்தவர்களையும் 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தொடர்ச்சியாக கேட்டுவந்ததனால், இவர்குறித்து புலிகள் நன்கு அறிந்து வைத்திருந்தனர். இரத்தத் தீவு என்று தான் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனைத் தனித்துவமான மனிதராக அவர் சித்திரித்திருக்கிறார். அனீட்டா பிரதாப் இலங்கைக்கு இருமுறை பயணம் செய்திருக்கிறார். தனது கணவருடன் 1983 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் பின்னர் ஆடி இனக்கொலை நடந்தபின்னர் அதனைப் பதிவுசெய்யவும் அங்கு சென்றிருக்கிறார். மாசி மாத பயணத்தின்போது இலங்கை ஜனாதிபதியான ஜெயாரை அவர் பேட்டி கண்டார். "தன்னைப் பேட்டி காண நான் கேட்டுக்கொண்டபோது ஜனாதிபதி ஜயவர்த்தன இணங்குவார் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை" என்று அவர் கூறுகிறார். "நான் ஒரு அனுபவம் குறைந்த, இளவயதுப் பெண், ஆகவே அவர் நேர்காணலுக்கு இணங்கியபோது உண்மையாகவே நான் அதிர்ச்சியடைந்தேன்" என்று 2001 இல் தனது புத்தகத்தை வெளியிட அவர் கொழும்பு வந்திருந்தபோது கூறினார். தகவல்த் தொடர்ப்பாற்றலின் இயக்குநரான மானல் அபெயரட்ண என்னிடம் பேசும்போது, இந்திய மக்களுக்கு, இந்திய ஊடகம் ஒன்றின் ஊடாகவே தனது செய்தியைச் சொல்வதற்கு அனீட்டாவின் நேர்காணலினைப் பயன்படுத்த ஜெயவர்த்தன விரும்பியதாக கூறினார். யாழ்ப்பாணத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து உடனடியாக இந்திய மக்களுக்கு அறிவிக்கவேண்டிய தேவை அவருக்கு இருந்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருந்த மதகுருக்களையும், தொழில்சார் நிபுணர்களையும் உடனடியாக விடுதலை செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், மதகுருமார், தொழிலாளிகள், சாதாரண பொதுமக்கள் என்று பாரிய சனக்கூட்டம் ஒன்று தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தது. மாணவர்களும், அரசியற்கட்சி தலைவர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு போராடி வந்த அதேவேளை, ஆயுத அமைப்புக்கள் பொலீஸார் மீதும், இராணுவத்தினர் மீதும் தாக்குதல்களை முடுக்கிவிட்டிருந்தனர். இந்நாட்களிலேயே பொலீஸ் அதிகாரியான விஜயவர்த்தனவும், அவரது பொலீஸ் சாரதியும் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். ஆகவே, இவ்வாறான போராட்டங்களுக்கெதிராக தான் எடுத்திருக்கும் கடுமையான நிலைப்பாட்டினை சர்வதேசத்திற்கும், இந்தியாவுக்கும் நியாயப்படுத்த வேண்டிய தேவை ஜெயவர்த்தனவுக்கு இருந்தது. தனது நேர்காணலுக்கான வரவேற்பின்பொழுது ஜெயவர்த்தன் கைகளைக் கட்டியபடி வரவேற்ற விதமும், அவ்வரவேற்பினை தகவற்தொடர்பாற்றல் பிரிவு புகைப்படம் எடுத்துக்கொண்ட விதமும் அனீட்டாவை ஆச்சரியப்பட வைத்திருந்தன. இந்த நேர்காணலுக்கான பிரச்சாரத்தை வர்ணப் புகைப்படங்களுடன், தலைப்புச் செய்தியாக வெளியிட வேண்டும் என்று லேக் ஹவுஸ் பத்திரிக்கைகள் அரசால் பணிக்கப்பட்டன. டெயிலி நியூஸ் தனது முதலாவது பக்கத்தில் பேட்டியினையும், இரண்டாவது பக்கத்தில் புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தது. இப்புகைப்படங்களில் ஒன்றினை தகவற் தொடர்பாடல் அமைப்பிடமிருந்து பெற்றுக்கொண்ட அனீட்டா, ஆடியில் இனக்கொலையினைப் பதிவுசெய்ய மீண்டும் இலங்கை வந்தபோது தனது பையில் அதனையும் கொண்டுவந்திருந்தார். ஆடி இனக்கொலையினை அனீட்டா பிரசுரித்த விதம் பிரபாகரனைக் கவர்ந்திருந்தது. அதனாலேயே அனீட்டா கேட்டுக்கொண்டபோது நேர்காணலுக்கு அவர் ஒத்துக்கொண்டார். 1983 ஆம் ஆண்டு இனக்கொலையினை அவர் பதிவுசெய்த விதமும், துணிவுடன் அவர் வெளியிட்ட செய்திகளும் தன்னைக் கவர்ந்திருந்ததாக அனீட்டாவிடம் நேர்காணலின்பொழுது பிரபாகரன் தெரிவித்திருந்தார். அனீட்டவுடன் பிரபாகரன் பேசும்போது, "நாம் கெரில்லாப் போராளிகள், நாம் தெரிவுசெய்திருக்கும் பாதை மிகவும் ஆபத்தானது. ஆகவே, கடிணமான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுப்பதென்பது எங்களைப் பொறுத்தவரை இயல்பானது. ஆனால், செய்தியாளரான நீங்கள் ஆபத்தான விடயங்களில் இறங்கவேண்டிய தேவையில்லை. ஆனால், உண்மையினை வெளிக்கொண்டுவருவதற்காக போர்நடக்கும் தேசத்திற்குள் வந்து எம் மக்களின் அவலங்களைச் செய்தியாக்கியிருக்கிறீர்கள். உங்கள் மூலம் தமிழர்களின் அவலங்கள் சர்வதேச மயப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதற்காக தமிழர்கள் என்றென்றைக்கும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார். தனது சொந்த விருப்பின் பேரிலேயே ஆடி இனக்கொலை தொடர்பாக செய்தி சேகரிக்க இலங்கை வர எண்ணினார் அனீட்டா. அதற்காக டெலிகிராப் ஆசிரியரான அக்பரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு அனுமதிகோரியபோது, தயக்கத்துடனேயே அவரும் அனுமதியளித்தார். மிகக் கொடூரமான இனக்கலவரம் ஒன்றினைச் செய்தியாக்குவதற்காக இளவயதுப் பெண் ஒருவரை அனுப்புவதென்பது அக்பரைப் பொறுத்தவரையில் கடிணமான செயலாக இருந்தது. இனக்கொலை ஆரம்பித்து நான்காம் நாளான ஆடி 28 ஆம் திகதி அனீட்டா கட்டுநாயக்கவில் வந்திறங்கினார். அன்றிரவு அவர் வந்திறங்கியபோது நகரில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததுடன், அவர் தங்குவதற்கான விடுதியும் ஒழுங்குசெய்யப்பட்டிருக்கவில்லை. அவருடன் விமானத்தில் கூடவே பயணம் செய்த பி.பி.சி யின் மாக் டல்லி அவருக்கு விடுதி ஒன்றினை ஒழுங்குசெய்ய உதவினார். கோல்பேஸ் ஹோட்டலில் அவருக்கு தங்க வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மறுநாளான வெள்ளிக்கிழமை, புலிகள் கொழும்பு நகருக்குள் வந்துவிட்டார்கள் என்கிற வதந்தி பரவவே நகர் அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்தது. ஊரடங்கு உத்தரவின்போது செய்தி சேகரிக்கும் அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்காக அவர் தான் தங்கியிருந்த கோல்பேஸ் ஹோட்டலில் இருந்து கொள்ளுப்பிட்டியில் அமைந்திருக்கும் பொலீஸ் நிலையத்திற்கு நடந்தே சென்றார். ஊரடங்கு நேரத்தில் பயணிக்கும் அனுமதியைப் பெற்று, தனது கைப்பையில் பத்திரமாக மடித்து வைத்துக்கொண்ட அனீட்டா, உண்மையைத் தேடி ஆபத்தான பயணத்தினை ஆரம்பித்தார். அக்பர் அஞ்சியது போல, அவரது பயணம் சுமூகமானதாக இருக்கவில்லை. ஒவ்வொரு வீதியாகச் சென்று அங்கு இடம்பெற்றிருக்கும் அழிவுகளை ஒளிப்படங்களாகவும், குறிப்புக்களாகவும் பதிவுசெய்யத் தொடங்கினார். எரிந்துபோய், எலும்புக்கூடுகளாகக் காட்சியளித்த தமிழருக்குச் சொந்தமான கடைத் தொகுதிகள், வீதிகளில் கவிழ்த்து எரிக்கப்பட்ட தமிழர் பயணித்த வாகனங்கள், மனித ஆரவாரம் இன்றி வெறிச்சோடிப் போயிருந்த நகர வீதிகள், வீதியெங்கும் பரவிக் கிடந்த தளபாடங்களும், ஏனைய கண்ணாடிப் பொருட்களும், ஆங்காங்கே இன்னமும் கட்டிடங்களிலிருந்து மேலெழுந்துகொண்டிருந்த கரிய புகை, வீதிகளில் பெருகத்தொடங்கியிருந்த குப்பை கூழங்கள் என்று எல்லாமே செயலிழந்துபோன தேசத்தை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஒரு கட்டத்தில் துப்பாக்கிகளை ஏந்திப்பிடித்துக்கொண்டு அவரை நோக்கி ஓடிவந்த இரு பொலீஸார் அவரது ஒளிப்படக்கருவியைப் பறித்துக்கொண்டதோடு, பொலீஸ் நிலையம் நோக்கி இழுத்துச் செல்லத் தொடங்கினர். தான் கட்டிடக் கலை பயிலும் மாணவி என்றும், கட்டடங்களைப் படமெடுக்கவே அங்கு வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் பொலீஸ்காரர்கள் அவரை நம்பத் தயாராக இருக்கவில்லை. ஆகவே, அவரது கைப்பையைப் பறித்துச் சோதனையிட‌த் தொடங்கினார்கள். உள்ளே அவ்வருட மாசி மாதத்தில் ஜெயவர்த்தனவுடன் அனீட்டா எடுத்துக்கொண்ட புகைப்படம் கண்ணில்ப் படவே, அவரது ஒளிப்படக் கருவியை அவரிடமே கொடுத்துவிட்டு, உள்ளிருந்த ஒளிப்படச் சுருளினை வெளியே எடுத்து, "இங்கே ஒளிப்படம் எதனையும் எடுக்காதே" என்று எச்சரித்து அனுப்பினர். தான் கொழும்பில் இருந்த நாட்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், குறிப்புக்களையும் நட்டைவிட்டு வெளியே கொண்டுவருவதும் சவாலாக இருக்கப்போகிறது என்பதை அனுமானித்த அவர், குறிப்புக்களை மடித்து தனது காலணிக்குள் மறைத்துக்கொண்டதோடு, புகைப்படச் சுருட்களை இன்னொரு இந்தியப் பயணியிடமும் கொடுக்கவேண்டியதாயிற்று.
  35. தொல்பொருள் திணைக்களம் மண்ணை தோண்டுகின்றோம் என்று பிரச்சனைகளை தோண்டுகின்றது. இலங்கை தொல்பொருள் திணைக்களத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் இனங்களுக்கு இடையில் உள்ள நல்லிணக்கத்தை ஓரளவுக்காவது பேணலாமோ? போலிசார் வெளிவிட்ட அறிக்கையின் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஒருவரே கிடுங்குப்பிடியாக நின்று சிவராத்திரி நிகழ்வு குழப்பம் அடைவதற்கு காரணகர்த்தா என தோன்றுகின்றது.
  36. பாலஸ்தீன முஸ்லிம்கள் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட செய்தி கேட்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆரவரிக்கும் போது. தனக்கு வந்தால் அரத்தம், அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியோ.... முஸ்லிம் முஸ்லிம் தான்!
  37. மயிலம்மாவும் தனிமையிலேதான் இருக்கிறா, அஞ்சலையும் அதேதான். மயில்மட்டுமா ஆடுதா?
  38. பிரபாகரனுக்கும் எம்.ஜி.ஆர் இற்கும் இடையிலான நட்பு அந்தவாரமே பிரபாகரன் எம்.ஜி.ஆரை ஐச் சென்று சந்தித்தார். பாலசிங்கமும் பிரபாகரனுடன் கூடவே சென்றிருந்தார். பிரபாகரனை மிகுந்த அன்புடன் எம்.ஜி.ஆர் வரவேற்றார். அவர்கள் இருவருக்கும் இடையிலான நட்பு அப்போதே ஆரம்பித்து விட்டது. தனது சொந்தத் தம்பி போன்றே பிரபாகரனை எம்.ஜி.ஆர் நடத்தினார். அவரை வாஞ்சையுடன் "தம்பி" என்று அவர் அழைக்க ஆரம்பித்தார். பிரபாகரனுடன் பேசும்பொழுது அவரது பெற்றோர், சகோதரர்கள், அவரது இளம்பிராயம், அவரது கனவுகள், இலட்சியம் ஆகியனபற்றி ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார் எம்.ஜி.ஆர். இளைஞனாக தனது கெரில்லா வாழ்வினை தான் ஆரம்பித்த நாட்கள் குறித்து பிரபாகரன் பேசும்பொழுது எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போனார். இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக நடத்திவரும் அட்டூழியங்கள் குறித்து பிரபாகரன் பேசும்பொழுது எம்.ஜி.ஆர் மிகுந்த வருத்தத்துடன் காணப்பட்டார். அச்சந்திப்பு எம்.ஜி.ஆர் இன் வாக்குறுதி ஒன்றுடன் அன்று முடிவிற்கு வந்தது, "தம்பி, உனக்கு என்ன வேண்டுமென்றாலும், எப்போதும் என்னைக் கேள்" என்பதுதான் எம்.ஜி.ஆர் பிரபாகரனுக்குக் கொடுத்த வாக்குறுதி. "சந்திப்பு பொதுவானதாகவே அன்று காணப்பட்டது. பிரபாகரன் பேசப் பேச எம்.ஜி.ஆர் அமைதியாக அவற்றை உள்வாங்கிக்கொண்டிருந்தார். ஆனால், அக்கணமே எம்.ஜி.ஆர் இற்கும் புலிகளின் தலைவருக்கும் இடையிலான நெருங்கிய நட்பு உருவாகி விட்டது" என்று எம்.ஜி.ஆர் குறித்து எழுதும்போது மோகன்தாஸ் குறிப்பிடுகிறார். தனக்குப் பிரியமானவர்களை தன்னுடன் காலையுணவுக்கு அழைப்பதென்பது எம்.ஜி.ஆர் இற்குப் பிடித்த ஒரு விடயம். அவர்களுக்கிடையிலான முதலாவது சந்திப்பு முற்றுப்பெற்று சில நாட்களுக்குள் எம்.ஜி.ஆர் இன் காரியதிரிசியிடமிருந்து பாலசிங்கத்திற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. உடனடியாக பிரபாகரனை அழைத்துக்கொண்டு சந்திப்பொன்றிற்கு வாருங்கள் என்பதே அந்த அழைப்பின் நோக்கம். "முதலமைச்சர் அவருக்காகக் காத்திருக்கிறார்" என்று அந்த அதிகாரி பாலசிங்கத்திடம் கூறினார். அவர்கள் உடனடியாக எம்.ஜி.ஆர் இன் வாசஸ்த்தலத்திற்கு விரைந்தார்கள். வாசலிலேயே அவர்களை வரவேற்ற காரியாதிரிசி, அவர்களை உணவருந்தும் அறைக்கு அழைத்துச் சென்றார். எம்.ஜி.ஆர் அங்கிருந்தார். "வா தம்பி, உன்னுடன் இன்று காலையுணவு அருந்த விரும்புகிறேன்" என்று அவர் பிரபாகரனைப் பார்த்துக் கூறினார். முதலில் சட்னி, சாம்பாருடன் இட்லி பரிமாறப்பட்டது. பின்னர் தோசை. பூரி, உப்புமா போன்றவையும் பின்னர் பரிமாறப்பட்டன. நீரிழிவு நோயினால் அவஸ்த்தைப்பட்டு வந்த பாலசிங்கம் அன்றைய அவதியில் தனது இன்சுலின் ஊசி மருந்தினை எடுக்க மறந்திருந்தார். ஆகவே சிரமப்பட்டுக்கொண்டு நின்ற பாலசிங்கத்தை எம்.ஜி.ஆர் கவனித்து விட்டார். "எனது விருந்தினர்கள் வயிறார உணவருந்தவேண்டும் என்று நான் விரும்புவேன்" என்று எம்.ஜி.ஆர் பாலசிங்கத்தைப் பார்த்துக்கொண்டே கூறவும், பாலசிங்கம் செய்வதறியாது பிரபாகரனைப் பார்த்தார். ஆனால் பிரபாகரனது உணவருந்தும் தட்டோ சுத்தமாகக் காலியாகியிருக்கவே எம்.ஜி.ஆர் அகமகிழ்ந்து சிரித்தார். "தம்பியைப் பாருங்கள், உங்களை விருந்திற்கு அழைத்தவர்களை திருப்திப்படுத்துவது எப்படியென்று கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்கு பரிமாறப்படும் உணவிற்கு நீங்கள் மரியாதை கொடுக்க வேண்டும்" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக்கொண்டே எம்.ஜி.ஆர் கூறினார். அருகிலிருந்து உணவு பரிமாறிக்கொண்டிருந்த ஊழியரைப் பார்த்தும் மேலும் இட்லி, தோசை சாம்பார் ஆகியவற்றை அவர் எடுத்துவரச் சொன்னார். "எனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது, நான் வழமையாக எடுக்கும் இன்சுலின் மருந்தினை இன்று எடுக்க மறந்துவிட்டேன், ஆகவேதான் உணவுக் கட்டுப்பாட்டில் இருக்கிறேன், நான் அதிகம் சாப்பிடலாகாது" என்று கெஞ்சுமாற்போல் கூறினார் பாலசிங்கம். சிரித்துக்கொண்டே பேசிய எம்.ஜி.ஆர், "எனக்கும் நீரிழிவு நோய் இருந்தது, ஆனால் நான் சுகமடைந்து விட்டேன். நீரிழிவு நோய் இருந்தால் உண்ணக் கூடாது என்று யார் உங்களுக்குச் சொன்னது? உங்களை தவறாக வழிநடத்தும் அந்த வைத்திய மூடர் யார்?" என்று கேட்டார் எம்.ஜி.ஆர். பதிலளித்த பாலசிங்கம், தான் ஒவ்வொருநாளும் இன்சுலின் மருந்தினைத் தவறாது எடுப்பதாகவும், தனது வாழ்வே அதில் தங்கியிருப்பதாகவும் கூறினார். ஆனால், நீரிழிவு நோயினைக் குணப்படுத்த முடியும் என்று எம்.ஜி.ஆர் தொடர்ந்தும் விவாதித்தார். தனது வைத்தியர் தன்னிடம் அப்படியே கூறியதாகவும் அவர் கூறியதுடன் தனது வைத்தியரையும் அங்கு வரவழைத்தார். வைத்தியருடன் பேசிய எம்.ஜி.ஆர், "பாலசிங்கம் தன்னை ஒரு நீரிழிவு நோயாளியென்றும் , அதனைக் குணப்படுத்த முடியாதென்றும் கூறுகிறார். நான் அவரிடம் நீரிழிவு நோயினைக் குணப்படுத்த முடியும் என்று கூறுகிறேன். நீங்கள் ஒரு நிபுணர்தானே? எங்களில் யார் கூறுவது சரியென்று கூறுங்கள் பார்க்கலாம்" என்று கேட்டார். பதிலளித்த வைத்தியரும், "நீங்கள் சொல்வதே சரி" என்று எம்.ஜி.ஆரைப் பார்த்துக் கூறினார். தொடர்ந்து பேசிய எம்.ஜி.ஆர், வைத்தியரைப் பார்த்து, "நீரிழிவு நோயினைக் குணப்படுத்த எவ்வளவு காலம் தேவைப்படும்? சுமார் இரு வாரங்கள் போதுமல்லவா?" என்று கேட்டார். அதற்கு ஆமென்று பதிலளித்தார் வைத்தியர். "சரி, அப்படியானால் பாலசிங்கத்தை அழைத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்துப் பராமரியுங்கள்" என்று பணித்தார் எம்.ஜி.ஆர். பாலசிங்கம் திரும்பிப் பிரபாகரனைப் பார்த்தார். அவரது முகம் எந்தச் சலனமும் இல்லாமல் இருப்பதைக் கண்ட அவர், நடப்பதை பார்த்து உள்ளுக்குள் இரசித்துக்கொண்டிருக்கிறார் பிரபாகரன் என்பதை நன்கு புரிந்துகொண்டார். எம்.ஜி.ஆர் இன் வீட்டை விட்டுக் கிளம்பியதும், அடக்கமுடியாமல் வெடித்துச் சிரித்தார் பிரபாகரன். வைத்தியர் பக்கம் திரும்பிய பாலசிங்கம், "எதற்காக எம்.ஜி.ஆர் இடம் பொய் கூறினீர்கள்?" என்று கேட்டார். பதிலளித்த வைத்தியர், "எனது முதலமைச்சருடன் நான் எப்படி முரண்பட முடியும்? இப்போது ஒரு பிரச்சினையுமில்லை. நீங்கள் என்னுடன் வைத்தியசாலைக்கு வாருங்கள், இரு வாரங்கள் நிம்மதியாக ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்" என்று அமைதியாகக் கூறினார். வைத்தியர் கூறியவாறே இரு வாரங்கள் ஓய்வெடுக்கச் சம்மதித்தார் பாலசிங்கம். சுமார் மூன்று மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருமுறை பிரபாகரனும், பாலசிங்கமும் எம்.ஜி.ஆர் உடன் காலையுணவினை அருந்த அழைக்கப்பட்டார்கள். அன்று செல்லுமுன் தேவைக்கு அதிகமாகவே இன்சுலின் மருந்தினைச் செலுத்திக்கொண்டார் பாலசிங்கம். அவர்களைக் கண்டதும், "உங்களின் நீரிழிவு நோய் எப்படி இருக்கிறது? குணமாகிவிட்டீர்ர்களா?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் எம்.ஜி.ஆர். "ஆம் சேர், மிக்க நன்றி" என்று பதிலளித்தார் பாலசிங்கம். அன்று அவருக்குப் பரிமாறப்பட்ட அனைத்தையும் எம்.ஜி.ஆர் திருப்திப் படுமளவிற்கு உண்டுமுடித்தார் பாலசிங்கம்.
  39. 2009 முள்ளிவாய்க்கால் இனவழிப்பை ஏதுவாக்கிய காரணிகளில் சிங்கள விமானப்படையின் விமானங்களும் முக்கிய பங்கினை ஆற்றின. தமிழரைப் பொறுத்தவரையில் இவ்விமானங்கள் அவர்களை அழிப்பதற்காகவே சிங்களத்தால் கொள்வனவுசெய்யப்பட்டு, பாவிக்கப்பட்டு வருகின்றன. அப்படியொரு விமானத்தில் தமிழ் மாணவர்கள் ஏறிப் பார்த்துவிட்டார்கள் என்றும், அவர்கள் தமது பிறப்பின் பயனை அனுபவித்துவிட்டார்கள் என்றும், இலங்கையர்களாக நாம் ஒன்றிணைவோம் என்றும் கூக்குரலிடுவது ஆக்கிரமிப்பினை தமிழர்களிடமிருந்தே ஆமோதித்து, அரவணைக்கும் செயலேயன்றி வேறில்லை. தமது யூடியூப் சனல்களுக்குச் செய்திகிடைக்காதா என்று அலையும் சில தெரு........ இந்தச் சிங்களக் கொலைக்கருவிகளும் செய்திதான். இதனைச் செய்தியாக்கி லைக்குகளை அள்ளக் காத்திருக்கும் பதர்கள் தமது இனத்தின் பிணங்களை வைத்துப் பணம் பண்ணுவதற்குச் சமனானவர்கள். தமிழர்களின் மீதான இனவழிப்பினை சிங்கள வெற்றிவிழாவாகக் கொண்டாடும்போது அவ்விழாவில் தமிழர்கள் கலந்துகொள்வதும் ஒன்றுதான், இனக் கொலையில் முக்கிய பங்காற்றிய இவ்விமானங்களின் கண்காட்சியில் கலந்துகொள்வதும் ஒன்றுதான். "உங்களை அழிக்க நாம் பாவித்த கொலைக்கருவிகளை வந்து பாருங்கள், இனியொரு முறை சுதந்திரம் கேட்டாலும் இவற்றைக் கொண்டே மீண்டும் ஒருமுறை உங்களை அழிப்போம்" என்பதுதான் சிங்களம் விடுக்கும் செய்தி. எமது உறவுகளை பல்லாயிரக்கணக்கில் கொன்றுகுவித்த எதிரியின் கொலைக்கருவிகளில் இருந்து எம்மை விலத்தியே வைத்திருப்போம்.
  40. பாம் ஸ்பிறிங் பயணத்தின் போது இரு நாட்கள் இந்த தேசிய பூங்காவுக்கும் போனோம்.இந்த தேசிய பூங்கா 795000 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது.முழுக்க முழுக்க பாலைவனமாகவே காட்சியளிக்கிறது. ஒரு வருடத்துக்கு 6 அங்குல நீர்வீழ்ச்சியே கிடைக்கிறது.எனவே தண்ணீரில்லாமல் வளரக் கூடிய ஜோசுவா என்கிற மரமே 90 வீதம் நிற்கிறது.இந்தமரம் ஏறத்தாள எமது ஊர் தாளமரம் மாதிரியே இருந்தது. ஜோசுவா மரம் இந்தமரத்திலிருந்து வரும் பழங்களை கூடுதலாக மிருகங்களும் எஞ்சியிருக்கும் சிலதை அங்குள்ளவர்களும் உண்ணுகிறார்கள்.ஒரு வருடத்துக்கு 1-3 அங்குலம் தான் வளருகிறது.ஆனாலும் நீண்ட ஆயுள் உள்ளதாக சொல்கிறார்கள்.ஏறத்தாள 150-200 வயதுவரை வாழக் கூடியது. ஜோசுவா மர பழங்கள். அமெரிக்க தேசிய பூங்காவுக்கு உள்நுழைவதற்கு 30 டாலர்களில் இருந்து பலவிதமான கட்டணங்கள் அறவிடுகிறார்கள். இதில் ஒரு விசேட சலுகையும் தருகிறார்கள்.மூத்த குடிமக்களுக்கென்று வாழும்வரை உபயோகிக்கக் கூடிய மாதிரி 80 டாலருக்கு தருகிறார்கள்.பல வருடங்களுக்கு முன்பே நானும் உறுப்பினராகியுள்ளேன்.இதை உபயோகப்படுத்தும் போது என்னுடன் வாகனத்தில் இருக்கும் அத்தனை பேருமே இலவசமாக உள்நுழையலாம்.இந்த அனுமதி சீட்டு ஒரு கடனட்டை வடிவில் இருக்கும். மகளுக்கு நடைப்பயணம் ரொம்பவும் பிடிக்கும்.எனக்கும் இது சவாலாக இருந்தாலும் பிடிக்கும்.சன்பிரான்ஸ்சிஸ்கோவை சுற்றி ஒரே மலைகளாகவே உள்ளதால் நேரம் கிடைக்கும் போது நடைப்பயணம் தான். ஜோசுவாவிலும் நிறைய நடைபாதைகள் நிறைய உள்ளன.பேரக் குழந்தைகளையும் கொண்டு போனதால் பெரியபெரிய இடங்களை தவிர்த்துக் கொண்டோம்.இளம் பெடிபெட்டைகள் செங்குத்தாக உள்ள மலைகளில் ஏறிக் கொண்டிருந்தனர்.பார்க்கவே கால் கூசியது. இப்படியாக இரண்டு நாட்கள் தேசியபூங்காவில் பொழுதைப் போக்கினோம். முற்றும். https://en.m.wikipedia.org/wiki/Joshua_Tree_National_Park மேலதிக விபரங்களுக்கு மேலே உள்ள சுட்டியை அழுத்தவும்.
  41. யூட்டியூப்பர்கள் அனைவருக்கும் பொதுவாக: நீங்கள் எல்லோரும் செய்வது நல்ல விடையம் தான். நாட்டு நடப்பை, மக்கள் வாழ்வியலை தொடர்ந்து வெளியுலகிற்கும் அணுக்கமற்றோருக்கும் படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். இவ்விடையத்தில், யாழ்ப்பாணத்திற்கு வரமுடியாத ஆனால் பார்க்க ஆசையுள்ள மக்கள் தம் வீடுகளிலிருந்தே இதனை அறிந்து/ பார்த்துக் கொள்ள வசதி செய்துள்ளீர்கள். குறிப்பாக, இது போன்ற அறிவியல் கண்காட்சிகளை மக்களுக்கு காட்டுவது நல்ல விடையமே. எமது மக்களுக்கும் இது போன்ற வானூர்திகளை நேரில் கண்ட அனுபவமும் சிறார்களுக்கு இத்துறை மீதான ஆர்வத்தையும் இது அதிகரிக்கும். தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவார் போற்றட்டும். எல்லைக்கு வாவென்ற போது எல்லை கடந்தவர்கள் தான் இன்று உங்களை தூற்றுபவர்களின் வரிசையில் முன்னிற்பவர்கள்! இவர்கள் எல்லாம் கூலிங் கிளாசோடு சொறிலங்கா ஏர்லைன்சில் ஏறி நல்ல ஹைஃவையாக ஊருக்கு வருவினம். வெளிநாட்டவர்களிடம் கேளுங்கள், தாய்நாடு எதுவென்று. ஒரு ஈ-காக்கா தாய் நாடு "தமிழீழம்" என்று போரின் போதோ இல்லை போருக்கு பின்போ வெளிநாட்டில் சொன்னதில்லை, 99.99 வீதமானோர். கேட்டால் நல்ல ஸ்ரைலாக "சிறிலங்கா" என்பர். இந்த இரட்டை வேடதாரிகளை/ போலிகளின் கருத்துக்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்க வேண்டாம். நாற்பது நல்லது செய்யும் போது பொறாமையால் நாலு கல்லடி விழுவது பரவலானதே. எல்லோருக்கும் எல்லாம் பிடிக்காது தான். ஆகையால் தொடர்ந்து மக்கள் வாழ்வியலை படம்பிடியுங்கள். உங்கள் மூலம் நான் பல நன்மை அடைந்திருக்கிறேன். மனதார வாழ்த்துகிறேன். உங்கள் அனைவரின் பணியும் தொடரட்டும்.
  42. கூட்டாட்சி தொடர்பாக அரசியல் அறிஞர்களின் வரைவிலக்கணங்கள்:-தொகு பல நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு புதிய நாட்டினை அமைக்கும் முறையே கூட்டரசு ஆகும்.-ஆமில்டன் நாட்டு ஒற்றுமையையும் அதிகாரத்தினையும் மாநில உரிமைகளின் பாதுகாப்பினையும் பொருந்தச் செய்யும் அரசியல் வழிமுறையே கூட்டாட்சி முறையாகும்.-பேராசிரியர் டைசி தேசிய நோக்கிலும் உட்பகுதிகளின் நோக்கிலும் அதிகாரங்களை பங்கீடு செய்து கூட்டரசில் இணைந்த ஒவ்வொரு அலகும் ஈடான (சமமான) முறையில் தொடர்புகளையும் பேணிக்கொள்கின்ற அதேவேளை விடுபாட்டுணர்வோடும் (சுதந்திரமாகவும்) தமது எல்லைக்குள் செயற்படும் ஓர் அரசுமுறை- கே.சி வெயர் நாடுகள் குறுநிலப்பகுதிகள் மாநிலங்கள் குடியரசு எனப்பலவிதமாக உரைக்கப்படும் உள் உறுப்புக்களுக்கும் நடுவண் அரசுகளுக்கும் இடையிலான அதிகாரப்பங்கீடு கூட்டரசு எனப்படும்.-சே'.டபிள்யூ. கானர். ஆகவே கூட்டரசு என்பது நடுவண் அரசொன்றின் தலைமையின் கீழ் சிறிய மாநில அரசுகளும் பிற ஆட்சிப்பகுதிகளும் தமது தன்னுரிமையையும் தனித்துவத்தையும் இழந்துவிடாத வகையில் சில பொதுவான நலன்களை எய்துவதை நோக்காகக் கொண்டு ஆட்சிப்பொறுப்புப் பங்கீடு (அதிகாரப்பங்கீடு) ஏற்பாட்டின் அடிப்படையில் இயங்கும் ஆட்சி முறையானது கூட்டரசு ஆட்சிமுறை எனப்படும். https://ta.m.wikipedia.org/wiki/கூட்டாட்சி
  43. அருமையான ஒர் தொடர் ....திரை பட்ம் பார்ப்பது போல் இருந்தது உங்களது எழுத்து நடை...பகிர்வுக்கு மிக்க நன்றி...
  44. எல்லாம் சரி. துயர் வரும் முன் காப்பதுதானே அறிவு. இந்தக் கட்டுரையை நிகழ்ச்சிக்கு முன்னர், நிலாந்தன் எழுதியிருக்கலாம். முடியட்டும், பிறகு போய் சங்கு ஊதலாம் எனும் விதமாகவே நான் இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன். இனி இப்படி நடக்க விடமாட்டேன் நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பாணியில் கூட, சூளைமேட்டுச் சூரர் சமீபத்தில்அறிக்கை விட்டிருந்தார். இத்தனைக்கும் பல ஆண்டுகளாக இருக்கும் ஈழ மீனவர்களின் பிரச்சனைகளை கடற்தொழில் அமைச்சராக இருந்தும் கூட, தீர்க்க முடியாமல்தான் அவர் இருக்கிறார். “உன் பழங்காலக் கதை இங்கே யாரைக் காக்கும்?” என்றொரு பாடல் வரி இருக்கிறது. எங்கள் மூதாதையர் அப்படிச் செய்தார். இப்படி வாழ்ந்தார் என்று சொல்லிக் கொண்டே இருந்தால், நாங்கள் அங்கேயே தங்கி விட்டோம் என்றுதான் கருத வேண்டும். வெளியே வர இன்னும் பல காலங்கள் தேவைப்படும். நிகழ்ச்சியை திட்டமிடாததால்தான் குழப்பம் வந்ததா? அல்லது திட்டமிட்டு குழப்பினார்களா? என்பது கேள்வி. என்னைப் பொறுத்தவரையில், புலம்பெயர் தமிழர் ஒருவர்நீ ட்டிய கரத்தை, (அது அவரது வியாபார நோக்கமோ? அல்லது சமூக நலனோ?)தாயகத்தில் காயப்படுத்தியிருக்கிறார்கள். கட்டுரையாளர் அதற்குத் தாளம் போட்டிருக்கிறார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.