Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்12Points19666Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்9Points3124Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்8Points7138Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்7Points33807Posts
Popular Content
Showing content with the highest reputation on 04/04/24 in all areas
-
இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்| exercise to reduce knee pain Dr Karthikeyan6 points
-
இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
நுணா, ஒரு அருமையான காணொளி இது. முழங்கால் மூட்டு வலி, மூட்டழற்சி இருப்போர் மிதமான உடற் பயிற்சி மூலம் நிவாரணம் பெறலாம் என்பதை இப்படி சிறப்பாக யாரும் தமிழில் விளக்கி நான் காணவில்லை. இந்த முழங்கால் பிரச்சினை எனக்கும் இருந்தது, என் அனுபவம் இது. 2019 இல் பெருந்தொற்று ஆரம்பித்த நேரம் ஒரு முழங்காலில் சாதுவான அழற்சி (mild arthritis) ஏற்பட்டது. ஒரு நாளைக்கு 6 மைல், வாரத்தில் 30 மைல்கள் ஓடுவதால் வந்திருக்கிறது. ஓட்டத்தைக் கைவிடு என்று மருத்துவர் சொன்னார். 8 வாரங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு, நீச்சல் பழக ஆரம்பித்தேன். அரைத் தடாகம் மட்டும் மூச்செடுக்காமல் போக முடியும், மூச்செடுக்க தலையைத் திருப்பினால் மரக் குற்றி போல தாழ ஆரம்பிப்பேன். நீச்சல் சரிப் பட்டு வரவில்லை😂. அதன் பிறகு பின் வரும் வழிகளில் நானே எனக்கு மூட்டு சிகிச்சையை ஆரம்பித்தேன். 1. எங்கள் முழங்கால் மூட்டை நோக்கி, தொடையில் இருந்தும், கணுக்காலில் இருந்தும் கேபிள்கள் போல பல tendon கள் வந்து இணைகின்றன. இந்த தொடை, கணுக்கால் தசைகள் பலம் இழந்தால், நடக்கும், ஓடும் போது உருவாகும் விசை பலமாக முழங்காலைத் தாக்கும். இது நடக்காமல் முழங்கால் மூட்டைப் பாதுகாக்க, தொடை, பிருஷ்டம், கணுக்கால் தசைகளை இலக்கு வைத்து தசைப் பயிற்சிகளைச் செய்யலாம். இவை மூன்றையும் ஒரு சேர பலமாக்கும் ஒரு பயிற்சி சுமோ பழு தூக்கல் (Sumo dead weight lifting) என்ற முறை. இதை யூ ரீயூப் வீடியோக்களில் ஆர்வமுள்ளோர் தேடிப் பாருங்கள். 2. சைக்கிளோட்டம்: 8 வார ஓய்வுக்குப் பின்னர், மேலே சொல்லியிருப்பது போல 12 - 24 மணி நேர இடைவெளியில் 30 நிமிடம் சைக்கிளோட்டம் செய்த போது, முழங்காலில் இருந்த சிறிய வலி மறைந்து விட்டது (காரணம் இப்போது தெரிகிறது). 3. ஒரு 6 மாதம் வரை இப்படி சைக்கிளோட்டம், தசைகள் பலமாக்கல் செய்த பின்னர், ஒரு trail shoe வாங்கி trail running ஆரம்பித்தேன். மண் தரையான trail இல் ஓடும் போது, இரு நன்மைகள். 1. உங்கள் காலில் பல தசைகள் ஒரே நேரத்தில் வேலை செய்யும் (balancing) 2. முழங்காலைத் தாக்கும் விசை தார் ரோட்டை, கொங்க்ரீட்டை விட குறைவாக இருக்கும். 4. 8 மாதம் கழித்து, மீண்டும் தார் ரோட், கொங்கிரீட் நடை பாதை, என்பவற்றில் ஓட ஆரம்பித்தேன். ஆனால், வலி இருக்கிறதோ இல்லையோ, ஓடி முடித்தவுடன் முழங்கால் மூட்டிற்கு 10 நிமிடம் ஐஸ் வைக்க வேண்டும். இதைச் செய்தால் ஓட்டத்தினால் அழற்சி ஏற்படுவது கட்டுப் படும். மொத்தமாக , மீண்டும் வாரத்திற்கு 30 மைல்கள் ஓடும் நிலைக்கு நான் வர, 1 வருடம் ஆனது. ஆனால், இப்போது முழங்கால் வலி, அழற்சிக்கான அறிகுறிகள் எவையும் இல்லை.6 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
ஊருக்கு போய் வருபவர்களில் பலவகை இருக்குது . ஊரில் இருந்து வியபாரம் செய்பவர்கள் அடிக்கடி போய் வருவார்கள் முட்டை போட்ட ஆமை போல் அமைதியாக இருப்பார்கள் வருவதும் தெரியாது போவதும் தெரியாது போனின் ரிங் சத்த வேறு பாடு மூலமே ஆள் எங்கு நிக்கிறார் என்று தெரியும் . இன்னொரு வகை முப்பது நாப்பது வருஷம் கழிந்து ஊர் பக்கம் போனவர்கள் அப்படியானவர்கள் ஊரை பார்த்த புளுகில் அவர்கள் ஏதாவது வாட்சப் குழுமத்தில் இருந்தால் அந்த குழுமத்தில் சிங்கன் ஊரில் நிக்கும் காலம்மட்டும் பனாட்டு வேப்பமரம் பணம் கிழங்கு கருவாடு எல்லாம் இலவச ஒளிபரப்பில் படமாய் கொட்டி மண்டை காய வைப்பார்கள் .குழந்தையின் ஆனந்த ஆட்டத்தை ரசிப்பது போல் அமைதியாக இருந்துட வேண்டியதுதான் 😀 அடுத்த கூட்டம் ஊரைபார்த்த புளுகில் தாங்கள் ஊரில் இருக்கும்மட்டும் கனவு இடங்களின் விலையை பார்த்து உடனே காணியை வேண்டி மூன்று மாடி வீடும் கட்டி கமராவை பூட்டி விட்டு இங்கு வந்து கமராவுக்குள் தங்கள் வீட்டை பார்த்து ஆனந்தப்படும் கூட்டம் இருக்குது அங்கிருக்கும் வசதியில்லாத ஆரையாவது குடியேற்றி இருக்கலாமே என்று கேட்டால் ஓம் இரவு வந்தால் லைட் போட ஒரு ஆளை வேலைக்கு வைத்து இருக்கிறேன் என்பார் .😀இரண்டு மூன்று வருடத்துக்கு ஒருக்கா ஊர் போறவர்களுக்கு ஏன் வீடு தேவை? அடுத்தது இங்கிருக்கும் மட்டும் வாட்சப் குழுமத்தில் புலி பற்றி எதாவது செய்தி வந்தால் வீழ்ந்து விடாத வீரம் அப்படி இப்படி உசுப்பேத்தும் ஸ்ட்டேட் போட்டு கொண்டு இருப்பவர் ஊர் போய் வந்த வுடன் புலி புலித்தலைமை எல்லாத்தையும் போட்டு திட்டும் வகை இந்த சேர்க்கையில் யாழிலும் ஒரு சிலர் உள்ளனர் . ஆனால் எல்லாத்திலும் ஒரு மோசமான கூட்டம் உண்டு அவர்கள்தான் நீங்கள் சொல்லும் ஆட்கள் ஊரில் இருபவர்களுக்கு படம் காட்டும் கூட்டம் அனேகமாக அவர்கள் சோசல் பணத்தில் அரசின் உதவிகளை பெற்றுகொள்பவர்கள் இவர்கள் ஊர் போய் வந்தால் அங்கு அப்படி இப்படி ஆகா ஓகோ என்று இலங்கையரசின் உத்தியோகப்பற்று அற்ற உல்லாசபயண விளம்பர முகவர் ஆட்டம் ஆட்டம் காட்டுவார்கள் .அத்துடன் அடிக்கடி போய் வருவார்கள் . இதுக்குள் @goshan_cheஎல்லாத்தையும் ஒரு செய்தியாளர் போல் கவனிக்க முயற்சி பண்ணியிருக்கார் . இப்ப விடயம் என்னவென்றால் நீங்கள் சொல்வது போல் ஒன்றுக்கு ஒன்று வந்தால் யார் போவார்கள் அரச உதவி கூட்டம் மட்டுமே போகும் காரணம் அதுகளுக்கு இங்கு சிலவு செய்ய முடியாது . அடுத்த உண்மை எந்த ஒரு காலமும் யுரோவுக்கு அல்லது பவுனுக்கு நிகராக இலங்கை நாணயம் வலுபெற போவதில்லை காரணம் இலங்கையை சுற்றி கடல் மாத்திரம் அல்ல கடனும் இருக்கிறது.4 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வணக்கம் @goshan_che பயணக்கட்டுரை அருமை. நாட்டின் நிலமைகளை சிறப்பாக தந்துள்ளீர்கள். சிறந்த மொழி நடையுடன் நாட்டின் ஜதார்தத நிலையை படம் பிடித்து எழுத்தில் தந்தமைக்கு நன்றி. 👍👍 நுவரெலியா, எல்லே போன்ற அழகான இடங்களுக்கு சென்றீர்களா? புலம் பெயர் தமிழ் இளைய தலைமுறை அதிகமாக விரும்பி போகும் ரம்மியமான பிரதேசங்கள். இந்த YouTube தளத்தில் இலங்கையின் சுற்றுலாபிரதேசங்களை அடிக்கடி பார்த்து ரசிப்பேன்.3 points
-
ஒரு கிலோ விளாம்பழம்
3 points🙏........ உங்களினதும், களத்தில் வேறு பலரினதும் தொடர் ஊக்குவிப்பால் நானும் எழுதலாம் என்ற நம்பிக்கை இப்பொழுது சிறிது வந்து விட்டது என்று நினைக்கின்றேன். எல்லாவற்றையும் வாசிப்பவர்களின் பாடு என்னவோ தெரியவில்லை......🤣3 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நன்றி அண்ணா…. ஆனால் நாம் சிலதை ஏற்றுக் கொள்ள வேண்டும்… 2019 நவம்பரில் ஓர் பிரித்தானிய பவுண்ட்ஸ் 230/= இன்று 04/04/24 371/=. ஆனால் பொருட்களின் விலைகள் பல மடங்கு கூடியுள்ளன. கடந்த சில வருடங்களாக உச்சத்தில் இருந்த பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன. குறிப்பாக இலத்திரனியல் பொருட்கள் சில அத்தியாவசிய பொருட்கள். அதே போல் அங்குள்ள 50% மேற்பட்ட தமிழ் இளம் சமுதாயம் ஒற்றை சிறீலங்காவிற்குள் உள்வாங்கப்பட்டு விட்டார்கள்.3 points
-
கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
அண்ணனுக்கு ஒரு துரோகி பட்டம் பார்சல்!3 points
-
பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல்
2 pointsபாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்றல் March 9, 2024 12:49 am ஒரு ஊரில், தனியார் கல்வி நிலையமொன்றில் கற்பித்துக் கொண்டிருந்த பொழுது, அங்குள்ள மாணவர்களுடன் சமூகப்பிரச்சினைகளைப் பற்றி மாதமொரு தடவையாவது உரையாடல்களைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். சாதி, இனம், பாலியல் துஷ்பிரயோகங்கள், மாணவர் உரிமைகள், பெண்களின் உரிமைகள், குயர் உரிமைகள் என்று பல கருக்களையும் மாதமொருமுறை உரையாடுவோம். நான் எனது பார்வைகளைச் சொன்ன பின்னர், மாணவர்கள் தங்கள் தரப்பிலிருந்து கேள்விகளையும் அனுபவங்களையும் முன் வைப்பார்கள். ஒரு நாள், ஒரு மாணவன் பெண்களின் ஆடை தொடர்பில் சிக்கல்கள் இருக்கிறது, அவர்களது ஆடையால் ஆண்களின் பாலியல் உணர்ச்சி தூண்டப்படுகிறது என்ற கருத்தை உரையாடல் ஒன்றில் முன்வைத்தார். மாணவிகள் கால் முதல் தலைமுடியின் நுனி வரை பற்றியெரியும் கோபங் கொண்டு அம்மாணவனைத் தனிப்படத் தாக்கத் தொடங்கினர். நீ தான் அப்பிடி நினைக்கிறாய், மற்றவர்கள் அப்படி நினைப்பதில்லை என்று சொன்னார்கள். ஏனைய ஆண் மாணவர்கள் மெளனம் காத்தார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகச், சொல்லுங்கள் என்று ஆண்களைக் கேட்டேன். அவர்கள் ஒவ்வொருவராகத் தங்கள் பார்வைகளைச் சொல்லத் தொடங்க மாணவிகள் எதிர்நிலைக்குச் சென்று கடுமையாக எதிர்வினையாற்றினர். மாணவிகளிடம் நீங்கள் இவ்விதம் பேசினால் அவர்கள் தங்கள் தரப்பில் உள்ள குறைகளை மறைத்துக் கொண்டு தொடர்ந்தும் அத்தகைய மனநிலைகளிலேயே இருப்பார்கள். அது உங்களுக்கு வேண்டுமா? அல்லது அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்ற உண்மை தெரிய வேண்டுமா? என்ற கேள்வியினால் அமைதியாகி ஆண்கள் சொல்வதைக் கேட்டார்கள். ஆண்கள் தமது பொதுப்புத்திப் பார்வைகளைச் சொல்லி முடித்ததும் பெண்களிடம் பெரிய சோர்வு உண்டாகியது. கோபம் அடங்கி சலிப்பு மேலிட்டது. பின்னர் ஒவ்வொருவராகக் கேள்வியுடன் எழுந்தார்கள். சிலர் அழுதனர். அந்த உரையாடல் மூன்று நாட்கள் நீண்டது. இறுதியில் ஆண்களில் பெரும்பான்மையான மாணவர்கள், பெண்களின் உடையில் இல்லை தங்களின் பார்வையில் தான் பிரச்சினை இருக்கிறது என்று ஒத்துக்கொண்டு, வெளிப்படுத்தி, தம்மைச் சீர்படுத்தத் தொடங்கினர். எனது பணியென்பது, இதனைப் பாதுகாப்பாகவும் தனித்தாக்குதலாகவும் கதாப்பாத்திரப் படுகொலையாகவும் மாறாமல் காப்பதே. முதல் நாள் நிகழ்ந்த கடுமையான வாக்குவாதங்களின் பின்னர் இரண்டாவது நாள், காலை ஆறு மணி வகுப்பிற்கு, அனைவரும் நேரம் பிந்தாமல் வந்து சேர்ந்தனர். அனைவரையும் எழுந்து நின்று கண்களை மூடச் சொல்லி, வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளிற்கு நேர்ந்த கொடூரங்களைச் சொன்னேன், அவர்களுக்கான மெளன அஞ்சலியுடன் உரையாடலைத் தொடங்கினேன். மாணவர்கள் தம்முன் நிகழ்ந்த அந்தக் கொடூரங்களைச் சில கணங்கள் நினைத்த பின் அவர்களின் உரையாடலில் பொறுப்புணர்வு கூடியிருந்தது. ஆறு வயதுச் சிறுமியை வன்புணரும் போது அவரணிந்திருந்தது ஒரு பாடசாலை உடை. கழுத்தில் டையினால் நெருக்கிக் கொல்லப்பட்டார். ஆடை என்னவாகியது என்ற கேள்வியுடன் உரையாடல் தொடங்கியது. பின்னர் அடுத்த நாள் உரையாடல்களுடன் அவர்களுக்குள் இருந்த சந்தேகங்கள் முன்முடிவுகள் ஓரளவு தீர்ந்து சமநிலையை, ஒரு புதிய நியாயத்தை அவர்களாகவே கண்டடைந்தார்கள். இதற்கான வெளியை உருவாக்குவதே முக்கியமானது. பெண்கள் ஆண்களை அறிய வேண்டும். ஆண்களும் பெண்களை எதிர் கொள்ள வேண்டும். நியாயங்கள் சந்தேகங்கள் பகிரப்பட வேண்டும். அதிலிருந்து அவர்கள் கேள்விகளற்று ஆக வேண்டும். ஒரு தியானம் நிகழ்வது போல. ஆரம்பத்தில் எழும் மனக்கூச்சல்கள் அடங்கி, தன்னை அறிவதன் தொடக்கம் நிகழ வேண்டும். * சில மாதங்கள் கழித்து ஒரு மாணவன் ‘சேர், ஒரு பிரச்சினை’ என்று வந்தார். தங்களது நண்பர்களில் ஒருவருடன் தமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட முயற்சித்தார் என்று சொன்னார். நான் அந்த பாதிக்கப்பட்ட மாணவனுடன் நான்கு தடவைகளுக்கு மேல் விரிவாக உரையாடி, அவருடன் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அவருக்கு நிகழ்ந்தவற்றை அறிந்தேன். இதை வெளிப்படுத்த மூன்று வழிகளைப் பரிந்துரைத்தேன். முதலாவது, உங்களது வீட்டில் சென்று பெற்றோருடன் இது தொடர்பில் அறியப்படுத்துங்கள், அவர்களிடம் உரையாட மனத்தடையிருந்தால் நானும் வந்து உதவுகிறேன். இரண்டாவது, பாடசாலைக்கு இது தொடர்பில் அறிவிக்கச் சொன்னேன், மூன்றாவது, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை அல்லது கல்வி மேலிடங்களுக்கு அறிவிக்கலாம். அதற்கும் நான் உடனிருக்கிறேன் என்று சொன்னேன். அவருக்கு மூன்று வழிகளிலும் இதைத் தொடர மனத்தடை இருந்தது. ஆகவே உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டேன். அந்த ஆசிரியர் பாடசாலையில் கற்பித்தலைத் தொடரக் கூடாது. அவர் இருப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது என்று சொன்னார். சில நாட்களின் பின் எனக்குத் தகவல் சொன்ன மாணவனும் அதே காலப்பகுதியில் அந்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட முனைந்தமை பற்றி என்னிடம் சொன்னார். முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் இதனால் தனக்கு படிக்க முடியவில்லை. அவர் தன்னை நெருங்கிய அந்த நேரம் திரும்பத் திரும்ப என் நினைவுக்கு வருகிறது. பதட்டம் வருகிறது. வியர்த்து வழிகிறது. இதனை வெளியில் சொல்ல முடியவில்லை. யோசினையாக் கிடக்கு என்று சொன்னார். இருவருடனும் ஆறு தடவைகளுக்கு மேல் உரையாடி அவர்கள் பிரச்சினையை அவர்களே நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதற்கான மனநிலையையும் தன்னம்பிக்கையையும் உருவாக்கினேன். சமூகத்தில் இத்தகைய பாலியல் துஷ்பிரயோகங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது எவ்விதம் அவை எதிர்கொள்ளப்படும் என்பதை ஓரளவு அறிவேன். கீழ்மட்ட அதிகாரங்கள் அவற்றை எவ்விதம் கையாளும் என்ற என் அனுபவத்திலிருந்து பெற்ற அறிவைக் கொண்டு, மாணவர்கள் மனதளவில் தயாரானதும், மேல்மட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பில் நானே நேரில் சென்று புகாரளித்தேன். அவர்கள் அடுத்த நாளே அந்த ஆசிரியரை அப்பாடசாலையிலிருந்து வெளியேற்றி விசாரணைக்கான நடவடிக்கைகளைத் தொடங்கினர். அன்றே மாணவர்கள் பெற்றோரிடம் தங்களுக்கு நேர்ந்ததை வீட்டில் சொன்னார்கள். பெற்றோர்களும் மாணவருக்கு ஆதரவாக நின்று அவர்களைப் பேச வைத்தனர். அந்த ஆசிரியர் இன்னொரு பாடசாலைக்கு விசாரணையின் பின்னர், எச்சரிக்கை செய்யப்பட்டு இடம்மாற்றப்பட்டார், அவர் புதிதாகப் பணியாற்றப்போன பாடசாலைக்கும் இத்தகவல் பகிரப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிப்படுத்தப்படாது, பாதிப்பு நிகழ்த்தப்பட்டது யாரால் என்ற செய்தி ஊரெல்லாம் பரவியது. ஊர் மக்கள் அந்த ஆசிரியரை அடிக்க வேண்டும். அப்படித் தண்டிக்காமல் அனுப்பியது தவறு என்று என்னிடம் முரண்பட்டு நின்றனர். ஒன்று, இதைச் சட்ட ரீதியில் நாம் கையாள வேண்டும். அதற்கு அந்த மாணவர்களின் மனநிலையும் பெற்றோரும் விரும்பவில்லை. இரண்டு, வன்முறையைப் பிரயோகிப்பது சமூக அச்சத்தை உண்டாக்குவது மட்டும் இப்பிரச்சினைகளில் முக்கியமில்லை. இது தொடர்பில் ஊராக நாம் என்ன செய்யலாம் என்பதைச் சிந்திப்பதே அவசியமானது என்று கூறினேன். நான் எவ்வளவு சொல்லியும் ஊர் மக்களில் சிலர், அடிப்பது தான் சேர் வழியென்று சொல்லிக்கொண்டிருந்தனர். இந்த வழிமுறை, மாணவர்களையும் தவறாக வழிநடத்தும் என்பதைச் சொல்லி, அவர்களுடனும் விரிவாக உரையாடி நிலமையைத் தணித்தேன். அடுத்த ஒரு மாதத்திலேயே மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரிக்கிறது என்ற தகவலை மாணவிகள் கொணர்ந்தனர். மாணவர்களுடைய நடவடிக்கைகளில் நாங்கள் மாற்றங்களை அவதானிக்கிறோம். இதை எப்படிக் கையாள்வது என்று கேட்டார்கள். மீளவும் மாணவர்களை ஒருங்கிணைத்து உரையாடல்களை நடத்தினேன். ஆண்கள் சிலர் வெளிப்படையாகவே ஒத்துக் கொண்டு இவை நிகழ்கின்றன என்று பேசிய பின், போதைப் பொருட்களைப் பாவிப்பவர்கள் என்று சந்தேகிக்கப்படும் மாணவர்களைப் பட்டியற்படுத்தினோம். பதினாறு பேருக்கும் மேல் நீண்ட பட்டியலது. அவர்களுடன் நான் உரையாடினேன். அவர்களது பெற்றோருக்குத் தகவல்களைச் சொன்னேன். அவர்களது நடவடிக்கைகளை அவதானிக்க வைத்தேன். சிலரது குடும்பச் சூழல் மிக மோசமாக இருந்தது. அவர்களது குடும்பத்துடன் உரையாட முடியாத சூழல் எனக்கும் இருந்தது. ஆனால் மாணவர்கள் எல்லோரும் என்னுடன் உரையாடத் தயாராயிருந்தார்கள். தங்கள் மேலுள்ள தவறுகளைத் திருத்த வழி கேட்டனர். மாதக்கணக்கில் இந்த உரையாடல்கள் நிகழ்ந்தது. ஒருசிலரைத் தவிர அனைவருமே அப்பழக்கத்திலிருந்து முழுமையாக வெளியேறினார்கள். சிலரைக் கட்டுப்படுத்துவது இயலவில்லை. அவர்கள் குடும்பங்களும் கூட அதை ஒரு பிரச்சினையாக கவனமெடுக்கவில்லை. அவர்களை வகுப்புகளிலிருந்து நீக்கினோம். ஆனால் நான் தனிப்பட அவர்களுடன் உரையாடிக்கொண்டேயிருந்தேன். தவறுகளைச் செய்துவிட்டுத் தாங்களாகவே வந்து மன்னிப்புக்கேட்டுக் கொண்டு நிற்பார்கள். நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை உங்களைத் திருத்திக் கொண்டாலே போதும் என்று பலதடவைகள் கேட்டேன். அவர்கள் குறைத்துக் கொண்டார்களே தவிர, முழுமையாக விலகினார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. அதே நேரம் சக மாணவர்களிடமும் சிறியவர் முதல் பெரியவர் வரை இது பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்த இடைவிடாது உரையாடிக் கொண்டிருந்தேன். * பிறகொரு நாள், இவை பற்றி ஒரு வீதி நாடகம் ஒன்று செய்வோம். தொடர்ந்து எழும் சிக்கல்கள் தொடர்பில் சமூகத்துடன் உரையாடலை விரிவாக்குவோம் என்று கோரினேன். மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அந்த வேலைகளில் ஈடுபட்டார்கள். காலை முதல் இரவு வரை ஏராளமான பணிகளைச் செய்தனர். துஷ்பிரயோகங்கள், தண்டனைகள், போதைப்பொருள், ஆடைக் கட்டுப்பாடு, மாணவர் உரிமைகள் என்று அவர்கள் தாங்கள் எதிர்கொண்ட ஒவ்வொரு சொந்தப் பிரச்சினையும் தான் அவர்களது நாடகத்தின் கருக்கள். அவர்கள் உண்மையில் பேசிய, எதிர்கொண்ட ஒவ்வொரு உரையாடலும் தான் அவர்களது வசனங்கள். அவ்வூரின் வீதியெங்கும் தாங்களே கைகளால் வரைந்த சுவரொட்டிகளை ஒட்டினார்கள். குயர் அரசியல் தொடர்பில் சாதரண தமிழ்க் கிராமமொன்றில் அங்குள்ள மாணவர்களால் அவ்வரசியல் உள்வாங்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டு சுவரொட்டி வரையப்பட்டு ஒட்டப்பட்டமை அதுவே நானறிந்து முதல்முறை. நாடகத்திற்குத் தயாரானார்கள். உரையாடி, சமநிலை பெற்ற அந்த நாடகம் அவ்வூரில் ஆக்கபூர்வமான கவனிப்பைப் பெற்றது. மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் பேசும் வகையறிந்தார்கள். ஆனால் இது முழுமையானதல்ல. அவர்கள் மீளவும் தவறுகளில் ஈடுபட வாய்ப்புண்டு. இன்னமும் சரிசெய்யப்படாத சிக்கல்கள் அவர்களிடமுண்டு. இத்தகைய சிக்கல்கள் எல்லா இடங்களிலும் உண்டு. ஆனால் நான் பணியாற்றிய காலத்தில் அவர்கள் ஒவ்வொரு பிரச்சினையையும் கையாளும் வழிவகைகளை, அதற்குத் தேவையான ஒற்றுமையை அறிந்து கொள்ள ஊக்கப்படுத்தினேன். அவர்களது அன்றாட அனுபவத்திற்கு வெளியே சில மாணவர்களின் வாழ்க்கையிலும் பார்வையிலுமாவது அவை செல்வாக்குச் செலுத்தும். அதுவே என்னால் இயலக்கூடியது. அந்த வீதி நாடகம் சூரியன் செம்மஞ்சளெனச் சரிந்திறங்கிய பின்மாலையொன்றில் நிகழ்ந்தது. வன்புணரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட நான்கு சிறுமிகளினதும் படங்களைத் தங்களது கைகளாலேயே மாணவர்கள் வரைந்தனர். அதை நாடகத்தின் பின்னணியில் காட்சிப்படுத்தியிருந்தோம். நிகழ்வு முடிந்த பின்னர் நன்றாக இருட்டி விட்டது. அனைவரும் வீடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தனர். நான் வெளியில் நின்று மாணவர்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். முன்னர் பாலியல் துஷ்பிரயோகத்தில் பாதிக்கப்பட்டிருந்த மாணவன் ஒருவரின் தாய், என்னிடம் வந்து என்ன சேர் படிக்கிறானா என்று கேட்டார். ஆள் குழப்படி தான், ஆனால் இப்ப கொஞ்சம் படிக்கிறான் என்று சொன்னேன். அவன் படிக்காட்டியும் பரவாயில்லை சேர், நல்ல பிள்ளையா இருந்தாக் காணும் என்றார். நான் சிரித்து விட்டு, அவன் நல்ல பெடியன் தான் என்றேன். வீதியில் இருந்த விளக்கின் வெளிச்சத்தில் சில கணங்கள் அவரது கண்கள் தெரிந்தது, கலங்கி விழியில் நீர் சேர்ந்து விழத் தொடங்கியிருந்தது. நீங்கள் அவங்களுக்குச் செய்த உதவிக்கு நன்றி சேர். என்ர பிள்ளை என்ன விட உங்களைத் தான் நம்பிறான் என்று சொல்லிக் குரல் தழுதழுத்த பொழுது, அருகே, மாணவர்கள் சிலர் வெளியேறி வந்து கொண்டிருந்தனர், அதெல்லாம் எப்பையோ முடிஞ்சுது அம்மா, அவன் கடந்து வந்திட்டான். நீங்கள் வீட்ட போங்கோ என்று சொன்னேன். தங்யூ சேர் என்றார். வாழ்நாளில் நான் நேரில் கேட்ட சில அரிதான நன்றிகளில் ஒன்று அது. * நிகர் வாழ்விலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ ஒரு மனிதர் தனக்கு நிகழும் அநீதிகளையோ துஷ்பிரயோகங்களையோ உரையாடுவதும் அதற்கான நீதியைப் பெற முனைவதற்கும் நாம் உடனிருப்பது ஒரு சமூகமாக நாம் செய்ய வேண்டியவை. இத்தகைய அநீதிகளும் அவை நடைபெறும் முறைகளும் அவற்றுக்கான தீர்வுகளும் அடையப்பட நாம் உதவ வேண்டும். அதுவே பிரதானமானது. பாதிக்கப்பட்டவர்களாகத் தம்மை முன்வைக்கு ஒருவர் பக்கத்திலிருந்தே நாம் பிரச்சினைகளை அணுகும் நேரத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டதினாலேயே அவர் சொல்பவை உண்மைகள் என்ற நிலையைச் சென்று சேர்வது, உண்மையைக் கண்டறிவதிலும் நீதியைப் பெற்றுத்தருவதிலும் தடைகளை ஏற்படுத்தும். அவர்களது மனநிலைகளும் நெருக்கடிகளும் அவர்களை உண்மைகளை விழுங்கவோ அல்லது வேறு விதமாக முன்வைக்கவோ தூண்டும். அவர்கள் சொல்வது பெரும்பாலும் பகுதியளவு உண்மைகள் என்ற அடிப்படைப் புரிதல் இருக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வயது, பால், சாதி, இனம், வர்க்கம், உளவியல் நிலை என்று பலவிடயங்கள் அந்தப் பாதிப்பின் வகைமையில் அதற்கான நீதியில் செல்வாக்குச் செலுத்தக் கூடியது. எல்லா விக்டிம்களும் ஒரே வகையானவர்கள் அல்ல. அவர்கள் விரும்புவதும் ஒரே வகையான தீர்வுகளை அல்ல. சிலர் தாமாகவே தம்மைச் சரிசெய்யக் கூடியவர்கள். சிலருக்கு உதவி தேவைப்படலாம். சிலர் தன் மேல் பாதிப்பு நிகழ்த்தியவரை தண்டிக்க விரும்பலாம். சிலர் மன்னிக்கலாம். சிலர் விலகலாம். இப்படிப் பலவகையான வழிகளில் சமூகச் சிக்கல்களும் அதன் தரப்பினர்களும் வித்தியாசங்கள் கொண்டவர்கள். இத்தகைய வித்தியாசங்களை விளங்கிக் கொள்ள மேற்சொன்னவற்றிலிருந்து மாறுபட்ட உதாரணமொன்றைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, பாதிக்கப்பட்டவர்கள் நார்சிஸ்ட் உளவமைப்பு உடையவர்களாக இருப்பின் அவர்களை அணுகுவதைப் பற்றிய உளவியல் வேறுவிதமானது. கீழே இருக்கும் விக்டிம் நார்ஸிஸ்ட் பற்றிய அவதானிப்புகள், இணையத்தில் உள்ள உளவளத் தளங்களின் கட்டுரைகளிலிருந்து பெறப்பட்டது. நிகர் வாழ்வில் ஒருவர் நார்ஸிஸ்ட் உளநிலைகளின் ஏதாவது ஒரு கூறைக் கொண்டவராகவோ அல்லது எட்டுப் பொருத்தமும் கொண்டவராகவோ இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதுவும் அவர்களைக் கையாளும் முறை தொடர்பிலும் உரையாடுவது பாதிக்கப்பட்டவர்கள் என்ற பெருந்திரளின் பன்மைத்துவமான அணுகுமுறைகளையும் நீதிகளையும் அடைவதற்கும், நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் தீர்வின் வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கும் முக்கியமானது. முதலில் விக்டிம் பிளேமிங் என்பதைச் சுருக்கமாகப் பார்க்கலாம். இது தொடர்பில் ஓரளவு பரவலான அறிமுகம் நம் சமூகத்தில் ஏற்கெனவே உருவாகியுள்ளது. பாதிக்கப்பட்ட நபராக ஒருவர் தன்னை முன்வைக்கும் பொழுது அவரை நோக்கிச் சமூகம் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படும் நபரை அல்லது அவரது முன்னுரிமையைப் பாதுகாப்பது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நிர்பந்திப்பதற்குப் பதில் பாதிக்கப்பட்டவரை நிர்ப்பந்தித்தல் என்பவற்றை விக்டிம் பிளேமிங் என்று சுருக்கமாக வரையறுக்கலாம். இதில் பல்வகைமையான பின்னணிகளைக் கொண்ட பாதிக்கப்பட்டவர்கள் என்ற தரப்பு இருக்கும். ஒருவர் ஒரு தன்னிலையில் பாதிக்கப்பட்டவராகவும் இன்னொரு தன்னிலையில் பாதிப்பை ஏற்படுத்துபவராகவும் இருக்க முடியும். வன்புணர்விலோ அல்லது உடலியல் துஷ்பிரயோகங்களிலோ இவை இன்னும் அதிகமாகச் சமூகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் நிகழ்த்தப்படும். ஆனால் எப்பொழுதும் முதற்கரிசனை பாதிக்கப்பட்டவரின் சொந்தக் குரலுக்கே இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவராக ஒருவர் தன்னை முன்வைக்கும் போதுதான் இந்த விக்டிம் பிளேமிங் அதிகம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. பதிலாக வேறு ஒரு நபர், குற்றச்சாட்டை முன்வைக்கும் போது குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர் தனது தரப்பிலிருந்து சந்தேகங்களையோ அல்லது கேள்விகளையோ மட்டுமே முன்வைக்கலாமே தவிர, பாதிப்பைச் செலுத்தியவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட முடியாது. அல்லது அந்த நோக்கிலிருந்து உரையாடலைத் தொடரக் கூடாது. குற்றத்திற்கான ஆதரங்களை அவர் முன்வைத்தே ஆகவேண்டும். அதற்காக அவர் எந்த வெளியைத் தீர்மானிக்கிறாரோ, அதிலேயே அது வெளிப்படுத்தப்பட வேண்டும். ஒருவர் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் ஒரு வழக்கினைப் பதிகிறார் என்றால் அதற்குக் குறைந்த பட்ச ஆதாரமாவது தேவை. ஒன்று பாதிக்கப்பட்ட நபர், அல்லது அப் பாதிப்புத் தொடர்பான ஏதாவதொரு ஆதாரம். சமூக வலைத்தள பொலிஸ் நிலையத்திற்கு இது எதுவும் தேவைப்படாது, அதற்கு ஊகங்களே குற்றவாளியை முடிவு செய்யப் போதுமான ஆதாரம். அல்லது திரிபுபடுத்தப்பட்ட தெரிவு செய்யப்பட்ட அல்லது விழுங்கும் உண்மைகளே போதுமானது. சமூக வலைத்தளமோ நேர் உரையாடல்களோ கூடப் பாலியல் குற்றச் சாட்டுகளிலோ அல்லது எந்த வகையான குற்றச்சாட்டுகளிலோ அவற்றிலுள்ள உண்மையை அறிவதென்பது சிக்கலானது என்ற அடிப்படையைச் சமூகத்தில் சிறு தரப்பினராவது உள்வாங்க வேண்டும். * சமூகவலைத்தளங்களில் உருவாகியுள்ள அரியவகை முன்னேறிய பிரிவொன்றை ‘அம்பலப்படுத்தளாளர்கள்’ என்று சுட்டலாம். ஒரு சமூகத்தில் வைத்தியர்கள், செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் போல் இதுவும் ஒரு வகைமை. கொஞ்சம் புதியது. சாதாரணமாக ஊர்களில் இப்படிப் புறணி பேசுபவர்கள் இருப்பார்கள். அவர்களை இந்த வகைமைக்குள் அடக்க முடியாது. அம்பலப்படுத்தலாளர்களின் சேவையும் அணுகுமுறையும் புதியது. ஆகவே குறைபாடுகள் இருக்கும். வழிமுறைகளில் அவர்கள் முன்னேற வேண்டும். ஒரு நபர் மீதோ அமைப்புகளின் மீதோ இவர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கும் வழிமுறை அவற்றுக்கான தீர்வினை அடைவதற்குத் தடைகளை உருவாக்குகிறது. குழப்புகிறது. ஆகவே அம்பலப்படுத்தலாளர்கள் தங்கள் நோக்கமான பாதிக்கப்பட்டவருக்கு நீதியைப் பெற்றுத்தருதல் என்பதில் கூடிய கவனத்தை உருவாக்க இன்னும் உழைக்க வேண்டியும் அவை தொடர்பில் வாசித்து அறிவார்ந்து விவாதித்து தங்களது சமூகப்பணிகளைத் தொடரவும் வேண்டும். மேலும், இத்தகைய ஒரு அரிய வகைமுயற்சி தொடர்பிலும் அதன் வரலாறு, முன்னோடிகள் தொடர்பில் விக்கிபீடியா மற்றும் தமிழ் விக்கி பக்கங்கள் உருவாக்கப்பட வேண்டும். வரலாற்றை ஆவணப்படுத்துதல் மிகவும் முக்கியமானது. இன்னும் பல அம்பலப்படுத்தலாளர்கள் உருவாக அதுவொரு விதையாக இருக்கும்😉 அம்பலப்படுத்தலாளர் ஒருவர் கவனிக்க வேண்டிய ஒரு உதாரணத்தினை இப்போது பார்க்கலாம். பாதிக்கப்பட்ட விக்டிம் ஒருவருக்கோ அல்லது பலருக்கோ இழைக்கப்பட்ட அநீதியை வெளிக்கொணரும் போது, அவர்கள் கேட்கும் தகவல்கள் அத்தனையும் உண்மையானது, அவற்றுக்கு வேறு பக்கங்களே இருக்காது போன்ற முன்முடிவுகளை எடுக்கக் கூடாது. எனது அனுபவத்தில் பாதிக்கப்பட்டவரோ பாதிப்பைச் செலுத்தியவரோ இரு தரப்பும் தன்னிலையிருந்தே தகவல்களை வெளிப்படுத்துவார்கள். அதைக் கொண்டு ஒருவர் எந்த முடிவுக்கும் வருவதும், தீர்வை நோக்கிய வழிமுறைகளைப் பொறுப்பற்றுக் கையாள்வதும், அதன் மூலம் மேலும் பாதிப்பினைப் புதிய வகைகளில் வேறு நபர்களுக்கு உண்டாக்குவதும் தவறான அணுகுமுறை. ஒரு பாதிக்கப்பட்ட நபர் நார்ஸிஸ்ட் மனநிலை கொண்டவர் என்று வைத்துக் கொண்டால் அதை எப்படிக் கையாள்வது, அல்லது அவர் வேறு வகையான பாதிக்கப்பட்ட நபர் என்பதாக இருந்தால் எப்படிக் கையாள்வது என்பது தொடர்பில் இன்னும் விரிவாக நாம் உரையாட வேண்டும். நாங்கள் எல்லோருமே இவற்றைக் கையாள்வதில் புரிதல் குறைபாடுள்ளவர்கள் என்ற அடிப்படை நம்பிக்கையைக் கொண்டிருக்க வேண்டும். நான் நம்புவதே சரியானது என்று முன்னகர்ந்தால் நீதிக்கான வழிகள் அடைபடும். நார்சியஸ் என்பது ரோமானியக் கவிஞர் ஒருவர் பயன்படுத்திய ஒரு புராணக்கதை. தனது சொந்தப் பிரதிபலிப்பை நீரில் பார்த்து அதைக் காதலிக்கும்படி சபிக்கப்பட்ட ஒருவனைப் பற்றியது. நார்சியஸ் தனது சொந்தப் பிரதிபலிப்பால் தன்னைத் திரும்பக் காதலிக்க முடியவில்லை என்ற விரக்தியுடன் இறந்து போகிறான். டபொடில்ஸ் மலர்களை நார்சியஸ் தன்மைக்கான குறியீடாக ஓவியங்களில் பயன்படுத்துவார்கள். (நார்சியஸ் தன் பிரதிபலிப்பைப் பார்த்தல்) * போகன் சங்கர் விக்டிம் நார்சிஸம் பற்றிய ஒரு ஆங்கிலக் கட்டுரையின் சாராம்சமாக எழுதிய குறிப்பில், “தன் மேல் மட்டுமே ஆர்வம் உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக் கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது. தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது. ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாகத் தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது. இதை victim narcissm என்கிறார்கள். இது இப்போது பெருகி வருகிறது”. விக்டிம் நார்ஸிசிட்கள் ஐந்து வகையாக உருவாகக் கூடும். துஷ்பிரயோகம் அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் பெரியவர்களாகிய நார்ஸிஸ்டுகளாக வளர வாய்ப்புள்ளது. உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகம் முதல் உடல் ரீதியாகப் பாதிக்கப்படுவது வரை இதில் அடங்கும். புறக்கணிப்பு அவர்கள் பெற்றோர்கள் அல்லது பராமரிப்பாளர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்தால், இது அவர்களை வெறுமையாகவும் தனியாகவும் உணர வைக்கும், இது பெரும்பாலும் மற்றவர்களிடமிருந்து அக்கறையக் கோருவதற்கு வழிவகுக்கும். கொடுமைப்படுத்துதல் அவர்கள் பள்ளிக்கூடத்தில் துன்புறுத்தப்பட்டால், அது அவர்கள் வளரும் போது பாதிக்கப்பட்ட மனநிலையை வளர்க்க வழிவகுக்கும், அங்கு அவர்கள் தங்கள் பாதையைக் கடக்கத் துணிந்த எவருக்கும் எதிராக, தொடர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெற்றோரின் நார்ஸிசம் அவர்களின் பெற்றோரில் ஒருவர் அல்லது இருவருமே நார்சிஸ்டுகளாக இருந்தால், அந்தச் சூழலில் வளரும் குழந்தை வாழ்வதற்கு இதே போன்ற குணநலன்களை வளர்த்துக்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன. சமூக அழுத்தங்கள் இந்த நாட்களில் வெற்றிபெற தனிநபர்கள் மீது நிறைய அழுத்தம் உள்ளது, மேலும் அவர்களுக்கு அவர்கள் ஒருபோதும் போதுமானதாக இல்லை என்று நினைக்கும் ஒருவருக்கு, நார்சிஸ்டிக் நடத்தைகளை நாடாமல் இருப்பது கடினமாக இருக்கும். உளநல ஆலோசகர்கள் இத்தகையவர்களின் இயல்புகளைப் பின்வருமாறு அவதானிக்கின்றனர். மற்றவர்களைக் குற்றம் சாட்டுதல் விக்டிம் நார்சிஸ்ட்டுகள் உள்ளார்ந்து மிகவும் பலவீனமானவர்கள். அவர்கள் தங்கள் தவறுகளையோ பிழைகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாகத் தங்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்களுடன் அவர்கள் மேல் தான் தவறு என்ற குற்றவுணர்ச்சியை உருவாக்குவார்கள். எல்லாமே நான் தான் எப்பொழுதும் தங்கள் மேலேயே கவனம் குவிக்கப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். தான் சொல்வதை ஒரு சொல் பிழையில்லாமல் மற்றவர்கள் நம்ப வேண்டும். நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் ஆகவே நான் சொல்வது மட்டும் உண்மை. நம்பவில்லையென்றால் நீங்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்ற நிலைக்குச் செல்வார்கள். அப்பாவிக் கதாபாத்திரம் தன்னை எந்த நிலையிலும் அப்பாவியாகவே முன்வைத்தல். ஒருவரை நம்ப வைக்க உண்மையைக் குழப்பவும் திரிக்கவும் கூடியவர்கள். உதாரணத்திற்குத் தானறியாத ஒரு நபரின் பாலியல் தொடர்பில் தனக்கு இருக்கும் மனநிலைக்கு ஏற்ப எதையாவது ஒரு பொய்யை உருவாக்குதல். பரப்புதல். விமர்சனத்தை ஏற்காமை ஒழுங்கமைக்கப்பட்டு வழங்கப்படும் பார்வைகளைக் கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை அவர்கள் தங்கள் உளம் மீது தொடுக்கப்பட்ட யுத்தமாகக் கொள்வார்கள். அதிலிருந்து மீள எதிர்த்தரப்பின் மீது எந்த நிலைக்குச் சென்றும் குற்றச்சாட்டுகளை உருவாக்குவார்கள். தற்காத்துக் கொள்ளலும் குற்றச்சாட்டுகளை மாற்றிக்கொண்டிருந்தலும் தன் மீது கேள்விகள் எழும் போது தன்னைத் தற்காத்துக்கொண்டு எதையும் அல்லது யாரையும் பலி கொடுக்கத் துணிவார்கள். அதையிட்டு குற்றச்சாட்டுகளை வகைதொகையில்லால் அள்ளியிறைப்பார்கள். பொறுப்பை ஏற்க மறுத்தல் அவர்கள் விக்டிம்கள் என்ற பாவனையில் விளைவுகளுக்கான எந்தப் பொறுப்பையும் தான் ஏற்கத்தேவையில்லை என்ற நிலையைத் தொடர்ந்து தக்க வைப்பார்கள். நான் அதற்காகச் சொல்லவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று தப்பித்துத்துக்கொள்ள முயல்வார்கள். அதே நேரம் தாங்கள் செய்த தவறுகளுக்கும் சேர்த்து, நீங்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். அது அவர்களைத் தாங்கள் செய்தது சரிதான் என்று தங்களையே நம்ப வைக்கத் தேவையானது. பின்வழித் தோற்றத்தை உருவாக்குதல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காண்பதற்கு முக்கியமான குறியீடு, அவர்கள் குற்றங்களைப் பிற நபர்கள் மீது சுமத்துவதிலும் அதை நம்ப வைப்பதிலும் மாஸ்ட்டர்களாக இருப்பார்கள். அந்த நேரத்தில் மிகுந்த உணர்ச்சிவசத்தினதும் கண்ணீரினதும் மூலமும் கூட கேட்பவரைக் குற்றவுணர்ச்சிக்கு உள்ளாக்கித் தன் பக்கம் நிற்க வைக்கத் தூண்டுவார்கள். விக்டிம் நார்சிஸ்ட்டை அடையாளம் காணல் ஒரு விக்டிம் நார்சிஸ்ட் தொடர்ந்து தன் வாழ்வில் தனக்கு நிகழ்பவற்றுக்கு மற்றவர்கள் தான் காரணம் என்பதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்களா? அவர்கள் தொடர்ந்து தங்கள் நட்பிலோ காதலிலோ உறவுகளை இழக்கிறார்களா? தங்களுடைய இலக்குகளை அடைவதற்குச் சிரமப்படுகிறார்களா? கழிவிரக்கம், கவலை, பொறுப்புணர்வு இந்த மூன்றும் அவர்களிடம் இல்லையென்றால் அவர்கள் ஒரு நார்சிஸ்ட். மேற்சொன்னவற்றைக் கண்டுகொண்டால் விலகி விடுவதே உங்களின் உளநலனைப் பாதுகாக்க முதல் வழி. * ஒருவர் தன்னையொரு விக்டிம் நார்சிஸ்ட்டாக உணர்ந்து கொண்டால் அவர் பின்வரும் வழிமுறைகளை அணுகலாம் என்று உளமருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சிகிச்சை பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கான சிறந்த சிகிச்சையானது, மற்றவர்களை எப்படி மீண்டும் நம்புவது, கருணையை வளர்ப்பது மற்றும் அவர்களின் சொந்த செயல்களுக்குப் பொறுப்பேற்பது எப்படி என்பதை அறிய உதவும் ஒரு சிகிச்சையாகும். இது ஒரு கடினமான பாதையாக இருக்கலாம், ஆனால் ஒரு நிபுணத்துவம் வாய்ந்த சிகிச்சையாளரின் உதவியுடன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய முடியும். சுய உதவி பாதிக்கப்பட்ட நார்சிஸ்டுகளுக்கு சுய உதவி மற்றொரு சிறந்த வழி. அவர்களின் உணர்வுகள், தொடர்புத் திறன் வகைகள், உறவுகளில் எல்லைகள் போன்றவற்றைச் சிறப்பாகக் கையாள்வது எப்படி என்பதை அறிய உதவும் பல புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள் உள்ளன. இந்தச் சிக்கல்களைத் தாங்களே எதிர்கொள்ளும் வாய்ப்பை இது அவர்களுக்கு வழங்கும். அன்போ சக மனிதர் மீது நம்பிக்கையோ இல்லாததால் தனிநபருடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவர், சிகிச்சையாளர் அல்லது பிற நிபுணரைப் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். மருந்துகள் இது மனநல மருத்துவர்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிபுணர்களிடமிருந்து ஒரு பொருத்தமான இடத்தில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட வேண்டும். அங்குதான் அந்தச் சோதனைகள் பாதுகாப்பாகவும் மேற்பார்வையிலும் செய்யப்படும். * விக்டிம் நார்சிஸ்ட்டை எதிர்கொள்ளுதல் முதலாவது, விக்டிம் நார்சிசம் பற்றித் தேடி வாசித்து அறிவை விரிவாக்கிக் கொள்ளுதல். நார்சிஸ்ட்டுகளின் தந்திரங்களும் கையாளுகைகளையும் அறிந்து அவர்கள் திரிபுகளையும் பொய்களையும் ஆயுதமாக்கித் தம்மை எவ்விதம் தக்க வைக்கிறார்கள் என்பதை அறிவார்ந்து விளங்கிக் கொள்ளுதல். இரண்டாவது, உங்கள் உணர்வுகளை மதியுங்கள். உங்களுக்கும் சொந்தமான பார்வைகள் உணர்ச்சிகள் உண்டு அவையும் உண்மையானவை என உணருங்கள். மூன்றாவது, உங்கள் எல்லைகளை நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உங்களை Manipulate பண்ண முடியாது என்பதை உணர்த்துங்கள். நான்காவது, நிதானமாகி அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து உங்களை விலக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவது, இத்தகையவர்களை எதிர்கொள்ள உளநல நிபுணர்களை நாடி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள். ஆறாவது, நார்ஸிஸ்ட்களிடமிருந்து தொடர்பைத் துண்டிப்பதன் மூலமாக உங்கள் சொந்த வாழ்வில் முன்னேறிச் செல்லுங்கள். இவை உளவியலாளர்கள் மற்றும் உளவள ஆலோசகர்கள் விக்டிம் நார்சிஸ்ட்டுகளுடன் உறவிலிருப்பவர்களுக்கு வழங்கும் பரிந்துரைகள். பாதிக்கப்பட்டவர்கள் என்ற பிரிவில் உள்ள ஒரு உதாரணத்திற்கு இவ்வளவு விரிவு இருக்குமென்றால் பாலியல் சார்ந்த பிரச்சினைகள் எவ்வளவு விரிவான உரையாடலையும் அறிதலையும் கோரக்கூடியவை என்பதை நாம் கொஞ்சமாவது மனம் திறந்து உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும், அம்பலப்படுத்தலாளர்கள் introverted narcissist என்றால் என்ன என்பதையும் தேடி வாசித்து அறிய வேண்டும். * எந்தவொரு குற்றச்சாட்டும் பாதிக்கப்பட்டவர்களை எதிர்காலத்தில் உருவாக்கும் நோக்கம் கொண்டதாக இருக்கக் கூடாது. அவற்றைத் தடுக்கும் வழிமுறைகளை உரையாடுவதாகவே இருக்க வேண்டும். அவற்றை எல்லாத் தரப்பினரும் தங்கள் புரிதல்களிலிருந்து முன் வைக்க வேண்டும். இதில் தனி நலன்களோ, பழி தீர்க்கும் உணர்ச்சிகளோ உள்நுழையாமல் தவிர்க்க வேண்டும். அதுவே ஏதாவதொரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் பாதிப்புகளைத் தாமே முன்வந்து உரையாடும் பாதுகாப்பன வெளிகளை உருவாக்க உதவும். நான் என்னளவில் கையாளும் வழிமுறைகளில் சிலவற்றை இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். இப்படிப் பல வகையான மானுடரும் அவர்களுக்கான உளவியல் நெருக்கடிகளும் நிலமைகளும் உண்டு. எங்களுக்கு நிபுணத்துவமோ குன்றாத செயலூக்கமோ இல்லாத செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்த்து, எங்களின் ஆதார விசைகள் முழுமையாக ஒன்றி நேர்நிலையான மனிதர்களுடன் பயணிக்கும் ஒரு வாழ்க்கையே பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது. எதிர்மனநிலை கொண்டவர்கள் சூழ் காலங்களில் புயற் காற்றுள் லாந்தர் வெளிச்சமென நம் அகச்சுடரைக் காப்பதே பாதிக்கப்பட்டவர்களுக்கெனக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவரினதும் முதன்மையான பணி. “செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி” https://kirishanth.com/archives/827/2 points
-
ஒரு கிலோ விளாம்பழம்
2 points(குறுங்கதை) ஒரு கிலோ விளாம்பழம் --------------------------------------- பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?' 'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......' சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான். வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர். இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது. இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ? அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான். ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள். பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள். ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது. மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை. இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல. முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது. ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர். பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே. கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான். வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.2 points
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள். நியூயோர்க் வாழ் மக்கள் ஏதாவதொரு சிறிய விடுமுறையில் போனால் திரும்ப வந்து அவர்களது வீட்டில் குடியிருக்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் சிப்பிலியாட்டுகிறது. நாளாந்தம் ஏதோ ஓர் மூலையில் இந்தப் பிரச்சனை நடக்கிறது. மெக்சிக்கோ எல்லையால் வருபவர்களை ரெக்சாஸ் மாநிலம் அத்தனை பேரையும் தனக்கு(நாளாந்தம் 10000 பேர்வரை)இருப்பிட சாப்பாட்டு வசதிகள் செய்ய முடியாதென்று முடிவெடுத்து எல்லையால் வருபவர்களை ஒவ்வொரு பேரூந்துகளைப் பிடித்து சிகப்பு கட்சி நகரங்கள் அதாவது (Sanctuary City)சரணாலய நகரம் என்று சொல்லப்படுகின்ற வாசிங்டன் டிசி,நியூயோர்க்,இலினேஸ்,கலிபோர்ணியா போன்ற நகரங்களுக்கு அனுப்புகிறார்கள். ஆரம்பத்தில் நகரபிதாக்களில் இருந்து சகல பிரமுகர்களும் வரும் பேரூந்துகளை வரவேற்றார்கள்.நாளாந்தம் பேரூந்துகளின் தொகை கூடக்கூட வரவேற்பவர்களின் தொகையும் குறைந்துவிட்டது. சரி வந்தவர்களை தங்க வைக்க என்று 2-3-4-5 ஸ்ரார் கொட்டல்களில் விட்டு நல்ல சாப்பாடுகளும் கொடுத்தார்கள்.வந்தவர்களின் தொகை கூடிக்கூடி ஒரு லட்சத்தைத் தாண்டும் போது தான் நிலமை மேசமாகிக் கொண்டு போவதை உணர்ந்தார்கள். மத்திய அரசோ மாநில ஆளுநரோ இதற்காக மேலதிக பணம் ஒதுக்கவில்லை. கட்டிப் போட்டு பராமரிக்க பணம் இல்லை.எல்லோரும் விரும்பியபடி ஊர் சுற்றுகிறார்கள்.எங்கே போனாலும் களவு.பொலிசுக்கு கூப்பிட்டால் சம்பவம் நடந்து பலமணி நேரத்தின் பின்பே வருகிறார்கள். கையும் களவுமாக கள்வனைப் பிடித்தாலும் நீதிமன்றம் கொண்டு போனால் பிணை இல்லாமலே வெளியே வருகிறார்கள். அண்மையில் நியூயோர்க் நகரத்தில் 4-5 பேர் சேர்ந்து 2-3 பொலிசாருக்கு அடித்துவிட்டார்கள்.அவர்களைப் பிடித்து நீதிமன்றம் கொண்டு போனால் உடனேயே பிணை இல்லாமல் விடுவிக்கப்பட்டார்கள். வெளியே வந்தவர்கள் பொலிசாருக்கு நடுவிரலைக் காட்டிக் கொண்டு போகிறார்கள். அடுத்தடுத்த நாள் மக்களின் கொந்தளிப்பால் அவர்களைத் தேடினால் கலிபோர்ணியா போய்விட்டார்கள்.பின்பு அங்கு எங்கோ ஒரு மூலையில் வைத்து பிடித்தார்கள். பெரிய பிரச்சனை பகலில் தெருத்தெருவாக கூட்டமாக திரிபவர்கள் திடீர் திடீர் என்று ஆள்அரவமற்ற வீடுகளுக்குள் கதவுகள் யன்னல்களை உடைத்து உள்ளே போய் களவும் எடுக்கிறார்கள் அப்படியே தங்கவும் செய்கிறார்கள். வீட்டுக்காரர் வந்து பார்த்து அவர்களைக் கலைக்க பொலிசைக் கூப்பிட்டால் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது நீ நீதிமன்றம் போய் முறையிடு. அதேநேரம் வீட்டின் தண்ணீரையோ மின்சாரத்தையோ சமையல் காசையொ நிற்பாட்ட முடியாது.அப்படி நிற்பாட்டினால் உங்களை கைது செய்து நடவடிக்கை எடுப்போம் என்கிறார்கள். இன்று நியூயோர்க் பிரவுன்ஸ் என்னும் நகரத்தில் சந்தேகத்தில் ஒருவரை துரத்த ஒரு வீட்டு நிலக்கீழ் அறைக்குள் ஓடியிருக்கிறார்.பின்னே சென்ற பொலிசார் உள்ளே போனால் 7 பேர் உள்ளே.போதை வஸ்துகள் குண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் வெற்றுத் துப்பாக்கி ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் தேடப்படுபவர் அத்துடன் ஒரு 7 வயதுக் குழந்தை. அத்தனை பேரையும் நீதிமன்றம் கொண்டு போனால் கொலை வழக்கில் தேடப்பட்டவரைத் தவிர மற்றையோரை விடுவித்துள்ளார் நீதிபதி. வீட்டுக்காரர் மாதக் கணக்காக நீதிமன்றுக்கு அலைவதாக சொல்கிறார்கள். https://abc7ny.com/eight-suspected-migrants-arrested-in-the-bronx-after-police-found-them-squatting-with-guns-and-drugs/14605864/ Child found among guns, drugs in Bronx home occupied by several squatters. NORWOOD, The Bronx (WABC) -- Police have arrested several suspected migrants who they found squatting with guns and drugs in the basement of a Bronx home. The big bust happened last Wednesday when police received a call about a man with a gun just footsteps away from a school. Officials say they chased 24-year-old Hector Desousa Villata, who is believed to be from Venezuela, into the home on Hull Avenue. That is where police arrested him, long with seven other suspected migrants. One man, 22-year-old Javier Alborno, tried to flee with a weapon but was soon arrested. When authorities obtained a search warrant, they found two more loaded guns, three loaded extended magazines, ammunition, and a bag of ketamine mixed with cocaine. A 7-year-old child was also found in the home. "Two of the people with the guns had open cases, one for an attempted murder in Yonkers, and one walking around with an open gun indictment, walking around," said NYPD Chief of Patrol John Chell. A neighbor spoke out Tuesday and said the group had been squatting. "They're squatters and the owner has been trying to get them out of the apartment for the longest period of time," said neighbor Alfred Munoz. "I think he has a court date set, apparently because they're squatters for more than 30 days..... they came, they were a disruptive force mainly because there were a lot of them. You didn't know who was staying, not staying there, and the owner of the building had a hell of a time trying to get them out." Desousa Villata and the others were charged with criminal possession of a weapon, criminal possession of controlled substance and acting in a manner injurious to a child. Officials say all of the men, but two were released without bail. Desousa Villalta was already charged with attempted murder for shooting another person in the leg during an argument in Yonkers. The extent of the criminal activity at the house is the subject of investigation here while six of the suspects are out on release. The suspect accused of shooting someone in the leg in Yonkers is out on supervised release. Some of the suspects are also under investigation in connection with a robbery pattern in Bergen County. இந்தச் செய்தியை கூகிளில் மொழிபெயர்த்து போடலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் பண்டிதர் தம்பி @இணையவன் க்கு கூகிள் தமிழ் விளக்கம் குறைவாம்.அதனால் மொழிபெயர்ப்பை விட்டுவிட்டேன். இந்த செய்திகள் பற்றி @ரசோதரன் @நீர்வேலியான்இன் அனுபவங்கள் தகவல்களை அறிய விரும்புகிறேன்.2 points
-
இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
👍 என்னுடன் பயிற்ச்சி நிலையத்துக்கு வரும் ஒருவர் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் elliptical மெசினில் பயிற்சி செய்கின்றவர். யாழ்களத்தில் முன்பு இதை தெரிவித்து இருந்தேன். உங்கள் அனுபவம் கால் பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும்.2 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
😂 வெளிநாடுகளில் ஒவ்வொரு தமிழர்களும் சொந்த வீடு வைத்திருப்பதோடு அவர்களுக்கு பிள்ளைகள் பிறக்கும் போது ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வீடு வாங்கி அந்த வீட்டை வெள்ளை இனத்தவர்களுக்கு வாடகைக்கு விட்டிருப்பார்கள் என்று இலங்கையில் சிலர் நம்பவைக்கபட்டுள்ளதை கண்டேன்.2 points
-
இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
பல உடல் அவயவங்களைப் பொறுத்த வரையில் use it or lose it என்பது உண்மை, முழங்கால் மூட்டைப் பொறுத்த வரை இது மிகப் பொருந்தும். எங்கள் உடலில் இருக்கும் சிக்கலான மூட்டு முழங்கால் மூட்டு. கிட்டத் தட்ட intelligent design என்று சொல்லலாம்😎. அதன் சிக்கல் தன்மையைக் காட்டுவதற்காக மட்டும் படத்தை இணைத்திருக்கிறேன். கேபிள்கள் இலகுவாக குறுக்கோடுவதற்கு வசதியாக முழங்கால் சில்லு (patella) இருக்கிறது. முழங்கால் முக்கியமான இன்னொரு விலங்கு குதிரை. குதிரைகள் நின்ற நிலையில் தான் உறங்கும். அப்படி அதிக தசைகளைப் பாவிக்காமல் நிற்பதற்கு முழங்கால் மூட்டு உட்பட்ட முக்கிய மூட்டுக்களை "லொக்" செய்து விடும் stay apparatus என்ற ஏற்பாடு குதிரையின் கால்களில் இருக்கின்றது. இதற்கு முழங்கால் சில்லும், குறுக்கோடும் கேபிள்களான tendon களும் முக்கியம்.2 points
-
இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
👍..... ஊரில் Volleyball Over Game விளையாடி விட்டு, இங்கு வந்து வேறு ஆட்களுடன் சேர்ந்து Setup Game (Standard) விளையாட ஆரம்பித்தேன். ஊரில் நின்ற நிலையிலேயே ஒரு சம்மட்டியால் அடிப்பது போல பந்தை அடித்து, திருப்பி அனுப்புவது தான் அந்த விளையாட்டு. செட்அப் வாலிபாலில் குதிப்பதும், தவழ்வதும், பாய்வதும் என்று மாறி மாறி உடனேயே செய்யவேண்டும். தொடர் விளையாட்டால், Jumper's Knee என்னும் அழற்சி முழங்காலில் வந்தது. மருத்துவர் இதையே தான் சொன்னார்: முழங்காலிற்கு மேலே இருக்கும் தசைகளையும், கீழே இருக்கும் தசைகளையும் உறுதிப் படுத்து என்று. அதற்காக சில உடற்பயிற்சிகளையும் பரிந்துரைத்தார். அளவாக விளையாட வேண்டும் என்றும் சொன்னார்.....😀 பல வருடங்களில், பல நண்பர்களுக்கு முழங்காலில் இருக்கும் ACL, MCL, PCL என்பன அறுந்து, சத்திரசிகிச்சை வரை போயிருக்கின்றனர். சிலர் திரும்பவும் வந்து விளையாடுகின்றனர். பலர் விளையாடுவதை அத்தோடு விட்டு விட்டனர்.2 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இதில் இன்னொரு வகை. அண்மையில் கனடாவில் இருந்து ஒருவர் குடும்பமாக தாயகம் சென்றிருந்தார். அவரது அக்கா வீட்டுக்கு சாப்பிட வாங்க என்று கூப்பிட்டு இருக்கிறார். அதற்கு தங்கை எனது கணவர் இந்த கோழி சாப்பிடமாட்டார். இந்த வகை மீன்களை பிடிக்கவே பிடிக்காது என்று சொன்னாராம். அடப்பாவிகளா கனடாவுக்கு வந்ததில் இருந்து இதுவரை சம்பளச்சீற் என்றாலே என்ன என்று தெரியாது. அந்த காசு இந்தக்காசு இலவச மருத்துவம் என இன்னொருத்தரின் வியர்வையை உறிஞ்சி வாழ்ந்தபடி....2 points
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
நீங்கள் மேலே சொல்வதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை. ஆனால் சாமத்திய வீடு, கலியாண வீடு, செத்தவீடு, கொடை, விடுமுறை என்று எங்கேயும் எதிலேயும் படம் தான் பிரதானம் என்ற நிலைக்கு ஈழத்தமிழர் வந்து பலகாலமாகி விட்டது என்பதும் உண்மை. ஊர்பக்கம் இன்னும் கொஞ்சம் பேய்க்காட்டலாம் போலும், ஆனால் இலண்டன் வண்டவாளங்களை நகர்புறங்களில் பலர் தெரிந்தே வைத்துள்ளனர். நான் யாழில் ஒரு உறவினர் பெண்மணியை போய்பார்தேன். அருகில் கடையில் நல்ல பழங்களை வாங்கிப்போனேன். ”நீர் பழம் கொண்டு வந்தது நல்ல விசயம், பொதுவா இலண்டன் காரர் poundland சொக்கிலேட்தான் கொண்டுவருவினம், ஒரே பிராண்ட் ஆனால் டேஸ்ட் ஒரு சதத்துக்கு உதவாது” என்று ஒரே போடாய் போட்டு விட்டார்🤣.2 points
-
"கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்"
2 points"கிறிஸ்மஸ் பற்றிய உண்மைகள்" நாம் கிறிஸ்மஸ் பற்றி சிந்திக்கும் பொழுது எம் மனதில் எழும் முதல் கேள்வி, நாம் எங்கிருந்து கிறிஸ்மஸ் விழாவை பெற்றோம் ... பைபிளில் [Bible] இருந்தா? அல்லது தொன்ம ஐரோப்பிய நம்பிக்கையில் [பாகால் வழிபாடு / paganism] இருந்தா ? என்பதே ஆகும். குழந்தை இயேசு .. மூன்று ஞானிகள் .. நட்சத்திரத்தை பின்தொடரல் .. கிறிஸ்மஸ்ஸின் உண்மை கருத்தா அல்லது ஒருவேளை அது பண்டிகை ஜம்பர்கள் [festive jumpers], உற்சாகத்தால் உந்தப்பட்ட செலவினங்கள், அதிகமாக குடிப்பது போன்றவையா? அல்லது கிறிஸ்மஸ் இவைக்கு அப்பாற்பட்டதா ? ஏனென்றால், அதன் வேர்கள், உண்மையில் கிருஸ்துக்கு [இயேசுக்கு] முந்தைய பண்டைய கால வரலாற்றில், தொலைவில் உள்ளது. கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் குறிக்கப் பட்டுள்ளது. உதாரணமாக, 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாக தெரியவில்லை. என்றாலும் கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால், அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை. மேலும் கிறிஸ்மஸ் மரத்தின் [Christmas tree] தோற்றம் பற்றி அல்லது கிருஸ்மஸ் தாத்தா [Santa Claus] பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? நீங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, கிறிஸ்மஸ்துக்கு முதல் நாள் [on Christmas eve] உங்கள் காலுறைகளைத் [stockings] தொங்க விடுங்கள் என உங்க பெற்றோர்கள் உங்களிடம் கூறி இருக்கலாம்? அடுத்த நாள் நீங்க எழும்பொழுது, சிறிய பொம்மைகள் மற்றும் சாக்லேட் மற்றும் கொட்டைகள் கொண்ட சிறிய பெட்டிகளால் [small toys and sacks or little boxes of candy and nuts] அவைகள் நிரப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். அது மட்டும் அல்ல நீங்கள் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தையும் பார்த்திருப்பீர்கள். அதன் கீழ் மேலும் பல வர்ண உறையால் சுற்றப்பட்ட பெரிய பரிசு பொருட்களை கண்டு இருப்பீர்கள். உங்களுக்கு உங்கள் பெற்றோர்கள் கிருஸ்மஸ் தாத்தா இரவில் புகைபோக்கி [chimney] வழியே கீழே வந்து பரிசு தந்தார் என கூறி இருப்பார்கள். நீங்கள் என்றாவது இதைப்பற்றி சிந்தித்து கேள்வி கேட்டீர்களா? நாங்கள் பொதுவாக பழக்கவழக்கங்கள் நிறைந்த உலகில் தான் பிறந்தோம், வாழ்கிறோம். நாங்கள் அவைகளை பொதுவாக சிறுவயதில் கேள்வி இல்லாமல் ஏற்றுக்கொண்டோம். ஆனால் நாம் வளர்ந்த பின்பும், உதாரணமாக மிகச் சிலரே, ஏன், எதற்காக பரம்பரையாக வந்த பழக்கவழக்கங்களை, நாம் பின்பற்றுகிறோம் என்பதை அல்லது ஏன் நம்புகிறோம் என்பதை அறிவுபூர்வமாக உண்மையில் அலசுகிறார்கள் அல்லது அறிய முற்படுகிறார்கள். இது எமது சமுதாயத்தின் குறைபாடு என்று தான் சொல்லவேண்டும். உதாரணமாக நான் பாடசாலையில் பயிலும் பொழுது, எமக்கு சூரிய கிரகணம் சந்திர கிரகணம் பற்றி விளங்கப்படுத்திய ஆசிரியை, அதே கிரகணத்துக்கு விரதம் இருப்பதை கண்டுள்ளேன்? ஏனென்றால், இயல்பாக, அது சரி அல்லது தவறாக இருந்தாலும், நாம், நாம் சேர்ந்த கூட்டத்தை, எந்த கேள்வியும் கேட்காமல் பின்பற்ற முனைகிறோம். இது தான் எம் முக்கிய குறைபாடு? ஆடுகள் எந்த மறுப்பும் இன்றி, தம் படுகொலைக்கு தாமே, மற்ற ஆடுகளை பின்தொடர்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாம் அப்படி செய்ய முடியாது. மனிதர்கள் எங்கு செல்கிறார்கள் என்று கட்டாயம் அறிவுபூர்வமாக சோதிக்க வேண்டும் என்று நம்புகிறேன் உண்மையில் கிறிஸ்மஸ் இயேசுவின் பிறந்த நாளை கொண்டாடுகிறதா ? அவர் டிசம்பர் 25 இல் பிறந்தாரா?, நாம் கட்டாயம் சிந்திக்க வேண்டிய கேள்வி இது. பைபிளின் வேதவசனங்கள் இயேசு பிறந்தார் என்ற உண்மையையும் மற்றும் அவருடைய பிறப்பு தீர்க்கதரிசனத்தையும் எவ்வாறு நிறைவேற்றியது என்பதையும் எடுத்து கூறுகிறது. ஆனால் அவர் பிறந்த நிகழ்வு எப்போது நடந்தது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லை. அங்கு அது அமைதியாக உள்ளது. ரோமப் பேரரசின் ஆட்சிக் காலத்தில் சத்துர்னாலியா [சடுர்நலியா / சதுர்னாலியா] எனும் பண்டிகை இத்தாலி முழுவதும் நன்கு அறியப்பட்ட ஒரு குளிர்கால கொண்டாட்டமாகும். இந்த பண்டிகையை [Bacchanalia or Saturnalia] ரோமனியர்கள், கிருஸ்துக்கு [இயேசுக்கு] முன் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே டிசம்பர் 17-25 க்கு இடையில் கொண்டாடினார்கள் என்பது வரலாறு. இந்த காலகட்டத்தில், ரோமானிய நீதிமன்றங்கள் மூடப்பட்டன, வார இறுதி கொண்டாட்டத்தின் போது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக அல்லது மக்களை காயப்படுத்தியதற்காக யாரும் தண்டிக்கப் படக்கூடாது என்று ரோமானிய சட்டம் கட்டளையிட்டது. அப்பொழுது களியாட்டங்களும் கேளிக்கை நிகழ்வுகளும் காணப்பட்டன. அப்போது பரிசுப் பரிமாற்றங்களும் முக்கிய இடம் வகித்தன. பெரியவர்களுக்கு மெழுகுவர்த்திகளும் சிறுவர்களுக்கு பொம்மைகளும் வழங்குவது வழக்கமாகக் காணப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் போது வர்த்தக நடவடிக்கைகள் பின்தள்ளப் பட்டதோடு அடிமைகளுக்கும் கொண்டாட்டங்களில் ஈடுபடலாம் என அனுமதியளிக்கப் பட்டிருந்தது. மது அருந்துதல், பொது இடங்களில் உடையின்றி இருத்தல் போன்றவையும் அப்போது கொண்டாட்டத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன. 4 ஆம் நூற்றாண்டில், இந்த சதுர்னாலியா என்ற திருவிழாவை அங்கீகரித்து, சதுர்னாலியா பண்டிகையின் இறுதி நாளான டிசம்பர் 25ம் தேதியை இயேசுவின் பிறந்த நாள் என்று அறிவித்து, அதன் மூலம் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் வெற்றிபெற்றனர் என வரலாறு சான்றுபகிர்கிறது இன்னும் ஒரு குளிர்காலக் கொண்டாட்டமான யூல் பண்டிகையை [Yule Feast] ஸ்கென்டினேவியாவைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் டிசம்பர் இறுதி முதல் ஜனவரி தொடக்கம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இதனால் இங்கும் மற்றவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதில் இலகுவாக இருந்தது. என்றாலும் வடக்கு ஐரோப்பா கடைசியாகத் தான் கிறிஸ்தவத்துக்கு மாறியது. ஸ்கென்டினேவிய மக்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை இன்றும் யூல் என்றே அழைக்கின்றனர். யூல் என்ற சொல் கி.பி. 900 முதல் ஆங்கிலத்தில் கிறிஸ்மஸ் என்ற பொருள் உள்ள சொல்லாகவே பயன்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கிறிஸ்மஸ் என்பது கிறிஸ்துவின் திருப்பலி (வழிபாடு) [Christ's mass] என்பதன் சுருக்கம் ஆகும். கிறிஸ்மஸ் கொண்டாட்டம் , கிறிஸ்துவர்களுக்கு உரியது என்றால், ஏன், மற்ற மதத்தவர்களும் அதை கொண்டாடுகிறார்கள்? உங்களுக்கு அதற்கு விடை தெரியுமா ? ஏன் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் பொழுது, பரிசு பொருட்களை தமது குடும்பத்துடன், உறவினருடன் மற்றும் நண்பர்களுடன் பரிமாற்றுகிறார்கள் ? மூன்று ஞானிகளும் [wise men] குழந்தை இயேசுக்கு பரிசுகளை வழங்கினார்கள் என்பதாலா ? நாம் இவைகளைப்பற்றி கட்டாயம் சிந்திக்க வேண்டும். கிறிஸ்து [இயேசு], மாரி காலத்தில் கட்டாயம் பிறக்கவில்லை என்பதை மிக இலகுவாக நாம் பரிசுத்த வேதாகமம் லூக்கா அதிகாரம் 2 மூலம் அறிந்து கொள்ளலாம். [Luke 2 / The Birth of Jesus]. உதாரணமாக, அந்நாட்களில் குடிமதிப்பு [A Census] எழுதப்பட வேண்டு மென்று அகுஸ்துராயனால் [Caesar Augustus] கட்டளை பிறந்தது. அதன் படி குடிமதிப்பு எழுத எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். எனவே, அப்பொழுது யோசேப்பும் [Joseph], தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்த படியினாலே [As Belonged To The House And Line Of David], தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே [Mary] குடிமதிப்பு எழுத ஊருக்குப் போனான். அப்படி போகையில், அவ்விடத்திலே, அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் [Shepherds] வயல் வெளியில் தங்கி, இராத்திரியில் தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறுகிறது. பொதுவாக குளிர்காலத்தில் மந்தைகளை வயல்வெளியில் மேயவிட்டு, இரவில் அவைக்கு காவலாக கடும் குளிரில் கட்டாயம் இருக்க மாட்டார்கள். அதிகமாக, மேய்ப்பர்கள், மந்தைகளை அக்டோபர் 15 க்கு முன்பு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள், ஏனென்றால் அவ்வற்றை குளிர், மழையில் இருந்து பாதுகாப்பதற்காக என்று, வரலாற்று மூலமும், அங்கு நிலவிய காலநிலை மூலமும் இலகுவாக நாம் அறியலாம். மேலும் பைபிளும் தன் சாலமன் பாடல் 2:11 [இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது] மூலமும் மற்றும் எஸ்ரா 10:9, 13, [9: அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியில் அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 13: ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியில் நிற்க எங்களாலே முடியவில்லை] மூலமும் இதை உறுதிப் படுத்துகிறது. [Bible itself proves, in Song of Solomon 2:11 and Ezra 10:9, 13, that winter was a rainy season not permitting shepherds to abide in open fields at night.] ஆகவே, இவ்வற்றில் இருந்து நாம் அறிவது, இயேசு பிறக்கும் பொழுது, மேய்ப்பர்கள் இன்னும் தங்கள் மந்தைகளை வீட்டிற்கு கொண்டு வரவில்லை, எனவே, நாம் அக்டோபர் இன்னும் ஆரம்பிக்கவில்லை என்று இலகுவாக ஊகிக்கலாம். எனவே கட்டாயம் இயேசு டிசம்பர் 25 பிறக்கவில்லை. உங்களுக்கு இந்த உண்மை ஒருவேளை மனவருத்தத்தை தரலாம், என்றாலும் நாம் இதை ஏற்கத்தான் வேண்டும். ஆனால் டிசம்பர் 25 என்று தீர்மானித்தது ஐரோப்பாவில் இலகுவாக பரப்பவும், மற்றும் உலகரீதியாக எல்லோரும் கொண்டாடவும், ஏனென்றால், ஆண்டு முடிவிற்கு ஒரு கிழமைக்கு முன்னால் வருவதால், புது வருட கொண்டாட்டத்துடன் இது கலந்து விடுவதால், மத பேதம் இன்றி கொண்டாடும் ஒரு வாய்ப்பை தானாகவே அது ஏற்படுத்திக்கொண்டது எனலாம். கிறிஸ்மஸ் பண்டிகையின் முக்கிய அம்சமான 'கிறிஸ்மஸ் மரம்' [Christmas tree] ஒரு பிற்சேர்க்கையே. கிறிஸ்து [இயேசு] பிறப்பதற்கு பல நுறு ஆண்டுகளுக்கு முன்பே, பண்டிகை காலத்தில், இன்று பைன் [தேவதாருமரம்], தளிர் [ பார்வைக்கு நேர்த்தியாய் உள்ள, ஊசி இலை மர வகைகள்] மற்றும் ஃபிர் [கனங்குறைந்த உயர்தரக் கட்டைதரும் குளிர் மண்டல ஊசியிலை மரவகை] மரங்களால் [pine, spruce, and fir trees] அலங்கரிப்பது போல, அன்று பண்டைய கால மக்கள் பசுமையான மர கொப்புகளை [evergreen boughs] தமது கதவு மற்றும் ஜன்னல்களில் சூனியக்காரிகள், பேய்கள், தீய சக்திகள் மற்றும் நோய்களை விரட்ட [keep away witches, ghosts, evil spirits, and illness], குளிர் காலத்தில் தொங்கவிட்டார்கள். அவையின் தொடர்ச்சியாகவே பிற்காலத்தில் கிறிஸ்மஸ் மரம் ஆரம்பித்து இருக்கலாம் என நம்பப் படுகிறது. ஏசுநாதரின் உயிர்ப்பின் அடையாளமாக பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரத்தை பார்க்கப் பட்டதாகவும், பின் கிறிஸ்மஸ் மரத்தை 1500 ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக் கிறிஸ்து [இயேசு] பிறப்பு விழாவில் பயன்படுத்தினார் என்றும் அறிகிறோம். அன்றிலிருந்து கிறிஸ்மஸ் விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகையின் மற்ற ஒரு முக்கிய அம்சம் சாண்டா கிளாஸ் என்ற கிருஸ்மஸ் தாத்தா ஆகும். இது ஒரு முழுக்க முழுக்க கற்பனை கதாப்பாத்திரமே. நம்ம ஊர் அம்புலி மாமா கதை போன்றது இதுவாகும். துருக்கியின் மீரா நகரில் பிறந்த நிக்கோலஸ் [Saint Nicholas of Myra] என்ற பாதிரியார் வாரி வழங்கும் குணம் படைத்தவர். ஏழைகளுக்கு உதவுவார். குழந்தைகளுக்கு ரகசியமாக பரிசு தருவார். பிற்காலத்தில், நிக்கோலஸ் என்பவரே சாண்டாகிளாஸ் [Santa Claus] என மாற்றப்பட்டார் என வரலாறு கூறுகிறது. கிறிஸ்மஸை கடைபிடியுங்கள் என்றோ அல்லது அப்படியான ஒன்றை ஏசுநாதரின் சீடர்கள் [apostles] கடைப்பிடித்தார்கள் என்றோ பைபிள் சொல்லாமல் அமைதியாக இருந்தாலும், கிறிஸ்மஸ் மரம் போன்ற ஒன்றைப்பற்றி சொல்லி இருப்பது உண்மையில் ஆச்சரியமாக உள்ளது. உதாரணமாக எரேமியா 10:2-6 [Jeremiah 10:2-6,] இல், புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள் என்று தொடங்கி .. காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; கைவினைஞர் அதை தனது உளி கொண்டு வடிவமைக்கிறார். பின் வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். ... அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது என்று கூறி .. அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமை செய்யாது, அதேநேரத்தில், , நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று முடிக்கிறது. ஆனால் சிலர் இதை பிழையாக வாசித்து, கிறிஸ்மஸ் மரம் அலங்காரமாக வைப்பதால் ஒரு தீங்கும் இல்லை என்று முடிவு எடுக்கிறார்கள், ஆனால் அப்படி இங்கு உண்மையில் சொல்லப்படவில்லை? இங்கு சொல்லப்பட்டது , முன்னைய பழக்க வழக்கமான மரத்தை அலங்கரித்து வீட்டில் வைப்பதால் ஒரு பயனும் இல்லை என்றே ஆகும் . இந்த வசனத்திற்கு அடுத்ததாக, அது " கர்த்தாவே, உமக்கு ஒப்பானவனில்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது" என்று முடிக்கிறது இதுவே, நான் அறிந்த அளவில், கிறிஸ்மஸ் பற்றிய ஒரு உண்மை வரலாறு! எல்லோருக்கும் நேரத்துடன் கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள் !! "முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பல்மீன் நடுவண் திங்கள் போலவும் இனிது விளங்கி பொய்யா நல் இசை நிறுத்த இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறைமதி வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே" ["பத்துப்பாட்டு – மதுரைக்காஞ்சி"] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points
-
சிரிக்க மட்டும் வாங்க
2 points2 points
- "மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை]
"மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை] துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தார். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தார். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவர் மட்டுமல்ல; அவர் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தார். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும் நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின் நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான். குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும் சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான். ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்? மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும் 'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான். சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்! ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்! புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும் தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர். "இருஇனம் வாழும் ஒரு நாட்டில் இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? " "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி இணக்கம் கண்டு இதயம் பரிமாறி இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும், அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும் இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது. ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින් පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා දහවල පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා මදකින් පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ ?' குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன் இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்? தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே இதயம் அலைந்து உன்னைத் தேடுதே! கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது. "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & வலிமை கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம் எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points- அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
பாகம் 10. கட்டுநாயக்கா அதிகாரிகளுக்கு டக்ளஸ் டிமிக்கி. ஈழப் போராளிகள் அரபாத்துடன் தொடர்பு.1 point- நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள்.
இனி வரும் காலங்களில் பேசாமல் ஒதுக்குப்புறமாக உள்ள சிறிய ஊர்களில்ப் போய் இருப்பது தான் சிறந்தது என்று நினைக்கின்றேன். வீட்டு விலையும் குறைவு, அதே நேரம் லூசுகளின் பிரச்சினையும் குறைவு, வெள்ளைகளின் இனத்து வேசத்தை சகித்துக் கொள்ளலாம், ஆனால் அடங்காப்பிடாரிகளோடு வாழ முடியாது1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
யூகேயில் தனியே அரச மானியத்தில் இருந்தபடி இப்படி கொலிடே போக முடியாது என நினைக்கிறேன். ஆனால் கையில் காசுக்கு வேலை செய்தால் - சார்ல்ஸ்சை விட கலாதியாக வாழலாம்🤣.1 point- அல்பிரட் துரையப்பா முதல் அற்புதன் வரை.
சிறப்பான பதிவுகளைத் தேடி எடுத்துத் தருகிறீர்கள் நன்றி ஈழப் பிரியன்..........! கனடாவில் சில பிரதிகள் வாசிக்கக் கிடைத்தது.... மீண்டும் நன்றி.... 👍1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
தவறுகள் அதிகமாகும் போது இயற்கை உடனடியாக தீர்ப்பு எழுதி விடும்..1 point- இந்த அற்புத பயிற்சியால் உங்கள் கால் மூட்டு வலி நீங்கும்
எனது அனுபவத்தில், இந்த youtube இல் இருக்கும் (இதில் முறையாக செய்து கட்டப்பட்டு உள்ளது) முதல் 30 செக்கன்கள் - 2.35 நிமிடம் வரையான மூட்டு அசைவு, மிகவும் குறைவான அதிர்ச்சி உடனும், எல்லா மூட்டுகளும் ஏறத்தாழ ஒரே நேரத்தில் அசைவதும், என்னை பொறுத்தவரையில் மிகவும் பொருத்தமானது. இதை 15 நிமிடங்கள் தான் செய்ய வேண்டும் என்பது அல்ல. இயலுமானவரை செய்வது, ஓய்வு, மீண்டும் தொடங்குதல், மொத்தம் 15 நிமிடங்கள். இயலுமானால் நேரத்தை நீட்டிப்பது. மற்றது, எந்த வித புது கருவிகள் தேவை இல்லை. இதில் மேலும் பயிற்சிகள் உள்ளது. (இதுவே மிருகங்களின் அசைவு). பொதுவான அறிவுரை, ஆக குறைந்தது 24 மணித்தியால ஓய்வு வேண்டும், மீட்கைக்கு (உடல் பயிற்சி என்பது ஒரு உடம்புக்கு ஒரு அழுத்தம் தான்). தெரு ஓட்டம் ஒரு பகுதியே எனது பயிற்சியில், வேக நடை இன்னொன்று, இடை நிலை யோகாசனம், இப்படி மாற்றி கோள்வது, , மற்றும் வேறு சில, ஒரே விதமான அழுத்தம், ஏறத்தாழ ஒரே புள்ளிகளை கிரமமாக அழுத்தாமல் இருக்க. ஆனால், புதிதாக தொடங்கினால், அல்லது நீண்ட இடைவெளிக்கு பின் தொடங்கினால், எந்த வயதாயினும், முதலில் மருத்துவ ஆலோசனை எடுத்து தொடங்கவும்.1 point- என் இந்தியப் பயணம்
1 point- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointதொடர்சியாக விளையாட்டு செய்திகளைத் தந்துகொண்டிருக்கும் ஏராளனுக்கு நன்றி........! 👍1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointஉஸ் ........ பிள்ளைகளுக்கு ஒழுக்கம் போதிக்கப் படுகிறது........! 😂1 point- இலங்கை கடற்படை மீது பாஜகவும், காங்கிரஸும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? - கச்சத்தீவு விவகாரத்தில் பழ.நெடுமாறன் கேள்வி
1 point- ஒரு கிலோ விளாம்பழம்
1 pointதோழர் ரசோதரன் சிறந்த கதைசொல்லி. ஒரு சிறிய நிகழ்வு நேர்த்தியாக சொல்லப் பட்டுள்ளது. அதுதானே சிறுகதை ! மற்ற யாழ் சொந்தங்களின் பின்னோட்டங்கள் வாசித்தேன். ஈழத்தில் உங்கள் இளம் பருவத்தை அசைபோட்டு நீங்கள் எழுப்பும் நினைவலைகள் (nostalgia) அந்தத் தமிழ் மண்ணின் வாசனையை என் போன்றோர் நுகர வைக்கின்றன. போருக்கு முந்தைய காலகட்டத்தில் என் இளமைப் பருவத்தில் இந்தியப் பெருங்கடலின் இந்தப் பக்கத்தில் இருந்து 'இலங்கை' தமிழ் வானொலியை மட்டுமே கேட்கும் எனக்கு கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் குரலில் உங்கள் வருணனைகள் ஒலிக்கின்றன; சீனி கலந்த விளாம்பழமாய்ச் சுவைக்கின்றன.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
குறுகிய காலத்தில்…. எல்லா இடமும் ரசித்து சுற்றிப் பார்த்து இருக்கின்றீர்கள். 👍🏽🙂1 point- வடமாகாண இப்தார் நிகழ்வு ஒஸ்மானியாக் கல்லூரியில்!!
எங்களுக்கு ஒர் நல்ல குணம் இருக்கு ...மற்றவனின்ட பாசையில் பேசி மற்றவர்களை மகிழ்வித்து....எங்களுக்கு உங்கன்ட பாசையும் தெரியும் என்று சொல்லி அவையளை குசிப்படுத்தும் செயல்...1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அட... அதை நான் கவனிக்கவேயில்லை. இப்ப தான், நீங்கள் சொல்கிறீர்களே, எனக்கும் யாரோ நாலுபேர் குத்தியிருக்கிறார்களேயென்று போய்ப்பார்த்தா.... ஒன்று குறைகிறது. நீங்கள் பார்க்கும் போது இருந்த ஒரு பச்சை குறைகிறதே, அதற்கு என்ன நடந்தது? எண்ணுதலில் தவறோ? பி. கு, நான் பச்சை எதிர்பார்த்து எழுதுவதில்லை. எனக்கு தெரிந்ததை எழுதிவிட்டு போய்விடுவேன், யாராவது பச்சை குத்தினார்களா என பார்ப்பதில்லை எண்ணுவதுமில்லை. கேள்வி கேட்டு எழுதியிருந்தால் பதிலளிப்பேன். எனக்காக எண்ணி அறியத்தந்ததற்கு நன்றி கோசான்!1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
மிக சிலர். மிக குறைவாக. இலண்டனில் இருந்து நோர்வேக்கோ, சுவிசுக்கோ, ஐஸ்லாந்துக்கு அடிக்கடி சுற்றுலா போவதில்லை, ஆனால் ஸ்பெயினுக்கு முனுக்கென்றால் போய்வருவார்கள். அதே கணக்குத்தான்: 1£=1Rs என்ற நிலை வருமாயின், சராசரி மனிதன் பணம் ஈட்டும் இயலுமையும் இலங்கை=யூகே என ஆகிவிடும். அதே போல் நாடும் குறைந்தது மலேசியா அளவுக்காவது சுதந்திர நாடாக இருக்கும். அப்படி நடப்பின், மிக பெருவாரியான முதல் தலைமுறை புலம்பெயர் ஈழத்தமிழர் ஊருக்கே திரும்பி போய்விடுவார்கள் என நினைக்கிறேன். நிச்சயமாக 10 வருடத்துக்குள் வெளிநாடு வந்தோர் திரும்பி விடுவார்கள்.1 point- பெண்கள் தனியாக சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்களில் இலங்கை முதலிடம்
April fool முடிந்து இரண்டு நாட்களாகிவிட்டது, too late😂😂😂1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointமயங்க் யாதவ்: இந்தியா இதுவரை தேடிவந்த அதிவேக பந்துவீச்சாளர் இவர்தானா? கிரிக்கெட் உலகமே வியந்து பார்ப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 31 நிமிடங்களுக்கு முன்னர் “மயங்க் யாதவ் வேகப்பந்துவீச்சு உண்மையில் சிறப்பாக இருந்தது. அவரின் வேகப்பந்துவீச்சை நான் எதிர்க்கொண்டபோது எனக்கே வியப்பாக இருந்தது. ஆனாலும், அவரின் பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்பினேன். அவரின் வேகப்பந்துவீச்சு எங்களை தோற்கடித்துவிட்டது” இது இந்திய அணி வீரரும், பஞ்சாப் கிங்ஸ் கேப்டனுமான ஷிகர் தவண் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பற்றி சிலாகித்து கூறியது. அது மட்டுமல்ல ஆஸ்திரேலிய ஜாம்பவான் டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலிய புயல் பிரட் லீ, இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட பலரும் இந்திய அணிக்கு அதிவேகப் பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார் என்று மயங்க் யாதவ் பந்துவீச்சைப் பார்த்து புகழ்ந்திருந்தனர். இந்திய அணிக்கு பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும் இவர்களின் சராசரி வேகம் என்பது மணிக்கு 135 கி.மீ வேகத்தில் பந்துவீசுவது தான். சமீபத்திய கண்டுபிடிப்பாக சன்ரைசர்ஸ் அணியில் உம்ரான் மாலிக் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசினாலும் அவரின் பந்துவீச்சில் கட்டுப்பாடு, ஒழுக்கம், துல்லியத்தன்மை, லைன்-லென்த்தை பின்பற்றுவது போன்றவை பெரும்பாலும் இருப்பதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரர்கள் நவீன்-உல்-ஹக் மற்றும் மயங்க் யாதவ். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச வேகம் எவ்வளவு? ஐபிஎல் வரலாற்றில் ஷான் டெய்ட், பிரட்லீ, பெர்குஷன், நோர்க்கியா, உம்ரான் மாலிக், ஜோப்ரா ஆர்ச்சர் என பல வேகப்பந்துவீச்சாளர்கள் வந்து விளையாடினாலும் மயங்க யாதவ் போல் நிலைத்தன்மை கொண்ட வேகம், துல்லியம் இருந்தது இல்லை. ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ஷான் டெய்ட் 157 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார், அதன்பின் நியூசிலாந்து பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷன் 157 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார். அடுத்ததாக உம்ரான் மாலிக்(157) நோர்க்கியா(156.2) வேகத்தில் வீசியுள்ளனர். கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் வீசிய வேகம் 156.8 கி.மீ. துல்லியத்தன்மை, கட்டுக்கோப்பு அதிகம் உம்ரான் மாலிக் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும்போது, பெரும்பாலும் அவரின் பந்து அவுட் ஸ்விங்கிலேயே செல்லும். இவ்வாறு செல்லும் பந்துகளை பேட்டர்கள், பந்தின் வேகத்தின் போக்கிலேயே பேட்டை வைத்து தட்டினாலே சிக்ஸர் அல்லது பவுண்டரி எளிதாகச் சென்றுவிடும். அதனால்தான் உம்ரான் மாலிக்கின் டி20 சராசரி 10 ரன்களுக்கு மேல் வைத்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்கள் அதிவேகமாகப் பந்துவீசும் போது துல்லியத்தன்மையும், லைன்லென்த் மாறாமல் வீசினால் பேட்டர்கள் எதிர்கொண்டு விளையாடுவது கடினம். இதுபோன்ற கட்டுக்கோப்பான, ஒழுக்கமான பந்துவீச்சு 1980களில் மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்துவீச்சாளர்களிடம் இருந்தது. கரீபியன் ஜாம்பவான்கள் உதாரணம் கர்ட்லி அம்புரோஸ், கர்ட்னி வால்ஷ், மால்கம் மார்ஷல், ஆன்டி ராபர்ட்ஸ், இயான் பிஷப், மைக்கேல் ஹோல்டிங் உள்ளிட்ட பல பந்துவீச்சாளர்களிடம் இருந்தது. அதனால் தான் கிரிக்கெட் உலகை மேற்கிந்தியத்தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆட்டுவித்து, தொடர்ந்து இரு உலகக் கோப்பைகளை வெல்ல முடிந்தது. வேகப்பந்துவீச்சில் அதிவேகமும், துல்லியத்தன்மையோடும், லைன்லென்த்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் குறைந்துவரும் நிலையில் அத்திபூத்தார் போல் இந்திய அணிக்கு கிடைத்துள்ள வீரர் மயங்க் யாதவ். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகிய மயங்க் யாதவ் முதல் பந்தை மணிக்கு 147 கி.மீ வேகத்தில் வீசத் தொடங்கி படிப்படியாக தனது வேகத்தை அதிகரித்து 156 கிமீ வேகத்தில் வீசினார். 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மயங்க் யாதவ் வீசிய பந்துதான் அதிகபட்ச வேகமாகும். லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான தென் ஆப்பிரிக்கா வீரர் மோர்கல் கூட, மயங்க் யாதவின் பந்துவீச்சைப் பார்த்து மிரண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்திய மயங்க் யாதவை பாராட்டும் லக்னோ அணி வீரர்கள். 'மயங்க் மீது நம்பிக்கை வைத்தோம்' மோர்ன் மோர்கல் கூறுகையில் “மயங்க் யாதவ் பந்துவீச்சைப் பார்த்தேன். காற்றில் பந்து சீறிச் செல்கிறது மிரட்சியாக இருக்கிறது. கடந்த சீசனில் விளையாட வேண்டியவர் ஆனால் காயம் காரணமாக விளையாடவில்லை. மயங்க் யாதவின் வேகப்பந்துவீச்சு மீது நம்பிக்கை வைத்துதான் அவரை ஏலத்தில் தக்கவைத்தோம். நல்ல விக்கெட்டாக இருக்கிறது, நன்றாகப் பந்துவீசு முடிந்தவரை யார்கர்கள், பவுன்ஸர்கள், லைன்-லென்த்தில் வீசு என்று அறிவுரை தெரிவித்தேன். அதை சிறிதும் மாறாமல் மயங்க் வீசியது என்னை பிரமிப்பூட்டியது” எனத் தெரிவித்தார். வந்தார், வென்றார் மயங்க் மயங்க் யாதவ் பந்துவீச வருவதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஷிகர் தவண், பேர்ஸ்டோ அருமையான ஃபார்மில் இருந்தனர். ஆனால், மயங்க் யாதவ் பந்துவீச வந்தபின், அவரின் முதல் ஓவரைத் தவிர மற்ற 3 ஓவர்களிலும் விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். 50 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்ட பேர்ஸ்டோ, ஷிகர் தவண் போன்ற பெரிய பேட்டர்கள்கூட, மயங்க் யாதவ் வீசும் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டை கொண்டுவர முடியாமல் சிரமப்பட்டனர். அதனால்தான், பேர்ஸ்டோ தனக்கு வீசப்பட்ட ஷார்ட் பந்தை சமாளிக்க முடியாமல் மூக்கு மேல் ராஜாவாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். மயங்க் யாதவ் பந்துவீச்சில் இருக்கும் சிறப்பம்சம் என்னவெனில் அவரின் பந்துவீச்சில் அதிவேகத்தோடு, துல்லியத்தன்மை, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது, பெரும்பாலான பந்துகளை பேட்டர்களின் இடுப்பு வரை இன்ஸ்விங்காக வீசுவதுதான். இவ்வாறு பந்துவீசும்போது, பேட்டர்கள் ரன்சேர்க்க கடுமையாகத் திணறுவார்கள், ஒரு கட்டத்தில் நெருக்கடி முற்றி, பெரிய ஷாட்டுக்கு முயலும்போது கிளீன் போல்ட் அல்லது கேட்ச் கொடுத்து வெளியேறுவார்கள். பட மூலாதாரம்,SPORTZPICS யார் இந்த மயங்க் யாதவ்? புதுடெல்லியைச் சேர்ந்த மயங்க் யாதவ் 2002, ஜூன் 17ம் தேதி பிறந்தார். இவரின் தந்தை பிரபு யாதவ். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் தீவிரமான கிரிக்கெட் ரசிகர். அதிலும் மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்து ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ், வால்ஷ் ஆகியோரின் தீவிர ரசிகராக இருந்தவர். தனது மகனையும் கரீபியன் வேகப்புயல்கள் ஆம்புரோஸ் போன்று உருவாக்க வேண்டும் என தீவிரமான வேட்கையுடன் தயார் செய்துள்ளார். மேற்கு டெல்லியில் உள்ள மோதி நகரில் தான் மயங்க் யாதவ் குடும்பம் வசித்து வருகிறது. மோதி நகருக்கு அருகே தான் விராட் கோலியும் வளர்ந்தார். மோதி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தான் தொடக்கத்தில் மயங்க் யாதவுக்கு அவரின் தந்தை பந்துவீச பயிற்சி அளித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மயங்க் யாதவ். 'கரீபியன் விதையை விதைத்தேன்' மயங்க் யாதவ் குறித்து அவரின் தந்தை பிரபு யாதவ் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ நான் தினமும் தொழிற்சாலையில் இருந்து வந்தபின் சிறுவயதில் இருந்தே மயங்க் யாதவிடம் கரீபியன் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்த கதைகளைக் கூறுவேன். சிறுவயதில் இருந்தே வேகப்பந்துவீச்சுக்கான விதையை மயங்க் மனதில் விதைத்துவிட்டேன்." "ஆம்புரோஸ், வால்ஷ் போன்று நீயும் ஒரு வேகப்பந்துவீச்சாளராக மாற வேண்டும், உன் பந்துவீச்சைப் பார்த்து பேட்டர்கள் அஞ்ச வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். டெல்லி வெங்கடேஷ்வரா கல்லூரி அருகே இருக்கும் சோனெட் கிளப்பில் மயங்க் பந்துவீசி பயிற்சி எடுப்பதை தொலைவில் இருந்து ரசித்துவிட்டு வீடு திரும்புவேன்." "ஆம்புரோஸை பார்த்து ஏன் சர்வதேச பேட்டர்கள் அஞ்சினார்கள் தெரியுமா? ஏனென்றால், அவரின் பந்து பேட்டர்களின் தலையை பதம் பார்த்துவிடும். அந்த பயத்தை நீயும் விதைக்க வேண்டுமென்றால், உருவாக்க வேண்டுமென்றால் இப்போதிருந்து பயிற்சி எடு என்று மயங்கிடம் தெரிவிப்பேன்." "சிறுவயதில் டெல்லி சுற்றுவட்டாரத்தில் மயங்க் பந்துவீச்சு என்றாலே பேட்டர்கள் அச்சப்படுவார்கள். அவருக்கு செல்லமாக 'தலைக்கு வீசும் பந்துவீச்சாளர்' என்று பெயரும் வைத்தனர்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS தந்தை-மகனுக்கும் சண்டை மயங்க் யாதவுக்கும் அவரின் தந்தை பிரபு யாதவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அதாவது மயங்க் யாதவ், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் ரசிகர்கள், மயங்க் தந்தை பிரபு, ஆம்புரோஸ் ரசிகர். இரு பந்துவீச்சாளர்களில் யார் சிறந்தவர் என்று மயங்கிற்கும், அவரின் தந்தைக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று பிரபு யாதவ் தெரிவித்தார். ரிஷப் பந்த் பயிற்சியாளர் அளித்த வாய்ப்பு மயங்க் யாதவ் சிறுவயது குறித்து அவரின் தந்தை பிரபு யாதவ் கூறுகையில் “என் மகன் மயங்க், 14 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளி்ல் விளையாடவில்லை. அவர் நேரடியாக ஏ லிஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். மயங் யாதவ் பந்துவீச்சு வேகத்தைப் பார்த்த ரிஷப் பந்த் பயிற்சியாளர் தராக் சின்ஹா அவரை அழைத்துச் சென்று வாய்ப்பளித்தார்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜிதேஷ் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய மயங்க் யாதவ். சர்வீசஸ் வாய்ப்பை மறுத்த மயங்க் டெல்லியில் சோனெட் கிளப்பி்ல்தான் மயங்க் யாதவ் தொடக்கத்தில் விளையாடி வந்தார். அதன் பின்பு தான் ஏ லிஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். இந்த சோனெட் கிளப் நடத்திவரும் தேவந்தர் சர்மா கூறுகையில் “மயங்க் யாதவிடம் வேகப்பந்துவீச்சு எனும் திறமை இருப்பதை கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தவர் தராக் சின்ஹா தான். ரிஷப்பந்த், மயங்க் யாதவ் இருவரையும் பிரித்துப் பார்த்தது இல்லை. மயங்க் யாதவுக்கு சர்வீசஸ் அணியிலும் விளையாட தாரக் சின்ஹா வாய்ப்பு பெற்றுக் கொடுத்தார், வேலையும் வாங்கித் தருவதாக உறுதி தெரிவித்தார். 3 விதமான ஃபார்மெட்டிலும் விளையாட வைப்பதாக தாரக் சின்ஹா உறுதியளித்தார். ஆனால், அதை மயங்க் அகர்வால் ஏற்க மறுத்துவிட்டார். ஆனால், துரதிர்ஷ்டமாக கொரோனா 2வது அலையில் 2021, நவம்பர் மாதம் தாரக் சின்ஹா காலமாகிவிட்டார். ஆனால், அவர் இறந்தபின் தனது பயிற்சியாளர் தாரக் சின்ஹாவின் ஆசையான டெல்லி அணிக்கு விளையாடும் கனவை மயங்க் யாதவ் நிறைவேற்றினார். சண்டிகரில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் டெல்லி அணிக்காக மயங்க் யாதவ் அறிமுகமாகினார். கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்றபோது, மயங்க் 49-வது ஓவரை மெய்டனாக வீசி அணியை வெற்றி பெறச் செய்தார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES 'தாரக் சின்ஹா கடவுள்' தாரக் சின்ஹா குறித்து மயங்க் யாதவ் தந்தை பிரபுயாதவ் கூறுகையில் “தாரக் சின்ஹா எனக்கு கடவுள் போன்றவர். அவர்தான் என் மகனை இந்த அளவு வளர்த்தெடுத்தவர். கொரோனா காலத்தில் எனக்கு சரியான வேலையும், ஊதியமும் இல்லை. என் மகனை கோடைகால வகுப்பில் சேர்த்து பயிற்சி அளித்து ரூ.65 ஆயிரம் செலவிட்டது தாரக் சின்ஹா தான். என்னிடம் ரூ.20 ஆயிரம் தான் இருந்தது. அதை தாரக் சின்ஹாவிடம் திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்க மறுத்துவிட்டு, இந்த முறை என்னுடைய பணத்தை செலவிடுகிறேன் என்றார்” எனத் தெரிவித்தார். மயங்க் யாதவின் அறிமுகம் மயங்க் யாதவின் தொழில்முறை கிரிக்கெட் 2022ம் ஆண்டில்தான் தொடங்கியுள்ளது. 2022ம் ஆண்டில் அக்டோபரில் டெல்லி அணிக்காக டி20 போட்டியில் மயங்க் யாதவ் அறிமுகமாகி, மணிப்பூர் அணிக்கு எதிராக களமிறங்கினார். அதன்பின் லிஸ்ட் ஏ பிரிவில் டெல்லி அணிக்காக மயங்க் விளையாடியுள்ளார். ஒரே ஒரு முதல் தரப் போட்டியில் டெல்லி அணியில் விளையாடிய மயங்க், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். 2023ம் ஆண்டில் ஐபிஎல் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட விளையாடாமல் விலகினார். இருப்பினும் மயங்க் யாதவின் வேகப்பந்துவீச்சு மீது லக்னோ அணிக்கு தீவிரமான நம்பிக்கை இருந்ததால், ஏலத்தில் அவரை தக்கவைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மயங்க் யாதவ். 'சர்வீசஸ் வாய்ப்பை நிராகரித்தேன்' டெல்லி அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் கொண்டவர் மயங்க் யாதவ். அது குறித்து அவர் கூறுகையில் “என்னுடைய ஆட்டத்தைப் பார்த்த சர்வீசஸ் அணி எனக்கு அணியில் இடமும் வேலையும் தருவதாக கூறினார்கள். நான் ஒரு சில பந்துகளும், பவுன்சர்களும் தான் வீசியிருந்தேன். என்னுடைய திறமையில் 50 சதவீதத்தைத் தான் வெளிப்படுத்தினேன். எனக்கு வேலையும், அணியில் இடமும் தருவதாக கூறிய அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தேன். டெல்லி நான் வளர்ந்த மண் அந்த அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று கூறி டெல்லிக்காக களமிறங்கினேன்." என்றார். தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு சிறுவயதில் இருந்தே வேகம் என்றால் மிகவும் பிடிக்கும். விமானம், சூப்பர் பைக் அல்லது ராக்கெட் வேகத்தோடு எது இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் 155 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதை விரும்பினேன். முதல் முறையாக 156 கி.மீ வேகத்தை நெருங்கி இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் எனது முதல் பந்தை எவ்வாறு வீசுவது என்று கற்பனை செய்திருந்தேன். அதனால்தான் முதல் பந்தை வீசும்போது நான் பதற்றப்படவில்லை” எனத் தெரிவித்தார் மயங்க் யாதவ். https://www.bbc.com/tamil/articles/c14jj09gk7lo1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
அண்ணாமலையார் 'கச்சதீவு துரோகம் - பகுதி 2' ஐ அடுத்த நாள் வெளியிடுவதாகச் சொல்லி இரண்டு நாட்கள் போய்விட்டன. இன்னமும் வெளிவரவில்லை.....🤣 ஜீவன் தொண்டமான் இலங்கையிலிருந்து பதில் சொல்லியிருக்கின்றார் - இந்தியா கச்சதீவை ஒரு போதும் திருப்பிக் கேட்கவும் இல்லை, நாங்கள் கொடுக்கப் போவதும் இல்லை என்ற ரீதியில். ஜீவனும், அண்ணாமலையும் இனி இந்த விடயத்தை பார்த்துக் கொள்வார்கள் போல...😀1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கோலி RCBக்கு விளையாடுகிறார் என்று தெரியும் தானே நண்பா என்னது பிந்தி குதிக்க போறிங்களா அப்ப எல்லா புள்ளியும் அள்ள உங்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கு 😁😜 நான் தோத்தாலும் பரவாயில்லை ஆனால் முதல் ஆளை துணிஞ்சு கொதிச்சிட்டேன் என்ர கெத்து எப்பவும் தனி கெத்து நண்பா😁............................. நீண்ட நாளுக்கு பிறக்கு உங்களை கண்டது மகிழ்ச்சி நண்பா.......................................1 point- கச்சத்தீவு விவகாரத்தில் கருணாநிதி செய்த துரோகம் நாளை வெளியிடப்படும்- அண்ணாமலை
உண்மைதான்.. எனக்கு தெரிந்த இந்த வருடம் இலங்கைக்கு சுற்றிப்பார்க்க வந்த பல வெள்ளைகள் என்னை தொடர்புகொள்ளும்போது ஆச்சரியப்படுகிறார்கள்.. என்ன இலங்கை இவ்வளவு வேகமாக பொருளாதார சரிவில் இருந்து மீண்டு வந்திருக்கிறது என்று.. சிங்களவனின் அதுவும் ரணில் போன்ற படித்த சிங்களவர்களின் அறிவு அபாரமானது.. எல்லாப்பக்கத்தையும் சமாளித்து வெட்டி ஓடி வென்று விடுவார்கள்..1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பிற்சேர்க்கை II குப்பை கூழம். ஒப்பீட்டளவில் தெற்காசியாவில் சுத்தமான நாடு என் இலங்கையை சொல்லலாம் என்பதை நம்மில் பலர் ஏற்போம் என நினைக்கிறேன். ஆனால் இந்த நிலை விரைந்து கெட்டு வருகிறது. கிராமப்புறங்கள், சிறு நகர்கள் முன்னர் போல இருந்தாலும். நகரங்களில் இது ஒரு பாரிய பிரச்சனையாக மாறி வருகிறது. யாழில் நகரத்தில் ஒரு குப்பை தொட்டியை தேடி அரை கிலோ மீட்டர் நடந்தாலும் கிடைப்பதில்லை. அதே போல் நடைபாதைகளும் சரியாக இல்லை. என்னதான் வீட்டில் கொசு வலையில் படுத்தாலும், ஏசி பஸ்சில் போனாலும், யாழில் அதிகாலையில் இறங்கி ஆட்டோவுக்கு காத்திருக்கும் அந்த பத்து நிமிடத்தில் - நுளம்புகள் உடலை மொத்தமாகவும், சில்லறையாகவும் துவம்சம் செய்து விடுகிறன. இவை அருகில் நீர்தேங்கி நிற்கும் வடிகாலில் இருந்து வருவது கண்கூடு. அதே போல் இன்னும் சில இடங்களில் ஊறணிகள், கேணிகளும் பாசி படர்ந்து, குப்பை சேர்ந்து இளம்பச்சை நிறத்தில் நாற்றம் எடுக்கும் நிலையில் உள்ளதை கண்டேன். புகையிலைக்கு தடை என செய்தியில் இரு வருடம் முன் வாசித்த நினைவு. ஆனால் யாழில் புகையிலை பயிர்செய்கை முன்னை போலவே தொடர்கிறது. கேட்டபோது, அறகலவுக்கு பின் தடை பெயரளவில் மட்டுமே என்கிறனர். யாழின் சதுப்பு நிலம் என கூறத்தக்க புங்கங்குளம் - நாவற்குழி பகுதியில் சட்ட விரோத குப்பை கொட்டும் போக்கு அதிகரித்திருப்பதாக சொல்கிறனர். பொம்மைவெளியின் யாழ் நகரை அண்டிய பகுதி, கோம்பையன் மணல் சுடுகாட்டுக்கு எதிரே உள்ள பகுதிகள், கிட்டதட்ட 90% அளவில் நிரப்பி கட்டி, மேட்டு நிலம் போல காட்சி அளிக்கிறது. கட்டிடங்களும் எழும்பியுள்ளன. இவை சட்டவிரோத கட்டுமானம் என்றே ஆட்கள் சொல்கிறார்கள். மாரி காலத்தில் வெள்ள காடாக இருக்கும் flood plain இது. சென்னையை போல வருடம் ஒரு தரம் வெள்ள அனர்த்தம் வரும் நகராக யாழை மாற்றி வருகிறார்களோ என எண்ணத்தோன்றியது. கொழும்பில் கோட்டா காலத்தை போல அன்றி நகரின் அழகுறுத்தல், தூய்மை குன்றியே உள்ளது. வெள்ளவத்தை, தெகிவளை கால்வாய்கள் உட்பட சகல கால்வாய்களும் கடக்கும் போது நாற்றம் எடுக்கிறன. சரிந்து விழுந்து பலரை காவு கொண்ட, கொலன்னாவ குப்பை மலை, கைவிடப்பட்டுள்ளது. அதன் மேல் செடிகளும், மரங்களும் வளர்ந்து, முழுவதும் பசுமையாகி ஏதோ காட்டு மலை போல தோன்றுகிறது. கொழும்பை விட்டு வெளியேறும் மூன்று ரயில் தடங்களிலும் கணிசமான அளவு தூரம் நகரமயமாதல், குப்பை கொட்டலை அவதானிக்க முடிகிறது. உலகின் மிக ரம்மியமான ரயில் பயணங்களில் ஒன்று என நான் கருதும் கொழும்பு-காலி ரயில் தடத்தில், தெஹிவள-களுத்தற வரை அழகிய கரையோரம் எங்கும் குப்பையை கொட்டி, பற்றவும் வைத்து, நாசமாக்கி உள்ளார்கள். பிரதான வீதிகளை பொறுத்த மட்டில், வடக்கில் நன்றாக உள்ளது, ஆனால் வடக்கை போல அன்றி கிழக்கிலும், தெற்கிலும் வீதிகள் காப்பெட் ஆகி 15 வருடம் ஆக போகிறது. இந்த வீதிகள் பராமரிப்பின்றி உடைய தொடங்கி விட்டன. 2019 இல் அருமையாக இருந்த வீதிகள் சில இப்போ குன்றும் குழியுமாக உள்ளன. இவற்றை பராமரிக்க அரசிடம் பணம் இல்லை என்பது கண்கூடு. நிலமை இப்படியே தொடர்ந்தால் 90களில் இருந்த நிலைக்கு வீதி கட்டமைப்பு விரைவில் வந்து விடும். யாழ்பாண 1ம் வகுப்பு ஏசி ரயில் இருக்கைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் உடைந்தே உள்ளன. இந்திய தரம் பல்லிளிக்கிறது. உண்மையில் இரெண்டாம் வகுப்பு வசதியால இருக்கிறது. புதிதாக எத்தனையோ பெட்டிகள் போனவருடம் வந்ததாக சொன்னாலும், நான் காணவில்லை. கொழும்பு புறநகர் ரயில் இன்னும் 1990இல் பிரேமதாசா தருவித்த அதே பெட்டிகளுடந்தான் ஓடுகிறது. யாழ் வவுனியா 1ம் வகுப்பு 1000, இரெண்டாம் வகுப்பு 650, முன்றாம் வகுப்பு 400 என நினைவு. அரச பஸ், ரயில்களின் நாட்டின் காசில்லாததன்மை தெளிவாக தெரிகிறது. சுனாமிக்கு பின்னான கடற்கரையோர கட்டுமானத்தடை இருக்கிறதா இல்லையா என தெரியவில்லை அந்தளவுக்கு சட்டபூர்வ/விரோத கட்டுமானங்கள், குடியிருபுகள் எழும்பியுள்ளன.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
எதுவும் கதைப்பதாக தெரியவில்லை. சொல்லப்போனால் தமிழர்களே இதை பற்றி அதிகம் அலட்டி கொள்ளவில்லை. கேள்வி கேட்ட என்னை பைத்தியக்காரர் போல தமிழர்கள் சிலர் பார்க்கிறார்கள். சம் சும், கஜே, விக்கி வகையறாக்களின் பைத்தியக்காரத்தனம் = தமிழ் தேசியமே பைத்தியக்காரத்தனம் என நினைக்கும் போக்கு பல தமிழரிடம் கண்டேன். முன்னர் பெரும்பான்மையான தமிழர் அரசியல் உணர்வோடும், ஒரு 25% நழுவும் மனநிலையில் இருந்திருப்பின், இப்போ பத்துக்கு எட்டு பேர் நழுவல் மனநிலையில்தான் உள்ளனர். ஆனால் சிங்கள பெளத்தத்தை மீறி ஒரு அடி நகரவில்லை நாடு. முன்னர் போல சிங்கலே…அடிதடி, வெருட்டு, வெளிப்படையாக இல்லை - ஆனால் பிக்குகளின் சிங்கள மக்கள் மீதான பிடி அப்படியேதான் இருக்கிறது. நான் கதைத்த மட்டில், போர் வெற்றி இறுமாப்பை பொருளாதார அழிவு கொஞ்சம் குறைத்துள்ளது, ஆனால் இன்றும் தமிழர் நிலத்தை பறிப்பது, அரசியல் உரிமையை மறுப்பது, சிங்கள மயமாக்கலை நியாயப்படுத்துவது இப்படியானவற்றில் சிங்கள சமூகம் பழைய மனநிலையில்தான் உள்ளது. நான் நினைக்கிறேன்…. பிரித்தானிய காலத்தில் இருந்தது போல சிங்கள இனவாதம் முகிழ்த்துக் கிடக்கிறது. இப்போ இருக்கும் பிரச்சனைகள் தீர, முஸ்லிம், தமிழர்களின் நல்வாழ்வு கண்ணை குத்தும் போது - இன்னொரு அநகாரிக தம்மபால, அல்லது பண்டா வந்து அதை இலகுவாக கிண்டி கிளப்பலாம். தமிழர்களும், முஸ்லிம்களும் மனசார தாம் இரண்டாம் பட்சமாக நடத்தப்படுவதாக உணர்கிறனர். அதுவே உண்மையும் கூட.1 point- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
பாகம் II ஒருவருக்கு நீண்ட கால்கள் இருப்பது சில அனுகூலங்களையும், சில பிரதிகூலங்களையும் தரவல்லது. விமானப்பயணத்தில் பிரதிகூலம் என்னவெனில், எக்கானாமி இருக்கைகள் இடையேயான இடைவெளி போதாமையால், மடக்கி கொண்டிருக்கும் கால்கள் வலிக்கும். அதே விமானப்பயணத்தில் அனுகூலம் யாதெனில், இந்த கால் வலிக்கும் பிரச்சனயை சாட்டி, சிப்பந்திகள் பகுதியில் போய் நின்றபடி, அவர்களிடம் கோப்பி வாங்கி குடித்துக்கொண்டே கடலை போடலாம். இப்படியாக இந்த பயணத்தில் அமைந்த கடலைக்காரிதான் தமாரா. பெயருக்கேற்ற தாமரை இலை போன்ற அகன்ற முகம், அதில் சிங்கள வெட்டோடு அழகிய கண்கள். கொஞ்சம் உதட்டாலும், அதிகம் கண்களாலும் பேசிக் கொண்டாள். சீனி மட்டும் இல்லை, பால் இல்லாமல் குடித்தும், அன்று அந்த கோப்பி கசக்கவே இல்லை. மத்திய கிழக்கு விமானங்களில் இலங்கையர்கள் பணிப்பெண்களாக பொதுவாக வேலை செய்வதில்லை. இதை தமாராவிடம் கேட்ட போது, தானும் சிறிலங்கனில்தான் முன்பு வேலை செய்ததாயும், நிச்சயமற்ற நிலை காரணமாக இங்கே மாறி வந்ததாயும் கூறிக்கொண்டாள். அப்படியே பேச்சு வாக்கில், சிறிலங்கனில் டிக்கெட் போடாதே, செலவை மிச்சம் பிடிக்க they are cutting corners in maintenance (விமானப் பராமரிப்பில் கைவைக்கிறார்கள்) என்பதாயும் ஒரு எச்சரிக்கையை தந்து வைத்தாள் தமாரா. நீ இங்கே இருக்க நான் ஏன் சிறிலங்கனில் புக் பண்ண வேணும் என ஒரு அசட்டு ஜோக்கை அடித்தாலும், தமாரா தந்த அறிவுரையும், இதுவரை வாசித்து அறிந்த விடயங்களும் இலங்கையில் இந்த முறை நிலைமை மிக மோசமாக இருக்கும் என்பதையே கட்டியம் கூறுவதாக மனது நினைத்துகொண்டது. தமாராவை தவிர அதிகம் அலட்டி கொள்ள ஏதுமற்ற விமானப்பயணம் ஒருவழியாக முடிந்து, கட்டு நாயக்க நோக்கி விமானம் கீழிறங்கி, தென்னை மர உச்சிகள் கண்ணில் புலப்படத்தொடங்க, அத்தனை கிலேசங்களையும் தாண்டி மனதில் ஒரு நேச உணர்வு படர ஆரம்பித்தது. கட்டுநாயக்காவில் அதிக மாற்றம் ஏதும் இல்லை. பேப்பர் தட்டுப்பாட்டால் உள் நுழையும் சீட்டு முன்னர் தருவதில்லை என்றனர், ஆனால் இப்போ அது தாராளமாக சிதறி கிடந்தது. ஏலவே நுழைவு அனுமதி எடுத்தபடியால், அதிக அலுப்பின்றி குடிவரவை கடந்து, பொதிகளை எடுத்து கொண்டு, முப்பத்தியொரு டொலருக்கு இரெண்டு வாட் 69 போத்தல்களையும் வாங்கி கொண்டு, அழைக்க வந்திருந்த நண்பனின் வாகனத்தில் ஏறினால்….கண்களின் முன்னே காட்சியாக விரிந்தது இலங்கை. முதலில், முகத்தில் அறைந்தது போல் ஒரு நல்ல மாற்றம்…விமான நிலையத்தில், வழமையாக ஜனாதிபதிகளின் படம் இருக்கும் இடத்தில் ரணிலின் படத்தை காணவில்லை. அதேபோல, முன்னர் போல் வீதிகளிலும் தலைவர்களின் ஆளை விட பெரிய பதாதைகளை காணவில்லை. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதுவும் சிரச டீவி தனது விளம்பரத்துக்காக “பசில் திரும்பி வந்து விட்டார்” என்பதாக ஒரு பாரிய படத்துடன் கூடிய பதாதையை வைத்ததை கண்டேன். களனிப் புதியபாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் வழியே நேரடியாக ஏர்போர்ட் ஹைவேயில் இருந்து பேஸ்லைன் வீதிக்கு வாகன நெரிசலை ஓரளவு தவிர்த்து இறங்க கூடியதாக உள்ளது. இங்கே இருந்து பொரளை வழியாக, தமிழர் தலைநகரமாகிய வெள்ளவத்தைக்கு போகும் வழியில், 2010களுக்கு முந்திய காலம் போல அன்றி, கடைகள், வீடுகள் என பலதில் வெளிப்படையான தமிழர் அடையாளங்களினை பார்க்க முடிகிறது. நரெஹேன்பிட்ட, கிருலப்பன, திம்பிரிகசாய, ராஜகிரிய வரையும், மறுபுறம் பம்பலபிட்டிய தொடங்கி, கிட்டதட்ட இரத்மலான தாண்டி, மொரட்டுவ ஆரம்பம் வரையும் காலி வீதியின் இருமருங்கிலும் தமிழர் “ஆக்கிரமிப்பு”🤣, நடந்துள்ளமையை தெளிவாக காணமுடிகிறது. களனிப் பாலமும், அதன் நேர் எதிர் திசையில் இருக்கும் தாமரை கோபுரமும் இரவில் அலங்கார விளக்குகளால் ஜொலி, ஜொலிக்கிறது. மின்சார தட்டுப்பாடு உள்ள நாட்டில் இது ஏன்? யாரும் கவலை கொள்வதாக தெரியவில்லை. போன மாதம் மக்களுக்கான மின்சார கட்டணத்தை 25% ஆல் குறைத்ததாக ஒரு செய்தியையும் படித்தேன். இந்த முறை யாழ்பாணம் போனால் எப்படியும் ஒரு டிஜே நைட்டில் கலந்து கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். ஆனால் யாழில் இப்படி எதுவும் நானிருந்த காலத்தில் ஏற்பாடாகவில்லை. ஆனால் ஒரு கலை நிகழ்ச்சிக்கு விஐபி வரிசையில் டிக்கெட் இனாமாக வந்தது என போய், பெரும்பாடாகி போய்விட்டது 🤣. இனாமாக டிக்கெட் தந்தவருக்காக மேலதிக தகவல்களை தவிர்கிறேன். ஆனால் கொழும்பில் சில தமிழ் டிஜே நைட்டுகளில் கலந்து கொள்ள முடிந்தது. ஆண்களும், பெண்களும் வரம்பை மீறியும் மீறாமலும் மகிழ்ந்திருந்தார்கள். வெளிப்படையாக அதீத போதை பொருட்கள் பாவிப்பதை இந்த இடங்களில் நான் காணவில்லை. ஆனால் எங்கும் பரவலாக சிவ மூலிகைப்பாவனை இருக்கிறது. மது, தண்ணீராக ஓடுகிறது. யாழிலும் எல்லாரும் போதை பொருளை இட்டு கதைக்கிறார்கள். ஆனால் ஐரோப்பிய நகர்களில் வெள்ளி இரவுகளில் தெரிவதை போல் அப்பட்டமாக இது தெரியவில்லை. ஆனால் ஒவ்வொருவரும் அவர்கள் நட்பு வட்டத்தில் இப்படி நாசமாகிய ஒரு இளையோரை பற்றி சொல்லும் அளவுக்கு நிலமை மோசமாகவே உள்ளது. கொழும்பில் மூலைக்கு மூலை பெட்டிங் (சூது) கடைகள், ஸ்பா எனப்படும் மசாஜ் மையங்கள் உள்ளன. வடக்கு, கிழக்கில் இதை நான் காணவில்லை. ஆனால், யாழிலும், மட்டகளப்பிலும் சில பிரபல விடுதிகளை சொல்லி, அங்கே பள்ளிகூட வயது பெண் பிள்ளைகள் வந்து போவார்கள் என சிலர் சொன்னார்கள். எந்தளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு முறை போகும் போதும், சில விடயங்கள் மேலும் மேலும் தளர்வதை உணர முடிந்தது. ஆனால் புலம்பெயர் நாட்டில் சிலர் சித்தரிப்பதை போல், எல்லாமும் நாசாமாகி விட்டது என்பதும் இல்லை. கொழும்பு, மேல் மாகாணத்தை தாண்டியும் சில சிங்கள பகுதிகளில் இந்த முறை நேரம் செலவிட்டேன். அம்பலாங்கொட போன்ற 99% சிங்கள மக்கள் வசிக்கும் இடங்களில் அடுக்கடுக்காக தமிழர் நகைக்கடைகள் இருந்தன. அதே போல் அனுராதபுரத்தில், பொலநறுவையில், கெக்கிராவ போன்ற இடங்களில் முஸ்லிம் மக்கள், வியாபாரங்கள், மசூதிகள் என பரவலாக வெளிப்படையாக காண முடிந்தது. சிலாபம் போன்ற இடங்களில் தமிழ், முஸ்லிம் பெயர்களில் கடைகளை கண்டேன். பெளத்த மதத்தின் மீதான பற்று, சிங்கள மக்கள் மத்தியில் இன்னும் அப்படியே உள்ளதை மத அனுஸ்டானங்களும், ஞாயிறு பள்ளிகளும் காட்டி நிற்கிறன. கொழும்பின் மதச்சார்பற்ற பிரபல பாடசாலைகளில் கூட, மாதாந்த பிரித் உட்பட பல வகையில் மதம் புகுத்தபடுவதாக பலர் விசனப்பட்டனர். மேல்மாகாண, மலையகத்தில் இருந்து மேல்மாகாணம் வந்த தமிழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் ஒரு படி மேலே போயுள்ளனர். அதே போல் முஸ்லிம் சமூகம், வியாபாரத்தில் பல படி உயர்ந்து நிற்கிறது. வட கிழக்கு தமிழ்ச் சமூகமும் அவ்வளவு மோசமில்லை. ஆனால் ஓட்டு மொத்த இலங்கையும் வெளி நாட்டு மோகத்தில் தவிக்கிறது. நிற்க, நாட்டில் வறுமை தலைவிரித்தாடும், வீதி எங்கும் பிச்சைகாரர் இருப்பர், 80 களில் சென்னை தி. நகர் போனால் கிடைக்கும் அனுபவம் கிடைக்கும் என நினைத்துப்போன எனக்கு, அப்படி எந்த அனுபவமும் கிடைக்கவில்லை. பிச்சைகாரர் எண்ணிக்கை முன்னர் போலவே உள்ளது. இலண்டனில் வீதி விளக்கில் நிற்போர் அளவுக்குத்தான் இருப்பதாக படுகிறது. அடிக்கடி வேலை நிறுத்தங்கள் வருகிறது. ஆனால் ஓடும் போது ரயில் பஸ்சுகள் ஓரளவு நேரத்துக்கு ஓடுகிறன. யாழ், கல்முனை/அக்கரைபற்றுக்கு நல்ல பஸ்சுகள் ஓடுகிறன. அதுவும் அக்கரைபற்றுக்கு, தெற்கு விரைவு சாலை வழியாக, விரைவாக, சுகமாக போக முடிகிறது. குருநாகலவில் ஒரு கொஞ்ச தூரம் கண்டி விரைவுச்சாலையின் ஒரு பகுதி மட்டும் பாவனைக்கு வந்து, தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் யாழ் பஸ் புத்தளம் வழியேதான் போகிறது. புத்தளம், அனுராதபுரம் இடையே உள்ள சேர்வீஸ் நிலையம், நல்ல தரமாயும், சுத்தமான கழிவறையுடனும் உள்ளது. அதேபோல் மாத்தறை விரைவுச்சாலையில் மேநாட்டு பாணியில் மிக திறமான சேர்விஸ் நிலையங்கள் இரு பக்கமும் உள்ளன. மருந்துகள் உட்பட எந்த பொருளும் இல்லை என்று இல்லை. ஆனால் எல்லாமுமே 2019 உடன் ஒப்பிடின் குறைந்த பட்சம் மூன்று மடங்கால் அதிகரித்துள்ளது. மேநாடுகளில் சாமான்யர்களின் பொருளாதாரத்தை பாணின் விலையை கொண்டு மதிப்பீடு செய்யும் ஒரு அடிப்படையான முறை உள்ளது. இலங்கையில் அதை மாட்டிறைச்சி கொத்து ரொட்டியின் விலையை கொண்டு அணுகலாம் என நினைக்கிறேன். முன்னர் 250-350 என இருந்த விலை இப்போ, 850-1000 ஆகி உள்ளது. அதே போல் 100க்கு கீழே இருந்த லீட்டர் பெற்றோல், இப்போ 400க்கு அருகே. ஆனால் மாதச்சம்பளம் இந்த அளவால் அதிகரிக்கவில்லை. ஆனாலும் பட்டினிசாவு, பிச்சை எடுக்கும் நிலை என்று பரவலாக இல்லை. அப்படியாயின் எப்படி சமாளிக்கிறார்கள்? பலரிடம் நயமாக கேட்ட போது, ரோலிங், கடன் அட்டை, சிலதை குறைத்துள்ளோம் என்பது பதிலாக வருகிறது. இதில் முதல் இரெண்டையும் அதிக காலம் செய்ய முடியாது. உண்மையில் மாத சம்பள ஆட்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் சமாளிக்கிறார்கள். சகல கடைகளிலும், நாடெங்கிலும் சனம். பொருட்கள் வாங்குதலில், உணவு கடைகளில், விழாக்களில், திருவிழாக்களில், திருமணங்களில்….ஒரு குறையும் தெரியவில்லை. ஒரு எள்ளுபாகு 50 ரூபாய் என்றதும் ஒரு கணம் ஜேர்க் ஆகவே செய்தது. ஆனால் கல்கிசை-வெள்ளவத்த பஸ் கட்டணம் 70 ரூபா என்றால் கணக்கு சரியாகவே தெரிந்தது. அம்மாச்சியில் மட்டும் எல்லாமுமே கொள்ளை மலிவு. வெளியே குறைந்தது 400 விற்கும் பப்பாசி பழ ஜூஸ், இங்கே 100! எப்படி முடிகிறதோ தெரியவில்லை. பொரித்த கச்சான் 100 கிராம் 100 ரூபாய், மஞ்சள் கடலை 100 கிராம் 150 ரூபாய், அவித்த சுண்டல் குறைந்த அளவு விலை 100 - என முன்னர் 20 ரூபாய் இருந்த இடத்தில் இப்போ 100 ரூபாய் இருக்கிறது. வாகனங்கள் இறக்குமதி இல்லை என்பதால் இன்னும் அதிகமாக விலை ஏறி உள்ளன. தகவல் தொழில் நுட்ப disruptive technologies ஆகிய ஊபர், ஊபர் உணவு, பிக் மி என்பன யாழ் உட்பட எங்கும் கிடைக்கிறது. ஓரளவு பெயர் உள்ள கடைகளில் எல்லாம் contactless அட்டைகள் நாடெங்கும் பாவிக்க முடிகிறது ( தனியே பூட்சிட்டி, கீள்ஸ் மட்டும் அல்ல, உள்ளூர் ஆட்களின் சுப்பர் மார்கெட்டுகளிலும், பேக்கரிகளிலும் கூட). யாழில் காங்கேசந்துறை கடற்கரையை நேவி பராமரிப்பில் மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்கள். ஒரு இராணுவ நகரின் (cantonment) நெடி இருக்கத்தான் செய்கிறது. உள்ளூர்வாசிகளும், இராணுவத்தினரை காண வரும் சிங்கள குடும்பத்தினரும் என ஒரு கலவையாக இருக்கிறது அந்த இடம். நேவியே கோப்பி, சோர்ட் ஈட்ஸ் விற்கிறது. பண்ணை கடற்கரை பூங்கா அதே போல் தொடர்கிறது. நான் கண்டவரை முன்னிரவில் ஜோடிகள் சுதந்திரமாக கைகோர்த்தபடி ஆபாசம் இல்லாமல் மகிழ்ந்திருக்கிறார்கள். அருகேயே உணவு கடைகளும், சிறுவர் பூங்காவும், நடை பயிலும் பாதையும், அங்காடி பெட்டி கடைகளும் என சந்தோசமாக மக்கள் இருப்பதை காண சந்தோசமாக இருந்தது. ஆரிய குளமும் நன்றாக உள்ளது. நடைபாதை அருகே பெஞ்சுகள், மின் விளக்குகள், உணவு வண்டிகள் என நன்றாக உள்ளது. எமிரோன் என்ற ஒரு யாழ் நொறுக்குதீனி கடை மேற்கத்திய பாணியில் பல கடைகளை திறந்துள்ளார்கள். கொழும்பில் கூட. அதே போல் தினேஸ் பேக்கவுசும் ஒரு பாரிய தொகுதியை கொக்குவிலில் திறந்துள்ளனர், மேலும் மூன்று கிளைகள் உள்ளன. யாழுக்கு பீட்சா ஹட் இரெண்டு வந்துள்ளது. இலங்கையில் தன் முகவரான அபான்ஸ் உடன் முறுகிகொண்டு மக்டொனால்ஸ் தன் கடைகளை மூடியுள்ளது. யாழின் பொருளாதாரம் அசுர பாய்ச்சல் பாய்வதாகவே நான் உணர்கிறேன். வலிகாமத்தில் யாழ் நகரை அண்டிய சிறு நகர்களில், பிரதான வீதியோர காணிகள், கண்ணை மூடி கொண்டு பரப்புக்கு ஒரு கோடி என்கிறார்கள். மட்டு நகரை அண்டிய வீதியோர காணிகளிலும் பேர்சுக்கு இதே விலைதான். யாழ் தனியார் பேரூந்து நிலையம் இயங்குகிறது. ஆனால் ஒருமாதம் முன்பும், பொது பேரூந்து நிலையத்தை அடைத்து, தனியார் ஆட்கள் போராட்டம் நடத்தி கலைந்து சென்றார்கள். தனியார் மருத்துவமனை வியாபாரமும் நாடெங்கும், குறிப்பாக யாழில், மட்டக்களப்பில் கொடி கட்டி பறக்கிறது. அதே போல் மேல் மாகாணத்தில் இருக்கு சில திருமண மண்டபங்கள்….இலண்டனில் கூட அந்த வகை ஆடம்பரமாக இல்லை. நீர்கொழும்பு பெரிய முல்ல பகுதி கிரீஸ், சைப்பிரஸ் போல ஒரு இரவு வாழ்க்கை மையம் போல மாறியுள்ளது. தென்னிலங்கையில், களுத்தற முதல் காலி, மிரிச, வெலிகம வரை ரஸ்யர்களால் நிரம்பி வழிகிறது. கடைகளில் சிங்களம், ஆங்கிலம், ரஸ்யனில் போர்டு வைப்பது சாதாரணமாக உள்ளது. ரஸ்யர்கள் தாமே வியாபாரங்களில் ஈடுபட்டு தமது வருவாயை குறைப்பதாக சுதேசிகள் முறையிட்டு இப்போ அரசு விசாரிக்கிறது. சகலதும் விலை கூடினாலும் வேகமாக ஓடி பொலிசிடம் மாட்டுப்பட்டால் கொடுக்கும் விலை மட்டும் இன்னும் 1000 ரூபாயாகவே உள்ளது. பொலிஸ் நிலையம், ஓய்வூதிய அலுவலகம், பட்டினசபை - மூன்றுக்கும் போன அனுபவத்தில் அலட்சிய போக்கு முன்பை விட குறைந்துள்ளதாக பட்டது (எனது அதிஸ்டமாகவும் இருக்கலாம்). அண்மையில் கொழும்பு, யாழ், கண்டி, காலியில் பெரும் கிரிகெட் போர்கள் (பிக் மேட்ச்) நடந்தன. நான் போனவற்றில் மது ஆறாக ஓடியது. ஆனால் ரகளை குறைவு, இல்லை என்றே சொல்லலாம். எல்லாரும் ரணில் அல்லது ஏகேடி என்றே சொல்கிறார்கள். சொந்த வீடு உள்ள, வாடகைக்கு அடுத்த வீட்டை விடும் ஆட்கள் கூட ஏகேடி ஆதரவாய் இருப்பது முரண்நகையாக படுகிறது. ஆனால் மேல்தட்டு வர்க்கம் ரணிலின் பின்னால் நிற்பது கண்கூடு. முடிவுரை வெளியில் இருந்து நினைத்தை போல் நாட்டின் நிலை அவ்வளவு மோசம் இல்லை. அல்லது மோசமாய் இருந்து, ரணில் வந்த பின் முன்னேறியுள்ளது. நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது. (முற்றும்) 🙏 சுக்ரியா மேரே (b) பையா🙏. பிளேன் எடுக்க முன்னம் நிறையை மீண்டும் அளந்து, போதிய எரிபொருளோடுதான் எடுப்பினம் என நினைக்கிறன். அத்தோட எல்லாரும் முழு அளவுக்கு வெயிட்டோட வாறேல்ல தானே. கூடவே சின்ன பிள்ளையள், குழந்தையள் எல்லாம் சேர்த்தா…நோ பிராப்ளம்.1 point- ஐ.பி.எல் 2024 - செய்திகள்
1 pointhttps://www.iplt20.com/video/52068/watch-out-flying-ms-dhoni-pulls-off-a-stunning-diving-catch முடியுமா????1 point- என் இந்தியப் பயணம்
1 pointசிறிது நேரம் யாருமே பேசவில்லை. ஓட்டோ ஓட்டுனர் : கீளாம்பாக்கம் தானே? கணவர்: ஓம் ஓ ஓ : எங்க போறீங்க கணவர்: மதுரை நான்: அந்த இடம் தெரியும்தானே? ஓ ஓ : ஆமா ஆமா. கீளாம்பாக்கத்தில ஆறு மாசம் முன்னாடிதான் புதிசா கலைஞர் கருணாநிதி நினைவா தொறந்து வைச்சாங்க. ரொம்பப் பெரிசு. மின்னாடியே உங்களுக்குத் தெரியாதா? கணவர்: தெரியாது. கோயம்பேடு என்று சொன்னாங்களே. ஓ ஓ: அங்க இப்ப யாரையும் ஏத்தக் கூடாது. எந்த பஸ்சும் வராது. நான்: ரிக்கற் போட்டவர் பொய் சொல்லீட்டார் கணவர்: ஒரு மணித்தியாலத்தில போகலாமோ? ஓ ஓ: இன்னிக்கி வெள்ளிக்கிழமை. ரொம்ப ராபிக்கா இருக்கும். எப்பிடியும் நான் ஒண்ணரை மணி நேரத்தில கொண்டு போயிடுவன். அன்று போய் சேர ஒன்றே முக்கால் மணிநேரம் பிடிக்க நான் டென்ஷன் ஆனதுக்கு அளவே இல்லை. அப்பா! மிகப் பிரமாண்டமாக ஒரு விமானநிலையம் போல வடிவமைத்திருந்தார்கள். நானும் லண்டன் விக்டோரியா கோச் நிலையம் போல ஒரு பத்து சொகுசு பஸ்கள் நிற்கும் என்று பார்த்ததால் - சினிமாவில் கூட அப்படிப் பார்த்ததில்லை. மிகப் பிரமாண்டம். ஒரு நூறு பஸ்கள் ஆவது நிற்கும். மற்றும் வேளையென்றால் இறங்கி நின்று படமோ வீடியோவோ எடுத்துவிட்டுத்தான் போயிருப்பேன். என் பஸ்சைப் பிடிக்கும் அவசரத்தில் வேறு எதுவுமே தோன்றவில்லை. உள்ளே சென்றால் ஒரு ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் நிற்கக்கூடியதாக பெரிதாக இருந்தது மண்டபம். மலசலகூடமும் மிகச் சுத்தமாக இருக்க நம்ப முடியாததாக இருக்க கணவரிடம் வாய்விட்டுச் சொல்கிறேன். இன்னும் ஒரு வருடம் போகட்டும். அதன்பின் வந்து பாரன் என்கிறார். எமது பஸ்ஸைத் தேடிப் பிடித்து உள்ளே சென்றால் நாம் மட்டும் தான் உள்ளே. யாரையும் காணவில்லை. எல்லா ஏசியையும் போட்டு குளிர் தாங்கவே முடியவில்லை. 96 ம் ஆண்டு இத்தாலி செல்லும்போது தான் முதன்முதல் தொடருந்தில் தூங்கிக்கொண்டு வந்தோம். இதுவே பேருந்தில் தூங்கியது முதல் அனுபவம். நாம் கொண்டுபோன விரிப்பை விரித்துவிட்டு திரைச் சீலையையும் இழுத்துவிட்டுப் படுத்தபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். நான் நினைத்ததுபோல இல்லாமல் சுத்தமாக இருந்தது. ஆனாலும் அந்த ஏசியிலும் ஒரு நுளம்பு ஓடி ஓடிக் கடிக்க மனிசன் ஒரு இருபது நிமிடப் போரில் நுளம்பை வெல்ல அதன் பின் நிம்மதியான தூக்கம்தான். காலை ஆறு மணிக்கு மதுரை போகும் என்று சொன்னாலும் ஆறரைக்கே பேருந்து போய் சேர்ந்தது. பேருந்துத் தரிப்பிடம் போல் இல்லாமல் ஒரு வெட்டவெளியில் நிறுத்த, நாம் இறங்க இரண்டு மூன்று ஓட்டோக்காரர் என்னிடம் வாங்க, என்னிடம் வாங்க என்கின்றனர். அதில் ஒரு அப்பாவிபோல் இருந்த ஒருவரை கணவர் தெரிவு செய்ய, நாம் ஏறி அமர எங்கே போகணும் என்கிறார் அவர். மீனாட்சி அம்மன் கோவில் பக்கமாக நல்ல கோட்டல் ஒன்றுக்குக் கூட்டிச் செல்லுங்கள் என்கிறார் கணவர். கோவிலுக்குக் கிட்ட கோட்டல்கள் இல்லீங்க. ஒரு கிலோமீற்றர் தூரத்தில் தான் கோட்டல் எல்லாம் இருக்கு. கோயிலுக்கு அங்கிருந்து 200 ரூபா தான் என்கிறார். இரண்டு மூன்று கோட்டல்கள் தொடர்ந்து இருக்க, ஓட்டுனர் சென்று இரண்டு கோட்டல்களில் கேட்க எல்லாம் புல் என்கின்றனர். மூன்றாவதில் இடம் இருக்க நான் உள்ளே சென்று அறையைப் பார்க்கவேண்டும் என்கிறேன் வரவேற்பில். தாராளமாகப் பாருங்கள் என்கின்றார். அறை என்னவோ பரவாயில்லை. ஆனால் போகும் வழியில் சுத்தம் இல்லாமல் இருக்க இது வேண்டாம் என்கிறேன். இன்னிக்கி சனிக்கிழமை வெளியூர்காரங்க வந்திருப்பாங்க. வேறு இடம் பார்க்கலாம் என்று இரண்டு மூன்று பார்த்து நான்காவதாக 3700 ரூபாய்கள் காலை உணவுடன் என்று கூற அதைத் தெரிவு செய்கிறோம். அறையில் குளித்து ஆடைமாற்றிக்கொண்டு கீழே வர உணவகம் கூட மிக நேர்த்தியாக இருக்கிறது. பபே என்றாலும் கேட்டுக்கேட்டு தோசை, பூரி என்று கொண்டுவந்து தருகின்றனர். அவர்களின் உபசரிப்பில் மனமும் வயிறும் நிறைந்து போகிறது. சரி இனி மீனாட்சி அம்மனிடம் செல்வோம் என்கிறார் கணவர். அவரது போனில் ஊபர் அப் இருக்கு. எனவே ஊபர் கிளிக் செய்ய அதில் ஓட்டோவும் வர ஓட்டோவுக்குப் போடுவம் என்று போட 157 ரூபாய்கள் என்றும் பணமாகக் கொடுக்கலாம் என்னும் ஒப்ஷன் வர, மனிசனும் மலிவாக இருக்கு என்று சந்தோசப்படுறார். 7 நிமிடத்தில் வருவதாகக் காட்டிய ஓட்டோ மூன்று நிமிடத்தில் தானாகவே கான்சல் ஆகிது. திரும்ப ஒன்று போட அதுவும் அப்படி இப்படி என்று எழு நிமிடத்தில் கான்சல் ஆக எனக்குக் கடுப்பு ஏற்பட, ரோட்டில் போய்நின்று பிடிப்போம் என்று ரோட்டுக்குச் சென்றால் அங்கு வந்த ஓட்டோ ஐநூறு கேட்கிறது. மனிசன் கூட என்று சொல்ல எவ்ளோ தருவீங்க என்று கேட்க மனிசன் இருநூறு என்கிறார். வேறு ஓட்டோ பாருங்க என்று கூறிவிட்டு அவன் கிளம்ப, வாற இடத்தில கஞ்சத் தனத்தைக் காட்டாதைங்கோ என்று எரிச்சலுடன் சொல்கிறேன். அடுத்த ஓட்டோவில் நானூறு சொல்ல மனிசன் கதைக்க முதலே நான் ஏறி அமர்கிறேன். உனக்கு எதிலும் அவசரம் என்று மனிசன் புறுபுறுக்க இது எங்கட ஊர் இல்லை. எங்களுக்கு அலுவல்தான் முக்கியம் என்கிறேன். சனி தொடரும்1 point- என் இந்தியப் பயணம்
1 pointஎனக்கே அடையாளம் தெரியாமல் முகத்தில் நன்கு ஐந்து இடங்களில் வீங்கிப்போய் இருந்தது. பிள்ளைகளுக்கு அனுப்புவதற்குப் படமெடுத்து அனுப்பிவிட்டு படத்தை பார்க்கச் சகிக்காது உடனேயே போனில் இருந்து அழித்துவிட்டேன் என்றால் பாருங்களன். அன்றே ஒன்லைனில் வேறு ஒரு தங்குவிடுதியை புக் செய்து போகும்போது வரவேற்பில் நின்றவரிடம் இரவு முழுதும் சரியான நுளம்புக்கடி என்கிறேன். நுளம்பே இல்லையே மடம் என்கிறார். அப்ப இரவு போய் படுத்துப்பாரும் என்றுவிட்டு வெளியேறி அடுத்த தங்குவிடுதிக்குச் சென்று சூட்கேசை வைத்துவிட்டு குளியலறையில் யன்னல் பூட்டக் கூடியதா என்று பார்த்துவிட்டுத்தான் பதிவே செய்தது. அதுமுடிய அறைக்குள் சென்றவுடன் பழைய தங்குவிடுதியின் இணையத்தளத்துக்குச் சென்று உள்ளதை உள்ளபடி விமர்சனம் எழுதி முடித்தபின்தான் கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டது. அன்று பகல் வங்கிக்குச் சென்று எமது பணத்தைப் பற்றிக் கதைத்தால் அந்த அலுவலை முடிக்க ஆறு நாட்கள் செல்லும் என்றார்கள். அத்தனை நாட்கள் சென்னையிலேயே நின்று என்ன செய்வது? அதனால் எங்காவது போய் வருவோம் என்றால் மனிசன் மதுரை போவோம் என்கிறார். எனக்கும் கீழடியைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் பலநாட்களாக இருக்க, நானும் சம்மதிக்க இருவரும் சென்று ஒரு பயண முகவர் ஒருவரைச் சந்தித்து அன்றைய இரவு பத்து மணிக்கு படுக்கையுடன் கூடிய சொகுசு உந்தில் மதுரை செல்லப் பயணச் சீட்டு எடுத்துவிட்டு மதிய உணவை உண்டுவிட்டு வந்து கொண்டுவந்த கைப்பொதியில் இரு நாட்களுக்கு உரிய உடைகளையும் முக்கிய பொருட்களையும் எடுத்து அடுக்கிவிட்டு படுத்துக் குட்டித் தூக்கம் ஒன்றும் போட்டு எழுந்தால் அப்பதான் மூன்று மணி. வெளியே கடைகளுக்குச் செல்ல மனமில்லை. படம் பார்க்கப் போவோமா என்கிறேன். இங்கே பக்கத்தில சினிமா இருக்கோ தெரியவில்லை என்று மனிசன் பின் வாங்க, வரவேற்பில் போய் கேட்டுக்கொண்டு வாங்கோ என்கிறேன். போன மனிசன் ஐந்து நிமிடத்தில் வந்து பத்து நிமிட நடையில் கிரிஷ்ணவேணி என்ற சினிமா இருக்காம், நாலரைக்குப் படம் இருக்காம் என்கிறார். என்ன படம் என்று எதுவும் கேட்கவில்லை. பெரிய பயணப்பொதியை இரண்டு நாட்களில் திரும்ப வருவோம் என்று கூறி கீழே வரவேற்பில் கொடுத்துவிட்டு கைப்பொதியை இழுத்தபடி செல்கிறோம். போகும் வழியில் உணவகத்தில் மனிசன் பரோட்டவும் நான் பூரியும் உண்டுவிட்டுத் தேனீரும் அருந்தி, இரவு உண்பதற்கு வடை, போண்டா எனச் சில சிற்றுண்டிகளையும் தண்ணீர் போத்தலையும் வாங்கிக்கொண்டு படம் பார்க்கச் செல்கிறோம். நாம் நின்ற இடத்திலிருந்து அரைமணி நேரத்தில் சென்று மகிழுந்தைப் பிடித்துவிடலாம். கோயம்பேடு சந்தைக்கு அருகில் தான் பஸ்கள் தரிப்பிடம் என்று எமக்குச் சொல்லப்பட்டது. அதனால் சாவகாசமாகப் படம் முடிந்து போகலாம் என்று போய் படமும் பார்க்க ஆரம்பிச்சாச்சு. சினிமா என்பதனால் போனின் சத்தத்தையும் நிறுத்தியாச்சு. ஆறரை மணிக்கு இடைவேளையில் மனிசன் சென்று பொப்கோனும் நெஸ்கபேயும் வாங்கிவர, இரசிச்சுக் குடிச்சு மீண்டும் படம்பார்க்க ஆரம்பிக்கிறோம். நாலரைக்கு படம் தொடங்கும் என்று போட்டாலும் 15 நிமிடம் விளம்பரங்களுக்குப் பின்னர்தான் படம் ஆரம்பித்தது. அதனால் இடையில் எத்தனை மணி என்று பார்க்க போனை எடுத்தால் 5 மிஸ்டு கோல்கள். என்ன ஏது என்று பார்த்தால் அப்ப ஏழரை மணி. படம் முடிய இன்னும் அரை மணி நேரமாவது செல்லும். ஏதோ மனதில் பிரையாணம் தொடர்பானதுதான் என்று தோன்ற போனை எடுத்துக் காதில் வைத்து ஏன் போன் செய்தீர்கள் என்று கேட்க, பஸ் கோயம்பேடில் நிக்காது மடம். அதுதான் உங்களையும் பிக் பண்ணிக்கொண்டு போக போன் செய்தோம் என்கிறான் அந்த பஸ்ஸின் ஓட்டுனர். நாங்கள் சினிமா பார்த்துக்கொண்டு இருந்ததில் கேட்கவில்லை. எனக்குப் பதட்டமாகிப் போகிறது. நான் வெளியே வந்து எடுக்கிறேன் என்றுவிட்டு மனிசனிடம் விடயத்தைச் சொல்லி, படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே இருவரும் வெளியே வந்து போன் செய்ய மீண்டும் அதையே சொல்கிறார் ஓட்டுனர். இப்ப எங்கே வந்து பஸ்சைப் பிடிப்பது என்று கேட்கிறேன். கீழாம்பாக்கம் என்ற இடத்துக்கு வரவேணும் என்று கூற எவ்வளவு தூரம் என்று கேட்கிறேன். ஒரு மணி நேரத்தில் வந்துவிடலாம் என்றுகூற எனக்குப் பதட்டமாகிறது. ஒரு மணிநேரம் என்றால் தூரமாகத்தானே இருக்கும் என்று எண்ணியபடி நடக்க, பொறு எங்கட சூட்கேசை எடுத்துக்ககொண்டு வாறன் என்றபடி சினிமாவின் ரிக்கற் கவுண்டருக்கு அருகில் சென்று அங்கு அவர்களிடம் கொடுத்தவற்றை எடுத்துக்கொண்டு வர நான் என்னதை இழுத்துக்கொண்டு போகிறேன். சினிமா அரங்குக்குப் பக்கத்தில் தான் நாம் ரிக்கற்றைப் பெற்ற கடை. இப்ப கடை பூட்டி இருக்கும் என்கிறார் கணவர். எதுக்கும் போய் பார்ப்போம் என்று சென்றால் திறந்து இருக்க எதுக்கு பிழையான இடத்தைச் சொன்னீர்கள் என்கிறேன். என்னம்மா சொல்றீங்க. புரியும்படியா சொல்லுங்க என்கிறார். நான் விபரம் சொல்ல, பக்கத்தில் நின்ற ஒருவர் இப்பல்லாம் பஸ் இங்க நிக்கிறதில்லையே என்கிறார். முகவர் சமாளித்தபடி காலைல புக் பண்ணும்போது இங்கேதான் போட்டிருந்தாங்க. திடீர்னு மாத்தீட்டாங்க என்கிறார். இப்ப எப்பிடிப் போறது என்கிறேன் நான். ஓட்டோவில போங்க என்று கூற ஓட்டோவுக்கு எவ்வளவு என்கிறார் மனிசன். இரவு நேரம் டபுளா கேட்பாங்க என்றுவிட்டு ஒரு ஓட்டோவை நிறுத்த அவ்வளவு தூரம் வரமுடியாது என்கிறான் ஒருவன். நேரம் எட்டுமணியாகிவிட எனக்குப் பதட்டம் ஏற்பட முதலே சரியான இடத்தைச் சொல்லியிருக்கவேணும் என்கிறேன் முகவரைப் பார்த்தபடி. என் கோபம் புரிய நான் உங்களை ஏற்றாமல் போகக் கூடாது என்று இப்பவே சொல்கிறேன் என்றபடி போன் செய்கிறார். அவர் பேசி முடிய அவரை நம்பாமல் எனக்கு போன் வந்த இலக்கத்தை அழுத்தி இன்னும் நாங்கள் ரி நகரில் தான் நிற்கிறோம். வந்துவிடுவோம். என்று கூற உங்களை ஏற்றாமல் பஸ்சை எடுக்கமாட்டேன் மடம், வாங்க. என்றுவிட்டு போனை வைக்க, நீங்கள் தான் ஓட்டோ பிடித்துத் தரணும் என்கிறேன். சரிம்மா என்றுவிட்டு ஓட்டோவை நிறுத்துகிறார். பலரும் வர மறுக்க, ஏன் வரமறுக்கிறார்கள் என்று கேட்கிறேன். அவ்வளோ தூரம் போயிற்று திரும்பிவர சவாரி கிடைக்காட்டி நட்டம் என்று ரொம்பக் கேக்கிறாங்கம்மா என்கிறார். பரவாயில்லை நிறுத்துங்கள் என்றதும் ஓட்டோவை நிறுத்தப் போகிறார். சாதாரணமா ஒரே றபிக் அங்கிட்டுப் போக என்கிறார் எமக்குப் பக்கத்தில் நின்றவர். அப்ப டாக்ஸி பிடித்தால் விரைவாகச் செல்லலாமே என்றுவிட்டு முகவரிடம் டாக்ஸியை அழையுங்கள் என்கிறேன். டாக்சி ஸ்ராண்ட் பக்கத்தில இல்லை. பத்து நிமிடம் அங்கிட்டுப் போகணும். அதுக்கு ஓட்டோலையே போயிடுங்க. இதோ ஒண்ணு வந்திட்டுது என்றபடி ஒன்றை நிறுத்துகிறார். நானும் கணவரும் ஏறி அமர்கிறோம். வரும்1 point- என் இந்தியப் பயணம்
1 pointஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூப்பக்கற், பிஸ்கட் இப்படி கண்டதை எல்லாம் வாங்கி நிரப்பி அதிலும் கிலோ கூடி ஒரு நான்கு கிலோ சொக்ளற்றும் மடிக் கணனியும் மகளிடன் திரும்பக் கொடுத்து ஒருவாறு விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. மிகப் பெரிய விமானத்துள் ஆயிரம் பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வலது பக்கமாக உணவு கொடுத்து முடிந்த பின் ஒரு மணி நேரத்தின் பின்னரே எமக்கான உணவு வந்து சேர்ந்தது. பக்கத்து இருக்கைக்கு உணவு வரும்போது வயிறும் மனமும் தயாரானாலும் உணவு வராத கடுப்பும் ஏமாற்றமும் சேர்ந்து இன்னும் பசியை அதிகரிக்க நன்றி கூடச் சொல்லாமல் உணவை வாங்கி உண்டு கோபத்தைக் குறைத்துக்கொண்டேன். முன்னர் எமிரேட்ஸின் கவனிப்பு மிகையாகவும் உணவும் தரமாக இருக்கும். இம்முறை மிகுந்த ஏமாற்றம்தான். இம்முறை எனது தம்பியும் எம்முடன் வந்திருந்தான். அவன் 39 ஆண்டுகளாக தாயகம் செல்லவில்லை. முன்னர் ஆனையிறவில் கைதாகி ஒருவாரம் சிறையில் இருந்தவன். தடைசெய்யப்பட்ட பட்டியலில் அப்பாவின் பெயர் போட்டபோது இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் இணையத்தளத்தில் அவனும் நானும் லண்டனில் இருக்கிறோம் என்பது வரை பெயர் விபரங்களுடன் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் இருந்து அந்தப் பக்கமே போகமாட்டேன் என்று இருந்தவனை, நான் உன்னோடு வாறன். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவன் என்னும் நம்பிக்கையில் என்னோடு வந்திருந்தான். விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன். “இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்” என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார். “அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன். “இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்” “இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே” “அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்” நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது. “எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்” “இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்” “சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. “கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன். “எவ்வளவு வச்சிருக்கிறீங்க” என்கிறான். நாம் பணம் ஒன்றும் கொண்டுவரவில்லை. பாங்க் காட் தான் இருக்கு என்கிறேன். “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” நான் கணவரிடம் சென்று காட்டை எடுத்துக்கொண்டு வர, என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியே இருக்கும் ATM இல் பணம் எடுத்தபின் உள்ளே அழைத்து வர அறைக்குள் போக முன்னரே பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கூற அவர் உடனே தம்பியின் கடவுச் சீட்டை அவனிடம் கொடுக்க அவனே எம்மை அழைத்துச் சென்று தம்பிக்கு விசாவைக் குத்தி வெளியே விடுகிறான். கோபம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு வெளியே வர வேறு வழியில்லை என்று மனம் தெளிகிறது. எமக்காக வந்த வான் ஓட்டுனர் வெளியே காத்திருக்க மனம் நிம்மதியடைகிறது. போன இரண்டு நாட்களில் நெருங்கிய உறவினர்களிடம் சென்று பின் எமது வீட்டை சுற்றி கமரா பூட்டி, எனது செடிகளுக்கு சொட்டுநீர் பாசனக் குழாய்கள் பூட்டி முடிய ஒன்றரை வாரங்கள் போய்விட, அதன்பின்னர்தான் இந்தியா போனால் அந்த வங்கி அலுவலையும் ஒருக்காப் பார்க்கலாம் என்று நான் நினைவுபடுத்த, சரி நானும் வாறன். எனக்கும் சேர்த்து டிக்கற் போடு என்று மனிசன் சொல்ல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பலாலியால் போவோமா என்று மனிசன் கேட்க, கொழும்பு போய் போவதே அதிக கிலோ கொண்டு வரலாம் என்கிறேன். பாலாலியால் போனவர்கள் உளவு இயந்திரத்தில் போனதுபோல் இருந்ததாகக் கூறியதும் ஒரு காரணம். அடுத்த நாளே விமானச் சீட்டுப் பெற்றுக்கொண்டதும் அடுத்த மூன்று நாட்களில் சென்னை செல்ல ஆயத்தம் ஆயாச்சு. ஒருவருக்கு போகவர 69 ஆயிரம் ரூபாய்கள். ஒன்லைனில் சென்னை T நகரில் ஒரு நாளுக்கு 3000 இந்திய ரூபாய்களுக்கு கோட்டல் புக் செய்து ஒருவாறு போய் இறங்கியாச்சு. அந்தக் கோட்டலுக்கு அண்மையில் சில உணவகங்களும் இருந்ததில் மூன்று நேரமும் மிகச் சுவையான உணவுகள் உண்டுவிட்டு கடைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு இரண்டு தேநீரும் குடித்துவிட்டு மனநிறைவுடன் இரவு ஏசியைப் போட்டுவிட்டுப் படுத்தால், சிறிது நேரத்தில் கால் கைகளில் கடி. மூட்டைப் பூச்சியாக்குமென்று துடித்துப் பதைத்து எழுந்தால் சில நுளம்புகள் பறக்கின்றன. இரவு பத்துமணி. இந்த நேரத்தில் எங்கே வேறு இடம் மாறுவது? ஏசியைக் கூட்டி விடுறன். உது மொத்தப் போர்வை தானே. இழுத்துப் போர்த்திக்கொண்டு படு என்கிறார் கணவர். பிரையாணக் களைப்பில் ஒருவாறு தூங்கி காலை எழுந்து பல் விளக்கக் குளியலறைக்குச் சென்றால் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன்.1 point - "மாற்றம்" [யாழ்ப்பாணத்து தமிழ் மருத்துவ மாணவனின் கதை]
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.