Leaderboard
-
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20018Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38756Posts -
நன்னிச் சோழன்
கருத்துக்கள உறவுகள்+8Points35593Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்7Points31977Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/21/24 in all areas
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
For Narthaki, her love for Bharatanatyam became her life right from her childhood. Besides being a Padma Shri recipient, she has been granted distinctive honors such as the Sangeet Natak Akademi Puraskar Award from the President of India, the title of Nrithya Choodamani, and the Kalaimamani title from the government of Tamil Nadu, among other accolades. This beautiful dancer received the very first award of the evening for Excellence in Performing Arts from the multi-faceted actor Parthiban. நர்த்தகி நடராஜ் பற்றிய காணொளி 5.30 நிமிடங்களில் இருந்து பாருங்கள்.4 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி குயின்ரன் டிகொக்கினதும் டேவிட் மில்லரினதும் அதிரடி ஆட்டங்களுடன் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய இங்கிலாந்து அணி ஆரம்ப ஆட்டக்காரர்கள் நிலைத்து ஆடமுடியாமல் போனதாலும், வேகமாக அடித்தாடிய ஹரி புரூக்கும் லியல் லிவிங்ஸ்ரனும் இறுதிவரை நின்று ஆடாததாலும் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனச் சரியாகக் கணித்த @ஈழப்பிரியன் ஐயாவுக்கும், @வாத்தியார் அண்ணாவுக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இப்போட்டியில் இங்கிலாந்து வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குப் புள்ளிகள் கிடையாது! முதல் சுற்றில் குழு B இல் அவுஸ்திரேலியா முதலாவதாகவும், இங்கிலாந்து இரண்டாவதாகவும் வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் அவுஸ்திரேலியா வெல்லும் எனக் கணித்த 10 பேருக்கு தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத சிறிலங்கா அணியைத் தெரிவு செய்த @வாதவூரான்க்குப் புள்ளிகள் கிடையாது. 45வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 101 2 ரசோதரன் 101 3 சுவி 94 4 ஈழப்பிரியன் 93 5 கந்தப்பு 91 6 நந்தன் 91 7 கோஷான் சே 91 8 நீர்வேலியான் 87 9 கிருபன் 86 10 எப்போதும் தமிழன் 86 11 P.S.பிரபா 85 12 குமாரசாமி 84 13 தமிழ் சிறி 84 14 வாத்தியார் 84 15 ஏராளன் 83 16 அஹஸ்தியன் 83 17 வாதவூரான் 82 18 நிலாமதி 81 19 தியா 80 20 வீரப் பையன்26 78 21 புலவர் 76 22 நுணாவிலான் 74 23 கல்யாணி 733 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய இரண்டாவது சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சூரியகுமார் யாதவின் அதிரடியான 53 ஓட்டங்களுடன் 8 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து இறுதியில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 134 ஓட்டங்களை மட்டுமே எடுக்கமுடிந்தது. முடிவு: இந்திய அணி 47 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்திய அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் சுற்றில் குழு C இல் மேற்கிந்தியத் தீவுகள் முதலாவதாக வரும் எனச் சரியாகக் கணித்தமையால், போட்டிகளுக்கான அணிகள் குழம்பியமையால் இப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் வெல்லும் எனக் கணித்த மூவருக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்படும் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணியைத் தெரிவு செய்த நால்வருக்குப் புள்ளிகள் கிடையாது. 43வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 97 2 ரசோதரன் 97 3 சுவி 90 4 ஈழப்பிரியன் 89 5 கோஷான் சே 89 6 கந்தப்பு 87 7 நந்தன் 87 8 கிருபன் 84 9 எப்போதும் தமிழன் 84 10 நீர்வேலியான் 83 11 குமாரசாமி 82 12 தமிழ் சிறி 82 13 P.S.பிரபா 81 14 அஹஸ்தியன் 81 15 வாதவூரான் 80 16 வாத்தியார் 80 17 நிலாமதி 79 18 ஏராளன் 79 19 வீரப் பையன்26 78 20 தியா 78 21 புலவர் 74 22 கல்யாணி 73 23 நுணாவிலான் 723 points
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சில கருத்துக்களை, படங்களைப் பார்க்கும் போது எவ்வளவு தூரம் பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் பிள்ளை குட்டிகளைப் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எம் மக்கள் என்ற ஆச்சரியம் வருகிறது😂. BDSM (Bondage, Domination, Sadism, Masochism) என்ற வினோதமான (queer) பாலியல் செயன்முறைகள் (முன்னர் deviant sexual behaviors என்று அழைக்கப் பட்டவை இவையெல்லாம்) எதிர்ப்பால் இணைகளிடையே பிரபலமாக இருக்கும் நடைமுறைகள். இதையெல்லாம் ஓர் பால் தம்பதிகள் சமூகத்திற்கு அறிமுகம் செய்ததாக புதுக் கதைகள் யாரும் சொன்னால், உடனே நம்பும் அளவுக்கு இருக்கிறார்கள்.2 points
-
மருந்துகள், எரிபொருள், உரம் கிடைக்காமல் துன்பப்பட்ட கடந்த காலத்தை யாரும் மறக்கக் கூடாது! - ஜனாதிபதி ரணில்
நாங்கள் இலங்கையின் முதல் 10 கோடீசுவர அரசியல்வாதிகளையும் மறக்கமாட்டோம். சனாதிபதி அவர்களே! 1 மகிந்த 18 பில்லியன் டொலர் 2 அர்யுன ரணதுங்க 6 கோடி 80 லட்சம் டொலர் 3 மைத்திரி 1 கோடி 40 லட்சம் டொலர் 4 தொண்டமான் 19 லட்சம் டொலர் 5 கருணா 17 லட்சம் டொலர் 6 பௌசி 14 லட்சம் டொலர் 7 சந்திரிகா 14 லட்சம் டொலர் 8 அனுரகுமார 13 லட்சம் டொலர் 9 அதாவுல்லா 9 லட்சம் டொலர் 10 ரணில் என்ற நீங்கதான் 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்.2 points
-
எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
வணக்கம் பாஞ் அண்ணா. எனக்கும் உங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி. உங்களை இதற்கு முன் சந்திக்கவிட்டாலும், சிறி உங்களை கூட்டி வந்து "யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்” என்றபோது, உடனேயே பாஞ் அண்ணா தான் என்று சொல்லிவிட்டேன். நிறைய உறவினர்களை 30, 40 வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். சிலரை முதல்தடவையாக சந்தித்தேன். என்றாலும், பாஞ் அண்ணாதான் இவர் என்று சரியாக கணித்துவிட்டேன். பலகாரப்பகுதியில் சந்தித்தாலும், குசா அண்ணா வராததால் பலகாரத்தால் தலைகள் இந்தத்திரியில் உருளாது. வேற உருட்டல் தான் இந்த திரியில் நடைபெறும் கலியான வீட்டில் ஒரு பொதி, ரிசெப்ஷனில் ஒரு பொதி என்று ஒன்றுக்கு இரண்டாக கிடைத்து. வீடுவரை கொண்டு வந்து சேர்த்துவிட்டேன். தொடர்ந்து எழுதுகிறேன் அண்ணா. சுவாரசியமாக திரி போகிறது.2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
பல நாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பெண்களுக்கு வாக்குரிமையை அனுமதிப்பதா இல்லையா என்று இழுபறி நடந்துள்ளது. பின்னர் தயங்கித் தயங்கி ஒவ்வொரு நாடாக பெண்களும் வாக்களிக்கலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். இன்று ஓரினச் சேர்க்கையாளர்களை அழிப்போம் ஒழிப்போம் என்று முழக்கமிடும் தீவிரவாதிகள் போல் அன்று பெண்களுக்கு ஏன் வாக்குரிமை தர வேண்டும் என்று எதிர்த்தவர்கள் இருந்திருப்பார்கள். ஒருபாலின உறவை எதிர்ப்பவர்கள் பெரும்பாலும் உடலுறவை மையப்படுத்தியே எழுதியதைக் காண முடிகிறது. மிகவும் கண்ணியமான மென்மையான உணர்வுள்ள பல ஒருபாலினத்தவர்களுடன் பல வருடங்களாகப் பழகியுள்ளேன். சிலர் பார்வைக்குச் சாதாரண ஆண் பெண்களாகவே தெரியும். இவர்களுடனான உரையாடல்களில் என்றும் ஆபாசமோ பாலுணர்வோ தென்பட்டதில்லை. ஐரோப்பாவில் பிறந்து படித்து வளர்ந்த உங்கள் பிள்ளைகளிடம் இது பற்றி உரையாடிப் பாருங்கள், அவர்கள் தெளிவாக உள்ளனர். காலம் சிந்தனைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது வரலாறு.2 points- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
அவர் மட்டும் என்றில்லை, அண்ணை......... முக்கியமாக இன்னும் பலரையும் காணவில்லை. திமுக அரசு என்றவுடன் ஒரு அறிக்கை கூட விடாமல் மௌனமாகவே இருக்கின்றார்களே......உதயநிதிக்கும், அவரின் ரெட் ஜயண்ட்ஸ்ஸிக்கும் அவ்வளவு பயம்.........ஜி வி பிரகாஷ் பரவாயில்லை போல, இது அரசின் தவறு என்று ஒரு அறிக்கையாவது விட்டுள்ளாரே..... ரஜனி எல்லாம்.........செருப்பால் என்னை நானே அடிச்சாலும் மனம் ஆறாது. ஏழு பேர்கள் விடுதலை பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, யார் அந்த ஏழு பேர்கள் என்று கேட்டவர் தானே. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் போராடியவர்கள் சமூக விரோதிகள் என்றும் சொன்னவர். இப்ப, அம்பானி வீட்டு கல்யாண வீட்டில், அம்பானி கைலாசத்தையும், வைகுண்டத்தையும் ஒன்றாக பூமிக்கு கொண்டு வந்து விட்டார் என்றவர்....... இந்த மனிதனைப் பற்றி எழுதுவதை விட, குப்புறப் படுத்துக் கிடக்கலாம்...........2 points- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
திருமண தகவல்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நில்மினி. 🙏 இப்போதைய அவசர உலகில் மற்றவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் திருமணத்தை ஜேர்மனியில் உள்ளவர்களுடன் மட்டுமே நடத்துவது என நாம் யோசித்து இருந்தோம். மகளின் திருமண நிச்சயதார்த்தம் நடை பெற்ற போது... அதனை ஒரு தகவலாக அறிவிக்கும் வகையில் உறவினர்களின் WhatsApp குழுமத்தில் அந்தச் செய்தியை பகிர்ந்து கொண்டேன். செய்தி பகிர்ந்த அன்றும் அதற்கு அடுத்த நாளும் எல்லோரும் திருமணம் எப்போ என்றும்... அதற்கு தாமும் நிச்சயம் வருவதாக 16 குடும்பத்தினர் உலகின் பல பாகங்களில் இருந்தும் தகவல் அனுப்பி இருந்தார்கள். நில்மினியும் வருவதாக தெரிவித்து இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தாலும்... வேலைகளுக்கு லீவு போட்டு, விமானத்தில் இவ்வளவு தூரம் வந்து சிரமப்படப் போகின்றார்களே என்ற ஆதங்கமும் இருந்தாலும் எல்லா உறவினர்களையும் ஒரே இடத்தில் பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் அருமையான சந்தர்ப்பத்தையும் தவறவிடக்கூடாது என்ற ஆசையும் மனதில் இருக்கத்தான் செய்தது. நில்மினியை ஊரில் சந்திக்கவில்லை என்றாலும்... அவரின் சித்தப்பா, மாமா போன்றோருடன் உறவினர் முறையைத்தாண்டி நட்புடன் பழகி வந்துள்ளதை மறக்க முடியாது. உறவினர்கள் பலரும் நில்மினியை... சந்தித்த நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்கள். வந்தவர்களில் சிலரை தொலைபேசி மூலம் உரையாடி இருந்தாலும் அப்போதான் நேரில் சந்திக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இருவரை 40 வருடங்களின் பின்பு சந்தித்து இருந்தேன். வந்தவர்களில் ஆறு மாத குழந்தையில் இருந்து 78 வயது வரை உள்ளவர்களும் இருந்தமை மகிழ்ச்சியாக இருந்தது.2 points- கிறுக்கல்கள்
1 pointகிறுக்கல்கள்-
கருத்துப்படம் 17.12.2025
-
கேலி 15.12.2025
-
கருத்துப்படம் 12.12.2025
-
கருத்துப்படம் 11.12.2025
-
கருத்துப் படம் 06.12.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 27.11.2025
-
கருத்துப்படம் 15.10.2025
-
கருத்துப்படம் 10.10.2025
-
கருத்துப்படம் 09.10.2025
-
கருத்துப்படம் 07.10.2025
-
கருத்துப்படம் 04.10.2025
-
ரசோதரன்-இன்னுமொரு பாலம் 22.09.2025
-
ஒரு பயணமும் சில கதைகளும் 18.09.2025
-
கருத்துப்படம் 13.09.2025
-
கருத்துப்படம் 11.09.2025
-
கருத்துப்படம் 11.11.2025
-
கருத்துப்படம் 06.09.2025
-
கருத்துப்படம் 05.09.2025
-
கருத்துப்படம் 04.02.2025
1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
தாவடியை சேர்ந்த எனது அப்பப்பா ராஜலிங்கமும் சிறியின் அப்பம்மா தையல்முத்துவும் சகோதரர்கள். அவர்களது தகப்பன் தாவை வாணன் அம்பலவாணர் நாவலர்(ஆறுமுக நாவலரின் மாணவர்). எனது அப்பம்மாவின் பூட்டன் தம்பு உடையார், அறுமுகநாவலரின் மூத்த சகோதரன். சிறியின் அப்பம்மாவையும், எனது அப்பாப்பாவையும் தவிர மற்றைய நான்கு சகோதரர்களும் 1880 அளவில் கப்பல் மூலம் மலேஷியா சென்றுள்ளார்கள். அதில் ஒருவர் மட்டும் அங்கேயே தங்கிவிட மற்ற மூன்று சகோதரர்களும் பணம் மற்றும் பொருள்களுடன் கப்பலில் யாழ்ப்பாணம் திரும்பும்போது கடல் கொள்ளையர்களால் கொல்லப்பட்டு விட்டார்கள். மலேசியாவில் தங்கிவிட்ட சகோதரனின் வம்சம் தற்போது அங்கு வாழ்கிறார்கள். சிறியின் குடும்பம் பெரும்பாலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலும், எனது குடும்பம் மாத்தளை, நுவெரேலியா மற்றும் கொழும்பில் வாழ்ந்தததாலும் எனது அப்பாவின் சொந்தங்களுடன் கொண்டாட எனக்கு சந்தர்ப்பம் குறைவாகவே இருந்து. நீண்ட காலத்துக்கு பிறகு யாழ் களத்தில் சிறியுடன் மீண்டும்சொந்தம் கொண்டாட சந்தர்ப்பம் கிடைத்தது. அவர் குடும்பத்துடன் ஜேர்மனியில் இருப்பது தெரியும் என்றாலும் தொடர்பு இருக்கவில்லை. சிறியின் சகோதரியுடனும் எப்படியாவது மீண்டும் பழகவேணும் என்றும் ஆர்வமாக இருந்தேன். எல்லாவற்றுக்கும் உதவும் விதமாக சிறியின் மகளின் கலியாணம் அமைந்தது. சிறியின் சகோதரி ஒருநாள் மெசேஜ் ஒன்று அனுப்பி இருந்தார். அதில், சிறியின் மகளின் கலியாணம் நடக்க இருப்பதாகவும் அப்பாவின் குடும்ப உறவினர் அனைவரும் ஜெர்மனி செல்வதாகவும் நான் வந்தால் எனது விருப்பத்தின்படி எல்லாரையும் சந்திக்க நல்ல சந்தர்ப்பம் என்றும் எழுதியிருந்தார். அத்துடன் சிறி யிற்கு எனக்கு அழைப்பு விடுக்க விருப்பம் இருந்தாலும் சிரமமாக இருக்குமோ என்று யோசிப்பார் என்றும் சொல்லியிருந்தார். மெஸேஜை வாசித்த கணமே, கல்யாணத்துக்கு போவது என்று தீர்மானித்தது விட்டேன். நான் இருக்கும் மெம்பிஸ் இலிருந்து தம்பி வீட்டுக்கு வெர்ஜினியா சென்று, அங்கு தங்கி விட்டு, வாஷிங்க்டன் மற்றும் போஸ்டன் வழியாக பிரான்க்பெர்ட் சென்றடைந்தேன். கல்யாண வேலைகளில் மத்தியிலும், சிறியின் மகன் (எனது மருமகன்) விமான நிலையத்தில் என்னை வரவேற்க வந்திருந்தார். ஜெர்மனியிலேயே பிறந்து வளர்ந்து, மிகச்சிறிய வயதில் எலும்பு முறிவு அதிலும் முதுகெலும்பு சத்திரசிகிச்சை மருத்துவராக பணியாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருந்து. அதைவிட ரெட்டிப்பு சந்தோசம் அவரது பணிவையும், சுத்தமான யாழ்பாணத்தமிழையும் கேட்டு. ஜெர்மனியில் இறங்கிய முதல் மணி நேரத்தில் இருந்தே எனது சந்தோஷமும், பிரமிப்பும், ஈர்ப்பும் தொடங்கிவிட்டது . உறவினர்கள் அநேகமானோர் ஒரே ஹோட்டலில் தான் தங்கினோம். எல்லோரும் பக்கத்த்து பக்க அறைகள். ஒன்றாக சாப்பிட்டு, வெளியில் சுற்றிப்பார்த்து மிகவும் சந்தோசமான நாலு நாட்கள். பாஞ் அண்ணாவையும் குசா அண்ணாவையும் சந்தித்து ஒரு யாழ்கள Gettogether வைப்பம் என்று பிளான் போட்டிருந்தேன். குசா அண்ணாவால் வேலை நிமித்தம் வரமுடியவில்லை. பாஞ் அண்ணாவை சந்தித்தது மிகுந்த. சந்தோசம். படத்தையும் இணைத்துள்ளேன். நீட்டுக்கு எழுதினால் வாசிக்க களைப்பாக இருக்கும், மிகுதி அடுத்த முறை தொடரும்.1 point- மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்கரிட்டா ரோட்ரிக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 20 ஜூன் 2024 நரம்பியல் விஞ்ஞானி ஜிமோ போர்ஜிகினுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. 'இறப்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதி' என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், இறக்கும் தருவாயில் செயலிழக்கும் மூளையைப் பற்றி நமக்கு 'கிட்டத்தட்ட ஒன்றும் தெரியாது' என்பதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்கிறார் அவர். இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்து மூலம் தெளிவாகத் தெரிந்தது. “நாங்கள் ஆய்வகத்தில் எலிகளை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவற்றின் நரம்பியல் சுரப்புகளை நாங்கள் ஆய்வு செய்தோம்," என்று அவர் பிபிசி முண்டோ சேவையிடம் விவரித்தார். இதில், இரண்டு எலிகள் திடீரென உயிரிழந்தன. இந்த நிகழ்வு அவற்றின் மூளையின் மரணிக்கும் செயல்முறையை அவதானிக்க அவர்களுக்கு வழிவகுத்தது. “அதில் ஒரு எலிக்கு செரோடோனின் என்ற ரசாயனம் பெருமளவில் சுரந்தது,” என்கிறார். அந்த எலி மாயத்தோற்றத்தில் (hallucinating) இருந்ததா? என்று நினைத்து அவர் ஆச்சரியப்பட்டார். "செரோடோனின் 'ஹேலுசினேஷன்’ உடன் தொடர்புடைய ரசாயனம் ஆகும்," என்று அவர் விளக்கினார். அந்த நரம்பிடைக் கடத்தியின் ( neurotransmitter) அதீதச் சுரப்பு அவரது ஆர்வத்தைத் தூண்டியது. "மூளையின் இந்தச் செயல்முறை பற்றி கண்டிப்பாக ஒரு விளக்கம் இருக்க வேண்டும் என்று நம்பினேன். அந்த வார இறுதியில் இதுதொடர்பாக நான் நிறைய படிக்க ஆரம்பித்தேன். நான் தொடர்ந்து தேடினேன், இறுதியில் இறக்கும் செயல்முறை பற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்தேன்,” என்றார். அப்போதிருந்து, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் மற்றும் மூலக்கூறு மற்றும் ஒருங்கிணைந்த உடலியல் இணைப் பேராசிரியராக இருக்கும் ஜிமோ போர்ஜிகின், இறக்கும் போது மனித மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் ஆய்வு செய்வதற்காக தன்னை அர்ப்பணித்தார். மேலும், அவர் கண்டறிந்தது அனுமானங்களுக்கு முரணானது என்பதை அவர் உணர்ந்தார். படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பட மூலாதாரம்,COURTESY: UNIVERSITY OF MICHIGAN படக்குறிப்பு,ஜிமோ போர்ஜிகின் மரணம் என்றால் என்ன? "யாருக்காவது மாரடைப்பு (cardiac arrest) ஏற்பட்டதை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா?” என்று அவர் என்னிடம் கேட்டார். “ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது சரிந்து விழுவது வெளிப்படையாக தெரியும் நிகழ்வு,” என்றார். "நீங்கள் அந்த நபரைப் பெயர் சொல்லி அழைக்கும் போது அவர் பதிலளிக்க மாட்டார், நீங்கள் அவரைத் தொட்டால் அசைவில்லாமல் இருப்பார், அவர் இறந்துவிட்டதைப் போலச் செயல்படுவார்,” என்றார். அந்த நோயாளி உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதிபடுத்த மருத்துவ நிபுணர்கள் தேவை. அவர்கள் இறப்பை உறுதிப்படுத்த எலக்ட்ரோ கார்டியோகிராம் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். “ஆனால், நீண்ட காலமாக வழக்கத்தில் இருப்பது என்னவென்றால், யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால், மருத்துவர் அவர்களின் கைகளையோ கழுத்தையோ பரிசோதிப்பர், அவர்களுக்கு நாடித் துடிப்பு இல்லை என்றால், இதயம் ரத்தத்தை 'பம்ப்' செய்யவில்லை என்று அர்த்தம். பின்னர் இது மருத்துவ மரணம் என வரையறுக்கப்படுகிறது," என்று விவரித்தார். "இந்தச் செயல்பாட்டின் போது இதயம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது, எனவே தான் இந்தச் செயல்பாட்டை 'பெருமூளை அடைப்பு’ ( cerebral arrest) என்று சொல்லாமல் 'மாரடைப்பு' (Cardiac arrest) என்று சொல்கின்றனர்,” என்கிறார். "ஒட்டுமொத்த மருத்துவம் மற்றும் விஞ்ஞான அறிவைப் பொருத்தவரை, மூளை செயலிழக்கிறது. ஏனெனில் அந்த நபரிடம் இருந்து எந்த எதிர்வினையும் வருவதில்லை. அந்த நபரால் உட்காரவோ பேசவோ முடியாது,” என்கிறார். மேலும், மூளை செயல்பட பெருமளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதயம் ரத்தத்தை பம்ப் செய்யவில்லை என்றால், ஆக்ஸிஜன் மூளையை அடையாது. போர்ஜிகின் கூற்றுப்படி, "அனைத்து வெளிப்படையான சமிக்ஞைகளும் மூளை செயலிழந்ததை சுட்டிக்காட்டுகின்றன." இருப்பினும், அவரது ஆராய்ச்சிக் குழுவின் கண்டுபிடிப்புகள் வேறு முடிவை பிரதிபலிக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எலிகளை வைத்து போர்ஜிகின் தலைமையிலான குழு நடத்திய ஆய்வில், மரணத்தின் போது அவற்றின் மூளையில் சில தீவிரமான செயல்பாடுகள் கண்டறியப்பட்டது இறக்கும்போது மூளையில் என்ன நடக்கிறது? எலிகளை வைத்து 2013-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விலங்குகளின் இதயம் செயல்படுவது நின்றுபோய், அவற்றின் மூளைகள் ஆக்ஸிஜன் பெறுவதை நிறுத்திய பிறகு, பல நரம்பிடைக்கடத்திகளின் (நியூரோடிரான்ஸ்மிட்டர் - neurotransmitter) தீவிரச் செயல்பாட்டைக் கண்டனர். “செரோடோனின் 60 மடங்கு அதிகரித்தது. நல்ல உணர்வைத் தூண்டும் 'டோபமைன்’ 40 முதல் 60 மடங்கு அதிகரித்தது. விழிப்பூட்டும் திறன் கொண்ட நோர்பைன்ப்ரைன் ரசாயனமும் அதிகரித்தது. நரம்பிடை கடத்திகளின் இத்தகைய உயர் நிலைகளை, அந்த விலங்குகள் உயிருடன் இருக்கும்போது கூட நம்மால் பார்க்க முடியாது," என்று அவர் கூறுகிறார். 2015-இல், இந்த ஆய்வுக்குழு எலிகள் இறக்கும் போது அவற்றின் மூளை செயலிழப்பது குறித்த இரண்டாவது ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர். "இரண்டு ஆய்வின் போதும், இறக்கும் தருவாயில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகளில் மூளையின் செயல்பாட்டில் தீவிரத்தன்மை இருந்தது,” என்கிறார். "அவற்றின் மூளை ஒரு அதிவேக செயல் நிலையில் இருந்தது," என்கிறார். அதிவேக மூளை அலைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காமா அலைகள் கவனம், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் செயல்முறைகளுடன் தொடர்புடைய அதிவேக மூளை அலைகள் 2023-ஆம் ஆண்டில், அவர்கள் கோமாவில் இருந்தவர்கள், மற்றும் எலெக்ட்ரோ என்செபலோகிராபி மின்முனைகள் போன்ற உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் உயிர் வாழ்ந்த நான்கு நோயாளிகளை ஆய்வு செய்தனர். "அவர்கள் வெவ்வேறு நோய்களால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தனர்," என்று விஞ்ஞானி கூறுகிறார். 'அவர்கள் பிழைப்பது சாத்தியமற்றது. உதவக்கூடிய எந்த ஒரு மருத்துவ நடைமுறைக்கும் அப்பாற்பட்டவர்கள்' என்று மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முடிவுக்கு வந்தனர். இதன் விளைவாக, அவர்களை இந்த உலகில் இருந்து விடுவிக்க குடும்பத்தினரும் மருத்துவர்களும் முடிவு செய்தனர். உறவினர்களின் அனுமதியுடன், அந்த நோயாளிகளின் இயந்திர வென்டிலேட்டர்கள் அல்லது சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டன. அவ்வாறு செய்யும்போது, அவர்களில் இரண்டு நோயாளிகளில், புலனுணர்வு செயல்பாடுகளுடன் (cognitive functions) தொடர்புடைய அதீத மூளைச் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். அவர்களின் மூளையில் காமா அலைகளும் கண்டறியப்பட்டன. காமா அலைகள் கவனம், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் செயல்முறைகளுடன் தொடர்புடைய அதிவேக மூளை அலைகள் ஆகும். நரம்பியல் நிபுணரின் கூற்றுப்படி, நோயாளியின் வென்டிலேட்டர் துண்டிக்கப்படும் போது பொதுவான ஹைபோக்ஸியா (hypoxia) நிலை ஏற்படுகிறது. இது ரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை (Generalized hypoxia) விவரிக்கப் பயன்படும் சொல். இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத போது ஏற்படும் நிலையில் ஹைபோக்ஸியா ஏற்படுகிறது. இது மாரடைப்புடன் தொடர்புடைய நிலை ஆகும். "மூளையைச் செயல்படுத்துவதில் ஹைபோக்ஸியா என்னும் நிலை பங்கு வகிக்கிறது என்று தோன்றுகிறது. மேலும், வென்டிலேட்டர்கள் அகற்றப்பட்ட சில நொடிகளில் நான்கு நோயாளிகளில் இருவரின் மூளை நொடியில் செயல்படத் தொடங்கியது,” என்கிறார். ஒட்டுமொத்த மூளையும் செயல்படுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மூளையின் ஃப்ரண்டல் லோப் இளஞ்சிவப்பு நிறத்திலும், பாரிட்டல் லோப் நீல நிறத்திலும், ஆக்ஸிபிடல் லோப் ஆரஞ்சு நிறத்திலும், டெம்போரல் லோப் மஞ்சள் நிறத்திலும் காட்டப்படுள்ளது இந்த ஆய்வைச் செய்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, "இறக்கும் தருவாயில் மனிதர்களின் மூளையின் சில பாகங்கள் மட்டுமே செயல்படுகிறது. ஆனால் எலிகளைப் பொருத்தவரை மூளையில் பெருமளவு செயல்படுகிறது.” அவை மூளையின் விழிப்புணர்வுடன் இருக்கும் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பகுதிகள். அவற்றில் ஒன்று டெம்போரோ பேரியட்டல் ஆக்ஸிபிடல் சந்திப்பு (TPO), இது தற்காலிக, பாரிட்டல் மற்றும் பாரிட்டல் லோப்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் புள்ளியாகும். மேலும், இது 'பின்புற கார்டிகல் வெப்ப மண்டலம்' (posterior cortical hot zone) என்று குறிப்பிடப்படுகிறது. "உங்கள் மூளையின் பின்பகுதி உணர்திறனைக் கட்டுப்படுத்துகிறது," என்று அவர் தெளிவுபடுத்துகிறார். இது கனவுகள், காட்சி மாயைகள் மற்றும் விழிப்புணர்வு (consciousness) ஆகியவற்றுடன் தொடர்புடையது. மொழி, பேசுதல் மற்றும் கேட்பது ஆகியவற்றுடன் தொடர்புடைய வெர்னிக்கே பகுதி (Wernicke area) தூண்டப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர். "இருபுறமும் உள்ள 'டெம்போரல் லோப்' மிகவும் செயல்திறன் கொண்டு இயங்கியது என்பதையும் நாங்கள் கவனித்தோம்,” என்கிறார். நமது காதுகளுக்கு அருகில் இருக்கும் அந்தப் பகுதி நினைவகச் சேமிப்பு மற்றும் பிற அறிவாற்றல் செயல்முறைகளுக்கு முக்கியமானது. மூளையின் வலது பக்கத்தில் உள்ள டெம்போரோபரியட்டல் சந்திப்பு (TPJ) ஒத்துணர்வு (empathy) பண்புடன் தொடர்புடையது என்பதை பேராசிரியர் போர்ஜிகின் சுட்டிக்காட்டுகிறார். "உண்மையில், மரணத் தருவாய் அனுபவங்களை (near-death experience) அனுபவித்தப் பல நோயாளிகள் மற்றும் மாரடைப்பில் இருந்து தப்பியவர்கள் தங்கள் அனுபவங்கள் தங்களை மேம்படுத்தி, அவர்களின் ஒத்துணர்வை (empathy) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்,” என்கிறார். போர்ஜிகின், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஒருவரைப் பற்றி பேசுகையில், "அவர் உயிர் பிழைத்திருந்தால், அவர் நிச்சயமாக இதே விஷயங்களைச் சொல்லி இருப்பார்," என்று நம்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மரணத்தை நெருங்கிய அனுபவங்கள் புத்துயிர் பெறும் மருத்துவ நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக மருத்துவ மரணம் அல்லது மரணத்தில் இருந்து தப்பிய பலர், மரணத் தருவாய் அனுபவங்களை (near-death experience) அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர். ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை எப்படித் தங்கள் கண்முன் விரைவாகக் கடந்து சென்றது, அல்லது சில நிகழ்வுகளை எப்படி நினைவில் நிறுத்தியது என்பதை விவரித்தார்கள். பிரகாசமான ஒளியைப் பார்த்ததாக நிறைய பேர் சொன்னார்கள். இன்னும் சிலர் தங்கள் உடலில் இருந்து தப்பித்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கச் சுற்றித் திரிந்ததாகச் சொல்கின்றனர். இறப்பதற்கு முன்பு சிலர் அனுபவித்த சக்திவாய்ந்த உணர்வுகளை, போர்ஜிகின் தனது ஆய்வுகளில் கண்ட அதிவேக மூளைச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளக்க முடியுமா? "செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று அவர் பதிலளிக்கிறார். அவர்களின் 2023 ஆய்வின்படி, குறைந்தது 20% அல்லது 25% பேர் மாரடைப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்கள் ஒரு ஒளியைக் கண்டதாகக் கூறினர். இது அவர்களின் பார்வை திறனுக்கான மூளைப்பகுதி ( visual cortex ) சுறுசுறுப்பாக இருந்ததைக் குறிக்கிறது. "ஒரு வாகன விபத்தில் சிக்கிய பிறகு, அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்த சில நோயாளிகள் தங்கள் சிகிச்சையின் போது மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்ததாகக் கூறினர். அவர்கள் காப்பாற்றப்படும் போது அவர்களைச் சுற்றி நடந்தவற்றை கேட்டு கொண்டிருந்ததாக கூறினர்,” என்கிறார். "பேச்சு மற்றும் மொழியின் உணர்வுக்குக் காரணமான மூளையின் பகுதி, மற்றும் ஹாட் சோன் (later hot zone) எனப்படும் மண்டலம் ஆகிய இரண்டும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்துள்ளது," என்று இறந்த இரண்டு நோயாளிகளைப் பற்றிப் பேராசிரியர் கூறினார். முரண்பாடான நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நவீன மருத்துவ உபகரணங்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எண்ணற்ற நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, டிஃபிபிரிலேட்டர் மின் அதிர்வுகள் மூலம் இதயத் துடிப்பை மீட்கிறது "மரணம் என்பது இதயத்தை மையமாகக் கொண்டுள்ளதாக நீண்ட காலமாக நம்பப்படுகிறது. எனவே, ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் மூளை செயல்படுவதை நிறுத்துகிறது என்று நம்புகின்றனர்,” என போர்ஜிகின் கூறுகிறார். "இருப்பினும், இந்த நம்பிக்கை மரணத்திற்கு அருகில் சென்று உயிர்பிழைத்தவர்களின் அனுபவங்களுடன் ஒத்துப்போவதில்லை,” என்கிறார். அவரைப் பொறுத்தவரை, மாரடைப்பின் போது மூளை வேலை செய்வதற்கான எந்த வெளிப்படையான அறிகுறியும் இல்லை என்றாலும், அதை நிராகரிக்க முடியாது. "ஒளியைப் பார்ப்பது, குரல்களைக் கேட்பது, உடலை விட்டு வெளியேறுவது, அல்லது நடுவானில் மிதப்பது போன்ற ஆழமான நகரும், தாக்கும் அனுபவங்களை ஒருவர் மனதில் கொண்டிருப்பது எப்படி?" இவை அனைத்தும் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதன் ஒரு பகுதியாகும். "இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் உடலுக்கு வெளியில் இருந்து தோன்றுபவை என்றும், இவை உடல் ரீதியானவை அல்ல என்றும் நினைப்பவர்கள் உள்ளனர், ஏனெனில் மருத்துவ வல்லுநர்கள் பலர் மூளை செயல்படவில்லை என்று நம்புகிறார்கள்,” என்கிறார். "ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை, 2013-இல், விலங்குகளை வைத்து நடத்திய முதல் ஆராய்ச்சியை நாங்கள் வெளியிட்ட போது, இந்த அகநிலை அனுபவங்கள் உடலுக்கு வெளியில் இருந்து வருகின்றன என்ற கருத்தை நிரூபிக்க முடியாது, அது சாத்தியமற்றது என்று நாங்கள் எழுதினோம்,” என்கிறார். இதன் காரணமாக, அவை மூளையில் தோன்றியவை என்று நம்பப்படுவது எதிர்மறையானதாகத் தோன்றினாலும், மூளை செயல்படுகிறது என்று உறுதியாக நம்பியதாகக் கூறுகிறார். "மரணத்திற்கு அருகாமையில் நிகழும் அனுபவங்கள் அனைத்தும் மரணத்துக்குப் பிறகு நடப்பவை அல்ல, ஆனால் இதயம் மற்றும் மூளையின் முக்கிய அறிகுறிகளை நிறுத்துவதற்கு முன்பு மூளையின் செயல்பாட்டிலிருந்து உருவாகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார். ஒரு புதிய புரிதல் மனிதர்களைப் பற்றிய தனது ஆய்வு மிகவும் சிறியது என்றும், நாம் இறக்கும் போது மூளையில் என்ன நடக்கிறது என்பது குறித்து இன்னும் அதிக ஆராய்ச்சி தேவை என்றும் போர்ஜிகின் கருதுகிறார். இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதில் கவனம் செலுத்திய பிறகு, ஒரு விஷயம் தெளிவாகி உள்ளது: "இதயம் நின்றுபோகும் போது, மூளையின் செயல்பாடுகள் மங்கும் (hypoactive) என்பதை விட அதிவேகமாக செயல்படும் (hyperactive) என்பதே சரி,” என்கிறார். "இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டும்,” என்கிறார். "உண்மையில், அவர் தனது ஆய்வில் கண்டறிந்தது மூளையின் உயிர்வாழும் செயல்முறையின் (survival mode) ஒரு பகுதி. அது ஆக்ஸிஜன் இல்லாத சூழல் உருவாகும்போது அதிகமாக செயல்படத் தொடங்குகிறது,” என்கிறார். ஆனால், மூளை தனக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதை உணரும்போது என்ன நடக்கும்? "நாங்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம், அதுபற்றி அதிக ஆராய்ச்சிகள் இன்னும் செய்யப்படவில்லை,” என்று அவர் பதிலளித்தார். உறக்க நிலையைப் பற்றி விளக்கிய அவர், "குறைந்த பட்சம் எலிகள் மற்றும் மனிதர்கள் உட்பட விலங்குகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு எண்டோஜெனஸ் பொறிமுறையைக் (endogenous mechanism) கொண்டுள்ளன," என்று தனது கோட்பாட்டை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ”இதயம் செயலிழக்கும் போது மூளை எதுவுமே செய்ய முடியாமல், அதுவும் செயலிழந்துவிடும் என்று இப்போது வரை நம்பப்படுகிறது. ஆனால், இது நமக்கு உறுதியாகத் தெரியாது,” என்று அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார். உயிர் பிழைத்தல் மூளை, தனது செயல்பாடுகளை எளிதில் நிறுத்தாது என்று போர்ஜிகின் நம்புகிறார். வழக்கமாக நெருக்கடிகளின் போது அது போராடுகிறது. "ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தக்கவைக்க மூளை உறக்கநிலையை (Hibernation) ஏற்படுத்துகிறது. மூளைக்கு நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் உள்ளது என்று நம்புவதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் தூக்கநிலையும் ஒன்று,” என்கிறார். "என் மூளை என்னிடம், பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெற்றோர்கள் வேலை இல்லாமல், வருமானம் இல்லாத நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தைக் கற்பனை செய்து பார்க்கச் சொல்கிறது,” என்கிறார். "அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்? அவர்கள் செலவைக் குறைத்து, தேவையில்லாத பொருட்களைப் பட்டியலில் இருந்து நீக்குகிறார்கள். அவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்,” என்கிறார். இந்தச் சூழலை மூளையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அந்த குடும்பத்துக்குப் பணத்தேவை எப்படியோ அப்படித்தான் மூளைக்கு ஆக்ஸிஜன் தேவை என்று அவர் நினைக்கிறார். "மூளையும் அதையே செய்கிறது என்று நான் நினைக்கிறேன். அதன் மிக முக்கியமான செயல்பாடு என்ன? நடனமாடவோ, பேசவோ, நகரவோ அனுமதிக்கும் ஒன்றல்ல. அந்த செயல்பாடுகள் அத்தியாவசியமானவை அல்ல. இன்றியமையாதது சுவாசிப்பது, இதயத்தை துடிக்க வைப்பது,” என்கிறார். அதனால்தான், " 'வரவிருக்கும் பிரச்னைக்கு நான் ஏதாவது செய்வது நல்லது' என்று மூளை நினைக்கிறது. கூடுதலாக, இது உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் அளவைக் குறைந்துப் பாதுகாக்க வேண்டிய சூழலிலும் உள்ளது,” என்கிறார். ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் போர்ஜிகின் தனது ஆய்வில் கண்டது ஒரு மாபெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே என்று கருதுகிறார். அதன் கீழே ஆய்வு செய்யப்பட வேன்டியவை ஏராளம் உள்ளன என்று நம்புகிறார். "தனது நிதி முன்னுரிமைகளை மறுவரையறை செய்ய வேண்டிய ஒரு குடும்பத்தின் உதாரணத்துடன் எனது கோட்பாட்டை நான் உங்களுக்கு விளக்கியபோது, மூளையும் அதையே செய்கிறது என்று நான் நம்புவதால் தான், நமக்குப் புரியாத ஹைபோக்ஸியாவைச் சமாளிப்பதற்கான உடல்சார்ந்த வழிமுறைகள் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்கிறார். "இது மேற்பரப்பில் தெரியும் பெரிய பனிப்பாறைக்கு அடியில் உள்ள ஏதொ ஒன்றை பற்றியது,” என்கிறார். "மேற்பரப்பில், இந்த நம்பமுடியாத அகநிலை அனுபவத்தைக் எதிர்கொண்ட, இதயம் செயலிழக்கும் தருவாய்க்குச் சென்றுதிரும்பிய நபர்கள் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். மேலும், அந்த அனுபவம் மூளையின் அதீதச் செயல்பாட்டின் காரணமாக நிகழ்ந்தது என்பதை எங்கள் தரவு காட்டுகிறது,” என்கிறார். ஆனால், இறக்கும் தருவாயில் மூளை ஏன் இவ்வளவு தீவிரமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது? "இறப்பைப் பற்றி, அந்த நிகழ்வைப் பற்றி மூளையை மையமாக வைத்து தெரிந்துக் கொள்ள அதிக முயற்சி செய்யவில்லை. நாம் அதைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், கண்டுபிடிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அது நடந்தால், கோடிக்கணக்கான மக்களின் மரணத்தை முன்கூட்டியே கண்டறியலாம்,” என்கிறார். https://www.bbc.com/tamil/articles/c977w50jz7do1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் நாளேடு: உதயன் திகதி: 16/06/1992 பக்கம்: 1 பஸ் பயணிகளை வழிமறித்து கிரான்குளத்தில் 15 தமிழரை ஆயுதபாணிகள் கடத்தினர்! முஸ்லிம் குண்டர்கள் அட்டகாசம் கொழும்பு, ஜூன் 16 மட்டக்களப்பு மாவட்டம் கிரான்குளத்தில் நேற்று முன்தினம் இ. போ. ச. பஸ் ஒன்றில் பயணம் செய்த பதினைந்து அப்பாவித் தமிழர்கள் ஆயுதம் தாங்கிய முஸ்லிம் குண்டர் குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்டோர் என்னவானார்கள் என்பது குறித்து இதுவரை தகவல் ஏதும் வெளியாகவில்லை. திருக்கோயிலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ்ஸை கிரான்குளத்தில் வழி மறிக்கப்பட்டது. ரி௫6 ரகத் துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் மூவர்குழு ஒன்று 15 பயணிகளை பஸ்ஸை விட்டு இறக்கிக் கடத்திச் சென்றதாகவும் - எஞ்சிய பயணிகளோடு பஸ்ஸைத் தொடர்ந்து செல்ல அவர்கள் அனுமதித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் நாளேடு: உதயன் திகதி: 07/06/1992 பக்கம்: 1, 2 சிங்களவரும், முஸ்லிம்களும் செட்டிகுளத்தில் குடியேற்றம் வவுனியா செட்டிகுளம் பகுதியில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்பது தமிழ்க் கிராமகளில் சிங்கள, முஸ்லிம் குடும்பங்களைக் குடியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகத் தெரியவருகிறது. பெரிய புளியங்குளம், நெடுங்கரைச்சேனை, பெரிய நொச்சிமுனை, கிட்டன்குளம், தீரியான்குளம், முதலியான்குளம், கரம்பைமடு, முகத்தான்குளம், பாவற்குளம் ஆகிய தமிழ்க் கிராமங்களே குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. பாவற்குளம் கிராமத்தில் ஏற்கனவே முஸ்லிம்களும் சிங்களவர்களும் குடியமர்த்தப்பட்டு விட்டனர். செட்டிகுளம் பகுதியில் மேற்படி கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட தமிழ் மக்கள் மடு போன்ற அகதி முகாம்களில் தங்கியுள்ளனர். செட்டிகுளம் பகுதியில் குடியமர்த்தப்படும் சிங்கள, மற்றும் முஸ்லிம் மக்களுக்குத் தேவைக்கு அதிகமான உதவிகளும் சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும் தெரியவருகிறது. குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்களின் பாதுகாப்பை முன்னிட்டு அங்கு ஓர் பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் முஸ்லிம் உதவி அரச அதிபர் பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (ஒ-5) *****1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இதில் ஒரு மாற்றம். பெண் சிங்கம்தான் வேட்டைக்கும் போகும். 🙂1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 பிரபா USA 101 முதல்வருக்கு வாழ்த்துக்கள்.1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இதே போன்று பழைய காலத்து ஈழதமிழர்களிடம் பெண்கள் வேலைக்கு போவது நல்லது இல்லை அவாகள் வீட்டில் இருந்து சமையல் செய்து பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டும்.ஆண் சிங்கம் மாதிரி வேலைக்கு போக வேண்டும் என்ற கருத்தும் இருந்திருக்கின்றது.1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
"ஜாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின்−மேதினியில் இட்டார் பெரியோர் இடாதோர் இழிகுலத்தோர் பட்டாங்கில் உள்ள படி. என்று அன்று உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பாகுபாடு கூடாது என்று ஒளவையார் பாடியிருந்தார். ஆனால் இன்று உலகம் ஆண், பெண்,அல்லது அதற்கும் மேல் என நீ எதுவாக இருந்தாலும் மனிதனே என்ற முடிவிற்கு வந்து அதிக காலம் ஆகி விட்டது உலகம் முழுவதும் ஓரினச் சேர்க்கை வந்து விட்டது இனி மனித குல உற்பத்திக்கு ஆபத்து வந்து விட்டது என்று ஒரு பாலர் அஞ்சுகின்றனர் அதனால் உலகிற்கே ஆபத்து என்று ஒருபடி மேலே சென்று கூச்சல் இடுகின்றனர் இன்னொரு பாலர் யாரும் யாரையும் நேசிக்கலாம் விரும்பியவர்களுடன் சேர்ந்து வாழலாம் . குழந்தை பெறுவது தான் மனித குலத்தின் தொழிலா? என்று வாதாடுகின்றனர். உலகத்தை மனிதன் உருவாக்க வில்லை இது தான் உண்மை. இந்த உலகத்தில் நடப்பவை எல்லாம் உங்களுக்கானது அல்ல. ஆனால் இங்கே உனக்கு என்ன வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்கலாம். இந்த விதிப்படி ஆண் ஆண் / பெண் பெண் / அதற்கும் மேலானவர்கள்/ உண்மையில் மனித குலம் அதற்கும் மேலானவர்களே1 point- நான் எதுவாக விரும்பினேனோ நான் அதுவாக இருக்கின்றேன் - Narthaki Nataraj Full Speech
"நான் எதுவாக விரும்பினேனோ நான் அதுவாக இருக்கின்றேன்" - "குறை நல்லது" என்ற தலைப்பில் பத்மஸ்ரீ நர்த்தகி நடராஜ். This is from the "நல்லவை கேட்பின் - Chennai Special Peecharangam". Featuring Raja, Bharathi Baskar and many others as Speakers.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
வந்தவர் விழுந்துவிட்டார் என்று சொல்லவே இல்லை. மீனாட்சி இருக்கிறா ..மதுரையையும் சோதனையையும் அவ பார்த்துக்கொள்ளுவா.. T20கெல்லாம் வரமாட்டா இதுக்கெல்லாம் வரத் தேவையில்லை. கடைக்கண் பார்வை இருந்தாலே போதும்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நீங்கள் இப்பொழுது யாழின் முன் இருந்து கொண்டு கிருபனின் அட்டவனையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்....... அவர் வந்து கொண்டிருக்கிறார் ........! 😂1 point- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
`அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க... கள்ளச்சாராயம் எங்களை அநாதையாக்கிடுச்சு!’ - கதறும் குழந்தைகள்! Published:Today at 7 AMUpdated:Today at 8 AM கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்ததால், ஆண், பெண் என இதுவரை 52 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 30 பேர் கவலைக்கிடமாக இருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருப்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சத்தில் இருக்கின்றனர் கருணாபுரம் மக்கள். உயிரிழந்தவர்களில் 31 பேரின் உடல்கள் நேற்று ஒப்படைக்கப்பட்டு, தகனம் செய்யப்பட்டது. தன்னுடைய கோரப் பற்களால் இத்தனை உயிர்களை கொன்று குவித்த கள்ளச்சாராயம், அவர்களின் குடும்பங்களை சிதைத்துப் போட்டிருக்கிறது. அவர்களின் குடும்ப உறுப்பினர்களை, குழந்தைகளை, அம்மாக்களை, அப்பாக்களை ஆதரவற்று நிற்க வைத்திருக்கிறது. உயிரிழந்த தம்பதி ஒரு கை இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவரும், அவரின் மனைவியும் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களுக்கு 16 வயதில் மகளும், 14, 13 வயதில் இரண்டு மகன்களும் இருக்கின்றனர். அந்த வீட்டிற்கு சென்றபோது, `இனிமேல் எங்களுக்கு யார் இருக்கிறார்கள்?’ என்ற கேள்வியை கண்களில் ஏந்தியபடி, அசைவற்று படுத்திருந்த அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தார், அவர்களின் மகள். அவரிடம் பேசினோம். `அப்பாவுக்கு வலது கை இல்லை. அவர் பெயிண்ட் அடிக்கற வேலை செஞ்சாரு. அம்மா விவசாய கூலி வேலைக்குப் போவாங்க. ஒரு கையாலதான் அப்பா வேலை செய்வார். பில்டிங் அவுட்டர்ல அவர்தான் கயிறு கட்டி இறங்கி பெயிண்ட் அடிப்பாரு. அதனால எப்பவுமே அவர் கைல வலி இருக்கும். அந்த வலிக்காக அப்பா சாராயம் குடிக்க ஆரம்பிச்சாரு. போகப் போக அதிகமா குடிக்க ஆரம்பிச்சிட்டாரு. எங்க அம்மாவும் சாராயம் குடிப்பாங்கனு எல்லாரும் சொல்றாங்க. ஆனால் எங்க அம்மாவுக்கு அந்தப் பழக்கமே இல்லை. ஆனால் எல்லாருமே கூட இருந்த பார்த்த மாதிரி, அவங்க சாராயம் குடிச்சி செத்துட்டாங்கனு சொல்றாங்க. அவங்க வீட்ல யார் மேலயாவது இப்படி பழி போட்டா ஏத்துப்பாங்களா? 18-ம் தேதி ராத்திரி அப்பா சாராயம் வாங்கிட்டு வந்து குடிச்சாரு. கள்ளக்குறிச்சி... கள்ளச்சாராயம் ஒவ்வொரு நாள் வேலைக்குப் போறப்பவும், அவ்ளோ உயரத்துல கயிறு கட்டி வேலை செய்யும்போது கீழே விழுந்துடுவோமோனு அவருக்கு பயம் இருக்கும். அந்த பயத்தை போக்கறதுக்காக தினமும் வேலைக்குப் போறதுக்கு முன்னாடி சாராயம் குடிப்பாரு. அப்பாவுக்கு ரொம்ப கம்மியான சம்பளம்தான். அதனால் வீட்டுக்குப் பக்கத்துலயே பாக்கெட் சாராயம் 60 ரூபாய்க்கு கிடைக்கறப்போ, ஏன் 250 ரூபாய் செலவு பண்ணனும்னு நினைப்பாரு. அப்படித்தான் மறுநாள் 19-ம் தேதி காலைல, டம்ளர்ல சாராயம் குடிச்சிட்டு பாத்ரூம் போனாரு. பெற்றோரை இழந்த சிறுமி அம்மாவுக்கு ரொம்ப வருஷமா பைல்ஸ், வயித்து வலி பிரச்னை இருந்துச்சி. அதுக்காக அடிக்கடி ஓம வாட்டர் குடிப்பாங்க. அன்னைக்கும் அப்படித்தான் வயித்து வலியால எழுந்திருச்ச அவங்க, அப்பா குடிச்சிட்டு கொஞ்சமா வச்சிட்டுப் போயிருந்த சாராயத்தை எடுத்து ஓம வாட்டர்னு குடிச்சிட்டாங்க. அன்னைக்கு அதுதான் நடந்துச்சி. அதனாலதான் அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க. சாப்பாட்டுக்கே கஷ்டப்படற குடும்பம் நாங்க. அப்பாவும், அம்மாவும் தினமும் வேலைக்குப் போய்தான் எங்களை பாத்துக்கிட்டாங்க. இனிமேல் எங்களுக்கு யார் இருக்கா ? இப்படி ஒரு பாவத்தை, கள்ளச்சாராயம் வித்து இத்தனை பேர் சாவுக்கு காரணமானவங்கள சும்மா விடக்கூடாது. கள்ளச்சாராயம்தான் எங்களை அநாதையாக்கிடுச்சு. அதனாலதான் நானும், என் ரெண்டு தம்பிகளும் தனியா நிக்கறோம். கருணாபுரத்தில் இன்னைக்கு எங்களைப் போல நிறைய பேர் அப்பாவையும், அம்மாவையும் இழந்துட்டு நிக்கறதுக்கு இந்த கள்ளச்சாராயம்தான் காரணம்” என்று உடைந்து அழுகிறார். `அப்பாவும், அம்மாவும் செத்துட்டாங்க... கள்ளச்சாராயம் எங்களை அநாதையாக்கிடுச்சு!’ - கதறும் குழந்தைகள்! | Many people lost their relatives in Karunapuram of kallakurichi because of illicit liquor - Vikatan1 point- நிகழ வேண்டிய வழி
1 pointநிகழ வேண்டிய வழி June 17, 2024 — கருணாகரன் — ‘இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகி விட்டது. அங்கே இப்போது மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லது அமைதியாக வாழக்கூடியதாக இருக்கும்’ என்ற எண்ணமே பொதுவாக உலகப் பரப்பில் உண்டு. யுத்தம் முடிந்தது உண்மைதான். ஆனால், யுத்தத்திற்குக் காரணமான இனமுரணும் இனப்பிரச்சினையும் முடிவுக்கு வரவில்லை. அது இன்னும் கொதிநிலையிலேயே உள்ளது. அதை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது அரசு. ஏனென்றால், இனவாதத்தில்தான் அரசுக் கட்டமைப்பே நிறுவப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளைப் பேசும் நான்கு இன மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்திருக்கிறது என்றால் இதை எப்படி விளங்கிக் கொள்வது? நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நிற்பதும் லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததும் பல்லாயிரம்பேர் உடல் உறுப்புகளை இழந்ததும் ஏனென்று இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. உலகமெங்கும் கையேந்திக் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறது இலங்கை. வேறு வழியில்லாமல் நாட்டின் வளங்களும் பிறருக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும் இனவாதத்தைக் கைவிடுவதற்கு யாரும் தயாரில்லை. பழைய பிரச்சினைகளோடு, புதிதாகப் பல பிரச்சினைகளை அரசாங்கம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. தமிழ்பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மந்தைகளின் மேய்ச்சற்தரை தொடக்கம், பௌத்த அடையாளங்கள் என்ற பேரில் நிலங்களையெல்லாம் அபகரிக்கிறது. (இலங்கையில் சிங்களமும் பௌத்தமும் ஒடுக்குமுறைக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது). மாறாக யுத்தத்திற் கொல்லப்பட்டோருக்கான இழப்பீடோ, நிவாரணமோ, வழங்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பிரச்சினைக்கு முடிவில்லை. இறுதி யுத்தத்தில் சரணடைந்த போராளிகளைப் பற்றிய எந்தச் சேதிகளும் பதிலும் இல்லை. யுத்தத்தின்போது உடல் உறுப்புகளை இழந்த பல்லாயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கான உதவித்திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. பெற்றோரை இழந்த குழந்தைகள் முப்பது ஆயிரத்துக்கு மேலுண்டு. அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லை. யுத்தத்தில் அழிவடைந்த பிரதேசங்களில் புதிய தொழில் முயற்சிகள் உருவாக்கப்படவில்லை. ஏன் நாட்டிலேயே தொழிற்சாலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக பௌத்த விஹாரைகளைக் கட்டுவதிலேயே அரசின் கவனம் உள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளான பொறுப்புக்கூறல், மீள நிகழாமை, பகை மறப்பு, சமாதான முன்னெடுப்பு, அமைதித்தீர்வு எவையும் நடக்கவில்லை. என்பதால் இதுபோன்ற பல பிரச்சினைகளோடுதான் தமிழ் பேசும் மக்கள் வாழ வேண்டியுள்ளது. இதற்குள் நாட்டை உலுக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி வேறுண்டு. முஸ்லிம் மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘சகரானின் குண்டுத் தாக்குதல்’* இன்னொன்று. ஆக சிங்கள மக்களை விட இரட்டிப்பு நெருக்கடியோடு தமிழ்பேசும் மக்கள் வாழ வேண்டியிருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், அபாயங்களின் மீதே தமிழ்பேசும் சமூகங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் யாப்பு, சட்டம், நீதிபரிபாலனம், ஆட்சிமுறை எல்லாம் இனஒடுக்குமுறையை – இனப் பாரபட்சத்தை – மிக நுட்பமாக மேற்கொள்வற்கேற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் யார் அதிகாரத்தில் இருந்தாலும் இந்த அடிப்படையில் மாற்றமில்லை என்பதே சுதந்திர இலங்கையின் வரலாறும் நடைமுறையுமாகும். ஆட்சிக்கு வருவதும் அதிகாரத்தில் இருப்பதும்கூட எப்போதும் சிங்களர்களே. அவர்களே பெரும்பான்மையினர். என்பதால், அவர்களுக்கே அந்த வாய்ப்புகள் உண்டு. அதைக் கடந்து பிற சமூகத்தினர் (தமிழ் பேசும் தரப்பினர்) ஆட்சிக்கு வரவே முடியாது. அதற்கான பெரும்பான்மையும் இல்லை. பிறரை ஏற்றுக் கொள்ளும் உளநிலையும் உருவாகவில்லை. பன்மைத்துவ அரசியற் பண்பாடு, பல்லினத்துக்குரிய அரசியல் நடைமுறை இலங்கையில் வளர்ச்சியடையவில்லை. கட்சிகள் அனைத்தும் இனவாதத்தை மேற்கொள்ளக் கூடியவாறு இன அடிப்படையில், இன அடையாளத்தோடுதான் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்தேசியக் கட்சி, தமிழ் மக்கள் முற்போக்குக் கூட்டணி எனத் தமிழ்த்தரப்புக் கட்சிகள். இதற்கு நிகராக – போட்டியாக ஜாதிக ஹெல உறுமய, சிங்கள மகாசம்மத பூமிபுத்திரக் கட்சி, சிங்கள மகாசபை போன்றவற்றோடு வெளிப்படையாக இன அடையாளத்தைக் காட்டிக் கொள்ளாத பெருங்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி (J.V.P) எனச் சிங்களக் கட்சிகள். அடுத்த பக்கத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனப் பல முஸ்லிம் கட்சிகள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி எனப் பல மலையகக் கட்சிகள் (இவை இந்திய வம்சாவழி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை). இவை அனைத்தும் அந்தந்த இனங்களையே பிரதிநிதிப்படுத்துகின்றன. ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக் கொண்டே தமது இன அடையாள – இனவாத – அரசியலை மேற்கொள்கின்றன. மக்களும் விரும்பியோ விரும்பாமலோ தத்தமது இனக் கட்சிகளுக்கே ஆதரவளிக்கின்றனர். இதைக் கடந்து, பன்மைத்துவமாகச் சிந்திக்கக் கூடிய அளவுக்கு, இந்த நெருக்கடிகளைத் தீர்க்கக் கூடியவாறு இலங்கையில் எந்தத் தரப்பும் இல்லை என்பதே துயரம். மிக நீண்ட யுத்தத்தையும் அதனால் ஏற்பட்ட பேரழிவையும் சந்தித்த பிறகும் எவருக்கும் படிப்பினைகள் ஏற்படவில்லை. “இனவாதத்தை முறியடிப்பேன், இலங்கைத்தீவில் சமாதானத்தை நிலைநாட்டுவேன்” என்று தன்னுடைய கட்சியை வழிநடத்துவதற்கு எந்தத் தலைவரும் நாட்டில் இல்லை. இதனால் சமாதானத்துக்காக வேலை செய்யக் கூடிய, செயற்படுகின்ற ஒரு பத்துப் பேரைக் கூட இந்த நாட்டில் நம்மால் கண்டு பிடிக்க முடியாலிருக்கிறது. அண்மையில் மேற்குநாட்டுத் தூதுவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கேட்டார் -“போரைச் செய்வதற்காக நீங்கள் நீண்டகாலத்தைச் செலவிட்டீர்கள். பல படையணிகளை உருவாக்கினீர்கள். பல போர்த்தளபதிகளும் உருவாக்கப்பட்டனர். பல உயிர்களைக் கொடுத்தீர்கள். போர் வெற்றிக்காக எவ்வளவோ இழப்புகளின் மத்தியில் நீண்ட காத்திருப்பில் இருந்தீர்கள். அதிலே நீங்கள் எந்த நன்மைகளையும் பெற்றதில்லை. கண்ணீரையும் துயரத்தையும் பகை உணர்வையும் சம்பாதித்ததுதான் மிச்சம். பதிலாக சமாதானத்துக்காக என்ன விலையைக் கொடுத்தீர்கள்? எத்தனைபேர் சமாதானத்துக்காக உங்கள் நாட்டில் உழைக்கிறீர்கள்? உலகத்தில் அமைதியாக, இணக்கமாக, சமாதானமாக வாழ்வதுதானே சிறப்பு?” என்று. இதற்கு என்ன பதிலைச் சொல்வது? எல்லோரும் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இனவாதத்திலேயே எல்லோருடைய அரசியலும் நடக்கிறது. அதற்கான நியாயங்களையும் நியாயப்படுத்தல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. ஆனால், இதுவோ (Post – War period) போருக்குப் பிந்திய காலமாகும். போருக்குப்பிந்திய காலம் என்பது, போர் உண்டாக்கிய அழிவுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகும். அந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் பகை மறப்பு, மீளிணக்கம், சமாதானம் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய காலமாகும். உலகமெங்கும் போருக்குப் பிந்திய காலம் என்பது கற்றுக்கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில் முரண்களைக் களைந்து, புத்தாக்கத்தை உருவாக்கும் காலமாகவே இருக்கிறது. இந்த யதார்த்தத்தின்படி, இந்தக் காலகட்டத்தில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினரும் புதிய அரசியலை – புத்தாக்க அரசியலை – மேற்கொள்ள வேண்டும். அது இனவாதத்திலிருந்து முற்றிலும் விடுபடவேண்டிய அரசியலாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எவரும் – எந்தத் தரப்பும் தயாரில்லை. இதனால்தான் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு தமிழ்த்தலைமைகளாலும் எந்த ஆறுதலையும் கொடுக்க முடியாதிருக்கிறது. விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து மாபெரும் தியாகங்களைச் செய்த – அந்தப் போரில் பேரிழப்புகளைச் சந்தித்த மக்களுக்கான களப்பணிகளை ஆற்ற வேண்டும் என்று இந்தத் தலைமைகளால் சிந்திக்க முடியாதிருக்கிறது. “பிரமுகர் அரசியல்” விளையாட்டில்தான் இவை ஈடுபடுகின்றன. இதில் விடுதலை இயக்கங்களில் இருந்து வந்தவர்களும் (செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களும்) பெருந் தவறை இழைக்கின்றனர். பங்கேற்பு அரசியல் (Participation politics), பங்களிப்பு அரசியல் (Contribution politics) அர்ப்பணிப்பு அரசியல் (Commitment politics) என்பதையெல்லாம் கைவிட்டு, பிரகடன அரசியலுக்கு (Declaratory politics)த் தாவிச் சென்று விட்டனர். பிரமுகர் அரசியல் – அதாவது பிரகடன அரசியல் (Declaratory politics) தானே வசதி! இனவாதத்தை அல்லது இன அடையாளத்தை விட்டு விட்டால் தமக்குத் தோல்வி ஏற்பட்டு விடும். மக்கள் தம்மை நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் இந்தக் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் உண்டு. அதை மீறிச் செயற்படுவதற்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் இவர்கள் தயாரில்லை. இன எல்லைகளைக் கடந்து அனைத்துச் சமூகங்களிடத்திலும் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற எந்தப் பேராளுமையும் இலங்கையில் எழுச்சியடையவில்லை. என்பதால் தொடர்ந்தும் மலிவான முறையில் இன உணர்வைத் தூண்டித் தமது அரசியல் ஆதாயத்தை எட்டி விடுகிறார்கள். இதற்குப் போர்க்காலப் பாதிப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதனால் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கிறார்கள். நம்பிக்கையீனம் பெரியதொரு நோய்ப்பாதாளமாக விரிந்து கொண்டே செல்கிறது. இதே உளநிலையில்தான் இலங்கையின் ஊடகங்களும் உள்ளன. அறிஞர்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் அந்தந்தச் சமூக – இன – எல்லையைக் கடந்து சிந்திப்பதேயில்லை. எனவே நாடு இனவாதத்திலேயே கட்டுண்டு கிடக்கிறது. இதற்குப் புறம்பாக மாற்றுச் சிந்தனையைக் கொண்ட – சமாதானத்தை விரும்புகின்ற தரப்புகளும் உண்டு. அவை சிறியவை. அவற்றுக்கு அதிகாரப் பெறுமானமோ சமூகச் செல்வாக்கோ, ஊடக அங்கீகாரமோ கிடையாது. ஆகவே, யுத்தம் முடிந்தாலும் நிலைமையில் மாற்மும் முன்னேற்றமும் உண்டாகவில்லை. யுத்தம் உருவாகுவதற்கு அடிப்படையாக இருந்த காரணங்களும் யுத்த கால நிலவரங்களை ஒத்த போக்கும் நீடிப்பதால் நாட்டை விட்டுப் பலரும் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். முன்பு தமிழர்களே அதிகளவில் புலம்பெயர்ந்தனர். இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடியினால் சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வெளியேறுகின்றனர். இதெல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம், இனவாதமும் ஒடுக்குமுறை அரசின் செயற்பாடுகளும்தான் என்று தெரிந்தாலும் அதைப் புரிந்து கொண்டு மாற்றங்களைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இவ்வளவுக்கும் இலங்கை இயற்கை வளத்தை அதிகமாகக் கொண்ட அழகிய நாடு. அதைப் புரிந்து கொள்ளாமல் பிச்சைக்காகக் கை ஏந்துகிறது. தனக்குள்ளே முரண்பட்டு முரண்பட்டு அழிகிறது. இந்தக் கவலை பலருக்கும் உண்டு. ஆனால், தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் தங்களுடைய நியாயமான கவலைகளையும் சுய அறிவையும் தூக்கித் தூர எறிந்து விட்டு இனவாதத்திற்குப் பின்னே அணிவகுத்து விடுகிறார்கள். இது இலங்கைச் சமூகங்களைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலேயே வைத்திருக்கிறது. இதைத் தமக்கான நல் வாய்ப்பாகக் கொண்டு வெளிச்சக்திகள் இலங்கையில் ஆக்கிரமிப்பைச் செய்கின்றன. நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இன்னொரு நிலையில் நாட்டை, மீளமுடியாப் பெருங்கடனில் மூழ்கடிக்கின்றன. அதற்கு வட்டி வட்டியாகக் கட்ட வேண்டிய இடர்நிலை வேறு. இனமுரணும் பொருளாதார நெருக்கடியும் ஊழலும் மோசமான அரசியற் சூழலும் இதற்கெல்லாம் தாராளமாக உதவுகின்றன. இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்பூட்டக் கூடிய அளவுக்கு இலங்கையில் அறிஞர்களோ பல்கலைக்கழகத்தினரோ ஊடகங்களோ இல்லை. ஆக மொத்தத்தில் இனவாதத்துக்கே எல்லோரும் வழிவிடுகிறார்கள். இதை மீறுவோர் – மாற்றுப் பார்வையுடையோர் -“துரோகிகள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு சமூக விலக்கம் செய்யப்படுகின்றனர். இது படுபயங்கரமான ஜனநாயக மறுப்பாகும். ஆனால், அதை யாரும் அப்படிக் கருதிக் கொள்வதில்லை. பதிலாக குறித்த விடயம் அல்லது குறித்த ஆள் தமது இனத்தேசியத்திற்கு எதிரானவர் என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. இப்படியே இந்தப் பாசிஸக் கூறு வலுப்பெற்றுள்ளது. வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! இனவாதச்சிந்தனை என்றாலே அது எந்த நிலையிலும் வன்முறையைக் கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். தமிழர்கள் முஸ்லிம்களை நம்புவதில்லை. முஸ்லிம்கள் தமிழர்களை நம்புவதில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவரை நம்புவதில்லை. சிங்களவர்கள் தமிழரையும் முஸ்லிம்களையும் நம்புவதில்லை. இப்படியே ஒருவரையொருவர் சந்தேகிக்கும்போது, எப்படி நாட்டில் ஒருங்கிணைந்த தீர்மானங்களை எடுப்பது? எப்படி ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்? இதற்கெல்லாம் மூல விதையைப் போட்டது சிங்களவர்களே. நாடு சுதந்திரமடைந்த 1948 இல் ஆரம்பிக்கப்பட்ட இன ஒடுக்குமுறையை இன்றுவரை பராமரிக்கின்றனர். இதைத் தணிக்கும் உபாயத்தை வகுத்துக் கொள்வதற்குப் பதிலாகத் தாமே இந்த எரியும் தீக்கு ஆகியாகியது தமிழ்த்தரப்பு. சிங்கள இனவாதத்திற்குப் பதில் தமிழ் இனவாதம் என்ற போட்டியாக்கம் பெரும் தீமையில் வந்து முடிந்திருக்கிறது. இதேவேளை தம்மைப் பற்றிய உச்ச உயர்வுணர்வையும் (superiority complex) அதிக பாதுகாப்புணர்வையும் (sence of supreme security) இவை கொண்டிருக்கின்றன. சிலவேளை அதிக தாழ்வுணர்வையும் (inferiority complex) கொண்டிருப்பதுமுண்டு. நாட்டிற் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர்கள், ஒருபோது தாமே பெரும்பான்மையினர், தம்மிடமே ஆட்சி அதிகாரம் உண்டு, தாமே பெரும்பான்மையினர் எனத் தம்மை உயர்வானோராக (superiority complex) க் கருதுகின்றனர். மறுநிலையில், இலங்கையில் மட்டுமே சிங்களம் இருப்பதால், தாம் இந்த உலகத்தில் சிறுபான்மையினர், இந்தியா தமக்கு எப்போதும் எதிராகவே இருக்கிறது, அருகில் உள்ள தமிழ்நாடு தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதால், தமிழரையும் விடத் தாம் குறைந்தவர்கள் என தாழ்வுணர்ச்சிக்கு (inferiority complex) உள்ளாகின்றனர். இப்படித்தான் தமிழர்களின் உளநிலையும் செயற்படுகிறது. இலங்கையில் தாம் சிறுபான்மையினராக இருந்தாலும் தமிழகத்தோடு இணைத்து, தம்மைப் பெரிய தரப்பாகக் காட்ட முற்படுகின்றனர். இதனால் எப்போதும் குழப்பமும் பதட்டமும் தம்மைத் தற்காத்துக்கொள்ள வேணும் என்ற உச்ச உணர்வும் இரண்டு தரப்பையும் சூழ்ந்திருக்கிறது. எதிர்த்தரப்பின் மீது போரைத் தொடுப்பதற்கான வியூகங்களை வகுப்பதைப்பற்றிய சிந்தனையே ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இது நேரடியாக ஆயுதம் தாங்கிய போராகத்தான் நடக்கிறது என்றில்லை. பல வடிவங்களிலும் ஒடுக்குதலை மேற்கொள்வது, அரசியல் ரீதியாக விலக்குவது, விலகிக் கொள்வது, முரட்டுத் தனமாக எதிர்ப்பது, மற்றமைகளை நிராகரிப்பது, எதிர்த்தரப்புக்கு எதிராக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பது, எதையும் மூர்க்கமாக எதிர்ப்பது, எதையும் சந்தேகிப்பது எனப் பல வகைப்பட்டிருக்கிறது. இதனால்தான் இந்திய, நோர்வே நாடுகளின் சமாதான (இணக்க) முயற்சிகளும் தோற்றன. குறித்த சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு இதுவொரு வசதியே. அவர்கள் சமூக எதிர்நிலை உணர்வுக்குத் தலைமையேற்பதாகக் காட்டி, தமது நலனுக்கான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். சமூக முரண்கள், இன முரண்கள் மேலும் கூராக்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு உண்டாகும் அழிவுகள், இழப்புகள், சேதங்கள், பின்னடைவுகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. அப்படிக் கவலைப்பட்டிருந்தால் எந்த நிலையிலும் இனவாதத்தைக் கடந்த – இணக்கத்துக்கான, சமாதானத்துக்கான அரசியலையே இவர்கள் மேற்கொண்டிருப்பர். அதனுடைய நல் விளைவுகளும் உருவாகியிருக்கும். இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு யார் முன்வரவில்லை? அல்லது ஏன் பின்னிற்க வேண்டும்? எந்த அடிப்படையில் இணக்கத்திலும் சமாதானத்திலும் நம்பிக்கை வைப்பது? தமிழர்களும் முஸ்லிம்களும் சமாதான அரசியலுக்கு முன்வந்தாலும் அரசும் சிங்களத் தரப்பும் அதற்குத் தயாரா? அதற்கான உத்தரவாதம் என்ன? இதை யார், எப்படிக் கண்காணிப்பது? அதற்கான பொறிமுறையும் கால எல்லையும் என்ன? இனவாதத்தை ஆரம்பத்தில் உருவாக்கியது யார்? அவர்கள் ஏன் இதற்கான பொறுப்பேற்றலைச் செய்யவில்லை? அதற்கான பரிகாரங்களைக் காணவில்லை? இப்படிச் சில அடிப்படையான – நியாயமான கேள்விகளைச் சிலர் எழுப்பக் கூடும். சிங்களத் தரப்பு (ஐ.தே.க. வும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) இனவாதத்தைத் தூண்டியது உண்மையே. அதற்கான விலையையும் அவை கொடுத்துள்ளன. அவற்றின் தலைவர்கள் பலர் இனவாதத்திற்கு பலியாகியுள்ளனர். ஆனால், அதற்குப் போட்டியாகத் தமிழ்த் தரப்பும் பிறகு இனமுரணில் ஈடுபட்டது. இதையெல்லாம் கடந்து வர வேண்டும் என்றே காலம் நிர்ப்பந்திக்கிறது. இனவாதத்தைக் கடந்த அரசியலை மேற்கொள்வதற்கு இலங்கைத்தீவில் சிறியதாயினும் சில சக்திகள் உண்டு. மெய்யாகவே அவை சமத்துவத்தையும் அமைதியையும் விரும்புகின்றன. ஆனால், அவற்றை உதிரிகளாகவே மக்கள் நோக்குகின்றனர். ஊடகங்கள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவற்றுக்கு எப்போதும் எரியும் பிரச்சினைகளே வேண்டும். இதையெல்லாம் கடந்து அந்தச் சக்திகள் வளரவில்லை. அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. இனவாதம் செழித்திருக்கும் ஒரு சூழலில் அதற்கு எதிரான தரப்புகள் எளிதாக வளர்ச்சியடைய முடியாது என்ற சூழலை ஆழமாக உணர்வோரினால் புரிந்து கொள்ள முடியும். அப்படி அந்தத் தரப்பு வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட காலமும் கடுமையான உழைப்பும் தேவை. மிகுந்த சவால்களின் மத்தியில்தான் அவை வேர் விடவும் துளிர் விடவும் முடியும். ஏனென்றால், இனவாதத்தில் திளைத்துப் போயிருக்கும், அதில் முதலிட்டிருக்கும் பிற அரசியற் தரப்புகளும் ஊடகங்களும் லேசில் இந்த மாற்றுத் தரப்புக்கான இடத்தை அளிக்காது. ஆகவே கல்லிலே துளிர் விடும் சிறு விதையைப்போலவே அமைதிக்கான தரப்புகள் ஓர்மத்துடன் முளைத்தெழ வேண்டும். பகை வளர்ப்பின் மூலம் ஒருபோதுமே தீர்வை எட்ட முடியாது என்ற தெளிவான பட்டறிவு இருந்தாலும் பலருடைய மனதும் எதிர்ப்பில், பகைமையில்தான் திளைக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை எல்லாம் தவறு என்று தெரிந்தாலும் அதைக் கடக்க விரும்பாமல் திளைப்பதைப்போன்றதே இதுவும். அது ஒரு போதையாகி விட்டது. பிறரை எப்போதும் எதிர்த்தரப்பாக நோக்கிப் பழகி விட்டோம். ஆனால் தென்னாபிரிக்காவில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் பகையைக் கடந்து நிற்கிறார்கள். இன்று யப்பானும் அமெரிக்காவும் பகையைக் கடந்த நிலையில் இணைந்து செயற்படுகின்றன. கிரோஸிமாவிலும் நாகஸாகியிலும் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் தாக்கம் இன்னும் யப்பானில் உண்டு. ஆனால், அதைக் கடந்து செல்வது யப்பானுக்கு அவசியமாக இருந்தது. இப்படிப் பகையைக் கடந்த பல செழிப்பான உதாரணங்கள் உண்டு. ஆனாலும் இதை ஒத்துக் கொள்வதற்கும் முன்மாதிரியாகக் கொள்வதற்கும் யாரும் தயாரில்லை. இலங்கையில் இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு முயற்சித்தவர்களை ஏற்கனவே மக்கள் தோற்கடித்து விட்டனர் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும். இடதுசாரிய நண்பர்கள் துயரம்தோய்ந்த பகடியாக அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியமுண்டு. “இடதுசாரிகளைத் தோற்கடித்து விட்டு, இனவாதிகளை வளர்த்த மக்கள் அதற்கான துயரத்தை அறுவடை செய்கின்றனர்” என. உண்மைதான் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத அரசியலுக்காக மிகப் பெரிய விலையைக் கொடுத்திருக்கின்றனர். ஆனாலும் மக்கள் இதில் பட்டறிவைப் பெறுவதற்கும் இதைக் குறித்தெல்லாம் சிந்திப்பதற்கும் மாற்று உபாயங்களைத் தேடுவதற்கும் தயாரில்லை. அவர்கள் மலக்குழிக்குள்ளே அமுதத்தைத் தேட முயற்சிக்கிறார்கள். அதற்கேற்றவாறு மலத்திலிருந்து தேனை எடுத்துத் தருவதாக இந்தத் தலைவர்களும் தங்கள் மக்களுக்கு இனிப்பாக வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால்தான் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கொள்வதற்குத் தமிழர்களால் முடியாதிருக்கிறது. அரசு பல வகையில் அதைத் தடுக்க முற்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்கள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கிறார்கள். “அந்த வேட்பாளர் ஒரு போதுமே வெற்றியடைய மாட்டார் என்றாலும் பரவாயில்லை, தமது எதிர்ப்பின் அடையாளமாக இருக்கட்டும்” என்று சொல்கிறார்கள். இப்படி நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்டுவதற்கு அவர்கள், தமிழ்பேசும் ஏனைய தரப்புகளான முஸ்லிம்களிடமும் மலையக மக்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை. இப்படித்தான் அறிவீனமாக அனைத்தும் சிந்திக்கப்படுகிறது. புத்தியைத் தீட்டுவதற்குப் பதிலாகக் கத்தியைத் தீட்டுவதிலேயே பலருடைய கரிசனையும் உள்ளது. ஆனால், எதிர்ப்பரசியலின் யுகம் விடுதலைப் புலிகளுடன் முடிவுக்கு வந்து விட்டது. அவர்களே அதனுடைய உச்சம். எதிர்ப்பரசியலைப் புலிகள் பல பரிமாணங்களில் மேற்கொண்டனர். தமக்கான ஆட்சிக்கான நிலப் பரப்பு, ஆட்சி, படையணிகள், தாக்குதல்கள், தொடர்ச்சியான போர், அதை எதிர்கொள்ளும் ஆற்றல், மக்கள் ஆதரவு, அரசாங்கத்தை நிலைகுலைய வைத்தல், சர்வதேசக் கவனத்தை ஈர்த்தல் எனப் பலவாக இருந்தது. இனி ஒரு எதிர்ப்பரசியலை மேற்கொள்வதாக இருந்தால், புலிகளைக் கடந்து நிற்க வேண்டும். அது சாத்தியமானதா? அதை யார் முன்னெடுப்பது? இந்தக் கசப்பான யதார்த்த வெளியில்தான் இலங்கையர்கள் தமது அரசியலை முன்னெடுத்து, எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர். சரியான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதாக இருந்தால், நாம் மரபார்ந்து சிந்தித்து வந்த இன அடிப்படையிலான சிந்தனை முறையிலிருந்து விடுபட வேண்டும். அதைத் தூக்கியெறிய வேண்டும். இங்கேதான், நம்முடைய வலிமையான – உறுதியான நிலைப்பாடும் போராட்டமும் தேவை. நாம் எந்த நிலையிலும் ஐக்கியத்தை, சமாதானத்தை, நீதியை, உரிமையை, அதிகாரப் பகிர்வை, அமைதித்தீர்வையே விரும்புகிறோம். எந்த நிலையிலும் நமக்குச் சமாதானமே வேண்டும் என்று உறுதியாக – விடாப்பிடியாக நிற்க வேண்டும். அதுவே இனவாத அரசையும் அதன் ஒடுக்குமுறையை இயந்திரத்தையும் உடைப்பதற்கான உறுதி மிக்க ஆயுதம். இதுதான் உலக மொழி. https://arangamnews.com/?p=108771 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது; ஸ்டாலின் சீற்றம்; ஜெய்சங்கருக்கு கடிதம்
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று திங்கட்கிழமை (17) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த நான்கு இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கடற்படையினர் கைது செய்தனர்.1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் நாளேடு: உதயன் திகதி: 2/05/1992 பக்கம்: 1 முஸ்லிம் கிராமத்தில் 6 தமிழர் வெட்டிக் கொலை மட்டக்களப்பு, கள்ளமடு முஸ்லிம் கிராமத்தில் ஆறு தமிழர்களை இனந்தெரியாதவர்கள் வெட்டிக்கொன்றனர். இராணுவப் பேச்சாளர் கேணல் சரத் முனசிங்க நேற்று நடைபெற்ற வாராந்த பத்திரிகையாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார். இதேசமயம், காட்டுக்குள் விறகு வெட்டச்சென்ற கஹவத்தமுனை கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஒருவரின் சடலத்தை இராணுவத்தினர் கண்டெடுத்துள்ளனர் என்றும் கேணல் முனசிங்க கூறினார். (ஒ-த) *****1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் நாளேடு: உதயன் திகதி: 14/05/1992 பக்கம்: 1, 6 *வாழைச்சேனையில் கடத்தப்பட்ட 12 தமிழரும் கொலை செய்யப்பட்டனர்? மட்டக்களப்பு, மே 14 வாழைச்சேனை காகித ஆலை சுற்றாடலில் கடந்த மாதம் 29 ஆம் திகதியன்று கடத்திச் செல்லப்பட்ட 12 தமிழரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தற்போது நம்பப்படுவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. விறகு பொறுக்கச் சென்ற 13 தமிழர் கடத்தப்பட்டதும் - அவர்களில் ஒரு சிறுவன் தப்பி வந்து கடத்தல் சம்பவம் பற்றி உறவினர்களுக்குத் தகவல் கொடுத்ததும் தெரிந்தவையே. முஸ்லிம் ஊர்காவல் படையினரே இவர்களை கடத்திச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் 12 பேரில் அறுவர் மாணவிகள் என்பதும் இவர்கள் வாழைச் சேனை இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று வந்தவர்கள் என்பதும், இவர்களின் பெற்றோர் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கவை. [ஒ- 3] பக்கம்: 6 புலிகளுடன் பேசுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தயார் கொழும்பு.மே.14 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவருடனும் பேசத் தயாராக உள்ளது. விடுதலைப் புலிகளும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப் எம்.ஏச். எம் அஷ்ரப் பி.பி.ஸி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். இதுவரை புலிகள் அமைப்பிலிருந்து எவரும் தன்னைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்க அணுகவில்லை என்றும் அவர் கூறினார். (இ-10) பக்கம்: 6 கட்டாயமாக குடியமர்த்த முயற்சி யாழ்ப்பாணம் மே 14 அண்மைபில் படுகொலைகள் இடம்பெற்ற மட்டக்களப்பு முத்துக்கல கிராமத்தில் இருந்து இடம்பெயர்ந்துள்ள தமிழ் குடும்பங்களை வாழைச்சேனைப் பகுதியில் குடியமர்த்த அரச அதிகாரிகள் முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. வாழைச்சேனைப் பகுதி, தமிழர்களுக்குப் பாதுகாப்பற்ற இடமாக இருப்பதால் அங்கு சென்று வாழ அவர்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. [இ- 5] *****1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
அழகான ஆண்-பெண் என்ற குடும்ப கட்டமைப்பைச் சிதைப்பதற்கென்றே எத்தனை ஆயிரம் வியாக்கியானங்கள்! சூப்பர்! வாழ்த்துகள்!👏 இந்த கூட்டத்துக்குள் trans gender மக்கள் வரமாட்டார்கள். ஆணாகவே இருந்துகொண்டு இன்னொரு ஆணுடன் இணைந்து வாழ்வதும் பெண்ணாகவே இருந்துகொண்டு பெண்ணோடு இணைந்துவாழ்வதும் vile affection ஆகும். மற்றும்படி ஆண் உடலமைப்பில் தம்மைப் பெண்ணாக உணர்பவர்களினதும் பெண் உடலமைப்பில் தம்மை ஆணாக உணர்பவர்களினதும் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும்!1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் நாளேடு: உதயன் திகதி: 6/05/1992 பக்கம்: 1 மட்டு. அம்பாறை தமிழருக்கு கொலைப் பயமுறுத்தல் அங்கு பெரும் பதற்ற நிலை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களுக்கு பயமுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால், அங்கு பெரும் பதற்றநிலை நிலவுவதாகத் தெரியவருகிறது. முஸ்லிம்களும், ஊர்காவல் படையினருமே தமிழ் மக்களுக்கு கொலைப் பயமுறுத்தலை விடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதேசமயம் திருகோணமலை அகதி முகாம்களில் உள்ள தமிழ் மக்களும் கொலை செய்யபடுவர் என்று மிரட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையில் கடந்த 28 ஆம் திகதி முதல் 30 திகதி வரை மட்டக்களப்பு -பொலன்னறுவ எல்லைப்புற கிராமங்களில் 78 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதையடுத்து அங்குள்ள மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது (ஒ- 3) பக்கம்: 5 உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை 78 பொலன்னறுவ மாவட்டத்தில் முத்துக்கல் மற்றும் சரப்பொலை ஆகிய தமிழ்க் கிராமங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்த தமிழரின் எண்ணிக்க 78 என அறிவிக்கப்படுகிறது. முன்னர் அலஞ்சிப்பொத்தானை என்னும் இடத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 58 முஸ்லிம்கள் உயிரிழந்தனர் என்பது தெரிந்ததே. (ஒ-எ) *****1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் நாளேடு: உதயன் திகதி: 5/05/1992 பக்கம்: 1 *வாழைச்சேனையில் 6 மாணவிகள் உட்பட 13 தமிழர் கடத்தப்பட்டனர் கொழும்பு,மே 5 வாழைச்சேனை காகித நகரில் கடந்த புதனன்று 13 தமிழர்கள் முஸ்லிம் குண்டர்களினாலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் கடத்தப்பட்டனர். காகித ஆலை பதிமருந்துத் தோட்டத்தினுள் விறகு பொறுக்கச் சென்ற 6 இளம் பெண்கள், ஒரு வயோதிப மாது, நான்கு சிறுவர்கள், இரு சிறுமியர் ஆகியோரே கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தப்பட்ட சிறுவர்களில் ஒருவன் வெட்டுக் காயங்களுடன் தப்பி ஓடி வந்ததை அடுத்து கடத்தல் சம்பவம் பற்றிய முழு விவரமும் வெளியானது. கடத்தப்பட்டவர்கள் காவத்தைமுனைக் கிரமத்துகுக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அச்சிறுவன் தகவல் வெளியிட்டான். இதனையடுத்து காவத்தைமுனையிலும், அதைச் சுற்றி உள்ள காடுகளிலும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தேடுதல் முயற்சி பலனளிக்கவில்லை. கடத்தப்பட்ட ஆறு இளம் பெண்களும் வாழைச்சேனை இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவிகள் என்றும், அவர்களின் பெற்றோர்கள் காகித ஆலை ஊழியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. *****1 point- ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு
1 pointசெய்திகள் நாளேடு: உதயன் திகதி: 4/05/1992 பக்கம்: 1 கடத்தப்பட்ட 12 தமிழரை மீட்க பேச்சு நடக்கிறதாம் கொழும்பு. மே 4 பொலன்னறுவ மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்களைத் தொடர்ந்து கடத்திச் செல்லப்பட்ட பன்னிரண்டு தமிழ்ப் பொதுமக்களையும் விடுவிப்பது குறித்து பேச்சுகள் நடைபெற்றுவருவதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. தியன்வட்டவானில் உள்ள மியன்கரச்சி கிராமத்தில் இருக்கும் காட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட இவர்களில் 8 பேர் ஆண்கள் என்றும் நான்கு பேர் பெண்கள் என்றும் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'சண்டே ரைம்ஸ்' செய்தி வெளியிட்டிருக்கிறது. தமிழர்களை விடுவிக் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் நாம் பேசினோம். ஆனால் அம்முஸ்லிம் பிரதிநிதிகளனால் கடத்தப்பட்டவர்களுடன் தொடர்புகொள்ள முடியாதிருந்தது. தமிழரைக் கடத்தியவர்கள் ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் என்று நம்பப்படுகின்றது" இப்படி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். [ஒ-எ] *****1 point- மக்கா வீதிகளில் பரவிக் கிடக்கும் சடலங்களால் பரபரப்பு
சிவலிங்கம் தான் உள்ளது என்று கேள்வி. அதுவும் பீடம் இல்லாத சிவலிங்கம். சிவலிங்கம் அகிலத்தின் வடிவம். அதற்குப் பீடம் அமைத்து அசிங்கமாக்கியவர்கள் பார்ப்பனர்கள் தான்..!1 point- 1400 கோடி செலவில் இந்தியாவில் குளிர்பான நிறுவனம் அமைக்கும் முரளிதரன்.
10 வருடத்துக்கு முதல் நான் நீங்கள் ஜஸ்டின், வசம்பு இன்னும் பல யாழ் உறவுகள் முரளி பற்றி வாதாடியது நினைவில் உள்ளது. அந்த திரியை தேடுகிறேன்.1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
வணக்கம் நில்மினி. எதிர்பாராத யாழ்கள உறவுகளின் சந்திப்பு தரும் மகிழ்ச்சி என்றும் நினைவில் நிலைத்திருக்கும். அதனை ஏற்படுத்தித் தந்த தமிழ்சிறிக்கு நன்றிகள். உங்கள் எழுத்துக்கள் எல்லை தாண்டி நீண்டாலும் வாசிக்கத் தயாராகி உள்ளோம். சமீபத்தில் சந்தித்த மூன்று கள உறுப்பினர்களான எங்கள் தலைகள் இற்றைவரை யாழ்களத்தில் எப்படி உருட்டப்படுகிறது என்பதை அறிவீர்கள், நீங்களும் எங்களுடன் சேர்ந்தால் அது எங்களுக்கு ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் அள்ளித் தரும் என நம்பலாம். நிச்சயம் உங்களுக்கு ஒரு பலகாரப்பொதியைச் சிறித்தம்பி கட்டியிருப்பார் எனவும் நம்பலாம். ஏனென்றால் உங்களையும் என்னையும் அவர் சந்திக்கவைத்த பகுதி பலகாரம், உணவு உண்பதற்காக ஒதுக்கப்பட்ட பகுதி. 🤪🤤1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்: அடுத்தடுத்த உயிரிழப்புகளால் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு - யார் காரணம்?
நீங்கள், ரசனியை ஏதிர்பார்க்கின்றீர்கள் போலுள்ளது. 😂 ரசனி... தனது கார் ரைவருக்கே சம்பள பாக்கி கொடுக்கவில்லை என்றும், அவரின் மனைவி லதா நடத்தும் பாடசாலைக்கும் பல ஆண்டுகளாக வாடகை கொடுக்கவில்லை என்று செய்திகள் உலாவுது. இப்படியான கஸ்ரமான நேரத்தில்... அவர்களிடம் பணம் எதிர்பார்ப்பது சரியல்ல. 🤣1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
சிறியின் அப்பம்மா தையல்முத்து (எனது அப்பப்பாவின் சகோதரி) திருமணம். அவரின் தகப்பன் சோதிட சங்கீத வித்வ சிரோன்மணி தாவை வான அம்பலவாண நாவலர். இந்த புகைப்படங்கள் 1900 ஆம் ஆண்டுக்கும் 1902 ஆம் ஆண்டுக்கும் இடையில் எடுக்கப்பட்டது.1 point- எல்ஜிபிடிகியு சமூகத்தினரையும்; பால்புதுமையினரின் உரிமைகளையும் ஊக்குவிக்கும் சட்ட மூலத்தினால் உள்ளுர் கலாச்சாரத்திற்கு ஆபத்து- அகில இலங்கை பௌத்தகாங்கிரஸ்
தமிழர்களுக்கு எந்த தீர்வும் வழங்க கூடாது என்று எதிர்த்தும் நிற்கும் இதே பெளத்த சங்கங்கள், பீடங்கள் தான் பால்சமனிலை மற்றும், LGBTQ+ சமூகத்துக்கு சாதகமான சட்ட திருத்தங்களுக்கும் எதிராக நிற்கின்றது. வலதுசாரிகள், நாசிகளின் கொள்கைகளை / ஹிட்லரை ஆதரிப்பவர்கள், மத அடிப்படைவாதிகள், மத சுதந்திரத்தை எதிர்ப்பவர்கள், இனவாதிகள், ஆச்சார பூபதிகள், சாதிமான்கள் எல்லாரும் ஒரே அணியில் தான் எப்போதும் ஒன்று சேர்வார்கள்.1 point- இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவ முகாம்கள் அகற்றம் - அடுத்தது என்ன?
வேலி அடைக்கும்போது கதியால் தள்ளிப்போட்டுக் காணிசேர்க்கும் கலையை நான் அறிந்த காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் கற்பிக்கிறார்கள். அதனைக் கற்பதற்கு எனக்கும் ஆர்வம் ஏற்பட்டபோது…. அம்மா கண்டித்ததால் அந்தக் கற்கை நெறியைக் கற்காமல் கைவிட்டது உண்மை.🤔1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
சிலவேளை இந்தியா பாகிஸ்தானில் விளையாடமாட்டேன் என்று அடம்பிடித்து போகாமல் விட்டால் இலங்கைக்கு விளையாட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் துடுப்பாட்டத்தில் இந்தியா அமெரிக்கா மாதிரி. ஐசிசி( ஐ. நா மாதிரி) இந்தியா விளையாடவே விரும்பும். 😄1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
பிரபல பலகாரக்க்கட்த்தல் மன்னன் கலியாண வீட்டுக்குப் போகாபடியால் பலகாரம் எக்கச்சக்கமா மிஞ்சி விட்டுதாம்1 point- எனது தந்தை வழி உறவினர் சிறியுடனான சொந்தமும் அவரது மகளின் கல்யாணமும், எனது பார்வையில் ஜேர்மனிய ஈழத்தமிழர்களும்
நாங்கள் ஆறுமுக நாவலரின் சிலையை அல்லது படத்தை மட்டும் தான் பார்த்திருக்கின்றோம். அவருடைய வழி வந்தவர்களுடன் உரையாடும் தருணம் கிடைத்தது எங்கள் பாக்கியம் தொடருங்கள் 🙏1 point- சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம்
சாதி கெட்ட 'சாதி' - சுப.சோமசுந்தரம் தலைப்பில் முதலில் வரும் சாதி, ஒழுக்கம் எனப் பொருள்படும் தமிழ்ச் சொல்; பின்னர் வரும் 'சாதி', ஜாதி எனும் பிரிவினையின் தமிழ் வடிவம். ஒரு கணித ஆசிரியர் என்ற முறையில், மும்பையில் கணித மாணாக்கர்க்காக அகில இந்திய அளவில் நடைபெற்ற ஒரு தொடர் நிகழ்வில் பங்கேற்ற பின் ஞாயிறன்று (16 ஜூன் 2024) ஊர் திரும்பியதும் நேற்று (17 ஜூன்) ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தோழர் பேரா.வ.பொன்னுராஜ் அவர்களுடன் கலந்து கொள்ளும் நல்வாய்ப்பு அமைந்தது. அந்தப் பக்கம் செல்லும்போது கணித உலகின் நட்பு வட்டம் "Back in the saddle" என்று நினைக்க வைப்பதும், இந்தப் பக்கம் வரும்போது தோழர்கள் அதே உணர்வைத் தருவதும் (இல்லாத) இறைவன் எனக்கு அளிக்கும் வரம் போலும் ! நண்பர்கள் மற்றும் தோழர்கள் துணையால் "Back to the pavilion" எனும் நிலையே இல்லாமல் போனது வாழ்வின் பேரானந்தம். நிற்க. அது ஒரு கண்டனக் கூட்டம். எதற்காக ? ஒரு தலைவனும் தலைவியும் சுமார் ஆறு வருடங்கள் காதலித்தனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலந்தொட்டுத் தமிழ் நிலத்தின் நடைமுறைதானே ! தொல்காப்பியன் கூற்றுப்படி, இடையில் தமிழ்ச் சமூகத்தில் புகுந்த பொய்யும் வழுவும் பெற்றோரையும் உற்றோரையும் திருமணத்தை அங்கீகரித்து மணமுறையினை வகுப்பவர்களாக மாற்றியது. "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" - தொல்காப்பியம், பொருளதிகாரம், பாடல் 145. (ஐயர் - மூத்தோர் - பெற்றோர், உற்றோர்; யாத்தனர் - இயற்றினர், அமைத்தனர்; கரணம் - மணமுறைகள்) தொல்காப்பியன் காலத்திலேயே பொய்யும் வழுவும் உள்ளே புகுந்து விட்டது என்பது தெரிகிறது. வருணாசிரமம் எனும் அபத்தமெல்லாம் அந்த 'வழு'வில் அடக்கம்ணே ! சரி, கதையை விட்ட இடத்தில் தொடருவோம். மணமகள் 'இல்லத்துப் பிள்ளைமார்' என்று சற்று உயர்ந்த ரகமாம் (அவாளின் வர்ணாசிரமப் பகுப்பின்படி எல்லாம் சூத்திர இழவுதான்). மணமகன் அருந்ததியர் எனும் குறைந்த ரகமாம். இரத்த வகைகள், இழவெடுத்த சாதி வகைப்படியே அமையும் என்று எவனோ அறிவியல் பூர்வமாக நிறுவி நோபல் பரிசு வாங்கியிருப்பான் போல ! பெண் வீட்டார் சம்மதிக்க மாட்டார் எனத் தெரிந்து இக்காதல் இணையர் CPI(M) கட்சியின் நெல்லைக் கிளையில் தஞ்சம் புகுந்தனர். இரு மனமொத்த அத்திருமணத்தைப் பதிவு செய்ய கட்சித் தோழர்கள் ஆவன செய்தனர். வெகுண்டெழுந்த பெண் வீட்டார் அடியாட்கள் துணையுடன் CPI(M) கட்சி அலுவலகத்தை அடைந்து நாற்காலிகளையும் கண்ணாடிக் கதவுகளையும் அடித்து உடைத்தனர். அதனைத் தடுத்த பெண் வழக்கறிஞரும் தோழருமான பழனி அவர்களும், அலுவலகத் தோழர் சிலரும் தாக்கப்பட்டனர். காவலர் இருவர் கண்முன்னேயே இத்தாக்குதல் நடைபெற்றது. ஏற்கெனவே தோழர்கள் காவல் நிலையத்திற்குக் கொடுத்த தகவலால் அங்கு வந்த காவலர்களே அவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். கூடவே பெண் வீட்டார்க்கும் தகவல் கொடுத்தவர்கள் யாராக இருக்கும் ? அதன் பின் ரவுடிகளுக்குத் தகவல் தந்தோர் யார் ? முன்னெச்சரிக்கையாக காதலர் இருவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டதால், அவர்களைக் கட்சி அலுவலகத்தில் எதிர்பார்த்து வந்தோர் அடைந்த ஏமாற்றத்தின் விளைவு தாக்குதலாக வெளிப்பட்டதோ ! தோழர் பழனியுடன் தொலைபேசியில் பேசிய ஒருவர் (தம்மை அக்காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலராய்/அதிகாரியாய் அறிமுகம் செய்து கொண்டவர்), ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டாம் என்றும், அக்காதலர் பாதுகாப்புக் கருதித் தங்களிடம் தனிப்பட்ட முறையில் ஒப்படைக்குமாறு கூறியதாகவும் கேள்வியுறுகிறோம். அவ்வாறு ஒப்படைக்கப் பட்டிருந்தால் கட்டப் பஞ்சாயத்தின் மூலம் அப்பெண் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அருந்ததியரான அம்மணமகன் நிலை என்னவாகி இருக்கும் ? தமிழ்நாட்டில் இதுவரை நடந்த ஆவணக் கொலைகளின் டைரிக் குறிப்புகள் தெளிவாக உள்ளனவே ! காதல் ஜோடி காவல் நிலையம் செல்லாமல் கம்யூனிஸ்டுகளிடம் தஞ்சம் அடைந்தது சரியான முடிவு என்று தெரிகிறதே ! பெற்றோர் வந்து பேசினால் பொறுப்புணர்ச்சியுடன் இரு சாராரிடமும் பக்குவமாகப் பேச வல்லவர்தாமே நம் தோழர்கள் ! அவ்வாறிருக்க எடுத்த எடுப்பில் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் அவசியம் என்ன ? மேற்கண்ட விவரங்கள் அனைத்தும் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பதிவானவை. அலுவலகம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனே CPI(M) ன் நெல்லைக் கிளையின் சார்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் ஸ்ரீராம், "சாதி மறுப்புத் திருமணங்களுக்கு இனி எங்கள் அலுவலகம் திறந்தே இருக்கும்" என்று அறிவித்ததும், நேற்று நடந்த கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் அதையே மாநிலம் முழுமைக்கும் வழிமொழிந்ததும் சமூக நன்மைக்கான நமது போர்க்குணம். போராளிகள் அப்படித்தானே இயங்க முடியும் ! பொதுவுடைமைக் கட்சிகளும் திராவிட இயக்கங்களும் சமூக நீதிக்கானவை. ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை மனதில் கொள்ளாமல் அறத்தை நிலைநாட்டும் கடமை ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு சாதிய வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட அடியாட்களில் சிலர் ஏற்கெனவே கொலைக்குற்றம் முதலிய வழக்குகளில் சிக்கியவர்கள் எனக் கேள்வியுறுகிறோம். அத்தகையோர் மீது 'குண்டாஸ்' சட்டம் பாய வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளே சாதியப் பிற்போக்குவாதிகளுக்கான எச்சரிக்கையாய் அமையும். நாங்குநேரி சாதிவெறித் தாக்குதலைத் தொடர்ந்து மாணாக்கரிடையே சாதிவெறி எனும் கொடுமை களைய முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த ஆலோசனைக் குழு தற்செயலாகத் தனது அறிக்கையைச் சமர்ப்பித்த நேரமிது. வரும் தலைமுறையாவது சாதியற்ற சமூகம் எனும் விடியலை நோக்கி முன்னேற அரசு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாதி அடையாளம் நமக்கான அவமானம் என்று சமூகம் உணர வேண்டும். மார்க்ஸும் அம்பேத்கரும் பெரியாரும் ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட வேண்டும். "சாத்திரம் பல பேசும் சழக்கர்காள், கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்" என்று நாவுக்கரசர் எழுப்பும் வினா கோயில்களில் கூட ஒலிக்க வேண்டும். https://www.facebook.com/share/p/TCRhdvoaKxBZZmfz/?mibextid=oFDknk1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
தென் ஆபிரிக்கா அச்சு அசலாக Quinton de Kock போலவே இருக்கும் இன்னொருவரை இறக்கி விட்டிருக்கின்றார்கள். அவர் அமெரிக்காவை துவைத்து கொடியில் விரித்துக் கொண்டிருக்கின்றார்........தென் ஆபிரிக்கா நான்கு ஓவர்களில் 46/1........1 point- குருந்தூர்மலையில் பொலிஸ் புலனாய்வாளர்களின் கண்காணிப்புக்கு மத்தியில் சிவ வழிபாடு
வணக்கம் வாதவூரான. நீங்கள் கூறியபடி இந்த விடயங்கள் ஏற்கனவே எல்லோரும்க்கும் தெரிந்தவைதான். ஆனால் எனது கேள்வி அது அல்ல. தமிழர் நிலத்தில் ஒரு தாதுகோபுரம் இருந்திருக்கிறது என்றால் அங்கே தமிழ்ப் பெளத்தர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் அல்லவா? இல்லாவிட்டால் அங்கே சிங்களம் வாழ்ந்ததாக ஆகிவிடும். எனவே தற்போதைய சூழலில் இரு மதத்தவர்களும் அருகருகாக தங்கள் மதச் சடங்குகளை நடாத்த முடியாதா? செய்ய முடியாது என்றால் அதற்குக் காரணம் என்ன?1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கந்தையர், பலதமிழர்களுக்கு இது நன்றாகவே புரிகிறது. ஆனால் யாழ் களத்தில்தான் சில மெத்தப்படித்தவர்களுக்கும் அடிக்கடி நிறம் மாறுபவர்களுக்கும் இது புரிவதில்லை. அது அவர்களுக்கு என்றுமே புரியாது.1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
"ஒருபால் திருமணம்" [நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக்களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன் விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்] திருமணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும், ஒரு நிரந்தர மற்றும் பிரத்தியேக அர்ப்பணிப்புகளுடன் ஒன்றிணைவதுடன், இயற்கையாகவே (இயல்பாகவே அமையப்பெற்ற) குழந்தைகளை பெற்று ஒன்றாக வளர்ப்பதன் மூலம் நிறைவேற்றப்படுகிறது. அதாவது, ஆண் பெண் பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. எனவே, இதற்கு புறம்பாக, எதாவது ஒன்றை திருமணம் என்று அழைப்பது திருமணம் ஆகா. திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான உடன்படிக்கை ஆகும். இது அதன் இயல்பாகவே, குழந்தைகளின் இனப்பெருக்கம் அவர்களின் கல்வி, வாழ்க்கைத் துணைகளின் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வு நோக்கி தம்பதியர்களுக்கு அறிவுறுத்துகிறது அல்லது கட்டளையிடுகிறது. ஆனால் ஒருபால் திருமணத்தை ஆதரிப்பவர்கள் அல்லது அதை ஊக்கிவிப்பவர்கள், இதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒன்றையே முன்மொழிகிறார்கள். அதாவது இரு ஆண்களுக்கு இடையில் அல்லது இரு பெண்களுக்கு இடையில் இதை முன்மொழிகிறார்கள். இது சுயமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காணப்படும் உயிரியல், உடலியல் மற்றும் உளவியல் வித்தியாசங்களையும், அதனால் திருமணத்தில் இணைந்து அவர்கள் காணும் வாழ்வின் முழுமையையும் மறுக்கிறது. அது மட்டும் அல்ல, மனித இனத்தின் பெருக்கம் மற்றும் குழந்தைகளை அவர்களின் இயற்கையான இரு பெற்றோர்களுடன் வளர்வதையும் தடுக்கிறது. அதாவது, சிலவேளை அதில் ஒருவருக்கு வேறு யாராவதின் மூலம் ஒரு அல்லது பல குழந்தை இருந்து அவர்களுடன் வாழ நேரிட்டால், ஒரு பால் திருமணம் அந்த குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தையின் முழுமையான பங்கை உணர முடியாமல் தடுத்து விடுகிறது. டார்வின் தனது இயற்கைத் தேர்வு என்ற அத்தியாயத்தில், வெற்றிகரமான உயிரினங்கள், இறக்கும் தன் மூத்தவர்களை ஈடு செய்வதற்கு தேவையானதை விட, அதிக சந்ததிகளை ஒவ்வொரு தலைமுறையிலும் உருவாக்குகின்றன என்கிறார். மேலும் பல்வேறு இயக்கங்களின் தாக்கங்களைச் சமாளிக்கவல்ல தனிப்பட்ட உயிர் மற்றும் உயிரினங்கள் செழித்துத் தமது நன்மைபயக்கும் உயிர்ப் பண்புகளைத் தமது அடுத்த தலைமுறைக்குச் செலுத்தி, உயிர்வாழ்வு மற்றும் இனப்பெருக்கத்தை தக்கவைக்கும் என்கிறார். உதாரணமாக ஒரு பால் உறவு, இயற்கையானது என்றால் அது ஏன் இனப்பெருக்கம் செய்யவில்லை ?.ஏனென்றால் அந்த இனம் தொடர்ந்து பிழைத்து வாழ அது மிக மிக முக்கியம். ஒருபால் மக்களுக்கு திருமணத்தை மறுப்பதால், அவர்களை மற்றொரு நபருடன் அன்பான அர்ப்பணிப்புக்கு மறுப்பதாக நீங்க ஒருவேளை நினைக்கலாம்?. உண்மையில் அது தவறு. மக்கள் எல்லா நேரமும் மற்றவர்களை நேசிப்பதுடன் அர்ப்பணிப்பும் செய்கிறார்கள். ஆனால் இவை எல்லாவற்றையும் திருமணம் என்று கூறுவதில்லை, ஏனென்றால் அந்த உறவிற்கு என தனிப்பட்ட இயல்புகள் உண்டு. வேண்டும் என்றால், குழப்பம் இல்லாமல் இந்த ஒருபால் உறவுகளுக்கு வேறு ஒரு பெயரை வைக்கலாம் ?. உதாரணமாக ஒருபால் கூட்டு (same sex union) அல்லது அப்படியான வேறு இன்னும் ஒரு சொல். அதன் வரைவிலக்கணமும் அதற்குத் தக்கதாக, ஒரே பால் இனத்தை சேர்ந்த இருவர், அன்பு அல்லது நட்பு, பாலுறவு, பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக, இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு கூட்டு இதுவாகும் என்று வரையறுக்கலாம். ஆனால் திருமணம் என்று இனப்பெருக்கம் ஆற்றல் அற்ற ஒரு உறவுக்கும், இனப்பெருக்கம் ஆற்றல் உள்ள ஒரு உறவுக்கும் ஒரே மாதிரி வைப்பது தான் பிழை என்கிறோம்? ஒரு பால் உறவு அல்லது தற்பால்சேர்க்கை என்பது, ஒருவர் தனது பாலை சேர்ந்த இன்னும் ஒருவருடன் பாலியல் தொடர்பு வைப்பது ஆகும். உதாரணமாக ஆணும் ஆணும் அல்லது பெண்ணும் பெண்ணும் ஆகும். உலக வரலாற்றில், வெவ்வேறு கால கட்டங்களில், ஒரு பால் உறவு பல்வேறு விதமாக அங்கீகரிக்கப்பட்டும் , பொறுத்துக்கொள்ளப்பட்டும், தண்டிக்கப்பட்டும் மற்றும் தடைசெய்யப்பட்டும் வந்துள்ளது. பண்டைய உலகில் ஒரு பால் உறவுகளுக்கான பல ஆதாரங்களை, அதிகமாக பண்டைய கிரீஸ், ரோம், பண்டைய மெசொப்பொத்தேமியா, சீனாவின் சில பகுதி, மற்றும் இந்தியாவின் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சில ஆலய சிற்பங்களிலும் காண்கிறோம். எனவே ஒரு பால் உறவு ஒன்றும் புதிது அல்ல. என்றாலும் எந்த சந்தர்ப்பத்திலும் முன்னைய காலத்தில் சந்ததிகளை உற்பத்தி செய்ய இயலாமை காரணமாக, இதை ஒரு திருமண பந்தத்தில் ஏற்கப் படவில்லை. கிரேக்க தத்துவ ஞானி பிளாட்டோ தன்னுடைய நூலில் தற்பால் சேர்க்கை உள்ள ஆண்களே வீரம் நிறைந்தவர்களாக இருப்பர் என்று சொல்லுகிறார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும், அது போலவே இந்து புராணமான, கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம் பாகம் 5, 2. அசுர காண்டம், 32. மகா சாத்தாப் படலம், 29 ஆவது பாடலில், திருமாலை பார்த்து, சிவபெருமான், உன்னைக் புணரும் வேட்கை எமக்கும் உண்டு; நீ கொண்ட வேடம் மிக இனிது என்கிறார். அதற்கு பாடல் 33 இல், திருமால், சிவபெருமானை நோக்கி, ஆடவர் ஆடவரோடு கூடும் வழக்கம் இல்லை. ஆதலால் எம்பெருமானே! நீர் அடியேனை புணர்தல் முறையோ? என்று கேட்பதை காண்கிறோம். "அன்பில் ஆடவர் ஆடவ ரோடுசேர்ந் தின்ப மெய்தி யிருந்தனர் இல்லையால் முன்பு கேட்டது மன்று முதல்வநீ வன்பொ டென்னைப் புணர்வது மாட்சியோ" [1463] ஏன் ஒவ்வொரு சமுதாயமும், மனித குல வரலாற்றில், ஆதியில் இருந்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவை ஆதரித்தது அல்லது முதன்மை கொடுத்தார்கள்? ஏன் இந்த தனித்துவமான உறவு "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது? திருமணம் உண்மையில் தனித்துவமானதே, ஏனென்றால், இது உங்களுடன் தொடர்பில்லாத ஒருவருடன் உறவை உருவாக்கத் தேர்வு செய்வதுடன், அந்த தேர்வு பல பிணைப்புகளையும், உதாரணமாக, காதல் மற்றும் உடல் / பாலியல் கூறுகளையும் கொண்டுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குறுந்தொகை - 40, மிக ஆழமாக, சுருக்கமாக, அழகாக அந்த தனித்துவமான உறவை எடுத்து கூறுகிறது. என் தாயும் உன் தாயும் யார் யாரோ? என் தந்தையும் உன் தந்தையும் எந்த வகையில் உறவினர்? நான் உன்னையும், நீ என்னையும் எந்த வகையில் அறிவோம். அப்படி இருந்தும் நம் அன்பு உள்ளங்கள் ஒன்றோடொன்று கலந்துவிட்டன. செம்மையான நிலத்தில் (மணல் பாங்கோ, களர் பாங்கோ இல்லாத நிலத்தில்) பெய்த மழைநீர் போலக் கலந்து நிலைபெற்றுவிட்டன. (இனி நிலமும் நீரும் பயிரை வளர்க்கும்) "யாயும் ஞாயும் யார் ஆகியரோ? எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்? யானும் நீயும் எவ் வழி அறிதும்? செம் புலப் பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே." இப்பாடலில் செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமை நினைக்கும் போதெல்லாம் நயம் தருகிறது. செம்மண் நிலமும், எட்டாத உயரத்து வானமும் ஒன்றையொன்று நெருங்காத தூரத்தில் உள்ளவை. வானம் மழையைப் பொழிகிறது. நிலம் அதனை ஏற்கிறது. சிறிது நேரத்தில் ஒன்றின் பண்பு இன்னொன்றுடன் இணைந்து விடுகிறது. பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகிறது. செம்மண்ணின் நிறம், பெய்த மழை நீருக்கு வருகின்றது; நீரின் நெகிழ்ச்சித் தன்மை நிலத்துக்கு வருகிறது. அது நிலத்திற்கு செழிப்பைக் கொடுக்கிறது, அவ்வாறே இந்த தனித்துவ உறவும் மனித குலத்திற்கு செழிப்பு கொடுத்து அதன் தொடர் வளர்ச்சியையும் பாது காத்து ஊக்குவிக்கிறது. அது நடைபெறா விட்டால் இந்த விவாதமே தேவை வராது? இது மனித உறவுகளுக்கு குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையையும் (stability), தனித்துவமான ஒரு கருத்தையும் (பொருளையும்) தருகிறது, இல்லையெனில் அது முழுமையடையாது. இது ஒருபோதும் தனிநபர்களுக்கோ அல்லது தம்பதிகளுக்கோ மட்டும் இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும். எம் மனித சமுதாயம் தொடரவும் வளரவும் இந்த தனித்துவமான உறவு ஒன்று மட்டுமே செயல்படுகிறது. இதைத்தான் திருமணம் என்கிறார்கள். ஆகவே அந்த இயல்பு இல்லாத எதையும் அதே சொற்களால் அழைக்கலாமா?, நீங்களே முடிவு எடுங்கள்? உங்களுக்கு அன்பும் துணையும் மற்றும் பாலியல் இன்பமும் தரக்கூடிய எந்த நபருடனும் நீங்க ஒன்றாக வாழலாம். அது உங்கள் விருப்பம், ஆனால் அதையும் திருமணம் என்று சொல்லலாமா என்பதே எம் வாதம். திருமணம் என்பது பொதுவாக சில முக்கிய தனித்துவ அடிப்படை இயல்புகளை கொண்டுள்ளது. எனவே அங்கு காணப்பட்ட முதன்மை இயல்பு முற்றாக இல்லாத ஒன்றிற்கும் அதே பெயரை குறிக்க முடியாது. அதனால் தான் அதை "ஒருபால் கூட்டு" (same sex union) என்று கூறலாம் என்கிறோம்? ஆண் - பெண் திருமணம், கலாச்சாரம் மற்றும் நாகரிகத்தை, ஒரு தலை முறையில் இருந்து மற்ற தலை முறைக்கு மாற்றுவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தான் மனித இனம் செழிக்கிறது. இதன் காரணமாகவே இந்த திருமணம் என்ற ஆண் - பெண் சங்கமம், முழு சமுதாயத்திற்கு நன்மை பயக்கிறது. உதாரணமாக, தமிழருக்கிடையில், கி மு 700 இல் முதல் தோன்றிய ஆண் - பெண் கூட்டு களவு என் அழைக்கப்பட்டது. இது தனக்கு ஒரு துணையை தேடிக் கொள்ளும் முறையாகும். என்றாலும் இது பல காரணங்களால் இடையூறுகள் அல்லது ஒருவரை ஒருவர் கைவிடுதல் ஏற்பட்டதால், தொல்காப்பியர் கூறியது போல, "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப" (கற்பியல்,4), பலர் அறியத் திருமணம் என்ற சடங்கு (கரணம்) நடத்தும் வழக்கம் சங்க காலத்தில் ஏற்பட்டது. எனவே, மனித குல வரலாறு எங்கும், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, உலகின் ஒவ்வொரு நிலப்பரப்பிலும், திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் நடை பெரும் ஒரு சமூக நெறியாக இருந்து வந்து உள்ளது. இவை வெறுமனே விதிவிலக்குகள் இல்லை! ஒரு பால் கூட்டை ஆதரிப்பவர்கள், நிகழ் காலத்திலும், அதை தொடர்ந்து வரும் காலத்திலும் சோதிக்கப்படாத ஒரு சமூக நடைமுறையாக, ஈடுசெய்ய முடியாத ஆண் மற்றும் பெண்ணின் மதிப்புகள் முக்கிய காரணியாக அமையாத, பாலின மதிப்புக்கள் அற்ற, ஒரு பால் கூட்டை, குடும்பம் ஒன்றிற்கு உண்மையில் பரிந்து உறைகிறார்கள். இது தான் பிரச்சனையாகிறது. ஏன் என்றால் அந்த குடும்பம் அடுத்த தலை முறைக்கு தானாக போகும் வாய்ப்பை இழந்து விடுகிறது. சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது அல்லது அவர்களுக்கிடையில் அதற்கான நோக்கம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். ஒன்றை கட்டாயம் நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும், ஒரு பால் கூட்டுக்கு, புது பெயர் தேடாமல், இருக்கும் திருமணம் என்ற பெயருக்குள்ளேயே அதை அடக்க முற்படும் பொழுது, நீங்கள் அதன் கருத்தை அல்லது வரையறை விரிவுபடுத்தப்பட்டு, அதை உள்வாங்க வேண்டி உள்ளது. இதனால் முன்னைய தனித்துவமான கருத்து தொலைக்கப் பட்டு, அவை மேலும் மேலும் விரிவாக்கக் கூடிய நெகிழ்வு தன்மையை பெறுகிறது. எனவே கட்டாயம் வரும் காலத்தில் அது மேலும் விரிவு படுத்தப்படலாம் ?. உதாரணமாக, இரு சகோதரர்களுக்கு அல்லது சகோதரிகளுக்கு இடையில் அல்லது தாய்க்கும் மகளுக்கும் இடையில் ... ஏன் சிலவேளை ஒருவருக்கும் அவரின் செல்லப் பிராணிக்கும் இடையில் .. இப்படி நீட்டப் படலாம் , அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு ? உலக வரலாற்றை நோக்கும் பொழுது பல ஆட்சியாளர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். என்றாலும் அவர்கள் திருமணம் செய்யும் பொழுது, கட்டாயம், உதாரணமாக ஆட்சியாளர் ஆணாக இருக்கும் தருவாயில், மற்றவர் பெண்ணாகவே இருக்கிறார். எனவே திருமணம் என்பது தன்னிச்சையான கட்டுமானம் அல்ல; அது ஒரு “கெளரவமான அமைப்பு“. இது ஆண் பெண்களின் வேறுபட்ட மற்றும் இணக்கமான இயல்புகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனால் தான் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், தொல்காப்பியர் இயம்பியவாறு சடங்குகளால் வலுப்படுத்தப்பட்டு சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு நன்றாகவே தெரியும், இதயத்திற்கு இரத்தத்தை உந்தி தள்ளும் செயல்பாடு உள்ளது, அப்படியே கண்ணுக்கு பார்க்கும் செயல்பாடு உள்ளது, எனவே கட்டாயம் மனித நிறுவனங்களுக்கு (human institutions) மிகவும் வெளிப்படையாக ஒரு தேவை இருக்கும். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அப்படி தனித்துவமான ஒன்றும் இல்லை என்று நீங்கள் நம்பினால், திருமணம் கூட தேவை இருக்காது, அப்படி என்றால் அதைப்பற்றி வாதாடுவதை கூட இத்துடன் நிறுத்தி விடலாம் ? நீங்கள் திருமண பழக்கவழக்கங்களை வெளிப்படையாக, வரலாறு முழுவதும் உற்று நோக்கினால், அங்கே சில பொதுப்படையான காரணிகளை காணலாம். அவை அதிகமாக, திருமணத்திற்கு புறம்பான பாலியல் நடவடிக்கைகளுக்கு தடை, திருமணத்திற்குள் நம்பகத்தன்மை அல்லது ஒருவருக்கு ஒருவர் உண்மையாய் இருத்தல், வாழ்வு முழுவதும் ஒருவருக்கு ஒருவர் அர்ப்பணித்தல், திருமண வாழ்வில் ஒரு பிள்ளை பிறந்தால், அதன் தந்தை கணவரே என்ற அனுமானம், பரம்பரை தொடர்பான பழக்கவழக்கங்கள் மற்றும் குடும்ப சொத்துக்கள், திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருத்தல் (e.g. taboos against sex outside marriage, fidelity within marriage, life-long commitment, the assumption that a child born to a woman during a marriage is the child of her husband, customs concerning inheritance and family wealth, and ahem , the marriage being between a man and a woman) போன்றவற்றை காணலாம். இவை எல்லாம் கட்டாயம் இனப் பெருக்க நோக்கம் கொண்டவையாகவும், பெற்றோர் இருவருமே என உறுதி படுத்துவதுடன், உயிரியல் தாய் தந்தையர் கண்காணிப்பில் பிள்ளைகளுக்கு ஆதரவை நிலைநாட்டுவதும் ஆகும். எனவே தான் என்னை பொறுத்தவரையில், ஒருபால் கூட்டுக்கு அல்லது சமூக கூட்டு (civil partnerships - a new institution with a new purpose) ஒன்றிற்கு எந்த பிரச்சினையும் எனக்கு இல்லை. ஆனால் அதை திருமணம் என்று வரையறுப்பதில் தான் உடன்பாடு இல்லை, ஏன் என்றால் கருத்து முக்கிய விடயத்தில் முற்றாக அல்லது எதிர்மறையாக மாறுகிறது. இன்னும் ஒன்றை நான் கட்டாயம் சொல்ல வேண்டும், ஒரு ஆணின் உடலையோ அல்லது ஒரு பெண்ணின் உடலையோ, ஒரு பால் உறவு வைக்குமாறு அல்லது ஓரின சேர்க்கை செய்யுமாறு இயற்கை கட்டாயம் வடிவமைக்கவில்லை. ஒருவேளை அப்படித்தான் வடிவமைத்து இருந்தால், நாம் எல்லோரும் ஒரு இருபால் உயிரியாகவே (hermaphrodites!) இருந்திருப்போம். உயிரின் அடிப்படை இயல்புகளில் ஒன்று இனப்பெருக்கம். உயிர் தன் எளிய கட்டத்தில் இருந்து மேலும் சிக்கலான கட்டத்துக்கு படிமலர்ந்தது போலவே. இனப்பெருக்க முறைகளும் எளிய நிலையில் இருந்து சிக்கலான நிலைக்கு படிமலர்ந்து உள்ளது. தொடக்கத்தில் இனப்பெருக்கம் வெறும் மீளுருவாக்கமாகவே (replicating process), கலவியற்ற இனப்பெருக்கமாகவே (Asexual reproduction) நிலவியது. உதாரணமாக வைரஸ், பற்றீரியா, அதிநுண்ணுயிரி போன்றவை. சிக்கலான உயிரிகளில், இனப்பெருக்கத்திற்கான பாலணுக்களை பால் உறுப்புகள் தாம் உருவாக்கிப் பரிமாறுகின்றன. உதாரணமாக விலங்குகள், மனிதர்கள். ஆகவே நாம் மில்லியன் மில்லியன் ஆண்டுகளாக படிமலர்ந்து அல்லது பரிணமித்து இன்று இந்த நிலைக்கு தேவைகளின் அடிப்படையில் வந்துள்ளோம். எனவே இதை நாம் கவனத்தில் எப்பவும் எடுக்கவேண்டும். அண்மைய ஆய்வுகள், உலகில் இதுவரை 450 விலங்கு இனங்களிடையே ஓரினச்சேர்க்கை நடத்தைகள் காணப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், ஊர்வன என எல்லாமே அடங்கும். இதில் மனிதர்களுக்கு நெருக்கமான உறவு கொண்ட போனோபோஸ் [bonobos] ஆண் மற்றும் பெண்ணும் அடங்குகின்றன. சில சந்தர்ப்பங்களில் இனப்பெருக்க காரணங்களும் உள்ளன. உதாரணமாக, ஆண் கூடைட் மீன் [Goodeid fish], தன்னுடன் போட்டியிடும் மற்ற ஆண் கூடைட் மீன்களை [போட்டியாளர்களை] ஏமாற்றுவதற்க்காக, இப்படி நடிக்கின்றன, மற்றும் படி, உண்மையில் அப்படியல்ல. என்றாலும் ஒரே பாலின தோழர்களுக்கு இடையிலான நீண்ட கால உறவு மிருகங்களில் அரிதாகவே காணப்படுகிறது. ஆனால் 6% ஆண் பெரியகொம்பு செம்மறி ஆடுகள் [bighorn sheep] திறம்பட ஓரினச்சேர்க்கை மிருகமாகவே இருக்கின்றன. என்றாலும் விஞ்ஞானிகள் மனித ஓரினச்சேர்க்கை மிகவும் வித்தியாசமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும் விலங்குகளில் இருந்து எத்தனையோ மில்லியன் ஆண்டுகளாக ஒரு தேவை அல்லது ஒரு இலக்கை நோக்கி பரிணமித்து தான், நாம் இன்றைய நிலைக்கு முன்னேறி வந்துள்ளோம். ஆகவே மனித சமுதாயத்தில் எது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்பதற்கு ஆதாரம் காட்டுவதற்கு விலங்குகளைக் குறிப்பிடுவதில் அல்லது விலங்குகளிடம் இருந்து எமக்கு உதாரணம் எடுப்பதில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். "ஓரினச்சேர்க்கை: மனிதர்களை எதிர்ப்பீர்கள்; சிங்கங்களை என்ன செய்வீர்கள்?" , என்று ஒருவரின் கட்டுரையை [By ஜெயராணி • 17/10/2019] பார்த்தேன், விலங்கு உலகில் ஆவணப்படுத்தப்பட்ட தன்னின ஊன் உண்ணும் ஆதாரம் உள்ளது, மேலும் சிங்கம் தன் குட்டிகளையே சாப்பிடுகிறது. ஆகவே மனிதர்களுக்கும் சிசுக்கொலை மற்றும் நரமாமிசம் (infanticide or cannibalism) சரியானதாக இருக்கும் என்று வாதாடலாமா ?. மனித ஓரினச்சேர்க்கை நடத்தை பற்றிய முக்கிய வாதங்களில் ஒன்று இது ஆண் குழுக்களை, உதாரணமாக, அவர்கள் வேட்டை அல்லது போரில் இருக்கும் பொழுது, அவர்களை ஒன்றாக இணைக்க உதவுகிறது என்கிறார் பேராசிரியரும் பரிணாம உயிரியலாளருமான ராபின் டன்பார் [Robin Dunbar is a professor of evolutionary psychology]. உதாரணமாக, பண்டைய கிரீஸில் ஸ்பார்டன்ஸ் [the Spartans, in ancient Greece], தமது சிறந்த மேம்பட்ட துருப்புகளுக்கு [elite troops] இடையில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவித்தார்கள். இரு ஆண்களுக்கு இடையில் அப்படி ஒரு உறவு இருந்தால், ஒருவருக்கு ஒருவர் தமது மற்ற நபர்களை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார் என்பது அவர்களின் நம்பிக்கையாகும். மேலும் ஓரினச்சேர்க்கைக்கு ஒரு செயல்பாடு இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் இது வேறொன்றின் கிளை விளைவு என்றும் [a spin-off or by-product] மற்றும் பரிணாம வளர்ச்சிக்கான முக்கியத்தை இது கொண்டிருக்கவில்லை என்றும் கூறுகிறார் [It could be a spin-off or by-product of something else and in itself carries no evolutionary weight.]. அவர் மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை போதுமான வலுவானதாக இருந்தால் அல்லது மிகையாக வழிந்து கொட்டினால், அது வாலில்லாக் கருங்குரங்கு [போனோபோஸ்] மற்றும் செம்முகக் குரங்கு [மாகேக்] செயல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, உற்பத்தி செய்யாத உடலுறவில் அந்த வேட்கை பரவக்கூடும் என்கிறார் [if the urge to have sex is strong enough it may spill over into nonreproductive sex, as suggested by the actions of the bonobos and macaques.]. இதன் விளைவால் அல்லது தாக்கத்தால், அவர்கள் வளரும் சமூக சூழலின் விளைவாக, அவர்களின் வாழ்நாள் முழுவதும், ஓரினச்சேர்க்கை யாளராகவே வாழ வாய்ப்பு உள்ளது அல்லது அப்படியான உணர்வுகளுக்குள் முடங்கி விட வாய்ப்பு உள்ளது என்கிறார். இதில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். என்றாலும், மனித ஓரினச்சேர்க்கைக்கான காரணங்களை முழுமையாக நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ தூரம் ஆராச்சியில் செல்ல வேண்டும் என்கிறார் ராபின் டன்பார். உலக மனித வரலாற்றின் படி, ஆண் - பெண் இருவருக்கும் இடையில் ஒரு இணைப்பை அல்லது கூட்டை சட்ட பூர்வமாக முதல் முதல் ஏறத்தாழ கி மு 2350 இல் மெசொப்பொத்தேமியாவில் அறிமுகம் செய்தவர்கள் சுமேரியர்கள் ஆகும். அதற்க்கு முதல் திருமணம் என்ற ஒரு சடங்கு இருக்கவில்லை. இங்கு சுமேரியர்கள் இன்றைய தமிழர்களின் முன்னையோர்கள் என அறிஞர்கள் இன்று பல எடுத்துக் காட்டுகளுடன் வாதிடுகிறார்கள். இதற்கு முதல் ஒரு குறிப்பிட்ட பழங்குடியில் [tribe] உள்ள ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களை அணுகலாம் என்றும், அங்கு குழந்தைகள் பிறக்கும்போது, அவர்கள் முழு சமூகத்துக்கும் சேர்ந்தவர்களாக கருதப் பட்டார்கள். இது மனிதனுக்கு வெவ்வேறு பாலியல் அனுபவங்கள் அல்லது வகைகள் வேண்டும் என்ற ஒரு கருத்தின் அடிப்படையுடன் தொடர்புடையது எனலாம். என்றாலும் நாளடைவில், சில முக்கிய காரணங்களால், பாலியல் அறநெறி வளர்ச்சி அடைய, அதுவும் அதற்கு ஏற்றவாறு மாற்றம் அடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஒரு தொகுதி ஆண்களுக்கும் ஒரு தொகுதி பெண்களுக்கும் இடையில் திருமணம் அமைக்கப் பட்டது [‘group marriage’]. அங்கு அவர்களுக்கு இடையில் பகிரப்பட்ட பாலியல் உறவுகள் நடைபெற்றன. இதனாலேயே பின் பலகணவர் மணம் [polyandry] ஏற்பட்டது. இது இலங்கை, இந்தியா, திபெத் போன்ற நாடுகளில் முன்னைய காலத்தில் வழமையில் இருந்தன. விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his]. எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம். “உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி” “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.” இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம், இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று : “தூக்கமே களைந்து விடு என் கைகள் காதலியை தழுவட்டும் ! நீ என்னுடன் பேசுவதால், நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! என் அன்பே, உன்னை நினைத்து நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் இரவு முழுவதும் விழித்திருந்தேன்!" “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.” என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting]. இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது. எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை. ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் திருமணம் என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்க்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு. மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம். இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood]. பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம், அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]1 point- 02.04.2024
1 point - ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.