Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87990
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    15740
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/03/24 in all areas

  1. காற்றுள்ள போது தூற்றி கொள் என்ற சாமான்ய மக்கள் கூட விளங்கி கொள்ளும் தமிழ் பழமொழியையே புரிந்து கொள்ள தெரியாத முட்டாள் தலைமைகளை தொடர்சியாக கொண்டிருந்த தமிழர்களுக்கான தீர்வானது இனிக் கிடைக்காது என்பது 2009 இலேயே ஏறத்தாளமுடிவு செய்யப்பட்டு விட்டது. தமிழரின் பலம் முழுவதும் விழலுக்கு இறைத்த நீரை போல பயன்றறு போனபின்னர் எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது என்பதே யதார்ததம். ரணில் இங்கு ஒப்பு கொண்டதாக கூறப்படுவது 1987 இலேயே தமிழர்களால் எள்ளி நகையாடி எட்டி உதைத்து தள்ளப்பட்ட தீர்வேயாகும். இப்போதைய நிலையில் தமிழர்களில் உள்ள அனைத்து தரப்புகளும்(புலம்பெயர் வாய்சொல்வீர அமைப்புகள் உட்பட) ஒரே குரலில் இதை அமுல் படுத்துமாறு கேட்பது ஒன்றே ஜதார்தத பூர்வமானது. எமது உடனடித் தேவையானதுஇப்போதைய சூழ்நிலையில் இலங்கை தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன பரம்பலை காப்பாற்றுவதும் அவர்களின் கலவி பொருளாதாரம் ஆகியவறை உயர்துவதும் மிக அவசியமான தேவை. இப்போது இதை செய்ய தவறினால், முன்னரை போல் ஜதார்ததத்துக்கு புறம்பான கனவுலகில் எம்மவர் சஞ்சரிப்பாரிது கொண்டிருந்தால் இப்போதையதை விட மோசமான நிலையே ஏற்பட்டும். அதன் பின்னர் கனவுலகையும் உண்மை நிலையையும் நினைத்து நினைத்து புலம்பி பொழுது போக்கவேண்டியது தான்.
  2. சரியான கருத்து ஒவ்வொரு தேர்தலின் போதும் சிங்கள அரசியல்வாதிகள் தமிழருக்கு அது செய்வம் இது செய்வம் என்று சொல்லி பதவி கிடைத்தவுடன் கைகழுவி விடுவதே வாடிக்கையான ஒன்று . இம்முறையும் கொஞ்சம் அதிகமாகவே கூவுகின்றனர் காரணம் பொது வேட்பாளர் என்ற ட்ரம் கார்ட் களத்தில் இறங்கியவுடன் சிங்கள அடிவருடிகள் முதல் சிங்களத்துடன் வாழ்ந்தால் சந்தோசப்பட்டு சிங்களத்துக்கு மாமா வேலை செய்யும் சுமத்திரன் வரை குழம்பி போய் உள்ளார்கள் அதற்கு இந்த திரியே சாட்சி .ஏமாறுவது ஒருவகை ஆனால் இங்கு சில பேர் மற்றவர்களையும் வாங்க போய் ஏமாந்து போவம் என்று அழைப்பிதழ் வைப்பதாகவே தெரிகிறது .
  3. எம்மவர்களுக்கு மறதி அதிகம். அவர்களின் கண்களுக்குத் தெரிவது சுமந்திரன் எனும் ஒற்றை மனிதன் மட்டுமே. சுமந்திரனை அகற்றிவிட்டு வேறொருவரை முன்னிறுத்துங்கள் என்றால் அதும் முடியாது. தற்போதைய சூழலில் ரணில் கூறியதாக வெளிவந்துள்ள தகவல்கள் உண்மையாக இருக்குமானால் அதை வரவேற்க வேண்டும் எனும் பொது அறிவுகூட எம்மவர்களிடம் இல்லை. எங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட்டது தொடர்பில் ஒருவருக்கும் அக்கறை இல்லை. மரத்தில் இருக்கும் பலாக்காயை விட கையில் இருக்கும் கிளாக்காய் மேல் என்பது இந்த புலம்பெயர்ஸ் களுக்குப் புரிவதிலை. "முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா "
  4. அப்ப இப்பவே போட்டுக்கொடுக்க நீங்கள் ரெடிதானே....🤣 ..ஏற்கனவே என்னைப் பற்றி ரெகார்டுகள் ரெடிபண்ணீட்டிங்களா?
  5. வானில் மிதக்கும் 2,000கி.மீ நீளமான ‘நதிகள்’ இந்தியாவில் பேரழிவுகளை ஏற்படுத்துவது எப்படி தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சமீபத்தில் கேரளா வயநாட்டில் ஏற்பட்ட பெருமழையால் நடந்த நிலச்சரிவு கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் நிருபர் 58 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் கடந்த சில வாரங்களில் மட்டும் பல்வேறு பகுதிகளில் கனமழை, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்புகளால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். தெற்காசியாவில், குறிப்பாக இந்தியாவில் வெள்ளப் பேரிடர்கள் ஏற்படுவது புதிதல்ல. வருடத்தின் அதிக மழைப்பொழிவை பெறும் இந்த காலகட்டத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமாக நடப்பது தான். ஆனால் காலநிலை மாற்றம், பருவமழையை மிகவும் ஒழுங்கற்றதாக ஆக்கியுள்ளது, குறுகிய காலத்தில் பெருமளவு மழைப்பொழிவு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதனைத் தொடர்ந்து நீண்ட கால வறட்சி பதிவாகிறது. தற்போது விஞ்ஞானிகள் 'வளிமண்டல நதி’ எனப்படும் ஒருவகையான புயல், இந்த நிலைமையை தீவிரமாக்குகிறது என்று கூறுகின்றனர். இது புவி வெப்பமடைதலால் ஏற்படுகிறது. இதனால் சுற்றுச்சூழலில் ஈரப்பதம் அதிகரித்து நிலைமை மோசமாகிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். 'பறக்கும் நதிகள்' என்று அழைக்கப்படும் வளிமண்டல நதிகள் என்பவை, பட்டை வடிவிலான கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய நீராவி ரிப்பன்களாகும் (ribbons of water vapour). கடலின் வெப்பம் அதிகரித்து, கடல் நீர் ஆவியாகும்போது நீராவியின் மிகப்பெரிய, கண்ணுக்குத் தெரியாத இந்த ரிப்பன்கள் உருவாகின்றன. அவை ஒவ்வொன்றும் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் அகலம் கொண்டவை. இந்த நீராவி ரிப்பன்கள், வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பட்டை (band) அல்லது ஒரு நெடுவரிசையை உருவாக்குகிறது, இது மேலே உயர்ந்து, குளிர்ச்சியான அட்சரேகைகளுக்கு நகரும்போது, 'பறக்கும் நதிகள்’ உருவாகின்றன. அதன் பின்னர் மழை அல்லது பனியாகப் பெய்து, வெள்ளம் மற்றும் ஆபத்தான பனிச்சரிவுகளை ஏற்படுத்தும் அளவுக்குப் பேரழிவுக்கு வழிவகுக்கிறது. இந்த 'வானத்தில் உள்ள நதிகள்' பூமியின் நடு அட்சரேகைகள் முழுவதும் நகரும் மொத்த நீராவியில் 90%-ஐ எடுத்துச் செல்கின்றன. அதாவது, சராசரியாக அமேசான் நதியின் வழக்கமான ஓட்டத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக நீரை வெளியேற்றுகின்றன. பல நூறு கோடி மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும் அபாயம் பூமி வேகமாக வெப்பமடைவதால், இந்த வளிமண்டல நதிகள் நீளமாகவும், அகலமாகவும், மேலும் தீவிரமாகவும் மாறி, உலகளவில் பல நூறு கோடி மக்களை வெள்ளத்தில் தத்தளிக்கும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில், இந்தியப் பெருங்கடலின் வெப்பமயமாதல் 'பறக்கும் நதிகளை' உருவாக்கியுள்ளது, இது ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில் வரும் பருவமழையை பாதிக்கிறது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 2023-ஆம் ஆண்டில் 'நேச்சர்' என்ற பிரசித்திபெற்ற அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இந்தியாவில் 1951 மற்றும் 2020-க்கு இடையில் பருவமழை காலத்தில் மொத்தம் 574 'வளிமண்டல நதிகள்' உருவானதாகக் காட்டுகிறது. காலப்போக்கில் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. "கடந்த இருபது ஆண்டுகளில், கிட்டத்தட்ட 80% வளிமண்டல நதிகள் இந்தியாவில் வெள்ளத்தை ஏற்படுத்தியது," என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆய்வில் ஈடுபட்டுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி) மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, 1985 மற்றும் 2020 ஆண்டுகளுக்கு இடையிலான பருவமழைக் காலங்களை ஆராய்ந்தது. அந்த காலகட்டத்தில் இந்தியாவில் 10 மிகக் கடுமையான வெள்ளப் பேரிடர்கள் ஏற்பட்டன. அவற்றில் ஏழு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளால் ஏற்பட்டன என்பதை இந்த ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் இந்தியப் பெருங்கடலில் இருந்து நீர் ஆவியாதல் செயல்முறை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், வானிலை வெப்பமடைவதால் வளிமண்டல நதிகள் மற்றும் அவற்றால் ஏற்படும் வெள்ளங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பருவமழைக் காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி கொண்டு வரப்படும் ஈரப்பதத்தில் மாறுபாடுகள் அதாவது ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து வருகின்றன," என்று இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தின் வளிமண்டல விஞ்ஞானி டாக்டர் ராக்ஸி மேத்யூ கோல் பிபிசி-யிடம் தெரிவித்தார். "இதன் விளைவாக, சூடான கடல்களில் இருந்து ஈரப்பதம் அனைத்தும் வளிமண்டல நதிகளால் சில மணிநேரங்கள் முதல் சில நாட்களில் வரையிலான கால அளவில் வெளியேற்றப்படும். இது நாடு முழுவதும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்திற்கு வழிவகுத்தது,” என்கிறார். மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகும் வளிமண்டல நதிகள் ஒரு சராசரி 'வளிமண்டல நதி’ சுமார் 2,000கி.மீ (1,242 மைல்கள்) நீளமும், 500கி.மீ அகலமும், கிட்டத்தட்ட 3கி.மீ ஆழமும் கொண்டது. இருப்பினும் இவை சமீக காலத்தில் மேலும் அகலமாகவும் நீளமாகவும் உருவாகின்றன. சில நதிகள் 5,000கி.மீ நீளம் வரை உருவாகின்றன. அதே சமயம், அவை மனித கண்களால் பார்க்க முடியாத பண்புகளை கொண்டுள்ளது. "அவை இன்ஃப்ரா ரெட் மற்றும் மைக்ரோவேவ் அதிர்வெண் பண்புகளைக் கொண்டுள்ளன," என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் வளிமண்டல ஆராய்ச்சியாளர் பிரையன் கான் கூறுகிறார். "அதனால்தான் உலகெங்கிலும் உள்ள நீராவி மற்றும் வளிமண்டல நதிகளைக் கண்காணிக்க செயற்கைக்கோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று கான் விவரித்தார். மேற்கத்திய இடையூறு (western disturbances), பருவமழை மற்றும் சூறாவளி போன்ற பிற வானிலை சூழல்களும் வெள்ளத்தை ஏற்படுத்தும். ஆனால் 1960-களில் இருந்து வளிமண்டல நீராவி 20% வரை அதிகரித்துள்ளதாக உலகளாவிய ஆய்வுகள் காட்டுகின்றன. வளிமண்டல நதிகள் தெற்காசியாவில் 56% தீவிர மழைப்பொழிவுக்குக் (மழை மற்றும் பனிப்பொழிவு) காரணம் விஞ்ஞானிகள் தொடர்புபடுத்தியுள்ளனர், இருப்பினும் இப்பகுதியில் மேலும் ஆய்வுகள் தேவைப்படுகிறது. அண்டை நாடான தென்கிழக்கு ஆசியாவில், வளிமண்டல நதிகள் மற்றும் பருவமழை தொடர்பான கனமழை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு பற்றிய விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்கப் புவி இயற்பியல் கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட 2021-ஆம் ஆண்டின் ஆய்வு ஒன்றில், பருவமழையின் ஆரம்ப காலத்தில் (மார்ச் மற்றும் ஏப்ரல்) கிழக்கு சீனா, கொரியா மற்றும் மேற்கு ஜப்பானில் 80% வரை அதிக மழைப்பொழிவு நிகழ்வுகள் வளிமண்டல நதிகளுடன் தொடர்புடையவை என்று கண்டறியப்பட்டது. "கிழக்கு ஆசியாவில் 1940 முதல் வளிமண்டல நதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது," என்று ஒரு தனி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய ஜெர்மனியில் உள்ள போட்ஸ்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் சாரா எம் வல்லேஜோ-பெர்னல் கூறுகிறார். "அப்போதிலிருந்து அவை மடகாஸ்கர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் மீது மிகவும் தீவிரமாக உருவானதை நாங்கள் கண்டறிந்தோம்." என்று விவரித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தியாவிலும் தெற்காசியாவிலும் இந்த பருவத்தில் வெள்ளம் ஏற்படுவது வழக்கமான நிகழ்வு தான் பிற நாடுகளில் உள்ள வானிலை ஆய்வாளர்கள் சமீபத்திய சில பெரிய வெள்ளங்களை வளிமண்டல நதிகளுடன் தொடர்புப் படுத்தி ஆய்வு செய்து வருகின்றனர். 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இராக், இரான், குவைத் மற்றும் ஜோர்டான் அனைத்தும் கடுமையான இடி, ஆலங்கட்டி மழை மற்றும் விதிவிலக்கான மழைக்குப் பிறகு பேரழிவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 2005-ஆம் ஆண்டில் இதேபோன்ற நிகழ்வை விஞ்சும் வகையில், இப்பகுதி முழுவதும் உள்ள வானில் அதிக அளவு ஈரப்பதம் இருப்பதை வானிலை ஆய்வாளர்கள் பின்னர் கண்டறிந்தனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, சிலி நாட்டில் மூன்று நாட்களில் 500மி.மீ மழை பொழிந்தது. பெரும் மழைப்பொழிவு பதிவானது. அது ஆண்டிஸ் மலையின் சில பகுதிகளில் பனியை உருக்கி, சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட வளங்களை அழித்த பெரிய வெள்ளத்தை உருவாக்கியது. பேரழிவுகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் அபாயங்களைக் கருத்தில் கொண்டு, சூறாவளிகளைப் போலவே வளிமண்டல நதிகள் அவற்றின் அளவு மற்றும் வலிமையின் அடிப்படையில் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சூறாவளிகளைப் போல அனைத்து வளிமண்டல நதிகளும் தீங்கு விளைவிப்பதில்லை, குறிப்பாக அவை குறைந்த தீவிரத்தில் உருவாகும் போது. நீண்டகால வறட்சியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மழைப் பொழிவை ஏற்படுத்தினால் நன்மை பயக்கக்கூடும். வளிமண்டல நதிகள் உருவாவது வேகமாக வெப்பமடைந்து வரும் வளிமண்டலத்தின் முக்கியமான சமிக்ஞை ஆகும். பிற இயற்கைச் சீற்றங்களை ஒப்பிடும் போது 'வளிமண்டல நதிகள்' குறித்து தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. "வானிலை ஆய்வாளர்கள், நீர்வியலாளர்கள், மற்றும் காலநிலை விஞ்ஞானிகளிடையே பயனுள்ள கூட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது தற்போது சவாலாக உள்ளது. ஏனெனில் இந்த வளிமண்டல நதிகள் இந்த பகுதிக்குப் புதியவை. மக்கள் மத்தியில் இது பற்றி அறிமுகப்படுத்துவது கடினம்," என்று ஐ.ஐ.டி இந்தூரில் உள்ள ஆராய்ச்சி அறிஞர் ரோசா வி லிங்வா கூறினார். ஆனால் இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், இந்தப் புயல் மற்றும் அதன் சாத்தியமான பேரழிவு தாக்கத்தை ஆய்வு செய்வது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cyr7rypv7njo
  6. ஆட்டை வெட்டுவதற்கு முன், ஆட்டிடமே அனுமதி கேட்கும் தேர்தல் இது. 😂 அ- லெனின்
  7. கம்பவாரிதி இப்போது என்ன கூற வருகின்றார்? அரசியல் செய்வது ஒன்றும் தவறான விடயம் இல்லை. இலவச கல்வி பெற்று மருத்துவராகி பின் சம்பளம் வாங்கிக்கொண்டு மருத்துவ தொழிலை தமது வசதிக்கேற்ப பயன்படுத்துவது தவறு. மக்களின் அறியாமையை பயன்படுத்தி நோயாளிகளை ஏமாற்றுவது தவறு. மருத்துவர் அர்ச்சனா அரசியலில் ஈடுபடுவதால் குடி மூழ்கி போகாது.
  8. தமிழ் மக்களுக்கு இந்த அறிக்கை பழக்கப்பட்ட ஒன்று....நம்ப மாட்டார்கள் ,ஆனால் கருத்துஎழுதும் நாம் அந்த அறிக்கையை நம்பி சாதிப்பிர்ச்சனை வரை கருத்து சொல்லியிருக்கிறோமல்ல‌...
  9. அமெரிக்காவில் வசிக்கும் மகனை சென்று பார்க்க பாஸ்போர்ட் விண்ணப்பம் கொடுத்திருந்தார் அந்த வயதான பெண்மணி . வெரிஃபிகேஷனுக்காக அவரை சந்திக்க வந்தார் லோக்கல் போலீஸ் அதிகாரி . அந்த அம்மையார் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் . அவர் எதிரில் ஒரு தட்டு நிறைய முந்திரிப்பருப்பு . " தனியாவா இருக்கீங்க ? அதான் பிள்ளை அமெரிக்கா கூட்டிட்டு போறானா?" " ஆமாம் கொஞ்ச நாளைக்குத்தான் . அப்புறம் திரும்பி வந்துடுவேன் " " நான் கொஞ்சம் முந்திரி பருப்பு சாப்பிடலாமா ?" "தாராளமா எடுத்துக்கோங்க என் பிள்ளை அமெரிக்காலேருந்து அனுப்பியது " போலீஸ்காரர் கொஞ்சம் தாராளமாகவே எடுத்து சாப்பிட்டார் . "உங்களுக்கு முந்திரி பிடிக்காதா அம்மா "? . . . . . . " ரொம்ப பிடிக்கும் ஆனா கடிக்க முடியாது. அதைச் சுத்தி இருக்கற சாக்கலேட்டை மட்டும் சப்பி சாப்டுட்டு முந்திரியை அப்படியே வச்சுடுவேன் "
  10. ஒரு பக்கம் உக்ரைனை சாட்டி, இரு நாடுகளும் சண்டை பிடிக்கின்றனர். இன்னொரு பக்கம் இப்படியான கைதிகள் பரிமாற்றமும் நிகழ்கின்றது. என் நண்பன் ஒருவன் இருக்கிறான். செரியான கிரகம் புடிச்சவன் என்று சொல்லப்படக் கூடிய ஆள். ஒரே சொல்வான், "டேய் இவங்கள் (மேற்கும் ரஷ்சியாவும்) இப்படித்தான்... தமக்குள் மோதிக் கொள்ளுகின்ற மாதிரி வெளியில் காட்டுவார்கள்... ஆனால்ஆயுதங்களை விற்கின்றதற்காக போர் செய்து விட்டு, திரைமறைவில் கூடிக் குலாவுவார்கள" என்று.
  11. முதலில் காணி, பின்னர் காவல்துறை என இலங்கையின் சகல மாகாணங்களுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இலங்கை மீண்டெழுவதற்கு இதுதான் உள்ள ஒரே வழ.
  12. பெருமாள் என்ன எழுதி உள்ளார் என்று கவனமாக படியுங்க என்று தானே நீங்க ஏன் மிச்சம் மீதியை நீட்டி முழக்குகிறது?
  13. நீங்க லண்டன் கனடா பக்கம் இல்லையா கொஞ்சமாவது ரோசம் மானம் உங்கடை சும்முக்கு இருந்தால் தமிழருக்கு தீர்வு என்பதை வாங்கி தருவேன் என்றுதானே அரசியலுக்கு வந்ததார ? அதை செய்யாது ஏன் சிங்களஅரசியல் வாதிகள் சொல் கேட்டு ஆடுகிறார் ஆடு போல் ? இரண்டு பேருமே பின்கதவால் வந்த கூட்டம் ஒன்று தீர்வு என்று பொய் மான் காட்டுறது அடுத்தது .............மூத்துரத்தை குடித்து வலிந்து வெற்றி கொண்டது .(ஓவரா இருந்தால் நிர்வாகம் நீக்கி விடுங்க )
  14. முதலில் சுமத்திரன் மட்டும் ரணிலுடன் பேச்சுவார்தை நடத்தியது சரியா?தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடவிட்டாலும் பரவாயில்லை தமிழரசுக்கட்சியுடனாவது இதுபற்றிக் கலந்துரையாடினாரா?தனியே அவர் மட்டும் போய்பேச்சு வார்த்தை நடத்த யார் அதிகாரம் கொடுத்தது. அல்லது மற்றவர்களைக் கழட்டிவிட்டு தான் தனியே போய் சந்தித்த மர்மம் என்ன?தனியாகப் பெட்டி வாங்கி விட்டாரா?ரணில்எழுத்து மூலம் உறுதி அளித்தாரா?ரணில் 1983 இல் இருந்து அரசியலில் இருக்கிறார் ஆறுமுறை பிரதமர் பதவியில் இருந்தார் ஒரு முறை ஜனாதிபதியாக இருந்திருக்கிறார் அப்பொழுதெல்லாம் கொடுக்காத 13{ இன்னுமா கொடுக்கப் போகிறார்.முந்தி என்றால் ரணிலுக்கு வாக்களிக்காவிட்டால் ராஜபக்சேக்கள் வந்து விடுவார்கள் என்று பிரச்சாரம் செய்யலாம். இப்பொழுது ராஜபக்சேக்களின் தயவில் ஜனாதிபதியாகி சிங்கள மக்களாலேயே விரட்டப்பட்ட ராஜபக்சேக்களைக் காப்பாற்றிய ரணில் தமிழரகளுக்குத் தீர்வு தருவார் என்று தமிழர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள்.அறிவிக்கப்பட்ட உள்ளுராட்சித் தேர்தலையே நடத்தாத குள்ள நரி ரணில். சிங்களமக்களால் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு சிங்கள மக்களை ஏமாற்றி பின்கதவு வழியால் ஜனாதிபதி ஆகிய ரணில் தமிழ்மக்களுக்கு நல்லது செய்வார் என்பது முழுமுட்டான்த்தனம்.
  15. பெருமாள் எழுதி உள்ளார் எச்சரித்து உள்ளார் சுமந்திரன் லண்டன் கனடா பக்கம் ஒரு கூட்டம் வைக்கட்டும் சனம் கல்லெறிந்தே ஆளை கொலை செய்து விடுவார்கள். இலங்கையில் இருந்த கொலைகாரர்கள் எல்லாம் லண்டனுக்கும் கனடாவுக்கும் வந்து சேர்ந்து விட்டார்கள் என்று லண்டன் கனடாவில் உள்ள ஈழதமிழர்களை அவமானபடுத்துவது கண்டிக்கபட வேண்டியது
  16. இப்போது கூட பொது தமிழ் வேட்பாளர் என்பது என்ன தமிழரின் மிச்சம் மீதி பலம் ஏதாவது இருந்தால் அதையும் விழலுக்கு இறைத்த நீராக்கிவட வேண்டும் என்ற முயற்சி .
  17. இருவருக்கும் என்ன தொடர்பு ஒற்றுமை என்று விளக்கம் தந்துவிட்டார்களே 😂 நாவலர் சைவம் தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார். ஹணியா இஸ்லாம் தழைத்தோங்க பாடுபட்ட ஒரு பெரியார். மக்காவில் பெட்டகத்துக்குள் இருக்கும் சிவலிங்க வடிவத்தை தான் இஸ்லாமியர்கள் வணங்குகின்றார்கள் என்கின்ற தகவல் வந்த உடனேயே விளங்கிவிட்டது இந்து மதத்தின் இரு பிரிவுகள் தான் இஸ்லாமும் யாழ்பாணத்து சைவ மதமும்.
  18. மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்துக்கு தமுகூ அரசியல் குழு அங்கீகாரம் ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்ய பட உள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன் வைக்க பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு ஏக மனதாக ஏற்றுக் கொண்டு உள்ளது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறி உள்ளதாவது; சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கம் உருவாகின்ற போது, நிறைவேற்ற பட வேண்டிய வேலைத்திட்டங்களில் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷை கோரிக்கைகள் அடங்கிய ஆவணம், கொழும்பில் கூடிய கூட்டணி அரசியல் குழுவினால் தீவிரமாக ஆராய பட்டது. சமர்பிக்க பட்ட ஆவணம், மேலதிக சில விடயங்கள் சேர்க்கைகளாக சேர்க்க பட்டும், சில திருத்தங்களுடனும் அரசியல் குழுவால் ஏக மனதாக ஏற்று கொள்ள பட்டது. அதன்படி, கல்வி, தொழில் பயிற்சி, இளைஞர் முன்னேற்றம், சுகாதாரம், போஷாக்கு, வாழ்வாதார காணி, தொழில் வாய்ப்பு, வீடமைப்பு காணி, கொழும்பு உட்பட மாநகரங்களில் குடிபெயர்ந்து வாழ்வோருக்கு கல்வி-வீட்டு வசதி, அரச பொது நிர்வாக கட்டமைப்புக்குள் மலையகம், ஆட்சி உரிமையில் பங்கு ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு விடயங்களை அடக்கிய ஆவணம், ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையாக கையெழுத்தாகவுள்ளது. https://tamil.adaderana.lk/news.php?nid=191013
  19. வடகிழக்கு தமிழர், அரசியல் கட்சிகள் ஏகோபித்த முதல் குரலை கொடுக்க வேண்டும்
  20. அண்ணே யதார்த்தவாதி வெகுசனவொரோதி.. தெரியாத உங்களுக்கு.. தெரியாட்டி துரோகிப்பட்டம் பார்சல்..
  21. ஆனால் இவ‌ர் குறைந்த‌ ஓவ‌ர் தான் ப‌ந்து போட்ட‌வ‌ர்..............அதிக‌ ர‌ன்ஸ்சும் விட்டு கொடுத்த‌வ‌ர் இல‌ங்கை அணியில் நிர‌ந்த‌ர‌ இட‌ம் பிடிக்க‌னும் என்றால் திற‌மைய‌ வெளிக்காட்ட‌னும் மீண்டும் இல‌ங்கை அணியில் த‌மிழ் பேசும் வீர‌ர் விளையாடுவ‌து ம‌கிழ்ச்சி..............................
  22. அப்பப்போ வைத்தியசாலைகளில் நடந்த ஊழல்கள் அதிகார துஸ்பிரயோகங்கள் ஊடகங்கள் வாயிலாகவும் சில தனிப்பட்ட காணொளிகள் மூலமும் வெளிவந்தன அப்போதெல்லாம் அரசியல்வாதிகளோ சமூக ஆர்வலர்களோ நடவடிக்கை எடுத்திருந்தால், தட்டிக்கேட்டிருந்தால் இவ்வளவுதூரம் போயிருக்காது. முன்னர் வன்னிப்பிரதேச சுகாதார ஊழியர் ஒருவர் இதை வெளிக்கொணர்ந்தபோது அவரது தலைமையக்கத்தோடு தொடர்பு கொண்டு அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை விட்டார்கள். இவர்கள் சரியாக நடந்திருந்தால், அவர் வெளிப்படுத்த வேண்டிய தேவை வந்திருக்காதே. அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், யார் இந்தக்குறைகளை வெளிப்படுத்த முன்வருவர்? தரங்கெட்டவர்கள், நேர்மையாளரை துரத்துவார்கள் அல்லது அவர்களை சுயமாக இயங்க விடாமல் கட்டுப்படுத்துவார்கள். இவர்களுக்கு திறமை இல்லை அல்லது மக்களுக்கு சேவை செய்யாமல் கள்ள உடம்பு வளர்த்து சம்பளம் வாங்க வேண்டும். இதுவும் ஒரு களவுதான். பலவகை இன்னல்களை அனுபவிக்கும் மக்கள் இவர்களுடன் சண்டை இடாமல் பொறுமையாக, தாமதமாகவேனும் பயன் பெற நினைத்து பேசாமல் இருந்திருக்கலாம், கதைத்தால் இப்போ நடப்பதுபோல் தங்களை தாக்கியதாக பொய் பிரச்சாரம் செய்து பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவார்கள் இதனால் அவசர நோயாளர் பாதிக்கப்படுவார்கள் என நினைத்து பொறுத்துக்கொண்டிருந்திருப்பார்கள். ஆனால் எந்த மனிதனும் நிரந்தரமாக, சுகதேகியாக, அதிகாரத்தோடு, அதே பதவியில் வாழப்போவதில்லையென்கிற உண்மை புரிந்தால் இப்படியெல்லாம் ஆடமாட்டார்கள். இவர்களது குற்றம் நிரூபிக்கப்பட்டு கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்! படித்தவர்கள் பதவியில் இருப்பவர்கள் பேசும் பேச்சு; பரதேசி, நீ, டேய், உன்ர பதிவுகளை நீதிமன்றம் ஏற்குமா? அப்போ நீதிமன்றம் ஏற்காதென்றால் எது வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்று பொருளா? நீதிமன்றத்தில் அதற்கும் இடமிருக்கு என்பது பேசியவருக்கு தெரியாதுபோல் உள்ளது. ஒருவர் தன் பாதுகாப்புக்காக கொலை செய்யலாம் என்றால், ஏன் குரல் பதிவு செய்ய முடியாது? ஒருவர் கொலை செய்யப்பட்டு இறந்தால் இறந்தவரின் தொலைபேசியை போலீசார் சோதனையிடுவதன் காரணம் என்ன?
  23. தேர்தலுக்குப் பின்னரல்ல, தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படல் வேண்டும். மீண்டும் ஏமாற்றுவதற்குத்தான் ரணில் முயற்சிக்கிறார். அதனைத் தமிழர்கள் நன்கறிவார்கள். சுமந்திரனுக்கு இதில் ஏதாவது இலாபம் கிடைக்கலாம், அதனால் ரணிலுடன் சேர்ந்து தமிழர்களை எமாற்றப் பார்க்கிறார்.
  24. “இலவு காத்த கிளி” நாங்கள் தமிழர்கள். பழமையை என்றும் பழுதடைய விட்டதில்லை. பழுதடைந்த சம்பந்தரையும் சுமந்திரனையுமே பாராட்டி வந்தவர்கள், இந்தப் பழமொழியையும் பழுதடைய விடமாட்டோம்.🤫
  25. ரஷ்யா பக்கமும் அமெரிக்க பக்கமும் விடுதலை செய்யப்பட்ட கைதிகளை நாட்டின் அதிபர்கள் நேரே சென்று வரவேற்கின்றார்கள் என்றால்..... ஏதோவொரு பயங்கர டீலிங் நடந்து கொண்டிருக்கு எண்டு அர்த்தம்...... அப்பு செலென்ஸ்கி! எதுக்கும் பாத்து சுதானமாய் நடத்துக்க அப்பு......உங்கட தலையும் பிரளலாம்.😎
  26. அதென்ன தேர்தலுக்கு பின்......? இப்படியான அறிக்கைகளை விடுபவர்கள் இப்போதும் பதவிகளுடன் இருக்கின்றார்கள்.இப்போது செய்யவில்லை என்றால் இனியும் இவர்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. இப்படியான வாக்குறுதிகள் எல்லாம் அன்று தொடக்கம் நடக்கும் வழமையான பேய்ப்பட்டம் கட்டும் அரசியல்தான்.
  27. ஊழலை நசுக்குவது முடியாத காரணம் ...தமிழர்களை நசுக்குவது எப்படி என பாடம் எடுத்தால் வெற்றியடைய வாய்ப்பு உண்டு
  28. ரணில் தற்பொழுதும். ஐனதிபதி தான் ... பல வருடங்களாக ஐனதிபதியாக இருக்கிறார் ....எதுவும் செய்யவில்லை இனி செய்கிறேன் ஐனதிபதி பதவியை தாருங்கள்” எனக் கேட்க முடியாது கேட்கவும் கூடாது மற்றவர்கள் கேட்க முடியும்,..அதாவது சஜித் அனுகுமார.........போன்றோர் கேட்கலாம் ஆனால் எப்போதும் தமிழர்கள் தான் சிங்களவனுக்கு வாக்கு போட வேண்டும் சிங்களவர்கள். தமிழனுக்கு வாக்கு போட்டால் என்ன?? வெளிநாடுகளில் தமிழனுக்கு வெள்ளைக்காரன் வாக்கு போட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக தெரிவு செய்கிறார்கள் ......இலங்கையில் வாழும் மக்கள் ஏன். இதை பின்பற்றுவதில்லை மேலும் சுமத்திரன். ஏன் தனியாக சந்தித்து பூட்டிய அறைக்குள் கதைத்தவர் எத்தனை கோடிக்கணக்கில் பணம் வேண்டினார்?? கட்சியை கூட்டி. அனுமதி பெற்றுக்கொள்ளவில்லை. . .. தமிழர்களின் கட்சியை உடைத்து விட்டு ....இரண்டு ஐக்கிய தேசிய கட்சிக்காரர்கள். தமிழர்களின் வாக்கை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்று தனியாக ரகசியமாக சந்தித்து உரையாடி உள்ளார்கள்
  29. அமெரிக்காவில் இருந்து பிள்ளை அனுப்பிய முந்திரி பருப்பு என்று… கிழவி சொல்லும் போதே, பொலிஸ்காரன் உசாராகி இருக்க வேணும். 😂 ஹ்ம்ம்…. விதி. 🤣
  30. செய்ய மாட்டேன் என்பதை அழகிய தமிழில் தேர்தலுக்குப் பின்னர் என்று சொல்லியிருக்காங்கள். அவ்வளவு தான்
  31. சிங்களவன் திருந்தி விட்டான் போலை இருக்கு. 😂 தேர்தலுக்கு முன்னர் செய்தால்… குடியா முழுகிப் போகும். 🤣
  32. துருக்கியைச் சேர்ந்த 51 வயதான யூசுஃப் mixed 10 meter air pistol விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். மற்ற சக வீரர்கள் எத்தனையோ உபகரணங்களை தலைக்கு, கண்ணுக்கு, காதுக்கு, உடம்புக்கு என்று போட்டுக் கொண்டு போட்டியில் இறங்க, இவர் அப்படியே சும்மா வந்து, ஒரு கையை பாக்கெட்டுக்குள் வைத்தபடியே சுட்டு வென்றிருக்கின்றார். நல்ல காலம்........ நம்ம தெருவில, நம்ம ஊரில இவர் இல்லை..........🤣.
  33. இது சாதாரணமான விடயம், பனிப்போர் காலத்திலிருந்து நடக்கும் விடயம். தீவிர யுத்த காலத்தில் கூட இவை நிகழ்வதற்கான பல காரணங்கள் இருக்கின்றன. 1. இரண்டு தரப்பிலும் அப்பாவிகள், குற்றம் சாட்டப் பட்டவர்கள், குற்றம் நிரூபிக்கப் பட்டவர்கள் என்று எதிர் நாடுகளில் சிறையில் இருப்பார்கள். எதிரி நாடுகளின் உள்ளே, இவர்களை மீட்டுத் தரும்படி உள்ளூர் அழுத்தம் இருக்கும். பைடனுக்கு போல் வேலனை மீட்கும் படியான அழுத்தம் வெளிப்படையாக இருந்தது (இவர் ஒரு உளவாளியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால்). 18 மாதங்களாக பேச்சு வார்த்தை நடந்தாலும், தேர்தலுக்கு முன்னர் இவர்களை விடுவித்தால் அது நிச்சயம் பிளஸ் பொயிண்ராக பார்க்கப் படும். எனவே, தற்போது இதை விரைவு செய்திருப்பார்கள். 2. இந்த அவசரம் பைடனுக்கு இருப்பதை, ரஷ்யாவும் பயன்படுத்திக் கொண்டு ஜேர்மனியில் ஒரு கொலை முயற்சியில் கையும் மெய்யுமாக அகப் பட்டு சிறையில் இருந்த ஒரு ரஷ்ய கேணல் உட்பட, பல ரஷ்ய உளவாளிகளை மீளப் பெற்றுக் கொண்டிருக்கிறது. போன தடவை ஒரு அமெரிக்க விளையாட்டு வீரரை ரஷ்யாவிலிருந்து விடுவிக்க, அமெரிக்காவில் சிறையில் இருந்த merchant of death என அழைக்கப் படும் விக்ரர் பௌற் விடுவிக்கப் பட்டார். 3. மூன்றாவது காரணி மத்தியஸ்தர்-mediator. தற்போது துருக்கி மத்தியஸ்தர். பல காலங்களாக சுவிஸ் இந்த விடயங்களில் மத்தியஸ்தர். வட கொரியா என்று வந்தால் சுவீடன் எப்போதும் இந்த விடயங்களில் மத்தியஸ்தர். இந்த நாடுகள் உலக அரங்கில் தம் பிரபலத்தை (profile) இது போன்ற விடயங்களில் நிரூபித்தால், அவர்களுக்கு பல ஆதாயங்கள் கிடைக்கும். துருக்கி போன்ற நாடுகளுக்கு இந்த ஆதாயங்கள் நீண்ட கால நோக்கில் நன்மை பயக்கும். எனவே, இப்படியான உளவு, களவு, கொலை வேலைகள் இரு தரப்பிலும் இருக்கும் வரை, புரோக்கர் மாரும் இருக்கும் வரை பரிமாற்றங்கள் தொடரும்.
  34. பயங்கரவாதி ஹணியாவுக்கும் நரியன் நாவலனுக்கும் என்ன தொடர்பு? 🤔
  35. வாழும்வரை வாழ்க்கை வாழ்வதற்கே .......! 👍
  36. இஸ்ரேலும் அமெரிக்காவும் இல்லையென்றால் இஸ்லாமிய பயங்கரவாதம் உலகையே தின்று ஏப்பம் விட்டிருக்கும். குரான் வாசகங்களை சொல்ல தெரியாதவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றிருக்கும், ஏற்கனவே நைஜீரியாவில் அது பலமுறை நடந்திருக்கிறது. சஹ்ரான் சாகுமுன் வெளியிட்ட ஒரு வீடியோவில் இஸ்லாமியர்களல்லாதவர்களை அவர்கள் எமக்கு எந்த அநியாயமும் செய்யவில்லையென்றாலும் மூட்டு மூட்டாக வெட்டி கொல்லுங்கள் என்று இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்று சொன்னான், இஸ்லாத்திற்கு வாருங்கள் இல்லையென்றால்கொல்லப்படுவீர்கள் என்ற பயத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும் சொன்னான். அவன் வெளிப்படையாக சொல்லிட்டான் ஆனால் மறைமுகமாக ஏறத்தாள உலகின் அனைத்து இஸ்லாமியர்களும் தமது மதம்தான் உலகையே ஆளவேண்டும் என்ற கருத்தை ,அமதுக்குள் கொண்டவர்கள் . பாலஸ்தீன பிரச்சனை அவர்கள் மண் சார்ந்த பிரச்சனை என்றாலும், மதம் என்று வந்தால் அவர்களும் உலகின் பிற முஸ்லீம்கள் போன்ற கருத்தை கொண்டவர்களே .அவர் முதல் துருக்கியிலிருந்தார் , பின்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு கத்தாரில் பதுங்கினார், பிறகு ,அங்கிருந்து ஈரான் வந்தபோது இஸ்ரேலினால் துல்லியமாக போட்டு தள்ளப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் சமூக ஊடகங்களில் இஸ்மாயில் ஹனியேயின் இழப்பை தாங்கிகொள்ள முடியாத இந்திய இலங்கை முஸ்லீம்கள், சம்பந்தமே இல்லாமல் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது மகிழ்ச்சி என்று பதிவிடுகிறார்கள், புலிகளின் தலைவர் கமாஸ் தலைவர்கள்போல சொந்த மக்களையும் போராளிகளையும் சாகவிட்டு அந்நியநாட்டுக்கு ஓடிபோய் அங்குள்ள அரண்மனைகளிலிருந்தபடி அறிக்கைவிட்டு வெட்டி வீரம் காண்பிக்கவில்லையென்ற அடிப்படை புரிதல்கூட இல்லாமலேயே!
  37. ஐரோப்பாவில இப்ப பரவலாய் கத்திக்குத்துகள் நடக்குது... போற போக்க பார்த்தால் இனி வெங்காயம் வெட்டுற சின்ன கத்தி வாங்கிறதெண்டாலும் லைசன்ஸ் வரும் போல கிடக்கு 🤪
  38. இல்லை தான் இப்ப படிப்படியாக கிடைக்கிறது தமிழரசு கட்சியை உடைத்தார். நீதிமன்றம் போனார். ....கூடிப்பேசினார் நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்தார் படிப்படியாக வளர்கிறார் 🤣
  39. அவர் எங்க வந்து பார்த்தார் தலையில் செய்ய வேண்டிய சத்திர சிகிச்சையை காலில் செய்து போட்டு போட்டாரே.
  40. இந்த உலகு போர்களை நிறுத்தி பூமியை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தினாலே ஆயிரம் பிரச்சனைகள் குறைந்து விடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.