Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்18Points88816Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்11Points20351Posts -
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்9Points15819Posts -
putthan
கருத்துக்கள உறவுகள்9Points14707Posts
Popular Content
Showing content with the highest reputation on 09/23/24 in all areas
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது. இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும், தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில் ஒன்றுசேர்ந்து நிற்பதுதான். தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்? இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது. தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா? இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா? சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன? பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான். இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை? இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை. உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது.. நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும். நன்றி.5 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள். இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.4 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நொச்சி, நீண்ட கட்டுரைகள் எழுதுவதற்கோ, தேவையில்லாத வாதங்களுக்கு தலையைக் கொடுத்துவிட்டு பின்னால் என்னுடைய வேலைகளைச் செய்வதற்குக் கூட நேரமில்லாமல் அல்லல் படுவதற்கோ நான் இப்பொழுது தயாராக இல்லை. ஆனாலும் நீங்கள் தொடுத்த அம்பு ஒன்று என்னருகில் வீழ்ந்து இருக்கிறது.’கீறும்’ என்ற அம்பு அது. இன்று ஆயுதப் போராட்டமும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஏன் விடுதலைப் புலிகள் என்று கூட எவரும் இல்லை.அந்த அமைப்பில் இருந்தவர்கள் அதுவும் வெளிநாடுகளில் தஞ்சம் தேடியவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். அது எதுவானாலும் நான் அதற்குள் போய் கிளறிக் கொண்டு இருக்க விரும்பவில்லை. தமிழர்களுக்கான தீர்வு கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நீண்ட பயணத்திலும் சரியான பாதை தெரியாமல் பரிதவிக்கும் நிலையிலேயேதான் நாங்கள் இன்றும் இருக்கிறோம். இதற்குள் அவரவர்கள் தங்கள் இருப்புக்காகவும் தேவைக்காகவும் போராட்டத்தையும் தியாகங்களையும் பயன் படுத்துவதால் ஒரு பலனும் தமிழர்களுக்கு வந்து விடாது என்ற நிலையில்தான் எதிர்க்கிறேன். இவ்வாறான எனது எதிர்ப்பு இன்று மட்டுமல்ல முன்பும் இருந்தது. நான் கீறும் படங்களை யேர்மனியில் புலிகள் என்று சொல்பவர்கள் பாவிப்பதில்லை. இது விடுதலைப் புலிகள் போராடும் காலத்தில் இருந்தே இருக்கிறது. காரணம் ‘ஏன்?’ என்ற கேள்வி எப்பொழுதும் என்னிடத்தில் இருப்பதால். அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. பொங்கு தமிழில் நான் எழுதிய பத்தி ஒன்றை கிருபன் முன்னர் பதிந்திருந்தார். https://alpha.yarl.com/forums/topic/152431-தூசு-தட்டியே-காசு-பிழைத்தவர்-மூனா/ நேரமின்மையால் அப்பொழுது அதில் எழுந்த கேள்விகளுக்கு நான் பதில் எழுதவில்லை. பொது வேட்பாளர் விடயத்தில் பலர் யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதியிருந்தார்கள். அப்பொழுது விவாதித்திருக்கலாம். இப்பொழுது தேர்தல் முடிந்தபின் வந்து எழுதுவது செத்தவீட்டில் ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் ‘தமிழர்களுக்கான தீர்வு வேண்டும்’ என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. அதற்கான உங்கள் பாதை வேறு என் பாதை வேறு.3 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தன் ஒரு கண் போனாலும் பரவாயில்லை , எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என ரணில் திட்டம் போட்டு செய்துள்ளார். சஜித் வர வேண்டும் என்பதற்காக இவரையும் சஜித்தையும் ஒன்றாக்க இந்தியா இறுதி வரைக்கும் முயன்றது. ஆனால் வழக்கம் போல இதிலும் இந்தியா தோற்று விட்டது. தமிழர்களின் நலன்களை அழிப்பதில் ஒவ்வொரு முறையும் வெற்றி பெறும் இந்தியா, மறு வளமாக சிங்களத்துடன் ஒவ்வொரு முறையும் தோற்று கொண்டே போகின்றது.3 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. இது தவறான கட்டுரை.. இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீரும் வரை தமிழ்தேசியம் வாழும்.. தமிழ் நாட்டிலையே வாழும்போது தமிழ் ஈழத்தில் ஒரு போதும் வீழாது பிரச்சினைகள் தீரும்வரை.. இங்கு பிரச்சினை தங்கள் வயிறு வளர்க்க தமிழ்தேசியத்தை காட்டி பேய்க்காட்டுபவர்கள்தான்.. தமிழ்தேசியம் அல்ல.. உண்மையான தமிழ்தேசியவாதிகள் என்றும் சாதி மதம் கடந்து தமிழர்களும் தமிழ் மொழியும் வாழணும் பெருகணும் அழியக்கூடாது என்று நினைப்பார்கள்.. நானும் ஒரு தமிழையும் தமிழ்மக்களையும் என் மண்ணையும் என் தலைமுறையையும் நேசிக்கும் தமிழ்த்தேசியவாதிதான்..3 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தும்புக்கட்டு -சங்கு -குப்பைக்கூடை…..! September 23, 2024 — அழகு குணசீலன் — அ: அகிம்சை. ஆ: ஆயுதம். இ: இராஜதந்திரம். அன்றோருநாள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழ்ப்பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் கூறிய அ,ஆ,இ…. அரிவரி அரசியல் வரிகள் இவை. அந்த வரிசையில் வந்ததுதான் இந்த பொதுவேட்பாளர் எண்ணக்கருவும், தமிழர் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு காட்டுகின்றதுமான இந்த “இ” : அரசியலும். இப்போது தமிழ் மக்கள் தங்கள் அபிலாஷை என்ன? என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தெட்டத்தெளிவாக சர்வதேசத்திற்கு காட்டியுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒட்டுமொத்த தமிழர் பெரும்பான்மை தமிழ்த்தேசிய தீவிர அரசியலை நிராகரித்திருக்கிறது. சிங்கள தேசிய சக்திகளுடன் இணக்க அரசியல் செய்வதற்கான விருப்பத்தை வெளிக்காட்டியிருக்கிறது. அரங்கம் அரசியல் ஆய்வுகள் பலவும் ஆரம்பத்தில் இருந்தே குறிப்பிட்டது போல் தமிழ்த்தேசியம் அம்மணமாக சர்வதேசத்தின் முன்னால் நிற்கிறது. இதை விடவும் பொதுவேட்பாளர் கச்சையை உரிந்து சர்வதேசத்திற்கு காட்டுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது. அதேபோன்றே தேர்தல் பகிஷ்கரிப்பு கோரிக்கையை முன்வைத்த தமிழ்க்காங்கிரசும் அம்பலப்பட்டு நிற்கிறது. தமிழரசுக்கட்சியின் சுமந்திரன் அணியின் டெலிபோன் ஒலி வடக்கு கிழக்கு மக்களின் காதுகளில் சங்கு ஒலியை விடவும் ஓங்கி ஒலித்திருக்கிறது. ஜே.வி.பி. அ -னாவில் இல்லாமல் ஆ -வன்னாவில் ஆரம்பித்து இ- னாவுக்கூடாக அ -வை எட்டியிருக்கிறது. கிழக்கில் இருந்து களமிறக்கப்பட்ட பொதுவேட்பாளர் அரியநேந்திரன் மூன்று மாவட்டங்களிலும் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் அனைத்திலும் அநுரகுமாரவினால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். வடக்கு,கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்ப்பொதுவேட்பாளர் தமிழ்மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டம் உட்பட எந்த ஒரு தேர்தல் மாவட்டத்திலும் அரியநேந்திரனுக்கு அதிகூடிய வாக்குகளைப் பெறமுடியவில்லை. அதிலும் வெட்கக்கேடு தனது சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் அனுரகுமார திசாநாயக்கா இரண்டாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாக பெற்று அரியநேந்திரனை தோற்கடித்திருப்பது. பொதுவேட்பாளர் அரியநேந்திரன் பெற்ற வாக்குகள் 36,905, தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமார பெற்ற வாக்குகள் 38,832. தமிழர் அடையாள அரசியலில் எந்தத் தும்புக்கட்டையை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெறுவோம் என்ற தமிழ்த்தேசிய அரசியலை அதே தும்புக்கட்டைக்கொண்டு மக்கள் துடைத்து துப்பரவு செய்திருக்கிறார்கள். மேலும் பொதுவேட்பாளர் அரியநேந்திரனின் சொந்த தொகுதி மட்டும் அன்றி, தனித்தமிழ் தொகுதி என்ற பெயரைக் கொண்ட பட்டிருப்பில் பொது வேட்பாளர் ஆக 12,356 வாக்குகளை (13%) மாத்திரமே பெற்றுள்ளார். மாறாக சஜீத்பிரேமதாச (40%), ரணில் விக்கிரமசிங்க (29%), அநுரகுமார திசாநாயக்க (07%) வாக்குகளை பெற்றுள்ளனர். இதன்படி அரியநேத்திரன் சொந்த தொகுதியிலும் சிங்கள தேசியத்தினால் (76%) தோற்கடிக்கப்பட்டுள்ளார். தமிழரசுக்கட்சியின் சாணக்கியன் அணி சஜீத்பிரேமதாசவையும், ரி.எம்.வி.பி. ரணில் விக்கிரமசிங்கவையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆதரித்திருந்தன. இது பாராளுமன்றத் தேர்தல் அல்ல வாக்குகள் பல்வேறு தமிழ் கட்சிகள், வேட்பாளர்களுக்கு இடையே பிரிந்து போவதற்கு. தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பினர் வார்த்தைகளில் சொன்னால் பொதுவேட்பாளர் ஒட்டு மொத்த தமிழினத்தின் அடையாளம். அரியநேத்திரன் வாயில் அவர் தமிழ் தேசியத்தின் “குறியீடு” அது உண்மையெனில் வடக்கு, கிழக்கில் இந்த வாக்களிப்பு எப்படி அமைந்திருக்க வேண்டும்?. தமிழ் வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் அரியநேத்திரன் சிங்கள தேசிய வேட்பாளர்களை தோற்கடித்து முன்னணியில் நின்றிருக்க வேண்டும் அல்லவா? அம்பாறையிலும், திருகோணமலையிலும் ஆகக்குறைந்தபட்சம் மொத்த தமிழர் வாக்குகளில் அதிகமானவற்றை பெற்றிருக்கவேண்டாமா? தமிழ்த்தேசியப் போர் தொடுக்க சங்கை எடுத்து சங்கை கெட்டு நிற்கிறது தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பு. கடிதத்தலைப்பு 83 அமைப்புக்களும், 7 கட்சிகளும்.சங்கே முழங்கு என்று மூச்சடக்கி சங்கூதிய தமிழ்த்தேசியத்தின் ‘திரட்சி’ ஊடகவியலாளர்களுக்கு மூச்சு திணறலை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் மக்கள் காத்திருந்து தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். தமிழ், முஸ்லீம் சிறுபான்மையினர் கட்சிகளான தமிழ்த்தேசிய கட்சிகளும், முஸ்லீம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் கட்சிகளும் பிளவின்றி ஒரே அணியாக தென்னிலங்கையின் மூன்று வேட்பாளர்களுள் ஒருவரை ஆதரிக்க தீர்மானித்லிருந்தால் அவர்கள் மேடைக்கு மேடை கூவிய தாங்கள் தான் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி என்பதை நனவாக்கி இருக்க முடியும். அநுரகுமார திசாநாயக்கவின் வாய்ப்பை தட்டிப்பறித்திருக்கவும் முடியும். வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் முஸ்லீம் வாக்குகள் சஜீத், ரணில், அரியம் என்று பிரிந்ததால் அதன் இறுதி நன்மையை அடைந்தவராகிறார் அநுரகுமார. இல்லையேல் குறைந்தது பத்து இலட்சம் வாக்குகளால் சஜீத் அல்லது ரணிலை ஜனாதிபதியாக்கியிருக்க முடியும். அப்போது அவர்கள் கூறிய ஜனாதிபதி யார்? என்பதை நிர்ணயித்தல் சாத்தியமாகியிருக்க வாய்ப்பு இருந்தது. இப்போது தமிழ்த்தேசிய சஜீத் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய ரணில் ஆதரவு அணி தோற்றது. தமிழ்த்தேசிய பகிஷ்கரிப்பு அணி தோற்றது. வடக்கு கிழக்கு சஜீத், ரணில் ஆதரவு முஸ்லீம் கட்சிகளும், அணிகளும் தோற்றன. ரணில் ஆதரவு இணக்க அரசியல் ஈ.பி.டி.பியும், ரி.எம்.வி.பி.யும் தோற்றுப் போயினர். சஜீத்தையும், ரணிலையும் ஒன்றிணைக்க முனைந்த தென்னிலங்கை அரசியல் தலைமைகளும் தோற்றுப் போயினர். பொதுவேட்பாளரை நிறுத்த முயன்ற தமிழரசுக் கட்சியும், தமிழ்க் காங்கிரஸும் தோற்றன. சுமந்திரன் அணியை தன்பக்கம் இழுப்பதில் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும் தோற்றது. சஜீத் தோற்றார். ரணில் தோற்றார். அரியநேந்திரனும் தோற்றார். சிறுபான்மையினர் கட்சிகள் அனைத்தும் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சிபார்சுகளை செய்தவை. அந்த சிபார்சு அரசியலை மக்கள் ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஆனால் அது மக்களுக்கு நன்மையற்ற வகையில் தோற்றுப்போயிருக்கிறது. ஆக, வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்கள் பொதுவாகவும், சிறப்பாக பொது வேட்பாளருக்கு அளித்த வாக்குகளும் ஜனநாயக அரசியலில் ஆயுதமாகவோ, , இராஜதந்திரமாகவோ அன்றியும் அகிம்சை அரசியலுக்கும் பயனற்று குப்பை கூடைக்குள் வீசப்பட்டுள்ளன. கடந்த பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்புடன் ஒப்பிடுவதன் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ்ப்பொதுவேட்பாளருக்கு ஏற்பட்டுள்ள படுதோல்வியை கோடிட்டுக் காட்டமுடியும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் ஆக சுமார் மூவாயிரம் வாக்குகளை பொதுவேட்பாளர் மேலதிகமாக பெற்றுள்ளார். இது பகிஷ்கரிப்பு கோரிக்கையை நிராகரித்தவர்களின் வாக்காக இருக்க வாய்ப்புண்டு. வடக்கு, கிழக்கின் மற்றைய மாவட்டங்கள் அனைத்திலும் பொதுவேட்பாளர் 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளை விடவும் குறைவாகவே பெற்றுள்ளார். குறைவு என்பது ஒருசில ஆயிரம் வாக்குகள் அல்ல. வன்னி, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்கள் ஒவ்வொன்றிலும் பொது வேட்பாளர் சுமார் 50 வீதம் வாக்குகளை குறைவாகப் பெற்றுள்ளார். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வீழ்ச்சி சுமார் 75 வீதமாக இருக்கிறது. இதனால்தான் அநுரகுமார அரியத்தாரை மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தக்கூடியதாக இருந்தது. இது முயலும், ஆமையும் நடாத்திய ஓட்டப்பந்தயத்தை நினைவூட்டும் பொதுவேட்பாளர் அரசியல் கோமாளித்தனம். ஆக, பொதுவேட்பாளர் கோமாளி வேடம் போட்டு தமிழ்த்தேசியம் சர்வதேசத்திற்கு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் காட்டியிருப்பது என்ன? * வட்டுக்கோட்டை பிரகடனத்தை மக்கள் நிராகரித்து இருக்கிறார்கள். அல்லது காலத்திற்கு பொருத்தமற்ற காலாவதியான ஒன்று என்று மீளப்பெற்றிருக்கிறார்கள். * இதன்மூலம் தமிழர் தாயகக்கோட்பாடு, தேசிய இனம், சுயநிர்ணய உரிமை, சமஷ்டி, இணைந்த வடக்கு கிழக்கு அனைத்தும் மக்கள் மத்தியில் பலவீனமான கருத்தாடல்களாகிவிட்டன என்பது சர்வதேசத்திற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. *வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஒற்றையாட்சிக்குள்,ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் என்பதற்கும் அப்பால் இலங்கையர்கள் என்ற அடையாளத்துடன் இணக்கமாக வாழவிரும்புகின்றனர். *ஒரு நாடு, ஒரே மக்கள் இலங்கையில் எவரும் எங்கும் வாழலாம் எந்தப் பிரிவினருக்கும் என்று தனியான பிரதேசங்கள் இல்லை என்ற கோத்தபாயவின் நிலைப்பாட்டிற்கு ஜே.வி.பி. வடிவம் கொடுக்க வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் அநுரகுமாரவுக்கு வாக்களித்து உறுதிப்படுத்தியுள்ளனர். * மேலும் தமிழ்த்தேசிய மக்கள் திரட்சி, தாராள பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அபிவிருத்தி வேண்டி நின்ற தொடர்ச்சி, இந்திய, அமெரிக்க மேலாண்மை போன்ற வற்றையும் நிராகரித்து இருக்கிறார்கள் தமிழ்மக்கள் . * சுமந்திரன் அணி தமிழ்த்தேசியத்தை சிதைக்கிறது என்று தும்புக்கட்டுக்கு குஞ்சம் கட்டப்போய் தமிழ்த்தேசிய பொதுக்கூட்டமைப்பும், பொதுவேட்பாளரும் மூக்குடைபட்டு நிற்கிறார்கள். இனி என்ன?. வீழ்ந்தாலும் மீசையில் மண்ஒட்டாத அறிக்கைகள் நாளைவரும்……! https://arangamnews.com/?p=112673 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அப்படித்தான் நான் கருதுகிறேன் ...தமிழரசு கட்சி சொன்ன ஆளுக்கு தானே வாக்கு போட்டிருக்கின்றனர்...ஏன் ரணிலுக்கு போடவில்லை ....டக்கிளஸ் அங்கஜன் போன்றோர் ரணிலுக்கு பிரச்சாரம் செய்த் பொதும்3 points
-
கருத்து படங்கள்
3 pointsஇலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.3 points
-
"இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க"
"இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க" பெரும்பாலான இலங்கை வாழ் மக்கள் சனிக்கிழமை 21 / 09 / 2024 அன்று தமக்குப்பிடித்த ஒரு தலைவரை ஐனாதிபதியாகத் தேர்ந்தெடுத்து சிம்மாசனத்தில் ஏற்றியிருக்கின்றனர். கூட்டாச்சி இல்லாமல், தனியாட்சி அதிகாரமிக்க வராய்த் இலங்கை நாட்டுக்குப் பல சிறப்பு அதிகாரங் களுடன் அநுர குமார திசாநாயக்க தலைவரா கியுள்ளார். சிவப்புச் சித்தாந்த சிந்தனையில் ஊறியவர் சிறப்பாய்ப் படிப்பிலே பட்டம் பெற்றவர் இளவயது மற்றும் ஆழுமை ஆற்றல் கொண்டவர். படிப்படியாகப் பதவிகளில் அங்கம் வகித்து சிகரமாய் அதிபர் பதவியில் 23 / 09 / 2024 அன்று ஏறி அமர்ந்துள்ளார். இலங்கையின் ஒரு மூத்த குடிகளான தமிழரின் உள்ளத்தில் இன்று எழும் கேள்வியும் எதிர்பார்ப்பும் ஒன்று இரண்டு அல்ல, அவை எழுபத்தி ஐந்து ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக இதயத்தை வாட்டும் கவலைகளே? தமிழ் சிறைக்கைதிகளுக்கு விடுதலை விடிவு வருமா? குற்றக் கறை படிந்தவர்கள் சிறையுள்ளே செல்வாரோ? காணாமல் போனோர் கண் முன்னே வருவாரோ? தமிழர் நிலங்களின் அபகரிப்பு முடிவுக்கு வருமோ? லஞ்சம் ஊழல்கள் குறையுமோ? பாதாளக் குழுக்கள் மற்றும் ஆவா குழுக்கள் அடங்குமோ? வாள் வெட்டுகள், துப்பாக்கி சூடு மற்றும் பாலியல் வன்செயல் குறையுமோ? கஞ்சாப் போதைப் பாவனை தடுக்கப்பட்டு அல்லது குறைக்கப்பட்டு இளைஞர்கள் ஒழுங்கு படுத்தப்படுமோ ? தமிழர் பாரம்பரிய நிலங்களில் அல்லது முற்றும் முழுதாக தமிழ் பேசும் மக்கள் வாழும் நிலங்களில் அத்துமீறும் அல்லது அடாவடித்தனம் புரியும் புத்தர் சிலைகள் நிறுவுதல் நிறைவு காணுமோ? தமிழ் பேசும் மக்களின் இந்த முக்கிய பிரச்சனைகளைத் தவிர , தாமும் ஒரு இலங்கையன், மூத்த குடியோன் என்ற ரீதியில் அவனின் பொதுவான ஏக்கம் தேய்பிறையான இலங்கை தேசத்தின் பொருளாதாரம் வளர்பிறை காணுமோ? ரூபாய் நாணயம் பெறுமதி ஏறுமோ? ராக்கெட் போல் ஏறிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் இறங்குமோ? உள்ளூர் விவசாயங்கள் உச்சம் தொடுமோ? அச்சமின்றிய வாழ்வு வாய்க்குமோ? பஞ்சம் பசி மாறுமோ? வருங்கால சந்ததிகள் வாழ வளமான நாடாய் மாறுமோ? ஆனால் ஒன்று மட்டும் உண்மை. பழைய வரலாறு கூறும் செய்தி அவை சிங்கள மக்களோ சிறப்பாய்த் தமக்கு நல்லது என்ன செய்வாரென்ற ஆர்வத்தோடும் தமிழ் மக்களோ தமக்கு ஏதாவது கெடுதல் செய்வாரோ என்ற அச்சத்தோடும், பழைய அல்லது இன்றைய நினைவில் இருக்கின்றார்கள்! அது மாறுமோ? அநுர குமார திசாநாயக்க பதவியை அணுகும் முறையைக் காணப் பல கண்கள் காத்திருக்க அவரோ ஐந்து விரல்களை ஆதவனாய் விரித்துக் காட்டி உங்கள் எல்லோரினதும் வாழ்க்கையை இன, மத பேதமின்றி உதயவனாய் ஒளிமயமானதாக்குவேன் என்கிறார். அநுர குமார திசாநாயக்காவிற்க்கும் பல எதிர்பார்ப்புகளுடன் வாழும் இலங்கை முழு மக்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்! சிறப்பான மற்றும் பாரபட்சம் அற்ற நேர்மையான ஆட்சியை, இனங்களை மொழி, சமயம், சாதி அடிப்படையில் பிரிக்காமல், வெறுக்காமல் எல்லோரும் இலங்கையர் என்பதை ஏற்று, சரிசமமாக ஊழல் அற்ற மற்றும் திறமையின் அடிப்படையில் ஆட்சியை நிலைநாட்டிட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு! சுருக்கமாக நாம் எதிர்பார்ப்பது அநுர குமார திசாநாயக்கவும் அவரது NPPயும் அரசாங்கத்தை அமைத்த பின்னர் அவர்கள் உறுதியளித்தபடி இலங்கையில் எதிர்காலத்தில் உடனடி மாற்றங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே! 1. Paye Tax from 36% to 24%. 2. VAT will be exempt for Food items, Health sector services & educational books. 3. One vehicle per minister/MP. 4. No pensions or vehicles houses, security etc for ex presidents & Ex parliamentarians. 5. Cut down on unnecessary government expenditure. 6. No family / Friends will be accommodated on overseas tours. 7. All tours are on assigned targets. 8. Only 25 ministries. 9. Cut down prices on electricity & fuel. 10. Low interest rates 11. Development bank for the start of new small & medium scale industries. 12. A 3 bench special court to hear fraud cases. 13. Presidents budget cut down by 50%. 14. No High fuel consumption vehicles for government officials & parliamentarians. 15. One law establishment by Making Police, Legal department & Courts independent with zero political influences. 16. New laws to prevent MP's from switching the party they were elected to. 17. New Investments (local & overseas Srilankans may ready to invest). 18. No additional benefits for politicians over citizens. 19. All Appointments on merits starting from the heads of government departments, ambassadors etc. 20. Ambassadors will be assigned with tasks to improve the Dollar inflow through new markets for our values added products (Tea, Rubber, Coconut, Cinnamon, Fishery, Gems etc) & services (job opportunities), 21. Promoting tourism. 22. Restoring the oil refinery. 23. Vision for all fields that will come under 25 ministries with teams assigned. 24. New technology for the fisheries industry to enhance the yield (Fishermen to receive directions for fishing areas) 25. Farmers to cultivation as per the different soil localities provided by R&D & as per the market needs. 26. Preservative methods, such as cold rooms, fertiliser & other utilities at a minimum cost. 27. Facilitate for Eco based tourism. 28. Plans to capture IT market. 29. Changes in the education policies to facilitate the economy. 30. Secure Food, Heath & Education as fundamentals for the citizens through adequate funding. இதற்கெல்லாம் நிதி எங்கே என்று பொதுவாக மக்கள் கேட்கலாம்? தேவையற்ற செலவுகள் மற்றும் விரயங்களை நிறுத்துவதன் மூலமும் எந்த வேறுபாடும் இன்றி எல்லா வரி செலுத்த தகுதியானவர்களிடம் வரிகளை வசூலிப்பதும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் முதலீடும் மற்றும் அவர்களை வேறுபாடு காட்டாமல் ஊக்கிவிப்பது மூலமும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மூலமும், அவர்களை இங்கு வர ஊக்குவிப்பது மூலமும் மற்றும் உள்நாட்டு ஏற்றுமதியை ஊக்கிவிப்பது மூலமும் இவை சாத்தியமாகலாம்? இவை எல்லாவற்றிற்கும் நீதியான சரிசமமான வலுவான ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்! யார் இந்த அநுர குமார திசாநாயக்க? அவர் கடந்து வந்த பாதை என்ன? முழுப் பெயர் – திஸ்ஸநாயக முடியான்செலகே அநுர குமார திசாநாயக்க [Dissanayaka Mudiyanselage Anura Kumara Dissanayaka]. பிறப்பு – 1968.11.24. பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார். ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம். உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார். 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார். அரசியல் வாழ்க்கை! 1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். 1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். 1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார். 2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். 2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார். 2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார். 2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். 2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது. 2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார். 2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார். ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும். 1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநர் றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார். அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார். 2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. 2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது. ஜேவிபி கட்சியிலிருந்து படிப்படியாக முன்னேறி தேசிய மக்கள் கட்சியை நிறுவி இன்று அக்கட்சியினூடாக இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தெரிவானார்.2 points
-
கால மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறாவிடின்..
இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல். JVP இன் ஆரம்பம், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டமை, அந்த இயக்கம் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் தேடலும் அழிப்பும், அதனாலான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கை என்று அந்தப் போராட்ட இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும். போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பவ்வியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்! வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள். தமிழர்களுக்கு அது புரியும். காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போதும் திரும்பலாம். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிசயம் சொல்லாமல் கொள்ளாமல் நம் வானத்தில் உதிக்கலாம். இதற்கு அநுரவே பெரும் சாட்சி. அவர்கள் அவர்களின் இனதிற்கு உரிய அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள், மேலும் அவர்கள் இப்போது ஜனநாயகப்படுத்தப் பட்டு விடடார்கள் ஆனால் இங்கு கதை வேறு. விமர்சனம் வைத்தாலே உள்பேட்டியில் கொலை மிரட்டல், விடுதலை போராட்டத்தின் சரி பிழைகளை கலந்துரையாடி தற்கால சூழலுக்கு ஏற்றது போல நவீனப் படுத்தப்பட வேண்டும், ஏனெனில் தமிழர் யுத்தம் செய்தது வேறு இனத்துடன் அவர்கள் யுத்தம் செய்தது தம்மினத்துடன்,, இல்லாவிட்டால் இறுதிவரை சுயபெருமை பேசிக்கொண்டும் புகழ் பாடிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான் ,, WhatsApp2 points
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
கொள்ளைக்காரருக்கு மறுபெயர் பிரபுக்களோ?2 points
-
தமிழரசு எதிர் பொதுக் கட்டமைப்பு: வென்றது யார்?
இது தான் இலக்கு👆! இதை பொது வேட்பாளர் மூலம் செய்ய இயலாமல் போய் விட்ட கோபத்தில் தான் இனி பொதுத் தேர்தலை எதிர் கொள்வர்😂! இதைத் தான் மேலே குறிப்பிட்டிருக்கிறேன்: தீவிர தேசியவாத தமிழர் அரசியலில் - குறைந்த பட்சம் இந்த வட்சப் பதிவை எழுதுவோர் போன்றோரின் பார்வையில்- ஒரு சில குறிப்பிட்ட கருத்துகளை உரத்துச் சொல்வோர் மாத்திரமே கை தட்டி வரவேற்கப் பட வேண்டும், ஏனையோர் மக்கள் தேர்வு செய்தாலும் விரட்டப் பட வேண்டும். இந்த மக்கள் தீர்ப்பை மதிக்காத ஜனநாயக மறுப்பை ஆதரிக்கும் ஆட்களோ தேடிப் போய் அடைக்கலம் தேடுவது ஜனநாயகத்தை மதிக்கும் நாடுகளில்! அங்க இருந்து தான் ஊரில் ரௌடிகளும், ஒத்த ரூட் தீவிர போக்காளர்களும் உருவாக ஆசிர்வாதம் வழங்குவர்😂! இவர்கள் எத்தனை தரம் வாக்காளர்கள் வாக்குகள் மூலம் சொன்னாலும் திருந்தப் போவதில்லை! விளக்குமாறால் தான் இந்த தீவிர தேசிய ரௌடிகளை அடித்து விரட்டுவர் மக்கள்!2 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இங்கு அடிக்கடி மைத்திரி யை தமிழ் மக்கள் ஆதரித்தது பற்றி குறைப்படுகின்றவர்கள் உள்ளனர். மைத்திரியின் அரசுக்கு முன் இருந்த மகிந்த & CO வின் காட்டாட்சியில் கிரீஸ் பூதத்தில் இருந்து பல பயங்கரங்களையும் அச்சுறுத்தல்களையும் தாயக மக்களும் முன்னால் போராளிகளும் அனுபவித்து கொண்டு இருந்தனர் என்பதையும் அந்த காட்டாட்சியை அகற்ற தாயக மக்களால் தம்மால் இயலுமான ஒரு நடவடிக்கையாக மைத்திரியை ஆதரித்தார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டினம். இதில் பலர் மஹிந்த ஆட்சியில் தாயகம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், 'நல்லாட்சி காலத்திலும் ' அதன் பின் ரணில் காலத்திலும் ஊருக்கு முதன் முதலாக போனவர்களும் அடக்கம்.2 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
எந்த முட்டாள் தனமான முயற்சிகளுக்கும் தமிழ் தேசிய முலாமை பூசி விட்டால் அதை ஆதரிக்க என ஒரு கூட்டம் உள்ளது என்பதை அந்த முட்டாள்தனமான முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் தம் இருப்பை பேண முயலும் கூட்டத்துக்கு நன்கு தெரியும். எனவே அவர்கள் இப்படியானவற்றை தொடர்ந்து முன்னெடுப்பர். ஆனால் மக்கள் ஒவ்வொரு முறையும் தமக்கு எது தேவையென புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்கின்றனர் என்பதை இம்முறையும் நிரூபித்து உள்ளனர்.2 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
"ஒற்றுமை" என்பதை நீங்களும், விசுகரும் புரிந்து கொண்டிருக்கும் விதம் பிழையாக இருக்கிறது, ஆனால் "தீ கக்கும் தீவிர தேசியர்களின்" இயல்பு எங்கேயும் இப்படித் தான் இருக்கிறது. ஒரு முட்டாள் தனத்தை, அது நிகழும் போதே "இது முட்டாள் தனம்" என்று கூறியவர்கள் அந்த முட்டாள் தனத்திற்கு ஆதரவு தராமையால் தான் தோல்வி வந்தது என்று நீங்கள் முறையிடுகிறீர்கள்😂. அது ஏன் முட்டாள் தனம் என்பதற்கான காரணங்களை (இந்தியாவின் சதி என்ற உறுதியாகாத காரணம் பின்னர் உருவானது) பந்தி பந்தியாக பலர் எழுதி விட்டார்கள், எனவே மீள எழுத வேண்டியதில்லை! எனவே, ஒற்றுமை என்பதன் முதல் படி "என்னோடு ஒத்துப் போகாதவன் எல்லாம் எதிரி!" என்ற கட்டுப் பெட்டித் தனத்தைக் கைவிடுவது தான். பொது வேட்பாளர் தமிழ் பகுதிகளில் கூட மூன்றில் இரண்டு வாக்காளர்களால் நிராகரிக்கப் பட்ட பின்னும் உங்களுக்கு இது உறைக்கவில்லையானால், எதுவுமே உங்களுக்கு உறைக்காது!2 points
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
தகவல் மூலங்களை சரிபார்க்காமல் வெட்டி ஒட்டியவர் அப்படியே கூகிள் ட்ரான்ஸ்லேற்றரில் போட அது "பொரியலுக்குத் தடை" என்று மொழிமாற்றம் செய்திருக்கிறது😂!2 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இன்று சிறிலங்கா ஆதரவுத் தேசியவாதிகளுக்குத் தேவைப்படுவது தமிழ்த் தேசியம் அடக்கப்படுவதன் ஊடாக மீண்டும் யாழ் மையவாத உயர்குடி மைந்தர்களின் கைகளில் ஆட்சியும், அவர்களிடம் கைகட்டி சேவகம் செய்யும் நிலையும் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என்பதே. அதற்காகவே சிறிலங்காத் தேசியம் தேவைப்படுகிறது. புலிகளை திட்டித் தீர்த்து முடிந்து இப்போது தமிழ்தேசியத்தை, அதற்காக உழைப்போரை நக்கல், நையாண்டி செய்வதிலிருந்து புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது அது மட்டுமே. இங்கே தமிழ் மக்களால் தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறும், கூவும், கீறும் இவர்கள் சிறிலங்காவுக்குப் போய் மக்களாதரவைத் திரட்டித் தலைமையேற்று சிறிலங்காவிலிருந்து தமிழருக்கு சகவாழ்வை ஏற்படுத்திக் கொடுக்கலாமே. இதிலென்ன வேடிக்கையென்றால் புலிகள் உயிர்போடிருந்த காலத்தில் முன்னணியிலே நின்று செயற்பட்டவர்களது நளினங்களைப் பார்க்கிறபோது புலிகள் வீழ்த்தப்பட்டது தனியே எதிரிகாளாலும், துரோகிளாலும் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் நீண்டு செல்கிறதோ அந்த வட்டம் என்று எண்ணத் தோன்றுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி2 points
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
நாங்கள் தனி ஆவரத்தனம் வாசிக்கிற ஆக்கள் ஆச்சே.அப்படி இருக்க எப்படி எதிர் பாக்க முடியும்.2 points
-
புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
பொரியல்களுக்கு இடமளிக்கப் படாது என்றால் என்ன அர்த்தம். ஏதாவது எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளதா...? அல்லது எண்ணையை மிச்சம் பிடிக்க... கத்தரிக்காய், மீன் போன்றவை பொரிக்க முடியாதா? 😂2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
2 points"நாம் ஒரு நாள் இறந்தாலும், நாம் மகிழ்ச்சியாக இறக்கலாம், எங்கள் சொந்த மக்களுக்காக போராடினோம் என்ற நிம்மதியுடன்." என் அப்பா அரச ஊழியர்... அம்மாவால் இன்றும் எழுத முடியாது. தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த எங்களுக்கு உணவு கிடைக்காமல் தாய், தந்தை படும் துன்பத்தை நம் கண்களால் பார்த்தோம்... எங்கள் கிராமப்புற பள்ளியில் பல ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லை.விரைவாக, வந்த ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் பெற்று வேறு மாகாணங்களுக்கு சென்றனர். மிகச்சில ஆசிரியர்களே எங்களைத் தங்கள் குழந்தைகளாகக் கருதி எங்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.அவர்கள் இல்லாமல் நாம் இன்று இல்லை. பெற்றோரின் சொற்ப வருமானம் கல்விச் செயல்பாடுகளுக்குப் போதாததால், பள்ளி விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் மாம்பழம், டொபி, சிகரெட் விற்று, மகாவலி கிராமத்திற்கு வியாபார நிமித்தம் வந்த போது மகாவலிக்குட்பட்ட வீதிகளில் வடிகால் வெட்டி,அப்போது, இருபது ரூபாய் ஒரு வடிகால் வெட்ட. நானும், ஊர் நண்பர்களும் இருபது ரூபாய்க்கு ரோட்டில் வடிகால் வெட்டுவது வழக்கம். அந்த அளவுக்கு ஏழ்மை எங்கள் வாழ்வில் அழுத்தத்தை கொண்டு வந்தது. எனது நண்பர்கள் பலர் தங்கள் கல்வியை நாசப்படுத்தினர். கற்றுக்கொள்ள முடியாததால் அல்ல குடும்பத்தில் படிக்க போதிய பணம் இல்லாததால். வறுமையின் காரணமாக சிலர் குடிபோதையில் பழகி அகால மரணம் அடைந்தனர். அவர்கள் இறக்கும் வயது வரவில்லை. சிலரது மனைவிகள் வெளிநாடு சென்று அவர்களது குடும்பங்கள் அழிந்தன. இந்த வறுமை நமது சமூகத்தில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. வறுமையை ஃபேஷன் ஆக்கி, மாளிகைகளில் வாழ்ந்து கொண்டு, உலகம் பார்க்க ரப்பர் செருப்புகளை அணிந்து கொள்பவர்கள் அல்ல நாம்.. நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. தூரத்தில் உள்ள கிராமத்தில் பல ஏழைகள் தந்தை மற்றும் சகோதரர்கள் ஜனாதிபதியான, சிறந்த பள்ளிகளில் படித்த. கொழும்பை மையமாகக் கொண்ட, இச் சமூகத்தில் ஆடம்பரமான மாளிகைகளில் வளர்ந்த வேட்பாளர்கள் மத்தியில், தூரத்துக் கிராமத்தில் இருந்து வந்து இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்காக போராட வந்த ஒரு சிறிய மனிதனான நான், தோளோடு தோள் நிற்கிறேன். என்னுடன் எனது சொந்த வகுப்பில் வாழ்ந்த இந்த நாட்டின் ஏழை மக்கள் எனக்கு பலம் தந்து உதவினர். வறுமையில் வாடும் என் வர்க்கத்தில் உள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய மீள முடியாத பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காக அரசியல் செய்கிறோம். ஒரு நாள் இறந்தாலும், நம் மக்களுக்காகப் போராடினோம் என்ற நிம்மதியுடன், மகிழ்ச்சியாக இறக்கலாம்... - அனுரகுமார திஸாநாயக்க - உண்மை உரைகல்2 points- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அரியம் மற்றும் பொதுக்கட்டமைப்பின் பின் நின்று செயற்படும் போலிகள் தமிழ்த்தேசியத்தை சிதக்கும் நயவஞ்சகர்கள்!2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தேவையில்லாத ஆணி 2.25 இலட்சம் வாக்குகளை பிரிச்சுக்கிட்டு போயிட்டு. ரணில் நரியாரின் பிரித்தாளும் தந்திரமே அவரின் தோல்விக்கும் காரணமாகி விட்டது. அடிப்படையில் ரணில்- சஜித் கூட்டாக.. பெற்ற மொத்த வாக்குகள் அனுரவை விட அதிகம். ராஜபக்ச செல்வாக்கு அடியோடு காணாமல் போய் விட்டது. சரத்தின் குண்டு துளைத்த கார்.. செல்லாக் காசாகி விட்டது.2 points- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இவர்களுக்கு தமிழ்தேசியம் பற்றி எள்ளளவும் கவலையில்லை. சுமந்திரன் இவர்களின் பேச்சுக்கு கிஞ்சித்தும் மதிப்பளிப்பதில்லை எனவே சுமந்திரனுக்கெதிராக தன் முயற்சியில் தளராத விக்கிரமன் போல பல வடிவங்களில் பலிக்கடாக்களை அனுப்புகின்றார்கள். ஒவ்வொரு முயற்சியிலும் மூக்குடைபடுவதுதான் மிச்சம். ஆனால் சுமந்திரனோ அந்த வேதாளம் போல இந்த விக்கிரமன்களை எள்ளி நகையாடுவதும் வழக்கம். தமிழ்த் தேசியம் என்பது இந்த விக்கிரமன்களுக்கும் வேதாளத்துக்கும் இடையில் பிணம்போல் சிக்கிச் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கின்றது! இனி அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வருகின்றது விக்கிரமன்கள் புதிய அவதாரம் எடுத்துவிடுவார்கள் ஆனால் அந்த வேதாளமோ ஒன்றுதான்!👀2 points- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsதமிழர்களான குமார் பொன்னம்பலம்,சிவாஜிலிங்கம் போன்றோர் ஜனாதிபதி தேர்தலில் நின்ற போது இல்லாத வன்மம் அரியேந்திரன் ஜனாதிபதி வேட்பாளராக நிற்கும்போது ஏன் வந்தது? 😎 நிற்க.... வீபூதி புகழ் செல்லக் கள்ளன் விக்னேஸ்வரனை சில தினங்களாக காணவில்லை. கண்டால் வரச்சொல்லுங்கோ2 points- கருத்து படங்கள்
2 points2 points- நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
திருடர்கள். அவர்களுக்கு பிரபுக்கள் அந்தஸ்து. ஆமாம்... மக்களின் பணத்தில் இவர்கள் பிரபுக்கள். அவசர பயணம், தாங்களாகவே தங்களை காட்டிக்கொடுக்கிறார்கள். அவர்கள் அரசியலில் வென்றபோது இப்படியான கைதுகளின் மூலமே எதிரிகளை காலில் விழ வைத்தனர். இப்போ இவர்கள் மடியில் கனம், அதனால் தப்ப முயற்சிக்கிறார்கள். கடைசி வரை வெல்வோம் என்று காத்திருந்து ஏமாந்தவர்கள் இறுதியில் மாட்டுப்பட்டார்கள். டக்ளஸ் ஹிஹி...... அவரை வளர்த்தவர்களுக்கே இந்த நிலை என்றால்; அவரின் நிலை என்ன என்று சிந்திக்கிறார். முன்பெல்லாம் அரச பதவியேறியவுடன், இவரை அழைத்து பணி கொடுப்பது வழக்கம். இப்போ அந்த அழைப்புக்காக காத்திருக்கிறாரோ என்னவோ, சுமந்திரன் வாழ்த்துச் சொல்லி கேட்கவில்லை. அவரும் தப்பி விட்டாரோ அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரோ தெரியவில்லை, விசாரித்துப்பாருங்கள்.1 point- நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
அனுராவின் காலில் விழ தவமிருக்கிறார்1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் படுதோல்வியடைந்த தமிழர் தரப்பு ராஜதந்திரமும் கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டி நான் எதிர்வு கூறியது போலவே ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அநுரவின் வெற்றியை உறுதி செய்ததுடன் எதிர்பார்க்கப்பட்ட படி இரண்டாம் நிலையில் சஜித் மற்றும் மூன்றாம் நிலையில் ரணில் ஆகியோரையும் உறுதி செய்தது. இதன் பின்னணியில் 'தமிழர் வாக்குகளுக்கு என்ன நடந்தது?' மற்றும் 'விரைவில் வர இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்கள் தமது இருப்பைத் தக்கவைக்க எவ்வாறான வியூகத்தை வகுக்க வேண்டும்?' என்பதை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும். தேர்தல் வெற்றிக்கு எழுபதுக்கு எழுபது போதும். இலங்கையின் குடித்தொகையில் 70% க்கும் அதிகமாகச் சிங்களவர் காணப்படும் நிலையில், அவர்களில் 70% ஆனவர்கள் ஒன்று பட்டு வாக்களித்தாலே 50%க்கும் அதிகமான(74.9% X 70%) வாக்குகளைப் பெற்றுச் சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே வெற்றி பெற முடியும். 2019 ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினர் ஒற்றுமைப்பட்டு சஜித்துக்கு வாக்களித்து இருந்தும் சிங்களவரில் 70% ஆனோர் கோட்டாபயவுக்கு வாக்களித்ததால் கோத்தபாயவினால் 50% க்குஅதிகமாக வாக்குகளை பெற்று வெற்றி பெற முடிந்தது. ஆனால் வாக்குகள் மூன்றாக அல்லது நான்காகப் பிரியும் போது 60% ஆன சிங்களவர்கள் ஒன்றுபட்டு வாக்களித்தலே வெற்றி பெற முடியும். அதுவே இம்முறை இடம் பெற்றுள்ளது. அதாவது சிங்களவரின் 60% வாக்குகளை பெற்று மொத்த வாக்குகளில் 42% (60%X 70%) பெற்றுள்ள அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிதறடிக்கப்பட்ட தமிழர் வாக்குகள். யாழ்ப்பாண மாவட்டத்தில் சில இடங்களில் அரியநேந்திரன் வெற்றி பெற்ற அதேவேளை வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களிலும் சஜித் அதிகமான வாக்குகளை பெற்று இருப்பதும், ரணிலும் இரண்டாம் நிலையில் கணிசமான வாக்குகளை வடக்கு கிழக்கில் பெற்று இருப்பதும் ஏற்கனவே நான் எதிர்வு கூறியபடி ஈழத் தமிழர்கள் ஒரு குழப்ப நிலையில் பல கூறுகளாகப் பிரிவடைந்து வாக்களித்து இருப்பதைக் காட்டுகிறது. ஆனால் மலையகத் தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் இஸ்லாமியத் தமிழர் அதிகமாக வசிக்கும் பகுதிகளிலும் சஜித் வெற்றி பெற்று இருந்தாலும் இதே குழப்பநிலை இருப்பதை இம்முறை தேர்தல் பெறுபேறுகள் காட்டுகின்றன. அரசியலில் பழுத்த அனுபவமும் புத்திசாலித்தனமும் மிகுந்த ரவூப் ஹக்கீம் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தோல்வியடைந்துள்ள சஜித்தை ஆதரிக்க எடுத்த முடிவு சாணக்கியமானதா என்பதை எதிர்காலம் தான் உணர்த்த வேண்டும். பொருத்தமற்ற தமிழ் பொது வேட்பாளராக பலிக்கடா அரியநேந்திரன் தமிழ் பொது வேட்பாளராகத் தன்னைப் பிரகடனப்படுத்திப் போட்டியிட்ட அரியநேந்திரன் யாழ்ப்பாணத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்று இருந்த போதிலும் கிழக்கில் மூன்றாவது இடத்தைக் கூட பிடிக்க முடியாமல் அவருடைய சொந்த மாவட்டமான மட்டக்களப்பிலும் அண்டைய மாவட்டங்களான திருகோணமலையிலும் அம்பாறையிலும் தோல்வி அடைந்துள்ளார். கிழக்கில் புலிகளது தளபதியாக இருந்த கருணா அம்மானின் நம்பிக்கைக்குரிய அரியம் என்ற அரியநேந்திரன், 2004 ஆம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் கருணா தரப்பின் ஊடாகக் கூட்டமைப்பு ஆசன ஒதுக்கீட்டினைப் பெற்றுப் போட்டியிட்டிருப்பினும் அந்தத் தேர்தலில் தோல்வியடைந்தவர் என்பதும் பின்னர் கிங்ஸ்லி ராசநாயகம் "இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு" அவர் தமது பாராளுமன்ற ஆசனத்தைத் தாமாகத் துறப்பதாக அறிவித்ததால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கே தெரிவு செய்யப்பட்டுப் பாராளுமன்றம் சென்றார் என்பதும் வரலாறு. 2010 இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அப்போதிருந்த அனுதாப அலையால் 16,504 வாக்குகளைப் பெற்று அரியம் மயிரிழையில் வெற்றி பெற்றிருந்தாலும் பின்னர் வந்த எந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்றிருக்கவில்லை. தற்போதைய பெறுபேறுகளும் மக்கள் ஆதரவை ஒருபோதும் பெற்று இராத அரியநேந்திரன் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டது தவறு என்பதை வெளிக்காட்டுகிறது. மேலும் "சர்வதேசத்துக்குத் தமிழ்மக்களின் ஒற்றுமையையும் எதிர்பார்ப்புகளையும் வெளிக்காட்டக் கூடிய வேட்பாளர்" என்று அடையாளப்படுத்தப்பட்டவர் ஆங்கிலத்தில் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடியவராகவும் பேச்சாற்றல் மிக்கவராகவும் இருந்திருக்க வேண்டும். ஆகக்குறைந்தது உள்ளூரில் நடைபெற்ற விவாத மேடையில் தமிழ் மொழியில் தமது தரப்பு நியாயங்களை நாட்டுக்குத் தெரிவிக்க வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தாத இவர், 'ஐந்து இலட்சம் வாக்குகளைப் பெற்றால் வெட்டுவோம் விழுத்துவோம்' என்று கூவித் திரிந்த இந்தியக் கைக்கூலிகளும், பொதுவேட்பாளர் என்ற மாயமானைப் பலப்படுத்தப் பல இலட்சங்களை அனுப்பிய புலம்பெயர் தமிழர்களும் இரண்டு இலட்சம் வாக்குகளை மட்டுமே அரியநேந்திரன் பெற்ற நிலையில் மௌனமாக இருக்கிறார்கள். இவர்களுடைய "தமிழர்களின் ஒற்றுமை" என்ற போலிச் சாயம் விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வெளுக்கும். அரியநேந்திரனுக்கு ஆதரவளித்த சித்தார்த்தன் தோல்வியை நேர்மையாக ஏற்றுக் கொள்ளாமல் கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக பெற்ற வாக்குகளை விட இம்முறை அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளதாக பேட்டி ஒன்றில் புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். தோல்வியடைந்த இந்திய சூழ்ச்சிகள் பல முனைகளிலும் தனது வேட்பாளர்களான ரணில் அல்லது சஜித்தின் வெற்றியை உறுதி செய்வதற்கு இந்தியா பல்வேறு சூழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தது. குறிப்பாகத் தனது முகவர்கள் மூலமாகத் தமிழ்ப் பொது வேட்பாளரைக் களம் இறக்கி அரச எதிர்ப்பு வாக்குகளை அனுரவுக்குச் செல்லவிடாமல் அரியநேந்திரனுக்குத் திசை திருப்பியது, புள்ளடி இடுவதைத் தடுத்து விருப்பு வாக்களிக்குமாறு கோரியது, 'இலங்கைத் தேர்தல் சட்டங்கள் தேர்தலுக்கு 48 மணிநேரம் முதல் அனைத்து பரப்புரைகளும் நிறுத்தப்படவேண்டும்' என்று கோரிய நிலையில் இலங்கை ஊடகங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நேர்மையற்ற முறையில் இந்திய ஊடகங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மூலமாக இறுதிவரை தான் ஆதரவளிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு தூண்டியது, யாழ் பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரில் அனாமதேய ஊடக அறிக்கைகளை வெளியிட்டது உட்படப் பல உதாரணங்களை குறிப்பிடலாம். தனது முதல் திட்டம் தோல்வி அடைந்துள்ள நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் தனது கட்டுப்பாட்டில் உள்ள வேட்பாளர்கள் மூலம் பெரும்பான்மைப் பலத்தை பெறத் தொடர்ந்து இந்தியாவினால் பல சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படும். குழம்பிய குட்டையில் வரும் பாராளுமன்ற தேர்தல் பொது வேட்பாளரை ஆதரித்த சித்தார்த்தன் "பாராளுமன்ற தேர்தலைத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக எதிர்கொள்வதற்கு இதுவரை திட்டம் எதுவும் இல்லை" என்று தெரிவித்து இருப்பது தமிழர்களின் ஒற்றுமைக்காகத் தமிழ் பொது வேட்பாளர் என்று தெரிவித்து இருந்ததை கேள்விக்குறியாகியுள்ளது. ஆனால் சிங்கள தேசம் நான்காகப் பிரிந்துள்ள நிலையில் வரும் இந்தத் தேர்தலில் தமிழர் தேசம் ஒற்றுமையாக 20 ஆசனங்களை ஆவது பாராளுமன்றில் பெற்றுக்கொண்டால் பேரம் பேசுவதன் மூலமாக முன்னெப்போதும் இல்லாத அளவு நன்மைகளைத் தமிழர்கள் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் துண்டு துண்டாக உடைந்து கிடக்கும் தமிழரசுக் கட்சி, இந்தியாவின் கைக்கூலிகளாகச் செயல்படும் ஏனைய பல தமிழ் கட்சிகள், மற்றைய கட்சிகளுடன் இணைய மறுக்கும் தமிழ் காங்கிரஸ் ஆகியவை "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு" என்னும் தமிழரின் எதிர்கால நம்பிக்கையை சிதைத்துள்ளன. ஒட்டுண்ணிக் குழுக்களின் இறுதிக் கட்டம் "குற்றச்செயல்களில் ஈடுபட்ட (பட்டுவரும்) ஒட்டுக் குழுக்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை" என்று தேசிய மக்கள் சக்தி அறிவித்து இருப்பது வரவேற்க கூடிய ஒரு விடயமாகும். இந்தக் ஒட்டுக் குழுக்கள் தமது கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளை நிறுத்தி உண்மையான ஜனநாயக செயல்பாடுகளை முன்னெடுப்பார்களா என்பது விரைவில் தெரியவரும். எப்படியாயினும் ஒட்டுக் குழுக்கள் அடாத்தாகக் கையகப்படுத்தி வைத்துள்ள பொது மற்றும் தனிநபர்களின் சொத்துக்களை மீட்கக்கூடியதாக இருந்தால், தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி மூலமாகத் தமிழ் மக்களுக்கு கிடைக்கும் இன்னொரு நன்மையாக இதை கருதலாம். தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் பாரிய சவால்கள் ஜனாதிபதித் தேர்தலை வெற்றி கொண்டாலும் அந்த வெற்றியானது குடித்தொகை அடர்த்தி கொண்ட சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் அடையப்பட்டதனால் இலங்கை வரைபடத்தில் பாரிய நிலப்பரப்பு தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத இடங்களாக இருக்கிறது. அதுவே தேசிய மக்கள் சக்தியின் பலவீனத்தையும் எதிர்கொள்ளும் சவால்களையும் வெளிப்படுத்தி உள்ளது. குறிப்பாக 'சிங்களவர் அல்லாத மக்களின் நம்பிக்கையை பெற தவறினால் தேசிய சக்தியாக மாற முடியாது' என்ற உண்மையை அவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தனது பிரச்சாரங்களில் உறுதியளித்த அரசியலமைப்பு மாற்றங்களை கொண்டு வருவதாயின் அதற்குப் பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மை அல்லது 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 150 பேரின் ஆதரவு தேவை. இரு மாதங்களில் வர இருக்கும் தேர்தலுக்கு முன்னர் பல மாவட்டங்களில் மக்கள் ஆதரவைப் பெற்ற வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதில் தேசிய மக்கள் சக்தி பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. இதைவிடத் தேர்தல் அண்மித்ததும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளக்கூடிய ரணிலின் அறிவிப்புகளை மக்களின் எதிர்ப்பின்றி நீக்க வேண்டிய சவாலை அனுர எதிர்கொண்டுள்ளார். குறிப்பாக 2025 க்கு அறிவிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புப் போன்றவை மக்களின் உணர்வை தூண்டக் கூடியவை. அதை விட அடுத்த வருடத்துக்கான புதிய பாதீட்டை இந்தப் பாராளுமன்றம் கலைக்கப்படுவதன் முன்னர் நிறைவேற்றுவது, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்குக் கடன் வழங்குவோரைத் திருப்திப்படுத்தி இலங்கை நாணயத்தைச் சரியவிடாது ரணிலினதும் அவரது எசமானர்களினதும் சூழ்ச்சிக்குள் அகப்படாது செயல்படுவது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் விரைவாக ஏற்படாவிட்டால் மக்களுக்குத் தேசிய மக்கள் சக்தி மீதும் சலிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. முடிவாக, தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தமிழர்களுக்கு ஒரு சாதகமான நிலையை தோற்றுவித்துள்ள போதிலும் தமிழரின் ஒற்றுமையின்மை மிகப் பெரிய பலவீனமாக மாறியுள்ளது. இதேவேளை தனக்கு மண்டியிடாத இலங்கைத் தலைமைகளை நீக்கித் தனது சுரண்டல்களைத் தொடர்வதற்கு இந்திய வல்லரசும் அதன் கைக்கூலிகளும் பாராளுமன்ற தேர்தலையும் பொருளாதாரப் பிரச்சினைகளையும் பயன்படுத்துவார்கள் என்பதை உணர்ந்து நாம் பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும் நன்றி Dr முரளி வல்லிபுரநாதன் 23.9.2024 https://www.facebook.com/share/p/uKoHuwG6mbatKcdC/?mibextid=WC7FNe1 point- தமிழரசு எதிர் பொதுக் கட்டமைப்பு: வென்றது யார்?
பட்டாசு கோஷ்டி அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகீட்டுது போலை!😂 ஒண்டு போக ஒண்டு எண்டு வெட்கமே இல்லாமல் வருங்கள்!😂1 point- நவீன கவிதை / "விடுதலையின் வித்து"
உங்களைப் போன்ற கலைஞர்களின் வழியே தொடர்ந்தும் விடுதலை வித்துகள் கடத்தப்பட்டு உரியவர்களைச் சேரட்டும். பாராட்டுகள் உரித்தாகுக. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
எனக்கு அனுப்பியவர் ஒரு JVP ஆதரவாளர். அதனால் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டேன்.1 point- புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
கூகிளை நம்பி அவசரமாகச் செய்தியாக்குவதில் வந்தவினை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
Friend's ஆகி frieds! frieds பொரியல் ஆகி!! பொரியல் குஞ்சாகி!!! குஞ்சு பிள்ளைகளாகி..... ஒரு n போடாத்தால் எப்பிடியெல்லாம் ஹிஹிஹி....1 point- புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
இந்த நிரல் இன்னமும் அநுரவைப் போய்ச் சேரவில்லை.......... இதில் இருக்கும் விபரங்கள் அவருக்கு தெரிய வந்தவுடன், அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்கி விடுவார்..............🤣. 'சந்திரனிலிருந்து அரிசி, முட்டை, சீனி, உள்ளி, இஞ்சி கொண்டு வருவோம்......' என்ற ஒரு வரியையும் இந்த நிரலில் 31 வதாக சேர்க்கலாம்..........😜.1 point- புதிய ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக சனத் குமநாயக்க நியமனம்
அதிகம் எதிர்பார்க்கிறீர்கள்போலும். இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும். பொறுத்திருந்து இந்தக் கட்சியின் ஆட்டத்தையும் காண்போம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி 2004ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர்நாள் உரையிலிருந்து...... இனவாதமும் மதவாதமும் பழமைவாதக் கம்யூனிசமும் ஒன்றுகலந்த குளறுபடியான கருத்தியலில் ஊறித் திளைத்த, தமிழர் விரோதக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி) இத் தேர்தலில் கணிசமான ஆசனங்களைப்பெற்று மூன்றாவது பிரதான அரசியற் கட்சியாக வெற்றிபெற்றது. இந்த இனவாதக் கட்சியை முக்கிய தோழமைப் பங்காளியாக அரவணைத்து, ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார் சந்திரிகா அம்மையார். தமிழரின் தேசியப் பிரச்சினை குறித்து மாறுபட்ட போக்கும் முரண்பட்ட கொள்கையுமுடைய அரசியல் இயக்கங்களின் ஒவ்வாத கூட்டாக இந்த அரசாங்கம் அமையப்பெற்றது. பொதுசனத் தீர்ப்பின் வாயிலாக, தென்னிலங்கை அரசியலரங்கிற் சிங்களப்பௌத்த மேலாண்மைவாதம் வலுப்பெற்ற அதே சமயம், தமிழரின் தாயகமான வடகிழக்கில், ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாகத் தமிழ்த் தேசியம் எழுச்சிபெற்றது. எமது விடுதலை இயக்கத்தின் அரசியல் இலட்சியத்திற்கு மக்கள் சக்தியின் ஏகோபித்த ஆதரவு கிட்டியது. தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்ற வெகுசன அங்கீகாரமும் எமது விடுதலை இயக்கத்திற்கு வழங்கப்பட்டது. எமது இயக்கம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்திற்கு எமது மக்களின் மனுவும் கிடைத்தது. விடுதலைப் புலிகளின் இலட்சியக் குரலாக, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சனநாயக சக்தியாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரெண்டு ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியீட்டியது. இப் பொதுத் தேர்தலானது என்றுமில்லாதவாறு தமிழ், சிங்கள இனங்களை வேறுபட்ட இரு தேசங்களாகப் பிளவுபடுத்தியது. கருத்தாலும் உணர்வாலும் இலட்சியத்தாலும் வேறுபட்டு, மாறுபட்டு, முரண்பட்டு நிற்கும் இரு மக்கள்சமூகங்களாகப் பிரிவுறச் செய்தது. தென்னிலங்கையில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்து, அரசியலதிகாரம் இனவாத சக்திகளிடம் சென்றடைந்தபோதும் நாம் தொடர்ந்தும் அமைதி பேணி, சமாதான முயற்சியை முன்னெடுக்க விரும்பினோம். இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்களை ஆரம்பிக்க நாம் தயாரென்பதை நோர்வே அனுசரணையாளர்கள் மூலமாகச் சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்திற்கு அறிவித்தோம். அவ்வேளைதான் அரச கூட்டணிக்குள் குழப்பமும் கொள்கை முரண்பாடும் தலைதூக்கின. அரச கூட்டணிக்குள் ஆதிக்க வலுவுடைய கட்சியான ஜே.வி.பி, சமாதானப் பேச்சுக்கள் வாயிலாகத் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமையும் ஆட்சியதிகாரமும் வழங்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தது. மூன்றாந் தரப்பு நடுநிலையாளராகச் செயற்பட்ட நோர்வே அரசையும் வன்மையாகக் கண்டித்தது. நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தை முற்றுமுழுதாக நிராகரித்தது. எமது திட்டத்தின் அடிப்படையிற் பேச்சுக்கள் ஆரம்பமானால் அரச கூட்டணியிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் மிரட்டியது. சமாதானப் பேச்சுக்கும் சமரச முயற்சிக்கும் எதிரான ஜே.வி.பியினரின் தீவிரவாதக் கடும்போக்கு, சந்திரிகா அம்மையாருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. இந்நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது. சமாதான வழிமுறையைப் பேணி இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டுமென்ற சர்வதேச அழுத்தம் ஒருபுறமும், பேச்சுக்கள் ஆரம்பமாகி முன்னேற்றம் ஏற்படும்போதுதான் உதவி வழங்கும் நாடுகள் உறுதியளித்த பெருந்தொகைக் கடனுதவி கிடைக்குமென்ற நிர்ப்பந்தம் மறுபுறமும், பாதாளம் நோக்கிச் சரிந்து செல்லும் இலங்கையின் பொருளாதாரம் இன்னொரு புறமுமாக, சந்திரிகாவின் அரசு பலமுனைகளில் நெருக்கடியைச் சந்தித்து நிற்கிறது. ஒரு புலனக்குழுமத்தில் படித்ததைத் திரியோடு தொடர்புடையது என்பதால் பகிர்ந்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு
பொதுவாக தங்களை விட அரசியல் அறிவு உடையவர்களையே அரசியல் ஆலோசகராக வைத்து கொள்வது உலக வழமை. கஜேந்திரகுமார் மட்டும் உலக வழமைக்கு மாறாக குதிரை கஜேந்திரன் என்ற அரசியல் தற்குறியை அரசியல் ஆலோசகராக கொண்டுள்ளார்.😂1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நன்றி சகோ உங்களைப் போன்றவர்கள் இன்று உலகமெல்லாம் பரவிக்கிடக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இணைக்கும் புள்ளி ஒன்றே ஒன்று தான் அது தமிழ்த்தேசியம். இதற்குள் புகுந்து தாயகம் புலம்பெயர் தேசம் என பிரிவினைகளை பிரித்தாளும் தந்திரங்களை தொடர்ந்து எழுதுவோர் மிகவும் ஆபத்தானவர்கள் தமிழ்த்தேசியத்தை உணராதவர்கள்1 point- இலங்கை - நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
நியுசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் - இலங்கை 63 ஓட்டங்களால் வெற்றி 23 SEP, 2024 | 10:50 AM காலியில் இடம்பெற்ற நியுசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெறுவதற்கு 274 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 211 ஓட்டங்களிற்கு தனது இரண்டாவது இனிங்சில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 208 ஓட்டங்களிற்கு 8 விக்கெட்களை இழந்த நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்த நியுசிலாந்து அணி 3 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ரச்சின் ரவீந்திர 92 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பிரபாத் ஜெயசூரிய ஐந்து விக்கெட்களை வீழ்த்தினார். https://www.virakesari.lk/article/1945791 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ் பிரதேசங்களில் சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியா?1 point- விரைவில் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறவேண்டும் - அனுர
நடந்தால் தான் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மைக்கு ஏதாவது சந்தர்ப்பம் அமைய வாய்ப்பிருக்கும். இன்றேல்.. கஸ்டம்.1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
வித்துவான் எழுதியதில் இது தான் சும்மா நச் என்று இருக்கு கூத்தமைப்பு தோற்றுப்போகும் அரசியல் வியாதிகளை டமிலர் தலையில் கட்டுவதற்கு பெயர்போனது இப்படி டமிளர்கள் தோற்றுகொண்டே இருந்தால்தான் அவர்களது வண்டியை ஓட்டலாம். அம்பிகா ஆன்டி ஒரு சீட்டு எடுத்து பாராளுமன்றம் போவதற்கு முதல் டமில் தேசிய கூத்தமைப்பு மொத்த கூடாரமும் காலியாகிவிடும்போல. அம்பிகா அன்றியும் ப்லோட்டி இடியட்ஸ் என்று ஏசிவிட்டு அவுஸிற்கு நடையை கட்டவேண்டியதுதான்1 point- தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
பிரிகேடியர் சொர்ணம் 1988-1990 1988-1989 இக்காலத்தில் இந்தியர்களின் சீருடையினையே புலிகள் அணிந்திருந்தாலும் அதனது கை மற்றும் காலுக்கு கறுப்பு நிற துணியினை வைத்து தைத்து அவர்களின் சீருடையில் இருந்து வேறுபடுத்தியிருந்தனர்.1 point- மொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு]
1 pointமொழித்திறன் கவிதை ] / "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] & "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "காதலியின் ஏக்கம்" [படக் கவிதை] "அன்பின் பரிசில் காதலியைப் பொறித்து அழகாக மலர்களால் வடிவு அமைத்து அருகில் அணுகி கட்டி அணைத்து அகவைத் தின வாழ்த்து கூறாயோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ...................................................................... "பொட்டு" [இரு இடங்களில் இருவேறு பொருளோடு] "பொட்டு வெளிச்சம் இல்லாத இரவில் பொட்டு வழியாகப் புகுந்து வந்தான் மட்டு மரியாதை நன்கு தெரிந்தவன் பொட்டு இட்டு என்னை அணைத்தான் பட்டு மேனியைத் தொட்டுப் பார்த்தான் கட்டு உடல் கொண்ட அழகன்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பொட்டு - (அளவுகுறித்து வரும்போது) சிறிது; துளி பொட்டு - வேலியில் இருக்கும் சிறிய திறப்பு [இலங்கைத் தமிழ் வழக்கு]1 point- “நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
ஓசி விசுகோத்துக்கு படிக்க போனவர்களுக்கு நான் என்ன சொன்னாலும் புரியாது என்றால் உங்களுக்குமா புரியவில்லை நான் எந்த இடத்தில் அரியம் நின்றது சரி என்றேன்?1 point- “நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.” புதிதாக தெரிவான ஜனாதிபதி அநுரவுக்கு ஜனாதிபதி ரணில் உருக்கம்!
இந்த மனுஷனுக்கு ஏதோ நடந்து விட்டது............ தேர்தலுக்கு முன் ஆஸ்பத்திரி - அவசர நோயாளி - மருத்துவர் என்று ஒரு கதையைச் சொன்னார். இப்ப குழந்தை - தொங்குபாலம் - தொங்கினேன் என்று இன்னொரு புதுக் கதையுடன் நிற்குது இந்த மனுஷன். இனி வீட்டில் இருந்து கொண்டு இதே டிசைன்ல கதை கதையாக எழுதப் போகுது போல ஆள்............ செத்தார்கள் வாசிக்கும் சிங்கள மக்கள்..........🤣.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointமரத்தின் பெறுமதி தெரிந்தவர்களால் மட்டுமே... இப்படி செய்ய முடியும்.1 point- திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
ஆரம்பத்தில் ஆங்கிலேய ஆட்சியின் போது ஆங்கில மூலக்கல்வி இருந்தது, ஆங்கில கல்வி கற்றவர்கள் அதன் மூலம் அரச உயர் உத்தியோகங்களை பெற்று முன்னேறி செல்ல அதனை தொடர்ந்து அனைத்து மக்களும் ஆங்கில கல்வி பெற்று அரச உத்தியோகம் பெறும் நிலை வரும் போது அதனை தடுக்க தாய் மொழிக்கல்வியினை கொண்டு வந்து தமக்கு சேவகம் செய்ய ஒரு ஆண்டான் அடிமை அடிப்படையான ஒரு நிலையினை உருவாக்கியதாக கூறப்படுகிறது (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்). இதனால் தமிழ் மொழி வளர்ச்சி பெற்றது என கூறி தமிழிற்கு சேவை செய்தார், மதத்திற்கு சேவை செய்தார் என நுண்ணிய அரசியல் செய்ததைப்போலவே (இந்த கூற்று தவறாகவும் இருக்கலாம்) தமிழ் நாட்டில் பிராமனர் ஈடுபட்டனர், இந்தியாவில் இவ்வாறு பிற்படுத்தப்பட்ட சமூகங்களை பொருளாதார ரீதியாக தர முயர்த்த பல சலுகைகள் அங்குள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு உள்ளது ஆனால் எமது சமூகம் அவ்வாறான நிலையின் உருவாக்க விரும்பாத நிலையே இன்னமும் அடிப்படை கல்வியினை பெறமுடியாத வறுமை சூழ்நிலையிலேயே வறுமைக்கோட்டிற்க்கு கீழே பல தலைமுறைகளாக வாழும் நிலை காணப்படுகிறது. ஊரில் ஒருவரது மாடு காணாமல் போய்விட்டது அவர் தமிழீழ காவல்துறையில் சென்று முறயிட்டார், அவரிடம் உங்களுக்கு யார் மேலாவது சந்தேகம் உண்டா என கேட்டார்கள் அதற்கு அவர் சாதிய வார்த்தையில் விழித்து அவர்கள் மேல்தான சந்தேகம் உள்ளது என்றார், அவருக்கு 5000 ரூபா அபராதம் விதிதார்கள், அமெரிக்காவில் ஆபிரிக்க வம்சாவளியினரை குற்றப்பரம்பரையாக பார்ப்பது போல பார்க்கும் நிலை எம்மிடமும் உள்ளது. என்னை பொறுத்தவரை தமக்கான உரிமைகளை இழந்து பல தலைமுறைகளாக சைவர், தமிழர் என தமது சுயத்தினை இழந்து தமிழ் சமூகம் எனும் போர்வையில் அடிமைகளாக இருப்பதனை விட வேறு மதம், இனம் என்பதன் மூலம் சாதாரண மனிதர்கள் போல சகல உரிமைகளோடு வாழ வேண்டும். நீங்கள் கூறுவது போல திருமண பந்தத்திற்கு மட்டும் சாதி பார்ப்பதாக எடுத்து கொன்டாலும், இந்த வேற்றுமையினை எதிர்பார்க்கின்ற சமூகமாக இருந்த வண்ணம் எவ்வாறு தமிழர், மதம் எனும் ஒருமைப்பாட்டுற்குள் வரவேண்டும் என எதிர்பார்ப்பது நியாமாக இருக்குமா? உண்மையாக உங்கள் கருத்திற்கு எதிரான கருத்தல்ல, அத்துடன் தனிப்பட்ட ரீதியில் சமய, மொழி எனும் அடிப்படையில் பெயர் பெற்ற காலமானவர்கள் மேல் எனக்கு எந்த காழ்ப்புணர்வும் இல்லை, ஆனால் இந்த பிற்போக்குவாதத்தினை கடந்து தமிழராக நாம் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும்.1 point- கருத்து படங்கள்
- யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.