Leaderboard
-
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்23Points15791Posts -
nochchi
கருத்துக்கள உறவுகள்12Points5896Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்11Points31968Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20012Posts
Popular Content
Showing content with the highest reputation on 09/24/24 in all areas
-
பலியாடுகள் - நிழலி
9 pointsநாய்களுக்கும் நரிகளுக்குமான போட்டியில் ஒவ்வொரு முறையும் குயில்கள் பலியாகின்றன குயில்களுக்கு தெரிவதில்லை தாம் தான் தூண்டிலில் கொழுவப்பட்ட புழுக்கள் என.. பேய்களுக்கும் பிசாசுகளுக்குமான போரில் ஒவ்வொரு முறையும் வண்ணாத்திப் பூச்சிகள் கொல்லப்படுகினறன வண்ணாத்திப் பூச்சிகளுக்கு தெரிவதில்லை தாம் தான் வலையில் சிக்க வைக்கப்படும் சிறு கண்ணிகள் என.. மனிதர்களுக்கும் மனிதமற்றவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒவ்வொரு முறையும் கடவுள்கள் கொல்லப்படுகின்றனர் கடவுள்களுக்கு தெரிவதில்லை தாம் தான் மனிதர்களின் பொறியில் வைக்கபடும் இரைகள் என யார் யாருக்கோ இடையிலான யுத்தத்தில் எப்போதும் தோற்றுக் கொண்டே இருப்பவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை எப்பவுமே தாம் தான் பலியாடுகள் என -நிழலி9 points
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
6 pointsஇந்தமுறை பழம்பெரும் தமிழ்த் தலைவர்கள் ஓய்வெடுத்து புதிய மும்மொழி/இருமொழி ஆற்றலுள்ள இளையோரை தேர்தலில் நிறுத்தி 15-20 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற முயற்சிக்கலாமே?!!!!6 points
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
நன்றி, தமிழரைச் சமத்துவமான பங்காளிகளாக ஏற்க மறுத்தவாறு, ஒருமைப்பாடு, இறையாண்மை என்று கூவியபடி சிங்களம் நாட்டைப் பல்தேசியக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு இலங்கைத்தீவை விற்றாகிவிட்டது. எவர் அரசுத்தலைவரானாலும், இந்த கூட்டுச் சங்கிலியில் இருந்து வெளியில் வரமுடியாதெனபதே யதார்த்தம். முதலில் பொருண்மியத்தைத் தற்போதுள்ள நிலையில் வைத்திருக்கவே போராடவேண்டியிருக்கும். அ.நா.நிதியத்தையோ, கடன் வழங்கிய நாடுகளையோ இலகுவில் கடந்துவிட முடியாது. எனவே மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் குறைவே. ஆனால், சில வழிகள் உண்டு அவை கடுமையானவையாகவும், ஏதிர்ப்பலையை உருவாக்கக் கூடியவையுமாகும். 1.மகிந்த சக சகோததர்களினால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ள நிதியை மீளக்கொண்டுவருதல். 2.உள்ளக மட்டத்தில் உள்ள ஊழல் பெருச்சாளிகளின் வருமானத்துக்கு மேலான சொத்துகளை அரசுடைமையாக்கல். 3. உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தலும், ஏற்றுமதிகளை இனங்கானலும். இதில் விவசாயப் பொருட்களுக்கு உற்பத்திக் காலம் தேவை. உடனடியாகக் கடல் வளங்களைப் பயன்படுத்தலாம். 4. தமிழரையும் ஒரு சமத்துமான பங்காளராக ஏற்று உரிய பாதுகாப்பையும், நம்பிக்கையையும் வழங்குவதன் ஊடாகக் கணிசமான புலம்பெயர் முதலீட்டாளர்களை உள்ளீர்த்தல் போன்றவற்றை செய்தல் போன்றன சில சாதகமான மாற்றங்களைப் பொருளாதாரத்தில் கொண்டுவரலாம். 75ஆண்டு காலத்தில், தமிழினத்தை அழிக்கவெனப் படைத்துறைப் பெருக்கத்தோடு நஞ்சுக்குண்டுகளையும், ஆயுதங்களையும் 30ஆண்டுகளாகக் கொள்வனவு செய்தமையின் விளைவே இந்த ஊதிப்பெருத்துள்ள பொருண்மிய நெருக்கடியென்பதை உண்மையான மாக்ஸிஸவாதியாயின் புரிந்துகொண்டிருப்பார். அரசுத் தலைவர் மாறியுள்ளபோதும், மாற்றங்கள் இலகுவானவையல்ல. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி5 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
கனம் நாட்டை விட்டு ஓடி அசைலம் அடித்ததால் நாசா விஞ்ஞானி ஆகிய புலம்பெயர் புத்திஜீவியே..! தலைவா வா.. தலைமை ஏற்க வா.. அறிவுரைகளை அள்ளி வீச வா.. இப்படிக்கு தங்கள் அறிவுரைவுரைகளை எதிர்பார்த்து காத்துகிடக்கும் வெளிநாடு போகாமல் ஊரில் இருக்கும் படிப்பறிவு அற்றவர்கள்.. கொய்யாலே.. 😡😡 ஊரில இருக்கிற சனத்துக்கு வகுப்பெடுக்கிற அளவுக்கு வெளிநாட்டுக்கு போயிட்டா உங்களுக்கு தகுதி வந்திடுமோ..? வெளிநாடு ஏஜென்சிக்கு காசுகட்டி போய் அசைலமெடிச்சு விசா எடுத்திட்டா நாங்கள் நாசா வின்ஞானிகள்.. நினைப்பு பெரிசு.. இஞ்ச வந்து 2k கிட்ஸ் இட்ட உத சொல்லிடாதைங்கோ.. வச்சு செஞ்சு விட்டுருவாங்கள்.. ஊரில இருந்தாலும் என்ர மண்ணைவிட்டு போகாமாட்டன் எண்டு கவுரமா உழைச்சு வாழுறாங்கள்.. நாட்டை விட்டு ஓடினவங்கள் எல்லாம் ஊரில இருக்கிறவனுக்கு வகுப்பெடுக்கிறானுகள்.. காலக்கொடுமை..3 points
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பான பின்னடிப்பினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் கோபமும். இவை போல, பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மக்களுக்கு திண்மையான/தொட்டுணரக் கூடிய (tangible) காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. எனவே, பொது வேட்பாளர் தோற்றார். இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் பகுதியெண்ணைக் குறுக்கி "பொது வேட்பாளர் ஓரளவுக்கு வென்றார்" என்று காட்டும் முயற்சி நம்மை நாமே ஏமாற்றும் வேலை தான். இதையே, பொதுத் தேர்தல் வரை தொடர்ந்தால், இப்போது இருக்கும் பா.உ எண்ணிக்கையும் சுருங்கும்!3 points
-
கால மாற்றத்துக்கு ஏற்ப நாமும் மாறாவிடின்..
இந்தப் புகைப்படம் ஒரு ஸ்பெஷல். JVP இன் ஆரம்பம், அதன் தலைவர் பொரளை மயானத்தில் வைத்து இராணுவத்தால் பின்தலையில் சுட்டுக் கொல்லப்பட்டமை, அந்த இயக்கம் மீதான அரச இராணுவ இயந்திரத்தின் தேடலும் அழிப்பும், அதனாலான அந்தப் போராளிகளின் மறைவு வாழ்க்கை என்று அந்தப் போராட்ட இயக்கம் மீதான தடை நீக்கப்படும் வரையான வரலாற்றைப் படித்தவர்களுக்கு, இந்தப் புகைப்படம் ஏன் ஸ்பெஷல் என்று புரியும். போராளிகளைத் தேடித்தேடி அழித்த ஒரு சீருடை இயந்திரம், அதே போராளி ஒருவரின் முன்னால் பவ்வியமாக தங்கள் கட்டளைக்காகக் காத்திருக்கிறது. காலம்தான் எவ்வளவு வலியது பாருங்கள்! வேட்கை நிறைந்த போராளிகள் ஆளும் தேசம் நேர்மையானது என்பார்கள். தமிழர்களுக்கு அது புரியும். காலம் எப்போதும் மாறலாம். கனவு எப்போதும் திரும்பலாம். மாற்றம் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். அதிசயம் சொல்லாமல் கொள்ளாமல் நம் வானத்தில் உதிக்கலாம். இதற்கு அநுரவே பெரும் சாட்சி. அவர்கள் அவர்களின் இனதிற்கு உரிய அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்கள், மேலும் அவர்கள் இப்போது ஜனநாயகப்படுத்தப் பட்டு விடடார்கள் ஆனால் இங்கு கதை வேறு. விமர்சனம் வைத்தாலே உள்பேட்டியில் கொலை மிரட்டல், விடுதலை போராட்டத்தின் சரி பிழைகளை கலந்துரையாடி தற்கால சூழலுக்கு ஏற்றது போல நவீனப் படுத்தப்பட வேண்டும், ஏனெனில் தமிழர் யுத்தம் செய்தது வேறு இனத்துடன் அவர்கள் யுத்தம் செய்தது தம்மினத்துடன்,, இல்லாவிட்டால் இறுதிவரை சுயபெருமை பேசிக்கொண்டும் புகழ் பாடிக்கொண்டும் இருக்க வேண்டியதுதான் ,, WhatsApp3 points
-
நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
"நானும் கம்னியூஸ்டா" "நானும் பனங்காட்டு கம்னியூஸ்டா" "நானும் ஆய்தமேந்தி ஜனநாயகவாதியாக வந்த தோழேன்டா" என பல டயலோக் பேசி அனுராவை கட்டி தழுவ முயற்சிப்பார் .. கடற்படை தளபதியின் பாதுகாப்பில் இருப்பாரோ.. வன்மையாக கண்டிக்கிறேன் ....🤣 ஒரு கம்னியூஸ்ட் தோழன் மற்றோர் சோசலிச தோழனின் காலில் விழுந்த சரித்திரமில்லை..🤣3 points
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
2 pointsசிறியும் சுமோவும் ஒன்று சேருவினம். வீட்டுக்குப் போடுங்கோ என்று வருவினம். அரியத்தார் நடுத்தெருவில். அவரை இழுத்து லிட்ட ஆட்களும் பழைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பென்று ஒன்று சேருவினம்.நாங்களும் கணியைப் பார்த்து கருத்து எழுதுவம்.இவ்வளவு காலமும் யாழோடு கிடந்தது பத்ததாதா என்று வீட்டில சத்தம் போட்டாலும் கேளாத மாதிரி தேர்தல் செய்திகளில் மூழ்கிடுவம். கொஞசமாவது லீவு விடக் கூடாதா? கேப் விடாம அடிக்கிறானே!2 points
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
2 pointsஒரே வாங்கில் இருந்தபடியால் நீங்கள் அவர்களாகவே மாறிவிட்டீர்கள். சகல கட்சிகளையும் கலைத்துவிட்டு பொதுக்கட்டமைப்பை கட்சியாக்கி இளையவர்களை உள்வாங்கி ஒன்றாக களமிறங்கலாம்.2 points
-
கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
2 pointsபாராளுமன்றத் தேர்தல் இவ்வளவு விரைவில் வரும் என எதிர்பார்க்கவில்லை. தமிழ் அரசியலில்… எத்தனை தலை உருளப் போகுதோ… இப்ப கண்டபடி… “சவுண்டு” குடுத்துக் கொண்டு இருக்கின்ற ஆட்களின் முகத்தை வடிவாக பார்த்துக் கொள்ளுங்கள். வரும் தேர்தலுடன் காணாமல் போகலாம். போன தேர்தலில்… மாவைக்கு நடந்தது, இந்தத் தேர்தலில்.. பிரபல சுத்துமாத்துக்கு நடக்கும் என்று, பட்சி சொல்லுது. 😂 🤣2 points
-
பலியாடுகள் - நிழலி
2 pointsஇப்பதான் கீழ இணைச்சுள்ள கவிதையை வல்லினத்தில் வாசிச்சுட்டு வர உங்கள் கவிதை.. இரெண்டிலும் தொக்கி நிற்கும் கரு ஒன்றே.. நன்றி கவிதைக்கு நிழலி.. ஒரு வாசிக்கத் தெரிந்த கூலியின் சில கேள்விகள் ஏழுவாயில்களைக் கொண்ட தேபிஸ் நகரை யார் கட்டியது? புத்தகங்கள் சுட்டுவதெல்லாம் மன்னர்களின் பெயரை அம்மன்னர்களென்ன பாறைகளை அடுக்கினார்களா? தரைமட்டமாக்கப்பட்ட பேபிலோன் ஒவ்வொரு முறையும் நிமிர்ந்தது யாரால்? தங்கஞ்சுரக்கும் லீமாவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த வீடுகள் எப்படிப்பட்டவை? சீனப்பெருஞ்சுவர் கட்டிமுடிக்கப்பட்ட மாலை கொத்தர்களெல்லாம் எங்குப் போனார்கள்? ரோமாபுரியின் வெற்றி வளைவுகளைக் கட்டியதார்? சீசர்கள், வாகை சூடியது யாரை மிதித்து? கவிதைகள் போற்றும் பைசேண்ட்டியத்தில் வசிப்பதற்கு அரண்மணைகள் மட்டும்தானா? அட்லாண்டிஸ் கண்டத்தை கடல்கொண்ட நள்ளிரவு மூழ்கியோர் நினைவெல்லாம் தத்தம் அடிமைகளைப் பற்றித்தானாம் இளம் அலெக்ஸாந்தர் இந்தியாவை வென்றான். தனியாகவா? சீசர் ஃகோவுல்சை கொன்றொழித்தான். அவனோடு ஒரு சமையற்காரன் கூட செல்லவில்லையா? ஸ்பெயின் வேந்தன் பிலிப் தன் கப்பற் படை தண்ணீரில் மூழ்கியதற்கு அழுதானாம் அவன் மட்டும் தான் அழுதானா? இரண்டாம் பிரெடரிக் ஏழாண்டு போரில் வென்றான். வேறு யார் வென்றது? ஒவ்வொரு பக்கமும் ஒரு வெற்றி வென்றோர்க்கு யார் சமைத்துப் போட்டது? பத்தாண்டுகளுக்கு ஒருமுறை பார் புகழும் பெரிய மனிதனின் வருகை வரிகளை யார் கட்டியது? எத்தனை அறிக்கைகள் எத்தனைக் கேள்விகள் பெர்ட்டோல்ட் பிரெக்ட் (1898-1956) https://www.vallinam.com.my/issue10/poem7.html2 points
-
கனவு பலிக்குமா?
2 pointsகனவு பலிக்குமா? ********************** கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு ஆலயம் கட்டி வழிபாட்டுத்தலமெல்லாம் அனைவரும்.. வந்து வணங்கி வழிபட்டு போனார்களே தவிர.. அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. தமிழ் இணைந்த வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் பகுதி பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. இப்படி எனக்கு-என் பூட்டனார் கனவில வந்து கதை சொல்லி போனார். அப்போது நினைத்தேன் இப்போது நடப்பது இனவாத.. அரசியல் வாதிகளும்-சில அரசடி வாதிகளும் கொள்ளையடித்து தாம் வாழ நினைத்து. வல்லரசு சிலதோட வறுமையை காட்டி முக்குலத்தையும் முட்டி மோதவிடும் முடிவால்தான்-இன்று எங்களுக்குள்ளே இத்தனை.. சண்டையோ? எண்ணித் திகைத்து இடையில.. எழும்பி விட்டேன். விடியும் போது (21.09.2024) புதிய ஜனாதிபதியின் பொறுமையான வரவு பார்த்தேன். எனியாவது இந்த கனவு பலிக்குமென்ற மகிழ்வோடு.. மனம் நடக்கிறது. . அன்புடன் -பசுவூர்க்கோபி-2 points
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
2 points
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
ஒரு சிறு திருத்தம்: சுமந்திரன் சொன்னதால் சனம் சஜித்துக்கு வாக்கு போடவில்லை. சனம் இப்படித்தான் சஜித்துக்கு போடும் என சுமந்திரனுக்கும் ரணிலுக்கும் போடும் என ரவிராஜின் மனைவி போன்றோருக்கும் ஓரளவு புரிந்து இருந்திருக்கின்றது. இவர்களுக்கு போட்டதால் என்ன சாதகம்? ஒன்றுமில்லை. இனவாத அலை இல்லாத இந்த தேர்தலில், தமிழ் கட்சிகள் மூன்று முக்கிய வேட்பாளர்களுடன் புனர்வாழ்வு, வேலை வாய்ப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை, 13 + போன்ற விடயங்களை பேசி ஒரு பேரம் பேசலுக்கு முற்பட்டு ஆதரவு கேட்டு இருப்பின் அது முன்னேற்றகரமாக இருந்திருக்கும். ஆனால் எவரும் அப்படி செய்யவில்லை என்பதால் தமிழர்களின் வாக்குகள் வீணாக மீண்டும் போய்யுள்ளது.2 points
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
பலருக்கு ஜீரணிக்க கஷ்டம் என்றாலும் உண்மை இது தான். தமிழரசுக் கட்சி / சுமந்திரன் ஆகியோருக்கு தாம் பிரதிநிதிப்படுத்தும் மக்களின் தீர்மானம் பற்றி ஓரளவுக்கு ஏனும் தெளிவு இருந்திருக்கின்றது. இவர்கள் சொல்லித்தான் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் வடக்கு கிழக்கில் சஜித்துக்கு வாக்களித்து இருக்கின்றனர் என்பது தவறு, ஆனால் மக்கள் இப்படித்தான் வாக்களிப்பினர் என்ற புரிதல் இவர்களுக்கு இருந்திருக்கின்றது.2 points
-
சிந்தனைக்கு சில படங்கள்...
2 points2 points
- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இப்படி பொத்தாம் பொதுவாக சொல்லக்கூடாது கருமாந்திரம் இலங்கை தேர்தல் வாக்களிப்பு வரைபடத்தில் எப்படி பச்சைக்கலரில் தமிழீழம் வாங்கிக்கட்டியிருக்கிறார் என்று பார்த்து புல்லரித்து புளங்காகிதமடையவேண்டும். தமிழர்களின் வாக்குகள் சாதித்த இந்த சாதனை மகத்தானது. வரைபடத்தை சுருட்டி அப்படியே கருமாந்திரத்திற்கும் தீத்திவிட்டு தாங்களும் சாப்பிட்டு தமிழர்கள் கொண்டாடவேண்டும் வல்லிபுரம் விட்டா காதில நல்லா O...A விடுவார் தமிழரசு கூத்தமைப்பான்கள் உடைந்து கிடக்கிறார்களாம் மற்றையவர்கள் இந்தியகைக்கூலிகளாம். ஆனால் இந்தியகைக்கூலிகள் தான் சஜித்திற்கும், ரணிலுக்கு ஒட்டு போட சொன்னவர்களாம். அப்போ சஜித்துக்கு ஓட்டுப்போட சொன்ன கருமாந்திரம் அண்ட் Co மட்டும் எந்த நாட்டு கைக்கூலி மிஸ்டர் வல்லிபுரம் ...?.2 points- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ்ப் பொதுவேட்பாளர் தனது சொந்த இலாபத்திற்காகத்தான் போட்டியிருகிறார், இந்திய ஏஜெண்ட்டுகளான சுரேஷ் பிரேமச்சந்திரனும், விக்னேஸ்வரனும் பொதுவேட்பாளரின் பின்னால் நிற்கிறார்கள், ரணிலினதும், சஜித்தினதும் வெற்றிவாய்ப்பை பொதுவேட்பாளர் தடுத்துவிடுவார், இனவாதிகளை நாட்டை ஆள வரப்போகிறார்கள், நாங்கள் மீண்டும் இருண்ட யுகம் ஒன்றிற்குள் செல்லப்போகிறோம், கொலைகளும் கடத்தல்களும் நிகழப்போகின்றன, பாணிற்கும், பெற்றோலிற்கும், காஸிற்கும் வீதியில் வரிசைகளில் நிற்கப்போகின்றோம், ஆகவே தமிழ்ப் பொதுவேட்பாளரை எப்பாடுபட்டாவது தோற்கடித்துவிட வேண்டும் என்பதுதான் இங்கு யாழில் உள்ள பலருக்கும் தேவையாக இருந்தது. இதில் வேடிக்கை என்னெவென்றால், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசிப்பதாகக் காட்டிக்கொள்ளும் பலரும், தமிழ்த்தேசியத்தை முற்றாக அழித்துவிட்டு இலங்கையராக மாறவேண்டும் என்று தொடர்ச்சியாக் கூப்பாடு போட்டு வரும் விரல் விட்டு எண்ணக்கூடிய தமிழின விரோதிகளும் பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதில் ஒன்றுசேர்ந்து நிற்பதுதான். தமிழ்ப் பொதுவேட்பாளர் குறைந்தளவு வாக்குகளைப் பெற்றால் அது தேசியத்தின் தோல்வியாகிவிடும், தமிழ் மக்களே தேசியத்தை ஆதரிக்கவில்லை என்கிற செய்தி வந்துவிடும் என்று ஊழைக் கூப்பாடு போடும் பலர் தமிழ்த் தேசியத்திற்கெதிரான சிங்கள இனவாதிகளை ஆதரித்துக்கொண்டு தமிழ்ப்பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க வேண்டும் என்று நிலையெடுப்பது தாம் கூறுவதை தாமே நிராகரிப்பதாகிறது என்பதை உணரவில்லை. பொதுவேட்பாளர் தமிழ் மக்கள் முன்னால் பலத்த ஆதரவினைப் பெறவேண்டும் என்றால் நீங்களும் அல்லவா அவரை ஆதரிக்கவேண்டும்? அதை விடுத்து அவரை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிச் செயற்பட்டு விட்டு "ஐய்யோ, இவர் பெறப்போகும் குறைந்த வாக்குகளினால் தமிழ்த் தேசிய தோற்றதாகிறதே" என்று ஏன் பாசாங்கு செய்யவேண்டும்? இந்தியா பின்னால் நிற்கிறது என்று ஒரு புரளியைக் கிளப்பி விட்டார்கள். ஆனால் அது இல்லையென்று அவர்களுக்கே தெரிந்த பின்னர் வேறு சுருதியுடன் வலம் வரத் தொடங்கினார்கள். 2010 இல் இனக்கொலைத் தளபதியை வெல்லவைக்க வாக்களித்தபோது தமிழ்த் தேசியம் தோற்பதாக அவர்கள் நினைக்கவில்லை. 2015 இல் இனக்கொலையின் இறுதிநாட்களில் மகிந்த நாட்டைவிட்டு வெளியே சென்றபோது போரை நடத்திய மைத்திரியை ஜனாதிபதியாக்கி அழகுபார்த்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. பேர்பெற்ற போர்க்குற்றவாளியும், சிங்கள இனவாதியுமான ரணசிங்க பிரேமதாஸாவின் புத்திரனை 2019 இல் முழுமனதோடு ஆதரித்து வாக்களித்தபோது தமிழ்த் தேசிய தோற்றதாக நினைக்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தேசியம் பேசி வாக்குக் கேட்டதால்த்தான் தமிழ்த் தேசியம் தோற்றுப்போனது. தமிழன் இனிமேல் சிங்களவனுடன் இருக்க முடியாது. எமக்குச் சமஷ்ட்டியே வேண்டும் என்று கூறி தந்தை செல்வா உருவாக்கிய தமிழரசுக் கட்சியினர் இன்றைக்கு சிங்கள இனவாதிகளின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறி அவனுக்கு வாக்குக் கேட்டபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. தமது சொந்த நலன்களுக்காக, பதவிகளுக்காக, வாரிசுகளுக்காக சிங்கள இனவாதிகளுடன் பேரம் பேசி சமரசமும் சரணாகதியும் செய்தபோது தமிழ்த் தேசியம் தோற்கவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளர் தமிழ்த்தேசியம் பேசி, தமிழரின் அவலங்களைப் பேசி, அபிலாஷைகளை முன்வைத்தபோது தமிழ்த் தேசியம் தோற்றுப்போனதா? இப்போது தமிழரின் அரசியல் உரிமை பற்றிப் பேசவேண்டாமாம். அன்றாட பிரச்சினைகள் குறித்துப் பேசலாமாம். சரி, தமிழரின் அன்றாடப் பிரச்சினைகளை எந்தச் சிங்களவன், எப்போது தீர்த்துவைப்பான் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்டால் அவர்களிடம் பதில் இல்லை. அப்படியானால் அன்றாடப் பிரச்சினையும் தீரப்போவதில்லை, அரசியல்ப் பிரச்சினையும் பேசப்படப் போவதில்லை. தமிழருக்கு இருப்பதும் சிங்களவருக்கு இருப்பது போன்ற பொருளாதாரப் பிரச்சினை மட்டும் தான் என்றால் இன்றுவரை நடந்துவரும் திட்டமிட்ட இனக்கொலை யார்மேல் நடத்தப்படுகிறது? இதனை சிங்கள இனவாதிகளில் ஒருவன் வெல்லவேண்டும் என்று தவமிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகள் எப்போதாவது தாம் வணங்கும் சிங்கள தெய்வத்திடம் கேட்டார்களா? சிங்கள இனவாதி ஒருவன் வெல்லவேண்டும், அதற்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் எப்படியாவது தோற்கடிக்கப்பட வேண்டும் என்று எண்ணிச் செயற்பட்டும், பிரச்சாரப்படுத்தியும், பந்தி பந்தியாக எழுதியும் வந்த நீங்கள் அனைவரும் இன்று கண்ட பலன் என்ன? பொதுவேட்பாளரால் உங்களின் ஆசை நாயகன் தோற்கடிக்கப்படவில்லை. பொதுவேட்பாளரால் ஜே வி பி எனும் பூதம் வெற்றிபெறவில்லை. தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட, நடிக்கத் தெரியாத, உண்மையான தமிழர்களில் இரண்டு இலட்சத்து 22 ஆயிரம் பேர் அவரை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள். மீதமானோர் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்காது விட்டமைக்கு அவர்களை நோகமுடியாது, ஏனென்றால் ஒரு சிங்களவனை எப்படியாவது பதவியில் ஏற்றி அழகுபார்க்கவேண்டும் என்று துடித்து அவர்களை தவறாக வழிநடத்தியது நீங்கள் தான். இவ்வளவு நடந்தபின்னர் ஒற்றுமையாக இருந்தால் ரணிலை வரப்பண்ணியிருக்கலாம் என்று ஒரு தேசியவாதி இங்கேயே அங்கலாய்த்ததைப் பார்க்க முடிந்தது. ஏன், அந்த ஒற்றுமையினை தமிழராக, தமிழ்த் தேசியத்தை காட்ட செயற்பட்டிருக்கலாம் என்று சிந்திக்க அவருக்கு மனம் வரவில்லை? இன்னொருவர், பொதுவேட்பாளர் தான் வெல்லப்போவதில்லையே? பிறகேன் அவருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அதிபுத்திசாலியாகக் கேள்வி கேட்கிறார். பொதுவேட்பாளர் போட்டியிடுவதன் நோக்கமே தெரியாமல் அவரை எதிர்த்தால் மட்டும் போதும் என்று பலர் செயற்பட்டிருக்கிறார்கள். நீங்கள் சிரிப்பதும், எள்ளிநகையாடுவதும் வெறுமனே தமிழ்ப் பொதுவேட்பாளர் என்று நிறுத்தப்பட்ட அரியநேந்திரனை நோக்கியல்ல. உங்களை நோக்கியே நீங்கள் சிரித்துப் பரிகசித்துக்கொள்கிறீர்கள் என்பதே உண்மை. ஒரு இனத்தின் அவலங்களை, அபிலாஷைகளை தேர்தல் மேடையினைப் பாவித்து பேச வந்த ஒருவனை அந்த இனமே திட்டமிட்டுத் தோற்கடிக்க செயற்பட்டது என்பது ஈழத் தமிழினத்தைத் தவிர தவிர வேறு எந்த இனத்திலும் நடக்கப்போவதில்லை. உங்களைப்போன்ற ஒரு இனத்திற்காகவா தலைவர் தன்னையும் தனது குடும்பத்தையும், இன்னும் 40,000 போராளிகளையும் தியாகம் செய்து போரிட்டார் என்று நினைக்கும்போது, எமதினத்திற்கு விடுதலையும், தன்மானமும், கெளரவமும் ஒரு கேடா என்று மட்டும் தான் கேட்கத் தோன்றுகிறது.. நல்லது. உங்களின் சிங்கள ஆசை நாயகர்களில் ஒருவன் அரசுப் பதவியேற்றிருக்கிறான். வீதிகளில் பால்ச்சோறும், கவுங்கும் கொடுத்துக் கொண்டாடுங்கள். வடக்கும் கிழக்கும் இணையமுடியாது. தமிழருக்கு தனியே இனரீதியாகப் பிரச்சினைகள் இல்லையென்று தான் முன்னர் கூறியதையே இனிமேல் அரச அதிபராக அவன் கூறப்போகிறான். அவனை வழிபட்டுக்கொண்டு மீதமிருக்கும் வக்கிரங்களை பொதுவேட்பாளர் மீது கொட்டுங்கள், உங்களின் இச்சை தீரும் மட்டும். நன்றி.2 points- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ் பொதுவேட்பாளருக்காக உழைத்த எல்லோருக்கும் பாராட்டுக்கள். இத்தோடு காணாமல் போகாமல் இதை ஒரு அரசியல் கட்சியாக்கி எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு அடுத்த அடுத்த தேர்தல்களில் இளைஞர்களை களமிறக்க வேண்டும்.2 points- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா —————————————————————- சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது! லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள். சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த அரசியல் தலைவனை உருவாக்க வேண்டும் தம் தாய் நாடு வீறு கொண்டு முன்னேற வேண்டும் என்று இனவாதத்திற்கு அப்பால் போய் மிக நுண்ணரசியல் செய்து இன்று தமக்கான சிறந்த தலைவனை அரசியலை நிலைநிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒரே இலக்கு தம் நாட்டின் மீதான தேசத்தின் மீதான மக்கள் மீதான தீரா காதல். அத்தனை படித்தவர்கள், அரசியல் விற்பன்னர்கள், பொருளாதார நிபுணர்கள் , சாமானிய மக்கள் என புலம்பெயர் சிங்கள டயஸ்போராக்கள் ஒரே புள்ளியில் குவிந்து நின்று செயல்பட்டார்கள், அதன் விளைவுவாக வெற்றியை பெற்றார்கள். கம்னியூச கொள்கைகளில் பின் புதைந்துள்ள JVP யிலிருந்து இரு தலைவன் மேலெழுந்து விட கூடாது என பிராந்திய வல்லரசு தொடக்கம் அமெரிக்கா ஐரோப்பா என்பன இவ்வளவு காலமும் விழிப்பாக இலங்கையில் செயல்பட்டுகொண்டிருந்தன. அலகரய போராட்டத்தில் அனுரவின் எழுச்சியின் அபரிவிததன்மையை உணர்த அமெரிக்க தூதுவர் அப்போது அனுரவை அடிக்கடி சந்தித்துப் பேசியுமிருக்கிறார். ஏன் அனுரவுக்கான மக்கள் எழுச்சியினை முன்னரே தீர்மானித்திருந்த இந்தியா என்றுமில்லாதவாறு ஜெய்சங்கரை அனுப்பி பல மாதகங்களுக்கு முன் சந்திப்புக்களை செய்திருந்தது . ஆனாலும் அனுரவின் அசுர வளர்ச்சி இந்தியா அமெரிக்காவுக்கு கண்ணுள் தூசி விழுந்தால் போல் உருத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது! ஏனெனில் இப்போதுள்ள பேஉம் போட்டி நிலை பூகோள வல்லாதிக்க அரசியல் களத்தில் இலங்கை மீளவும் கம்னீசிய கொள்கை கொண்ட சீன வல்லாதிக்கம் பக்கம் சாய்ந்தால் அதுவும் கம்னீசிய கொள்கையுடனான ஆயுத போராட்ட வழி வந்த அரசு ஒன்று சீன கம்னீச பேரரசு பக்கம் சற்று சாய்ந்தால் கூட மற்றைய வல்லாதிக்கங்களுக்கு பேஉம் குடைசலாகவே இருக்கும்!அதற்கும் அவர்கள் மீண்டும் பெரும் விலையொன்றை கொடுக்க வேண்டி வரும். அனுரவின் வெற்றியை தடுக்க பல முனை முனைப்புக்களையும் முயற்சிகளையும் அந்த வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளவும் தவறவில்லை. உதாரணமாக நாட்டிலும் புலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் அனுர அலை அடிக்க தொடங்கியவுடன் அரசியல் ஆய்வு புள்ளிவிபரங்களின் படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரி வாக்குகள் அனுர பக்கம் சாயமல் பார்த்துக்கொள்ளவும் அந்த வல்லாதிக்கங்கள் நிகழ்சி நிரல்களை வரையவும் தவறவில்லை. அதற்காக பல தந்திரோபாய சுய வேட்பாளர் நிறுத்தல்கள் மற்றும் இதர நிகழ்வுளும் நிகழ்ந்தேறின!! இதெல்லாம் அனுர தரப்புக்குக்கும் தெரியாமலில்லை அதன் தாக்கம் தான் அவர் யாழ்பாணத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் " சிங்கள மக்கள் பெருவாரியாக தனக்கு ஆதரவை தரும் இச் சந்தர்பத்தில் தமிழர்களும் ஆதரவை நல்காது போனால் சரியாக இராது" என சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அக்கருத்தின் நீள , அகல, ஆழம் அறியாதோர் அதை அவரின் இனவாத கருத்தாடலாக சித்தரித்தனர். இவ்வளவு நிகழ்வுகள் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு மத்தியிலும் சிங்கள டயஸ்போராக்கள் அத்தனை வல்லாதிக்க இராஜதந்திரத்துக்கு மேலாக பல படி மேல் போய் ஒற்றுமையாக காய்நகர்த்தி இராஜதந்திர வெற்றியடைந்திருக்கிறார்கள். தமக்கான தூய தலைவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நம் புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன ? அவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக சாதித்ததும் என்ன? குறுகிய காலத்துக்குள் சிங்கள டயஸ்போராக்கள் கண்ட வெற்றியை பல தசாப்தகாலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கை எம்பசிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செயல்படும் தமிழ் டயஸ்போராக்களினால் இவ்வளவு காலமும் தமிழினத்துக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை என்ன? புலம்பெயர் தேசங்களில் போட்டிக்கு போட்டியாக பல அமைப்புக்களை தொடங்குவதும் தங்களுக்குள் புடுங்கு பட்டுகொள்வதும் ஈழத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இன்னும் பல படி போய் ஒரு கட்சியின் பல உறுப்பினர்களை பிரித்தாள நிதி அனுப்பி செயல்பட்டு கொண்டிருகிறார்கள். இந்த தமிழ் டயஸ்போராக்களினான் ஈழத்தில் ஏறபடுத்தப்பட அரசியல் முயற்சி என்ன? பொருளாதார முயற்சி என்ன ? என்பதை யாரும் பட்டியல்படுத்த முடியுமா? அதிலும் பல அமைப்புக்கள் திரைமறைவில் சிங்கள புலனாய்வாளர்களோடு இயங்கிகொண்டு பேருக்கு தமிழ் டயஸ்போரா என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நிறைவடைது ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் ஒரு இனத்துக்கான நீடித்த நிலைத்த அரசியலை கட்டமைக்க இயலவில்லை! ஒரு தலைவனை இனம் காண முடியவில்லை! இவர்களால் இதுவரை சாதித்தவை இன்றுமே இல்லை! ஈழ போராட்டத்தின் அவலங்களுக்கு மேல் நின்று காசு பறித்ததை தவிர... ஆனால் சிங்கள டயஸ்போராக்கள் சொற்ப காலத்தில் சிறு விதையாய் இருந்த ஒரு கட்சியை ஆலமரமாக்கியிருக்கிறார்கள்! JVP கூட்டத்தின் பேச்சை கேட்க வேண்டுமென்றால் கூட்டம் திரளும் ஆனால் வாக்கு திரளாது என்ற கருத்தியலை இரு வருடங்களுக்குள் ஒழித்துகட்டி 3% வாக்கு வங்கியை 60% மாக்கி அபரிவித அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். தன் தேசத்துக்காக தன் இன மக்களின் விடிவுக்காக, தன் இனத்துக்கான தூய அரசியலுக்காக அனைத்து சிங்கள டயஸ்போராக்களும் ஒரு நேர்கோட்டில் நின்று அத்தனை வல்லாதிக்க சக்திகளின் இராஜதந்திர நகர்வுகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள மக்களை விட அதிக சனத்தொகையினை புலம்பெயர் நாடுகளில் கொண்ட எம் தமிழ் டயஸ்போராக்கள் எம் இனத்துக்கான தலைவனை அல்லது சரியான தூய அரசியல் பொருளாதார கொள்கைகளை இதுவரை கட்டியமைக்காமை தமிழினத்துக்கான சாபக்கேடு!! ஈழ நிலத்திலும் சரி புலத்திலும் சரி தமிழன் தன் நிலைபாடுகளில் ஒரு சேர மாற்றம் உண்டாகாதவரை உணர்ச்சிவசப்பட்ட உப்பு சப்பில்லாத , எதற்குமே உதவாத எதிர்கால சந்ததிக்கு உகந்தல்லாத இந்த வீணாய்போண இழிநிலை அரசியல் தான் தொடர்சியாக மிஞ்சும்! அவர்கள் இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் தனி மனித அரசியலை முன்னெடுக்கின்றோம். நாம் சிங்கள மக்களிடம் படிக்க நிறையவே உண்டு! நன்றி மதுசுதன் 23.09.2024 WhatsApp பகிர்வு1 point- புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
24 SEP, 2024 | 03:00 PM தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, பிரதமர் நியமனத்தை தொடர்ந்து இடைக்கால அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றமும் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/1946961 point- புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அவரின் கொள்கையை வைத்து கோடிஸ்வரர் ஆகியோர் அதிகம் ....புத்தரை வைத்து பணக்காரன் ஆகியோர் போல....1 point- கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
இது தான் நிர்வாக வித்தியாசம்............👍. இதுவே பழைய ஆட்சியாளர்கள் என்றால்: தேர்தலுக்கு நிதி வேண்டும் என்பார் தேர்தல் ஆணையாளர் திறைசேரியை கேட்க வேண்டும் என்பார் நிதி அமைச்சர் மத்திய வங்கி ஆளுனருக்கும் இதில் ஒரு கருத்து இருக்கும் எப்படியும் இந்த மாதக் கடைசிக்குள் ஒரு முடிவு எடுத்து விடுவோம் என்று எல்லோரும் சேர்ந்து சொல்வார்கள் அதற்கிடையில் யாரோ ஒருவர் நீதிமன்றில் தேர்தல் திகதி சம்பந்தமாக வழக்கு ஒன்றை போடுவார் தேர்தல் திகதி சொல்லவே ஒரு மாதம் எடுத்திருக்கும்..............🤣.1 point- கலைக்கப்பட்டது இலங்கை நாடாளுமன்றம்
நான் முதலில் தமிழ் கட்சி என்று வாசித்து என்னை நானே நுள்ளி பார்த்தேன். அப்படி நடக்குமா என்ன? நடக்கத் தான் விட்டு விடுவமா????1 point- கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
டப்பென்று 'அநுரவிற்கு அருகதை கிடையாது...............' என்று சொல்லி விட்டீங்கள், அப்ப யாருக்குத்தான் இந்த அருகதை இருக்கின்றது.........🙃. தமிழ்மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று சொன்னவர்கள் தானே நீங்கள்.......... அப்புறம் அந்த தேர்தலில் வென்றவருக்கே கோரிக்கையும், வெருட்டலுமா..........🤣.1 point- கொஞ்சம் ரசிக்க
1 pointஅட ......வீதியை லைட் இருக்கும் பக்கம் போட்டிருக்கலாம் . ........இது கூடவா தெரியாது ........! 😴1 point- பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித்- 'ரணிலுடன இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பில்லை" எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்பிரதமர் வேட்பாளராக சஜித்பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கூட்டத்தில் இது குறித்து ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனக்கும் ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இடையில் எந்த ஒத்துழைப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளர் சஜித்- 'ரணிலுடன இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பில்லை" | Virakesari.lk1 point- புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
ஹரிணி அமரசூரிய: இலங்கையின் மூன்றாவது பெண் பிரதமரான இவரது பின்னணி என்ன? பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA கட்டுரை தகவல் எழுதியவர், அமந்திகா குரே பதவி, பிபிசி சிங்கள மொழிச் சேவை 16 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில் நடந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியானார். இதையடுத்து, அதுவரை பிரதமராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய இன்று (செவ்வாய், செப்டம்பர் 24) பிற்பகல் இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதற்குமுன் பிரதமர்களாக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்குப் பிறகு, அரசியல் குடும்பப் பின்னணி இல்லாமல் பிரதமரான ஹரிணி அமரசூரிய யார்? இளமைக்காலம் மற்றும் கல்வி 1970-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி கொழும்பில் பிறந்தார் ஹரிணி. அவருக்கு இரண்டு உடன்பிறந்தவர்கள் உள்ளனர். கொழும்பு பிஷப் கல்லூரியில் அடிப்படைக் கல்வியை முடித்த அவர் உயர் கல்விக்காக வெளிநாடு சென்றார். டெல்லி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலைப் பட்டம் முடித்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மெக்குவாரி பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு மானுடவியல் மற்றும் மேம்பாட்டுப் படிப்புகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2011-இல், எடின்பர்க் மற்றும் குயின் மார்கரெட் பல்கலைக்கழகங்களில் சமூக மானுடவியல், சர்வதேசச் சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளில் முனைவர் பட்டம் பெற்றார். பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA படக்குறிப்பு, ஹரிணி, லா & சொசைட்டி டிரஸ்டின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு அந்தப் பதவியை ராஜினாமா செய்தார் சமூகப் பணிகள் கடந்த 10 ஆண்டுகளால, ஹரிணி அமரசூரிய இலங்கை திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சமூக அறிவியல் பிரிவில் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றினார். பல்கலைக்கழக நிர்வாகத்திலும் ஈடுபட்ட அவர், 2016 முதல் பல்கலைக்கழக மானியக் குழுவின் பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவம் தொடர்பான குழுவில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சமூக நலம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, மற்றும் குழந்தைகள் நலன் ஆகிய துறைகளிலும் ஆர்வலராக இருந்துள்ளார். மேலும், அவர் இலங்கையில் உள்ள சமூக சுகாதார அமைப்பான Nest-இன் இயக்குநராகவும், தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இலங்கையில் பெண்கள் மற்றும் பாலினம் குறித்த ஆராய்ச்சி நிறுவனமான CENWOR-இல் பதவி வகித்துள்ளார். ஹரிணி, லா & சொசைட்டி டிரஸ்டின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA படக்குறிப்பு, ஹரிணி, 2011-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார் ஆசிரியர் சங்கங்களில் ஈடுபாடு ஹரிணி, 2012 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் திறந்தநிலைப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயலாளராகவும், 2014 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் உதவிச் செயலாளராகவும், 2016-இல் அச்சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர், 2011-ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% கல்விக்கு ஒதுக்கக் கோரி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நடத்திய போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அதுமட்டுமின்றி, சமீபகாலமாக இலவசக் கல்வி தொடர்பாகப் பல்வேறு தரப்பினர் தலைமையில் பல போராட்டங்களிலும் ஈடுபட்டார். அரசியலில் வாழ்க்கை ஹரிணி, இலங்கை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், தேசிய மக்கள் சக்தியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மேலும், 2020 பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் வெற்றிபெற்ற தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரானார். அன்று முதல் அந்தப் பதவியில் பணியாற்றி வருகிறார். அந்த நேரத்தில், அவர் 389 நாட்களில் 269 நாட்கள் பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார். பாராளுமன்றத்தில் அவர் வகித்த பதவிகள் பின்வருமாறு: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் மகளிர் மன்றம் இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, பாலினச் சமத்துவம் மற்றும் சமத்துவத்தை ஆராய்வதற்கும் அதன் பரிந்துரைகளை பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கும் பாராளுமன்ற சிறப்புக் குழு சர்வதேச உறவுகளுக்கான துறைசார் மேற்பார்வைக் குழு இலங்கையில் சிறார் போஷாக்குக் குறைபாடு அதிகரித்துள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக பாராளுமன்ற விசேஷ குழுவினால் மேற்கொள்ளப்படவுள்ள குறுகிய கால, நடுத்தர கால, மற்றும் நீண்டகால நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து, விரைவாக நடைமுறைப் படுத்தப்படுவதைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் குழந்தைகள், பெண்கள், மற்றும் பாலினம் மீதான துறைசார் கண்காணிப்புக் குழு விலங்குகள் நலம் தொடர்பான நாடாளுமன்றக் கணக்குக் குழு நெறிமுறைகள் மற்றும் சலுகைகளுக்கான குழு கல்விக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு ‘manthri.lk’ என்ற இணையதளம் வெளியிட்ட இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரவரிசையின்படி, அவர் 225 எம்.பி-க்களில் 65-வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 14 தலைப்புகளில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அவற்றில், அவர் பெரும்பாலும் கல்வி, உரிமைகள், பிரதிநிதித்துவம், சுகாதாரம், பொருளாதாரம், மற்றும் நிதி தொடர்பான தலைப்புகளில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். பட மூலாதாரம்,FACEBOOK/HARINI AMARASURIYA தேர்தல் பரப்புரைக்காக 21,500 கி.மீ பயணம் அநுர குமார திஸாநாயக்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரையின் போது முனைவர் ஹரிணி அமரசூரியவின் பங்கு தனித்து தெரிந்தது. தேர்தலுக்கு முன்பு அவரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள் ஹரிணி தன்னுடைய முகநூல் பக்கத்தில் தேர்தல் பணிகளுக்காக நாடு முழுவதும் 21500 கி.மீ பயணத்தை மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். "எங்கள் தேர்தல் பரப்புரையின் போது, நான் 21,500 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்தேன். நூற்றுக்கணக்கான கூட்டங்களில் பேசியிருப்பேன். ஆயிரக்கணக்கான மக்களை சந்தித்திருப்பேன். என்னுடைய வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான அதே நேரத்தில் அதிகம் சோர்வடைய வைத்த காலகட்டம் அது," என்று முகநூல் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அரசியல் பின்னணியை சாராத முதல் பிரதமர் உலகின் முதல் பெண் பிரதமர் இலங்கையில் தேர்வு செய்யப்பட்டவரே. இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கே கொல்லப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்கே பிரதமராக பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து அவரின் மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்கே குமாரதுங்கா 1994ம் ஆண்டு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பொறுப்பேற்றார். அதே ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வரலாறு காணாத வாக்குகள் பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். இந்த இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். ஏற்கனவே பிரதமர் பொறுப்பு வகித்து வந்த தங்களின் கணவர்கள், தந்தைகள் இறந்த பின்னரே அந்த பொறுப்பிற்கு வந்தனர். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் என்று தெற்காசியா முழுவதும் இது போன்ற நிகழ்வுகளை காண இயலும். இந்த நாடுகளில் உருவான பெண் தலைமைகள் அனைவரும் அரசியல் பின்னணியை கொண்ட குடும்பங்களில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால் ஹரிணியை பொறுத்தமட்டில் இவர் ஒருவர் தெற்காசியாவிலேயே எந்த ஒரு அரசியல் குடும்ப பின்னணி ஏதுமின்றி பிரதமர் ஆன முதல் பெண்ணாவார். https://www.bbc.com/tamil/articles/c62rg8q5v2po1 point- சிந்தனைக்கு சில படங்கள்...
1 pointநானும் வந்து ஒருவருடம் கட்டட திருத்த வேலைகள் செய்தேன். மதியம் இதே மாதிரித்தான் வரிசையில் இருந்து சாப்பிடுவோம். நம்மவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்து சாப்பிடுவதை பலரும் வியந்து பார்த்திருக்கிறார்கள்.1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அது சரி, சுமந்திரன் சொன்னதால் சஜித்திற்கும், கூட்டமைப்பின் மற்றவர்கள் சொன்னதால் ரணிலுக்கும் போட்ட வாக்குகளால் என்ன சாதகம் வந்தது என்று சொல்லிவிட்டு போறது!!1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இந்த 20 வீதம் என்ற கணக்கை எங்கிருந்து பெற்றீர்கள் விசுகு?அல்லது யாழ்ப்பாண மக்கள் மட்டும் தான் வடக்கு கிழக்கின் மொத்த மக்கள் தொகையா? வடக்கு கிழக்கின் வாக்களித்த மொத்த மக்களில் 9.84 வீதத்தினரின் வாக்குகளே அரியத்திற்கு கிடைத்துள்ளது. வடக்கு கிழக்கு மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு பட்டுக் குஞ்சம் சாத்தாமல், யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். அப்படி நீங்கள் புரிந்து கொள்ளாவிடின் கூட பிரச்சனை இல்லை, அதானால் மக்களுக்கு எந்த பாதகமும் ஏற்படப் போவதில்லை.1 point- கனவு பலிக்குமா?
1 pointஆசைப்படுவது தப்பில்லையே? ஒவ்வொரு ஜனாதிபதி வரும் போதும் இதே மாதிரி ஆசைகள் வந்து போகின்றன.1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இன்னும் ஆறு மாதத்துக்குள் தெரிந்து விடும்.1 point- நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
தலையங்கத்தை பார்த்ததும் யோசிக்க வைக்குது 😃1 point- "விலங்கிணை உடைத்தெறி" [இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்]
உண்மை, பழைய பல்லவியோடு தெற்கு மக்கள் இல்லையென்ற விழிப்புநிலை தோன்றுவதுபோன்ற சிறுகீற்றுத் தென்படும் வேளையில், வட-கிழக்குத் தனது விருப்பை ஒன்றிணைந்து தெரிவிக்காதுவிடினும் பிரிந்து நின்றாவது புலப்படுத்தியிருப்பதை ஒன்றுசேர்ந்து கரைசேர்க்க நீங்கள் சுட்டுவதுபோல் புதிய சிந்தனைகொண்டு எழுவார்களாயின் தமிழினம் துலங்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
1 point- நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
அவருக்கு தெரியும், தனக்கு எந்த கட்சியும் ஆதரவு கொடுக்காது, ஆனால் தொந்தரவு கொடுத்து விரட்டுவார்கள் என்பது. மக்கள் பலம் உண்டு, ஆதலால் நீதிமன்றத்தின்மூலமே காரியங்களை கையாளும்போது இவர்கள் நொறுங்க, நொறுக்க வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் அவரும் மாற வாய்ப்பிருக்கிறது பதவியை தக்க வைக்க. அல்லது உதறிவிட்டு வெளியேற வேண்டும். எல்லாம் தெரிந்தே கால் பதித்துள்ளார். ஊழல்வாதிகள் அடங்கியிருக்கிறார்கள், ஆடத் தொடங்குமுதல் அடக்கிவிட வேண்டும். அப்போதே சவாலை சமாளிக்க முடியும் அவரால்.1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
பழைய சிவப்பு கோவணம் பறக்கப்போகின்றது🤣 ...சிறிமாவின் காலத்து கோவணமா? கோத்தா காலத்து கோவணமா பறக்கப்போகின்றது ...பார்ப்போம் ...வரலாறு தானே வழிகாட்டி.....🤣1 point- நாட்டை விட்டு வெளியேறும் அரச பிரபுக்கள்?; பலத்த பாதுகாப்பு
ஓடி தப்ப வேண்டியவர்கள் ஓடி தப்புகின்றார்கள்.இவர்கள் மீண்டும் ஒரு காலத்தில் மா மேதைகளாக வரவேற்கப்படுவார்கள். 🤣 அது சரி நம்ம டக்ளஸ் அண்ணன்ரை சத்தத்தை காணேல்லை என்ன மாதிரி? 😎1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ் தேசியம் சில நாடுகளுக்கு பிடிக்காது பிடிக்க போவதுமில்லை அதற்காக தமிழ்தேசியவாதிகள் சும்மாவா இருக்க முடியும்...1 point- பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் களமிறங்கும் ரணில்
ரணில் நினைப்பது போல், சஜித் இவர்களுடன் இணைந்தால் பயனடையப் போவது ரணிலும் ஐ.தே.க வும் தான். எனவேநான் நினைக்கவில்லை, சஜித் இனி இவருடன் போய் இணைவார் என்று. தமிழ் கட்சிகள் இந்த பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர் கொள்ளப் போகின்றன என தெரியவில்லை. 13 +, மீள் குடியேற்றம், அபிவிருத்தி, அரசியல் கைதிகளின் விடுதலை, இராணுவ பிரசன்னத்தை குறைத்தல், வடக்கு கிழக்கில் வேலை வாய்ப்பு போன்றவற்றினை முன் வைத்து ஜேவிபி / சஜித் ஆகியோரின் கட்சிகளுடன் பேரம் பேசலை மேற்கொள்ள முன் வர வேண்டும். தேசிய கட்சிகளின் சார்பாக பாராளுமன்றத்தில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை இயன்றவரைக்கும் குறைக்க முயல வேண்டும்.1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
பொதுவேட்பாளர் தேவையற்ற ஆணி என்ற எவராவது எங்கே அந்த ஆணியைக்குத்துவது என்று கூறினார்களா?அல்லது புலம்பெயர்ஸ்ஸைக் கைகாட்டும் யாராவது போட்டியிட்ட சிங்கள முன்னணித் தலைகளோடு ஏதாவது ஒப்பந்தகள் செய்திருப்பின் அதை வெளிப்படுத்தி இன்னாரை ஆதரியுங்கள் என்று ஏன் கூறவில்லை. தமிரசுக்கட்சி அணிபிரிந்து நின்று கூவியதை இங்கு கவனத்திலெடுக்க வேண்டிய தேவையில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இங்கு அடிக்கடி மைத்திரி யை தமிழ் மக்கள் ஆதரித்தது பற்றி குறைப்படுகின்றவர்கள் உள்ளனர். மைத்திரியின் அரசுக்கு முன் இருந்த மகிந்த & CO வின் காட்டாட்சியில் கிரீஸ் பூதத்தில் இருந்து பல பயங்கரங்களையும் அச்சுறுத்தல்களையும் தாயக மக்களும் முன்னால் போராளிகளும் அனுபவித்து கொண்டு இருந்தனர் என்பதையும் அந்த காட்டாட்சியை அகற்ற தாயக மக்களால் தம்மால் இயலுமான ஒரு நடவடிக்கையாக மைத்திரியை ஆதரித்தார்கள் என்பதையும் ஏற்றுக் கொள்ள மாட்டினம். இதில் பலர் மஹிந்த ஆட்சியில் தாயகம் பக்கம் தலைவைத்தும் படுக்காமல், 'நல்லாட்சி காலத்திலும் ' அதன் பின் ரணில் காலத்திலும் ஊருக்கு முதன் முதலாக போனவர்களும் அடக்கம்.1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நொச்சி, நீண்ட கட்டுரைகள் எழுதுவதற்கோ, தேவையில்லாத வாதங்களுக்கு தலையைக் கொடுத்துவிட்டு பின்னால் என்னுடைய வேலைகளைச் செய்வதற்குக் கூட நேரமில்லாமல் அல்லல் படுவதற்கோ நான் இப்பொழுது தயாராக இல்லை. ஆனாலும் நீங்கள் தொடுத்த அம்பு ஒன்று என்னருகில் வீழ்ந்து இருக்கிறது.’கீறும்’ என்ற அம்பு அது. இன்று ஆயுதப் போராட்டமும் இல்லை. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. ஏன் விடுதலைப் புலிகள் என்று கூட எவரும் இல்லை.அந்த அமைப்பில் இருந்தவர்கள் அதுவும் வெளிநாடுகளில் தஞ்சம் தேடியவர்கள் தங்களால் முடிந்ததைச் செய்கிறார்கள். அது எதுவானாலும் நான் அதற்குள் போய் கிளறிக் கொண்டு இருக்க விரும்பவில்லை. தமிழர்களுக்கான தீர்வு கிடைத்தால் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நீண்ட பயணத்திலும் சரியான பாதை தெரியாமல் பரிதவிக்கும் நிலையிலேயேதான் நாங்கள் இன்றும் இருக்கிறோம். இதற்குள் அவரவர்கள் தங்கள் இருப்புக்காகவும் தேவைக்காகவும் போராட்டத்தையும் தியாகங்களையும் பயன் படுத்துவதால் ஒரு பலனும் தமிழர்களுக்கு வந்து விடாது என்ற நிலையில்தான் எதிர்க்கிறேன். இவ்வாறான எனது எதிர்ப்பு இன்று மட்டுமல்ல முன்பும் இருந்தது. நான் கீறும் படங்களை யேர்மனியில் புலிகள் என்று சொல்பவர்கள் பாவிப்பதில்லை. இது விடுதலைப் புலிகள் போராடும் காலத்தில் இருந்தே இருக்கிறது. காரணம் ‘ஏன்?’ என்ற கேள்வி எப்பொழுதும் என்னிடத்தில் இருப்பதால். அது அவர்களுக்குப் பிடிப்பதில்லை. பொங்கு தமிழில் நான் எழுதிய பத்தி ஒன்றை கிருபன் முன்னர் பதிந்திருந்தார். https://alpha.yarl.com/forums/topic/152431-தூசு-தட்டியே-காசு-பிழைத்தவர்-மூனா/ நேரமின்மையால் அப்பொழுது அதில் எழுந்த கேள்விகளுக்கு நான் பதில் எழுதவில்லை. பொது வேட்பாளர் விடயத்தில் பலர் யாழ் களத்தில் கருத்துக்கள் எழுதியிருந்தார்கள். அப்பொழுது விவாதித்திருக்கலாம். இப்பொழுது தேர்தல் முடிந்தபின் வந்து எழுதுவது செத்தவீட்டில் ஒப்பாரி வைப்பது போல் இருக்கிறது. உங்களுக்கு இருக்கும் ‘தமிழர்களுக்கான தீர்வு வேண்டும்’ என்ற எண்ணம் எனக்கும் இருக்கிறது. அதற்கான உங்கள் பாதை வேறு என் பாதை வேறு.1 point- யார்... இந்த, அநுர குமார திஸாநாயக்க?
"நாம் ஒரு நாள் இறந்தாலும், நாம் மகிழ்ச்சியாக இறக்கலாம், எங்கள் சொந்த மக்களுக்காக போராடினோம் என்ற நிம்மதியுடன்." என் அப்பா அரச ஊழியர்... அம்மாவால் இன்றும் எழுத முடியாது. தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த எங்களுக்கு உணவு கிடைக்காமல் தாய், தந்தை படும் துன்பத்தை நம் கண்களால் பார்த்தோம்... எங்கள் கிராமப்புற பள்ளியில் பல ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லை.விரைவாக, வந்த ஆசிரியர்கள் பலர் இடமாற்றம் பெற்று வேறு மாகாணங்களுக்கு சென்றனர். மிகச்சில ஆசிரியர்களே எங்களைத் தங்கள் குழந்தைகளாகக் கருதி எங்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.அவர்கள் இல்லாமல் நாம் இன்று இல்லை. பெற்றோரின் சொற்ப வருமானம் கல்விச் செயல்பாடுகளுக்குப் போதாததால், பள்ளி விடுமுறை நாட்களில் புகையிரதத்தில் மாம்பழம், டொபி, சிகரெட் விற்று, மகாவலி கிராமத்திற்கு வியாபார நிமித்தம் வந்த போது மகாவலிக்குட்பட்ட வீதிகளில் வடிகால் வெட்டி,அப்போது, இருபது ரூபாய் ஒரு வடிகால் வெட்ட. நானும், ஊர் நண்பர்களும் இருபது ரூபாய்க்கு ரோட்டில் வடிகால் வெட்டுவது வழக்கம். அந்த அளவுக்கு ஏழ்மை எங்கள் வாழ்வில் அழுத்தத்தை கொண்டு வந்தது. எனது நண்பர்கள் பலர் தங்கள் கல்வியை நாசப்படுத்தினர். கற்றுக்கொள்ள முடியாததால் அல்ல குடும்பத்தில் படிக்க போதிய பணம் இல்லாததால். வறுமையின் காரணமாக சிலர் குடிபோதையில் பழகி அகால மரணம் அடைந்தனர். அவர்கள் இறக்கும் வயது வரவில்லை. சிலரது மனைவிகள் வெளிநாடு சென்று அவர்களது குடும்பங்கள் அழிந்தன. இந்த வறுமை நமது சமூகத்தில் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. வறுமையை ஃபேஷன் ஆக்கி, மாளிகைகளில் வாழ்ந்து கொண்டு, உலகம் பார்க்க ரப்பர் செருப்புகளை அணிந்து கொள்பவர்கள் அல்ல நாம்.. நான் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறேன்.. தூரத்தில் உள்ள கிராமத்தில் பல ஏழைகள் தந்தை மற்றும் சகோதரர்கள் ஜனாதிபதியான, சிறந்த பள்ளிகளில் படித்த. கொழும்பை மையமாகக் கொண்ட, இச் சமூகத்தில் ஆடம்பரமான மாளிகைகளில் வளர்ந்த வேட்பாளர்கள் மத்தியில், தூரத்துக் கிராமத்தில் இருந்து வந்து இந்த நாட்டின் ஜனாதிபதி பதவிக்காக போராட வந்த ஒரு சிறிய மனிதனான நான், தோளோடு தோள் நிற்கிறேன். என்னுடன் எனது சொந்த வகுப்பில் வாழ்ந்த இந்த நாட்டின் ஏழை மக்கள் எனக்கு பலம் தந்து உதவினர். வறுமையில் வாடும் என் வர்க்கத்தில் உள்ள மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டிய மீள முடியாத பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதற்காக அரசியல் செய்கிறோம். ஒரு நாள் இறந்தாலும், நம் மக்களுக்காகப் போராடினோம் என்ற நிம்மதியுடன், மகிழ்ச்சியாக இறக்கலாம்... - அனுரகுமார திஸாநாயக்க - உண்மை உரைகல்1 point- "இலங்கையின் புதிய அதிபர் அநுர குமார திசாநாயக்க"
ஒன்று மட்டும் உண்மை 1971 இலோ அல்லது ரோகண விஜயவீர உயிருடன் இருக்கும் வரை இன துவேசம் அவர்களிடம் இருக்கவில்லை. ஆனால் அதன் பின் அது அவர்களுக்கிடையிலும் புகுந்துள்ளது என்பதுக்கு விமல் வீரவன்ச கட்டாயம் ஒரு உதாரணம். மேலும் சுனாமி காலத்தில் கட்சி நடந்த விதம் மற்றும் வடக்கு கிழக்கு பிரித்தது இன்னும் ஒரு உதாரணம்.1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அரியநேந்திரனின் தோல்வி தமிழ்தேசியத்தின் தோல்வியும் அல்ல பொதுக்கூட்டமைப்பு தமிழ்தேசியவாதிகளும் அல்ல.. இது தவறான கட்டுரை.. இலங்கையில் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சினை தீரும் வரை தமிழ்தேசியம் வாழும்.. தமிழ் நாட்டிலையே வாழும்போது தமிழ் ஈழத்தில் ஒரு போதும் வீழாது பிரச்சினைகள் தீரும்வரை.. இங்கு பிரச்சினை தங்கள் வயிறு வளர்க்க தமிழ்தேசியத்தை காட்டி பேய்க்காட்டுபவர்கள்தான்.. தமிழ்தேசியம் அல்ல.. உண்மையான தமிழ்தேசியவாதிகள் என்றும் சாதி மதம் கடந்து தமிழர்களும் தமிழ் மொழியும் வாழணும் பெருகணும் அழியக்கூடாது என்று நினைப்பார்கள்.. நானும் ஒரு தமிழையும் தமிழ்மக்களையும் என் மண்ணையும் என் தலைமுறையையும் நேசிக்கும் தமிழ்த்தேசியவாதிதான்..1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நான் தங்கள் கருத்தை பார்த்தவுடன் யோசித்தேன், சிறிலங்கா தேசியவாதிகள் வினா எழுப்புவர் என்று...1 point- தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
வித்துவான் எழுதியதில் இது தான் சும்மா நச் என்று இருக்கு கூத்தமைப்பு தோற்றுப்போகும் அரசியல் வியாதிகளை டமிலர் தலையில் கட்டுவதற்கு பெயர்போனது இப்படி டமிளர்கள் தோற்றுகொண்டே இருந்தால்தான் அவர்களது வண்டியை ஓட்டலாம். அம்பிகா ஆன்டி ஒரு சீட்டு எடுத்து பாராளுமன்றம் போவதற்கு முதல் டமில் தேசிய கூத்தமைப்பு மொத்த கூடாரமும் காலியாகிவிடும்போல. அம்பிகா அன்றியும் ப்லோட்டி இடியட்ஸ் என்று ஏசிவிட்டு அவுஸிற்கு நடையை கட்டவேண்டியதுதான்1 point- நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
அமரர் வீ.நடராஜா ஐயாவிற்கு அவர்களுக்கு யாழ் இணைய உறவுகள் சார்பாக கள உறவு ஒருவர் மலர்மாலை போட்டுள்ளார்.1 point - தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.