Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    87990
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    20012
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    3054
    Posts
  4. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    7
    Points
    15791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/26/24 in all areas

  1. தனி நபர்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் ஒரு அரசின், அரச இயந்திரத்தின் தன்மையை ஒரு போதும் மாற்றிவிட முடியாது. சந்திரிகா வர முதல், அவரை சமாதான தேவதை என்று போற்றினர். தனிப்பட்ட ரீதியில் அவர் இனவாதி அல்ல என்றனர். வன்செயல்களால் கொல்லப்பட்ட ஒருவரின் மனைவி என்பதால் அவர் தமிழர் பிரச்சனைகளை தீர்ப்பார் என்றனர். அவரும் அவ்வாறு தான் தன்னை வெளிக்காட்டி இருந்தார். ஆனால் இலங்கை அரசும், அரச இயந்திரமும் முற்றிலும் பெளத்த பேரினவாதமயப்படுத்தப்பட்ட ஒன்று. அதில் எந்த மாற்றமும் ஏற்படாமல், தனி நபர்களின் குணாதிசயங்களால் மாற்றங்கள் ஏற்பட மாட்டாது. அதனால் தான் இனவாதி அல்ல என்று அறியப்பட்ட சந்திரிக்கா ஈற்றில் போரில் கடும் உயிர்பலிகளை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியது மட்டுமன்றி, தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டு இருந்த குமார் பொன்னம்மபலத்தைக் கூட பாலபெட்டபெந்தியி மூலம் படுகொலை செய்தார். அனுர மட்டும் இதில் விதிவிலக்காக அமைவார் என நான் நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு தீர்வு என்று ஒரு துரும்பும் கிடைக்கப் போவதில்லை. அதே நேரம், தமிழ் மக்களிற்கு இன்று இருக்க கூடிய சில நெருக்கடிகள் மேலும் குறையும்.
  2. இல்லை, நுணா..! வரதராஜப் பெருமாள் தான் அங்கு படித்தவர்…!
  3. துட்டகைமுனு குறுகிப் படுத்த கதையில் இருந்தும், மகாவம்ச மனநிலையில் இருந்தும் பெரும்பான்மையான சிங்களவர்கள் விலகவில்லை. தொடர்ந்து ஆட்சியில் இருந்த மகிந்த குடும்பத்தினர் மீது, ரணில் ஜனாதிபதியாக இருக்கவும் மொட்டுக்கட்சிதான் முட்டுக்கொடுத்தது, உள்ள வெறுப்பாலும், சஜித் பிரேமதாஸவின் ஆளுமையற்ற தலைமையாலும் தேசிய மக்கள் சக்தியின் அநுரகுமாரவுக்கு சிங்களவர்கள் வாக்குகளை அள்ளிப்போட்டனர். ஆனால் பொதுத் தேர்தலில் பெரும்பான்மையை (113 ஆசனங்களை) தேசிய மக்கள் சக்தி அடைவது கூட சவாலான விடயம். எனவே சிங்களவர்கள் மாறிவிட்டார்கள் புளகாங்கிதம் அடைந்து மனப்பால் குடிக்காமல் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள சரியானவர்களை வரும் தேர்தலில் தெரிவுசெய்யவேண்டும். ஆனால் தேர்தலில் கிடைக்கக்கூடிய 10-15 ஆசனங்களுக்குப் போட்டியிடவே பழசுகள் 20-25 பேர் நந்திகளாக இருக்கின்றார்கள். எனவே, தமிழர்களுக்கு சில சலுகைகளுக்கு மேல் ஒன்றும் கிடைக்காது என்பது உண்மைதான்!
  4. தலைவரின் 2005 மாவீரர் நாள் உரையிலிருந்து.. சந்திரிகாவின் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஜே.வி.பி நிவாரணக் கட்டமைப்புக்குக் கடுமையான ஆட்சேபம் தெரிவித்து அரசிலிருந்து விலக்கிக்கொண்டது. ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற தீவிர இனவாதக் கட்சிகள் இந்த நிவாரண உடன்பாடு சிறீலங்கா அரசியலமைப்புக்கு விரோதமானதென உயர்நீதிமன்றத்தில் வழக்குகளையும் தாக்கல் செய்தன. சிங்கள இனவாதச் சக்திகளுக்குச் சார்பான முறையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சுனாமிக் கட்டமைப்பை முழுமையாக முடக்கிச் செயலிழக்கச் செய்தது. சுனாமிக் கட்டமைப்புக்குச் சாவுமணி அடிக்கப்பட்டதுடன் தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த இறுதி நம்பிக்கையையும் சிங்களப் பௌத்தப் பேரினவாதம் சாகடித்துவிட்டது அநுரகுமார சந்திரிக்கா அரசின் அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர். இந்த 19-20 வருடங்களில் அவர் எவ்வளவு தூரம் இனவாதத்தை விட்டார் என்று தெரியவில்லை.
  5. உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்தால் உன்னை அம்மணமானவன் என்றழையார் என்று என் அம்மா சொன்னது நினைவிலே வந்து போனது! என் சக்தி முழுவதையும் திரட்டி சுற்றுமுற்றும் தலையைத் தூக்கிப்பார்த்தேன் சற்றுக் கைக்கெட்டும் தூரத்தில் ஒற்றைச் சப்பாத்தொன்று புதையுண்டவாறு யாரோ ஒரு போராளியினுடையதாக இருக்க வேண்டும் மெல்ல நகர்ந்து சப்பாத்திலிருந்து நூலைப் பிரித்தெடுத்து என் இடுப்பிலே கட்டிக்கொண்டேன் இப்போது எனக்கொரு திருப்தி! தொலைவில் ஒற்றை வெடியோசைகள் வெடிப்புகள் எனக் கேட்டன... மெதுவாக ஊர்ந்து பற்றையுள் பதுங்கினேன் எதுவுமே தெரியவில்லை கண்விழித்ததோ ஒரு மருத்துவமனையில் நான் ஒரு அரச ஊழியன் ஆனாலும் நான் தமிழன் அல்லவா இடுப்பு நூலுக்கும் விசாரணை விளத்தங்கள் அலைக்கழிப்புகள் ஆனாலும் என்ன அரைநாண் கயிறை இப்போதுவரை அணிந்திருக்கிறேன்! அப்பா அம்மாவை முள்ளிவாய்கால் அள்ளிச் சென்றுவிட்டது உறவுகளில் ஏறக்குறையத் தொண்ணூறுவீதம் பேரையும் இழந்துவிட்டேன் நண்பர்கள் ஒரு சிலரோ வாடா வெளிநாடென்கிறார்கள் அரைநாண் கயிற்றையும் இழக்க முடியுமா அம்மா சொன்னதை மறக்க முடியுமா இழப்பதற்கு நான் தயாரில்லை எங்கள் மண்ணில் எங்கள் வளவிலே சிறு பயிர்களோடும் சிறு உயிர்களோடும் நகர்கிறது என்வாழ்வு பொருண்மியத் திரட்சி இல்லையென்றாலும் மனதிற்குள் மகிழ்வு துளிர்கிறது! என்னைப் பார்க்க வந்த வெளிநாட்டு உறவொன்று மரவள்ளிக் கிழங்கும் கட்டைச் சம்பலும் அற்புதமென்றான் அற்புதங்கள் நிகழ்துவதாய் பழைய நாற்றொன்று புதிதாய் மின்னி அனைவரையும் அழைத்துத் தலைமையேற்றுள்ளது ஆனாலும் என்ன அரைநாண் கயிற்றுக்கும் ஆபத்து வருமா(?) என்ற வினா என்னைத் தொடர்கிறது! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  6. ராஜகுமார் ரஜீவ்காந்த் சிங்கள மக்களுடன் இணைந்து அரசியல் செய்வதன் மூலமே தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்ற கொள்கையுடன் சிங்கள இளைஞர்களுடன் இணைந்து வேலை செய்பவர். சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கமும் இவருடன் இணைந்தே பணியாற்றுகின்றார்.
  7. ஒருக்கா சொல்லிப் பாருங்க அப்புறமா பாருங்க. நல்ல செய்தி என்றால் எங்களுக்கும் சொல்லுங்க. பறவாயில்லையே. ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பார்கள். நீங்க 3 வருடத்துக்கு இழுத்திருக்கிறீர்களே. பலே கில்லாடி தான்.
  8. அடுத்த மட்ச்சில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அடிக்க வாழ்த்துகள்!
  9. நீங்கள் முதலில் எங்கள் கமிஷனை வெட்டுங்கள், அது வந்தால் பிறகு, உங்களுக்கு பார் லைசென்ஸ் எடுத்துத்தரலாம்
  10. 🙃......... அங்கே நாட்டில் ஒரு நீண்ட வரிசையே நிற்குது...... ஒரு நண்பன் வாக்கு போட்டு விட்டு, ஒரு விரலை படமும் எடுத்து போட்டு விட்டு, சிஸ்டம் மாறவேண்டும் என்ற செய்தியும் போட்டிருந்தான் என்று முன்னர் இங்கு எழுதியிருந்தேன். அவன் இப்ப அங்கே ஒரு கோயில் கட்ட தயாராகி விட்ட மாதிரி தெரிகின்றது....... அநுரவிற்குத்தான்......படித்தவன், பதவியிலும் இருக்கின்றான்................ அவனுக்கு இப்ப எல்லாம் ஒரு நேர்கோட்டில் வருகிறது போல...😀. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி சார்பாக கிழக்கு மாவட்டம் ஒன்றில் நின்று படுதோல்வியடைந்தவர்களில் ஒருவனும் இதே வகுப்பு தான்........... இந்த தடவையும் கண்டிப்பாக தேர்தலில் நிற்பான்...... எனக்குத் தெரிந்த அளவில் அவன் செய்யும் ஒரே வேலை தேர்தலில் நிற்பது மட்டுமே.............😜. இப்படி இன்னும் சில உதாரணங்கள் உண்டு. இதில் எவரையும் அநுர கண்டுகொள்ளவில்லை என்றால், அநுர சரியான வழியில் போக முயற்சி செய்கின்றார் என்று சொல்லலாம்..........
  11. கடந்த 6 மாதமாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கும் விடயம் இது தான். நடைமுறைக்கு சாத்தியமற்ற, மக்களின் இன்றைய தேவைகளை உள்ளடக்காத, இளைய சமூகத்தின் மத்தியில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உள்வாங்காத அரசியலைத் தான் தமிழ் கட்சிகள், தமிழ் தேசிய அரசியல் என்று படம் காட்டி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதால், தமிழ் சமூகம் சிங்கள தேசியக் கட்சிகளின் பின்னால் போகும். வடக்கு கிழக்கில் தேசியக் கட்சிகள் அதிகமான வாக்குகளைப் பெறும். இந்த நடைமுறை சாத்தியமற்ற அரசியலைத் தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளும் தம் இருப்பை பேண ஆதரிக்கின்றன என்பதால் இவ் அமைப்புகளை தாயக மக்கள் முற்றாக நிராகரிப்பதுடன், அவமானப்படுத்தவும் இனி செய்வர். தக்கண பிழைக்கும்.
  12. "இனவாதிகள் இனி இலங்கையை ஆள முடியாது" என்று அனுரா பேசியதாக ஒரு youtube தலைப்பு பார்த்தேன். அவருடைய பின்புலமே ஒரு இனவாத பின்புலம் தான். அது இருக்கட்டும். இனவாதம் ஒன்று அவ்வளவு பொல்லாத நிலைப்பாடு இல்லை. அதை சரியான முறையில் கையாண்டால் அதுவும் நல்லது தான். அனுரா தெரிவுசெய்யப்பட்டதே ஒரு இனவாத தேர்தல் முறையில் தானே. 5௦% வாக்குகளை ஒருவர் பெறவில்லையென்றால் அவர் வென்றதாக அறிவிக்கமுடியாது. ஒரு தமிழருக்கு 5௦% வாக்குகள் கிடைப்பது இலங்கையில் சாத்தியமா? அப்படியே ஒரு தமிழர் 49% வாக்குகள் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளவோம். அடுத்தக்கட்ட விருப்பு வாக்குகள் சிங்களவர்கள் யாருக்கு போடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? தமிழருக்கா? எண்ணிக்கையளவில் பல மடங்கு அதிகமாக உள்ள சிங்களவர்களின் விருப்பு வாக்கு ஒரு சிங்களவருக்கு தான் விழும். இந்த முறை ஒரு இனவாதம் இல்லையா? அனுரா இதை புரியாதவர் ஒன்றும் இல்லை. இலங்கையின் இந்த ஆட்சி மாற்ற முறை தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் நடந்திருக்கிறது. அரபு புரட்சியையும் மறந்துவிடுவதற்கில்லை. ஊழல், பொருளாதார நெருக்கடி என்று பேசி முன்னர் இருந்த அரசை வீழ்த்தி ஒருவர் வருவார். பின்னர் அதே காரணத்தை கூறி அவரை வீழ்த்துவதற்கு இன்னொருவர் வருவார். இந்த நாடுகளில் IMF, அமெரிக்கா எதிர்ப்பு தலைதூக்கியிருக்கும். எனவே இப்படி நடைபெறும் ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. IMF ஒன்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. அது ஒரு அரசாங்கத்திற்கு தான் கொடுக்கிறது. எனவே ஏற்கனவே இருந்தவர்கள் வாங்கிய கடனில் இருந்து அனுரா தப்ப முடியாத வரை அவர் வெளித்தோற்றத்திற்கு IMFயை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யலாம். உள்ளே அவரும் IMF கைப்பாவையாக செயல்படத்தான் வேண்டும். எந்த அமெரிக்கா நிறுவனங்களிலும் அவர் கை வைக்க முடியாது. அனுரா அமெரிக்காவையும் எதிர்க்கிறார். IMFயையும் எதிர்க்கிறார். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களையும் எதிர்க்கிறார். இந்த மூன்றையும் எதிர்த்து அவர் நீண்ட நாட்கள் ஆட்சியில் நிலைப்பது சாத்தியமில்லை. அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, தமிழர்களுக்கு சிறிதளவேனும் நன்மை செய்ய தொடங்குகிறார் என்றால், இப்பொழுது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகளை சிங்கள மக்களே மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியில் அமரவைப்பார்கள். புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் வந்த நாடுகளில் இதுவும் நடந்து தான் இருக்கிறது. இலங்கையில் புரட்சியாளன், சிவப்பு புரட்சி வென்றது என்று புலம்பெயர் தமிழர்கள் சில்லறைகளை சிதறவிடுவதை கொஞ்சம் தள்ளி போடுவது நல்லது. தமிழர்களிற்கு இலங்கை அரசியலில் எப்பொழுதுமே "சங்கு" தான். எல்லோருக்குமே ஒரு மாற்றம் தேவைபட்டது. மற்றும்படி இதில் சிங்கள டயஸ்போராக்களின் புத்திசாலித்தன்மை என்று ஒன்றையும் நான் காணவில்லை.
  13. தேர்தல்களில் நின்றார்கள் வென்றார்கள் சரி. எப்படி கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டார்கள்? இது தான் பலரதும் கேள்வி. கட்சிக்காக எத்தனையோ தியாகம் செய்த பலரிருக்க எப்படி கூட்டணியால் களமிறக்கப்பட்டார்?
  14. இலங்கையின் புதிய பிரதமர் ஹரினி அமரசூரிய தமிழர்கள், நீதி மற்றும் இனவாதம் 24 செப்டம்பர் 2024 இலங்கையின் புதிய ஜனாதிபதி, தனது தேசிய மக்கள் சக்தி (NPP) கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஹரிணி அமரசூரியவை புதிய பிரதமராக நியமித்துள்ளார். இலங்கையின் நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படும் என்ற தகவல்களுக்கு மத்தியில் அனுர திஸாநாயக்க அமரசூரியவை நியமித்துள்ளார். ஈழத் தமிழர்கள், இலங்கையில் இனவாதம் மற்றும் 13 வது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரப் பகிர்வு பற்றி அமரசூரிய முன்னர் கூறிய கருத்துக்களை நாம் திரும்பிப் பார்க்கிறோம். கருப்பு ஜூலை கொழும்பில் தமிழ்த் துறைகளில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அழிக்கப்படுவதை நிறுத்திய சிங்களக் கலவரக்காரர்கள் கொண்டாடுகிறார்கள் 2020 ஆம் ஆண்டு பெண்கள் அரசியலுக்கு அளித்த நேர்காணலில் , அமரசூரிய 1983 கறுப்பு ஜூலை படுகொலையை நினைவு கூர்ந்தார் , அப்போது அரசாங்க ஆதரவு சிங்கள கும்பல் ஆயிரக்கணக்கான தமிழர்களைக் கொன்றது. அவளிடம் கேட்கப்பட்டது: இலங்கையில் மோதல்களுக்கு மத்தியில் எப்படி வளர்ந்து கொண்டிருந்தது? குறிப்பாக பெண்களுக்கு இது போன்ற கடினமான காலகட்டம் இருந்ததா? தமிழ் பெண்கள் மீது இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபெடரலிடம் பேசிய அமரசூரியவிடம் கேட்கப்பட்டது: இலங்கையில் நடந்த நீண்ட உள்நாட்டுப் போரில் பெண்களும் குழந்தைகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் என்பதைத் தீர்க்கமாக எழுதியும் பேசியும் இருக்கிறீர்கள். உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் அவர்களின் குரல்களை உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறைக்கு எவ்வாறு கொண்டு வருவீர்கள்? காணாமல் போனவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட வடக்கு-கிழக்கு முழுவதிலும் உள்ள தமிழர்கள் உள்நாட்டு உண்மையைத் தேடும் பொறிமுறையை மீண்டும் மீண்டும் நிராகரித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மூலம் சர்வதேச பொறுப்புக்கூறலை மீண்டும் மீண்டும் கோரியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தமிழ் குடும்பங்கள் இலங்கைக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். மற்றொரு 2020 நேர்காணலில், அமரசூரிய கூறினார், சிங்கள இனவாதம் பற்றி மே 2020 இல் தி வயர் இதழில் அமரசூரிய எழுதுகையில் , 13 வது திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு இந்த ஆண்டின் தொடக்கத்தில் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவது தொடர்பான NPP நிலைப்பாட்டை விளக்குமாறு கேட்டபோது, அமரசூரிய கூறினார் : அவள் மேலும் தெரிவித்தாள், அமரசூரியவின் உறுதிமொழி இருந்தபோதிலும், 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் நிறுவப்பட்ட 13 வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிராக அவரது கட்சியில் உள்ள மற்ற மூத்த அதிகாரிகள் வெளிப்படையாகப் பேசினர் . 1970களின் முற்பகுதியிலும் 1980களின் பிற்பகுதியிலும் ஜே.வி.பி அரசுக்கு எதிராக இரண்டு கிளர்ச்சிகளை நடத்தியது. இவற்றில் பிந்தையது முக்கியமாக இந்திய-இலங்கை ஒப்பந்தம் மற்றும் வடக்கு-கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முயன்ற 13வது திருத்தத்தின் பிரதிபலிப்பாகும். பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்படுமாயின் ஜே.வி.பி எதிர்ப்பதாக 2010 இல் திஸாநாயக்கவே கூறினார் . தொடர்புடைய கட்டுரைகள்: 22 செப்டம்பர் 2024 : அனுரகுமார திஸாநாயக்க இலங்கை அதிபராகப் பிரகடனம் செய்தார் 20 செப்டம்பர் 2024 : அனுரகுமார திஸாநாயக்க யார்? நிழழி இணைத்த இணைப்பை கூகிள் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  15. விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣. குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை. ரசோதரனைப் பிடிப்பதென்றால் முதலில் என்னைக் கவனிக்கணும்.
  16. // 2004-ஆம் ஆண்டு தொடக்கம் முதல் 2015-ஆம் ஆண்டு வரை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த பா. அரியநேத்திரன், 2004-ஆம் ஆண்டு தேர்தலில் விருப்பு வாக்குகள் அடிப்படையில் தேர்வாகவில்லை. விருப்பு வாக்கு அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக கிங்ஸிலி இராசநாயகம் தேர்வான போதிலும், அவர் பதவிப் பிரமாணம் செய்யாமலே ஒரு சில நாட்களில் பதவியை ராஜினாமா செய்தார். விடுதலைப்புலிகளின் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் ராஜினாமா செய்து கொண்டதாக அவ்வேளையில் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்குகள் அடிப்படையில் அடுத்த இடத்திருந்த பா. அரியநேத்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். கிங்ஸ்லி இராசநாயகம் பதவியை இராஜினாமா செய்த ஆறு மாதங்களுக்கு பிறகு, அக்டோபர் 19-ஆம் தேதியன்று மட்டக்களப்பு புறநகர் பகுதியிலுள்ள அவரது காணியை பார்வையிட சென்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு விடுதலைப்புலிகள் தான் பொறுப்பு என ஏற்கனவே அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2004-க்கு முற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்ததாக கூறப்படும் கிங்சிலி இராசநாயகம், தமிழர் புனர்வாழ்வு கழகத்திலும் பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.// இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றப்புலனாய்வு துறையினரால் விசாரணை - BBC News தமிழ்
  17. 1. கள யதார்த்தத்தின் படி இதில் வெற்றிபெற முடியாதென்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. தமிழ்ப்பொதுவேட்பாளர் இத்தேர்தலில் போட்டியிட்டது ஜனாதிபதியாகும் நோக்கத்தில் இல்லையென்று எத்தனை முறை கூறினாலும் சிலருக்குப் புரியப்போவதில்லை. சுத்து மாத்து மந்திரத்திற்கும் புரியவில்லை என்பது இப்போது புரிகிறது. ஆக, இவ்வளவு நாளும் இது தெரியாமல்த்தான் இந்த அறிவாளி செயற்பட்டு வந்திருக்கிறார். 2. அப்படியான சூழ்நிலையில் தேவையில்லாத இந்த விஷப்பரீட்சையை செய்து தோற்பதன் விளைவு என்ன? சிங்களவர்கள் தாமாக விரும்பித் தரும் தீர்வை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். சிங்களவர்களைக் கோபப்படுத்தினால் நாம் சாம்பலாகிவிடுவோம். ஆகவே அவர்களைக் கோபப்படுத்தும் எந்தச் செயலிலும் நாம் ஈடுபடலாகாது. இதுதான் சுத்து மாத்து மந்திரனும் அவரது ஆசான் சாவக்கிடந்த சம்பந்தனும் 2009 இலிருந்து இன்றுவரை செய்த, செய்துவருகின்ற சாணக்கிய, சமரச, சரணாகதி அரசியல். ஆகவே இப்படியான சிங்களத்தின் கைத்தடிகளுக்குத் தமிழரின் பிரச்சினை குறித்த எந்தச் செயற்பாடும், எந்த வெளிப்படுத்தலும் விசப்பரீட்சையாகத்தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. 3. தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷை இனியும் நிரூபிக்கப்பட வேண்டியதொன்றல்ல. அப்படியிருக்க இந்த நேரத்தில் இதைச் செய்வது எவரும் இதுவரை கேள்விக்குட்படுத்தாத எமது அரசியல் நிலைப்பாட்டை காட்டிக் கொடுப்பதாகவே இருக்கும். தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்னவென்று முதலில் சுத்து மாத்து மந்திரன் அறிவிக்க வேண்டும். ஏனென்றால் தமிழரின் அரசியல் அபிலாஷைகள் என்று தமிழர்கள் நம்புவதற்கும், சுத்து மாத்து எண்ணுவதற்கும் இடையில் பாரியளவு வேறுபாடு இருக்கும் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஆகவேதான், தான் நம்பிவரும் தமிழரின் அபிலாஷைகள் என்பதற்கு மாற்றாக வேறு எவரும் தமிழரின் அபிலாஷைகளைப் பெற்றிப் பேசினால் அவருக்குக் கெட்ட கோபம் வந்துவிடுகிறது. சுத்து மாத்து இன்று பேச மறுக்கின்ற, பேச விரும்பாத தமிழரின் அபிலாஷைகளை இன்னொருவர் பேசுமிடத்து, தான் சிங்களத்திடம் கூறிவருகின்ற தனது பாணியிலான தமிழரின் அபிலாஷைகள் குறித்து வெளியே, குறிப்பாக தமிழருக்குத் தெரிந்துவிடும் என்பதால்"ஏன் அதுகுறித்து இப்போது மீண்டும் பேசவேண்டும்?" என்று அப்பாவியாகக் கேட்கிறார். ஏன், இப்போது பேசினால் என்னவாம்? நீயும் பேசமாட்டாய், பேசுபவனையும் விடமாட்டாய் என்றால் வைக்கொல் பட்டடை நாய்தான் நினைவிற்கு வருகிறது. தமிழரின் அரசியல் அபிலாஷைகளை எப்போது பேசலாம், எப்போது பேசக்கூடாதென்று சட்டம் ஒன்று இருக்கிறதா, என்ன? 4. 2022 மக்கள் போராட்டத்தின் பின்னரான இன்றைய சூழ்நிலையில் சிங்கள பௌத்த இனவாதம் மிகவும் கீழ்நிலையை அடைந்துள்ளது. பிரதான வேட்பாளர் ஒருவர் கூட இனவாதத்தை தூண்டாத விதத்தில் நாம் அவர்களோடு பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த பேரம்பேசும் பலகாரத்தை 1950 களில் இருந்தே பார்த்து வருகிறோம். ஐம்பதுக்கு ஐம்பது, தமிழரசு, சமஷ்ட்டி, இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சி என்று பல பெயர்களில் பேரம் பேசி, ஒவ்வொரு பேரம் பேசலிற்குப் பின்னரும் தவறாது ஏமாற்றப்பட்டதே வரலாறு. எந்தப் பேரம் பேசலும் எமக்கான நீதியைத் தரப்போவதில்லை என்று கற்றுணர்ந்த பின்னர்தான் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டமே ஆரம்பிக்கப்பட்டது. ஆக, சுத்து மாத்து மந்திரன் மீண்டும் ஆரம்பத்திலிருந்து பேரம் பேசப்போகிறாராம். எப்பிடி? சிங்கள இனவாதிகளின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல்ப் பிரச்சார மேடையில் ஏறி "ஐயோ கும்பிட்டுக் கேட்கிறன், பொதுவேட்பாளரைத் தோற்கடிக்க சஜித்துக்கு வாக்குப் போடுங்கோ" என்று ஊழைக் கும்பிடு போட்டுப் பேரம் பேசினது போன்றா? அதுசரி சஜித்துடன் நடத்திய பேரம் என்னவென்றாவது சுத்து மாத்து தமிழ் மக்களுக்குச் சொல்வாரா? இதில் வேடிக்கை என்னவென்றால், சுத்து மாத்து ஆதரவளித்த சஜித்தும் வெல்லவில்லை, மனதளவில் விரும்பிய ரணிலும் வெல்லவில்லை. வென்றிருப்பது தெற்கின் இனவாதிகளின் கதாநாயகனான அநுர. அவரின் வெற்றியில் சிறு துரும்பைந்தன்னும் சுத்து மாத்து எடுத்துப் போடவில்லை. அப்படியிருக்க அவருடன் பேரம்பேசி தமிழரின் உரிமைகளைப் பெற்றுக்கொள்ளப்போகிறாராம். முதலில் சுத்து மாத்து விழுந்து விழுந்து அடிமைச் சேவகம் செய்த பொன்சேக்கா (2010), மைத்திரி(2015), ரணில் (2015), சஜித் (2019) என்ற எவருமே சுத்து மாத்துடன் செய்த எந்தப் பேரத்தையும் இன்றுவரை சட்டை செய்யவில்லை. நல்லிணக்க அரசாங்கத்தின் பங்காளிகள், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அரிதாரங்களைப் பூசிக்கொண்டு வலம் வந்தபோதும் கிடைத்தது கொழும்பு கறுவாத் தோட்டத்தில் வீடும் லான்ட்குரூஸர் வாகனமும் மட்டும்தான். இந்த இலட்சணத்தில் அனுரவைத் தோற்கடிக்க சஜித்துக்கு காவடி தூக்கிவிட்டு இனவாதமில்லாத‌ தெற்கின் தலைமைத்துவத்துடன் பேரம் பேசப்போகிறாராம். "நீ எனக்காக என்ன செய்தாய்?" என்று அநுர செருப்பால் அடிக்காதவரை சரி. 5. இரண்டு பிரதான வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற தருணத்தை விட, மூன்று பேர் வெற்றி வாய்ப்புள்ளவர்களாக காணப்படும் போது எமது பேரம்பேசும் சக்தி பன்மடங்காக அதிகரித்துள்ளது. அட, என்னவொரு அருமையான யோசனை? இது ஏன் முன்பிருந்த தமிழ்த் தலைவர்களுக்குத் தெரியவில்லை? ஆக அநுர வெல்லப்போவது சுத்துமாத்திற்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை தெரியவில்லையா? நம்பீட்டம். தெற்கு எங்கிலும் அநுர அலை. வெல்லப்போவது அநுரதான் என்பது கொழும்பில் வசித்துவந்த சாதாரண தமிழருக்கே நன்கு தெரிந்திருக்க சிங்கள அரசியலின் செல்லப்பிள்ளையான சுத்து மாத்திற்கு அது தெரியாமல்ப் போனதென்பது நம்பக்கூடியதா? இல்லை, அநுரதான் வெல்லப்போகிறார் என்று தெரிந்திருந்தும் சஜித்திற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களை சுத்து மாத்து கேட்டிருந்தால் எப்படிப் பேரம் பேசலாம் என்று எண்ணிவைத்திருப்பார். வெல்லப்போகும் வேட்பாளரை முதலில் அடையாளம் கண்டு, அவருடன் பேரம்பேசி, அதனைத் தெளிவாக தெற்கிலும், வடக்குக் கிழக்கிலும் (முன்னர் செய்ததுபோல தெற்கிற்கு தலையையும், வடக்குக் கிழக்கிற்கு வாலையும் காட்டியது போல அல்லாமல்) மக்களிடம் வெளிப்படையாகவே கூறி, உனது வெற்றிக்காக நாம் பிரச்சாரம் செய்கிறோம், ஆனால் அதற்குமுன் தமிழரின் அபிலாஷைகளை நீ ஏற்றுக்கொண்டு எமக்கான தீர்வைத் தருவதாக எழுத்துமூல வாக்குறுதி தரவேண்டும் என்று கேட்டிருக்கவேண்டுமா இல்லையா? இப்படி எதையும் செய்யாது கண்ணைமூடிக்கொண்டு , நிபந்தனையில்லாத ஆதரவு என்று மறுபடியும் தோற்கடிக்கப்பட்டிருக்கும் ஒரு சிங்கள வேட்பாளருக்கு மணியடித்துவிட்டு தமிழரின் ஆதரவின்றி வென்ற ஒருவனுடன் என்ன முடியை வைத்துக்கொண்டு பேரம் பேசலாம் என்று சுத்து மாத்து கூறுகிறார்? 6. இப்படியான அருமையான சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் எமது மக்கள் நலன் சார்ந்து எமக்கு எஞ்சியிருக்கின்ற ஒரே பலமான வாக்குரிமையை பேரம்பேசி பயன்படுத்துதல் வேண்டும். தமிழரின் வாக்குரிமையினை இதுவரை காலமும் எத்தனை முறை, அருமையான சந்தர்ப்பங்களில் பயன்படுத்தி தமிழருக்கு எத்தனை தீர்வுகளை சுத்து மாத்து பெற்றுக்கொடுத்திருக்கிறார் என்பதை முதலில் அவர் பட்டியலிடட்டும். அவர் பட்டியலிடும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், அப்படி அவர் பெற்றுக்கொடுத்த ஒவ்வொரு தீர்வையும் தமிழ் மக்கள் தீர ஆராய்ந்து இனிவரும் காலங்களிலும் சுத்து மாத்து தமது பொன்னான வாக்குகளை சிங்களத்தின் காலடியில் நிபந்தனையின்றிக் கொட்டுவதற்கு அனுமதி தருவார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் தமிழரின் வாக்குகளை வாரி, அள்ளிச் சுருட்டிக்கொண்டு கொத்தாக ஏதோவொரு சிங்கள இனவாதியின் காலில், "ஐயா, இந்தமுறை அவர்களை நன்றாக ஏமாற்றி எல்லா வாக்குகளையும் அள்ளிக்கொண்டு வந்திருக்கிறோம், ஏதாவது பார்த்துச் செய்யுங்கள். கொழும்பு 7 இல் வீடும் லான்ட்குரூசரும் போன தடவை தந்தீர்கள், அதற்கு எமது கோடி நன்றிகள் ஐயா, இந்தமுறை ரேஞ்ரோவர் ஸ்போர்ட்டும் சங்கிரிலா உல்லாச விடுதியில் ஒரு புளொக்கும் தாங்கோ" என்று இந்தமுறையும் சுத்து மாத்தும், "வடிவேலு பாணியில் அவனிட்டை வேண்டின காசுக்கு அவனுக்கு ஒரு குத்து, இவனுக்கு வேண்டின காசுக்கு இவனுக்கொரு குத்து - புகழ் மாவையும்" நிச்சயம் சொல்லியிருப்பார்கள். இன்னும் எத்தனை நாளுக்குத்தான் தமிழரின் வாக்குகளை விற்று வயிறு வளர்க்கப்போகிறீர்கள் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
  18. எனக்கும் முதல்வன் படம் என்று ஒரு படம் இருப்பது இப்போது தான் தெரியவந்தது. யாழ்பாணத்து தவகரன் என்பவரின் வீடியோ ஒன்றை பார் என்று நண்பர்கள் அனுப்பி இருந்தனர். அதில் இலங்கை தமிழ் யுரியுப்பர்கள் மாதிரி அவரும் இலங்கை புதிய ஜனாதிபதியை புகழ்ந்துதள்ளிவிட்டு பின்பு தமிழ்நாட்டு தமிழர்கள் தங்களுக்கும் Anra Kumaradissanayake மாதிரி தலைவர் வேண்டும் என்று தமது ஆசையை தனக்கு தெரிவிப்பதாகவும் முதல்வன் படம் மாதிரி எங்கள் ஜனாதிபதி அனுரா அதிரடியாக செய்கின்றார் என்றும் சொல்லியிருந்தார்.தமிழ்நாட்டில் ஹிந்தியுடன் இனி சிங்களமும் கற்பிக்க தொடங்கலாம்
  19. பாவம் சம்பந்தன் ஐயா...உலகத்தை விட்டு விலகினாலும் அவரை உசுப்பி விட்டுங்கொண்டே இருக்கிறீயல்😅
  20. தங்களுக்கு குடை பிடிக்க கூட ஒராளை வைத்திருக்கும் திருட்டு கழுதைகள் இவர்களா தமிழருக்கு தீர்வை பெற்று தரபோகிரார்கள் ?
  21. பழைய முறை சிறப்பாகவே இருந்தது , கேள்விகளும் குறைவு, காசும் குறைவு, விசாவும் உடனே வந்து விடும். இந்த புதிய முறையில் நான் சில மாதங்களுக்கு முன் எடுக்கவேண்டி வந்தது. இந்த website சரியாகவே இயங்கவில்லை, நிறைய கேள்விகள், 50 டாலர்கள் கட்டவேண்டி வந்தது. நான் நினைக்கிறேன் , இந்தியாவிடம் வாங்கிய கடன் காசுக்கு, இந்த நிறுவனத்துக்கு கொடுக்க அங்கிருந்து உத்தரவு வந்திருக்கும்
  22. உண்மையாக உளமார அனுரவின் கட்சி ஒரு இலங்கையின் சிறந்த கட்சியாக செயல்பட்டு சகல பிரச்சினைகளையும் தீர்த்து நாட்டினை முன்னேற்ற வேண்டும் என விரும்புகிறேன், ஆனால் ரோஸ்வெல்டின் கூற்றினை போல பேச்சின் வீரியத்தினை கண்ட மக்கள் செயலினை பார்க்கத்தானே போகிறார்கள் (எனது எதிர்மறைவான எண்ணத்திற்குக்காரணம் கடந்த கால இலங்கை வரலாறுதான்), இந்த விடயத்தில் நான் தவறாக இருக்கவே விரும்புகிறேன். ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை குறைகூறி தம்மை மிகைப்படுத்துவது வழமையான விடயம் ஆனால் செயற்பாடென வரும்போது அவையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான், இதில் அனுர விதிவிலக்கல்ல என நான் கருதுகிறேன் (எனது கருத்து தவறாக இருக்க விரும்புகிறேன்). என்னைப்பொறுத்தவரை இவர்தான் சிறுபான்மையினரை மற்றய கட்சிகளை விட மோசமாக நடத்தக்கூடும் என எதிர்பார்க்கிறேன், இடது சாரி கொள்கையினை இவர் தனது நலனுக்கு மட்டும் தேவையானவற்றை பயன்படுத்தும் ஒரு சந்தர்ப்பவாதியாக கருதுகிறேன், என்னைப்பொறுத்தவரை இவர்தான் ஆபத்தானவர்.
  23. அவர் மாறிக்கீறி, ஓமெண்டு தந்தாலும் நீங்கள் விடமாட்டியல் போல இருக்கு
  24. சஜித்திற்கு போட்ட நண்பர் இப்ப திசைகாட்டிக்கு போடப்போறாராம்! நானும் நல்லது தமிழர் சார்பாக புதிய இளைஞர்களுக்கு கட்சிகள் வாய்ப்பளித்தால் இளையோருக்கு போடுங்க, இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்காது பழைய ஆக்கள் வந்தால் உங்கள் விருப்பப்படியே போடுங்க என சொன்னேன். அண்ணை ஆரம்ப காலங்களில் அவருடைய செயற்பாடுகள் பிடிக்கவில்லை தான்! இப்ப தெளிஞ்சிட்டுது! அவரவர் அவரவர் பணியை செய்கிறார்கள், மக்கள் பிடித்தால் வாக்களிப்பார்கள் இல்லையெனில் புறக்கணிப்பார்கள். மிகச் சரியான கருத்து அண்ணை.
  25. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்… பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற மதுபான அனுமதி கொடுக்கப் பட்டதாம். அதனைத்தான் இப்போ ரத்து செய்திருக்கின்றார்கள். பழைய அனுமதியுடன் இயங்கிக் கொண்டிருந்த மதுபானக் கடைகளில் ஒரு மாற்றமும் இல்லை.
  26. இவ்வளவு விலையா, அண்ணை..........🤨. கொள்கையும் மண்ணும்............. நாலு சிவப்பு சட்டைகள் வாங்குகிறோம், கொழும்பில் போய் இறங்குகிறோம்....🤣.
  27. முந்தைய அரசின் வெறுப்புக்கு…. விசா வழங்குவதில் ஏற்பட்ட தாமதமும். அதனை இந்திய நிறுவனத்துக்கு கொடுத்ததையும் சிங்கள மக்கள் ரசிக்கவில்லை. ஓரிரு முறை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டது.
  28. கேள்வி உங்களுக்கு ஆனாது பதிலும் உங்களிடமிருந்து தான் வரவேண்டும் குறிப்பு,. .விசுகர். சொல்வதை நீங்கள் எற்றுக்கொள்வீர்களா.??
  29. இந்த அமைப்புகளைப் பற்றி நிலாந்தனும் எழுதியிருந்தார். வர்த்தக சமாசங்கள், இன்ன பிற என்று சில இருந்தன. இவற்றின் சார்பாக பொது வேட்பாளரை ஆதரிக்கும் முடிவெடுத்தவர்கள் "மக்கள் பிரதிநிதிகள்" என்று அடையாளப் படுத்தப் பட முடியாதவர்கள். உதாரணமாக "வவுனியா வர்த்தகர் சங்கம்" என்றால் "வர்த்தகர்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் - trade body, "வவுனியா மக்களின் நலன் பேணும்" ஒரு சங்கம் என்று சொல்லி அவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தரமுயர்த்த இயலாது. அவர்கள் வாடி வீட்டில் கூடிக் கதைத்து எடுத்த பொது வேட்பாளர் முடிவை "ஜனநாயகம்" என்று மெச்சும் நீங்கள், தமிழரசுக் கட்சியின் பா. உக்கள் கட்சியின் மத்திய குழுவில்எடுத்த 19/23 முடிவை "இருவரின் முடிவு" என்று நிராகரிக்கிறீர்கள்😂. உங்களிடம் ஏன் இந்த வேறுபாடென்று விளக்கம் கேட்க முயலவில்லை. ஆனால், இப்படியான முட்டாள் தனங்களைச் சுட்டிக் காட்ட வேண்டுமென்பதற்காக சொல்லியிருக்கிறேன்.
  30. எல்லாமே இப்ப பெரியபெரிய கைகளாக இருக்கே.
  31. மிகத் தவறான வஞ்சகமான கருத்து. தாயகத்தின் பல மக்கள் அமைப்புக்கள் சேர்ந்து பலரை சிபாரிசு செய்து அவர்களிடயே இருந்து ஜனநாயக ரீதியில் தேர்வுகளை நடாத்தி இறுதியில் இவரை தெரிவு செய்தார்கள இந்த ஜனநாயக பண்புகளை மெச்சுவதை விடுத்து மீண்டும் மீண்டும் துண்டுச் சட்டிக்குள்......????
  32. சயிச என்றால் ஆங்கிலத்தில் shit என்று சொல்வது மாதிரி நான் முந்தி scheiße என்று சொன்னனான் இப்ப shit என்று சொல்லுவன்.
  33. ஒரு இரவில்... வீதிக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவின் இன்றைய தோற்றம். ஸ்ரீதர் தியேட்டர் எப்ப காலியாகும்?
  34. அதில் வேடிக்கை என்ன என்றால் ஜேவிபி வெற்றி பெறுவதற்கு முன்பு வேறுவிதமாக சொன்ன தமிழர்களும் ஜேவிபியின் அரசசபை புலவர்களாக தற்போது மாறியது தான் 😂
  35. இதே போல ரஷ்யா தன்ரை பாதுகாப்பு கருதி உக்ரேன் மீது படையெடுத்தால் குத்துது குடையுது என்பவர்கள் இஸ்ரேல் என்றவுடன் வாய் மூடி மௌனம் காப்பதன் மர்மம் என்னவோ? முள்ளிவாய்க்கால் அழிவுகளுடன் ஒப்பிடவும் ஆட்களில்லை.
  36. தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் "பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!" எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்றையதினம்(20) திறந்து வைக்கப்பட்டது. நல்லூரிலுள்ள(nallur) தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் இன்று வெள்ளிக்கிழமை (20) மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் இந்த ஆவணக் காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. வரலாற்று ஆவணக் காட்சியகம் தியாக தீபம் திலீபனின் பிரதான தூபி முன்றலில் மலரஞ்சலி செலுத்தி நிகழ்வு ஆரம்பமாகியதுடன் பின் வரலாற்று ஆவணக் காட்சியகம் மாவீரர்களின் பெற்றோரால் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது. இதன்போது மாவீரர்களின் பெற்றோர், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். https://ibctamil.com/article/thiyaka-theepam-thileepan-nallur-1726848928
  37. விளம்பரம் கொஞ்சம் கூடிப் போயிட்டுதோ...........🤣. குமாரசாமி அண்ணை, வெளியில இருந்து போன இரண்டு பேர்களை அங்கே போன மாதமும், அதற்கு முதல் மாதமும் போட்டுத் தள்ளினவர்கள். காணிப் பிரச்சனை என்று தான் இப்ப கதை வருகுது.......... காணி போனால் போகட்டும், அண்ணை............
  38. நாங்கள் தெரிந்தாலும் சிறிலங்கா தேசிய நலனுக்காகவும்,சிறிலங்காவில் மலரப்போகும் சோசலிச அரசுக்காகவும் மாறிதான் சொல்லுவோம்..எழுமென்றால் பண்ணிப்பாருன்கோவன் ..
  39. இரண்டும் ஒன்றை ஒன்று வென்றதுகள். கள நிலைமை தெரியாமல்... ஏவல் பேய்களாக.. வேறு ஆட்களின் நிகழ்ச்சி நிரலுக்காக. இனத்தை விற்று காசு பார்க்கும் கோஸ்டிகள். பலாலி இராணுவ படைத்தளத்தில்... நடந்த விருது வழங்கும் நிகழ்வின் போது, பிக்குகள் அமரும் கதிரைக்கு வெள்ளைத்துணி போர்க்கப்படவில்லை என்பதற்காக... மறவன்புலவு சச்சி, தனது வேட்டியை அவிட்டு போர்க்கக் கொடுத்துவிட்டு, உள்ளாடையுடன் பல்லைக் காட்டிக் கொண்டிருக்குது, வெட்கம் கெட்டது.
  40. சுமந்திரனுக்காக சிலுவை சுமக்கும் ஜஸ்டின் வகையறாக்களுக்கு தெரிந்திருக்க கூடும்.🤣
  41. கொஞ்ச வாகனங்களைக் காணலை என்றார்களே? கழட்டி விற்றும் இருப்பார்கள்.
  42. இவரால் எந்த மாற்ற்த்தினையும் இலங்கையில் ஏற்படுத்த முடியாது, இதுவும் ஒரு இனவாத சிங்களத்தின் தம்மை தக்கவைப்பதற்கான பரீட்சார்த்த முயற்சி, கோட்டபாய அரசினை ஆட்சிக்கு கொண்ட வந்த போது அவர்களுக்கு இஸ்லாமியர்களால் அவர்களது இருப்பிற்கு பாதிப்பு இருப்பதாக எண்ணினார்கள், அவர்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு அதிகாரம் வழங்குவது தமக்கான இருப்பினை கேள்விக்குறியாக்கும் எனும் பிற்போக்குத்தனமான சிந்தனையின் அடிப்படையிலே இருந்தார்கள் இருக்கின்றார்கள். அவர்கள் ஆட்சிக்கொண்டு வந்த கோட்டபாய இலங்கையினை இன்னமும் ஒரு படி கீழிறக்கி விட்டுள்ளார். தற்போது இவர், இவருக்கு பொருளாதார, அரசியல், சமூக, வெளிவிவகாரம் என பல முனைகளில் பிரச்சினை உள்ளது, இவரும் ரணில் போல ஒரு ஆட்சியினையே வழங்க முடியும் அதிக பட்சமாக அதற்கு மேல் இவரால் எதுவும் செய்ய முடியாது குறிப்பாக ஊழலை ஒழிக்க முடியாது, நிர்வாக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பூகோள அரசியல் ரீதியாகவும் இலங்கை ஒரு இருண்ட கால கட்டத்திற்குள் நுழைந்துள்ளது, இந்த தீவிர இடது சாரி பிரச்சாரங்களை மேடை பேச்சோடு வைத்தால் ஓரளவிற்கு சிறிது காலம் தாக்கு பிடிக்கக்கூடும். இதுவும் ஒரு மண்குதிர்தான்.
  43. Editorial / 2024 செப்டெம்பர் 24 , பி.ப. 01:29 - 0 - 103 செ.தி.பெருமாள் எல்லோராலும் அதை செய்ய முடியாது. அதற்கென ஒரு மனது வேண்டும் என்பார்கள். அதை மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா செய்துகாட்டி ஏனைய சகல மாணவர் சமூகத்திற்கும் ஒரு முன்மாதிரியான மாணவியாக எடுத்துக்காட்டியுள்ளார். நெடுஞ்சாலையில் கிடந்த அரைப் பவுன் தங்க தாலி , 3,000 ரூபாய் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துள்ளார் மாணவி பாலகிருஷ்ணன் அபிநயா மஸ்கெலியா- சாமிமலை வீதியில் உள்ள அம்மன் ஆலய பகுதியில் உள்ள பிரதான வீதியில், செவ்வாய்க்கிழமை (24) காலை கிடந்த அரைப் பவுன் தங்க தாலி மற்றும் 3000 ரூபாய் பணம் ஆகியவை அந்த மாணவி கண்டெடுத்துள்ளார். அவற்றை அப்பகுதியில் கடமையில் இருந்த காவல் துறை உத்தியோகத்தர் ஜீ.விக்னேஸ்வரனிடம் ஒப்படைத்துவிட்டு, இது தொடர்பில் பாடசாலை அதிபர் என்.பரமேஸ்வரனிடம் அறிவித்துள்ளார். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஏ.எஸ். புஸ்பகுமாரவின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. நடத்திய விசாரணையின் போது, மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்ட ராணி பிரிவில் உள்ள ரெங்கன் புவனலோஜினி ( வயது 46) என்பவரே அந்த பொருட்களின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டார். அந்த பொருட்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார முன்னிலையில் உரிமையாளரிடம் ஒப்படைக்கபட்டது. மஸ்கெலியா ராணி பிரிவில் இருந்து கொழும்புக்கு முச்சக்கர வண்டியில் செவ்வாய்க்கிழமை (24) காலை 6 மணிக்கு பணிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த பொருட்கள் அடங்கிய பொதி தவறவிடப்பட்டுள்ளது. அவற்றை கண்டெடுத்து ஒப்படைத்த மாணவியை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர். பொருட்களுக்கான உரிமையாளரும் நன்றி தெரிவித்துள்ளார். Tamilmirror Online || மஸ்கெலியா மாணவி அபிநயாவின் மனிதநேயம்
  44. சுமந்திரன் சாணக்கியன் சொல்லி சஜித்திற்கு வாக்கு விழுந்திருக்காது. ரணிலுக்கு வாக்குகள் விழ பொருளாதாரம் 2027 இன் பின் என்ன ஆகப் போகிறது என்ற பயம் காரணம். சஜித் வாக்குகளின் காரணம், ரணிலின் தீர்வு தொடர்பான பின்னடிப்பினால் மக்களுக்கு ஏற்பட்ட சலிப்பும் கோபமும். இவை போல, பொது வேட்பாளருக்கு வாக்களிக்க மக்களுக்கு திண்மையான/தொட்டுணரக் கூடிய (tangible) காரணங்கள் எதுவும் இருக்கவில்லை. எனவே, பொது வேட்பாளர் தோற்றார். இந்த எளிய உண்மையை ஏற்றுக் கொள்ளாமல் பகுதியெண்ணைக் குறுக்கி "பொது வேட்பாளர் ஓரளவுக்கு வென்றார்" என்று காட்டும் முயற்சி நம்மை நாமே ஏமாற்றும் வேலை தான். இதையே, பொதுத் தேர்தல் வரை தொடர்ந்தால், இப்போது இருக்கும் பா.உ எண்ணிக்கையும் சுருங்கும்!
  45. சச்சின், கோலி சாதனைக்கு ஆபத்து; தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடரை வென்று ஆப்கானிஸ்தான் வரலாற்று சாதனை முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் அணி, 106 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க செய்து அபார வெற்றிபெற்றது. முதல்முறையாக ஒயிட்பால் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க செய்து வரலாற்றில் இடம்பிடித்தது ஆப்கானிஸ்தான். அதற்குபிறகு நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்தார். குர்பாஸின் சதத்தால் 311 ஓட்டங்களை குவித்தது ஆப்கானிஸ்தான் அணி. தொடர்ந்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 73 ஓட்டங்கள் வரை ஒருவிக்கெட்டை கூட இழக்காமல் அபாரமாக விளையாடியது. ஆனால் அதற்குபிறகு பந்துவீச வந்த மூத்த சுழற்பந்துவீச்சாளர் ரஷித்கான் விக்கெட் வேட்டை நடத்தினார். 73 ஓட்டங்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த தென்னாப்பிரிக்கா, அடுத்த 61 ஓட்டங்களுக்குள் மீதமிருக்கும் 9 விக்கெட்டையும் இழந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. அபாரமாக பந்துவீசிய ரஷித்கான் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 20 வயது சுழற்பந்துவீச்சாளரான நங்கெயாலியா கரோட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, ஒரு போட்டி மீதமிருக்கையில் தொடரை வென்று வரலாறு படைத்துள்ளது. ஆப்கானிஸ்தான் படைத்த 5 சாதனைகள்.. 1. விராட் கோலியின் சாதனை சமன்: 22 வயதான ரஹ்மனுல்லா குர்பாஸ் 7வது ஒருநாள் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் 23 வயதை எட்டுவதற்குள் அதிக ஒருநாள் சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியின் (7 சதங்கள்) சாதனையை சமன்செய்துள்ளார் குர்பாஸ். முதலிடத்தில் 8 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் நீடிக்கிறார், நாளை நடைபெறவிருக்கும் 3வது போட்டியில் சதமடிக்கும் பட்சத்தில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன்செய்வார் ரஹ்மனுல்லா குர்பாஸ். 2. அதிக ஒருநாள் சதங்கள்: 7வது ஒருநாள் சதத்தை அடித்திருக்கும் குர்பாஸ், அதிக சர்வதேச ஒருநாள் சதங்கள் அடித்த ஆப்கானிஸ்தான் வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார். 3. மிகப்பெரிய ஒருநாள் வெற்றி: 311 ரன்கள் குவித்த ஆப்கானிஸ்தான் அணி தென்னாப்ரிக்காவை 134 ரன்களில் ஆல்அவுட் செய்து 177 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவுசெய்தது. இது ஒருநாள் கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் பெற்ற அதிக ரன்கள் வித்தியாசத்திலான வெற்றியாக பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பு 154 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது ஆப்கானிஸ்தான். 4. பிறந்தநாளில் சிறந்த பவுலிங்: நேற்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய ரஷித் கான், பந்துவீச்சில் 9 ஓவருக்கு 19 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பான நாளை கொண்டிருந்தார். இதன்மூலம் பிறந்தநாளில் சிறந்த பவுலிங்கை பதிவுசெய்த வீரராக மாறி வரலாறு படைத்தார் ரஷித்கான். 17 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் பிலாண்டர் (4/12) வைத்திருந்த சாதனையை பின்னுக்குதள்ளியுள்ளார் ரஷித் கான். 5. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறை வெற்றி: 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றியிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல்முறையாக இதை செய்து சாதனை படைத்துள்ளது. https://thinakkural.lk/article/309749

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.