Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 11/02/24 in all areas
-
@நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Sabesh, @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi யாழ்கள இலங்கை பாராளுமன்ற போட்டியில் கலந்து கொள்ள இன்னும் 12 நாட்களே உள்ளன. உங்கள் கணிப்பையும் பதிந்து, உங்கள் அரசியல் அறிவை பரீட்சித்துப் பார்க்க அரிய சந்தர்ப்பம். அரசியலில்.. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கலாம். ஆனால்.... யாழ். களத்தில் ஒரு போட்டி என்று வரும் போது... எல்லோரும் கலந்து கொண்டு சிறப்பிப்பதே, யாழ்.களத்துக்கு நாம் செய்யும் கௌரவம். தாமதிக்காமல் இன்றே கலந்து கொள்ள, உங்களை அன்புடன் அழைக்கின்றோம். 🙂11 points
-
ஒவ்வொரு ஆட்சியிலும் பதவி பெற்று ஆசனத்தில் அமர்ந்ததும் பேட்டிகளின்போது ஒருபக்கமா சரிந்துகொண்டு நக்கல் சிரிப்பு சிரித்தபடி , ’'’பிரபாகரன் என்னை கொல்லபாத்தார் அவர் கனவிலும் நினைச்சிருக்கமாட்டார் நான் இருப்பேன் அவர் சாவார் எண்டு’’, ‘’புலிகளுக்கும் முள்ளி வாய்க்கால் நினைவுகளுக்கும் பல்கலை கழக வளாகத்தில் நினைவு சின்னம் அமைக்கப்பட கூடாது” புலிகளால் எமது இனம் அழிவைமட்டுமே சந்தித்தது என்கிறமாதிரி சொல்லுவீங்களே இந்த தேர்தல் நேரம் அதை எல்லாம் பேசி தமிழர்களிடம் வாக்கு கேக்கலாமே, எதுக்கு அதுபற்றி ஒண்டும் பேசாமல் ஒரு ஆறு ஆசனம் எண்டாலும் தாங்கோ எண்டு அழுகிறீர்கள்? பதவியிருக்கும்போது சிங்களவர்கள் கழுத்திலிருந்து தமிழர்களை பார்த்து கருடா சவுக்கியமா என்று கேட்பது , பதவி பறிபோனதும் மறுபடியும் தமிழர்களிட்டையே வந்து அழுவது. மூன்று தசாப்தங்களாக சிங்களவர்கள் தயவில் தமிழர்களை அதட்டி வாழ்ந்தீர்களே, அதே சிங்களவர்களின் கட்சி ஒன்றில் இணைந்து சிங்கள பகுதியொன்றில் நின்று வென்று காட்டுங்கள் அப்போ தெரியும் நீங்கள் காட்டிய சிங்கள எஜமானர்களின் விசுவாசத்துக்கு சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள மக்களும் ஒரு எலும்பு துண்டாவது உங்களுக்கு போடுவார்களா என்று. இந்த பொது தேர்தலில் தமிழர் பகுதியில் யார் வென்றாலும் பரவாயில்லை, காலம் காலமாக தமிழ்கட்சிகள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்கள் எம்மண்ணிலிருந்து அடியோடு களையப்பட்டு புதியவர்கள் மக்கள் பிரதிநிதிகளாகி நேர்மையுடன் இவர்கள் கண்முன்னாலேயே நடமாடினால் மகிழ்ச்சி.3 points
-
இந்தியாவில்... சட்டத்தை மதித்து ஒழுங்காக வீதிகளில் ஒடத் தெரியாதவர்கள், வானில் ஒழுங்காக பறப்பார்களா. ( மேலிருந்து வெத்திலை துப்பல், சிறுநீர் கழித்தல்... வேறு தொல்லை) 😂 எனக்கென்னவோ... வானத்தில் விபத்து ஏற்பட்டு.. பொத்து பொத்து என்று, வீட்டுக் கூரைகளிலோ, மக்களின் தலைகளிலோ இவை விழ சந்தர்ப்பங்களே அதிகம். 😎3 points
-
"கென்ட் டொலர் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் எம்மைத் துன்புறுத்தி வந்த சிங்களக் காடையர்களே, மாறாக அப்பாவிச் சிங்கள மக்கள் அல்ல" - தமிழ் மக்கள் ஜெயவர்த்தனவினதும் அவரது இனவாத அமைச்சரவையினதும் திட்டங்களுக்கான பதிலை 1984 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 30 ஆம் திகதி பிரபாகரன் வழங்கினார். நன்கு ஆயுதம் தரித்த, பயிற்றப்பட்ட 50 புலிகள் கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் நோக்கி இரு பேரூந்துகளில் பயணமாகினர். ஒரு அணியினர் கென்ட் பண்ணை மீது தாக்குதல் நடத்த, மற்றைய அணி டொலர் பண்ணை மீது தாக்குதலை நடத்தியது. கென்ட் பண்ணை மீதான தாக்குதலில் 29 சிங்களக் கைதிகள் கொல்லப்பட டொலர் பண்ணையில் மேலும் 33 கைதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 62 பேரில் மூவர் சிறைக்காவலர்கள். மறுநாளான மார்கழி 1 ஆம் திகதி லோரன்ஸ் தலைமையிலான புலிகளின் அணியொன்று கொக்கிளாயிலிருந்து வெளியே நாள் ஒன்றிற்கு இருமுறை பயணம் செய்யும் எல்ப் ரக வாகனம் ஒன்றைக் கடத்திக்கொண்டு கொக்கிளாயில் அமைக்கப்பட்டிருக்கும் சிங்களக் குடியேற்றம் நோக்கிப் பயணித்தனர். அப்போது மாலை 6:30 மணி. சில சிங்கள மீனவர்கள் ஆங்காங்கே வீதிகளில் நின்றபடி பேசிக்கொண்டிருந்தனர். சிலவிடங்களில் பெண்களும், சிறுவர்களும் வீதிகளில் காணப்பட்டனர். எல்பில் வந்த புலிகள், அங்கு நின்ற சிங்களக் குடியேற்றக்காரர்கள் மீது கண்மூடித்தனமான துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். மனுவேல் அந்தோணி, அவரது மனைவி மற்றும் அவரது மகன் ஆகியோரும் வீதியில் நின்ற கூட்டத்தில் அடங்குவர். சூடுபட்டு கீழே வீழ்ந்த அந்தோணி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். அவரது ஒன்பது வயது மகனுக்கும் சூட்டுக் காயம் ஏற்பட்டது. அவரைக் காவிக்கொண்டு அந்தோணியின் மனைவி படகுகள் நோக்கி ஓடினார். ஆனால் மகனைக் காப்பாற்ற முடியவில்லை. இத்தாக்குதலில் 14 சிங்களக் குடியேற்றக்காரர்கள் கொல்லப்பட்டதுடன் இன்னும் நால்வர் காயமடைந்தனர். பின்னர் அங்கிருந்து அகன்ற புலிகள் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த நாயாறு சிங்கள மீனவக் குடியேற்றம் நோக்கிச் சென்றனர். இரவு 8:30 மணியளவில் நாயாறு குடியேற்றத்தை புலிகளின் அணி சென்றடைந்தது. அங்கு காணப்பட்ட மக்கலின் கொஸ்ட்டா வின் பலசரக்குக் கடைக்குச் சென்ற புலிகள் துப்பாக்கித் தாக்குதலை ஆரம்பித்தனர். அருகிலிருக்கும் தமிழ்க் கிராமங்கள் மீதான தாக்குதலில் ஈடுபட்டு வந்த சிங்களக் காடையர்களின் தலைவியாக மக்கலின் விளங்கினார். எல்ப் வாகனத்தில் இருந்து பாய்ந்திறங்கிய புலிகள் கடைக்குள் கிர்ணேட்டுக்களை வீசி எறிந்தனர். மகலினை புலிகள் தேடினர், ஆனால் அவர் இருக்கவில்லை, தலைமறைவாகிப் போயிருந்தார். ஆகவே மக்கலினின் இரு புதல்விகளான மேரி திரேசா மற்றும் மேரி மார்கரெட் ஆகியோரைப் புலிகள் சுட்டனர். அங்கு நடைபெற்ற தாக்குதலில் நால்வர் கொல்லப்பட மேலும் இருவர் காயமடைந்தனர். கொக்கிளாயில் புலிகள் தாக்குதல் நடத்தியபோது பல சிங்களக் குடியேற்றக்காரர்கள் கடலை நோக்கி ஓடியதுடன், படகுகளுக்குள்ளும், அவற்றின் பின்னாலும் ஒளிந்துகொண்டனர். பின்னர் நடந்த விசாரணைகளின்போது நள்ளிரவு வரை சிங்களவர்கள் படகுகளுக்குப் பின்னால் ஒளிந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சிலர் ஆறு கிலோமீட்டர்கள் கால்நடையாக புல்மோட்டையூடாக திருகோணமலை மாவட்டத்திற்குள் பிரவேசித்து இராணுவத்தினருக்கு தாக்குதல் குறித்துத் தெரிவித்தனர். கொக்கிளாய் நோக்கி விரைந்துசென்ற இராணுவ அணிமீது புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. வீதியின் அருகிலும், மதகுகளின் கீழும் மறைத்துவைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் வெடிக்கவைக்கப்பட்டன. நாயாறு குடியேற்றக் கிராமத்தின்மீது தாக்குதல் நடந்தபோது அங்கிருந்த சிங்களக் குடியேற்றக்காரர்கள் அருகிலிருந்த காடுகளுக்குள் ஓடி ஒளிந்துகொண்டிருந்தனர்.மறுநாள் காலை இராணுவத்தினர் அவர்களைக் கண்டு மீட்கும்வரை அவர்கள் காடுகளுக்குள்ளேயே மறைந்திருந்தனர். இத்தாக்குதலில் காயப்பட்ட சிங்களவர்களை அநுராதபுர வைத்தியசாலைக்கும், குருநாகல் வைத்தியசாலைக்கும் இராணுவம் அழைத்துச் சென்றது. திருகோணமலைக்கும், முல்லைத்தீவிற்கும் இடையிலான கரையோரப் பகுதிகள் அரசால் முன்னெடுக்கப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களில் மிகவும் வடக்காக அமைந்திருப்பது கொக்கிளாய் சிங்கள மீனவக் குடியேற்றமாகும். இங்கு குடியேற்றப்பட்டிருக்கும் சிங்களவர்கள் நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புலிகளின் தாக்குதலில் முதன்முதலாக சிங்களவர்கள் கொல்லப்பட்ட இச்சம்பவம் குறித்து நான் விலாவாரியாக முன்னர் எழுதியிருந்தேன். அரசால் சேகரிக்கப்பட்ட இத்தாக்குதல் குறித்த ஆவணங்கள், மற்றும் இத்தாக்குதல் குறித்து அமைச்சரவையில் அங்கத்துவம் கொண்டிருந்த அமைச்சர் தொண்டைமானின் கருத்துக் குறித்தும் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். இரு காரணங்களுக்காக இச்சம்பவங்கள் நான் இங்கே மீளவும் பதிவிடுகிறேன். முதலாவது, இச்சம்பவங்கள் நடைபெற்ற காலக் கிரகத்தின் அடிப்படையில் பதிவது. இரண்டாவது இத்தாக்குதல் குறித்த தமிழ் மக்களின் மனவோட்டத்தினைப் பதிவது. தொண்டைமான் இத்தாக்குதல்களை வரவேற்றிருந்தார். அவ்வாறே எனக்குத் தெரிந்த ஒவ்வொரு தமிழரும் இதனை வரவேற்றிருந்தனர். கொல்லப்பட்டவர்களை அப்பாவிச் சிங்கள மக்கள் என்று அவர்கள் கருதவில்லை. தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி, தினம் தோறும் சித்திரவதை செய்துவந்த காடையர்களே கொல்லப்பட்டிருப்பதாக அவர்கள் கருதினர். அது மட்டுமல்லாமல் ஜெயவர்த்தன, லலித் அதுலத் முதலி, காமிணி திசாநாயக்க, ரவி ஜெயவர்த்தன ஆகிய இனவாதிகளின் கொடூரங்களுக்கான பதிலடியாகவும் இதனை அவர்கள் பார்த்தனர். கென்ட் மற்றும் டொலர் பண்ணைகள் மீதான தாக்குதல்களினூடாக, தம்மை தனியான தேச மக்களாக தமிழர்கள் உறுதியாக நம்பத் தலைப்பட்டனர். ஒரு இனமாக தாம் உயிர்தப்பி வாழ்வதென்றால், சிங்கள ஆக்கிரமிப்பிற்கெதிராகத் தாம் திரண்டெழுந்து போராட வேண்டுமென்று அவர்கள் நம்பத் தொடங்கினர். இதனை செய்வதற்குப் பிரபாகரனைத் தவிர அவர்களுக்கு வேறு எவரும் இருக்கவில்லை.3 points
-
நிச்சயமாக…. இலங்கையிலேயே நம்பகமான கருத்து கணிப்புகள் ஏதும் இல்லை எனும் போது எனது உரையாடல்கள் வெறும் அவதானிப்புகள் மட்டுமே. விஞ்ஞான முறைப்படியான கருத்து கணிப்புகள் கூட பிழைப்பதை நாம் மேனாடுகளிலேயே கூட காண்கிறோம். எனவே நான் சொல்வது ஒரு பார்வை மட்டுமே. அத்தோடு இதில் நீங்கள் சொல்வது போல நிச்சயம் confirmation bias உம் இருக்கும். சிங்கள மக்களின் இனவாதம் மீது உங்களை போலவே எனக்கும் அசராத நம்பிக்கை உண்டு. ஆனால் அண்மையில் ஒருவர் எனக்கு சொன்னது “நீங்கள் அறிந்த நாடு இல்லை இது இப்போ. அவர்களும் மாரி விட்டார்கள், நாங்களும் மாறி விட்டோம், இனி ஒரு பெரும் இன முறுகல் வர வாய்ப்பில்லை. நீங்கள் பழையதையே நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.” எனக்கு இது கொஞ்சம் மிகைப்பட்டதாகவே தோன்றியது. ஆனாலும் ஏனைய நாடுகளில் இப்படி பரம வைரிகளாக இருந்த இனங்கள் பின்னர் சேர்ந்து வாழ்ந்தமை நடந்துள்ளது என்பதையிம் மறுக்க முடியவில்லை. காலம் பதில் சொல்லும்.3 points
-
எனக்கு இன்னும் ஒர் 5 நாள் அவகாசம் தேவை 😅 எந்த கட்சி எப்ப பிளவு படும் என யாருக்கும் தெரியாது....அர்ச்சுனாவின் ஊசியும் உடைஞ்சு போய்யிட்டாம்..2 points
-
1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) பையன்... சுவியர்... ஏற்கனவே போட்டியில் கலந்து கொண்ட 9 பேரை மேலுள்ள பட்டியலில் இணைக்க வில்லை என்பதை தற்போதுதான்... புரிந்து கொண்டேன். 🙂2 points
-
நேற்று தமிழ்நாடு என்று கொண்டாடினார்;கள். சம நேரத்தில் கேரளஈதெலுங்கு கன்னட மக்களும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாடுர்கள். அண்ணா கேட் ட திராவிடநாடு தமிழ்நாடு ஆந்திராஈகேரளா மற்றும் கர்நாடகா நான்கையும் உள்ளடக்கியது. காலப்போக்கில் அண்ணா திராவிட நாட்டுக்கொள்கையைக் கைவிட்டார். ஆனால்கட்சிப்பெயரில் திராவிடத்தை சுமந்துகொண்டு இன்னும் திமுக இருக்கிறது. அதிலிருந்து பிரிந்த கட்சிகளும் அதே திரவிடத்தைச் சுமந்த நிற்கின்றன. இந்த நிலை தமிழ்நாட்டைத்தை; தவிர இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.மலையாளிகளோ >தெலுங்கர்களோ கன்னடர்களோ தங்களை ஒருபோதும் திராவிடர்கள் என்று அழைத்ததுமில்லை.அழைக்கப் போவதும் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்மதராசுப்பட்டினம் (மெட்ராஸ்)தென்னிந்தியாவில்மிகவும் மக்கியமான ஆட்சிமையமாக விளங்கியதால் அயல் மாநிலங்களில் இருந்தவர்கள் பலர் குடியேறினார்கள்.அவர்களின்வாரிசுகளே தெடர்ச்சியாக ஆட்சிக்கடடிழல் அமர்ந்து வருகிறார்கள். திமுகவுக்கு முதல் திராவிடம் என்ற சொல் தமிழ்நாட்டில் புழக்கத்தில் பெரிய அளவில் இலலை. அரசியல் கட்சிகளும்; திராவிடத்தின் பெயரில் இருக்கவில்லை.இப்பொழுது லரலாறு திரும்புகிறது. சீமனுக்குப் பிறகு அரசியல்கட்சிகளைத்துவங்கிய யாரும் திராவட என்ற சொல்லைக்கவனமாகத் தவர்த்தே வருகிறார்கள.இது தமிழத்தேசியத்தின் மீள் எழுச்சியையே காட்டுகிறது. சீமானினின் கட்சிக்கு எம்எல்ஏக்களோ எம்பிக்களோ இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனிகட்சி துவங்கும் யாரும் தமிழ்த்தேசியததை புறக்கணித்து கட்சியை நடத்த முடியாது என்பதையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. சீமான் பிலபலம் இல்லையென்பதால் அவர் வெற்றியைப் பெற முடியாதுபோனாலும் அவரின் கொள்கைைகள் வெற்றிபெறுவது பெரிய வெற்றியே. கொள்கை வெல்வதையே ஒரு நல்ல தலைவன் விரும்புவான்.மற்றைய மாநிலத்வர்கள் திராவிடத்தைச் சுமக்க விரும்பாதபோது தமிழர்கன் மட்டும் ஏன் திராவிடத்தை அந்த எக்ஸரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிய வேண்டும்.மற்றவர்களைச் சொல்லிவிட்டு விஸயைே எக்ஸ்ரா லக்கேஜைச் சுமந்து கொண்டு திரிவதும் கத்திப் பேசுவமதும் நியாயமா?2 points
-
இந்த விமான டாக்சிகளை பயன்பாட்டுக்கு விட முன்னர் அதன் ஓட்டுனர்களுக்கு நிலத்தில் ஓடும் சாதரண டாக்சிகள் போலவே நடுவானத்திலும் ஹாரன் (horn) அடிக்கவும் ப்ரேக் (brake) போடவும் கற்றுக்கொடுக்கவும். ஜன்னலை திறந்துவைத்தபடி விமானத்தை பறப்பது மேலும் பல டாக்சிகளுக்கே உரிதான இன்னோரன்ன வித்தைகளை செய்வது எப்படி என்றும் பழகிக்கொள்ளவும்..2 points
-
நீங்கள் தெரியாத்தனமா இந்த ஒப்பீட்டைச் செய்துவிட்டீர்கள். இனி இந்தத் திரியில் ஒருசில மாவீரர்களின் படம் இணைக்கப்பட்டு திரிக்குத் தொடர்பே இல்லாமல் மாவீரர்களுகு வீரவணக்கம் செலுத்தப்படும். அதுக்கு லைக்குகளும் அளிக்கப்பாடும்!😂2 points
-
1) அத்தோடு ஒருவர் 2 தடவைக்கு மேல் பாராளுமன்றம் செல்வதை தடைசெய்ய வேண்டும். 2) குறிப்பிட்ட ஒரு வயதுக்கு மேல் போட்டியில் இறங்குவதை தடை செய்ய வேண்டும். 3) தேர்தலில் போட்டியிடுபவர்கள் சொத்துப்பத்து விபரங்களை தெரிவிக்க வேண்டுமென்று சட்டம் இருந்தும் சமர்ப்பிக்காத விண்ணப்பங்களை நிராகரிக்கப்பட வேண்டும்.2 points
-
சரியாக சொன்னீர்கள். இவர்கள் அனைவரும்... மக்களை சிங்களக் கட்சிகளை நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கும் பணியைத்தான் செய்து கொண்டு இருக்கின்றார்கள். மேற்கு நாடுகளில் பெரும்பாலானோர் அரசியலுக்குள் நுழைய முன்... அரசியலை ஒரு பாடமாக எடுத்து படித்து இருப்பார்கள். எனக்குத் தெரிந்து சில தமிழ்ப் பிள்ளைகள், அரசியல் படித்து இங்குள்ள பிரபல கட்சிகளில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அதன் பலன் இன்னும் 5-10 வருடங்களில் தெரிய வரும். தாயகத்திலும் இதே வழியை பின்பற்ற... இளைய சமுதாயம் முன் வரவேண்டும் இதற்கு உரிய ஊக்கத்தை பல்கலைக்கழகங்கள் செய்ய முன் வர வேண்டும். சுத்துமாத்து "லோயர்" மார் எல்லாரும் எம்.பி. என்ற மிதப்பில் திரிவதை தடுத்து நிறுத்த வேண்டும்.2 points
-
சீமானின் அரசியலையும்,அவரது தனிப்பட்ட வாழ்க்கையையும் வாட்டி வதக்கி ருசி பார்ப்பவர்கள் திருமாவின் அரசியலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் தெரியாதது போல் இருப்பார்கள். அதிலும் திமுக....அப்பப்பா சொல்லி வேலையில்லை. திமுக அரசியலையும் தனி திருவிளையாடல்களையும் இஞ்சித்தும் வாய் திறக்கவே மாட்டார்கள்..🤣 விமர்சனம் என்பது சரி சமனாக இருக்க வேண்டும் என்பது என்கருத்து. நான் சமநிலைவாதியானவன் அல்ல. அதனால் எனக்கு பிடிக்காதவர்களை விமர்ச்சிக்கின்றேன்.2 points
-
இந்திய அணியினை நியுசிலாந்து போட்டு புரட்டி எடுப்பது என்பது அதுவும் இந்தியாவிலே என்பதால் இந்த தொடர் ஒரு ஆர்வ மிகுதியினை ஏற்படுத்தியுள்ளது அதனால் இதனை பின் தொடர்கிறேன், பெரும்பாலும் ஆட்ட முடிவில் நிலமையினை அவதானிப்பதுண்டு அல்லது யூரியூப்பில் சில வேளை கைலைற்ஸ் பார்பதுண்டு வேறு ஆட்டங்களை பின் தொடர்வதில்லை.2 points
-
ஓணாண்டியாருக்கு என்ன ஆயிற்று😂? ஒரு விடயம் மேற்கிலும் கிழக்கிலும் பரவலாக நடக்கிறது என்பதற்காக அந்த முறை தான் "வழமை - convention" என்று வாதிடுகிறீர்கள் போல தெரிகிறது. ஜனநாயகத்தில் தலைமைத்துவம் என்பது இருவழிப்பாதை - மக்கள் தலைவர்களை மாற்ற வேண்டும், தலைவர்களும் மக்களை சில சமயங்களில் வழிக்குக் கொண்டு வர வேண்டும். மக்கள் "பெருவாரியாகக் கைதட்டுகிறார்கள்/லைக் போட்டு வரவேற்கிறார்கள்" என்பதற்காக ஒரு தலைவர் மூன்றாம் பிறை கமலஹாசன் போல குரங்கு வித்தை காட்டுவது தலைமைத்துவம் கிடையாது! இதற்குப் பெயர் ஜனத்திரள்வாதம் - populism. ஹிற்லர் போன்ற கொடிய மனிதர்கள் கூட கைக்கொண்ட நச்சுத் தனமான உத்தி. ஜனத்திரள்வாதம் இல்லாமல், மக்கள் முட்டாள் தனமாக நடந்து கொள்ளாமல் தலைவர்கள் இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் கல்வியறிவு, உள்ளக நேர்மை, சரி பிழை எதுவென்று உணரக் கூடிய அறத்திசை காட்டி என்பன தலைவர்களிடம் இருக்க வேண்டும். இந்த அளவு கோல்களை வைத்துப் பார்க்கும் போது தமிழக மக்கள் தங்கள் அனேகமான பிரதிநிதிகளை இது வரை சரியாகத் தான் தேர்ந்திருக்கிறார்கள். ஜனத்திரள்வாதம் மூலம் வாக்குத் திரட்டும் சீமான் போன்றவர்ளுக்கான வாக்குகள் தான் நீங்கள் குறிப்பிடும் "சிந்தனையில்லாத" தமிழக வாக்காளர்களிடமிருந்து வருகின்றது என நான் நினைக்கிறேன். சரியா நான் சொல்வது?2 points
-
உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களைபற்றி புரியவில்லை.. சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் உங்களைப்போல் ஜெண்டில்மானாக சிந்திப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்.. ஆனால் அதுதான் தப்பு.. அப்படி அல்ல.. தமிழ் நாட்டு பெரும்பான்மை சமூகம் அறிவு மட்டம் வேறு.. அதனால்தான் திமுக அதிமுக ஜெயிக்க முடிகிறது.. விஜய்க்கு கூட்டம் சேர்கிறது.. சீமானுக்கு விசில் பறக்கிறது.. அய்யா நல்லகண்ணு போன்ற அரசியல்வாதிகளுக்கு ஆளே இருப்பதில்லை ஓட் போட.. அப்போ அரசியல்வாதிகளும் பெரும்பான்மை மக்களின் விரும்பங்களுக்குதான் பேசவும் செயற்படவும் முடியும்.. அம்மணமாய் திரிபவர்கள் ஊரில் கோவனத்துடன்போகிறவர்கள் பைத்தியக்காரர்களாம்.. வளர்ச்சி அடைந்த நாடுகளிலேயே இப்போ வலதுசாரிகள்தான் முன்னுக்கு வரும்போது பஞ்சத்தில் அடிபட்ட தமிழ்நாட்டில் நீங்கள் எதிர்பார்க்கும் லெவலில் அரசியல் நடக்க ஜந்து நூற்றாண்டானாலும் சாத்தியமோ தெரியவில்லை.. உங்கள் அமெரிக்காவிலேயே டிரெம்புக்கு அவ்வளவு சப்போர்ட்டு.. தேர்தல் பெரும்பானமை மக்கள் சொல்வதுதான் முடிவு.. தகரத்தில் தட்டி கொரோனோவை விரட்டு என்று பெரும்பான்மை மக்கள் ஓட்டு போட்டால் அதுதான் சட்டம்.. அதைத்தான் அரசியல்வாதிகள் பின்பற்றனும்.. பாயாசம் பாசிசம்னு பேசினால்தான் ஓட்டு போடுவேன் என்று பெரும்பான்மை மக்கள் நின்றால் அதைத்தான் அரசியல்வாதியும் ஓட்டு வாங்க செய்வான்.. அரசியல்வாதி என்ன நாட்டை திருத்தவா அரசியலுக்கு வருகிறான்..? ஓட்டு வாங்கி அதிகாரம் பெறத்தான் வருகிறான்.. ஆக அரசியல்வாதி மாற மக்கள் மாறனும்.. மக்கள் மாறாவிட்டால் பேசாமல் அந்த நாட்டில் வசிக்கும் அறிவார்ந்தவர்கள் வெளிக்கிட்டு நல்ல ஒரு நாட்டுக்கு போவது அவர்கள் பிள்ளைகுட்டிகளுக்கு நல்லது.. இல்லாட்டி பைத்தியம் பிடித்துவிடும் சிந்திக்ககூடியவர்களுக்கு..2 points
-
எனது பயணகட்டுரையில் யாழில் ஜேவிபிக்கு பெருகும் ஆதரவு இட்டு எழுதி இருந்தேன். அதை பலர் நம்பாமலும் இன்னும் சிலர் ஜீரணிக்க முடியாமலும் கருத்து கூறினர் யாழ் களத்திலும், வெளியே புலம்பெயர் மக்களிடம் பேசிய போதும். அதன் பின் இரு தடவை போய் வந்தேன். ஆதரவு கூடியே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின் இன்னும் கூடி உள்ளது. எமது மக்களில் கணிசமானோர், குறிப்பாக இளையோர் பின் வருமாறு சிந்திக்கிறனர். NPP ஏனையோர் போல இல்லை. இவர்கள் மனப்பூர்வமாக இனவாதமற்ற, ஒரே இலங்கையர் என்ற அடிப்படையில் செயல்படுகிறார்கள். 48 இல் இருந்து தனித்துவத்தை காக்க போராடி நாம் அடைந்தது எதுவும் இல்லை. டக்லஸ் அங்கயன் வழி ஒத்தூதும் அரசியலும் வேண்டாம், மூன்று கட்சிகள் காட்டும் தேசியமும் வேண்டாம். புதிய வழியாக NPP யில் பங்காளர் ஆவோம். பெரும்பான்மை அல்ல, யாழ் மாவட்டத்தில் இப்போதும் தமிழ் தேசிய கொள்கைக்கே ஆதரவு அதிகம், ஆனால் யாழில் கணிசமனா பலர் இப்படி நினைப்பதாக எனக்குப்படுகிறது. மட்டகளப்பில் நிலமை அவ்வளவு மாறி இருப்பதாக படவில்லை. கொழும்பு வாழ் வடகிழக்கு தமிழர் கிட்டதட்ட பெரும்பான்மை NPP யுடன் என்றே நினைக்கிறேன். காலம் மாறுகிறது - அதற்கேற்ப யூடியூப்பர்ஸ்சும் மாறுகிறார்கள். விற்கும் பொருளைத்தான் அவர்கள் விற்பனை செய்வார்கள்.2 points
-
சிறீ லங்காவைவிட்டு யேர்மனிக்கு எங்களை ஏன் கூட்டிவந்தீர்கள்? என்னால் பதில்கூற முடியவில்லை, பதில்கூறிப் பிள்ளையின் மனதில் இனத்துவேசத்தையும், என் இயலாமையையும் தெரிவித்து அவர் மனதில் வன்மத்தையும், கவலையையும் வளர்த்துவிட விரும்பவில்லை. உழுகிற மாடானால் உள்ளூரில் விலைப்டாதா! என்ற பொன்மொழியும் என்மனதைக் குடைகிறது. என் மதிப்புக்குரிய யாழ்கள உறவுகளே!! அவருக்கு நான் என்ன பதில் கூறலாம்?????1 point
-
என்ன ஊசி உடைஞ்சு போஞ்சாம்....இந்த படிச்ச இளசுகள் ஒரு மாதம் தாக்கு பிடிக்கவில்லை ....இளசுகளை ,படிச்சவையளை கொண்டு வாங்கோ என குரல் வந்திச்சு ...ஊழல் எண்டு சொன்ன அர்ச்சுனாவுக்கு நிரந்தரமான கொளகை இல்லை போல...நண்பன்,துரோகி என இப்பவே தொடங்கிட்டாங்கள்1 point
-
தமிழர்கள் திராவிடர்கள் என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும், தமிழ் தேசியத்திற்கும் திராவிடத்திற்கும் இடையில் சில சிக்கலான வேறுபாடுகளும் இருக்கின்றன. இன்றைய திராவிடம் என்பது மரபு என்றில்லாமல் ஒரு கருத்தியல் ஆகவே இருக்கின்றது. ஆரியத்திற்கு எதிரான ஒரு கருத்தியலே இன்றைய திராவிடம். இந்தக் கருத்தியலை மரபு வழியாக திராவிடர் என்று கருதப்படும் ஏனையோர், தமிழர்கள் தவிர, கவனத்தில் கொள்வதில்லை. தெலுங்கு மக்களோ, கன்னட மக்களோ அல்லது கேரள மக்களோ இந்த வகையில் சிந்திப்பது மிகவும் அரிது. ஆகவே இன்றைய திராவிடத்தின் எல்லை தமிழ்நாடு என்ற அளவிலேயே இருக்கின்றது. அது தமிழ்நாட்டில் வாழும் எல்லா தென்இந்திய மக்களையும் ஒரு அணியில் கொண்டு வரும் ஒரு கருத்தியல். தமிழ்த்தேசியம் மிகவும் இறுக்கமானது. எந்த தேசியமும் இறுக்கமானதே. தமிழ்நாட்டில் இருக்கும் எட்டரைக் கோடி மக்களில் எத்தனை கோடி மக்கள் 'உண்மையான தமிழர்கள்' என்று கணக்கிட்டு, மேற்கொண்டு செல்வது தமிழ்த்தேசியம்.1 point
-
அது என்ன தெரியுமா தமிழ்சிறி, இவர்கள் என்னதான் படிச்சிருந்தாலும் இவர்கள் சார்ந்த கட்சியும் அதன் கொள்கைகளும் வாக்குறுதிகளும் பரப்புரைகளும் மிக மிக பழமையான உத்திகள். அந்த உத்திகள் இந்த டிஜிட்டல் காலத்தில் பத்து வயசு பையனைகூட ஏமாற்ற பயன்படாது என்பது தெரியாமலே ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு உதாரணம் இது உழுத வயலை மட்டுமல்ல ஏற்கனவே முளைவிட்ட நிலத்தில் ஏரோட்டும் முதல் தமிழனும் இவர்தான். ஏர் கார ஐயா என்னமோ குனிஞ்சு பாக்குறமாதிரி தெரியுது , அவர் மைண்ட் வாய்ஸ் குறுக்காலபோனது படம் காட்டுறன் எண்டு நான் வைச்சிருந்த ஒரு ஏரையும் உடைச்சு போட்டுதே என்றொரு சுமந்துவ திட்டுற மாதிரி இருக்கு .1 point
-
சென்ற 27.09.2024 அன்று, ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்த வீதிகள்... பல ஆண்டுகளாக உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மூடப் பட்டிருந்த நிலையில்... ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்க, மக்களின் பாவனைக்ககாக திறந்து வைக்கப் பட்டது. இதனை எந்த சிங்கள கட்சிகளோ, சிங்கள அமைப்புகளையோ, புத்த பிக்குகளோ தமது வேண்டுகோளை ஏற்றுத்தான், அந்த வீதி திறக்கப் பட்டது என்று... எவரும் உரிமை கோரவும் இல்லை, திறக்கப் பட்ட வீதிக்கு முன் நின்று படம் எடுத்து... நாலாந்தர "ஈன அரசியல்" செய்யவும் இல்லை. ஆனால்... நேற்று திறந்த அச்சுவேலி வீதிக்கு முன் நின்று ஒருக்கால் மஞ்சள் சட்டையுடனும், பிறகு வெள்ளைச் சட்டையுடனும் நின்று படம் காட்டிக் கொண்டு நிற்கிறார் சுத்துமாத்து சுமந்திரன். படம் எடுப்பதற்காக உழுத வயலை, உழுத... பச்சோந்தியிடம், வேறு என்னத்தை எதிர் பார்க்க முடியும். மக்களை முட்டாள் ஆக்குவதாக நினைத்துக் கொண்டு... தான், முழு முட்டாள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்குது இந்த சுத்துமாத்து. 😂1 point
-
காகம் இருக்க பனம்பழம் விழுந்ததா? பனம்பழம் விழுந்தா பிறகு காகம் இருக்குதா?1 point
-
நீங்க வேற. மில்லியன் என்று போடுவதே அது வேற லெவலில் மக்களால் பார்க்கப்படும் பேசப்படும் என்ற அரசியல் தானே? நான் இந்த விளையாட்டுக்கு வரலை ராசா. சும்மா உங்களுக்கு பிடிக்கு நானும் உங்களுடன் சேருகிறேன் என்று இங்கே எழுதினால் பல வருடங்களுக்கு பிறகும் வைத்திருந்து தூக்கி கொண்டு வந்து செய்வார்கள் இங்கே. 🤣1 point
-
யாழ்ப்பாணம் (Jaffna) பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள யாழ். மாவட்ட இராணுவ தலைமையகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடலானது இன்று (02.11.2024) நடைபெற்றுள்ளது. இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் இக்கலந்துரையாடலில் பலாலி உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பாகவும், உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்படுகின்ற வீதி, காணிகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பல்வேறுபட்ட விடயங்கள் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களுக்கு இராணுவத்தால் வழங்கப்படும் உதவிகள் மற்றும் சேவைகள் தொடர்பில் விரிவான தகவல்களை இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில் ஆளுநரால் மரக்கன்று நடுகை மேற்கொள்ளபட்டது. பின்னர் விடுவிக்கப்பட்ட பலாலி - அச்சுவேலி பிரதான வீதியை வடமாகாண ஆளுநர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். https://tamilwin.com/article/discussion-palali-jaffna-high-security-zone-17305383711 point
-
கூட இருந்து அழிவுகளுக்கு உதவிவிட்டு செய்திகளை வக்கணையாக பிரசுரிக்கும் கேடு கெட்ட ஊடகங்கள். 😡1 point
-
இந்தக் கேள்விக்கு இது விடையல்லவே . .......! 😂 ஒரு தும்பை எடுத்து மூக்கினுள் "கிச்சு கிச்சு " மூட்ட வரும் தும்மலில் மூக்கினுள் போன தண்ணீர் , கண்ணுக்குள் இருக்கும் கண்ணீர் அத்தனையும் வெளியே வந்துடும் . .....! எச்சரிக்கை : இந்த வைத்தியத்தை செய்யும் பொழுது எதிரில் எவரும் நிற்கக் கூடாது . ......! 😂1 point
-
1 point
-
தெளிவான குழப்பம்தான். என்பிபி க்கு போடும் தமிழர், மாகாணசபை இப்போ இருப்பதே போதும் அல்லது இதுவும் வேண்டாம், மேற்கு நாடுகள் போல் இனவாதம் குறைவான ஒரு ஒற்றையாட்சி இலங்கையே போதும் என நினைத்தே என்பிபி க்கு போடுகிறார்கள். அதாவது அடைய/கிடைக்க/தரமாட்டாத தீர்வை கேட்பதை விட, மும்மொழி கொள்கை செவ்வனே அமல்படும், இனவாதம் களையப்பட்ட, புதிய இலங்கையை நாமும் பங்காளிகாகி கட்டி எழும்புவோம் என்பதுதான் அவர்களின் நிலைப்பாடு. பட்டறிவு இது நடவாத காரியம் என எமக்கு உணர்தினாலும், அவர்கள் இதை முயற்சித்துத்தான் பார்ப்போமே என நினைக்கிறார்கள்.1 point
-
1 point
-
இந்தியா இராணுவகாலத்தின் போது வரலாற்று சமரான நெடுங்கேணி பாடசாலை தாக்குதலை நேரடியாக வழிநடத்தி பெரும் வெற்றியை பெற்று முல்லை மண்ணிக்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்து அனைத்து போராளிகளிடமும் அன்பாக பழகி பல போராளிகளை சண்டைகாறராக வளர்த்த பெரு வீரன். பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் பல சமர்களை வென்றவர். மணலாற்றில் தலைவர் தங்கியிருந்த போது விசேடமாக அழைக்கப்பட்டு முன்னணி முகாமான கையிலமலை முகாமின் பெறுப்பாளாராக தலைவரால் நியமிக்கப்பட்டார். எல்விற்ரனை தாண்டிதான் இந்திய இராணுவம் உள்ளே வரமுடியும் என தலைவர் சொன்னாராம். பின் இலங்கை அரசுடன் 1990களில் சண்டை தொடங்கிய போது பலாலி வசாவிளான் முன்னரங்க பகுதியில் முன்னேற முற்பட்ட இராணுவத்தை முன்னேற விடாது தடுத்தார். கொக்காவில் முகாம் தகர்ப்பு, மாங்குளம் முகாம் தகர்ப்பு, என பல வெற்றிசமர்களை நேரடியாக களத்தில் பேராடி பல விழுப்புண்களை தாங்கியவர். இடைப்பட்ட காலத்தில் விலத்தி இருந்தாலும் இறுதி சமரில் களத்திற்கு போய் முடியுமட்டு களமாடிய எங்கள் போர்வீரன் இன்று எம்மைவிட்டு தாய் மண்ணை விட்டு இறுதி பயணத்தில் இணைத்துவிட்டார். அண்ணன் உங்களின் தியாகம் எமது மண் கனம் செய்யும். உங்களின் சாதனைகள் பேசப்படவேண்டியவை. வலிகளுடன், ஈழவன்1 point
-
உண்மை காலம் பதில் சொல்லட்டும்....நல்லது நடந்தால் மகிழ்ச்சி அதை விட சிறப்பாக நடந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி .... ...எவரும் விரும்பி பிரிவினையை ஏற்றுக்கொண்டதில்லை ....தூண்டப்பட்டதினால் பிரிவினை உருவானது....தமிழன் நல்லவன் எதையும் மறந்து அடுத்த கட்டத்துக்கு போய்விடுவான் ....பெளத்த சிங்களம் அப்படியில்லை.... பரம எதரிகள் வாழ்வார்கள வாழலாம் தப்பே இல்லை .....மீண்டும் இனவாதம் தலை தூக்கினால் ...இடது சாரிகள் ஆட்சியில் ஆனால் பெளத்த பிக்குகள் நாட்டில் பலமாக உள்ளார்கள்... நல்லதே நடக்கட்டும் ....1 point
-
கள யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அது உங்கள் பார்வையில் ...நீங்கள் சந்தித்த நபர்கள் உங்களுக்கு சார்பானவர்களாக இருக்கலாம்...இல்லாமலும் இருக்கலாம்...யாழ்ப்பாணம் முழுவதும் கருத்துகணிப்பு செய்திருக்க வாய்ய்பில்லை தானே... இப்படி பல தேர்தல்களை மக்கள் சந்தித்துள்ளனர்..பல அலைகள் வந்து கடந்தும் போயிருக்கின்றன... இந்த தேர்தலில் தமிழர் சுய நிர்ணயத்தில் நீங்கள் நினைப்பது போல சவப்பெட்டியில் விழும் ஆணி ஆக இருக்கலாம் ஆனால் அந்த ஆணியை பிடுங்கி எடுத்து தமிழர் சுயநிர்ணயத்தை உயிர்ப்பிக்க சிங்கள சமுகம் தயாராக இருக்கின்றது என்பது எனது நிலைப்பாடு1 point
-
விபரம் உள்ள நம்ம விளங்க நினைப்பவனிடமிருந்து இப்படியொரு வீணாபோன கேள்வியை நான் எதிர்பார்க்கவே இல்லை😶1 point
-
1 point
-
மோடி ரீ கடையில் வேலை செய்த ஆள்,யோக தியானம் போன்ற வற்றை கடைபிடிப்பவர்...ஆனா நம்ம தோழர் ரீ கடையை சொந்தமா போட்ட பிஸ்தா,ஆயுதபயிற்சி எடுத்த கட்சியின் பின்புலம் கொண்டவர் .. பிராந்திய வல்லரசாகும் சகல தகுதிகளும் சிறிலங்காவுக்கு வர தொடங்கி விட்டது என சொல்ல வாறீங்கள்.... ஒளிமயமான எதிர்காலம் மாம்பழதீவில் தெரிகின்றது....1 point
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக இந்த சாமியர் தான் போட்டியிடுவாரோ என்று பயந்த்தேன். நன்றி போட்டியிடாததிற்கு 🙏1 point
-
இநத அன்பர் அந்தவகையானர் அல்ல ....சொந்த பணத்தில் பல உதவிகளை செய்பவர்...1 point
-
அவர் ஆரம்பகால யாழ்ப்பாண யூடியூப்பர் , இவருக்குத்தான் அதிகமான சப்ஸ்கிரைப்பர்ஸ், இவர் எதேச்சையாக ஒருதடவை அநுரவீட்டுக்குபோய் பிஸ்கட் தேத்தண்ணி எல்லாம் குடிச்சு வந்தார் , , அப்போது இவருக்கு தெரிந்திருக்கவில்லை இலங்கை முழுவதும் இவர் பிரபல்யமாகபோறார் எண்டு, சிங்கள செய்திதாள்கள், தொலைகாட்சியிலெல்லாம் இவர் அநுர வீட்டுக்கு போனதுபற்றி செய்தி வந்தது, வீடியோ போட்டு அண்ணன் விடிய எழும்பி பார்த்தால் அவர் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை, யாழ் யூடியூப்பர்ஸுக்கு 50 பேர் பார்வையிடுவதே பெரிய விஷயம், இவரின் அந்த வீடியோவை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டனர் , 6000 பேருக்குமேல் கருத்துக்கள் இட்டனர், அதில் முக்கால்வாசிபேர் சிங்களவர் ஒரேநாளில் மேலதிகமாக 100k சப்ஸ்கிரைப்பர்ஸ் அவருக்கு கிடைத்தனர், அத்தோடு அவர் அகில இலங்கை சிங்கள விசிறியானார், உடல் மண்ணுக்கு உயிர் அநுரவுக்கு என்ற ரேஞ்சுக்கு போனார். வெளிநாட்டிலிருந்து எம்மவர் சிலர் இப்படி பண்ணாதீங்கோ எண்டுசொல்லியும் மிரட்டியும் பார்த்தார்கள், தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று அவருக்கு போன் பண்ணினவர்களின் நம்பரையும் பொதுவெளியில் பகிர்ந்தார். இவர்போல இன்னுமொருத்தர் இருக்கார் அவருக்கு கடந்த ஒரு மாசமா அநுரவை தவிர வேற எதுவும் தெரியாது அவர் : பிரச்சனை என்னவென்றால் பல இளைஞர்கள் இப்போது வேலை வெட்டியைவிட்டு யூடியூப்பே முழுநேர வேலையாக செய்கிறார்கள், பார்வையாளர்களின் எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்கள், மாசம் முடிய காசு வேணுமே. அதனால் பரபரப்புக்காக என்ன என்னமோ எல்லாம் செய்து பார்த்தார்கள், என் உயிருக்கு ஆபத்து , இதுதான் எனது கடைசி காணொலி என்றெல்லாம் போட்டு எவராவது பாப்பாங்களா என்று அலைவார்கள், எத்தனைநாளுக்குத்தான் யாழ்ப்பாணத்தை சுற்றிக்காட்டுவது? அவர்களுக்கு இப்போ கிடைத்த வரம் அநுர அலை அதைவைத்து பிழைப்பு ஓட்டுகிறார்கள், அவர்களுக்கு தேவை வருமானம். நிரந்தரவேலை, கல்வி, தொழில் முயற்சி என்று எதுவுமில்லாமல் விடிய எழுந்தால் கமராவும் கையுமாக அலைகிறார்கள், திடீரென்று யூடியூப் வருமானம் ஒருநாள் நின்றுபோனால் வருஷங்களையும் வாழ்க்கையையும் தொலைத்துவிட்டு முகட்டை பார்த்துக்கொண்டு முதுகை சொறிய வேண்டியதுதான்.1 point
-
உங்கள் பேரபிள்ளை பல்லாண்டு காலம் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ மனதார வாழ்த்துகின்றேன்🙏1 point
-
உங்கள் பேரனுக்கும் உங்களுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.1 point
-
அருமையான கவிதை மூலம் உங்கள் சிறு வயதில் தொடங்கி நிகழ்காலம் வரை மிகவும் தெளிவாக எழுதியுள்ளீர்கள். இன்னும் பல ஆண்டுகள் சுகமாகவும் வளமாகவும் வாழ்ந்து பூட்டப் பிள்ளைகளுடனும் நீங்க விளையாட வேண்டி வாழ்த்துகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தில்லை. நீங்கள் யாழுக்கு கிடைத்த பொக்கிசம். நன்றி.1 point
-
1 point
-
நீங்கள் சொல்வது சரியானதுதான். நானும் கவனித்த அளவில் அனுரவை கடவுள் மாதிரி கதைப்பார்.1 point
-
திரியோடு தொடர்புடைய காணொளி என்பதால் இணைத்துள்ளேன். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி காணொளியெடுப்பவரது அண்மைய காணொளிகள் ஏறக்குறைய அநுரவிற்கான பரப்புரையாளர்போல உள்ளதும் நோக்கப்பட வேண்டியது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point
-
1 point
-
🤣............... யார் மறந்தாலும் நீங்கள் விடமாட்டீர்கள் போல, அண்ணை.........😀. அநுர பெயில் அண்ணை, நான் பாஸ்............... அந்த வித்தியாசத்தை வைத்துத் தான் அவர் ஜனாதிபதியானவர்..............🤣. (பிறகு அவர் வேறு இடம் போய் பாஸாகியும் விட்டார்.........)1 point