Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19122
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1569
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/13/24 in all areas

  1. யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள பிரபல அரசியல் ஆய்வாளர்களே கணிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் நிலையில்... கந்தப்பு அவர்களால் மிக நுணுக்கமாக தயாரிக்கப் பட்ட 60 கேள்விகளுக்கு... யாழ்.கள வாசகர்களாகிய நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று துணிந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த.... @வாத்தியார், @Kandiah57, @vasee, @சுவைப்பிரியன், @தமிழ் சிறி, @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலவர், @Ahasthiyan, @ஈழப்பிரியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @goshan_che, @nunavilan, @villavan, @putthan, @தமிழன்பன், @வாதவூரான், @நிழலி, @பிரபா, @வாலி, @நிலாமதி, @ரசோதரன், @குமாரசாமி, @Sasi_varnam ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள், ❤️ இந்தப் போட்டியை நடத்தி தரும்படி... கந்தப்பு அவர்களிடம் கேட்ட போது, மறுப்பேதும் சொல்லாமல்... குறுகிய காலத்தில் கேள்விக் கொத்தை தயாரித்து போட்டியை நடத்திக் கொண்டிருக்கும் கந்தப்பு அவர்களுக்கும் விசேட நன்றிகள். 🙏
  2. சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு. பாக்குநீரிணை மன்னார் வளைகுடாபகுதி மிக குறுகலானது என்பதால்தான் எல்லைகள் மீறுவதில் ஏகப்பட்ட புடுங்கல்கள், ஆனால் நெடுந்தீவுக்கும், பருத்துறைகடற்கரைக்கும் முல்லைதீவுக்கும் இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது எந்த வகையிலும் தவறாக எல்லையை புரிந்து கொண்டது அல்ல.அது அப்பட்டமான இன்னொருநாட்டின் கடல்வள கொள்ளை . கச்சதீவு என்ற ஒரு பிரச்சனை இலங்கை இந்தியாவிற்குள் இல்லை, இந்திராகாந்தி ஸ்ரீமா ஒப்பந்தபடி கச்ச தீவு என்பது இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது, கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ளவும் , மீன் வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளது, ஆனால் மீன் பிடிக்க உரிமையில்லை என்பதே ஒப்பந்தம் என்கிறார்கள். அதனால்தான் இலங்கை கடற்படையிடம் மாட்டும்போதெல்லாம் கச்சதீவில் மீன்பிடிக்கும்போது என்று அவர்கள் சொல்வதில்லை கச்சதீவுக்கு ‘’அருகில்’’ மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை அட்டூழியம் என்று கப்சா விடுவார்கள். 1976 ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தங்களின்படி கச்சதீவை ஒருபோதும் இலங்கையிடமிருந்து மீளபெற முடியாது என்று பல தடவை மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கச்சதீவை மீட்போம் என்று பிரச்ச்சாரம் செய்யும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் தமிழக கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அதுபற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கும் தெரியும் அது சாத்தியமில்லையென்று , மீனவ சமுதாயத்தின் வாக்குகளுக்காக ரீல் விடுவார்கள். இதில் அதியுச்ச நகைச்சுவை எந்த காங்கிரஸ் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததோ அதே காங்கிரசும் கூட்டுகட்சியான திமுகவும் தேர்தல் நேரங்களில் கச்சதீவை மீட்போம் என்று குரல் கொடுப்பது.
  3. https://www.ucsf.edu/news/2016/02/401576/landmark-study-finds-dementia-risk-varies-significantly-among-racial-and-ethnic 👆 மேலே இருக்கும் ஆய்வு, கலிபோர்னியாவில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் செய்யப் பட்ட போது, வெள்ளையின மக்களுக்கும், ஆசியர்களுக்குமிடையே ஞாபக மறதியில் பாரிய வேறுபாடு இல்லை. உண்மையில் வெள்ளையின மக்களில் இது சிறிது அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், ஞாபக மறதி வரும் ஆபத்தில் உச்சத்தில் இருக்கும் இரு குழுக்கள், கறுப்பின மக்களும், சுதேச அமெரிக்கர்களும். இந்த இரு இன மக்களும், பல்வேறு சமூக, பொருளாதார (socioeconomic status) நெருக்கடிகள் காரணமாக, ஏனைய ஆரோக்கியக் குறைபாடுகளாலும் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். எனவே, கார உணவு ஞாபக மறதியின் ஆபத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாகத் தெரியவில்லை.
  4. நாசாவில் மேலதிகாரியாக இருக்கும் என்னை உங்கள் வட்டத்தில் உள்ளடக்காதது வேதனையளிக்கிறது தம்பீ.
  5. உண்மைதான்… @நந்தி இதுவரை வாக்களிக்கவில்லை எனில் உங்கள் தெரிவை கருத்தாக பதியுங்கள் சேர்த்து கொள்கிறேன். நன்றி மோகன்.
  6. நன்றி கோசான். அந்த 26 பேரையும், தவற விட்டு விடப் படாது என்ற நோக்கில்... எனது பெயரையும் சேர்த்துக் கொண்டேன். 😂
  7. புலவர் சொல்படி, போட்டியை சகலரிடமும் கொண்டு சேர்த்த தண்டோரா_சிறி உங்களுக்கும் நன்றி. அது சரி சந்தடி சாக்கில் உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிப்போட்டியள். இதுவும் ஜேர்மனியில் கற்றதோ🤣.
  8. தேர்தல் மாவட்டமொன்றில் அதிக வாக்குகளை பேரும் கட்சிக்கு முதலில் ஒரு இடம் வழங்குவார்கள் ( போனஸ்இடம்). உதாரணம்யாழ்ப்பாணத்தில் இம்முறை 6 இடங்கள் . முதலிடம் வரும் அணிக்கு ஓரிடம் வழங்கப்பட மிகுதி 5 இடங்கள் விகிதாசார முறைப்படி விழும் வாக்குகள் அடிப்படையில் வழங்கப்படும். செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவாக வாக்குகள் பெற்ற கட்சிகளை நீக்கிவிட்டு ( இம்முறை பல கட்சிகள்சுயேட்சை அணிகள் யாழில் 5% க்கு குறைவான வாக்குகள் பெரும்) மிகுதியான வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெரும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் . மிகுதியான வாக்குகளில் ஒவ்வொரு 20% க்கும் ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்கள் (100 % இனை போனஸ் இடம் போக, இருக்கும் தேவையான வேட்பாளர்களின் எண்ணிக்கையாக வரும் 5 இனால் வகுக்கும் போது 20% வரும்). சில தேர்தல் மாவட்டங்களில் முதலிடம் வரும் அணி எத்தனை இடங்களை பிடிக்கும் என்று கேட்டிருந்தேன். சிலர் சில விடைகளுக்கு 1 இடம் என்று பதில் அளித்திருக்கிறார்கள். இது தவறான பதில். முதலிடம் பெரும் அணிக்கு போனஸ் இடம் கிடைப்பதினால் குறைந்தது 2 இடங்களை அவ்வணி பிடிக்கும். ஓரு போட்டியாளர் தேர்தல் மாவட்டமொன்றில் முதலிடத்தில் இரண்டு கட்சிகள் தலா 2 இடங்களை பிடிக்கும் என முதலில் விடையளித்திருந்தார். போனஸ் இடம் முதலிடம் வரும் அணிக்கு வழங்கப்படுவதினால் ஒரு அணி மட்டும்தான் அதிக இடங்களை பிடிக்கும். ( இரண்டு கட்சிகள் சரியாக சமனான வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வந்தால் சமமான இடங்கள் கிடைக்கும். ஆனால் இது 99.99% சாத்தியமில்லை).
  9. 1) தமிழ் தேசிய மக்கள் முன்னணி. (கஜேந்திரன்ஸ்) 2) அனுர 3) தமிழரசு. (சுமந்திரன்ஸ்) 4) அர்ச்சுனா 5) பிள்ளையான். வடக்கு, கிழக்கில்.... சுமந்திரனின் தமிழரசு கட்சியை, சிங்களவன் முந்தி விட்டான். 😂
  10. போட்டி நேரம் முடிவடைந்து விட்டது. போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன் 18)தமிழன்பன் 19)வாதவூரான் 20)நிழலி 21)பிரபா 22)வாலி 23)நிலாமதி 24)ரசோதரன் 25)குமாரசாமி 26)சசி வர்ணம்
  11. இதுதான் சரி இந்தத் திரியில்.2 வாக்குப் போட்டால் செல்லாத வாக்கு. ,யாரோ உங்கள் வாக்கை கள்ள வாக்குப் போட்டு விட்டார்கள்.இந்தக் கற்பனைத்திரி என்ன ஓட்டம் ஓடுகிறது.கோஷான் நீங்கள் படம் தயாரித்துப் பார்க்கலாம். மொக்கைப் படம் என்றாலும் சக்கை போடு போடும்.விளம்பரத்திற்கு தண்டோரர சிறியை மன்னிக்கவும் தமிழ்சிறியை நாடவும்.
  12. தினமும் தொலைக்காட்சியில் வடக்கு கிழக்கு மீனவர்களின் துன்பத்தை காட்டுவார்கள் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கும். மில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான‌ மீன்களை தடை செய்யப்பட்ட வலைகளையும் உப்கரணங்களையும் பாவித்து மீன் செல்கின்றார்கள். இந்த விடயத்தில் நான் சிங்களவனின் பக்கமே.
  13. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!
  14. "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01 உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம். அக்டோபர் முதலாம் தேதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. வயது முதிர்ந்தோரைப் பாதுகாப்பதுடன் அவர்களின் சுதந்திரம், ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில் ,சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் இரு மடங்காக உயரும் என்று தெரிகிறது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு - இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்து உள்ளதுடன், சராசரி ஆயுள் காலம் 75 - ஐ தாண்டுகிறது. என்றாலும் அவர்கள் மகிழ்வாக வாழ்கிறார்களா என்பது ஒரு கேள்வி குறியாகவே உள்ளது? பிசிராந்தையர் என்ற புலவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய புறநானூறு பாடல் 191 ஞாபகம் வருகிறது: ‘யாண்டுபல வாக , நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?’ என வினவுதிர் ஆயின், மாண்டஎன் மனைவியோடு, மக்களும் நிரம்பினர்; யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான், காக்க; அதன்தலை ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே. “உங்களுக்குச் சென்ற ஆண்டுகள் பலவாக இருக்கவும், உங்களுக்கு நரையில்லையே அது எப்படி என நீங்கள் கேட்பீராயின் கூறுவேன்: "வீட்டில் மனைவி நல்லவள்; மக்கள் அறிவு நிரம்பியவர். ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது போல் ஏவலர் குறிப்பறிந்து நடப்பவர். எனவே வீட்டில் சிக்கல் இல்லை. அக அமைதி கூடிற்று. புறத்தேயும் அரசன் நல்லவன்,என் நாட்டு அரசனும் நீதி அல்லாதவற்றைச் செய்யாமல் காவல் காப்பவன். ஊரார் சான்றோர். புறத்திலும் அமைதியே உண்டாயிற்று. கவலைகள் இல்லாத வாழ்க்கையால் நரை உண்டாகவில்லை" என்கிறான் அந்த புலவன். ஆனால் இன்று நிலை மாறிவிட்டது. ஆண் - பெண் இருபாலாரும் இன்று வேலைக்குச் செல்லுதலும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அளவு சுருங்கியிருப்பதும், கூட்டுக் குடும்ப முறை அநேகமாக இல்லாதிருப்ப தும், மற்றும் நகரமயமாதல், உலகமயமாதல் காரணமும் சமூகத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்று பொதுவாக மூன்று விதமாக இந்த முதியோர்கள் வாழ்கிறார்கள். உதாரணமாக, சிலர் பிள்ளைகளுடன் அல்லது உறவினர்களோடு வசிக்கிறார்கள், சிலர் கணவன் - மனைவி என்று இருவர் மட்டும் தனியாக வசிக்கிறார்கள், மற்றும் சிலர் ஆணோ அல்லது பெண்ணோ ஒருவராக தனியாக வசிக்கிறார்கள். இங்கு ஒரு சாரார் அவர்கள் எங்கு வசித்தாலும், சூழ்நிலை காரணமாக, தனிமையை உணர தொடங்குவதும், தாம் தனித்து விடப் பட்டு விடும் என ஏங்கத் தொடங்குவதும் அவர்களின் [முதியோர்களின்] உடல் நிலையை / சுகாதாரத்தை மிகவும் பாதிக்கும் காரணியாகும். கொடிது கொடிது இளமையில் வறுமை என்றார் ஔவை அதற்குச் சற்றும் குறைந்ததல்ல முதுமையில் தனிமை! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட புறநானூறு 243 இல் நாம் ஒரு முதியவரை சந்திக்கிறோம். அவர் எப்படி இருக்கிறார் தெரியுமா? "இனிநினைந்து இரக்கம் ஆகின்று; திணிமணல் செய்வுறு பாவைக்குக் கொய்பூத் தைஇத் தண்கயம் ஆடும் மகளிரோடு கைபிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறையெனல் அறியா மாயமில் ஆயமொடு உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து நீர்நணிப் படுகோடு ஏறிச்சீர் மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்துமணற் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டு உண்டு கொல்லோ தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று இருமிடை மிடைந்த சிலசொல் பெருமூ தாளரேம் ஆகிய எமக்கே" இங்கே முதல் பதினொரு அடிகளில் தம் இளமைக் காலத்தில் நிகழ்ந்த பசுமையான அனுபவங்களை எண்ணிப் பார்த்து அந்த இளமை இப்ப எங்கே போய்வி ட்டது? என பெரு மூச்சு விடுகிறார். அப்படி என்றால் இப்ப அவரின் நிலை என்ன? அதையும் கடைசி மூன்று வரிகளில் ... "பூண் சூட்டிய நுனியை யுடைய வளைந்த ஊன்றுகோலை ஊன்றித் தளர்ந்து , இருமல்களுக்கு இடை இடையே வந்த சில சொற்களைக் கூறும் , முதுமையின் நிலை இரங்கத் தக்கது" என்கிறார். அது மட்டும் அல்ல, நற்றிணை 10 இல் , காதல் என்பது உடற்காமம் அன்று அதனையும் கடந்து மனதளவில் உயர்ந்து நிற்பதாகும். எனவே, உடல் அழகு நீங்கி நரையோடு முதுமை வந்த போதும் அவளைப் போற்றுவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்கிறது. இது இரு சாராருக்கும் பொருந்தும். "பொன்னேர் மேனி மணியிற் றாழ்ந்த நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்த லோம்புமதி பூக்கே ழூர" மேலும் உடம்பின் வெவ்வேறு மாற்ற நிலையை குண்டலகேசிப் பாடல் ஒன்று இப்படி எடுத்து உரைக்கிறது; "பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் மீளும் இவ் வியல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி நாளுநாள் சாகின் றோமால் நமக்குநாம் அழாதது என்னோ?" அதாவது, பாளை போன்ற இளங்குழந்தைப் பருவம் செத்து, குழந்தைப் பருவம் பிறக்கிறது. பின் குழந்தைப் பருவம் செத்து, காளைப் பருவம் பிறக்கிறது. அந்த காளைப் பருவம் செத்து, காதலுக்கு உரிய இளமைப் பருவம் ஏற்படுகிறது. அதுவும் பின் மாறி முதுமை உண்டாகிறது என்கிறது. ஆனால், பொதுவாக இளமையைக் கொண்டாடும் சமூகம் முதுமை என்றால் முகம் சுளிக்கிறது. முகத்தில் சுருக்கம், உடலில் குடிகொள்ளும் நோய்கள், தள்ளாடும் நடை, புறக்கணிப்பு, தனிமை இப்படி நீளும் பட்டியலில் "முதுமையில் தனிமை" மிகவும் கொடியது. அது மட்டும் அல்ல, முதுமையை இன்னொரு குழந்தைப் பருவம் எனலாம். குழந்தைகள் எப்படித் தங்கள் மீது கவனமும் அன்பும் செலுத்தப்பட வேண்டும் என்ற விரும்புவார்களோ, அதே போல முதியவர்களும் விரும்புவார்கள். இதை நாம் அறிய வேண்டும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 02 தொடரும்.
  15. கஜே-கயே கோஷ்டி யாழ்கள ஆதரவாளர்களை ஒரு 30 மணிநேரமாவது ஒரு கிலிகொள்நிலையில் வைத்திருப்பம் எண்டால் விடுறீங்கள் இல்லையே கோசான் சார்!😂
  16. அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ? நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட மீனவர்களைத்தானே? இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்று நாட்டு மீனவர்கள் தவறுதலாகத்தானும் உள் நுழைந்தால் கைது செய்யாமல் விடுவார்களா? அப்படி இந்திய மீனவர்களும் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்தானே? பொருளாதாரத் தடை விதிக்கும்படி கோரும் சீமான், தமது மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என்று ஏன் கூறுவதில்லை? கூறினால் என்ன நடக்கும்? உங்களிடம் பதில் இருக்கிறதா?
  17. இண்டையிலை இருந்து மிளகாய் உறைப்பு சாப்பிடாமல் விடுறன்...😎 அறிவாளியாய் உருவெடுக்கிறன்... அதே போல மஞ்சள் டோன்ட் டச் 😁
  18. அதுதானே பார்த்தன் ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டேன். நன்றி தம்பி.
  19. வணக்கம் நந்தி ஒரு உறுப்பினர் நீண்ட காலம் உள்நுழையாது விட்டால் அவரது அங்கத்துவ நிலை மாறி விடும். அதனாலேயே உங்களால் வாக்களிக்க முடிவில்லை. உங்கள் அங்கத்துவ நிலையினைச் சரி செய்துள்ளேன்.
  20. பிச்சைக்காரனுக்கு ஒரு நாள் பிச்சை போட்டால் மறுநாளும் வருவான். கடன் கேட்டவனுக்கு கடன் கொடுத்தால் ஒரு நாளும், திரும்ப வரமாட்டான். Joseph Anthony Raj 😂
  21. நன்றி கருத்துகளத்தில் எழுதிகொண்டிருக்கும் போது சட் என மனதில் தோன்றிய எண்ணம் இது. ஆனால் பல சுவாரசியமான trends ஐ அவதானிக்க முடிகிறது. தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டு பார்க்க, புலம், புலம்பெயர் இடைவெளி கூடி, குறைந்து உள்ளதா எனவும் அனுமானிக்க முடியும். அப்படி நல்லா உறைப்பா கேளு(ங்க) தல! @ நிழலி மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஒருக்கால் பார்க்கவும்🙏. சிலவேளை நந்தி கனநாட்கள் கழித்து வருவதால் அவர் உரிமைகள் மட்டுப்பட்டுள்ளதோ.
  22. பையா கடல் கடந்த அரசியலை தூர நின்று பார்க்கலாம் பேசலாம் தொட்டு பார்க்கலாம் ஆனால் உள்ளே இறங்ககூடாது, இசை அதனை தவிர்த்திருக்கலாம் என்பதே என் அபிபிராயம். பையனும் அதுபோல்தான் நல்ல பொடியன் ஆனால் கடல் கடந்த அரசியலுக்காக யார் கூடவும் அளவுக்கதிகமாக சண்டை போடுவதை தவிர்க்கணும். அந்த அரசியல்வாதிகளுக்கு எங்களை தெரியாது அவர்களுக்காக எங்களுக்கு தெரிந்தவர்களை பகைக்க கூடாது.
  23. நெய்தல் என்றால்… ஆடை நெய்தல்… நாயுடு ஹால் மேட்டர்… கில்மா பாசறையில் நல்லா நூல் கோப்பவர்கள் -நெய்தல் படைக்கு தெரிவாவார்கள்.
  24. சகலதுறை ஆட்டக்காரர் என்று கேள்வி. Batting all rounder. தேவைப்பட்டால் பந்தும் வீசுவாராம். ஆதாரம் கேட்க மாட்டியள்தானே🤣 ஆனால் டேப்பில் இருப்பது அவர் பெண் தொடர்புகள் பற்றிய ஆதாரம் மட்டுமே. The rest of course, and this forms the vast majority of what the tapes contain, are Ranjan’s sleazy chats with film actresses, prostitutes and women of dubious character who show they are on the same wave length when the conversation turns to their favourite topic. The tapes focus on Ranjan’s sexual proclivities, his sexual predilections and the sexual acts he has performed with other girls and would like to perform with the girl he is speaking with and what she must dress in when she comes to meet him. https://www.sundaytimes.lk/200119/columns/ranjans-kiss-and-tell-tapes-continue-to-top-the-hit-parade-388143.html பிகு @Nathamuni இல்லாத குறையை நிர்வர்த்தி செய்ய முயல்கிறேன். கிசு கிசுவின் நாயகனே திரும்பி வாரும் ஐயா🤣
  25. ஏன் பொருளாதார தடை விதிக்கவேண்டும். சீமானின் நெய்தல் படை எங்கே போனது. அதை எடுத்து விடவேண்டியது தானே! ஶ்ரீலங்கா கடற்படையை அவரது நெய்தல் படையால துவம்சம் செய்யலாமே! 😂 அதை பயன்படுத்தினால் ஶ்ரீலங்கா கடற்படை தாங்காது என்று ஒரமா படுக்க விட்டிருக்கிறார் போல.😂
  26. இதைத் தான் இங்கு மேற்குலகில் Dementia என அழைக்கின்றனர் என நம்புகின்றேன். எம்மவரை விட மேற்குலத்தினர் முக்கியமாக வெள்ளை இனத்தவர்களிடம் இந்த dementia அதிகமாக உள்ளதை அவதானித்துள்ளேன். இவர்கள் உறைப்பே சாப்பிடாதவர்கள். அவர்களுக்கு எப்படி வருகின்றது இது? @Justin இது பற்றி உங்கள கருத்து?
  27. நான் நினைக்கிறேன் நீங்கள் ரஞ்சனதும் ஹிருணிக்காவினதும் leak ஆன அந்த தொலைபேசி உரையாடலை கேட்ட பின் தான் அவரை ஆதரிக்க முடிவெடுத்தீர்கள் என..,😜
  28. திரும்பவும் ஆலசி ஆராய்ந்து அரசியல் ஆர்வலர்களின் கருத்துக்களை கொண்டு பதில் தந்துள்ளேன். Omit the Previous 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) - ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) - ஆம் 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) - இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) - இல்லை 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) - ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) - இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) - ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) - இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) - இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) - இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) - இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) - இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) - இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 1 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 1 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம் 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) - இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) - இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சிஇ வன்னி தொகுதி) - ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) - இல்லை 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) - ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்புஇ தேசிய ஜனநாயக முன்னணி) - இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்புஇ தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) - ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி இ மட்டக்களப்பு) - ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி 28) வன்னி - ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 29) மட்டக்களப்பு- தமிழரசு கட்சி 30)திருமலை - தேசிய மக்கள் சக்தி 31)அம்பாறை - தேசிய மக்கள் சக்தி 32)நுவரெலியா - ஐக்கிய மக்கள் சக்தி 33)அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி 34)கொழும்பு - தேசிய மக்கள் சக்தி 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) - தேசிய மக்கள் சக்தி 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) - 1 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் - தமிழரசு கட்சி 39) உடுப்பிட்டி - தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை - தமிழரசு கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசு கட்சி 42) மன்னர் - தமிழரசு கட்சி 43) முல்லைத்தீவு - ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி - 44) வவுனியா - தமிழரசு கட்சி 45) மட்டக்களப்பு - தமிழரசு கட்சி 46) பட்டிருப்பு - NPP 47) திருகோணமலை - NPP 48) அம்பாறை - NPP 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) - தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) - ஐக்கிய மக்கள் சக்தி 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) - 4 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) - 6 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி - 2 54)தமிழரசு கட்சி - 7 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு - 4 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) - 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) - 1 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) - 60 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) - 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணியஅணி) - 1
  29. சிறந்த கட்டுரை. சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைத்தது. தமிழிலில் வந்திருப்பது சிறப்பு. ஏன் எங்கள் மக்கள் அரளைபெயர்கிறார்கள் என்பதற்கு ஒரு கருத்துகொள் இந்தக் கட்டுரையில் உள்ளது. முல்லைத்தீவு, வன்னி மற்றும் தீவுப் பகுதி மக்களின் கவனத்திற்கு..
  30. —-/////—————- https://x.com/numberslka/status/1856041673874387158 அதிகம் விஞ்ஞான ரீதியில் என சொல்ல முடியாவிட்டாலும் - ஓரளவு பெரிய சாம்பிள் உடைய கருத்து கணிப்பு. தமிழரசுக்கு 11 என்கிறார்கள். வாய்பில்லை. பழைய கணக்கை வைத்து கணித்தது என நினைக்கிறேன். NPP - 124 (+/- 7) SJB - 53 (+/- 5) NDF - 24 ( +/- 5) ITAK - 11 (+/- 3) SLPP - 2 (+/- 2) SB - 2 (+/- 2) Others - 9 (+/- 3)
  31. இது, அவர்களது சொந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை. அதனை வெளியில் கொண்டுவருவதற்காக இவரின் முன்னைய கொலைகளை கொண்டுவருகிறார். இவர் ஏன் இத்தனை கோடியை இவருக்கு அளித்தார்? தான் தாடியருக்கு ஏதோ ஒரு தொழிலை சொல்லிக்கொடுத்து கோடி கோடியாக சம்பாதித்ததாக சொல்கிறாரே, அது என்ன தொழில்? இவரும் சாதாரணமான ஆள் அல்ல. இப்போ தாடியரால் நொந்து நொடிஞ்சு வயிற்றெரிச்சலில் புலம்புகிறார். அங்கயன் தாடியருக்கு தேர்தலில் வெல்வதற்காக உதவியவர் என்றால்; இவர் எப்படிப்பட்டவர்? துஸ்ட்டனுக்கு உதவி புரிந்தால் கடைசியில் அவனாலேயே அழிவது திண்ணம். தாடியர் யாரை வைத்து மற்றவரை அடக்கினாரோ அதே வழியை இவர் எடுத்து விட்டார் போலிருக்கிறது. அடுத்த முறை தாடியரின் இடத்தை இவர் நிரப்பக்கூடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவர் நன்மை செய்திருந்தால்; அந்த மக்கள் இவரை வாழ்த்தியிருப்பர். பாவம் ஏதோ செய்யக்கூடாத தொழிலை செய்து, கூடாத கூட்டத்தோடு கூடி, அழிந்துபோய் நிக்கிறார். இப்போ... தாடியின் அரசியலும் போகப்போகுது, அவரின் சொகுசு வாழ்க்கைக்கு இவர் நஷ்ட ஈடு கொடுத்தார்தான் உண்டு. ஆனால் இவர் எவ்வளவுதான் சொன்னாலும் அந்த மனிதனுக்கு வாக்கு போடுற கூட்டம் போட்டுத்தான் ஆகும். இது இவரின் பிரச்சனை. அவர்களின் பிரச்சனை என்னவோ? அவர்களும் பின்னாளில் சொல்லக்கூடும். தனக்கு தனக்கென்றால் சுளகு படக்கு படக்கு என்குமாம். தாடியர் அரசியலில் வீழ்வது இவராலல்ல. தாடியர் மேல் அனுரா நடவடிக்கை எடுப்பாரெனில், அதில் இவர் பங்குமிருக்கும். புலிகளுக்கு ஐம்பது வீதம் கொடுக்க விரும்பாமல், இப்போ எத்தனை கோடியை இழந்து தவிக்கிறார். நேர்மையாய் சம்பாதித்திருந்தால் யாருக்கும் பயப்படாமல், எதையும் இழக்காமல் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம். இத்தனை கோடியை இழந்தவரென்றால், அதற்கு மேல் இவர் சம்பாதிக்க இவர்களின் கூட்டுறவு வேண்டியிருந்திருக்கிறது. இவர் மேல் நஷ்ட ஈடு கேட்டு இன்னும் பலர் வழக்கு போடப்போகிறார்கள். வாங்கிய காணிக்கு கையெழுத்து வாங்காமல் விட்ட புலி இவர், இவர்களுக்கு கொடுத்தவற்றுக்கு ஆதாரம் வைத்திருந்திருப்பாரா? எப்படியோ இவரிலும் சம பங்கு தவறுண்டு. அவர்கள் நஷ்ட ஈடு கேட்டால் இவர் கொடுத்த காசை வட்டியோடு திருப்பிகேக்கலாம், குற்றம் நிரூபணமானால் தாடியர் விண்ணரிடம் கேட்ட நஷ்ட ஈடும், வாங்கிய தொகையை வட்டியோடு திருப்பியளிக்கவும் கோரலாம். "மானம் உயிரினும் மேலானது." அதனால்தான், மானம் போனபின் உயிரை என்ன ம** கு என்பர். இவ்வளவு காலமும் மௌனமாக இருந்தவர், இப்போ, கூட்டம் போட்டு பேசுவதிலிருந்து விளங்குதே!
  32. இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன் 18)தமிழன்பன் ( இவர் இன்னும் 34 கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கவேண்டும்) 19)வாதவூரான் 20)நிழலி 21)பிரபா 22)வாலி 23)நிலாமதி 24)சசி வர்ணம்( இவர் இன்னும் 26 கேள்விகளுக்கு பதில்கள் தரவேண்டும்) 25)ரசோதரன்
  33. இப்படித்தான் இருக்க வேண்டும். அந்த 8 வாக்கையும் பியதாசவுக்கு கொடுத்து விடுவோம்😎
  34. @கந்தப்பு இவை என்னுடைய தெரிவுகள். போட்டியை ஒழுங்கு செய்து நடத்துவதற்கு மிக்க நன்றி.................❤️. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) இல்லை 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி, 3 இடங்கள் 28) வன்னி தமிழரசு கட்சி, 3 இடங்கள் 29) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி, 3 இடங்கள் 30)திருமலை ஐக்கிய மக்கள் சக்தி, 2 இடங்கள் 31)அம்பாறை ஐக்கிய மக்கள் சக்தி, 4 இடங்கள் 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி, 5 இடங்கள் 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி, 4 இடங்கள் 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி, 11 இடங்கள் 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) ஶ்ரீதரன் 38) மானிப்பாய் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 39) உடுப்பிட்டி தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி 41) கிளிநொச்சி தமிழரசுக் கட்சி 42) மன்னர் தமிழரசுக் கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசுக் கட்சி 44) வவுனியா ஐக்கிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி 46) பட்டிருப்பு ஐக்கிய மக்கள் சக்தி 47) திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 8 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 6 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 11 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 80 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 11
  35. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். இந்த பெடியல் நல்ல படிச்சவர்களாக இருக்கலாம். ஆனல் அதுவே அரசியல் செய்வதற்கான ஏக தகுதியாக இருக்காது என நம்புகின்றேன். இன்றைய அரசியலுக்கு மாற்று அவசியம், ஆனால் அவர்களும் களத்தில் இறங்கி மக்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். வெறுமனே ரிவியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு, அதைப் பற்றிய அறிவை வளர்த்துவிட்டு போட்டி ஒன்றில் வெல்வதற்காக மைதானத்தில் இறங்க முடியாது. பயிற்சி முக்கியம். இவர்கள் தடாலடியென்று தேர்தலில் குதித்ததை நான் வரவேற்கவில்லை. அதுவும் அருச்சுனா...! கியல வடக் நாஹி
  36. என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என் தாய்மொழிக்கோ எதிரானவன் இல்லை. ஆனாலும், எவராலும் அங்கு எந்த விதமான அரசியல் தீர்வுகளும் வரும் என்று நான் நம்பவில்லை. இந்த நம்பிக்கையின்மை மிக உறுதியாக எனக்குள் வளர்ந்து நிற்கின்றது. அவர்களில் எவரும் ஒரு கிராமம் தன்னும் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை, வியாசரின் கதையில் வருவது போலவே. முழு இலங்கை மக்களும் ஒரு புதிய திசை நோக்கி நகர்வதற்கு இந்த மாற்றம் தேவை என்பதாலேயே இந்த தெரிவை நான் எடுத்தேன்.
  37. மிக்க நன்றி கொழும்பான். நீங்கள் சொல்லியிருப்பவர் போன்ற சில மனிதர்களை இங்கு கண்டிருக்கின்றேன். அவர்கள் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைகள் எல்லாம் என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் ஆகிவிட்டது போல ஒரு உணர்வு. சரத்சந்திர சட்டோபாத்யாய என்று நினைக்கின்றேன். மேற்கு வங்காள எழுத்தாளர். மிகப் பிரபலமான 'தேவதாஸ் - பார்வதி' கதையை எழுதியவர். ஒரு காலத்தில் இவர் ஒரு பெரிய நட்சத்திரம் என்று சொல்கின்றனர். இவர் இவரின் கடைசி நாட்களில் ஒரு மாணாக்கருக்கு எழுதிய கடிதம் ஒன்றை பல வருடங்களின் முன், என் இளமைக் காலத்தில், வாசித்திருக்கின்றேன். உங்களுக்கு இருக்கும் யோசனையே அவருக்கும் இருந்தது............. இது எங்கள் எல்லோருக்கும் என்றோ வரும் போல.................
  38. ஒமோம், அந்த இடத்திலேயே விட்டுட்டு வேற விசயங்களைக் கதைக்க வேணும்😂! #கிறீஸ் போத்தல்
  39. உங்களுக்கொரு மகன் பிறப்பான்.அவனுக்கு திலீபன் என்று பெயர் வைக்க வேண்டும் என்று எப்போது எண்ணக்கரு வந்ததோ எப்போதே நீங்கள் ஈழத்தவன் ஆகிவிட்டீர்கள். நன்றி வன்னியர்.
  40. 🤣 - விக்கி ஐயா அரசியலுக்குவர - நம்பிக்கையாக யாழுக்கு வந்து எழுத தொடங்கியவன் நான். அந்த தேர்தல் மறுநாள் ”மலர்ந்தது தமிழரசு” என உதயன் போட்ட தலையங்கம் பார்த்து, உருவானது வெறும் அதிகாரமில்லாச் சபை என்பது தெரிந்தும், மனதில் ஒரு சொல்லமுடியாத சந்தோசம் பரவியது. புலிகள் ஓய்ந்த பலவருடங்களின் பின்னும் மக்கள் அதே ஓர்மத்துடன் ஒரே அணியாக வாக்களித்தனர். அனந்தி, சயந்தன், ஐங்கரநேசன் என புதிய முகங்கள் நம்பிக்கை தந்தன. அதன் பின் சம், சும், மாவை, விக்கி, சிறி, தவராசா, சிவஞானம் இத்யாதிகள் ஆடிய கோமாளிக்கூத்தை பார்த்து வாழ்க்கை வெறுக்காத குறைதான். இனி என் (மானசீக) வாக்க தமிழரசு பெற மிக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். யார் கவிண்ட மணிதானே 🤣? உங்கள் வாக்கை மாம்பழத்துக்கு ஒதுக்கி உள்ளேன். இனி மாத்த முடியாது.
  41. இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்.. https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1
  42. நானும் எதுவித தளம்பலும் இல்லாமல் ஒரு ஆண்மகனுக்கு வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன் . .......யாருக்கும் சொல்ல மாட்டேன் ......போய் ஒரு அருச்சனை செய்யவேண்டும் . ......! 😎
  43. கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி . ..........! 😍
  44. வடக்கு கிழக்கு அரசியல் - அந்த அளவுக்கு நிபுணத்துவம் இல்லை .. தோழருக்காக முயற்சி செய்வோம்.. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) இல்லை 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)இல்லை 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 3 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----2 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி-------4 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 4 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------11 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 01 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------ ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------ தமிழரசுக்கட்சி 42) மன்னர்----------------------- ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------ தமிழ் தேசிய மக்கள் முன்னணி 44) வவுனியா------------------- தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------ தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை---------- தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை------------------- தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 4 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 5 54)தமிழரசு கட்சி---------------------- 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 56 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 127 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.