Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. kandiah Thillaivinayagalingam

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1487
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1569
    Posts
  4. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10209
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/29/24 in all areas

  1. அப்படியென்றால் முஸ்லீம்கள் அதிகமுள்ள பகுதியில் எப்படி ரிஷாத் பதியுதீனும், மஸ்தானும் வெற்றி பெற்றனர்? எது தேசிய மக்கள் சக்தியின் எதிர்காலத்தை தீர்மானிக்க போகிறீர்களா? அப்போ முஸ்லீம்களால்தான் தற்போதைய அரசு ஆட்சியை கைப்பற்றியதா? 76 ஆண்டுகால இலங்கை அரசியல் வரலாற்றில் சிங்கள ஆளும் கட்சியொன்று வடபகுதியில் பெரும்பான்மையாக வென்றதாக சரித்திரமேயில்லை, ஆனால் எந்த யாழ்ப்பாணத்து தமிழனும் எமது பகுதியில் இருந்து ஏன் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லையென்று கொந்தளிக்கவில்லை பக்கம் பக்கமாக கட்டுரையெழுதவில்லை. முஸ்லீம் ஒருவரை அமைச்சராக்கினால் அவர் முஸ்லீம்களுக்காக மட்டும் செயல்பட முடியாது, முஸ்லீம்கள் சொல்வதை மட்டுமே நடைமுறைபடுத்த முடியாது. எந்த அமைச்சரும் அரச தலைவரின் கட்டுப்பாட்டிலிருப்பவர், அரச தலைவர் சொல்வதையே நடைமுறைப்படுத்தும் ஒரு பதவியே அமைச்சு என்று இருக்கும்போது அவர் தமிழராகவோ சிங்களவராகவோ முஸ்லீமாகவோ இருப்பதில் என்ன பெரும் பாதிப்பு வந்துவிட போகிறது? உங்கள் அடி மனதில் இருப்பதெல்லாம் முஸ்லீம்களுக்கும் அரசாங்கத்தில் அதிகாரம் இருந்தால் தமிழர் நில ஆக்கிரமிப்பு , பொருளாதார சுரண்டலில் ஈடுபடலாம் என்பதே. ஏற்கனவே அரச செல்வாக்கு பெற்ற ஹிஸ்புல்லா,நசீர், பதியுதீன் துணையுடன் அதை செய்திருக்கிறீர்கள் கொரோனா காலத்தில் முஸ்லீம் உடல்களை எரித்துவிட்டார்கள், இலங்கையில் இனவாதம் மதவாதம் என்று முழங்கிய நீங்கள் தற்போது முஸ்லீம் முஸ்லீம் என்று முழங்குவதற்கு என்ன பெயர்? முன்பும் ஒருதடவை எழுதியிருக்கிறேன், முஸ்லீம் எனும் இனம் எக்காலமும் எவருடனும் ஒற்றுமையாகவோ உளப்பூர்வமாகவோ சேர்ந்து வாழாது, அவர்களின் எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தாலும் புதிதாய் இன்னொரு பிரச்சனையை உருவாக்குவார்கள். ஒருவன் எதற்கெடுத்தாலும் தகராறு பண்ணிக்கொண்டிருந்தால் அவனை தங்க தாம்பாளத்தில் இந்த உலகம் தாங்காது, மாறாக அவனை தள்ளி வைக்கும். அதுதான் உள்ளூரிலும் உலக அளவிலும் முஸ்லீம்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது.
  2. நான் இங்கே புதிதாக உறுப்பினராக இணைந்து இருக்கிறேன். ஆனாலும் யாழ் இணையத்துக்கு நான் பழையவன். இவள்ளவு நாளும் வெறும் ஒரு பார்வையாளனாக ஊர்புதினம் மற்றும் பல குழுக்களில் செய்திகளை வாசிப்பேன் நன்றி
  3. "கடவுளைக் கண்டுபிடித்தது யார்?" கடவுளைக் கண்டுபிடித்தது யார்? தன்னுடைய வாழ்வுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள மனிதனின் மறுப்பே கடவுளா? தனக்குள்ளே இருப்பதைப் பார்க்க மற்றவர் அஞ்சுவது போலவே பூசாரிகளும்தானே அஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.? "பயம்தான் கடவுளைக் கற்பித்தது." பூசாரிகளும் அந்தப் பயத்திற்கு எல்லோரையும் போல இரையாகிப் போனவர்தான். ஆனால் பூசாரிகள் மற்றவர்களை விடத் தந்திரசாலிகள். மனிதன் இருட்டைக்கண்டு பயந்த போது,நோயைக் கண்டு பயந்த போது,முதுமையைக் கண்டு பயந்த போது,இறப்பைக் கண்டு பயந்த போது அவனைப் பாதுகாக்க ஒருவர் தேவை என்றாகி விட்டது. எங்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை.அப்படி ஆகிவிடும் போது ஏதாவது ஒரு பாதுகாப்பை ஓர் ஆறுதலுக்காவது கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. எனவே நமது பயம்,கிலி,சாவு இவைதான் கடவுளைக் கற்பித்து விட்டன. எல்லோரும் பயந்திருப்பதையும் ஏதாவது பாதுகாப்பையும் எதிர் நோக்கியிருப்பதையும் பூசாரி பார்த்தான். மக்களை ஏய்க்க பூசாரிகளுக்கு வழிகிடைத்து விட்டது.அவர்கள் தரகர்களாகி விட்டார்கள். உன்னாலோ கடவுளைப் பார்க்க முடியாது.அதனால் கடவுள் இருக்கிறார்தான் என்று சொல்லி தத்துவங்களையும் சாத்திரங்களையும் கோவில்களையும் விக்கிரகங்களையும் சடங்குகளையும் பிரார்த்தனைகளையும் உருவாக்கி நாடகமாட பூசாரி வந்து சேர்ந்தான். கடவுளுக்கும் உனக்கும் இடையே நின்றுகொண்டு "நான் கடவுளோடு நேராகப் பேசுவேன் என்னிடம் என்னவென்று சொல் உன்னுடைய பாவங்களெல்லாம் சொல்லிவிடு கடவுளிடம் சொல்லி உன்னை மன்னித்து விடச் சொல்கிறேன்."என்கிறான். கடவுளை உன்னால் பார்க்க முடியாது.யாரோ ஒருவருக்குத் தெரியும் என்பதும் கடவுளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ள யாரோ ஒருவர் இருக்கிறார் என்பதும் உனக்கு ஒரு பெரிய ஆறுதலாகிப் போகிறது. "உன்னைவிட நன்றாகவே இந்தப் பூசாரிகளுக்குக் கடவுள் இல்லையென்பது தெரியும்." ஆனால் பூசாரிகளின் தொழில்தான் உலகத்தின் மிக மோசமான தொழிலாயிற்றே.விபச்சாரத்தைவிட அசிங்கமான தொழில். "விபச்சாரமே பூசாரிகள் ஆரம்பித்து வைத்த தொழில்தான்." அது இரண்டாவது தொழில்.முதல் தொழில் பூசாரியுடையது.பூசாரிக்கு அப்புறம் விபச்சாரியும் அதற்கு அப்புறம்தான் பிற நோய்களும் இருக்கின்றன. பல மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பூசாரிகள் இருக்கிறார்கள்.ஒவ்வொரு நாட்டிலும் பலதரப்பட்ட பூசாரிகள் இருக்கிறார்கள்.ஆனால் எல்லோருமே ஆறுதல் வார்த்தை சொல்லி மக்களை ஏய்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுள் இல்லையென்பது பூசாரிக்கு நன்றாகவே தெரியும்.அவருக்குத்தான் மிக நன்றாகத் தெரியும். கடவுள் அவருடைய வியாபரம்.வியாபாரம் என்கிற போதே பிழைப்புஎன்றாகிப் போகிறது. நன்றி
  4. கனகபுரம் துயிலும் இல்லத்தில் சிறிதரனையே ஓரம் கட்டிவிட்டார்கள். இதில் எப்படி அந்த தாயாரை விளக்கேற்ற கோரமுடியும் இவரால்?
  5. தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர் https://firetamil.com/?p=5799
  6. இரண்டு அல்லது மூன்று அமைச்சர் பதவிகளை கொடுத்து இருந்தால் இந்தப்பெரிய கட்டுரை வந்திருக்காது. ஏன் கடந்த அரசுகளில் இப்படியான கட்டுரைகள் வரவில்லை?
  7. சுனாமி நேரத்தில் முதலில் பேரலை வந்தது, பின் புலிகள் வந்தனர் மக்களுக்கு உதவ. அவர்கள் தோற்றபின், வியாபாரிகள் எம் பிரதிநிதிகள் என்ற வேடம் போட்டு வந்தனர். மக்களின் எந்த இடரையும் களைய விருப்பின்றி காலம் கடத்தினர். மக்கள் இம் முறை அவர்களுக்கு பாடம் படிப்பித்தனர். இன்று தேசியப்பட்டியல் மூலம் தெரிவான, கடல் சூழா ஒரு இடத்தில் பிறந்து கடல் அலைகளில் கால்கள் நனைக்காது உப்புக் காற்றை கொஞ்சம் தானும் சுவாசிக்காது மலையகத்தில் வாழ்ந்த ஒருவர் கடல் வள , மீன் பிடித்துறை அமைச்சராகியவுடன் மீனவர்களை நோக்கி ஓடோடி வருகின்றார் துயர் துடைக்க! இது தான் மக்கள் சேவை. தமிழ் தேசியம் வாழ, முதலில் தமிழ் மக்கள் வாழ வேண்டும். அதற்காகத்தான் தமிழ் மக்கள மாற்றத்தை கோரினர். இப்போதைக்காவது அது நிகழ்கின்றது. தமிழ் கட்சிகளின் கடைசிக் கோவணமும் உருவப்பட்டுக் கொண்டு இருக்கு இப்போது.
  8. இந்த நேரத்தில் இலங்கைத் தமிழர் சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு ஓத்தாசையாக இருக்க வேண்டியது அவசியம்.எமக்கும் சிங்களவருக்கும் நடந்த சண்டையில் தம்மை வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள் தான். இலங்கை நிர்வாக சேவை பரீட்சை மற்றும் இலங்கை law council நாடாத்தும் பரீட்சைகள், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கு நாடாதப்படும் viva exam போன்றவற்றில் முஸ்லீம் இனத்தவரின் தமிழ் மக்கள் மீதான வெறுப்பு அனைவரும் அறிந்ததே. முறைப்படி பன்றி இறைச்சி பரிமாறப்படும் பாராளுமன்றதுக்கு ஒழுங்கான முஸ்லீம் போகவே கூடாது. இலங்கையில் தமிழ் தெரிந்த உத்தியோகாஸ்தர் பதவிகள் தமிழ் மக்களுக்கு வழங்கப்படாமல் கொச்சை தமிழ் பேசும் முஸ்லீகளுக்கு அவர்களின் அரசியல் வாதிகளால் வழங்கப்பட்டபொழுது நாம் சும்மா தானே இருந்தோம், அதே போல் இப்போது தமிழ் பேசும் அமைச்சர்கள் இருக்கிறார்கள் என்று முஸ்லீம்கள் சும்மா இருக்க வேண்டியது தான்.
  9. இயற்கை அனர்த்த காலத்தில் வழங்கப்பட்ட அத்தியாவசிய உதவி 29/11/2024 சந்ததியார் அறக்கட்டளையூடாக சுழிபுரம் கிழக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன் குடும்பத்தினர் இயலாமையுடைய பிள்ளைகளின் 10 குடும்பங்களிற்கு அரிசி, பருப்பு, சோயாமீற், சீனி என்பவற்றை வழங்கி உதவியுள்ளனர். கதிர்காமநாதன் குடும்பத்தினருக்கு எமது புலர் அறக்கட்டளை நிர்வாகம் சார்பாகவும் இயலாமையுடைய பிள்ளைகளின் குடும்பங்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்துடன் அண்மையில்(26/12/2024) காலமான செல்வி கஜீபனாவின் அம்மாவிடம் 30000 ரூபா புலர் அறக்கட்டளையின் வங்கி நிதியில் இருந்து வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகளில் செயலாளர் திரு இ.பரணீதரன், பொருளாளர் சி.தேவகுமாரன், உபசெயலாளர் இ.சிறிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
  10. முதலில் பொதுவாழ்வு எனப்படும் அரசியலில் ரஜனி செல்வாக்குள்ளவரா? அவரே தேர்தலில் குதிக்கபோகிறேன் என்று சொல்லி கடைசி நேரத்தில் தொடை நடுங்கியதால் உடல்நிலை சரியில்லை அதனால் அரசியலில் இறங்கும் முடிவிலிருந்து விலகுகிறேன் என்று ஓடி போனவர் அவரை சந்தித்தால் எப்படி மற்றையவர்கள் செல்வாக்கு பெற முடியும்? அதற்குபின் வருடம் இரண்டுபடம் பறந்து பறந்து நடிக்கிறார் அதற்கு மட்டும் அவருக்கு உடல்நலம் சிறப்பாக ஒத்துழைக்கிறது. ஒரேயொருதடவை அக்கால கட்டத்தில் ஜெ’வும் சசியும் சேர்ந்து தமிழ்நாட்டையே மொட்டையடித்து ஆட்சி செய்த காலத்தில், பாட்ஷா பட விழாவில் பம்பாய் பட விஷயத்தில் மணிரத்னம் வீட்டுக்கு முஸ்லீம்கள் பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று ரஜனி பேசபோக அது ஆளும் கட்சிக்கும் ரஜனிக்கும் மோதலாகி ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜனி குரல்கொடுத்து காகம் உக்கார பனம் பழம் விழுந்த கதையாக திமுக ஆட்சியை பிடித்தது. பின்பு அதே வாயால் கோயம்புதூர் குண்டுவெடிப்புகளை முஸ்லீம்கள் செய்திருக்கமாட்டார்கள் என்று ரஜனி சொல்லபோக 15 ஆயிரம் அவரோட ரசிகர் மன்றங்களே ரசிகர்களே கலைத்ததாக கதையுண்டு. ஜெயலலிதாவுக்கெதிராய் குட்டிகதை வேறு சொன்னார் ரஜனி, ’’ஒரு கம்பம் இருக்கிறது அதை நட முயற்சிக்கிறோம், அது ஆடிக்கொண்டிருந்தால் மறுபடியும் கல்லு மண்ணுபோட்டு அடிச்சு இறுக்கிகிட்டே இருப்போம், அதேபோல ஓவரா ஆடினா அடி விழுந்துகொண்டே இருக்கும்’’ என்றார் ரஜனி பின்பு அதேவாயால் ஜெயலலிதாவை தைரிய லட்சுமி என்று வானளாவ புகழ்ந்தார். பின்பு நடந்த தேர்தல்களிலும் திமுக அனுதாபியாக ரஜனி இருந்தார் ஆனால் ரஜனி செல்வாக்கினால் எந்த தேர்தலிலும் திமுக வென்றதாக பதிவுகள் இல்லை. ரஜனி ஒரு சேற்றில் விழுந்த பன்றி என்று நேரடியாகவே மருத்துவர் ராமதாஸ் விமர்சித்து பாபா படத்தை வெளியிடவிடாமல் தடுப்பதில் முனைப்பு காட்டியபோது ரஜனிக்காக எந்த பிரமாண்ட கட்சிகளும் களமிறங்கவில்லை. அந்த கோபத்தில் அடுத்த தேர்தலில் நாம் யாரென்று காட்டுவோம் என்று முழங்கினார் ரஜனி , ஆனால் ரஜனியின் செல்வாக்கினால் அடுத்த தேர்தலில் பாமகவுக்கு எதிராக ஒரு துரும்புகூட நகரவில்லையென்பதே வரலாறு. சீமானும் அப்படித்தான் எவரையாவது திட்டிக்கொண்டே இருந்தால் அதுதான் அரசியல் என்று நினைக்கிறார், செயல்வடிவில் மக்கள் பணியாற்றி அடுத்த தேர்தலை எதிர்கொள்கிறாரா என்று பார்த்தால் செயல் என்று எதுவுமேயில்லை. எல்லோரிலும் குற்றம் கண்டுபிடிப்பார் பின்னர் அவர்களையே புகழ்ந்து தள்ளுவார், வாரிசு அரசியலை கடுமையாக கண்டிப்பார் பின்னர் என் அன்புதம்பி உதயநிதி என்பார். ஜாதி அரசியல் என்று சொல்லி அன்புமணி ராமதாசை திட்டி தீர்ப்பார் பின்பு என் அருமை அண்ணன் அன்புமணி என்பார். அதிமுகவை கண்டிப்பார், பின்பு ஐயா எடப்பாடி பழனிசாமி என்பார். ரஜனியை சத்ராஜுக்கு அடுத்ததா கிழித்து தொங்கபோட்டது சீமான் தான், இப்போ ரஜனி வீட்டில் போய் நிற்கிறார். இதுநாள்வரை விஜய்யை தன் கடைசிபிள்ளைபோல தூக்கி கொஞ்சோ கொஞ்சென்று கொஞ்சியவர் இப்போது விஜய் கொள்கை எதிர்ப்பில் ஆவேசமாக இருக்கிறார். எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இதே விஜய் வீட்டில் ஒரு சில மாதங்களிலோ அல்லது தேர்தல் நெருங்கும் நேரத்திலோ ஒரு பூங்கொத்து பொன்னாடையுடன் மின்னலடிக்கும் வெண்மையான பற்களை விரிசலாய் காட்டியபடி கூட்டணிக்காக போய் நிற்பார் சீமான். தமிழர் தமிழ்தேசியம் என்பதை வைத்து தமிழகத்தில் அரசியல் செய்வது எந்தகாலமும் வெற்றிபெறாது, ஏனென்றால் தமிழகம் மேற்குலக நாகரிகத்துக்கும், மொழி கலப்புக்கும், சினிமா, தொழில்,கல்வி,வேலைவாய்ப்பு என்பதற்கும், மறுபக்கம் முழுக்க முழுக்க தொழிலாளர்கள், வியாபாரம், உயர்பதவிகள், மத்தியபாதுகாப்பு படைகள், ஆட்சிக்கூட்டணி, கல்வி திட்டங்கள் மொழி கலவை, புராணகதைகள், வழிபாட்டு முறைகள் என்று வடநாட்டவர்களின் முழுகட்டுப்பாட்டில் என்றோ கையைமீறி போய்விட்ட தமிழகம் இனிஒருபோதும் மீண்டு வராது. சும்மா கூட்டங்களில் மட்டும் தமிழ் தமிழர் என்று முழங்கும்போது கைதட்டல்கள் வரும் விசில்கள் பறக்கும் ஆனால் அவை அனைத்தும் வாக்குகளாக ஒருபோதும் மாறாது, அது சாத்தியமாக இருந்தால் கருணாநிதி நிரந்தர முதல்வராக இருந்திருப்பார், சீமானும் எப்போதோ முதல்வராகியிருப்பார்.
  11. ஒழுங்குபடுத்துதலில் ஏதேனும் குழறுபடி ஏற்பட்டிருக்கலாம்.
  12. 10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.
  13. எந்த தலைப்பில் இணைப்பதென்று தெரியாது இந்த பகுதியில் இணைக்கிறேன் அதிவேகமுறையில் பயன் தரகூடிய பதிய முறைகள் என்று கரட், கற்றாழை, வாழைப்பழம், மஞ்சள்,உருளைகிழங்கு ஆகியவற்றை பயன்படுத்தி ... எலுமிச்சை, மா, கொய்யா, பப்பாசி போன்றவைபற்றி காணொலி இட்டிருக்கிறார்கள், இவை முழு சாத்தியமா என்பதற்கான ஆதாரங்களில்லை.இருந்தாலும் தகவலுக்காக பகிர்கிறேன் பெரும்பாலும் தேங்காய்நார் உரமே பதியத்திற்கு மிக சிறந்தது என்கிறார்கள். மா எலுமிச்சை அவகாடோ தக்காளி & கத்தரி ஒட்டுமுறை பப்பாசி கொய்யா
  14. "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 01 உலகில் எந்த ஒரு பெண்ணும் அல்லது தாயும் ஒரு கோழையைப் பெற ஒரு போதும், எப்போதும் எந்த நிலையிலும் எந்த காலத்திலும் விரும்ப மாட்டாள். உதாரணமாக, கி.மு 1700 க்கும் கி.மு 1100 க்கும் இடைப் பட்ட காலத்தில் தொகுக்கப் பட்ட ரிக் வேதத்தில் கூட, விவாஹ சுக்தம் - மண்டலம் 10, சுக்தம் 85 பாடல் 44 [Holy Rig Veda: Book 10, hymn 85, verse 44] இல் "Not evil-eyed, no slayer of thy husband, bring weal to cattle, radiant, gentlehearted; Loving the Gods, delightful, bearing heroes, bring blessing to our quadrupeds and bipeds." இப்படி கூறுகிறது. அதாவது நீ பொறாமை, எரிச்சல் அற்றவளாக என தொடங்கி, இடையில் நீ வீரர்களைப் பெறுவாயாக என்று வாழ்த்துகிறது. அது மட்டும் அல்ல இந்த நூற்றாண்டு பாரதியும் இன்னும் ஒருபடி மேலே போய்: “வீரரைப் பெறாத மேன்மைதீர் மங்கையை ஊரவர் மலடி என்று உரைத்திடு நாடு” ["சத்ரபதி சிவாஜி" / பாரதியார்] என மலடிக்கு ஒரு புது விளக்கமே கொடுக்கிறார். அப்படி பட்ட வீரத் தாயையும் அவள் பெற்ற அந்த மாவீரர்களையும் புறநானூறு கவிதையில் விரிவாக 2000 / 2500 வருடங்களுக்கு முன்பே வடித்த பெருமை எங்கள் சங்கத் தமிழர்களுக்கு உண்டு. மேலும் போரில் இறப்பதே வீரர்களுக்கு அழகு என்பதுடன், அப்படி சண்டையிட்டு இறப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் குறிக்கப் பட்டிருப்பது, அவர்கள், சங்கத் தமிழர்கள் ஒரு உண்மையான வீரனை எவ்வளவு தூரம் உயர்வாக மதித்தார்கள் என்பது புலன் படுகிறது. இதைத் தான் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கண்ணன் சொல்கிறான்: "O son of Kuntī, either you will be killed on the battlefield and attain the heavenly planets, or you will conquer and enjoy the earthly kingdom. Therefore, get up with determination and fight." "குந்தியின் மகனே! கொல்லப் பட்டாலோ நீ சொர்க்கத்தை அடைவாய்; ஜெயித்தாலோ பூமியை அனுபவிப்பாய். ஆகையால் போருக்குத் துணிந்தவனாக எழுந்திரு!" (கீதை 2-37) மேலும் இந்த போரில் மடிந்த, பெரும் வீரர்களை புதைத்த இடத்தில், அவர்களின் நினைவாக நடு கல்கள் நாட்டப் பட்டன எனவும், போரில் வெற்றி வேண்டி அங்கு நடு கல் வணக்கம் செய்வது ஒரு வழமையாக இருந்துள்ளதும் சங்க பாடல்களில் தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது போரில் தன் வீரத்தை நிலை நிறுத்தி எதிரி படையை கலங்கடித்து இறுதியில் வீழ்ந்து மடிந்த அந்த மாவீரனை தெய்வமாகவே போற்றி வணங்கினார்கள் எம் மூதாதையர்கள். அதாவது வீரத்தை தெய்வமாக கருதி வழிபாடு நிலை அங்கு இருந்துள்ளது. எனினும் அறம் சார்ந்த வீரமே பெருமை உடையதாய் கருதப் பட்டது. அந்த நிலை இன்று அருகிப் போயிற்று. இதை நாம் கண்டு, கேட்டு, இலங்கையில் இந்த நூற்றாண்டு அனுபவித்தும் உள்ளோம். சங்க காலம் என்பது கி.மு.700 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதி ஆகும். இக் காலத்தில் தோன்றியது தான் புறநானூறு. அந்த புறநானூற்றில் தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய பல முதன்மைச் சான்றாதாரங்கள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் இல்லை. அதாவது குறிப்புகள் மட்டுமே உள்ளன. சங்கக் காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றத் தொடங்கிய காலம் என்று கூறுவார். இதனால், புறநானூற்றில் இனக்குழுத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோரின் தகவல்கள் காணக் கிடைக்கின்றன. அதில் அரசர்களின் வீர செயல்கள், தன் நாட்டிற்காக, தன் இனத்திற்காக போரில் சண்டையிட்டு சாவதையே பெருமையாக கருதும் இயல்பு, அப்படி மாண்ட வீரர்களை தெய்வமாக்கிய பண்பாடு, அப்படி போரில் வீர சாவு அடைகிறவர்கள் சொர்க்கத்திற்கு போவார்கள் என்று உற்சாகப்படுத்தும் ஒரு நம்பிக்கை, இவைகளுக்கு மேலாக, எமக்கு கிடைத்த மிக முக்கிய தகவல் அறவழியில் போரை நடத்தும் வழக்கம். இது இந்த காலத்திற்கும் தேவையான ஒன்று. இப்ப இந்த ஒழுக்கம் போரில் இருப்பதில்லை. போர் விதி முறைக்கு அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயல் படுகிறார்கள். குழந்தைகள், வயது போனவர்கள், பெண்கள், தாய்மார்கள், அப்பாவிகள் இவர்களை எல்லாம் கண் மூடித்தனமாக அழிக்கப் படுகிறார்கள். அது மட்டும் அல்ல வைத்தியசாலை, பாடசாலை, பாதுகாப்பு இல்லங்கள் அல்லது இடங்கள் என அறிவிக்கப் பட்ட இடங்கள் கூட தாக்கப் படுகின்றன. சரண் அடைந்தவர்களும் கொல்லப் படுகிறார்கள். போர் பிணையாளர்களும் கொல்லப் படுகிறார்கள். இது இப்ப உலகில் பல இடங்களில் சர்வ சாதாரணமாக நடை பெறுகின்றன. குறிப்பாக இலங்கை, பர்மா போன்ற ஆசிய நாடுகளில் தமிழர்கள் நேரடியாக பார்த்துள்ளார்கள், அநுபவித்துள்ளார்கள். ஆனால் முறைப் படி போர் சாற்றும் வழக்கம் பழங் காலத்திலேயே தமிழர்களிடம் இருந்தது என்பதை புறநானூறு 9 கூறிச் செல்கிறது. கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படும் பாண்டிய மன்னன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவனை புகழ்ந்து, அவன் அறவழியில் போர் நிகழ்த்தும் பண்புடையவன் என்று போற்றி, இப் பாடல் பாடப் பெற்றுள்ளது. அது தான் அந்த முக்கிய தகவல். அதாவது சங்க காலத்தில் அரசர்கள் நிகழ்த்திய போர்கள் அறவழிப் பட்டவை என்றும், தர்ம யுத்தம் என்றும் இதனால் அறிகிறோம். இதில் போர் தொடுக்கப் போகிறேன். ஆனிரை [பசுக் கூட்டம்], ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள் [பிராமணர்], பெண்டிர், பிணியுடையவர், மக்கட் செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விடுங்கள் என முன் கூட்டியே அறிவித்து தமிழர் போரை ஆரம்பித்தார்கள் என்பதை அறிய முடிகிறது. இதே போல கி.மு 2150 - 1400 ஆண்டில் எழுதிய சுமேரிய காவியமான கில்கமெஷிலும் (Epic of Gilgamesh) மற்றும் விவிலியத்தின் பழைய ஏற்பாட்டிலும் போர் சாற்றுதல் குறிப்பிடப் பட்டுள்ளது. [Brien Hallett, The Lost Art of Declaring War]. கில்கமெஷ் காப்பியம் என்பது பண்டைக் கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப் பட்ட ஒரு செய்யுள் இதிகாசம் ஆகும். இன்று போர்ப் பிரகடனம் அல்லது போர் சாற்றுதல் (Declaration of war) என்பது ஒரு நாடு முறைப்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளின் மீது போர் தொடுக்கப்போவதாக அறிவிக்கும் செய்கையாகும். இந்த போர் சாற்றுதலுக்கான சர்வதேச நெறிமுறை 1907ம் ஆண்டு கையெழுத்தான ஹாக் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. இனி புறநானூறு - 09 பாடலை விரிவாக பார்ப்போம் "ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங் கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் ப·றுளி மணலினும் பலவே!" [புறநானூறு - 9] பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும், பெண்களும், நோயுடையவர்களும், இறந்ததன் பின்னர்த் தென்திசையில் வாழ்வோராகிய முன்னோர்களுக்கு விருப்பத்துடன் ஈமச் செயல்களைச் செய்வதற்குரிய பொன்னை யொத்த ஆண் மக்களைப் பெறாதவர்களும் ["பிதிர்க்கடன்" / "இறந்தவர்களுக்கு செய்யும் கடன்" ஆற்றுதற்குரிய புதல்வர்களைப் பெறாதாரையும்] பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள்! நாங்கள் எங்கள் அம்புகளை விரைவாகச் செலுத்தப் போகிறோம்’ என்று இந்த பாடல் கூறுகிறது. அதாவது அரசர்கள் போரில் இப்படி பட்ட அப்பாவிகளை கொல்லக் கூடாது. அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி விட்டுத் தான் போரைத் தொடங்க வேண்டும் என்று கூறுகிறது. அதுதான் யுத்த தருமமாகும். பண்டை மன்னர்கள் அவ்வாறு தான் போர்களை நடத்தினார்கள் என்றும் அது தான் அறவழிப் பட்ட போரின் அடையாள மாகும் என்றும் இப்பாடல் இடித்து கூறுகிறது. இப்படி போரை நடத்திய இந்த மன்னன், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, "பஃறுளி ஆற்றின் மணலை விட எண்ணிக்கை மிக்க பல காலம் வாழ்வானாக” என மேலும் அவனை வாழ்த்துகிறது. பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர். பல் துளி என்னும் சொற்கள் இணையும் போது பஃறுளி என அமையும். அதே போல, சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம், வஞ்சின மாலையில் "பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு, தீத் திறத்தார் பக்கமே சேர்க’ என்று, காய்த்திய பொன்-தொடி ஏவ, புகை அழல் மண்டிற்றே- நல் தேரான் கூடல் நகர்." அதாவது பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழந்தை ஆகியவர்களை விட்டு விட்டுத் தீய செயல் புரிபவர் பக்கம் சென்று எரிப்பாயாக - என்று கண்ணகி கூறினாள். அவ்வாறே மதுரை மாநகரம் எரிந்தது என பாடப் பட்டது இதை மீண்டும் மெய்ப்பிக்கிறது. போர்க் களத்தில் சென்று வீரம் விளை வித்து பகைவரது வாளாலும், வில்லாலும், அம்பினாலும் விழுப்புண் படும் நாளே பயனுடைய நாள்கள், மற்ற நாள்களெல்லாம் பயனற்ற வீண் நாள்கள் என்ற உணர்வோடு வாழ்ந்துள்ளனர் என்பதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருவள்ளுவரும், "விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து." என்ற தனது 776 வது குறளில் கூறுகிறார் என்பதையும் கவனிக்க. இனி அடுத்து வரும் பகுதிகளில் சில புறநானூற்று வீரர்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 02 - "வீரத் தாய்" தொடரும்.
  15. அவுஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடைக்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்குத் தடை விதிப்பதற்கான சட்டத்தை இயற்றப்போவதாக, அந்நாட்டுப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அரசின் இந்த திட்டத்திற்கு அந்த நாட்டின் அனைத்து மாகாணங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன. இது குறித்து காணொலி மூலம் பிரதமர் ஆன்டனி ஆல்பனிஸ் எட்டு மாகாணங்களின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களும் முழு ஆதரவு தெரிவித்தனர். இதனையடுத்து இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சிறுவர்களின் அறிவை வளர்க்கும் சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு ஒரேயடியாகத் தடை விதிப்பதைவிட, அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்களுக்கு சொல்லித் தருவதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்று இத்தகைய சட்டத்துக்கு சிறுவர்கள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இச்சூழலில் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் சட்டத்தை மீறி, சமூக ஊடகங்களை பயன்படுத்துவோருக்கு 50 மில்லியன் டாலர்கள் வரை அபராதம் விதிக்கும் மசோதாவையும் முக்கிய கட்சிகள் ஆதரித்துள்ளன. இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் 102 வாக்குகள் ஆதரவாகவும், 13 வாக்குகள் எதிராகவும் கிடைத்தன. #avustreliya# #social media# https://thinakkural.lk/article/312800
  16. எஸ்.என்.எம்.சுஹைல் ஐரோப்­பி­யரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட பின்னர் இலங்­கையில் இலங்கை அர­சியல் நிர்­வாக முறைமை அறி­மு­க­மா­னது. 1505 இல் போர்­க்­கீசர் இலங்­கையின் கரை­யோ­ரங்­களை கைப்­பற்­றினர், அவர்­க­ளி­ட­மி­ருந்து 1658 இல் ஒல்­லாந்தர் இலங்­கையின் கரை­யோரப் பகு­தி­களை ஆக்­கி­ர­மித்­துக்­கொண்­டனர். இவர்கள் இந்­நாட்டை ஆக்­கி­ர­மித்த போது நாட்டில் பல்­வேறு நிர்­வாக முறைமை இருந்­து­வந்­தது. குறிப்­பாக கண்டி இரா­ஜியம் வலு­வான அர­சாக இருந்­தது. எனினும் 1796 இலங்­கைக்கு படை­யெ­டுத்த பிரித்­தா­னியர் 1815 இல் முழு இலங்­கை­யையும் கைப்­பற்றி ஒரே நிர்­வா­கத்தின் கீழ் கொண்டு வந்­தனர். கால­னித்­து­வத்தின் வரு­கை­க்கு முன்­னரும் பின்பும் இலங்­கையின் ஆட்­சியில் முஸ்­லிம்கள் பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்­துள்­ளனர். குறிப்­பாக குரு­நாகல் யுகத்­தின்­போது அர­ச­னா­கவும் குராசான் மன்­னரின் கதையும் இருக்­கி­றது. இருப்­பினும் பிரித்­தா­னியர் 1833 இல் அறி­மு­கப்­ப­டுத்­திய கோல்­புறூக் அர­சியல் யாப்பின் படி ஆறு நிர்­வாக உறுப்­பி­னர்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். இதில் இலங்கை முஸ்­லிம்கள் புறக்­க­ணிக்­கப்­பட்­டனர். இலங்கை முஸ்­லிம்­களின் மறு­ம­லர்ச்­சியின் தந்­தை­யான எம்.சி.சித்­தி­லெப்பை போன்­றோரின் போராட்­டத்தின் பின்பு 1889 ஆம் ஆண்டு கோல்­புறூக் அர­சி­ய­ல­மைப்பில் திருத்தம் கொண்­டு­வ­ரப்­பட்டு பிர­தி­நி­தித்­துவம் எட்­டப்பட்டது. இதன்­போது, இலங்கை முஸ்லிம் ஒருவர் சட்ட நிரூ­பன சபையின் உத்­தி­யோகப்பற்­றற்ற உறுப்­பி­ன­ராக தெரி­வானார். 1910 ஆம் ஆண்டு குரு­மக்­கலம் யாப்­பிலும் 1921 தற்­கா­லிக மெனிங் அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவும் ஒரு முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறுதி செய்­யப்­பட்­டது. எனினும், 1924 இல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட மனிங் டெவொன்­சயர் அர­சியல் சீர்­தி­ருத்தம் முஸ்லிம் பிர­தி­நி­தித்­து­வத்தை மூன்­றாக உறுதி செய்­தது. இவ்­வாறே 1931 இல் டொனமூர் சீர்­தி­ருத்தம் முன்­வைத்த நிர்­வாக முறையில் மந்­திரி சபையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் இருந்­தது. இத­னி­டையே, 1947 சோல்­பரி யாப்பு, சுதந்­தி­ரத்­திற்கு பின்­ன­ரான அமைச்­ச­ர­வையில் தொடர்ச்­சி­யாக முஸ்லிம் அமைச்­சர்கள் இருந்­து­வந்­துள்­ளனர். எந்­த­வித அழுத்­தங்­களும் இன்றி நாட்டின் இன பல்­வ­கை­மையை கருத்­திற்­கொண்டு ஒவ்­வொரு அர­சாங்­கமும் நாட்டின் நிர்­வா­கத்­து­றையின் பங்­கு­தா­ரர்­க­ளாக முஸ்லிம் சமூ­கத்தின் பிர­தி­நி­தி­யொன்றை உள்­ளீர்க்கும் நடை­முறை இருந்து வந்­துள்­ளது. எனினும், முதன் முறை­யாக இலங்கை சோச­லிச ஜன­நா­யக குடி­ய­ரசின் பத்­தா­வது பொதுத் தேர்­த­லுக்கு பின்னர் நாட்டின் ஒன்­ப­தா­வது ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்ட 22 பேர் கொண்ட அமைச்­ச­ர­வையில் முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாது செய்­யப்­பட்­டுள்­ளது. இதனால், தேசிய மக்கள் சக்­தியை 61 வீதத்­திற்கும் அதி­க­மான வாக்குப் பலத்­துடன் மூன்றில் இரண்டு பாரா­ளு­மன்ற ஆச­னத்தைப் பெற்று வலு­வான ஆட்சி அதி­கா­ரத்தை பெற்­றுக்­கொள்­ள­வ­தற்கு பங்­கு­தா­ரர்­க­ளாக இருந்த முஸ்லிம் சமூகம் புறக்­க­ணிக்­கப்­பட்­டமை பல்­வேறு வகை­யிலும் விமர்­ச­னங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. வாக்­க­ளித்த, வாக்­க­ளிக்­காத, ஆத­ர­வ­ளித்த, ஆத­ர­வ­ளிக்­காத மக்கள் பல்­வேறு விமர்­ச­னங்­க­ளையும் முன்­வைக்கும் நிலையில் அர­சாங்கம் இதற்கு பதி­ல­ளிக்கும் விதம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. குறிப்­பாக ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்க கடந்த வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் சிம்­மா­சன உரை­யின்­போது தனது உரையின் ஆரம்­பத்­தி­லேயே இன­வாதம், மத­வாதம் பற்­றி­யெல்லாம் பேசி­யி­ருந்தார். எனினும், கடந்த 18 ஆம் திகதி அவர் வழங்­கிய அமைச்­ச­ரவை நிய­மனம் குறித்து முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இதற்கு பதி­ல­ளிக்கும் வித­மா­கத்தான் இந்த பதிலை குறிப்­பிட்­டாரா என்ற கேள்­வியும் எழுந்­தது. இதை­விட கடந்த வார இறு­தியில் அக்­கு­றணை அஸ்னா பள்­ளி­வா­ச­லுக்கு சென்ற வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­திடம் இது விட­ய­மாக முஸ்­லிம்கள் நேர­டி­யாக கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர். இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் விஜித, “முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வேண்­டு­மென கேட்­கா­தீர்கள். அது தவறு. 2004 ஆம் ஆண்டு நான் அமைச்­ச­ராக இருந்­த­போது, முஸ்லிம் பாட­சாலை மாண­வி­க­ளுக்கு ஹிஜாப் அணி­வ­தற்­கான துணியை வழங்க வேண்­டு­மென அமைச்­ச­ரவை பத்­தி­ர­மொன்றை சமர்ப்­பித்தேன். நான் சிங்­கள அமைச்சர் தானே. முஸ்லிம் அமைச்சர் அல்­லவே?அம்­பா­றையில் எங்­க­ளுக்கு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­க­வில்லை. ஆனால் நாங்கள் ஆதம்­பா­வாவை தேசி­யப்­பட்­டி­யலில் நிய­மித்தோம்.மேல்­மா­காண ஆளுநர் முஸ்லிம் ஒருவர். எனவே முஸ்லிம் ஒருவர் அமைச்­ச­ர­வையில் இலை­யென்று, அந்த விட­யத்தில் தொங்கிக் கொண்­டி­ருக்க வேண்டாம்” என குறிப்­பிட்­டி­ருந்தார். இது இப்­ப­டி­யி­ருக்க கடந்த திங்­க­ளன்று சபா­நா­யகர் அசோக்க ரன்­வல அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கு சென்று அதன் தலைவர் முப்தி ரிஸ்வி, செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் மற்றும் உலமா சபையின் நிர்­வாக பிர­தி­நி­திகள் உள்­ளிட்ட முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்­தி­ருந்தார். இதன்­போது, நாட்டில் சகல இன மக்­களும் தங்கள் மத, கலா­சார அடை­யா­ளங்­களை பேணி வாழும் உரிமை பெற்­றுள்­ளனர். ஜனா­தி­பதி அனு­ர­கு­மார திஸா­நா­யக்­கவின் பாரா­ளு­மன்ற அக்­கி­ரா­சன உரையை மேற்­கோ­ளிட்டு, நாட்டில் ஒற்­று­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் உறு­திப்­ப­டுத்தும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­படும். இன­வாத, மத­வாத சிந்­த­னை­களை தூண்டி மக்­களை பிரிப்­ப­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்­கக்­கூ­டாது என வலி­யு­றுத்­தினார். எனினும், அவர் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நி­தித்­துவம் உறு­தி­ப­டுத்­தப்­ப­டாமை குறித்து எந்த கருத்­தையும் நேர­டி­யாக குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை. இத­னி­டையே, இது­வி­ட­ய­மாக நேற்­றுமுன் தினம் செவ்­வாய்க்­கி­ழமை அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் ஊட­க­வி­ய­லா­ளர்கள் சந்­திப்பில் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ரவை பேச்­சாளர் நலிந்த ஜய­திஸ்­ஸ­வினால் சில கருத்­துகள் முன்­வைக்­கப்­பட்­டது. ஊட­க­வி­ய­லாளர் றிப்தி அலி­யினால் அமைச்­ச­ர­வையில் முஸ்லிம் பிர­தி­நிதி இல்­லாமை தொடர்பில் அமைச்­ச­ரவை பேச்­சா­ள­ரிடம் நேர­டி­யாக கேள்வி எழுப்­பப்­பட்­டது. இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்”நாங்கள் இனம், மதம் அல்­லது சாதி அடிப்­ப­டையில் அமைச்­ச­ர­வையை அமைக்­க­வில்லை. அமைச்சு அதி­கா­ரங்­களை கையாள்­வதில் மிகவும் திற­மை­யான நபர்­களை நாங்கள் தேர்ந்­தெ­டுத்தோம். மேல் மாகாண ஆளு­ந­ராக முஸ்லிம் வர்த்­தகர் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். பிரதி சபா­நா­யகர், பிரதி அமைச்சர் போன்ற பத­வி­களை முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்கள் வகிக்­கின்­றனர். மேலும், முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் திகா­ம­டுல்ல மாவட்­டத்தில் ஒருவர் தேசியப்பட்­டியல் மூலம் நிய­மிக்­கப்­பட்டார். குறிப்­பிட்ட இனங்கள், மதங்கள் அல்­லது சாதிகள் அன்றி ஒட்­டு­மொத்த இலங்கை தேசத்­துக்கும் சேவை செய்­வ­தி­லேயே நாம் கவனம் செலுத்­து­கிறோம்” என்றார். அத்­துடன், தற்­போ­தைய நிலை­மையை இனம் அல்­லது மதத்தின் கண்­ணோட்­டத்தில் பார்க்க வேண்டாம். ஒன்­றி­ணைந்த இலங்கை தேசம் என்ற தொலை­நோக்கு பார்­வை­யுடன் புதிய அர­சாங்­கத்­தையும் அமைச்­ச­ர­வை­யையும் நாங்கள் நிறு­வி­யுள்ளோம். இந்த அணு­கு­மு­றை­யா­னது பிரச்­சி­னை­களை மிகவும் திறம்­பட கையாள்­வ­தற்கு எமக்கு இட­ம­ளிக்கும்” என்றும் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் சுகா­தாரம் மற்றும் ஊட­கத்­துறை அமைச்­ச­ரு­மான டாக்டர் நலிந்த ஜய­திஸ்ஸ கூறினார். இங்கு அமைச்­சர்­க­ளான விஜித ஹேரத் மற்றும் நலிந்த ஜய­திஸ்ஸ ஆகியோர் ஒரே மாதி­ரி­யான பதில்­க­ளையே குறிப்­பிட்­டுள்­ளனர். எனவே, இந்த விவ­கா­ரத்­திற்கு இப்­ப­டித்தான் பதி­ல­ளிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்­தி­யினால் முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா என்ற வினா எழு­கி­றது. இத­னி­டையே, மிகவும் தகு­தி­யு­டைய அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்­குத்தான் அமைச்சுப் பத­வி­களும் பிர­தி­ய­மைச்சுப் பத­வி­களும் அமைச்­சு­களின் செய­லாளர் பத­வி­களும் வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. ஆக, தேசிய மக்கள் சக்தி ஊடாக எட்டு முஸ்லிம் உறுப்­பி­னர்கள் தெரி­வா­கினர். இவர்­களில் ஒருவர் மாத்­திரம் பிர­தி­ய­மைச்சுப் பத­விக்கு தகு­தி­யா­ன­வ­ராக இருந்­துள்ளார். அத்­தோடு, பிரதி சபா­நா­யகர் பத­வியே இன்­னொரு முஸ்லிம் பிர­தி­நி­தியின் தகு­திக்கு பொருத்­த­மா­ன­தாக இருந்­துள்­ளது. எனினும், இலங்கை நிர்­வாக சேவையில் இருக்கும் முஸ்லிம் அதி­கா­ரிகள் தகு­தி­யற்­ற­வர்­க­ளாக கணிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவே கருத வேண்­டி­யுள்­ளது. இம்­முறை பொதுத் தேர்தல் இலங்கை அர­சியல் வர­லாற்றில் முற்­றிலும் மாறு­பட்­ட­தாக அமைந்­தது. இந்த மாற்­றத்தை விரும்­பியே பெரும்­பா­லான முஸ்லிம் மக்­களும் தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். இந்­நி­லையில், அவர்கள் பாராம்­ப­ரி­ய­மாக ஆத­ரித்து வந்த ஐக்­கிய தேசியக் கட்சி அல்­லது அந்த கட்­சி­யி­லி­ருந்து பிரிந்த ஐக்­கிய மக்கள் சக்­தி­யையும் முஸ்­லிம்­ கட்­சி­க­ளையும் விட்டு வெளி­யேறி புதிய அர­சியல் பாதையை தேர்ந்­தெ­டுத்து தேசிய மக்கள் சக்­தியை ஆத­ரித்­தனர். ஜனா­தி­பதி அநுர மீதான நம்­பிக்கை மற்றும் முஸ்லிம் கட்­சிகள் மீதான அதி­ருப்­தி­யினால் மக்கள் இந்த தீர்­மா­னத்­திற்கு தள்­ளப்­பட்­டனர். மோச­மான முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் செயற்­பா­டு­களை பிழை என்று கருதி தமது பாதையை மாற்­றிக்­கொண்ட முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். குறிப்பாக, தேசிய மக்கள் சக்தி முஸ்லிம் மக்களை அரவணைக்க தவறுகிறதா என்ற கேள்வியும் எழ ஆரம்பித்துள்ளது. முஸ்­லிம்கள் மத்­தியில் நன்­ம­திப்பை பெற்­றுள்ள தேசிய மக்கள் சக்தி அதனை தொட­ர்ந்தும் தக்க வைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுக்க வேண்­டுமே தவிர முஸ்லிம் சமூ­கத்தை அதி­ருப்­திக்­குள்­ளாக்கும் தீர்­மா­னங்­களை எடுக்கக் கூடாது என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் விடயங்களில் தேசிய மக்கள் சக்தி எடுக்கப் போகும் நிலைப்பாடுகளிலேயே அதன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.- Vidivelli https://www.vidivelli.lk/article/18149
  17. இதிலும் நம்மவர்கள் முன்னாலும் பின்னாலும் __________ போல அலையினம்
  18. அடிச்சவுடன் அரைமணித்தியாலத்திலை நிற்கிற அமைச்சர் அந்த இடத்தில் நின்றிருக்க வேணுமே.. அதை படமெடுத்து விற்றுப்பிழைக்கும் கூட்டம் பத்து நிமிசத்தில் நின்றிருக்குமே..
  19. அஞ்சு தரம் கேட்டாலும் என்ன பெயராக மாற்றவேண்டும் என்று சொல்லுமட்டும் மாற்றமாட்டார்கள். ஒரு பெயரை நீங்கள்தான் முன்மொழியவேண்டும்😀
  20. அநுர அலையில் சேரமான், பாலசிங்கம் பிரபாகரன், போலித் துவாரகா அடிபட்டுப் போனார்கள். காணொளியை வெளியிடுவார் என்று சொல்லியுள்ளார். ஆனால் யூடியுப்பர்கள் காலத்தில் இவர்களின் சலசலப்பு எவருக்கும் கேட்கவில்லை. 11:50 இல் தோன்றுகின்றார். சண்டையா நடக்கின்றது, சமாதானச் செய்தி அனுப்ப? யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரவின் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சாதாரணமாக உலவுகின்றார். மக்கள் குறைகளைக் கேட்கின்றார். சேரமானின் துவாரகா புரஜெக்ட் பல்லிளித்து நிற்கின்றது.
  21. இனி இப்படியான பொரிகள், பொதிகள் அள்ளி வழங்கப்படட்டு அவை யானைகளாக காட்சி(வீடியோ) பெரிப்பித்து ஊதப்படுவது தொடரும் ...
  22. சட்டம் நீதி எல்லோருக்கும் சமன் என்கிறார்கள். பார்க்கலாம்.
  23. ஏன் ஒருவர் ஏற்ற வேண்டும்? இது சும்மா தூக்கிப்பிடிக்கும் வேலை. ஏதோ ஓர் சமிக்ஞையை கொண்டு (அந்த நேரத்தில் மணி ஒலி, அல்லது மாவீரர் நாள் பாடல்) ஒலிக்க தொடங்கும் போது எல்லோரும் விளக்கேற்றலாம் என்று செய்யப்படுவதே நல்லது ஒருவர் தியாகத்தை இன்னொருவரறால் மேவுவது போன்ற உணர்வுகளை தவிர்க்க. இதில் ஒரு படிநிலையும் இருக்க கூடாது. மாவீரர்களுக்கு இடையே elitism இருப்பதே கூடாது. இதை ஒருவர் கூட சிந்திக்கவில்லை என்பது கவலைக்கிடம்.
  24. சேர்ந்த காசு போதுமானதால் போலித் துவாரகா வெளிவரவில்லை.
  25. ஒரு ஷாட் அடிச்சா தெரியும் உறுதியோ ? தடுமாறுதோ? என்று சும்மா பகிடிக்கு 😄😄
  26. நன்று,நன்றி... இதுதான் மேற்குநாடுகள், புலம்பெயர் அமைப்புகளைப்பார்த்து யோசிக்க வைக்கிறது.பிரபாகரக் கோட்டுபாடு இளையோரிடையே ஆழப்பதிந்து ஆக்ரோசமாக எழுந்துவிடுமோ என்ற ஆய்வுகளைச் செய்கிறார்கள். எடுத்துக்காட்டிற்காக ஒரு விடயத்தைக் குறிப்பிடலாம். யேர்மனியத் தமிழ்க் கல்விக் கழகத்தின் பாடநூல்கள் உரியவர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அண்மையில் அறிந்துகொண்டேன். யேர்மனியிலும் சில இளையோரது பற்றை அவதானிக்கும்போது, அதிசயமாக இருக்கிறது. காணவில்லை.பேசவில்லை.பழகவில்லை.ஆனால் தலைவர்மீது அளவிடமுடியாத பற்று. பிரபாகரம் அழிவற்றது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  27. அனுரவோடு சேர்ந்து அமுக்காவிட்டால்…வெகுவிரைவில் வெளியே வரும். அவர் இந்த விடயத்தில் கொடுத்த விளக்கத்தை நீங்கள் நம்புகிறீர்களா? தலைவர் வந்ததும் சேர்த காசை தருவோம் என புலம்பெயர் கள்ளர் சொன்னது போன்றதே அவரின் விளக்கம். கிளிநொச்சியில் குறித்த நபருக்கு பார் லைசன்ஸ் கொடுக்கும் படி சிறி அரசுக்கு அளுத்தம் கொடுத்தார். இப்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். ———- ஒரு மாவீரரின் தாயை அவமதிக்கவில்லை… ஒழுங்குபடுத்தியதில் தவறு… சரி விசயம் வெளி வந்ததும் அவர் வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்க வேண்டாமா? ஒரு விளக்கேத்துவதில் செயல்திறனை காட்ட முடியவில்லை…. இவர் எல்லாம் சமஸ்டி வாங்கி….🤣
  28. அரசினது பிரதிப்பேச்சாளரது குத்துக்கறணத்தை எமது மாக்கள் பார்க்க வேண்டும். இன்னும் வரும். ஏதோ இடதுசாரிகள், எமது துன்பங்களைப் புரிந்துகொண்டவர்கள்...... என்று சொன்னார்கள். ஆனால், நடப்பது நம்பமுடியாததாக இருக்கப்போகிறது என்பதை இவரது கூற்று உறுதிசெய்கிறது.
  29. தேசியத் தலைவரின் பிறந்த நாளுக்கு கூடுதலான இளம் சந்ததியினர் பங்கு கொண்டு சிறப்பித்தது மிகவும் சந்தோசமாக உள்ளது. படங்கள் இணைப்புக்க நன்றி நொச்சி.
  30. சாராயக்கடை சிறியிடமும் அவரின் அடிப்பொடிகளிடமும் வேறு என்னத்தை எதிர்பார்க்கலாம்.
  31. வணக்கம் வாத்தியார் . .........! அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் சத்தியம் சிவம் சுந்தரம் ஆ.... சரவணன் திருப்புகழ் மந்திரம் அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ஆ... அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன் அண்ணன் உறவுக்கென்றே உடலெடுத்தேன் அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ.. பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான் பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான் பெண்மையை வாழ வைத்தான் ஆ... மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன் ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன் அழகுக்கு அழகானேன் ஆ.......! --- அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் ---
  32. இருந்தா போடு இல்லாட்டி பாரு . ........! 😍
  33. அகவை வணக்கத்தை அழகாக கொண்டாடியிருக்கின்றார்கள் . .........! நன்றி நொச்சி ........!
  34. ம்.... விடுதலைப்புலிகள் ஏன் இவரை கொலை செய்ய வேண்டும்? விடுதலைக்கெதிரான வேலைகளை செய்திருப்பாரோ? இருக்கும் இருக்கும். அன்றைய அரசு சொன்னது, தங்களுடன் சேர்ந்து இயங்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொலை அச்சுறுத்தல் என்பதால் பாதுகாப்பளிக்கபடுகிறதென. சரி, ஒரு பொதுமகன் கொலை செய்ய நினைத்தால் அவருக்கு ஆயுதம் எங்கிருந்து வந்தது? எதற்காக இவரை கொலை செய்ய வேண்டும் என்பதற்கு பாதுகாப்பு பெற்றோரும், வழங்கியோருமே விளக்கம் அளிக்க கடமைப்பட்டவர்கள். அது இருக்க, சுமந்திரனின் ஆதரவாளர்கள், புலம்பெயர்ந்தோரே அவரை கொலைசெய்ய ஆட்களை ஏவியதாக பிரச்சாரம் செய்கின்றனர். செய்தி உண்மையெனில், ஏன் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை? சிவில் அமைப்புகள் ஏற்பாடு செய்த பொலிகண்டி பேரணியில் சுமந்திரனும் சாணக்கியனும் புகுந்து பிரபல்யம் காட்டியபோது, அவருக்கு மரண அச்சுறுத்தல் ஏதுமில்லை அவரது இராணுவ பாதுகாப்பு மீளப்பெறப்படும் என அரசாங்கம் கூறிய போது, தான் பாதுகாப்பு கோரவில்லை என்று சொன்னவர், அதை ஏற்க முன்னரே ஏன் கூறவில்லை? மறுக்கவில்லை? வாக்குகளுக்கு மக்கள், பின் அந்த மக்களாலேயே தனக்கு ஆபத்து என பாதுகாப்பு. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அந்த மக்கள் மேலேயே பழி போட்டு அச்சுறுத்துவது. தான் பாதுகாப்பு கோரவில்லை, எனக்கு அப்படி ஒரு அச்சுறுத்தலும் இல்லை என்பவர், ஏன் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வாடும் அவர்களை விடுவிக்க முயற்சிக்கவில்லை? அவர்கள் சிறை வாழ்வுக்கு காரணமே இவர்தானே? இப்போ தாராளமாக நேரமிருக்கிறது, யோசித்து திருந்துவதற்கு. எதற்கெடுத்தாலும், இவர் கிறிஸ்தவர் என ஒரு துண்டை இழுத்துக்கொண்டு ஓடிவந்து மூடுவீர்களே, இதுதான் கிறிஸ்தவ பண்பா? கிறிஸ்தவர் என இவரை காட்டி நீங்கள் மார் தட்டலாமா? அது நிஞாயமா? அன்று பாதுகாப்பினரின் கெடுபிடி மத்தியிலும், இன்று இந்த இயற்கை அனர்த்த நிலையிலும் மாவீரர்களுக்கு முண்டியடித்து வணக்கம் செலுத்தும் மக்கள், சுமந்திரனுக்கு வாக்களிப்பது அந்த மாவீரர்களுக்கு செய்யும் துரோகம். இன்று அதற்குரிய தண்டனையை அளித்து தமது சபதத்தை முடித்துள்ளனர்.
  35. சும்மா அறிக்கைகளை விடக்கூடாது. அண்மைக்கால உலக காலநிலை சீரழிவுகள் மிக மோசமாகவே உள்ளது. சகல வசதிகளிலும் உள்ள நாடுகளிலும் மோசமான அழிவுகளே உள்ளது. அந்த நாடுகளும் அழிவுகளை தாங்க முடியாமல் தவிக்கின்றன.
  36. தொழில் நிமித்தம் சென்ற போது எடுத்த படம் என நினைக்கின்றேன். மற்றும் படி சுமந்திரன் அர்ச்சுனா போல் எங்கும் எப்போதும் கோட் சூட்டுடன் திரிவதில்லை. அதை விட சுமந்திரன் ஒரு சில இடங்களில் தமிழர் தரப்பு மக்களுக்கு உதவிகளையும் செய்திருக்கின்றார். எமது அரசியல்வாதிகளை ஒரேயடியாக ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடில்லை.
  37. வாழ்க்கையில் யார் முன்னேறிய வர்கள் ! ஒரு பெரிய கம்பெனி முன் ஒருவர் டீ கடை வைத்திருந்தார். ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து டீ சாப்பிட்டுக் கொண்டே.... "நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க... இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்.... பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்... "இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்" "எப்படி?" "பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து டீ கேனில் டீ விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க... அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா... உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்... நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க... மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க.... இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு... இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு... நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்.... நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்... அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்... நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்... ஆனால் உங்களுக்கு அப்படியில்லை... உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது... உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்.... உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்... நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்.... உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க.... ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்.... மேனேஜர் குடித்த டீ'க்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்... ஆகவே "தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது" THANKS - kongu guru prakash
  38. அநுரவின் அரசாங்கம் ஈழத் தமிழருக்கு எதிரியா இல்லையா என்பதை ஈழத்தில் வாழும் மக்கள்தான் சொல்லவேண்டும். அதனை வரலாறு தெளிவாகப் பதியும். சும்மா விசர்க் கதைகதைச்சுக்கொண்டு திரியத்தான் பழ. நெடுமாறன் போன்றோர் லாயக்கு. அநுர அரசில் எல்லை தாண்டிவந்து மீன்கொள்ளையில் ஈடுபடும் இந்தியக் கடற்கொள்ளையருக்கு ஆபத்து என்பதைத்தான் அய்யா சொல்லியிருக்கின்றார் என நினைக்கின்றேன்.
  39. எம். கே. சிவாஜிலிங்கம், அரச புலனாய்வாளர்களின் அடாவடித்தனமற்ற இப்படியான சுதந்திர நிகழ்வுகளில் மட்டும் முன்னிற்பவர் அல்ல. நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இறுக்கமான தடை இருந்த கடந்த காலங்களில் எல்லாம் புயலாய் ஒற்றை மனிதனாய் நின்று நினைவேந்தல்களை செய்திருக்கிறார். ஆயுத முனையில் இராணுவத்தின் முன் ஒற்றை வாழைக்குற்றியுடன் நின்றிருக்கிறார். இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரச் செல்வங்களை நினைவேந்தி காட்டியிருக்கிறார். மேதகுவின் தாயார் இந்தியாவில் இறந்த போது கூட அவரின் உடலை ஏற்க இன்று தமிழ் தேசியத்தில் தாம் ஊறி திழைத்தவர்களாக காட்டும் அத்தனை அரசியல்வாதிகளும் பின்னின்ற போதும் தானாக முன்னின்று வீரப்புதல்வனை சுமந்த அந்த தாயின் உடலை ஈழமண்ணிற்கு கொண்டுவந்து அவரின் சொந்த இடமான வல்வெட்டிதுறையில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மரணச்சடங்கை நிகழ்த்தினார். அவரின் ஆஸ்தியை இந்தியக் கடலில் கூட கரைப்பித்தார். ஒவொரு முறையிம் தலைவனின் பிறந்தநாளுக்கு பாக்கெட்டில் இனிப்புடன் தான் திருவார் மற்றவர்களுக்கு வழங்கவென! இப்புறை அவரின் வீட்டிலேயே மக்களை ஒன்றுதிரட்டி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். சமீப காலங்களில் கடும் நோயினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் இருந்தாலும் தன் உடல் நிலை கருதாது இன்றும் கடும் மழையில் நனைந்து மாவீரங்களை நினைவேந்துகிறார். இதுதான் அவரது அடையாளம். ஆனால் மக்கள் தான் அவரை அடையாளம் கண்டுகொள்ளவில்லை!!! சிவாஜி அரசியலுக்கு அப்பால் ஓர் தமிழ் தேசிய செயற்பாட்டாளன்! Mathusuthan Kumarasamy
  40. தமிழ்த் தேசியம் செத்துவிட்டது, சிங்கள இனவாதிகளை தமிழ் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்கிற செய்திகளும், இலங்கையராக இணைவோம் என்கிற கூச்சல்களும் இப்போது எங்கே போய்விட்டன? தமிழினம் தலைவரையும் மாவீரர்களையும் எப்போதும் மறக்காது என்பதற்கு இன்றைய மாவீரர் தின நிகழ்வுகள் சாட்சி. வீரவணக்கம் !!!
  41. "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 04 [மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்] சங்க காலத்தில் தமிழர் போர் மரபுகள் அறப் போர் முறையைச் சார்ந்ததே ஆகும். அவர்களது போர் முறை நேர்மையாக இருந்தது. காலை சூரிய உதயத்தின் போது முரசறைந்து போர் தொடங்குவர். சூரியன் மறையும் வரை மட்டுமே போர் நடை பெற்றது. பின் முரசறைந்து போரை நிறுத்துவர். சங்க காலத்து தமிழர்களின் தரைப் படைகள் ஐந்து படையணிகளாக பகுக்கப் பட்டிருந்தன: அவை யானைப் படை, குதிரைப் படை, தேர்ப் படை,காலாட் படை, தூசிப் படை ஆகும் இதில் நவீனயுக கொமாண்டோப் படையணிகளுக்கு நிகராக இயங்கியதே தூசிப் படையாகும். அதாவது முதலாவதாக வந்து [படையின் முதற்பகுதியாக] சண்டையிடும் படை தான் தூசிப் படை அல்லது தார் ஆகும். ["தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து."/குறள் எண்: 767] இனி, அப்படியான எதிர்த்து வரும் தூசிப் படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? என ஆறாத் துயரம் எய்தி, கேள்வி கேட்கிறார் கழாத்தலையார் என்ற கி.மு மூன்றாம் / இரண்டாம் நூற்றாண்டளவில் வாழ்ந்த, சங்க புலவன். இவனை இப்படி கேட்க வைத்தது சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக் கைப் பெருவிறற் கிள்ளி ஆகிய இருவரினதும் வீரச் சாவு தான். பண்டைத் தமிழகத்தில் புகழ் பெற்று விளங்கிய மூன்று நாடுகளுள் ஒன்றாகத் தமிழகத்தின் மேற்குக் கரையில் அமைந்திருந்த சேர நாட்டை ஆண்ட அரசவழியினரிச் சேர்ந்தவர்களே சேரர்கள் எனப்படுகிறார்கள். சேரரகளின் கொடி விற்கொடி ஆகும். சேரர்கள் வில்லால் அம்பு எய்வதில் சிறந்தவர்களாக் இருந்தனர் என்று உய்த்துணரலாம். மூவேந்தர்களில் ஒருவரான இவர்கள் கரூரையும், வஞ்சியையும் தலை நகராகக் கொண்டிருந்தனர். சில சேர அரசர்கள் தொண்டியையும் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் போர் வன்மையும் கொடைச் சிறப்பும் மிகுந்தவன். இவனுக்கும் சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கும் இடையே திருப்போர்ப்புறம் [திருப்போர்ப்புறம் என்பது இப்போது தஞ்சை மாவட்டத்தில் கோவிலடியென வழங்குகிறது] என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் இருவரும் தம் படைகளைப் போரிட வேண்டாம் என்று நிறுத்தி விட்டு, இவ்விருவர் மட்டுமே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இவ்வாறு போரிடும் முறைக்கு ‘அறத்தின் மண்டுதல்’ [அறம்:- ஒழுக்கம், மண்டு:- தாக்கு] என்று பெயர். போர்க்களத்தில், சேரமான் உயிர் நீங்கும் தறுவாயில் இருப்பதைக் கண்ட கழாத்தலையார் அவனைப் புகழ்ந்து பாடினார். சேரன் தன் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி கழாத்தலையாருக்கு அணிவித்துப் பின்னர் இறந்தான். மன்னர்கள் இருவரும் இந்தப் போரில் விழுப்புண்பட்டு போர்க்களத்திலேயே இறப்பதைக் கண்ட புலவர் கழாத்தலையார் மிகுந்த வருத்த முற்றார். அவர்களுடைய வெற்றியை அறை கூவும் முரசு ஓய்ந்தது. மன்னர்களின் மனைவியர் கைம்மை நோன்பை மேற்கொள்வதை விரும்பாது தம் கணவரைத் தழுவி உயிர் துறந்தனர். விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் இந்த இரு மன்னர்களையும் விருந்தினராகப் பெற்றனர் என்று இந்த காட்சியை பார்த்து விட்டு தான் இப்படி பாடினான். "வருதார் தாங்கி அமர் மிகல் யாவது பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டுக் குருதிச் செங்கைக் கூந்தல் தீட்டி நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் எடுத்து எறி அனந்தர் பறைச் சீர் தூங்கப் பருந்து அருந்துற்ற தானையொடு செரு முனிந்து அறத்தின் மண்டிய மறப்போர் வேந்தர் தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே பன் நூறு அடுக்கிய வேறு படு பைஞ்ஞிலம் இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறைக் களம் கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும் பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழே!" [புறநானூறு 62] இனி, எதிர்த்து வரும் தூசிப்படையத் தடுத்துப் போரில் வெற்றி பெறுவது எப்படி? அப் போர்க் களத்தில் சண்டையிட்டு அங்கே புண் பட்ட வீரர்களின் புண்ணைத் தோண்டிக், குருதி தோய்ந்த சிவந்த கையால் தமது தலை மயிரைக் கோதிய, ஓளிமிக்க உருவத்தையுடைய பேய்ப் பெண்கள், மேன் மேலும் கொட்டு கின்ற மந்தமான தாளத்திற்க் கேற்ப ஆடுகின்றனர். இறந்த படை வீரர்களின் உடலைப் பருந்துகள் உண்ணுகின்றன. அத்தகைய படை யோடு, சினந்து அறவழியில் போர் புரிந்த வீரமுடைய மன்னர்கள் இருவரும் இறந்தனர். அவரது குடைகள் தளர்ந்தன. அவர்களுடைய புகழ் மிகுந்த சிறப்புடைய முரசுகள் வீழ்ந்தன. நூற்றுக் கணக்கான படை வீரர்கள் அடங்கிய பல வகைப் படைகளும் இருக்க இடமில்லாத படி நெருங்கி இருக்கும் அகன்ற பாசறைகளில், போர்க் களத்தைத் தம்முடையதாக்கிக் கொள்வோர் இல்லாமல், காண்போர்க்கு அச்சம் தரும் வகையில் போர் உடனே முடிந்தது. மன்னர்களின் மனைவியர் பசுமையான கீரைக் கறியை உண்டு, குளிர்ந்த நீரில் மூழ்கும் கைம்மை நோன்பை விரும்பாதவராய் தம் கணவரைத் தழுவி உடன் கிடந்தனர். வாடாத பூக்களையும், இமைகளைச் சிமிட்டாத பார்வையையும், நறுமணமுள்ள அவியாகிய உணவையும் உடைய தேவர்கள் பெறுதற்கரிய விருந்து பெற்றனர். உங்கள் புகழ் விளங்குவதாக, என அந்த புலவன் இருவரையும் வாழ்த்தினான். போர் என்னும் ஊரைப் போர்வை என்றும்,போஒர் என்றும் சங்கப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. போர் என்றவுடன் சண்டை நினைவுக்கு வந்துவிடும். இதிலிருந்து வேறுபடுத்துக் காட்ட ஊர்ப்பெயரைப் போஒர் என்றனர். இவ்வூர் போர்களமாகவும் மாறியது. அப்போது திருப்போர்ப்புறம் எனப்பட்டது. இங்குப் பாடிவீடு அமைக்கப்பட்ட இடம் கட்டூர் எனப்பட்டது. இந்தத் திருப்போர்ப் புறம் தஞ்சை மாவட்டத்திலுள்ள ’கோவிலடி’ என்ற ஊர் என்றும், இவ்வூர்க் கல்வெட்டுக்களில் ‘திருப்பேர்த் திருப்புறம்’என்று குறிப்பிடுவதாகவும் சொல்லப்படுகிறது. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் போர் வன்மையும் கொடைச் சிறப்பும் மிக உடையவன். இவனுக்குப் பிறகு சேர நாட்டை ஆட்சி செய்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனாவான். வரலாற்று ஆசிரியர்கள் உதியஞ் சேரலாதன் என்ற சேர மன்னனின் மகனாகிய இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் என்னும் சேரமன்னனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் இருவரும் இறந்ததாகக் கூறுகின்றனர். ஆகவே, சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் இமயவரம்பன் நெடுஞ்சேர லாதனும் ஒருவனே எனப்படுகிறது. கரிகால் வளவனுக்கு மணக்கிள்ளி, வேற்பஃறடக் கைப் பெருவிறற்கிள்ளி என்று இரண்டு மகன்கள் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். கரிகால் வளவன் இறந்த பிறகு, வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி புகார் நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழ நாட்டின் ஒரு பகுதியை ஆண்டான். மணக்கிள்ளி என்பவனின் மகள் நற்சோனை என்பவளை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மணம் புரிந்தான். கண்ணகிக்குச் சிலையெடுத்த சேரன் செங்குட்டுவனும் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளும் இமயவரம்பனுக்கும் நற்சோனைக்கும் பிறந்த மகன்கள் என்று கூறப்படுகிறது. கிட்டத் தட்ட இப்படியான ஒரு போர் தான் எல்லாளனுக்கும் [அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மன்னன்] துட்டகாமினிக்கும் [இவனுடைய இயற்பெயர் கெமுனு என்றும், துஷ்டத்தனம் செய்து வந்ததால், துட்ட காமினி என்று அழைக்கப்பட்டான் என்றும் மகாவம்சம் கூறுகிறது. தென் இலங்கையை ஆண்ட மன்னன்] இடையில் இலங்கையில் இரண்டாயிரத்தி நூறு வருடங்களுக்கு முன் நடைபெற்றது. துட்டகைமுனுவால் எல்லாளனின் போர்த்தந்திரமையை வெற்றி கொள்ள முடியவில்லை. அவனது படையிலே இறப்புக்கள் அதிகமாக காணப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன. அதனால் "நாம் இருவரும் நேருக்கு நேர் நின்று போர் புரிவோம். யாருக்கு வெற்றி என்பதை நமது நேரடிப் போர் தீர்மானிக்கட்டும்" என்றான் கெமுனு என்னும் துஷ்டகாமினி. போர் நடந்த போது எல்லாளனுக்கு வயது 74.துட்ட காமினி இளைஞன். என்றாலும் அவன் விட்ட சவாலை, தமிழ் மன்னன் எல்லாளன் ஏற்றுக் கொண்டான். அவன் அறப்போர் மரபு வழி வந்தவன் அல்லவா? இருவரும் பட்டத்து யானைகள் மீது அமர்ந்து போரிட்டனர். எல்லாளன் வயோதிகராக இருந்தாலும் தீரத்துடன் போரிட்டார். என்றாலும், துட்டகாமினியின் யானை, தன்னுடைய தந்தத்தால் எல்லாளன் அமர்ந்திருந்த யானையின் முகத்தில் குத்தி கிழித்தது. யானை கீழே சாய்ந்தது. அது உடன் சேர்ந்து எல்லாளனும் விழுந்தான் அப்பொழுது, யுத்த தருமத்திற்கு மாறாக துட்ட காமினி எறிந்த ஈட்டி, எல்லாளன் உயிரைக் குடித்தது. அதன் பின் அவன் திட்டங்கள் முற்றாக நிறைவேறுவதற்கு முன், பாம்பு கடித்து அவனும் பின் இறந்து போனான். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 05 - "மாவீரன் அதியமான் நெடுமான் அஞ்சி" தொடரும்.
  42. "புறநானூற்று மாவீரர்கள்" / பகுதி 03 ["மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்"] வீரயுக காலம் என கலாநிதி கைலாசபதியால் கருதப் பட்ட , சங்க கால தமிழ் பெண்களின் / தாயின் வீரம் செறிந்த பண்பினை முன்பு பார்த்தோம். மானமா? உயிரா? என்று கேட்டால், மானமே பெரிது என்று வாழ்ந்த வாழ்க்கை தான் புறநானூறு வாழ்க்கை. "மயிர் நீப்பின் உயர் வாழாக் கவரி மான்" தான் அந்த வீரர்கள். இதைத் தான் வள்ளுவரும் தனது குறள் 969 இல் "மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்." என்று கூறுகிறார். அதாவது நாணி நிற்கும் சூழல் நேரா வண்ணம் நம்முடைய செயல்கள் ,குணங்கள் இருக்க வேண்டும் என்கிறார். அப்படித்தான் அன்று வீர மரணம் அடையும் போக்கு சங்க கால வீரனிடம் இருந்தது. இந்த வலிமையை வீரத்தை சேர்ப்பது தாய் முலைப் பாலடா என்கிறார் பாரதியார். "கருவினில் வளரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை.. களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள்பிள்ளை! " ["அச்சம் என்பது மடமையடா" / மன்னாதி மன்னன் (1960)] என்கிறான் கண்ணதாசன். தாயின் கருவில் உண்டாகும் போதே ஒரு மனிதனின் பண்புகள் உருவாகின்றன என்கிறது விஞ்ஞானம். இந்த வீரத் தமிழ் தாய் அத்துடன் நிற்கவில்லை. தமது பிள்ளைகளின் மார்பில் ஐம்படைத் தாலி அணிவித்து இன்புற்றனர் என்கிறது சங்க பாடல்கள். அதுமட்டும் அல்ல, கம்பராமாயணம் / பால காண்டம் / நாட்டுப் படலத்தில் [58] கூட : "தாலி ஐம்படை தழுவு மார்பிடை மாலை வாய் அமுது ஒழுகு மக்களைப் பாலின் ஊட்டுவார் செங் கை ... " என்று கூறுகிறது. அதாவது ஐம்படைத் தாலி அணி செய்யும் மார்பிலே சொள்ளு நீர் வழியும் [saliva - உமிழ்நீர்; எச்சில்] தம் குழந்தைகளுக்குத் பாலமுதைப் புகட்டும் தாய்மார்களின் அழகிய கைகள் என்று கூறுகிறது. அது என்ன ஐம்படைத் தாலி? வேல் [அல்லது சங்கு], சக்கரம், தண்டாயுதம், வாள், வில் ஆகிய ஐந்து கருவிகளின் உருவங்களால் அமைந்த தாலியை பிறந்து ஐந்தாம் நாள் அணிவித்து மகிழ்கிறார்கள். அதன் பின் சிறிது வளர, அவர்களின் விளையாட்டு காலங்களில் சேவற்கோழி, ஆட்டுக்கடா, எருது போன்ற வற்றை ஒன்றோடு ஒன்று மோத விட்டு பார்த்து மகிழ விடுகிறார்கள். இப்படி வீரத்தை ஊட்டியவர்கள் இந்த வீர பெண்கள் / தாய்கள். அதாவது வீரத்தையே பாலாக ஊட்டி வளர்த்த பண்பினை காண்கிறோம். "வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்? மாபெரும் வீரர் மானங் காப்போர் சரித்திரந்தனிலே நிற்கின்றார் “ இப்படி கண்ணதாசன், அதே பாடலின் இறுதியில் கூறுகிறான். அப்படி மக்கள் மனதிலும் சரித்திரத்திலும் நிற்கின்ற, அவர்கள் வளர்த்த சில மாவீரர்களை இனி பார்ப்போம். மாவீரன் பாண்டியன் நெடுஞ்செழியன்: தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்ற சிறப்புப் பெயரைப் பெற்ற சங்ககாலப் பாண்டிய நாட்டினை கி.பி. 205 முதல் 215 வரை ஆட்சி செய்த ஒரு மன்னன். இவரின் தந்தை இளமையிலேயே இறந்ததும், இவனது தாயும் அந்த கால மரபுப்படி உடன்கட்டை ஏறியதாலும் [கணவனை இழந்த மனைவி அவரின் சடலம் தீமூட்டப்படும் போது அந்தத் தீயில் தன்னை அழித்துக் கொள்ளுதல் உடன்கட்டை ஏறுதல் எனப்படுகிறது. இந்த சடங்கு ஆங்கிலேயர் ஆட்சியில் 1829 ம் ஆண்டு சட்டத்துக் எதிரானதாக ஆக்கப்பட்டது], சிறு வயதிலேயே முடிசூட்டப் பட்டவன் இவன். புறநானூறு 77 இவனை, இந்த பாலகனை, "கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு, ...................................................................... ......................................... தார் பூண்டு, தாலி களைந்தன்றும் இலனே; பால் விட்டு அயினியும் இன்று அயின்றனனே; " என்று பாடுகிறது. அதாவது சலங்கை கழற்றப் பட்ட கால்களில் ஒளி பொருந்திய கழல்கள் அணிந்திருக்கிறான் [கழல் என்பது காலில் அணியும் ஒருவகை அணி. காலில் கழல் அணிவது அவர்களுடைய வீரத்தை எடுத்துக் காட்டுவதற்காக. அதற்குப் பெயரே 'வீரக்கழல்'. ஆண்கள் அணிவது இந்த வீரக் கழலைத் தான்.] ......... ஆனால் அவன் இன்னும் (சிறுவர்கள் அணியும்) ஐம்படைத் தாலியைக் கழற்றியதாகத் தெரியவில்லையே! பாலுணவு உண்ணுவதை நிறுத்தி இன்று தான் சோற்றுணவு உண்டவன் போலத் தோன்றுகிறானே! என்று கூறுகிறது. நெடுஞ்செழியன் இளையவன், வயது முதிராதவன் ஆற்றல் இல்லாதவன் என இகழ்ந்து சோழநாட்டை ஆண்ட இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர நாட்டை ஆண்ட மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டினை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் போன்றோர் கூறினர். இவ்வனைவரும் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படை யெடுத்துத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தாக்கினர். இதை அறிந்த இவன்: “இந்தப் பாண்டியன் நெடுஞ் செழியனுடைய நாட்டையும் சிறுவனாகிய இவன் அரசாள்வதையும் தங்கள் அறியாமையால் சிலர் இகழ்ந்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். அத்தகையவர்கள் சிரித்து இகழத்தக்கவர்கள். அவர்கள், என்னை அறியாப் பருவத்தினன் என்று கூறித் தங்கள் யானைப் படைகளையும் தேர்ப் படைகளையும் குதிரைப் படைகளையும் காலாட் படைகளையும் செருக்கோடு திரட்டிக் கொண்டு வந்திருக் கிறார்கள். அவர்கள் தங்களைப் பற்றித் தாங்களே தேவைக்கு அதிகமான தன்னம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்னையும் என் அரசையும் துணிவாக இழித்துப் பேசியவர்கள் ஆவார்கள். அவர்களை வேரோடு அழிந்து சிதைந்து போகும் படியாகத் தாக்கி முரசத்தையும் குடையையும் கைப் பற்றிக் கொண்டு வெறுங்கையர்களாகத் துரத்த வில்லையானால் என் பெயர் பாண்டியன் நெடுஞ்செழியனில்லை. என் வெண்கொற்றக் குடையின் நிழற் கீழே வாழும் குடிமக்கள் என் ஆட்சியில் அறம் காணாமல் ‘இந்த அரசன் கொடியவன்’ என்று பழி தூற்றப் படுவேனாக! மிக்க சிறப்பையும் உயர்ந்த அறிவையும் உடைய மாங்குடி மருதனைத் தலைவராகக் கொண்ட பாண்டிய நாட்டுப் புலவர்கள் என்னை விரும்பிப் பாடா தொழியட்டும். ஆளப்படும் மக்களெல்லாம் அழுது புலம்பிட, ‘இல்லை யென்று கேட்ட இரவலர்க்கு இட்டு மகிழாத பாவம் என்னை வந்து சேரட்டும். இது என் சபதம்...” எனக் தனது புறநானூறு பாடல் 72 மூலம் வஞ்சினம் கொட்டி, உடனே படைகளோடு போருக்குப் புறப் பட்டான். அத்தனை அரசர்களையும் எதிர்த்துப் போரிட்ட இந்த, நெடுஞ்செழியன் அனைவரையும் தோற் கடித்தான் என்பது வரலாறு. இவனது இந்த பெருமையை புலவர் மாங்குடி கிழாராகிய மருதனார் இப்படி கூறுகிறார்: மிக ஆழமான பெருங்கடலில் காற்றால் உந்தப்பட்டு / தள்ளப்பட்டு ஓடும் மரக்கலம் நீரைக் கிழித்துக் கொண்டு செல்வது போல, உன் யானைகள் சென்று போர்க் களத்தில் வீரர்களை விலக்கி இடம் அகலச் செய்து ஊடுருவ, அவ்வாறு களம் அகலச் செய்த பரந்த இடத்தில், அதாவது அந்த யானை சென்ற அகன்ற பாதையில், ஒளிவிடும் வேல்களை ஏந்தி உன்னை எதிர்த்த அரசர்களை அழித்து போர்க் களத்தைக் கலக்கி, அவர்களது புகழ் பொருந்திய முரசுகளை நீ கைப்பற்றினாய். அவ்வரசர்களின் முடி [கிரீடம்] யணிந்த தலைகளை அடுப்பாகவும்,அவர்களின் குருதியை உலை நீராகவும், வீரவளை அணிந்த அவர்களின் கைகளைத் துடுப்பாகவும் கொண்டு துழாவிச் சமைக்கப்பட்ட உணவால் போர் வேள்வி செய்த செழிய! நிலை பெற்ற புகழுடைய வேள்விகளைச் செய்து முடித்த வேந்தே! நீ அவ் வேள்விகளைச் செய்த பொழுது, நிறைந்த கேள்வி, ஐம்புலன்களை அடக்கிய மனவலிமை, நான்கு வேதங்களையும் கற்றதால் பெற்ற அறிவு, ஆகியவற்றையுடைய அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருந்தார்கள்; பகை மன்னர்கள் உனக்கு ஏவல் செய்தார்கள். உன்னோடு மாறு பட்டு உன்னை எதிர்த்த பகைவர்களும் ஒருவகையில் நோன்பு செய்தவர்கள் தான். அவர்கள் போரில் வீரமரணம் அடைந்ததால், அவர்களும் விண்ணுலகம் சென்று வாழ்கிறார்கள். அதாவது போரில் வீரமரணம் அடைந்தவர்கள் எல்லோரும் எந்த வேறுபாடும் இன்றி சொர்க்கம் போவார்கள் என்று உரைக்கப்படுகிறது. இனி அந்த பாடலை பார்ப்போம். "நளிகட லிருங்குட்டத்து வளிபுடைத்த கலம்போலக் களிறுசென்று களனகற்றவும் களனகற்றிய வியலாங்கண் ஒளிறிலைய வெஃகேந்தி அரைசுபட வமருழக்கி உரைசெல முரசுவௌவி முடித்தலை யடுப்பாகப் புனற்குருதி யுலைக்கொளீஇத் தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்ற மாக மன்ன ரேவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு மாற்றா ரென்னும் பெயர்பெற் றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே." [புறநானூறு பாடல் 26] மேலும், புறநானூறு 19, & 25, அகநானூறு 36, 175 & 209, நற்றிணை 387, மதுரைக்காஞ்சி 55, 127 பாடல்களில் இந்த தலையானங்கானத்து போரைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அப்படி பெருமை பெற்ற, சிறப்பு பெற்ற இவனின் தந்தை, வெற்றிவேற் செழியன் ஆகும். இவன், கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை செய்த, ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனின் தம்பி ஆகும். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 04 - "மாவீரன் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன்" தொடரும்.
  43. நாங்கள்... யாழ்ப்பாண மண்ணையே தெரிந்திராத, பியதாசவுக்கு வாக்களிக்கும் போது... அவர்கள் ஹேமசந்திரவுக்கு வாக்களிக்கட்டுமன். 😂 பழிக்குப் பழி... வாங்கிட்டோமில்ல. ஆங்... 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.