Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19122
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/15/24 in all areas

  1. புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே? டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை. தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார். இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  2. இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில், வலு அவதானமாக இருக்க வேண்டும். ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 அத்துடன்... எல்லாத்தையும், வலு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து... சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து பக்காவாக செய்யும் போது தான்... எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம் கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான். 🤣 எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்... சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂 இது... தான், தொழில் ரகசியம்.
  3. இப்படி கருத்துக்களை தனிப்பட எடுத்துக்கொள்ளாமல் ஒரு விளையாட்டாக கருத்துக்களை எதிர்கொண்டால் பிரச்சினை உருவாகாது, உங்கள் இருவருக்கும் நல்ல நகைசுவை உணர்வுண்டு.
  4. கனடாவில் இருப்போர் எல்லோரும் பைத்தியக்காறர் அல்லவே. கனடாவில் பாடகர் சிறீநிவாசுக்கு முட்டையடித்த, பள்ளிக்கூடம் போகாத, நாகரீகம் அடையாத ஒரு கூட்டம் உண்டு. அந்தக் கூட்டம் யார் போனாலும் முட்டையடிக்கும். ஆனால் அதிகாரத்திற்கு கூழைக் கும்பிடு போடும் சுயநலக் கூட்டம். இதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? எல்லா அரசியல்வியாதிஸ்தர்களும் இதைச் செய்கிறார்கள். இதில் இனம் மதம் பிரதேசம் என்று வேறுபாடு எதுவும் இல்லை.
  5. உங்களுக்கு பொறாமை. வந்து வந்து விழுந்த ஆளை விட்டு விட்டோமே என்று?😋
  6. எனக்கொன்னமோ இந்தச் செய்தின் சாரத்தில் நம்பிக்கை இல்லை. இலங்கைக்கான கனேடியத் தூதுவர் தேர்தலின் பின்னர் இவர்கள் எவரையும் சந்தித்ததாகத் தகவல் இல்லை. நிலைமை அப்படி இருக்கையில் கனேடிய வெளிவிவகார அமைச்சு அழைத்திருப்பதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சிலவேளைகளில் ஹரியைச் சந்திக்க இவர்களாகவே நேரம் கேட்டிருக்கலாம். 😁
  7. இருவர் தான் முழு நேரம். நீங்களும் @தமிழ் சிறி அண்ணாவும் பார்ட் டைம்🤣. தமிழ் சிறி அண்ணா முந்தி புல் டைம், பிறகு சுமந்திரனையும் அடிக்கும் வேலை இருப்பதால் இரெண்டையிம் பார்டைமா செய்றார்🤣. எதை வைத்து சொல்கிறேன்? யாழுக்கு வந்தால் யார் உலக நடப்பு திரியையே வளைய வருகிறார்கள், மற்றும் எழுதும் கருத்துகளில் மேற்கை எதிர்த்து எழும் கருத்துக்களின் அண்ணளவான சதவீதம் என்பவற்றை வைத்து. இது எல்லோரும் செய்வதுதான். எனக்கு சீமானை அடிப்பது முழு நேரத்தொழில். ஓவர் டைம் பேசிசில் அனுரவையும் அடிக்கிறேன்🤣. நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அஜெண்டாவோடுதான் எழுதுகிறோம். சிலது நேர்மறை அஜெண்டா, சிலது எதிர்மறை அஜெண்டா என்பது என் பார்வை. என் பார்வையோடு நீங்கள் உடன் படவேண்டிய அவசியம் இல்லை. நான் என் மனதில் பட்டதை எழுதுகிறேன். உங்களுக்கு அது அதீத கற்பனையாக படலாம்.
  8. எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா
  9. மிக்க நன்றி ரஞ்சித். யாழில் நீண்ட விளக்கம் கொடுக்க கூடிய மிக அரிதான கருத்தாளர்களில் நீங்களும் வழவனும் அடக்கம். உங்களை ஏன் @ பண்ணினேன் என்பதை வழவனுக்கான பதிலில் காண்க🙏. நான் போட்ட ஜெய்ஹிந்தின் அர்த்தம் அநேகமாக அனைவரும்கும் விளங்கி இருக்கும் என நினைக்கிறேன். அதுதான் முழு நேர மேற்கு எதிர்ப்பு பிரச்சாரகர்களின் உண்மையான கபட நோக்கம். ஏனையவர்களின் பிரச்சனை வேற. அவர்கள் நல்லவர்கள். ஆனால் எமக்கு நடந்த பிழைக்கு மேற்கு மட்டுமே தவறு என்பது போல் அவர்களை புல் டைம் காரர் மூளை சலவை செய்கிறார்கள். அதுதான் நீங்கள் சுட்டிய அளவுக்கு கொள்கை பிறழ்வு ஏற்பட காரணம். அதே போல் எப்போதும் ஒரு hero worship இல் இருந்து இவர்களுக்கு பழகிவிட்டது. அதனால்தான் தலைவருக்கு பின், சீமான், புட்டின் என அலைகிறார்கள். உப்பு கல்லும் வைரமும் ஒன்றென கருதி. இவர்களை போலவே முழு புலம்பெயர் சமூகத்தையும் மந்தைகள் ஆக்கி விடலாம் என்பதுதான் புல்டைம் காரர்களின் திட்டம். பார்க்கலாம்…. We are fighting a good fight, keep at it👍 இது எம்போன்றோருக்கு சரி… ஆனால் சம்பளத்து வேலை செய்பவர்கள் சதா அதே விடயத்தை எழுதி கொண்டே இருக்க வேண்டும்… அல்லது டெல்லியில் இருந்து கோல் வரும்🤣
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு.
  11. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🍰
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி🎉🎂🎊
  13. இனி இந்தப் பூமிக்கு சிறிது ஒய்வு குடுத்துவிட்டு அணுகுண்டு சோதனைகளை செவ்வாயில் நடத்தி கெடுத்து விடலாம் . .........! 😁 நன்றி ஏராளன் ...........!
  14. நிழல்போல் யாழில் நின்றுலவும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க ......!
  15. செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் மிகவும் கடினமான, வழுக்கக்கூடிய நிலப்பரப்பைக் கொண்ட ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறுவதைக் காட்டும் புகைப்படம். கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் செவ்வாய் கோளில், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்து வரும் பெர்சிவரன்ஸ் ரோவர் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று மிக முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செவ்வாயின் ஜெஸிரோ கிரேட்டரில் ஆய்வு செய்துகொண்டிருந்த ரோவர், தற்போது அந்தப் பெரும் பள்ளத்தில் இருந்து மேலேறி அதன் முனைப் பகுதிக்கு வந்துள்ளது. இதன்மூலம், இதுநாள் வரை செய்த ஆய்வுகளைவிட, செவ்வாயின் ஆதிகால பாறைகளை ஆய்வு செய்யவும், அங்கு கடந்த காலத்தில் உயிர்கள் வாழ்ந்தனவா என்பதைக் கண்டறியவும் ஒரு புதிய பாதை திறந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தில் ரோவரை கண்காணித்து வரும் விஞ்ஞானிகளும் பொறியாளர்களும் தங்கள் பணியை மிகச் சிறப்பாகச் செய்துள்ளதாகவும், ரோவர் தரையிறங்கியதில் இருந்து இதுவரை காணாத மிகக் கடினமான நிலப்பரப்பில் அதைச் சாமர்த்தியமாக இயக்கி மேலே ஏற வைத்திருப்பதாகவும் இந்த ஆய்வுத் திட்டத்தின் துணை மேலாளரான ஸ்டீவன் லீ தெரிவித்துள்ளார். பெர்சிவரன்ஸ் ரோவரின் இந்தப் புதிய பயணம் எவ்வளவு முக்கியமானது? அதன் எதிர்கால ஆய்வுகளில் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன? செவ்வாயில் உயிரினங்கள்: 300 கிராம் மாதிரியை பூமிக்குக் கொண்டுவர ரூ. 91,800 கோடி செலவு - என்ன செய்யப் போகிறது நாசா? செவ்வாய்க் கோளின் 180 கோடி பிக்சல் புகைப்படங்கள் - சிவப்புக் கோளின் வண்ணங்கள் பூமியின் அடியாழத்தைப் போலவே, செவ்வாய் கோளிலும் பாறைக்கு அடியில் உயிர்கள் உள்ளனவா? நிலா, சூரியனுக்கு நாசாவை விட குறைந்த செலவில் இஸ்ரோ விண்கலனை அனுப்புவது எப்படி? பழங்கால ஏரிப் படுகையில் நடந்த ஆய்வுகள் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூலை இறுதியில், செவ்வாய் கோளை ஆய்வு செய்வதற்காக பெர்சிவரன்ஸ் ரோவர் என்ற ரோபோட்டை நாசா விண்வெளிக்கு அனுப்பியது. பூமியிலிருந்து விஞ்ஞானிகளால் இயக்கப்படுவது மட்டுமின்றி தானியங்கி செயல்திறனும் கொண்ட இந்த ரோவர், ஏழு மாத விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு, 2021 பிப்ரவரியில் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. ஒரு கோளின் மீது விண்கற்களோ சிறுகோள்களோ மோதும்போது, அதன் தாக்கத்தால் ஏற்படும் பள்ளமே கிரேட்டர் எனப்படுகிறது. செவ்வாயில் இருக்கும் அத்தகைய ஒரு பெரும்பள்ளமான ஜெஸிரோ கிரேட்டரில் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வைத் தொடங்கியது. பட மூலாதாரம்,ESA/DLR/FU-BERLIN படக்குறிப்பு, ஜெஸிரோ கிரேட்டரில் உள்ள ஒரு பழங்கால டெல்டா பகுதியின் எச்சங்களைக் காட்டும் புகைப்படம். இங்குதான் நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் தனது ஆய்வுகளை மேற்கொண்டது. இந்த ஜெஸிரோ கிரேட்டர் பகுதியில் பழங்காலத்தில் ஒரு ஏரி இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக, செவ்வாயில் உயிர்கள் இருந்திருந்தால் அல்லது உயிர்கள் வாழ்வதற்கான சூழலில் இருந்தால் அதைக் கண்டுபிடிக்க இது சரியான இடமாக இருக்கக்கூடும் என்பதாலேயே நாசா விஞ்ஞானிகள் இந்த கிரேட்டரை பெர்சிவரன்ஸ் ரோவரின் ஆய்வுத் தளமாக முடிவு செய்தனர் என்கிறார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். "செவ்வாயில் ஆய்வு மேற்கொள்வதற்கு முன்பாக, குறிப்பாக எந்தப் பகுதியில் ஆய்வு செய்தால் எதிர்பார்த்த தரவுகள் அதிகமாகக் கிடைக்கும் என்பதைத் திட்டமிட்டு, ஆய்வுப் பகுதி வரையறுக்கப்படும். அந்த வகையில், ஜெஸிரோ கிரேட்டரில் இருக்கும் ஒரு பழங்கால ஏரிப்படுகை தேர்வு செய்யப்பட்டது," என்று அவர் விளக்கினார். அங்கு தரையிறங்கியது முதல், செவ்வாயின் நிலப்பரப்பில் உள்ள பாறை மாதிரிகளைச் சேகரிப்பது, அவற்றை ஆய்வு செய்வது, ஆதிகால உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைத் தேடுவது போன்ற பணிகளை மேற்கொண்டது. இந்த ஆய்வுகளை மேற்கொள்வதோடு, அவற்றின் தரவுகளை பூமிக்குத் திருப்பி அனுப்பிக் கொண்டும் இருக்கிறது இந்த ரோவர். செவ்வாய் கிரகம்: எரிமலை, பள்ளத்தாக்குகளை படம் பிடித்த எமிரேட்ஸ் விண்கலம்15 பிப்ரவரி 2021 அறிவியல்: ஒரே நேரத்தில் வானில் தெரியப்போகும் 6 கோள்கள் - எப்போது, எப்படி பார்க்கலாம்?30 மே 2024 ரோவரின் ஆய்வுப் பணியில் புதிய மைல்கல் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் ரோவரில் இருந்த கேமராக்களில் ஒன்று, ஜெஸிரோ கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் ஏறும்போது அது ஏற்படுத்திய தடங்களைப் படம் பிடித்துள்ளது. பெர்சிவரன்ஸ் ரோவர் செவ்வாயில் தரையிறங்கியது முதல், ஜெஸிரோ கிரேட்டரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுக் காலமாக அந்தப் பெரும்பள்ளத்தின் பாறைகள், மண் பரப்பு, நிலவியல் ஆகியவற்றை ஆய்வு செய்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட நியூயார்க் நகரத்தின் பரப்பளவுக்கு நிகராக இருக்கும், 45 கி.மீ விட்டம் கொண்ட அந்தப் பெரும் பள்ளத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவியல் மாதிரிகளைச் சேகரித்து பெர்சிவரன்ஸ் ரோவர் ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், கடந்த டிசம்பர் 12-ஆம் தேதியன்று அதன் பாதையில் ஒரு புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அந்தப் பெரும் பள்ளத்தின் மேல் பகுதியான கிரேட்டர் ரிம்மில் (crater rim) வெற்றிகரமாக ஏறியுள்ளது. இந்த கிரேட்டர் ரிம் என்பது சிறுகோள் தாக்கத்தால் உருவான பள்ளத்தின் விளிம்புப் பகுதி என்று கூறலாம். "சிறுகோளோ, விண்கல்லோ மோதும்போது, அது ஒரு பெரும் பள்ளத்தை உருவாக்குகிறது. அப்போது, அந்தக் குழி – அதாவது பள்ளம் – உருவாகும்போது, அந்த நிலப்பரப்பில் இருந்த பொருட்கள் தூக்கி வீசப்படும். அவை ஒரு கூட்டாகச் சேர்ந்து, கிரேட்டரின் ஓரங்களில் மேட்டுப் பகுதியாக உருவாகியிருக்கும்," என்று விளக்கினார் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன். பூமியின் மையப் பகுதி எதிர்த் திசையில் சுழலத் தொடங்கியதா? இதனால் நடக்கப் போவது என்ன?10 ஜூலை 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH இதற்கு ஏரியின் அமைப்பை உதாரணமாகக் கூறுகிறார் அவர். ஒரு ஏரி அல்லது குளத்தின் விளிம்புகளில் அதன் கரைப்பகுதி சிறிது மேடாக இருப்பது போலவே, இங்கும் கிரேட்டரிலும் இந்த ரிம் என்ற அமைப்பு இருக்கும். அத்தகைய விளிம்புப் பகுதிதான் கிரேட்டர் ரிம் என்று அழைக்கப்படுகிறது. "சிறுகோள் தாக்கத்தால் ஏற்படும் பள்ளத்திற்குள், சிறுகோளின் பொருட்கள் மற்றும் செவ்வாய் நிலப்பரப்பிலுள்ள பொருட்கள் கலந்த நிலப்பரப்புதான் இருக்கும். அங்குள்ள மண், பாறை என அதன் நிலவியல் முழுக்க அப்படித்தான் இருக்கும்." ஆனால், "கிரேட்டர் ரிம் பகுதியில் அதற்கும் முந்தைய, மிகவும் பழமைவாய்ந்த பாறைகள் மற்றும் நிலவியல் அமைப்பைக் காண இயலும். அவற்றை ஆய்வு செய்வதன் மூலம், செவ்வாயின் நிலவியலில் ஏற்பட்ட மாற்றங்களை அறிய முடியும்," என்று விளக்கினார் வெங்கடேஸ்வரன். இத்தனை காலமாக ஜெஸிரோ பெரும் பள்ளத்தின் உள்பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டிருந்த ரோவர் தற்போது அந்தப் பள்ளத்தின் மேட்டில் ஏறி, கிரேட்டர் ரிம் எனப்படும் விளிம்புப் பகுதிக்கு வந்துள்ளது. இதன்மூலம், செவ்வாய் கோளின் ஆதிகால பாறைகள் மற்றும் நிலப்பரப்பில் அதனால் ஆய்வு செய்ய முடியும். இதுகுறித்துப் பேசியபோது, "இளம் பாறைகளில் இருந்து பெர்சிவரன்ஸ் ரோவர் தனது கவனத்தை மிகப் பழமையான பாறைகளின் மீது திருப்பியுள்ளது" என்று கூறியுள்ளார் இந்த ஆய்வுத் திட்டத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான கென் ஃபார்லி. அவரது கூற்றுப்படி, ஜெஸிரோ பெரும்பள்ளத்தில் இருக்கும் இளம் பாறைகள், சுமார் 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு பிரமாண்ட சிறுகோள் மோதலில் விளைவாகத் தோன்றியவை. ஆனால், கிரேட்டரின் முனைப் பகுதியில் இருப்பவை, அதைவிடப் பல நூறு கோடி ஆண்டுகள் பழமையானவை. சூரியன் மட்டுமல்ல, மேலும் சில கோள்களுக்கும் குறி - இஸ்ரோ திட்டம் என்ன?6 ஜனவரி 2024 கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதால் என்ன பயன்? பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/MSSS படக்குறிப்பு, கடந்த ஜூலை 23ஆம் தேதியன்று பெர்சிவரன்ஸ் ரோவர் எடுத்த செல்ஃபி இதுவரை ஜெஸிரோ பெரும்பள்ளத்தின் ஏரிப்படுகையில் உள்ள பாறைகளை ரோவர் ஆய்வு செய்தது. அவையனைத்துமே இளம் பாறைகள் என வரையறுக்கப்படுபவை. அதாவது, சிறுகோள் மோதலில் இந்தப் பெரும்பள்ளம் தோன்றிய பிறகு உருவானவை. ஆனால், கிரேட்டரின் விளிம்புப் பகுதியில் அதைவிடப் பல கோடி ஆண்டுகள் பழமையான, செவ்வாயின் ஆழத்தில் புதைந்துகிடந்து சிறுகோள் மோதலின்போது வெளிவந்த பாறைகளைக் கொண்டுள்ளது. இந்தப் பாறைகள், ஜெஸிரோ கிரேட்டர் உருவாகக் காரணமாக இருந்த சிறுகோள் மோதியதற்கும் நெடுங்காலம் முன்பே செவ்வாயில் தோன்றிய ஆதிப் பாறைகள் என்பதால் அவற்றை ஆய்வு செய்வதன் மூலம் மேலும் பல அறியப்படாத தகவல்கள் தெரிய வரக்கூடும். அதோடு, "இந்தப் பாறைகள் அந்த நிலப்பரப்பின் ஆழத்தில் முன்னர் புதைந்திருந்தவை. சிறுகோள் மோதலின் விளைவாக அவை மேலே வெளிப்பட்டிருப்பதால், ஆழத்திற்குத் தோண்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே அவற்றை ரோவரால் ஆய்வு செய்ய முடியும்," என்கிறார் முனைவர் வெங்கடேஸ்வரன். இத்தகைய ஆதிகால பாறைகளை ஆய்வு செய்வதன் மூலம், அந்த செவ்வாயின் பல கோடி ஆண்டுக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பனை மரத்தை ஒத்த உலகின் மிகப் பழமையான மரம் - எப்படி தோன்றியது?10 மார்ச் 2024 ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்?5 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES இவற்றில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், "வளிமண்டலம், காலநிலை ஆகியவற்றின் விவரங்கள் உள்பட செவ்வாயின் ஆரம்பக்கால இயற்கை வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும். அதுமட்டுமின்றி, பூமியின் ஆதிகால நிலவியலை, சுற்றுச்சூழலைப் புரிந்துகொள்வதிலும் இந்த ஆய்வின் தரவுகள் உதவக்கூடும்," என்கிறார் வெங்கடேஸ்வரன். மேலும், செவ்வாயின் பழங்கால சுற்றுச்சூழல் உயிர்கள் வாழ ஏதுவானதாக இருந்திருக்ககூடும் என்று சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆகவே, அங்கு உயிர்கள் வாழ ஏதுவான சூழல் வரலாற்றின் ஏதாவதொரு கட்டத்திலேனும் நிலவியதா என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க இந்தப் பாறைகள் உதவலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். முனைவர் த.வி.வெங்கடேஸ்வரனின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் பெரிய இடையூறுகள் இல்லாத நிலவியலில் செயல்பட்ட பெர்சிவரன்ஸ் ரோவர் தற்போது மிகவும் கடினமான கிரேட்டர் ரிம் பகுதியில் ஏறும் அளவுக்குத் திறன் பெற்றுள்ளது. "இந்த முன்னேற்றம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்மூலம், இந்த ரோவர் செவ்வாயின் நிலவியல் குறித்த இன்னும் பல அறியப்படாத தகவல்களை வழங்கக்கூடும்," என்றும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c62w9d0v62wo
  16. இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிழலி அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள், வளத்துடன் வாழ்க.
  17. நீண்ட காலம் போராடி ஒரு இரண்டு தலைமுறையை இழந்து ஈழத்தமிழர்களின் political goal இறுதியில் அடைந்தது, இப்படியாக முகநூல்களிலும் இணையத்திலும் கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் மட்டுமே. இதை வைத்து திருப்தி கொள்ள வேண்டியது தான். எஞ்சியது இது தான்.
  18. அப்படியே மொன்றியல் பக்கம் வீடுகளில் போய் நின்றார் என்றால் வசதியற்ற பிள்ளைகளை படிப்பிக்க காசைக் கேட்டால் பொக்கற்றை நிரப்பி அனுப்புவார்கள்..முன்பு ஒரு முறை வந்த போது அப்படித் தான் நடந்து என்று அறிந்து கொண்டேன்.
  19. இனி விசர் சுமத்திரன் கனடா பக்கம் போனால் உடுப்பை கழட்டி விட்டு அடி போட்டுத்தான் அனுப்புங்கள் .
  20. கோஷான், இவர் தலைவரையும் புலிகளையும் கொச்சைப்படுத்த இத்திரியைத் தேர்ந்தெடுக்க இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது ஆசாத்திற்கும், பின்புலத்தில் நிற்கும் புட்டினுக்கும் வெள்ளையடிக்க முயல்வது. இரண்டாவது புலிகள் மீதிருக்கும் தனது வக்கிரத்தைக் இத்திரியூடாக வெளியே கொண்டுவருவது. இவரது பிதற்றல்கள் குறித்து உங்களுக்குத் தெரியாத விடயங்களை நான் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
  21. இனி கனடாப் பக்கம் வர வேண்டாம்! சுமந்திரனிற்கு நடந்த கதி. முன்னொரு காலத்திலே.... சுத்துமாத்து சுமந்திரனும், சாணக்கியனும் கனடா போய்.... ஒட்டோவா பாராளுமன்றம் நடக்காத நாளில், அதற்கு முன், வெளியே நின்று படம் எடுத்துவிட்டு வந்து, கனடா எம்.பி. மாருடன் நம்ம நாட்டு பிரச்சினை பற்றி கதைத்ததாக "றீல்" விட்டதை நாம் அவ்வளவு எளிதில் மறக்கவில்லை. அதற்குப் பிறகு சுத்துமாத்து சுமந்திரன் கனடா பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. அந்தளவுக்கு மரியாதை கொடுத்து அனுப்பியிருந்தார்கள். சுத்துமாத்து செல்லும் இடம் எல்லாம்... வாங்கிக் கட்டிக் கொண்டு வருவது வழக்கமாகி விட்டது.
  22. தலைப்பைப் பார்த்துவிட்டு “ ஏன் கனடாவிலும் நாலைஞ்சு பார் திறக்க இடம்பார்க்கப் போறாரோ?” என்று எழுத நினைத்தேன். வந்து பார்த்தால் கவி அருணாசலம் அய்யாவின் கருத்தோவியம் என் எண்ணத்தை அப்படியே வெளிப்படுத்தி இருக்கிறது.
  23. CanadaPost தற்போது postal strike ல் ஈடுபட்டிருப்பதால் கடிதம் இதுவரை போய்ச் சேரவில்லையாம். 🤣 இது கடிதம் அல்ல. நானும் ரவுடிதான் போன்று, ஐயா தொரைமாரே,....நாங்களும் ஒரு அரசியல் கட்சிதான் எங்களையும் கண்கொண்டு பாருமையா என்ற கெஞ்சல்,...... அம்புட்டுதே. எல்லாம் ஜப்னா வாக்காளர் வைத்த ஆப்பினால் வந்த பயம். 🤣
  24. தமிழரசுக் கட்சியிலிருந்து சுமந்திரன் நீங்கிவிட்டால் அதுதேறி நலமாகி வீடுவந்து சேர்ந்துவிடும் என்ற உண்மை யாருக்கும் புரியவில்லையே!!
  25. அப்ப கஜே-கயே குழுத்தலைவர் இவ்வளவு நாளும் பம்மாத்து அரசியல் செய்திருக்கிறார். அநுர அரசுக்கு 2/3 பெரும்பான்மை உள்ளது என்றபடியால் முன்னைய அரசாங்கங்களிடம் செய்துவந்த அண்டர் கிறவுண்ட் டீல் இனிச் செய்யமுடியாது என்று அண்ணருக்கு விளங்கிவிட்டது. அதுபோக இப்ப பாராளுமன்றில் சுமந்திரன் இல்லாதபடியால் சுமந்திரனுக்கு எதிரான விடுதலை போராட்டத்தை முன்கொண்டு செல்லமுடியாத இக்கட்டான நிலையிலும் உள்ளார்.
  26. இந்திய உயர் மட்ட குழு அவசரம் அவசரமாக இந்த கடிதத்தைப் பற்றி தற்போது விவாதித்து கொண்டிருப்பதாகவும் அதனால் அநுராவுடனான சந்திப்பை இன்று மாலை வரை இந்திய பிரதமர் பின்போட்டிருப்பதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. உரிய நேரத்தில் இந்த கடிதத்தை எழுதியதற்காக கஜேந்திரகுமார் அவர்களுக்கு இந்திய அரசு சார்பில் நன்றி தெரிவித்து அவசர செய்தி அனுப்பப்படுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சின் அதிகாரிகளின் கூற்றை மேற்கோள் காட்டி பி. ரி.ஐ செய்தி ஸதாபனம் தெரிவித்துள்ளது.
  27. அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌
  28. ஓகோ, ஒரு ஆசாமிக்கு சுட்டு போட்டுதோ. பரவாயில்லை, ஒரு cool shower எடுத்தா சரியாகிடும். 😂😂😂😂😂
  29. ஏன் இதுவரை இப்படியானவற்றிகு சாணக்கியன் போராடவில்லையா? யார் போராடினாலும் தடுத்து நிறுத்த ஒரு தமிழ் எம்பியால் முடியாது. தடுத்து நிறுத்த கூடிய இயலுமை ஆட்சியாளரிடம்தான் உண்டு. அனுர அரசு நீங்கள் சொல்வது போல் இனவாதமற்ற அரசு எனில் வந்தவுடனேயே இப்படி தமிழ் இடங்களில் பெளத்த சின்னங்களை நிறுவுவதை தடுத்திருக்க வேண்டும். செய்தார்களா? இல்லை. ஆகவே அனுரவும் அவர் அரசும் கூட முன்னையோர் போல் இனவாதிகளே என்பது தெளிவாகிறது. இதை மறைக்க, அனுர அனுதாபியான நீங்கள் சாணக்ஸ் மீது கையை காட்டுகிறீர்கள்.
  30. சைக்கிள் கட்சியில் இப்படியான பொது சபை கூட்டங்கள் நடை பெறுகின்றனவா? தலைவர் தெரிவு நடை பெறுமா? ஏன் கேட்கிறேன் என்றால் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து இங்கு அதிக அக்கறையுடன் பேசுபவர்கள் பேசுபவர்கள் சைக்கிள் கட்சியின் வாரிசு அரசியலை வரிந்து கட்டிக்கொண்டு ஆதரிக்கும் அக்கட்சியின் ஆதரவாளர்கள். இது தனது வீட்டுக்குள் நடக்கும் கூத்துகளை விடுத்து அடுத்தவன் வீட்டுக்குள் என்ன நடக்கிறது என்று வேலிக்குள்ளால் விடுப்பு பார்ககும் கலாச்சாரம் தானே. 😂 இலங்கையில் மூன்று தலைமுறை குடும்ப கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்து கொண்டு தமிழ் நாட்டில் வாரிசு அரசியல் என்று பேசும் போலிகள் தான் இந்த தீவிர வரட்டு தமிழ் தேசியம் பேசும் ஆசாமிகள்.
  31. இளங்கோவன் மரணத்தில் எந்த திருப்தியும் இல்லை, அவர் தன் வாழ்நாளை முழுமையாக வாழ்ந்துவிட்டே போயிருக்கிறார். ஆனால் பிறர் மகன் மரணத்தில் மகிழ்ந்த உன்னை உன் வாழ்நாளிலேயே உன் மகன் மரணத்தை காண வைத்தான் இறைவன் அதுதான் காலத்தின் மிக பெரும் பழிக்குபழி. எம் மரணத்தை கொண்டாடிய உன் மரணம் எமக்கு கொண்டாட்டம் அல்ல, எவர் மரணமும் எமக்கு இனிப்பானதல்ல. ஆனால் உன் வார்த்தைகளால் நாம் சுமந்த வலியை உன் வாழ்நாளிலேயே நீயும் உன் கண்முன்னே பார்த்து, அனுபவித்துவிட்டுத்தான் போனாய் என்பதில் அக மகிழ்ச்சி.
  32. ஒரு குழந்தையின் இறப்பில் மகிழ்சி கொள்ளும் ஒருவன் இருந்தும் பிணம் இறந்தும் பிணம்.
  33. சிலரின் அமைதி திமிர் அல்ல அது அவர்களுக்குள் இருக்கும் வலி..
  34. ஆமா..... சுமந்திரன் ஏன் இன்னும் கட்சியின் பேச்சாளர் பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கிறார்? இவருக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதி, கொள்கையா? சம்பந்தர் உயிரோடு இருக்கும்போது இது சம்பந்தமாக கூட்டம் கூட்டிய போது சுமந்திரன் என்ன செய்தார்? ஏன் அதை நிறைவேற்ற முடியாமல் போனது? இவருக்கு வக்காலத்து வாங்குவோரின் மனநிலையும் அப்படிப்பட்டதே. அடாவடி, சர்வாதிகாரம், தான் மட்டும் முன்னிலை என்கிற கொள்கை.
  35. சுமந்திரனின் குடைச்சல் நிற்கவில்லையே கட்சிக்குள்.
  36. மாவையர் ராஜினாமா கடிதத்தை அனுப்பிய இக்கட்டான சூழ்நிலையை சிந்திக்க வேண்டும். அவர் அனுப்பிய ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று அறிவித்த செயலாளர், புது தலைமையில் கூட்டம் நடத்த எத்தனித்தது யார் யோசனையில்? புதிய தலைவரை முறைப்படி தேர்ந்தெடுத்தார்களா? ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவரை செயற்படவிடாமல் தடுத்துக்கொண்டு கேலிக்கூத்தாடுகிறார்கள். அது தவிர, சிறீதரன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்றபொழுது, அவரை அந்த பதவியை ஏற்கும் சூழ்நிலை இருந்ததா? சுமந்திரனது நோக்கம் தான் பதவியில் இருந்து அடாவடி பண்ணவேண்டும் அல்லது தனது கையாள் ஒருவர் அந்தபதவிக்கு வரவேண்டும் என்பதே. அதனாற்தான் மாவையர் வருவதற்குமுன் தனது திட்டத்தை நிறைவேற்ற தனது சகாக்களை கொண்டு அவசரம் காட்டியிருக்கிறார். சிவஞானம் ஒரு நரி. பதவியாசை பிடித்தவர்களுக்கு பின்னால் ஒட்டிக்கொண்டு திரிவார், மிகுதி சுவைப்பதற்கு. தேர்தலில் இத்தனை பாடம் படித்தும் திருந்தாத ஜென்மங்கள், சக உறுப்பினரை, கொள்கைகளை, நிஞாயங்களை மதிக்க தெரியாதவர்கள். அதில இங்க ஒருவர் அர்ச்சுனாவுக்கு, அனுராவுக்கு வாக்கு போட்டதை குற்றம் சாடுகிறார். இவ்வளவு காலமா இவர்கள் இருந்து எதை சாதித்தார்கள்? முடிவு எட்டப்படாத கூட்டங்களும், மற்றவரை மட்டந்தட்டிய கூட்டங்களுமே வசை பாடிய அறிக்கைகளுமே இவை சாதித்தவை. அன்று விக்கினேஸ்வரனை வெளியேற்ற ஒத்துநின்றவர்கள் இன்று எத்தனை பிரிவுகளாக. இவர்களோடு ஒத்து இருக்கவோ போகவோ முடியாது. இவர்களும் ஒருவரோடும் ஒத்து இருக்க மாட்டார்கள், பதவி அதிகார பிரியர்கள் இவர்கள். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு புதுக் கொள்கை, தேர்தலின்பின் தலைவர் பிரச்சனை. போனதடவை சிறிதரனை வைத்து தொடங்கினார், இந்தமுறை அவரே தோல்வி இருந்தாலும் வாயும் செயலும் அடங்குதா? இவர்கள் மக்களுக்காக சேவை செய்ய வரவில்லை, தங்கள் பதவிகளுக்காக அலைகிறார்கள். சுமந்திரனை மக்கள் ஒதுக்கிய பின்னும் அவர் கட்சிக்குள் முடிவெடுப்பது அறிவிப்பது என்று தனக்கெடாத தொழிலை தொடருவானால்; அந்தக்கட்சியை விட்டு விலகுவதே மக்களுக்கான தீர்வு அல்லது இவர்களை ஒதுக்கி மக்கள் நலன்காக்கும், இதுகளை கட்டியாளும் தலைமை வேண்டும்.
  37. ஆமா...மாவை இருந்திட்டு ஒருக்காலாவது ..தேசியம் என்று கதைக்கும்🤣
  38. நான் அவரோட கதைக்கிற/ சந்திக்கிற நேரமெல்லாம் யாழ்களத்துக்கு வந்து எழுதலாம் தானே எண்டு கரைச்சல் குடுக்கிறனான்.வாற வரிசமும் சந்திப்பன் . இந்த முறை ஆளை விடுறேல்ல. அடுத்த முறை கதைக்கும் போது உங்களை சுகம் கேட்டதாக சொல்கின்றேன்.😎
  39. உஷ்….உப்பிடி எல்லாம் கதையாதேங்கோ…. அப்புறம் அனுர தெய்யோ கண்ணை குத்தி போடும்…. வேணும் எண்டால் - அனுரவின் கீழும் இனவாத நடவடிக்கை அப்படியே தொடர்கிறது என்பதை மறைக்க சாணக்கியன் போன்ற சோப்பிளாங்கிகளை போட்டு வறுக்கலாம்🤣
  40. அரசியல் திடதன்மை அற்ற சிரியா தான் மேற்குலகுக்கும் ,இஸ்ரேலுக்கும் தேவை அதை நன்றாக செய்துள்ளனர்.. ஈராக்,லிபியா,போன்ற நாடுகளின் தற்போதைய நிலை தான் இனி சிறியாவிலும் என நான் நினைக்கிறேன்..
  41. பிறகென்ன…நேரில் சந்திக்கும் அளவு பழக்கம் எண்டால் போன் நம்பரும் இருக்கும்…. ஒரு கோலை போட்டு வாய்யா என கேட்பதுதானே? உண்மையில் அவருக்கு ஏதும் இடர்பாடோ என்னமோ என நான் கவலைபடுவதும் உண்டு. தொடர்புகள் இருந்தால் ஒருக்கா சுகம் விசாரிக்கவும். கோஷானும் மிஸ் பண்ணுகிறார் வாங்கோ எண்டும் சொல்லி விடவும். பிகு அப்ப நாதம் பற்றிய என் “பாய்” சந்தேகம் பிழை எண்டுறியள்?🤣
  42. கருக்குமட்டை எல்லாம் வேண்டாம் பெருமாள் ........கருத்துக்கள் வைத்தால் போதும் . ........எனக்கும் திண்ணை இருப்பது விருப்பம் . ...... எதாவது ஒரு விரைவில் பெற்றுக் கொள்ளலாம் . ...... அதேநேரத்தில் தங்களின் பல வேலைகளுக்கு இடையில் மட்டுறுத்தினர் இங்கு வருகிறார்கள் . .....அவர்களின் நிலைமைகளையும் புரிந்து நயமான கருத்துக்களை நாங்கள்தான் பொறுப்போடு இட வேண்டும் . ........! 😁 ஏதாவது ஒரு தகவல்கள் . ......!
  43. 2006 - 2009 வரை தமிழர் தாயகத்தில் வகை தொகையின்றி சிறீலங்கா ராணுவத்தினரால் கொல்லப்பட்டபோது அதனை இந்தியாவில் நியாயப்படுத்தி அறைகூவித் திரிந்த இந்த நபர் இன்று மரணம். Kunalan Karunagaran
  44. முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில் பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂
  45. மேகாலாயா - உம்காட் நதி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.