Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. யாயினி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    10209
    Posts
  3. vasee

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3318
    Posts
  4. Kapithan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    9308
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/25/24 in all areas

  1. பெரும்பான்மை சிங்கள அரசு தமிழ் மக்கள் பொருளாதார ரீதியாக வளம் பெறுவதனையோ, சமூக உயர் நிலையினை அடைவதனையோ என்றும் அனுமதிக்க போவதில்லை (இது உயர் சாதியினர் என கூறிக்கொள்பவர்கள் மற்ற மக்களை அடிமைப்படுத்தி வைப்பதற்கு எமது சமூகத்தில் பயன்படுத்தும் உத்தி), அதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாகவே இந்த மதுபான நிலையங்கள் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட தமிழர்கள் வாழும் அபுக்தியில் அதிகரித்து காணப்படுகிறது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளே மதுபான உரிமைகள் வாங்கி பினாமிகளின் பெயர்களில் செயல்படுகின்ற தலைமைகளை தமிழர்கள் கொண்டிருக்கும் நிலை, அவ்வாறானவர்களையே மக்களும் தேர்ந்தெடுக்கிறார்கள். தற்போது சிறுபான்மை மக்களிற்கு வழமையான எதிரியுடன் கூடவே அவர்களாலாலேயே தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும் எதிரிகளாக உள்ளனர். தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்களின் நோக்கம் வெறும் பணம் சேர்ப்பதாகவே உள்ளது, இவர்கள் தயவு செய்து பதவி விலகி, புதிய மக்கள் சிந்தனை மட்டும் கொண்ட இளம் சமூகத்திற்கு வழி விட வேண்டும். அங்குள்ள பத்திரிகைகள் மக்களை நல்வழிப்படுத்தும் பாரிய கடமை உண்டு, அதனை அவர்கள் சரிவர செய்ய வேண்டும். இலங்கை அரசை பொறுத்தவரை அவர்கள் சிறுபான்மை மக்களுக்கு எப்போதும் எதிரானவர்கள் எனும் உண்மைநிலையினை மக்களிடம் எடுத்து செல்வது ஒன்றும் இலகுவான காரியம் அல்ல, அதற்காகவே இலங்கை அரசுகள் பயங்கரவாத தடை சட்டம் எனும் போர்வையில் (பயங்கரவாத தடை சட்டத்தினை என்றும் நீக்க போவதில்லை) உண்மைகளின் குரல்வளைகளை நெரித்துக்கொண்டுள்ளார்கள். யூரியூபர்களும் இந்த உண்மைகளை தம்மளவில் பாதிப்பில்லா வகையில் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
  2. ஒரு சில அல்ல.. ஒரே ஒரு சமூக விரோதி.. பெயர் பார் சிறி..
  3. படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவின் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் சென்னை திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோனை திரும்பப் பெற முடியாமல் தினேஷ் என்பவர் தவிக்கிறார். 'உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம்' என்று அவரிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். செல்போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியதாக தினேஷ் கூறுகிறார். ஐபோனை உரியவரிடம் ஒப்படைப்பது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி? அறநிலையத் துறை அதிகாரிகள் சொல்வது என்ன? '36 நிமிட தியானம் குபேரன் ஆக்கும்' - ஜோதிடர் பேச்சால் நாமக்கல் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள் கட்டடக்கலை: தமிழ்நாட்டின் பழங்கால கோவில்களில் துல்லியமாக மூலவர் சிலை மீது விழும் சூரிய ஒளி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட்: தீட்சிதர்கள் - விசிகவினர் இடையே என்ன நடந்தது? சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) பணிபுரிந்து வருகிறார். இவர்தான், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில் ஐபோனை தவறவிட்டதாகக் கூறி தற்போது அதனை திரும்பப் பெற முயன்று வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சென்றிருந்த போது, என்னுடைய ஐபோன் (13 புரோ மேக்ஸ்) தவறி உண்டியலில் விழுந்துவிட்டது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். டிசம்பர் 19-ஆம் தேதியன்று உண்டியல் திறக்கும்போது தகவல் தெரிவிப்பதாக, கோவில் நிர்வாகம் கூறியது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்ட போது ஐபோன் கிடைத்தாலும் கூட, அது என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக, அறநிலையத்துறை விதிகளின்படி கோவில் உண்டியலில் எது விழுந்தாலும் அது சுவாமிக்கே சொந்தம' என அதிகாரிகள் கூறிவிட்டனர்" என்றார். உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி? "அன்றைய தினம் மதிய நேரத்தில் சாமி கும்பிடுவதற்காக கந்தசாமி கோவிலுக்கு சென்றேன். அப்போது தவறுதலாக உண்டியலில் ஐபோன் விழுந்துவிட்டது" என்கிறார் தினேஷ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிகாரிகள் 'உண்டியலில் எது விழுந்தாலும் அது சுவாமிக்கே சொந்தம்' என்று கூறிவிட்டதால் நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அதன் பிறகு அதிகாரிகள் அவர்களுக்குள் ஆலோசித்துவிட்டு, 'ஐபோனில் உள்ள தரவுகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று என்னை தொடர்பு கொண்டு கூறினர். ஆனால், என்னால் மீண்டும் கோவிலுக்குச் செல்ல முடியாததால் ஐபோனில் உள்ள தரவுகளை நான் எடுக்கவில்லை." என்றார். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் தகராறு - விவாகரத்து கோரிய தம்பதியரை சேர்த்துவைத்த நீதிமன்றம்7 மணி நேரங்களுக்கு முன்னர் அம்பேத்கர், காங்கிரஸ் இடையிலான உறவு உண்மையில் எப்படி இருந்தது?6 மணி நேரங்களுக்கு முன்னர் கோவில் செயல் அலுவலர் சொல்வது என்ன? "கோவிலின் ராஜ கோபுரத்துக்கு அருகில் ஆறு அடி உயரத்தில் உண்டியல் உள்ளது. அந்த உண்டியலில் ஐபோன் தவறி, உள்ளே விழுவதற்கு வாய்ப்பே இல்லை" என்கிறார் திருப்போரூர் கந்தசாமி கோவிலின் செயல் அலுவலர் குமரவேல். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோவிலுக்கு ஆகஸ்ட் மாதம் சாமி கும்பிடுவதற்காக தினேஷ் வந்துள்ளார். ஆனால், ஐபோனை காணவில்லை என செப்டம்பர் மாதம் தான் அறநிலையத் துறைக்குக் அவர் கடிதம் கொடுத்தார்" என்கிறார். அறநிலையத் துறைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'உண்டியலில் செல்போன் விழுந்திருக்கலாம். நீங்கள் உண்டியலை திறக்கும் போது சொல்லுங்கள். வந்து பார்க்கிறேன்' என்று தினேஷ் குறிப்பிட்டிருந்தார். "உண்டியல் திறக்கும்போது பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிப்போம். அதன்படியே அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது" என்கிறார் குமரவேல். பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட வந்தபோது, தனது ஐபோன் தவறி உண்டியலில் விழுந்துவிட்டதாக கோவில் செயல் அலுவலருக்கு தினேஷ் எழுதிய கடிதம்.. `கடவுளுக்கே சொந்தம்' கடந்த வியாழன் அன்று திருப்போரூர் முருகன் கோவிலின் உண்டியல்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது, 52 லட்ச ரூபாய் ரொக்கம் 289 கிராம் தங்கம், 6,920 கிராம் வெள்ளி ஆகியவற்றுடன் ஐபோன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "தினேஷ் கடந்த 19-ஆம் தேதி கோவிலுக்கு வரும் போதே புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவரை தன்னுடன் அழைத்து வந்திருந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள உண்டியலில் ஐபோன் கிடைத்தது. அந்த ஐபோனை கொடுக்குமாறு தினேஷ் கேட்டார். 'அப்படியெல்லாம் உடனே கொடுக்க முடியாது. உங்கள் ஐபோன் என்பதற்கான விவரங்களை ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக கொடுங்கள். உயர் அதிகாரிகளிடம் விவாதித்துவிட்டு பதில் சொல்கிறோம்' என்று நாங்கள் கூறினோம்" என்கிறார் கோவில் செயல் அலுவலர் குமரவேல். பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?2 மணி நேரங்களுக்கு முன்னர் மோசமான ஃபார்மால் தவிக்கும் கோலி: சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து பாடம் கற்பாரா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விதிகள் என்ன சொல்கின்றன? "தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி, காணிக்கையாக விழுந்த பொருள்கள் அனைத்தும் கோவிலின் கட்டுப்பாட்டில் இருக்கும்" என்று கூறும் குமரவேல், "உண்டியலில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் போடலாம். அதன் பிறகு. அந்த பொருள் கோவிலுக்கு சொந்தமானதாகவே கருதப்படும். உண்டியலில் காணிக்கையாக வரும் பொருட்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். அந்த ஐபோன் அவருடையது தானா என்பதற்கான ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளோம்" என்கிறார். "இதற்கு முன்பு இப்படியொரு சம்பவத்தைக் கேள்விப்பட்டதில்லை. எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு சிறப்பு விதிவிலக்காக உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார் குமரவேல். ஆறடி உயர உண்டியலில் ஐபோன் தவறி விழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கோவில் செயல் அலுவலர் கூறியது பற்றி தினேஷிடம் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது, "தவறுதலாக உள்ளே விழுந்துவிட்டது" என்று மட்டும் பதில் அளித்தார். மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார். தமிழ்நாடு அமைச்சர் கூறியது என்ன? ஐபோன் விவகாரம் தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "அதுகுறித்து தீர விசாரித்த பிறகு முடிவுக்கு வருவோம்" என்றார். "உண்டியலில் எதாவது பொருள் விழுந்துவிட்டால் அது சுவாமியின் கணக்கில் வரவு வைப்பது வழக்கம். இதற்கு சட்ட ரீதியாக நிவாரணம் கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்" என்றார் சேகர்பாபு. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yv4ezz1kyo
  4. சிறியர், ஏலுமென்றால் நிரூபியுங்கள் என்று சவால் விட்டுள்ளார். நான் ஒருவருக்கும் சிபாரிசு செய்யவில்லை. நான் ஒரு Bar license ம் எடுத்துக் கொடுக்கவில்லை என்று சொல்லவில்லையே,.........அதைக் கவனித்தீர்களா? தனது தொகுதியில் 16 license கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்தான் எல்லோருக்கும் முன்னுக்கு நின்று சிபாரிசு செய்தவர்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து சவால் விடுகிறார். உண்மை வெளிவரும் போது நான் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லையே என்பார் . விக்கியருக்கு உள்ள வெகுளித்தனமும் தனது பிழையை ஏற்றுக்கொள்ளக் கூடிய பெருந்தன்மையும் சிறிதரனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், யாழ் களத்தில் தங்களை உண்மை விளம்பிகள் என்கிற ரீதியில் கம்பு சுற்றிய பலரின் உண்மை நிறம் வெளித் தெரிய ஆரம்பித்திருக்கிறது. சமூகத்திற்கு தீங்கானது என்று தெரிந்துகொண்டே சிறீதரன் MP யில் தவறை மூடி மறைக்க முயற்சிப்பதன் ஊடாக பலரின் சாயம் வடிந்தோடுகிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களின் சாயம் வெளுப்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. எப்போதோ ஒரு நாள் எல்லாமே வெளிவரத்தான் போகிறது. அதற்காகவேனும் தாங்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நன்று. 😏
  5. மக்கள் புத்திசாலிகள். தமக்கான ஓர் சிறந்த பிரதிநிதியை ஒற்றுமையாக வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். அதே போல் தேவையற்றவரை வாக்களிக்காமல் பாராளுமன்றத்தில் இருந்தும் தமது பிரதிநிதியாக செயற்பட தகுதி இல்லை என்று முகத்தில் உறைக்க குத்தி விலத்தி வைத்துள்ளனர். தேர்தலில் தோற்றவரின் அல்லக்கைகளும் பலாக்காய்களும் குஞ்சுகளும் இப்படியே கதறிக் கொண்டிருக்க வேண்டியது தான்.
  6. முதல் நாளே அரங்கம் சென்று பார்க்க இருந்த திட்டம் போட்டு இருந்தோம், ஆனால் முடியவில்லை. இந்த வெள்ளி பார்க்க செல்வதாக உள்ளேன். என் குடும்பத்தில் வெற்றிமாறனின் ரசிகர் இருவர் உள்ளோம். ஒன்று நான், அடுத்தது என் மகள். நாம் இருவரும் இது வரைக்கும் அசுரனை மூன்று முறையும், விடுதலை பாகம் 1 இனை இரண்டு தரமும், ஆடுகளத்தை பலதடவையும் பார்த்துள்ளோம். கந்தப்பு மாதிரி, பொல்லாதவனை மட்டும் திரையரங்கம் சென்று பார்க்கவில்லை. மிச்ச எல்லாவற்றையும் அரங்கம் சென்றே பார்த்து இருக்கின்றேன். வெற்றிமாறனின் படங்களில் மிகப் பிடித்தது, வட சென்னை.
  7. கொலைக்குற்றவாளிகளுக்கே மன்னிப்பு வழங்கும் நாடு சார் இது போங்க உடனடி வேலை இடமாற்றம் அடுத்த நாள் வேறு இடத்தில வேலை இதுதான் நடக்கும்
  8. சுமமா தமாசு பண்ணாதீங்க சிறியர் உலகம் அறிந்த தமிழினப்படுகொலையை நிரூபிக்கவே ஆதாரம் காணாது என்ற சொன்ன அப்புக்காத்தும் அவரது அல்லக்கைகளும் இதுக்கு ஆதாரம் தேடி எடுக்க எத்தனை நாளாகும் அதற்குள் அடுத்த தேர்தல்வந்து விடும். இங்கே அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள்அதே மக்கள் அல்ல சுமத்திரனின் அடிப்பொடிகள். இதுதான் அவருடைய அரசியல்நகர்வு. குற்றஞ்சாட்டப்பட்ட சிறிதரனோ கனடாவில் தமிழ்மக்களால் வரவேற்கப்படுகிறார். சுமத்திரன் போல் கூட்டத்தை நடத்த விடாமல் கலைக்கப்படவில்லை. ஆக நிலமும் புலமும் சிறிதரனை ஆதரிக்கிறார்கள்.அதே சமயம் நிலமும் புலமும் சுமத்திரனை புறக்கணிக்கிறார்கள்.
  9. இந்த ஊர்வலம் நடத்திற ஆட்களும் முன்னிலை வகிப்பவர்களும் யாரென்று பார்த்தால் சுமத்திரனின் அல்லக்கைகள்.கடந்த தேர்தலில் சுமத்திரன் அணியில் போட்டியிட்வரும் அதில்நிற்கிறார். இந்த கேட்டுவிட்டுத்தான் மக்கள் சிறிதரனுக்கு வாக்களித்து இருக்கிறார்கள்.தமிழ்மக்களுக்கு எத்தனையோ அன்றாடப்பிர்சினைகள் இருக்கின்றன. முக்கிய பிரச்சினையான இனப்பிரச்சினை இருக்கிறது.ஆனால் இவர்களுக்கு சிறியை தமிழரசுக்கட்சியிலிருந்து வெளியேற்றுவதுதான் பிரதான பிரச்சினையாக இருக்கிறது. https://www.facebook.com/share/p/14vJZeZjfw/
  10. தற்போது இதை வைத்து சமூக வலைத்தளங்களில் சீவுகிறார்கள். வங்கிகளில் எடுத்த கடன் பத்திரங்கள், கிரடிற் காட் கடன் விவரங்களைப் போடலாமா என்று போட்டு வாங்குகிறார்கள். 🤣
  11. பேங்க் மேனேஜர் : கிரிடிட் கார்டு பில்லை, எப்ப சார் கட்டுவீங்க...? வாடிக்கையாளர்: கட்ட முடியாது சார். பில்லை முருகன் கோவில் உண்டியல போட்டுட்டேன்... இனிமே நீங்க, முருகன் கிட்ட தான் வசூல் பண்ணிக்கணும்....😂😂😂
  12. மகிந்தவின் பாதுகாப்பை ஏன் ஒரு தலைப்பட்சமாக புத்தரிடம் மட்டும் கொடுக்கின்றீர்கள். நீங்கள் தானே... அடிக்கடி திருப்பதிக்கும், ஸ்ரீரங்கத்திற்கும் சென்று வழிபடுகின்றனீர்கள். புத்தருடன்... பெருமாளையும் (யாழ்.கள @பெருமாள் அல்ல) துணைக்கு சேர்க்கிறது. 😂 பிற் குறிப்பு: இவர்கள் தான் மகிந்தவுக்கு சத்த வெடி வைத்து விட்டு... அனுதாபம் தேடப் போகிறார்கள் போலுள்ளது. கோத்தாவுக்கும்... சட்டையில் இரத்தம் பட, சத்த வெடி வைத்த ஆட்கள்தானே. 😂
  13. Bringing the police service in to disrepute. உடனடியாக சேவை விடுப்பில் அனுப்பி, விசாரணையின் பின் சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
  14. விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது? RS Infotainment இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்து உருவாகியுள்ள விடுதலை 2 திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. விடுதலை முதல் பாகம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், இன்று அதன் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களுக்கும், இளையராஜா இசையமைத்துள்ளார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடுதலை 2 படம் குறித்துப் பல்வேறு ஊடகங்களில் வெளியான விமர்சனங்கள் என்ன சொல்கின்றன? படத்தின் கதைகளம் விடுதலை முதல் பாகத்தில், மலைப் பகுதியில் மக்கள் வாழுமிடத்தில் சுரங்கம் அமைத்து வளங்களைச் சுரண்ட நினைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிராக புரட்சி வெடித்து மக்கள் படை ஒன்று உருவாகிறது. அதை தலைமை வகிக்கும் பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) என்ற கதாபாத்திரத்தை சுற்றியே கதை நகர்கிறது. புரட்சி செய்யும் மக்கள் படைக்கு எதிராக அரசாங்கம் சிறப்பு போலீஸ் படையை அப்பகுதிக்கு அனுப்புகிறது. அதன் ஜீப் ஓட்டுநராக குமரேசன் என்னும் கதாபாத்திரத்தில் சூரி நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் குமரேசன் (சூரி) கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது போல், இரண்டாம் பாகம் முழுக்க பெருமாள் வாத்தியாரின் பின்கதைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா' குறிப்பிட்டுள்ளது. ``பெருமாள் வாத்தியார் யார்? அவர் எப்படி இந்த தமிழர் மக்கள் படையைக் கட்டமைத்தார்? அவருக்கான அடிப்படைத் தத்துவக் கோட்பாட்டுகள் என்ன? அவரை உருவாக்கியது யார்? ஆயுதப் போராட்டத்தை அவர் கையில் எடுத்ததற்கான காரணம் என்ன?" என்பதுதான் இரண்டாம் பாகத்தின் திரைக்கதை" என்கிறது இந்து தமிழ் திசை விமர்சனம். RS Infotainment விடுதலை 2 முதல் பாகத்தில் புரட்சியாளர் `பெருமாள் வாத்தியார்' (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுகிறார். அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தில் மலையில் இருந்து குமரேசன்(சூரி) உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் அவரை வேறு இடத்திற்கு அழைத்து வருகிறார்கள். வழி நெடுக பெருமாள் வாத்தியார் தனது வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறார். இந்த நிலையில் "அவரின் பின்கதை குமரேசனை எப்படி பாதிக்கிறது எனும் போக்கில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது" என டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் கூறுகிறது. வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 வலுவான கதைகளத்தைக் கொண்டிருப்பதாக `இந்தியா டுடே' தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது. ``சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில் இந்தத் திரைப்படம் கம்யூனிசத்திற்கான ஒரு கையேடு" என்றும், "கூற விரும்பும் கம்யூனிச கருத்தை எளிமையாக்கி, இன்றைய பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்” இந்தியா டுடே பாராட்டியுள்ளது. `இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம்' RS Infotainment "முதல் பாகத்தில், மலைக் கிராம மக்களின் வாழ்வியலையும் காவல்துறையின் அத்துமீறல்களையும் சமரசமற்று பதிவு செய்திருந்த இயக்குநர் வெற்றிமாறன், இரண்டாம் பாகத்தில் களப்போராட்ட வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பங்களின் வாழ்வியல் வலிகளை உருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார்" என்று இந்து தமிழ் திசை விமர்சனம் கூறுகிறது. விடுதலை 2 திரைப்படம், "தலைமறைவு, கைது, கண்ணீர், கொடூரமான மரணங்கள் என இயக்கவாதிகளின் வாழ்வாதாரப் போராட்டத்தை டிஜிட்டல் யுகத்தில் ஆவணப்படுத்தியுள்ளதாகக் கூறும் இந்து தமிழ், "வெற்றிமாறன் இளம் தலைமுறைக்கு அரசியல் பாடம் கற்பித்திருக்கிறார்" என்றும் விவரிக்கிறது. மேலும் விடுதலை 2 மூலம் சரியான கேள்விகளைக் கேட்டு, `யார் சரி எது சரி' என்று வெற்றிமாறன் மக்களைச் சிந்திக்க வைப்பதாக இந்தியா டுடே கூறுகிறது. `பெருமாள் வாத்தியாரின் பின்கதை ஏற்படுத்திய தொய்வு' RS Infotainment "இயக்குநர் வெற்றி மாறன் முதல் பாகத்தில் தனது பாணியில் வன்முறைக் காட்சிகளை அழுத்தமாகக் காட்சிப்படுத்தி சில விமர்சனங்களைச் சந்தித்தார். இரண்டாம் பாதியும் அதேபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது" என தினமணி விமர்சித்துள்ளது. "இரண்டாம் பாகத்தில் இருக்கும் வன்முறைக் காட்சிகளில் எந்தவிதமான உணர்ச்சிகளும் கைகூடவில்லை. குண்டு வெடிக்கிறது, பெண்ணை ஆடையில்லாமல் சித்தரவதை செய்கின்றனர், பண்ணை அடிமைத்தனத்தைக் கொடூரமாகக் காட்டுவது என எதிலும் நமக்கு உணர்ச்சிகள் கடத்தப்படவில்லை. இது திணிக்கப்பட்ட காட்சிகளாகவே எஞ்சுகின்றன" என்றும் தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. இந்து தமிழ் விமர்சனத்திலும், படத்தில் வரும் வன்முறைக் காட்சிகளில் அதிகமான ரத்தம் தெறிப்பதாகக் கூறுகிறது. இந்தியா டுடே தன் விமர்சனத்தில், ``பெருமாளின் பிளாஷ்பேக்கை விவரிக்கும்போது படம் தொய்வடைகிறது" எனக் கூறியுள்ளது. "விடுதலை 2 அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்த கதையாக இருக்காது" என்றும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது. `போலித்தனம் இல்லாத காதல் காட்சிகள்' RS Infotainment படத்தின் ஆரம்பத்தில் கென் கருணாஸ் வரும் காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதாகக் கூறும் இந்தியா டுடே, விடுதலை 2 படத்தின் முக்கிய பலம் இயக்குநர் வெற்றிமாறன் எழுதிய ஆழமான வசனங்கள்தான் என்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் பற்றிப் பேசியுள்ள இந்து தமிழ், "இங்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற அரசியல் தோன்றுவதற்கான அவசியத்தையும், அதன் ஆரம்பத்தையும் ரத்தம் தெறிக்கப் பேசியுள்ள இந்தப் படத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சுப்ரமண்ய சிவா, இளவரசு, சேத்தன், இயக்குநர் தமிழ், பாவெல், பாலாஜி சக்திவேல் என ஒவ்வொருவரின் பங்களிப்பும் படத்துக்கு பலம் சேர்த்திருப்பதாக" பாராட்டியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி அற்புதமான நடிப்புடன் படத்தைத் தாங்குவதாகக் குறிப்பிட்டுள்ள இந்தியா டுடே, சூரி, குமரேசனாக இரண்டாம் பாகத்தில் படத்துக்கு பலம் சேர்ப்பதாக எழுதியுள்ளது. இந்து தமிழ் விமர்சனம் படத்தில் வரும் காதல் காட்சிகளில் வெற்றிமாறன் வாகை சூடியிருப்பதாகப் புகழ்ந்துள்ளது. "அழுக்கும், ரத்தமும் படிந்த இயக்கவாதிகளின் போலித்தனம் இல்லாத காதலை விஜய் சேதுபதியும்-மஞ்சு வாரியாரும் பரிமாறிக் கொள்ளும் விதம் சிறப்பு" என்றும் குறிப்பிடுகிறது. திரைப்பட ட்ரெய்லரின்போது மஞ்சு வாரியாரின் ஹேர்ஸ்டைலுக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் "வெற்றிமாறன், திரைப்படத்தில் அதற்கு அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். இனி தலைமுடியை வெட்டிக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றும் இந்து தமிழ் குறிப்பிட்டுள்ளது. ஒளிப்பதிவு சிக்கல்கள் RS Infotainment விடுதலை 2 படத்தில் கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்கு சரியான முடிவை அளித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறுகிறது. ``இது பாராட்டுக்குரிய முயற்சி. சில தொடர்ச்சியான ஓவர்லேப் வசனங்களின் சிக்கல்கள் இருந்த போதிலும், உரையாடல் சார்ந்த கதைக்களத்துடன், பல முற்போக்கான சித்தாந்தங்கள் மற்றும் கருத்துகளைக் காட்சிப்படுத்தியன் மூலம் கதை வலுப்பெறுகிறது" என இந்தியா டுடே கூறியுள்ளது. இளையராஜாவின் பின்னணி இசையைப் பாராட்டியுள்ள பற்றி இந்து தமிழ், ``பின்னணி இசையில் இளையராஜா மிரட்டுகிறார். விஜய் சேதுபதி, மஞ்சு வாரியரின் காதல் காட்சிகளில் கிட்டாரில் மிருதுவாகவும், விஜய் சேதுபதியின் வன்முறைக் காட்சிகளில் ட்ராம்போனில் பதற்றத்துடனும் நம் செவிகளுக்குள் அவரது இசை புகுந்து கொள்கிறது" என்று பாராட்டியுள்ளது. படத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டிய இந்து தமிழ் விமர்சனம், ``ஒரு வசனம் முடிந்து மற்றொரு வசனம் வருவதற்குள் ஓவர்லேப் டயலாக்குகள் வந்துவிடுவதால், நிறைய வசனங்களை முழுமையாகக் கேட்க முடியவில்லை" என்று விமர்சித்துள்ளது. படத்தின் பாடல்கள் கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அது தேவையின்றி பொருத்தப்பட்ட இடைச்செருகல் போன்ற உணர்வை மட்டுமே கொடுப்பதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. ``காட்சிகளாகவே நிறைய முரண்பாடுகள் இருப்பதாக சூரியின் பார்வையில் விரியும் விடுதலையின் கதை, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதியின் கதையாகவே மாறியுள்ளதாக" தினமணி விமர்சனம் குறிப்பிட்டுள்ளது. ``சூரிக்கு அதிக காட்சிகள் இல்லை. மஞ்சு வாரியரின் வருகை, பெருமாளான விஜய் சேதுபதி வாத்தியாராக மாறுவதில் பெரிய அழுத்தங்கள் இல்லை. கொலைக்கு கொலை என்றே கதை கூறப்பட்டு இருப்பதாகவும்" விமர்சித்துள்ளது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3907kerl3go?at_campaign=ws_whatsapp
  15. சில படங்கள் பார்த்த பின்னர் பலநாட்கள் தொந்தரவு செய்யும். மகாநதி முன்னர் தொந்தரவு செய்தது. இப்போது விடுதலை.. படத்தின் அரசியல் புரியாது எனக்கு முன்னால் இருந்த சில தமிழக இளைஞர்கள் “தோழர்” என்று தங்களுக்குள் கிண்டலடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை அதட்டி அமைதியாக்கவேண்டி வந்துவிட்டது. அவர்கள் என்னுடன் சண்டைக்கு வராமல் “சும்மா கலாய்க்கத்தான்” என்று சொல்லி அமைதியாகிவிட்டார்கள். படத்தை நிம்மதியாகப் பார்க்கமுடிந்தது. முகநூலில் வந்த பதிவு ஒன்று.. ஸ்பொயிலர் இல்லை.. —— நம் பாலுமகேந்திராவிடம் பயின்ற வெற்றிமாறன் இயக்கி வெளியாகியிருக்கும் விடுதலை 2 ஒரு செங்காவியம்! முதல் காட்சியிலேயே சுத்தியல் ஒன்று அரிவாளை அடித்து உருவாக்குகிறது! தெளித்திருக்கிறது அரசியல் - ரத்தமாக!! இருந்தாலும் அதையெல்லாம் நல்லதொரு கலைப்படைப்பாக காட்சிக்குக் காட்சி அனுபவித்து உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். கம்யூனிஸ தத்துவத்தை பெருமைப்படுத்தி தமிழில் இப்படியானதொரு அரசியல் படம் வந்ததே இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் செய்த தன்னலமற்ற தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயர்நிலைப்பட்டுப் பதியப்பட்டிக்கின்றன. இது படம் அல்ல பாடம். வெற்றிமாறனின் சினிமா அனுபவம் இந்தப்படத்தின்மூலம் துணிச்சலான அரசியலாக மாறியிருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவின் அதிகார அரசியல் மற்றும் காவல்துறை ஊழல்களை அப்பட்டமாகக் கிழித்திருக்கிறது படம். லெனின் படத்தையோ மார்க்ஸ் படத்தையோ காட்டிவிட்டு கம்யூனிஸம் என்று கதைவிடாமல், ஒரு படைப்பாக வசனங்களாலும், கதை மாந்தர்களாலும் ஒரு மாபெரும் புரட்சிகரத் தத்துவத்தை தமிழில் எளிமையாகப் பேச முயன்று தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்தியிருக்கிறது படம். அதிகாரம், துரோகம், வர்க்கம், சாதி, ஆண்டான் அடிமை முறை, மனித உரிமை மீறல்கள் ஒன்றுடன் ஒன்றும், வரலாற்றுடனும் கொண்டிருக்கும் தொடர்பு படம் முழுவதும் எதிரொலிக்கிறது. ஆனால் விடுதலை1 கொண்டாடப்பட்டதுபோல விடுதலை 2 அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுமா என்பது சந்தேகமே. படம் சிறப்பாகவே இருந்தாலும் அது பேசும் அரசியல் எல்லாருக்கும் புரியாது. (குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் தனி) இந்திய அதிகாரம் எப்படி இயக்கப்படுகிறது என்பதை இயக்குனர் ராஜிவ்மேனன் ஏற்றிருக்கும் பாத்திரம் பச்சையாகச் சொல்லாமல் சொல்கிறது. ஆசான் கே.கே.யாக வரும் கிஷோர், 'திருட்டுமுழி' சேத்தன், கௌதம் வாசுதேவ் மேனன் மனதில் நிற்கிறார்கள். மஞ்சுவாரியரின் பாத்திரம் மட்டும் சற்று சினிமாத்தனமாக வந்திருந்தாலும், அதற்கும் பெருமளவு அழுத்தம் வெற்றிமாறனால் தரப்பட்டிருக்கிறது. பெண்கள் தலைமுடியை வெட்டி கிராப் செய்து கொள்வதற்கு சொல்லப்படும் காரணம் நிமிர்ந்து உட்கார வைக்கிறது - 'விடுதலை பெண்'களை! மஞ்சுவாரியரின் தோற்றம் தோழர் மணலூர் மணியம்மையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. மணியம்மை பிராமணக்குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்தவர் என்பது நடந்த வரலாறு. தமிழ்நாட்டில் நடந்த கொடுமையான பிரச்சினைக்குரிய வரலாற்றுச் சம்பவங்கள் சிலவற்றை இந்த அளவு துணிச்சலாக... வசனங்களில்... திரைக்கதையில்... பரபரப்பான காட்சி அமைப்புக்களில்.. இவ்வளவு அழுத்தமாக, ஆழமாக, தத்துவப் பார்வையுடன் வெற்றிமாறனைத் தவிர வேறு தமிழ் இயக்குனரால் தரமுடியுமா? சந்தேகம்தான். தமிழ் சினிமாவில் மணிரத்தினம் "We Do The Lie" என்பது வெளிப்படையாகத் தெரிவதுபோல எடுப்பார்... பா.ரஞ்சித் தாழ்ந்த ஜாதியினர் செய்யும் பிரச்சாரம்போல வெளிப்படையாக எடுப்பார். வெற்றிமாறனோ விசாரணை செய்கிறார். இனி ஆளை 'இயக்குனர்ஞானி' வெற்றிமாறன் என்றும் சொல்லலாம். படத்தின் எடிட்டிங் கதையோட்டத்தை விறுவிறுப்பாக்குகிறது. இசைஞானியின் பின்னணி இசை ஒலிக்கும்போதும்சரி, ஒலிக்காமல் இருக்கும்போதும்சரி படம் மேலும் விறுவிறுப்பாகிறது. இளையராஜாவே எழுதி பாடிய "தினம்தினமும் ஒன் நினைப்பு" முந்தைய அவரது பாடலான "வழிநெடுக காட்டு மல்லி" பாட்டின் பார்ட் 2 + கர்நாடக இசைக்கலைஞர் சஞ்சய் சுப்பிரமணியத்தை பாடவைத்திருக்கும் "மனசில மனசில.." பாட்டில் ஆகாயத்தில் புள்ளி வைத்திருக்கிறார் இளையராஜா. "ஆயுதப் போராட்டம் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டுமா?", "போராளிகள் திருமணம் செய்யலாமா" என்று 1980களில் ஈழத்தமிழர்கள் கேட்ட கேள்விகளுக்குக்கூட இந்தப்படத்தில் சரியான விளக்கம் வருகிறது. "வன்முறை ஒரு மொழி இல்லை. ஆனால் எங்களுக்கு அந்த மொழியும் பேசத் தெரியும்" என்கிறார் விஜய் சேதுபதி. விடுதலை 1இல் சூரியை மையமாக வைத்து கதை ஓடியது. இதில் விஜய்சேதுபதி படத்தை முழுவதுமாகத் தாங்குகிறார். விடுதலை 1 தமிழ்நாடு விடுதலைப்படையுடன் தொடர்புற்றிருந்தது. விடுதலை 2ல் தமிழரசன், கலியபெருமாள் போன்ற ஆளுமைகள் பெருமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அவர்கள் செய்த அரசியலின் தீர்க்கத்தை மக்கள் மத்தியிலும், சினிமா ஆர்வலர் மத்தியிலும் எளிமையாக, வலிமையாகக் கொண்டுபோகிறது விடுதலை 2. படத்தில் வரும் வெற்றிமாறன் வசனங்கள் நம்மிடையே பல புரிதல்களையும் விவாதங்களையும் முன்வைக்கிறது. "தத்துவமில்லாத தலைவர்கள் ரசிகர்களைத்தான் உருவாக்குவார்கள். அது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது" என்று ஒரு வசனம் வருகிறது. படத்தை பார்க்கும்போது ஜே.வி.பி & ரோகணவிஜயவீரவின் நினைவும் வராமல் போகாது. தமிழ் ஈழத்தின் விடுதலைக்காக முள்ளிவாய்க்கால்வரை சென்று வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த சம்பவம்கூட நுட்பமாக படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. கண்ணத் திறந்தபடியே கிடக்கும் சடலம், அதை தூக்கி எடுக்கும் காட்சி.. படத்தைப் பாருங்கள். புரியும். https://www.facebook.com/share/18PC8heMXU/?mibextid=wwXIfr
  16. ரஞ்சித் அவர்களே, தேடுதலும் வரலாற்றறிகையும் வற்றிச் செல்லும் உலகில் காலத்திற்கு ஏற்றவாறு தேடியெடுத்து மொழிபெயர்த்து அவற்றை அறிந்துகொள்ளப் பாலமாகச் செயலாற்றிய தங்களுக்கும் தங்கள் நேரத்துக்கும் யாழ் களமும் நாமும் நன்றியுடையோராவோம். தங்கள் தேடல்கள் தொடரட்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  17. நான் பார்த்த அளவில்.... சுமந்திரன் குரூப்தான், இங்கு நின்று கம்பு சுத்திக் கொண்டு நிற்கிறார்கள் போலுள்ளது. 😂 என்ன... இருந்தாலும், அனுரா அரசில்... ஒரு அமைச்சராக வருவேன் என நம்பி இருந்த சுமந்திரன் தோற்றுப் போன வேதனையை மறக்க, கனநாள் எடுக்கும்தானே.... 🤣 அது மட்டும், ஸ்ரீதரனுக்கு... "தடி, ஒட்டிக்" கொண்டு இருக்க வேண்டியதுதான்.
  18. புத்தனின் பெயரால் தமிழினப்படுகொலையளர்கள் அனைவரையும் புத்தர் பாதுகாப்பாரென்றுதானே அரங்கேற்றுகிறீர்கள். அப்போ புத்தனும் எம்மைக் கொலைசெய்ய உடந்தையாகிவிட்டார். உலகு வாழ் புத்தமதத் தலைவர்களும், புத்தரை வழிபடும் மக்களும் வெட்கித் தலைகுனியும் நிலைக்குச் சிங்களவர்களால் புத்தர் இழுத்துவரப்பட்டுள்ளார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  19. வேறுயார் அவர்தான் ......அதிலென்ன சந்தேகம் . .......! 😁
  20. எல்லாம் மிக மிக அழகாக இருக்கின்றன . ..........! 👍
  21. Published By: DIGITAL DESK 3 25 DEC, 2024 | 01:48 PM மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் பிறப்பைக் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடெங்கும் உள்ள தேவாலயங்களில் விசேட வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் யாழ். மறை மாவட்டத்துக்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்திலும் கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் தேவாலயத்தின் தலைமை போதகர் ரொஷான் மகேசன் தலைமையில் நடைபெற்றன. இயேசு பாலகனின் பிறப்பை பற்றிய பாடல்கள் பாடப்பட்டு இங்கு ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதன்போது கிறிஸ்மஸ் தின கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. கிறிஸ்தவ மாணவர்களுக்கு இயேசு பாலகனின் பிறப்பின் மகத்துவம் பற்றிய ஆசி உரைகளும் பிரதான போதகரால் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு - புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு தேற்றாத்தீவு மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை நடைபெற்றன. இந்நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை தேவதாஸன் அடிகளார் தலைமையில் நடத்தப்பட்டதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது. இந்த ஆராதனையில் அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புத்தளம் புத்தளம் அன்னை ஷாந்த மரியாள் தேவாலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. இதன்போது ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது. அருட்சகோதரிகள், ஆயர்கள், கிறிஸ்தவ மத குருமார் மற்றும் கிறிஸ்த மக்கள் பெருந்திரளானோர் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/202102
  22. 25 DEC, 2024 | 11:07 AM நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் இன்று புதன்கிழமை (25) விடுவிக்கப்பட்டனர். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி புத்திக பெரெரா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. https://www.virakesari.lk/article/202096
  23. 👇 👆 மேலே தமிழில் உள்ள செய்தியில்... ஸ்ரீதரன்... //மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.// என்று... வெளிப்படையாக அறிவித்த பின்பும், லூசுத் தனமாக எழுதிக் கொண்டு இருக்காமல்... அவர் சாராய அனுமதி பெற்றதை நிரூபித்து, அவரை அரசியலில் இருந்து விலக வைக்கின்ற அலுவலை பார்க்கவும். இனி.... உங்களுக்கு தெரிந்த ஆதாரங்களை, திரட்டிக் கொண்டு களத்தில் இறங்கவும். 👍 பைத்தியக்காரத்தனமாக.... சும்மா ஊளையிடுவதில், எந்த அர்த்தமும் இல்லை. மேலே எல்லாம் தமிழில்தான் எழுதப் பட்டுள்ளது. வாசித்து... விளங்கிக் கொள்வதில், எந்தப் பிரச்சினையும் இராது என நினைக்கின்றேன். திரும்பத் திரும்ப... ஒரு விடயத்தை, உங்களுக்கு விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை. போய் ஆதாரங்களை திரட்டவும். அதுதான்... இப்போ நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. இதற்குமேல்.... உங்களுக்கு, விளக்கமாக.. சொல்ல எதுவும் இல்லை. 🙂
  24. தமிழர்தேசம் என்பதைவிடத் சிங்களத்திற்கான தமிழினப் படுகொலைத் தேசமாகவே தமிழர்தாயகமெங்கனும் பதிவாகியுள்ளமை என்பது எவளவு இழப்பு, எவளவு துயரம். தங்கள் உறவுகளை இழந்தோரை, சந்ததிகளையோ இழந்தோரை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. குறிப்பாக தமிழர் தாயகத்தின் எல்லைக் கிராமங்களின் மக்களது நிலை இனியும் அச்சத்திற்குரியதே. ஆட்சித்தலைமை மாறும். ஆனால் கொலைப்படைகள் அப்படியே இருப்பவை. தண்டனைகள் வழங்காது பாதுகாக்கப்படும் தமிழினக் கொலைக்காக உருவாகிய சிங்களப்படைகளின் கீழ் தமிழினத்தின் அழிவு தொடர்கதையாகவே இருக்கிறது. ரஞ்சித் அவர்களே தங்களின் தொடர் முயற்சிக்குப் பாராட்டுகள் உரித்தாகுக. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  25. பொங்கல் கொண்டாடச் சென்ற 132 தமிழ் விவசாயிகளைப் படுகொலை செய்துவிட்டு பயங்கரவாதிகளை வேட்டையாடினோம் என்று பெருமை பேசிய லலித் அதுலத் முதலி பரந்துபட்ட கைதுகள், சித்திரவதைகள் போன்றவை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்திய கோபத்தினை விடவும் கிழக்கு மாகாணத்தில் சரித்திரகாலம் தொட்டு தமிழ் மக்கள் வாழ்ந்துவந்த பகுதிகளில் இருந்து அவர்களை பலவந்தமாக வெளியேற்ற அரச படைகள் மேற்கொண்ட திட்டமிட்ட படுகொலைகளும், தாயக அழிப்பும் கடுமையான கோபத்தினை ஏற்படுத்தியிருந்தன. 1985 ஆம் ஆண்டு தை மாதம் 15 ஆம் திகதி தமிழ் மக்கள் மீது அரச படைகள் கட்டவிழ்த்த படுகொலையினை "பயங்கரவாதிகளை அழித்தோம்" என்று அரசு மார்தட்டிக்கொண்டபோது தமிழ் மக்கள் கடுமையாக‌ வேதனையடைந்தார்கள். தை மாதம் 15 ஆம் திகதி தேசிய பந்தோபஸ்த்து அமைச்சரான லலித் அதுலத் முதலி வெளியிட்ட அறிக்கையில் சிங்களக் குடியேற்றக்கிராமங்களைத் தாக்குவதற்காக அணிவகுத்துச் சென்ற 52 பயங்கரவாதிகளை தமது இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கிக் கொன்றுவிட்டதாகப் பெருமையுடன் பேசியிருந்தார். இத்தாக்குதலில் விமானப்படை ஆற்றிய பங்கையும் அவர் வெகுவாகப் பாராட்டியிருந்தார். தேசிய ஊடகங்கள் லலித் அதுலத் முதலியின் அறிக்கையினை மிகுந்த எழுச்சியுடன் பிரச்சாரப்படுத்தி இலங்கை விமானப்படையினரின் மிகப்பெரிய வெற்றி என்றும் புகழ்ந்திருந்தன. இத்தாக்குதலினால் சிங்களவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார்கள் என்றால் அது மிகையில்லை. ஆனால் நடந்ததோ அரசாங்கம் அறிவித்தமைக்கு நேர் எதிரானது. தை மாதத்தின் 14 ஆம் திகதியினை தமிழ் விவசாயப் பெருமக்கள் தமக்கு சக்தியைத் தரும் சூரியனுக்கு நன்றிகூறும் நாளாகப் பாவித்துக் கொண்டாடுவது வழமை. புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரசியினைக் கொண்டு அவர்கள் பொங்கல் பொங்குவார்கள். அதற்கு மறுநாளான தை 15 ஆம் திகதியை விவசாயத்தில் தமக்கு உறுதுணையாகவிருந்து எருவையும், வயல்களை உழவும், சூடடிக்கவும் உதவிபுரியும் காளைகளுக்கு நன்றிசெலுத்தும் நாளாகக் கொண்டு மாட்டுப்பொங்கலைக் கொண்டாடுவார்கள். 1984 ஆம் ஆண்டு நத்தார் தினத்திற்கு முதல்நாள் புராதன தமிழ்க் கிராமங்களான கொக்கிளாய், நாயாறு, கொக்குத்தொடுவாய், கருநாற்றுக்கேணி, செம்மலை, குமுழமுனை, அலம்பில் ஆகிய முல்லைத்தீவு மாவட்டத்தின் பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இராணுவத்தால் அடித்து விரட்டப்பட்டு முல்லைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்திலும், வற்றாப்பளை அம்மண் ஆலயத்திலும், வித்தியானந்தாக் கல்லூரியிலும், வற்றாப்பளை ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும் அகதிகளாகத் தங்கவைக்கப்பட்டிருந்தார்கள். இவ்வாறு தங்கவைக்கப்பட்டிருந்த தமிழ் அகதிகளில் ஒரு பகுதியினர் தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதற்கு முன்னர் தாம் விதைத்திருந்த வயல்களில் அறுவடை செய்து பொங்கல் விழாவை தமது வீடுகளில் கொண்டாடுவதென்று 1985 ஆம் ஆண்டு தை மாதம் 14 ஆம் திகதி முடிவெடுத்தார்கள். அதன்படி இக்குடும்பங்கள் சிறிய சிறிய குழுக்களாகப் பிரிந்து தமது கிராமங்கள் நோக்கிப் பயணித்தார்கள். அகதிமுகாம்களைப் பராமரித்த அதிகாரிகளும், தொண்டர் அமைப்புக்களும், மனிதவுரிமை அமைப்புக்களும் இவர்களைத் தடுத்தபோதும், அதனைச் சட்டை செய்யாது அவர்கள் தம்வழியே தமது கிராமங்கள் நோக்கிப் பயணித்தார்கள். தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கிராமங்களுக்கு அவர்கள் மீளவும் வருவதைத் தடுக்கும் முகமாக கிராம எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த இராணுவக் காப்பரண்களில் இருந்த இராணுவத்தினர் தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதை அவதானித்திருக்கிறார்கள். இதனை புதிதாக அமைக்கப்பட்டிருந்த வெலி ஓயாக் கட்டளைப் பணியகத்திற்கு தெரிவித்து மேலதிகமாக இராணுவத்தினரை அப்பகுதிக்கு அனுப்புமாறு கூறியதுடன், விமானப்படைக்கும் அறியத் தந்தார்கள். இதனையடுத்து மிகவும் தாள்வாகப் பறந்த உலகுவானூர்திகளில் இருந்து விமானப்படையினர் அப்பாவி விவசாயிகள் மீது குண்டு மாரி பொழிய, தரையூடாக மூன்னேறி வந்த இராணுவத்தினர் மீதமிருந்தோரைச் சுட்டுக் கொன்றார்கள். பொதுமக்கள் மீதான அப்பட்டமான இப்படுகொலையினை "52 பயங்கராவதிகளைக் கொன்றுவிட்டோம்" என்று லலித் அதுலத் முதலி வர்ணித்திருந்தார். ஆனால் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட அப்பாவி விவசாயிகளின் எண்ணிக்கை 52 ஐக் காட்டிலும் மிகவும் அதிகமானது. இத்தாக்குதலின் பின்னர் அகதிகள் முகாமில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது 132 தமிழ் மக்கள் காணாமற்போயிருப்பது தெரியவந்திருந்தது. இவர்களுள் 37 பேர் பெண்கள். இக்கணக்கெடுப்பினூடாக காணாமலாக்கப்பட்ட தமிழ் மக்களின் பெயர்களும் வயதுகளும் பட்டியலிடப்பட்டன. அப்படிக் காணாமற்போனவர்களில் ஒருவர் பெயர் முத்துலிங்கம். 12 வயதே நிரம்பிய அவர் தனது பெற்றோருக்கு அறுவடையில் உதவுவதற்காக அவர்களுடன் சென்றிருந்தார். லலித் அதுலத் முதலியினால் பெருமையுடன் உரிமை கோரப்பட்ட பயங்கரவாதிகளின் மரணங்கள் என்பது உண்மையிலேயே அப்பாவி விவசாயிகளின் படுகொலைதான் என்று அவரிடம் பல செய்தியாளர்கள் எடுத்துக்கூறினர். அதன்பின்னர் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்ட "பயங்கரவாதிகள்" எனும் சொல்லினை நீக்கிவிட்டு "பிரிவினைவாதிகள்" என்று மாற்றுவதற்கு அவர் இணங்கினார். "அப்பகுதி தமிழ் மக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகும், அப்பகுதிக்குள் பிரவேசிக்கும் எவரையும் பயங்கரவாதிகள் என்று கருதி நாம் சுட்டுக் கொல்வோம், அவர்கள் தேவையற்ற இடத்தில் தேவையற்ற நேரத்தில் சென்றதற்காகவே கொல்லப்பட்டார்கள்" என்று அப்பாவிகளின் படுகொலையினை நியாயப்படுத்தினார் லலித். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சட்டர்டே ரிவியூ மற்றும் தமிழ்ப் பத்திரிக்கைகள் அரசால் நடத்தப்பட்ட இப்படுகொலையினை முழுவதுமாக செய்தியாக்கி வெளிக்கொண்டுவந்திருந்தார்கள்.
  26. அவர்கள் எதிரிகள்.. நெஞ்சில்சுட்டவர்கள்… என் நண்பர்கள் பலரை இவர்களால் இழந்தேன்.. வடக்கில் டக்கிளஸ் தேவானந்தா கூட்டமும் கிழக்கில் கருணா பிள்ளையான் கூட்டமும் இடி அமீனுக்கு சமமானவர்கள்.. இதை எப்பொழுதும் எழுதிப் பதிந்து வருபவன் நான்.. இவர்களை பற்றி மக்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை.. ஊர் உலகம் அறிந்த கொலைகாரப்பாவிகள்.. ஆனால் இந்த பார்சிறி வேறு ஒரு ரகம்.. கூட இருந்து குழிபறிப்பவன்.. நசுக்கிடாக்கள்ளன்.. நெஞ்சில் குத்தாமல் நைசாக நசுக்கிடாமல் முதுகில் குத்தும் துரோகி.. இவனைப்பற்றி மக்கள் அறிந்து கொள்ளவேணும்.. அதற்காக இவனைப் போன்றவர்களை பற்றி பலரும் எழுதனும்.. மக்களுக்கு எடுத்து சொல்லி ஏமாறதீர்கள் என்று விளங்கப்படுத்தனும்..
  27. சர்வதேச மன்னிப்புச் சபையினால் அறிக்கையிடப்பட்ட இலங்கை இராணுவத்தினதும் பொலீஸாரினதும் சித்திரவதை முறைகள் இவரைப் போன்று கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இன்னும் பலநூறு தமிழ் இளைஞர்களின் வாக்குமூலங்கள் சர்வதேச மன்னிபுச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்குக் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. 1985 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையில் இலங்கையில் அரச படைகளால் நடத்தப்படும் சித்திரவதைகள் குறித்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. விசாரணைக்கு அழைத்துவரப்படும் தமிழர்கள் பலமணிநேரமாகக் கட்டித் தொக்கவிடப்பட்டு உடல் முழுவதும் பொல்லுகளாலும், இரும்புக் கம்பிகளாலும் தாக்கப்படுகின்றனர். சிலவேளைகள் இரவு முழுவதும் இவ்வாறான தாக்குதல்கள் அவர்கள் மீது மேற்கொள்ளப்படும். பின்னர் மிளகாயை எரித்த புகை அடைக்கப்பட்ட சாக்குப் பைகளில் அவர்களின் தலைகள் கட்டப்பட்டு மூச்சுத்திணறும்வரை வதைக்கப்படுவார்கள். குறுக்காகக் கட்டிய தடிகளில் முழங்கால்கள் மடித்து, தலைகீழாகக் கட்டப்பட்டு கடுமையாகத் தாக்கப்படுவார்கள். நீண்ட மேசைகளில் குப்புறப் படுக்கவைக்கப்பட்டு பாதங்களில் இரும்புக் கம்பிகளால் இடைவிடாது தாக்கப்படுவார்கள். இனப்பெருக்க உறுப்பு உட்பட உடலின் அனைத்துப் பாகங்களின் மீதும் மணல் நிரப்பப்பட்ட பிளாத்திக்குக் குழாய்கள், இரும்புக் கம்பிகள், பொல்லுகள் கொண்டு கடுமையான தாக்குதல் நடைபெறும். மிளகாய்த்தூளினை கண்கள், மூக்கு, இனப்பெருக்க உறுப்பு, வாய் என்று உடலின் துவாரங்களினூடு அழுத்தித் திணிப்பார்கள். குப்புறப் படுக்கவைக்கப்படும் இளைஞர்களின் மலவாயிலூடாக இரும்புக் கம்பிகள் செலுத்தப்பட்டு உடலின் உட்புறம் நோக்கி அடித்துச் செலுத்துவார்கள். இவற்றினை விடவும் சிகரெட்டினல் உடலில் சுடுவது, தூக்கில் தொங்கவைப்பது போன்று பாசாங்கு செய்து சில நிமிடங்கள் அவர்களைத் தொங்கவிடுவது என்று பல்வகையான சித்திரவதை முறைகளை பொலீஸாரும் இராணுவத்தினரும் கைக்கொண்டு வருகிறார்கள். இவற்றிற்கு மேலதிகமாக சில இராணுவ முகாம்களில் தனித்துவமான சித்திரவதை நடைமுறைகள் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டிருந்தது. 1984 ஆம் ஆண்டு தன்னுடன் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்ட புத்தகம் ஒன்றினை வைத்திருந்தார் என்கிற குற்றச்சாட்டில் பனாகொடை இராணுவ முகாமிற்கு ஒரு தமிழ் இளைஞர் இழுத்துவரப்பட்டிருந்தார். "என்னை இருட்டான அறை ஒன்றிற்குள் தள்ளி உடைகளைக் களைந்துவிட்டு அம்மணமாக நிலத்தில் படுக்குமாறு கட்டளையிட்டார்கள். எனது கைகளையும் கால்களையும் சங்கிலிகளால் கட்டிவிட்டு பெரிய முட்களை என்னுடலினுள் செலுத்தினார்கள். கைகளில் வைத்திருந்த இயந்திரத் துப்பாக்கிகள், இரும்புக் கம்பிகள் என்பவற்றைப் பாவித்து எனது கழுத்துப்பகுதி, முழங்காற்பகுதி, கண்கள், பாதங்கள் என்று உடலின் அனைத்துப் பகுதிகளிலும் கடுமையாகத் தாக்கினார்கள். பின்னர் மிகவும் ஆளமான கிணறு ஒன்றிற்குள் என்னைச் சங்கிலிகளால் கட்டி இறக்கி பலமணிநேரம் என்னை துன்புறுத்தியபின் வெளியே இழுத்து எடுத்தார்கள்" என்று கூறியிருந்தார். இன்னொரு வாக்குமூலத்தில் கைதுசெய்யப்பட்டு மாங்குளம் இராணுவ முகாமில் அடைத்துவைக்கப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தன்மீது மின்சாரத்தைப் பாய்ச்சியதாக தெரிவித்திருக்கின்றார். 1985 ஆம் ஆண்டு ஆனி மாதம் இச்சித்திரவதை நடத்தப்பட்டதாகக் கூறும் சர்வதேச மன்னிப்புச்சபை இதுகுறித்த தகவல்களையும் வெளியிட்டிருந்தது. "என்னை விசாரித்துக்கொண்டிருக்கும்போதே எனது கால்களில் மின்சாரத்தைப் பாய்ச்சுக் கொழுக்கிகளை இணைத்து குறைந்தது ஐந்து முறைகளாவது மின்சாரத்தை என் உடலினுள் செலுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் மின்சாரம் பாய்ச்சப்பட்ட போது என்னுடல் கடுமையாக உதறியதோடு நான் கடுமையான அதிர்ச்சியினால் உறைந்துபோனேன். சுமார் இரண்டரை அடிகள் நீளமானதும் கறுப்பு நிறத்தில் காணப்பட்டதுமான மின்சாரச் செலுத்தியை அவர்கள் பாவித்தார்கள். அதன் ஒரு அந்தத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சும் சுருட்கம்பிகள் இணைக்கப்பட்டிருந்தன. சுருட்கம்பிகளையே எனது உடலோடு இணைத்து மின்சாரத்தைச் செலுத்தினார்கள். அக்கருவியின் மறு அந்தத்தில் மின்சாரத்தை முடுக்கிவிடும் சுவிட்ச் ஒன்று இருந்தது. அதனை இயக்கியே எனது உடலின் மின்சாரத்தைச் செலுத்தினார்கள்" என்று கூறியிருந்தார்.
  28. இது தவிர அர்ச்சுனா தான் போகின்ற இடங்களில் எல்லாம் சொல்கின்றாராம் புலம் பெயர்ந்த தமிழர்களை கொண்டு உங்களுக்கு இங்கே தொழில்சாலை தொடங்கி உங்களுக்கு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்கின்றேன். வெளிநாட்டு தமிழர்களோ ரஷ்யதலைவர் புதினின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் பாதிப்பால் தங்கள் வீட்டு மின்சார அடுப்பில் பூனையும் நாயும் படுத்திருப்பாதாக அழுது கொண்டு திரிகின்றனர்.
  29. சிறியரின் பதட்டம் சந்தேகத்தை உண்டாக்குகிறது.
  30. அழகான பறவைகள்
  31. நான் இருப்பது இந்த இடத்திலிருந்து 400. கிலோமீட்டர் அப்பால். நன்றிகள் பல. . ...🙏.
  32. உறவுகளுக்கு வணக்கம்🙏 Discovery Book Palace வெளியீடாக வரவுள்ள எனது அடுத்த நூலின் (சிறுகதை) அட்டையை வெளியிடுவதில் மகிழ்கிறேன்❤ சிறந்த அட்டைப்படத்தை வடிவமைத்த பாலாஜி அவர்களுக்கு நன்றி! தியா - காண்டீபன்
  33. மிக்க நன்றி, அனுப்புவது பற்றி பார்க்கிறேன். கனடாவுக்கு என்றால் 5-10 புத்தகங்கள் அல்லது அதற்கு மேல் அனுப்புவது செலவைக் குறைக்கும் என்று நினைக்கிறேன். நன்றி, புத்தகம் கிடைத்ததும், அமெரிக்காவுக்குள் இருப்பவர்களுக்கு அனுப்பி வைப்பேன், அப்போது உங்களுக்கும் அனுப்ப வழி செய்கிறேன்.
  34. நீங்கள் சொல்வது சரியே, கோஷான். இவர்கள் சிலர் இவர்கள் செய்த பணிகளால் அன்று முக்கியஸ்தர்கள் மற்றும் உலகிற்கு தெரிந்தவர்கள். ஒரு விலை கொடுத்தே அவர்கள் வெளியே வரவேண்டி இருந்தது. இந்தப் புரிதல்களும், அவர்களின் தன்னலமற்ற பணிகளையும் அப்படியே விட்டுவிட்டு, அவர்களை துரோகிகள் என்ற எல்லைவரை இழுத்துக் கொண்டு போவதைத்தான் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். புதிதாக வந்த ஒருவர் சேவை செய்கின்றார், புரட்சி செய்கின்றார் என்கின்றார்கள். உண்மையில் இதுவரை அவர் அப்படி என்னதான் செய்துவிட்டார்.................. அப்படியே எப்பவாவது ஏதாவது காத்திரமாக செய்து விட்டாலும் கூட, இறுதிப் போரில் அங்கேயே நின்று மக்களுக்கு இவர்கள் செய்த சேவைகளை அவை மிஞ்சிவிடுமா............... பல தாக்குதல்களில், நடவடிக்கைகளில் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஒன்றே என் பார்வைக்கு தெரிகின்றது. என் பார்வை பிழையாகக் கூட இருக்கலாம். ஒரு சமூகமாக, எப்போதும் மிகவும் உணர்ச்சிவசப்படுகின்றோம், யாரையாவது தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றோம், தொடர்ச்சியாக அவதானிப்பதை தவிர்க்கின்றோம் அதனால் நாங்கள் கொண்டாடுவதை கேள்விக்கு உட்படுத்தாமல் நம்பத் தலைப்படுகின்றோம்.............
  35. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் தம்பி.நீண்ட காலம் உடல், உள ஆரோக்கியத்தோடு வாழ வேண்டும்.🎂
  36. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன்!
  37. தோழர் தம்பியும் உணர்ச்சிவசப்படுகின்றார் அவ்வளவு மக்கள் விசுவாசம் ....யாழ் தோழர் தம்பியும் புலம் பெயர் தமிழ் தேசியவாதிகளிடம் கை ஏந்துவது போல தெரிகிறது...காசு வேணுமாம் முதலீடு செய்ய ... டக்கியரின் பிரிகேட் யாழ் வைத்திய சாலையில் அட்டகாசம் செய்ய ஜெ.வி.பி பிரிகேட் இந்த தம்பி ஊடாக புகுந்து டக்கிக்கே ஆப்பு வைத்திருக்கினம் ....வைத்திய சாலையில் ..அதை இடதுசாரி தவ்வல் சொல்லுகின்றார் இந்த வீடியோவில்
  38. Ramanathan Archchuna 10h · புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு இன்னும் மூன்று மாதத்தில் 30,000 மாதாந்த சம்பளத்துடன் நான் வேலை தருகிறேன்! இது அரசியலுக்கான பதிவு அல்ல.. ஏழைகளுக்கான எனது முதலாவது திட்டம்! பல பேருடன் கதைத்து இருக்கிறேன்.. இந்த மாதம் முடிவில் அதற்குரிய முதற்கட்ட வேலைகளை ஆரம்பிக்கிறேன்.. இந்தத் திட்டத்தால் வருகின்ற ஒரு ரூபாய் வருமானம் கூட என் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கோ அல்லது எனது அரசியல் பயணத்துக்கோ பாவிக்கப்பட மாட்டாது! சற்று பொறுமையாக காத்திருக்கவும்! All r வைத்தியர் அர்ச்சுணா இன்று காலையில் பதிந்த பதிவு இது..இன்னும் 3 மாத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு புலம் பெயர் உறவுகளின் உதவியோடு சம்பளம் குடுப்பதாக சொல்கிறார்..இது எவ்வளவு காவத்திற்கு நடக்கும் சொல்ல முடியுமா...?எல்லாவ்ற்றுக்கும் புலம் பெயர்ந்தவர்களை இழுத்தால் அங்குள்ள அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது...இவரது இந்த விழையாட்டால் எதிர்காலத்தில் அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை திட்டங்களை கூட புலம் பெயர் சமுகம் செய்யட்டும் என்று சொல்லும் நிலையும் ஏற்படலாம்.இவர் பத்து இடத்தாலும் ஓடித் திரிகிறார் தான் இல்லை என்று இல்லை..ஆனாலும் சில கட்டுரை எழுதுபவர்களைப் போல் 'புலம் பெயர் மக்கள் மேல் மிகுந்த பாரத்தை போடுகிறார்.பிழையாக இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.
  39. நான் படம் இன்று திரையில் பார்த்தேன். ஒரு தலைவரை விட சித்தாந்தம் முக்கியம் என்று சொல்லும் இடம் பிடித்திருந்தது. பெருமாள் தப்பிச்சு போய்ட்டார்னு ஒரு பொய்யை சொல்லிடலாம், மக்கள் அவரு மீண்டும் வருவாருனு நம்பிட்டே இருக்கட்டும், அப்போதான் அடுத்த தலைவர்களை தேட மாட்டாங்க சார், அதான் நல்லது.. விடுதலை-2 திரைப்பட விமர்சனம் BookDay21/12/2024 விடுதலை-2 திரைப்பட விமர்சனம் அங்குமிங்குமாக சில காட்சிகள் என்றில்லாமல் நேரடியாகவே இடதுசாரி அரசியலை பேசுகிறது விடுதலை.. கைது செய்து கைவிலங்கிட்டு ஒரு இரவு முழுவதும் காட்டில் நடந்து கொண்டே வாத்தியாரும் போலீஸ் டீமூம் பேசும் அரசியல் அடர்த்தியானது, முக்கியமானது.. தப்பிச் செல்லும் போது காவலர்களை பார்த்து ‘நான் நிறைய கேள்விகளை எழுப்பிருக்கேன். பதிலை நீங்க தேடுங்க’ என விஜய் சேதுபதி பேசுவதாக வரும் காட்சி இயக்குநர் பார்வையாளர்களை நோக்கி பேசுவதை குறிக்கிறது.. கீழ்தஞ்சை மாவட்டங்களின் சாணிப்பால், சவுக்கடி அவலம் வயலில் தாய்ப்பாலை பீச்சும் பெண் தொழிலாளிகள் துயரம் ஆண்டைகளின் குரூரம் என அரைநூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்த கொடுமைகளும் ‘அடித்தால் திருப்பி அடி’ ‘டேய் னு கூப்பிட்டா என்னடான்னு கேளு’ எனும் செங்கொடியின் தீரமும் சமூக ‘விடுதலை’ (Viduthalai)யின் முக்கியத்தை உணர்த்துகிறது.. மக்களுக்காக நாம் ஆயுதம் தாங்கி போராடுவதோடு அவங்களை அரசியல் படுத்திட்டா மக்களே அவங்க போராட்டத்துல அவங்களுக்கான ஆயுதத்தை முடிவு பண்ணிருவாங்க.. ஆட்சில இருப்பவங்க ஒரு Narrative ஐ முடிவு பண்ணிட்டு அப்றம் அதை உண்மையாக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க.. நீங்க பாட்டுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களை கொன்னுட்டு சஸ்பென்ஸ், டிரான்ஃபர் விசாரணை கமிஷன் னு போய்ட்டே இருப்பீங்க, மக்களுக்கு அரசியல்வாதியான நாங்கதான்யா பதில் சொல்லணும்.. பெருமாள் தப்பிச்சு போய்ட்டார்னு ஒரு பொய்யை சொல்லிடலாம், மக்கள் அவரு மீண்டும் வருவாருனு நம்பிட்டே இருக்கட்டும், அப்போதான் அடுத்த தலைவர்களை தேட மாட்டாங்க சார், அதான் நல்லது.. படத்தில் வெடிக்கும் துப்பாக்கி தோட்டாக்களோடு இணைந்து ஆங்காங்கே வெடிக்கிறது வெற்றி மாறனின் வசனங்களும்… ஆலைகளில் நிகழும் சுரண்டல் சங்கம் அமைக்காமல் தடுப்பது அரசு அதிகாரிகளின் தந்திரம் போலீஸ் கையாளும் உத்தி என ஒவ்வொன்றையும் தோலுரிக்கிற காட்சிகள்… அடையாள அரசியலின் தாக்கங்கள் ஆங்காங்கே வசனங்களில் தென்பட்டாலும் வர்க்க அரசியலை அழுத்தமாக முன்வைக்கிறது விடுதலை (Viduthalai Part 2).. ஜனநாயக போராட்டங்களில் மக்களை அணிதிரட்டுவதும் வர்க்கப் பார்வையை விரிவு செய்வதும் முக்கியம் என்கிறது.. திரைப்படத்தை காணும் போது, நீண்ட உரையாடல் காட்சிகளை தவிர்த்திருக்கலாமோ என்று கூட சிலருக்கு தோன்றலாம். ஆனால் அந்த உரையாடல்களால் தான் விடுதலையின் அரசியலை பேசவும் உணர்த்தவும் முடியும். அரசியல் உள்ளடக்கம் கொண்ட திரைப்படத்தை வெகுஜன சினிமாவாக அளித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறனும் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் சூரி, ராஜீவ் மேனன், இளையராஜா எனும் அனைத்து கலைஞர்களும் மிகுந்த பாராக்குரியவர்கள்.. https://bookday.in/viduthalai-2-movie-review-by-r-badri/#google_vignette
  40. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பிரதான சாட்சிகளாயிருப்பவர்களில் ஒருவரான Dr. சத்தியன், இலங்கையில் உயிருடன் இருப்பதற்கு எவ்வளவு விட்டுக்கொடுப்புக்களையும் சமரசங்களையும் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும். இதை ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. யாழ் பல்கலைப் பேராசிரியர், துணை வேந்தர் பதவியில் இருந்து சமூகத்தின் அடிமட்டத்தில் மக்களோடு மக்களாக வேலை செய்யும் கிராம சேவையாளர் வரை அரசியல் தலையீடு நிலவும் சூழலில் அதுவும் டக்கியரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையை எத்தகைய சூழலில் நிர்வகிக்க வேண்டி இருக்கும் என்பதையும் எமது புலன் பெயர் வியாபாரிகள் உணராமல் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் பக்கவாத்தியக் காறர்களாகவும் இருப்பது வருந்தத் தக்கது. ☹️
  41. 🫣....................... கச்சதீவை மட்டும் மீட்டால் போதாது. நெடுந்தீவூ, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை என்று அந்தப் பகுதி முழுவதையும் நீங்கள் மீட்டெடுத்தால் தான் தமிழக மீனவர்கள் ஒரு தொல்லையும் இல்லாமல் அங்கே போய் மீன்பிடிக்க முடியும்...............🫣. சமீபத்தில் ஏதோ ஒரு மத்தியகிழக்கு நாட்டில் சிறையிலிருந்து தமிழக மீனவர்களை விடுதலை செய்தார்கள். அவர்களை அங்கே ஆறுமாதங்கள் அடைத்து வைத்திருந்தார்கள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக. அந்த கடலையும் ஸ்டாலின் போய் மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்............. 'ஓ மை காட், என்னது.............. நாங்கள் அங்கே போய் மீன்பிடிக்க முடியாதா..............' என்ற ரஜனிகாந்த் வகை உணர்ச்சியையே இந்த விடயத்தில் தமிழக அரசியல்வாதிகள், பிரமுகர்கள், நடிகர்கள் என்று ஒருவர் தப்பாமல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்..............
  42. நன்றி, இவ் வாரம் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகம் வெளியாகவுள்ளது.
  43. கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது. மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய் இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம். இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த குல்பி ஐஸ் விக்குறவனுக்கு பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.
  44. நேற்று முதல் நாள், முதல் காட்சி பார்த்தேன். அண்மைய காலங்களில் நான் பார்த்து வியந்து, பல உணர்வுகளோடு திரை அரங்கை விட்டு வெளியே வந்த ஒரு திரைப்படம். இன்னும் கூட படத்தின் தாக்கத்தில் இருந்து வெளியே வரமுடியவில்லை. நிலம், உழைப்பு, சாதியம், வர்க்க விடுதலை, ஒடுக்குமுறை, சுயநிர்ணய உரிமை, அரச இயந்திர ஒடுக்குமுறை சிந்தனை, கம்யூனிச அடிப்படை கோட்பாடுகள் என்று பல விடையங்கள் ஆணி அறைந்தால் போல பேசப்பட்டு இருக்கிறது. வெற்றிமாறன் ஈழ விடுதலை ஆயுத போராட்டத்தின் கடைசி பாகத்தை இந்த படத்தின் மூலம் சரியாக பேசியிருக்கிறார். சுயநிர்ணய உரிமை என்ற கருத்தியலை பேசிய முதல் தமிழ் திரைப்படமாக விடுதலை இருக்கும். இந்த படம் நிச்சயம் வெற்றியடைய வேண்டும். தமிழர்கள் நாங்கள் தூக்கித் தங்கலாம்.
  45. நான் திங்கள் அகன்ற திரையில் பார்க்கவுள்ளேன்😀 நல்ல படங்களை திரையில் பார்த்தால்தான் மேலும் சிறந்த படங்களை எடுக்க வசூல் கிட்டும். - விடுதலை 2 : விமர்சனம்! Dec 21, 2024 10:26AM IST பிளாஷ்பேக் உத்தி பலன் தந்ததா? நடிகர் சூரியைக் கதை நாயகனாக அறிமுகப்படுத்திய படம், வெற்றிமாறனின் ‘விடுதலை’. தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர் ஒருவரைத் தேடுவதற்காகக் காவல் துறையின் சிறப்பு முகாம் இயங்கி வந்ததையும், அதில் பணியாற்றியவர்களில் ஒருவர் அந்த தலைவரைக் கைது செய்ய முனைந்ததையும் சொன்னது. அப்படம் பேசிய அரசியலை விடப் பேசாததே அதிகம். அதுவே அப்படத்தின் சிறப்பாகவும் அமைந்தது. ‘விடுதலை’ படத்தின் பெருவெற்றியே அதன் இரண்டாம் பாகம் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை விதைத்தது. இரண்டாம் பாகத்தில் அந்த தலைவரின் வாழ்வனுபவங்களே பிரதானமாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்தன. இப்போது ‘விடுதலை 2’ தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு இப்படம் அமைந்திருக்கிறதா? முதல் பாகம் தந்த திரையனுபவத்தை விட ஒருபடி மேலானதை ரசிகர்கள் பெறுகிறார்களா? தகவல்களின் அடிப்படையில்..! தமிழர் படையைச் சேர்ந்த பெருமாளைக் (விஜய் சேதுபதி) கைது செய்த விவரம், காவல் துறை சிறப்பு முகாமைச் சேர்ந்த ஒருவரால் வெளியே கசிகிறது. அதையடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகை அலுவலகங்களுக்குத் தகவல் சொல்லப்படுகிறது. பெருமாளைக் கைது செய்த தகவலை மூன்று, நான்கு நாட்கள் கழித்து வெளியே சொல்லலாம் என்றெண்ணிய தலைமைச் செயலாளர் சுப்பிரமணியத்திற்கு (ராஜிவ் மேனன்) அத்தகவல் பேரிடியைத் தருகிறது. அதேநேரத்தில், சிறப்பு முகாமில் பழங்குடியின கிராமத்துப் பெண்கள் என்னவானார்கள் என்பதை ஒரு பத்திரிகை நிருபர் (பாவெல் நவகீதன்) படம்பிடிக்கிறார். தான் வேலை பார்க்கும் தமிழ் செய்தி நிறுவனத்தின் செய்தியாசிரியருக்குத் தகவல் சொல்கிறார். அந்த தகவல் இதர பத்திரிகை அதிபர்கள் வழியாகச் சுப்பிரமணியத்தை வந்தடைகிறது. இன்னொருபுறம், பெருமாளை போலீசார் பாதுகாப்பாக வன எல்லைப்பகுதி காவல் துறை அலுவலகத்திற்குக் காட்டுப்பாதை வழியாகச் செல்கின்றனர். செல்லும் வழியில், ‘வன்முறையே வேண்டாம்’ என்று அகிம்சாவாதியாக இருந்த தான் எவ்வாறு இப்படியொரு பாதைக்குத் திரும்பினேன் என்பதைத் தனது வாழ்பனுபவங்களில் இருந்து சொல்லி வருகிறார் பெருமாள். முகாம் அதிகாரி ராகவேந்திரருக்கு (சேத்தன்) அது எரிச்சலூட்டினாலும், உடன் வரும் கான்ஸ்டபிள்கள் அதனைக் கேட்டவாறே வருகின்றனர். அப்போது, பெருமாள் குறித்து தாங்கள் அறிந்தவற்றுக்கும் அவரது வாழ்வனுபவங்களுக்குமான வித்தியாசங்களை உணர்கின்றனர். பெருமாளின் பேச்சில் அவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியவர்களாக கருப்பன் (கென் கருணாஸ்), மகாலட்சுமி (மஞ்சு வாரியார்), கே.கே. (கிஷோர்) உள்ளிட்ட பலரைக் குறிப்பிடுகிறார். அதற்கிடையே, வேறு வழியில்லாமல் பெருமாளைக் கைது செய்த தகவல் முதலமைச்சருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அது அதிகாரப்பூர்வமாக அரசால் வெளியிடப்படுகிறது. இந்தச் சூழலில், பெருமாளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் காட்டுப்பாதையில் வரும் போலீசாரை சுற்றி வளைக்கின்றனர். அதன்பின் என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது ‘விடுதலை 2’வின் மீதி. தகவல்களுக்கும் உண்மைக்குமான வித்தியாசம் என்ன? இந்தக் கேள்வியே இப்படம் முழுக்க வியாபித்துக் கிடக்கிறது. ஆனால், ’அதனை விலாவாரியாகச் சொல்கிறேன் பேர்வழி’ என்று தகவல்களைத் திணித்தடைத்து, இறுதியாக அவற்றில் பலவற்றை நீக்கி ஒரு சுவாரஸ்யமான திரை வடிவத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதுவே இப்படத்தின் பலமாகவும் பலவீனமாகவும் வெளிப்பட்டிருக்கிறது. அபார உழைப்பு! ஏற்கனவே உருவாக்கிய ஒரு திரைப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று முடிவு செய்ததைத் தவறென்று சொல்ல முடியாது. இப்படத்தின் திருப்புமுனைக் காட்சிகள் பலவற்றை ‘விடுதலை’ முதல் பாகத்தின் இறுதியிலேயே காட்டியிருந்தார் வெற்றிமாறன். அதனுடன் பொருந்துகிற வகையில், பெருமாள் எனும் விஜய் சேதுபதி நடித்த பாத்திரத்தின் முன்கதையை இப்படத்தில் சொல்லியிருக்கிறார். அதனால், படம் முழுக்கவே பிளாஷ்பேக்குகள் வந்து போகின்றன. அதற்கு நடுவே, திரைக்கதை நிகழும் காலம் நமக்குச் சொல்லப்படுகிறது. பெருமாள் எனும் பாத்திரம் எந்த இயக்கத்தைச் சேர்ந்தது என்பதைக் காட்டும் அடையாளங்கள் திரையில் மறைக்கப்பட்டிருக்கின்றன. அது ஏன் என்ற கேள்வி நம்முள் உடனடியாக எழுகிறது. ஏனென்றால், இப்படத்தின் திரைக்கதையே அதைச் சார்ந்துதான் அமைக்கப்பட்டிருக்கிறது. இது போன்று திரைக்கதையில் ஆங்காங்கே சில பிசிறுகள் எட்டிப் பார்க்கின்றன. மிக முக்கியமாக, திரைக்கதையின் நடுவே ஒரு பாடல் வருகிறது. ‘மாண்டேஜ்’ ஆக வரும் அந்தப் பாடல் கால மாற்றம் பற்றிய சில கேள்விகளை எழுப்புகிறது. இறந்து போவதாகக் காட்டப்படுகிற சில பாத்திரங்கள் திரையில் வந்து போவது அதற்குக் காரணமாக இருக்கிறது. அதுவும் ஒரு பிளாஷ்பேக் தான் என்பது சட்டென நமக்குப் பிடிபடுவதில்லை. இது போன்ற குழப்பத்தைச் சில காட்சிகளும் தருகின்றன. அவற்றைச் சரிப்படுத்தியிருக்கலாம். மற்றபடி, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சில சம்பவங்களைத் தன் புனைவுக்குள் அடக்கிச் சுவாரஸ்யமான அரசியல் திரைப்படமொன்றைத் தந்திருக்கிறார் வெற்றிமாறன் என்பதில் ஐயமில்லை. இந்த முயற்சியில் அவருக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், கலை இயக்குனர் ஜாக்கி, படத்தொகுப்பாளர் ராமர், சண்டைப்பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பல தொழில்நுட்பக் கலைஞர்கள் உறுதுணையாக இருந்திருக்கின்றனர். சில இடங்களில் விஎஃப்எக்ஸ் குறிப்பிட்ட தரத்தில் அமையவில்லை. அதற்கு படத்தின் இறுதி ஷாட் ஒரு உதாரணம். இசையைப் பொறுத்தவரை, நம்மைக் கொஞ்சம் ஆச்சர்யபடுத்தாதவாறு ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் இளையராஜா. திரையில் மௌனம் வருமிடங்கள் அவரது நுண்ணிப்பான அவதானிப்புக்குச் சான்று. ‘தினம் தினமும்’ உள்ளிட்ட பாடல்கள் சில நொடிகளே வந்து போயிருப்பது ரசிகர்களின் உற்சாகத்தைக் குறைக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியார், கிஷோர், ரம்யா, சூரி, சேத்தன், ராஜிவ் மேனன், இளவரசு, சரவண சுப்பையா, கௌதம் மேனன், பாலாஜி சக்திவேல், பாவெல் நவகீதன், வின்செண்ட் அசோகன், போஸ் வெங்கட் என்று பலர் வந்து போயிருக்கின்றனர். ஆனாலும் விஜய் சேதுபதியே திரையில் நிறைந்து நிற்கிறார். அவரது ரசிகர்களைப் பொறுத்தவரை, இது கொண்டாட்டத்திற்குரிய விஷயம். முதல் பாகத்தில் வந்த பவானிஸ்ரீ உள்ளிட்ட சிலருக்கு இப்படத்தில் வேலையே இல்லை. அவர் ஒரு ஷாட்டில் இடம்பெற்றிருக்கிறார். ’நான் ஏன் தலை முடியை வெட்டியிருக்கேன்னு கேட்கவே இல்லையே’ என்ற மஞ்சு வாரியாரின் கேள்விக்கு, ‘உங்க முடி, நீங்க வெட்டியிருக்கீங்க’ என்று விஜய் சேதுபதி அளிக்கும் பதில் ரசிக்க வைக்கிறது. சமகால சமூகம், அரசியல் சார்ந்து அமைந்திருக்கிற சில வசனங்கள் சட்டென்று ரசிகர்களை ஈர்க்கும்விதமாக இருக்கின்றன. அதேநேரத்தில், பொதுவுடைமை இயக்க தத்துவங்களை விளக்குகிறேன் பேர்வழி என்று பேசப்படுகிற வசனங்கள் காட்சியனுபவத்தின் ஆன்மாவைச் சிதைக்கின்றன. இந்த இடத்தில் ‘மெட்ராஸ்’ படத்தின் இறுதி ஷாட் நினைவுக்கு வருகிறது. அது போன்ற உத்தியைப் பயன்படுத்தியிருந்தால், இப்படத்தின் நீளத்தைக் கணிசமாகச் சில நிமிடங்கள் குறைத்திருக்கலாம். முதல் அரை மணி நேரக் காட்சிகளில் ‘டப்பிங்’ நம்மை படுத்தி எடுக்கிறது. அபாரமான உழைப்பைக் கொட்டி உருவாக்கப்பட்ட இப்படத்தில் அது போன்ற சங்கடங்களை ரசிகர்கள் எதிர்கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம். ’விடுதலை 2’ படத்தின் உள்ளடக்கம் நிச்சயம் பல விவாதங்களை உருவாக்கும். இதில் நிறைந்திருக்கும் குறைகளும் பிரதானமாக அதில் இடம்பிடிக்கும். அவற்றைத் தாண்டி, ‘கேம் கல்ச்சர்’ரில் சிக்கிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரில் சிலருக்கு ‘இப்படியும் ஒரு தலைமுறை இங்கு வாழ்ந்தது’ என்பதைச் சொன்ன வகையில் ‘விடுதலை 2’ முக்கியத்துவம் பெறுகிறது. ‘சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுவது உட்பட இன்றைய தலைமுறை அனுபவிக்கும் எத்தனையோ இளைப்பாறல்களுக்குப் பின்னால் பலரது போராட்டங்கள் இருப்பது தெரியுமா’ என்கிற தொனியில், படத்தின் ஓரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அந்தக் கேள்வியின் பின்னே இருக்கிற அரசியல் மிகப்பெரியது. என்னைக் கேட்டால், அது போன்ற கேள்விகள் தான் இப்படத்தின் உயிர்நாடியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அதனை எங்கோ தவறவிட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். பிளாஷ்பேக் உத்தியைப் பயன்படுத்திய அளவுக்கு, கதை நிகழும் காலத்திற்கும் இதர பாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் தந்தால் அது நிகழ்ந்திருக்காதோ என்று தோன்றுகிறது. நிறை, குறைகளைத் தாண்டி, திரையில் ரசிகர்கள் காணாத ஒரு அனுபவத்தை ‘விடுதலை 2’ தருகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. சிறப்பானதொரு கமர்ஷியல் படமாக உள்ளது. ஆனால், அது ‘விடுதலை முதல் பாகத்திற்கு’ ஈடாக அமையவில்லை. ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறியதாகவும் அது இல்லை. ரசிகர்கள் ஒவ்வொருவரது பார்வைக்கேற்ப, இக்கருத்தில் மாறுபாடு நிச்சயம் இருக்கும். அதனைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும். அதேநேரத்தில் தமிழ் தவிர்த்து பிற மொழிகளில் வெற்றியைச் சுவைப்பதற்கான விஷயங்களும் இப்படத்தில் நிறையவே இருக்கின்றன. அது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்..! https://minnambalam.com/cinema/vetri-maran-vijay-sethupathi-viduthalai-2-movie-review/
  46. ஒடுக்கப்பட்ட இனங்களின் போராட்டத்தையும் அரச பயங்கரவாதத்தினை அழகாக படம் பிடித்திருக்கிறார் வெற்றிமாறன். சிறந்த இயக்குனரில் ஒருவர் என்று மறுபடியும் நிரூபித்துருக்கிறார். வாத்தியாராக வாழ்ந்திருக்கிறார் விஜய்சேதுபதி. கிஷோர் கே.கேயாக வாழ்ந்திருக்கிறார். இளையராஜாவின் பின்னணி இசை அருமை.
  47. 👆 சுப்ரமணிய பிரபா என்பவர்தான் (படத்தில் இடதுபுறம் இருப்பவர்), போலியான ஆவணங்கள் தயாரித்து முகநூலில் வெளியிட்டவர். (வலது பக்கம் இருப்பவர் சுமந்திரன்) இவர் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி மாறிக் கொண்டே இருப்பார். இம்முறை... கிளிநொச்சியில், சஜித் கட்சியின் சார்பில் போட்டியிடும் புலி எதிர்ப்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு... ஆதாரம் இல்லாத பொய் பிரட்டுக்களை எல்லாம், மற்றைய கட்சியினர் மேல் கூறிக் கொண்டு ஊத்தை அரசியல் செய்து கொண்டு திரிகிறான்(ர்) போனமுறை சுமந்திரன் ஆதரவாளராக இருந்தவர். இவரின் தகப்பனும் வேறொரு கட்சியின் உள்ளூர் அரசியல்வாதிதான். முகநூலில் இவரை... @நிழலி, @விசுகு, @ஈழப்பிரியன், @குமாரசாமி, @பெருமாள், @தனிக்காட்டு ராஜா, @நந்தன் ஆகியோர் நன்கு அறிந்து இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.