Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19122
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  3. Paanch

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8133
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/17/25 in all areas

  1. மேலே சொன்னத்தில், சொன்னது சுமந்திரன் என்பதை தவிர வேறு எந்த பிழையும் இல்லை.🤣 தாம் உத்தமர்கள், ஊழல் கறை படியாதவர் என என் பி பி ஆட்சிக்கு வந்து இத்தனை மாதம் ஆகிறது - வெறுமனே பார் லைசன்ஸ் பெற்றவர் விபரம் மட்டுமே வெளிவந்துள்ளது. உடந்தையாக இருந்த சிபாரிசு செய்த அரசியல்வாதிகள் பெயரை வெளியிட ஏன் தயக்கம்? அண்டர் த டேபிள் டீலிங்? இங்கே சுமனை அடிப்பதாக போக்கு காட்டியபடி, சிறியும் அவரது அடிபொடிகளும், அனுரா காவடிகளும் ஒரே நேர்கோட்டில் வருவது புலனாகிறது. சிறியை காப்பாற்ற தமிழர் உரிமையை விலையாக கேட்கிறதா என் பி பி?
  2. இந்தாள் தொடர்ந்து இதையே தூக்கி கொண்டு திரிவதை பார்த்தால் ஏதோ இருக்கிறது. ஆனால் தன்னை தெரிவு செய்த மக்கள் பிரச்சினைகளுக்கு கூட இந்தளவுக்கு காவியதோ தேடியதோ கிடையாது.
  3. நாங்கள் கேட்கும் கேள்வி புலம்பெயர் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டு கேட்கும் கேள்வி..புலம் பெயர் நாட்டில் கூலி தொழில் செய்யும் நானே அப்படி கேள்வி, அவதூறு செய்து சக மனிதனிடம் கேட்க மாட்டேன் ..ஆனால் அர்ஜுனா மருத்துவராக இருந்து கொண்டு கீழ்தரமாக வீடியோ போடும் ஒருவர்...பெண் ..சலம் என பேசுபவர் ...அந்த பெண்ணும் இதற்கு மறுப்பு தெரிவித்து கண்டனம் தெரிவிக்கவில்லை ...இந்த எம்.பி மக்களுக்கு என்ன செய்ய போகிறார் .."டை" கட்டி கொண்டால் ஒருத்தன் டிசன்ட என நம்ப கூடாது ...
  4. சமூகப் போராளி சுப.உதயகுமாரன் - சுப.சோமசுந்தரம் "அணுசக்தியற்ற எதிர்காலம்" எனும் தலைப்பில் உலக அளவில் 1998 லிருந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அணுசக்தி எதிர்ப்புப் போராட்டம், அணு சக்தியினால் ஏற்படும் அழிவுகள் பற்றிய அறிவினைப் பரப்புதல், அணுசக்திக்கு எதிரான தீர்வு எனும் பிரிவுகளே அவை. இவ்விருதுகள் ஜெர்மானியப் பத்திரிக்கையாளரும் திரைப்பட இயக்குனரும் சமூகப் போராளியுமான Claus Biegart ஆல் நிறுவப்பட்டன. நாம் குறிப்பிட்ட முதற்பிரிவில் 2025 க்கான விருதினைப் பெறுபவர் அணுசக்திக்கு எதிரான மகத்தான இந்தியப் போராளி சுப. உதயகுமாரன் ஆவார். ஐநாவின் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூன்றாவது அமர்வினையொட்டி மார்ச் 4 ஆம் தேதி நியூயார்க்கில் இவ்விருது வழங்கப்படவுள்ளது. இப்பதிவில் தலைவர்/தோழர் சுப. உதயகுமாரன் அவர்களின் படத்துடன் முதல்வர் ஸ்டாலினின் படத்தையும் கொண்டு வந்ததன் காரணமென்ன ? (படம் கட்டுரையின் கீழேயுள்ள முகநூல் இணைப்பில் உள்ளது). அதைச் சொல்லுமுன் என் அரசியல் நிலைபாட்டைச் சொல்வது அவசியமாகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லையென்றாலும், கருப்புச் சட்டை அல்லது சிவப்புச் சட்டையை எடுத்து அணியும்போது உள்ளத்தில் பெருமிதம் மட்டுமல்ல, கர்வமே கொள்பவன் நான். வலதுசாரி இந்துத்துவப் பார்ப்பனிய அரசியல் இந்நாட்டில் முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஒன்று என்று ஆணித்தரமாக நம்புகிறவன் நான். ஏனிந்தப் பீடிகை ? இப்பதிவில் சில இடதுசாரி, திராவிட அரசியல் கட்சிகளை நான் விமர்சித்தால், அதனை ஏதோ பாசிச சங்கிகளின் குரைத்தலுடன் ஒப்பீட்டு அளவில் கூடப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவே ! சரி, இப்போது நாம் கையிலெடுத்த பொருளுக்கு வருவோம். முதல்வர் படத்தைப் போட்டது அவரிடம் பின்வரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவே : ஐயா ! விளையாட்டு, இலக்கியம் முதலிய எந்தத் துறையிலும் உலக அளவில் சாதித்தவர்களைப் பாராட்ட தாங்கள் தவறுவதில்லை. இப்போது அணு உலைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார் தோழர் சுப.உதயகுமாரன். அவரை மனம் திறந்து பாராட்டி விடுங்களேன். இந்த ஜனநாயக அரசியலில் அந்தப் பாராட்டுதலுக்குத் தடை விதிக்கும் எந்த ஒரு வெங்காயத்தையும் தூக்கி எறியுங்களேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நிறுவிய பள்ளியில்தானே உங்களைப் போன்றோரும் என்னைப் போன்றோரும் அரசியல் பாடம் படித்தோம் ! அதிலும் குறிப்பாக நீங்கள் எனக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் மூத்த மாணவர் என்பதை நாங்கள் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. மற்ற துறைகளில் சாதித்தவர்களுக்குப் பாராட்டுதலோடு பொற்கிழியும் தருவீர்கள். ஆனால் போராளிகள் பணத்தைத் தம் பையை நிரப்ப ஏற்பதில்லை. உலகின் தலைசிறந்த போராளிகளில் ஒருவரான சுப.உதயகுமாரன் அவர்களை மிக அருகில் பார்க்கும் பெரும்பேறு வாய்க்கப் பெற்றவர்கள் நானும் என்னைப் போன்றோரும். உங்களுக்குக் கூட அந்த வாய்ப்பு அமையவில்லை முதல்வரே ! ஏதோ ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி எப்போதோ சின்னா பின்னமாயிருக்கக் கூடிய போராட்டத்தை இறுதிவரை (சுமார் இரண்டரை ஆண்டுகள்) அமைதியாகக் கொண்டு சென்று அந்த மக்களைத் தம் அன்பினால் கட்டிப்போட்டவர் தோழர் உதயகுமாரன். அவர் மீதும் அவருடன் நின்ற போராளிகள் மீதும் ஏதோ தீவிரவாதிகள் மீது போடுவதைப் போல வழக்குகள் போடப்பட்டன. அவை அனைத்தும் பொய் வழக்குகள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் பதவியேற்ற பின் பல வழக்குகள் திரும்பப் பெறப்பட்டாலும், இன்னும் சில நிலுவையில் உள்ளன என்பது உங்கள் கவனத்திற்கு மீண்டும் மீண்டும் கொண்டுவரப்பட்டன. அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெறுவதையே சுப.உதயகுமாரனின் உலக அங்கீகாரத்திற்கான வெகுமதியாகத் தாருங்கள் முதல்வரே ! அவருக்கான அங்கீகாரம் என்பது அவருடன் நின்ற ஒட்டுமொத்தப் போராளிகளுக்குமான அங்கீகாரமாகக் கொள்ள வேண்டும். அவருடன் தோளோடு தோள் நின்ற புஷ்பராயன் மற்றும் பாதிரியார் மை.பா.ஜேசுராஜ் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள். சாமானியர்களின் பார்வையில் அவர்கள் தற்காலிகமாகப் பின்னடவைச் சந்தித்திருக்கலாம். வென்றால்தான் போராட்டம் என்றில்லை. மேலும், போராட்டங்கள் தோற்பதில்லை; எனவே போராளிகளும் தோற்பதில்லை. இந்த விண்ணப்பத்தை அடியேன் குடிமக்களில் ஒருவனாகவே உங்களிடம் வைக்கிறேன். மற்றபடி அவர்களின் சார்பாகக் கேட்க நான் தகுதியற்றவன். போராளிகள் இம்மாதிரியான இறைஞ்சுதலை விரும்புவார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏனெனில் போராளிக்கான மெய்ப்பொருளில் நான் போராளி இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு போராட்டத்தின் அனுதாபியாக இருப்பதாலோ பாதிக்கப்பட்ட போராளிகளுக்காகக் கண்ணீர் வடிப்பதாலோ ஒருவன் போராளியாக முடியாது. அதற்கான தகுதி பெரிதினும் பெரிது. போராட்டமே வாழ்க்கையாக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அவர்தம் (தனிப்பட்ட) வாழ்க்கையே போராட்டமாக மாறிவிடாமல் காத்து நிற்பது ஒரு நல்லரசின் கடமை. எங்களுக்காக மட்டுமல்லாமல் உங்களுக்கும் சேர்த்துதான் களத்தில் நின்றார்கள். இப்போது அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டு. அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். திரை கடலோடி திரவியம் தேடாவிட்டாலும் தமது மற்றும் தம் குடும்பத்தாரின் வயிற்றுப்பாட்டையாவது கவனிக்க வேண்டும். ஆவன செய்க ! திராவிட இயக்கத்தாரின் பிரதிநிதியான முதல்வரிடம் முறையிட்டாயிற்று. இனி போகிற போக்கில் CPI, CPI(M) ஆகிய இடதுசாரிக் கட்சியினரிடம் : தோழர்களே ! நீங்களும் விருது பெறும் சுப.உதயகுமாரனைப் பாராட்டலாம். ஜெய்தாப்பூரின் பிரஞ்சு அணு உலைதான் மக்களைக் கொல்லும் என்றில்லை; கூடங்குளத்தின் ரஷ்ய உலையும் மக்களைக் கொல்லும். சேகுவேராவை, பெரியாரைக் காலம் கடந்து ஏற்றது போல் சுப.உதயகுமாரனையும் காலம் கடந்துதான் ஏற்பீர்களா, என்ன ? "நாங்கள் ஏன் ஏற்க வேண்டும் ?" என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில், "உதயகுமாரனும் அவரோடு நின்ற போராளிகளும் உங்கள் கட்சியினராக இல்லையென்றாலும் அவர்களும் இடதுசாரிகளே !" திராவிட இயக்க அரசியல் மற்றும் இடதுசாரி அரசியலில் உள்ளவர்கள்தாம் கண்ணுக்குத் தெரிகின்றனரா ? ஆமாம். மற்றவர்கள் பேசத்தக்க ஆட்களாக நம் கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, அந்த மற்றவர்கள் கண்ணற்றவர்கள் என்பதுவும் நம் எண்ணம். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டில் எந்தவொன்றிலும் இல்லாதோரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது ? https://www.facebook.com/share/p/1BNdYMdbb8/
  5. ஒலியும் ஒளியும்….. முகட்டில நிண்டு கொண்டு இருட்டுக்க திசையும் தெரியாம “இப்ப இப்ப” எண்டு கேக்க தம்பி கீழ நிண்டபடி, “இப்பவாம்”எண்டு உள்ள கேட்டிட்டு “இல்லையாம்”எண்ட பதிலைத் திருப்பிச் சொன்னான். திருப்பியும் உருட்டி ஒரு மாதிரி செல்வா ஒளிபரப்பில வந்த கமலகாசன் தெரியத் தொடங்க அப்பிடியே வைச்சு கம்பியை இறுக்கீட்டு அம்மபிகாவின் வருகைக்குப் பாத்துக் கொண்டிருந்தம். எண்பதில முதல் முதலாப் பக்கத்து வீட்டை தான் ரீவி பாத்தது, அதுகும் black and white ரீவி. முன்னால fan ஸ்விட்ச் மாதிரி இருந்தை உருட்டி உருட்டி on பண்ணீட்டு டக்டக் எண்டு சுத்த, நம்மர் மாற ,அதில இழுக்கிறதைப் பாக்கலாம். ஆர்டேம் வீட்டை பெடியளை விடீறது சரியில்லை எண்டு அம்மா சொல்லீட்டு நாங்கள் பிறந்தொண்ன ஆரோ போட்ட பஞ்சாயுதம், மோதிரம் எல்லாத்தையும் சேத்து nanogramஐ மில்லிகிராமாக்கி மொத்தமா நிறுத்து வித்துக் குடுக்க அப்பா வெளீல இருந்து வாற ஒரு ஆளைப்பிடிச்சு duty free இல இருந்து ஒரு மாதிரி கலர் ரீவீ ஒண்டை வாங்கித் தந்தார். கொழும்பில இருந்து வந்த பெட்டியை ராகு காலம் தவித்து நல்ல நேரத்தில உடைப்பம் எண்டு வெளிக்கிட “பெட்டியும் உள்ள இருக்கிற ரெஜிபோமும் கவனம்” எண்டு அம்மா தீரக்கதரிசனமாச் சொன்னது பிறகு இடம் பெயரேக்க உதவிச்சுது. கால நேரம் பாத்து பெட்டியை உடைச்சாலும் டிவி ஓடினதிலும் பாக்க பெட்டீக்க இருந்த நாள்த் தான் கூட. “ Sony trinitron ” பெட்டியை உடைச்சு puzzle மாதிரிப் பாத்து பாத்துப் பொருத்தீட்டு போட வெளிக்கிட “கரண்ட் அடிக்கும் கவனம்” எண்டு அம்மம்மா சொன்னதால செருப்பையும் போட்டுக்கொண்டு on பண்ண “ஸ்ஸ்ஸ்” எண்ட சத்தத்தோட கோடுகோடா கலர் மழை பெஞ்சுது. VHF , UHF அதோட இருக்கிற எல்லா நம்பரையும் மாறி மாறி அமத்த தொடர்ந்து மழை மட்டும் பெய்ய முகம் தொங்கிச்சுது. அன்ரனாக் கம்பியை இழுத்து விரிச்சு திருப்ப ஒரு மாதிரி உருவம் வரத் தொடங்கிச்சுது. வந்த உருவம் நிக்காமல் கடகடவெண்டு மேல கீழ ஓடிக் கொண்டிருந்தச்சுது. முன்னால இருந்த லாச்சி மாதிரி இருந்த பெட்டியைத் துறந்து இருந்த நாலு உருட்டிற switch ஐயும் உருட்டிப் பழகி, பிறகு ஒருமாதிரி மேல கீழ ஓடிறதை நிப்பாட்டி, பிறகு ஒவ்வொண்டாப் பாத்து, ஒண்டு வெளிச்சம் கூட்டிக் குறைக்க மற்றது contrast எண்டு கண்டு பிடிச்சம். என்னடா இன்னும் கிளீயர் இல்லை எண்டு ஏங்க அன்ரெனாவை உயத்திக் கட்டினாத்தான் வடிவா எல்லா channelம் இழுக்கும் எண்டு சொல்ல அடுத்த budget ஓட அப்பா வரும் மட்டும் வெறும் மழையையும் இடைக்கிடை வாற நிழலையும் பாத்துக்கொண்டிருந்தம். ஒரு மாதிரி அப்பா ஓமெண்ட எங்கயோ ஒரு hardware கடைக்காரன் அன்ரெனா குழாய் விக்கிறதைக் கண்டு பிடிச்சுக் கூப்பிட வந்தவன் ஒரு குழாய் காணாது கிளீயரா வழாது எண்டு ரெண்டைப் போட்டு உயரத்தையும் விலையையும் கூட்டினான். கம்பிக்கு மேல கம்பி வைச்சுக்கட்டி அதில மேல பெரிய VHFஅன்ரெனாவைப் பூட்டி, கீழ குறுக்கா சின்ன UHF அன்ரெனாவையும் கட்டி, இடி விழாம இருக்க மண்ணுக்கு பெரிய இரும்புக்குழாயைப் புதைச்சு அதுக்குள்ள இந்தக் குழாயை இறக்கி அது ஆடாம இருக்க ஒரு ஆணியைப் பூட்டி, உயத்தின குழாயில இருந்து மூண்டு கம்பியை இழுத்து, தென்னையில ஒண்டு, பின் பத்தி தீராந்தீல ஒண்டு, முன் முகட்டில ஒண்டு எண்டு கட்டினம். உருட்டிப் பிரட்டி ஒவ்வொரு channel ஆ வரத் தொடங்க அண்டைக்கு முழுக்க பிறவிப் பெரும்பயனை அடைஞ்ச மாதிரி முழு நாளும் ரீவி மட்டும் பாத்துக் கொண்டிருந்தம். காலமை நிகழ்ச்சி தொடங்க முதல் கலர் கலரா வாற வட்டத்தைப் போட்டு “கூ” எண்ட சத்தம் வர போடிற TV பத்துமணிக்கு நமோ நமோ தாயே எண்டு முடியும் வரை on இல தான் இருந்திச்சுது . விளங்காத பாசையிலும் advertisement ஐக்கூட ஆவெண்டு பாத்தம்; Pears குளுகுளு baby, இவர்கள் சகோதரிகளா இல்லை தாயும் மகளும் எண்டு வந்த Rexona soap , இலங்கையில எல்லா வாகனமும் இங்க தான் விக்கிறது எண்டு நம்பின இந்திரா டிரேடர்ஸ், இடைக்கிடை தமிழில வாற அல்லி நூடில்ஷ்ஷும் பப்படமும், நந்தன விந்தன, திமுது முத்து எண்டு விளங்காதை எல்லாத்தையும் பாடமாக்கினம். கதைக்காத Tom& Jerryம், கூவிற woody wood peckerம், நாய் வளக்காத குறைக்கு “ லசியும்” பின்னேரம் விளையாட முதல் பாத்திட்டு. பிறகு 7.30க்குப் புட்டுப் பிளேட்டோட வந்திருக்க, knight rider, Battlestar galactica, Blake seven, Big foot and wild boy, Geminan, Automanம் இரவில பத்து மணிக்கு A- team, Strasky and Hutchம் இடேக்க ஓடிற Different strokes எண்டும் கொஞ்ச நாளா ஒடி ஓடிப் பாத்தம். அடிபாடு தொடங்க, முதலில கட்டி ஒளிச்சு வைக்கிறது ரீவீயுத் தான். ஒவ்வொரு முறையும் இடம் பெயரேக்க மட்டுமில்லை , பள்ளிக்கூடச் சோதினை எண்டாலும் அம்மா அதை மூடிக்கட்டி வைக்கிறதில குறியா இருந்தா. அம்மாக்குப் பிறகு அவவின்டை சீலையைக் கட்டினது எங்கடை ரீவீயும் settyயும் தான். அப்பிடிச் சோதினை முடிஞ்சு இப்ப holiday தானே எண்டு கடவுள் இறங்கி வந்தாலும் “கரண்ட்” எண்ட பூசாரி அடிக்கடி வரத்தைத் தடுத்திடுவார். அப்ப எங்கடை வாழ்க்கையில ரீவீயிலேம் தூரதரிசனமா இந்தியா மெல்ல உள்ள வந்திச்சுது. “ வாசிங் பௌடர் நிர்மா” வில வாற வெள்ளைச்சட்டைப் பிள்ளையும், “வாய்மணக்க, தாம்பூலம் சிறக்க” வந்த நிஜாம் பாக்கும் , வயலும் வாழ்வும் எண்டு எங்கடை வீடுகளுக்கு வந்த சேராத வேளாண்மையும் பொறுமையைச் சோதிக்க, வெள்ளிக்கிழமை ஓளியும் ஒலியும், ஞாயிற்றுக்கிழமை படமும் படிப்பு டைம்டேபிளிலையே சேந்து இருந்திச்சுது. கடவுளையே கிட்டப்பாக்க காசுகேக்கிற ஊரில இது மட்டும், பேருக்கேத்த மாதிரி தூரத்தில இருந்தாலும் எங்களுக்கு கொஞ்சம் இலவச தரிசனம் இடைக்கிடை கிடைச்சுது. ரேடியோவில வரதாச்சாரியாரின் வர்ணனை மட்டும் கேட்டே matchஐ ரசிச்ச எங்களுக்கு ரீவீல match அதுகும் 83 World Cup வர சிறீக்காந்தும் , கப்பில்தேவும் இந்தியாவும் favorite ஆ மாறத் தொடங்கிச்சுது. வாய்கெட்டினது வயித்துக்கு எட்டாத மாதிரி, மண்டைதீவில அடி விழ உருவம் அருவமாகி பிறகு கொக்காவிலும் போக ஒன்றாய் தெரிஞ்சது பலவாய் மாறித் தெரிஞ்சு, கடைசீல சோதியாவே போட்டுது. அதோட பாதையிருந்தும் பயணத்தடைகள் கூடி, தியட்டர் இருந்தும் இல்லாமல் போக ஊர் உலகம் உய்ய எண்டு தான் பாத்த படத்தை அக்கம் பக்கச் சனமும் பாக்க எண்டு தொடங்கிச்சுது Local ஓளிபரப்பு. கொய்யாத்தோட்டத்தில றீகல், கச்சேரியடி செல்வாஸ், கோண்டாவில் expo, எண்டு ஊருக்கு ஒரு கோயில் மாதிரி ஒளிபரப்புக்களும் தொடங்கிச்சுது. சும்மா தொடங்கினவங்கள் அன்ரனா இருந்த வீடு வழிய போய் வசூலிக்கத் தொடங்கினாங்கள். காசு வாங்கிற கதை தம்பியவைக்குத் தெரிய வரக் கட்டணமும் கூடிக் படங்களில கட்டுப்பாடும் வரத் தொடங்கிச்சுது . கொஞ்சம் கொஞ்சமா கோட்டைக்குள்ள விழீற அடி கூடத் தொடங்க அங்க இருந்து திரும்பி வாற கீழ்வீச்சுச் செல்லடியோட மேல்வீச்சு பொம்மரடியும் சேர அம்மம்மா அடம் பிடிச்சா அன்ரனாக் குழாயை மேல இருந்து பாத்தா காம்ப் எண்டு அடிச்சுப் போடுவாங்கள் இறக்குவம் எண்டு. நல்ல வேளை நாங்க குழாயை இறக்க முதல் பக்கத்து நாட்டில இருந்து வந்த நிவாரணப் பொதிகள் இறங்க, குழாயை இறக்காமல் தப்பிச்சம். ஏங்கின நிவாரணங்களும் கிடைக்காம உள்ளூர் அகதியாய் திரிஞ்சிட்டு திருப்பி வீட்டைவர, இல்லாமல் இருந்த கரண்டும் திரும்பி வர, பனிக்கு மட்டும் இழுத்த தூர தர்சன் தொடந்து வடிவா , கிளீயரா இழுக்க அதுக்குப் பிறகு ராமாயணமும் மகாபாரத்துக் கதாவும், எங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. Term test க்கே TV ஐ மூடி வைக்கிற அம்மா அண்ணான்டை A/Lக்கு ஒரேடியா அந்த வருசம் மூடிக் கட்டி வைச்சதைப் பிறகு துறந்தா TV மட்டும் இருந்திச்சுது வேலை செய்யுதா எண்டு பாக்க கரண்டும் இல்லை இழுக்கக்கூடிய channelம் இருக்கேல்லை. அதுக்குப் பிறகு வேற ஒண்டும் கிடைக்காமல் ஓமர் முக்தாவும் ஒளிவீச்சும் சிறீதர் தியட்டரில பாக்கத் தொடங்க மூடிக்கட்டின TV மூலைக்குள்ளயே இருந்திச்சுது. படத்தை பாக்க ஒரு மாதிரி வந்த புதுத்தணிக்கை குழுவின் அனுமதி வர, வாடைக்கு Water pump generator,deck , cassette எல்லாம் வாடைக்கு குடுக்கிறது பிஸ்னஸா மாறிச்சுது. மூண்டு மணித்தியாலப் படத்தை தணிக்கை எண்டு வெட்டிக் கொத்தி ரெண்டு மணித்தியாலமாத்தர, அந்த ஒலியும் ஒளியும் இல்லாத படங்களை பாக்கத் தொடங்கினம். வருசத்துக்கு ஒருக்கா ரெண்டு தரம் கஸ்டப்பட்டு காசு சேத்துப் படம் பாக்கிறது பொங்கல் வருசப்பிறப்பு மாதிரித் தான் எங்களுக்கு ஒரு entertainment. மச்சான் என்ன மாதிரி இந்தமுறை விடுதலைக்க படம் பாப்பம் எண்டு தயாளன் சொல்ல முதலே காங்கேயன், பாஸ்கரன், எண்டு ஒழுங்கேக்க இருந்தவன், வந்தவன், எல்லாம் என்னைக் கழட்டிப் போட்டு அண்ணரோட கூட்டுச் சேந்தாங்கள் எப்பிடியும் ரெண்டு ரஜனி படம் போடோணும் எண்டு. ஒருமாதிரி பொருள், இடம், காலம் எண்டு எல்லாம் சரிவந்து படம் பாக்கவெண்டு வெளிக்கிட்டம். “படம் பாக்க அவங்கட்டை permission வேணுமாம், இல்லாட்டி எல்லாத்தையும் தூக்கிக் கொண்டு போயிடுவாங்களாம் எண்டு தொடங்கேக்கயே ஒண்டு வெருட்ட இஞ்சினை சாக்காலை மூடிச் சத்தம் கேக்காமப் பண்ணீட்டு வந்திருந்தம். “ தூளியிலே ஆட வந்த “ குஷ்புவைப் பாப்பம் எண்டு ஆவலா இருக்க ஓடின water pump திடீரெண்டு நிண்டிட்டு. தெரிஞ்ச அறிவில பிளக்கை கழட்டித் துப்பரவாக்கி போட இன்னும் கொஞ்சம் ஓடீட்டு திருப்பியும் நிக்க, வாடைக்கு தந்தவனை தேடிப் பிடிச்சு கொண்டு வந்தம். சாக்கால மூடின எப்பிடி காத்து வரும் புகையும் போகும் எண்டு பேசீட்டு , “சோக்கை இழுக்காதேங்கோ, காபிரேட்டரை கூட்டாதேங்கோ, எண்ணையை மட்டும் விடுங்கோ” எண்டு instructions குடுத்திட்டுப் போனான். சிவராத்திரி மாரி விடிய விடிய இருந்தும், படுத்தும், உருண்டும் குடுத்த காசுக்கு ஐஞ்சாறு படம் பாத்தம். ஒவ்வொருக்காலும் படராத்திரி முடிஞ்சாப்பறகு கொஞ்ச நாளைக்கு விகடன் விமர்சனக்குழுவுக்கும் மேலால விவாதங்களும் வியாக்கியானங்கள் நடக்கும். இதில சிலர் இன்னும் இளையராஜா, பாரதிராஜா எண்டு what’s appஇல பழைய விவாதங்களை தொடருராங்கள். 95 இல இடம்பெயர இதெல்லாம் காணாமல் போய் திரும்பி வந்து காணாமல் போனோர் பட்டியலில ஆக்களைத் தேடின கூட்டத்தில அம்மா ரீவீயையும் சேத்துக் கனகாலம் தேடித் திரிஞ்சவ. குஷ்பு மெலிஞ்சு போய், ரஜனி ரோபோவாகி, சுமனும் மோகனும் வில்லனாகி, அம்பிகாவும் ராதாவும் குண்டாகி, குள்ளக்கமல் கிழவனாகிப் போனதாலயோ இல்லாட்டி இப்பத்தை ட்ரெண்ட்க்கு நான் இன்னும் மாறாததாலையோ தெரியேல்லை, பெரிய ரீவீயும், எல்லாச் சனலும் இருந்தாலும் ஏனோ ஒளியும் ஒலியும் இல்லாமப் படம் பாத்த மாதிரி சந்தோசமான படம் ஒண்டையோ , படம் முடிய நல்ல வியாக்கியானங்களையோ ரசிக்கக் கிடைக்கேல்லை. Dr. T. கோபிசங்கர் யாழ்ப்பாணம்
  6. அப்படியெல்லாம் நேரடியாக நெஞ்சில் சுடுவது போல் கேட்கக்கூடாது. இப்படிக் கேட்டால் பள்ளிக்கூட வாத்தியாரின் ரசிகர் குஞ்சுகளாம் தீவிர தமிழ் தேசியவாதிகளின் திடீர் மாரடைப்புக்கு நீங்கள் காரணமாகி விடுவீர்கள்.
  7. அநுர அரசில் இருந்து ஒரு நேர்மையானவராவது மேற்படி கூற்றுகளுக்கு விடையளிப்பார்களா?
  8. இந்த ஓநாய் மக்களுக்காகவா அழுகிறது? சிறியரை கட்சியை விட்டு விரட்டுவதற்கு வழிதேடுகிறார். கட்சிக்காக மக்களில்லை, மக்களுக்காகவே கட்சி. மதுபானசாலை விவகாரத்தை தூக்கிப்பிடித்து, தான் புனிதன் என்பது போல் எங்கள் கைகள் சுத்தம் என்று சொல்லி தொண்டை கிழிய பிரச்சாரம் செய்தார். விழுந்தது சிறிதரனுக்கு வாக்கு. இன்னும் உணராமல் கத்துகிறார் என்றால் இவரின் அறிவை வியக்காமல் இருக்க முடியவில்லை. இவர் சிறியரை விழுத்த எடுக்கும் ஒவ்வொரு படியும், இவரை இன்னும் தாழ்த்திக்கொண்டு போகும். சிறியர் இவர் எடுக்கும் படியால் மேல் ஏறி இவருக்கு முன்னுக்கு போய் விடுவார். எல்லோருக்கும் தெரியும் தான் மக்களால் நிராகரிக்கப்பட்ட புழுக்கத்தில் புலம்புகிறாரென்று.
  9. இங்கு வந்த பின்தான் தெரியுது சண்டே சவுண்டே கொடுக்க கூடாது என்று ஊரில் சவுண்டு கொடுத்தால் தான் மரியாதையே 😀
  10. பிக்குவின் ஆன்மா வந்த இடம்…. அடுத்ததென்ன? விகாரைதான். நாககோவில சுத்த பூமியட்ட சாதரேங் பிலிகமினு🙏
  11. மார்க் மாஸ்ரர் எங்காவது செல்ல நேரிட்டால் தனது அறைத் திறப்பை சிவபாதம் கடையில் கொடுத்து விட்டுச் செல்வார். மாலையில் நான் ஓவியம் பயிலச் செல்லும் முன் சிவபாதம் கடைக்கு ஒரு தடவை சென்று விட்டுத்தான் மார்க் மாஸ்ரரின் அறைக்குப் போவேன். திறப்பு சிவபாதம் கடையில் இருந்தால் மார்க் மாஸ்ரர் எத்தனை மணிக்கு தனது அறைக்கு வருவார் என்ற தகவலும் அங்கிருக்கும். மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லித் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கும் மேலாக நான் college of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இந்த வேளையில்தான் எனது பாடசாலையில் பயிலும் சகமாணவனான சேகரும் ஓவியம் பயில விருப்பம் தெரிவித்ததால் மார்க் மாஸ்ரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவனையும் என்னுடன் சேர்ந்து வந்து தன்னிடம் ஓவியம் பயில ஒப்புதல் தந்தார். சிலவேளைகளில் எனக்கு நேரம் போதாதிருந்தால் சேகரே சிவபாதம் கடைக்குப் போய் மார்க் மாஸ்ரரின் அறைத் திறப்பை வாங்கி வருவான். ஒருநாள் என்று மில்லாதவாறு மார்க் மாஸ்ரரின் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. சந்தேகமோ, சலிப்போ அவரது முகத்தில் நிறைந்திருந்தது. நானும் சேகரும் வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மார்க் மாஸ்ரர் சிவபாதத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென மார்க் மாஸ்ரர் என்னைக் கூப்பிட்டார். "இதிலையிருந்த ரண்டு புத்தகங்களைக் காணயில்லை. எடுத்தனீரோ?" எடுத்தனீரோ என்ற வார்த்தைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை. "நானெடுக்கேல்லை.. நானெடுக்கிறதெண்டால் உங்களிட்டை சொல்லிப் போட்டுத்தானே கொண்டு போவன்..." "அப்ப.. இதிலையிருந்த ரண்டு புத்தகங்களும் எங்கை? " "எனக்குத் தெரியாது.." "உமக்குத் தெரியோணும்.. நீர்தான் இதுக்குப் பொறுப்பு... நானில்லையெண்டால் சிவபாதத்திட்டை போய் திறப்பு வாங்கி வந்து ரூமை கவனிக்கிறது நீர்தானே..? நீர்தான் இதுக்குப் பதில் சொல்லோணும்." நான் சேகரைப் பார்த்தேன். எந்தவித குழப்பமுமில்லாமல் படத்தைக் கீறிக் கொண்டிருந்தான். "அந்தப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்காது.. நான் கனபேரிட்டை சொல்லித்தான் அதை வாங்கி வைச்சிருந்தனான்.. எப்பிடியோ அந்தப் புத்தகங்கள் இஞ்சை திரும்பி வரவேணும்.." மார்க் மாஸ்ரர் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குள் நான் சிறுமையாகப் போனது போன்ற உணர்வு. எனது தன்மானத்தை தட்டிவிட்டது போன்ற பிரமை. அன்று பயின்று முடிந்து புறப்படும் போது ஏதோ ஒப்புக்குத்தான் சொன்னேன். "போட்டு வாறன்." "அடுத்த முறை வரக்கை புத்தகங்களையும் கொண்டு வாரும் " மார்க் மாஸ்ரர் சொல்வது காதில் கேட்டது. அதன் பின்னர் நான் அந்தப் பக்கம் செல்லவேயில்லை. ஒன்று, அந்தப் புத்தகங்களை யார் எடுத்தது அது இப்போ எங்கே இருக்கிறது என்பது பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. மற்றது, என்னை சந்தேகித்தது என்னிடம் அதைப்பற்றி அவர் கேட்டமுறை எனக்குப் பிடிக்கவில்லை. நீண்ட நாட்களின் பின்னர் நகரத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்புறமாக இருந்து ஒரு கை எனது தோளில் விழுந்தது. முன்னால் நின்ற நண்பர்களின் கண்களில் மரியாதை தெரிந்தது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். மார்க் மாஸ்ரர். வார்த்தைகள் வர மறுத்தன. அவரே எனக்காவும் பேசினார் போல் இருந்தது. "எப்பிடி இருக்கிறீர்..? அந்தப் பக்கம் பிறகு ஆளையே காணேல்லை..." நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள். "வாரும் பஸ் ஸ்ரான்ட்டுக்குத்தான் போறன். அதுமட்டும் கதைச்சுக் கொண்டு போவம். அலுவல் ஒண்டு இருந்ததாலைதான் பள்ளிக் கூடத்துக்கு வந்தனான்.. இப்ப நான் இங்கை படிப்பிக்கிறேல்லை.. மாறி அங்கை போட்டன்.." "தெரியும்..." "தெரிஞ்சு கொண்டும் என்னை வழியனுப்ப நீர் வரேல்லை? ம்.. கோவம் எல்லாருக்கும் வாறதுதான்.. ஆனால் இந்த வயசிலை உமக்கு இவ்வளவு கோவம் கூடாது... நான் அப்பிடித்தான் கேக்கவேணும்.. சேகரை எனக்குத் தெரியாது.. நீர்தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டனீர்.. நீர்தானே அதுக்குப் பொறுப்பு.. அதுசரி அந்தப் புத்தகங்கள் எங்கேயிருக்குது எண்டாவது தெரியுமே?" குனிந்து பார்த்தபடியே தலையசைத்து "தெரியாது" என்று பதில் சொன்னேன். "மோகன் ஆர்ட்ஸ் கடையிலை இருக்குது. சேகர்தான் கொண்டே குடுத்திருக்கிறான். சேகரும் அவனும் நல்ல சிநேகிதம்.. அங்கை புத்தகங்கள் இருந்ததை சிவபாதம் பாத்திட்டு வந்து என்னட்டை சொன்னாப் போலைதான் எனக்கு புத்தகங்கள் காணாமல் போன விசயமே தெரியும். வீணா ஏன் படிக்கிறவனை குழப்புவான் எண்டிட்டுதான் உம்மட்டை உரிமையோடை கேட்டன். அவனும் திருப்பிக் கொண்டுவந்து புத்தகங்களை வைப்பான் எண்டு பாத்தன். நீர் கோவிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்." என்னால் எதுவுமே பேச முடியவில்லை. "புதுவீடு கட்டியிருக்கிறன். குடிபோகக்கை ஓரு அறைக்கு உம்முடைய பெயின்றிங் இருக்கோணும் என்று ஆசைப்பட்டன்.. நீர் வரவேயில்லை........... கதையோடை கதையா எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.." "வாழ்த்துக்கள் மாஸ்ரர் " "அவனுக்கு என்ன பெயர் தெரியுமோ?" கேட்டுவிட்டு வாஞ்சையுடன் என்னைப் பார்த்தார். நானும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். "அவனுக்கு உம்முடைய பெயரைத்தான் வைச்சிருக்கிறன். " சொல்லிவிட்டு புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு யன்னலூடாகக் கையசைத்தார். மார்க் மாஸ்ரரை நான் கடைசியாகப் பார்த்தது அப்பொழுதுதான். நான் புலம் பெயர்ந்து வந்த போது மார்க் மாஸ்ரரும் இடம் பெயர்ந்து மன்னாருக்குப் போய்விட்டதாகத் தகவல் கிடைத்தது. 2002 இல் நான் தாயகம் போன போது “மன்னாருக்குச் செல்ல ஏற்பாடு செய்ய முடியுமா?” என அரசியல்துறையிடம் காரணத்தையும் சொல்லிக் கேட்டேன். “செய்யலாம்” என்றார்கள். அடுத்தநாள் நேரில் வந்து செய்தி சொன்னார்கள், “மார்க் மாஸ்ரர் இப்பொழுது உயிருடன் இல்லை. அவர் 2000ம் ஆண்டில் காலமாகிவிட்டார்” என்று. 1973ம் ஆண்டு பிறந்த மார்க் மாஸ்ரரின் செல்வகுமாரனுக்கு இப்பொழுது 51 வயதாக இருக்கும். இன்னும் நான் அவரைப் பார்க்கவில்லை. “நான் எனது மாணவர்களால் நினைவு கூரப்படுவேன்” மார்க் மாஸ்ரர் சொன்னது நினைவில் இருக்கிறது.
  12. இந்தியாவில் ஸ்ராலினோடு நின்று சுயபடம் எடுத்து முகநூலில் விளம்பரம் செய்தது வெறும் புலுடா. அங்கு விருந்தினர்களாக வந்தவர்களை சுற்றி, அவர்களுக்கு வாழ்த்துச்சொல்லி கொண்டுவரும்போது, படம் எடுக்க விருபியவர்களின் தொலைபேசியை வாங்கி அவர்களோடு சேர்த்து படம் எடுத்து ஸ்ராலினே கொடுத்தாராம். அங்கு வந்திருந்த அனைவருமே அவரோடு நின்று சுயபடம் எடுத்துக்கொண்டார்களாம். படம் எடுத்தால்; இவர்களை அழைத்து கதைத்தார் என்று பொருள் இல்லை. இதிலிருந்து முன்பு வெளிநாட்டு தூதுவர்களோடு நின்று எடுத்து வெளிவந்த படங்களும், அதுசார்ந்த செய்திகளும், விளக்கங்களும் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன. இதற்கான, பதில் அனுராவோடு படம் எடுத்து விளம்பரம் செய்த போதே கொடுக்கப்பட்டு விட்டது. இனிவருங்காலத்தில், இவர் வெளியிடும் பிரமுகர் படங்கள், அறிக்கைகள், செய்திகள் இவரின் மதிப்பை கூட்டப்போவதில்லை. தனது தவறுகளையும் குழிபறிப்புகளையும் மறைப்பதற்கு இவ்வாறான பிரச்சனைகளை ஊதிப்பெருபிப்பதை தவிர இவருக்கு வேறு வேலையில்லை. மதுபான சாலைகளை மூடுங்கள் என்று கேட்டால்; அது நிஞாயம். அதைவிட்டு, ஆட்களை வெளிப்படுத்துங்கள் என்று அடம் பிடிப்பது; இவரின் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. இவரே வெளிப்படுத்திவிட்டு, இப்போ தனது இந்திய பயணம், குழிபறிப்பு பற்றிய கேள்வியை தவிர்ப்பதற்காக பயன்படுத்தும் சவால் இது. தான் தோற்ற பின்னும் தன்னை மாற்றிக்கொள்ளாமல் இப்படி முட்டாளாக, மக்களை முட்டாள்களாக்க செயற்படுகின்றாரே. சிறியர் தன்னை தெரிந்தெடுத்த மக்களுக்காக அதிக சேவை செய்து மக்களின் பாராட்டைபெற வேண்டும். இப்போது சுமந்திரனுக்கு உள்ள ஒரே சவால் சிறிதரன் மட்டுமே. அவரை விலக்கி விட்டால் தான் நினைத்தது போல், நீதிமன்ற செயற்பாடுகளை தான்நினைத்ததுபோல் மீளப்பெற்று, சர்வாதிகாரியாக செயற்படலாமென நினைக்கிறார். ஆனால் சிறிதரனின் பொறுமை, இவரை பைத்திய நிலைக்கு இட்டுச்செல்கிறது. இவர் ரொம்ப அவமானப்படுத்தப்படப்போகிறார். இதோடு தனது ஆட்டதை முடித்து ஒதுங்கிக்கொள்வது இவருக்கு நல்லது!
  13. உங்களுக்கு பால் அபிசேகம் செய்து பழக்க பட்ட மக்கள் எப்போது தங்களுக்காக வாழப் போகிறார்கள்..சொல்லப் போனால் பெரிய திரை, சின்னத் திரை போன்றவற்றுக்கு அடிமையானவர்கள் நிறைய பேர்.
  14. ஜல சமாதி என கேள்விப்பட்டதாக நினைவுள்ளது, இது ஆரம்ப கால நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம், ஆனால் நீரில் உடல்களை விடுவது சுகாதார கேடு என்பதால் இப்படி மாறியிருக்கலாம். ஆனால் தீபெத்தில் பெளத்த துற்விகளை ஆகாயத்தில் அடக்கம் செய்வது என உடல்களக் கூறாக்கி கழுகிற்கு போடுவார்களாம் என கேள்விப்பட்டுள்ளேன்.
  15. அதானே..குடுத்தவர் அவர்..கூடநின்று குடுபித்தவர் இவர்...பிறகேன் அனுரவை இழுக்க வேண்டும்..கனிமொழியோட கதைத்தது..கண்ண கட்டுதோ
  16. பெளத்த துறவிகளுக்கு மட்டும்தான் இப்படி கிரியை/நினைவுகூறல் செய்யப்படுகின்றதோ? இது ஒரு அழகிய கலாச்சார உருவமாக, உயர்ந்த பண்பாடாக தென்படுகின்றது. அதுசரி நம்மட ஆட்கள் நமக்கு ஏதும் நடந்தால் ஒரு கடதாசி ஓடமாவது ஆற்றிலோ கடலிலோ நமது பெயரில் விடுவார்களா? சா.. சா. நடக்கிற விசயத்தை பற்றி யோசிப்போம்.
  17. அந்த தாமரை(?) இலை சாப்பாடு அமிர்தம்❤️. படகில் ஆளுக்கு ஒரு மிதவை கவசம் தந்தார்கள். இன்ப அதிர்சியாக இருந்தது. இதை விட மோசமான நெடுந்தீவு, மூதூர் பயணங்களில் முன்பு எதுவும் இருக்கவில்லை.
  18. அன்னதான சாப்பாடு உண்மையிலயே வரம் தான்...கிளீன் சிறிலங்காவில் ...ந‌யினா தீவுக்கு செல்லும் படகுகளுக்கும் சில கடடுப்பாடுகளை செய்தால் நன்றாக இருக்கும்..மரத்தடியினால் கொன்றோல் (ஸ்ரெயரின்) பண்ணும் படகுகளும் பயணிகளை ஏற்றி செல்கின்றது பர்மா கஞ்சா எத்தனை கிலோ வந்திச்சோ? போஸ்டர்கள் எல்லாம் புதுசா இருக்கிறது ...
  19. அஞ்சலிகள்! நேரடியாகச் சந்தித்திருக்கா விட்டாலும், இவர் எழுதிய "மண் சுமந்த மேனியர்" நாடகத்தை ஒரு நிதி சேகரிப்பிற்காக பழகி அரங்கேற்றிய போது இவர் பற்றி அதிகம் அறியக் கிடைத்தது!
  20. நீங்கள் எப்ப நீதிபதி ஆகினீர்கள்?🤣 கோர்ட் சொல்லும். சத்திக்கு முந்திய ஏவறை போல் அவசரம் வேண்டாம்🤣 🤣 முன்பு கூகிள் ஆண்ட்வர் மட்டுமே.. இப்பதான் சாட் ஜிபிடி, ஜெமினி, சிவாஜி, எம் ஜி ஆர் எண்டு கனக்க இஸ்டதெய்வங்கள் இருக்கே🤣
  21. அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரசில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பல்வேறு வௌிநாடுகளை சேர்ந்த வெவ்வேறு மொழிகள் பேசும் கலாச்சாரங்களை உள்ளடக்கிய ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இந்திய – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிகள் சபை கூட்டம் பொங்கல் பண்டிகை தினமான நேற்று முன்தினம் கூடியது. அப்போது “அமெரிக்காவில் ஜனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு செய்து” தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: ஒரு அமெரிக்கவாழ் தமிழன் என்ற முறையில் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தமிழ் மொழி பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை போற்றும் விதமாக இந்த தீர்மானத்தை கொண்டு வருவதில் பெருமிதம் அடைகிறேன். அமெரிக்கா என்பது பல்வேறு மொழிகள் கலாச்சாரங்கள் கருத்துகள் மற்றும் மரபுகளின் ஒரு அங்கம். மேலும் இந்த தீர்மானம் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட அமெரிக்கவாழ் தமிழர்களின் வளமான மற்றும் தனித்துவமான கலாச்சாரம் நம்ப முடியாத சாதனைகள் மீது ஔி வீசும் என மனதார நம்புகிறேன்” என்று தெரிவித்தார். இந்த தீர்மானத்துக்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளன. ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு: அமெரிக்க காங்கிரசில்தீர்மானம் | Virakesari.lk
  22. அருமை @கிருபன் . நாங்கள் பாசல்நாரைநல்லாச் சீவி தேக்கு விசை போட்டும் ஏத்திறனாங்கள், சத்தம் கமறும். விண் பூட்டிறதிலை அப்பா ஒரு கதை சொல்லுறவர், முந்தி செப்புக்கம்பியைச் சப்பளிச்சும் விண் பூட்டிறதாம், அதைப் போட்டால் றேடியோ எல்லாம் கறகறக்கத் துவங்கிடுமாம் அதாலை அதைத் தடை செய்து போட்டாங்களாம் எண்டு.
  23. Congressman Raja Krishnamoorthi Leads Resolution to Designate January as Tamil Language and Heritage Month January 14, 2025 Press Release WASHINGTON – Today, Congressman Raja Krishnamoorthi (D-IL) introduced a bipartisan resolution designating January as Tamil Language and Heritage Month. More than 80 million people worldwide, including 360,000 Americans, speak Tamil, one of the world’s oldest languages. The resolution coincides with Pongal, a major Tamil festival that begins in mid-January. Pongal, celebrated as a time of gratitude and prosperity, is also a time when those in the Tamil community come together to observe with family, friends, and loved ones. https://krishnamoorthi.house.gov/media/press-releases/congressman-raja-krishnamoorthi-leads-resolution-designate-january-tamil வைச்சான் பாரு ஆப்பு. இந்தியன் தலையைச் சொறிய வேண்டியதுதான்,..😁
  24. 👍..................... நான் யூடியூப் ஒன்றும் பார்க்கவில்லை, அல்வாயன்................. பர்மாக்காரர் பர்மாக்காரர் தான், எங்களுக்கு மூங்கில் கொடுக்கும் தெய்வங்கள் அவர்கள்............. அந்த நாட்களிலும் அம்பன், குடத்தனை, நாகர்கோயில் பக்கங்களில் மூங்கில் வீடுகள் வந்து ஒதுங்கியிருக்கின்றன. நாங்கள் அதை விலை கொடுத்து வாங்கியும் இருக்கின்றோம்.
  25. இதைத்தான் சொல்லுறது சுடலை ஞானம்...எல்லாம் முடிந்தபின் சொல்லப்படும் வார்த்தைகள்
  26. சிரிப்புகுறி இவராய் மாத்தையா 🤣. உங்கள் சவுதி நண்பர் நம்ம சிவப்பு தொப்பி மெளலவிதானே?🤣 “வக்ஃப்” என்பது இஸ்லாமிய சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மதம் அல்லது தொண்டு என அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அசையும் அல்லது அசையாச் சொத்தையும் இஸ்லாமியர் ஒருவர் நிரந்தரமாக அர்ப்பணிப்பதாகும். இவ்வாறு ஷா, வக்ஃகப் செய்த சேரிதான் - ஷாவக்ஃகப் சேரி - சாவகச்சேரி ஆனது என்கிறார் உடாஸ்சாமியார்.
  27. 🤣................. ஏஐ ஆடு எப்படியும் எங்களைச் ஏமாற்றத்தான் போகுது போல.......... சந்தையிலிருந்து வீடு வரும் வரை ஆடாக இருந்து, பின்னர் இரவோடிரவாக அது ஒரு கழுதையாக மாறக் கூடும்.................... மாணிக்கவாசகரின் கதையில் இதே டெக்னிக் வருகின்றது............ நரிகள் குதிரைகள் ஆகி, பின்னர் அவை இரவோடிரவாக மீண்டும் நரிகள் ஆகியிருக்கின்றன.............
  28. நான் நல்ல பிள்ளை என் சான்றிதழ் எடுக்க கருத்து பகிர்வதில்லை தோழரே ...மீராவை விட நான் உசத்தியாகவோ தாழ்வாகவோ இருக்க வேணும் என்று நினைத்தும் கருத்து எழுதுவதில்லை ..இங்கு சகலதும் ,சகலரும் வெறியர்கள் தான் ....அதில் நான் முற்றாக நம்பிக்கை வைத்துள்ளேன் ...நீங்கள் சில சமயம் தங்க மூலாம் பூசிய வெறியராக இருக்கலாம் ...நான் பித்தளை/வெள்ளி மூலாம் பூசிய வெறியனாக இருக்கலாம்..இந்த தளத்தில் ஒரே கருத்தை 25 வருடங்களாக பொங்கல்/தீபாவளி /சித்திரை புத்தாண்டு காலங்களில் விவாதிக்கிறோம் என்றால் நாங்கள் எப்படி பட்ட வெறியர்கள் ? நல்ல விடயம் ...அநேகமாக எண்ணிக்கையில் சிறுபான்மையினர் தான் இப்படி இருப்பார்கள் ....பெரும்பான்மையினர் தங்களது மத நம்பிக்கையில் வெறித்தனமாக இருப்பார்கள்..அந்த வெறியர்கள் வெளியில் நல்ல பிள்ளை வேடம் போடுவார்கள் மதநல்லிணக்கமும் பேசுவார்கள் ...உள்ளக வேலையை நன்றாகவே செய்து முடிப்பார்கள் ...இது சகல மதத்தினருக்கும் பொருந்தும்..
  29. பொறுங்கோ ..பாம்பு சூப்..தவளைப்பொரியல் சாப்பிட்ட சந்தோசத்துடன் வந்திறங்க...ஜெய்சங்கர் அண்ணாச்சி....கார மிக்சர் பையுடன் வருவார்..
  30. மன்னார் பகுதியில் இப்படியொரு சம்பவம் ஏதும் முன்பு நடைபெற்றதாக தெரியவில்லையே. வன்முறை கலாச்சாரம் மன்னார்வரை வந்துவிட்டது போலும்.
  31. அந்தப் பெருமை எனக்கும் இருக்கு😊 ஆனால் விசித்திரமான பட்டங்கள் செய்யும் திறமை இருக்கவில்லை! சாதாரண பிராந்துப் பட்டத்திற்கு பலன்ஸ் செய்வதே கஷ்டம். இவர்கள் எப்படித்தான் இந்த விசித்திரமான பட்டங்களைக் கட்டுகின்றார்களோ தெரியவில்லை. aeronautical அறிவு கூடியவர்களாக இருக்கின்றார்கள்! முன்னர் யாழில் எழுதிய பதிவு. தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை! எனது புளக்கில் உள்ளது: https://kirubans.blogspot.com/2017/04/blog-post_1.html?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3_e0D_c98EKwMBvSfBLI2s0wS6QqBaRJHr4O217e10-4Hj7wwBToOfLCo_aem_OxVa7NUruS_c3ye3Ii9SGQ&m=1
  32. தமிழர்கள் மட்டுமல்ல உலகில் தற்போதய மதங்கள் உருவாவதற்கு முன்னரே இயற்கை தெய்வ வழிபாடு இருந்துள்ளது, பயத்தினடிப்படையிலேயே இந்த வழிபாடு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் பொங்கல் நிகழ்வு ஒன்றும் சாமி கண்ணை குத்தும் என்று பாமரர்களை ஏமாற்றும் ஒரு மத நிகழ்வல்ல மாறாக கோசான் கூறுவது போல உலக மக்கள் கொண்டாடும் அறுவடை தின கொண்டாட்டம். அறுவடைக்கு உதவிய இயற்கைக்கு நன்றி சொல்லும் நிகழ்வாக அது பின்னாளில் மாறியிருக்கலாம், அதனை மத உரிமை கொண்டாடும் பரிதாப நிலையில் தற்போது பொங்கல் உள்ளது. பொங்கலுக்கு மத சாயம் பூச விளைவது இல்லாத ஒன்றை உருவகிக்கும் ஒரு முயற்சி.
  33. நாங்களும் நத்தார்,ஈஸ்டர்,ஆங்கில புதுவருடம், மற்றும் பல வேற்று மத பண்டிகைகளை கொண்டாடுகின்றோம்.ஆனால் சொந்தம் கொண்டாடவில்லை.அதை தேசியம் என விளிக்கவில்லை. ஏனைய மதத்தில் உள்ள ஆயிரத்தில் பத்து பேர் பொங்கல் பொங்கினால் அதுவே தேசிய உதாரணங்கள் ஆக முடியாது. என் கிறிஸ்தவ நண்பன் சைவ கோவில்களுக்கு போகின்றான் என்பதிற்காக கிறிஸ்தவ சமூகமே அப்படித்தான் என்ற கோட்பாட்டை நிறுவ முடியாது. நான் மட்டக்களப்பில் இருக்கும் போது அந்தோனியார் தேவாலயத்திற்கு செல்வது வழமை. அதற்காக ஏனைய மதத்தினரும் அங்கே செல்கிறார்கள் என கதை விடப்படாது அல்லவா?
  34. ஆனால் பாருங்கோ அவையள் இளைய தளபதியை பெரிய தியட்டரிலயும் ,தோழரை சின்ன தியட்டரிலயும் ஓட விட்டிருக்கினம் .(என்க்கு மீசையில் மண் படவில்லை ) ..ஒரு காலத்தில் தோழரின்ட அப்பா ,தாத்தாமார் கடற்படையில் கடமை செய்யும் பொழுது உழைப்பு காட்டிய கிராம‌ம் அல்லவோ ...
  35. மாற்குவியம் – சி.ஜெயசங்கர். adminJanuary 8, 2025 நவீன காலத்து ஈழத்து ஓவிய உலகின் ஆச்சரியந்தரும் ஓவியப் படைப்பாளி அ.மாற்கு அவர்கள். ஓவிய உலகின் உருவாக்கமான ஓவியர் அ.மாற்கு அவர்கள் நவீன ஓவிய உலகின் தராதரங்களாலும்;; வரன்முறைகளாலும் கட்டுப்படுத்தமுடியாத ஓவிய ஆளுமையாகத் திகழ்ந்திருப்பதை அவரது வாழ்க்கைக் காலப் படைப்புகள், செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அ.மாற்கு அவர்கள் தான் வாழ்ந்த சூழலையும், சூழ்நிலைமைகளையும் தனது கைக்கெட்டும் சாதனங்களை வைத்து சாதித்திருப்பதை அவரது படைப்புகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அவர் தனது படைப்பாக்கங்களுக்கான சாதனங்களுக்காகக் காத்திருந்ததில்லை, அங்கலாய்ந்திருந்ததில்லை. இந்தத் திறந்த, பரந்த, துணிந்த தன்மை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான வடபுல ஈழத்தமிழர்களது வாழ்வின் சவால்களைப் பார்வைக்கும், பகிர்விற்கும் அதன்வழியான பொது உரையாடலுக்குமான கலை ஊடகங்களாகவும், அடையாளங்களாகவும் பதிவாக்கியிருக்கின்றன. காலங்கடந்த வாழ்விற்குரியதான உணர்வுபூர்வமானதும், அறிவுபூர்வமானதுமான விடயப்பரப்பாக ஆக்கப்பட்டிருக்கின்றன. அசாதராரணமான ஓவியங்களை எவரும் எதிர்பாராத வகையிலான வெகு சாதரணமான சாதனங்களில் படைத்துக் கொண்டே இருந்தமை ஓவியர் மார்க்குவின் வாழ்க்கையாக இருந்தது. காலம் அவரது கைக்கு கிடைக்கச் செய்த எதனிலும் படைப்பை நிகழ்த்திச் சென்றிருக்கிறார். உயிரை வாங்க விழுந்து வெடித்த செல் சிதைவுகளில் இருந்து சிற்பங்களை உருவாக்குவதும் அவரது இயல்பாக இருந்தது. தராதரமான நீண்ட ஆயட்காலம் கொண்ட ஊடகங்களுக்காக அவர் அங்கலாய்த்துக் கிடக்கவில்லை. அனர்த்த காலத்தை எதிர்த்து கணந்தோறும் எதிர்வினையாற்றிய ஓவியக் கலைஞர் அவர். ஓவியர் அ.மாற்கு அவர்களின் இந்தத் திறந்த பரந்த துணிந்த தன்மை பெரிதும் கவனத்திற்படாததும், நுண்ணிதானதுமான விடயங்களைப் பரந்து விரிந்த தளங்களில் உரத்துப் பேச வைத்திருக்கின்றன. அன்றாட வாழ்வின் இடையறாத தொழிற்பாடாகவும்; புதிய புதிய ஆக்கமுறைகள் உத்திமுறைகளின் எதிர்பாராத சாதனப் பயன்பாடு என்பவற்றின் ஆற்றல் வெளிப்பாட்டுக் களங்களாக ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவிய இயக்கம் அமைந்திருப்பதைக் காணமுடியும். ஓவியர் அ.மாற்கு அவர்களது ஓவியப் பயணம் தனிமனிதன் சார்ந்ததாக இருந்ததில்லை. அது ஓவியர் குழாமின் இணைந்த இயக்கமாக அவரது மாணவர்களுடன் இணைந்து ஏனைய ஓவியக் கலைஞர்களை இணைத்து மற்றும் பல்துறை அறிஞர், கலைஞர், இளைஞருடன் சேர்ந்து இயங்கியதாக இருக்கிறது. ஓவியர் அ.மாற்கு அவர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம், விபத்தின் பின் சக்கர நாற்காலியில் நகர்ந்த நிலையிலும் அவரது ஓவிய உருவாக்கமும், மாணவர் உருவாக்;கமும் ஓயாது நிகழ்ந்து வந்திருப்பதைக் காணமுடியும். ஓவியர் அ.மாற்கு அவர்களின் வரன்முறை கடந்த ஓவிய ஆக்கமுறைகளும், அணுகுமுறைகளும் நிகழ்காலத்தின் யதார்த்தத்தை உணர்ந்து இயங்கிய, வாழ்ந்த மனிதரின் பெரும் சிறப்பியல்பாகும். இத்தகைய சிறப்பியல்பு கொண்ட மனிதரின் இயக்கமானது போர், இடப்பெயர்வு, முற்றுகை வாழ்வு, பொருளாதாரத்தடை என்பவற்றைப் பொருட்படுத்தாத ஒன்றாக அமைந்தது. அத்தகைய நிலைமையின் நெருக்குவாரத்துள் வாழ்ந்துகொண்டு ஈழத்தமிழ் கூறும் நல்லுலகெல்லாம் அவர்களது மாணவர் பரம்பரையின் ஓவியச் செயற்பாடுகள் மூலம் ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், ஈழத்திலும் புலம்பெயர் நாடுகளது சமூக அரசியல் பண்பாட்டு இயக்கங்களின் ஓவிய அதிர்வுகள் வலுவாக ஏற்பட்டுக் கொண்டிருப்பதற்கான மூலச்சக்தி ஓவியர் அ.மாற்கு அவர்கள் திகழ்ந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள குருநகரில் அமைந்துள்ள வீட்டின் சிறியதொரு வீட்டு முன்றலில் இருந்தும் பின்நாட்களில் வன்னியிலும், நிறைவாக மன்னாரிலும் பலரையும் இணைத்த தனிமனித ஓவியப் பயணத்தின் உலகந்தழுவிப் பரந்து விரிந்து செல்லும் எதனையும் எதிர்கொள்ளும் எதிலும் தங்கியிராத இயக்கந்தான் ஓவியர் அ.மாற்கு அவர்களுடையது. மாற்குவின் ஓவியப் பயணம் அவராலும் அவருடன் இணைந்த மாணவர்களாலும் ஆர்வலர்களாலும் திட்டமிடப்பட்டு தீர்மானிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டவை. முற்றுமுழுதாக கலைஞர் மைய பயணமாக அமைந்ததன் காரணமாக அதன் கலை வெளிப்பாடுகளான ஓவியங்களும் அந்தக் கலைஞர்கள் நோக்கிலானதாக அமைந்திருப்பது முக்கிய படிப்பினைக்குரியது. இதையொத்த சமாந்தரக் கலைப்பயணத்தை குழந்தை ம.சண்முகலிங்கம் அவர்களது மூப்பிலான ஈழத்து நாடக அரங்க இயக்கத்திலும் காணமுடியும். எங்கள் வளத்தில் எங்கள் பலத்தில் எங்கள் தளத்தில் எங்கள் நோக்கில் நாங்கள் நின்றோம், முன்சென்றோம் என்ற வகையிலான படிப்பினைக்குரிய பயணம் இது. அ.மாற்கு அவர்களது வியக்க வைக்கும் பயணம் குவியப்படுத்தப்பட வேண்டியது. அவரது படைப்பின் பொருள் மட்டுமல்ல படைப்பின் ஊடகங்களும்;; படைப்பாக்க முறைமைகளும் வியம்பப்படுத்தப்பட வேண்டியது. அ.மாற்கு அவர்களே வியம்பத்தக்க செய்தியாகி நிலைநிற்கின்றார். மாற்குவியம் என்பது இதுதான். சி.ஜெயசங்கர் https://globaltamilnews.net/2025/210054/
  36. ஓமோம் இப்ப இயற்கை உலகம் முழுக்க தன்ரை கடமையை செய்து கொண்டுதான் இருக்குது.உக்ரேன்,அமெரிக்கா ஐரோப்பா மத்தியகிழக்கு பிரச்சனைய மாதிரி சொல்லிக்கொண்டே போகலாம்....
  37. ஆயிரம் அணுகுண்டு வைத்திருந்து என்ன பலன்? பத்தாயிரம் சற்றலைட்டுக்களை மேலை பறக்க விட்டு என்ன பலன்? உலக வல்லரசு எண்ட பெயர் வைச்சிருந்து என்ன பலன்? உலகத்துக்கு நீதி நியாயம் சொல்லி என்ன பலன்? எல்லாம் அவன் செயல் எண்டு சொல்லிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.
  38. வரே வா! அண்ணலும் நாசம் கெட்ட வேஸ்ற் புக்கினுள் வழுக்கி தடக்கி வீழ்ந்தார். மக்களே! இனிவரும் உருட்டல்களை வாசிக்க தயாராகுங்கள் 😎 பேஸ்புக்கில் வரும் செய்திகள் அனைத்தும் தவறானவை என எழுதி பல திரிகளை குழப்பியவர்தான் உந்த ஜாம்பவான்.😁
  39. இலங்கையில் கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தைப்பொங்கல் கொண்டாடுவதில்லை. இதுதான் என்னுடைய செய்தி. பண்டைய கிரேக்கர்களும் எகிப்தியர்களும் சூரிய வணக்கம் செய்தார்களே ஒழிய வேறொன்றும் இல்லை. சூரியனுக்கு நன்றி செலுத்தும் பொங்கல் என்றால் அது சைவர்களுக்கே உரியது.
  40. அஜித் அருமையாகச் சொல்லியிருக்கின்றார். ஆனாலும், கட் அவுட்டை கட்டி, அதன் உச்சியில் ஏறி நின்று அதன் மேல் பால் ஊற்றி, விழுந்து இறந்தும் போகும் இளைஞர்கள் வந்துகொண்டு தான் இருப்பார்கள்............😌. என்னுடைய சமவயது நண்பன் ஒருவனிடம் இருந்து பொங்கல் வாழ்த்து விஜய் ஒரு கையை மேலே சுற்றும் ஒரு படத்துடன் வந்திருக்கின்றது...............🫣. முன்பின் அறிமுகம் இல்லாத மனிதர்கள் மேல் முன்னரே ஏற்படும்/ஏற்படுத்தப்படும் மதிப்பீடுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. சில வேளைகளில் மனிதர்கள் வெறுப்பதற்கும், பகைப்பதற்கும் தான் மனிதர்களைத் தேடுகின்றார்களோ என்று தோன்றுகின்றது.................
  41. சைவர்களுக்கு நிறைய பொங்கல் வகைகள் இருக்கின்றன. புதுமனை புகுதலுக்கும் பொங்குவார்கள். நெல் கதிர் அறுவைக்கும் பல இடங்களில் பொங்கல் வைப்பர். இப்படி பல பொங்கல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.அதிலும் விவசாயிகள் எல்லா தொடக்க செயலுக்கும் பொங்கல் பொங்குவார்கள்.
  42. ஜி கே வெங்கடேசின் இசையில் மெளனமல்ல மயக்கம்
  43. ஒருசிலர் தூக்கத்தில் இருக்கும்போதே இறந்துபோனது குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இவ்வாறு தூக்கத்தில் இருக்கும்போதே ஒருவர் மரணம் அடைவது ஏன் என்பது குறித்து விளக்குகிறார். தூக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.