Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    3054
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19122
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38756
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 01/24/25 in Posts

  1. பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை! Jan 24, 2025 பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்தும் போக்கை நிறுத்துக என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். பெரியார் குறித்து தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய ஆதரவு அமைப்புகளும், இயக்கங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவரது வீட்டின் முன் முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இப்படி இரு தரப்பும் மாறி மாறி விமர்சித்து வரும் நிலையில் பழ.நெடுமாறன் இன்று (ஜனவரி 24) அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த செய்யப்படும் முயற்சி குறுகிய அரசியல் ஆதாய நோக்கத்தோடு செய்யப்படுவதாகும். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெரியார் பெண்ணுரிமைக்காகத் தொடர்ந்து போராடியவர். அவரது இக்கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து, ஆயுதப் பயிற்சி அளித்து களத்தில் போராட வைத்தப் பெருமை பிரபாகரனுக்கு மட்டுமே உண்டு. வேறு எந்த நாட்டின் விடுதலை இயக்கத்திலும் பெண் போராளிகள் சேர்க்கப்பட்டதில்லை. 2009ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு முன்பாக தமிழீழத்தின் பெரும் பகுதி விடுதலைப்புலிகளின் ஆட்சிக் கட்டுப்பாட்டின்கீழ் இருந்தது. அப்போது பெரியாரின் முக்கிய கொள்கைகளில் ஒன்றான சாதி ஒழிப்பினைச் செயல்படுத்திய பெருமை பிரபாகரனுக்கு உண்டு. விடுதலைப்புலிகள் திருமணம் செய்துகொள்ளவேண்டுமானால், சாதி மறுப்புத் திருமணம் அல்லது விதவைத் திருமணம் ஆகிய இரண்டில் ஒன்றை பின்பற்றவேண்டும் என ஆணையிட்டார். அவரது திருமணம் முதல் விடுதலைப்புலிகள் பலரின் திருமணங்கள் இத்தகைய புரட்சிகர திருமணங்களாகவே அமைந்தன. அவற்றைப் பார்த்த மக்களும் அவர்களைப் பின்பற்றி சாதி மறுப்புத் திருமணங்களை செய்துகொள்ள வழிவகுக்கப்பட்டது. சாதி ஏற்றத்தாழ்வுகளைக் கடைப்பிடிப்பவர்கள் மீது விடுதலைப்புலிகள் கடும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் பல புரட்சிகரமான சீர்திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். பெரியார் உயிரோடு இருந்திருந்தால், தனது கோட்பாடுகளைச் செயல்படுத்தி வரும் பேரன் பிரபாகரனைச் சந்தித்துப் பாராட்ட நேரில் தமிழீழம் சென்றிருப்பார் என்பதில் ஐயமில்லை. பெரியாரைப் பற்றியோ அல்லது பிரபாகரனைப் பற்றியோ எத்தகைய புரிந்துணர்வும் இல்லாமல் அவர்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுபவர்கள் தங்களின் தகாதப் போக்கினை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். சாதி, சமய வேறுபாடுகளால் பிளவுப்பட்டுக் கிடக்கும் தமிழர்களை ஒன்றுபடுத்தவும், பகுத்தறிவுச் சமதர்மப் பாதையில் தொடர்ந்து நடக்கவும் அரும்பாடுபட்ட இரு தலைவர்களையும் கொச்சைப்படுத்தும் போக்கில் நடந்துகொள்பவர்களைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஒருபோதும் மன்னிக்காது என எச்சரிக்கையுடன் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/please-stop-defaming-against-periyar-and-prabhakaran-pazha-nedumaran-warning/
  2. மண்ணின் மைந்தர்கள்தான் தமிழ்நாட்டினை ஆட்சி செய்ய வேண்டும் என வலியுறுத்துபவர்கள் மற்ற மொழி பேசும் மக்களுகெதிராக அரசியல் செய்வதற்காக தமிழ்தேசியத்தினை முன்னிருத்த வேறு மொழி பின்புலம் கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அரசியல் செய்வதற்கு அனைத்தும் திராவிடம் எனும் போர்வையில் திராவிட அரசியல் செய்யவதற்கு வசதியாக பிராமணர்கள்தான் அனைவருக்கும் எதிரிகள் எனும் நிலையினை உருவாக்கி அதன் அடிப்படையில் அனைவரையும் தமக்கு சார்ப்பார்க்க முயன்றவர்களுக்கு போட்டியாக திராவிட கொள்கைக்கு எதிராக தற்போது தமிழ்தேசியம் அவர்கள் இருப்பிற்கு அச்சுருத்தலாகி உள்ளதால் கடைசியாக புலிகளையும் திராவிட புலிகளாக்கி உள்ளார்கள். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன். இவர்களுக்குள் உள்ள புடுங்குபாட்டிற்கு இங்கு நாம் ஏன் முரண்பட வேண்டும்.
  3. இது எம்மவர்களுக்கும் சேர்த்துத்தான் கூறப்பட்டிருக்கிறது. தமிழக அரசியலில் தலையிடாதிருப்பதே எமக்குக் கெளரவமானதும் பயன் தரக்கூடியதுமாகும்.
  4. உண்மை தான் .......தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராக இந்தியா மத்திய அரசின் அமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக சட்டசபையில் அமைச்சர் வெளிநாடுகளில் இந்தியா அரசின். தூதுவர் இப்படி பல பதவிகள் வகித்து. மிகப்பெரும் பணக்காரராக வந்து இருக்க முடியும் தேவையில்லாமல் பிரபாகரனை பலதடவைகள் காப்பற்றி உதவிகளை செய்து புலிகளை வளர்த்து விட்டதில். மிக முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவர் பிரபாகரனை பிடித்து கொடுத்து இருக்கலாம் இந்தியா படைகளிடம். அல்லது ரொவிடம். இன்று சீமான் ஒவ்வொரு கூட்டங்களுக்கும். பிரபாகரன் படத்துடன். திரியும். வாய்ப்புகள் இருந்து இருக்காது..... சீமான் வன்னிக்கு. போய் படமெடுத்து இருக்க முடியாது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்று இருந்து இருக்காது சீமான் தலைவர் ஆக. முடிந்து இருக்காது இலங்கை தமிழர்கள் சீமானை தலைவர் என்று அழைத்து இருக்க முடியாது கயல்விழி மனைவி ஆகி இருக்க மாட்டார் தொடரும் 🙏🙏🙏. வணக்கம்…
  5. தொடராக வாசிப்பது, அதையொட்டி சிந்திப்பது, பின்னர் சுருக்கமாக, ஆனால் தெளிவாக அதை வெளிப்படுத்துவது என்பது ஒரு பெரிய செயற்பாடு. அவை எந்தப் பக்கத்தில் இருந்து வந்தாலும், எங்களின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிரான கருத்துகள் உடையவர்களிடம் இருந்து வந்தாலும் கூட, மிகவும் மதிக்கப்பட வேண்டிய, கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய கருத்துகள். அதே வேளையில், காணொளிகள் தான் கருத்துப் பரிமாற்றங்களின் அடிப்படைகளும், ஊடகங்களும் என்றால், அதை இலகுவாகக் கடந்து போய்விடலாம். பாரிசாலனும், ஒரிசா பாலுவும், மன்னர் மன்னனும் தான் தமிழ் ஆய்வாளர்கள் என்றால், அது நாங்கள் ஐராவதம் மகாதேவன் போன்ற முன்னோடிகளுக்கு மட்டும் இல்லை, தமிழ் இனத்திற்கே செய்யும் நிந்தனை.
  6. 2016 ல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எண்ணி ஏமாந்தவர்களுள் நானும் ஒரு நபர். அதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. அண்ணன் சீமான் ஈவெராவை வழிகாட்டி என சொன்னபோது எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. இன்று சரியான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார். அரசியலில் எந்தத் துரும்பை எப்போது எடுப்பது என்பதைக் களமும் காலமும்தான் தீர்மானிக்கும். பாதை கடினமாக இருந்தாலும் இலக்கை அடைய முடியும் என மிகுந்த நம்பிக்கை உள்ளது. மற்றும்படி, நாம் தமிழர் பெட்டியை வாங்கிக் கொண்டு கூட்டணிக்குப் போய்விடுவார்கள் என்ற அவதூறை வீசினார்கள். அது வடிகட்டிய பொய் என்பதை காலம் உணர்த்தியது. இப்போது பாஜகவின் B team என்கிறார்கள். நாம் தமிழர் தொடங்கிய காலத்தில் (2010) பாஐக ஒரு ஆளே இல்லை. தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக மற்றும் அதிமுக தான். இந்த அவதூற்றையும் காலம் மாற்றி எழுதிவிடும்! அதை வெறும் வாயை மெல்லும் நபர்கள் தள்ளிப்போட வேண்டுமானால் செய்யலாம். 😅
  7. உங்கள் கருத்து முழுக்க முழுக்க சரியானதே! இனவாதத்தால் பாதிக்கப்பட்டதாக மாய்மாலம் கொட்டி மூக்கால் அழுது அடுத்தவன் நாட்டில் புகலிடம் பெற்று அங்கு சந்ததியை பெருக்கி வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் எப்படி தமிழ் நாட்டில் இனவாதத்தை கக்குகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சீமானின் ரோல்மொடல் பிரபாகரன் அல்ல. சிங்கள இனவாதிகள் தான் அவரது ரோல்மொடல். ஈழப்பிரச்சனையில் சீமான் கற்றுக்கொண்டது சிங்கள அரசியல்வாதிகள் எப்படி தமது அரசியல் இலாபத்திற்காக இனவாதத்தை கையில் எடுக்கிறார்களோ அதைப்போல தமிழ்நாட்டில் இல்லாத இனவாத நஞ்சை விதைத்து அரசியல் இலாபம் பெறலாம் என்று படாத பாடுபடுகிறார். டென்மார்க்கில் இருக்கும் தலைவர் பிரபாகரனின் அண்ணள் மகன் கார்ததிக்கை இன்று தே …. மகன் என்று பத்திரிகையாளரிடர் திட்டிய காணொளி பார்ததேன்.
  8. சரியான பேச்சு, கலைஞர் சாகும் வரைக்கும் சீமான் பெயரை சொல்லவே இல்லை. தகுதி இல்லாதவர்களுக்கு நாமே அடையாளம் வழங்கி விடக்கூடாது என்பதால் அவர் அதனைச் செய்யவில்லை. இன்றும் ப. சிதம்பரம் போன்ற பழுத்த அரசியல் தலைவர்கள் சீமான் போன்றவர்களை கண்டுகொள்வதே இல்லை
  9. அண்ணா, நாங்கள் பலர், நீங்களும் நானும் உட்பட, தலைவர் மேல் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் ஒன்றே தான். அதே போலவே எம் மக்களுக்கு யாராவது ஏதாவது சிறு நன்மைகள் ஆவது செய்து விட மாட்டார்களா என்ற ஏக்கமும், தவிப்பும் கூட. ஒரு சாதாரண traffic violation நடந்த பொழுது வந்த பதிவைப் பார்த்தோம். அதில் ஏன் தலைவர் பெயர் வர வேண்டும், அது தலைவருக்கு காட்டும் மரியாதையா.......... அது எம் தலைவருக்கு ஒரு இழிவல்லவா. இதையே தான் சீமானும் செய்கின்றார். வெறும் தன்னலம் கருதி தலைவர் பெயரை மேடை மேடையாக விற்கின்றார். இங்கு களத்தில் ஒரு நண்பரின் உரையாடல் நாகாரீகம் இல்லை என்று தெரிந்தால், கள மட்டுறுத்துனர்கள் நடவடிக்கை எடுக்கின்றனர், அவரை கட்டுப்படுத்துகின்றனர். இதுவே தான் பாடசாலைகளில் நடக்கின்றது, விளையாட்டு மைதானங்களில் நடக்கின்றது. ஆனால், பொதுவெளியில் தரக்குறைவாக தொடர்ந்து உரையாடியும், நடந்தும் கொள்ளும் இந்த இருவரையும் நாங்கள் ஏன் கண்டிக்கின்றோம் இல்லை. இதை ஒரு சமூகமாக நாங்கள் கண்டிக்கவேண்டும். இவர்கள் இருவரும் அடுத்த தலைமுறைக்கு ஒரு உதாரணங்களே இல்லை. இவர்களால் ஏதாவது தொடர் நன்மைகள் எங்கள் சமூகத்திற்கு ஆகியிருக்கின்றதா............ இவர்களால் உண்மையான பிரச்சனைகள் புதைக்கப்பட்டு, மறக்கடிக்கப்பட்டு, இவர்கள் இருவரும் மட்டும் தானே அதன் மேல் நிற்கின்றார்கள். யாழ் மருத்துவமனையில் 180 தற்காலிக பணியாளர்களின் கதி இனி என்ன............... யாழ் மருத்துவமனையில் சத்யன் இப்போதும் பணிப்பாளராக இல்லையா............. மாவட்டங்களின் அபிவிருத்திக் கூட்டங்கள் இனி நடக்காதா................... சூரிய மின்சார இணைப்பு கொடுப்பதில் இனி ஊழல் நடக்காதா.............. இதுவே தான் ஒவ்வொன்றின் கதியும். எல்லாமே ஒரு நாடகம் போல நடந்து முடிந்து கொண்டிருக்கின்றது. சீமானின் செயல்களும் இப்படியே.
  10. இந்த கட்டுரை, கட்டுரையாளர் பற்றி…. 1. திருமாவேலன் விகடனிலேயே பெரியார் கருத்தை எழுதும் அளவுக்கு பெரியாரிஸ்ட் என்பது பலர் அறிந்ததுதான். அதோடு இப்போ கலைஞர் டிவியில் வேறு இருக்கிறார். 2. புலிகள் பெரியாரிஸ்ட்டுகளோ, திராவிட கொள்கையினரோ அல்ல. அவர்களுக்கு தூய தமிழ் தேசியம் ஏன் தமிழக்கத்தில் சரிவராது என்ற புரிதல் இருந்தது. அதே போல் இலங்கையில் ஏன் தமிழ் தேசியம் தேவை என்ற புரிதலும் இருந்தது. 3 . புலிகள் திராவிட கொள்கையின் நட்பு சக்திகள். ஆனால் “திராவிட புலிகள்” அல்ல. 4. ஆனால் இப்படி எழுதும் தேவை ஏன் வந்தது? சீமான் புலிகள் திராவிட எதிரிகள் என நிறுவ முயன்றதால். 5. புலிகளை, தலைவரை முன்னிறுத்தி சீமான் திராவிட கொள்கையை, பெரியாரை தாக்கும் போது…. தமிழ் நாட்டின் திராவிட கொள்கையாளருக்கு…சீமானை எதிர்க்க இரெண்டு வழிகள் மட்டுமே உள்ளது. அவையாவன: அ. பிரபாகரனின் பெர்னிச்சரை உடைத்தல் - புலிகள் மீதோ, ஈழதமிழர் மீதோ அதிகம் பாசம் இல்லாத திமுகவினர் இதை செய்கிறனர். மீம்ஸ் முதல், உருவ கேலி, புலிகள் ஆட்சேர்ப்பு என பலதை கையில் எடுத்து புலிகளை, தலைவரை பற்றி ஒரு மோசமான விம்பத்தை உருவாக்கி அதன் மூலம் சீமானை தாக்குவது இவர்கள் பாணி. நீங்கள் பெரியாரை அடித்தால்…நாங்கள் பிரபாகரனை அடிப்போம் என்பது இவர்கள் வாதம். இதில் சம்பந்தமே இல்லாமல் அடி வாங்குவது தமிழ்நாட்டில் தலைவரின், புலிகளின் இமேஜ்தான். ஆ. பிரபாகரனும் பெரியாரிஸ்ட்தான் - இப்படி சம்பந்தமே இல்லாமல் புலிகளை, திராவிட கொள்கையின் எதிரிகளா நிறுத்தி, அதன் மூலம் புலிகளையும், திராவிட அமைப்புகளையும் ஒரே கல்லில் அடிக்கும் பிஜேபி கூலி சீமான் என கண்டு கொண்ட, புலிகள் மீது பாசமுள்ள, திராவிட கொள்கை உள்ளோர் கண்டுபிடித்த உத்திதான், இப்படி புலிகளை அடிக்காமல் அவர்களும் நம்மவரே என அணைத்து சீமானை மட்டும் அடிக்கும் உத்தி. கட்டுரையில் திருமாவேலன் செய்வது இதைத்தான். புலிகள் திராவிட கொள்கையின் நட்பு சக்கி என்ற உண்மையை, “திராவிட புலிகள்” என பெருபித்து காட்டி, புலிகளை தாக்காமல் சீமானின் பிஜேபி போட்டு கொடுத்த நச்சு வியூகத்தை உடைக்க முயல்கிறார்கள். @Eppothum Thamizhan @Sasi_varnam @பாலபத்ர ஓணாண்டி . கொஞ்சம் நான் மேலே எழுதியதை யோசித்து, பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் என்ற குறளையும் பொருளுணர்ந்து பாருங்கள். பிகு நான் மேலே எழுதியது சீமானுக்கு நேர்ந்துவிட்டவர்களுக்கானது அல்ல.
  11. அத்தோடு விடவில்லையே.சாதாரண படம் ஓடுவதாக இருந்தாலும் அவர்கள் பச்சைக்கொடி காட்டினால்த் தான் ஓடும். அண்மையில் நடிகர் சித்தார்த்தை எந்தவித காரணமும் இல்லாமல் இடைநடுவில் கூட்டத்தைக் குழப்பி விரட்டுகிறார்கள். ஏன் தமிழ்நாட்டிலேயே நாங்க தாண்டா தமிழ்நாட்டையே ஆழுகிறோம்.உன்னால் என்ன புடுங்க முடியுமோ அதைப் புடுங்கு என்கிறார்கள். சிங்கள தேசத்தில் தமிழர் நாம் எப்படி கூனிக்குறுகி இருந்தோமோ எப்படியே தமிழன் திராவிடம் என்ற போர்வைக்குள் ஒழிந்திருக்கிறான். அடுத்து டாக்ரர் அருச்சுனாவை விசரன் என்று நீங்களும் பலரும் சொல்லிவருகிறீர்கள்.எனக்கும் சிலவேளைகளில் அப்படித் தான் தோன்றும். ஆனால் மாபியாக்களின் கையில் இருந்த சாவகச்சேரி வைத்தியசாலையை உலகத்துக்கு அறியத்தந்தவர்.அத்துடன் இன்று அந்த அவலநிலை குறைந்துள்ளது என எண்ணுகிறேன். அந்த ஒரு செயலுக்காகவே அவரைப் போற்றுகிறேன். எனக்கோ உங்களுக்கோ இங்கே சிலருக்கோ அந்த வைத்தியசாலையைப் பற்றி கவலை இல்லை.தென்மராட்சி மக்கள் இன்றும் அர்ச்சுனாவைக் கும்பிடுகிறார்கள். எல்லோரும் தமிழ்மக்களையே பைத்தியக்காரர் என்று சொல்வது வேதனையாக உள்ளது. அதே போல 2009க்குப் பின் எல்லோரும் பின்வாங்கியிருக்க இன்றும் எமது தலைவரை உயிர்ப்புடன் வைத்திருப்பவர் சீமான் ஒருத்தன் தான். அதற்காக சீமான் மேல் இன்னும் ஒரு மரியாதை உள்ளது. இன்று சீமானை ஏசுபவர்களில் சிலர் எமது தலைவனையும் இதே மாதிரியே கிண்டலடித்தார்கள். இந்தியாவின் எதுவித மாற்றமும் எமது மாற்றமல்ல.
  12. நீங்கள் வாசிப்பவற்றில், அறிந்து கொள்வதில் சிலவற்றை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆர்வமாக வாசிப்போர் பலர் இங்கு உள்ளனர். கருத்துப் பரிமாற்றம் என்று வரும் போது, சில வேளைகளில், சில சங்கடங்கள் வந்து விடுவது உண்டு தான்.......... மனதில் எடுத்துக் கொள்ளாதீர்கள்.............🙏.
  13. மாறுபட ஏதும் இல்லை… ஆனால்… தமிழ்நாட்டு அரசியலுக்குள் எம்மை இழுத்து…அங்கே ஒரு சாரரை எம் எதிரிகளாக்க சதி செய்யும் சீமான் போன்ற விஷ ஜந்துகளை பாராமுகமாக இருக்க கூடாது.
  14. மனதில் சில பாடல்களுடன் சில சம்பவங்கள் இணைந்தே இருக்கும். பாடலைக் கேட்டவுடன், பாடலின் முதல் ஓரிரு வரிகளின் பின், பாடல் பின்னால் ஒலிக்க மனம் அந்தப் பழைய நினைவில் மூழ்கிவிடும். மீண்டு இன்றைய உலகத்திற்கு திரும்பி வருவதே சிலவேளைகளில் பெரும் சிரமம்தான். பழைய நினைவுகளை மீட்பது என்பது தேன் தடவிய விசம் போன்று என்று ஒரு இடத்தில் எழுதப்பட்டிருந்ததை பார்த்திருக்கின்றேன். ஊக்கத்தை கெடுத்து விடும் என்ற பொருளில் சொல்லியிருப்பார்கள் போல. ஆலால கண்டன் போல விசம் முழுவதும் உள்ளிறங்காமல் இடையிலேயே தடுத்து நிறுத்தி விட்டு, நினைவுகளை இடையில் கலைத்து விட்டு, ஊக்கமது கைவிடேல் என்று வாழ வேண்டும் போல...............😜. *********************************************************************************** பாடல் ஒன்று - கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான் -------------------------------------------------------------------------- எத்தனை தடவைகள் தான் ஊரின் ஒரு எல்லையிலிருந்து மற்ற எல்லைக்கு நடப்பது. என்னதான் தெருவெங்கும் குழாய் மின்விளக்குகள் பத்து அடிகளுக்கு ஒன்று என்று இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டு, அவை பளிச்சென்று பகல் போல எரிந்து கொண்டிருந்தாலும், சூடான தேநீர் கோப்பி மற்றும் குளிரான இனிப்பு பானங்கள் என்று தாராளமாக, இலவசமாகவே, பல இடங்களில் கொடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், கால்கள் போதும் போதும் என்று கெஞ்ச ஆரம்பித்திருந்தது. அக்காவின் கால்களின் நிலைமையும் அதுவே தான். ஆனால் அக்காவிற்கு பாடல்கள் மேல் இருக்கும் ஆசை பூமிக்குள் கொதித்து எரிந்து கொண்டிருக்கும் எரிமலை போன்றது. அன்று அது வெளியே வந்து ஆகாயம் வரை பரவிக் கொண்டிருந்தது. பாடல்களை கேட்பதில் மட்டுமே அவரின் கவனம் குவிந்திருந்தது. அந்த இரவில் ஊரின் பிரதான வீதியில் பத்து இசைக்குழுக்கள் பாடிக் கொண்டிருந்தன. இரண்டு மைல்கள் நீண்ட வீதியில் ஓரளவிற்கு சரியான இடைவெளிகள் விட்டு இசைக்குழுக்களின் மேடைகள் இருந்தன. ஒரு இசைக்குழுவின் பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கும் அக்கா, 'சரி வா, அடுத்ததிற்கு போவோம்.............' என்று சொல்லிக் கொண்டே, என் பதிலை எதிர்பார்க்காமலேயே, எழும்பி நடந்து கொண்டிருந்தார். அவர் பின்னால் நான் ஓடிக் கொண்டிருந்தேன். அக்காவிற்கும் எனக்கும் ஒரு வயது தான் இடைவெளி. ஆனால் அக்கா எங்களிருவருக்கும் இடையில் ஒரு தலைமுறை இடைவெளி இருப்பது போல நடந்துகொள்வார். அவருக்கு எல்லாமே தெரிந்தும் இருந்தது. எனக்கு எதுவுமே தெரியாது என்று தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அதனாலோ என்னவோ ஒரு நசிந்த விரலை கவனமாக பொத்திப் பொத்தி பார்ப்பது போல அக்காவும் அம்மாவும் என்னைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மண்டைதீவிலிருக்கும் ஒரு சாத்திரியார் தான் வீட்டில் எல்லோருக்கும் குறிப்புகள், ஜென்ம பலன், எழுதி இருந்தார். என்னைத் தவிர மற்ற எல்லோருடைய குறிப்புகளிலும் அவர்கள் ஆஹா, ஓஹோ என்று வருவார்கள் என்று இருந்தது. என்னுடைய குறிப்பு மட்டும் படு மோசமாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் நல்ல குறிப்புகளும், எனக்கு மட்டுமே மோசமாகவும் இருந்தபடியால் வீட்டில் எல்லோரும் எல்லா குறிப்புகளையும் சரியே என்று நம்பியும் இருந்தனர். மண்டைதீவு சாத்திரியார் எழுதிய குறிப்பின் படி நான் கடைசியாக படிக்கும் வகுப்பு பத்தாம் வகுப்புத்தான். அத்துடன் கல்வி முடிந்து விடும் என்று தெளிவாக எழுதி இருந்தார். நான் அந்தக் குறிப்பை பல தடவைகள் திரும்பத் திரும்ப வாசித்திருக்கின்றேன். திருமணம் அந்நிய வழியில் நடக்கும் என்றும் ஜென்ம பலனில் எழுதப்பட்டிருந்தது. அந்நிய வழி என்றால் என்னவென்ற சந்தேகம் எப்போதும் இருந்தது, ஆனால் நான் எவரையும் இது சம்பந்தமாக இன்று வரை விசாரிக்கவில்லை. அக்காவும் நானும் ஊரின் ஒரு எல்லையில் நடந்து கொண்டிருக்கும் இசைக்குழுவின் மேடை போடப்பட்டிருந்த பாடசாலை மைதானத்தின் முன் மீண்டும் வந்து விட்டிருந்தோம். இது நாலாவது தடவை. இதற்கு மேலால் என்னால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது, இங்கேயே இருப்போம் என்று நான் அக்காவிடம் கெஞ்சினேன். அக்கா என்னைக் கவனிக்கவில்லை. அவர் மேடையையே பார்த்துக் கொண்டிருந்தார். கிழக்கு மேற்காக நீண்ட மைதானத்தில் மேடை வடக்குப் பக்கமாக அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் மேற்குப் பக்கத்தில் ஒரு வரிசை வீடுகள், அதன் பின்னர் இராணுவ முகாம். மைதானத்தின் வடக்குப் பக்கமாக, மேடையின் பின்னால், பனைமரங்கள், அதன் பின்னால் கடல். தெற்குப் பக்கத்தில் வீதி, அதன் பின்னர் பாடசாலை. அக்கா மைதானத்திற்குள் கால் வைக்காமல் வீதி ஓரத்திலேயே நின்று கொண்டிருந்தார். திரும்பி நடந்து விடுவாரோ என்று நான் ஏங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தேன். இராணுவ முகாமில் இருந்து பல இராணுவ வீரர்கள் அங்கங்கே வந்து நின்று இசைக்குழு பாடுவதை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கைகளில் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் வேறு, நாங்கள் வேறு என்றும், எங்களுக்கிடையில் ஏதோ சில அடையாள வித்தியாசங்கள் இருப்பதும் வெளிப்படையாகவே இருந்தன. மேடையின் பின்னால், கொஞ்சம் மேற்குப் பக்கமாக, முன் நின்ற மிக உயர்ந்த சில பனைமரங்களின் முன்னால் மிகப்பெரிய ஒரு போர்டிகோ கட்டப்பட்டிருந்தது. கட் அவுட்டை நாங்கள் போர்டிகோ என்று சொல்வோம். இன்று நடிகர்களுக்கு, அரசியல்வாதிகளுக்கு மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வைக்கும் கட் அவுட்டுகளை விட என்னுடைய ஊரில் சிறப்பானதும், பெரியதுமான கட் அவுட்டுகளை அன்றே வைப்பார்கள். ஐம்பது அடிகளில் கூட சாதாரணமாக செய்து வைப்பார்கள். எல்லா கட் அவுட்டுகளும் சாமியின் உருவங்களாகவோ அல்லது அழகிய பெண்ணின் உருவங்களாகவோ மட்டுமே இருக்கும். ஆண் உருவங்களில் கட் அவுட் வைப்பதில்லை போல. நான் பார்த்ததில்லை. அந்த மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கட் அவுட் பிரமாண்டமாக இருந்தது. லவனும் குசனும் ஒரு குதிரையை கையில் பிடித்துக் கொண்டு இருப்பது போன்ற மிக உயர்ந்த ஒரு கட் அவுட். பனைமரங்களிற்கு மேலால் லவனும் குசனும் நின்றார்கள். அவர்கள் இருவருக்குமிடையில் ஒரு வெள்ளைக் குதிரை. சீதாப்பிராட்டியின் புத்திரர்களின் அதே அளவு கம்பீரத்துடன் அந்தப் புரவியும் அங்கே நின்று கொண்டிருந்தது. அடுத்த பாடல் 'கங்கை நதி ஓரம் ராமன் நடந்தான். கண்ணின் மணி சீதை தானும் தொடர்ந்தாள்..................' என்று அந்த இசைக்குழுவின் அறிவிப்பாளர் அறிவித்தது எதிரொலித்துக் கொண்டிருந்தது. 'சரி............. வா, போய் இருப்பம்...........' என்று அக்கா மைதானத்திற்குள் நடந்தார். நான் அக்காவைப் பின்தொடர்ந்தேன்.
  15. முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின் Jan 24, 2025 நாங்கள் தான் அடுத்த முதல்வர் என சிலர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 24) மறைமுகமாக விமர்சித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 3000 பேர் இன்று (ஜனவரி 24) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசும்போது,”பல்வேறு பொறுப்புகளில் ஒரு இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த நீங்கள், அந்த இயக்கத்தின் தலைமை முறையாக இல்லை, நமக்கு மட்டுமல்ல தாய்நாட்டிற்கும் அது துரோகமாக அமைந்துவிடும் என்பதை உணர்ந்து சிறப்பான முடிவெடுத்து திமுகவில் இணைந்திருக்கிறீர்கள். உங்களை நான் திமுக தலைமை கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன். சில நாட்களுக்கு முன்பு ராஜீவ் காந்தி என்னிடத்தில் வந்து ஆயிரக்கணக்கான தோழர்கள் நம்முடைய கட்சியில் இணைய காத்திருக்கிறார்கள். அழைத்து வரட்டுமா? என்று கேட்டார். இந்த கேள்வியை நீங்கள் கேட்க வேண்டிய அவசியமில்லை. அழைத்து வாருங்கள், வரவேற்க நாங்கள் காத்திருக்கிறோம் என்று நான் சொன்னேன். திமுக என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ஆம் ஆண்டு திமுகவை அண்ணா தொடங்கினார். அதற்கு பிறகு 1957-ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் நாம் ஈடுபட்டோம். ஆனால், இன்றைக்கு சில பேர் கட்சி துவங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய நிலை உள்ளது. நாங்கள் தான் அடுத்த முதல்வர் என சிலர் அநாதை நிலையில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர் எந்தக் கட்சி தலைவர் என்று சொல்ல நான் விரும்பவில்லை. அவர்களுக்கெல்லாம் அடையாளம் காட்ட நான் தயாராக இல்லை. அவர்கள் பெயரை சொல்லி இந்த மேடைக்குரிய அங்கீகாரத்தை நான் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. இந்த மேடையில் நான் உள்பட உதயநிதி, துரைமுருகன் ஆகியோர் மாற்றுக் கட்சியினர் என்று தான் சொன்னோம். அந்த கட்சியின் பெயரைக் கூட சொல்ல எங்கள் வாய் வரவில்லை. எத்தனையோ கட்சி பெயரை சொல்கிறோம். உண்மையிலேயே தமிழர்களுக்காக பாடுபடும் கட்சியாக இருந்தால் அவர்கள் பெயரை சொல்லலாம். வேஷம் போடுபவர்களுக்கு அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை. திராவிட மாடல் என்று சொன்னாலே சிலருக்கு கோபம் வருகிறது. நாங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்போம். அதற்காக நாங்கள் பயப்படப்பட்டோம். நீங்கள் இப்படி தரக்குறைவாக பேச பேச தான் திராவிட மாடல் அரசு வளர்ந்து வருகிறது. அதனால் தான் உங்கள் கட்சியில் இருந்து எல்லோரும் இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று ஸ்டாலின் தெரிவித்தார். https://minnambalam.com/political-news/mk-stalin-criticized-seeman-in-anna-arivalayam/ பெரியார் சிலை பரிசு… திமுகவில் இணைந்த 3,000 நாம் தமிழர் கட்சியினர்! Jan 24, 2025 நாம் தமிழர் கட்சியில் இருந்து 3,000 பேர் விலகி திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஜனவரி 24) திமுகவில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளை ஒருங்கிணைக்கும் பணியை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, திமுக துணை செயலாளர் ஜோயல் உள்ளிட்ட மாணவரணி, இளைஞரணி நிர்வாகிகள் மேற்கொண்டனர். அந்தவகையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் திமுகவில் இன்று இணைந்தனர். மாவட்ட செயலாளர்கள் ராமச்சந்திரன், நெல்லை கண்ணன், சுப்பையா பாண்டியன், கலியபெருமாள், நாமக்கல் வினோத், நாகூர் கனி, முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ், மண்டல செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் என 30 முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, அண்ணா அறிவாயலம் கலைஞர் அரங்கிற்கு வந்த முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோருக்கு புத்தகம், சால்வை, பெரியார் சிலைகள் வழங்கி நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணைந்தனர். கட்சியில் இணைந்த நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து கெளரவித்தார். https://minnambalam.com/political-news/ntk-cadres-gifts-mk-stalin-to-periyar-statue-joined-dmk/
  16. Published By: RAJEEBAN 24 JAN, 2025 | 11:09 AM மன்னார் பூநகரி காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கடந்த வருடம் ஜுன் மாதம் ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் வழங்கிய அனுமதியை அமைச்சரவை இரத்துசெய்துள்ளது. ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவை இந்த திட்டத்திற்கான அனுமதியை இரத்துசெய்வதற்கு தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்திற்கு இலங்கையில் எதிர்ப்புகள் உருவானதுடன் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுசூழல்; அறக்கட்டளை நிறுவனம் உட்பட பல அமைப்புகள் இந்த திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுசூழல் மதிப்பீட்டில் குறைபாடுகள் உள்ளன என்பதாலும் மன்னார் வலசப்பறவைகளிற்கான பகுதி என்பதாலும் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தன. மன்னார் ஆயர் உட்பட மன்னார் மக்களும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் தொழில்துறைக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது இந்த திட்டத்தை இரத்துச்செய்வேன் என உறுதியளித்திருந்த அனுரகுமாரதிசநாயக்க இலங்கையில் காற்றாலை மின்திட்டத்தை முன்னெடுப்பதற்காக சர்வதேச கேள்விப்பத்திரத்தை கோருவேன் என தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/204752
  17. ஒரு கை தட்டி ஓசை வராது. சீமான் வரும் வரை ஈழத்தமிழர் நாம் தமிழக அரசியலில் தலையிடாமல்தான் இருந்தோம். சீமான் வந்து பெரியார் vs பிரபாகரன் என ஒரு பொய்சமன்பாட்டை நிறுவும் போது… திமுக, அதிமுக, திக, இன்னும் பல கோடி அனுதாபிகள் கொண்ட அமைபுக்களை எமக்கு எதிராக நிறுத்தும் போது… 600 வருடமாக தமிழக்கதில் இருப்பவனை பார்த்து நீ அயலான், ஆனால் ஈழத்தமிழன் என் உறவு என சிண்டு முடியும் போது… நாம் சும்மா இருக்க முடியாது. கூடாது. அப்படி இருப்பின்… தமிழக மக்களையும் ஈழத்தமிழரையும் நிரந்தர பகைவராக்கும் றோ/ஆர் எஸ் எஸ் சதிக்கு நாமும் துணைபோகிறோம் என்பதே அர்த்தம்.
  18. பையன் சார், நீங்கள் சொல்வது மற்றைய இடங்களுக்கு பொருந்தும் என்றாலும் யாழ் களத்திற்கு பொருந்தாது என்று தான் நினைக்கின்றேன். இப்படியான ஒரு களத்திற்கு காணொளி பார்க்க வருவது அப்படி வருபவர்களுக்கு நேர விரயம் என்றும் நினைக்கின்றேன். மிக இலகுவாக பல்வேறு காணொளிகளையும் வேறு இடங்களில், தங்கள் தங்கள் வசதிக்கேற்ப மிக இலகுவாக பார்த்துக் கொள்ளலாம் அல்லவா, அவர்கள் ஏன் இங்கு வரவேண்டும். ஒருவர் ஓயாமல் தன்னுடைய கருத்துகளாக வேறு மனிதர்களின் காணொளிகளை மட்டுமே போட்டுக் கொண்டிருக்கின்றார் என்றால், அவர் ஒரு கருத்தாளர் என்றில்லாமல் ஒரு பிரச்சாரகர் அல்லது கழகப் பேச்சாளர் போன்று ஆகின்றார். ஒரு பிரச்சாரத்தையோ அல்லது கொள்கை பரப்பையோ ஒரு தடவைக்கு மேல் அந்தக் கட்சியைச் சாராதவர்கள் கேட்கத் தேவையில்லை. அவர் சொல்ல வருவதில் எதுவும் புதுமையாகவோ அல்லது சிந்தனையை வளர்ப்பதாக தொடர்ந்தும் இருக்கமாட்டாது. இது ஒரு ரசிகனின் மனநிலை. தேசியம், திராவிடம் என்று மட்டும் இல்லை, இதே போக்கு அமெரிக்கா, ரஷ்யா, விளையாட்டுகள், அரசியல் கட்சிகள், நடிகர்கள், ஆளுமைகள் போன்ற பல விடயங்களிலும் பலரால் பொதுவெளிகளில் வெளிப்படுத்தப்படுகின்றது. சிறிய காலப்போக்கிலேயே அவர்களுடன் விவாதிப்பதிற்கு எதுவும் கிடையாது என்றாகிவிடுகின்றது. ஒவ்வொரு ரசிகனின் முன்னாலும் ஒரு இரும்புத்திரை உள்ளது. அதைத் தாண்டி எதுவும் அந்த ரசிகனை அடைவதேயில்லை. அவர்கள் சார்ந்த காணொளிகள் மட்டுமே அவர்களின் ஊடகம் என்றாகிவிடுகின்றது. உதாரணமாக, திமுக கழக பேச்சாளர் ஆர்.எஸ். பாரதியின் பேச்சுக்களை எத்தனை தடவைகள் கேட்க வேண்டும்.......... ஒரு தடவை மட்டும் போதுமல்லவா. அதையே தான் இந்த காணொளிகளைப் பற்றியும் நான் சொல்லுகின்றேன். காணொளிகளுக்கும், வாசிப்புக்கும் இருக்கும் இடைவெளி மலையும், மடுவும் போன்றது என்று கூட சொல்லமுடியாது. இரண்டும் தொடர்பு அற்றவை. காணொளிகள் அவற்றைப் பார்ப்பவர்களை ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டுமே சுய சிந்தனை எதுவுமின்றி இழுத்துச் செல்லும். ஒரு சினிமா போல. வாசிப்பு என்பது ஒரு கூட்டு முயற்சி. வாசிப்பவரும், வாசிக்கப்படுவதும் சேர்ந்தே பொருளை உண்டாக்குகின்றன. வரிகளுக்கிடையில் அனுபவங்கள் வந்து போகும். சிந்தனைகள் சிதறும். காட்சி ஊடகம் என்பது ஓடும் ஆறு போல, அதன் திசையில் நிற்காமல் ஓடி அது முடிந்துவிடும். வாசிப்பவற்றை தொகுத்து சுருக்கமாக எழுதுவதோ அல்லது சொல்லுவதோ இன்னும் ஒரு படி. புரிதல் இல்லாமல் தொகுத்து எழுதவே முடியாது. இவை தான் ஒரு கருத்துக்களத்தின் அடிப்படைகளாக இருக்கவேண்டும். காணொளிகளும் ரசிக மனநிலையும் நல்ல காத்திரமான கருத்தாடலுக்கு ஏற்றவை அல்ல, அவை நல்ல கருத்தாடலுக்கு துணை புரிவதில்லை என்பது என் அபிப்பிராயம். இன்று என்ன நடந்து கொண்டிருக்கின்றது, இன்றைய பெரும்பான்மையினர் என்ன செய்கின்றனர் என்பது நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இன்றைய பெரும்பான்மையினர் நுகர்வோர் போன்றோர். ஆயிரம் ஆயிரம் வருடங்களாக அப்படித்தான் உலகம் இருக்கின்றது. நுகர்வோர்கள் நாளைய உலகை தீர்மானிப்பதில்லை. இதற்கு மாறாக ஒரு சிறு பிரிவு எப்போதும் இருக்கும். அவர்கள் சித்தசுவாதீனம் அற்றவர்கள், போராளிகள், முசுறுகள், கற்பனாவாதிகள் போன்று அவர்கள் வாழும் நாட்களில் தோன்றக்கூடும். ஆனால் அவர்களே நாளைய உலகை என்றும், எங்கும் வடிவமைக்கின்றார்கள். டிக்டாக் அதிகம் பார்க்காத, ஃபேஸ்புக் அவ்வளவாக உபயோகிக்காத சிலரும் இளைய தலைமுறையில் இருப்பார்கள். அடுத்து வரும் உலகத்தை அவர்கள் தான் உருவாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இது ஒரு வகையில் தியாகம் தான். ஆனால் அவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். டிக்டாக் வீடியோ ஒன்றைத் தன்னும் பார்க்க வேண்டிய தேவையோ அல்லது ஒரு ஃபேஸ்புக் கணக்கு ஆரம்பிக்க வேண்டிய தேவையோ எனக்கு இதுவரை வரவில்லை. அதனால் தானோ என்னவோ, எழுத ஆரம்பித்தால் அது நீளம் நீளமாகவே வருகின்றது...................🤣.
  19. பையன் சாரும், கோஷானும் நல்ல ஒரு காம்பினேஷன்............. வேலையில் தலைக்கு மேல வேலை என்று சொல்லி விட்டு, என்ன ஈ......... என்று சிரித்துக் கொண்டே இருக்கின்றீர்கள் என்று கேட்டு விட்டுப் போயிருக்கா.............. இதோட ஜஸ்டினும், வாலியும் சேர்ந்தால், கமலின் சிரிப்பு படங்கள் கூட கிட்டவும் நிற்காது....................🤣.
  20. வணக்கம் இசை இந்தத் திரியிலாவது உங்களைக் கண்டது மிகவும் சந்தோசம். உங்களின் கருத்துக்களைப் பார்ப்பதற்காகவே இந்தத் திரி இன்னும் கொஞ்சம் ஓடட்டும்.
  21. 👍.................. 'பத்துப்பாட்டு' என்று தலைப்பு வைத்து பத்து சினிமாப் பாடல்களில் சுற்றி இருக்கும் பழைய நினைவுகளை எழுத வேண்டும் என்று தான் இதை ஆரம்பித்தேன், அக்கா. சினிமாப் பாடல்களுக்கும், என்னுடைய நினைவுகளுக்கும் பத்துப்பாட்டு என்று சங்க இலக்கியங்கள் சொல்வதை தலைப்பாக வைப்பது என்று வந்த அந்த எண்ணத்தை பின்னர் தலையில் ஒரு குட்டுக் குட்டி தடுத்து நிறுத்தினேன்.................🤣. ஆனாலும் பத்து பாடல்கள் எழுதுவதாகத்தான் இருக்கின்றேன். சீமானின், திராவிடத் திரிகளிலேயே எழுதக் கிடைக்கும் பொழுதெல்லாம் போய்விட்டது, அக்கா..................🤣. இன்றைக்கு முடிந்தால் இரண்டாவது நினைவை எழுதுவதாக உள்ளேன்.............. சிலராவது தொடர்ந்து அவர்களின் அனுபவங்களை பகிர்வார்கள் என்றும் நினைக்கின்றேன்............. பலதும் பத்துமாக வேறு சில விடயங்களும் வந்து போகும் போல..............👍.
  22. அருமையான‌ க‌ருத்து அண்ணா சீமான் எதிர்பாள‌ர்க‌ள் சில‌ர் இதுக்கை க‌ற்ப‌னையில் கிறுக்குவ‌து வெளிப்ப‌டையாக‌ தெரியுது..............நாம் த‌மிழ‌ர் பிஜேப்பியின் Bரீம் என்றால் திமுக்கா தான் Aரீம்..................... இதுக்கை ஒரு முகாந்த‌ர‌மும் இல்லாம‌ கிறுக்குவ‌த‌ வாசிச்சால் உண்மையில் பையித்திய‌ம் பிடிக்கும் திமுக்காவின் இணைய‌கைகூலிக‌ள் சீமான் சீமான் தொட்ட‌துக்கு எல்லாம் சீமான் சீமான் என‌ தொட‌ர்ந்து புல‌ம்புவ‌து.....................என‌க்கு க‌ருணாநிதி குடும்ப‌த்தில் யாரையும் பிடிக்காது 2009க்கு பிற‌க்கு அவ‌ர்க‌ளின் க‌ப‌ட‌ அர‌சிய‌லை பார்த்து வெறுத்த‌ ஆட்க‌ளில் நானும் ஒருவ‌ன் சீமான் பிழையான‌ பாதையில் போனால் க‌ருணாநிதி குடும்ப‌த்தை திட்டி தீர்த்த‌தை விட‌ அதிக‌மாய் திட்டி தீர்ப்போம்...............த‌லைவ‌ரி அண்ணான்ட‌ ம‌க‌னுக்கு நான் சொன்ன‌து அண்ணா எங்க‌ளுக்கு 2002அந்த‌ கால‌ப் ப‌குதியில் த‌மிழீழ‌ம் கிடைச்சு இருந்தால் நாங்க‌ள் த‌மிழ் நாட்டு அர‌சிய‌லை எட்டியும் பார்த்து இருக்க‌ மாட்டோம் எங்க‌ட‌ முழு சிந்த‌னை எங்க‌டை நாட்டை க‌ட்டி எழுப்புவ‌தில் தான் இருந்து இருக்கும்..................புல‌ம்பெய‌ர் நாட்டில் வாழ்ந்தாலும் குறைந்த‌து வ‌ருட‌த்துக்கு இர‌ண்டு த‌ட‌வை த‌ன்னும் எங்க‌ட‌ நாட்டுக்கு போய் வ‌ந்து இருப்போம்🙏👍..............................
  23. உது இப்பத்த தலைமுறைய போய்ச்சேராது.. 80/90 களுக்கு முன்னம் பிறந்தவர்களுக்கு ஓகே.. இப்பத்தே ஜெனெரேசனுக்கு வீடியோதான் ஈசியா போய்ச்சேரும் எண்டு நினைக்கிறன்.. இளைய தலைமுறையை அரசியல் மயப்படுத்த பழைய ரெக்னிக்கில மட்டும் தொங்கிக்கொண்டு இருக்கலாம் வளர்ச்சிக்கு ஏற்ப மாறிக்கொள்பவர்கள்தான் பிழைப்பார்கள்.. தக்கன பிழைக்கும்.. மாற்றம் ஒன்றே மாறாதது.. தலை உங்களில சந்தேகமா இருக்கு.. நேரம் கொடிக்கிடக்கிற ஒரே ஆள் நீங்கல்தான்..😂
  24. அதுக்கும் மேலே ஒரு காரணம்.... உண்டே... ஓய்வு பெற்று நேரம் போகாமல், கொழுத்த பணத்துடன், பக்கத்து நாட்டு அரசியல் அரட்டை அடிப்பவர்கள் கூட்டத்தில் ஒருவராக இருக்கவிரும்பவில்லை. நம்ம நாட்டுப் பொழப்பே கேவலமா இருக்குதய்யா. சரி, உங்களுக்கு எப்படி நேரம் இப்படி தாராளமாக கிடைக்கிறது என்பது புரியாத புதிர். British government, companies house தளத்தில், இந்த நாட்டில் பதிவாகியுள்ள கம்பனிகளில், டைரக்டராக உள்ள தமிழக்தின் ஒருவர் விபரம் குறித்த அரச லிங்கை, புரிதலே இல்லாமல், நீக்கிய மட்டு, உங்கள் சீமான் குறித்த வசை, வன்ம சொற்குறிப்புக்களை விட்டு வைத்திருப்பது நடுநிலை குறித்த ஆச்சரியத்துக்குரியது. இப்படி அம்பயர்களை வைத்துக்கொண்டு களமாட தேவைதான் என்ன என்ற சிந்தணை.... கழண்டு கொண்டோம்.... அட.... நாம எத்தணை திரிகளில், புழுதி கிளம்ப சண்டை போட்டிருக்கிறோம். கவலை படாதீர்கள். நேரம் இல்லை. களமிறங்க முடியாது. ஆனால், உங்கள் கண்ணியம் முக்கியம். தரமான கருத்தாடல் செய்த ஒருவர் என்ற வகையில்.... அது சரி... புதிதாக ஒருவர்.... உங்கள் போலவே... பாயிண்டுகளை, நம்பர் போட்டு அடிக்கிறார். ஒண்டு.... உங்கள் ரெயினிங் அல்லது.... நீங்கள் இன்னோர் ஐடீல..... 😎😜 இன்னுமோர் கேள்வி. முன்னர், ஒரு திரியில் கேட்டு பதில் தராமல் நகர்ந்தீர்கள். நீங்கள் பெரியார் பக்தர் என்று தெரியும். செயல் வீரரான பிரபாகரன் இருக்கும் போது, சொல்வீரனான பெரியார் ஈழத்தமிழனுக்கு எதற்கு? ஐனவரி கடைசீல வருவேன் என்றேன். வசதிப்பட்டால் வேறு திரிகளில் பார்ப்போம். இந்த திரியில் இல்லை.
  25. வணக்கம் இசை. 2016 தேர்தல் காலகட்டம். நா த க ஒரு சீட்டை தன்னும் இந்த தேர்தலில் வெல்லாவிடில் நான் யாழுக்கு வரவேன்மாட்டேன் என்றார் ஒருவர். 2024 இன்னும் ஒரு சீட்டை தன்னும் நாதக வெல்லவில்லை. ஆனால் அவரும் இடைக்கிடை வந்துதான் போகிறார். இதுவும் காலச்சுழற்சியே 🤣. பிகு கண்டது சந்தோசம். அருமை. இதை சீமான் கையில் எடுத்தால் நாந்தான் அவரின் முதல் ஆதரவாளராக இருப்பேன். விஜை இந்த நிலைப்பாட்டைத்தான் எடுக்கிறார். ஏன் சீமானல் இது முடியவில்லை? அவர் பிஜேபியால் பிஜேபி-எதிர் வாக்கை பிரிக்க அனுப்பபட்டவர். விஜையின் அரசியல் அவர் வெல்ல. சீமானின் அரசியல் - பிஜேபி வெல்ல.
  26. குழுநிலைப் போட்டிகளுக்கு புள்ளி பின்வருமாறு வழங்கப்படும்😀
  27. பல ஆவணங்கள் தமிழீழ ஆவணக்காப்பகம் இணையத்தில் உள்ளன. https://tamileelamarchive.com விடுதலைப் புலிகள் பத்திரிகை இணைப்பு https://tamileelamarchive.com/article_pdf/article_603a5d3c689251d2d3de9131b8e2f59d.pdf
  28. குழு நிலைப் போட்டி 12 கேள்விகளுக்கு புள்ளிகளைக் காணவில்லை. ஆனால் மிகுதி கேள்விகளுக்கு மொத்த புள்ளிகள் 76. ஆகவே குழு நிலைப் போட்டி கேள்விகளுக்கு (100-76)/12 தலா 2 புள்ளிகள் வழங்கப்படும் என நினைக்கிறேன்.
  29. ஐயர்கள், ஐயர் தொழில் பற்றி சொல்லும் பொது ஒரு விடயத்தை மறந்துவிட்டேன். பழைய சந்ததி ஐயர்களுக்கு பறவை பாசை பேச (மந்திரம் சொல்ல) பயின்று, பயிற்சி எடுத்து இருப்பார்கள். நான் சொல்லும் ஐயர் சந்ததி, நல்லூரில் பிரதம குருக்களாக இருந்த குமாரசாமி குருக்களின் சந்ததிக்கு கிட்டிய சந்தத்திகளும் , அதன் முதல் சந்ததிகளும்.. எல்லா ஐயர்களும் என்று இல்லை, (குமாரசாமி குருக்கள் ) போல நன்கு பயிற்சியும், அனுபவமும் உள்ளவர்கள். பொதுவாக இவர்களே, பிரதம குருக்களாக அந்தந்த கோயில்களில் பொறுப்பை எடுப்பார்கள். பறவை பாசை என்பது வாய் மூடி, உதடுகள் இறுக்கமாக மூடி இருக்க, குரல் நாணால் பேசுவது அல்லது மந்திரம் சொல்வது. (ஒருமுறை உங்களின் பெயரை சொல்லிப் பாருங்கள். ம் அல்லது ங் அல்லது அவை போன்ற, அல்லது இவை இரண்டும் கலந்த ஒலியே எழுப்ப முடியும். இதை தவிர வேறு எந்த ஒலியும் எழுப்ப முடியாது. ஆயினும் ம், ங் எனும் ஒலிகள் இம்மை, மறுமை எனபதுடன் தொடர்புடைய மந்திரங்களுக்கு அடிப்படை ஆகும்.). விசேட நாட்களில், சந்தர்ப்பத்தில், குழுவாக ஐயர்கள்பூசை செய்யும் போது,, பொதுவாக பூசையின் இறுதி பகுதியில் (அனல் அப்படித் தான் என்று இல்லை) , மற்ற ஐயர்கள் மந்திரம் சொல்வதை நிறுத்த, பிரதம குருக்கள் தொடர்வார். அது பொதுவாக பறவை பாசையில் சொல்லும் மந்திரங்கள். பிரதம குருக்கள் எப்போதும் சாமியை பார்த்தபடி நிற்பதால் (அதாவது அவரின் முகம், வாய் பக்தர்களுக்கு தெரியாது ), அது தெரிவதில்லை. முன்பு சொன்னது போல, மந்திரங்கள் சொல்லும் விதத்திலும் அவை உரு, சக்தி எடுக்கும் (என்பது நம்பிக்கை). இதை சொல்வது, ஐயர் என்பது மிகவும் பொறுப்புள்ள தொழில். இந்த பறவை பாசை கலையாக வர ஏறத்தாழ 20-25 வருட பயிற்சி தேவை. எல்லோருக்கும் (அதாவது எல்லா ஐயர்களுக்கும்) கலையாக வராது. (இப்படியான பொறுப்புகளுக்கு மற்றும் பயிற்சிகளுக்கு முன்பு , சைவக் குருக்களின் இடம் எங்கே என்பதை நீங்களே யோசித்து பார்க்கலாம்)
  30. சுமத்திரன் என்ற முழு விசரணை அரசியலை விட்டு போக வைக்க அர்சுன்னா என்ற பாதி விசரை வெல்ல வைக்க வேண்டி வந்தது அந்த சுமத்திரன் முழு விசர் அரசியலை விட்டு போகாதமுதல் இந்த அரை விசர்ததான் அதுக்காக எவ்வளவு விலையும் கொடுக்கலாம் .
  31. குட்டி மணி…கீழே….. எழுதி இருக்கிறேன் கவனிக்கவில்லையா🤣
  32. ஒம். ஒம் இப்போது தான் இலங்கை பாராளுமன்றத்தில் தமிழர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்பது உலகத்துக்கே தெரிகிறது ...
  33. பையன் சார், உங்களுக்கும் கோஷானுக்கும் இடையில் இருக்கும் பூர்வஜென்ம பந்தத்தில் நாங்கள் சில அப்பாவிகள் இடையில் வந்து மாட்டுபட்டு விட்டோமோ.......................🤣.
  34. குடி,சிகரட் பழக்கம் இல்லாத நல்ல மாப்பிளை தேடின காலம் போய் ....இப்ப கெட்ட பழக்கம் இல்லாத பொம்புளை தேடுற காலத்திலை நிக்கிறம் கண்டியளோ....😀
  35. பீட்சா... ஏன், வட்ட வடிவில் இருக்கிறது? பீட்சாவின் வடிவம் குறித்து பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். பீட்சா வட்ட வடிவில் இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன: 1) காற்றில் சுழற்றுதல்: பீட்சா மாவு காற்றில் சுழற்றப்பட்டு தட்டையாக விரிக்கப்படும். இதற்கு வட்ட வடிவம் மிகவும் ஏற்றது. 2) சமச்சீர் சூடு: வட்ட வடிவத்தில் பீட்சா முழுவதும் சமமாக சூடாகும். 3) வெட்டுதல்: வட்ட வடிவத்தை சம பாகங்களாக வெட்டுவது எளிது. 4) ஏன் சதுர பெட்டியில் வைத்துத் தருகின்றனர்? உற்பத்தி எளிமை சதுர பெட்டிகளை உற்பத்தி செய்வது வட்ட பெட்டிகளை விட எளிது மற்றும் மலிவு. 5) சேமிப்பு: சதுர பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்றாக சேமித்து வைக்க எளிது. 6) பேக்கேஜிங்: சதுர பெட்டிகளை பிற பொருட்களுடன் சேர்ந்து பேக்கேஜ் செய்வது எளிது. 7) ஏன் முக்கோண வடிவில் வெட்டி சாப்பிடுகிறோம்? சம பாகங்கள் வட்ட வடிவ பீட்சாவை சம பாகங்களாக வெட்டுவதற்கு எளிதான வழி முக்கோணமாக வெட்டுவதே. 😎 பகிர்ந்து கொள்ளுதல்: முக்கோண வடிவில் வெட்டப்பட்ட பீட்சாவை பலருடன் எளிதாக பகிர்ந்து கொள்ளலாம். சுருக்கமாக: பீட்சாவின் வடிவம், அதன் தயாரிப்பு, பேக்கேஜிங் மற்றும் நுகர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது. படித்ததில் பிடித்தது.
  36. குடும்பத்திற்கான பீட்சா,கொண்டாட்டங்களுக்கான பீட்சா என்றால் நாற் சதுர வடிவில் தான் தருகின்றார்கள்.😂
  37. உண்மை தான் இவ‌ர் ஆர‌ம்ப‌ கால‌த்தில் ஜேர்ம‌னியில் வ‌சித்து விட்டு ல‌ண்ட‌னனுக்கு போன‌வ‌ர் இப்போது ல‌ண்ட‌னில் தான் வ‌சிக்கிறார் த‌ன‌து 50 பிற‌ந்த‌ நாளை ஜேர்ம‌னியில் கொண்டாடினார்...................நான் ரிக்ரொக் பெரிசா பாவிப்ப‌து கிடையாது அந்த‌ ஆப்பும் என‌து கைபேசியில் இல்லை அழித்து விட்டேன்..................மாவீர‌ர்க‌ளின் வ‌ர‌லாறுக‌ள் ப‌ட‌ங்க‌ளை அதுக்குள் போடுவேன் ம‌ற்ற‌ம் ப‌டி ரிக்ரொக்குக்கும் என‌க்கும் தூர‌த்து பொருத்த‌ம் உற‌வே😁..........................
  38. திராவிடம் என்னும் பதம் வியாசரின் காலத்திலேயே இருந்தது. பீஷ்மர் மூன்று அரசகுமாரிகளையும் சுயம்வரத்தில் இருந்து கவர்ந்து கொண்டு போகும் போது, பீஷ்மரை வெல்ல முடியாது என்று தெரிந்திருந்தும், தங்களின் மரியாதையைக் காப்பாற்றும் முகமாக பீஷ்மரின் பின்னால் ஓடிய அன்றைய பாரததேச அரசர்களில் ஒரு அரசன் திராவிட அரசன் என்று வாசித்ததாக ஞாபகம். பீஷ்மரின் அம்பு பட்டு ஒரு ஓரமாக இவர் விழுந்தார் என்றும் ஞாபகம். இதற்கு முன்னரேயே இன்னொரு அரசனின், சித்ராங்கதன், தேவைகளுக்காக ஆண்கள் பல இடங்களில் இருந்தும் அவருடைய அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் வருகின்றது. பழுப்பு நிறத்தில் இருந்த யவனர்களும், கருமையான நிறத்தில் இருந்த திராவிடர்களும் கொண்டு செல்லப்பட்டார்கள் என்றும் அங்கே இருந்தது என்று நினைக்கின்றேன். மேலே ஆரியம், கீழே திராவிடம் என்று தான் ஆரியர்களின் வருகையின் பின்னர் பாரததேசம் இருந்தது போல. ஆரியத்தையும், அதன் ஊடகமான பிராமணியத்தையும், தேவபாசை என்று அவர்களே சொல்லிக் கொள்ளும் சமஸ்கிருதத்தையும், ஆட்சி மொழி என்று சொல்லிக் கொள்ளும் ஹிந்தி மொழியையும் ஒரே குடையின் கீழ் நின்று எதிர்த்துப் போராடுவோம் என்று தென்னிந்திய மக்களை ஒற்றுமைப்படுத்த இதே கருதுகோளை பின்னாட்களில் சிலர் கையில் எடுத்தனர். அதில் ஒருவர் பெரியார். ஆனாலும், தமிழர்கள் தவிர மற்ற தென்னிந்தியர்கள் ஏன் இந்த திராவிட ஒற்றுமையை முன்வைப்பதில்லை என்ற கேள்வி சரியானதே. திராவிட மொழிகளின் மூலமொழி தமிழ் என்றும், தமிழில் இருந்தே தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வந்தன என்றும், தமிழர்கள் ஒரு முன்னோடிகள் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லப்படும் விடயங்களை வேறு எந்த தென்னிந்திய மக்களும் ஏற்கத் தயாராகவில்லை. இது அவர்களை காயப்படுத்துகின்றது, அந்நியப்படுத்துகின்றது. சமஸ்கிருதம் தான் ஆதிமொழி என்பது எப்படி எங்களை வட இந்திய மக்களிடம் இருந்து அந்நியப்படுத்துகின்றதோ, அது போலவே தான் தமிழ் மொழி தான் ஆதிமொழி என்பதும் மற்றைய தென்னிந்திய மக்களை அந்நியப்படுத்துகின்றது. அதனால் தான் அவர்கள் திராவிடம் என்னும் குடையின் கீழ் வருவதில்லை. இதை விட்டு விட்டால், தமிழ்நாட்டில் எல்லா அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், மிகச் சாதாரண அரசியல் செய்பவர்களே. சிலர் திராவிடம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். இன்னும் சிலர் தமிழ் தேசியம் என்னும் பெயரில் அரசியல் செய்கின்றார்கள். தங்களினதும், தங்கள் குடும்பங்களின் நலன்களையும் தவிர, இவர்களில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு திராவிடம் மீதோ அல்லது தமிழ் மீதோ எந்தப் பற்றும் அறவே கிடையாது. சீமானுக்கும் பற்றில்லை, உதயநிதிக்கும் பற்றில்லை, விஜய்க்கும் பற்றில்லை........................... சீமானின் அரசியல் பரபரப்பு சார்ந்தது. ஈழத்து மருத்துவரின் அரசியலும் அதுவே. ஆனால் இவை பொருளற்றவை. திமுகவிற்கு அவர்களின் கொள்கைத் தலைவரை சீமான் எப்படி இப்படிச் சொல்லலாம் என்பது ஒரு தன்மானப் பிரச்சனை. அதனால் திமுகவினர் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றனர். அதில் ஒன்று தான் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை. ஈழத்தில் எங்களுக்கு தமிழர் என்னும் அடையாளமே எங்களின் நோக்கத்திற்கு, எங்கள் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு, போதுமானதாக இருந்தது. நாங்கள் திராவிடம் என்பதையும், தமிழ் தேசியம் என்பதையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் நலன்களுக்கு ஏற்ப ஆக்கிக் கொண்டதைப் போல ஆக்கவும் இல்லை, அதற்கான தேவைகளும் எங்களுக்கு இருக்கவில்லை. நாங்கள் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறவும் இல்லை.
  39. என்னுடைய கேள்வி மிகவும் சாதாரணமானது. நான் நாறிய இந்திய அரசியல் சாக்கடையில் இருந்து பதில் தேடவில்லை. இயல்பாக எம்மவர்கள் ஏன் அப்படி அடையாளப்படுத்த முனையவில்லை என்றே கேட்டேன். கட்டுரையில் ஜெயவர்த்தனா நம்மை திராவிடர் என்றும் அவர்களை ஆரியர் என்றும் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார்.
  40. அப்ப காத்தான் குடி பொலிஸ் ஸ்ரேசன் மட்டும் மஞ்சந்தொடுவாயில் இருக்கலாமா பாய்? அதுக்கும் பெயர மாற்றுங்களன் செய்யுற முழுவதும் அறப்படிச்ச வேல அதுக்குள்ள கெளரவ குறைச்சல் ஊருக்கு
  41. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை முதல் மூன்று தினங்களுக்கு நடைபெறவுள்ளது. பிளாஸ்ரிக் அற்ற வலயத்தை உறுதிப்படுத்தும் விதமாக இம்முறை கண்காட்சி முன்னெடுக்கப்படவுள்ளது. பொருளாதார முன்னேற்றத்துக்கான வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளுடன் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 15ஆவது ஆண்டாக இந்த வருடமும் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 45 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையிலான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 350க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயம், தொழில்நுட்பம், விருந்தோம்பல், கல்வி, உணவு, நவநாகரிகம் மற்றும் இதர தொழிற்துறைகள் என பல்வேறுபட்ட வர்த்தக நிறுவனங்களின் பொருள்கள் மற்றும் சேவைகள் இம்முறை காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. இம்முறை கூடுதலான நிலப்பரப்பில் கூடுதலான காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுவர்களை மகிழ்வூட்டும் நிகழ்ச்சித் திட்டங்கள் முதல் பல்வேறுபட்ட புதிய ஏற்பாடுகள் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. (ப) சர்வதேச வர்த்தகக் கண்காட்சி முற்றவெளியில் நாளை ஆரம்பம்!
  42. தமிழர்களை பொறுத்தவரை குருக்கள் என்பது சாதியின் (இது சாதியை குறித்து அல்ல) அடிப்படையிலேயே புரிந்து கொள்ள முடியும். பிராமணர் என்றால் அவர் ஐயர். குறிப்பாக ஐயர் இறந்தவருக்கு கிரியை செய்வதில்லை . குருக்கள் என்பது வேறு எந்த சாதியில் வரமுடியும், உரிய தீட்சை மூலம் (அனால், இதில் யதார்த்த சிக்கல்கள், பிரச்சனைகள் சாதி பாகுபாட்டால் இருக்கிறது). இவர்களைத் தான் , இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் (சைவக்) குருக்கள் என்பது. இந்த வேறுபாடு (அதாவது குருக்கள், ஐயர்) - ஐயர் என்பது பெரும் பொறுப்பு, சிறுவயதில் இருந்தே மந்திர பயிற்சி தொடங்கவேண்டும். அதிகாலை (இந்த நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்பது , கிட்டத்தட்ட 4.00 - முதல் சூரிய ஒளி தெரியும் வரை) மந்திர பிரணாயமம் (அதன் முதல் எழுந்து, குளித்து, உடல் (அசைவின் மூலம், கிட்டத்தட்ட யோக போல), மனம், மதி சுத்தப்படுத்தி ஆயத்தம் ஆக வேண்டும் ), உணவு கட்டுப்பாடு வேண்டும். இங்கே நான் (மந்திர) பிரணாயாமம் என்று சொல்வது ஏனெனில், ஒவொரு மந்திரங்களுக்கும் மூச்சு, எங்கே இருந்து எழுவது (அடிவயிற்றில் வயிற்றில், தொண்டையில், குரல் இழையில் ... என்று விதி இருக்கிறது, பொதுவாக இது குறிப்பது மூச்சை (மந்திர) இசையாக்குவது). (முன்பு) பிராமண ஐயர்களின் இருப்பிடம், கிட்டத்தட்ட குருகுலம் போல. அப்போதைய நிலையில் (ஏன் இப்போதும் இலங்கையில்) அவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. இதனால், பரம்பரையாக ஐயர் தொழில் செய்தவர்கள் விலத்துகிறார்கள். அதில் உள்ள பிரச்சனை, பரம்பரையாக வழங்கி வரும் அறிவு மற்றும் அனுபவம் இழக்கப்படுவது. இதை சொல்லி புரிவது கடினம், ஐயர்களின் வாழ்க்கையோடு பழகினால் தான் அதன் யதார்த்தம் புரியும். பொதுவாக் சைவக் குருக்கள் இப்படியாக கிரியை செய்யமுடியாது, ஏனெனில் பயிற்சி இல்லை. (ஒரு நம்பிக்கை இப்போதும் இருக்கிறது - அதாவது பிராமணர் ஏன் விவேகமாக வந்துளார்கள் என்பதற்கு - அதாவது அரசர் காலத்தில் இருந்து, காலனித்துவம் , அதன் பின்னும் பல முக்கிய பொறுப்புகளில் - அவர்கள் செய்யும் மந்திர பயிற்சியால் என்று. இங்கேயும் பல வேறு தளங்களிலும் பிராமணர் தம்மவர்களை கூடி சேர்ப்பது என்ற வாதம் இருந்தாலும், உலகப் புகழ்பெற்ற விவேக மேதைகள் பெரும்பாலும் பிராமண (ஐயர்கள்), அதிலும் மந்திர பயிற்சி செய்தவர்கள், பின் விலத்தியவர்கள்) இறந்தவர் கிரியைக்கு பொதுவாக வருவது, கிரியை செய்வது குருக்கள். அனால், இப்போது வெளிநாடுகளில் (பிராமண) ஐயரும் இறந்தவர் கிரியைக்கு வருகிறார்கள், செய்கிறார்கள். ஆயினும், சிலர் (பிராமண ஐயர்) இறந்தவர் கிரியைக்கு அழைத்தும் வர மறுத்துள்ளதை அறிந்து, கண்டு இருக்கிறேன். (இவர்களில் தமிழ்நாட்டை மற்றும் இலங்கையை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்) இந்துவில் குருக்கள் என்பது, குருஜி என்று வடக்கு இந்தியாவில் அழைக்கப்படுபவர்களுக்கு ஒப்பானது. அனால், அப்படியான இந்து குருக்கள் என்று தமிழரில் பொதுவாக இல்லை.
  43. இல்லை அண்ணா அதிலும் மிகக்கடுமையான சோதனை நடக்கும் இடங்களில் கூட எம்மை (தமிழர்கள்) கண்டால் நீங்கள் போகலாம் என்று கை காட்டி அனுப்பி விட்ட சம்பவங்கள் நிறைய. இதற்கு காரணம் நம்பிக்கை நாணயம் உழைப்பு முயற்சி என்று எம் தலைமுறை விதைத்த பதிவுகள். (அதற்காக உங்கள் தகுதிக்கு மீறிய அதிக விலை சொகுசு கார்களில் சுத்தக் கூடாது. ) ஆனால் இலங்கையில் இது தமிழர்களின் மேல் இல்லாதது தான் அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.
  44. ஆள்கள். இல்லை 🤣. மிக மிக குறுகிய காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர். இந்த உலகில் அர்ச்சுனா ஒருவர் மட்டுமே தான் குறிப்பு,.....கோஷான். இது சீமான் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் 🤣. இல்லை மக்களுடன் தோளில் கை போட்டு நண்பனாகவே பழகுவார்,..... அவருக்கு மழை என்றாலும் மக்கள் குடை பிடிக்கத் தேவையில்லை
  45. சார்வாள்...... ஒருகாலத்தில் நீங்க கொண்டுவந்து இங்கே ஒட்டிய ஈழத்து தமிழ்த்தேசிய கூத்தமைப்பு ரீலாலே கூட ஒருஹைகோர்ட்டும் புடுங்க முடியவில்லை. துடைத்து தூரப்போட்டா விட்டீர்கள் அண்ணன் சீமானுக்கு எந்தவிதத்திலும் சளைக்காத ராஜபக்ஷே 'A ' டீம் வெத்துவாய் வாய்ச்சவடால் சாணக்கியனிடம் கொடுத்தாவது ஒக்சிசன் ஏத்தலாமா என்று அரண்டு கொண்டு திரியலை ...? தமிழ்த்தேசியம் ஈழத்தில் சிதைந்து அதன் கூடாரமே காலி. இந்தியாவில் காப்பாற்ற கிளம்பிவிட்டீர்கள் போல கவலைப்படாதீங்கள் தமிழ்நாட்டுகாரர்கள் ஒன்றும் ஈழ தமிழர்கள் போல முட்டை போண்டாக்கள் இல்லை. ஒன்று சீமானின் ஆதரவாளர்களை விட சீமானின் எதிர்ப்பாளர்கள் தான் சீமானிடம் ரொம்பவும் எதிர்பார்க்கினம். வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.