Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    87988
    Posts
  2. மெசொபொத்தேமியா சுமேரியர்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    8557
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38754
    Posts
  4. செம்பாட்டான்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    1223
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/26/25 in all areas

  1. மூன்று வீட்டில் இருப்பவர் இரண்டு வாரங்கள் வங்கி அலுவலாக வெளிமாவட்டம் சென்றதனால் உடனே வாடகை ஒப்பந்தம் எழுத முடியவில்லை. இரண்டு நாழின்பின் வந்துசேர அவரை வரச்சொல்லிவிட்டு மணிவண்ணனிடம் போகிறேன். ஒப்பந்தம் எல்லாம் எழுதி முடிந்து வெளியே வருகிறோம். “ஏனக்கா அந்தப் பலா மரத்தை வெட்டினீர்கள்? நல்ல பழம். காய்த்துக் கொட்டுற மரம். அதைவிட வீட்டுக்கு நல்ல குளிர்ச்சி” “உங்கள் தங்கைதான் அது பலவருடங்களாகக் காய்க்கவில்லை என்று கூறினா” “அவ என் தங்கை இல்லை. என் அம்மாவைப் பாராமரிப்பதற்கு நான் வைத்திருப்பவர், என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே. அவ வந்து இப்ப ஒரு வருடம்தான்” “நாம் முதல்முதல் வந்தபோது புரோக்கர் உங்கள் தங்கை என்று சொன்னார். அதன் பின்னும் அவ அண்ணா என்றுதான் சொன்னா. நான் நம்பிவிட்டேன்” சரியக்கா என்று அவர் கிளம்ப, அந்தப் பெண்ணுக்கு இரண்டு திட்டுத் திட்டவேணும் என்ற கோபம் எழுகிறது. தீர விசாரிக்காத என் அவசர புத்தியை எண்ணி என்னை நானே நொந்துகொள்கிறேன். அடுத்த நாளே வீட்டுக்குப் போகும்போது ஒரு மீற்றர் உயரமான பலாக்கன்று ஒன்றை வாங்கிச் சென்று வெட்டிய இடத்துக்குப் பக்கத்தில் நட்டு சுற்றிவர தடிகளை ஊன்றி ஆடு கடிக்காதவாறு பாதுகாப்புக் கொடுத்தபின் மனம் சிறிது ஆறுகிறது. அடுத்து வந்த நாட்களில் மிகுதி இடங்களில் இருந்த புற்களை ஆட்களைக் கொண்டு பிடுங்கிவித்து தென்னை மரங்களுக்குத் தாட்டு பாத்திகளையும் கட்டுவிக்கிறேன். ஓர் ஆணுக்கு ஒருநாள் கூலி 3000. பெண்ணுக்கு 2500. இது தோட்ட வேலையோ கடின வேலையோ செய்பவர்களுக்கு. சாதாரணமாகப் புல் புடுங்குபவர்களுக்கு 1400. அத்துடன் காலை 9 மணிக்குப் பின்னர்தான் வேலைக்கு வருவார்கள். அவர்களுக்கு 10.30 - 11.00 க்குள் ஏதும் வடை அல்லது மிக்சரோ முறுக்கோ ஏதோவொன்று கொடுத்து தேனீரும் கொடுக்கவேண்டும். மதியம் உணவையும் கேட்டார்கள். என்னால் சமைக்க முடியாது என்று 500 ரூபாய்கள் மேலதிகமாகக் கொடுத்து அவர்களே கொண்டுவரும்படி கூறிவிடுவேன். இப்படியே மூன்று மாதங்கள் முடிய அவர்கள் தாம் ஒரு வாரத்தில் எழுந்துவிடுவதாகக் கூற எனக்கோ அளவில்லா மகிழ்ச்சி. அதன்பின் இரண்டு மூன்று நாட்கள் தாம் நிற்கமாட்டோம் என்று கூறியதால் நான் வீட்டுப்பக்கம் செல்லவில்லை. நான்காம் நாள் போன் செய்தால் யாருமே போனை எடுக்கவில்லை. அடுத்தநாள் ஓட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தால் வீட்டின் வெளிவாசலில் பூட்டுத் தொங்க, அதில் நின்றபடி அந்தப் பெடியனுக்குத் தொடர்ந்து போன் செய்தபடி இருக்க, என் வற்சப்புக்கு மெசேச் ஒன்று வந்து விழுகிறது. “வீட்டில் இருந்த பெண்ணின் தந்தை கிளிநொச்சியில் நோய் வாய்ப்பட்டு இருக்கிறார். அவர் அங்கே போய்விட்டார். மூன்று நாட்களின் பின்னர் திறப்புத் தருகிறேன்” முதலே எனக்கு அந்த செய்தியைச் சொல்லியிருந்தால் நான் தேவையில்லாமல் வந்திருக்கத் தேவை இல்லை என்று செய்தி அனுப்புகிறேன். அதன்பின் மூன்றாம் நாள் காலை மீண்டும் ஓட்டோக்காரருடன் வந்தால் அப்போதும் பூட்டுத்தான் தொங்குது. திரும்ப போன் செய்ய, திறப்பை இன்ன இடத்தில் வைத்திருக்கு, எடுங்கோ என்று செய்தி வற்சப்பில் வருகிறது. ஓட்டோக்காரர் தேடித் திறப்பை எடுத்து வருகிறார். திறந்துகொண்டு உள்ளே செல்ல, அக்கா மோட்டார் இருக்காது போய் பாருங்கோ என்கிறார். போய்ப் பார்த்தால் மோட்டார் கிடங்கினுள் இல்லை. “எப்பிடி உங்களுக்கு மோட்டர் இருக்காது எனத் தெரிந்தது தம்பி? “அவர்கள் இரண்டு நாட்களும் போன் எடுக்காது உங்களை அலைக்களித்தவுடன் எனக்கு விளங்கிவிட்டுது. பைப்பைத் திறந்து பார்த்தால் தண்ணீர் வருக்கிறதுதான். ஆனாலும் அது எப்ப முடியும் என்று தெரியாதுதானே. எம் மூரில் ஒரு தெரிந்த எலெக்ரீசியன் இருக்கிறார். அவருக்குத் தொலைபேசியில் விபரம் சொல்ல, இன்று வரமுடியாது அக்கா. நாளை வருகிறேன் என்கிறார். வீட்டை நன்றாகக் கழுவிவிட்டுத்தான் உள்ளே பயன்படுத்த வேண்டும். ஆனால் தண்ணீர் இல்லாது இன்று வீட்டில் நின்று பயனில்லை. ஆகவே ஓட்டோவில் உடனேயே திரும்ப வீடு செல்கிறேன். எப்ப வந்தாலும் இங்கு சாப்பிடலாம் என்று மச்சாள் கூறினாலும் சிலவேளைகளில் மட்டுமே நான் அங்கு உண்பது. உண்மையில் கொஞ்சம் சமையலில் இருந்து விடுதலை வரும் என்று நம்பித்தான் லண்டனில் இருந்து வரும்போது நினைத்தது. ஆனால் அன்ரியின் வயது காரணமாக அவர் சமைத்து நான் உண்பது ஏற்புடையதாக இல்லை. காலையில் எழுந்து குளித்துவிட்டு காலை உணவு சமைத்து மதியத்துக்கும் ஏதாவது இரண்டு கறிகளை வைத்துவிட்டு எனக்கு மதிய உணவையும் கட்டிக்கொண்டு சென்று உண்பது தொடர்ந்தது. பஞ்சி வரும் நேரங்களில் மட்டும் காலை உணவை மட்டும் செய்துவிட்டு எனக்கு மதிய உணவு வேண்டாம் என்று கூறிவிட்டு கடைகளில் வாங்கி உண்பதும் சிலவேளைகளில் நடந்ததுதான். அடுத்தநாள் வழமைபோல் எல்லாம் செய்துவிட்டு புதிய பூட்டுகள் மூன்றும் வாங்கிக்கொண்டு செல்கிறேன். எலெக்ரீசியன் தானே மோட்டரை வாங்கி வருவதாகக் கூறி வாங்கி வருகிறார். அவர் மோட்டரை மாற்றும்போது பார்த்தால் கிணற்றினுள் ஒரே பாசியும் தென்னோலைகளுமாக இருக்க, பக்கத்து வீட்டுக்குச் சென்று கிணறு கலக்கி இறைக்க யாரும் இருக்கிறார்களா என்று கேட்க ஒருவரின் தொலைபேசி இலக்கம் தருகிறார். அந்த வீட்டுக்காரியின் பெயர் ரதி. கணவனும் மனைவியும் மட்டுமே அங்கு இருக்கின்றனர். ஆண் பிள்ளைகள் மூவர். திருமானமாகிவிட்டது. இருவர் வெளிநாட்டில். கதைத்துக்கொண்டு போக யேர்மனியில் வசிக்கும் அவரின் உறவினர்கள் எமக்குத் தெரியவருகின்றனர். எனக்கு நல்ல ஒரு துணை அயலில் என்ற மகிழ்ச்சி. அதன்பின் அப்பப்ப அவருடன் சென்று கதைப்பதும் விபரங்களை அறிவதுமாகி நெருக்கமாகிவிடுகிறார் ரதி அக்கா. புதிய மோட்டார் போட்டபின் அடுத்த நாளே கிணற்றைக் கலக்கி இறைக்க இருவர் வருகின்றனர். முன்னர் பலா மரம் வெட்ட வந்தவர்களை தென்னைக்குப் பாத்தி கட்டவும் அழைத்திருந்தேன். அவர்களும் வந்தபடியால் புதியவர்களுடன் நிற்க பயம் ஏற்படவில்லை. முதலில் இரண்டு மணிநேரம் எமது மோட்டறினால் இறைத்துவிட்டு பின்னர் அவர்கள் கொண்டுவந்த மோட்டரைப் போட்டு கலக்கி இறக்கின்றனர். மூன்று பெரிய ஊற்றுகள் இருந்ததனால் மூண்டு வாழைக் குற்றிகளை வெட்டி ஊற்றை அடைத்தபின் பாசிகளை எல்லாம் அள்ளுகின்றனர். அக்கா கிணற்றுக்குள் இரண்டு பாம்பு இருக்கு என்றவுடன் நான் பாய்ந்து ஓடுகிறேன். “ஐய்யோ அக்கா பாம்பு செத்துப்போய் கிடக்கு” “தண்ணீர் குடிக்கத்தான் பாம்பு கிணற்றுள் வந்ததோ தம்பி” இல்லை அக்கா கிணற்றுள் ஒரு ஓட்டை இருக்கு. முட்டையும் இருக்கு. ஏதும் பறவைகள் வந்து இருந்திருக்கும். முட்டையைக் குடிக்கத்தான் பாம்பு வந்து தவறி விழுந்திருக்கும் என்கிறார். ஆக், உந்த செத்தபாம்பு கிடந்த தண்ணியில் தான் தேநீர் ஊற்றிக் குடிச்சதோ என்கிறேன். நல்லகாலம் நான் ஒரு போத்தலுக்குள் இணுவிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து குடித்ததில் மனம் நிம்மதியாகிறது. கிணறு கலக்கி இறைக்க மூன்று மணித்தியாலம். 3000 ரூபாய்கள் தான். அடுத்தடுத்த கிழமைகளில் ஸ்கூட்டியும் வாங்கி ஓடிப் பழகி விழுந்தெழும்பிய கதை முதலே எழுதியாச்சு.
  2. ஐபிஎல் 2025 இன் 06வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் நிலைத்து ஆடாததால் 9 விக்கெட் இழப்பிற்கு 151 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இலகுவான வெற்றி இலக்கை ஆட்டமிழக்காமல் 97 ஓட்டங்கள் எடுத்த குயின்ரன் டிகொக்கின் அதிரடி ஆட்டத்தால் 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 14 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 09 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  3. கெரி ஆனந்த சங்கரிக்கு பிரித்தானியாவில் இவ்வளவு செல்வாக்கு உள்ளதை நினைக்க... தமிழர்களாகிய எமக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 🙂
  4. GMT நேரப்படி நாளை வியாழன் 27 மார்ச் பிற்பகல் 2:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH எதிர் LSG 20 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனவும் மூன்று பேர் மாத்திரம் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சுவி ஏராளன் அகஸ்தியன் இந்தப் போட்டியில் புள்ளிகளை எவர் எடுப்பார்கள்?
  5. என்னப்பா இது ?கிரிக்கட்டை பிரித்து மேயும் வீரப்பையன்,வசீ எல்லோரும் கீழே கிடந்து நசிபடுகினம். நான் கடைசி நேரத்தில் பங்கேடுக்காமல் முதலே வந்திருந்தால் இப்ப செம்பாட்டானைக் கலைத்துக்கொண்டு வந்திருப்பன்.குருட்டு வாய்ப்பில் தெரிவு செய்த என்கு;கு அதிஸ்டம் கைகொடுக்குது போல ஈரோ மில்ல.லியன் இந்த வெள்ளிக்கிழமை 202 மில்லியனாம். இறங்கி அடிக்கிறன் மில்லியனர் ஆகிறன். காசு வேணுமெண்ட ஆட்கள் இப்பவே சொல்லி வையுங்கள்.
  6. தனியார் பள்ளிகளில் (மாநில) அரசு உதவி பெறும் பள்ளிகள் உண்டு. சுயநிதிப் பள்ளிகளும் உண்டு (அதாவது, உயரிய கல்விக் கட்டணம் வசூலித்து நடைபெறுவன. எனவே சுயநிதி என்பது மாணவர் தம் சுயநிதி எனக் கொள்க; பள்ளியை நடத்துவோரின் நிதி அல்ல). அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிகள் மட்டுமே. இந்த இரண்டு மொழிப் பாடங்கள் தவிர ஏனைய பாடங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ நடைபெறும். சுயநிதிப் பள்ளிகளை நடத்தும் தனியார் பெரும்பாலும் CBSE (ஒன்றிய அரசின் Central Board for Secondary Education) பாடத்திட்டத்திலேயே நடத்துகின்றனர். அங்கே மும்மொழி என்ற பெயரில் தமிழ், ஆங்கிலம், இந்தி சொல்லித் தரப் படுகின்றன. சில இடங்களில் சமஸ்கிருதமும் (!!!), ஃபிரெஞ்சும் இருக்கலாம். ஏனைய பாடங்கள் ஆங்கிலத்தில் நடைபெறும். வேடிக்கை என்னவென்றால், எங்கெல்லாம் மூன்றுக்கு மேற்பட்ட மொழிகள் உள்ளனவோ, அங்கே பெரும்பாலான பெற்றோர் தமிழை விடுத்து மூன்று மொழிகள் தேர்ந்தெடுப்பர். கேட்டால், "தமிழ்தான் வீட்டில் பேசுகிறார்களே !" என்ற அறிவார்ந்த பதில் வரும். எந்த மக்கள் திரளிலும் பெரும்பாலானோர்க்குத் தாய்மொழி கூட ஒரு தகவல் பரிமாற்ற ஊடகமே ! சமீப காலத்தில் அரசுப் பணிக்கு - குறிப்பாக அரசு மருத்துவர் பணிக்கு - தமிழ்த் தாள் ஒன்றில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்பதால், போனால் போகிறது என்று தனியார் பள்ளிகளிலும் தமிழ் மொழி கற்போர் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளதாகக் கேள்வி. இந்த லட்சணத்தில் ஒன்றிய அரசுப் பள்ளிகளும் சிலவுண்டு. அவற்றில் தமிழ் ஆசிரியர்களே இல்லை என்பது கூடுதல் தகவல். இதற்கு அந்த அரசை மட்டும் குறை சொல்வானேன் ? பெரும்பாலான பெற்றோர் தமிழை விரும்பத் தயாரில்லையே ! சுருக்கமாகச் சொல்வதானால், மாநில அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களால் மட்டுமே தமிழ்நாட்டில் தமிழ் உயிர்ப்புடன் இருக்கும் (மற்றபடி வெளிநாடுகளில் வாழும் தமிழர்களால் தமிழ் வாழும். எதையோ இழந்தவன்தான் அந்தப் பொருளுக்காக ஏங்குவானோ !) மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் தொழில் சார்ந்து அடுத்து வரும் படிப்புகளுக்கான தயாரிப்பிலேயே கவனம் செலுத்துவதால், பெரும்பாலானோர் எந்த மொழியையும் உருப்படியாகப் படிப்பதில்லை. எனவே அந்த வேற்று மொழிகளின் தாக்கத்தினால் தமிழ் தேய்ந்து விடப் போவதில்லை என்ற அற்ப மகிழ்ச்சியுண்டு. தாய்மொழி குறித்த சாமானியரின் மனநிலையை வைத்து முன்னர் ஒரு கட்டுரை எழுதியதுண்டு. இங்கு அது ஓரளவு பொருந்தி வரலாம் :
  7. பொய் சொன்னாலும்... பொருந்தச் சொல்ல வேணும் சித்தார்த். மற்றவனை... கேனையன் என்று நினைத்துக் கொண்டு, சும்மா சகட்டு மேனிக்கு... அடித்து விடப் படாது. ஒரு விண்ணப்பப் படிவத்தை ஒழுங்காக நிரப்பத் தெரியாத உங்களுக்கு பதவி சுகம் கேட்குதோ... 🤣
  8. அவர்களை எதுவும் செய்ய விடாமல் தடுப்பது இந்தியா என்ற நந்தியும், எம்மவர்களில் சிலரும் தான்…!
  9. அங்கேயும் புகையுது என்றால்.., இங்கேயுமா. புகை உடம்புக்கு ஆகாது கண்டியலோ. பாத்து சூதானமாக இருந்துக்கங்க. அதுசரி.... அடுத்த போட்டியில, நீங்களும் நானும் ஒரே தெரிவு. சேர்ந்து பார்க்கலாம்.
  10. இஞ்ச... இப்பிடி எல்லாம் மனுசன மாட்டிவிட்டுடாதீங்க. எவ்வளவு கணக்குப் போட்டு முதல் ஜந்து போட்டியையும் வென்றிருக்கிறன். நீங்கள் வேற (இப்பிடி சொல்லத்தான் ஆசை). எங்கேயோ புகையிற மணம் வருது. எதுக்கும் பாத்து. 🤣
  11. "எங்கே எனது ஒளி" & "காளையை அடக்கு கன்னியை மடக்கு " "எங்கே எனது ஒளி" எங்கே எனது ஒளி சொல்வாயோ அங்கே எனக்கு இடம் வேண்டும் மங்காத ஒளியாய் வெண் பிரம்பு ஏங்கும் இதயத்துக்கு ஒரு வழிகாட்டி சங்கு ஊதி வழிகாட்டுவது போல தங்கக் கோல் குருடனின் வெளிச்சம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .................................................................. "காளையை அடக்கு கன்னியை மடக்கு " காளையை அடக்கு கன்னியை மடக்கு மாலையை அணிந்து தாலியைக் கட்டு மேளத்தைத் தட்டி ஊர்வலம் செல்லு கோலத்தைப் போட்டு பொங்கலைப் பொங்கு! சிவப்புத் துணியை கையில் ஏந்து மஞ்சள் நிலாவில் மார்பில் சாய கருத்த எருதின் திமிலைப் பிடி வெள்ளை நெற்றியில் திலகம் இட! இடுப்புச் சிறுத்தவளை பரிகாசம் செய்தவளை இறுமாப்பு கொண்ட மண்டை பெருத்தவளை ஏறுதழுவி வெற்றி கண்டு மடக்கு வீறாப்பு விட்டு வந்திடுவாள் உன்னுடன்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  12. சில வருடங்களிற்கு முன்னர் "பத்து ரூபாய் கடை" என்று அழைக்கப்பட்ட சிற்றுண்டிச்சாலை தான் இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை." பொருட்களின் விலை ஏற்றத்துக்கு பின்னரும் மிகவும் மலிவாகவே சிற்றுண்டிகளினை விற்கிறார்கள். யாழ் இந்துக்கல்லூரிக்கு அண்மையில் உள்ள றவுண்ட போட்டுக்கு பக்கத்தில் உள்ளது இந்த "மாருதம் சாப்பாட்டுக் கடை." பொது மக்கள், மாணவர்கள் முதல் அரச, தனியார் நிறுவன அதிகாரிகள் வரை பலதரப்பட்ட மக்களும் வந்துபோகும் ஓர் இடம். 🥙பூந்தி லட்டு முதல் சமோசா வரை சிற்றுண்டிகள் தேநீர், சர்பத், நெல்லிகிரஸ் இட்லி, இடியப்பம், புட்டு, தோசை போன்றனவும் பரோட்டாவும், தற்போது இரவினில் மரக்கறி கொத்தும் கிடைக்கின்றது. கடை முதலாளியான நண்பர் ஜீவன் அண்ணாவிடம் "லாபத்தினை கொஞ்சம் கூட வைச்சு விற்கலாமே" எண்டு கேட்டதற்கு.. 🍳"இந்தக் கடைக்கு எல்லா தரப்பு மக்களும் வாறவை லாபத்தினை அதிகமாக்கினால் நம்பி வாற கஷ்டப்பட்ட சனம் பாவம் எண்டு சொன்னார்." 🥘அது மட்டும் இல்லை, புகையிலை பொருட்களை ஏன் நாம் விற்கவில்லை, என்று இந்தக் கடை நடத்துபவர்கள் காட்சிப்படுத்தியிருக்கும் காரணங்கள் அவர்கள் இந்த இளைய சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையினையும் காட்டி நிற்கின்றது. 🍲இப்படி சமூக அக்கறையுடன் குறைந்த லாபத்தில் தொழில் செய்வோரை நாமும் எம் மக்களிற்கு அடையாளம் காட்டுவோம். 🍛உங்களுக்குத் தேவைப்படின் நேரடியாகவே கடைக்கு சென்று அங்குள்ள சிற்றுண்டிகளினை சாப்பிட்டுப் பார்த்தது பிடித்திருந்தால், முன்கூட்டியே ஓடர் செய்து பெற்றுக்கொள்ளலாம். தொடர்புகளுக்கு : 077 275 9799 வேலைக்கு ஆட்கள் தேவை என்றும் கடைக்கு வெளியே போட்டிருக்கிறார்கள். வேலை தேவைப்படுவோரும் தொடர்புகொள்ளவும்.. Copy post https://www.facebook.com/share/p/1H1Lgi63e7/
  13. புல‌வ‌ர் அண்ணா நீங்க‌ள் சொன்ன‌ ப‌ழ‌மொழிய‌ உங்க‌ளுக்கே சொல்லுகிறேன் நான் உப்பு விக்க‌ போனால் ம‌ழை பெய்யுது , மா விக்க‌ போனால் காற்று வீசுது 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁 இப்ப‌ 6 போட்டி முடிந்து விட்ட‌து இன்னும் 67 போட்டி இருக்கு அதில் குருட் ல‌க் வேலை செய்தால் புள்ளி கிடைக்கும் , என் 4ல‌ தாண்டினால் பிற‌க்கு என‌க்கு ஏறு முக‌ம் தான்🥰😍.....................ந‌ட‌ந்து முடிந்த‌ அனைத்து விளையாட்டிலும் நாண‌ய‌த்தில் வென்ற‌ அணிக‌ள் ப‌ந்து வீச்சை தெரிவு செய்து 4 மைச்சை வென்று இருக்கின‌ம் ப‌ந்து வீச்சை தெரிவு செய்த‌ அணி 2மைச் தோத்து இருக்கின‌ம்...................போட்டி இர‌வு நேர‌ம் ந‌ட்ப்ப‌தால் ப‌னிப் பொழிவு மைதான‌த்தில் அதிக‌ம் விளையாடும் அணிக‌ள் எத்த‌னை ர‌ன்ஸ் அடிப்பின‌ம் என்று க‌ணிப்ப‌து சிர‌ம‌ம் இப்ப‌ கிடைக்காத‌ புள்ளிக‌ளை கேள்வி 72க்கு பிற‌க்கு ச‌ரி செய்ய‌லாம் , நான் தெரிவு செய்த‌ வீர‌ர்க‌ள் அணிக‌ள் சாதிச்சால் , 3 புள்ளி , 5 புள்ளி அதில் பெற‌லாம் , என‌க்கு அதில் ந‌ம்பிக்கை இருக்கு அண்ணா லொத்த‌ரில் வென்றால் இந்த‌க் கால‌த்தில் கோடி காசு வைச்சு இருந்தாலும் க‌ம்ம‌ன்ன‌ இருக்க‌னும் அண்ணா ஏன் என்றால் நாங்க‌ள் வாழும் உல‌க‌ம் ஆவ‌த்தான‌ உல‌க‌ம் காசுக்காக‌ எதையும் செய்வின‌ம் லொத்த‌ரில் வென்றால் அது உங்க‌ளுக்குள் ம‌ட்டும் இருக்க‌னும் அண்ணா அப்ப‌ தான் சேவ்ரி.........................
  14. இதுவரைகலாம் நடைபெற்ற T20 போட்டிகளில் இந்தியா மைதானங்களில் ஹைதராபாத் அணியின் ராஜீவ் காந்தி மைதானம் ஒரு ஓவருக்கு 9.7 ஒட்டங்கள் பெற்று முதல் இடத்தையும் பெங்களூரூ அணியின் சின்னசாமி மைதானம் ஒரு ஓவருக்கு 9.2 ஓட்டங்களையும், 3 வதாக டெல்லி அணியின் விசாகப்பட்டினம் மைதானம் இடம் பிடித்து இருக்கிறது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் தலா 2 இடங்களில் சொந்த மைதானங்களில் இம்முறை விளையாடுகிறது இன்று இரவு லக்னோ அணியுடன் SRH அணி ராஜிவ் காந்தி மைதானத்தில் விளையாடுகிறது. மறுபடியும் வழமைபோல இம்மைதானத்தில் அதிக ஓட்டங்கள் கிடைக்குமா என்பது இன்று தெரியும்.
  15. செம்பாட்டானுக்கு எட்டு அடுக்குப் பாதுகாப்பு 😆 பத்துப்பேர் கொண்ட அணி 🤣 யாரும் இப்போது அவரை பதவியில் இருந்து அசைப்பது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது😉
  16. இது என்ன alvayan 🙏 இங்கே நீங்கள் யாரையும் நோகடிக்கவில்லை நானும் பம்பலாகத்தான் எழுதினேன் என்ரை தமிழ் வகுப்பிலை பொடி பெட்டையள் அடிக்காத நக்கலா,,,, விடாத நளினமா... வாங்கோ கப்பைத் தூக்கும் வரை சேர்ந்தே இந்தத் திரியில் கலந்திருப்போம்
  17. பெரும்பாலும் மைதான ஈரலிப்பினை பொறுத்தே முதலாவதாக பந்து வீசுவதா இல்லையா என தெரிவு செய்கிறார்கள், ஆனாலும் வேறு பல காரணிகள் அதனை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இரட்டை தன்மை கொண்ட ஆடுகளங்களில் கூட ஆரம்ப ஓவர்களில் பந்து புதிதாக இருக்கும் போது பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும், அதனால் பந்து புதிதாக இருக்கும் போது அடித்தாடுவது வசதியாக இருக்கும் ஆனால் உய்ரிப்பான ஆடுகளங்களில் நிலமை நேர்மாறாக இருக்கும் ஆடுகளத்தில் உள்ள புற்கள் பந்தில் தரையில் படும் போது அதிகமான மாற்றங்களை துடுப்பாட்டக்காரர்கள் முகம் கொடுக்க வேண்டும். இந்த ஆடுகளம் fresh pitch ஆக இருந்தது (புற்கள் காணப்பட்டது), இதுவும் ஒரு காரணம், அத்துடன் மைதான ஈரலிப்பினை எதிர்பார்த்தார்கள் (ஆனால் பெரிதாக மைதான ஈரலிப்பு காணப்படவில்லை), அது பந்தினை பிடிப்பது கடினமாக இருக்கும் இரண்டாவது பந்து வீசும் அணிக்கு அத்துடன் ஆடுகளத்தில் பந்து வழுக்கி மட்டைக்கு இலகுவாக வரும். ஆனால் மைதான ஈரலிப்பு இல்லாவிட்டால் மைதானம் மேலும் மெதுவாகி விடும் (பொதுவாக 10 ஓட்டங்கள் குறைவாகி விடும்). ஆனால் இன்றைய போட்டியில் நாணய சுழல்ற்சி எந்த வித தாக்கத்தினையும் செலுத்தவில்லை என கருதுகிறேன்.
  18. அருகில் உள்ள பங்களதேஸ் பிரதமரை இன்னும் மோடி சந்திக்கவில்லையாம் சந்திக்க மாட்டேன் என அடம் பிடிக்கின்றாராம் (இந்திய கொள்கை வகுப்பாளர்களின் விருப்படி) ஆனால் தோழர் அனுராவுக்கு செங்கம்பள வரவேற்பு ....திருகோணமலையை தம் வசப்படுத்த தீயா வேலை செய்யினம் இந்தியா கொள்கை வகுப்பாளர்கள்...
  19. பிரச்சனைகளுக்கு காரணம் சொல்ல தேசிய மக்கள் சக்திக்கு (ஜேவிபி இற்கு) விலங்குகள் வரிசைக்கட்டிக் கொண்டு வருகின்றன. முதலில் குரங்குகள், பிறகு தெரு நாய்கள், இப்ப முதலைகள் என்று வரிசை கட்டிக் கொண்டு வருகின்றன. நுளம்புகளும் தம் பங்குக்கு சிக்கன் குனியா, டெங்கு என்று அடுத்த வரிசையில் வந்து நிற்கின்றன. இவற்றை காரணம் காட்டியே 5 வருடங்களை ஓட்டி விடுவார்கள் போலிருக்கு. @putthan இந்த பக்கம் வரவும். வந்து இந்த இடதுசாரிகள் பற்றி நறுக்கென்று நாலு வார்த்தை எழுதுங்கோ,
  20. உயர்தரமான சத்துள்ள காலை உணவு ............! 👍
  21. ஏற்கனவே வீட்டிலை ஒரே திட்டு.....பிறகு இஞ்சை வந்து திட்டு எண்டால் மனது தாங்காது தானே.🤣 அதுசரி இப்ப உங்கட குக்கிங் பேய்க்காட்டுகள் ஒண்டையும் காணேல்ல. கை விட்டாச்சா? 😎
  22. இன்று KKR வெல்லும்! 152 ஓட்டங்களை எடுப்பது ஈஸி!
  23. எல்லாம்... வியாபாரம் ஆகி விட்ட உலகில், இப்படி ஒரு நல்ல உள்ளம்... சேவை மனப்பான்மையுடன் கடை நடத்துவது ஆச்சரியமாக உள்ளது. நானும் மதிய உணவாக இந்தக் கீரை வடையை சாப்பிட்டுள்ளேன். கோதுமை மாவில் செய்திருந்தாலும்... அதற்குள் போட்டுள்ள கீரை, பச்சை மிளகாய் போன்றவை நல்ல ஒரு சுவையை கொடுக்கும்.
  24. ஹரி ஆனந்த சங்கரி... இப்ப வெளியிட்டது ட்ரெய்லர். 😂 அடுத்து வர இருப்பது மெயின் பிக்சர்... கோத்தா, மகிந்த, சரத் வீரசேகரா எல்லாருக்கும் தடை வரும்போது... இன்னும் கதறப் போகிறார்கள். 🤣
  25. நீதி அமைச்சராக கனடாவில் பதவியேற்று ஒரு சில நாட் களிலேயே கரி ஆனந்தசங்கரி இன்னும் என்னவெல்லாம் செய்ய போகிறார் என நினைக்கும் போது நெஞ்செல்லம் பட பட என அடிக்கிறது.🙂
  26. புலம்பெயர்ந்த பலரும் சரியான ஏமாளிக்களாகத்தான் இருக்கிறோம். கணனியில் எழுதும்போது அச்சொட்டாக சொற்கள் வாராதுதானே. எத்தனை என்று திருத்துவது.
  27. பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கெரி ஆனந்த சங்கரி உள்ளதாக குற்றச்சாட்டு! நாட்டின் பாதுகாப்பு முன்னாள் பிரதானிகளுக்கு பிரித்தானியா தடை விதித்ததன் பின்னணியில் கனடா மற்றும் அந்த நாட்டின் நீதியமைச்சர் கெரி ஆனந்த சங்கரியின் அழுத்தம் காணப்படுவதாக முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பு கூற வேண்டும் என குற்றம் சுமத்தி நான்கு இலங்கையர்களுக்கு எதிராக பிரித்தானியா தடை விதித்துள்ளது. இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரால் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே பிரித்தானியா இந்த தடையை விதித்துள்ளது. இது தொடர்பில் எமது செய்திச் சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது கலாநிதி தயான் ஜயதிலக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கனடாவின் புதிய நீதியமைச்சர் கெரி ஆனந்தசங்கரி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இன அழிப்பு இடம்பெற்றதாக கனேடிய நாடாளுமன்றில் யோசனை ஒன்றை முன்வைத்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய அரசியல்வாதியாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இது முற்றிலும் இராஜதந்திர ரீதியான தாக்குதலாகும். எனவே, இலங்கை வெளிவிவகார அமைச்சு பிரித்தானிய உயர்ஸ்தானிகளை அழைத்து இது தொடர்பில் வினவியிருக்க வேண்டும் என முன்னாள் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். https://www.hirunews.lk/tamil/401147/பிரித்தானியா-தடை-விதித்ததன்-பின்னணியில்-கெரி-ஆனந்த-சங்கரி-உள்ளதாக-குற்றச்சாட்டு
  28. அந்தப்பிள்ளை ஆட்டுக்கு குழை, விறகுக்கு கொப்பு அடுக்குப்படுத்தி தறிக்க சொல்லிச்சு. தறிக்கிறவர்கள் கூலி, விறகு வியாபாரம். எல்லோரும் சேர்ந்து அம்மணியின் தலையில மிளகாய் அரைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொத்துக்களை யாரும் அனுபவிப்பதை விரும்புவதில்லை, அதனாலேயே என்னவோ, பாடுபட்டு வீட்டைப்பராமரிப்பவர்களை திடுதிப்பென்று வந்து எழுப்பிவிடுகிறார்கள் சில புலம்பெயர்ந்தோர். எல்லாவற்றிற்கும் அனுபவம் வேண்டும். தங்கச்சியின் கணவரோடு ஆலோசித்து செய்திருக்கலாம். பலாக்கன்று வாங்கி நடலாம், அது வளர்ந்து வர எவ்வளவு காலம் எடுக்கும்? இன்னும் என்ன என்னத்தை கொண்டு போய்ச்சேர்க்கப்போகிறார்களோ? பயமாய் கிடக்கு.
  29. இது வந்து கஸ்தூரியார் வீதி மற்றும் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் முடிவில் உள்ள வட்டப்பாதையின் அருகில் எங்காவது இருக்கலாம் என நினைக்கின்றேன். தொடருங்கள் உங்கள் சேவையை ... வாழ்த்துக்கள் நாங்கள் படிக்கும்போது KKS வீதி மற்றும் கல்லூரியின் வழிபாட்டு மண்டபம் சந்திக்கும் சந்தியில் ஒரு உணவகம் இருந்தது சாப்பாடும் மலிவு வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவுகளையும் அங்கெ கொண்டு சென்று அருந்தலாம் முதலாளி ஒரு நல்ல இதயம் படைத்த மனிதர்
  30. அப்பிடி எல்லாம் கனடாவைக் கைவிட்டுவிடமாட்டம்! இந்த முறை லிபரல்காரரை வீட்டுக்கு அனுப்புறம் கொன்சர்வேட்டிவ்காரரை ஆட்சியில் அமர்த்துறம். கர்பன் டக்ஸ் கார்ணிக்கு நல்லதொரு பாடம் புகட்டுறம்!😎
  31. புலம் பெயர்ந்த பிரதேசங்களில் கிடைக்கும் ஆனால் தாயகத்தில் கஸ்டம் தான்...போல இருக்கு ... மடகஸ்கர்,சிசெல்ஸ்,யூனியன் டெரிட்டரி,சில ஹரிபியன் தீவு நாடுகளில்,தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளில் 400 வருடங்களுக்கு முதல் குடியேரிய தமிழர்கள் சில நாட்டுபுற தெய்வங்களை இன்னும் வழிபடுகின்றனர் ..அவர்களுக்குள் கல்வியாளர்களும் அடக்கம்...ஆனால் தமிழர் பிரதேசங்களில் (தமிழ் நாடு உட்பட)கிராமப்புற வழிபாடு மாறி பெரும் தெய்வழிபாடு மற்றும் கொப்பரேட் சாமிகளின் வழிபாடு அதிகரித்து வருகிறது .... அதுபோல நம்ம வடை ,போண்டா,சூசியம் எல்லாம் 400 வருடங்களின் பின்பும் சிட்னியில் கிடைக்க எம்பெருமான் சிட்னி நாயகன் முருகன் குருஞ்சி குமரன் அருள் பாலிக்க வேண்டும்🤣
  32. போனால் ஒருமுறை சாப்பிட்டுப் பார்த்துடலாம் . இதற்காக நான் அலையாத இடமில்லை... சமோஷா,பூந்திலட்டு போன்ற வட இந்திய உணவுகளை ஏன் விற்பனை செய்கின்றனர் .🤣 எங்கு போனாலும் இதே மயம் ...புரியாணியும் கொத்து ரொட்டியும் ....வாழஇலையில் ..ஒரு சாப்பாடு சாப்பிட தேடித்திரிந்து அந்த ஆசை நிறைவுறாமலே வந்து சேர்ந்தேன்
  33. முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள் 23வது இடத்தை தம்பி ஏற்றுக் கொண்டு @ஏராளன் சுமைதாங்கியாக உள்ளார்.
  34. இவ்லோகத்திலே என்ன நடந்துகொண்டு இருக்கின்றது என்பது அடியேனுக்குப் புரியவில்லை. ஞான் தெரிவில், முதல் ஜந்துமே சரியாக. இப்பிடியே போனால் இந்த பிஞ்சு மனசு தாங்குமா. ஆனால் சுகம்மா இருக்கு இப்பொழுது எல்லோரும் வரிசை கட்டி வரலாம். அங்க இங்க பட்டுடும். கவனமாப் பாத்து வாங்க. ஒரு மாற்றத்துக்கு பஞ்சாப் என்ன செய்தவை என்று சொல்லிப் பாருங்க. மனதுக்கு இனிமையா இருக்கும். 🥰 உங்களுக்கு சசாங்க் சிங்கப் பற்றி தெரியேல போல. போன வருட ஜபில்லில் என்ன செய்தார் என்று பார்த்தா எல்லாம் புரியும்.
  35. நான் அங்கு நின்ற ஆறு மாதகாலத்தில் நடந்தவற்றை மேலோட்டமாக முன்னர் எழுதியிருந்தேன். அதனால் எழுதாமல் விட்ட சிலதை இப்ப எழுதினாலத்தான் ஒரு தொடர்ச்சி வரும் என்பதனால் எழுதுகிறேன். வீடு எல்லாம் எழுதி முடிந்து கணவரும் சென்ற பிறகு ஒரு வாரம் செல்ல, அடுத்தநாள் காலை வாங்கிய வீட்டுக்குச் செல்கிறேன். தாயும் அந்தச் சகோதரியும் நிற்கின்றனர். நான் வளவைச் சுற்றிப் பார்க்கிறேன். நாம் வாங்கும்போது இருந்ததைவிட வளவு குப்பையாக இருப்பதுபோல் எனக்குத் தெரிகிறது. வீட்டுடன் சேர்ந்து ஒரு பக்கத்தில் இரண்டு தூண்கள் எழுப்பி ஓடு போட்டபடி ஒரு இடம். அதைக் கடந்துதான் வெளியே உள்ள டொயிலெட்டுக்குப் போகவேண்டும். அந்தத் தூண்களில் இரண்டு மறி ஆடுகள் கட்டப்பட்டிருக்கு. மூன்று குட்டிகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றைப் பார்க்க ஆசையாக இருந்தாலும் ஆடுகள் கட்டியிருந்த இடம் பார்க்க அருவருப்பைத் தருகின்றது. ஆடுகள் முந்தி இருக்கேல்லையே. எப்ப வாங்கியது என்கிறேன். கன நாட்களாக வளர்க்கிறோம். நீங்கள் வீடு பார்க்க வந்தபோது வெளியே உள்ள வளவில மேயவிட்டனான். அம்மாவுக்கு ஆட்டுப் பால் தான் கொடுக்கிறது என்கிறார் சகோதரி. நாம் முதல்முதல் வந்தபோது ஒவ்வொன்றாகப் பார்க்கவில்லை. பார்க்கத் தோன்றவுமில்லை. நாம் வந்து பார்த்த முதல் நாள் இரு மருங்கும் செவ்வரத்தம் கன்றுகள் சடைத்து நின்றன. இப்போது பார்த்தால் அவை எல்லாம் ஆடுகள் கடித்து மொட்டையாகத் தடிகள் மட்டும் நிற்கின்றன. ஏன் தங்கச்சி ஆடுகடிக்க விட்டீர்கள் என்றதற்கு சின்னக் குட்டிகள் தானே இன்னும் கட்டத் தொடங்கேல்லை என்கிறார். வீட்டுக்குள்ளே சென்று பார்க்கலாமா என்கிறேன். ஓம் போய் பாருங்கோ என்று கூற ஒவ்வொரு அறையாகப் பார்த்துக்கொண்டு வர மூன்றாவது அறையில் இரண்டு கதவுகள் தெரிகின்றன. வெளிப் பக்கம் ஒன்று. உள்ளே இருந்து திறப்பதற்கானது அடுத்தது. நான் மின்விளக்கைப் போட்ட உடன் அறையில் அங்காங்கே ஆட்டுப் பிழுக்கைகள் தெரிய என்ன தங்கச்சி இது என்கிறேன். சின்னக் குட்டி எண்டதால அவை உள்ளேயும் வந்து படுக்கிறவை என்று சாதாரணமாகக் கூற, வீடு பழுதாப் போயிற்றுது உங்கள் வேலையால் என்று நான் கோபமாய்க் கூறுகிறேன். இன்னும் மூன்று மாதத்தில நாங்கள் போயிடுவம் என்கிறார் சகோதரி. இனிமேல் ஆடுகளை உள்ளே விடவேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினாலும் அவர்கள் அதைக் கடைபிடிக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிய, எதுவும் பேசாது வெளியேறுகிறேன். அதன்பின் ஒரு வாரம் தென்னைகள் தறித்து வளவைச் சுத்தம் செய்து முடிய பின்னர் உயிர் வேலிகளைத் தறித்துவிட்டு தகரவேலி அடைத்துவிட்டு, இருந்த கிழுவைகளை பின்பக்க தகர வேலியின் உள்ளே அரை அடி தள்ளி ஊன்றும்படி சொல்ல முன்னர் தென்னை தறிக்க வந்த இருவருமே அந்த வேலையையும் செய்கின்றனர். தென்னைகள் எவற்றுக்கும் ஐந்து ஆண்டுகளாகத் தண்ணீரே விடவில்லை. மழைத் தண்ணீர் மட்டும்தான். அதனால் செழிப்பற்று இருக்கு. புற்கள் மட்டும் பெரிதாக வளர்ந்திருக்கு. பலதும் முட்கள் உள்ள செடிகளாகவும் இருக்கு. அதனால் வேலைக்கு வந்த இருவருமே இரண்டு நாட்கள் பெரிய புற்களைச் செதுக்கி முடிக்கின்றனர். வீட்டின் ஒரு பக்கம் கிட்டத்தட்ட நான்கு பரப்பு நிலம் தோட்டம் செய்யக்கூடிய நிலையில் இருக்கு. ஆனால் ஒருமிளகாய்க் கன்று கூட அவர்கள் நட்டிருக்கவில்லை. அந்த நிலத்தை உழவு இயந்திரத்தினால் உழுதுவிடு என்று கணவர் கூற 6000 ரூபாய்க்கு ஒருவரைக் கூப்பிட்டு உழுதால் மண் சம நிலைக்கு வரவில்லை. அவரிடமே சிறிய மண்ணைச் சமப்படுத்தும் இயந்திரம் இருக்கிறதா என்று கேட்க தன்னிடம் இல்லை என்று வேறு ஒருவரை ஒழுங்குசெய்து தருகிறார். அவருக்கு 4000. அதில் ஏதாவது பயிர் வைப்போமா என்று கணவருடன் கதைத்தால் அது நாங்கள் போய் இருக்கும்போது வைக்கலாம் என்கிறார். பின்பக்கம் முழுதும் வாழைகள். அதுவும் பாராமரிக்கப்படாமல் இருக்கு. அவர்கள் வீட்டை விட்டு எழும்பும் மட்டும் பேசாமல் இரு என்கிறார் மனிசன். வீட்டின் பின்பக்கம் ஒரு பெரிய பலாமாரம். வலது பக்கத்தில் இன்னொரு பெரிய பலாவும் மாமரமும். நான் ஊஞ்சல் ஆடியபடி அந்த சகோதரியுடன் கதைத்துக்கொண்டு இருக்கிறேன். “இந்தப் பலாமரத்தையும் தறியுங்கோ அன்ரி” “ஏன் நல்ல வடிவாத்தானே இருக்கு மரம்” “இல்லை அன்ரி. மரம் உள்ளால கோறையாப் போச்சு. வீட்டுக்குமேல சரிஞ்ச விழுந்தால் உங்களுக்குத்தான் வீண்செலவு” “மரத்தைப் பார்த்தால் அப்பிடித் தெரியேல்லையே” “மரம் ஒரு காய் கூட இப்ப ஐந்தாறு வருஷமாக் காய்க்கவுமில்லை” நான் இறங்கிப் போய் மரத்தைச் சுற்றிப் பார்க்கிறேன். "பெரிதாக கோறையானமாதிரித் தெரியவில்லையே” “உங்களுக்கு வெளியில தெரியாது. உள்ளுக்குள்ள சரியாப் பழுதாக்கி இருக்கும். நான் சொன்னதைச் சொல்லீற்றன். உங்கடை வீடு. உங்கடை விருப்பம்” அடுத்தநாள் தென்னை தறித்தவர்களைக் கூப்பிடுகிறேன். என் நண்பரின் அம்மா வீட்டில் வேலை பார்ப்பவர்கள் என்பதால் அவர்கள் மேல் கடும் நம்பிக்கை. “இந்தப் பிலாமரம் கோறை பத்திக் கிடக்கு என்று அந்தப் பிள்ளை சொல்லுறா. ஒருக்காப் பாருங்கோ தம்பியவை” “ஓமம்மா. வெட்டுறதுதான் நல்லது” “கனகாலமா காய்கவும் இல்லையாம். சரி அப்ப வெட்டுங்கோ” “மரத்தை எங்கையம்மா போடுறது” “வெட்டுங்கோ முதல்ல பிறகு ஆரன் விறகுக்குக் கேட்டால் குடுப்பம்” “நான் பெரிய துண்டுகளைக் கொண்டு போகட்டே” “எப்பிடிக் கொண்டு போவியள்” “லான்ட்மாஸ்டர் கொண்டுவந்து ஏத்துவம்” “கொண்டுபோய் என்ன செய்வியள்? லாண்ட்மாஸ்டர் பிடிக்கிற காசுக்கு அங்கினையே விறகுகள் வாங்கிப்போடலாமே” “இப்ப விறகு சரியான விலையம்மா” “பிலாவிலையளையும் சின்னக் கொப்புகளையும் நான் எடுக்கிறன் அன்ரி. பிலாவிலை ஆடுகளுக்கு நல்ல சத்து, நல்லாப் பால் சுரக்கும்” எனக்கு உள்ளுக்குள் சரியான மகிழ்ச்சி. தானாகவே வளவு சுத்தமாகுதே என்று. பலாமரம் வெட்டி முடிந்து அவர்கள் மரங்களைத் துண்டுபோட்டு லாண்ட்மாஸ்டரில் ஏற்றிக்கொண்டு இருக்கும் போது என் ஓட்டோ வருகிறது. “ஏனக்கா உதை வெட்டினனீங்கள்? ஓட்டோக்காரர் கேட்கிறார். கோறையாயிற்றுது என்று இவ சொன்னா. அதோடை காய்கிகிறதும் இல்லையாம். என்கிறேன். அவர் சென்று மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அவசரப்பட்டிட்டியள் அக்கா என்கிறார். எனக்கும் ஏதோ ஒருமாதிரி இருந்தாலும் மரம் வெட்டியாச்சு இனி ஒண்டும் செய்ய ஏலாது என்று மனதைத் தேற்றிக்கொள்கிறன். ஓட்டோவில் செல்லும்போது அவங்கள் பலாமரத்தைக் கொண்டுபோய் நல்லவிலைக்கு விப்பாங்கள். அதுதான் அவங்களும் சேர்ந்து வெட்டியிருக்கிறாங்கள் என்கிறார். சரி விடுங்கோ. காய்க்காத மரத்தை வச்சிருந்து என்ன பலன் என்கிறேன். மேலால கொஞ்சத்தை வெட்டியிருந்தாலே காய்க்குமே அக்கா. சரி வெட்டியாச்சு. இனிக்கதைச்சுப் பிரயோசனம் இல்லை. வாற கிழமையே ஒரு பலக் கன்றை நடுவம் என்று கூறுகிறேன்.
  36. சவுக்கு வேற லெவல்.. இந்திய அளவில் எடுத்து செல்றாப்ள இந்த பிரச்சினையை.. சவுக்கின் நல்ல ஆங்கில புலமையும் உம் அதற்கு உதவுகிறது.. ஒரு பத்தாம் வகுப்பு மட்டுமே பாஸ் ஆன சாதாரண கிளார்க்கின் சட்டப்புலமை,மொழிப்புலமை, விடய அறிவுகள் பிரமிக்கவைப்பவை.. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது இவை எவற்றையும் அவர் பாட்சாலையோ பல்கலைக்கழகமோ சென்று கற்கவில்லை.. தானாக புத்தகங்களை படித்து கற்றுக்கொண்டது.. இது பல்கலை போகவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு inspiring story..
  37. இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களுக்கு இங்கிலாந்து இன்று தடை விதித்துள்ளது. உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு காரணமாக கருதப்படும் இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் சார்பாக விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட துணை இராணுவப் படையான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) குழுவைத் தலைமை தாங்கிய முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவத் தளபதி ஆகியோர் இன்று இங்கிலாந்தால் தடைசெய்யப்பட்ட நபர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்கள் இதன்படி, இலங்கை ஆயுதப்படைகளின் முன்னாள் தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்யா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் இராணுவத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரின் போது செய்யப்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவதையும், தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் கலாசாரத்தைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஒற்றுமை இதேவேளை இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் மனித உரிமைகள் தொடர்பாக இணைந்து பணியாற்ற இங்கிலாந்து உறுதிபூண்டுள்ளதுடன் தேசிய ஒற்றுமைக்கான இலங்கையின் உறுதிப்பாடுகளை வரவேற்பதாக கூறப்பட்டுள்ளது. இலங்கை உள்நாட்டு போரின் போது சட்டத்திற்கு புறம்பான கொலைகள், சித்திரவதை மற்றும் பாலியல் அத்துமீறல்கள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மீறல்களுக்குப் பொறுப்பான 4 நபர்கள் மீது இங்கிலாந்து அரசாங்கம் தடைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்திற்கான பயணத் தடைகள் மற்றும் சொத்து முடக்கங்கள் உள்ளிட்ட இந்த நடவடிக்கைகள், உள்நாட்டு போரின் போது நீதிக்கு புறம்பான கொலைகள் போன்ற பல்வேறு மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களை குறிவைக்கின்றன. வெளியுறவுச் செயலாளரின் கருத்து வெளியுறவு, பொதுநல மற்றும் மேம்பாட்டு விவகாரங்களுக்கான வெளியுறவுச் செயலாளர் டேவிட் லாமி இது தொடர்பில் கூறியதாவது,''இலங்கையின் மனித உரிமைகளுக்கு இங்கிலாந்து அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. உள்நாட்டு போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக்கூறலைக் கோருவது உட்பட, அவை இன்றும் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தேர்தல் பிரசாரத்தின் போது, பொறுப்பானவர்கள் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட மாட்டார்கள் என்பதை உறுதி செய்வேன் என்று நான் உறுதியளித்தேன். கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பானவர்கள் பொறுப்புக்கூறப்படுவதை இந்த முடிவு உறுதி செய்கிறது. இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இங்கிலாந்து அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளதுடன், தேசிய ஒற்றுமைக்கான அவர்களின் உறுதிப்பாடுகளை வரவேற்கிறது. ஜனவரி மாதம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது , இந்தோ-பசிபிக் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் எம்.பி., பிரதமர், வெளியுறவு அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களுடன் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தினார். சமூகங்கள் ஒன்றாக முன்னேற, கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்வதும், பொறுப்புக்கூறுவதும் அவசியம், இன்று அறிமுகப்படுத்தப்பட்ட தடைகள் பட்டியல்கள் இதை ஆதரிக்கும். இலங்கையின் அனைத்து சமூகங்களும் வளர்ந்து செழிக்க முடியும் என்று நாங்கள் விரும்புகிறோம். மனித உரிமைகள் மேம்பாடுகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பரந்த சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் இலங்கை அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற இங்கிலாந்து உறுதிபூண்டுள்ளது. எங்கள் மாற்றத்திற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது நமது தேசிய பாதுகாப்பிற்கு நல்லது என்பதை இங்கிலாந்து அங்கீகரிக்கிறது. இலங்கைக்கான ஆதரவு கனடா, மலாவி, மாண்டினீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியாவை உள்ளடக்கிய ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கான முக்கிய குழுவில் உள்ள கூட்டாளர்களுடன் இணைந்து இலங்கையில் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கான சர்வதேச முயற்சிகளை இங்கிலாந்து நீண்ட காலமாக வழிநடத்தி வருகிறது. இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) திட்டத்தின் மூலம் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத்தை இங்கிலாந்து ஆதரித்துள்ளது, இலங்கையின் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவின் உறுப்பினராக கடன் மறுசீரமைப்பை ஆதரித்துள்ளது மற்றும் இலங்கையின் உள்நாட்டு வருவாய் துறைக்கு தொழில்நுட்ப உதவியை வழங்குகிறது. இங்கிலாந்தும் இலங்கையும் வலுவான கலாசார, பொருளாதார மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளைப் பகிர்ந்து கொள்கின்றன, அவற்றில் நமது கல்வி முறைகள் அடங்கும். நாடுகடந்த கல்வியில் பணியாற்றுவதன் மூலம் இலங்கையில் கல்வி அணுகலை இங்கிலாந்து விரிவுபடுத்தியுள்ளது.''என கூறியுள்ளார். Tamilwinசவேந்திர சில்வா உட்பட முன்னாள் விடுதலைப் புலிகள் இராணுவ த...இலங்கையில் உள்நாட்டு போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான நபர்களுக்கு இங்கிலாந...
  38. உண்மையில் லண்டன் தமிழ் உறவுகள் போராட்டம் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் 🙏
  39. உண்மையில் நீங்கள் இருவரும் நினைவுபடுத்தியது நல்லதாகப் போய்விட்டது. அவற்றைக் தவிர்த்து எழுதவேண்டியதை மட்டும் இனி எழுதுகிறேன். உண்மையில் நான் வேண்டும் என்று மீண்டும் எழுதவில்லை. எழுதியதை மறந்துவிட்டேன். இப்பவே மறதி வந்திட்டிது. நல்லகாலம் இப்பவாவது சொல்லிச்சினம். அல்லது திரும்ப கை நோக நோக எழுதியிருப்பன்.
  40. இவங்களை நம்பேலாது கண்டியளோ. நேரத்துக்கு நேரம் சட்டங்களை மாத்துவாங்கள்.😂 பென்சன் எடுக்கிற நேரம் வர கடிதம் போடுவாங்கள் தானே எண்டு பாத்துக்கொண்டிருக்கிறன்.எண்டாலும் எனக்கு முழங்கால் பிரச்சனை இருக்கிறபடியால முதலே பென்சன் எடுக்க வாய்ப்பிருக்கு......😎 கெதியாய் ஊருக்கு போறன்.....6 ஏக்கர் தோட்டக்காணிய துப்பவராக்கிறன்....ரஜினி மிளகாய்க்கண்டு வைக்கிறன். கோடி கோடியாய் சம்பாதிக்கிறன்.😁
  41. இவாவுக்குத்தான் கண்ணை மறைத்தது, தங்கச்சிக்கல்ல. அக்காவை நல்லா ஏமாத்திப்போட்டா பாசத்தை வைச்சு. ஒருநாளைக்கு கணவர் உண்மையை அறியாமலா இருப்பார்?
  42. என்னதான்… பெற்றார் கொடுத்த வீடு எண்டாலும் - அங்கிளுக்கு சரியான விலையை மறைத்து உங்கட தங்கைக்கு பாதி விலைக்கு கொடுத்ததெல்லாம்….கில்லாடித்தனம் அன்ரி🤣. அது சரி எங்க காணி பாக்கிறியள்? இணுவில் கே கே எஸ் ரோட்டோட இருக்கிற காணி ஒரு பரப்பு என்ன விலை போகுது?
  43. சுவையான முட்டைக்கோஸ் பொரியல் .......... முட்டை என்று யோசிக்க வேண்டாம் . ......... அது பெயரில்தான் இருக்கு . ......... விரத நாட்களிலும் தயங்காமல் சாப்பிடலாம் . ..........! 😁
  44. @Kandiah57 கந்தையர், உங்களை போலவே எனது மனநிலையும். மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவிடம் திறமை/ஆளுமை உள்ளது. உட்கிடக்கையை வெளிப்படுத்தாமல் பம்மிக்கொண்டு நிற்பவர்கள் மத்தியில் விடயங்களை வெளிப்படையாக தெளிவாக துணிந்து கூறக்கூடியவர். அவர் பேசுபவை எல்லாம் சரி என்று இல்லை, ஆனால் அவர் உத்வேகம் பிடித்துள்ளது. போர் நிறைவடைந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. இளவு காத்த கிளிபோல் மக்கள், ஏமாற்றப்பட்டார்கள். புதியன புகுதலும், பழையன கழிதலும் நடந்தேறலாம். அவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினுள் வருகின்றார். தந்தை விடயத்தில் அவருக்கு நீதி கொடுக்கப்பட்டதா? இங்கு அவருக்கு எதிராக குத்தி முறிபவர்களை கவனித்தால் அவர்களுக்கிடையில் பல விடயங்களில் ஒற்றுமைகள் உள்ளன. நல்லதை எடுக்கலாம். அல்லாதவைகளை விடலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.