Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வயது வந்தவர்களுக்கு மட்டும்...!

Featured Replies

titanic.jpg

மன அழுத்தங்களும் வருத்தங்களும் மனம்விட்டு அகல,

சிலநேரம் கற்பனைக் கடலில் நீந்துவது வழமை!

அப்படியான இன்றைய பொழுதிலும், மனதில்தோன்றிய

கிளர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் ஒரு கவிதையாய் கிறுக்கினேன்!

என் மனத்தின் மீது தேனாய் இனித்த உணர்வுகள் "சென்சார்" செய்யப்பட்டு

கவிதையாய் உங்களுக்கு.......... :wub: (வயது வந்தவர்களுக்கு மட்டும்) :lol:

உரசும் இரு மூக்கு நுனிகளில் பற்றிய தீ ,

உடல் முழுதும் பரவிச்செல்ல...

கடல் மீது மிதக்கும் கப்பலானது,

தேகங்கள் இரண்டும்...!

மன அலைகளின் ஆக்ரோசம் அதிகமாக...

அமைதியான கடலும்,

ஆடிக்களிக்கும் ஆழிப்பேரலைபோல்...

அடங்காக் குணங்கொண்டது...!

நிமிர்ந்து நின்ற பாய்மரக் கம்பத்தால்...

வள்ளமும் கள்ளமாய் செல்லமாய்,

கொஞ்ச ... மோக வேகமெடுத்தது...!

யாருமில்லாத தீவொன்றில்...

கரையொதுங்கியது காமரசம் சுமந்த கப்பல்...!

பாய்ச்சிய நங்கூரம் தரைதொட்ட போதும்...

அலைகளோடு ஆடிக்கொண்டே இருந்தது,

தரைதட்டும் வரை...!

இரவோடு நிலவொளி புணர்ந்து,

வெள்ளி மலை முகடுகள் அலையலையாய்...

கார்கடற் பள்ளங்கள் மீது எழும்ப,

வேகமாய் கரைதேடி ஓடின நீரலைகள்..!

கரைகளில் களைத்துப்போன...

மூச்சுக்காற்றின் நீர்க்குமிழிகள்,

வெள்ளை நுரைகளாய் அடித்தோய்ந்து...

மீண்டும் கரைவரும் அலைகளில்...

கலக்கத் தயாராய் வெடித்து,

நீர்நிலையாகி நிலையெடுத்து நின்றன!

பாய்மரம் இறக்கிய கப்பல்,

மணற்கரைகளில் தவழ்கின்றது...

அடுத்த பயணத்துக்காக,

கடல் மீது இறங்க...!

மிதக்கும் நீரில் மூழ்கும்வரை,

கப்பல்களின் பயணங்கள் தொடரும்...! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி

நல்ல முன்னேற்றம்

வாழ்க

வளர்க

தொடர்க :lol::icon_idea: :icon_idea:

422430_136644376457536_100003359240697_145325_1548429657_n.jpg
  • கருத்துக்கள உறவுகள்

பாய்மரம் இறக்கிய கப்பல்,

மணற்கரைகளில் தவழ்கின்றது...

அடுத்த பயணத்துக்காக,

கடல் மீது இறங்க...!

மிதக்கும் நீரில் மூழ்கும்வரை,

கப்பல்களின் பயணங்கள் தொடரும்...!

அம்பிகாபதியை நோக்கிய அமராவதியின் நூறாவது பாடல் போல இருக்கின்றது, கவிதை!

பாய் மரங்கள்,

பசுமரங்களாகிய பின்பும்,

பயணம் தொடர்கிறது!

கடல் மீது முடிந்த பயணம்,,

கனவுலகில் தொடர்கிறது! :D

  • தொடங்கியவர்

அடப்பாவி

நல்ல முன்னேற்றம்

வாழ்க

வளர்க

தொடர்க :lol::icon_idea: :icon_idea:

ஏன் அண்ணை... இப்பிடி சொல்லிப்போட்டியள்? :o

கொஞ்சநாளா ஒரே ரென்ஷன்!!! :rolleyes: அதுதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம் என்று ............ கப்பல் பயணம் போனேன். :lol:என் கப்பலுக்கு சொந்தக்காரி... தற்பொழுது பக்கத்தில் இல்லாததால், கற்பனையில் ஒரு வெள்ளோட்டம்! :wub: இது தப்பா? :rolleyes::lol:

  • தொடங்கியவர்

422430_136644376457536_100003359240697_145325_1548429657_n.jpg

புரியவில்லையே யாழன்பு! :rolleyes:

ஆனாலும் நீங்கள் இணைத்த படத்தில்.... அருமையான விடயமொன்று சொல்லப்பட்டுள்ளது!

நன்றி! :)

  • கருத்துக்கள உறவுகள்

பாய்ச்சினேன் நங்கூரம்

தொடவில்லை தரைகளை

அலைகளோடு

ஆடிக்கொண்டேயிருந்தது

துடித்தேன்

தொட்டுவிடும்தூரம்

கிட்டவில்லை

முட்டிமோதினேன்

கலங்கரை தெரியமுதலே

காலை விடிந்துவிட்டது

  • தொடங்கியவர்

அம்பிகாபதியை நோக்கிய அமராவதியின் நூறாவது பாடல் போல இருக்கின்றது, கவிதை!

பாய் மரங்கள்,

பசுமரங்களாகிய பின்பும்,

பயணம் தொடர்கிறது!

கடல் மீது முடிந்த பயணம்,,

கனவுலகில் தொடர்கிறது! :D

அம்பிகாபதி அமராவதியை காதலிப்பதை தெரிந்து கொண்ட குலோத்துங்க சோழ மன்னன் அம்பிகாபதிக்கு சோதனை வைத்து ஒரு முடிவுக்கு வரலாம் எனத் தீர்மானிக்கிறான். குலோத்துங்க சோழன் அம்பிகாபதியை சிற்றின்ப ( காமரசம் ததும்பும்) கவிஞன் என விமர்சிக்கிறான், பின் அம்பிகாபதியை நூறு பாடல்கள் வரிசையாக காமரசம் ததும்பா பாடல்களை பாட கட்டளையிடுகிறான். அம்பிகாபதி பாட முடியாத பட்சத்தில் மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் கட்டளையிடப்படுகிறது.

பாட ஆரம்பித்த அம்பிகாபதி முதலில் செய்யுள் பாடலை பாடி பின் கட்டளையிடப்பட்ட பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக பாட ஆரம்பிக்கின்றான். திரைமறைவில் இருந்து பாடலை எண்ணிக் கொண்டிருந்த அமராவதி செய்யுள் பாடலையும் சேர்த்து எண்ணிக் கொண்டிருந்தாள். இதில் 99 வது பாடல் முடித்தவுடன் நூறு பாடல்கள் முடித்துவிட்டதாக எண்ணி உணர்ச்சிப் பெருக்கில் அம்பிகாபதியை நோக்கி ஓடி வருகிறாள்.

பேரழகுடன் ஓடி வரும் அமராவதியைக் கண்ட அம்பிகாபதியும் தன்னிலை மறந்து உணர்ச்சி வசப்பட்டு கீழ்க்கண்ட பாடலை நூறாவது பாடலாக பாடி விடுகிறான். இப்பாடலில் காமரசம் கலந்து இருப்பதால் சோதனையின் விதிப்படி அம்பிக்காவது வெற்றி பெறவில்லை.. ஆதலால் மரணதண்டனை விதிக்கப்படுகிறது. உணர்ச்சி வேகத்தில் அறிவு மழுங்கியதன் பலன் அம்பிகாபதிக்கு கிடைத்தது.

அம்பிகாபதி பாடிய அந்த நூறாவது பாடல்

சற்றே பருத்த தனமே துவளத் தரள வடந்

துற்றே அசையக் குழையூசலாட - துவர்கொள் செவ்வாய்

நற்றேனொழுக நடன சிங்கார நடையழகின்

பொற்றேரிருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே

மனசு கொஞ்சம் இலேசாகட்டும் என்று இப்படி எழுத... நீங்கள் அம்பிகாபதி அமராவதி கதையை ஞாபகப்படுத்திவிட்டீர்களே! :unsure: :D

ஏன் புங்கை இப்படி சொல்லிவிட்டீர்கள்? :huh: நீங்கள் வயதுக்கு வந்தவர்தானே...? :wub: அப்புறமென்ன, கற்பனைகளில் ரசிப்பதில் தவறே இல்லை. செயல்முறை நாடுவதில்தான் வில்லங்கம் இருக்கு!!! பார்த்து கவனம்...!!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு, வாழ்த்துகள்

கவிதை ஒரு கவிஞர் தான். யாழிலில் அழகான கவிதைகளை வடிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள்!!!

நல்ல வேளை அலுவலகத்தில் வாசிக்காமல் வீட்டுக்கு வந்து படுக்கைக்கு போகும் முன் வாசிச்சது..

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு "கவிதையின்ட" கவிதை விளங்கவில்லை[நாங்கள் சின்னப் பிள்ளைகளாக்கும் :lol: ] ஆனால் சுயமாக எழுதும் ஆக்கத்திற்கு பச்சை குத்தும் வழக்கத்தை கொண்ட படியால் கவிதைக்கோர் பச்சை குத்தினான்

பாய்ச்சினேன் நங்கூரம்

தொடவில்லை தரைகளை

அலைகளோடு

ஆடிக்கொண்டேயிருந்தது

துடித்தேன்

தொட்டுவிடும்தூரம்

கிட்டவில்லை

முட்டிமோதினேன்

கலங்கரை தெரியமுதலே

காலை விடிந்துவிட்டது

அவசரக் குடுக்கன் போல?

நல்ல ஒரு வைத்தியரிடம் ஆலோசனை கேக்கலாம். :lol:

  • தொடங்கியவர்

பாய்ச்சினேன் நங்கூரம்

தொடவில்லை தரைகளை

அலைகளோடு

ஆடிக்கொண்டேயிருந்தது

துடித்தேன்

தொட்டுவிடும்தூரம்

கிட்டவில்லை

முட்டிமோதினேன்

கலங்கரை தெரியமுதலே

காலை விடிந்துவிட்டது

விடியும்வரையுமா...? :o :wub:அந்த இரகசியத்தினை தனிமடலில் அனுப்பி வையுங்களேன் சாத்ஸ்...! :lol:

  • தொடங்கியவர்

நல்லா அனுபவிச்சு எழுதின மாதிரி இருக்கு, வாழ்த்துகள்

அரைகுறை அனுபவம், கேள்விஞானத்தில பட்டதெல்லாத்தையும் ஒன்றாக சேர்த்துப் புளிஞ்சு எடுத்த காமரசம் :wub: உடையார்! :lol:

நான் இன்னும் வயசுக்கு வரல...இன்னும் சின்னப்பயல்தான்! :lol:

நன்றி உடையார்!

  • தொடங்கியவர்

கவிதை ஒரு கவிஞர் தான். யாழிலில் அழகான கவிதைகளை வடிக்கும் தம்பிக்கு வாழ்த்துக்கள்!!!

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா! :)

  • கருத்துக்கள உறவுகள்

titanic.jpg

மன அழுத்தங்களும் வருத்தங்களும் மனம்விட்டு அகல,

சிலநேரம் கற்பனைக் கடலில் நீந்துவது வழமை!

அப்படியான இன்றைய பொழுதிலும், மனதில்தோன்றிய

கிளர்ச்சிகளையும் உணர்ச்சிகளையும் ஒரு கவிதையாய் கிறுக்கினேன்!

என் மனத்தின் மீது தேனாய் இனித்த உணர்வுகள் "சென்சார்" செய்யப்பட்டு

கவிதையாய் உங்களுக்கு.......... :wub: (வயது வந்தவர்களுக்கு மட்டும்) :lol:

உரசும் இரு மூக்கு நுனிகளில் பற்றிய தீ ,

உடல் முழுதும் பரவிச்செல்ல...

கடல் மீது மிதக்கும் கப்பலானது,

தேகங்கள் இரண்டும்...!

மன அலைகளின் ஆக்ரோசம் அதிகமாக...

அமைதியான கடலும்,

ஆடிக்களிக்கும் ஆழிப்பேரலைபோல்...

அடங்காக் குணங்கொண்டது...!

நிமிர்ந்து நின்ற பாய்மரக் கம்பத்தால்...

வள்ளமும் கள்ளமாய் செல்லமாய்,

கொஞ்ச ... மோக வேகமெடுத்தது...!

யாருமில்லாத தீவொன்றில்...

கரையொதுங்கியது காமரசம் சுமந்த கப்பல்...!

பாய்ச்சிய நங்கூரம் தரைதொட்ட போதும்...

அலைகளோடு ஆடிக்கொண்டே இருந்தது,

தரைதட்டும் வரை...!

இரவோடு நிலவொளி புணர்ந்து,

வெள்ளி மலை முகடுகள் அலையலையாய்...

கார்கடற் பள்ளங்கள் மீது எழும்ப,

வேகமாய் கரைதேடி ஓடின நீரலைகள்..!

கரைகளில் களைத்துப்போன...

மூச்சுக்காற்றின் நீர்க்குமிழிகள்,

வெள்ளை நுரைகளாய் அடித்தோய்ந்து...

மீண்டும் கரைவரும் அலைகளில்...

கலக்கத் தயாராய் வெடித்து,

நீர்நிலையாகி நிலையெடுத்து நின்றன!

பாய்மரம் இறக்கிய கப்பல்,

மணற்கரைகளில் தவழ்கின்றது...

அடுத்த பயணத்துக்காக,

கடல் மீது இறங்க...!

மிதக்கும் நீரில் மூழ்கும்வரை,

கப்பல்களின் பயணங்கள் தொடரும்...! :wub:

அலைகள் ஓய்வதில்லை...பயணங்கள் முடிவதில்லை...கரைகள் தெரிவதில்லை...கவிதை களைப்பதில்லை... :D:lol::icon_idea:

அழகான கவிதை "கவிதை"...

பாய்ச்சினேன் நங்கூரம்

தொடவில்லை தரைகளை

அலைகளோடு

ஆடிக்கொண்டேயிருந்தது

துடித்தேன்

தொட்டுவிடும்தூரம்

கிட்டவில்லை

முட்டிமோதினேன்

கலங்கரை தெரியமுதலே

காலை விடிந்துவிட்டது

காலை விடிந்தால் என்ன அண்ணா...? கலவிக்கு ஏது காலநேரம்...!மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதானே...?முகூர்த்தம் பார்த்தா மூடு வருகுது...? :D:lol::icon_idea:

  • தொடங்கியவர்

நல்ல வேளை அலுவலகத்தில் வாசிக்காமல் வீட்டுக்கு வந்து படுக்கைக்கு போகும் முன் வாசிச்சது..

ஏன் நிழலி அண்ணா... :rolleyes: அலுவலகத்தில் பார்த்திருந்தால் கையோட வேலை முடிஞ்சிருக்கும். :lol: வீட்டில வந்து பார்த்ததாலயும் அதுதான் நடந்திருக்கும் எண்டு நினைக்கிறன்! :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

விடியும்வரையுமா...? :o :wub:அந்த இரகசியத்தினை தனிமடலில் அனுப்பி வையுங்களேன் சாத்ஸ்...! :lol:

இதெல்லாம் சொல்லித்தெரிவதில்லை :wub:

ஏகலைவன் வில்வித்தை பழகினமாதிரி அதுக்காக குரு தட்சணையெல்லாம் கேக்கமாட்டன் :lol: :lol:

  • தொடங்கியவர்

எனக்கு "கவிதையின்ட" கவிதை விளங்கவில்லை[நாங்கள் சின்னப் பிள்ளைகளாக்கும் :lol: ] ஆனால் சுயமாக எழுதும் ஆக்கத்திற்கு பச்சை குத்தும் வழக்கத்தை கொண்ட படியால் கவிதைக்கோர் பச்சை குத்தினான்

ரதியக்கா! நீங்கள் சின்னப்பிள்ளை எண்டுறதை... நாங்கலெல்லாரும் நம்பிட்டம்! :rolleyes:

பச்சையெல்லாம் குத்தத் தேவையில்லை அக்கா... உங்கட கருத்தை நாலு வார்த்தையில வைச்சிட்டுப் போனால் போதும்! அது திட்டிற மாதிரி இருந்தாலும் பரவாயில்லை! :D

நன்றி...! :)

அவசரக் குடுக்கன் போல?

நல்ல ஒரு வைத்தியரிடம் ஆலோசனை கேக்கலாம். :lol:

விஷயம் விளங்காமல் கதைக்கிறீங்கள் வினீத்!

அவசரக் குடுக்கன்தான் அவசரமா முடிப்பான் ஒரு வேலையை...!

எதையும் பிளான் பண்ணி செய்யணும்... வடிவேலு சொன்னமாதிரி! :lol:

இல்லாட்டில் தலையில துவாயைத்தான் போடணும்! :icon_idea:

விளங்கிச்சா? :lol:

  • தொடங்கியவர்

இதெல்லாம் சொல்லித்தெரிவதில்லை :wub:

ஏகலைவன் வில்வித்தை பழகினமாதிரி அதுக்காக குரு தட்சணையெல்லாம் கேக்கமாட்டன் :lol: :lol:

துரோணாச்சாரியார் ஏகலைவனிடம் கட்டை விரலை கேட்டதுமாதிரி என்னிடம்... என் நாவினை கேட்டுவிடாதீர்கள் சாத்ஸ்! அப்புறம் எப்படி கவிதை பாடுவது? :o:lol:

விடியும்வரை இரகசியம் பற்றி சொல்லித்தெரிய வேண்டியதில்லை என்பதிலேயே என்னவோ விளங்கிச்சுது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது சொந்தக்கப்பலில் கரை தட்டுகின்றேன்! :wub::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உவமை,கவிதை கையாண்ட விதம் அருமை

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்கும் பன்பட்டுது இந்தக்கவிதை. :)

  • தொடங்கியவர்

உவமை,கவிதை கையாண்ட விதம் அருமை

வாழ்த்துக்கள்

உவமான உவமேயங்களை கையாண்டால்தான் கொஞ்சமாவது தணிக்கை செய்யலாம்! :icon_idea: :lol:

நல்ல காலம் வில்லங்கம் எதுவும் வரல! :lol:

மிக்க நன்றி பகீ! :)

  • தொடங்கியவர்

என்கும் பன்பட்டுது இந்தக்கவிதை. :)

"எனக்கும் பயன்பட்டது இந்தக் கவிதை " .... இதனையா சொல்ல வந்தீர்கள் சஜீவன்?! :unsure::rolleyes::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.